Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. நல்ல கேள்வி,..காரணம் எனக்கு தெரியாது இருந்தாலும் மரணத்தண்டனை பிழை என்று நான் சொல்லப் போவதில்லை,.....காரணம் 1980 ஆண்டிலிருந்து இப்படி பல மரணத் தண்டனைகள நிறைவேற்றப்பட்டுள்ளது அவை எவற்றையும். நான் பிழை என்று சொன்னதில்லை” அதற்கான விளக்கங்களை எழுதி வைக்கப்பட்டிருந்தது அவை சரியான விளக்கங்கள் அனேகமாக காட்டி கொடுப்புகள் ...இலங்கை இராணுவத்துக்கு தகவல்கள் வழங்கியது எனது பேரனார் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர் நன்றாக ஆங்கிலம் சிங்களம் பேசுவார் அவருக்கு புலிகளை துளியும். பிடிக்காது இந்தியா இராணுவம் வந்திருந்த சமயம் 1987 ஆண்டு வலிய. இந்தியா இராணுவ முகாமுக்கு சென்று புலிகளின். நகர்வுகள் பற்றி தகவல்கள் வழங்கி வந்தார் சிறிது காலத்தில் புலிகளுக்கு தெரிந்து விட்டது அவருக்கு கொடுத்த தண்டனை மரண தண்டனை இவருக்கு ஏன் இந்த வேலை என்று தான் நாங்கள் கதைத்தோம். நீலனுக்கும் அமிருக்கும். மட்டும் தண்டனை வழங்கவில்லை பலருக்கும் வழங்கப்பட்டுள்ளன நீலனும் அமிரும. பாராளுமன்ற உறுப்பினர்கள் தனி நபர்கள் இல்லை கட்சியின் தலைவர்கள் 1,..இனி பேசி பயனில்லை’ 2,.தமிழ் ஈழம் தான் தீர்வு 3,ஆயதப் போராட்டம் தான் அதற்கான ஒரே வழி 4,..ஆயுதத்தை தொட்டு கூட பார்க்கவில்லை 5,.இவர்களின் பேச்சை நம்பி இளைஞர்கள் ஆயுதப்போராட்டம் நடத்தினார்கள் 6,..ஏன் ஆதரிக்கவில்லை இலங்கை அரசுடன் ஓட்டி உறவாடத் தொடங்கி விட்டார்கள் இளைஞர்களின் ஆயுதம் களையவேண்டும் என்பதற்காக 7,...ஆயுதப் போர் நடக்கும் போது நீலன். பொதி,.வரைவு வரைய முடியாது அதற்கு இளைஞர்கள் அனுமதி வேண்டும் 8,.இரண்டு தடவைகள் ஒப்பந்தம் எழுதி ஏமாற்றப்பட்டுள்ளோம் 9,..நீலன. பீரிஸ் சாந்திரிக்கா ....நினைத்தவுடன். தீர்வு வழங்க முடியாது பாராளுமன்றம் அங்கீகாரம் வேண்டும் அங்கே நிச்சயம் நிராகரிக்கப்படும். ஆகவே இந்த பொதி.....இந்த சதி,.இளைஞர்களின் ஆயுதங்களை களைய மட்டுமே 10,..புலிகள் கொலை செய்தது பற்றி வரும் காலச்சந்ததிக்கு சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை ஆனால் அவர்கள் செய்த அனைத்து விடயங்களையும் பேசுங்கள் சொல்லி கொடுங்கள் தனிய. கொலையை பற்றி மட்டும் ஏன். பேசுகிறீர்கள். 11,..இல்லாத அவர்களை பற்றி பொல்லாத கதைகளை தயவுசெய்து தவிர்த்து கொள்ளுங்கள் போகின்ற வழிக்கு உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் 🤣🤣 நான் எவரையும் ஆதரிப்பவனில்லை
  2. எந்தவொரு பொதியும்,....தீர்வு, . வரைவு போன்றன இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். அப்புறம் நடைமுறையில் வரும் சந்தர்ப்பம். உண்டு” அதற்கு முதல் அவை பொதியுமல்ல. தீர்வுமல்ல வரைவுமில்லை .......பாராளுமன்றம் அங்கீகரிக்க முதல். கதைப்பது வீண் வேலை இன்று வரை பொதி தீர்வு வரைவு என்று எவையுமோ இலங்கை பாராளுமன்றம் அங்கீகரிக்கவில்லை நன்றி வணக்கம் 🙏
