Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. உங்கள் கதை அது நடந்த இடம் அங்கு எம்மவரின் எல்லைகள் அதை தாண்டமுடியாத எம் வளர்ப்பு அத்தனையும் அந்த ஊரவனாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது? ஆனாலும் உங்களை தூண்டி விடமுடியாதபடி அனுபவங்களும் வயசும் தடுத்தன. ஒரு முறை எனது 3வது மகன் பிறந்திருந்தபோது என்னை விரும்பிய ஒருவர் எனது வீட்டுக்கு வந்திருந்தார். இந்த கதை கொஞ்சம் எனது மனைவிக்கும் தெரியும் என்பதால் அவர் எம்மை தனியே பேச வழி விட்டார். மகனை காட்டமாட்டீர்களா எனக்கேட்டபோது அடுத்த அறைக்குள் தொட்டிலில் படுத்திருந்த அவனைக் காட்டினேன். தொட்டிலில் வைத்திருந்த என் கைமீது அவர் கை வைத்தார். நான் திரும்பி பார்த்தபோது அவர் என்னையும் மகனையும் மாறி மாறி பார்த்தார். அவரது கண்கள் கலங்கி இருந்தன. அந்த கண்கள் ஆயிரம் கதைகளையும் விரக்தி களையும் சொல்லின. இன்றுவரை அந்த கலங்கிய கண்களை மீண்டும் பார்க்கும் சக்தி எனக்கில்லை. நன்றி அண்ணா பழைய ஞாபகங்களை மீண்டும் மீண்டும்??? அவை சுவையான சுமைகளாகவே இருக்கட்டும்.
  2. உண்மை தான். சில விடயங்களை அப்படியே சொல்லிவிட முடியாது ஏனெனில் காலம் பலவற்றை மாற்றி விட்டிருக்கும். இப்போது சொல்வது சிக்கலாக வரலாம்
  3. எத்தனையோ சந்திப்புகள் பயணங்கள் பார்வைகள் தொடுகைகள் நினைவுகள் என்றுமே சுகமானவை முடிந்தளவு பிராயச்சித்தம் முடியாதது பல நெஞ்சுள் முள்ளாய். ஏதோ நாமே கடந்து வந்த பாதை போன்று?? நன்றி அண்ணா
  4. கையில் வைத்துக் கொண்டு தரமாட்டேன் தரமாட்டேன் என்று வேடிக்கை காட்டினால் விரக்தி வேதனையா வரும்??? வாழ்க மௌனம்......
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
  6. இப்படி கனக்க பார்த்தாச்சு புதுசா ஏதாவது விடுங்கள் இதை மாதிரி கதை விட்டு கொண்டு இருக்கும் சாணக்கியர் பலர் மக்களால் தூக்கி எறியப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். கதை தொடர் எல்லாவற்றையும் 10 வருடங்களுக்கு மேலும் ஓட்ட முடியுமா என்ன??
  7. ஐயா நான் எல்லாவற்றையும் செய்து பார்த்த வரலாற்றுடனும் எனது சொந்த அனுபவத்துடனும் இருந்து கொண்டு அதன் உச்ச விரக்தியில் பேசுகின்றேன் ஆனால் உங்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது சிங்களமும் சர்வதேசமும் தமது இரு கரங்களிலும் தீர்வை ஏந்தியபடி தவமிருப்பது போலவும் தமிழர்கள் அதை வாங்காதிருப்பது போலவும் அல்லது உங்களிடம் தீர்வுக்கான பாதை இருப்பது போலவும் அதனை தமிழர்கள் முழுமையாக அழியும்வரை நீங்கள் வெளியடுவதில்லை என்ற உறுதியிலிருப்பது போலவும் திருட்டுத்தனமாக இருக்கிறது நாம் தான் சொல்கின்றோமே எங்களையும் சேர்த்து அல்லது சேர்க்காமல் எதையாவது செய்யுங்கள் செயலில் காட்டுங்கள் என்று???
  8. புழு பூச்சி கூட தனக்கு தன் இனத்துக்கு ஆபத்து வரும் போது ஒன்று திரள்கின்றன எதிரி எந்த பெரிய ஆளாக இருந்த போதும் எந்த பலசாலியாக இருந்தபோதும் தம்மால் முடிந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டும் போது நம்ம இனம் மட்டும்?? வைதனையே மிஞ்சுகிறது அண்ணா. இந்த கேள்வி என்னுள்ளும் உள்ளது அண்ணா ஆனால் விடைதான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை???
