Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
கட்டற்ற இமிக்கிறேசன் விடயத்தில் அவுஸ்த்திரேலியாவிடமும் சுவுஸிடமும் உலகநாடுகள் கற்றுக்கொள்ளவேணும்..
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
மேற்கு நாடுகளில் வலதுசாரிகளின் எழுச்சிக்கான காரணம்களில் இதுவும் ஒன்று..
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
Uk இப்பவே யூரோப்பில் மறுபடி சேர துண்டைப்போடுது..😂😂
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
உங்களுக்கு சர்க்காரிதமே புரிவதில்லையா..? நீங்கள் வாலி இணைச்ச ஸ்கிறின் சார்ட்டை பார்த்துவிட்டா இப்படி எழுதுகிறீர்கள் அல்லது பார்க்கவில்லையா..?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தமிழக நாளை தமிழ்நாட்டில் இரண்டுகட்சிகள் கொண்டாடுகின்றன.. ரெண்டும் தமிழ்தேசியம் பேசும் கட்சிகள்.. நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக்கழம்.. திமுக உடன் பிறப்புகள் இதற்கு எதிராக களமாடுகின்றனர்.. உலகெங்கும் உள்ள தமிழ்தேசியவாதிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் இன்னுமொரு பலமாக வந்து சேர்ந்ந்திருக்கிறது.. ——- 1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1. மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம். - தமிழக வெற்றிக்கழகம் ———- ———- 01.11.1956 அன்று மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.காமராசர். அப்போது தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. மெட்ராஸ் மாநிலம் அல்லது மெட்ராஸ் மாகாணம்(Madras Presidency) என்று பெயர். 14.01.1969 அன்று அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி பெயர் மாற்றினார். மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் பலப்பகுதிகளை கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களுக்கு காமராசர் விட்டுக் கொடுத்தார். தேசியவாதியான காமராசர் இந்தப் பகுதிகள் இந்தியாவிற்குள்தானே இருக்கிறதென்று மற்ற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்தார். ஆனால் நம் பகுதிகளை பெற்றுக் கொண்ட மாநிலங்கள் நம்மை அவர்களின் சகோதரரர்களாக நினைக்கவில்லை. காமராசர் தமிழ்நாடு பகுதிகளை விட்டுக் கொடுத்ததை தமிழ்த் தேசியர்கள் பேசாமல் நைசாக கடந்துவிடுவார்கள். தமிழ்தேசியர்களின் பிரதானப் பணி சாதிகளை உயர்த்திபிடிப்பது. அதற்கு இடைஞ்சலாக வரும் எதைப்பற்றியும் பேசமாட்டார்கள். உண்மையில் 01.11.1956 அன்று நாம் நம் பகுதிகளை இழந்த நாள். அதை எப்படி தமிழ்நாடு நாள் என கொண்டாட முடியும்? - திமுக உடன் பிறப்புகள்
-
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்
உங்களுக்கு தமிழ்நாட்டு மக்களைபற்றி புரியவில்லை.. சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் உங்களைப்போல் ஜெண்டில்மானாக சிந்திப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அதுதான் தப்பு.. அப்படி அல்ல.. தமிழ் நாட்டு பெரும்பான்மை சமூகம் அறிவு மட்டம் வேறு.. அதனால்தான் திமுக அதிமுக ஜெயிக்க முடிகிறது.. விஜய்க்கு கூட்டம் சேர்கிறது.. சீமானுக்கு விசில் பறக்கிறது.. அய்யா நல்லகண்ணு போன்ற அரசியல்வாதிகளுக்கு ஆளே இருப்பதில்லை ஓட் போட.. அப்போ அரசியல்வாதிகளும் பெரும்பான்மை மக்களின் விரும்பங்களுக்குதான் பேசவும் செயற்படவும் முடியும்.. அம்மணமாய் திரிபவர்கள் ஊரில் கோவனத்துடன்போகிறவர்கள் பைத்தியக்காரர்களாம்.. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இப்போ வலதுசாரிகள்தான் முன்னுக்கு வரும்போது பஞ்சத்தில் அடிபட்ட தமிழ்நாட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் லெவலில் அரசியல் நடக்க ஜந்து நூற்றாண்டானாலும் சாத்தியமோ தெரியவில்லை.. உங்கள் அமெரிக்காவிலேயே டிரெம்புக்கு அவ்வளவு சப்போர்ட்டு.. தேர்தல் பெரும்பானமை மக்கள் சொல்வதுதான் முடிவு.. தகரத்தில் தட்டி கொரோனோவை விரட்டு என்று பெரும்பான்மை மக்கள் ஓட்டு போட்டால் அதுதான் சட்டம்.. அதைத்தான் அரசியல்வாதிகள் பின்பற்றனும்.. பாயாசம் பாசிசம்னு பேசினால்தான் ஓட்டு போடுவேன் என்று பெரும்பான்மை மக்கள் நின்றால் அதைத்தான் அரசியல்வாதியும் ஓட்டு வாங்க செய்வான்.. அரசியல்வாதி என்ன நாட்டை திருத்தவா அரசியலுக்கு வருகிறான்..? ஓட்டு வாங்கி அதிகாரம் பெறத்தான் வருகிறான்.. ஆக அரசியல்வாதி மாற மக்கள் மாறனும்.. மக்கள் மாறாவிட்டால் பேசாமல் அந்த நாட்டில் வசிக்கும் அறிவார்ந்தவர்கள் வெளிக்கிட்டு நல்ல ஒரு நாட்டுக்கு போவது அவர்கள் பிள்ளைகுட்டிகளுக்கு நல்லது.. இல்லாட்டி பைத்தியம் பிடித்துவிடும் சிந்திக்ககூடியவர்களுக்கு..
