Everything posted by நியாயம்
-
மறைந்தார் டெல்லிகணேஷ்
நடிகர் டெல்லி கணேஷ் நடித்த பல படங்களில் அதிகம் நான் பார்த்து இரசித்த படம் சிந்து பைரவி. ஐயாவின் ஆத்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி!
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
சுன்னாகம் பொலிஸ் நிலையம் அன்றுதொட்டே பிரச்சனைக்குரிய ஒன்றுதான். அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் போலிசார் பாராட்டப்படக்கூடிய வகையில் செயற்பட்டார்கள். இதற்கு கரிபூசினாற்போல் இந்த சம்பவம் வேறுபாடாக அமைந்தது துர்ப்பாக்கியம். பச்சிளம் குழந்தையை தூக்கி எறியும் ஒருத்தன் போலிசில் பணியாற்றுவதற்கே தகுதி அற்றவன்.
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
ஆகம விதிகளின் பிரகாரம் தானே பூஜை செய்ய முடியும். அண்மையில் ஒரு ஐயர் தனது மேல் கையில் சுற்றி கட்டப்படும் நூலில் (கயிற்றில்) தங்க நாணயங்களை சுற்றிவர கட்டி தொங்கவிட்டுள்ளதை பார்த்தேன். இது ஆகம விதிகளில் அடங்குகின்றதா தெரியவில்லை.
-
வினா விடை
விளக்கத்திற்கு நன்றி சுவை ஐயா.
-
வினா விடை
ஒருவருக்கும் பதில் தெரியாது போல. அல்லது பதில் கூறுவதற்கு கூச்சப்படுகின்றார்களோ? யாழ் கருத்துக்களத்தில் அவ்வப்போது இந்த பதம் பயன்படுத்தப்பட்டதை அவதானித்துள்ளேன். அண்மைக்காலம் என்று கூறுவதானால் மருத்துவர் அர்ச்சனா இந்த பதத்தை பயன்படுத்தி உள்ளார். மற்றும் விஜய் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த பதத்துக்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
பாலஸ்தீனம், லெபனான், இஸ்ரேல், உக்ரைன், மற்றும் அனைத்து மக்களும் போர் அற்ற அமைதியான சூழலில் வாழ வேண்டும். இதற்கு வெற்றி பெறும் புதிய அமெரிக்க சனாதிபதி உழைப்பார் என எதிர்பார்ப்போம்.
-
"பாதுகாப்பை குறைத்துவிட்டனர் என்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம்" - சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கு முப்பது மெய்ப்பாதுகாவலர்கள் போதாதா?
-
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்!
இது இந்திய உளவு அமைப்பின் தொலைநோக்கு திட்டமோ யார் அறிவார்.
-
வினா விடை
வினா: செம்பு/சொம்பு தூக்கி என்றால் என்ன அர்த்தம்? இது தமிழ் சொல்லா? இந்த சொல் பாவனையில் எப்போது எங்கிருந்து வந்தது? ••••••• ♻️
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூனி குறுகி நிக்கிறீனம் போல. கோலி சார் ஓய்வு நிலைக்கு வந்துவிட்டாரோ. வாசிங்டன் சுந்தர் தமிழோ?
-
வினா விடை
என்னப்பா ஒருத்தருக்கும் குளிக்கும்போது மூக்கினுள் தண்ணீர் போவது இல்லையோ அல்லது குளிப்பதே இல்லையோ? ஒரு பதிலையும் காணோம். 😁
-
மெய்யழகன்: அரவிந்த்சாமி - கார்த்தி கூட்டணியில் இன்னொரு ‘அன்பே சிவம்’?
தொலைக்காட்சியில் சுமார் பதினைந்து நிமிடங்கள் நேற்று முன்தினம் பார்த்தேன். படத்தின் பெயர், விபரம் இப்போது இங்கு அறிகின்றேன். கொஞ்சம் வித்தியாசமான படம். வழமையில் பொறுமையாக இவ்வளவு நேரம் பார்ப்பது இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் படம் பிடித்துவிட்டது. அரவிந்தசாமி திருமண நிகழ்வில் உண்பது தொடக்கம் நாட்டுப்பால் ரீ கார்த்தியின் தூண்டுதலால் குடித்து பேருந்தை தவறவிட்டு பின்னர் இருவரும் கார்த்தி வீட்டில் ஒன்றாக பியர் அடிக்கும் காட்சிவரை பார்த்தேன். அத்தான் என உருகும் கார்த்தி முகபாவனையாலேயே பேசும் அரவிந்தசாமி என சென்றது. கார்த்தி கொஞ்சம் ஓவர் அக்டிங்க் தான்.
