Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32991
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. முதலீட்டாளர்களும் பெரிய அளவில் முதலீடு செய்ய வருகினம் இல்லை.. பொருளாதார ஸ்ரத்தன்மை பற்றிய அச்சம். ஆனால்.. சில முதலீட்டாளர்கள் இந்தச் சூழலை இலங்கையிலான முதலீட்டின் ஆரம்பமாக்க விளைகின்றனர்.. அதற்கேற்ப சிறிய அளவிலான முதலீடுகளை செய்ய முன்வருகின்றனர். அவர்களே முதலீடுகளை கொண்டு வருகினம். அது கல்லாப்பெட்டியை அடையாது.
  2. எல்லாம் ரமிழ்நாட்டு ரீல்களின் தாக்கம் தான். (அந்த தாக்கத்திற்கு உள்ளானது வீரகேசரி மட்டுமல்ல.. நாங்களும் தான்.)
  3. முன்பக்கத்தில்.. கோவணத்துடன் ஓடிய கோத்தாவை போட்டிருந்தால்.. நூல் இன்னும் அமோகமாக ஓட வாய்ப்பிருக்கு. மேலும்.. வெளிநாட்டு சக்திகள் மட்டுமல்ல.. அனுராதபுரம் போய் சத்தியப்பிரமானம் எடுத்ததே பிழை. அது தமிழர் தலைநகரம். புத்தருக்கே பிடிக்கல்ல. அதுபோக.. நாம ஓடுவது முதல் தடவை அல்லவே. மண்டைதீவில் வைச்சும் ஓடினது தானே. அந்த வகையில் விற்பனையும் வருமானமும் தான் முக்கியம்.
  4. அதாவது கல்லாப்பெட்டி மொத்தமும் காலி. இப்ப வந்திருக்கிற கடனுகளையும்.. வாற உல்லாசப் பயண வருவாய்களையும் வைச்சு நாடு ஓடிக்கிட்டு இருக்கு. இதில எது நின்றாலும்.. சொறீலங்கா.. குடைசாயும். ஏனெனில்.. நாட்டின் கல்லாப்பெட்டியை நிரப்ப.. கமிசன் குறூப் விடாது. அது தன் பொக்கட்டுக்களை தான் நிரப்பும். அந்த வகையில் போன மச்சான் பசில்.. மீண்டும் வந்திருக்கிறார். எனி கமிசனை ஆளாளுக்கு கொண்டு வந்து கொட்டுங்கோ. ஏய் டக்கி.. உங்க பக்கம் தான் கூடவாம். அடிச்சது காணும். இஞ்சாலும் கொட்டும்.
  5. பைடன் நிர்வாகத்தின் மிகக் கீழ்த்தர சனநாயக செயற்பாடுகளையும் அமெரிக்க சனநாயகத்தின் சாக்கடை தனத்தையும் இனங்காட்டிய சிங்கம். பெட்டை வழக்கு.. கிழவி வழக்கு.. பாலியல் வன்கொடுமை வழக்கு.. கப்பம் வழக்கு.. ஊழல் வழக்கு.. புட்டினுடன் சேர்த்து தேசத்துரோக வழக்கு.. ஆவண மோசடி வழக்கு.. இப்படிப் பல... கடைசியில்... தேர்தலில் நிற்கக் கூடாது வழக்கு வரை போட்டாங்கள். சிங்கம் சீறி பாய்ஞ்சடிச்சு வெளில வந்திட்டுது. ஆனால் என்ன ஒரு சனநாயக நாட்டில்... சட்டம் எப்படி எல்லாம் தவறாக ஒரு தனிமனிதனை முடக்க பாவிக்கப்பட முடியும் என்பதை.. இது இன்னும் அரைகுரை சனநாயக நாடுகளாக விளங்கும் நாடுகளுக்கு.. பாடமாக்கி இருப்பது தான் மிகப் பெரிய ஆபத்து. குறிப்பாக தெற்காசிய சன நாய் அகம்.. இதனை லபக் என்று அள்ளிக்கொள்ளும். ரம்புக்கு எதிராக அதிகம் மறைமுகமாக உழைப்பது அமெரிக்க ஊடகங்களை விட பிபிசி தான். பிபிசி மிக பக்கச்சார்பான ஊடகம்.
