Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. சீனாவில இருந்து பெற்றோல்.. பாகிஸ்தானில இருந்து உருளைக்கிழங்கு.. மாம்பழம்.. ஹிந்தியாவில இருந்து முட்டை.. வெங்காயம். அப்ப நாட்டில என்னத்தை தான் உற்பத்தி பண்ணுறியள்..??! யாழ்ப்பாணத்தில் போர் காலத்தில் கூட உருளைக்கிழங்கு.. உள்ளூரில விளைஞ்சது. இப்ப பாகிஸ்தான் உருளைக்கிழங்கு விக்கினம். போர் காலத்தில வித்த உள்ளூர் கருவாடு போய்.. இப்ப இந்தோனிசியா.. தாய்லாந்தில் இருந்து கருவாடு யாழ்ப்பாணத்திற்கு வருகுது..??! இந்தக் கொடுமைகளை என்னென்பது..?! சொறீலங்கா சின்ன வெங்காயம்.. கண் எரியுமாமில்ல... பெரிய வெங்காயம் தானாம் வேணும். இது நான் சொல்லேல்ல.. யாழ்ப்பாணப் பெண்டிர் பேசிக் கொண்டதில் இருந்து.
  2. பாவம்.. பழிக்கடா ஆகிட்டார். ஆனால் பங்கு போட்டுக் கொண்ட மிச்சப் பேர்.. எஸ்கேப். மகிந்த குடும்பம் உட்பட. ஏனெனில்.. அணிலார் அவையள்ள கை வைக்க விடமாட்டார். எல்லாம் ஒரு புரிந்துணர்வு தான். 😛
  3. மலேசியா.. மத்திய கிழக்கு.. இந்த விசயத்தில் எப்பவோ எல்லைகளை திறந்துவிட்டு.. இப்போ கல்வியில் நன்கு முன்னேறிப் போய்விட்டன. இவைக்கு இப்பதான் விடிஞ்சிருக்குது. அதுகும்.. என்ன சுயலாபத்துக்கோ..??!
  4. ஊரில இப்ப எல்லாரும் சட்டம் படிக்கினம். ஏனென்றால்.. இதுக்குத்தான்.. சொந்த இனத்துக்குள்.. குடும்பத்துக்குள்.. ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்க.. முதுகில குத்த. ஆனால்.. தமிழனை இனப்படுகொலை.. செய்த.. சிங்களவனை.. சர்வதேச நீதி விசாரணைக்கு உட்படுத்த விடமாட்டினம். இதுக்குத்தான் இவை இவ்வளவு தீவிரமா சட்டம் படிக்கினம்.
  5. விழுந்தும் மீசையில் மயிர் ஒட்டாத அறிக்கை தான் இது. இவரின் இயலாமை.. தோல்வியை இவரே ஒத்துக்கொண்டதாக அமைகிறது.. அறிக்கை. குறிப்பாக..
  6. இவை தான்.. ஒவ்வொரு.. தீபாவளிக்கு.. பொங்கலுக்கு தமிழருக்கு தீர்வு வேண்டித் தரப்போகினம்.
  7. இதன் தாக்கத்தை சிங்களப் படை ஆக்கிரமிப்பு தமிழர் தேசத்திலும் அவதானிக்க முடிக்கிறது. பெரும் பணச் செலவில்.. அமைக்கப்பட்டிருந்த.. சொகுசு விடுதிகளுடன்.. பூங்காக்கள்.. தடாகங்களுடன்... மைதானங்களுடன் அமைக்கப்பட்ட இராணுவ தலைமையகங்கள் எல்லாம் வெறிச்சோடிப் போயுள்ளன. இவங்கள் இவ்வளவு வசதிகளையும் விட்டிட்டு போவாங்களா.. என்று அங்கலாய்த்த மக்கள்.. இந்த வெறிச்சோடிப் போன ஆக்கிரமிப்பு வளாகங்களை அண்டிய காணிகளில் இம்முறை நெல் மற்றும் தமது விவசாய நடவடிக்கைகளை செய்துள்ளமை அவதானிக்கப்படக் கூடியதாக இருக்குது.