  9. இவர்கள் பற்றி சொல்வதென்றால் அவர்களும் எமக்கு வன்முறையை தவிர வேறு எந்த தெரிவையும் விட்டு வைக்கவில்லை அண்ணா. அதைத்தவிர அனைத்தையும் நாம் செய்து பார்த்தாகிவிட்டது. உங்களுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியவில்லை வச்சுக்கொண்டா அவர் வஞ்சகம் செய்கிறார்?? பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்??
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  11. உங்களது கருத்தை முழுமையாக ஒத்துக்கொள்கின்றேன் கடைசி இரு சொற்களைத்தவிர.... நான் அடிக்கடி சொல்வதும் செய்வதும் தான் பிரான்சிலே 2009க்கு பின்னர் பொறுப்புக்கள் சம்பந்தமாக வந்த அழைப்புக்களையெல்லாம் புறந்தள்ளியமைக்கு காரணம் எனது பைலை நோண்டினார்கள் என்றால் நான் அவன் என்பது தெரிந்து விடும் எனவே அந்த முத்திரை அற்றவர்கள் இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் என. வருடங்கள் தான் ஓடுது கண்களுக்கெட்டியவரை...................????
  12. ஈழத்தமிழினத்தின் இனறைய நிலையை எவ்வாறு புரிந்து கொள்வது?? எந்தவகையில் நீ போராடினாலும் எந்த வகையிலும் நீ கவனிக்கப்படமாட்டாய் இது சிறீலங்கா சொல்வதல்ல உலகம் ஏன் மக்களை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐநா சொல்வது? இன்றைய ஈழத்தமிழினத்தின் மௌனநிலை என்பதும் கூட மற்றவர்களால் கேட்கப்பட்டு அல்லது தேவைப்பட்ட ஒன்றல்ல ஈழத்தமிழினம் தன்னால் இதற்கு மேல் அழிவை சந்திக்கமுடியாது இதற்கு மேலும் தன்னிடம் போராடும் வலு கிடையாது என்பதனால் வந்தது அப்போ ஈழத்தமிழினத்தின் அடுத்த கட்டம் என்ன?? மீண்டும் உண்ணாவிரதம் ஊர்வலங்கள்? ஒன்றை மதிப்பவரிடம் அல்லது மனித மாண்புகளை கொண்டோரிடம் நாம் பரீட்சிக்கவேண்டியவை இவை கொலைகாரர்களிடம் அதற்கு துணைபோனவர்களிடம் அதற்காக ஆயுத விநியோகம் செய்தவர்களிடம் .... எவ்வாறு ஒரு படியாவது அவர்கள் முன்னகர்த்துவர்??? அவர்களுக்கு ஆப்பிழுத்த குரங்கின் கதை தெரியாதா??? நான் பிரான்சில் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஐரொப்பாவில் நடாத்தப்படும் அநேக ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஐநா வுக்கு முன்னால் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் இது வருடத்துக்கு 2 அல்லது 3 ஆக இருக்கும் இவ்வாறு செல்வதென்பது எவ்வளவு கடினமானது எவ்வளவு நேரத்தை விழுங்கக்கூடியது எவ்வளவு செலவானது என்று பல தமிழருக்கும் தெரிவதில்லை (அவ்வாறு தெரிந்தால் அவை பற்றி கிண்டலடிக்கமாட்டார்கள்) 2 நாட்கள் லீவு வேண்டும் மற்றும் எல்லைகளில் சோதனை என்ற பெயரில் நடக்கும் அவமதிப்புக்கள் திருப்பி அனுப்புதல்கள்....??? மற்றும் செலவுகள்?? இதையெல்லாம் தாண்டித்தான் போவதுண்டு போய் கால் கடுக்க பல மணி நேரம் நின்று நடந்து ஊர்வலமாக சென்றால் அங்கே எதையுமே கணக்கெடுக்கமாட்டார்கள் இத்தனை வருடங்களாக இவ்வளவு ஆயிரம் பேர் அமைதியாக வருகிறார்களே எமது கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நாம் சொல்வதையெல்லாம் கேட்டு திரும்பி சென்று மீண்டும் மீண்டும் அமைதியாக