  6. பைடனுடன் அந்த ஒன்றுக்கும் லாய்க்கில்லாத கமலாவுக்கும் குட்பாய் சொல்லனும். அதோட சிலுங்கி.. நெஞ்சை புடுச்சிக்கிட்டே போயிடுவார். உக்ரைன் மக்கள் மீண்டும் தங்கள் ரஷ்சிய சகோதரர்களுடன் இணைந்து வாழும் காலம் உருவாகும். சொந்த சகோதரர்களை மோதவிட்டு பலவீனப்படுத்தி.. அதின் பின்.. ரஷ்சியா மீது... தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்த அமெரிக்க மேற்குலக நேட்டோ கூட்டணியின்.. உக்ரைன் நாட்டில் ஊடுருவி உருவான.. யூத ஏஜென்டு.. சிலுங்கி இப்பவே சிணுங்க தொடங்கிட்டார்.
  7. டக்கிளஸ் நந்தி விடாது. அதன் ஏவலாளியாக இருக்கும்.. ஆளுநர் நந்திக்கு பாதகமாக ஏதும் செய்வாரா என்ன. டக்கிளசுக்கு ஏதாச்சும் ஒரு பிரச்சனை இருக்கனும். முன்னர் ரோடு விடுவிப்பு... பின் கடல் விடுவிப்பு... காணி விடுவிப்பு.. இப்ப மீனவர் பிரச்சனை...இப்படி ஏதாவது இருந்தால் தானே அவரும் பொக்கட்டை நிரப்பலாம்.. பல வழிகளிலும்.
  8. மிசனரிகள் ஈழ மண்ணில் தோற்றுப் போனதிற்கு இந்த வேடதாரித்தனம் தான் முக்கிய காரணம். அதனால் தான்.. சிலதை இங்கு அழுத்தம் திருத்தமாகவும் கூற முனைந்தது. அதனை புரிந்து கொள்ள முடியாத சிலர்.. வழமை போல். அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி புத்தா. மக்களுக்கு வழிகாட்டும்.
  9. பலஸ்தீன மக்களின் விடுதலையை ஆதரிக்கிறது யதார்த்தம். நாமும் ஆதரிக்கிறோம். அந்த மக்கள் பூரண சுதந்திர தேசத்தில் இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்தும் விடுதலை பெற்று சுதந்திர பலஸ்தீனத்தில் வாழனும். ஆனால்.. காசா படுகொலையை விட மோசமான படுகொலை தமிழீழம் கேட்டு போராடிய மக்கள் மீது முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய (ஒரே நாளில் 50,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் கண்டிக்காத கண்ணீர் விடாத உள்ளூர் முஸ்லிம் சமூகம் உட்பட) போது பால்சோறு சாப்பிட்ட உள்ளூர் முஸ்லிம் தலைவர்களும்.. மகிந்தவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய உலக முஸ்லிம் தலைவர்களும் எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு இந்த கோரிக்கையை முன் வைப்பீங்க. ****
  10. இந்த குட்டி மாலைதீவு ஈழத்தமிழர்களுக்கு நல்ல பாடம். ஒரே ஹிந்திய விசுவாசத்தில் ஊறிக் கிடந்ததன் பயன் தொடர் முதுகு குத்தல்கள். மாலைதீவு சரியாக கையாள்கிறது.. பூகோள ராஜதந்திரத்தை. ஹிந்தியா என்ற பூதத்திற்கு எதிராக சீன ரகனை இழுத்துக் கொண்டு வந்து விட்டிருக்குது. தனது நலனை அதன் மூலம் பகுதியாக வேணும் சாதிக்கும். சீனாவுக்கும் வலுவான நட்பு சக்திகளை ஹிந்திய பூதத்தை சுற்றி வளைக்க அவசியம். ஆனால் எங்கடையள்...எல்லாம் பாரத் ஜே கூட்டமாவே சாகுவரை ஒரு சதத்திற்கும் உதவாத ஹிந்திய விசுவாச பிடிவாதத்தில் கிடந்து சொந்த மக்களை முழு அடிமையாக்கி சாகுங்கள். நமக்கு சீனா.. ரஷ்சியா.. மேற்கு... லத்தீன்.. மத்திய கிழக்கு.. அவுஸி.. தெற்காசியா.. ஆபிரிக்கா.. கரிபியன்.. யாருமே எதிரியில்லை. ஆனால்.. நாமாக விலக்கி வைச்சிருக்கிறம். ஏனோ புரியவில்லை. எம்மால் மிக நுட்பமான சர்வதேச ராஜதந்திரங்களை வகுக்க வாய்ப்பிருந்தும்.. கன்னை பிரிப்பதிலும் கட்சி அமைப்பதிலும் பிசி...??! எல்லாம் ஈழத்தமிழனின் தலைக்கேறிய அதிபுத்திசாலித்தனம் என்ற போலி வேடத்தின் பிரதிபலிப்பே அன்றி வேறல்ல. முழுமட்டாள் தனம்.
