Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. @ஏராளன் வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் எனும் மேலதிக சொற்தொடர் ஏன்? வீரகேசரியில் இது இல்லையே. மற்றும் இந்த கைது மற்றைய வைத்தியர் சம்மந்தமானது அல்லவா.
  2. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வந்து பெண்ணை கடத்தில் பளையில் வைத்து பிடிபட்டார்களா. உந்த கடத்தல் கோஷ்டிக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள்? போலிசாருக்கு பாராட்டுக்கள்.
  3. பொது மக்கள் கலந்து கொள்ளும் ஒரு இனிய பொழுதான நிகழ்வில் தமிழ் குண்டர்கள் செய்த காவாலித்தனங்களை நியாயப்படுத்துவது கேவலம். சீடீசி உடன் பிரச்சனை என்றால் அவர்கள் அலுவலம் முன் சென்று போராட்டம் செய்யலாமே. பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிகழ்வில் தங்கள் ஊத்தைவாலித்தனங்களை காட்டவேண்டியதில்லை.
  4. ஆயுதங்கள் 2009 இல் மெளனிக்கப்பட்ட பின் கொடி பிடிப்பவர்களின் இமாலய சாதனை என்ன? கனடா பிரம்டன் நகரில் நினைவு தூபி நிர்மாணிப்பதா? தனது வெற்றி நிகழ்வில் துரோகிகள் பற்றி அவதானம் தேவை என கூறியதை ஊடகம் வாயிலாக பார்த்தேன். இவரது ரெசுமி எந்த வகை என்பது அப்போதே விளங்கிவிட்டது.
  5. மக்கள் ஆதரவு உள்ள நிகழ்வை ஒரு பகுதி திட்டமிட்டு குழப்பி உள்ளதாக கருத வேண்டி உள்ளது. தமது புறக்கணிப்பு அறிவுறுத்தல்களை மக்கள் கேட்கவில்லை எனும் கோபத்தில் தமது இயலாமையின் வெளிப்பாடாக கீழ்த்தரமான வேலைகளில் சில பகுதி ஈடுபட்டுள்ளதாக கருத வேண்டி உள்ளது. இந்த புறக்கணிப்பின் பின்னால் உள்ள வியாபார போட்டிகள், அரசியல், மற்றும் அமைப்பு ரீதியான போட்டிகளை யார் அறிவார்! ஒரு பொழுது போக்கு, மனதுக்கு இனிமையை ஏற்படுத்தும் நிகழ்வு ரவுடி கூட்டத்தினால் குழப்பம் செய்யப்பட்டு உள்ளது. இனி இந்த ரவுடி கூட்டத்திற்கு வக்காலத்து வாங்க தேசியத்தை முதுகில் சுமந்து கொண்டு திரிபவர்கள் சப்பை கட்டு கட்டுவார்கள். இதுவும் கடந்து போகும்.
  6. பீல்ட் மார்சலின் பீல்ட் வெட்டையாக உள்ளதே. மோட்டார் சைக்கிளில் செல்பவர் ஒரு மரியாதைக்குதானும் மேடைப்பக்கம் திரும்பி பார்க்க இல்லையோ. 😁
  7. பாடத்திட்டத்தில் கலந்துகொள்ளும் பிள்ளைகளை பார்த்தால் உதுகளுக்கு இலகுவாக மண்டையை கழுவலாம் போல தெரியவில்லையே. பாடத்திட்டத்தின் முடிவில் எத்தனைபேர் இந்திய புலனாய்வு அமைப்பினுள் உள்வாங்கப்படுவார்கள்?
  8. அமெரிக்கா நினைத்தால் இரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனை எல்லாவற்றையுமே முடிவுக்கு கொண்டு வரலாம். அவர்கள் பிரச்சனைகளை வைத்துத்தானே தமது இருப்பை தொடர்கின்றார்கள்?
  9. நாமல் கட்டுப்பணம் செலுத்தி விட்டாரா? நிலமையை பார்த்தால் ஜே வீ பி ஆள் தான் அடுத்த ஜனாதிபதி போல?
  10. நேர்மையாக பொறுப்பை உணர்ந்து தமது கடமையை செய்ய தவறியது இப்படி ஒரு அநியாய சாவுக்கு காரணம் என சொல்லப்படுகின்றது. தமது கடமை நேரத்தில் சரக்கு அடிச்சுப்போட்டு அரசவிடுதியில் நித்தா அடிக்கும் வைத்தியர்கள் இனியாவது திருந்த வேண்டும்.
  11. ஏன் இஸ்ரேல் ஈரானை இழுப்பான். ஆட்டநாயகன் அமெரிக்கா தானே. தொடக்கி வைப்பதும் முடித்து வைப்பதும் அதுதானே. தனது ஆயுத கருவிகள் எல்லாம் சரியாக வேலை செய்யிதோ என்று பரிசோதித்து பார்க்க அமெரிக்காவுக்கு இது நல்ல களம். எல்லா காலமும் காற்று ஒரே மாதிரியாக அடிக்காது. நமது காலத்தில் என்னென்ன மாற்றங்கள் நடைபெறும் என தொடர்ந்து நோக்குவோம். ஈரான் வான்பறப்பில் NOTAMS பிரசுரம் செய்ய்யப்பட்டு உள்ளது என ஒரு செய்தி பார்த்தேன். இதன் அர்த்தம் தாக்குதல் எந்த நேரமும் நடைபெறலாம்.
