Everything posted by nedukkalapoovan
-
யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்.
அன்னை பூபதி அம்மாவுக்கு நினைவஞ்சலிகள்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
சொறீலங்கா அரசாங்கமே அப்படித்தானே இயங்குது. உதாரணத்துக்கு பேராதனை தாவரவியற் பூங்காவுக்கு உள்நுழைய வெளிநாட்டு பாஸ்போட் காரரிடம் 3000 ரூபா என்றால் உள்ளூர் ஆக்களுக்கு 200 ரூபா. அரசாங்கமே அப்படி இருக்கும் போது உள்ளூர் வியாபாரிகள்..???? Peradeniya Royal Botanical Garden – Kandy Entrance Ticket Fee -2022 Bellow, all the ticket prices have been updated on 10th September 2022. Peradeniya botanical garden has different ticket prices for local, and foreign travelers. No discount for travelers from SAARC countries. Per person entrance tickets for foreign travelers There is no discount for travelers from SAARC countries. Foreign adults (Age 12 years and above 12 years): 3000LKR (9US$) School children & university students (Upon producing satisfactory proof of the same to the curator of the Botanical garden) : 1200LKR (3.5US$) Foreign children (Age 5 years and between 5 years to 12 years): 1500LKR (5US$) Foreign infant and toddler (Bellow 5 years): Free entry Per Person entrance ticket price for local travelers Local adults (Age 12 years and above 12 years): 200LKR Local children (Age 5 years and between 5 years to 12 years): 30LKR Local infant and toddler (Bellow 5 years): Free entry Local Adults over the age of sixty (60) on producing national identity card: 20LKR
-
யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு!
எந்த நாட்டில் தான் வைத்திய தவறுகளால் உயிரிழப்பு இல்லை...??! இப்போ வைத்தியரிடம் நல்ல கவனிப்பை பெறனும் என்றால்.. கையில காசிருக்கனுன்ன நிலை ஊரில். வைத்தியத்துறை சேவை என்ற நிலை மாறி வருவாய்க்கான வியாபாரம் ஆகிவிட்டது.
-
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்
ஈரானில் இருந்து ஹிந்தியா குழாய் வழியாக எண்ணை கொண்டு வருகுது. சொறீலங்கா எரிபொருள் விற்பனையில்.. ஹிந்தியாவை உள்ளிளுத்து விட்டாச்சு. பிறகேன்..விலை உயர்வு..??! ஈரான் - இஸ்ரேல் தகராறில் இழந்த அமெரிக்க டொலர்களை சரிக்கட்ட அமெரிக்க வளைகுடா கூட்டாளிகள்.. விலையை கூட்டி இருப்பாங்கள்.
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
அமெரிக்கா இஸ்ரேல் பிரிட்டன்.. மேற்கு ஐரோப்பா.. சண்டித்தனத்தில் நம்பிக்கை வைப்பது அதிகரித்து விட்டது. மேலும் அமெரிக்காவின் எதேச்சதிகார.. ஏகாதபத்தியம் தலைவிரித்தாடுவதும் அதிகரித்துவிட்டது. ஐநா வை கூட இஸ்ரேல்.. உக்ரைன் செவிமடுக்காத அளவிற்கு அமெரிக்காவின் செல்வாக்கு கூடி இருப்பது மொத்த உலகிற்கும் அதன் நலனிற்கும் நல்லதல்ல.
-
கொழும்பில் போதைப் பொருளுடன் இலங்கையின் கடற்படை உறுப்பினர்கள் கைது
இது முதற்தடவை அல்ல. சிங்கள முப்படை.. உளவுப்படை.. பொலிஸ்படை.. அரசியல்படை.. இவற்றின் ஒத்துழைப்பு இல்லாமல்.. சொறீலங்காவில்.. ஒரு ஊசி வியாபாரம் கூட செய்ய முடியாது. இந்த நிலையில்.. இவ்வளவு கோடிகள் புரளும் போதைவஸ்து வியாபாரம் மட்டும் நடந்திடுமா என்ன.
-
யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
இது விடயத்தில்.. எங்கள் கருத்தையே சூழலியலாளரும் அரசியல்வாதியும் எங்கள் முன்னாள் ஆசிரியருமான ஐங்கரநேசனும் கொண்டிருக்கிறார். எதுக்கும் தாடியருக்கு உறைக்கச் சொல்லுங்கள்.
