Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. இந்த விடயம் நூறுவீதம் உண்மை.. மகிந்த போன்ற ஒரு முட்டாள் அதிபரால் ஒருபோதும் இந்த நாட்டை இந்தளவுக்கு மீட்டிருக்க முடியாது.. இன்று மக்கள் ஏதோ ஒரளவுக்காவது அந்த இருண்ட பொருளாதார யுகத்தை கடந்து இன்று வாழ்கிறார்கள் என்றால் அதற்கு ரணிலின் சாமர்த்தியமும் ஒருகாரணம்.. ரணிலை நரி என்பார்கள்.. அது உண்மைதான் என்பதை ரணில் ஆட்சிக்கு வந்த பின்னான காலப்பகுதியில் கண்ணால் காண்கிறேன்..
  2. எனக்கு இந்த நாட்டை வித்த மகிந்த கூட்டம் ஆட்சிக்கு வரக்குடாது.. இன்னும் ஒருக்கா நான் மணெண்ணைக்கும் பெற்றோலுக்கும் லைன்ல நிக்கேலாது.. ஒரு அப்பிள் ஒரு ஆரேஞ் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி பிள்ளைகளுக்கு கொடுக்கேலாது.. ஒரு றாத்தல் பாணுக்கு மத்தியானமே போய் லைன்ல நிக்கேலாது.. எனக்கு என் வாழ்வாதார பிரச்சினை.. விடிஞ்சா பிள்ளையள் சாப்பிட சாப்பாடு செய்ய சாமான் மலிவா கிடைக்கோணும்.. பாம்பு கீம்பு கடிச்சா இல்லா அவசர அத்தியாவசியத்துக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வாகனத்துக்கு பெற்றோல் இருக்கோணும்.. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஊர் அரசியல் ஃபண் எடுக்கிறதுக்கு கதைக்கிறது.. ஊரில் இருக்கிறவனுக்கு அது பிள்ளைகுட்டியளுக்கு சாப்பாடு போடுற வாழ்வாதார பிரச்சினை.. மீண்டும் நாட்டை வித்த மகிந்தா யுகம் வருவதை ஒரு சாமானிய ஏழையால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.. அந்த வலி ஊரில் பட்டவனுக்கு தெரியும்.. ஒரு மாத கொலிடேயில் ஊருக்கு வந்தவையே லைன்ல பெற்றோலுக்கு நிக்க ஏலாது எண்டு பேஸ்புக்கில பந்தி எழுதினவை.. அதுவே வாழ்வாய்போனவனுக்கு எப்படி இருந்திருக்கும்.. அந்த யுகம் மீண்டும் வர தூனைபோகும் இந்த பொதுவேட்பாளர்கூட்டத்தின் நயவஞ்சகத்தை ஒரு போதும் மன்னிக்க முடியாது.. தங்களையும் தங்கள் குடும்பங்களையும் வெளிநாட்டிலும் கொழும்பில் சிங்களவர்களுடன் சம்பந்தம்வைத்து வசதியாக செட்டில் ஆக்கிவிட்டு ஓய்வுகாலங்களை கழிக்க அரசியலில் ஈடுபட்டு எங்கள் வாழ்வை அழிக்கும் இந்த நயவஞ்சக கூட்டத்தை ஒரு போதும் மன்னிக்கமுடியாது.. இனத்துரோகிகள் இவர்கள்.. தமிழர்களின் வாக்கு ஒரு போதும் தமக்கு கிடையாது என தெரிந்துகொண்ட இன அழிப்பு செய்த மகிந்த கூட்டம் இவர்களுக்கு பெட்டி குடுக்க பெட்டி வாங்கிக்கொண்டு மற்றைய ஆட்சியை பிடிக்ககூடிய கட்சிகளுக்கு விழக்கூடிய வாக்குகளை விழவிடாமல் தடுக்க மீண்டு ஒரு இருண்ட யுகத்துள் இலங்கையை தள்ள சூழ்ச்சி செய்யும் சகுனிகள்தான் இந்த பொதுவேட்பாளர் கூட்டம்..