  8. ஹரிகரனின் இசை நிகழ்ச்சிகள் சர்ச்சைக்கு உள்ளாவது இது முதற்தடவை அல்ல. அதேபோல்... கொழும்பில்.. சுகதாசவில் எல்லாம் நல்லப்படியா நடந்து முடிஞ்சதாகவும் இல்லை. அங்கும் சல சலப்புக்கள் நிகழ்ந்த சம்பவங்கள் உண்டு. யாழ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்புக்கு.. நிகழ்ச்சியை ஒழுங்கமைத்தவர்கள்.. செய்த தவறுகளே அதிகம். மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைச்சிருக்கக் கூடிய எந்த ஒழுங்குகளும் இன்றி.. இசை நிகழ்ச்சியை குறைந்த பாதுகாப்புச் செலவில் கூடிய வருவாய் நோக்கில் நடத்த முனைந்தது அப்பட்டமாக தெரிகிறது. மேலும்.. இந்த நிகழ்ச்சியை குழப்ப அல்லது குழப்பி அடிச்சு அதில் ஆதாயம்.. கவனயீர்ப்புப் பெற மேலும் சிலர் பின்னணியில் இருந்து காவாலிகளை இயக்கி இருக்கலாம். இதில் தாடிக்காரக் குத்தியர் எதற்கு முந்திரிக்கொட்டை கணக்காய் அறிக்கைவிட்டவர். அவருக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கும் என்ன தொடர்ப்பு..?! ஒருவேளை தன்னை பிரதம விருந்தினராக அழைத்து தாமன்னாவுக்கு பக்கத்தில் இருந்தவில்லை என்ற கோபமோ என்னவோ..??! இது முழுக்க முழுக்க தனியார்.. தங்களின் வருமானத்துக்காக நிகழ்த்திய நிகழ்வு. இதற்கும் யாழ் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த தனியார் நிகழ்வை ஒருங்காக ஒழுங்கமைக்காமை தான் தவறுகளுக்கு முழுக்காரணமே தவிர.. மக்களை இளைஞர்களை குறை சொல்லி பிரயோசனமில்லை. சில இளைஞர்கள் வெளியார் தூண்டலில் செயற்பட்டிருந்தாலும் கூட. இந்த நிகழ்ச்சி தவறுகளுக்கு இந்திரன் - ரம்பா - கலா மாஸ்டர் உள்ளிட்ட மற்றும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கமைத்த முஸ்லிம் நபர் உட்பட ஆக்களே.. இதற்கு முக்கிய பொறுப்பு. அவர்களின் அனுபவமின்மை.. சரியான திட்டமிடலின்மையே.. இந்த நிகழ்ச்சி தோல்வியில் முடியக் காரணம்.
  9. இந்த இசை நிகழ்ச்சியை பல மில்லியன் செலவு செய்து ஒழுங்கு செய்தது.. இந்திரன் (நடிகை ரம்பாவின் கணவர்). காரணம்.. தான் அமைத்த நொதேர்ன் யுனி க்கு புரமோசனுக்கு. இவர் வெளியில் சொல்வது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்குவதாக.. ஆனால்.. இவரின் யுனியில் முதுமானிப் பட்டங்களுக்கான கல்வி தான் வழங்கப்படுகிறது தற்போது. அதற்காக அறவிடப்படும் பணம்.. இலங்கையின் இதர அரச சார் பல்கலைக்கழகங்களில் அறவிடப்படும் தொகையிலும் அதிகம்.மேலும் இவரின் யுனியில் கல்வி கற்பிப்பது.. 90% தென்னிலங்கை பேராசிரியர்களும்.. விரிவுரையாளர்களும். ஆக.. கல்வி தமிழர்களின் முதலீடு என்று தெரிந்து.. அதில் முதலிட்டு இலாபம் ஈட்டுவதற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்வே இது. தனது மனைவிக்கிருந்த செல்வாக்கை.. இதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார் அவ்வளவே. இதில்.. தமிழர்கள் பெருமைப்பட எதுவும் இல்லை. இசை நிகழ்ச்சிக்கு போனாமா.. ரசிச்சமா என்றுவிட்டுப் போக வேண்டியான். அந்தச் சந்தர்ப்பத்தை பாவிப்பது தவறாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக நடிகைகளோடு.. கலைஞர்களோடு காசு கொடுத்து படமெடுக்கனும் என்பதை எல்லாம் ஒரு அறிவார்ந்த மக்கள் கூட்டமாக யாழ்ப்பாண கலாரசிகர்கள் செய்ய மாட்டினம் என்று நம்புவோமாக.
