Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள். கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  2. சந்திப்பு எனும் பதம் நியமனம் என்பதை விட அதிகம் பொருத்தமாக உள்ளது. Doctor Appointment: Medical Appointment: Business Appointment: Bank Appointment: இவ்வாறு விரிந்து செல்கின்றன. வேறு ஏதாவது பதில்கள்? @suvy @ஈழப்பிரியன் @நன்னிச் சோழன்
  3. ஒன்றும் புரியவில்லையே. இவ்வளவு காலமும் எப்படி பரீட்சை எழுதினார்கள். இலங்கையின் மற்றைய பகுதிகளில் இப்படியோர் பிரச்சனை எழ இல்லையா? முன்பு இப்படியான முறைப்பாடு வர இல்லையா? போட்டி பரீட்சை என வரும்போது விதிமுறைகள், கட்டுப்பாடுகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இப்போது காதுக்கு அடக்கமான மிக சிறிய புளூதூத் தொடர்பாடல் கருவிகள் உள்ளன. குறிப்பிட்ட கல்லூரி மாணவிகள் காதுகளை மூடியதன் மூலம் சந்தேகத்தை தோற்றுவித்தார்களோ?
  4. திரு. கதிர்காமர் பாலசுந்தரம் (யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர், எழுத்தாளர் ,சமூக ஆர்வலர் , இலக்கியவாளர்) யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வீமன்காமம், கொழும்பு, புறூனை, லண்டன் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமர் பாலசுந்தரம் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர்-வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும், Dr. கயல்விழி (கீத்தா), யாழ்கோவன் (தீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், யுசிலானந்தன், சந்திமா ஆகியோரின் அன்பு மாமனாரும், Dr. யவ்வனா, மிதுசனா (ஆசிரியர்), Dr. ருக்சன், லூக் (உதவி அதிபர்) ஆகியோரின் பாசமிகு பேரனும். காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (தமிழரசு), தர்மலிங்கம், இராசலிங்கம் மற்றும் செல்வபாக்கியம், பரமேஸ், பூமணி ஆகியோரின் அன்பு சகோதரருமாவார். அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) என்ற முகவரியில் 12-06-2024 புதன்கிழமை அன்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், 13-06-2024 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு: தீபன்(கனடா)மகன்: +1 (416) 270 4303 ஶ்ரீவாஸ்(UK) பெறாமகன்:+44 780 155 6620 www.tamilthakaval.org
  5. அருமையான பழமொழிகளும் விளக்கங்களும் பாஞ்ச் ஐயா. இவை ஊரில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் அல்ல வீட்டுதோட்டம் செய்பவர்களுக்கும் பல தகவல்களை வழங்குகின்றன. இங்குள்ளவற்றில் ஒரு சில ஏற்கனவே பரீட்சயமானவை என்றாலும் புதியவை/இப்போது கேள்விப்படுபவை உங்கள் தொகுப்பில் ஏராளம் உள்ளன.
  6. உணவின் அளவு விடயத்தில் நீங்கள் சொல்வது என்னவோ உண்மைதான். வயசு போகப்போக பசி எனக்கும் கூடுகின்றது. உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகரிக்கின்றது. வடை மட்டுமா அருகில் பாகு/உருண்டை/முறுக்கு என எது கிடந்தாலும் அம்பிடுவது எல்லாம் தட்டுடன்/பையுடன் காலியாகிவிடும். சாப்பிடுவதில் அப்படியொரு வெறித்தனம் இப்போது.
  7. வினா: நாங்கள் வைத்தியசாலையில் வெவ்வேறு தேவைகளின் நிமித்தம் Appointment வைக்கின்றோம். அரசாங்க அலுவலகத்தில் ஒரு அலுவலை செய்வதற்கு Appointment எடுக்கின்றோம். அதாவது குறித்த ஒரு நாளில், நேரத்தில் ஒரு சந்திப்போ கருமமோ ஆற்றப்படுவது சம்மந்தமானது. இங்கு Appointment எனும் ஆங்கில சொல்லிற்கு இணையான/நிகரான தமிழ்பதம் என்ன? (இங்கு நியமனம் எனும் அர்த்தத்தில் கேட்கவில்லை) ••••••• ♻️
  8. செய்தியின் பிரகாரம் பார்க்கும்போது கொலையை செய்த சந்தேகநபரை மனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இப்படியான குரூரமான கொலையை செய்யக்கூடும் என நான் நினைக்கின்றேன். போதையை அடித்துவிட்டும் கொலை செய்யப்பட்டதோ தெரியாது. அதுசரி, ஒரு ஆளின் தலையில் பெற்றோலை ஊத்தி கொழுத்துவது உங்களுக்கு நகைச்சுவையாக உள்ளதோ? 😟
  9. அட சும்மா போங்க. அமெரிக்காவில் இப்போது ஊழித்தாண்டவம் ஆட இல்லையா. டிரம்ப் வந்தால் அமெரிக்காவை மட்டும் முன்னிலைப்படுத்தி பல திட்டங்களை செயற்படுத்துவார். எனவே உலக நாடுகள் டிரம்ப் வரக்கூடாது என்பதையே பெரும்பாலும் விரும்புவார்கள்.
