Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. டொக்ரருக்கு எதிராக சயந்தன், சிறிதரன் போன்றவர்கள் ஊழல் செய்த மற்றைய வைத்தியர்களையே ஆதரித்ததை கண்ணால பாத்தேன் நான்.. அப்பவே எப்படிப்பட்ட நன்ஞ்சன்கள் என்பதை உணர்ந்தேன் நான்.. என்னைப்போல அத்தனை சாவகச்சேரி மக்களும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தனர்.. என் தாய் உட்பட இந்தவைத்தியசாலை வைத்தியர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர்.. ஆனால் வைத்தியர் பேமஸ் ஆகக்குடாது என்ற ஒரே ஒரு நோக்கத்துக்காக அத்தனை மக்களுக்கும் எதிரான வைத்தியசாலை நிர்வாகத்துக்கு ஆதரவாக பேசியவர்கள் இந்த மரபு தமிழ்கட்சிகள்.. அன்றைக்கே இவர்கள் கோமாளிகள் ஆகிவிட்டனர்.. அதற்கு முன்னால் டாக்டர் செய்தது ஒன்றும் கோமாளித்தனம் அல்ல.. இனி செய்யப்போவதும்..
  2. இதுதான் ஈழத்தில் தமிழர்களின் இருப்பை தற்காலிகமாகவேனும் உறுதிப்படுத்தி தமிழர்களின் எண்ணிக்கையை கூட்டி காத்திருந்து நேரம் வரும் (100 வருசம் ஆனாலும்) போது செயல்படுவதுதான் புத்திசாலித்தனம் என்று முன்னரே நான் எழுதியவன் இதை.. முஸ்லீம்கள் போல சந்தர்ப்பவாதிகளாக தமிழர்கள் இருக்கவேண்டும் என்று எழுதினேன்.. இதுதான் சரியான் டெசிசன்.. இப்பதான் மக்கள் சரியான சுயமான சிந்தனைக்கு வந்து வாக்களிக்க ஆரம்பித்து இருக்கின்றனர் உசுப்பேத்தும் அரசியல்வியாதிகளை உதறி..
  3. நிழலி கிருபன்.. நீங்களும் முகநூலை பாத்துட்டுதான் டாக்டரை நக்கலடிச்சனியள்.. முகநூலில் ஆதரவு எதிர்ப்பை தாண்டி மக்களிடம் அர்ச்சனா போய் சேர்ந்திருந்தார்.. மற்றைய மரபுவழி தமிழ்கட்சிகள் மீதான வெறுப்பு மாற்று ஒன்றை தேடியமக்களின் எதிர்பார்ப்பு இவற்றுக்கு தீனியாக வந்தவர்கள்தான் டாக்டரும் அனுராவும்.. மரபுவழி தமிழ்கட்சிகள் முப்பது நாப்பது வருடங்களாக செய்த கோமாளித்தனங்களுக்கு துரோகங்களுக்கு முன்னால் டாக்டர் செய்தது ஒன்றும் பெரிய கோமாளித்தனம் அல்ல.. புதுசு அரசியலுக்கு அனுபவம் காணாது போகபோக திருந்துவார் ஆனால் மனசில் வஞ்சகம் கள்ளம் இல்லை பாரம்பரிய வழமையான வேட்பாளர்கள் போல என்று மக்கள் அர்ச்சனா செய்த சிறு விடயங்களை மன்னிக்க தயாராகவே இருந்தனர்.. அதை புரிந்துகொள்ளாமல் படிக்காத மக்களின் சிறிய தலையில் உள்ள சிந்தனையை படித்து வீங்கிய பெரியதலையால் யோசிச்சு பார்த்தால் இப்படித்தான் நக்கல் வரும்.. ஆனால் பிரயோசனம் இல்லை.. உங்களை சமூகம் கண்டுக்காது.. எங்களைத்தான் சமூகம் சரி எண்டிருக்கு.. வெண்டது கோசானும் நானும்தான்.. நக்கினவர்கள் திட்டிட்டு கவிண்டு படுக்கவேண்டியதுதான்..😂
  4. கிடைக்கோணும்.. கிடைச்சாத்தான் மற்றவங்கள் திருந்துவாங்கள்.. பயம் இருக்கும்.. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை இருக்கோணும்.. போட்டி கனக்க இருந்த்தாதான் தெரிவுகள் மக்களுக்கு கனக்க இருந்த்தாதான் மக்களுக்கு எல்லோரும் போட்டிபோட்டுக்கொண்டு நல்லது செய்ய வருவினம்.. இல்லை எண்டா இந்த நாயள் எங்க போறது எங்களுக்குதான ஓட் போடோனும் எண்ட திமிரில இருப்பினம்..
