Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. 1998 ஆண்டு சாளைத்தொடுவாயில் நீர் வரத்து அதிகரித்து இருந்தது. சாளை தொடுவாய் உடைத்து நன்னீர் கடலை நோக்கி பாய்கின்றது. சாளையில் இருந்த எல்லா வினியோக படகுகளையும் சாளைத்தொடுவாய் நோக்கி நகர்த்துகின்றோம். அக்காலத்தில் சாளை பொறுப்பாளராக கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா இருந்தார். இராண்டாம் நிலைப்பொறுப்பாளராக மாவீரர் லெப்டின் கேணல் சுபன் அண்ணா இருந்தார். சுபன் அண்ணா செங்கொடி படகின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தார். நான் ஓட்டியாக இருந்தேன். 1998 ஆண்டு இறுதி மாதம். கடும் காற்றும் கடலலை கடுமையாகவும் இருந்தது. கடற்பிராயணம் கடுமையானதாக இருந்தது. ஜெயசிக்குறு எதிர்சமர் கடுமையாக இருந்த காலம். தலைவர் அடிக்கடி எமது சாளை முகாம் நோக்கி வந்து போவது வழமையாக இருந்தது. தலைவருக்கும் ஓய்வாகவும் இயல்பாக இருக்கவும் எமது சாளை முகாம் இருந்தது. அந்த காலப்பகுதியில் அன்ரன் பாலசிங்கம் அண்ணா கடும் சுகவீனம் அடைந்து இருந்தார். இலங்கை ஐனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கா அவர்களிடம் புலிகள் உதவி கேட்டு இருந்தார்கள். புலிகள் கேட்டது மனிதாபிமானம். ஆனால் இலங்கை அரசு புலிகளுக்கு கூறியது டீல் . யாழ்பாணம் செல்லும் கடல்வழி பயணத்திற்கு கடற்புலிகள் தடையாக இருக்க கூடாது என்றும் யாழ்பாணம் செல்லும் இராணுவ கப்பல்களை கடற்புலிகள் தாக்க கூடாது என்றும் டீல். அந்த நாளே தலைவர் சாளைக்கு வந்தார். சாளை தொடுவாய்க்கு வந்து படகுகளை பார்வை செய்தார். சூசை அண்ணா கொஞ்ச நேரம் செல்ல வந்தார். சூசை அண்ணா வரும் வரை எம் தேசத்தின் தலைவன் எம்முடனே இருந்தார். நாங்கள் கடலுக்கு செல்வதற்கு படகுகளை தயார்படுத்திக்கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் சூசை அண்ணா வந்தார். பின் இருவரும் இணைந்து படகுகளை பார்வை இட்டனர். எமது செங்கொடி படகை நீண்ட நேரம் பார்வை இட்டுச் சென்றனர். நாம் கடலுக்கு சென்று அடுத்த நாள் காலை வந்தோம். படகு கட்டுமான பொறுப்பாளர் சாளைக்கு வந்தார். ஆதித்தன் அண்ணா எமது படகை அளவு எடுத்துச் சென்றார். பின் நடந்தது வரலாற்று பதிவு. அது ஒரு அற்புதமான தருணம். அன்று ஒருநாள் காலை ஆதித்தன் அண்ணா எமது செங்கொடி படகின் மேற்பரப்பில் கூரை மாதிரியான வடிவில் நீர் அடிக்காதவாறு இருக்க கூரை பாகம் ஒன்றை கொண்டு வந்து பொருத்தினார். அதே நாள் நாம் கடலுக்கு செல்வதற்காக படகை தயார் செய்து கொண்டு இருக்கும் போது இயந்திரத்தில் அனுபவம் வாய்ந்த மாவீரர் லெப். கேணல் கடாபி அண்ணா மற்றும் மாவீரர் லெப். கேணல் டிக்கான் அண்ணா ஆகியோர் படகின் இயந்திரத்தை பார்கின்றனர். சுத்தம் செய்கின்றனர். இயந்திரத்தின் அனைத்து பரிசோதனைகளையும் மாவீரர் லெப். கேணல் கடாபி அண்ணா மேற்கொண்டு இருந்தார். நாம் எரிபொருள் நிரப்பி படகை சுத்தம் செய்து கொண்டோம். ஆயுதம் வைத்திருப்பவர்கள் ஆயுதத்தை சுத்தம் செய்து இருந்தனர். செங்கொடி படகு வீதியோரத்தில் மருதமரம் அணைவில் எப்போதும் நிறுத்தப்பட்டு இருக்கும். சாளைத்தொடுவாய் நீர் அதிகமாக இருந்தது. ஒரு கணப்பொழுதில் வந்தது, தலைவனின் வாகனம். இறங்கினார் தலைவர். வேக நடை போட்டு நடந்து வரும் தலைவரின் கண்கள் பிரகாசித்து கொண்டு இருந்தது. தொடர்ந்து சூசை அண்ணாவின் வாகனம் வந்தது. தொடர்நது தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனம் வந்தது. அதில் இருந்து அடெல் அன்ரி இறங்கினார். எமக்கு புரிந்து விட்டது என்ன நிகழப்போகின்றது என்று. எமக்கு மகிழ்ச்சி, எமது படகில் நாம் கொண்டு செல்லப் போகின்றோம் என்று! சூசை அண்ணாவுடன் சுடரொளி அண்ணா நின்று கொண்டு இருந்தார். நான் நினைக்கின்றேன், அன்று மருத்துவ பிரிவு பொறுப்பாளர் றேகா அண்ணா வந்ததாக நினைவு இல்லை. குறிப்புக்கு மட்டும். அன்ரன் பாலசிங்கம் அண்ணாவை