  11. கட்சி சின்னத்தையே காப்பாற்ற முடியாத சீமான்.. தமிழ் மக்களையும் தமிழகத்தையும் எப்படிக் காப்பார் என்ற வினவல் வேறு மக்களிடையே பலமடைந்துள்ள நிலையில்.. இந்தச் செய்தி நாம் தமிழருக்கு எதிரான பிரச்சார நோக்கில் இயற்றப்பட்டிருக்கவே வாய்ப்புள்ளது. குப்பாடிகளுடன்.. கூட்டணியை.. தேர்தல் ஒத்துழைப்பை விட.. நாம் தமிழர் கட்சி சின்ன நிராகரிப்பை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதே.. கூடிய சனநாயகம். மக்கள் நம்பிக்கையை தக்க வைக்கும்.
  12. என்னைப் பொறுத்த வரை புலம்பெயர் தமிழர்களின் தாயகத்துக்கான உதவி புதிதோ.. புதினமோ.. சாதனையோ அல்ல. அது ஒரு தேவை. அதை செய்ய வேண்டியது விருப்பின் கடமை. ஆனால்.. அந்த உதவிகள் சரியான மக்களை சேர்ந்தடைய வேண்டும். பணக்கார வைத்தியசாலை முதலாளிகளுக்கு வருமானமாக மட்டும் இருக்கக் கூடாது. மிசனரிகளுக்கு பணமீட்டுவதாக இருந்தால்.. அந்த பணம் அல்லது அதற்கான சேவை அந்த மக்களை மீண்டும் இலவசமாக.. போய் சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
  13. அதாவது உங்கள் பார்வையில் இறுதிப் போர் வரை சர்வதேச கவனத்தை யாரும் இழுக்கல்லை..?????! அல்லது இழுத்த கவனம் காணாதா..??! அல்லது கண்டும் காணாமலும் விட்டவையா..??! 1848 ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க - சிலோன் மிசன்.. இவை போர் காலத்தில் எல்லாம் எங்க இருந்தவை. ஓ... கவனை ஈர்ப்புக் காணாமல் இருந்திருப்பினம். ம்ம்ம். நம்ம தவறுதான். நீங்க லைக் போட்டு மகிழுங்கண்ணே. தாயக மக்கள்.. காய்ச்சலுக்கு மருந்தெடுக்க வசதி இல்லாமல் அடிப்படை உடற்பரிசோதனை செய்ய வசதி இல்லாமல்.. சாவது தெரியாது. நீங்க இப்படியே.. மகிழ்ந்திருங்கள். கவனையீர்ப்பு குறைவு. ஏன்னா.. மானிப்பாய்.. செவ்வாய்க் கிரகத்தில் தானே இருந்தது. ஈழப் போர் நடந்தது புளுட்டோவில். நாங்கள் கேட்பது.. நீங்கள் சைக்கிளை ஓடுங்க.. தலையால நடவுங்க.. அடிப்படை வசதி அற்ற.. மற்றும் அதிமுக்கிய தேவையுள்ள... மக்களுக்கு இலவச மருத்துவத்துக்கு உறுதி செய்யுங்கள் என்பது மட்டுமே......!!! ஏன்னா அந்தளவுக்கு மருத்துவச் செலவுகள் சிகரம் எட்டியுள்ளது தாயக மண்ணில். தென்னிலங்கை உட்பட. ஒரு சிங்களத் தாய் பிழைப்புக்கு வைச்சிருந்த கணவரின் ஓட்டோவை வித்து கிட்னி சம்பந்தப்பட்ட பரிசோதனைக்கு செய்த காசைக் கட்டிட்டு அழுது கொண்டு போனதையும் அந்த தாய்க்கு ஆறுதலாய் நாலு வார்த்தை தான் சொல்ல முடிந்ததையும் உள்ளடக்குகிறேன்.
  14. சிலர் சேர்ந்து பலராகி இப்ப ஒரு தெளிவான பல்கோண நெட்வேர்கையே கட்டமைச்சிருக்கிறாங்கள். அதன் வருமானம்.. அமெரிக்கப் பொருளாதாரத்தையும் எகிறுது. நீங்கள் இன்னும்.. கண்ணை மூடிக்கொண்டு பால் குடியுங்க. அது தான் விதிப்பு. அவங்களுக்கு வசதி. அவங்க டேட்டி மனியை எப்படி சினிமா மூலம்.. வைட் பண்ணுறாங்க (இப்படி பல மார்க்கங்கள் உண்டு) என்பது கூட விளங்கல்லையன்னா.. நீங்க இன்னும் அந்த குறுகிய சிலருக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருப்பது வியப்பல்ல.
  15. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வரும் நிகழ்வுகள்.. இப்ப இல்லை எப்பவும் நடக்குது தான். அவர்களும் எம்மவர்களோடு உரையாடி.. மீன்பிடியில் அவர்கள் பகுதிக்குள் எம்மவர்களை விடுகினம். மேலும்.. அவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் அதிகம் செலவு செய்யினம். இவர் குத்தியருக்கு ஆழ்கடல் மீன்பிடிக்கு தன் ஏஜென்டுக் கூலிகளை அனுப்பி மீன்பிடிச்சு அதனை வெளிநாட்டு ஏற்றுமதி கம்பனிகளுக்கும்.. காபிரேட்டுக்கும் கொடுத்து கமிசன் பார்க்கனும். அதில பல மில்லியன் ஏலவே புரளுது. உண்மையில்.. தாயக மீனவர்களில் அநேகர் இன்னும்.. ஆழ்கடல் மீன்பிடியில் இல்லை. அவர்களின் ஒரே கவலை தமிழக மீனவர்கள் பாவிக்கு வலை அளவு தான். குஞ்சு மீனை அள்ளிக் கொண்டு போவதால்.. மீனுக்கு தட்டுப்பாடு வரலாம் என்பது. அது வாழ்வாதரத்தை பாதிக்கும். அது எல்லா இடமும் உள்ள பிரச்சனை. பிரிட்டன் - பிரான்ஸ் ஆங்கிலக்கால்வாயிலும் இதே பிரச்சனை ஓடினது. இப்போ பேசி சமரசத்துக்கு வந்திருக்காங்க. அதையே மீனவர்கள் பின்பற்றலாம். ஆனால் தாடியன் விடான். அவனுக்கு அரசியல் செய்யவும் கமிசன் வாங்கவும் பிரச்சனைகள் வேணும். வளர்ப்பான். உண்மையில்.. இந்த மீன்பிடி தாடியனால்.. இப்ப கொள்ளை வியாபாரமாகிட்டுது. இதனால் தான் யாழ் சந்தைகளில் மீனின் விலை அதிகரிச்சிருக்குது. உண்மையில்.. உதை எல்லாம் உள்ளூர் யுரியுப் ஆசாமிகள் காட்டாங்கள். மேலும் பண்ணைக்கடலின் கோட்டை பகுதி முழுக்க.. சீனக் கம்பனிக்கு கடலட்டை வளர்ப்புக்கு என்றாக்கி.. நீரோட்டம் தடுக்கப்பட்டு.. கடல் அழுகி நாறுது. மீன் பெருக்கம் குறைஞ்சு மீன்பிடி குறைந்திட்டுது என்று மீனவர்கள் வருத்தம் தெரிவிச்சினம். அந்தச் சீனக்கம்பனிக்கு கடலட்டை கொடுக்கிறது டக்கிளஸ் ஏஜென்டுகள். மிஸ்டர் குத்தியருக்கு