  3. நான் விரும்பியா,..எழுதுகிறீர்கள்?? இல்லையே?? உங்கள் விருப்பம் போல் எழுதலாம் ஒரு பிழையின்றி போராடி காட்டுங்கள்,பார்ப்போம் .. இந்தியாப் படைகளை எதிர்த்தும் போராடுங்கள் தரை. கடல். ஆகாய படைகளை கொண்டும். போராடுங்கள் தொடர்ந்து ஒரு 40 ஆண்டுகள் போராடுங்கள் உங்களை எதிரியிடம். காட்டி கொடுப்பவர்களை. அணைத்து வைத்துக்கொண்டு போராடுங்கள் உங்களை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளட்டும். எந்தவித சம்பளமுமின்றி சொந்த உயிரை கொடுத்து போராட்டங்களை இரவு பகலா செய்தவர்கள். உரிமைக்காக
  4. சட்டங்களை உயிர் உள்ளவர்களுக்கு தான் பயன்படும் பயன்படுத்த முடியும் இறந்தவர்களுக்கு இல்லை உலகில் எந்தவொரு போராட்டமும் பிழையின்றி நடந்நது இல்லை 5% .....10% பிழைகள் புறக்கணிக்கலாம் இது போராட்டத்துக்கு மட்டுமின்றி வாழ்க்கையில் அனைத்து விடயங்களுக்கும். பொருந்தும் அதாவது 100க்கு 100% சரியாக யாரும் நடத்தது சரித்திரத்தில் இல்லை எல்லாம் சரியாக செய்தவனும் இல்லை எல்லாம் பிழையாக செய்தவனுமில்லை அழிக்கப்பட்ட புலிகளை பற்றி இன்று களத்தில் இல்லாத புலிகளை பற்றி கதைப்பது விழலுக்கு இறைத்த நீராகும். ஒரு பிரயோஜனம் அற்ற செயல் வீண் வேலை தேவையற்றதும்கூட 150000. மக்களை கொன்றவர்கள் உயிர் வாழ்கிறார்கள் அவர்கள் மீது தான் சட்டம் பாயும் ஆனால் இது பற்றி எவரும் ஒரு வார்த்தை பேசுவது இல்லை ஒருக்கால். பிழையின்றி போராடி காட்டுங்கள் பார்ப்போம் முடியாவே முடியாது ஒருபோதும் ஒருவராலும் முடியாது நாங்கள் பிழையை சொல்லுகிறோம்.. ஏனெனில் இனி திருந்தி. பிழையின்றி போராட்டம் நடத்துவோம் இது ஒரு உலக மாகா புலுடா .........30 ஆண்டுகள் போரில் சில பிழைகள் இருக்கலாம் நான் சவால் விடுகிறேன் 30 மணித்தியாலத்துக்கு பிழையின்றி போராடி காட்டுங்கள் பார்ப்போம் ........உங்களால் முடியாது அடுத்தவனுக்கு. எப்படி சொல்லி கொடுக்க முடியும் ?? நான் புலி அல்லது அரசாங்கம் ஆதரவாளன் இல்லை 🙏
  5. மற்றவர்களை இழுக்காமல் கருத்துகள் எழுதுங்கள்… புலிகள் இல்லை 2009 அழிக்க பட்டு விட்டார்கள். மறக்க வேண்டாம் புலிகள் இல்லை நீங்கள் பிழைகளின்றி போராடுங்கள். நான் உண்டியல் குலுக்கி உதவி செய்கிறேன் 🤪🙏🙏. இந்த உலகில்…………… பிழைகளின்றி போராடிய விடுதலை அமைப்பு உண்டா?? இல்லையே?? இனிமேல் தமிழருக்குகாக எவரும் மானமுள்ள எவரும் போராடமாட்டார்கள். ஆகவே பிழை விட சந்தர்ப்பம் இல்லை அதேநேரம் திருந்தவும் சந்தர்ப்பமில்லை நன்றி வணக்கம் 🙏🙏🙏
  6. இவரை மட்டும் மண்டையில் போடவில்லை 1981 ஆண்டளவில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் அடிக்கடி பார்த்து உள்ளேன் காரணங்களும். பெரிய பேப்பரில் எழுதியிருக்கும். அவ்வளவு காலம் கதைக்காத நீங்கள் இவருக்கு மட்டுமே முக்கியம் கொடுப்பது ஏன் இவருடைய உயிர் மென்மையானாதா?? எல்லா உயிர்களும் சமன் இல்லையா?? இதை செய்தது என்று கூறப்படும் புலிகள் இல்லாத நிலையில் கதைப்பது வீண் வேலை தேவையற்றதும் கூட
  7. வரைவு எப்படி நல்லாதாக இருந்தாலும் அமுல் படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை ...வரைவு நல்லது என்பதும் நடைமுறையில் அமுல் செய்வதும் வெவ்வேறு விடயங்கள் வரைவு நல்லது என்றால் மட்டும் போதுமா?? அமுல் படுத்த தேவையில்லையா?? போராடி கொண்டிருக்கும் போது இவர் இப்படி ஒரு வரைபை எழுதியது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் இவங்கள் பெடியாள். தேவையில்லாமல் அடிபடுகிறார்கள். என்ற மாய தோறறத்தை உருவாக்கிவிட்டது
  8. நீலனை யார் கொன்றார்கள் என்பது பற்றி நான் ஆராய்வு செய்யவில்லை ....ஆனால் நீலனின். வரைபு தீர்வு என்பது தவறு ஆகும் அது சதி திட்டம் என்று உறுதியாக சொல்லுகிறேன் இனி பேச முடியாது தமிழ் ஈழம் தீர்வு ஆயுதப் போராட்டம் தான் சரி என்றவர்கள் ....இதனை நம்பி இளைஞர்கள் ஆயுதம் எடுத்து விட்டார்கள் ஏன் பேசினார்?? யாரை கேட்டு பேசினார்?? ஆயுதம் எடுத்தவர்கள் எதிர்காலம் என்ன?? பெரிய பல்கலைகழகத்தில் சட்டம் படித்தவருக்கு இந்த கேள்விகள் எழவில்லைய?? இவரது தீர்வு இன்னமும் ஏன் நடைமுறைக்கு வரவில்லை??
  9. யோசப் பராசாசிங்கம். பாராளுமன்ற உறுப்பினர் கொலை பற்றி கவலையில்லை ...காரணம் என்ன?? குமார் பொன்னம்பலம் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? ரவிராஜ் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? ஆனால் தீர்வு திட்டம் என்ற பெயரில் ஆயுதப் போராட்டங்களை செய்த இளைஞர்களை மடக்க சதி திட்டம் திட்டியது பற்றி கவலைப்படுகிறார்கள் நான் அறிந்த வகையில் புலிகள் பலமுறை விசாரணையின் பின் குற்றம் நிறுபிக்கப்பட்டால் மட்டும் தண்டனை உண்டு” புலிகளின். வழியில் குறுக்கீடும் எவரும் தப்பிக்கவே முடியாது இது அவர்களின் சட்டம்
  10. ஏன்?? எதற்காக?? என்ன பிரயோஜனம்?? புலிகள் இருக்கிறார்களா?? 2009 பிரச்சனை தீர்ந்து விட்டது இல்லையா??? இனி புலிகள் வரமாட்டார்கள் நீலன் போல் நிறையவே தலைவர்கள் உண்டு” அவர்கள் தீர்வுகள் எழுதுவார்கள் எவரும் கொல்லப் போவதில்லை தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வாழ்த்துக்கள்
  11. இது 100% தமிழர் விடுதலை கூட்டணியின் பிழை நான் இலங்கையில் நேரடியாக கண்டும் உள்ளேன் இனி பேசி பயனில்லை’ மொக்கையாக தெரியவில்லை தமிழ் ஈழம் தான் தீர்வு இது மொக்கையாக தெரியவில்லை ஆயுதப் போராட்டம் தான் வழி இது மொக்கையாக தெரியவில்லை ஆயுதப் பயிற்சி எடுக்கவில்லை மொக்கையாக தெரியவில்லை களத்தில் நிற்கவில்லை மொக்கையாக தெரியவில்லை போராடியவர்களுடன் நிற்க முடியவில்லை மொக்கையாக தெரியவில்லை இவர்கள் இல்லையென்றால் இளைஞர்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தி இருக்க மாட்டார்கள் இளைஞர்களை மூட்டாள்கள். ஆக்கிய காரணம் தான் இந்த நிகழ்வுகளுக்கு காரணம் இளைஞர்கள் இலக்கு தமிழ் ஈழம் இவர்கள் வாழ்க்கை பாராளுமன்றத்தை அனுபவிப்பது ஆயுதப் போராட்டம் என்று இவர்கள் சொன்னதன் கருத்துகள் என்ன??
  12. முதலில் அவர் எழுதியது தீர்வு திட்டம் இல்லை ....பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை சிறைப்படுத்தி. ஆயுதங்களை களையும் திட்டம் அதாவது இவர்களின் தீர்மானங்களின்படி ஆயுதமேந்தி போராட்டம் நடத்த துணிந்து பெற்றோர்களை உடன்பிறப்புகளை விட்டுட்டு வந்தவர்களை கொலை செய்யும் திட்டம்
  13. இல்லை இலங்கை பொலிஸார் எப்படி பட்டவர்கள் என்பதற்கு உதாரணம் அன்று தொடங்கி இன்று வரை வளர்ச்சி அடைந்து வருகிறது மேலும் உங்கள் விருப்பம் போல் புலிகள் பூண்டோடு அளிக்கப்படுவிட்டார்கள். 2009 ஆண்டுக்கு பின்னர் உங்களுக்கு பொற்காலம் தான்
  14. நீங்களும் உங்கள் போன்றோரும். 2009 பிற்பாடு செய்திருக்கலாமே ? ஏன் செய்யவில்லை ?? போர் தொடங்க முதல் நீலன் ஏன் தீர்வு திட்டங்களை வரையவில்லை ?? காரணம் தீர்வு தருவதற்க்கு எவருமில்லை பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்து போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கும் போது அவர்களை இலகுவாக சிறைப்படுத்த வைக்கப்பட்ட எலிபொறி தான் நீலனின். தீர்வு நீலன் சந்திரிக்காவின். செயல் திட்டங்களை செயல்படுத்த முனைந்தார். மாறாக தமிழர்கள் சார்பாக அவர் வேலை செய்யவில்லை ஆயுதப் போராட்டம் தான் வழி என்றவர்கள் ஆயுதப்பயிற்சியை எடுக்கவில்லை களத்தில் முன்னுக்கு நிற்கவில்லை பதுங்கியிருந்தார்கள் காரணம் பயம் பேச்சு ஒன்று செயல் வேறு ஒன்று இப்படிபட்டவர்கள். எப்படி தீர்வு எழுத முடியும்?? போர் இவர்களின் தீர்மானங்களின்படி தான் தொடங்கியது அதன் பின்னர் புலிகளின். அனுமதி இன்றி பேச முடியாது காரணம் இனி பேச முடியாது ஆயதப் போராட்டம் தான் வழி என்று நீங்கள் தான் சொன்னீர்கள் தமிழ் இளைஞர்கள் இல்லை உங்களிடம் துணிவு இல்லாதபடியால் தான் இளைஞர்கள் போராடினார்கள். அந்த நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணி இளைஞர்களை ஏன் ஆதரிக்கவில்லை?? சும்மா ஆவது இருந்து இருக்கலாம் அதை விட்டு ஏன் சகுனி வேலை பார்த்தார்கள்
  15. அனுதாபத்திற்குரிய விடயம் தான் ஆனால் ஏன் சரணடைந்தார்கள் ?? பலமிழந்தபடியாலா?? இல்லை பலத்துடன் இருந்து இருந்தால் புலிகளை 600 அல்ல ஆயிரக்கணக்கானோரை போட்டு தள்ளி இருக்க மாட்டார்களா ?? ஆமாம் நிச்சியமாக போட்டு தள்ளியிருப்பார்கள். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில். இலங்கை பொலிஸார் ஒரு தமிழரை தலைகீழாக தொங்க விட்டு அடித்து மரணமடைய செய்தார்கள் குற்றவாளிகள் அனுரதபுரத்தில் சிறையில்.ராஜாக்கள். போல் வாழ்க்கை நடத்துகிறார்கள் இரண்டாவது தமிழருக்கும் வட்டுக்கோட்டை பொலிசார் அடித்தார்கள் என்று அறிந்தேன். அவர் பல்கலைக்கழக மாணவன் தப்பி ஒடி விட்டார்
