Everything posted by நியாயம்
-
பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்
நீங்கள் உங்கள் டிப்பாட்மெண்டில் களவு செய்யிறீங்கள். நாங்கள் எங்கள் டிப்பாட்மெண்டில் களவு செய்கின்றோம். எனவே எங்களை விசாரிக்க நீங்கள் யார் என்பதுதான் போராட்டம்.
-
யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது
ஆள் தொழிலுக்கு புதுசு என்பதால் பிடிபடாமல் களவு செய்ய தெரிய இல்லை போல.
-
நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா பிரான்சில் நிற்கின்றார், சுவிசிக்கு செல்கின்றார் என நினைக்கின்றேன். இவர் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைத்தால் இம்முறை நிகழ்வு செய்திகள் சற்று வித்தியாசமாக வரலாம். சரி பார்ப்போம்.
-
தெரண - சிக்னல்' ஆகாயத்தில் பயணம்! (சிறப்பு ஔிபரப்பு)
இரண்டாவது கீழுள்ள காணொளி தமிழில் பேசப்படுகின்றது துரை.
-
தெரண - சிக்னல்' ஆகாயத்தில் பயணம்! (சிறப்பு ஔிபரப்பு)
மிக சிறப்பு! திட்டமிட்டு செயற்படுத்தியவர்களுக்கு பாராட்டுக்கள்! 👏 தகவலுக்கு நன்றி @ஏராளன்
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
அ ஐ இறக்கி பாவிக்கும் அளவுக்கு எங்களுக்கு இந்தியர் நம்பக்கூடிய ஆட்களா? இலங்கை தமிழருக்கு எப்படி அள்ளிவைக்கலாம் என்று றோ நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு திரியுது. அ ஐ றோ ஊடுறுவாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? எங்களுக்கு சைனாக்காரனின் திக்தொக்தான் வேணும். 🇨🇳
-
யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
மாணவி தவறான முடிவு எடுத்துள்ளார். அவருக்கு தகுந்த அறிவுரை, அத்துடன், தேவையான ஆதரவு, உதவி கொடுக்க வேண்டும். சாதி, சமூக பிரச்சனைகளை இதற்குள் இழுக்கத்தேவை இல்லையே? பழிவாங்கும் மனநிலையும் மாடியில் இருந்து குதிக்க காரணமாக அமையலாம் அல்லவா?
-
வெளிநாட்டவருக்கு இலங்கையில் வதிவிட விசா!
இதை பார்த்துவிட்டு நம்மட ஆட்கள் இரட்டை குடியுரிமை பெறுவதில் ஈடுபாடு காட்டுவார்களோ?
-
பிளாஸ்டிக், குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு
குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல் அங்கீகாரம் பெற்றதா என சாதாரண மக்கள் அறிந்துகொள்வது எப்படி? பரிசு பொருட்களாக பாலூட்டும் போத்தல்களை குழந்தைகளுக்கு வழங்குகின்றார்கள். பரிசாக கிடைத்த அங்கீகாரம் பெறாத பாலூட்டும் போத்தலை சாதாரண மக்களால் கண்டுபிடிக்க முடியுமா?
-
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
இலங்கைக்கு வருகைதரும் இந்தியர்கள் இலங்கை வரும்போது சில்லறை பொருட்கள், புடவை, பட்டுதுணிகள், வேட்டி, இத்தியாதி, இந்திய உற்பத்திகளை இலங்கையில் விற்பது முன்னைய காலங்கள் தொடக்கம் நடைபெற்றே வந்தது. இவர்கள் சாதகம், கைரேகை பார்ப்பது மட்டுமன்றி, தமது அமைப்புக்கள் சார்பான பிரச்சாரங்களும் செய்வார்கள். நான் சிறுவயதில் எனது தாயாருடன் இவர்கள் தங்கிநிற்கும் கோயில் மடங்களுக்கு சென்றுள்ளேன். சூட்கேசுகளில் புடவைகள் தொடக்கம் விற்பனைக்கு வைத்துள்ள பலவித பொருட்களை காண்பிப்பார்கள். எவசில்வர்/சில்வர் தட்டுக்கள், குவளைகள் என பல்வற்றையும் வாங்குவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் இவர்களிடம் வரும். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஆட்களும் வருவார்கள். 1983 பிரச்சனைகளுடன் இவர்களின் வருகை நின்றுவிட்டது என நினைக்கின்றேன். இப்போது மீண்டும் இலங்கை - இந்திய பயணங்கள் இலகுவாக்கப்பட்டு உள்ளதால் முன்னைய காலம் திரும்புகின்றது.