  5. எனக்கு நீங்கள் சொல்வது சதிக்கோட்பாடு மாதிரி ஒண்டு போல படுது.. ஆனாலும் நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம்.. அந்த கடைசாப்பாடு நல்லதோ அண்ணை..? கனடா வரேக்க சாப்பிடுவம் எண்டு கேக்கிறன்..
  6. இதுதான் உண்மை.. எங்கட ஆக்களில் இருந்த கோவம்.. மெயினா கஸ்ரத்துக்கு எந்த உதவியும் செய்யாமல் எட்டிக்கூட பாக்காமல் வெறுமனே அரசியல் தீர்வு அந்தா இந்தா எண்டு கொண்டு பல வருசங்களா பேய்க்காட்டினது.. அதோடு வந்த அனுரா சண்டை இன அழிப்புகளோடு நேரடியாக சம்பந்தப்படாதது.. எல்லா காரணியும் ஒண்டா சேர தமிழ் கட்சிகளுக்கு வந்து சேர்ந்திருக்கு ஆப்பு..
  7. இதில கனடாக்காரர் எல்லாருக்கும் முன்னோடி..பலவருசத்துக்கு முன்னமே சொப்பிங் மோல் ஒண்டை வாடைக்கு எடுத்து ஏரியா பிரிச்சு தெருவுக்கு பேரும் வச்சிருக்கிறாங்கள்..😂
  8. இந்த நேரம் சிவாஜிலிங்கத்தை நினைச்சு பாக்கிறன்.. தேர்தலுக்கு காசில்லை ஆகக்குறைந்தது நூறு ரூபாய் ஆவது தாங்கோ எண்டு ஒரு பேப்பரில் சிவாஜிலிங்கத்தின் விளம்பரம் பார்த்தேன்.. தீவிர தமிழ் தேசியம் கதைக்கும் சைக்கிள் கோஸ்டியும் சரி வீட்டுக் கோஷ்டியும் சரி கிளிநொச்சி வாத்தியார் கூட்டமும் சரி அன்று அந்த தேசத்தின் புதல்வனை ஈன்ற தாயை பொறுப்பு எடுக்கவில்லை.. புலிகளால் உருவாக்கிய கூட்டமைப்பின் எம்பிக்கள் பலர் கை விட்டனர்.. சிவாஜி ஐயா மட்டுமே பொறுப்பு எடுத்தார்.. ஆனால் தேர்தல்களில் அப்போது கடுமையாக போராளிகள் பெயர் சொல்லி மீண்டும் பாராளுமன்றம் போனார்கள்.. ஏன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல பேர் திரைக்கு பின்னால் கொடுக்கும் வெளிநாட்டு கடிதங்கள் மூலம் உழைத்த காசு கொஞ்ம் இல்லை.. ஆனால் வெளிய தமிழ் தேசியம் தமிழ் மக்கள் என்று கத்துவினேம் ஆனால் சில வருடம் முன்பு ஒருவன் அவரை சிக்க வைக்க செட்டப் பண்ணி வீடியோ எடுக்கிறான்.. வெளிநாட்டு அரசியல் தஞ்ச கோரிக்கை கடிதம் கேட்டு எவ்வளவு ஐயா காசு வேண்டும் என்று.. மனுசன் ஒரு வார்த்தை சொல்லுது எனக்கு எதுக்கு காசு விசா கிடைச்சா கஸ்டப்பட்ச சனங்களுக்கு போராளிகளுக்கு உதவி செய்யுங்கோ எண்டு... நேரடியாக இவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ஆனால் இப்பவும் நினைவிருக்கு பல மக்கள் போராட்டக் களம் நினைவேந்தல் இடங்கள் என்று அவரின் தமிழ் தேசிய பற்று அரசியலை பார்த்து வளர்ந்த ஆட்கள் நாம்.. அவர் வெல்லுறரோ தோற்கிறரோ அவர் நிற்கும் கட்சி மீதும் நிலைப்பாடுகள் வேறாக இருக்கலாம்.. இந்த இனத்திற்காக அவர் குரல் எப்போதும் இருந்திருக்கிறது… அவர் தமிழர் சார்பில் வெல்லனும்..வெண்டால் சந்தோசம்.. நல்ல மனுஷன்,பட் சேர்ந்த இடம் சரி இல்லை...😢