வந்து கெஞ்சுகிறார்களே என்று எந்த மனச்சாட்சியும் அற்ற செயற்பாடற்ற நிலை தான் ஒவ்வொரு முறையும். கடைசியாக நான் சென்றது 2018. அன்று அதே நடைமுறை அதே நடை ஊர்வலம் மேடைப்பேச்சு... இவை நடந்து கொண்டிருந்தபோது ஐநா வாசலில் சில கூக்குரல்கள் கேட்டன அங்கே சென்று பார்த்தபோது சில இளைஞர்கள் ஐநாவுக்குள் உட்புக எத்தனித்துக்கொண்டிருந்தார்கள் காவலர்கள் இவர்களை தடுத்து வைத்திருந்தாலும் அமைதியாக ஆனால் ஆக்ரோசமாக இளைஞர்கள் உட்புக எத்தனித்தனர் இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியது நானும் அவர்களுடன் சேர்ந்த கொண்டேன் மேலும் நின்றிருந்த காவல்த்துறையினர் தம்மால் முடியாது போவதை உணர்ந்து மேலதிக காவல்த்துறையினரை வரவளைத்து சுற்றி வளைத்தனர். ஆனால் இளைஞர்கள் எவரும் பின் வாங்கவோ வன்முறையை பாவிக்கவோ இல்லை இறுதியாக இனியும் முன்னேறுவது என்றால் வன்முறையை தவிர வேறு வழியில்லை என்பதால் அழுதபடியும் திட்டியபடியும் எல்லோரும் பின் வாங்கினர். நானும் தான் அதற்கு பின்னர் நான் ஐநா ஊர்வலத்துக்கு போவதில்லை ஏனெனில் அவர்கள் எம்மிடம் வன்முறையை மட்டுமே விட்டு வைத்திருக்கின்றனர். இந்த யுத்தத்துக்கு உதவிய அனைவரும் அழிந்து உலகம் தலைகீழாக மாறினால் மட்டுமே எமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு எம்மினத்தின் மேல் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அட்டூழியங்களுக்கு நியாயம் கிடைக்க சிலவேளைகளில் வழியுண்டு.. அதைவிடுத்து அமைதி வழி இவர்களுக்கு புரியும் என்று அப்பாவித்தனமாக நம்பி திலீபனாக பூபதி அம்மாவாக முருகதாசாக இறுதியாக அம்பிகை அம்மாவாக .... கைவிடப்படுவீர்கள்????? (ஆனால் அதே கதவை இன்றும் இன்னும் பலர் தட்டியபடி தான் உள்ளனர். தட்டுங்கள்)
  13. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  14. ஆமையும் முயலும் இந்த சின்னக்கதைக்குள் எவ்வளவு அர்த்தங்கள்?? ஆமை : தளராத முயற்ச்சி தன்னம்பிக்கை அடுத்தவரைப்பார்த்து தன்னை மாற்றாமை கல்லெறிகளின் போது பொறுமை எவருடனும் போட்டி போடாத தன்மை முயல்: ஆணவம் அதீத நம்பிக்கை சோம்பேறித்தனம் வல்லவன் என்ற மமதை அகங்காரம் தனக்கு கீழுள்ளோரை மிதித்தல் முக்கியமாக தமக்கு பிடிக்காதவரை பிரச்சினைகளுக்குள் தள்ளி விட்டு நகைத்தல்..... உண்மையில் இவை ஒவ்வொரு குணம் தரம் குறித்தும் அனுபவங்கள் குறித்தும் ஆயிரக்கணக்கான கதைகளை தரமுடியும் வந்தும் இருக்கின்றன ஆனால் இந்த ஆமையும் முயலும் கதையின் முடிவின் பின்.... அந்த ஆமையும் முயலும் மனிதர்களாக இருந்தால் ஏற்படும் விளைவுகள் சார்ந்து எல்லோருக்கும் அனுபவங்கள் இருக்கும் தாமாக சென்று வலிய போட்டிக்கிழுத்து விட்டு தமது மமதையால் சோம்பேறித்தனத்தால் தோற்றுவிட்டாலும் தான் என்ற மமதையும் ஒப்பீட்டளவில் தனக்கு கீழ் உள்ள ஒருவரிடம் தோற்றதை ஏற்கமுடியாமல் அவர்கள் படும்பாடு இருக்கிறதே??? தமது தோல்வியை மூடிமறைக்க அல்லது மீண்டும் மீண்டும் போட்டிக்கிழுத்து அழிக்க அல்லது அந்த ஆமையின் வெற்றியை கேலிக்குரியதாக்க அவர்கள் எதையும் செய்வதை ஏன் கொலைவரை