வாகனத்திலிருந்து இறக்கி மெதுமெதுவாக தள்ளுவண்டி மூலம் தள்ளிகொண்டு வந்து படகில் ஏற்றினார்கள். அடெல் அன்ரியை எமது படகில் ஏற்றப்பட்டது. எமது படகில் படுகை எல்லாம் போடப்பட்டு சிறப்பாக செய்து இருந்தோம். உடனடியாக சூசை அண்ணா படகில் உள்ள போராளிகளை மாற்றம் செய்தார். இயந்திர பொறிஞர் மாற்றம் நடந்தது. சுடரொளி அண்ணாவை கட்டளை அதிகாரியாக ஏற்றினார். கட்டளை அதிகாரியாக இருந்த சுபன் அண்ணா ஓட்டியாக மாற்றம் செய்யப்பட்டது. என்னை இறங்க சொன்னார் சூசை அண்ணா. இப்படி மாற்றம் செய்து கொண்டு இருக்கும் போது தலைவர் சூசை என்று அழைத்து, "சூசை படகில் ஏறி நீர் போகலாம்!" என்றார். அங்கு நின்ற கடற்புலி போராளிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. சூசை அண்ணாவை கடலுக்கு அனுப்பவதா? ஒன்று நடந்தால் நிலமை என்ன ஆகும்? அப்போது அருகில் நின்ற தலைவன் இருக்கின்றார் என்ற வைராக்கித்துடன் பணிகளை தொடங்கினோம். அனைத்து படகையும் கடலுக்கு அனுப்பினோம். செங்கொடி படகு செல்லும் போது தொடுவாய் இரண்டு பக்கமும் கடற்புலிகள் சென்று நின்றுகொண்டு இருந்தனர். படகு பயணம் ஆனது. கடலின் அலை அடி அதிகமாகவும் காற்றின் வேகம் பலமாகவும் இருந்தது. எல்லா போராளிளும் கை காட்டி அனுப்பி வைத்தோம். பிற்பாடு தமிழ்செல்வன் அண்ணா சென்று விட்டார். வெளியில் இருந்து வந்த சிலர் சென்று விட்டனர். ஆனால் எமது தேசத்தின் தலைவன் எமது படகுகளின் கட்டுபாட்டு அறைக்குச் சென்று சூசை அண்ணாவிற்கு பதில் பொறுப்பில் இருந்தார். தலைவர் சற்றும் தூங்காமல் படகுகளை அவதானித்து கொண்டு இருந்தார். அப்போது மதி தான் கட்டுப்பாட்டறை பொறுப்பளர். அபிமஞ்சு அண்ணாவும் இருந்தார். சாளை கடற்புலி போராளிகள் யாரும் தூங்கம் கொள்ளாமல் கடலையே பார்த்து கொண்டு இருந்தோம். 100 கடல் மை தொலைவில் காத்து நின்றார் கௌசிகன் அண்ணா, புதிய கப்பலுடன். அன்டன் பாலசிகம் அண்ணா ஏற்றப்பட்டார். அடெல் அன்ரிக்கு சரியாக சத்தி, உடற்சோர்வு என்று பல இருந்தது. கப்பல் தொடரை பின் தொடர்கின்றேன். சாமம் கடந்து சூசை அண்ணாவின் படகு வந்தது. தொடுவாய்க்கு உள்ளே வந்த படகை நாம் எல்லோரும் இணைந்து கரைக்கு கொண்டுவந்து மருத மரத்தில் கட்டினோம். சூசை அணணா சிரித்தபடி இறங்கினார். தலைவன் உடன் வந்து கைகொடுத்து கூட்டி வீதிவரை சென்றார். சூசை அண்ணா சற்றும் எதிர்பார்க்கவில்லை. போராளிகள் நாமும் இதை எதிர்பாக்கவில்லை. பின் இருவரும் இணைந்து கட்டுப்பாட்டறை நோக்கி சென்றனர். பின்னர் அங்கிருந்தபடி அனைத்து படகையும் கரை சேர்த்துவிட்டு தலைவர் சென்றார். பின் 3 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பிற்பகல் தலைவனுக்கு போராளிகளுடன் சந்திப்பு நடக்க தயாராக இருந்தது. சாப்பாடு தயார் ஆனது. ஐஸ்கிறீம் எல்லாம் வந்தது. சந்திக்கும் இடம் எல்லாம் தயாரானது. எமக்கு மதியம் தகவல் வருகின்றது, குமாரவேல் ஊடாக, தலைவருக்கு சரியான காச்சல் என்றும் தலைவருக்கு காச்சல் கூடியது என்றும். போராளிகள் ஆகிய நாம் நொந்து போனோம். பின் சில நாட்களுக்குப் பிறகு எமது முகாமிற்கு வருவது போல் வந்தார். இந்த முறை கடாபி அண்ணா கூட இருந்தார். இந்த கதையும் தொடரும்……. எழுத்தாளர்: அறியில்லை
  2. எழுத்தாளர்: அறியில்லை வான்கரும்புலிகளான ரூபன் சிரித்திரன் அண்ணாக்களை உலகத்துக்கு தெரியப்படுத்திய பாரிய கடமை & பொறுப்பு கடற்கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா மற்றும் கௌரியையே சாரும். மூருவருடனும் நீண்ட நாட்கள் பழகி இருக்கிறேன் என்பதில் கொஞ்சம் கவலை அதிகம் தான். இதில் கௌரி என் நண்பனும் கூட. இப்போதும் இந்த கதாபாத்திரத்தின் நாயகன் இருக்கிறான். 