Everything posted by nedukkalapoovan
-
துவாரகா உரையாற்றியதாக...
தலைவர் எங்காவது சொல்லி வைச்சாரா எனக்கு தனியா அஞ்சலி செய்யுங்கோ.. பனர் கட்டுங்கோ.. படையல் வையுங்கோன்னு..??! இதை எல்லாம் யாழ் அனுமதிச்சிருக்குது.. கடந்த காலங்களில். மேலும் முள்ளிவாய்க்கால்.. என்பது.. தலைவருக்கான அஞ்சலிக்குரிய இடம் மட்டுமல்ல.. பல்லாயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் கூட தியாகம் செய்த இடம். தலைவர் கூட நிச்சயமாக.. இந்த நாளை தனக்கான அஞ்சலி நாளாக கொள்ள இடமளித்திருக்கமாட்டார். மாவீரர் நாள் போல்.. பொதுவான ஒரு அஞ்சலி நிகழ்வு இனப்படுகொலை நினைவு நாளாகவே அது கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். எந்த ஒரு உண்மையான மக்கள் புரட்சியாளனும் இதை அதை செய்யச் சொல்லி செல்வதில்லை. தலைவரும் செய்யவில்லை. ஏனெனில்.. அவர்களின் வேணவா என்பது.. தமது மக்களுக்கான இலட்சியம் வெல்லப்படனும் என்பது தான். மேலும்.. இந்த நிழல்.. துவாரகாவை வைச்சு கழுவி உத்திறவை.. நிஜ துவாரகாவை தலைவர் போராளிகள் தவிர.. இயக்கம் பொதுவெளியில் அறிமுகம் செய்ததாகத் தெரியவில்லை. தலைவரின் பாரியார் மட்டுமே சில நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். அப்படி இருக்க.. ஏன்.. இவை நிழல் துவாரகா மீது அநாவசிய கவனம் செலுத்தினம். வேற செயலுக்கு பற்றாக்குறையா.. இல்லை.. நிழலை வைச்சு... நிஜத்தை நிந்திக்கினமா..??! நிஜமே.. நிழலோ.. சொல்ல வந்த சேதியை.. இங்கு கருத்திட்ட எவரும் அலசவில்லை. வெளியில் உள்ளவையும் அலசவில்லை என்பது.. இவர்களின் அறிவுத்திறனை.. செயல் திறனை அப்பட்டமாக இனங்காட்டி விட்டது. இவர்களால்.. இனத்தின் விடிவுக்கான பயணம்.. காத தூரம் கூட நகராது.
-
துவாரகா உரையாற்றியதாக...
தூவாரகாவின் மீள்வருகை... கொள்கை அளவில் பல செய்திகளை காவி வந்துள்ளது. இது துவாரகாவை வைச்சு தமிழர்களின் ஒற்றுமையை.. உளப்பாங்கை கண்டறிய நடத்திய இந்த தேர்வில்.. 1. தமிழர்களில் ஒரு பகுதி.. சாதாரணமாகக் கடந்து போய் மாவீரர்களுக்கான..தன் கடமையை செய்துவிட்டது. 2.இன்னொரு பகுதி.. ஆளையாளுக்கு துவாரகாவின் நிழலுக்கு பொய் சாயம் பூசுவதில் குறி. மாவீரர் நாளையே மறந்துவிட்டது. இந்தக் கூட்டம் எப்பவுமே இப்படித்தான். இதனால்.. தானும் குழம்பி தன் சார்ந்த கூட்டத்தையும் குழப்புவதே குறி. 