-
குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது
அல்வாயர், இந்த செய்தி நம்பகத்தன்மை உள்ளதா அல்லது வாசிப்பவரை பேயராக்கும் இன்னோர் கதையா? உந்த 17 வயசு பொடி ரொம்ப பொல்லாத ஆள் போல கிடக்குது. 17 வயதில் உலகத்தையே ஏய்ப்பான் போல கிடக்குது.
-
‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
விகடனின் இந்த கட்டுரையை முன்பு வாசித்தேன். ஐபில் வெற்றிவிழாவின் போது இடம்பெற்ற சனநெரிசல் சாவும் நினைவுகூறத்தக்கது. இந்தியா போன்ற சனத்தொகை நிறைந்த நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்குரிய சாத்தியங்கள் அதிகம். விஜய் அவர்கட்கு தனது பகுதியால் மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை இல்லை என்பது ஒருபுறம் போக அல்லது அவரது வழக்கறிஞர்கள் அறிவுரையாகவும் அமையலாம்; இந்தியா போன்ற ஒரு நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மக்களை சென்றடைய இப்போது நவீன தொழில்நுட்ப உலகில் வேறு பல அம்சங்கள், வழிமுறைகள் உள்ளன. நேரடி ஒன்றுகூடல்களுக்கு பதிலாக இதர மாறீடுகள் பயன்படுத்தப்படுவது அவசியம்.
-
தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
இப்போதைய காலத்தில் கலியாணம் கட்டும் மாப்பிள்ளைமார் பாடு திண்டாட்டம் தான் போல. ஐந்து அரை பவுண் தாலி எடுப்பது என்றாலே பதினைஞ்சு இலட்சத்துக்கு மேல் வேண்டும் போல் உள்ளதே.
-
கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!
அக்ரோபர் மாதத்தில் உலகின் முதல் சிறந்த சுற்றுலா தளத்து நாடாக இலங்கை இடம் பிடித்துள்ளது என ஒரு செய்தி வாசித்தேன். கேபிள் கார் விபத்து இந்த தரப்படுத்தலுக்கு பின்னடைவான செய்தியாக அமையப்போகின்றது. அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும்போது மேலும் மேலதிக விபத்துக்கள் இடம்பெறும் முன்னரே உறுதி அற்ற/ஸ்திரம் அற்ற கேளிக்கை உபகரணங்கள்/இயந்திரங்களை பாவனையில் இல்லாமல் நீக்கிவிட வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும்.
-
பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!
அர்ச்சனா அவர்களின் யூரியூப் தளத்தில் பல விடயங்களை பார்க்க முடிகின்றது. அவர் கூறுபவை எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியனவா என்பதற்கு அப்பால் அவரது சொந்த கருத்துக்களை அவரது வாயாலேயே கேட்கும்போது அவர் சம்மந்தப்பட்ட விடயங்களில் தெளிவு ஏற்படலாம்.
-
பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!
இந்த சம்பவம் பற்றி உண்மையில் என்ன நடந்தது என அர்ச்சனா அவர்கள் இவ்வாறு விபரிக்கின்றார்:
-
யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது
இவர் நிலமையை பார்த்த பின்னராவது ஊரில் வாள் வெட்டு வித்தை காட்டும் நபர்கள் திருந்த வேண்டும். ஊரில் வாள்வெட்டு வித்தை காட்டிவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகும் கனவுடன் வாழும் நபர்களின் செவிகளில் இந்த நபரின் கைது பற்றிய செய்தி சென்றடைய வேண்டும்.
-
இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண்களை விமான பணிப்பெண்களைப் போன்ற சீருடையில் பணியமர்த்த நடவடிக்கை
இதன் அடுத்த கட்டமாக இலங்கை போக்குவரத்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குளிர்பானம், சிற்றுண்டி எல்லாம் வழங்கப்படுமோ?
-
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர்
இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துக்கல் நாடுகள் பாலஸ்தீன நாட்டை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அல்லற்படும் மக்களுக்கு நிம்மதியான. அமைதியான வாழ்வு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.
-
அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!"
இந்த தளம் பாதுகாப்பானதா என முதலில் சொல்லுங்கள். இணைப்பை சொடுக்குவதால் பின்விளைவு ஒன்றும் இல்லைத்தானே. மேல் படத்தில் உள்ளவரை பார்த்தால் கிட்டார் அடிப்பவர் போல தோன்றுகின்றது. பிளேனும் ஓடுகின்றாரோ?
-
உரும்பிராயில் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய இருவர் விடுவித்த பின் மீண்டும் கைது!
குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கைது செய்யப்பட்ட இருவரும் வேண்டிய ஆட்கள் போல. பாவம் வீதியில் சென்ற வைத்தியர் ஐயாவுக்கு தெருவில் நிற்கும் நாய்களிடம் கடிவாங்கிய நிலமை போல் ஆகிவிட்டதே.
-
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
துயர்தரும் செய்தி. ஐம்பது வயதையும் தாண்டவில்லை. ஆழ்ந்த இரங்கல்கள்!
-
காலில் விழுதல்
மாதா, பிதா, குரு, தெய்வம். தெய்வத்தின் கால்களில் விழுகின்றோம். அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரம் உள்ளன. மாதா, பிதா, குரு, மற்றும் இவர்களுக்கு நிகரானவர்கள் கால்களிலும் விழலாம், ஆசீர்வாதம் பெறலாம். இது ஒரு அவமான செய்முறை அல்ல. சிறுவயதிலேயே பெரியவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் பழக்கம் இல்லை என்றால் வளர்ந்தபிறகு விழுவது தன்மான, மற்றும் கெளரவ பிரச்சனை ஆகிடலாம்.
-
எதிரிகளை சமாளிக்க இஸ்லாமிய நாடுகள் ராணுவ கூட்டணி உருவாக்குகின்றனவா?
இஸ்ரேல் இனிமேல் இவ்வாறான தாக்குதல்களை நடாத்த முடியாதபடி ஏதோ நடவடிக்கை எடுப்பார்கள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், இந்த அரபு கூட்டமைப்பிலேயே ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமை இல்லை. தவிர ஆளாளுக்கு அவர்கள் அமெரிக்கா, மற்றும் மேற்கையே எல்லாவற்றுக்குமான தேவைகளுக்கு தங்கி உள்ளார்கள். கண்டன அறிக்கைகள் தவிர வேறு ஏதும் இவர்களால் இஸ்ரேலுக்கு எதிராக செய்யமுடியாது என்றே தோன்றுகின்றது. அரபு நாட்டில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு இஸ்ரேல் விமானங்களுக்கு எதிராக செயற்பட முடியாதபடி கட்டுப்படுத்தப்பட்டது என ஒரு செய்தி பார்த்தேன். இஸ்ரேலின் தாக்குதல் அமெரிக்காவுக்கு பாரிய அழுத்தத்தை கொடுக்கும். ஆனால், அரபு நாடுகளுக்கு அமெரிக்காவை கைவிட்டால் வேறு கதி உள்ளதாக இப்போதைக்கு தெரியவில்லையே.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
காணொளியை முழுமையாக பார்த்தேன். இணைப்பிற்கு நன்றி. இவர்கள் பிணக்குகள் பற்றிய செய்திகளை நான் தொடர்வது இல்லை. அவ்வப்போது மேலோட்டமாக இங்கு பகிரப்படும் சில கருத்துக்களை வாசித்துள்ளேன்.