  9. லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத்திருக்குது.. ஊர் நிலவரம் தெரியாமல் நீங்கள் வேற குறுக்க மறுக்க ஓடிக்கொண்டு.. சிங்களம் படிப்பிக்கிற வாத்திமாற்ற காட்டில இனி மழைதான்.. நல்ல விசயம் அப்பிடியாவது பிரச்சினை தீரட்டும்.. இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டு அழிவையே சந்திச்ச மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நிம்மதி கிடைச்சா சந்தோசம்தான்.. எண்டாலும் தாங்க முடியலையே.. வாயப்பொத்திக்கொண்டு சத்தம் கேக்காமல் அழுவம்.. அவ்வ்வ்வ்..
  10. தீதும் நன்றும் பிறர் தர வாரா.. தமிழர்கள் தங்கள் தவறுகளுக்கு மற்றவர்களை கை நீட்டாமல், சுய விமர்சனங்களுடன் தங்கள் தவறுகளை என்றைக்கு ஏற்றுக்கொள்கிறார்களோ அன்றைக்குத்தான் விமோசனம்… தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர அது பிறந்து வளர்ந்த ஈழத்தில் தேய்ந்தழிந்தது.. அந்தோ பரிதாபம்..😢 நன்றி சீமான் தமிழ்நாட்டில் ஆவது அதை வாழவைத்ததுக்கு..🙏
  11. அதான் சொல்லிட்டமே.. நான் ஒண்டு கோசான் ஒண்டு.. மிச்சம் 5 பேரும் தெரியேல்ல..இதில் நக்கலுக்கு ஒண்டுமில்ல.. உங்கள் சாவகச்சேரி தொகுதிக்கான கடந்த 5 வருடங்களுக்கான ஒதுக்கீடுகள்- டக்ளஸ் (32146 வாக்குகள்)- அரசில் அமைச்சராக இருந்து கொண்டு 39 மில்லியன் அங்கஜன்(36365 வாக்குகள்)- யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து கொண்டு 20 மில்லியன் சுமந்திரன் (27836 வாக்குகள்) - யாழ் மாவட்ட பா-உ ஆக இருந்துகொண்டு 16 மில்லியன் சுமந்திரனை விட அதிகம் வாக்குகள் பெற்ற சிறிதரன் 1.75 மில்லியனும், கஜேந்திரகுமார் 4.8 மில்லியனும், சித்தார்த்தன் 2.5 மில்லியனும், கஜேந்திரன் 1.9 மில்லியனும் மாத்திரமே ஒதுக்கியுள்ளனர். 🤬 -மூலம்: ஒற்றம்- சுமந்த்திரனைவிட அதிகம் வாக்குகள் பெற்ற கள்ளக்கூட்டம் சிறிதரன் 1.75 மில்லியனும், கஜேந்திரகுமார் 4.8 மில்லியனும், சித்தார்த்தன் 2.5 மில்லியனும், கஜேந்திரன் 1.9 மில்லியனும் மாத்திரமே ஒதுக்கியுள்ளனர்... சிந்திக்கவேண்டிய நேரம்.. ஆயிரம் ரூபாய்க்கு திமுக அதிமுகவுக்கு மாறி மாறி வாக்களிக்கும் மக்கள் போலவும் , நான் ரெட்டை இலைக்கு மட்டும்தான் வாக்களிப்பேன் இல்லா உதயசூரியனுக்கு மட்டும்தான் வாக்களிப்பேன் என பேசும் மக்கள் போலவும் இருந்து கொண்டு ஊழல், அபிவிருத்தி பற்றி பேசுவதில் பலன் இல்லை..
