Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. தமிழகள் என்பவர்கள் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைக்கப்பட வேண்டியவர்கள் என்பது தானே மேற்குலகினதும் நிலைப்பாடு. இதில சிங்களவனை நொந்து என்ன பயன்..!!!
  2. இரண்டுமே இப்ப சோடியாத்தானே ஓடுது. சீனக் குதிரை தான் தனியா ஓடுது.
  3. நடந்தால் தான் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மைக்கு ஏதாவது சந்தர்ப்பம் அமைய வாய்ப்பிருக்கும். இன்றேல்.. கஸ்டம்.
  4. இருந்தாலும் மேற்குலக ஊடகங்கள்.. இவரை.. இடது சாரி ஆள் என்பதை அழுத்தம் திருத்தமாக தவறாமல் உச்சரிப்பதை காண முடிகிறது. அவைட ஊழல்.. சுரண்டல்.. சன நாய் அகத்துக்கு ஆபத்து வந்திடுமோ என்று பயப்பிடுகினம் போல. சீன பக்கம் அதிகம் சாய்ஞ்சிடுவினமே என்ற அச்சம் அவைக்கு.
  5. மக்களின் வறுமையை போக்கி நாட்டை சொந்த உற்பத்தியில்.. வளர்க்காமல்.. மீண்டும் வெளியார் கடன்.. ரோட்டு போடுதல்.. மாடி கட்டுதலில்.. இறங்கினால்.. சொறீலங்கா முன்னேற வாய்ப்பில்லை ராஜா.
  6. குத்தியர்.. வழமை போல்.. நானும் தாடிக்காரக் கூட்டமுன்னு.. போய் அனுர முன்னும் மண்டியிட எதிர்பாருங்கள்... பதவிக்கு.
  7. தேவையில்லாத ஆணி 2.25 இலட்சம் வாக்குகளை பிரிச்சுக்கிட்டு போயிட்டு. ரணில் நரியாரின் பிரித்தாளும் தந்திரமே அவரின் தோல்விக்கும் காரணமாகி விட்டது. அடிப்படையில் ரணில்- சஜித் கூட்டாக.. பெற்ற மொத்த வாக்குகள் அனுரவை விட அதிகம். ராஜபக்ச செல்வாக்கு அடியோடு காணாமல் போய் விட்டது. சரத்தின் குண்டு துளைத்த கார்.. செல்லாக் காசாகி விட்டது.
  8. ரோகணவின் கொள்கையோடு போகக் கடவ. விமலின் பாதையில் போனால்.. கோத்தாவின் நிலை தான். வாழ்த்துக்கள் ஏ கே டி. தமிழர் பிரச்சனைக்கு தீர்வு என்பது இவரின் கொள்கையில் மாற்றம் இன்றேல்.. பூச்சியம் தான்.
  9. தமிழ் தேசிய கட்சி சம்பந்தன் ஆதரித்த இனப்படுகொலையாளி சரத் பொன்சேகாவுக்கும் தமிழர்கள் வாக்குப் போட்டவை தானே. இப்ப சரத்...?! இந்த தேர்தலில் தமிழர்கள் ஒரு குழப்பகரமான நிலையில் வாக்களிச்சிருக்கினமே தவிர.. தமிழ் தேசியம்.. தமிழரசு என்று பார்த்து வாக்களிக்கவில்லை. தமிழ் மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால்.. சிங்களவர்கள் யாராயினும் யாரின் அச்சுறுத்தலுக்கும் அடிபணிய மாட்டம் என்பதை சொல்லி இருக்கினம்.
  10. அரியத்துக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இரண்டு விடயத்தை கையாளலாம்.. 1. புலிகளை முடித்துவிட்டு இதோ தீர்வு தருகிறோம் என்ற ஹிந்தியாவிற்கும்.. மேற்குலக வல்லாதிக்க சக்திகளுக்கும்.. உங்கள் வாக்குறுதிக்கு என்னானது.. நாம் தமிழ் மக்கள் இன்னும் சுயநிர்ணய உரிமைக்கான தேவையோடு.. தமிழ் தேசிய இனமாக ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை சொல்லலாம். 2. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அரசியல் போட்டா போட்டிக்குள் சிங்களவர்கள் தமக்கான அரசின் ஆட்சித் தலைமையை தெரிவு செய்வதில் இருந்து தமிழ் மக்கள் விலகி நிற்கலாம். இது உலகிற்கு இன்னொரு செய்தியை சொல்லும்.. இலங்கையில்.. இரு வேறு தேசிய இனங்கள்.. இரு வேறு கொள்கைகளுடன் அரசியல் தேவைகளுடன் உள்ளன என்பதை. அதனை சர்வதேசம் தேசிய நல்லிணக்கம்.. அது இதென்று போலி வார்த்தைகளால் மூடி மொழுகி விட முடியாது. தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் தீர்வை பெற்றுத்தருவதில் கருசணை கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லலாம். சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பின் கீழ்... அரியத்தை இறக்கியது தேவை இல்லாத ஆணி ஆக தோன்றினாலும்.. அதனை தேவையாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம்.