  10. கொழும்பில் கூட சாதாரண சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இதனை கொண்டாட வேண்டும் என்று செயற்படவில்லை. விடுமுறை நாளில் சுதந்திர தினம் வந்த போதும் மக்கள் தங்கள் அன்றாடக் கடமைகளை செய்யதனரே தவிர... இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபாடு காட்டவில்லை. வழமையை விட சிங்கள தேசியக் கொடி குறைவாகவே பறக்கவிடப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் மட்டும் காலிமுகத்திடலில்.. அநாவசிய செலவு செய்து கொண்டாட்டம் செய்வதாக சிங்கள மக்களே ஆதங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. அதிலும்.. பரசூட் வேடிக்கை காட்டப் போய் வினையானது தான் மிச்சம். உவர் வீரசேகரவுக்கு மூன்று வேளையும் சாப்பாடு ஒழுங்கா விழுகுது போல. ஆனால்..மக்கள் காலை உணவை தவிர்த்து 100 ரூபா பார்சலுக்கு மதியம் காத்துக்குக் கிடப்பதை காண முடிகிறது. இரவுச் சாப்பாட்டுக்கும் மக்கள்.. மலிவு விலை இடியப்பம்.. கொத்து வாங்க ஆட்டோக்களில் உணவு கொண்டு வந்து விற்கும் ஆட்களிடம் வரிசை கட்டுகின்றனர். இது கொழும்பில் சாதாரண குறைந்த நடுத்தர வருமானமுள்ள மக்களின் நிலை. மற்றும்படி.. வெளிநாட்டுப் பயணிகளை தவிர.. உள்நாட்டு மக்களை கே எப் சி.. மக்டொலாட்... பேர்கர் கிங்.. பிசா கட் இவற்றில் பார்ப்பது கொழும்பில்... குறைந்திருக்கிறது. வெகு சிலர் தான் வந்து போகின்றனர்.
  11. இவை இரண்டு பேரும்.. தனிப்பட்ட விடயம் காரணமாக குற்றச்சாட்டுக்களை வைக்கினம் என்றே தோன்றுகிறது. இலங்கையில் உள்ள ஏஜென்டுக்கோ.. கனடாவில் உள்ள ஏஜென்டுக்கோ.. இவர் கொடும்மால்.. எப்படி இவரின் தொலைபேசி இலக்கம் உட்பட விபரங்கள் போய் சேர்ந்தது...???! தன்ரை நம்பர மாறிக் கொடுத்திட்டினமாம்.. அப்ப கனடாவில் உள்ள மச்சான் தான் கொடுத்திருக்கிறார்..?! அப்புறம் என்ன.. ஏஜென்சி காரனுக்கு ஏச்சு..??!
  12. அமெரிக்கா.. மத்திய கிழக்கு எங்கும் தனது இராணுவ பிரசன்னத்தை வைச்சிருக்குது. அண்மையில் அபுடாபி விமான நிலையம் போனப்போ.. அங்கு சர்வதேச விமான நிலையத்தை அண்டி அமெரிக்க விமானப்படை விமானங்கள் அடுக்கி விடப்பட்டுள்ளதுடன் அடிக்கடி பறப்புகளில் ஈடுபட்டத்தை அவதானிக்க முடிகிறது. வட அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு நாட்டுக்கு மத்திய கிழக்கில் என்ன வேலை. அமெரிக்கா ரஷ்சியாவுக்கு வகுப்பெடுக்க ஒரு அருகதையும் கிடையாது. ஏனெனில்.. அமெரிக்கா எந்த நாட்டினதும்.. சுயாதிபத்தியத்தையும்.. தன் ஏகாதிபத்தியத்திற்கு முன் மதிப்பதில்லை.
  13. ஒருத்தர் போய் மற்றவர் வந்திட்டார். ஏதாவது ஒரு திட்டத்தையாவது நீண்டு நிலைக்க செய்யுது முடியுங்கப்பா. ஆரிய குளம்.. பழைய படி.. காடு பத்தப் போகுது. பண்ணைக்கடலுக்குள்.. அட்டை வளர்ப்பு வந்திட்டுது.. விட்ட உல்லாசப் படகுகள் கொஞ்சக் காலம் கவிழ்ந்து கிடந்து.. இப்ப அதையும் காணம். தெருவெல்லாம்.. பிளாஸ்டிக் குப்பை. பண்ணைக் கடலுக்குள்ளும்.. கடற்கரையிலும் பிளாஸ்டிக். பண்ணை தொடங்கி குறிக்காட்டுவான் வரை கடலெங்கும் பிளாஸ்டிக். தென்னிலங்கை.. வெளியூர் உல்லாசப் பயணிகளுக்கு ஒரு தெளிவான வரையறை இல்லை.. பிளாஸ்டிக்கை எப்படி கையாள்வது என்று. சிங்கள இராணுவ.. கடற்படை.. காவலன் அரண்களை அகற்றிவிட்டு நவீன கண்காணிப்பு கமராக்களை பொருத்தினால்.. குற்றத்தையும் குற்றவாளிகளையும் வெகுவாகக் குறைக்கலாம். வீதி போக்குவரத்துக் கண்காணிப்புக் கமராங்களின் வரவும் அவசியம். இராணுவத்தை வேறு தேவைகளுக்கு பாவிக்கலாம். அல்லது வேறு துறைகளில் வேலை பெற்றுச் செல்ல அனுமதிக்கலாம். இராணுவ செலவீனங்களை வெகுவாகக் குறைத்து அதனை இப்படியான கமராத் திட்டங்களுக்கு பாவிக்கலாம்.
