Everything posted by நியாயம்
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
தமிழ் மக்களிற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார். இவர் தனது மகளிர் அமைப்பு பற்றிய ஈடுபாட்டை கூறுகின்றார். தொடர்ந்தும் அதே வினாவை கேட்க லூசு என்று முடிகின்றது. நான் நினைக்கின்றேன் ஆட்களை தூக்கி எறிந்து கதைப்பது அர்ச்சனாவின் குண இயல்போ என்று. இவர் பேச்சை கேட்க எனக்கு @nedukkalapoovan நினைவில் வருகின்றார். யாழ் இந்து ஆட்கள் இப்படித்தானோ? 😁
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
இங்குள்ள கருத்துக்கள் எல்லாவற்றையும் வாசித்தேன். கொல்லப்பட்டவர் அகதி முகாமில் பிறந்தார், இஸ்ரேல் சிறையில் 21 வருடங்கள் அடைக்கப்பட்டார் என தகவல்கள் உள்ளன. இப்படியான ஒருவரிடம் எப்படியான மனித நேயத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? அவலத்தை கொடுத்தவனுக்கு அவலத்தை கொடுத்துள்ளார். இறுதியில் கொல்லப்பட்டார். ஒரு விதத்தில் பார்த்தால் பதினாறு வயதில் போராட சென்ற தலைவர் பிரபாகரனை விட இவருக்கு போராடுவதற்கான தேவை மிக அதிகமாகவே காணப்பட்டது.
-
வீட்டு வளவுக்குள் இருக்கும் பற்றைக்குள் செல்லாதவர்கள் எல்லாம் இப்ப வன்னிக்காடுகள் பற்றி விமர்சிக்கிறார்கள். -கவிஞர் வீரா
இவர் புலிகளின் குரல்/தொலைக்காட்சியில் முன்பு வருபவரோ? இதே பெயரில் அது வேறு ஒருவரோ?
-
மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்; சுகாதாரத்துறை எச்சரிக்கை
பெரிய பிளாஸ்ரிக் போத்தலில் தானே நல்ல தண்ணீர் வழங்கும் நிறுவனங்கள் தண்ணீர் கொண்டு வருகின்றன. பிளாஸ்ரிக் கொள்கலன் டிபொசிட் ரூபா 1,500. ஒரு கொள்கலன் நீர் ரூபா 400. பிளாஸ்ரிக் கொள்கலனை மீள் சுழற்சி செய்கின்றார்கள். பிளாஸ்ரிக்கை விட்டால் வேறு எங்குதான் போவார்கள்? உலோகங்கள் நிக்கல்/கட்மியம்/அலுமினியம் கொள்கலன்களில் நீர் விநியோகம் செய்ய முடியுமா?
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
நானும் மயூரன் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டேன். வெளிநாட்டு செட் அப் என்றும் ஒரு பேச்சு. இவர்களால் ஏதாவது நல்லது நடக்கும் என்றால் வரவேற்கலாம்.
-
உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
வேறென்ன 'ஐயோ' தான்.
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
நல்ல விடயம். புதுமுகங்கள் தமிழ் மக்களிற்கு புதிய பல நல்ல விடயங்களை கொண்டு வரவேண்டும். இந்த தடவை ஒரு வேளை வெற்றி பெற முடியாவிட்டாலும் நல்லதொரு அடித்தளமாக, ஆரம்பமாக இந்த சுயேட்சை குழு அமைய வேண்டும். வேட்பாளார்களின் கல்வி/தொழில்/சமூக தொடர்புகள்/பின்னணி/ஆர்வம்/முயற்சி/கண்ணோட்டம் இவை பற்றி அறியத்தாருங்கள் பார்ப்போம்.
-
துணை விமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி - ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் சம்பவம்
விமான பயணத்தில் கப்டனே அனைவருக்கும் மேலானவர். அவர் துணை விமானியை விமான அறையை விட்டு வெளியேற்றுவதற்கு அதிகாரம் உள்ளதா தெரியவில்லை. கப்டன் விமான அறையை விட்டு வெளியேற்றுமளவுக்கு துணை விமானி என்ன செய்தாரோ? இப்படியோர் சம்பவம் முன்பு கேள்விப்பட்டது இல்லை.
-
இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்
நீங்கள் அண்மைக்காலங்களில் பார்த்த தமிழ்ப்படங்களின் பெயர்களை அறிய ஆவல். 😁
- உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி
-
சமஸ்டியை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை
இந்த வருட முடிவில் ஓரளவு தெரியவரும்.