  16. நான் நீலனுக்கு தீர்ப்பு எழுதவில்லை நீலன் எழுதிய வரைபு தீர்வு என்பது தவறு என உறுதியாக கூறுகிறேன் ஏடுகளில் எழுதுபவை எல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வு ஆகிவிட முடியாது அவை அமுல்படுத்தப்பட்டிருக்கும் போது மட்டுமே தீர்வு ஆகும் நீலன். தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை ஒரு கிராம சபைக்கு கூட சிறந்த அதிகாரங்களை பெற்று தரவில்லை தமிழர் விடுதலை கூட்டணி தமிழ் ஈழம். தான் தீர்வு இனி பேசி பயனில்லை’ ஆயுதம் ஏந்துவது தான் அதற்காக வழி என்று அறிவிக்க முதல் நீலன். தீர்வை எழுதி அமுல் செய்திருக்கலாமே ?? எங்கே போனார்?? ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று போராடிக்கொண்டு இருக்கும் போது சீமாட்டி சந்திரிக்கா நவாலி முல்லைத்தீவு,.......என்று தமிழ் பகுதிகளில் எல்லாம் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது தீர்வு எழுதுகிறார் யாருக்கு??? ஆயுதமேத்திய ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு ...அவர்களை சிறையில் பிடித்தது அடைபட்டிருப்பவர்கள் தீர்வு அமுல் பட்டிருக்கப்போவதில்லை இது அரசியல் மருத்துவம் இல்லை தயவுசெய்து இதை வாசித்து குழப்பமடையவேண்டாம் தமிழ் மக்களின் சாபக்கேடு. தமிழ் சட்டத்தரணிகள் பாராளுமன்றம் நீதிமன்றம் இரண்டிலும் வித்தியாசம் இன்றி வழக்கு பேசியது தான்
  17. தவறுகள்,...பாகம்… 3 1,.. தந்தை செல்வா-பண்டா. ஒப்பந்தம் தமிழருக்குகான. தீர்வு என்பது தவறு காரணம் அமுல் செய்யப்படவில்லை 2,. தந்தை செல்வா - டட்லி ஒப்பந்தம் தமிழர்கள் பிரச்சனைக்கான. தீர்வு என்பது தவறு காரணம் நடைமுக்கு வரவில்லை 3,.ஏடுகளில் எழுதப்படுவாவை எல்லாம் நடைமுறையில் அமுலில் வரதா போது தீர்வு என்று அழைப்பது. தவறு
  18. இவர் எழுதியது ஒருபோதும் நடைமுறையில் வந்து இருக்காது புலிகள் போராடிக்கொண்டு இருந்த காரணத்தால் அதிகாரங்களை கூட. எழுத முடிந்தது நீங்கள் குறிப்பிட்டது போல் இப்போது முடியாது தான் காரணம் போராடுவோர் இல்லை தீர்வு திட்டங்கள் எழுதுவது தமிழருக்கு செய்யும் நன்மைகள் இல்லை எழுதிய தீர்வுகளை நடைமுறை படுத்தி கட்டவேண்டும். அது தான் தமிழருக்கு செய்யும் நன்மைகள் ஆகும் இவரது தீர்வை பாராளுமன்றம் விவாதிக்கக் கூட எடுத்திருக்கமாட்டாது இந்த செயல் தமிழர்களை தமிழன் ஏமாற்றும் முயற்சிகள் ஆகும் அதுவும் இனி பேசி பலனில்லை தமிழ் ஈழம் தான் முடிவு அதை அடையும் வழி ஆயுதப்போராட்டம் தான் என்று முடிவு எடுத்த கட்சியின் உறுப்பினர் நீலன,... போராட்டம் நடத்து கொண்டிருந்த போது தன்னிச்சையாக இப்படி செயல்பட்டு இருக்கக்கூடாது அது போராட்டத்துக்கு ஒரு பின்னடைவு மேலும் போராடியவர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் வழங்காத தீர்வு இந்த வரைபின் ஒரே நோக்கம் போராட்டத்தை குழப்ப வேண்டும் என்பதே
