Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. ஐயா ராமதாஸ் சொல்வது பாதி தான் நியாயம். ஏனெனில் தி மு க இவ்வளவும் கொடுத்தது என்றால்.. பா ம க.. கூட்டணி வைக்காமலே.. மற்றைய கட்சிக்கொடிகளையும் தூக்கி வைச்சுக் கொண்டும்.. பகுதியாக என்றாலும் காசு கொடுத்து வாங்கினது 56,000 வாக்குகள். வெறும் மைக் சின்னத்தை மட்டும் வைச்சுக் கொண்டு காட்டுக்கத்துக் கத்தி மட்டும் 9000 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் தான் உண்மையான சனநாயகவாதிகள். அவர்களுக்கு வாக்குப் போட்டவர்கள் தான் சாதாரண மக்கள். இங்கு பாமக கொடி மட்டுமா பறக்கிறது..?! ராமதாஸ் ஐயாவுக்கே வெளிச்சம்.
  2. கருணாநிதி திட்டாத திட்டுக்களா..?! ஜெயலிலதா.. வை கோ போன்றவர்களை திடாத திட்டா. ஏதோ கருணாநிதி யோக்கியவான் போலவும்.... அண்மையில் ஸ்ராலின் கூட எரிதடி மாலா.. பா(f)னைப் போடு என்று ஒட்டுமொத்த தமிழகப் பெண்களையும் எள்ளி நகையாடியது கூட கைதுக்குரிய அம்சம் தானே. இது குறித்து தி மு க மகளிர் அணி மூச்சும் விடவில்லை. அண்மைய நாடாளுமன்ற.. மற்றும்.. இடைத்தேர்தல் பணநாயக வெற்றிக்கு பின்.. தி மு க கும்பல் கொஞ்சம் ஓவராத்தான் ஆடுது.
  3. யார் சரி.. யார் பிழை என்பதற்கு அப்பால்.. இதை ஒரு எச்சரிக்கை செய்தியாக எடுத்து பெருகி வரும் கண்காணிப்பு கமராக் கலாச்சாரத்துக்கு தகுந்த விதிகள் அமுல்படுத்தப்படுவது அவசியம். எங்கு கமரா வைக்கலாம் எங்கு வைக்கப்படாது.. அப்படி வைக்கப்படக் கூடாத இடத்தில் கமரா பொருத்துவது அல்லது வைப்பது சட்டவிரோதம் என்று குற்றச் செயலாக அமுலாக்கப்பட வேண்டும். ஆனால் குற்றங்களைக் குறைப்பதில்.. கண்காணிப்புக் கமராக்களின் பங்களிப்பு முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்வது சிறப்பு.
  4. சிந்துவெளி நாகரிகம் தொடர்பில் சைவநெறி பாடப்பரப்பில் பாடசாலையில் படிக்கும் (ஆண்டு 9 இல்) போதே... இது தொடர்பில் ஆசிரியரிடம் கேட்டிருக்கிறேன். சிந்துவெளி அடையாளங்கள் தமிழர் மரபை ஒட்டி காணப்படுகிறதே என்று.. குறிப்பாக பசு பதி பாசம் வடிவங்களில் இறையை காண்பது உட்பட. அதற்கு ஆசிரியரால் அன்று விளக்கம் தர முடியவில்லை. எதையோ சொல்லி சமாளிச்சிட்டார். இன்று சமூக வலையிலும் அன்றைய என் கேள்விக்கு விடை தேடுகிறார்கள். கீழடியில் காணப்பட்ட அடையாளச் சின்னங்களோடு சிந்து வெளி சின்னங்கள் பொருந்தி வருவதும் ஆராயப்பட்டு வருகிறது. இந்த கட்டுரைக்குள்.. தமிழர் மரபுக்கு அப்பால்.. உருவகிக்கப்பட்ட போலித் திராவிடத்தை புகுத்தாமல்.. தமிழர் மரபுகளோடு சம்பந்தப்படுத்திச் சென்றிருந்தால் சிறப்பு என்று தோன்றுகிறது. அதுதான் நியாயமும் கூட. திராவிடம் என்பது கட்டியமைப்பட்ட மாயை.