-
செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்
எங்கள் கருத்தையே ஐங்கரநேசனும் கொண்டிருக்கிறார். எதுக்கும் தாடியருக்கு உறைக்கச் சொல்லுங்கள்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஊழல்.. வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு.. ரவுடிசம்.. போலி வாக்குறுதிகள்.. பணப்பட்டுவாடா.. வெகுமதிகள்.. எதிர்கட்சி சின்னங்களை பறித்தல்.. வாக்கு இயந்திரத்தில் மோசடி.. வாக்காளர் நிரலில் மோசடி.. சொந்தக் கொள்கைகளை முன்னிறுத்தாது.. எதிர்கட்சிகளை வசைபாடும் பிரச்சாரங்கள்.. போலிக் கூட்டணிகள்.. என்று சனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் ஹிந்திய தேர்தல்களில் எந்த சனநாயகத்தன்மையும் இல்லை... என்ற அடிப்படையில்.. அதனை அங்கீகரிக்கும் விதமான இப்போட்டிகளில் ஈடுபடும் எண்ணமில்லை. அதுசரி.. வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தல் வைக்கினம்.. அதையேன் நாடு பூரா ஒரே நாளில் வைச்சு அடுத்த நாளே முடிவுகளை வெளியிட முடியாது. சன நாயகம் பிறந்த அமெரிக்காவில் கூட.. தேர்தல் நடந்து மாதங்கள் ஆன பின் முடிவு அறிவிப்பு என்பது இல்லையே. முடிவுகளை மாதக்கணக்கிற்கு இழுத்தடிப்பது.. மோசடிகளுக்கு இன்னும் கூடிய சந்தர்ப்பம் அளிக்கும். தெரிவுக்கு நன்றி கோசான்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அதேவேளை பிபிசியின் கணிப்பில் இதே 3.3 பில்லியன் மொத்தமாக. இஸ்ரேல்.. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மொத்தமாக செலவு செய்தது.. இந்த தாக்குதலுக்கு எதிராக.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
3.3 மில்லியன் அல்ல.. 3.3 பில்லியன்.. அமெரிக்க டொலர்... சொலவாகியுள்ளது.. ஈரானின் வான்வழி ஏவு கலன்களை அழிக்க.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல. இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார். பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள்... எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது.
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
சிரியாவுக்குள் ஈரானிய தூதரகத்தை தாக்கியது மிகவும் மோசமான இஸ்ரேலின் சர்வதேச பயங்கரவாதமாகும். இதனை யதார்த்தமாக சர்வதேசம் கண்டித்திருக்க வேண்டும்..! ஆனால் இஸ்ரேலும் அதன் அமெரிக்க மேற்குலக அடிவருடிகளும் செய்தியை வெளியிடுவதோடு அடங்கிவிட்டார்கள். இரண்டாம் உலகப் போர் கூட ஒரு தூதரக அதிகாரியின் கொலையுடனே தான் ஆரம்பமானது... என்ன தான் பல உள் காரணிகள் இருப்பினும். இஸ்ரேலின் எல்லை தாண்டிய உலக பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது கடினம். ஈரான் என்ற சுயாதிபத்திய நாட்டின் தூதரகத்தை தாக்கி அதன் அதிகாரிகளை கொலை செய்த இஸ்ரேலின் பயங்கரவாதம் சர்வதேச நீதியின் பால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக.. ஈரானின் பலவீனமான பதில் தாக்குதலால் அல்ல என்பதுவே எங்கள் கணிப்பு.
-
யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
இவருக்கு வாக்கு போடும் தீவகத்திற்கு.. ஏன் ஒரு திட்டமும் போகுதில்லை..??! மண்டைதீவு.. அல்லைப்பிட்டி.. வேலணை.. அல்லது ஊர்காவற்துறை போன்ற இடங்களில் மைதானம் அமைந்தால்.. ஊரவர்களுக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும்.. உல்லாசப் பயணமும் பெருகும்.. பின்ந்தகிய பிரதேசமாகவே இருக்கும்..தீவகம் முன்னேற வாய்ப்பும் அமையும். மேலும் மைதானம் அமைவதற்கான தரைத்தோற்ற நிலைமைகளும் அங்கு அதிகம். சகதிக்குள் மைதானம் அமைக்க முனைந்து கமிசன் அடிக்க நினைப்பதிலும்.
