Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. விசுகண்ணைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  2. 1) அனுரா ஒன்றும் அரசியல்ப் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை.. அதனால் அதை பேசுவதில் பலன் இல்லை.. நடந்தால் சந்தோசமே.. ஆனால் 2) மகிந்த யுகம் முடிந்து மைத்திரி யுகம் வந்தபோது அவுஸ்திரேலியாவில் கனடாவில் இருப்பதுபோல் இல்லாவிட்டாலும் எங்கள் வாழ்க்கையை உயிர்ப்பயம் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து அவுஸ்த்திரேலியா கனடா ஜரோப்பாவில் இருப்பது போல் இல்லாமல் பிள்ளைகளை தமிழ்மொழியில் படிப்பத்து தமிழை பேசி பேரக்குழந்தைகளுக்கும் தமிழை கற்றுக்கொடுத்து தமிழையும் வளர்த்து தமிழ் இனத்தையும் சிறிது சிறுதாக பெருக்கினோம்.. 2) இப்பொழுதும் அப்படி அனுராவின் கீழ் ஏதோ சாவுப்பயம் இல்லாமல் எங்கள் மண்ணில் வாழ்ந்திட்டு போறம்.. அதில் கொள்ளிக்கட்டையை செருகாதீர்கள்.. மொழிதான் இப்பொழுது இங்கு பெரிய பிரச்சினை.. தமிழர்கள் இரண்டாவது மொழியாக சிங்களத்தையும் கற்றுக்கொண்டால் அரசியல்ப்பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும் விளங்காப்பிரச்சினைகளால் வரும் பாதிப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.. நீங்கள் ஜேர்மனி பிரான்ஸ் அவுஸ்த்திரேலியா என்று போய் அந்த நாட்டு மொழியை கற்று இரண்டு தலைமுறைக்குள் தமிழை மறந்து இன அடையாளத்தையும் இழந்து ஒரு தலைமுறையை புலம்பெயர்ந்து இன அழிப்பு செய்யும் புலம்பெயர் தமிழர்களுடன் ஒப்பிடும்போது ஊரில் இருந்து தமிழையும் கற்று வளர்த்து தாய்நிலத்தில் வாழ்ந்து தமிழ்பேசும் சந்தத்திகளையும் உருவாக்கிக்கொண்டு சிங்களத்தை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்பவர்களின் காலில் வீழ்ந்து கும்பிடலாம்.. உங்களால் பிரஞ்சையும் டொச்சையும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு இனவெறி பேசினாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து வெள்ளைகளோடு சந்தோசமாக வாழமுடியும் என்றால் ஊரில் இருப்பவர்கள் ஏன் சிங்களம் கற்று முஸ்லீம்கள் போல் உங்களைப்போல் சந்தர்ப்பவாதிகளாய் வாழமுடியாது..? வாழ்ந்தால்தான் என்ன தப்பு..? இனம் இருந்தால்தானே இடமே இருக்கும்.. ஆக நீங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உங்கள் பாடுகளை பார்ப்பதுபோல் ஊரில் இருப்பவர்களையும் அவர்கள பாடுகளை பார்க்கவிடுங்கள்.. ஊதி ஊதி அணைந்து போய் இருக்கும் நெருப்பை எரித்து தமிழர்களுக்கு என்று இருக்கும் ரெண்டு சின்ன மாகாணங்களை எப்பொழுதும் சுடுகாடாக வைத்திருக்க விரும்பாதீர்கள்.. அப்படி நினைப்பவர்கள் நல்லா இருக்க மாட்டீர்கள்.. நாசாமாப்போவீர்கள்.. வாழு வாழ விடு… பாலைவனம் கடந்து வந்தோம்.. பாதங்களை ஆற விடு..🙏