3. சிங்களத்திற்கு உள்ளூர ஓர் அச்சம். பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே மிஞ்சி இருக்கக் கூடாது என்ற நிலையில் நிழல் துவாரகா மீளவும் தமிழர்களிடம் பிரபாகரனிசத்துக்கு உயிர் கொடுத்திடுமோ என்ற பயம். 4. ஹிந்தியாவுக்கு மாவீரர் தினத்தின் கனத்தை குறைப்பதில் குறி. ஆனால்.. தமிழ் மக்களின் உள்ளுணர்வோடு கலந்திட்ட மாவீரர்கள் தொடர்பில் அதன் கணக்கு மீண்டும் பிழைத்துவிட்டது. 5. மேற்குலகிற்கு.. இதெல்லாம் ஒரு பெரிய கவனத்தில் கொள்ளத்தக்க தமக்கு ஆதாயமான மாட்டரே இல்லை. 6. தமிழகத்தில் இரண்டும் கெட்டான் கூட்டம் ஆதிக்கம். இன்னும் ஈழத்தமிழர்களின் தேவைகள் குறித்த தெளிவில்லை. 7. கோட்பாட்டு ரீதியில்.. நிழல் துவாரகாவின் வருகை என்பது பலருக்கு வயிற்றில் புளியை கரைத்தது உண்மை. அதில்... பிரபாகரன் போர்களத்தில் இருந்த போது காட்டிக்கொடுத்து பிழைத்த கூட்டம் கூட.. துவாரகாவை வைச்சு உண்டியல் குலுக்கிற பிரச்சாரத்திற்கு முண்டு கொடுத்திருக்குது. பிரபாகரன் இருந்த போது ஒரு சதத்தைக் கூட மண்மீட்புக்கு கொடுக்காத கூட்டம்.. இப்போ நீலிக்கண்ணீர் வடிக்குது. 8. துவாரகாவை முன்னிறுத்திய இந்த மாவீரர் தினம்.. நிச்சயம் வழமையை மாற்றிவிட்டுள்ளது.. என்றால் மிகையல்ல. 9. தத்துவப் பித்துக்கள்.. முடியை பிய்த்துக் கொண்டு அலசி ஆராய்கிறார்கள். இதுகள் கடந்த 14 ஆண்டுகளாக.. தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக.. சிந்திக்க மண்டையை பாவிச்சதே இல்லை. 10. தமிழ் தேசிய தாயகக் கட்சிகள். மெளனமாக கடந்து போகப் பிரியப்பட்டுள்ளனர். காரணம்.. இதனை தமது எதிர்காலத்துக்கு முதலீடாக்கலாமா என்ற கோணத்தில்.. சிந்தித்துக் கொண்டிருக்கினம். 11. சர்வதேச சமூக ஊடகங்கள்.. சீன ஊடகங்கள்.. வியாபாரத்தில் குறி. மேற்குலக ஊடகங்கள்.. இரண்டும் கெட்டான் நிலை. 12. யதார்த்தமாக.. நிழல் துவாரகா.. நிஜ துவாரகாவை விட சாதித்து விட்டது... அதிகம்.
-
துவாரகா உரையாற்றியதாக...
அப்போ.. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மட்டும் தலைவருக்கு படையல்.. பனர் கட்ட யாழ் அனுமதிப்பது மட்டும்.. அவமானப்படுத்தல் இல்லையோ..??! முள்ளிவாய்க்காலில் மாண்டவர்களில் மக்கள் போராளிகள் என்று பலர் உள்ள போது தலைவரை முன்னிலைப்படுத்துவதன் நோக்கம்..?! தமிழ் மக்களை தொடர்ந்து சோர்வில் வைச்சிருக்கும் எதிரிகளின் தேவைகளுக்காகவா..??!
-
துவாரகா உரையாற்றியதாக...
அப்ப தலைவர் இரண்டு நாள் இறந்தவரோ.. மேலும் தலைவர் மற்றும் அவர் குடும்பம் மாவீரர் இல்லையோ..??!
-
துவாரகா உரையாற்றியதாக...