  12. தவறான தகவல் தந்துள்ளேன். எதிர்வீரசிங்கம் அவர்கள் உயரம் பாய்தலில் பதக்கங்கள் எடுத்தார். இது ஆசிய விளையாட்டு போட்டியில். டங்கன் வைட் அவர்கள் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக பங்கேற்று தடை தாண்டி ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார். இலங்கை தமிழர் ஒருவர் எப்போது ஒலிம்பிக் பதக்கம் பெறுகின்றார் என பார்ப்போம்.
  13. உயரம் பாய்தலில் இலங்கை தமிழர் ஒருத்தர் வெள்ளிப்பதக்கம் ஒன்றை வெற்றி கொண்டாரே? எங்கள் ஆட்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்கின்றார்கள். இன்னும் உலக அளவில் முன்னணி வீர வீராங்கனைகள் உள்ளார்களா தெரியாது. எதிர்காலத்தில் வரத்தானே வேண்டும்.
  14. கம்பவாரிதி இப்போது என்ன கூற வருகின்றார்? அரசியல் செய்வது ஒன்றும் தவறான விடயம் இல்லை. இலவச கல்வி பெற்று மருத்துவராகி பின் சம்பளம் வாங்கிக்கொண்டு மருத்துவ தொழிலை தமது வசதிக்கேற்ப பயன்படுத்துவது தவறு. மக்களின் அறியாமையை பயன்படுத்தி நோயாளிகளை ஏமாற்றுவது தவறு. மருத்துவர் அர்ச்சனா அரசியலில் ஈடுபடுவதால் குடி மூழ்கி போகாது.
  15. மன்னார் வைத்தியசாலைக்கு நேரில் சென்று நீதி, நியாயம் கேட்கும் துணிவு ஒருவருக்காவது உள்ளது. இதை பாராட்டத்தானே வேண்டும்?
  16. நாவலர் பெருமான் ஈழத்தில் சைவமும், தமிழும் தழைத்தோங்க பாடுபட்ட ஒரு பெரியார். மற்றவர் பாலஸ்தீனத்தில் தனது இனம் (பாலஸ்தீனம்/இஸ்லாம்) தழைத்தோங்க பாடுபட்ட ஒரு பெரியார். நாவலர் பெருமான் காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பு இயங்கவில்லை. இல்லாவிட்டால் இவரும் ஒரு பயங்கரவாதியே.
  17. அமெரிக்க தூதுவர் எங்கள் ஆட்களின் பலவிதமான வியாக்கியானங்களை பொய்யாக்கிவிட்டாரே. ஊழலை ஒழித்தால் நமது நாடு முன்னேறும் என பீல்ட் மார்சல் கூறுகின்றார். இது ஐயா சிறைக்கு சென்றபின் திருந்திவிட்டார் என்பதை காட்டுகின்றதோ. ஆயுத கொள்வனவில் ஊழல் விவகாரம் காரணமாகத்தானே ஐயா உள்ளே போனார்? திருடனாக பார்த்து திருந்தினால் ஒழிய களவை ஒழிக்க முடியாதாம். இங்கே ஒரு திருடன் திருந்திவிட்டாரா?
  18. கவலை வேண்டாம் தம்பி வடக்கு, கிழக்கில் வரும் கதவடைப்புக்கள், காலநிலை காரணமாக கிடைக்கும் உதிரி நாட்கள், அரசாங்கம் அவ்வப்போது வழங்கும் போனஸ் விடுமுறைகள், அசாதாரண அரசியல்/நாட்டு சூழ்நிலைகள் மூலம் கிடைக்கும் ஓய்வு நாட்கள் எல்லாம் சேர்த்து, அத்துடன் சனி, ஞாயிறு வார விடுமுறைகளுடன் இணைந்து உங்கள் பாடு கொண்டாட்டம் தான். எப்படியும் ஒரு நான்கு, ஐந்து மாதங்கள் ஓய்வு நாட்கள் பார்க்கலாம்.
  19. ஓட்டங்கள், எல்லாம் இனித்தான். ஆனாலும் வழமைபோல் தங்கங்களை அள்ளுவார்கள் என நான் நினைக்கவில்லை. பார்ப்போம். வழமைபோல் நீச்சலில் இந்த தடவை சோபிக்கவில்லை. இது தங்கங்கள் எண்ணிக்கையில் பின்னடைவை கொண்டு வரும்.
  20. இலங்கை மருத்துவர்களை வெளிநாடுகள் வாங்கோ வாங்கோ என்று வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கவில்லை. தமது தகுதி. நிதி நிலவரங்களை காட்டி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா என இவர்கள் குடிபெயரலாம். ஆனால் அங்கே சாதாரண மருத்துவர்களாக பணியாற்றும் தகுதியை குடிபெயரும் எத்தனைபேர் பெறுகின்றார்கள் என்பதே சந்தேகம். பலர் வெளிநாடு வந்து மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்கின்றார்கள். இலங்கை திரும்பி செல்லும் மருத்துவர்களும் உண்டு. இலங்கை வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் எப்படி பணியாற்றுகின்றார்கள் என நான் நேரடியாக அவதானித்துள்ளேன். மருத்துவம் இது ஒரு பதவியாக பயன்படுத்தப்படுகின்றது. பணியாக செய்யப்படுகின்றதா என்பது சந்தேகம்.
  21. பைடன் ஐயா ஓய்வு காலத்தை நோக்கி செல்கின்றார். அடுத்த தலைவர் சிங்கமா அல்லது கமலா அக்காவா என்பது தெரியாது. அமெரிக்காவின் அரசியல் தலைமையின் நிச்சயமற்ற தன்மையை இஸ்ரேல், ஈரான், இரஷ்யா, தமக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.