Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. அவர்கள் எதிரிகள்.. நெஞ்சில்சுட்டவர்கள்… என் நண்பர்கள் பலரை இவர்களால் இழந்தேன்.. வடக்கில் டக்கிளஸ் தேவானந்தா கூட்டமும் கிழக்கில் கருணா பிள்ளையான் கூட்டமும் இடி அமீனுக்கு சமமானவர்கள்.. இதை எப்பொழுதும் எழுதிப் பதிந்து வருபவன் நான்.. இவர்களை பற்றி மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை.. ஊர் உலகம் அறிந்த கொலைகாரப்பாவிகள்.. ஆனால் இந்த பார்சிறி வேறு ஒரு ரகம்.. கூட இருந்து குழிபறிப்பவன்.. நசுக்கிடாக்கள்ளன்.. நெஞ்சில் குத்தாமல் நைசாக நசுக்கிடாமல் முதுகில் குத்தும் துரோகி.. இவனைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ளவேணும்.. அதற்காக இவனைப் போன்றவர்களை பற்றி பலரும் எழுதனும்.. மக்களுக்கு எடுத்து சொல்லி ஏமாறதீர்கள் என்று விளங்கப்படுத்தனும்..
  2. ஒரு நிமிசத்தால இவை கலைச்சுப்போடுவினம் மிச்சத்துக்கு நாங்கள் என்ன சுவரில போய் முட்டுறதோ.. அதுகில் பாக்க பேசாமல் இருக்கலாம்..
  3. சிறியர் "இயலுமெண்டா நிருபி, போலீசுக்கு போவேன் எண்டெல்லாம் வீர வசனம் தான் பேசுவார் ஒழிய…மதுபோதைக் கலாச்சாரம் எங்கட இளம் சந்ததியை எப்பிடி அழிக்கும் என்டெல்லாம் சொல்ல மாட்டார்…. ஏன் எண்டா புரண்டது அத்தனை கோடிகள்… கிளி நொச்சில ஒரு கோயிலுக்கு முன்னால பார்ராம் சனம் கேட்டா மூலஸ்தானத்தில இருந்து அளந்து பார்க்க தூரம் சரி என்றாங்க… கிளிநொச்சி MP கிளிநொச்சி MP என்று வாய் கிழிய கத்தின இவர் ஏன் இதுவரைக்கும் 16 பார் திறந்தத எதிர்க்க இல்ல..? ஏன் மூச்சுக்கூட காட்டெல்ல… கேட்டா யாழ்ப்பாணத்தில இத்தின பார் இருக்கெண்டு பிரதேச வாதம் கதைப்பார்... இப்படியாக, பேரினவாதிக்கு வெறும் காசுக்காக சோரம் போன பார் தரகர் தானாம் எங்கட தமிழினத்த வழிநடத்த போற தலமை…
  4. சிறி ஜயா குரூப் சொல்கிறது கஞ்சா, கசிப்பை ஒழிக்க Bar ஓகேயாம்…இது பார் லைசன்ஸ்க்கு சிபாரிசு கொடுத்ததை நியாயப்படுத்த சொன்ன வார்த்தைகள்.. அதை உங்களைப்போல் பார்சிறி விசிறிகள் ஆமோதித்து நியாயப்படுத்துகினம்.. இது விபச்சாரத்தை ஒழிக்க மசாஜ் சென்ரருக்கு அனுமதிகொடுத்திருக்கிறம் என்று சொல்வதைப்பொன்றது.. பார் வந்ததால் கசிப்பு எங்க குறைஞ்சிருக்கு......? தேர்தலுக்கு முன்னர் பார் சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்ற சில அல்லக்கைகளள தற்போது சிபாசு யார் செய்தார் என்ற உண்மை வரப்போகுது என்ற அச்சத்தில் அவரின் சில அடிவருடிகள் இப்பவே கூவ வெளிக்கிட்டாங்கள்… சிறி ஐயா விடம் வேலை வாய்ப்பு பெற்று தரும்படி யாரும் சென்றால் ஐயா கூறுவாராம் நாட்டின் நிலமை உங்களுக்கு விளங்கவில்லையா நாங்கள் இப்போ முக்கிய விடயங்களை பற்றி தான் பேசுகிறோம் தேசிய பிரச்சினை எவ்வளவு இருக்கிறது இந்த நேரத்தில் அவங்களிடம் வேலைவாய்ப்பு கேட்டால் ஒன்றும் நடக்காது என்று