  5. மீண்டும் பழைய முறையில்.. ஆனால் புதுப்பிக்கப்பட்ட வகையில் இதனை இலங்கை குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே சிறப்பு.
  6. கறுப்புப் பட்டியலில் இடுவதால் மட்டும் பிரச்சனை தீராது. ஆபத்தான புகை வெளியிடுவதை குறைக்கக் கூடிய ஊக்கி மாற்றிகள் பொருத்தப்படுவது.. மின்சார வாகனங்களின் பாவனையை அதிகரிப்பது.. மின்சார வாகனக் கொள்வனவுக்கு மானியம்.. என்று பல வகைகளில் இது அமுலாகப்பட வேண்டும்.
  7. வேகக்கட்டுப்பாட்டு விதிகள் மட்டும் போதாது வீதி மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை அவசியம். இதற்கு சொறீலங்கா பொலிஸ் சரிப்பட்டு வராது. ஏ ஐ உதவியுடன் கூடிய தானியங்கி கமராக்கள் மூலம்.. போக்குவரத்து அமைச்சுக்குள் உட்பட்ட போக்குவரத்து விதி அமுலாக்க துறை சுயாதீனமாக இயங்கும் நிலை அவசியம். சொறீலங்கா பொலிஸ் உதவி தேவை என்றால் மட்டும் பெறப்படலாம்.
  8. அமிர்தலிங்கத்தின் கொள்கைக்கு திரண்ட பெரும் திரளானவர்களைக் காண கண்கள் ஆயிரம் தேவை. கூடின கூட்டமே சாட்சி.. இவர்களின் இனக்கொலைக் கொள்கைகள் பற்றிய உண்மைகளைச் சொல்ல.
  9. கிழக்கு லண்டன்... நியுகாம் தொழிற்கட்சி கவுன்சிலராக பல ஆண்டுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு வந்த போல் சத்தியநேசன் உடல்நலன் குறைவு காரணமாக கடந்த 5ம் திகதி காலமானார். இவர் அடிப்படையில் புளொட் அமைப்புச் சார்ந்தவராக இருந்தாலும்.. புலம்பெயர் மண்ணில்.. தமிழீழத்துக்கு சார்பான நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதிலும் பிரித்தானியர்களிடம் தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றியவர் ஆவார். 1980 களில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் கிடைக்க பல வழிகளிலும் இவர் தன் உதவிகளை வழங்கி வந்திருப்பது தெரிந்ததே. கடந்த சில காலங்களாக தாயகத்தில் சில வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்திருக்கிறார். இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
  10. ஒரு நாள் உண்ணாவிரதி கருணாநிதி.. ஈழத்தமிழர் துரோகி கருணாநிதி.. சிங்களன் மகிந்தவின் பொன்னாடைத் தோழன் கருணாநிதி.. ஈழ இரத்தம் குடி பிசாசு.. சோனியாவின் சொக்கத்தங்கம் கருணாநிதி.. இப்படி.. இன்னும் பல வகையில் நீளக் கூடியது இப்பாடல். எழுதியவருக்கும் பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  11. தொழிற்கட்சி ஈழத்தமிழருக்கு ஆற்றிய கைங்கரியங்கள்.. 1. விடுதலைப்புலிகள் மீதான தடை - ரொனி பிளேயர். 2. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மீதான தடையும் சொத்துப் பறிப்பும் 3. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் பாராமுகத்துடனாக ஊக்குவிப்பு - ஹோடன் பிரவுன். சர்வதேசத்தில்.. 1. ஈராக் மீதான பேரழிவு ஆயுத போலிக் கூச்ச போர் - ரொனி பிளேயர். உள்ளூரில்.. 1. பல அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தியது. 2. கிழக்கு ஐரோப்பியர்களுக்கு பிரித்தானியாவை திறந்து விட்டது. 