Everything posted by விசுகு
-
பயணம்???
அவர் வேறு ஒரு பெயரில் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார் அண்ணா அதை அவர் பாதையிலேயே விட்டு விடுவோம் சிலரது கட்டுக்கதைகளுக்கு இவர் கேள்விகளை வைப்பதுண்டு ஐயர் கூட இவரது நண்பர் தான்
-
நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி??
கைக்குழுந்தைகளாக எம் பிள்ளைகள் எம் கையில் தவளத்தொடங்குவதாலோ என்னவோ அவர்களை என்றும் அவ்வாறே நாம் கணக்கிடுகின்றோமா?? அவர்களுக்கான படிப்பு சார்ந்து அல்லது அவர்களின் வயது சார்ந்து அல்லது எமது கல்வி அல்லது கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள் மேல் செலுத்துவது சார்ந்து அதை நாமும் அவர்களும் எவ்வாறு கிரகிக்கக்கூடும் என்று நாம் எந்தளவுக்கு கரிசனை கொள்கின்றோம் அதிலும் உடலின் சில அந்தரங்க உறுப்புக்கள் அல்லது உடலுறவு சார்ந்து எமக்கும் அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்?? அநேகமான பெற்றோர் பிள்ளைகளின் முன் முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில் அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது??? ஆனால் பிள்ளைகளுடன் நண்பர்களாக பழகும் போது அவர்களிடமிருந்து வரும் சில விடயங்கள் எம் அனுபவங்களை அவர்கள் பற்றிய எமது அளவுகோளை பொய்யாக்கி நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை மற்றும் கூச்சமற்ற தெளிவு எம்மை தலைகுனிய செய்து விடும் ஒர் இனச்சேர்க்கை சார்ந்து வயது கூடியவர்களை திருமணம் செய்வது சார்ந்து கூடி வாழ்தல் சார்ந்து தனியே வாழ்தல் சார்ந்து....... அவர்களது பார்வையும் கல்வியும் பக்குவமும் எமது பார்வையும் கல்வியும் அனுபவங்களும் ஒட்டாத தண்டவாளங்களின் நிலை தான். அந்தவகையில் என் பிள்ளைகளிடம் ஆரம்பத்திலிருந்தே நண்பனாக பழகுபவன் என்றரீதியில் இப்படியான நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு எனது மகளது பிறந்த நாள் அன்று அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் சாதாரணமாக சொன்னாள் அப்பா என்னை அம்மாவிடம் தை முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று) நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் அதனால் தான் நான் புரட்டாதி ஒன்றில் பிறந்தேன் என. எனக்கு உடம்பெல்லாம் குறுகி விட்டது ஏனெனில் இதை சொல்லும்போது அவளுக்கு அன்று தான் 12 வயது. முற்றும்.
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
ஏன் ராசா பயப்படுத்துகிறீர்கள்?? இப்பத்தான் ஒருத்தர் பிரஞ்சு போன்ற திறந்த மனமுடைய (open minded) சமூகத்தில் பிறந்து இருக்க வேண்டியவர் என்று உற்சாகம் தந்திருக்கிறார்??😜
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
அவர்களுக்கு அங்கங்கே பிரச்சினை. இவருக்கு அங்கேயே பிரச்சினை. எனக்கு தெரிந்த அண்ணர் ஒருத்தர் கொலண்டில் இருக்கிறார். அவர்களுக்கும் இப்படி இதோ ஆள் முடிஞ்சுது என்று இங்கிருந்து எல்லாம் எல்லோரும் ஓடிப்போனார்கள். 10 வருசமாச்சு. அந்நாள் இப்பவும் அந்த மாதிரி இருக்கு. தொடருங்கள்.
-
அன்புள்ள அம்மா....
ஒரு இரு சந்தர்ப்ப அல்லது பொறுப்பற்ற தன்மைகள் முழு சமுதாயத்தின் தன்மையாக பார்க்கப்படுவதில்லை பார்க்கப்படமாட்டாது பார்க்கப்பட கூடாது
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
வாழ்க்கையில் அடிகள் விழலாம் வாழ்க்கையே அடி வாங்கினால்??? உங்களது வாழ்க்கையும் அதிலிருந்து நீங்கள் ஒவ்வொரு முறை மீள்வதும் வாழ்வில் மீளாத துன்பத்திலிருப்போருக்கு ஒரு வழி காட்டும் எத்தனை முறை வீழ்ந்தோம் என்பதல்ல கணக்கு அத்தனை தரமும் எழுந்த நின்றோமா என்பதே வரலாறாகிறது வாழ்க நலமுடன்
-
பயணம்???