கூற கொஞ்சம் பொறுங்கோ பார்ப்போம் என்று அனுப்பி விடுவாராம்… ஆனால் அவர்களிடம் bar போமீற்கள் வாங்கி பல கோடிக்கு விற்பனை செய்யலாம் அது பரவாயில்லை.. அடிப்படை தொழில் கேட்டு தனது வாழ்வாதாரம் நிமித்தம் போனவர்களுக்கு தேசியம் தன்னாட்சி சுயநிர்ணய உரிமை… தமிழ்த் தேசியத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டத்தாரிடம் மக்கள் நலன்களை எதிர்பார்க்க முடியாது... தன்மானம் விற்று வயிறு வளர்க்கும் கூட்டம்... இனியென்ன அடுத்துவரும் 5 வருடங்களுக்கு நம்மை அசைக்க முடியாது என்ற ஆணவத்தில் ஆடுவார்கள்… **** உங்கள் ஏமாற்றுக்கு மக்கள் முற்று புள்ளி வைத்துவிட்டார்கள் இனி என்றாலும் ஏமாற்று வித்தையை நிறுத்துங்கள் *****…
  5. அரசமைப்பு கவுன்சில் பதவி இல்லாட்டி என்ன.. பார்கவுன்சில் தலைவராக்கி சிறிதரனை அழகு பார்க்கும்படி தமிழரசு கட்சியை கேட்டுக்கொள்கிறோம்..
  6. கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2 பார்சிறி பார்சிறி தான். ஒரு நாளைக்கு சங்கு இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர் மற்ற நாள் வாகன பெர்மிட் விற்பனை கார்த்திகையில தியாக புராணம் போற போக்கில கமலஹாசன மிஞ்சிடுவார். தமிழ்த்தேசிய அரசியலின் தலைசிறந்த போலித் தமிழ் தேசியவாதி நசுக்கிடாக்கள்ளன் பார்சிறி.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : ஒரு நாடு இரு தேசம்.. சுமந்திரன் : ஒன்றுபட்ட இலங்கையில் மாண்புமிக்க, சமத்துவமான, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய உடனிருப்பு.. சிறிதரன் : போதையின் பாதையில் தமிழ்த்தேசியம்..
  7. நசுக்கிடாக்கள்ளனுக்கு உதாரணம் பார் சிறியன்.. தவறோ சரியோ சுமந்திரனிடம் இருக்கும் வெளிப்படைத்தன்மை இந்த பார் சிறியிடம் இல்லை.. எல்லா ஓட்டுமாட்டையும் பிளக்கில செய்திட்டு வெள்ளையும் சொள்ளையுமா ஊருக்குள்ள வார கள்ளன் பார் சிறி.. அதையே வெளிப்படையா செய்து அடிவாங்குறது சுமந்திரன்..
  8. அது ஒரு மனக்கவலையில் எழுதி இருப்பார்.. உண்மையில் தமிழ்தேசியத்தை எதிர்க்கும் யாரும் தமிழ்தேசியத்தை எதிர்ப்பதில்லை.. அதை தவறானவர்கள் கையாள்வதையே எதிர்க்கிறார்கள்.. சிலர் அதை வெளிப்படுத்தும் விதத்தில் தமிழ்தேசியத்தையே எதிர்ப்பதுபோல் எழுதிவிடுகிறார்கள் பிழையானவர்கள் மேல் உள்ள கோபத்தில்.. சாதி, தீண்டாமை பிரதேசவேறுபாடுகள் இல்லாதவர்கள் தமிழ்தேசியத்துக்கு தலைமை ஏற்று இருந்தால் யார் எதிர்க்கபோகிறார்கள்.. பிரச்சினை தமிழ்தேசியம் அல்ல அது சிக்கிஉள்ள தவறானகைகள்.. அந்த கைகளிடம் இருந்து மீட்கும் வேலையை யாராவது செய்வார்கள் என்று பலநாள் காத்திருந்தோம்.. ஊரில் அதை மக்களே ஆரம்பித்திவிட்டார்கள் இந்த தேர்தலுடன்.. புலத்திலும் ஏதாவது மாற்றம் நிகழாமலா போகும்..? காலம் ஒரு காட்டாறு.. அதன் போக்கில் எல்லாத்தையும் அடித்துக்கொண்டுபோய்விடும்..