எம் எஸ் என் காலத்துக் கிழடுகளின் அறுவல் தாங்க முடியவில்லை. ஏதோ ஆனையிறவு அடிச்சு விழுத்தின கணக்கா சிலரில் அலப்பறை ரெம்ப ஓவர். இத்தனைக்கும் களத்தில் ஒரு துரும்பைதானும் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக இவர்கள் நகர்த்தியதில்லை. இந்த தலைப்புக்குரிய துவாரகாவை இங்கும் யாரும் நிஜம் என்றோ.. போலி என்றோ நிறுவ நிற்கவில்லை. அதேபோல்.. இங்குள்ளவர்களினதும்.. வெளியில் உள்ளவர்களினதும் சொல்லால் நிறுவச் சொல்லவில்லை. எது நிஜம் எது நிழல் என்பது எல்லா பாமர ஈழத்தமிழனுக்கும் தெரிந்ததே. இன்றைய தேவை எம் தேசத்தின் விடுதலையும் மாவீரர் கனவை நனவாக்க உழைப்பதுவே. அதற்கு தேவை ஒற்றுமை.. ஒத்துழைப்பு. அதையேன் நாசமாக்குகிறார்கள் இன்னும் இன்னும். பல இளையோர் அமைப்புக்கள்.. எவ்வளவோ காரியங்களை நாட்டுக்காக ஆற்றிக் கொண்டிருக்கினம்.. புலம்பெயர் நாடுகளிலும் சரி.. தாயகத்திலும் சரி. அவர்கள் யாரும் இந்த சலசலப்புக்கு ஆடினதா தெரியவில்லை. ஆனால்.. இங்கு சிலர்.. தங்களை தாங்கள் முதுகு சொறிய இதனைப் பயன்படுத்தி.. மாவீரர் நாளை இழிவுபடுத்தி விட்டுடிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை அவர்களே அறிவார்கள். மற்றவர்களும் அறிவார்கள். உலகில் உள்ள சாத்தியமான எல்லா வடிவங்களினூடும் எமது போராட்டம் முன்னெடுக்கப்படுவதில் இளையோரும் மற்றோரும் தொடர்ந்து இயங்குவது மிக முக்கியம். குறிப்பாக நவீனமயமாக்கலை உள்வாங்கி. எதிரிகளின் நவீனமயமாக்கலை முறியடிக்கக் கூடிய வகையிலும் எதிரியை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியதுமாகவும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மை தரக்கூடியதுமாக இருந்தால்.. அதனை பரீட்சித்துப் பார்ப்பதில் தவறில்லை.
-
துவாரகா உரையாற்றியதாக...
நிச்சமாக.. அவர்கள் உயிரோடு இருந்தாலோ இல்லையோ.. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு வரமாட்டார்கள். ஊக்குவிக்கவும் மாட்டார்கள். அதற்கான பூகோள ஏதுநிலைகளும் இல்லை. அரசியலில் குதிக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில்.. தலைவர் போராட்ட களத்தில் இருந்த போதே தேடி வந்த பதவிகளை உதறித்தள்ளிவிட்டு கொண்ட இலட்சியத்துகாக போராடிக் கொண்டிருந்தவர். தலைவர் இருக்கிறாரோ இல்லையோ.. அவர் சுமந்த இலட்சியம் வாழ்ந்து கொண்டு தான் இருக்குது. அது.. தலைவரின் அயலவரான..தாயகத்தில் வாழும்.. மாவீரர் ஒருவரின் அம்மாவின் கருத்தில் கூட தொனித்தது.
-
துவாரகா உரையாற்றியதாக...
சொறீலங்கா.. ஹிந்தியா கேட்டிருக்கலாம். உள்ள உதவாக்கரை வீடியோக்கள் எல்லாம் யு ரி யுப்பில் அதன் சொற்படிக்கு கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் போது.. இது மட்டும் இவ்வளவு விரைவாக காணாமல் போயிருக்கு என்றால்.. கூகிள் ஆண்டவருக்கே வெளிச்சம். உங்கடை கதையப் பார்த்தால்.. நாங்கள் எல்லாம்.. லெனின்.. சேகுவரா காலத்து ஆக்கள் போலவும்.. அவர்கள் காலத்தில் கூட வாழ்ந்த ஆக்கள் போலவும் எல்லோ இருக்கு. வரலாறை உள்ளபடி அறியும் ஆர்வம் ஒன்றே எம்மை இயக்கிக் கொண்டிருக்குது. வயதோ.. வசதியோ.. தனிப்பட்ட தேவைகளோ அல்ல.
-
துவாரகா உரையாற்றியதாக...