  14. இவை தரமானவை என்றால்.. அரச கூட்டுத்தாபனங்கள் ஊடாக மக்களுக்கு விற்கப்படலாமே. எதற்கு வீணா அழிக்கனும்..???! நீதிபதிகள்.. சட்ட அமுலாக்கம் பற்றி மட்டும் சிந்திக்காமல்.. சட்டத்தோடு நாட்டு மக்களின் நலன் குறித்தும் சிந்திக்கலாமே. யாழில் தொடங்கப்பட்ட பண்ணை படகுச் சேவை.. ஆரிய குளம் படகுச் சேவை.. இப்படி எதுவுமே நடைமுறையில் இல்லை. பல கோடி ரூபா செலவு. ஒரு வருமானமும் இல்லை.. எந்த திட்டமும் நீண்டு நிலைப்பதாகவும் இல்லை..???! மக்களின் பணம் இப்படி விரையமாவது.. கேவலம். ஆள் மாறி ஆள் மாறி அதிகாரிகளும்.. அரசியல்வாதிகளும் பதவிக்கு வந்து போகினம்.. ஆனால் எந்த திட்டங்களும் உருப்படியாக இல்லை. இவர்களை விட... ரில்கோ.. போன்ற தனியார் நல்லாச் செய்யினம்.
  15. ஹிந்தியாவுக்கு ராமர் கோவிலுக்கு போறாங்க. சொறீலங்காவில்.. சிவாலயத்தை இடிக்கிறாங்க. என்ன ஒரு நடிப்பு.
  16. யாழ்ப்பாணத்திற்கு எல்லாரும் வருவினம். ஏனெனில்.. அங்கு பணப்புழக்கம் அதிகம். இல்லாவிட்டால்.. சர்வதேச வர்த்தகக் கண்காட்சி.. உட்பட பல யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க.. என்ன மூல காரணம்..??! அதேபோல்.. போதைப்பொருட்களும்.. மதுபானமும் வந்து குவிகிறது. காரணம்.. மீண்டும் யாழில் பணப்புழக்கம் அதிகம். குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் பணம் அதிகம். அதை வறுக.. எல்லாரும் வருவினம். யாழுக்கான சொகுசு பஸ் சேவையை சிங்களவர்கள் தமிழர்களை விட திறம்பட நடத்தி.. ஒரு பஸ்ஸுக்கு இப்ப 10 பஸ் விடுகிறார்கள்.
  17. நீங்க ஒன்டும் புடுங்க வேண்டாம். தண்ணீரை வடிக்கட்டும் இயந்திரத்தின் விலைக்கு மானியம் கொடுத்தால் போது.. குடாநாட்டின் தண்ணீர் பிரச்சனையை அங்குள்ள மக்களே தீர்த்து வைப்பர். ஏனெனில்.. 20 லீட்டர் வடிக்கட்டிய நீர் யாழ்ப்பாணத்தில் 100 ரூபா. ஆனால்.. சுப்பர் மார்க்கெட்டில்.. ஒரு லீட்டர் தண்ணி பாட்டல்.. 180 ரூபா. ஆக... குடாநாட்டில் தண்ணீர் பிரச்சனை என்பது டக்கிளஸ் கும்பலுக்கான அரசியல். ரோட்டு போடுறது.. காணி விடுவிக்கிறது.. கடலட்டை பிடிக்கிறது.. மணல் அள்ளுவது.. மீன்பிடி.. இப்படி எல்லாமே டக்கிளசிற்கான கமிசனுக்குரிய அரசியலாகிவிட்டது. அந்த வகையில் தான்.. யாழ் குடாநாட்டில் தண்ணீர் பிரச்சனை என்பதும்.
