Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32875
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. சேர்த்தார்கள் சரி. எவ்வளவு சேர்த்தார்கள். எவ்வளவை கையளித்தார்கள்.. என்ன வேலைத்திட்டம். இதே தனியார் வைத்தியசாலைக்குத் தானோ?. ஆனால் சமூகம் ஏதோ மானிப்பாய் அரசினர் வைத்தியசாலைக்கு செய்வது போன்ற சாயலில்.. நூல் விட்டிருந்தது அதுதான். ஏதோ நன்மைக்கு நடந்தால் சரி. ஆனால்.. மக்களிடம் மருத்துவச் செலவுக்கு என்று தனியார் மருத்துவமனைகளும் அங்கு விசிட் அடிக்கும் வைத்தியர்களும் அடிக்கும் கொள்ளைக்கு யார் தான் முடிவெழுதுவதோ..??! ஒரு வைத்தியரை காண...5000 என்றால்.. அவர் சொல்லுற சோதனைகளை உடன செய்து முடிக்க ஒரு 20,000 பின் மீண்டும் அந்த றிப்போட்டோடு வைத்தியரை காண.. மீள ஒரு 5000 அதன் பின் அவர் எழுதும் மருந்துகள்.. இஸ்தியாதிகள்.. அதுவும் அங்க அந்த மருத்துவனை மருந்தகத்தில் தான் வாங்கனும்.. அதுக்கு தனிய ஒரு 20,000 அதில வைத்திசாலை அன்ட்மின் காசு வேற.. 5000 ஆக.. சிங்கிள் விசிட்டில.. 55,000 காலி . இது பருமட்டானது. இதில ஸ்பெசலிஸ்டு.. கென்சல்ட்டனு.. இன்னும்.. பிசி டாக்டரு.. இவைக்கு விலை தலைக்கு மேல.. விலை வைச்சுத்தான் அழைக்கனும். இவ்வளவு செலவு செய்து.. உள்ளூர் மக்கள் எப்படி நோயை குணமாக்க நினைப்பாங்க. நோயை புறக்கணிச்சு வாழ நினைப்பாங்களா.. இல்லை.. கடன உடன வாங்கி.. காசைக் கொட்டிட்டு.. பின் உடல் நோயோடு மன அழுத்தத்தையும் வாங்கிக்குவாங்களா..??! வெளிநாட்டில் இருந்து விட்டு... போற கொலிடேயோட... சைக்கிள் ஓடி பணம் சேர்த்து ஒரு வைத்தியசாலையை தரமுயற்திறது நல்ல விசயம் தான். ஆனால்.. அதனை நாம் சரியான மக்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகைக்கு செய்யுறமா என்று சிந்திக்க மாட்டினமோ இவை..?! அந்தளவுக்கு மூளை இல்லை. வெளிநாட்டில.. ஒரு பவுன் முதலீடு என்றாலும் ஆயிரம் யோசிக்கிற வெள்ளை உதெல்லாம் உவைக்கு கற்றுக் கொடுக்காமலா விட்டான்..??! குறைந்தது... வருமானம் குறைந்த மக்களுக்காவது இலவச மருத்துவ சிகிச்சை.. ஆலோசனை.. வழங்குவினமா..???! மானிப்பாய் ஒன்றும் சிட்னி.. ரொரான்டொ.. லண்டன்.. நியோர்க்கில் இல்லை தானே.. என்று நம்புறம்.
  2. என்ன கொக்குத்தொடுவாய் உக்ரைனில் இருக்காமல்.. போய்விட்டது. இருந்திருந்தால்.. பிபிசி.. சி என் என்.. என்று பிளாஸ் நியூஸ் எகிறி இருக்கும். இதில் இருந்து விளங்கனும்.. நாம் எப்படிப்பட்ட மனித டிசைன்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை.
  3. அதுசரி.. இவடை கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களில்.. அவுஸீ.. சீனா.. ஹிந்தியான்னு இப்ப எல்லாமே பெற்றோல் பங் வைச்சிருக்குது சொறீலங்காவில். யாழ்ப்பாணத்தில் சீன பெற்றோல் பங் இருக்குது.
  4. வெள்ளைக்கு எங்க போனாலும் பன் னுக்கு ஆக்கள் தேவை. இப்படியான எங்கட வெங்காயங்களுக்கு தங்கட மேக்ப் மூஞ்சிக்கு விளம்பரம் தேவை. அப்புறம் என்ன.. மருத்துவமனையில் பெயரால்.. கிளப்படா கிளியப்பட்ரோ என்றிருப்பாங்கள். கிளப்பியாச்சு. அதிலும் நம்ம ஊடகங்கள் இருக்கே.. ஊரில எதை சுட்டிக்காட்டி சமூகத்தை நாட்டை வழிநடத்தனும் என்ற விவஸ்தை இல்லை. அதுகளும் மேக்கப் பின்னாடியும் தோல் கலருக்கு பின்னாடியும் திரியுதுங்க.