ஹிந்தியாவின்.. சீனாவின்.. மேற்குலகின்.. ரஷ்சியாவின் தேவைகளோடு சேர்ந்து நாம் ஓடாவிட்டால்.. இலக்கை அடைவது இலகு அல்ல. எமது பூகோள அரசியல் ராஜதந்திரப் பலவீனமே.. முள்ளிவாய்க்கால் மெளனம். இதனை தெளிவாகச் சொல்கிறது பேச்சு. அதனை இன்னும் இனம்காணாமல்.. ஒட்டினால்.. ஒன்றில் ஹிந்தியா.. இல்ல சிங்களம் என்று காலம் கடத்துவோமாக இருந்தால்.. எம் மாவீரர்களின் கனவு நனவாக இன்னும் பல சதாப்தங்கள் தேவைப்படும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
தனிமனித மரணங்கள்.. ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் என்றால்.. பல தேசிய இனங்கள் இன்று விடுதலை அடைந்திருக்க முடியாது. இதே துவாரகாவும் சாள்ஸ் அன்ரனியும்.. 1987 இல் யாழில் ஹிந்திய சுற்றிவளைப்புக்குள் வந்த போதே.. இறக்க வேண்டியவர்கள். அதே தான் தலைவருக்கும். தலைவர் சாகடிக்கவும் பட்டார். நீங்கள் அப்போது இருந்திருந்தால்.. அப்பவே தலைவரை சாகடித்தவர்கள் அணியில் இருந்து கொண்டிருப்பீர்கள். எங்களைப் பொறுத்தவரை.. தேசிய தலைவர் கொல்லப்பட முடியாதவர். அவர் கொள்கைகள்.. இலட்சியங்கள்.. எப்போதும்.. வழிகாட்டியாக இருக்கும். நேற்றுக் கூட ஒரு சிங்களவர் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில்.. தலைவரின் கொள்கைகள் தனக்குப் பிடிக்கும் என்று சொல்கிறார்.. ரோகண விஜயவீர தமக்குப்போராடியது போல என்று ஒப்பிடுகிறார். ஆனால்.. நாம்.. தலைவரின் பெளதீக இருப்பை எதிர்பார்த்து அவரின் இலட்சியங்களை குழிதோண்டிப் புதைக்க முனையும் கூட்டங்களின் எதிரிகளின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம். இது தான் தலைவரை சாகடிப்பதற்கு நிகர். இது பழைய பல்லவி அல்ல. கடந்து வந்த வரலாறு. இப்பவும் சீமான் அண்ணாவை முன்னால் தள்ளி விட்டிட்டு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். துவாரகா நகலா.. நிஜமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள். இது.. தமிழீழத்துக்கு எந்த வகையில்.. உதவும்.. என்று சொன்னால் உங்கள்.. புதிய.. புரட்சிகர வழியை நல்வழி என்று இனங்காட்ட உதவியாக இருக்கும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
நாங்கள் தலைவரை சாகடிச்சு அவர் முன்னெடுத்த மக்களுக்கான இலட்சியங்களை கொன்றொழித்து எதிரிகளுக்கு துணை போக.. எப்போதும் விரும்பியதில்லை. சாத்திரியார் தலைவருக்கு படையல் வைச்ச போது.. அதை எதிர்த்ததில் தாங்களும் அடக்கம்.. நாங்களும் அடக்கம்.
-
துவாரகா உரையாற்றியதாக...
1987: பிரபாகரன் வன்னிகாட்டில் கொல்லப்பட்டார். (ஹிந்தியா) 1988: பிரபாகரன் செத்துப்போட்டார். (அநேக ஈழத்தமிழர்கள்.) 1989: தமிழக தலைவர்கள் ஊடகவியலாளர்கள்.. சிலர் பிரபாகரனை சந்திப்பு (டூப்பா இருக்கும்.. நம்மவர்கள்) 1990: மாத்தையா தான் இயக்கத்தை வழிநடத்திறார். பிரபாகரன் கதை முடிஞ்சுது. (நம்மவர்களும்.. எதிரிகளும் கிசு கிசு) 1992: மாவீரர் நாள் உரையோடு தலைவர் சாவகச்சேரியில் பிரச்சன்னம். (இது உண்மையான பிரபாகரனா இருக்குமா.. அப்பவும் நம்மவர்கள் பொய்யை விட்டுவிடாமல்.. விரட்டிக்கொண்டிருந்தனர்.) ஆனால்.. இலட்சிய வேங்கைகளும் இலட்சிய வேட்கை கொண்ட மக்களும்.. இதில் காலத்தைக் கழிக்கவில்லை. பெரும் புலிப்படையை உருவாக்கி வரியுடையோடு களமிறக்கினார்கள். தமிழீழ தேசம் எங்கும் புலிக்கொடி பறந்த காலம் அதுவானது.