  3. அப்போ நீங்கள் ஊரை விட்டு ரொம்ப தூரமா அந்த காலத்தில் நிக்கிறீங்கள் என்று அர்த்தம்.. இதெல்லாம் தலைவர்கள் சொல்லமாட்டார்கள்.. ஏனெனில் அரசுடன் டீம் என்று துரோகிப்பட்டம் வந்திடும்.. ஊருக்குள் ஆள் சேர்க்க வரும் அல்லக்கைகள்தான் சொல்லுவார்கள்.. அவர்களை வச்சு சொல்லவைப்பார்கள்.. அண்மையில் என் ஒன்றுவிட்ட சகோதரம் சுமந்திரனின் வலதுகை ஒருவரைப்பிடித்து மக்கள் வங்கியில் வேலை கிடைச்சிட்டு.. இப்போ எல்லாம் தூய கதை எல்லாம் எடுபடாது ஊரில்.. அது முடிஞ்சு போச்சு.. அதையும் பேசி அத்துடன் வாழ்வாதாரத்துக்கும் ஏதும் செய்தால்தான் ஓட்டு.. அதை மட்டும் பேசிட்டு திரிஞ்சா வக்கில் எடுக்கா சைக்கிள் ஓடின கதையாப்போம் அரசியல் வாழ்க்கை.. 80களில் ஊரை விட்டு வரும்பொழுது உங்கள் நினைவுகளில் தங்கிவிட்ட ஊர் அல்ல இப்போ..
  4. என்னட்ட இருந்து என்ன எதிர்பாக்குறீங்க..? அரியத்தையும் விக்கியையும் தூக்கிவச்சு கொஞ்சனுமா நான்.. எனக்கு தலைவன் மானமும் வீரமும் உயிரென மதித்த தலைவன் பிரபாகரன் தான்.. கண்ட கண்ட நாய்ங்கள் இல்ல.. இவனுங்க பின்கதவால் சிங்களத்துடன் என்ன செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.. விக்கி சம்பந்தி மகிந்த நாமல் கூட்டத்திட்ட பெட்டி வாங்கி ரணில சயித் அனுராவுக்கு கிடைக்கும் தமிழர் வாக்கை பிரிக்க செய்யும் சதி தெரியாத பேபே அல்ல நான்..
  5. என்ன சின்னப்புள்ளையாட்டமே இருக்குரீங்க.. வெற்றி பெறக்கூடிய அரசியல்வாதிதான் உறுதி மொழி குடுக்கமுடியும்ன்னா நாட்ல எலெக்சன் உறுதிமொழியே யாரும் கொடுக்கமுடியாது..😂 காசா பணமா.. உறுதி மொழிதான.. அடிச்சு உடுரதுதான்..😂 ஓணாண்டிக்கு ஒரு துரோகிப்பட்டம் பார்சல்.. . துரோகிப்பட்டம் பார்சல் குடுக்கிற குருப்பாண்ணா நீங்கள்..? பூனைக்குட்டி வெளீல வந்திட்டுதா..?😂
  6. கூட்டத்துக்கு வாறாக்களுக்கு வீட்டுத்திட்டம்,சமுர்த்தி,வெள்ள அழிவுக்கு காசு எல்லாம் உள்ளுக்கால கதச்சு எடுத்து தருவம்.. பிள்ளையளுக்கு சமுர்த்தி வேலை எல்க்ற்றி சிற்றி போர்ட்டில வேலை, ஜீஎஸ் வேலை உள்ளுக்கால எடுத்து தருவம்..
  7. சொல்லிவச்சமாதிரி எல்லாம் பெண்களாக இருக்கு. சொந்த பந்தங்களை ஏத்தி வந்து இறக்கி விட்டிருக்கினம்ப்போல..
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் கு.சா..