  12. இதில தமிழ்நாட்டு உறவுகளை அதே பழைய ஊழல் கட்சிகளுக்கு மாத்தி மாத்தி வாக்களிக்கினம் எண்டு திட்டினபடி.. ஏதோ தாங்கள் முற்போக்கான ஆக்கள் மாதிரி.. மாற்றத்தை எங்களில் இருந்து தொடங்காமல் எப்படி மாற்றம் வரும்..?
  13. சத்தியமா நான் நீங்கள் இதை எழுதும் வரை நீங்கள் ரெண்டாவது பக்கத்தில் உங்கள் தெரிவை எழுதியதை வாசிக்கவில்லை.. முந்த நாத்து இல்லா நேத்து எண்டு நினைக்கிறன் நான் இந்த திரியின் முதல் பக்கத்தை வாசித்ததாக ஞாபகம் ஆனால் அதில் நீங்கள் உங்கள் தெரிவை எழுதவில்லை.. அதற்குள் திரி மூன்று பக்கம் ஓடிவிட்டதால் கடைசிப்பக்கத்தை மட்டும் வாசித்தேன் ரெண்டாவது பக்கம் வாசிக்கவில்லை.. நீங்கள் இப்ப எழுதினாப்பிறகுதான் போய் பாத்தன்.. சாய்.. சான்சே இல்ல..அப்பிடியே ஒரு வரி விடாம நான் நினச்சமாரியே எழுதி இருக்கிறியள்.. எப்படி சிங் ஆகி இருக்கு நம்ப திங்கிங் எண்டு பாத்தியளே.. சேம் வேவ்…😁
  14. புதியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கணும் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கணும் எண்டு தமிழ் நாட்டில் சொல்லுறமாதிரி சொல்லிட்டு 1000 ரூபாயை வாங்கிட்டு அதே பழைய மொந்தைக்கு குத்துவதைப்போல இல்லாமல் சொல்லும் செயலுக்கும் வேறுபாடு இருக்ககூடாது என்பதால் புதியவர்கள் என்று இரண்டு தெரிவு எனக்கு இருந்தது ஒன்று அனுர தலைமையிலான அணி இன்னொன்று அர்ச்சனா அணி.. நான் அர்ச்சனா அணிக்கு போட்டிருக்கன்..
  15. இப்படித்தான் 20 களில் என்னவிட்டா யாரு, எண்டும் இருபதிலதான் நான் இருப்பன் எண்ட நினைப்பில நானும் வாழ்ந்திருக்கிறன்.. 30 களின் இறுதியில் யதார்த்தம் மூஞ்சையில் அடிக்க ஆரம்பிக்கிறது.. இதுதான் வாழ்க்கை.. நல்ல ஒரு கவிதை.. எவ்வளா பெரிய ஒரு வாழ்க்கை தத்துவத்தை வாழ்வின், நிலையாமையை, அதுவும் முப்பது நாப்பது வருசத்து அனுபவத்துக்கு பிறகு வரக்கூடிய ஒரு பெரிய காலப்பகுதியை ஒரு நாலுவரிக் கவிதையில் மின்னல்போல ஒளியின் வேகத்தில் கடந்துபோக வைத்திருக்கிறீர்கள்.. நீண்ட நாளைக்கு பிறகு எதேச்சையா இந்தப்பக்கம்(கவிதைப்பக்கம்) வந்தப்போ ஒரு நல்ல அனுபவம்..ஒரு நல்ல கவிதை.. ஒரு மழை நாளின் மாலைப்பொழுதில் எனக்கு பிடித்த முற்றத்து மாமரத்துக்கு கீழ் இளையராஜா பாடலுடன் மிக்சரையும் தேநீரையும் சுவைத்தபடி கயித்துக்கட்டிலில் கடந்து வந்த காலங்களை அசைபோட்டது போல ஒரு அனுபவக்கிளர்ச்சி.. கறுப்பு வெள்ளையாக, கலர் கலராக ஆயிரம் ஞாபகம்கள் எழுந்து விழுந்து எழுந்து அலைகின்றன கடல் அலைகளைப்போல மனக்குளத்தில்.. என்னைப்போல இந்தக்கவிதையை படித்த எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும்.. அதுதான் ஒரு நல்ல கவிதை செய்யக்கூடியது.. ஒரே ஒரு அம்மாவின் பழைய சேலை வாசம் கிளர்த்தும் ஓராயிரம் நினைவுகளை போல பல படிமங்களை பலகாட்சிகளை ஒரு கவிதையில் கொண்டுவந்து கொட்ட ஒரு சிலரால் மட்டுமே முடியும்.. ❤️❤️👏👏 🫡 ரசோதரன்..
  16. இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர்களுடன் பழைய நினைவுகளை பேசி இரைமீட்டி ஊரில் இருந்து வரும் பத்திரிகைகளை வாசித்து ரீ வடை போன்ற சோட்டீஸ்களை உண்டு மனதுக்குபுத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு போகக்கூடிய மாதிரி இடங்களை உருவாக்கவேண்டும்.. அப்படி இடங்கள் இருந்தால் எல்லோருக்கும் அறியப்படுத்தவேண்டும்.. பலபேருக்கு இதனால் பயனாகும்.. https://youtu.be/R3mnqwGjDaY?si=vxk1wGSrYSZYJ6K1
  17. நல்ல கருத்துக்கள்.. உறவாடிக் கெடுக்கவேண்டும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.. சீமானும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றால் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து பின் தன் திட்டங்களை நிறைவேற்றலாம்.. சீமான் தமிழ்தேசியாதில் விடும் தவறுகளை தான் விடக்கூடாது எண்டு விஜய் வந்திருப்பதுபோல் தெரிகிறது.. மகிழ்ச்சி.. உறவாடித்தான் வெல்ல வைக்க வேண்டும் தமிழ்தேசியத்தை.. தமிழ்தேசியத்தில் நான் விரும்பும் ஒரு தமிழ்த்தேசியவாதி அண்ணன் காட்டூனிஸ்ட் பாலா.. தமிழ்தேசியவாதிகள் பிழை விட்டாலும் அதை விமர்சித்து திருத்தும்படி சொல்பவர்.. நீங்கள் எழுதிய கருத்தின் சாராம்சத்துடன் ஒத்துப்போகும் அவரின் இன்றைய பேட்டி..
  18. தமிழ்தேசியத்தை மக்கள் மயப்படுத்திய சீமான் சுடச் சுடரும் பொன்போல திகழ்ந்திட வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி உள்ளார் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் ஜயா பெ மணியரசன்.. மற்றும் சீமானை வாழ்த்தியோர்👇 https://youtu.be/ka4p_4uJ9e0?si=PtvBXlDKyzzXw2Oz
  19. ஈழத்தமிழர்கள் பலரே மறந்துகொண்டும் போகும் ஒரு தலைவனை அவன் தத்துவத்தை வெல்வம் தோற்பம் என்பதற்கு அப்பால் மக்களிடம் விதைத்து பரப்பி முளைவிட செய்துகொண்டிருக்கும் சீமானுக்கு.. சீமான் வெல்லாமல் போகலாம் அவன் தமிழகத்தில் விதைப்பது ஈழத்தில் எங்கள் தலைவன் விதைத்தது.. தமிழ் தேசியம்.. அந்த தமிழ் தேசியத்தை மக்களிடம் செல்வாக்கு பெற்ற விஜய் போன்றவர்கள்கூட உச்சரிக்கவைத்த முன்னத்தி ஏர் சீமானுக்கு… இனிய அகவை தின வாழ்த்துக்கள்.. சீமான் பாடியதில் எனக்கு மிகப்பிடித்தது👇 விதைத்துக்கொண்டிருங்கள்.. இன்று விஜைபோல் இன்னும் பல விருட்சங்கள் தமிழ்தேசியத்தை பேசட்டும்..🙏
  20. யாழ் யூடியூபர்ஸ்லாம் கனடா க்கு போய்ட்டானுக போல.. திடீர் திடீர்னு கனடால இருந்து வீடியோ போடுறானுக.! இவனுக வீடியோக்கள பாத்துட்டு கனடா அங்கிள்மார் தம்பி வாங்கோ வந்து எண்ட வாழைத்தோட்டத்த எடுத்து போடுங்கோ.. அட அப்பன்.. வந்து எங்கட ஆட்டுப்பண்ணைய கவர் பண்ணுங்கோ.. தம்பி நீங்க அங்க இருந்து trainல வந்து இறங்குங்கோ நான் எண்ட Tesla ல வந்து பிக் அப் பண்ணி வீட்ட கூட்டியாறன்.. ஒரு home tour ஒண்டும் நீங்க போடலாம் என.. ஓமண்ணே.. கனடால லக்சரி வீடு அப்பிடீனு வீடியோவ இறக்கலாம்ணே.. ஆமா அதென்ன அடுப்புக்கு மேல காத்து வருது? அது தம்பி சமைக்கிற மணம் வெளிய போக.. ஓ.. பாருங்க மக்களே.. இதத்தான் லக்சரி பான்ரி கபேட் எண்டு சொல்றது.. என்னன்ணே இங்க கைகழுவிற சிங்ல எதோ கறுப்பா கிடக்கு? அய்யோ தம்பி.. அதையெல்லாம் ஜூம் பண்ணாதையும்.. அது நேத்தையான் கத்தரிக்காய் பொரியல மகள் அதுக்க கொட்டியிருக்கிறாள். ஆம் மக்களே..இப்ப பாத்தீங்கன்னா கனடால இதெல்லாம் லக்சரி வீடுகள். ப்ரிட்ஜ் கூட ரெண்டு கதவு கிடக்கு.. அங்கிள்ட்ட மொத்தம் ஆறு கார் கிடக்கு. கராஜ்க்க ரெண்டு நிக்குது. ஸ்விச் அமத்தினா கராஜ் கதவு திறக்குது பாருங்க.. சரி நான் கிளம்பப்போறேன். ஸ்கார்ப்ரோக்கு போகப்போறேன்.. அங்கிள் தான் தன்னோட BMW ல கொண்டுபோய் விடப்போறார்.. போற வழில மார்கம் ல ஒரு கடையில அங்கிள் மட்டன் ரோல் வாங்கி தந்தவர்.. ரோல் எப்பிடி செய்யுற எண்டு யாழ்ப்பாணத்து கடைக்காரர் கனடா வந்து படிக்கணும் என.. நன்றி- மைந்தன் சிவா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.