(உண்மையில் நான் எடுத்துக்கொண்ட கருவின் கதை முடிவடைந்து விட்டது ஆனால் பயணம் என்று பெயர் வைத்ததால் அந்தப்பயணம் முடிவடையவில்லை தொடர்கின்றேன்) சார்ல் து கோல் விமான நிலையத்தை விமானம் வந்தடைந்துள்ளதாக விமானி அறிவிக்கவும் எனது தொலைபேசியை மீள இயக்குகின்றேன் எனது பெரிய மகளிடமிருந்து குறும் செய்தி ஒன்று வந்திருக்கிறது உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று. அவள் ஐந்து மாத கர்ப்பிணி அவசரமாக அவளை தொலைபேசியில் அழைக்கின்றேன் அப்பா எனக்கு கொரோனா என உறுதிப்படுத்திய வைத்திய அறிக்கை தற்போது தான் கிடைத்தது நான் உங்கள் வீட்டுக்கும் அடிக்கடி வந்து போனதால் வீட்டில் எல்லோருக்கும் பரிசோதனை செய்யணும் தனிமைப்படுத்தணும் ஆனால் நீங்கள் 10 நாட்களாக எம்முடன் இல்லாததால் உங்களுக்கு தேவையில்லை ஆனால் எங்களுக்கு கொரோனா வந்தாலும் பிரச்சினையில்லை உங்களுக்கு வந்தால்தான் ஆபத்து எனவே வீட்டுக்கு வரவேண்டாம் அப்பா மீண்டும் வேறு எங்காவது செல்லுங்கள் என்கிறாள் அடிப்பாவி ஒரு 2 மணித்தியாலத்துக்கு முன் தெரிந்திருந்தால் அக்காவுடனேயே நின்றிருப்பேனே என்றபடி சரி யேர்மனிக்கு ரிக்கற் பாருங்கள். அந்தக்காவும் அத்தாரும் லீவில் வீட்டில தான் நிற்கிறார்களாம். கடுகதி ரயில் ரிக்கற் எடுத்தபடி அடுத்த பயணம் புறப்படுகின்றேன். அங்கும் எங்கும் செல்லமுடியாத நிலை. வீட்டில் இருந்தபடியே ஒரே சமையலும் சாப்பாடும் பல நாட்கள் கதைக்க கிடைக்காத விடயங்களை பேசியபடியும் நாட்கள் போகின்றன. அத்தாருடன் இயக்கம் சம்பந்தமான பெரும் தகவல்களையும் வரலாறுகளையும் அவரது அனுபவங்களினூடாக கேட்க கிடைத்தது. (அவர் செல்லக்கிளி பொட்டம்மான் கிட்டண்ணா ....... என்று பெரும் தளபதிகளுடன் ஒன்றாக இருந்தவர்) அங்கு நின்றபோது வீட்டில் இருந்த எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை மகளுக்கும் 3 அல்லது 4 நாட்கள் உடல் நோ மற்றும் சிறு உபாதைகளுடன் கொரோனா முடிவுக்கு வந்தாலும் தனிமைப்படுத்தல் தொடர்ந்தது ஏழாவது நாள் எனது மச்சாள் ஒருவர் (அப்பாவின் மூத்த தமைக்கையின் மகள்) பிரான்சில் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டதும் அனைவரது வேண்டுகோளையும் புறந்தள்ளி பிரான்சுக்கு வரவேண்டியதாயிற்று. 5எனக்கு இதுவரை கொரோனா தொற்று இல்லை) முற்றும்
-
அன்புள்ள அம்மா....
இது மேலே நான் எழுதியதற்கு பதிலாகவும் ஆதாரமாகவும் பொருந்தி வருகிறது. இது தான் வாழ்க்கையின் தத்துவம்
-
அன்புள்ள அம்மா....
உண்மை சகோதரி நான் எப்பொழுதும் எங்கும் சொல்வேன் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவன் என்று. எழுத வெளிக்கிட்டால் புத்தகமாகி விடும்.
-
பயணம்???