  10. தமிழ், நாடகவியல், புவியியல் இம்மூன்று பாடங்களும் புள்ளிகள் பெறுவதற்கு கடினமானவை. கடினமான பாடங்களை தெரிவு செய்து மாவட்டத்தில் முதலிடத்தையும், நாடளாவிய ரீதியில் முப்பத்து இரண்டாம் இடத்தையும் பெற்றது சிறப்பு. மீன் வியாபாரியின் மகள் என உதயன் எழுதவேண்டிய தேவை என்னவோ.
  11. எனது அவதானிப்பின் அடிப்படை எவருக்கும் பக்கசார்பு இல்லாத தன்மை. சுதந்திரமான கண்ணோட்டம். உலகின் மிகப்பெரியதொரு ஜனநாயக நாட்டில் நடைபெறும் சம்பவங்களை பலரும் அவதானிக்கின்றார்கள். அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல் விளையாடுகின்றது. அரசியல் அமெரிக்க நீதித்துறையின் போக்கில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றது. காட் பிலஸ் அமெரிக்கா.
  12. இங்கு தலையங்கம் எழுதப்பட்ட விதம் மயக்கம் தரும்படி உள்ளது. தமது விளம்பரத்துக்காக செய்தியில் மயக்கம் வரும்படி தலையங்கம் எழுதி உள்ளார்கள். நல்ல ஊடகவியல்! மக்களை குழப்புவதுதானே இப்போதைய ஊடகவியல் கொள்கை.
  13. எனது அவதானிப்பும் இவ்வாறே உள்ளது. அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல். வலது இடது சாரி ஊடகங்களிடையே பனிப்போர் நடைபெறுகின்றது. இவற்றுக்குள் சிக்கி தவிக்கும் மக்கள்.
  14. பாதணியின் மேல் புறத்தில் தமிழில்/ஆங்கிலத்தில் வார்த்தைகள் எழுதி எடுக்கலாமோ? “என்னை சுத்தமாக பேணவும்!” என்று எழுதலாம். “சுத்தம் சுகம் தரும்” என எழுதலாம். தனிப்பட்ட தேவைக்கு சில சமன்பாடுகள், சூத்திரங்களை எழுதி மேல்புறத்தில் அடித்தால் எனக்கு பயன்படும். இதை இப்படி ஒன்லைனில் ஓடர் எடுத்து செய்யலாமோ @பெருமாள் அண்ணை?
  15. நாங்களும் குட்டிகளான காலத்தில் ஈர்க்கு குச்சிபோலத்தான் தோற்றம். ஆனாலும் போசாக்கான உணவு அப்போது அங்கு கிடைத்தது. இப்போது சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரையில் அதிகளவில் கோக்/கோலா அடிக்கின்றார்கள். நான் இங்கு அந்த கருமத்தை வாங்குவதே இல்லை. ஏலாத கடைசி கட்டத்தில் ஒன்றும் இல்லை என்றால் அதை அருந்துவது. ருசி ஒருபக்கம் கிடக்கட்டும். ஆரோக்கியம் எங்கே போவது? இவர்கள் அந்த பெரிய லீட்டர் போத்தல் கோக்கை வாங்கி அடிப்பதை பார்த்தால் ஆரோக்கியம் கேள்விக்குறிதான். அதுவும் சின்ன ஆட்களுக்கு இதை கொடுத்து பழக்கலாமா? நூடுல்ஸ் வாங்கினாலோ சமைத்தாலோ சரி அல்லது சிக்கன் புரியாணியோ பிரைட் ரைஸ் என்றாலும் சரி உந்த கருப்பு திரவம்தான் கண்ணை சிமிட்டிக்கொண்டு முன்னால் நிற்கின்றது.