கமிசன் பல வகைகளில் வந்து குவியுது. ஆக.. இந்த பிரச்சனையை இவன் தீர்க்கமாட்டான். தாடியனின் கமிசனில் ஒரு பகுதி மகிந்த கும்பலுக்கும் போவதால் தான் ரணில் இவனை அமைச்சரில் வைச்சிருக்கிறார். தாடி.. முந்தி சொந்த மக்களை நேரடிப்படுகொலை செய்து பிழைத்தார். இப்ப அவர்களின் வாழ்வாதாரத்தில் அடிப்படுதோடு.. தமிழக - ஈழத்தமிழர் உறவைக் குலைப்பதையும் சிங்கள எஜமானர்களுக்காக செய்து கொண்டு.. தன் மீன்பிடி ஏஜென்டு வேலையையும் கடலட்டை வேலையும் கவனிக்கிறார். யாழ் பண்ணைக்கடல் புழுத்து நாறுவது தொடர்பில்.. ஏன் யாரும் இன்னும் முறைப்பாடு கொடுக்கவில்லை. கொடுக்க மாட்டினம். ஏன்னா.. ஐயாவின் கடலட்டை கோட்டை கரை முதல் மண்டைதீவு வரை கடல்வாடியமைத்து தொடருது.
  16. நாங்களும் நிறைய சந்தர்ப்பங்களில் சரிட்டி நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறோம். வழமையா நிகழ்வின் முடிவில் அன்பளிப்புத் தொகை.. இவ்வளவு இன்ன வைத்தியசாலைக்கு.. இன்ன பகுதிக்கு வழங்குறம் என்று ஒரு அன்பளிப்பு செக் வடிவில்.. காண்பித்து.. பொதுவெளிக்கும் அறிவிக்க செய்து தான் கொடுப்பது. ஏனெனில்.. ஆன்லைனில் காசு கொடுத்தது.. பப்ளிக். அவனுக்கு/அவளுக்கு தெரியனும்.. தனது பங்களிப்பு சரியாத் தான் போய் சேர்ந்திருக்கான்னு. அதை தெரிந்து கொள்வது அவர்களின் உரிமை. வெள்ளைகளும் அப்படித்தான் பெரும்பாலும் செய்யினம். இங்க சைக்கிள் ஓடினவைக்கு ஏதோ ரேஸ் ஓடின கணக்கா பதக்கம்.. மண்ணாங்கட்டி.. உந்த அநாவசிய செலவுகளை குறைச்சு அதனையும் சேர்த்து வைத்தியசாலையை தரமுயற்த்த வழங்கலாம் தானே.
  17. சேர்த்தார்கள் சரி. எவ்வளவு சேர்த்தார்கள். எவ்வளவை கையளித்தார்கள்.. என்ன வேலைத்திட்டம். இதே தனியார் வைத்தியசாலைக்குத் தானோ?. ஆனால் சமூகம் ஏதோ மானிப்பாய் அரசினர் வைத்தியசாலைக்கு செய்வது போன்ற சாயலில்.. நூல் விட்டிருந்தது அதுதான். ஏதோ நன்மைக்கு நடந்தால் சரி. ஆனால்.. மக்களிடம் மருத்துவச் செலவுக்கு என்று தனியார் மருத்துவமனைகளும் அங்கு விசிட் அடிக்கும் வைத்தியர்களும் அடிக்கும் கொள்ளைக்கு யார் தான் முடிவெழுதுவதோ..??! ஒரு வைத்தியரை காண...5000 என்றால்.. அவர் சொல்லுற சோதனைகளை உடன செய்து முடிக்க ஒரு 20,000 பின் மீண்டும் அந்த றிப்போட்டோடு வைத்தியரை காண.. மீள ஒரு 5000 அதன் பின் அவர் எழுதும் மருந்துகள்.. இஸ்தியாதிகள்.. அதுவும் அங்க அந்த மருத்துவனை மருந்தகத்தில் தான் வாங்கனும்.. அதுக்கு தனிய ஒரு 20,000 அதில வைத்திசாலை அன்ட்மின் காசு வேற.. 5000 ஆக.. சிங்கிள் விசிட்டில.. 55,000 காலி . இது பருமட்டானது. இதில ஸ்பெசலிஸ்டு.. கென்சல்ட்டனு.. இன்னும்.. பிசி டாக்டரு.. இவைக்கு விலை தலைக்கு மேல.. விலை வைச்சுத்தான் அழைக்கனும். இவ்வளவு செலவு செய்து.. உள்ளூர் மக்கள் எப்படி நோயை குணமாக்க நினைப்பாங்க. நோயை புறக்கணிச்சு வாழ நினைப்பாங்களா.. இல்லை.. கடன உடன வாங்கி.. காசைக் கொட்டிட்டு.. பின் உடல் நோயோடு மன அழுத்தத்தையும் வாங்கிக்குவாங்களா..??! வெளிநாட்டில் இருந்து விட்டு... போற கொலிடேயோட... சைக்கிள் ஓடி பணம் சேர்த்து ஒரு வைத்தியசாலையை தரமுயற்திறது நல்ல விசயம் தான். ஆனால்.. அதனை நாம் சரியான மக்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகைக்கு செய்யுறமா என்று சிந்திக்க மாட்டினமோ இவை..?! அந்தளவுக்கு மூளை இல்லை. வெளிநாட்டில.. ஒரு பவுன் முதலீடு என்றாலும் ஆயிரம் யோசிக்கிற வெள்ளை உதெல்லாம் உவைக்கு கற்றுக் கொடுக்காமலா விட்டான்..??! குறைந்தது... வருமானம் குறைந்த மக்களுக்காவது இலவச மருத்துவ சிகிச்சை.. ஆலோசனை.. வழங்குவினமா..???! மானிப்பாய் ஒன்றும் சிட்னி.. ரொரான்டொ.. லண்டன்.. நியோர்க்கில் இல்லை தானே.. என்று நம்புறம்.
  18. என்ன கொக்குத்தொடுவாய் உக்ரைனில் இருக்காமல்.. போய்விட்டது. இருந்திருந்தால்.. பிபிசி.. சி என் என்.. என்று பிளாஸ் நியூஸ் எகிறி இருக்கும். இதில் இருந்து விளங்கனும்.. நாம் எப்படிப்பட்ட மனித டிசைன்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை.
  19. அதுசரி.. இவடை கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களில்.. அவுஸீ.. சீனா.. ஹிந்தியான்னு இப்ப எல்லாமே பெற்றோல் பங் வைச்சிருக்குது சொறீலங்காவில். யாழ்ப்பாணத்தில் சீன பெற்றோல் பங் இருக்குது.
  20. வெள்ளைக்கு எங்க போனாலும் பன் னுக்கு ஆக்கள் தேவை. இப்படியான எங்கட வெங்காயங்களுக்கு தங்கட மேக்ப் மூஞ்சிக்கு விளம்பரம் தேவை. அப்புறம் என்ன.. மருத்துவமனையில் பெயரால்.. கிளப்படா கிளியப்பட்ரோ என்றிருப்பாங்கள். கிளப்பியாச்சு. அதிலும் நம்ம ஊடகங்கள் இருக்கே.. ஊரில எதை சுட்டிக்காட்டி சமூகத்தை நாட்டை வழிநடத்தனும் என்ற விவஸ்தை இல்லை. அதுகளும் மேக்கப் பின்னாடியும் தோல் கலருக்கு பின்னாடியும் திரியுதுங்க.