விமான நிலையத்தில் எந்த பிரச்சினையும் இல்லாததால் பிள்ளைகளுடன் வீடியோ கோல் போட்டு காட்டி Duty Free shop இல் அவர்களுக்கு பிடித்த அங்கு பிரபலமான பொருட்களை வாங்கிக்கொண்டு விமானத்தினுள் நுழைந்து விமானம் பறக்கும் வரை அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு விமானம் பறக்கும் போது தொலைபேசியை செயலிழக்க செய்கிறேன். மீண்டும் தொலைபேசியை இயக்கும்போது வரப்போகும் செய்தி மீண்டும் இன்னொரு அக்கா வீட்டுக்கு அனுப்பப்போவதை அறியாமல்??? இந்த இடத்தில் நிச்சயமாக தொடரும் போடணும் இல்லையா?? (கோபப்பட வேண்டாம் உறவுகளே கைத்தொலைபேசியில் இதற்கு மேல் எழுத முடியவில்லை)
-
பயணம்???
உண்மை தான் அண்ணா. நன்றி அண்ணா சில விடயங்களில் நாம் எடுக்கும் காலம் தாழ்த்திய முடிவுகள் எம் ஆயுள் வரை தொடர்ந்து வந்து துன்புறுத்திக்கொண்டே இருக்கும். எனக்கும் சில அனுபவ பாடங்கள் தான் உந்து சக்தியாகின்றன.
- பயணம்???
-
யாழ் எனும் கைத்தடி..
நானும் அதை கவனித்தேன் அண்ணா. நான் நினைக்கிறேன் ஒரே குறிக்கோளுடன் இருப்பது அல்லது சுயநல அரசியல்களுக்கு முட்டுக்கொடுக்காதிருப்பது இன்றைய உலகில் சபிக்கப்பட்டதாக இருக்கலாம் இருக்கிறது. நமது கொள்கைகளுக்கு வயதாகி விட்டது என்பதை வேறு மாதிரி சொல்ல வந்து அது முடியாததால் வருத்தம் அடைகிறார்கள் போலும்
-
சுதந்திரம் எம் சுவாசம்.
அருமை அண்ணா. நல்லவற்றை விதைப்போம் எம் கண் முன்னே நடந்த வரலாற்றை சொல்லி செல்வோம். அவரவர் தத்தமது புத்திக்கேற்ப எடுத்துக் கொள்ள இது ஒன்றும் புத்தக கதை அல்லவே.
-
யாழ் எனும் கைத்தடி..
கவனித்தேன்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
பயணம்???
எனது முறை வந்ததும் நெற்றியில் காய்ச்சல் பார்த்து விட்டு நீங்கள் உங்கள் பயணத்தை தொடரலாம் ஆனால் பயணம் முடியும்வரை எந்த காரணத்துக்காகவும் Mask யை களட்டக்கூடாது என்கிறார்கள் விமானத்துக்குள் வந்ததும் எனது இருப்பிடத்தை தேடிப்பிடிப்பது கடினமாக இருக்கவில்லை காரணம் எனது சீற்றுக்கு பக்கத்திலோ முன்னுக்கோ பின்னுக்கோ எவருமில்லை (ஒன்று விட்டு ஒரு சீற்றே ஒதுக்கப்பட்டிருந்தது.) விமானம் பறக்கத்தொடங்க சாப்பாடும் தேனீரும் தருகிறார்கள் எல்லோரும் Mask யை களட்டியதால் நானும் சாப்பிட்டு தேனீர் குடிக்க ஒரு மணித்தியாலப்பயணம் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கவும் சரியாக இருக்கிறது. அடுத்த பரிசோதனைகளை சந்திக்கணுமே என மனம் சொல்கிறது 14 நாள் உள்ளே போட்டாலும் பின் வாங்குவதில்லை என பாசம் தள்ளுகிறது விமானத்தால் வெளியில் வந்து வெளியே செல்லும் பாதையில் நடக்கத்தொடங்குகின்றேன் வெளியே வரும்வரை எந்த பரிசோதனையும் இல்லை. மூத்த மருமகன் சொன்னது போல் வந்து நிற்கிறார் (அதிசயமாக பார்க்கிறார்) நான் முடிவெடுத்திட்டா அப்புறம் நானே எனது சொல்லை கேட்பதில்லை என பஞ்ச் டயலாக்கை விட்டு விட்டு அம்மாட்ட போ என்கிறேன். நான் வருவதாக அக்காவிடம் (அவரின் அம்மா) சொல்லவேண்டாம் ஆனால் நீ மத்தியானம் சாப்பிட வருவதாய் சொல்லி சமைக்கச்சொல் என்று சொல்லியிருந்தேன்) போய்க்கொண்டிருக்கும்போதே அக்காவிடமிருந்து தொலைபேசி வருகிறது என்ன