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உங்களுக்கு என்னப்பா காசை உழைச்சு செயார் மார்க்கெற்றில போட்டிட்டு காலாட்டிக்கொண்டு இருந்து பந்தி பந்தியா எழுதிவியள்.. 😂நமக்கு உழைக்கபோனாதான் சோறு.. எப்படியாவது நேரம் ஒதுக்கி பதில் எழுதுறன்..
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நேரம் இல்லை.. கொஞ்சம் பர்சனல் வேலையாக லண்டன் வந்து போயிருக்கிறன்..நம்மூரு எலெக்சன் வேறு.. பிசி.. பதில் எழுதி விவாதிச்சு சில்லறையை சிதறவிடுற அளவுக்கு ஈழத்தமிழருக்கு ரெம்ப முக்கிமான மேட்டர் இது இல்லை.. இல்லை என்றால் எவ்வளவு பிசி என்றாலும் பதில் எழுதி இருப்பன்.. இந்த விடயத்தில் கருத்துதான் முக்கியம். அதை ஏற்கனவே எழுதிவிட்டேன்..
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந்தேன்… நீங்கள் ஏதோ சீமானின் செயல்பாடு மட்டும்தான் தமிழ்தேசியம் என்பதுபோலும் சீமான் மட்டுந்தான் தமிழ் நாட்டீல் இருக்கும் ஒரேஒரு தமிழ்தேசியவாதி என்பது போலும் எழுதிதள்ளி இருக்கிறீர்கள்… சீமான் வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளீல வாங்க.. தமிழ்தேசியம் பரந்தது பெரியது… சீமானுக்கு முன்னம் இருந்தே தமிழ் தேசியத்தை பேசும்பல அமைப்புகள் இயக்கங்கள் தமிழ் நாட்டில் உண்டு.. சீமான் சிலதவறுகள் தமிழ்தேசியத்தை பின்பற்றுவதில் செய்திருந்தால் விஜைபோல் இன்னொருவர் அவற்றை திருத்தி நவீன காலத்துக்கு ஏற்றமாதிரி தன்வழியில் கொண்டுபோவார்.. திராவிட சித்தாந்தம் பேசும் கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டில் எத்தனை இருக்கின்றன.. தமிழ்தேசியத்துக்கு மட்டும் சீமான் குத்தகையா..? எத்தனையோ பேர் இனி வருவார்கள்.. இனறு விஜய் ஆரம்பித்து இருக்கிறார்.. உங்களுக்கு தமிழ்தேசியம் மேல் வெயித்தெரிச்சல் … சீமான் மேல் அல்ல போல இருக்கிறது..- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உறவாடிக் கெடுக்கவேண்டும் அல்லது சேலையில் முள்விழுந்தால் சேலை கிழியாமல் எடுக்கவேணும் முள்ளை.. விஜய் திராவிடம் பேசி திராவிட விசுவாசிகளையும் தம் பக்கம் இழுக்கவேண்டும்.. பின் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் மெதுவாக தமிழ்தேசியத்தை ஊட்டவேண்டும் அவர்களுக்கும்.. அவர் அதை செய்வார்.. ஏனெனில் விஜய் இயல்பில் ஒரு தமிழ்தேசியவாதி திராவிட சித்தாந்தங்களை உள்வாங்கியவர் அல்ல.. அது அவருக்கு ஒத்தும் வராது.. தேர்தலுக்காக அதை பேசுகிறார்.. பேசி ஆட்களை சேர்க்கட்டும் பின் தமிழ்தேசியத்தை ஊட்டட்டும்.. அதை செய்வார்.. அதை செய்யவைப்பதும் ஈசி.. ஏனெனில் விஜை பின்னால் இருந்து இயக்குபவர்களும் திராவிட சிந்தனையாளர்கள் அல்ல பூரா தமிழ்தேசியவாதிகள்.. வெல்லும் தமிழ்..💪- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்னாடி சீமான் தான் அதை பேசுபொருளாக்கி இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வந்திருக்கிறார்.. அதை தொடர்ந்து இன்று விஜை திராவிடமும் தமிழ்தேசியமும் தனது இருகண்கள் என்று சொல்லி இருக்கிறார்.. அவர் சொல்வது சரி பிழை வெல்வார் தோற்பார் என்பதற்கு அப்பால் ஒரு சினிமா பிரபலத்துடன் வந்திருப்பவர் ஓட்டு போடுரமோ இல்லையோ என்னதான் பேசுகிறார் என்று ஒட்டுமத்த தமிழ்மக்களும் உற்று பாத்துக்கொண்டிருக்ககூடிய ஒருவர் தமிழ்தேசியத்தை தனது வாயில் இருந்து உச்சரித்திருக்கிறார்.. தனது கொள்கைகள் இரண்டில் ஒன்று என்று சொல்லி இருக்கிறார்.. அவ்வளவு மக்களையும் தமிழ்தேசியம் என்ற சொல் சென்று சேர்ந்திருக்கும்.. உலகம் எங்கும் பரந்து வாழும் என்போன்ற உண்மையிலேயே மனசார சாதிபேதமற்ற தமிழ் தேசியத்தை நேசிக்கும் (பைத்தியக்கார கடும்போக்கு ஈழத்தமிழ் சுயநல தமிழ்தேசிய அல்லது விளக்கமில்லா விசருகள் அல்லது சுயநலத்துக்கு கடும்தேசியம் பேசும் புலம்பெயர் கூட்டத்தை அல்ல) என் போன்ற பலர் ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் இது.. இந்த உழைப்பு முழுவதும் சீமானை சாரும்.. அவருக்கு முன் தமிழ்நாட்டில் குழுக்களாக இயங்கிய இயங்கும் தமிழ்தேசிய இயக்கங்களையும் சாரும் என்றாலும் தமிழ் தேசியத்தை அரசியல் மயப்படுத்தியதில் சீமானைத்தான் சாரும்.. இப்படி இன்னும் பல தமிழ்தேசியக்கட்சிகள் இனி வரும்.. தமிழ் தேசியத்துக்கு இனி ஏறு முகம்தான்..💪- பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? உடைந்தது 15 வருட ரகசியம் யாரும் பார்த்திராத போட்டோ ஆதாரம்
- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
வாழ்த்துக்கள் இளையதலைமுறை அரசியலில் ஈடுபடுவதற்கு.. இன்னமும் பல இளைஞர்களுக்கு இது ஒரு ஊக்கசக்தியாக அமையட்டும்..- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
30 ,40 வருசமாச்சு டக்ளசையே விரட்டி அடிக்க முடியலையாம் இதுல சுகந்திரன்.. மண்டையன்குழு சுரேஸ் டக்ளஸ் பிள்ளையான் கருணா முன்னாடி சுமந்திரன் ஒரு புள்ளபூச்சி… இடி அமீனும் டக்ளஸ் பிள்ளையான் கருணா மண்டயன் குழுவும் ஒன்னு.. அவனுங்க கால்தூசுக்கு கூட பெறுமதி இல்ல சுமந்திரன்.. சுமந்திரனுக்கு பெட்டி அடிக்கிற நேரத்தில இவனுங்களுக்கு பெட்டி அடிச்சு முதல்ல ஊரைவிட்டு விரட்டலாமான்னு சிந்திக்கணும் தமிழர்கள்..- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
- அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!