  11. தேசிய தலைவரின் தலைமையின் கீழ் புலிகள் இருந்த போது இப்படி நடக்கவில்லையே. பிறகேன்.. புலிகள் மீது இப்பவும் காழ்பை கொட்டுவதில் குறியாக அலைகிறீர்கள் நீங்கள் சிலர். பங்கு பிரிப்பதில்.. இந்தக் குழுக்கள் மட்டுமல்ல.. புளொட்.. ஈபிடிபி.. ரெலோ.. தமிழர் விடுதலை கூட்டணி.. ஈபி.. என்று எந்த தமிழ் குழுவும்.. பாரபட்சமின்றி வெளிநாட்டு வீதிகளில் அடிபட்டதை காணவில்லையோ..! அது உங்கள் இனத்தின் ஜீன். புலிகளின் தவறல்ல. புலிகள் மீதான தடை அடாத்தானது.. அநாவசியமானது.. மொத்த ஈழத்தமிழர்களையும் அடிமையாக்கியது.. இதனை செய்த மேற்குலகம்.. ஏதோ ஒரு வகையில்.. ஈழத்தமிழர்களுக்கு எதிராக பெரும் இன அழிப்பு அநியாயத்தை செய்யவும் அடக்குமுறை கோலோஞ்சவும் தான் வழி சமைத்துள்ளன. இதில்.. உக்ரைனில்.. நேட்டோவுக்காக.. வக்காளத்து.
  12. சொறீலங்கா சிங்களவர்கள் தங்களுக்கான ஆட்சியாளரை தெரிவு செய்யும் தேர்தல் தான் இது என்பதை கடந்த காலங்களும் சரி தற்போதைய போட்டியாளர்களும் சரி சொல்லி நிற்கின்றன. இதனால் தமிழ் மக்களுக்கு கடந்த காலம் போல் எதிர்காலத்திலும் ஒரு விமோசனமும் இல்லை. சொறீலங்காவின் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஒற்றையாட்சிக்குள் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் தமிழர்களை வாழ் நிற்பந்தித்த இணைத்தலைமை நாடுகள்.. சர்வதேசம்.. ஹிந்தியா..சீனா.. சார்க் நாடுகள் என்று எல்லாமே தான் இந்த அவல நிலை தொடரக் காரணம். மேலும் சிங்களத் தலைமைப் பீடமேறும் தலைவர்கள் சிங்கள பெளத்த பேரினவாத வெறி பிடித்த மதகுருமாருருடன் இணைந்து செயற்படுவதே கொள்கை என்று கொண்டிருப்பதும்.. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மதிக்கக் கூடிய விளக்கத்தை தகமையை கொண்டிராததும்.. இவர்களுக்கு தமிழ் மக்கள் முக்கி முக்கி வாக்குப் போடுவதால் நன்மை கிடைக்காது. ஆனாலும்.. சாத்தானுடன் வாழ் நிற்பந்திக்கப்பட்ட நிலையில்.. சாத்தானுடன் சமரசத்துடன் வாழ்வதை தவிர வேறு வழியில்லை என்பதே தமிழ் மக்களின் நிலை இன்று சொறீலங்காவில். இது தமிழ் மக்கள் சாத்தானின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதாக அர்த்தப்படாது. இதில்.. தமிழ் பொதுவேட்பாளர்.. தமிழர்கள் சார்பில் உள்ள ஒற்றைக் கருத்தியலுக்கு.. ஆயிரம் கட்சி அமைச்சு போட்டி போடும் தமிழ் கட்சிகள் என்பன அளிக்கும் ஆளுக்கு ஆளான சிங்கள விசுவாசம் என்பதும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேவையில்லாத ஆணிகளாகும். தங்களின் சுயலாபத்தை முன்னிறத்த மக்களை பணயம் வைத்து.. ஏமாற்றும் செயல் மட்டுமே.
  13. சொறீலங்கா சனாதிபதி தேர்தல்.. நாடாளுமன்றத் தேர்தல்களால்.. தமிழர்களுக்கு ஒரு விமோசனமும் வரப் போவதில்லை. எல்லாரும் சந்தியில் சிந்து பாட வேண்டியது தான்.