மகன் நேரம் பின்னேரம் 3 ஆகுது இன்னும் சாப்பிடவரவில்லையே என? இதோ 10 நிமிடத்தில் வந்து விடுவேன் என்றபடி சில நிமிடங்களில் கதவை தட்டுகிறோம். மருமகன் விலத்தி என்னை தெரியுமாப்போல் விட தம்பி என ஆசையாக ஓடிவந்து முத்தம் தந்து வரவேற்கிறார் அவர் எதிர்பார்க்கவே இல்லை அதிலும் இன்றைய சூழ்நிலையில் எப்படி சாத்தியம் என ??? குளித்து சாப்பிட்டு முடிய மருமகன் கடை திறக்க புறப்படுகிறார். நாங்கள் பேசத்தொடங்குகுின்றோம் ஏனப்பு இத்தனை சிரமத்திலும் வரணுமா? ஆமாக்கா இப்பத்தான் வரணும் சாப்பிட என்ன வேணும் எங்க எங்க போகணும்? இது அக்கா இன்றிலிருந்து நீங்க சமைக்கவேண்டாம் முடிந்தவரை வெளியில் உணவகங்களில் சாப்பிடலாம் மற்றும்படி உங்களுக்கு எங்கெல்லாம் போகணுமோ சொல்லுங்க அங்கெல்லாம் போகலாம் எனக்கு எந்த உறவினர் வீட்டுக்கோ பார்க்கவேண்டிய இடமோ என்று ஏதும் இல்லை என்னை யாரும் பார்க்க விரும்பினால் நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் அவர்கள் இங்கு வந்து என்னை சந்திக்கட்டும். அதன்படி காலையில் எழும்பி தேனீர் காலைச்சாப்பாடு முடிய கால் போனபோக்கில் நடந்தோம் மதியம் முடிந்தவரை வெளியில் சாப்பிட்டோம் (அக்கா கோயில் விரதம் என்ற படியால் அதிகம் வெளியில் சாப்பிட முடியவில்லை) வேறு எவரிடமும் கார் திறப்பு கொடுக்காதவர் நான் போனதிலிருந்து திரும்பும்வரை என்னிடமே காரை தந்தார். அவருக்கு போக விரும்பிய அவருக்கு பிடித்தவர்கள் வீடுகளுக்கெல்லாம் போனோம். தம்பி வந்திருக்கிறார் தம்பி வந்திருக்கிறார் என்று அறிமுகப்படுத்தும் போதே என் அக்காவின் முகத்தில் பேரானந்தத்தை கண்டேன். அவரது நண்பர்களும் இன்றைய நிலையிலும் உங்களை தேடி வரும் தம்பி. அக்கா தம்பி பாசத்துக்கு எடுத்துக்காட்டு என்று சந்தோசப்பட்டார்கள். பின்னேரம் என்றதும் நாலைந்து பந்துகளுடன் அக்கா மைதானத்துக்கு வந்து விடுவார் இருவரும் சேர்ந்து பந்தை காலால் அடித்து மேலே போட்டு பிடித்து என 2 மணித்தியாலங்கள் விளையாடுவோம் அப்பொழுதும் நான் களைப்பதை பார்த்தே அவர் இன்றைக்கு காணும் என நிறுத்துவார் இன்னொன்றையும் அடிக்கடி சொல்வார் தம்பி நீ சின்னனாக இருக்கும்போது உன்னுடன் விளையாடி இருக்கமாட்டன் அது தான் காலம் எம்மை மீண்டும் ஒன்றாக விளையாட வைத்திருக்கு என்பார் (அவருக்கும் எனக்கும் 13 வயது வித்தியாசம்) விளையாடி முடிய யோகா செய்வார் ( அவர் யோகா ஆசிரியர்) எனக்கும் சில பயிற்சிகள் சொல்லித்தருவார். பொழுது பட வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டு விட்டு இரவிரவாக நித்திரை கொள்ளும்வரை அந்தக்கால கதைகள் உட்பட பேசிக்கொண்டே தூங்கிவிடுவோம் தம்பி கதைத்துக்கொண்டிருக்கும்போதே நீ தூங்கி விடுவாய் எனக்கு அந்த தூக்கம் தானே பிரச்சினை என்பார் அது தான் எனது சொத்து அதில் கொஞ்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்பேன் இப்படியே 10 நாட்கள் ஓடி விட்டன புறப்படும் நாளும் வந்தது. புறப்படும் போது கட்டி அணைத்து நன்றி தம்பி என்றார் எதுக்கு தம்பிக்கு நன்றி அக்கா என்றேன் இந்த 10 நாட்களும் என்னுள் ஒரு அபாரபலம் இருந்ததை உணர்ந்தேன் என்றார் எனக்கும் போக விருப்பமில்லை அக்கா எங்கள் பெற்றோர் இவ்வளவு இடைவெளி விடாது எம்மை பெற்றிருந்தால் நானும் பென்சனில் இன்னும் கொஞ்ச நாள் உங்களுடன் நின்றிருக்கலாம் வேலை அழைக்கிறது போய்த்தானே ஆகணும் என்றபடி புறப்படத்தொடங்கினோம். அப்பொழுதும் மனம் சொல்கிறது என்னை .