  16. ஒரு முக்கியமான வினா தொடுத்துள்ளேன். ஒருவரும் எதுவித பதிலும் இல்லை. அப்படியானால் முன் ஏற்பாடுகள்/முன் எச்செரிக்கைகளை எடுப்பது இல்லை பாதுகாப்பு விடயத்தில் அலட்சியமாக உள்ளோம் எனவும் எடுக்கலாமா?
  17. பாதணியை உருவாக்கும் நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கலாம். பாதணியை உருவாக்கிய டிசைனருக்கு கார்த்திகைப்பூ விடயம் தெரியுமா என்பதே கேள்விக்குறி. இதை ஒரு எதேச்சையான விடயமாகவே நான் பார்க்கின்றேன். அண்மைய காலங்களில் கொழும்பில் நான் பார்த்த கடைகளில் விற்கப்படும் காலணிகளில் மரம், செடி, கொடி, இயற்கை என பல புதிய அம்சங்களை நான் அவதானித்தேன். அவங்கள் மாவீரர் மயானத்தையே அடிமட்டமாக்கி உழுதவங்கள். இப்படி நுணுக்கமாக உங்கள் மனதை டிசைன் போட்டு துன்புறுத்துவார்கள் என்பது மிகையான கற்பனை என்பதே எனது அபிப்பிராயம்.
  18. அதிகாரம் ஒரு போதை. போதையை அடிக்க அடிக்க அது இன்னும் இன்னும் அதிகளவில் தேவைப்படும். அதிகாரத்தின் தாக்கமும் அப்படித்தானே.
  19. மோதியை ஒரு பக்கம் வைப்போம். மோதியின் அதிகாரம் எமக்கு கிடைத்தால் மோதியின் இடத்தில் நாம் நின்றால் என்ன சொல்வோம்? ஒரு கற்பனை: நான் தான் கடவுள் நான் கடவுள் நான் தான் கடவுள் என்று சொன்னாலும் சொல்ல மாட்டோமா என்ன? 😁
  20. இருப்பு அளவு எவ்வளவு கொடுக்கின்றார்கள்? இலவச சேவையை விட சிறிது கட்டணம் செலுத்துவதன் மூலம் தரமான மின்னஞ்சலை பெறலாம் என நான் நினைக்கின்றேன். + வினா: எதிர்பாராத இயற்கை/செயற்கை அழிவுகள் உங்களை தாக்குவதை/பாதிப்பதை இயலுமான அளவு குறைக்க எப்படியான முன் ஏற்பாடுகளை நீங்கள் நடைமுறையில் கடைப்பிடிக்கின்றீர்கள்?/ செய்துள்ளீர்கள்? ••••••• ♻️
  21. சரி கவலைப்பட வேண்டாம். @ஈழப்பிரியன் அவர்கள் முன்பு தனது பிள்ளைகளின் திருமணத்தின் போது யாரோ சாப்பாடு/பலகாரத்தில் ஆட்டையை போட்டுவிட்டதால் பழைய கோபம் தணியாமல் உள்ளார் போல. சில திருமண/வைபவ நிகழ்வுகளின்போது பாயாசம்/வடை/சாப்பாடு போதாமல வருவதும் சம்மந்திகள்/விழா அமைப்பாளர்/பெற்றோர் ஆளையாள் முறைத்து பார்ப்பதுவும் நடக்கத்தான் செய்கின்றன.
  22. அருமை. அருமை அவசியம் தேவையான செயற் திட்டங்கள். யாழ் போதனா வைத்திய சாலையை மட்டும் நம்பி அயல் மாவட்டத்து மக்கள் வாழ முடியாது.
  23. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் உண்மையில் சிறப்பானது. வவுனியா மக்கள் பெரிதும் யாழ் வைத்தியர்களை நம்பி உள்ளார்கள். ஒரு கண் சோதனை செய்வதற்கோ வேறு உடல்உபாதைகளுக்கோ வைத்திய ஆலோசனை கேட்பதற்கும், சிகிச்சை பெறுவதற்கும் போதிய வசதிகள்/நிபுணர்கள் இல்லை. வவுனியாவில் மருத்துவபீடம் அமைக்கப்படுவதும். வவுனியா அரசினர் வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றம் பெறுவதுவும் வவுனியா, அண்டித்த பிரதேச மக்களின் வைத்திய/சுகாதார சேவைகள்/தேவைகள் பூர்த்தி செய்யப்பட பேருதவியாக அமையும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.