  14. சமூக வலை உலகம் குப்பையாகி விட்டது. பெண்கள் ஆண்கள்..பல விதத்திலும் பணம் பார்க்க பாவிக்கிறார்கள். உடலைக் காட்டி பிழைப்பது அதிகரித்துவிட்டது.. அது உடலை விற்றுப் பிழைப்பதை விட பாதுகாப்பானது என்றாகி இருப்பதால்... பலரும் களமிறங்கி விட்டார்கள். ஆனாலும்.. வெளிநாடுகளில் இருக்கும் எம்மவர்கள் பணம் வரும் வழிமுறை உணராமல் கண்டபடிக்கும் ஊருக்கும் தெற்காசியா தென்கிழக்கு ஆசியா நோக்கியும் பணத்தை வீசிவருகின்றனர். அவர்கள் உழைப்பு தானே என்று விட்டாலும்.. இதனால் மற்றவர்களும் ஊரில் உள்ளவர்களும் தேவைக்கு அதிகமான செலவை செய்து பல அத்தியாவசிய.. சேவைகளை தேவைகளை நிறைவு செய்ய வேண்டி உள்ளது. இதில் புலம்பெயர் தமிழர்களின் தாந்தோன்றித்தனமான கண்மூடித்தனமான செலவழிப்பு போக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.
  15. ரஷ்சிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள இன்றைய காணொளியில் பிடிக்கப்பட்ட உக்ரைன் படையினர்களை காட்டினார்கள். இன்று உக்ரைன் தானாகவே ஒரு கிலோமீட்டர் அல்லது இரண்டு கிலோமீட்டர் தான் போனது என்று கூறியுள்ளது.. ஆக வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கிழக்கு ஐரோப்பாவுக்கான எரிவாயு வழங்கல் இப்பவும் நடப்பதால்.. குறிப்பாக ஈயுவின் சொல்வழி கேட்காத ஹங்கேரிக்கும்.. இந்த பிரதேசத்தை ரஷ்சியா இராணுவ வலமற்ற பகுதியாகவே பராமரித்து வந்துள்ள நிலையில்.. அந்தப் பலவீனத்தை வைச்சு//நேட்டோ உக்ரைன் கோமாளிகளை வைத்து வெடி கொழுத்தி விளையாடி வருகின்றது. ஏலவே எரிவாயு லைனை கடலில் குண்டு வைச்சு தகர்த்தது உக்ரைன் என்றாகி விட்டது. அதனை மூடி மறைக்க அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் போட்ட நாடகம் இருக்கே சொல்லி மாளாது. இப்போது ஐரோப்பாவுக்கான எரிவாயு ஏற்றுமதியில் அமெரிக்காவே முன்னிலை வகிக்கிறது. எனி கணக்கை நீங்களே போட்டுப் பாருங்கள்... இந்த உக்ரைன் கோமாளியின் தற்கொலை முயற்சி எதற்கு என்பது புரியும். தீச்சுவாலை சொறீலங்கா படைகளின் நடவடிக்கையின் போது சொன்னவை தான் ஞாபகத்துக்கு வந்து போகிறது.
  16. உக்ரைனின் பயங்கரவாதம் அப்பட்டமாக வெளிப்பட்ட பின்னும் ஜேர்மனி வெக்கரோசமில்லாமல் உக்ரைனுக்கு வால்பிடிப்பது கேவலம். ஜேர்மனிக்கு எரிவாயு காவி வந்த பைப் லைனை வெடி வைச்சு தகர்த்தது உக்ரைன் நீரோடிகள் என்பதும்.. அதற்கு அமெரிக்க கப்பல்கள் உதவி உள்ளமையும் வெளிவந்து.. இப்போ.. பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்... ஜேர்மனி மக்களை இதர ஐரோப்பிய மக்களை பாதிக்கக் கூடிய இந்த பயங்கரவாதத் தாக்குதலை ஜேர்மனி கண்டிக்காதது ஏனோ..?!