-
யாழ். நகரின் தூய்மை குறித்து அவதானம் : கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்
இவர் தன்னை ஒரு ரவுடிகளின் ஏக தலைவர் என்ற நிலையில் வைச்சிருக்கப் பார்க்கிறரோ..?! இவரின் அமைச்சு கடற்தொழில். இவர் பார்க்கிற வேலைகள்.. மாநகரின் வேலை.. விளையாட்டுத்துறையின் வேலை.. நீர் முகாமைத்துவத்தின் வேலை.. கல்வி அமைச்சின்/திணைக்களத்தின் வேலை.. இவர் தான் ஒரு அசகாயசூரன் என்ற நினைப்பில் இப்பவும் இருக்கிறார்.. இந்த நினைப்பு தான் வடமாகாணத்தில் தீவகம் மிகவும் பிந்தங்கிய பிரதேசமாக இருக்க முக்கிய காரணம். தனக்கு வாக்குப் போட்ட மக்களின் அடிப்படை தேவைகளை கூட.. பூர்த்தி செய்ய முடியவில்லை. யாழ் - ஊர்காவற்றுறை 779 பேரூந்துச் சாலை இன்னும் முழுமையடையவில்லை. இச்சாலையில் தான் பிரதான திணைக்களங்களும் பள்ளிகளும் அரச தனியார் மற்றும் விவசாயிகளும் தமது தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்கின்றனர். அந்த வீதி இன்று வரை முழுமை அடையாமக்கு.. காரணம்.. இவருக்கு சரியான கமிசன் கொடுக்கக் கூடிய கொத்தராக்கர் வராமையாம். தீவகத்தில் இருக்கும் பல பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. குறிப்பாக தொலைபேசி வசதி இல்லை. ஒலிபெருக்கி.. ஒலி வாங்கி வசதி இல்லை.. சரியான தொடர் குடிநீர் விநியோகம் இல்லை.. மதிய உணவு கூட இல்லை. காலையில் உணவருந்தாமல்.. 10 க்கு குறைந்தது 5 பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள். இவரின் வாக்கு வங்கிக்கான களமாக இருக்கும் தீவகம் கூட இவரால்... முன்னேற்றம் அடைய முடியவில்லை.. இவர் யாழ் நகரை துப்பரவாக்குவாராம். சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பாராம். தீவகம் சர்வதேச கிரிக்கெட் மற்றும் விமான நிலையத்திற்கு தகுந்த இடம். உல்லாசப் பயணிகளை கவரக் கூடிய இடம். இருந்தும் ஒரு திட்டமும் அங்கு இல்லை. பெரும் கூச்சலில் ஆரம்பித்த.. வேலணை நகரத்திட்டத்தை.. வங்களாவடிச் சந்தியில் போய் பார்த்தால் தெரியும். இவர் ஆரம்பித்த எதுவுமே.. உருப்படியாக இல்லை. கமிசனை.. வாங்கி பொக்கட்டிக்குள் போட்டதோடு.. சில நாலு தாடிக்காரர்களை கூட்டிக் கொண்டு.. ஊடகக் கமராக்களுக்கு ஓசி விளம்பரம் கொடுப்பதே இவரின் இப்போதைய பணியாக இருக்கிறது. உருப்படியில்லாத தமிழ் தேசியக் கட்சிகளின் நடவடிக்கையால்.. இவரின் தில்லு முல்லு அரசியல் இன்னும்.. நீடித்து நிலைக்கிறது. இவர் உண்மையில் சிங்கள பேரினவாத அரச ஏஜெனட்.. அதாவது ஒற்றர். அதையே அவர் அன்றில் இருந்து இன்று வரை செய்கிறார்.
-
'கடவுளின் துகள்' விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்... மனித வரலாற்றில் முக்கியமானவர் - ஏன்?