செல்வதையும் பார்க்கலாம் அதுவும் தோற்குமிடத்து நிரந்தர மதுவுக்கு அடிமையாதல் மனநோயாளியாகுதல் தற்கொலை செய்தல் ................... எனக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் சார்ந்தும் ஓரளவு பொதுவாழ்வில் இருந்தவன் என்ற ரீதியிலும் வேறுபட்ட பல அனுபவங்களுண்டு இந்த அனுபவங்களை பகிரங்கப்படுத்துவதல்ல எனது நோக்கம் ஒருவராவது இந்த முயல்களின் சதியில் சிக்காமல் இருந்தாலே போதும்? நமது வாழ்வை நாம் தான் கட்டணும் எவரது வாழ்வையாவது வளர்ச்சியையாவது ஓட்டங்களையாவது பார்த்து நாமும் ஓடத்தொடங்கினால்??? வாழ்வே நாசமாகும் ஆனால் எப்பொழுதும் பிசியாக இருப்பதாக சொல்லப்படும் இன்றைய உலகில் இது தான் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது மனைவியுடன் பேச நேரமில்லை பிள்ளைகளுடன் கொஞ்ச ஒன்றாக சாப்பிட பிள்ளைகளின் குறை நிறைகளை உரையாட நேரமொதுக்க முடியவில்லை எமது விரலுக்கான வீக்கத்துக்குள் தான் எம் வாழ்வை கட்டியமைத்திருக்கின்றோமா??? ஏன் இந்த இயந்திர வாழ்வு?? இதன் பலாபலன்கள் என்ன??? நாம் ஆமைகளா? முயல்களா?? அல்லது ஆமைகளாக இருந்து முயல்கள் ஆனவர்களா?? அல்லது முயல்களாக இருந்து அடி வாங்கி ஆமையானவர்களா??? தொடரும்....
  15. சிறு வயதில் கனக்க கதைகள் படித்திருப்போம் கேட்டிருப்போம் ஏன் கனக்க அனுபவங்களை கதைகளாக நாமே கண்டிருப்போம் அவை சொல்லப்படும் விதமும் எம்மை வந்து சேர்ந்த விதமும் மாறுபடுவது போல கதையை அல்லது அனுபவத்தை கிரகித்தலும் மாறுபடலாம் மாறுபட்டு விடக்கூடும் ஆனால் கதையின் கருவும் அனுபவத்தின் அனுகூலமும் மாறுவதில்லை அதேநேரம் அதை நாம் கடந்து செல்வதும் கூட அல்லது கண்டும் காணதுபோவதும் போவது போல பாசாங்கு செய்வதும் கூட நடக்கும் நடந்திருக்கலாம்? சின்ன சின்னக்கதைக்குள் திருக்குறளைப்போல பெரும் புதையலும் கருவும் பாடமும் புதைந்து கிடக்கின்றன அவரவரது அனுபவங்களுக்கேற்ப ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுபடுமே அன்றைய சமூக கால நேர நிலைக்கேற்ப மாறுபடுமே தவிர புதிதாக எதையும் கண்டு பிடிப்பதில்லை என்பதைப்போன்றதே கதையும் கருவும் ஏன் இசையும் கூட. இதில் சில விடயங்களை நாம் தவிர்த்தே செல்கின்றோம் தவிர்க்கின்றோம் என்பதற்காக அவை எம்மை விட்டு வைப்பதில்லை நாமுண்டு எம் வாழ்வுண்டு என்று நாம் விலகிச்சென்றாலும் இந்த சமூகமும் அதன் கட்டுமானங்களும் எம்மை தங்களுக்குள் இழுக்காமல் விடுவதில்லை பொருளாதாரம் சார்ந்த இன்றைய உலக ஒழுங்கில்..... அப்படியொரு கதையை சொல்ல விளைகின்றேன் (எல்லோரும் தாண்டி வந்த பாதையாதலால் சிலரை குத்தக்கூடும் பலரது மனதை சாந்தப்படுத்தக்கூடும்) ஆமையும் முயலும் இந்த சின்னக்கதைக்குள் எவ்வளவு அர்த்தங்கள்?? ஆமை : தளராத முயற்ச்சி தன்னம்பிக்கை அடுத்தவரைப்பார்த்து தன்னை மாற்றாமை கல்லெறிகளின் போது பொறுமை எவருடனும் போட்டி போடாத தன்மை முயல்: ஆணவம் அதீத நம்பிக்கை சோம்பேறித்தனம் வல்லவன் என்ற மமதை அகங்காரம் தனக்கு கீழுள்ளோரை மிதித்தல் முக்கியமாக தமக்கு பிடிக்காதவரை பிரச்சினைகளுக்குள் தள்ளி விட்டு நகைத்தல்..... தொடரும்....