10.03.2003 அன்று கடற்புலிகளின் கப்பல் முல்லைதீவில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் வந்து கொண்டு இருந்தது. அந்த தகவல் இந்தியாவால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இந்திய கடற்படை இலங்கை கடற்படைக்கு கொடுத்த சாயுரா என்ற பாரிய கப்பலை புலிகளின் கப்பல் நோக்கி செலுத்தப்படுகிறது. புலிகளின் ராடாரில் படவில்லை. ஒரு மீன்பிடி வள்ளத்தில் கௌரி எமது கப்பலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறான் கௌரி. கடற்புலிகளின் கப்பல் கெளரியை எதிர்பார்த்து நின்ற போது அங்கே வந்தது, சாயுரா. புலிகளின் கப்பலை வழி மறித்தது. இதை தெரிவிக்க ரஞ்சன் அண்ணா கெளரியை தொடர்பு கொண்ட போது, கௌரி எமது கப்பலை நோக்கி வர இன்னும் ஒரு மணி நேரம் பிடிக்கும் என்று முடிவெடுக்க, அனைத்தையும் உணர்ந்த ரஞ்சன் அண்ணா உடனே கௌரி வள்ளத்தை நோக்கி கப்பலை செலுத்துகிறார். சாயுரா பின்தொடர்ந்து செல்கிறது. சாயுரா கடற்புலிகளின் கப்பலை தாக்கவில்லை. ஆனால் சாயுராவின் கண்ணில் கௌரியின் மீன்பிடி வள்ளம் தெரியவில்லை. ரஞ்சன் அண்ணா உடனடியாக வான்கரும்புலி ரூபன்-சிரித்திரன் ஆகியோரை கெளரியின் வள்ளத்தில் இறக்கி விடுகிறார். உடனே கப்பலை திருப்புகிறார் ரஞ்சன் அண்ணா. கப்பலும் மீன்பிடி வள்ளமும் நிக்காமல் ஓடியபடி அணைத்து தான் ரூபன் சிரித்திரன் அண்ணாக்களை ஏற்றினார்கள். கடினமான பணி. கௌரி திருகோணமலை சல்லி நோக்கி மீன்பிடி வள்ளத்தை செலுத்துகிறான். கப்பலை குறி வைத்து தாக்குகிறது சாயுரா. சூசை அண்ணா கண்காணிப்பு குழுவை தொடர்பு கொண்டு எமது வணிக கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட விபரத்தை அறிவிக்கிறார். கண்ணாணிப்புக் குழு சொன்னது, கடற்படையிடம் போகும் படியும் அவர்கள் பரிசோதனை செய்து விட்டு விடுவார்கள் என்றும். அதிர்ந்த சூசை அண்ணா ரஞ்சன் அண்ணாவை தொடர்பு கொண்டு சொன்ன போது ரஞ்சன் அண்ணா சிரித்தார். சாயுராவின் தாக்குதல் அதிகரிக்கின்றது. கப்பல் முழுவதும் எரிபொருள் ஊற்றப்படுகிறது. வெடிமருந்தை வெடிக்க வைக்கப்படுகிறது. கப்பல் கடலில் மூழ்கின்றது. கடலினில் காவியம் நடைபெறுகிறது. மாண்டு போன அத்தனை பெரும் என் ஆருயிர் நண்பர்கள்! ரூபன்-சிரித்திரன் அண்ணாக்கள் திருகோணமலை சல்லி கடற்கரைக்கு வந்து சேருகிறார்கள். அங்கு இருந்து வன்னிக்கு வந்தார்கள். ரூபன்-சிரித்திரன் அண்ணாவை பத்திரமாக பாதுகாத்து கொண்டு வந்த அத்தனை பேரும் காவியமாகி விட்டார்கள். கௌரி மட்டுமே சாட்சியாக உள்ளான். அதன் பின் ரூபன்-சிரித்திரன் அண்ணாக்கள் வான்கரும்புலியாக வெடிக்கிறார்கள். வீரவணக்கம் ரூபன்-சிரித்திரன் அண்ணாக்கள். இருவருடனும் இரண்டு மாதங்கள் நன்கு பழகியவன் நான். இந்து மாகடலில் இருந்து செங்கடல் சென்று வந்துள்ளோம். கப்பலில் மாண்டு போன அனைவரும் என் ஆருயிர் நண்பர்கள். இவர்களை நெஞ்சில் நிறுத்த இதயம் கனக்கிறது. வீரவணக்கம் இவர்களை விட்டு கரைக்கு வந்து 3 நாட்களின் பின் என்னையே கௌரி தான் கொண்டு வந்தான். நன்றி கௌரி
  3. யப்பான் அடிப்படை பயிற்சிமுகாமில் பயிற்சி நிறைவில் சிறப்புத்தளபதி சூசை அண்ணையின் மெய்ப்பாதுகாப்பு அணிக்காக தெரிவுசெய்யப்பட்ட ஐவரில் பாலனும் ஒருவன். இயக்கத்தில் இணையும்போதே கரும்புலியாக தன்னை இந்தப்போராட்டத்தில் அர்ப்பணிக்க வேண்டும் எனும் குறிக்கோளுடனேயே இணைந்தவன். சூசையண்ணையின் மெய்ப்பாதுகாவலனாக அவரோடு கூடவே இருந்தபோதும்,தனது விருப்பத்தை சூசையண்ணைக்கு அவன் கடிதம் எழுதியே வெளிப்படுத்தினான். சூசையண்ணை அதனை மறுத்தபோது பாலன் அழுதேவிட்டான். சூசையண்ணை எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதம் அவரது மிக நெருக்கமான நண்பரான மேஜர் றஞ்சன் சித்தப்பா அவர்கள் ஏந்திக் களமாடியிருந்த M16 துப்பாக்கி பாலனுக்கே வழங்கப்பட்டிருந்தது. மிகத்துடிப்புள்ள இளைஞனாக சூசையண்ணையின் நம்பிக்கையைப் பெற்ற போராளியாக அவன் விளங்கினான்.சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவினரின் பயிற்சி விடயங்கள் மற்றும் அதுசார்ந்த அனைத்து விடயங்களும் பாலன் ஊடாகவே சூசையண்ணை பேணியிருந்தார். இரகசிய நடவடிக்கைப் பயிற்சிகளை பார்வையிடுவதற்கு செல்லும்போது அதிகம் பாலனையே சூசையண்ணை கூட்டிச்செல்வார். ஒரு மெய்ப்பாதுகாவலர் போதும் நீங்கள் ஏனைய பணிகளைச் செய்யுங்கள் எனக்கூறிவிட்டு பாலனை மட்டும் அழைப்பார். பாலன் வந்தபின்னர் நாம் அவனிடம் பயிற்சிகள்பற்றி விசாரிப்போம்.ஆனால் சூசையண்ணையைவிட அவன் இரகசியம் பாதுகாப்பான் எம்மிடம். சூசையண்ணை கோபமாக இருக்கும் நேரங்களில் மெய்ப்பாதுகாவலனாக பாலனையே மாட்டி விடுவோம்.அவரிடம் பேச்சு வாங்குவதிலிருந்து சிலவேளை அடியும் விழும் தருணங்களிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள அதனை பாலன் அனுபவிப்பான்.வோக்கிக்கு பற்றரி மாற்றவில்லையாயினும்,கோட்சீற்றை மறந்துவிட்டிற்று வந்தாலும்சரி,வல்லைவெளியால போகும்போது கண்ணாடி திறந்து ஹெலியை அவதானிக்கிறதென்டாலும்சரி ஏன் அதிகம்,வாகனத்துக்கு கோன் வேலை செய்யவில்லையெண்டாலும் முன்னுக்கு இருப்பவருக்குத்தான் மூக்குடையும். அதனால முன்சீற்றில பாலன் ஏறும்படியாக மிக கவனத்துடன் நடந்துகொள்வோம்.சிலவேளை நான் முன்னால் ஏறிவிட்டால் பின்னுக்கிருந்து வேண்டுமென்றே சூசையண்ணைக்கு கோபம்வரும்படி நடந்துகொள்வார்கள். முகாம் வந்ததும் இவற்றைச் சொல்லிச்சொல்லி சிரித்து மகிழ்வோம்.ஆனாலும் திரும்பவும் சூசையண்ணை தயாராகி பஜிரோவுக்கு கிட்டவாக வரும்போது முதல் ஆளாக M16 துப்பாக்கியுடன் பாலன் தயாராக நிற்பான். ஒரு மெய்ப்பாதுகாவலனாக களமுனைகளில் எதிரியின் தாக்குதல்களிலிருந்து சூசையண்ணையை பாதுகாக்க உரிமையுடன் அவர் கையைப்பிடித்து இழுத்து பங்கருக்குள் விடுவான்.அதற்காக அவரிடம் அடியும் வாங்குவான்.சூசையண்ணைக்கு மெய்ப்பாதுகாவலனாக மட்டுமல்ல ஒரு தாதியாகவிருந்து பாதுகாத்து பராமரித்தவன் அவன். கிளாலிக்கடல்கடந்து வன்னிக்கு செல்லும் நாட்களில் சூசையண்ணையை தூக்கிச்சுமந்து படகேற்றுவான் அவருடைய முழங்கால் காயத்தின் தன்மையையும் வலியையும் உணர்ந்தவன் பாலன். பாலனின் இரகசியக் காப்புக்கான தியாகத்துடன் கூடிய வீரமரணமென்பது எமது விடுதலை இயக்கத்தில் புதிய எடுத்துக்காட்டாக போராளிகளுக்கு படிப்பிக்கப்பட்டது. 1992 காலப்பகுதியில் கடற்புலிகளின் புதிய போராளிகளாக மட்டு-அம்பாறையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 30 பேர் கொண்ட அணியில் பாலனும் இணைக்கப்பட்டிருந்தான். அன்றிலிருந்து அவன் தனது உறவுகளுடனான தொடர்புகள் எதுவுமின்றி தேசப் பணியைத் தொடர்ந்தவன் சூசையண்ணையின் மெய்ப்பாதுகாப்பிலும் கடற்கரும்புலிகளுக்கான பயற்சிகளிலும் அதிகம் ஈடுபட்டு வந்திருந்தான். கிழக்கு வினியோக நடவடிக்கைப் பணியில் சிறிதுகாலம் செயற்பட்ட பாலன் செம்மலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி விரைந்த படகில் அனுப்பப்பட்டிருந்தான் அங்கிருந்து திரும்புகையில் கடலில் ஏற்பட்ட திடீர்மோதலில் பாலன் வந்த படகு ஏற்கனவே சேதமடைந்த காரணத்தால் கடலில் மூழ்கியபோது அவன் நீந்திக் கரையேறினான்.கரையேறியவன் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தான். தன் வாய்மூலம் எந்தவித இரகசியமும் வெளிப்படக்கூடாதென்பதை முடிவெடுத்தவன் தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான்” . நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான் அவன். மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். இன்னும் தனக்கான ஆபத்து விட்டுவிடவில்லை என்பதும் எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். பலவாறு முயற்சித்து முயற்சித்து இறுதியில்தான் அவன் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாத முடிவு அது. “தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி, தன்னுடைய மண்டையுடைத்து தனக்கான தற்கொடை மரணத்தை அவன் அங்கு தேடிக்கொண்டான்.” அவனுடைய வீரமரணத்தின் பின்னர் சூசையண்ணை சொல்வார் இந்த M16 ஐ பார்க்கிறபோது றஞ்சன் சித்தப்பாவுக்கு பிறகு கப்டன் கற்பகன், கப்டன் எல்லாளன், மேஜர் சீனு இப்ப மேஜர் பாலன் ஆகியோருடைய நினைவுகள்தான் எனக்கு அடிக்கடி வந்துபோகிறது என்று. அவருடைய மனதில் இடம்பிடித்த பாலன் வரலாற்றிலும் தனக்கானதொரு தடத்தைப் பதித்து தமிழர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்துக் கொண்டான். நட்பின் நினைவுகளோடு….வீரவணக்கம். புலவர். கடற்புலிகள்.