  3. கனம் நாட்டை விட்டு ஓடி அசைலம் அடித்ததால் நாசா விஞ்ஞானி ஆகிய புலம்பெயர் புத்திஜீவியே..! தலைவா வா.. தலைமை ஏற்க வா.. அறிவுரைகளை அள்ளி வீச வா.. இப்படிக்கு தங்கள் அறிவுரைவுரைகளை எதிர்பார்த்து காத்துகிடக்கும் வெளிநாடு போகாமல் ஊரில் இருக்கும் படிப்பறிவு அற்றவர்கள்.. கொய்யாலே.. 😡😡 ஊரில இருக்கிற சனத்துக்கு வகுப்பெடுக்கிற அளவுக்கு வெளிநாட்டுக்கு போயிட்டா உங்களுக்கு தகுதி வந்திடுமோ..? வெளிநாடு ஏஜென்சிக்கு காசுகட்டி போய் அசைலமெடிச்சு விசா எடுத்திட்டா நாங்கள் நாசா வின்ஞானிகள்.. நினைப்பு பெரிசு.. இஞ்ச வந்து 2k கிட்ஸ் இட்ட உத சொல்லிடாதைங்கோ.. வச்சு செஞ்சு விட்டுருவாங்கள்.. ஊரில இருந்தாலும் என்ர மண்ணைவிட்டு போகாமாட்டன் எண்டு கவுரமா உழைச்சு வாழுறாங்கள்.. நாட்டை விட்டு ஓடினவங்கள் எல்லாம் ஊரில இருக்கிறவனுக்கு வகுப்பெடுக்கிறானுகள்.. காலக்கொடுமை..
  4. இப்பதான் கீழ இணைச்சுள்ள கவிதையை வல்லினத்தில் வாசிச்சுட்டு வர உங்கள் கவிதை.. இரெண்டிலும் தொக்கி நிற்கும் கரு ஒன்றே.. நன்றி கவிதைக்கு நிழலி.. ஒரு வாசிக்கத் தெரிந்த கூலியின் சில கேள்விகள் ஏழுவாயில்களைக் கொண்ட தேபிஸ் நகரை யார் கட்டியது? புத்தகங்கள் சுட்டுவதெல்லாம் மன்னர்களின் பெயரை அம்மன்னர்களென்ன பாறைகளை அடுக்கினார்களா? தரைமட்டமாக்கப்பட்ட பேபிலோன் ஒவ்வொரு முறையும் நிமிர்ந்தது யாரால்? தங்கஞ்சுரக்கும் லீமாவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடுகள் எப்படிப்பட்டவை? சீனப்பெருஞ்சுவர் கட்டிமுடிக்கப்பட்ட மாலை கொத்தர்களெல்லாம் எங்குப் போனார்கள்? ரோமாபுரியின் வெற்றி வளைவுகளைக் கட்டியதார்? சீசர்கள், வாகை சூடியது யாரை மிதித்து? கவிதைகள் போற்றும் பைசேண்ட்டியத்தில் வசிப்பதற்கு அரண்மணைகள் மட்டும்தானா? அட்லாண்டிஸ் கண்டத்தை கடல்கொண்ட நள்ளிரவு மூழ்கியோர் நினைவெல்லாம் தத்தம் அடிமைகளைப் பற்றித்தானாம் இளம் அலெக்ஸாந்தர் இந்தியாவை வென்றான். தனியாகவா? சீசர் ஃகோவுல்சை கொன்றொழித்தான். அவனோடு ஒரு சமையற்காரன் கூட செல்லவில்லையா? ஸ்பெயின் வேந்தன் பிலிப் தன் கப்பற் படை தண்ணீரில் மூழ்கியதற்கு அழுதானாம் அவன் மட்டும் தான் அழுதானா? இரண்டாம் பிரெடரிக் ஏழாண்டு போரில் வென்றான். வேறு யார் வென்றது? ஒவ்வொரு பக்கமும் ஒரு வெற்றி வென்றோர்க்கு யார் சமைத்துப் போட்டது? பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பார் புகழும் பெரிய மனிதனின் வருகை வரிகளை யார் கட்டியது? எத்தனை அறிக்கைகள் எத்தனைக் கேள்விகள் பெர்ட்டோல்ட் பிரெக்ட் (1898-1956) https://www.vallinam.com.my/issue10/poem7.html