  5. உண்மையில் சமயபாடத்தை 9 வகுப்போடு நிறுத்தலாம். அதை ஓ எல் வரைக்கும் இழுப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. மொழி கணிதம் விஞ்ஞானம் சமூகக் கல்வி வர்த்தகமும் கணக்கியலும். ஆங்கிலம். இந்த 6ம் போதும்.. பரீட்சைக்கும். நீண்ட மதிப்பீட்டுக்கு 2 போதும். 1. அழகியல் (சித்திரம்.. சங்கீதம்.. பரதநாட்டியம்.. கண்டிய நடனம்.. இஸ்லாமிய நடனம்.. மீண்டும் தெரிவை மாணவர் கையில் விடுங்கள்) 2. தொழில்கல்வி (விவசாயம்/கைத்தொழில்/மின்சாரவியல்/கணனிப்பொறியில்/மின்னணுவியல். (தெரிவை மாணவர் கையில் விடுங்கள்.) மொத்தம் 8 க்குள் தேவையானது எல்லாத்தையும் அடக்கலாம். அதிலும் கடைசி 2 பாடங்களிலும் சித்தி போதும்.. ஏ எல் போக என்றாகனும். குறிப்பாக மதிப்பீட்டு பரீட்சையில்.. பாஸ் அல்லது பெயில் மட்டும் தான் அன்றாகனும்.ஏ பி சி எஸ் வழங்கப்படக் கூடாது. அப்படி வழங்குவது.. ஆசிரியர்களின் பாகுபாட்டுச் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்யும். அதைவிடுத்து பரீட்சை பாடங்களை 7 ஆக்கி மதிபீட்டு பாடங்களை 3 ஆக்கி.. (மதிப்பீட்டு பாடம் என்றால்.. ரீச்சருக்கு ஜால்ரா போற்ற பார்ட்டிகளுக்கு உயர்புள்ளி.. மேற்கு நாடுகளிலேயே இந்தக் கூத்து.. சொறீலங்கா சொல்லிவேல்லையில்ல..) மொத்தம் 10 பாடங்களின் சுமையை ஓ எல் வரை காவுவது.. அநாவசியமானது. வாழ்க்கையில் சமயத்தில் படிச்ச.. ஒரு தேவாரத்தை தவிர மிச்சம் ஒன்றும் உருப்படியாக ஞாபகமில்லை. அதுக்குக் கூட பண் கிண் எதுவும் ஞாபகமில்லை. அது உனக்குத் தேவையா..??! சொறீலங்கா. எந்த பெளத்த மாணவர் பிரித் ஓதுறான். புத்த பிக்குதானே ஓதுறான். வேணுன்னா அவனைப் படிக்கச் சொல்லுறது... சமயத்தை.
  6. ஏன் கனடாவில் யாழ்ப்பாணம் முஸ்லிம்களும் அகதிகளாகப் போய் இருக்கினம். சிங்களவர்கள் ஜே வி பி மற்றும் அரசியல் பழிவாங்கல் என்று போய் இருக்கினம். கொழும்பான் அண்ணாவுக்கு மாலைக்கண்ணோ. காண்பதெல்லாம்.. பேய் என்கிறார். ஆனால்.. ஒரு உண்மை உண்டு. தமிழர்கள் என்றில்லை தெற்காசிய நாட்டைச் சேர்ந்தவர்களே இப்படித்தான். அது அவர்களின் டிசைன். அதில் எல்லா மதம் மொழி இனம் அடங்கும்.
  7. சுந்தர் பிச்சையின் காலம் ஜிமெயிலோடு போக வேண்டியது. கூகிள் குரோமால்/ஓஸ் நீடிச்சது. எனி நீடிக்குமா..??! ஆனால்.. கூகுள் ரைவ் என்று கொண்டு வந்து எங்கள் தரவுகளை தங்களுக்கு வசதியான இடத்தில் வைக்கிற வேலைச் செய்தது இவர் தான். அது ஒருவகை மோசடி. நமக்குத் தெரியாமலே நம் தரவுகளை திருட சோதிக்க பயன்படுத்த முடியும். சும்மா இருந்த பிச்சைக்கு ஹிந்தியா பத்மபூசன் கொடுத்தது தான் கெட்ட நேரம் ஆரம்பிடிச்சு.
  8. பிரபாகரன் யார் என்று கேட்டால்.. பயங்கரவாதின்னு சொல்லும்.. அளவுக்குத்தான் ஏ ஐ இருக்குது. ஒவ்வொரு தனிமனித சிந்தனையையும் உள்வாங்கிப் பதில் சொல்லுற அளவுக்கு அது கிடையாது. சாக்கடைக்குள் முத்துக்குளிக்க.. ஏ ஐ வகுப்பர்களுக்கு இன்னும் சரியாக.. கோடிங் கைக்கூடவில்லை. சோ.. சாட். ஆனால்.. முன்னேற இடமுண்டு.
  9. அட இந்தளவுக்கு நுணுக்கமா இருக்கா. சரி சரிப்படுத்தினால் போச்சு. நன்றி சுட்டிக்காட்டியமைக்கு. ஆம்.. இது வடமராட்சியின் நுழைவாயிலில் இருப்பதால் வல்லை என்று வருதலே பொருந்தும். வடமராட்சியின் ஒரு பகுதிதானே வல்வை எனும் வல்வெட்டித்துறை..!
  10. 7 என்றாங்க.. பிறகு 3 பாடங்களில் மதிப்பீடு என்றாங்க.. அப்ப மொத்தம் 10 ஆச்சே. இப்ப இருப்பதே 9 தானே...????! கல்வி அமைச்சருக்கு விளக்கம் கொடுக்கத் தெரியல்லையோ.. இல்லை இதுதான் விளக்கமோ..???!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.