  4. பிரபாசெழியன் முதன்முதலாக தாக்குதல் அணியொன்றிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்று. திருகோணமலை மாவட்டத்தில் சிறியதொரு ராணுவ முகாம் ஒன்றினை தாக்கியழிக்கும் கடமை எனக்கு தலைவரால் தரப்பட்டது. தலைவர் இட்ட கட்டளையை எனது தலைமையிலான தாக்குதலணி வெற்றிகரமாக செய்து முடித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக தாக்குதலின்போது சில அப்பாவி சிங்கள மக்கள் பலியாகிவிட்டனர். தலைவர் இந்த செய்தியறிந்ததும் என்னை வன்னிக்கு வரச்சொன்னார் போனேன். கிழி விழபோகுது எண்டு தெர்ந்துதான் போனேன். தலைவர், "வாரும் வாரும் உம்மைதான் எதிர்பாத்து கொண்டிருக்கிறேன் உம்மிடம் நான் ஆமிகாரனெ அடிக்க சொன்னேனா இல்ல சிங்கள சனத்தை அடிக்க சொன்னேனா" என்று சற்று கடுமையான தொனியில்கேட்டார். தவறுதலாக நடத்திட்டண்ணை என்றேன். "நீர் செய்தது பிழை இனி இப்படியான அலுவல்கள் நடக்ககூடாது நீங்கள் தாக்குதலை தொடுக்கும்போது அப்பாவி சனம் பாதிக்கப்படும் எண்டு அறிந்தால் தாக்குதலை கைவிட்டிட்டு திரும்பி வாங்கோ அப்பாவி மக்களை கொன்றுவிட்டு வெற்றிவிழா கொண்டாட ஏலாது" என அறிவுறுத்தி சொன்னார். இனி இப்படி நடக்காதன்னை எண்டேன். மறுகணமே "சாப்பிட்டியளா? முன்பைவிட மெலிந்திட்டியள்! உடம்பை பாருங்கோ" எண்டார். இதுதான் எங்கள் தலைவர் எங்களுக்கு தாயுமானவர். சிங்கள பேரினவாதம் அப்பாவிதமிழ் மக்கள்மீது ஈவிரக்கமின்றி காட்டிய கொடுரத்தை அண்ணையும் அப்பாவி சிங்கள மக்கள்மீது காட்டியிருந்தால் ராஜபக்க்ஷே கோத்தபாயவை போல் அண்ணையும் நினைத்திருந்தால் முள்ளிவாய்கலுக்கு முன்னரே கொழும்பு எரிந்திருக்கும் தென்னிலங்கையில் அணைக்கட்டுகள், பாலங்கள், குடியிருப்புகள் அனைத்தும் தகர்ந்திருக்கும். ரயில் நிலைய்ங்கள் புத்த விகாரைகள் எல்லாம் சிதைந்து சின்னா பின்னமாயிருக்கும் சிங்கள மக்கள்தொகை பாதிக்கு கீழ் குறைந்திருக்கும். அப்படி செய்ய அவன் பாமரன் இல்லை, பிரபாகரன்! எந்தன் உயிரே! உணர்வே! ஆசானே! அன்னையே! தந்தையே! அறம் சார்ந்து நியாய வழி நடந்து நீ நடத்திய தர்மயுத்தம்தான் பழம்பெருமை கொண்ட தமிழித்தின் கடைசி வரலாறு. நீ தான் கடைசி வீரன். இனியொருவன் உன்னைப்போல தமிழினத்தில் பிறக்கபோவதில்லை. பிரபாசெழியன்
  5. காவலூர் அகிலன் அகில் ஒரு முறை வீட்டில் உணவு சமைத்திருந்தோம் போராளிகளோடு உண்பதற்கு வந்திருந்தான் அண்ணா மேஜர் கஜன். அதற்குள் அவர்களுக்குள் ஏதோ போட்டி வந்துவிட்டது சரி சுட்டுப் பார்க்கலாம் வாருங்கள் என எல்லோரையும் அழைத்தான் அவர்களோடு அத்தானும் சேர்ந்துகொண்டார். (சாந்தன் அரசியல் துறைப்போராளி காணாமல் ஆக்கப்பட்டவர் பட்டியலில் உள்ளார்) போட்டி இளநீரைச் சுட்டு வீழ்த்த வேண்டும் என்பதே...! (நிற்க ஊருக்குள் துப்பாக்கிகள் பயன்படுத்துவது தடை ஆனால் இவர்கள்தான் ஆயுதங்களை வழங்குபவர்கள் திருத்தம் செய்பவர்கள் ஆதலால் கொஞ்சம் இப்படியான செயல்களைச் செய்வர் பலமுறை தண்டனைகளும் அனுபவித்திருக்கிறான்) எல்லோருமாகச் சுட்டுச் சுட்டு வீழ்த்தி தாங்கள் எப்படிச் சுட்டோம் என்பதைக் கூறிக்கொண்டிருந்தனர் சிலர் காம்புகளின் அடியிலும் சிலர் இளநீரின் முகப்பிலும் என சுட்டிருந்தனர் இறுதியாக அத்தானிடம் துவக்கு நீட்டப் பட்டது அவர் ஒரு அரசியல் போராளி என்பதால் அது (81 )என நினைக்கிறேன். அவரை கொஞ்சம் பகுடியாக கதைத்தும் விட்டனர் ஆனால் அவர் சிரித்தபடி தன் திறமையைக் காட்டினார் துரோணாச்சாரியார் சீடனே என்ன தெரிகிறது என அருச்சுனனிடம் கேட்கும் போது பறவையின் கண்மட்டுமே தெரிகிறது என அருச்சுனன் சொன்னதுதான் எனக்கு அன்று நினைவுக்கு வந்தது எல்லோரும் ஒரு இளநீரைச் சுட்டு வீழ்த்த அவர் ஒரு குலையையே வீழ்த்தினார் . அது தவறு ஒரு இளநீரை வீழ்த்த வேண்டும் என்றவும் அவர்கள் சொன்ன இளநீரை வீழ்த்தி நான் பழய போராளி (1986 காலப்பகுதியில் பயிற்சி பெற்றவர்) அரசியலில் மட்டுமல்ல துப்பாக்கி சுடுவதிலும் நான் ஞானி என்பதை நிருபித்தார் அத்தான். அன்றோடு அவரிடம் போட்டிக்குப் போவைதை விட்டுவிட்டார்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போராளிகள் அவர்களில் பத்துப் பதினைந்துபேர் வீரமரணம் அடைந்துவிட்டார்கள் ஆனால் ஓரிருவர் புலம்பெயர்தேசத்தில் வாழ்கின்றனர் அவர்களது உலகம் மிக அழகானது என்றே நினைத்திருந்தோம் ஆபத்தானது என்பதை ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. https://www.facebook.com/photo.php?fbid=2537090856468774&set=pb.100005036528824.-2207520000&type=3
  6. எழுத்தாளர்: தெரியவில்லை பாலன் சூசை அண்ணாவின் மெய்பாதுகாவலராக இருந்த நேரத்தில் தான் நானும் புதியவராக மெய்பாதுகாவலராக இணைந்தேன். அந்த நேரத்தில் சூசை அண்ணா தேவிபுரத்தில் முகாம் அமைத்து இருந்தார். கடற்புலிகளின் இரு முகாம்களை நாங்கள் எங்களுடைய தேவைக்காக பயன்படுத்தி வந்தோம். சூசை அண்ணாவுடன் செல்லும் இடம் எல்லாம் சூசை அண்ணாவின் மெய்பாதுகாவலராக பாலா அண்ணா செல்வார். ஓய்வு எடுக்க மாட்டார். மெய்பாதுகாவலராக இருக்கும் அனைவரும் கட்டாயம் மாறி தான் ஆக வேண்டும். ஆனால் பாலன் அண்ணா மாறமாட்டார். மாற்றி விட சொல்லியும் எமது பொறுப்பாளர் கருணா அண்ணா சொல்ல மாட்டார். பாலா அண்ணாவின் சிந்தனை, அர்ப்பணிப்புத் திறன், அவரின் செயல், வித்தியாசமான பேச்சுத் தமிழ், எந்த வேலையை எடுத்தாலும் அதை முடிக்கும் தன்மை என்பன பாலா அண்ணாவின் அருகில் இருக்கும் போது எமக்கு இருந்த உணர்வுகள் ஆகும். பாலா அண்ணா அதிகமாக சூசை அண்ணாவின் குழந்தைளுடனே வீட்டில் நேரத்தை பொழுது போக்குவார். அப்போது சூசை அண்ணாவின் குழந்தைகளுக்கு வயது சிந்துவுக்கு மூன்று, மணியரசனுக்கு இரண்டு தான். இருவரிலும் சரியான பாசம். இருவரை ஒரே நேரத்தில் தோளில் தூக்கி கொண்டு சுற்றுவர். சிந்துவும் மணியரசனும் வித்தியாசமான உணர்வில் மகிழ்வார்கள். எந்த நேரமும் சூசை அண்ணாவிடம் கேட்டு கொண்டே இருப்பார், நான் கரும்புலியாக செல்ல போகபோகின்றேன் எனக்கு விடை தாருங்கள் என்று. அதற்கு சூசை அண்ணா விடை கொடுக்க மறுத்து கொண்டே தான் இருந்தார். ஒருநாள் சூசை அண்ணா முற்றத்தில் இருந்து செய்தி தாள்கள் படித்து கொண்டு இருந்தார். பாலன் அண்ணா கடுமையா உறுதியாக சூசை அண்ணாவிடம் எனக்கு விடை தாருங்கள் என்று கேட்டார். அதிர்ந்து போனார் சூசை அண்ணா. சரி தருகிறேன் என்றார். அருகில் நான் செய்தி தாள்களை மடித்து அடுக்கிக் கொடுத்துக்கொண்டு இருந்தேன். நான் சிறியவன்; எனக்கு 16 வயது தான். எனக்கு போர் பற்றிய அனுபம் இல்லை. இருவரும் வாக்குவாதப்பட்டு வென்றது பாலன் அண்ணா. நான் அவதானித்து கொண்டு இருந்தேன். அன்று இரவு சாலைக்குச் சென்றோம். அங்கே லெப். கேணல் டேவிட் அண்ணா சாள்ஸ் படையணிக்கு பொறுப்பாக இருந்தார். மகளிர் படையணிக்கு துர்க்கா அக்கா இருந்தார். அந்த நேரத்தில் கரும்புலிகளின் படகுகள் அனைத்தும் சிறியவை. வெடிமருந்துகளும் வெறும் 500 கிலோவுக்கு உள்ளே தான். இயந்திரம் ஒன்று கூட 200, 250 குதிரை வலு இல்லை. வெறும் 100, 150 குதிரை வலு இயந்திரம் தான் இருந்தது. பாலா, பார் உனக்கான கரும்புலிப்படகு இது இல்லை. உனது படகு இது தான் என்று கடல்புலிகளின் விநியோக படகை காட்டி சூசை அண்ணா கூறினார். எல்லோரும் அதிர்ந்து போனார்கள். உடனே சூசை அண்ணா கூறினார், பாலாவுக்கான கரும்புலி படகில் மூன்று பிரிவுகளை கொண்ட 3000 கிலோ வெடி மருந்து ஏற்ற வேண்டும் என்றும் அத்தோடு கிளைமோர் 1000 கிலோ வெடிமருந்தில் இருக்க வேண்டும் என்றும் கூறினார். பாலா அண்ணா மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார். நாம் நினைத்தோம் மொத்தமாக 4000 ஆயிரம் கிலோ வெடித்தால் மனிதனின் உடல் எப்படி சிதறும் என்று! பாலா அண்ணா கூறினார், இதை வைத்து இலங்கை கடற்படையின் மிகப் பெரும் கடற்கலத்தை மூழ்கடிக்கலாம். கடற்கலம் சிதறும், கடலே அக்கினியாக மாறும் என்று கூறி மகிழ்ந்தார்! இதை கேட்டு கொண்டு இருந்த எனக்கு தலை சுற்றியது. நானே சிறியவன், போர் பற்றி அறிய ஆர்வம் கொண்டு இருந்த காலத்தில் தான் இது நிகழ்த்தது. அடுத்த நாள் காலை பாலா அண்ணாவை சூசை அண்ணா அழைத்தார். விநாயகம் அண்ணாவையும் அழைத்து பாலா உமது பொறுப்புக்களை விநாயகத்திடம் கொடுத்து விட்டு முதல் இயந்திரம் திருத்தும் வேலையை பழகவும் என்று கூறி அனுப்பினர். படிப்பு ஆறு மாதம். அந்த நேரத்தில் முல்லைத்தீவு சண்டை "ஓயாத அலைகள் ஒன்று" நடைபெற போகின்றது. பாலா அண்ணாவின் பயிற்சியும் முடிகின்றது. மீண்டும் சூசை அண்ணா பாலா அண்ணாவை மெய்ப்பாதுகாவலராக இணைத்து கொண்டார். முல்லைத்தீவு பிடிபடுகின்றது. கடல்புலிகளின் கடற்பரப்பு நீள்கின்றது. முல்லை கடலே கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் வருகின்றது. புதிதாக ஒரு விநியோக படகு ஒன்று தாயரிக்கப் படுகின்றது. அந்தப் படகு வினியோகத்திற்கு அனுப்பிவிட்டாத்தான் பாலா அண்ணாவுக்கான படகை விநியோகத்தில் இருந்து எடுத்து கரும்புலித் தாக்குதலுக்கு தயார்ப்படுத்தலாம் என்று இருக்கும் போது சாலை கடற்புலிகளின் முகாம் வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகின்றது. சாள்ஸ் படையணியின் முகாம் (வன் வன் (1.1)) முற்றாக தாக்குதலுக்கு உள்ளாகின்றது. அதில் ஆனந்தபாபு மாஸ்டர் உடன் ஐந்து பேர் வீரச்சாவு அடைகின்றார்கள். கடல்புலிகளின் தாக்குதல் பிரிவை முள்ளிவாய்க்கால் புளியடிக்கு மாற்றுகின்றோம். அந்தக் காலப் பகுதியில் பாலா அண்ணாவுக்கான படகைத் தயார் செய்ய யாட்டுக்கு கொன்டு சென்றனர். சிறிய காலத்தில் படகும் தயார் ஆனது. படகில் வெடிமருந்து ஏற்றும் இடத்திற்கு சூசை அண்ணா சென்று பார்த்தார், பாலா அண்ணாவையும் கூட்டி கொண்டு. படகை கண்டதும் பாலா அண்ணா ஓடி சென்று ஏறினார். உள்ளே புகுந்து பார்த்தார். அத்தனையும் வெடிமருந்து. பாலா அண்ணா மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார். அன்று இரவு பாலா அண்ணா தூங்கவே இல்லை. காவலில் இருக்கு எம்மோடு வந்து பேசி கொண்டே இருந்தார். நாம் காவலில் இருந்து மாறி கொண்டே தான் இருந்தோம். விடியற்காலை தூக்கம் வருகின்றது என்று சொல்லி விட்டு தூங்க சென்று விட்டார். விடிந்தது காலையில் நாங்கள் தயார் ஆனோம். பாலா அண்ணா நல்ல தூக்கம். சூசை அண்ணா "பாலா!" என்று அழைத்தார். நாம் சொன்னோம், "பாலா அண்ணா இரவு முழுவதும் தூக்கம் இல்லை. இப்போது தான் தூங்குகின்றார்" என்று. அதற்கு சூசை அண்ணா கூறினார், "அவன் தூங்கட்டும். எதிரி பாரிய நடவடிக்கையினை வவுனியாவில் இருந்து ஆரம்பிக்க போகின்றான். அதற்கு மட்டக்களப்பில் இருந்து போராளிகளை கடலால் ஏற்றி வரவேண்டும். செம்மலை செல்வோம்." என்று கூறி செம்மலை சென்றோம். அங்கே மட்டு அம்பாறைக்கு சென்று போராளிகளை ஏற்றும் படகு தயார் ஆனது. அத்தனை படகுகளும் திருக்கோணமலை கடக்கும் மட்டும் சூசை அண்ணா கட்டுப்பாட்டு அறையில் தான் இருந்தார். திருக்கோணமலை துறைமுகத்தை கடந்ததும் சூசை அண்ணா முகாம் திரும்பினார். முகாம் வந்து பாலா அண்ணாவை அழைத்து சொன்னார், "உனக்கு மூன்று கிழமை விடுமுறை தருகிறேன். அம்பாறை சென்று உனது குடும்பத்துடன் இருந்துவிட்டு வா." என்று கூறினார். பாலா அண்ணா தயார் ஆனார். அடுத்த நாள் பாலா அண்ணாவை செம்மலை கடற்புலிகளின் முகாமுக்கு கொண்டு சென்று விட்டோம். இரவு படகில் பாலா அண்ணா ஏறுவதற்கு முன் என்னை கட்டிப் பிடித்து அணைத்தார். படகில் ஏறியதும் கை அசைத்தார். சூசை அண்ணாவும் கை அசைத்தா.ர் விடைபெற்று சென்றார், பாலா அண்ணா விடுமுறைக்காக.