-
ஜாம்ஷிட் ஷர்மாத்தின் மரணதண்டனையை ஈரான் நிறைவேற்றியது
இடைவெளியில் துபாயில் வைத்து எவ்வாறு கடத்தினார்கள்? இவர் துபாய் வரும் செய்தி எப்படி கிடைத்தது? அரச புலனாய்வு அமைப்புக்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல போலும்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
வீழ்த்த முடியாத கட்சி இல்லை சரி. ஆனால், வரும் தேர்தலில் வீழ்த்தக்கூடிய கட்சி இல்லை என நினைக்கின்றேன். அதேசமயம் @குமாரசாமி கூறியது போல் விஜய் கட்சி மூலம் எவ்வளவு தூரம் அரசியல் சாக்கடையில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதும் எதிர்வு கூறுவதற்கு கடினமானது.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
மகிந்த குடும்பத்தின் அரசியல் ஓரங்கட்டபடும் என நாம் முன்பு நினைக்கவில்லை. எதுவும் நடக்கலாம். மகிந்த குடும்பம் விஜயின் தீவிர இரசிகர்கள் என நினைக்கின்றேன்.
-
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கும் தாக்குதல் நடத்த போவதாக எச்சரிக்கை; நீதிமன்ற வளாகம் தீவிர பாதுகாப்பு கண்காணிப்பில்
நானும் மனதில் இப்படித்தான் நினைத்தேன் டாக்டரின் மைண்ட் வொயிசோ என்று. சா.. எப்படி ஆரம்பித்த அவர் பயணம் இப்படி மட்டமாக யோசிக்கும் அளவுக்கு எம்மை கொண்டு வந்து விட்டது.
-
5 வயது பேரனின் கேள்வி
என்னை ஏன் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கூட்டிக்கொண்டு போனாய், இலங்கையை விட்டு நாங்கள் ஏன் வெளிநாட்டுக்கு போகவில்லை என கேள்வி கேட்கும் பிள்ளைகளும் உண்டு. நானும் எனது தகப்பனாரிடம் பல வினாக்கள் தொடுத்துள்ளேன். வினாக்களிற்கான விடைகள், தெளிவு நாம் அவர்களின் வயதுக்கு/நிலமைக்கு வரும்போது விளங்கும். இலங்கையை விட ஜேர்மனி எந்த வகைகளில் வாழ்வதற்கு உகந்தது என உங்கள் பேரனுக்கு கூறலாம் @Paanch
-
இலங்கையின் பிரிக்ஸ் முயற்சி: பொருளாதாரம், அணிசேரா இராஜதந்திரத்தை உயர்த்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கை
எதிர்கால உலகின் கட்டளைபீடமாக இந்த கூட்டமைப்பு அமையலாம்?
-
வட, கிழக்கில் ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து சிங்களக் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - செல்வராசா கஜேந்திரன்
இங்கு கசப்பான ஒரு உண்மையை நோக்க வேண்டும். சிங்கள மக்கள் ஒரு பொது தேர்தலில் தமிழ் கட்சிகளுக்கு வாக்கு அளிப்பார்களா? சிங்கள மக்கள் தமது இனம் பார்த்து வாக்கு அளிக்கின்றார்கள் என்றால் தமிழர்களும் அப்படி செய்யலாமா?
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
கட்டளை தளபதி @ரஞ்சித் 160 விமானங்கள் அணிவகுத்து சென்று ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சென்றுள்ளதாக அறிவித்துள்ளார். நானும் எங்கே அந்த 160 விமானங்கள் என தேடித் தேடிப்பார்த்தேன். கடைசியில் @ஏராளன் இணைத்துள்ள ஒரு படத்தில் எட்டு விமானங்கள் அணிவகுத்து செல்வதை பார்த்தேன். மிகுதி 152 இஸ்ரேலிய விமானங்கள் படம் எடுக்க முன்னரே ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு வேகமாக சென்றுவிட்டன என நினைக்கின்றேன்.
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
திருமதி பாஞ்ச் விரைவில் முழுமையான ஆரோக்கியம் பெறட்டும்.
-
கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்க உதவுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்து
அடடா, அப்படியா! 😲
-
'தேற்ற முடியாமல் தவிக்கிறோம்' - காஸா, லெபனானில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை
இதை நீங்கள் துரை @வாலி இடம் அல்லவா வினவ வேண்டும்?
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்! 🙏
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
உதயன் வழங்கும் செய்தியின் அடிப்படையில் கருத்து கூறமுடியுமா என்பதே முதல் வினா.