-
துவாரகா உரையாற்றியதாக...
ஒரு சாதாரண கேள்வி.. இம்முறை.. தலைவருக்கு ஏன் யாழ் களம் அஞ்சலி செய்யவில்லை. கடந்த காலங்களில் முரண்பாடுகளுக்கு மத்தியிலும்.. செய்யதே..???! எங்களைப் பொறுத்தவரை எதிரி தன் சார் நோக்கங்களோடு தெரிந்தெடுத்து.. வெளியிட்ட எந்த ஆதாரத்தையும் நம்பத் தயார் இல்லை. ஏனெனில்.. நாம் பல்வேறு எதிரிகளின் நோக்கங்களை அவை சார்ந்த செயற்பாடுகளை தாண்டி வந்தவர்கள்.
-
துவாரகா உரையாற்றியதாக...
நிறுவத் துடிப்பவர்கள்.. கடந்த 14 ஆண்டுகளாக என்னத்தை வெட்டிக்கிழிச்சிச்சினம்..??! பொய்களை புரட்டுகளை தாண்டி வந்த நாமே பொய்க்காக.. மெய்யை மறப்பது மழுங்கடிப்பது நியாயமில்லை. 1987 இல் கொல்லப்பட்ட பிரபாகரன்.. இன்னும் பல பேருக்கு.. கொல்லப்பட்டவராகவே தான் இருக்கிறார். ஏன் புட்டினை கூட கொன்று.. இப்போ.. நிழலை உலாவிட்டிருக்காங்களாம்.. இப்படி ஒரு கதை மேற்குலகிடம் இருக்குது. பொய்யை பொய்யென நிறுவ முனைந்து காலத்தை வீணடிப்பதிலும் மெய்யின் பால்.. நிஜத் தேவைகளை நிறைவு செய்ய அந்தக் காலத்தைப் பாவிப்பதே புத்திசாலித்தனம். செயற்கை நுண்ணறிவையும் எமது விடுதலைக்காகப் பயன்படுத்த முடியும் என்றால் அதைச் செய்ய தயங்கத் தேவையில்லை. ஏனெனில்.. உலக வல்லரசுகளே அதை செய்ய எப்பவோ ஆரம்பித்துவிட்டன.
-
துவாரகா உரையாற்றியதாக...
மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டிய யாழ் களம்.. துவாரகா உண்மையா பொய்யா என்று அடிபடுவதிலும் வீழ்ந்து போன மறவர்களின் எதிரிவெளியிட்ட ஒளிப்படங்களை மீளவும் தரவேற்றியும்..தங்களின் வாதப் பிரதிவாதங்கள் எடுபட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில்.. தீவிரமாக இருக்குது. நல்ல வழிநடத்தல். தமிழீழத் தாயகக் கனவோடு தம் இன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம். உண்மையில் தாயக மக்கள் மிகத் தெளிவாக ஆற்ற வேண்டிய கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து தம் பிள்ளைகளுக்கு சகோதர சகோதரிகளுக்கு மாமா மாமிகளுக்கு அஞ்சலி செய்திருக்கிறார்கள். அந்த மக்களிடம் உள்ள தெளிவு.. யாழ் களத்திடம் கூட இல்லாமல் போனது கேவலம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஷ்சியாவும் இஸ்ரேலும் ஒன்றா..??! ரஷ்சியா இரண்டு உலக யுத்தங்களையும்... ஒரு பனிப்போரையும் பல பிராந்திய ஆக்கிரமிப்பு அழுத்தங்களையும் எதிர் நோக்கிய.. நோக்கும் தேசம். அதனை நோக்கி.. அமெரிக்கா.. மற்றும் நேட்டோ நாடுகள் அணு ஏவுகணைகளை நிலை நிறுத்தியுள்ள நிலையில்.. ரஷ்சியா தனது அணு ஆயுத திறனை எல்லா வகையிலும் அதிகரிக்க வேண்டியது கட்டாயம். ஆனாலும் ரஷ்சியா.. எதிரிகள் பாவிக்க எத்தனிக்காத பட்சத்தில் அணு ஆயுதங்களை பாவிக்காது என்று அறிவித்தும் விட்டது. இஸ்ரேலுக்கு எதிராக.. பலஸ்தீன மக்கள் அணு ஏவுகணைகளை நிலை நிறுத்தியா வைச்சிருக்கினம். 1970 களில் பிறந்த எப் 16 விமானங்களைக் கூட சுட்டுவீழ்த்தி தமது மக்களை வளங்களை பாதுகாக்க முடியாதிருக்கும் அந்த மக்கள் கூட்டம் மீது அணுகுண்டு வீசுவேன் என்று கூவுவது.. போன்ற கொடுமை வேறில்லை. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதும்.. ரஷ்சியாவிடம் இருப்பதும் ஒன்றல்ல. இஸ்ரேல்.. சிறிய பலவீனமான மக்கள் குழுமங்களைக் கூட அணுகுண்டு வீசி அழிக்கக் கூடிய கொடிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு மோசமான பயங்கரவாத நாடு என்றால் மிகையல்ல. அதனிடம் அணு ஆயுதங்கள் இருப்பது ஒட்டுமொத்த உலகிற்கும் ஆபத்தாகும்.!!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்தக் கொடியவனின் கருத்தை வாசிக்கும் போது ஹிட்லர் இவர்களை ஒரு வழி பண்ணியிராவிட்டால்.. இன்று உலகின் நிலையை எண்ணிப் பார்க்க.. பயங்கரமாக இருக்குது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
சுதந்திரத்தை தேடி வரவில்லை.. பொருளாதாரத்தை தேடி வருகிறார்கள். மேற்குலக வெள்ளைகளுக்கு.. கூலிகள் தேவை என்பதால்... வரவேற்கிறார்கள். முன்னர் அடிமைகளாக் கொண்டு வந்தார்கள்.. இப்போ நவீன அடிமைக் கூலிகளாக வரவேற்கிறார்கள். ரஷ்சியாவில்.. துருக்கியர்கள்.. வடகொரியர்கள்.. ஹிந்தியர்கள்.. ஏன் சிங்களவர்கள் என்று வேலை செய்து உழைத்து விட்டு தாயகம் திருப்புவோர் பலர் உளர். தமிழர்களுக்கு.. நான் வெளிநாட்டுக்காரன்.. என்று வெட்டிப் பெருமை பேச வேண்டும் என்பதால்.. இது சரிப்பட்டு வருவதில்லை. ரஷ்சியா.. வேலைக்கு ஊதியம் கொடுக்கிறது.. மேற்குலகு செட்டில்மென்ட் என்ற பெயரில்.. நிரந்தக் கூலி அடிமைகளை தனக்கு வரி செலுத்தும் அடிமைகளை வரவழைத்து தக்க வைத்துக் கொள்கிறது. அண்மையில்.. பிரித்தானிய பிரதமர் சொன்னாரே.. கூடிய அளவு வெளிநாட்டுக் கூலிகளை வரவேற்போம்.. அப்போ தான் வரியும்.. விசாப் பணமும் குவியும் என்று. இதுதான் வரவேற்பின்.. சுதந்திரத்தின் தார்ப்பரியம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஓ.. அப்படியா.. அப்போ.. ஈராக்கில் சதாம் குசைனிடம்.. இரசாயன ஆயுதங்கள் இல்லை என்று அறிக்கை தந்த.. பிரித்தானிய பேராசிரியரை போட்டு தள்ளினதும்.. சர்வாதிகாரத்துக்க வரும் என்றால்... சரி. மேற்குலகின் சுதந்திரத்தை நன்கு விளங்கிக் கொள்ள வசதியாக இருக்கும். 🤣
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் கோமாளியரின் நிலை அந்தோ பரிதாபம் ஆகிவிட்டது. அவர் இன்று இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த சதாம் குசைன் எப்படி அமெரிக்காவால்... பழிவாங்கப்பட்டாரோ.. அதே நிலை இந்த கோமாளிக்கும் வரும். இதனை எப்பவோ.. சொல்லிட்டம். இப்ப திருப்பிச் சொல்லுறம். The Israel-Gaza war is "taking away the focus" from the conflict in Ukraine, the country's President Volodymyr Zelensky has admitted. Ukraine's counter-offensive in the south has so far made little headway. This has prompted fears of war fatigue among Kyiv's Western allies, with suggestions of growing reluctance in some capitals to continue giving Ukraine advanced weapons and funds. https://www.bbc.co.uk/news/world-europe-67321777 தோக்குற குதிரையில பணம் கட்ட அமெரிக்கனும்.. மேற்குலக எஜமானர்களும்.. எப்பவும் தலையாட்டுவினமோ.. உக்ரைன் புலிக்கேசியாரே.