  9. வெளிநாட்டில வெள்ளை தவிர மற்ற எல்லாரும் கரிமுண்டம்தான்..😂
  10. இப்புடியே போய்க்கிட்டிருந்துதென்டா அவங்கள் ரெண்டு பேருக்குமே எதுக்கு சண்டை புடிக்கிறோம் எண்டது மறந்துபோயிடும்... 🤣
  11. என்ன கந்தையாண்ணைக்கே போட்டியா... நான் கந்தையாண்ணை மட்டுந்தான் யாழில எழுதுற ஒரே ஒரு வெள்ளைகாரன்னு நினச்சிட்டு இருந்தன்..🤣 ஆமால்ல..அதிபர் ஆனதும் அரியத்துக்கு நான்தான் வாழ்த்து சொல்லுவேன், நான்தான் வாழ்த்து சொல்லுவேன்னு டிரெம்ப்பும் கமலா கரிசும் அடிபட்டு கொண்டு இருக்கிறாங்கள்...அவிங்க வாயில மண்ணுதான்..பாவத்த...😂
  12. நானும் யஸ்ரினின் ஆழ்ந்த தேடலுடன் தரவுகளுடனும் எழுதும் எழுத்துக்களை விரும்பி வாசிப்பவன்.. கருத்துக்கள் வேறு கருத்தாளர்கள் வேறு என்பது இந்த யாழில் என் கொள்கை.. கருத்தாளரை பிடித்திருக்கலாம் அல்லது பிடிக்காமல் இருக்கலாம்.. அதற்காக அவரின் எல்லா கருத்துக்களும் பிடிக்காமல் போகும் அல்லது பிடிக்கும் என்பதாக இருந்தால் கருத்துக்களம் செத்துவிடும்.. ஆழ்ந்த தேடல் உள்ள யஸ்ரின் போன்றவர்களே உணர்ச்சிவசப்பட்டால் என்னைப்போல அரைபோதை முட்டாள்களின் நிலை..?🥲
  13. விடுதலை சிறுத்தைகளில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகம்..
  14. என்ன சகுனமே சரியில்லை... அப்போ அரியத்தின் ஆட்சியை பார்க்க முடியாதா..?🥲
  15. இந்த திரி ஜந்து பக்கம் வரை போய்விட்டது..இங்கும் என்னால் காணமுடியவில்லை.. வேறு செய்திகளிலும் என்னால் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை.. சண்டை தொடங்கி 3 வருசமாகிட்டது எண்டதால ஆரம்பகால செய்திகளையும் மறந்து போனன்.. எனது கேள்வி என்னவென்றால் உக்கிரேனை முழுவதும் பிடிப்பதா ரஷ்யாவின் நோக்கம்? அப்படியாயின் பிடித்த பின் ரஷ்யாவுடன் சேர்த்துவிடுமா அல்லது மறு படியும் உக்கிரேனியர்களிடமே கொடுக்குமா அமெரிக்கா தனக்கு வேண்டாதவர்களை ஈராக்கில் அகற்றிவிட்டு மீண்டும் ஈராகியர்களை ஆளவிட்டதுபோல்..? எங்காவது ரஷ்யா இதுபற்றி உத்தியோக பூர்வமாக குறிப்பிட்டிருக்க உக்கிரேனை கைப்பற்றிய பின்னான திட்டங்கள் குறித்து..? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா ப்ளீஸ்..
  16. பேசாமல் பாலஸ்தீனர்கள் அப்பாவி இஸ்ரேலிய நகரங்களின் மீதோ அல்லது உக்கிரேனியர்கள் அப்பாவி ரஷ்யர்களின் நகரங்களின் மீதோ அல்லது ரஷ்யர்கள் போர் முனையில் இருந்து தொலைவில் இருக்கும் அப்பாவி உக்கிரேனியர்கள் நகரங்களின் மீதோ அணுகுண்டை போட்டுவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.. ஏனெனில் மேலே அமெரிக்கா அணுகுண்டை வீச ஜப்பானியர்கள் மீது நீங்கள் குறிய காரணங்கள் போல் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் மேலே நான் கூறியவர்களின் பக்கங்களில் இருந்து அவரவர்க்கு இருக்கு.. பேசாமல் யாராவது ஒருவர் முந்திக்கொண்டு மற்றவர்மீது அணுகுண்டை போட்டுவிட்டால் எல்லாம் சுபவம்.. பின்னர் மேலே நீங்கள் யப்பானியர்கள் மீது கூறியது போல் காரணங்களை எழுதலாம்.. இது உங்கள் கருத்து இல்லாவிட்டால் எனக்கு உண்மையில் மகிழ்ச்சியே.. நான் முன்னுக்கு எல்லாம் வாசிக்கவில்லை.. குறிப்பிட்ட உங்கள் பதிவை வாசித்து விட்டு எழுதியதே அது.. அந்த பதில் அந்த பதிவிற்கு என் மனதில் பட்டதே.. உங்களுக்கானது அல்ல..