  18. வாழைக்காய் மலிவு மரவள்ளிக்கிழங்கு மலிவு உள்ளூர் கத்தரிக்காய் (புழுக்கடிச்சது) மலிவு கீரை மலிவு வல்லாரை பிடி 80 ரூபா தான். வாழைப் பூ மலிவு. போஞ்சி மலிவு. தங்காளி வாங்கக் கூடிய விலை தான். இதரை வாழைப்பழம் மலிவு. ரம்புட்டான் (6) 100 ரூபா. கொழும்பில் 10 (100 ரூபா) பப்பாளிப் பழம்- 200 ரூபா. இவை எல்லாம் ஒப்பீட்டளவில்.. மலிவாக இருக்கும் போது.. எதுக்கு சந்தையில் வரவு குறைந்த விலை கூடிய மரக்கறிகளை நாடினம்..???! மக்கள் விலை கூடியதை வாங்காமல் விட தன்பாட்டில் விலை குறைக்கப்படும். (இது யாழ்ப்பாணம்... மற்றும் திருநெல்வேலி சந்தைகளின் விலை அடிப்படையில்.) யாழ்ப்பாணத்தில் இல்லாத முருங்கை இலை.. கொழும்பில் கிடைக்கிறது. கொழும்பில்... பெட்டாவில்.. ஓரளவு மரக்கறி மலிவு.. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி.. தெகிவளை பகுதிகளை காட்டிலும்.
  19. வேடிக்கை என்னவென்றால்.. இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கிய கடனுக்கு வட்டியும் வாடிக்கையாளர்களிடம் இருந்தே அறவிடப்படுவது தான். ஆக.. வாடிக்கையாளர்களின் நிதியில்.. இயக்க வைக்கப்படும் ஒரு அரச ஸ்தாபனமாகவே இலங்கை மின்சார சபை இருக்குது. அதற்கென்று ஒரு தெளிவான செயற்திட்ட நடைமுறை இருக்கா என்பது கேள்விக்குறியே. இதுவே வாடிக்கையாளர்கள் மீது நிதிச் சுமையை அதிகரிக்கப்படக் காரணம்.
  20. நீங்க மேற்குலக சார்ப்பு ராஜதந்திரம் மட்டுமே வேர்க் அவுட் ஆகும் என்று கனவு கண்டதன் விளைவு இது. நீங்கள் ஹிந்தியாவையும்.. மேற்கையும் தாஜா பண்ணுவதால் மட்டும்.. எதையாவது பெறலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால்.. உங்களை விட சிங்களவன் இவர்களை நன்கு தாஜா பண்ண கற்றிருக்கிறான். தமிழர்கள் சார்ப்பில் வலுவான உள்ளூர்.. சர்வதேச ராஜதந்திர அணுகுமுறைகள் இன்றி.. யாரையும் இலகுவில் தமிழர்கள் சார்ப்பாக முடியாது. சீனாவை.. ரஷ்சியாவை ஒதுக்கி வைப்பதோ.. இலத்தீன் அமெரிக்காவை விட்டு வைப்பதோ.. ஆபிரிக்காவை கண்டும் காணாமலும் விடுவதோ.. மத்திய கிழக்கை.. கணக்கே எடுப்பதில்லையோ.. தென்கிழக்காசியா பற்றி அக்கறை இன்மை.. இப்படி.. பல படிநிலைகளில்.. தமிழர்களிடம்.. தமிழ் அரசியல்வாதிகளிடமும் ராஜதந்திர அணுகுமுறைகள்.. ராஜீய உறவுகளை பேணுதல் இல்லை. வெறுமனவே.. மேற்கையும்.. ஹிந்தியாவையும்.. நம்பிக் கொண்டு.. வாய் பார்த்திருந்தால்.. இப்படித்தான் அங்கலாய்க்க நேரிடும். தமிழர்கள் சார்ப்பில்.. சார்ப்பான முடிவெடுக்க மேற்கிற்கோ.. ஹிந்தியாவுக்கு.. அழுத்தம் கொடுக்கக் கூடிய சர்வதேச ராஜதந்திர நடைமுறைகள் அணுகுமுறைகள் எதுவும் தமிழர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அது 2009 தோடு காலி.
  21. மகிந்த பற்றியும் இப்படி ஒரு கற்பனை இருந்தது. அவரை சந்தித்து சில பேச்சுக்களிலும் ஈடுபட்டார். இறுதியில் எல்லாம் புஸ்வாணம் தான். ஐயாவுக்கு சிங்கள தேசத்தின் அரசியல் சற்றும் புரியவில்லை.. அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்.