வாழ்த்துக்கள்... வந்து மக்களுக்கு நல்லது செய்தால் மகிழ்ச்சியே..- ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
இதில் உள்ள அபிவிருத்தி திட்டங்களில் எதையாவது தமிழ் தேசியக்கட்சிகள் சொல்லி உள்ளனவா..?- நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
டக்ளஸ் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளின் சாவுக்கு காரணமானவன்.. எப்படி கிட்லர் யூதர்களை அழித்தானோ அந்த அளவுக்கு பல தமிழ் இளைஞர்களை தேடி தேடிக்கொன்றதற்கு காரணமானவன் டக்ளஸ்.. இந்த கட்சி இன்றுவரை அரசியலில் இருக்க காரணம் தமிழ்தேசிய கட்சிகள் விட்ட மற்றும் விட்டுக்கொண்டிருக்கும் தவறுகள்.. ஈபிடிபி அரசியலில் இணைந்து கஸ்ரப்படும் தமிழ் மக்களுக்கு செய்தவற்றை எல்லாம் தமிழ் தேசியக்கட்சிகள் செய்திருக்கவேண்டியவை.. அவை அவற்றை தவறவிட்டதால்தான் இன்றுவரை அந்த கட்சி அரசியலில் ஒரு ஆசனமாவது பெற்று நிலைத்திருக்கிறது.. அரசியல் பிரச்சினைகளுடன் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளையும் ஆட்சியில் வரும் சிங்கள அரசுகளுடன் பேரம்பேசி கவனிக்கும் அளவுக்கு ஒரு தமிழ் தேசிய கட்சி வரும் வரைக்கும் ஈபிடிபியின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்.. நான் நினைப்பது சரியோ தெரியவில்லை.. இப்போதைக்கு அதை சுமந்திரன் செய்யவிளைவது போல் தெரிகிறது.. முயல்கிறார் ஆனால் எந்த உஅதவியும் இன்னமும் மக்களுக்கு செய்ததாக தெரியவில்லை.. அப்படி செய்தால் இன்னும் பலவருடங்களுக்கு அசைக்க முடியாத சக்தியாக சுமந்திரன் வளர்வது நிச்சயம் அல்லது அதை செய்யும் ஏதாவது ஒரு தமிழ் தேசியக்கட்சி வருவது நிச்சயம்.. அதேபோல் புலமபெயர் சில தமிதேசிய அதிதீவிர முட்டாள்களைப்போல் எதிர்கால இனம்பற்றிய தமிழ் நிலம் பற்றிய சிந்தனை இல்லாமல் வெற்று உசுப்பேத்தல் மட்டும் செய்யும் அதிதீவிர தமிழ்தேசிய போலிக்கட்சிகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப மாறாவிட்டால் இன்னமும் தேயப்போவது நிச்சயம்..- இனத்தின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் - சிறீதரன்
நசுக்கிடாக்கள்ளன் சொல்லுறார் கேளுங்கோ.. சாத்தான் ஓதும் வேதம்...தமிழ் தேசியத்துக்கு வந்து வாய்ச்ச சாபக்கேடு..- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழர்கள் யூதர்களை படிக்கணும்.. தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்ட யூதர்கள் எப்படி எப்பவுமே புரட்சி செய்து அழிந்துபோகாமல் வாழ்ந்து படித்து பணத்தை இனத்தை பெருக்கி தேவையான நேரத்தில் அதை செய்து இன்று நாடடைந்த வல்லமையான இனமான கதையை தமிழர்களும் குறிப்பாக முட்டள்தனமாக அதிதீவிர தமிழ்தேசியம் பேசுபவர்கள் கேட்கணும்.. குறிப்பாக 10 வது நிமிடத்தில் இருந்து கேட்கணும்.. தக்கனதான் பிழைக்கும்.. அது தெரியாமல் வெற்று வீரம் பேசும் மூடர்கள் தாமும் அழிந்து தன் சந்ததியையும் அழிப்பார்கள்…- இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
இந்த முறை பல ஏவுணைகள் உள்ள வீழ்ந்துள்ளன போல தெரிகிறது.. கைப்பர்சொனிக் ஏவுகணைகளையும் இந்த முறை ஈரான் ஏவியுள்ளதால் இஸ்ரேல் வான்பாதுகாப்பு சிஸ்ரம் திணறி உள்ளது தெளிவாக தெரிகிறது..- இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
- இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
12 நிமிடத்தில் போறது சரி உள்ள விழோனுமே..? அதுக்கு இஸ்ரேல்காரன் விட்டிட்டு புழியங்காய் பறித்துக்கொண்டு இருப்பானோ..? அதுவும் இஸ்ரேல்..- உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண்
இரத்தம் உறையாத பிரச்சினை இருந்திருக்கலாம்.. ஒரு தாதிய மாணவிக்கு இது தெரியாமலா இருந்திருக்கும்? சிலவேளை முதலாம் கல்வி ஆண்டின் ஆரம்பமாக இருக்கலாம் - தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.