  9. நடிகர் விஜகாந் மாதிரி.. விஜகாந்தையும் மக்களுக்கு பிடிக்கும்.. ஆனால் மெத்த படித்தவர்கள் பார்வையில் அவர் கோமாளி.. ஆனால் சாதரணமக்கள் தங்களில் ஒருவராக எளியவர் படிப்பறிவற்றவர் எண்டு பாத்தனர்.. உங்களுக்கு சாதாரணமக்களின் உளவியல் புரியல.. ஆட்டோ ஓட்டுறவன் மரக்கறி சந்த்தைக்காறனுக்கு இவ்வளவு படிச்சமனுசன் ஆனாலும் தங்களமாதிரி இருக்கே எண்டுதான் பார்ப்பார்கள்..
  10. அப்படி ஒருவேளை உங்கல் ஆசை நடந்தால்கூட பருவாயில்லை.. பொய்யர்களுக்கு வாக்களித்து கலியாணம் கட்டியும் வாழவெட்டியாய் வாழும் பெண்போல இதுவரை இருந்தோம்.. இன்னும் ஒரு ஜந்து வருடம் இருந்திட்டு போவம் இந்த பொய்யன்களை அர்ச்சுனாவை வச்சு அடிச்சோம் என்ற சந்தோசத்துடன்..30 வருசம் வாழவெட்டியாய் இருந்தவர்களுக்கு 5 வருசம் பெருசல்ல.. ஆனால் அதுக்கு பிறகு வறப்போற தேர்தல்களில் இந்த மரண அடி ஞாபகம் வந்துகிட்டு இருக்கும் போலிகளுக்கு கனவிலும்.. இதை நிகழாவிடாமல் தடுப்பதுதான் உங்கள் போன்றவர்களின் பெரு விருப்பு..
  11. * 1986 யூலை, மல்லிகையில், புதுவை இரத்தினதுரையால் எழுதப்பட்ட நீண்ட கவிதையின் ஒரு பகுதி ....செந் தோழர்களின் செவியில் விழவேண்டும்.. பாலைவனம் கடந்து வந்த மக்களின் பாதங்களை ஆறவைப்பீர்களா..!? —————— தென்னிலங்கைத் தோழனுக்கு நண்பா! நெடுங்காலம் நாங்கள் முகம் கண்டு முன்பு வருடத்தில் மே மாத முதல் நாளில் சந்திப்போம். 'புதிய நகரசபை முன்றலிலே' செங்கொடிகள் தாங்கித் திரிவோம் தலைவர்கள், எங்களுக்கு தெரியாத எத்தனையோ சொல்வார்கள் கைதட்டி ஆர்ப்பரித்து களிப்போம். பிரிந்திடுவோம். பொய்யில்லா இந்த 'புரட்சிக் கனவு' களில் மெய்மறந்து தூங்க மேமாதம் வரும் அப்போ... மீண்டும் சந்திப்போம். வடக்கிருந்து பஸ்சில் வருவார்கள் தமிழர்கள் கிழக்கிருந்து பஸ்சில் வருவார்கள் சோனகர்கள் தெற்கிருந்து பஸ்சில் வருவார்கள் சிங்களவர் எல்லோரும் சேர்ந்து மேமாத முதல் நாளில் 'வர்க்கப் போர்' பற்றி வாதிடுவோம். புரட்சி பற்றித் தர்க்கங்கள் செய்வோம் 'சமவுடமைச் சமுதாயம்' பற்றிப் பறைவோம், பஸ்சேறித் திரும்பிடுவோம் கற்பனையில் மீண்டும் களிப்போம். இது வழக்கம். வடக்கே.... மாவலியின் வருகைக்கு காத்திருந்து துடக்காகிப் போனோம். தோழா! உன்முகத்தைக் கண்டு