  17. நீங்கள் எழுதி இருக்கலாம் நான் அதை வாசிக்க தவறவிட்டிருக்கலாம்.. ஆனால் இந்த திரியில் உங்கள் கருத்து அணுவாயுதத்தை அமெரிக்காவுக்கு முன்னம் சோவியத் தயாரித்து இருந்தால் விளைவு பயங்கரமாக இருந்திருக்கும் என்பது.. அதன் மூலம் நீங்கள் சொல்லுவது அமெரிக்கா முந்திக்கொண்டு அணுவாயுதத்தை தயாரித்து கூட்டமாக ஜப்பானிய அப்பாவி மக்களின் உயிரை எடுத்தது ஆனால் அந்த விளைவு அப்படி ஒன்றும் பயங்கரமில்லை என்பது.. அமெரிக்காவுக்கு அதே இயலுமை கிடைத்தும் விளைவு பயங்கரமாகத்தான் இருந்தது.. ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு தேசத்தின் ஏதுமறியா அப்பாவி மக்கள் கூட்டம் கண்ணை மூடித்திறப்பதற்குள் கூட்டம் கூட்டமாக சுருண்டு விழுந்து இறந்தனர்.. நாசிக்கள் குண்டு போட்டு ஆங்கிலேயர் இறந்தாலென்ன ஆங்கிலேயர் குண்டு போட்டு ஆசியர்கள் இறந்தாலென்ன..நாசிக்கள் யூதர்களுக்கு எதிராக செய்ததைப்போல மன்னிக்க முடியாத மனிதப்படுகொலை அமெரிக்கா செய்தது.. ஒன்றைமட்டும் ஊதிப்பெருப்பித்து இன்னொன்றை சமப்படுத்துவது நமக்கு பிடித்தற்கு முட்டுக்குடுப்பது..
  18. நாமலை வெல்லவைக்கும் வேலை இது.. தமிழர்களின் வாக்குகள் ராஜபக்ச பரம்பரைக்கு ஒரு போதும் போகாது என்பது தெரிந்து அந்த வாக்குகள் வெல்லக்கூடிய மற்றைய பிரதான போட்டியாளர்கள் யாருக்கும் போகக்கூடாது என்று திட்டமிட்டு மகிந்த குருப்பால் வழிகாட்டப்பட்டு சம்பந்தி விக்கினேஸ்வரன் ஊடாக வாக்கைப்பிரிக்க அரங்கேற்றப்பட்டிருக்கும் அரசியல் நாடகம் இது.. மறுபடியும் இனழிப்பு வாதி இலங்கையை பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டுசென்ற மகிந்தகுடும்பத்தை ஆட்சியில் அமத்த பட்டாளி மக்கள் கட்சி அய்ந்து வருடத்துக்கு ஒரு முறை மாம்பழம் அறுவடை செய்து பெட்டி வாங்கி பலகோடி சம்பாதிப்பதுபோல் மகிந்த குடும்பத்திடம் மிகப்பெரிய அளவில் பெட்டி வாங்கிக்கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பொதுவேட்பாளர் நாடகம்..
  19. இதுதான் சரியானது.. அதைச்செய்யுங்கள்..அந்த மக்களை பொருளாதாரத்தில் மீட்டு எடுங்கள்.. அதவிடுத்து இந்த வீணாப்போன கூட்டத்தோட சேர்ந்து நீங்களும் விளங்காம போயிடாதையிங்கோ..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.