3. சலுகை அளிப்பு என்ற பெயரில் வரி உயர்வுக்கு வழி சமைத்தது. 4. வீட்டு கடன் சுமையை அதிகரித்தது. 5. மாணவர் கடன் சுமையை அதிகரித்தது. 7. தேசிய சுகாதார சேவைக்குள் தனியார் மயப்படுத்தலை புகுத்தியதும் இன்றி காத்திருப்பு காலம் இவர்கள் காலத்தில் தான் நீடிக்க முடிந்தது. 8. மாலை 5 மணிக்கு பின்னரான வேலை நேர கூடிய ஊதியத்தை மாலை 8 மணி ஆக்கி இல்லாமல் செய்தமை. 9. தொழிலாளர்கள் நலனில் அக்கறையின்மை போக்கை கடைப்பித்ததோடு தேசிய விடுமுறை நாட்களையும் வேலை நாட்கள் ஆக்கியது. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். என்ன மக்களுக்கு மறதி அதிகம்.. தேர்வுக்கு ஒரு மாற்றும் இல்லை. பேயை விரட்ட மீண்டும் பிசாசை இழுத்து வந்து கதிரையில் இருத்தி இருக்கினம். விளைவை இன்னும் சில வாரங்களிலேயே காணலாம்.
  12. சுமந்திரன் சம்பந்தனை மட்டுமல்ல... வாக்களித்த மக்களையும் நிர்கதியாய் விட்டவர் தானே. சிங்களத்தோடு வாழ்வது பெருமை என்று அடித்துவிட்ட விண்ணர் அல்லவா.
  13. சம்பந்தன் ரகசியமாகச் செய்து வந்த ஹிந்திய - சிங்கள விசுவாசத்தொழிலை இவரிடம் இன்னும் விரிவாகக் கையளிக்க கூப்பிட்டிருப்பினம். அதில் இவருக்கு மிக அனுபவம் உண்டல்லவா.
  14. பிரான்ஸ் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்.. அதிபர் மக்ரோனின் கட்சி மரண அடி வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடியுள்ளன. அதேவேளை பிரான்ஸ் தேசியவாத வலது சாரிகள் அமோக வெற்றிகளை பெற்று வருகின்றனர். ஏலவே அமெரிக்காவில் பைடனின் உளறல் தேர்தல் பேச்சு அவரின் வெற்றியை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ள நிலையில்.. மேற்குலக புட்டின் எதிர்பாளர்கள் நடப்பு தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையே காணப்படுவதோடு.. தேசியவாதம் எழுச்சி பெற்று வருகிறது. https://www.bbc.co.uk/news/live/cn087x77g1dt
  15. சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த போராளிகளையும் அந்தப் போராட்டத்தின் விளைவாக உயிர் தந்த மக்களையும்.. இனப்படுகொலையாளர்களை மறந்து.. மன்னித்து.. ஒரே நொடியில் பயங்கரவாதமாக்கிய சம்பந்தன் கும்பல் இரங்கலுக்குரிய கும்பலே அல்ல. இதுதான் எங்கள் தனிப்பட்ட நிலைப்பாடு.
  16. முள்ளிவாய்க்காலில் இறந்த தன் சொந்த மக்களின் துயரைக் கூட உள்வாங்க வக்கில்லாமல் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு இனக்கொலைஞன் சரத் பொன்சேக்காவுக்கு வாக்குக்கேட்டது முதல் சம்பந்தனை சராசரி மனிதனாகக் கூட காண முடியவில்லை. இன்று வரை ஒரு தடவை தானும்.. இந்த ஆள்.. முள்ளிவாய்க்காலுக்கு சென்றதும் இல்லை.. இறந்த சொந்தங்களுக்கு துக்கம் அனுஷ்டித்ததும் இல்லை. எம் மக்களின் துயருக்கு எதுவுமே இல்லை என்றாக்கிய மிக முட்டாள் அரசியல்வாதியும் சுயநலவாதியுமான சம்பந்தனின் மறைவு.. இரங்கலுக்கு அப்பாற்பட்ட உணர்வே எழுகிறது. அப்படியப்பட்ட ஆளுக்கு அழவோ.. இரங்கவோ முடியவில்லை. இயற்கை காலம் கடந்து தீர்ப்பை எழுதி இருக்கிறது. அவ்வளவும் தான்.