  5. மூச்சு விடக்கூட பயத்தில முழுசிக்கொண்டு இருந்தனாங்கள்.. கார்த்திகை விளக்கீட்டுக்கு கூட விளக்கு கொழுத்தேல்ல மாறி மாவீரர் விளக்கெண்டு சுட்டுப்போடுவாங்கள் எண்டு.. மைத்திரி வந்தபோது இருந்த அந்த உயிர்ப்பயம் போன சுதத்ந்திர உணர்வை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.. அதை அனுபவித்தனுக்குத்தான் தெரியும்.. அண்டைக்குத்தான் முதன் முதல் பொடியளா இரவு பத்துமணிவரையும் வாசிகசாலையில் இருந்து கதைச்சிட்டு சாப்பாட்டுக்கடையில போய் கடை பூட்டுற நேரம் கொக்காவும் கொத்தும் சாப்பிட்டனாங்கள்.. இல்லாட்டி ஆறேழு மணிக்கு பிறகு தெரு எப்பிடி இருக்கும் எண்டு தெரியாது..
  6. பார் பேமிற் ஒனருங்களா அண்ணா..? எப்போ கடைய திறப்பீங்கள்..?
  7. இதுக்கு ஏன் தலைவரையும் போராட்டத்தையும் இழுக்கிறீர்கள்.. நாலு பைத்தியங்கள் செய்வதுக்கும் தலைவரும் போராட்டமும்தான்.. தடக்கி விழுந்தாலும் தலைவரும் போராட்டமும்தான்.. தயவு செய்து அவர்களை நிம்மதியாவிட்டிட்டு அரியம் அண்ட் கோ உங்களுக்கு புடிச்சா அதை எழுதுங்கோ.. நீங்கள் நாலுபேர் காவடி எடுப்பீர்கள்.. பிறகு அது பிழைச்சா தலைவரையும் போராட்டத்தையும் இழுப்பீர்கள்.. இவங்கட கட்டை வேகோணும் எண்டதுக்காக தமிழர்கள் தங்கள் கவட்டையை வேகவைக்கோணும்.. அப்பிடி செய்யாட்டி தலைவரையும் போராளிகளையும் இழுத்து வண்டை வண்டையா சாபம் விடுவீர்கள்.. நல்ல வேடிக்கையா இருக்கு.. உங்களுக்கு சாபம் விட தோன்றினா ஊரில வெட்டியா கோயில் குளத்தில இருக்கிற ஏதும் சாமியை இழுத்து சாபம் விடுங்கோ.. தலைவரும் போராளிகளும் இந்த பார் பேமிற் காரங்களின்ர கேவலங்களுக்க இழுபடவேண்டாமே..
  8. சும்மா லூசுத்தனாமா பந்தி பந்தியா அதே பழைய புழிச்சல் கதையை எழுதாதீர்கள் ரஞ்சித்.. ஜனாதிபதித்தேர்தலுக்கும் பாராளுமன்று தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத பொதுவேட்பாளர் பைத்தியங்கள் என்றால் நீங்களும் அப்படியே இருக்கிறீர்கள்.. இவ்வளவு அதிகாரங்கள் பொலிஸ் நீதி மற்றும் 50வீதம் சுயாட்சி அளவுக்கு அதிகாரம் உள்ள இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இப்படி லூசுத்தனமான மத்திய பிரதமருக்கு நிக்கிறன் எண்டு எடுபாட்டு வேலை பார்ப்பது அரிது..யதார்த்தம் புரியாத விசுக்கோத்துக்கள் அல்ல.. ஆனால் நம் நாட்டில் இது எம் சந்ததி தொடரவேண்டிய வாழ்வா சாவா நிலைமை.. நீங்கள் இந்த ரைட் அப்பை எதிர்வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு எழுதவேண்டியது.. இடம்மாறி இங்க எழுதி இருக்கிறீர்கள்.. நீங்கள் அவுஸ்த்திரேலியாவில் இருந்து கொண்டு கனவு கானலாம் ஆனால் ஊரில் இருந்து கொண்டு கனவு காணமுடியாது.. விடிஞ்சா சூரியவெளிச்சத்தோட யதார்த்தமும் வந்து மூஞ்சைல அடிக்கும்..
  9. அரியநேந்திரனின் தோல்வி தமிழ்தேசியத்தின் தோல்வியும் அல்ல பொதுக்கூட்டமைப்பு தமிழ்தேசியவாதிகளும் அல்ல.. இது தவறான கட்டுரை.. இலங்கையில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை தீரும் வரை தமிழ்தேசியம் வாழும்.. தமிழ் நாட்டிலையே வாழும்போது தமிழ் ஈழத்தில் ஒரு போதும் வீழாது பிரச்சினைகள் தீரும்வரை.. இங்கு பிரச்சினை தங்கள் வயிறு வளர்க்க தமிழ்தேசியத்தை காட்டி பேய்க்காட்டுபவர்கள்தான்.. தமிழ்தேசியம் அல்ல.. உண்மையான தமிழ்தேசியவாதிகள் என்றும் சாதி மதம் கடந்து தமிழர்களும் தமிழ் மொழியும் வாழணும் பெருகணும் அழியக்கூடாது என்று நினைப்பார்கள்.. நானும் ஒரு தமிழையும் தமிழ்மக்களையும் என் மண்ணையும் என் தலைமுறையையும் நேசிக்கும் தமிழ்த்தேசியவாதிதான்..
  10. ஒரு பொதுவேட்பாளருக்கு முட்டுக்குடுத்த முட்டாப்பயல் எழுதுறான்👇 // தேர்தல் முடிவு அறிவிக்க தொடங்கியதிலிருந்து முடிவு வரை ஒரு தமிழனின் பெயரும் அங்கே இருந்தது . #பா_அரியநேத்ரன்// ஏண்டா முட்டாப்பயலுகளா இதுக்காடா அரியத்தை நிப்பாட்டின்னியள்..? கடைசியாகக் கண்டது அது ஒண்டுதான்.. பைத்தியங்கள்...
  11. என்ன அரியம் வெண்டதுக்கு ஸ்ரீதரன் எம் பி ண்ட bar லதான் பாட்டியாம்..?
  12. இனி அசைலமும் ஒரு நாடும் குடுக்காது.. கடைசி நாடு கனடாக்காரனும் சுத்துப்போட்டிட்டான்.. இனி பட்டாளமாய் வெளிக்கிடுற கதை எல்லாம் முடிஞ்சிடும்.. இப்பவே குறைஞ்சிட்டு.. முந்தின மாதிரி ஒண்டு ரெண்டு வெளிக்கிடும்.. மற்றும்படி இப்ப கொஞ்சநாளாய் விசிற்விசாவில் ஊரே அள்ளுப்பட்ட கதை எல்லாம் முடிஞ்சு வந்திட்டு..