  22. மகிந்த கும்பல்.. ரணில் கும்பல்.. (சஜித் யை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதினமில்லை..) க்கு மாற்றீடாக ஜே வி பி வந்தால்.. என்ன என்று சிந்திக்கும் நிலை இலங்கை மக்களிடம் பரவலாக காண முடிகிறது. அந்த வகையில்.. ஹிந்தியா.. இவரை அழைச்சிருக்கலாம்.
  23. ஒரு பக்கம் கஞ்சா செய்கை. ஏற்றுமதி. இன்னொரு பக்கம் போதைவஸ்து ஒழிப்பு.. கைது. என்னடா பண்ணுறீங்க. சும்மா.. ஊதிப் பெருத்த இராணுவத்தையும் பொலிஸையும் வைச்சு.. எப்படி சமாளிக்கும்.. வறிய சொறீலங்கா..??!
  24. இம்முறை தீவகம் உட்பட வடக்கில் நல்ல நெல் விளைச்சலை காண முடிகிறது. பரவலாக மக்கள் தரிசாக கிடந்த விளை நிலங்களில் எல்லாம் நெல் போட்டிருக்கிறார்கள். விளைச்சலும் நல்லா இருக்குது.
  25. இவர் ஒரு தரவுப் பெட்டகம். எல்லாத்தையும் விரல் நுனியில் வைச்சு அடிச்சுத் தள்ளுவார் நம்பிவிடுங்கள் மக்கள். முதலில் மக்களோடு பழகிப் பார்த்து மக்கள் கருத்தறியுங்கள். அதைவிடுத்து.. தேர்வு செய்யப்பட்ட தெரிவுத் தரவு எடுக்கும் நிறுவனங்களின் தேவைக்கு பயன்படுத்தப்படும் தரவுகள் மூலம்.. ஒரு பல்லின சமூக நாட்டின் உண்மை நிலையை வெளிக்கொணர முடியாது. இது ஈழத்தில் இன்று மக்களின் நிலைக்கு உதாரணம் சொல்லலாம். நோர்வே அரசின் நிலைப்பாடு என்பது பரந்துபட்டதாக இருக்கலாம். உதாரணத்துக்கு.. அது உலகெங்கும் இருந்து அகதிகளை உள்வாங்கிறது. ஒரு காலத்தில் நோர்வே இந்தளவுக்கு.. அகதிகளை உங்காங்கும் கொள்கையை கொண்டிருக்கவில்லை. ஆனால். உள்ளக.. நோர்வே மக்களிடம் இதன் தாக்கம் குறித்து அரச கருத்துக் கேட்டதாக இல்லை. அரசின் செயலில் அங்கும் விமர்சனங்கள் உள்ளது. அண்மையில் கூட நோர்வேயில் லண்டன் பப்பில்.. ஒருபால் சேர்க்கையாளர்களின் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. அது இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்பட்டாலும்.. அமைதிப்பூங்காவான நோர்வேக்குள் இஸ்லாமிய பயங்கரவாதம் எப்படி புகுந்தது...??! அது குறிப்பாக.. ஒருபால் சேர்க்கையாளர்களை குறிவைக்க என்ன காரணம்..???! வழமை போல்.. மனநோயாளர் என்று நோர்வே பொலிஸ் காரணம் சொல்லி தப்பி விடும். அதேபோல் தான்.. சில ஆண்டுகளுக்கு முன்.. நோர்வே வரலாற்றில்.. பலரை சுட்டுக்கொன்ற நபரையும் (80 க்கும் அதிக அப்பாவிகளை தேடி தேடி வேட்டையாடிய).. மனநோயாளர் என்று.. நோர்வே பொலிஸ்.. இப்ப.. அதே மக்களின் வரிப்பணத்தில் சகல வசதிகளுடனும் வாழ வைத்துள்ளது. இதில் நோர்வே மக்களுக்கு அதிருப்தி உண்டு. தரவுப் பெட்டகம் இதற்கும்.. தரவு இருப்பதாகச் சொல்லலாம். முதலில் தரவுகளை எங்கிருந்து எடுக்கிறார்.. என்ற உசாத்துணையே இல்லாமல்.. அதன் பக்கச்சார்பின்மை.. நம்பகத்தன்மை.. எல்லாமே கேள்வியாக இருக்கும் நிலையில்.. தான் அடித்து விடுவதே சரி என்பது இவரின் வழமையான பாணி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.