  17. Former TNA Leader R. Sampanthan no more Colombo, June 30 (Daily Mirror) - Veteran Tamil politician and parliamentarian R. Sampanthan passed away at a private hospital in Colombo today evening, aged 91. Sampanthan was one of the longest serving MPs with decades of experience and served as the Leader of the Tamil National Alliance for several years. https://www.dailymirror.lk/breaking-news/Former-TNA-Leader-R-Sampanthan-no-more/108-286102
  18. பாம்புகளில் பால் தெரிவு... மற்றும் கலப்பிரிவு முறைகளை விளங்கிக் கொண்டால்.. இது ஒன்றும் பிரமாதமே அல்ல. மனிதரிலும் சுப்பர் பெண்.. சுப்பர் ஆண் எல்லாம் இருக்குது... ஆண்-பெண் நிறமூர்த்த சோடிகளின் அடிப்படையில். அது தூய தனிப்பால் வழிமுறையல்ல.
  19. இருக்கவே இருக்கு பிரிட்டன். ஏலவே கடந்த சில ஆண்டில் மட்டும் அரை மில்லியனுக்கு மேல் இந்தியர்களை குடியேற்றி விட்டார்கள். இப்போ.. 3000 யுத் மெபைலிற்றி என்று இந்தியாவில் இருந்து இறக்குகிறார்கள். ஹிந்திய வம்சாவளிகள் பிரிட்டனின் முதன்மை பதவிகளுக்கு வந்து செய்த கைங்கரியம்.. இதுதான். இப்போ லண்டனில் வாழ்வது.. ஏதோ முப்பை.. கராச்சியில் வாழ்வது போல் உள்ளது. கொழும்பு.. யாழ்ப்பாணம்.. எவ்வளவோ மேல்.
  20. அமெரிக்க.. மேற்குலகின் சுதந்திரங்கள் இந்தளவு தான். அவர்களின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றினால்.. சிறை தான். அதுவும் பெண் வன்முறை குற்றம் உட்பட. இவர் மீது சோடிக்கப்பட்ட குற்றங்கள் எவை என்பதை எண்ணிப்பாருங்கள். புரியும் இவங்கட மக்களுக்கான சுதந்திரத்தின் தார்ப்பரியம்.