கனகாலம் கவிதையிலே..... தேசிய நீர் மொண்டு குடித்ததுவும், மேதினத்திற் கூடியதும், உண்டன்றி, வர்க்க உறவெல்லாம் கற்பனையா? வந்து பார். எங்கள் வடக்கும், கிழக்கதுவும் எந்தவிதமான இருள் சூழ்ந்து கிடக்கிறது அரச படைகளென்ற அரக்கர்களின் பிடியினிலே கரையும் தமிழ் நிலங்கள் கண்ணீரில் மிதக்கிறது. வெள்ளம் போற் பாய்ந்தார்கள் வெறியர்கள். நாங்களதில் அள்ளுண்டு போனோம். அடக்கு முறைக் குள்ளானோம் பிச்செறியப்பட்ட பிரேதங்கள் எங்களது குச்சொழுங்கையெங்கும் குடல் சரிந்த சடலங்கள். பல்லாற் கடித்துப் பதம்பார்த்த முலைகளுடன் எல்லாம் இழந்துவிட்ட இளம் வயதுக் கன்னியர்கள் சொன்னால் விளங்காது செவிக்குள் அடங்காது என்னென்று இதையெழுதி எப்படித்தான் புரியவைப்பேன். சீனாவில் இருந்து வந்த 'சிவப்புப் பிரசுரங்கள்' 'லெனினின் சிந்தனைகள்' 'மார்க்ஸின்' கட்டுரைகள் என்னிடத்தில் இப்போது இல்லை வீடெரிந்த, அந்நேரம்.... அவையும் அனலிற் கருகியன உன்னிடத்தில் எல்லாம் உண்டு என எண்ணுகிறேன்....// - புதுவை இரத்தினதுரை -
  12. காலம் உரியவர்களை காட்டும்..அவர் தன்னை தமிழ்தேசியவாதியாகத்தான் அடையாளம் காட்டி இருக்கிறார்.. அடுத்த ஜந்துவருடத்தில் அவர் தன்னை நிரூபித்தால் அதுவாக அவரை அசைக்கமுடியாத தமிழ்தேசியவாதி ஆக்கிவிடும்..காலத்தின் விசித்திர முடிச்சுக்களை யார் அறிவார்.. நீங்கள் சொன்னதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உண்டு..
  13. எத்தனை வருட கால அரசியல் அனுபவம் - சாணக்கியம் - அபிவிருத்தி - மக்கள் சட்டத்தரணி - மூத்த ஊடகவியலாளர் என்டு எல்லாம் சுத்திட்டு திரிஞ்ச சுமந்திரன், சரவணபவன், சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் , டக்ளஸ் தேவானந்தா, மான் மணிவண்ணன், மாம்பழம் குறூப், சுகாஸ் அன்ட் கோ, சந்திரகுமார் இவர்களால மன்னார்ல இருந்து வந்த சின்னப்புள்ளை தங்கம் கௌசல்யா எடுத்த 15,800 சொச்சம் ஓட்டுகளகூட எடுக்க முடியல.. அடின்னா இது தான் அடி.. செருப்படி.. இது ஒன்றும் பெரு விருப்பில் கெளசல்யாக்கு கிடைத்த வாக்கல்ல.. உங்கள் எல்லோர் மீதும்.. விசேடமாக போலித்தமிழ்தேசியவாதிகள் மீதிருக்கும் பெரு வெறுப்பில் கெள்சல்யா மற்றும் அர்ச்சனாவுக்கு கிடைத்த வாக்குகள்.. திருந்துங்கடா தேத்தண்ணி வாங்கித்தாறன் முமெண்ட்..
  14. இப்போது நடந்துகொண்டிருப்பது எல்லாம் போலிகளை அப்புறப்படுத்தும் அரசியல்… என்டைக்கு தனிப்பட்ட ஆசன அரசியலுக்காக வீட்ட விட்டு சைக்கிள், மான், சங்கு, மாம்பழம் என்டு பிரிவினைகள் கூறி ஓடினீங்களோ அன்டைக்கே நாம் இனமாக தோற்றுவிட்டோம்.. இந்த மக்கள் அப்பழுக்கற்ற மக்களுக்கான தலைவனை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்… அப்படியான தலைவர்களை கண்டடையும் போது மக்கள் அவர் பின் திரள்வார்கள்... இனிமேல் சரி ஆத்மார்த்தமான மக்கள் அரசியல் செய்யும் தலைவர்கள் நம் தமிழ்தேசிய பரப்பில் வரவேண்டும் - அதற்கான வாய்ப்பை தமிழ்மக்களான நாம் வழங்க வேண்டும்… போலித்தமிழ்தேசியவாதிகள் இப்பொழுது கூப்பாடு போடுவதுபோல் அல்ல.. தமிழ்தேசியத்திற்கு அழிவில்லை. போலிகளே அடிவாங்கியுள்ளார்கள்.. போலித்தமிழ்தேசியவாதிகள் நீங்கள் எல்லாம் ஒழிந்து தொலைந்தபின் யாராவது நல்லவர்கள் மூலம் மீண்டும் எழும்.. தமிழ்தேசியம் ஒரு போதும் வீழாது... ஒரு தேர்தலால் ஆயிரமாயிரம் ஆண்டு கால நம் உணர்வுகளை வீழ்த்த முடியாது…
  15. யாழ் இருக்கும் தமிழ் தளங்களிலேயே ஓரளவு ஊர்மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் தளம்.. உதாரணத்துக்கு ஒண்டு- ஒருத்தர் ஒரு திரி திறந்து அநுராவை கெட்டவனாக காட்ட எழுதுனவர் அதில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிராகத்தான் பேசி இருந்தனர்.. ஓட ஓட அடித்திருந்தனர்.. அர்ச்சுனாவுக்கு ஓட்டுப்போட்டு அந்தாள பாராளுமன்றம் அனுப்பினதுக்கு சனத்தை முட்டாள் என்டு சொல்லுறத நான் என்ன மாதிரி பார்க்குறேன் என்டா… தமிழ்தேசியம் பேசி பேசி சனத்தை ஏமாத்தலாம் என்டு நினைச்ச அத்தனை தேசியவாதிகளுக்கும் செருப்ப மாட்டு சாணிலயும் - கிடைக்குற மற்ற சாணிலயும முக்கி இந்த தேசியவாதிகள் முகத்திலயும்- அடிமை ஆதரவாளர்கள் முகத்திலயும் அடிச்சிருக்கு சனம்.. உங்க எல்லாரையும் விட கொஞ்சம் கூட அரசியல் தெரியாத - பழக்க வழக்கம் தெரியாத அர்ச்சுனா எவ்வளவோ மேல் என்ட மக்கள்ட தீர்ப்பு உங்கள மறந்தும் அரசியல் பக்கம் வரவேணாம்னு மக்கள் சொல்லுற கடைசி குரல்…
  16. யாராவது உத்தமர்கள், தியாகிகள் வெளியேற்றப்பட்டிருந்தால் யாரும் யாழ் மக்களை விமர்சிக்கலாம்...
  17. மற்றைய தமிழ்கட்சி வேட்பாளர்கள் பெரிய மலை விழுங்கிகள்.. நசுக்கிடாக்கள்ளன்கள்.. டாக்டர் -ரீச்சர் இவன் என்ர பென்சில எடுத்திட்டான் இவன் என்ர கலர்ப்பெட்டியை கிழிச்சிட்டான் ரேஞ்சு சின்ன கோமாளி.. பெரிய மலை விழுங்கியா சின்ன கோமாளியா என்றால் மக்கள் சின்ன கோமாளி ஓகே அடிச்சு திருத்தலாம் எண்டு நினைச்சு போட்டிருக்கிறார்கள்.. மலை விழுங்கிகளை அடிச்சும் திருத்த முடியாது..
  18. பிரச்சினை இல்லை.. எலெக்சனில் நின்ற மற்றவர்களும் ஒண்டும் வெட்டி முறிக்கவில்லை முப்பது வருசமா.. எம் மக்கள் பார்வையில் உங்களுக்கு அர்ச்சனா தெரிவதுபோல் அவர்களும் கோமாளிகளாக தெரிகிறார்கள்.. அதனால் உங்களுக்கு பைத்தியமாய் தெரிபவரும் போகட்டுமன்.. ஒருமாற்றமும் வராது எனில் ஒருக்காலும் போகாதவர் போகட்டும் அடுத்த எலெக்சனில் பாக்கலாம் அவரை..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.