  13. தக்கன பிழைக்கும் என்பார்கள்.. தப்பி பிழைத்து வாழ்ந்து இனத்தை பெருக்கும் முஸ்லீம்களைப்போல் வாழ ஊரில் இப்பொழுது கற்றுத்தேறிக்கொண்டிருக்கிறார்கள் எம்மக்கள்.. இன்னும் இரண்டொரு தேர்தலுக்குள் புலம்பெயர் பொதுவேட்பாளர் ஆதரவு கோஸ்ட்டிகள் ஊரில் இருப்பவர்களுக்கு துரோகிப்பட்டம் வழங்குவார்கள்.. என்ன அவ்வளவு சனத்துக்கும் வழங்க பெரிய துரோகிப்பட்டமாய் வேணும்.. யாரும் கணக்கில் எடுக்கமாட்டார்கள்.. 20k கிட்ஸ் வேற வெளிநாட்டில இருந்து ஊருக்கு போறவனையே கனக்கில எடுக்கமாட்டாங்கள் இதில வெளிநாட்டில இருந்து கூவி கேக்க போறான்..
  14. அநுரா சனாதிபதி ஆனதும் கோத்தா சனாதிபதி ஆவதும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு ஒன்றுதான்.. பொருளாதாரத்தில் ஏதும் மாற்றம் வரலாம் ஆனால் அரசியலில் தமிழர்களுக்கு எந்த அநுகூலமான தீர்வும் கிடைக்காது.. இருக்கும் மாகாண சபைகளும் இல்லாமல் போகுதோ தெரியா..
  15. அரியநேந்திரனுக்கு வடக்கில் (யாழ்ப்பாணம் - வன்னி தேர்தல் தொகுதிகளில்) கிடைத்த வாக்குகளாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 65 வாக்குகளை பெற்றிருக்கிறார்... இவருக்கு எதிர்த்தரப்பில் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள வாக்குகள் 4 லட்சத்து இரண்டாயிரத்து 228… தமிழ் பொதுவேட்பாளருக்கு வழங்கிய வாக்குகளைவிட தமிழ் மக்கள் சிங்களக் கட்சியினருக்கு வழங்கியுள்ள வாக்குகள் கிட்டத்தட்ட முன்று மடங்கு அதிகம்… கிளிநொச்சியில் (யாழ்ப்பாணத்தில்தான் கொஞ்ச முஸ்லீம் சிங்கள மக்கள் இருக்கிறார்கள் ஆனால் கிளிநொச்சியில் தூய தமிழ் ஏரியா) தமிழ்ப் பொது வேட்பாளரைவிட (20348) சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகள் இரண்டு மடங்கு அதிகம் (40558).. ஒவ்வொரு தொகுதியிலும் இதுதான் நிலமை… அவ்வளவு பந்தி எழுத்துக்கள் இணைய பத்திரிகை பிரச்சாரங்கள் புலம்பெயர்ஸ் பலரின் ஆதரவு நிதிபங்களிப்பு பிரச்சாரம், பெரிய தமிழ் அரசியல்கட்சிகள் பலவற்றின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பிரச்சாரம் இவற்றுடன் வலம் வந்து அரியம் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் எந்தப் பிரச்சாரமும் செய்யாத - யாருமே ஆதரவளிக்காத - சிவாஜிலிங்கம் 2019 தேர்தலில் பெற்ற வாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம்... வடக்கு கிழக்கிலுள்ள 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்குகளில் அரைவாசிக்கு மேலாவது எடுத்திருக்கவேண்டாமா அரியம்? இவரைவிட சிவாஜி பெற்றவாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் தர்மப்படி அதிகம்.. பொதுவேட்பாளர் கோமாளிகள் இல்லாவிட்டால் அனுராவின் வெற்றி கடினமாகி இருந்திருக்கும்.. அனுரா தரப்பு யுத்தத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதது.. யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பையும் அரசியலில் இருந்து அகற்றியாச்சு.. இனிமேல் ஆட்சியில் இருப்பவர்களை