  21. உண்மையில் சமயபாடத்தை 9 வகுப்போடு நிறுத்தலாம். அதை ஓ எல் வரைக்கும் இழுப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. மொழி கணிதம் விஞ்ஞானம் சமூகக் கல்வி வர்த்தகமும் கணக்கியலும். ஆங்கிலம். இந்த 6ம் போதும்.. பரீட்சைக்கும். நீண்ட மதிப்பீட்டுக்கு 2 போதும். 1. அழகியல் (சித்திரம்.. சங்கீதம்.. பரதநாட்டியம்.. கண்டிய நடனம்.. இஸ்லாமிய நடனம்.. மீண்டும் தெரிவை மாணவர் கையில் விடுங்கள்) 2. தொழில்கல்வி (விவசாயம்/கைத்தொழில்/மின்சாரவியல்/கணனிப்பொறியில்/மின்னணுவியல். (தெரிவை மாணவர் கையில் விடுங்கள்.) மொத்தம் 8 க்குள் தேவையானது எல்லாத்தையும் அடக்கலாம். அதிலும் கடைசி 2 பாடங்களிலும் சித்தி போதும்.. ஏ எல் போக என்றாகனும். குறிப்பாக மதிப்பீட்டு பரீட்சையில்.. பாஸ் அல்லது பெயில் மட்டும் தான் அன்றாகனும்.ஏ பி சி எஸ் வழங்கப்படக் கூடாது. அப்படி வழங்குவது.. ஆசிரியர்களின் பாகுபாட்டுச் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்யும். அதைவிடுத்து பரீட்சை பாடங்களை 7 ஆக்கி மதிபீட்டு பாடங்களை 3 ஆக்கி.. (மதிப்பீட்டு பாடம் என்றால்.. ரீச்சருக்கு ஜால்ரா போற்ற பார்ட்டிகளுக்கு உயர்புள்ளி.. மேற்கு நாடுகளிலேயே இந்தக் கூத்து.. சொறீலங்கா சொல்லிவேல்லையில்ல..) மொத்தம் 10 பாடங்களின் சுமையை ஓ எல் வரை காவுவது.. அநாவசியமானது. வாழ்க்கையில் சமயத்தில் படிச்ச.. ஒரு தேவாரத்தை தவிர மிச்சம் ஒன்றும் உருப்படியாக ஞாபகமில்லை. அதுக்குக் கூட பண் கிண் எதுவும் ஞாபகமில்லை. அது உனக்குத் தேவையா..??! சொறீலங்கா. எந்த பெளத்த மாணவர் பிரித் ஓதுறான். புத்த பிக்குதானே ஓதுறான். வேணுன்னா அவனைப் படிக்கச் சொல்லுறது... சமயத்தை.
  22. ஏன் கனடாவில் யாழ்ப்பாணம் முஸ்லிம்களும் அகதிகளாகப் போய் இருக்கினம். சிங்களவர்கள் ஜே வி பி மற்றும் அரசியல் பழிவாங்கல் என்று போய் இருக்கினம். கொழும்பான் அண்ணாவுக்கு மாலைக்கண்ணோ. காண்பதெல்லாம்.. பேய் என்கிறார். ஆனால்.. ஒரு உண்மை உண்டு. தமிழர்கள் என்றில்லை தெற்காசிய நாட்டைச் சேர்ந்தவர்களே இப்படித்தான். அது அவர்களின் டிசைன். அதில் எல்லா மதம் மொழி இனம் அடங்கும்.
  23. சுந்தர் பிச்சையின் காலம் ஜிமெயிலோடு போக வேண்டியது. கூகிள் குரோமால்/ஓஸ் நீடிச்சது. எனி நீடிக்குமா..??! ஆனால்.. கூகுள் ரைவ் என்று கொண்டு வந்து எங்கள் தரவுகளை தங்களுக்கு வசதியான இடத்தில் வைக்கிற வேலைச் செய்தது இவர் தான். அது ஒருவகை மோசடி. நமக்குத் தெரியாமலே நம் தரவுகளை திருட சோதிக்க பயன்படுத்த முடியும். சும்மா இருந்த பிச்சைக்கு ஹிந்தியா பத்மபூசன் கொடுத்தது தான் கெட்ட நேரம் ஆரம்பிடிச்சு.
  24. பிரபாகரன் யார் என்று கேட்டால்.. பயங்கரவாதின்னு சொல்லும்.. அளவுக்குத்தான் ஏ ஐ இருக்குது. ஒவ்வொரு தனிமனித சிந்தனையையும் உள்வாங்கிப் பதில் சொல்லுற அளவுக்கு அது கிடையாது. சாக்கடைக்குள் முத்துக்குளிக்க.. ஏ ஐ வகுப்பர்களுக்கு இன்னும் சரியாக.. கோடிங் கைக்கூடவில்லை. சோ.. சாட். ஆனால்.. முன்னேற இடமுண்டு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.