  19. ரணில் சொல்லி விட்டார் காணி பொலிஸ் அதிகாரம்கள். தரப்படமுடியாது என்று பொருளாதாரம். கல்வி ஆகியவற்றை மாநிலங்களுக்கு வழங்க யோசிக்கிறோமென்று
  20. தவறுகள் பாகம், .......2 1, தமிழர் விடுதலை கூட்டணி இலங்கையில் தமிழருக்கு பிரச்சனைகளுண்டு என்றது தவறு 2,. தமிழர் விடுதலை கூட்டணி தனி தமிழ் ஈழம் என்று தீர்மானம் நிறைவேற்றியது தவறு 3. .... தமிழ் ஈழம் பெறும் வழி ஆயுதம் ஏந்தி போராடுவது என்ற தீர்மானம் தவறு 4 .....தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆயுதப்பயிற்சியைப். பெற்றுக் கொள்ளாமலிருந்தது தவறு 5,.......இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்தில் நின்று போராடாமல் விட்டது தவறு 6,......புலிகள் இளைஞர்களை திரட்டி ஆயுதப்பயிற்சியைக் கொடுத்தது தவறு 7,. .புலிகள் போராடியது தவறு 8,.. ....இராணுவ முகாமைத் தாக்கி அளித்து ஆயுதங்களை கைப்பற்றியது தவறு 9........அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தம் செய்தது தவறு 10. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல் ஈடுபட்டது தவறு 11,.......ஆயுதங்களைக் போட்டு விட்டு சரண் அடையாமால் போரிட்டது தவறு 12,....இனவழிப்பு. போர் குற்றம் என்று முறையீடுவது தவறு 13,. ......ஒரே விடயத்தை எல்லா திரிகளிலும். எழுதுவது தவறு 14,....... இலங்கையர்களை தமிழர்கள் என்பது மிக தவறு இரண்டாவது பகுதி நிறைவு 🤣🙏
  21. தவறுகள் பாகம்… 1 1. தமிழரசு கட்சி கிராமங்களில் கட்சி கிளைகளை நிறுவதாது தவறு 2,.தமிழரசு கட்சி நகரங்களின் கிள் இல்லாதது தவறு 3,..தமிழரசு கட்சிக்கு மாநகரங்கில். கிளைகள் இல்லாதது தவறு 4,.1,2,3. உள்ளவர்கள் இணைந்து மாகாணத்தில் கிளை. அமைக்காதது தவறு 5, .....மாகாண கிளைகளை இணைத்து நாடு தழுவிய கிளை இல்லை என்பது தவறு 6, 1948 இல். இருந்த எண்ணிக்கையில் பொது சபை உறுப்பினர்கள் இருக்கிறது தவறு 7,..இந்த பொது சபை உறுப்பினர்களை. தலைவர் பதவிக்கு போட்டு இடும் தலைவர்கள் நியமிப்பது தவறு 8,...அதே பொது சபை உறுப்பினர்கள் தலைவரை தெரிவு. செய்வது தவறு 9.....தேர்தல் நேரங்களில் மட்டுமே கட்சி கூட்டம் நடத்துவது தவறு 10, ...இந்த தவறுகளை நான் தவறு. என்று சுட்டி காட்டி எழுதியது தவறு பாகம்… ஒன்று இத்துடன் நிறைவு பெறுகிறது 🤣🙏🤣
  22. இவர்கள் இருவரும் தான் ........அதாவது,......வந்து,....புலிகள் 😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆனாலும் இப்போது அவர்கள் அரசாங்கத்தின் அணைப்பிலிருப்பதால். ....அந்த 600. .. 700 பொலிஸாரையும். கொன்றது போர் குற்றம் இல்லை என்ன குழப்பாமாக இருக்கிறாதா ??? 🤣