  21. தனியார் பேரூந்துகளை விட அரச பேரூந்துகளும் பார ஊர்திகளும் வான்களும் ஏ 9 வீதியில் கண்மண் தெரியாமல் ஓடினம். பல தடவைகளில் பேரூந்துகளுக்கு சமீபமாக வந்து முந்திச் சொல்லினம்.. இது பார வாகனங்களை ஓடுபவர்களுக்கு சிரமத்தை அளிப்பதை தெளிவாக காண முடிகிறது. ஆக்களும் கண்ட இடத்திலும் வீதியை கடக்கினம். மேலும் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் அபாய விளக்கு எரிய விடப்படுவதில்லை. பல தடவைகளில் எல்லாத்தையும் நிற்பாட்டிட்டு தூங்கி விடுகிறார்கள். இது ஓட்டுனர்கள் ஆபத்தை புரிந்து கொண்டு செயற்பட கால அவகாசயத்தை அளிப்பதில்லை. தீர்வு: வேகக் கட்டுப்பாட்டு கமராக்கள்.. வேகக் கட்டுப்பாடு ஏ 9 வீதியில் மிக அவசியம். விதி மீறுபவர்கள் மீது காட்டமான உடனடி நடவடிக்கை அவசியம். வீதி ஓரத்தில் வாகனங்களை அத்தியாவசியம் தவிர நிறுத்த அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால்.. அதற்கான விதிகளை தீர்க்கமாக பின்பற்றப்பட வேண்டும். சரியான ஒளிர் தன்மை வாய்ந்த அறிகுறிகள் சரியான இடைவெளியில் வைக்கப்படுதல் வேண்டும். மக்கள் வீதிகளை கடக்கும் இடங்கள் குறியிடப்படுவதோடு.. குறைந்தது 150 மீட்டருக்கு முன்னரே ஓட்டுனர்கள் எச்சரிக்கை அறிவிப்பை தெளிவாகப் பெற குறியீடுகள் பொருந்தப்பட வேண்டும். வாகனங்கள் வீதி ஓரமாக.. நிறுத்தி வைக்கப்படும் போது... வீதியின் ஓரத்தில் இருந்து முற்றாக நீங்க நிறுத்தப்படுதல் அவசியம் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். வாகனங்கள் பழுதின் போது வீதியில் நிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால்.. எச்சரிக்கை குறியீடுகள் முன்.. பின் என்று குறைந்தது 150, 100 மீற்றர்கள் தூரம் வரை முன் நகர்த்தி வைக்கப்படுதல் அவசியம். மேலும் வாகனங்களுக்கு வெளியில் வீதியில்.. வீதி ஓரத்தில் நடமாடும் தேவை ஏற்பட்டால்.. ஒளிர் மேலங்கி அணியப்படுதல் கட்டாயமாக்கப்படுதல் வேண்டும். இப்படியான விபத்துகளுக்கு வாகன ஓட்டுனர்கள் மட்டுமன்றி.. கால மாற்றம் வாகனங்களின் பாவனைப் பெருக்கத்திற்கு ஏற்ப வீதி விதிமுறைகளை மாற்றி அமைத்து அமுல்படுத்தாமை.. விபத்து தவிர்ப்பு முகாமைத்துவ அறிவின்மை போன்ற பல விடயங்கள் சொறீலங்கா வீதி பொலிஸ்துறைக்குள் குவிந்து கிடப்பதும்.. குற்றங்களை செய்துவிட்டு லஞ்சப் பணம் கொடுத்து தப்பிச் செல்லும் நடைமுறைகள் குவிந்து கிடப்பதும்.. இனப்பாகுபாட்டு விதி அமுலாக்கங்கள் என்று ஒரு சீரற்ற அமைப்பாக சொறீலங்கா பொலிஸ் இருப்பது முக்கிய காரணம்.
  22. இந்த வானவில் கூட்டத்தின் தொல்லை வர வர அதிகரித்துக் கொண்டே போகுது. வீகன் போல இதுவும் தூண்டப்படுதலே அதிகம். இயற்கைக்கு மாறான வானவில் கூட்டத்தின் செயற்பாடு மீது பாப்பரசரின் விசனம் மட்டும் போதாது. வானவில் கூட்டத்தினரின் இருப்பு.. பெருக்கத்தை.. கிறிஸ்தவ மிசனரிகளில்.. முற்றாக தடை செய்ய வேண்டும். இனங்காணப்படும் வானவில் குற்றவாளிகளை மிசனரிகளில் இருந்து விரட்டி விடுவது நல்லது.
  23. எங்கு பார்த்தாலும் புட்டின் மயமாவே இருக்குது. ரம்ப் புட்டின் கையாள். பிரான்ஸ் தேசிய வாதிகள் புட்டின் கையாள். ஜேர்மன் தேசிய வாதிகள் புட்டின் கையாள். பிரிட்டனின் தேசிய வாதிகள் புட்டின் கையாள் (பிரக்சிட் டுடன் தேர்தலில் நிற்க மாட்டன் என்ற Nigel Farage, வேற பிரிட்டன் தேர்தலில் நிற்கிறார்) அவர் ஒருபடி மேல போய் ஹிட்லர் தொடர்பில் நடுநிலை அவசியம் என்று வேற சொல்லி இருக்கிறார்.