போரின் பங்காளிகளாக விரல்காட்டி நீதிகோரும் அழுத்தங்களை வழங்கமுடியாது… சிங்களத் தரப்பினர் தமிழர்கள் விடயம் உட்பட சகலதிலும் புதிய அணுகுமுறையோடு களத்திற்கு வந்திருக்கிறார்கள்… யுத்தமும் அதன் பின் நீண்ட ஒன்றரை சகாப்தமும் முடிந்து இப்பொழுது சிங்களதேசம் கடந்தகால யுத்தங்களை, வெற்றிகளை பேசி உசிப்பேத்த முடியாத( ஏனெனில் அதில் பங்கெடுக்காத படியால்) ஒருதரப்பை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறது.. இவர்களுக்கும் கடந்தகால போருக்கும் போர்க்குற்றங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சர்வதேசத்துக்கும் தெரியும்.. ஆக இன்று பெரும் இக்கட்டில் மாட்டியிருப்பது தமிழர் தரப்பு… மாட்டவைத்ததில் பொதுவேட்பாளர் கோமாளிகளின் பங்கும் உண்டு.. தமிழ் தேசியத்தின் வீழ்ச்சிக்கான முதல் ஆணியை பொதுவேட்பாளர் கூட்டம் அடிச்சு விட்டிருக்கு.. அது இருக்க இங்கு யாழில் பொதுவேட்பாளருக்கு முட்டுக்கொடுப்பவர்கள் இவர்கள் பொதுவேட்பாளர்கள் தரப்பு சந்திக்கப்போகும் சர்வதேசம் யார் என்று சொல்லிட்டு போங்க… யார் யார் அந்த செய்தியை கொண்டு போகப்போறாங்க..? இந்த பொதுவேட்பாளர் கூட்டே இந்த தேர்தலுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு சேர்ந்த கூட்டு.. இன்றுடன் அந்த ஒப்பந்தங்களும் காலாவதியாகின்றன.. இனிமே இந்த பொதுவேட்பாளர் கூட்டில் யார் இருப்பார்கள்..? அதன் எதிர்காலம்..??
  16. உடம்பில ஒவ்வொரு எலும்பா நோகுது இப்ப எல்லாம் காய்ச்சல் வந்தா.. கொரோனாக்கு முன்னம் இப்படி உடம்பு நொந்ததில்லை காய்ச்சல் வந்தால்.. எத்தனையோ நாள் காய்ச்சல்ல படுத்திருக்கிறன் ஆனா கொரோனா யுகத்துக்கு பின் வரும் காய்ச்சல்களில் உடம்பு நோவதுபோல் நொந்ததில்லை.. இது ஏற்கனவே கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.. அதன் பின் உடம்பில் ஏற்பட்ட விளைவா அல்லது கொரோனா தடுப்பூசியின் பின் ஏற்பட்ட விளைவா எண்டு தெரியேல்ல.. ஆனா ஒண்டு மட்டும் நிச்சயம்.. மேல சொன்ன ரெண்டில் ஒண்டால் எமது உடல் குறிப்பாக எலும்புகள் பலகீனப்பட்டு இருக்கிறது என்பது தெரிகிறது..
  17. இதில் சொன்னதெல்லாம் எனக்கு இப்ப மூண்டு நாளா இருக்கு.. வாசனைதிறன் என்னெண்டு தெரியேல்ல.. வெயிட் மணந்துபாப்பம்.. மணம் இருக்கு.. அப்ப நோமல் காச்சல் போல..
  18. தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணா அண்ணாவினதும் குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.. அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்..
  19. சும்மா விசர்க்கதை கதையாதேங்கோ.. செப்டெம்பர் 22 ஆம் திகதி சிங்கள தலைவர்களுக்கு வேணுமெண்டால் கதிரையை பிடிக்குர நாளா இருக்கலாம், ஆனா எங்கட சங்கு தோழர்களுக்கு இவ்வளவு நாழும் கழுத்து புடிப்பில இருந்த சர்வதேசம் திரும்பி பார்க்கபோறநாள்..😂
  20. மாவை 1. காலை சஜித் ஆதரவு 2. மாலை பொதுவேட்பாளர் ஆதரவு 3. இரவு ரணில் ஆதரவு… 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.