- பார் பெர்மிற் – நிலாந்தன்
-
சமஸ்டியை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை
ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது. இலங்கை தமிழ்மக்கள் தம்மை இலங்கையர்களாக உணர்வதும், இலங்கையர்களாக அடையாளப்படுத்துவதும் தமிழ்த்தேசிய கொள்கையை முன்னெடுத்து செல்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி. தற்போதைய ஜனாதிபதி அநுர குமார இலங்கை தமிழ்மக்கள் தம்மை இலங்கையர்களாக உணர்வதற்கும், இலங்கையர்களாக அடையாளப்படுத்துவதற்கும் ஏதுவாக தனது ஆட்சியை வழிப்படுத்தினால் இது தமிழ்த்தேசிய கொள்கைக்கு அடிக்கப்படும் சாவுமணி. இதை நன்கு உணர்ந்தமையாலேயே தூண்கள், கட்டமைப்புக்கள் உசார் அடைந்து உள்ளார்கள்.
-
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குங்கள் - அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு அழுத்தம்
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடாத்தினால் அது ஈரான் அணுவாயுதம் தரித்த ஒரு நாடாகுவதை ஊக்குவிக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் எண்ணுகின்றார்கள்.
-
இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்: மேக்ரானின் அதிரடி நடவடிக்கை!
நல்லதொரு நடவடிக்கை.
- பார் பெர்மிற் – நிலாந்தன்
-
குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என கூறும் பிக்கு
இந்தாளை பார்க்க மடப்பள்ளியில் வேலை செய்யும் ஐயர் போல் அல்லவா உள்ளது?
-
தேர்தலில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்!
ஏன் இவர்கள் வெற்றி பெறக்கூடாதா ஐலண்ட்?
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
தமது வான்பரப்புக்களை பாதுகாக்க முடியாத எந்தவொருநாடும் சீண்டல்களுக்கோ போரிற்கோ செல்லக்கூடாது என்பதே தற்போதைய படிப்பினை.
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
ஆண்கள் அணி மோசமாக விளையாடியபோது பெண்கள் அணி சிறப்பாக விளையாடியது. இப்போது ஆண்கள் சிறப்பாக விளையாட தொடங்க பெண்கள் அணி சோர்ந்து விட்டது.
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு 😁
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
இலங்கையை முன்னேறுவதற்கு இந்தியா விடாது. இந்தியா இலங்கைக்கு ஒரு சாபக்கேடு.
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
இந்த செய்தியை பிரசுரம் செய்த தளம் மட்டக்களப்பை மையப்படுத்தியது என நினைக்கின்றேன். நான் அறிந்தவரை மட்டக்களப்பு மக்களிடையே கருணாவிற்கு மதிப்பு உள்ளது. அதேசமயம் யாழ்ப்பாணத்தாருக்கு ஒரு துரோகி. பிரேமானந்தம் விக்கினேஸ்வரன் தனது நண்பனின் மகளுக்கு போத்தல் அனுமதிபத்திரம் வாங்கிகொடுத்தது பற்றி பம்முகின்ற காணொளி பார்த்தீர்களா? வேலியே பயிரை மேய்கின்றது. சும்மா ஜோக் அடிக்காதீர்கள்.
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
டக்லஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி முரளிதரன் போன்றோர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அது எப்படிப்பட்ட மக்கள் ஆணையாக தமிழ்த்தேசிய தூண்களால் பார்க்கப்படும்? அவர்களின் வெற்றி சர்வதேசத்துக்கு ஏதாவது செய்தியை சொல்லி வந்துள்ளதா? இவர்களை துரோகிகளாக இவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் நினைக்கின்றார்களா? அப்படி நினைத்தால் எவ்வாறு இவர்களால் வெற்றி பெறமுடிகின்றது?
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
கம்பஸ் பிள்ளை கனடா மாமாவை விரும்பியிட்டுது. மாமாவுடன் குடும்பம் நடாத்துது. குட்டி பபாவும் அவைக்கு கிடைக்கப்போகுது. இங்க கருத்து எழுதின ஆட்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு ஐயாயிரம் ரூபா குழந்தைக்கு துடக்கு கழிக்கும்போது மொய் எழுதிபோட்டுவிடுங்கோ.