  7. எழுத்தாளர்: தெரியவில்லை இன்றும் மறக்க முடியாத நாள் தான் 12/05/2009! எங்களுடைய ஆயுதங்கள் மெளனிப்பதற்கு சில தினங்களுக்கு முன், அதாவது 12/05/2009 அன்று, ஒரு தரையிறக்கத் தாக்குதல் மேற்கொள்வதற்காக கடற்கரும்புலிகளினால் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியிடம் அனுமதி கோரப்பட்டது. அவர்களின் விருப்பத்திற்கமைய 13 பேர் கொண்ட கடற்கரும்புலிகளின் அணியினைக் கொண்டு ஒரு தரையிறக்கத் தாக்குதல் செய்வதாக வட்டுவாகல் கடற்புலிகளின் தளத்திலிருந்து திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. அதற்காக 2 கரும்புலிப் படகும் ஒரு புளூஸ்ரார் படகும் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது. 3 கடற்கரும்புலிகள் தரையிறக்க வேண்டிய பாதையைத் திறக்க மற்றைய 10 கடற்கரும்புலிகளும் தரையிறங்கித் தாக்குதல் செய்ய வேண்டும், அவர்களுக்குத் துணையாக தரையூடாகவும் ஒரு அணி சென்று வட்டுவாகல் கடல்நீரேரியைக் கைப்பற்றுவதே இத் தரையிறக்கத் தாக்குதலின் நோக்கமாகக் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியால் திட்டமிடப்பட்டது. இத் திட்டத்திற்கமைய எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் பணி ஆரம்பமானது. அதன் முதற் கட்டமாகக் கடற்கரும்புலிகளைத் தேர்வு செய்தல் ஆரம்பமானது. அப்பொழுது தான் ஒன்றைக் கவனிக்க வேண்டியிருந்தது. ஏனெனில் கடற்கரும்புலிகள் ஒவ்வொருவரும் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு நின்றார்கள். தாய் மண் மீது கொண்ட பற்றினால் இறுதிக் கட்டம் என்று தெரிந்தும் தன் தாய் நாட்டிற்காக நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அபிலாசையும் அவர்கள் மனதில் உறுதியாய் இருந்தது. அவர்களில் ஒரு கடற்கரும்புலி அன்றைய தினம் தனது பிறந்தநாள் என்பதனாலும் முல்லைப் பெருங்கடற்பரப்பில் கடலூடாகச் சென்று தாக்கும் இறுதித் தாக்குதல் என்பதனாலும் அத் தாக்குதலில் தானும் பங்கு பெற வேண்டுமென்று அனுமதி கோரினார். அவர் வேறொரு தாக்குதலுக்காகத் தயார் நிலையில் இருந்தமையினால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஒருவாறாகக் கடற்கரும்புலிகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களைத் தேர்வு செய்யும் பணி முடிவிற்கு வந்தது. தாக்குதலுக்கான சகல நடவடிக்கைகளும் பூரணப்படுத்தப்பட்டு கடற்கரும்புலிகளின் விருப்பத்திற்கமைய கடற்புலிகளின் சிறப்புத் தளபதியினால் தீட்டப்பட்ட திட்டத்தை செயல்வடிவம் கொடுக்கும் நேரமும் வந்தது. தாக்குதலுக்காகக் கடற்கரும்புலிகள் தயாராகினார்கள். தாக்குதல் இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. கரும்புலிப் படகுகளில் சென்று 3 கடற்கரும்புலிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். இவர்கள் தமது கரும்புலிப் படகிற்கு பொருத்தியிருந்து அதிகூடிய குதிரைவலு கொண்ட வெளியிணைப்பு இயந்திரத்தின் திசைவேகத்தால் கரையைத் தொட்டதும் அப்படியே வேகமாச்சென்று கரையிலிருந்த இரு சிங்களக் காப்பரண்கள் மீது மோதி வெடித்து அவற்றைத் தகர்த்தனர். பின்னர் ஏனைய 10 கடற்கரும்புலிகளும் தரையிறங்கித் தாக்குதல் நடத்தும்போது, அவர்களுக்குத் துணையாகத் தரையூடாகச் சென்று தாக்குதல் நடத்தவிருந்த அணி சற்றுத் தாமதமானது. தாக்குதல் சற்றுத் திசைமாற 11 கடற்கரும்புலிகள் கடலன்னையின் மடியில் தம்மை ஆகுதியாக்கிக் கொள்ள 2 கடற்கரும்புலிகள் மீண்டும் தளம் திரும்பினர். இறுதிக் கணத்திலும் கொண்ட கொள்கையிலும் இலட்சியத்திலுமிருந்து சற்றும் தளர்வடையாது தாம் தவழ்ந்த கடலன்னையின் மடியில் ஆகுதியாகிய 11 கடற்கரும்புலி மறவர்களுக்கும் அன்றைய தினம் பல்வேறு நடவடிக்கைகளின் போதும் வீரகாவியமாகிய அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்! கடலிலே காவியம் படைப்போம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.