  24. ஏலவே கிரிமியா உள்ளிட்ட ரஷ்சிய இலக்குகளை குறிவைத்து மேற்குலக ஏவுகணைகளை உக்ரைன் ஏவி இருந்தது. ரஷ்சிய - உக்ரைன் எல்லையோர.. நகர்களை தாக்கியதன் விளைவே அண்மையில் ரஷ்சியா முன்னெடுத்த புதிய இராணுவ நகர்வு. முன்னர் கிவ் வரை நகர்ந்திருந்த ரஷ்சிய படைகள்..... உக்ரைன் மற்றும் மேற்குலகால் வழங்கப்பட்ட ரகசிய உடன்பாட்டின் கீழ் தான் தம்மை பின்னகர்த்திக் கொண்டன. இப்போ மீண்டும்.. ரஷ்சியாவை சீண்டுவதன் மூலம்.. உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தவே மேற்கு நாடுகள் முயல்கின்றன. இது உக்ரைனுக்கே பேரழிவாக அமையும். இது விளங்காத முட்டாளாக தன் சொந்த நாட்டையும் மக்களையும்.. மேற்குலகு வழங்கும் சுகபோகத்தை அனுபவிக்க உக்ரைனின் யூதக் கோமாளி சனாதிபதி பாவித்து வருகிறார். அவருக்கு வக்காளத்துக்கு அவர் பொண்டாட்டி வேற.
  25. நாம் தமிழர் வாங்கிய 8 சத வீதத்திற்கும் மேலான வாக்குகள் நாம் தமிழர் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய வாக்குகள். தி மு க.. காங்கிரஸ்.. விடுதலைச் சிறுத்தைகள்... பா ம க.. பா ஜ க.. அதிமுக.. தே மு திக கமலஹாசன் கட்சி.. சரத்குமார் கட்சி.. இவற்றின் வாக்கு சதவீதம் என்பது இவர்களுக்கான வாக்குகளால் மட்டும் வந்தவை அல்ல. கூட்டணிக்கு விழுந்த வாக்குகள். அப்படி நோக்கின்.. பா ஜ க.. காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளை விட நாம் தமிழரின் வாக்கு சதவீதம் அதிகம் எனலாம். அதேபோல் தி மு க வின் வாக்கு சதவீதம் என்பது கூட தி மு கவிற்கு தனித்து வீழ்ந்த வாக்குகள் என்பது அர்த்தமில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு சிறுகச் சிறுக வீழ்ந்த வாக்கு சதவீதங்களின் மொத்தமும் அதில் அடங்கும். ஆக நாம் தமிழர் தனித்துப் பெற்ற 8 சதவீதம் என்பது... உண்மையில்.. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிப் படியே. அதற்காக உழைத்த அண்ணன் சீமான்.. மற்றும் நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கே இந்தப் பெருமைகள் போய் சேர வேண்டும். எந்த இலவசங்கள்.. சலுகைகள் இன்றி.. அவர்களை நம்பி வாக்களித்த தமிழக வாக்காளர்கள் நன்றிக்குரியவர்கள் மட்டுமன்றி எதிர்காலத்தில் தாம் சார்ந்த எல்லோரையும் நாம் தமிழருக்கு வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில்.. தமிழகத்தில் ஒரு உருப்படியான தமிழராட்சி மலரவும்.. தமிழகம்.. முழு வளர்ச்சி அடையவும் இது தேவையாகும். நாம் தமிழர் பாசறையில் குவித்திருக்கும் அனுபவ முத்துக்களை தமிழக மக்கள் தம் முன்னேற்றத்திற்கு அணிகலனாக்கிக் கொள்ள வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.