  16. அம்மா என்பதற்குள் தான் எத்தனை உள்ளடக்கம். தாய் என்பது வயிற்றில் சுமப்பதிலிருந்து ஆரம்பித்து அதன் வீச்சும் பரிமாணங்களும் அரவணைப்பும் ஆளுமையும் சொல்லில் வடிக்க முடியாத பெரும் பேறு தாய். என் அம்மா இறக்கும் போது அவருக்கு 94வயது. அவருக்கு எந்த குறையும் வைத்ததில்லை என்ன வேண்டுமானாலும் கேள் அம்மா என்பதே எனது வேண்டுகோளாக இருந்தது அவரிடம் . ஆனால் இன்றும் மனதில் ஒரு மூலையில் இன்னும் கொஞ்சம் நன்றாக பார்த்திருக்கலாம் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் என்ற ஏக்கத்துடன்... ஒரு தாயால் மட்டுமே தன் பிள்ளையை சரியாக கணிக்க முடியும். என்னை பற்றி என் அம்மா சொல்லுவா எனக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் இருந்த இடத்தில் இருந்து எழும்பி நான் தட்டிய தூசி நிலத்தில் விழும் முன் என் ராசன் வந்து என் முன் நிற்பான் என. அது தான் உண்மை. அது தான் நான். இந்த அளவுக்கு ஒரு பிள்ளையை புரிந்து கொள்ள அவருக்கு நிகர் அவர் மட்டுமே. அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. நன்றி அண்ணா
  17. அறம் என்பது?? மேலும் அறிய ஆவல் தொடருங்கள்
  18. நன்றி பதிவுக்கு தம்பி. ஆழ்ந்த அனுதாபங்கள்
  19. எதற்காக சொல்லப்படுகிறது என்பதை புரியாதவர்களுக்கு அவர்களின் பாசையிலேயே பதில் தரவேண்டும். ஆனால் அது எம்மால் முடியாது என அவர்கள் அறிந்தே தாக்குதல் செய்வர். நன்றி யாயினி உங்கள் அனுபவங்களையும் எமக்கு தந்து படிப்பினையை நாமும் அறிய தந்ததற்காக. தொடர்ந்து எழுதுங்கள்
  20. வசந்தமே வீசும் நன்றி அக்கா மண்ணை கண்முன் கொண்டு வந்ததற்கு.
  21. நன்றி கதைக்கு?? தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் (அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை. நிச்சயமாக இந்த ராசுக்குட்டி என் தம்பியாகத்தான் இருக்கணும்😜)
  22. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  23. இந்த ஒரு சிரிப்புக்கு எத்தனை ராட்சியங்கள் வீழ்ந்து போகின? நாம் எம்மாத்திரம்?? தொடருங்கள் அண்ணா பழையதை நிபப்பது தானே இனி எம் வாழ்வில் வசந்தம்??😍
  24. பெருக்கி எழுதினால் காதலியின் பேரன் வந்து கதவை தட்டினால்???😆 தொடருங்கள் அண்ணா அருமையான எழுத்து நடை பரிச்சயமான இடங்கள் பெயர்கள்
  25. அமெரிக்கா என்றில்லை உலகமெங்கும் பல் சார்ந்து ஒரே குறிக்கோள் தான் பணம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.