  23. எனக்கு எந்த குழப்பமுமில்லை ....தமிழர் விடுதலை கூட்டணியின் தீர்மானம் தமிழ் ஈழம் அதனை ஆயுதப் போராட்டம் மூலம் பெறுவோம் என்பதும் தீர்மாத்ததும் அவர்கள் தான் இவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டங்களை செய்யவில்லை ஏமாற்றிக் கொண்டார்கள் யாரை தமிழ் மக்களை வாக்கு போட்ட தமிழ் மக்களை இளைஞர்கள் ஆயுதப்போராட்டம். செய்த போது இவர்கள் அரசாங்கத்துடன் இணைத்து செயல்பட்டது எதற்காக?? பதில் தரவும். ஆயுதமேந்தவிடினும். ஒதுங்கி இருந்து இருக்கலாம் இளைஞர்களுக்கு ஆதரவுடன் பேசி ஊக்கப்படுத்தியிருக்கலாம். சர்வதேசத்துக்கு இளைஞர்கள் போராட்டத்தின் நியாயத்தை எடுத்து விளக்கியிருக்கலாம் செய்தார்களா ?? இல்லையல்லவா?? இவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியின் மேல் உள்ள ஆசை காரணமாக பேசிய போலி வேஷச பேச்சுக்களை உண்மை என்று நம்பி உள்ள தூய்மையுடனும் விசுவாசமாகவும் கழுத்தில் சாயனைட்டு குப்பிகளுடன். போரிட்டது பிழை தான் ...... ஒன்றல்ல இரணடுயல்ல 40 ஆயிரம் இளைஞர்கள் விரும்பி உயிரை கொடுத்து உள்ளார்கள் .....இது எல்லாம் பெரிய விடயமில்லை இந்த சீருடை அணியதா இலங்கை இராணுவம் நீலன். அமிர்........பற்றி தான் ரொம்பவும் கவலைப்படுகிறேன் நான் குழப்பமின்றியும். தெளிவாகவும் இருக்கிறேன் 🤣😂 மேலே எழுதியது பிடிக்காதவர்கள் குழப்பமடையலாம்.
  24. எனக்கு எந்த கேள்வியும் சுட்டு விடவில்லை, அது என்ன கேள்வி?? புலிகளும். மனிதர்கள் தான் தமிழ் மக்கள் தான் தமிழ் இனம் தான் அவர்களின் இனம் எனவே… அவர்களை கொன்று குவிப்பது இனவழிப்பு போர் குற்றம் ஆகும் நீங்கள் நினைப்பது போல நான்கு கால் புலிகள் அல்ல மாறாக தூய தமிழ் மொழி பேசுகின்ற இரண்டு கால்கள் கொண்ட மனிதர்கள் புலிகளை கேட்டு கேள்விகள் இன்றி கொன்று குவிக்கலாம். என்று நீங்கள் நினைக்கிறீங்களா?? புலிகளை கொல்வது இனவழிப்பு இல்லையா??? புலிகளை கொல்வது போர் குற்றம் இல்லையா?? புலிகளை கொல்லப்படுவது தமிழ் மக்கள் அழிக்க படுவது ஆகும் இலங்கை இராணுவத்தையும். சிங்கள மக்களையும் பிரித்து பேசுவது எழுதுவது கதைப்பது கிடையாது ஆனால் நாம் தமிழர்கள்
  25. கோத்தா சொல்லி உள்ளார்,....தமிழர்கள் தான் புலிகள் ........புலிகள் தான் தமிழர்கள் என்று உறுதியாகவும். தெளிவாகவும் நீங்கள் ஏன் ரொம்ப சிரமப்பட்டு தமிழர்களை,....புலிகள் என்றும்,தமிழர்கள் என்றும் பிரித்து எழுதுகிறீர்கள் , பாரக்கிறீர்கள் ,கதைக்கிறீர்கள். தமிழர்கள் என்று சொல்லலாம் அல்லது புலிகள் என்று சொல்லலாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.