  17. இது சாதி ஒழிக்கிறதென்று சாதி வளர்ப்பது போன்றது. புலிகளே ஆயுதங்களை மெளனித்து நீங்கி விட்ட நிலையில் 15 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில்.. இன்னும்.. புலி புலின்னு புலம்பிக் கிட்டு ஒரு கூட்டமிருக்கென்றால்.. சகோதரப் படுகொலைகளில் புலிகள் மட்டுமா ஈடுபட்டார்கள்.. ஏனையவர்கள்.. ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு துரோக அரசியலை பரிசளிக்கவில்லையா.. அவர்களுக்கு தண்டனை..??! இப்போதும்.. புலி.. பிரபாகரனை அதிகம் உச்சரிப்பவர்கள் யார் என்று பார்த்தால்.. முன்னாள் துரோகிகளும் ஒட்டுக்குழுக்களும் எதிரிகளும் தான். மக்களின் முன் மக்களின் மனங்களுக்குள் இருக்கும் அரசியல் வேட்கைக்கு விடைகாணாமல்.. புலி நீக்கம் என்பது சாத்தியமில்லை. ஏனெனில்.. புலிகள் காவிச் சுமந்தது மக்களின் மனங்கள் தேடிக் கொண்டிருந்த அந்த அரசியல் தேச விடுதலையை.. உரிமையை.. சுதந்திரத்தை. அதைப் பறிச்சு.. எதிரியின் காலடியில் மக்களை அடிமையாக மிதிபட விடும் எந்த கொள்கை கோட்பாடும்.. மக்களின் மனங்களை வெல்லாது. புலி நீக்கமும் செய்யாது. யார் என்னத்தை எழுதினாலும்... கிருபன் அண்ணர் அதை ஒட்டோ ஒட்டென்று ஒட்டினாலும் நிகழாது. அவரும் தான் காலம் காலமே ஒட்டிறார் இன்னும்.. புலி நீக்கம்.. மீளாய்வு முடியவில்லை. எனி பின் நவீனத்துவ வாதம் போல்.. புலிப் பின் நவீனத்துவம் அப்படி இப்படின்னு ஏதாவது புதிசா எழுதிப் பார்க்கச் சொல்லுங்கண்ணே.
  18. ரஷ்சியா - உக்ரைன் யுத்தத்தின் ஆரம்பத்தில் ரஷ்சியா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி இருந்தது. இப்போது ரஷ்சியா மீதான ஊடுருவலுக்கு பாவிக்கப்பட்ட பகுதியும்.. உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்தது. பின்னர் துருக்கியினூடாக கெஞ்சிமன்றாடி.. ரஷ்சியாவுக்குள் நுழைந்து தாக்கவோ.. ரஷ்சியாவுக்குள் தாக்குதலை நடத்தவோ மாட்டம் என்ற பொய் வாக்குறுதியை வழங்கி தான்.. ரஷ்சியப் படைகளை ரஷ்சியா தானா வெளியேற்றிக் கொள்ள சம்மதிக்கப்பட்டது. இப்போ அமெரிக்காவினதும்.. நேட்டோவினதும் தேவைக்காகவே இந்த ஊருடுவல் தாக்குதல். இதில் நேட்டோ படைகள் நேரடியாக அல்லது மறைமுகமாக செயற்படுவது தெரிந்ததே. மோல்டாவாவுக்கு ரஷ்சியா எச்சரிக்கை வழங்கி இருக்கிறது. இந்த ஊருடுவல் என்பது நேட்டோ வினது நேரடியான ரஷ்சிய ஆக்கிரமிப்புச் செயல். இதன் மூலம் உக்ரைனுக்கு எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. உக்ரைன் கோமாளி சனாதிபதி அமெரிக்காவினதும் ஈயுவினதும் நேட்டோவினதும் ஆட்டத்துக்கு ஆடம் பொம்மை. நிச்சயம் ரஷ்சியா இந்த நேட்டோ ஆக்கிரமிப்புக்கு எதிராக நிச்சயம் பதில் அளிக்கும். மேலும் நேட்டோ ரஷ்சியாவுக்குள் ஊருடுவுவது இது முதல் தடவை அல்ல. ஏலவே சி ஐ ஏ ஊடாக வாக்னர் ரஷ்சிய கூலிப்படையை விலைக்கு வாங்கியும் அதன் பின்னர் ரஷ்சியாவுக்கு எதிரான அமைப்புக்கள் என்ற பெயரிலும் ஏலவே பல தடவைகள் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் ஊருடுவல் தாக்குதலை செய்துள்ளன. என்ன வாக்னர் குழுவைப் போல சட சட என்று மொஸ்கோ நோக்கி நகரலாம் என்ற கனவு பலிக்கவில்லை. டான்பாஸ் உட்பட்ட கிழக்குப் பகுதி இராணுவ நடவடிக்கை படுதோல்வியில் முடிந்தமை அமெரிக்க நேட்டோ கூட்டாளிகளுக்கு உக்ரைன் அவமானத்தையே தேடிக் கொடுத்திருந்தது. அதனால் தான் இந்த ஊடுருவலை கொஞ்சம் அகலப்படுத்தி வெற்றி விளம்பரமாக்கிக் கொண்டிருக்கிறது உக்ரைனின் கோமாளி சனாதிபதியும் அதன் கூட்டமும். ஏலவே டான்பாஸ் முழுவதுமாக ரஷ்சியாவிடம் இழக்கப்படும் நிலை தோன்றிவிட்ட நிலையில்.. அதன் கவனத்தை திருப்பமும் நேட்டோ அமெரிக்காவை ஆசுவாசப்படுத்தவும் அவர்களின் இராணுவ வெற்றி வெறித்தனத்தை இனங்காட்டவுமே இந்த தாக்குதல். இதில் இழக்கப்படும் ஒவ்வொரு அப்பாவி ரஷ்சிய உயிருக்கும் இவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும். இதனை ஏலவே பிரிட்டனை சேர்ந்த உயர் ராணுவ அதிகாரியே சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார். இந்த ஊருவலால்.. ரஷ்சிய இராணுவத்தின் தாக்குதல் திறனை குறைக்க முடியுமோ தெரியவில்லை.. ஆனால் ரஷ்சியாவை அதி கோபப்படுத்தி உக்ரைனை நாசமாக்கப் போகிறார்கள் என்று எச்சரித்திருக்கிறார் அந்த அதிகாரி. ஆனால் அமெரிக்காவோ.. கமோன்.. கிமோன் என்று உசுப்பேத்திவிட்டு இப்போ தமக்கும் இந்த ஊடுருவலுக்கும் சம்பந்தமில்லை என்கிறது. அண்மையில் தான் ரஷ்சியாவுக்குள் தாக்குதல் நடத்த பைடன் நிர்வாகம் சம்மதி அளித்ததாகச் சொல்லப்பட்டாலும்.. உக்ரைன் ஏற்கனவே பல ஊடுருவல் தாக்குதலை தானாகவும் புரொக்சியாகவும் செய்தே வந்துள்ளது.
  19. கோத்தாவை வீட்டுக்கு அனுப்பும் போது மகிந்தவோடு சேர்த்து நாமலையும் தானே அனுப்பினது. அதுக்குள்ள மறந்திட்டுதா சிங்கள சனம். ஆனால்.. தமிழ் சிங்களக் காவடிகளுக்கு எக்காலத்திலும் குறைவில்லை. என்ன டக்கிளஸ் சுமந்திரன் அங்கஜன் சித்தார்த்துக்கு போட்டி கூடிக்கிட்டே போகுது.
  20. சிங்கள படை ஆக்கிரமிப்புக்குள் முழு தமிழர் தேசமும் உள்ள நிலையில்.. இது ஒரு தேவையில்லாத ஆணி புடுங்கல். தமிழர்கள் குடைக்கு ஆதரவளிக்கலாம். மகிந்த ரணில் சஜித்.. அனுர.. சரத் கும்பலை நம்பாமல்.. பொதுமைப்பாடான சிங்கள மக்களோடு இணைந்து... லிபரல் தன்மை கொண்ட சிங்கள முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட இளையோர் வழியில்.. வாக்குப் போடலாமே.
  21. சீனாவுக்கு விலை போகக் கூடிய தீவுகள் மீது ரெம்ப கவனமா இருக்குது கழுகு. ஏற்கனவே டி காப்பேசியாவில் பிரிட்டனையே ஏமாற்றி இருக்குது இந்தக் கழுகு.
  22. அதுசரி அரியனேந்திரன் பிரித்தானியாவில் அடித்த அசைலத்துக்கு என்னானது..?!
  23. ஆமாம் ஆமாம்.. ஆனையிறவை விட்டு ஓடினது.. மாங்குளத்தில் அடி விழ ஆரம்பிச்சதும் சீனாவில் போய் பதுங்கிக் கிடந்தவர் எல்லாம்.. ஊழலை அல்ல.. சொறீலங்காவில் உள்ள எலிகளைக் கூட ஒழிக்க முடியாது. சும்மா வெறுவாய் சப்பிட்டு சிங்கக் கொடி கூட்டாளி.. சம்பந்தன் பாதையில் போய் சேர வேண்டியான். புலிகளை.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை.. ஹிந்திய- அமெரிக்க - மேற்குலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் சூழ்ச்சிக்குள் கொண்டு வந்த கதிர்காமர் போன்றவர்கள் தான் அழித்தார்கள் என்றால் மிகையல்ல. இதில் சர்வதேச சதியே அதிக பங்களித்தது. கோத்தாவோ.. மகிந்தவோ.. சரத்தோ.. உரிமை கோருவதில் அர்த்தமில்லை.
  24. மோடியை விட கோத்தா மிகவும் பொருந்தி வருவார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.