பீட்டர் ஹிக்ஸூக்கு இரங்கல்கள். ஹிக்ஸ் போசான் என்பது துகள் அல்ல அலை - புலக் கூறு.. எங்கிறார்கள் விஞ்ஞானிகள்.. ஏனெனில்.. இதற்கு இருப்பது புறக்கணிக்கத்தக்க திணிவு. மேலும் ஹிக்ஸ் அலை- புலக்கூறுகள்.. மிகக் குறுகிய காலமே அவதானிக்கப்பட்டுள்ளன... அவை உருவாகிய மாத்திரத்திலேயே.. தாமாகவே பிரிந்து வேறு கூறுகளாகி விடுகின்றனவாம். அதனால்.. ஹிக்ஸ் அலை- புலக்கூறுகள்.. திணிவாகத்திற்கான.. கடவுளின் கூறு என்பதற்கான வாதம் பொய்த்துப் போய்விட்டது. ஆனால் ஹிக்ஸ் அலை-புலக்கூறுகள்.. வேறு போசான்கள்.. மற்றும் லப்ரன்களுடன் இடைதாக்கம் செய்து.. திணிவை உருவாக்கு உதவுவாதகச் சொல்லப்படுகிறது. இப்போ.. பேய்க் கூறுகளை (ghost particles) தேட வெளிக்கிட்டிருக்கிறார்கள். ஏனெனில்.. ஹிக்ஸ் உருவாகி பிரிந்து வேறு ஏதோ கூறுகளாகிச் செல்கிறது. அதென்ன கூறுகள் என்பது அடுத்த வினா..???! நாம் உருவாக்கியுள்ள சென்சர்களால் கண்டறியப்படக் கூடிய கூறுகள் அல்லாதவையாகக் கூட இருக்காலம். எதுஎப்படியோ.. ஹிக்ஸ் 1960களில்.. தன் சிந்தனையில் கண்டதை.. சுவிஸ் ஜெனிவா.. சேர்ன் ஆய்வுகூடம் நிஜயத்தில் அவதானித்ததாகச் சொல்லப்படுகிறது. What is the Higgs boson? In our current description of Nature, every particle is a wave in a field. The most familiar example of this is light: light is simultaneously a wave in the electromagnetic field and a stream of particles called photons. In the Higgs boson's case, the field came first. The Higgs field was proposed in 1964 as a new kind of field that fills the entire Universe and gives mass to all elementary particles. The Higgs boson is a wave in that field. Its discovery confirms the existence of the Higgs field. https://home.cern/science/physics/higgs-boson
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை விடுத்து.. சர்வதேச எல்லைகளை மதிக்காமல் ஊடுருவித் தாக்கும்.. இஸ்ரேலில வான்படை விமானங்களை சுட்டு வீழ்த்தலாமே. அதுக்கு வக்கில்ல... சும்மா வாயளவில் தான்.
-
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும்
புலி எதிர்ப்பு வாந்தி.. பிரபாகரன் வசைபாடல் எல்லாம் இப்ப புலம்பெயர் சும்மா இருப்பவர்கள்.. இலக்கியமாகி விட்டன. இவை 2009 மே முன் வேற மொழி பேசிச்சினம்.. மாற்றுக்கருத்து அரசியல்.. அதுக்கு என்னாச்சுப்பா. அதுவும் புலிகளோடு அழிஞ்சு போச்சுப் போல. இப்ப புலி எதிர்ப்பை இலக்கியமாக்கிட்டாங்கள்... வசதியாக தாம் சில கூடி வசைபாடி மகிழ.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
பொதுவெளியில் இந்தப் பெண் பேசும் வார்த்தைகள் சகித்துக் கொள்ளக் கூடியவை அல்ல. சிறுவர்களும் இதனை கேட்க முடியும். அந்த வகையில் இவரின் காணொளிகளுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்வதன் மூலம்.. இவரின் அநாகரிகத்துக்கு முடிவுகட்டலாம். இவர்கள் எப்பவும் நீடித்து நிலைக்கப் போவதில்லை. இப்படி சிலது காலத்துக்கு காலம் வந்து போயிடுங்கள். அதுகளை காலமே தண்டிக்கும். உணர்ச்சி வசப்பட்டு இவர்களை தண்டிக்க சட்டத்தை கையில் எடுத்து பிரான்ஸ் காவல்துறையின் அடாவடிக்கு இலக்காவதில் இருந்து இளைஞர்கள் புத்திசாதுரியுமாக விலகி இருந்து கொள்வதே சிறப்பு.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
தமிழினப் படுகொலையில் ஹிந்தியாவின் கூட்டுப்பங்களிப்பை ரசித்து உருசித்த சிங்களம்.. இப்போ தம் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுந்தவுடன்.. அதில் இருந்து தம்மை தற்காக்க ஹிந்தியாவை காட்டிக்கொடுக்கின்றனர். எவருக்காக எல்லாம் ஹிந்தியா தமிழினத்தை அழித்ததோ.. அவர்களால்.. ஹிந்தியா நிச்சயம் ஏமாற்றப்பட்டு.. சீனா அதன் அருகில் நிறுத்தப்படும் கால வெகு விரைவில் உருவாகும். இது இந்திராவுக்குப் பின்னான ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களின் மிகப்பெரிய ராஜதந்திரத் தோல்வி ஆகும்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம்.