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் தங்கையே. கண்ணீரஞ்சலியும். தாயை.. சகோதரத்தை இழந்து தவித்தது காணாதென்று.. தந்தையும் விடைபெற்றது கொடுமை. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகளும்.
-
திண்ணை
ஏன் முஸ்லிம் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இனவாதம் எல்லாத்தையும் மிஞ்சிக் கொண்டு போவது தெரியவில்லைப் போலும். அதுசரி.. தங்கள் முதுகின் ஊத்தை அவைக்குத் தெரியாது தானே. ------------- திண்ணையை திறந்து விட்டது நல்லம். முன்னரும் ஒரு தடவை இப்படி திறந்து விட்டு பின் மூடியதாக ஞாபகம்.
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
குழுவாதம் அப்படியே தான் இருக்குது.. என்பதற்கு பச்சை புள்ளிப் பட்டியல் சாட்சி. என்ன இப்ப குழு மாறி குழு பச்சை போட்டு மகிழுது. மொத்தத்தில்.. இந்தப் பச்சை சிவப்பை முற்றாக அகற்றி விடுவது நல்லது. தம் அப்.. தம் டவுன் மட்டும் விடலாம். கணக்கு.. பட்டியல் இவற்றையும் இல்லாமல் செய்தால்.. குழு வாதத்திற்கு.. குழு பச்சை குத்தலுக்கு இன்னும் தேவையே இல்லாமல் போகும். முதுகு சொறிவதும் இல்லாமல் போகும்.
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
மோகன் அண்ணா தங்களை இங்கு காண்பது மிக்க மகிழ்ச்சி. தாங்களும் தங்கள் குடும்பமும் நலமே என்று நம்புகிறோம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மையில் இஸ்ரேலின் நோக்கம் பலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வது என்பது தான். என்ன மகிந்த ராஜபக்ச போன்ற இனப்படுகொலையாளர்களின்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் ஆதரவையும் வைச்சுக் கொண்டிருப்பதன் மூலம்.. பலஸ்தீனர்கள் தங்களை தாங்களே பயங்கரவாதிகளாக முத்திரையிட உதவுவது தான் அவர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையையை தடுக்க முடியாத அளவுக்கு.. இஸ்ரேலின் எல்லா பயங்கரவாதத்தையும் ஆதரிக்கும்..அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளை தவிர.. மற்றைய உலக நாடுகளையும் தடுத்து வைத்துள்ளது. இது முன்னைய பலஸ்தீன தலைவர்களின் தவறான கொள்கைகளால் வந்த விளைவு. குறிப்பாக மேற்கு கரையில் இருக்கும் பலஸ்தீன அதிகார சபையில் இருப்போரின் தவறான அணுகுமுறையின் விளைவு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
# பிரித்தானியாவில் பிரதான நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டம். இஸ்ரேலின் பலஸ்தீன மக்கள் மீதான.. மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக கோசம். https://www.aljazeera.com/news/liveblog/2023/10/13/israel-hamas-live-dozens-killed-while-fleeing-to-southern-gaza