இங்கே விமானம் ஏற விடக்கூடாது. ஒரு மாதம் யாரும் எங்கேயும் நகரமுடியாது என்று என்னை திருப்பி விடணும் மீண்டு.ம் வந்து அக்காவுடன் நிற்கணும் என. காரில் போய்க்கொண்டிருக்கும்போது மருமகன் கேட்கிறான் இன்றைய சூழ்நிலையில் இங்க வரப்போகும் முடிவு பற்றி கனக்க யோசித்திருப்பீர்கள் ஆனாலும் வந்திருக்கிறீர்கள் இந்த முடிவை நீங்க எடுப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்குமென்று எனது உள் மனசு சொல்லுது மாமா தெரிஞ்சு கொள்ளலாமா என்று கேட்டான் கோவிட் 19 தொடங்கி அது மெல்ல மெல்ல ஆட்களை தனிமைப்படுத்த தொடங்கிய போது தனிமை அக்காவை வாட்டி இருக்கணும் ஒரு நாள் தொலைபேசியில் சொன்னார் தம்பி இதென்ன வாழ்க்கை செத்திடலாம் போலிருக்கடா என்று. அன்றைக்கு ரிக்கற் போட்டேன் ஏனெனில் செத்த பின்னர் வந்து ஓலமிடுவதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை. அதற்காகத்தான் வந்தேன் என்றேன் அவனது கண்கள் கலங்கியிருந்தன. விமான நிலையத்தில் எந்த பிரச்சினையுமில்லை. பயணம் தொடர்கிறது....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழும்வரை வளமாகவும் சுகமாகவும் வாழ வேண்டுகிறேன். மற்றும் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்
-
மாஸ்க் எடுத்தாச்சே
புத்தரின் கிறுக்கல்கள் எப்பவும் சிந்திக்க சிரிக்க வைக்கும். அண்மையில் கோயிலுக்கும் சேர்ச்சுக்கும் போயிருந்தேன். அங்குள்ள நிலையை பார்த்தபோது மனதில் ஏற்படும் கேள்வி? யாருக்கு யார் பாதுகாப்பு?? யாரிடம் யார் வேண்டுவது??
-
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
ஐரோப்பிய சமூகத்தில் பிள்ளைகள் வளர்வதால் அந்த முறைப்படி பெயர் இருப்பதே குழப்பம் இல்லாமல் இருக்க வழி. 90 களில் தமிழ் ஒலி வானொலியில் இது பற்றி நேரடி விவாதம் ஒன்று நடந்தது. நான் இதை சொன்ன போது நடாத்துநர் தனது பிள்ளைகளுக்கு தனது தகப்பனாரின் பெயர் வருவதை அசிங்கமாக தான் பார்த்ததால் தனது பிள்ளைகளுக்கு தனது பெயரை முதற் பெயராக வைத்ததாக சொன்னார். எனக்கு வந்த கோபத்தில் ஆமாம் நீங்கள் ஊரில் இருந்து வரும் போதே பிளான் பண்ணி வந்தீர்கள் நான் அகதியாக ஓடி வந்தவன் என்றேன். பேச்சு மூச்சு இல்லை. நல்லதொரு கருத்து இதை கதையாக்க எல்லோராலும் முடியாது. வாழ்த்துக்கள்.
-
தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
முனிவர் எழுதினால் சொல்லவும் வேண்டுமா?? ஆனால் எல்லோருடைய பெயர்களும் அடி வாங்கும் போலிருக்கு?? தொடருங்கள்
-
லொக்டவுண்
சின்ன சின்ன ஆசைகள் முடிவில்??? திருடராகப்பார்த்து திருந்தாவிட்டால்?? நன்றி அக்கா ஆக்கத்துக்கும் எச்சரிக்கைக்கும்.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
இப்பவே சணல் பறக்குது தொடருங்கள் சிறி அதுக்காக அடுத்த வெள்ளி வரை எல்லாம் பொறுக்க முடியாது.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .