Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    52124
  • Joined

  • Days Won

    38

Everything posted by nunavilan

  1. நல்ல முன்னுதாரணமான முடிவு. ரனிலின் கடந்த கால கணக்கு வழக்குகளையும் ஒருக்கால் சரி பார்க்க அநுர அரசு முயல வேண்டும்.
  2. PadaKu TV சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.
  3. ‘அந்தஸ்து அல்லாது ஒருவருடைய செயற்பாடுகளே விழுமியத்தைத் தீர்மானிக்கிறது’ – சுரேன் சுரேந்திரன் அமரபுர மஹாநாயக்கர் நியமன வைபவத்தில் பேச்சு அமரபுர மஹா நிக்காயா பீடத்தின் அதிபதியாக வணக்கத்திற்குரிய கலாநிதி மதம்பகம அஸாஜி திஸ்ஸ தேரர் நியமனம் பெற்ற வைபவம் டிசம்பர் 07, 2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. மத மற்றும் மதிப்பிற்குரிய சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட இவ்வைபவத்தில் லண்டன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு சுரேன் சுரேந்திரன் அவர்கள் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவ்வைபவத்தில் உரையாற்றிய திரு சுரேந்திரன் “ஒரு பெளத்த அதியுயர் பீடத்தின் மஹாநாயக்கராக எமக்கு மிக நெருங்கிய தேரர் நியமிக்கப்படும் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக நான் லண்டனிலிருந்து வந்து கலந்துகொள்வது எனக்கு மிக மகிழ்ச்சியைத் தருகிறது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து இவ்வைபவத்தில் அவர் உரையாற்றும்போது: “எனது சிங்களம் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லாவிட்டாலும் நான் இம்மொழியில் பேச எத்தனிக்கிறேன். புத்த பகவானால் போதிக்கப்பட்ட சமத்துவத்தையும் அரவணைப்பையும் எடுத்துக்காட்டும் வகையில், வேறெந்த தமிழருக்கும் கிடைக்காத, இம்மேடையில் பேசுவதற்கான இப்பாக்கியத்தை எனக்களித்தமைக்காக நான் பெருமைப்படுகிறேன். புத்த பகவானின் போதனைகளில் ஒன்றான வாசல சூத்திரத்தில் குறிப்பிட்டபடி “ஒருவருடைய உண்மையான விழுமியம் அவரது சமூக அல்லது குல அந்தஸ்துகளை வைத்து அல்லாது அவரது செயற்பாடுகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது” . “தேரருடனான எனது ஈடுபாடு பெப்ரவரி 2010 இல், பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவை அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஆரம்பமானது. இலங்கையில் நடைபெற்று முடிந்த போரின் இரத்த ஆறுகள் இன்னும் வற்றிப்போகாத ஒரு காலத்தில், வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு அப்பாவி மக்கள் காணாமலாக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்நிகழ்வு நடந்தது என்பதை நான் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். இப்படியான காலகட்டத்தில் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவென நாம் தேரரை அழைக்கும்போது அதை நாம் எடுத்த ஒரு துணிச்சலான நடவடிக்கையாகவே நினைத்தோம். ஆனாலும் இலங்கையிலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் எமது சமூகத்தின் முன்னர் எங்களோடு தோளோடு தோளாக நின்று தேரர் சமத்துவம் பற்றிப் பேசியது தான் உண்மையான துணிச்சல் என நான் கருதுகிறேன். “தர்மசக்தி என்னும் பல்மத அமைப்பின் மூலம் சகவாழ்வையும், சமத்துவத்தையும் முன்னெடுப்பதில் அவர் ஆற்றிய பணியும் ‘இமாலயப் பிரகடனத்தின்’ உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்கும் சமத்துவத்தை முன்னெடுக்க அவர் பேச்சளவில் அல்லாது செயலிலும் காட்டியமைக்கான உதாரணங்கள் என்பேன். “சமத்துவத்தில் முழுமனதாக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு மதத் தலைவரின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு நிகழ்வில் பங்குபற்றவும் பேசவும் கிடைத்த வரலாற்றுச் சந்தர்ப்பத்திற்காக நானும் எனது சமூகமும் நன்றியுடையவர்களாக இருப்போம் எனக்கூறி இவ்வுரையை முடித்துக்கொள்கிறேன், நன்றி” எனத் தெரிவித்தார். https://marumoli.com/அந்தஸ்து-அல்லாது-ஒருவரு/
  4. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல்
  5. துருக்கி இருக்கும் வரைக்கும் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை.
  6. இனமொன்றின் குரல் கோத்தபாயா ராஜபக்சே செய்த தவறை திரு அனுரா குமார திஸநாயாக்க அவர்களும் செய்கின்றார் அதாவது விலைக் கட்டுப்பாடுகள் பயனற்றவை என்பதை திரு அனுரா குமார திஸநாயாக்க அவர்கள் கோத்தபாயா ராஜபக்சேவின் தவறுகளிலிருந்து கூட படிக்க வில்லை இது ஆபத்தான விளையாட்டு எந்த 'விலை' யையும் அரச அதிகாரத்தால் கட்டளையிட்டு தீர்மானிக்க முடியாது It’s a market-driven phenomenon சந்தை ஒன்றினால் மட்டுமே Suppliers மற்றும் Consumers இடையே மிகவும் சரியான சமநிலையை ஏற்படுத்த முடியும். இந்த சமநிலையே விலைகளை தீர்மானிக்க வேண்டும் கோத்தபாயா ராஜபக்சே அரிசி கடைகளுக்குள் கூட நுழைந்து ஆய்வு செய்தார் ஆனால் விலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை விநியோகத்தை உறுதி செய்ய முடியவில்லை இது இலங்கையின் அடிப்படையில் ஒரு கருத்தியல் பிரச்சினை போல இருக்கின்றது சுதந்திர இலங்கையின் சகல ஆட்சியாளர்களும் சந்தைகள், விலைகள் மற்றும் விநியோகத்தை அரச அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினார்கள் ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை இதனால் 75 ஆண்டுகளாக நெருக்கடிகள் தொடருகின்றது இப்போது திரு அனுரா குமார திஸநாயாக்கவும் அதே பாரம்பரிய தவறை தொடர முயற்சிக்கின்றார் அரிசி பிரச்சனை எல்லை தாண்டியிருக்கின்றது முட்டை,முதல் தேங்காய் வரை நெருக்கடி இருக்கின்றது மரக்கறிகள் முதல் கடலுணவுகள் வரை விலை தளம்பல் உச்சத்தில் இருக்கின்றது மருத்துவ விநியோக பிரிவில் 130 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது மருத்துவமனைகளில் 85 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருக்கின்றது இது போதாதென்று உப்பை பெற்று கொள்ளுவதில் கூட சிக்கல் உள்ளது திரு அனுரா குமார திஸநாயாக்க விலை கட்டுப்பாடு மூலம் நெருக்கடிகளை தீர்க்க முயற்சிப்பதாக சொல்லுகின்றார் ஆனால் சந்தைகளை கட்டுப்படுத்தி இந்த நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வுகளை கண்டறிந்து விட முடியாது உண்மையான தீர்வுகள் சந்தையை வலுப்படுத்துவதில் மட்டுமே தங்கி உள்ளது Empowering markets is not about removing all oversight—it’s about creating conditions where businesses and consumers can operate freely but responsibly. Government should act as facilitator rather than controller, focusing on stability, fairness, and sustainable development.
  7. மாகாண சபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். அதன் மூலம் கொஞ்ச அபிவிருத்தியாவது செய்யலாம். இப்போ எல்லாவற்றுக்கும் மத்திய அரசை நம்ப வேண்டியுள்ளது. சிங்கள கட்சிகள் மாகாண சபை மூலம் சில அதிகாரங்களை தமிழ் மக்கள் பெற்று விடுவார்கள் என்று நினைக்கிறார்கள் போலும். அனுர சென்று இந்தியாவின் ஆலோசனையை பெறுவார்.
  8. முகப்புத்தகத்தில் வந்தது, நம்பிக்கையானவர். முன்னார் சாவகச்சேரி நகரசபை உறுப்பினராக இருந்தவர் அனுப்பியது. மூளையை குடைஞ்சு சொல்லுங்கோ உண்மையை. மொழி பெயர்ப்பில் தான் வித்தியாசம் உள்ளது என நினைக்கிறேன்.
  9. · Tilvin Silva 4d · 2024 நவெம்பர் 30 வீரகேசரி செய்தித்தாள் என்னுடன் நடாத்திய நேர்காணலைச் சார்ந்ததாக பிரசுரித்துள்ள பிரதான செய்தி மற்றும் அதற்காக இடப்பட்டுள்ள தலைப்பு ஊடாக நான் வெளியிட்ட கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இந்த செய்தி மற்றும் தலைப்பு காரணமாக வாசகர் மத்தியில் தவறான கருத்து தோன்றுவதால் அதனை சரிசெய்யவேண்டியுள்ளது. வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987 இல் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தம் தவறியுள்ளதெனவும் அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளதெனவும், அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13 வது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் ஒழிக்கப்போவதில்லை எனவுமே அதன்போது நான் கூறினேன். மேற்படி புதிய தீர்வுகள் எதிர்காலத்தில் கலந்துரையாடலுக்கு இலக்காக்கப்படுகின்ற அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுமெனவும் அந்த தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மெழிவுகளை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்படுமென்றே கூறினேன். 2024 නොවැම්බර් 30 වීරකේසරී පුවත්පතේ මා සමග කළ සම්මුඛ සාකච්ඡාවක් ඇසුරින් පළකර තිබූ ප්‍රධාන ප්‍රවෘත්තිය හා ඊට යොදා තිබූ ප්‍රධාන ශීර්ෂ පාඨය මගින් මා පළකර තිබූ අදහස් විකෘති වීමක් සිදුව තිබේ. මෙම ප්‍රවෘත්තිය හා ශීර්ෂ පාඨය නිසා පාඨකයන් තුළ වැරදි අදහසක් මතුවන බැවින් එය නිවැරදි කළ යුතුව තිබේ. එහිදී මා පැවසුවේ උතුරේ ජනතාවගේ ගැටලු විසඳීමට 1987 දී ගෙනා 13වන සංශෝධනය අසාර්ථකව ඇති බවත් ඒ නිසා උතුරේ ජනයාගේ ගැටලු විසඳීමට වඩාත් ප්‍රායෝගික හා නිවැරදි විසඳුමක් ඉදිරිපත් කළ යුතුව තිබෙන බවත්, එවැනි වඩා හොඳ විසඳුමක් ඉදිරිපත්කර ක්‍රියාවට නගන තුරු 13වන සංශෝධනය හා පළාත් සභා අහෝසි නොකරන බවත්ය. එම නව විසඳුම අනාගතයේ ආණ්ඩුව සාකච්ඡා කරන නව ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට ඇතුළත් වනු ඇති බවත් එම විසඳුම අදාල සියලු පාර්ශ්වයන්ගේ අදහස් හා යෝජනා මත සකස් කරනු ලබන බවයත්ය.
  10. 379 ரன்கள், 14 விக்கெட்டுகள்.. பொறுப்பில்லாத இந்திய பேட்ஸ்மேன்கள்.. 2வது நாளில் நடந்தது என்ன? By Yogeshwaran Moorthi Published: Saturday, December 7, 2024, 17:27 [IST] அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களை சேர்த்துள்ளது. இன்னும் 29 ரன்களே பின் தங்கி இருந்தாலும், இந்திய அணியின் கைகளில் போதுமான விக்கெட்டுகள் இல்லாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 86 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து களத்தில் இருந்தது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் 337 ரன்களை குவித்தது. ""இந்திய அணிக்கு வில்லனே நான்தான்".. 2023 உலகக்கோப்பை நாயகனின் வெறியாட்டம்.. சதம் அடித்து சாதனை " இதன் 157 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. நட்சத்திர வீரர்களான கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கம்மின்ஸ் வீசிய சாதாரண பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்து கேஎல் ராகுல் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, ஜெய்ஸ்வால் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி வந்தார். அவருடன் சுப்மன் கில்லும் நல்ல கம்பெனி கொடுக்க, இளம் வீரர்கள் இருவரும் இணைந்து இந்திய அணியை காப்பாற்றுவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் ஸ்காட் போலாண்ட் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் 24 ரன்களில் நடையை கட்டினார். தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி வழக்கம் போல் 4வது ஸ்டம்ப் லைன் பந்துக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இன்னொரு பக்கம் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த சுப்மன் கில் மிட்சல் ஸ்டார்க்கின் அற்புதமான யார்க்கரால் போல்டாகி ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 6 ரன்களில் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்தில் போல்டாகினார். சீரான இடைவேளையில் விக்கெட்டை இந்திய அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. "இந்தியாவுக்கு ஆப்பு.. 2 கேட்சை மிஸ் செய்த சிராஜ், ரிஷப் பண்ட்.. 8வது சதத்தை விளாசிய ட்ராவிஸ் ஹெட்!" Advertisement பின்னர் ரிஷப் பண்ட் - நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் இணைந்து 2வது நாள் ஆட்டத்தை மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்திய அணி 2வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களை சேத்துள்ளது. பண்ட் 28 ரன்களுடனும், நிதீஷ் குமார் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2வது நாள் ஆட்டத்தில் மொத்தமாக 379 ரன்கள் குவிக்கப்பட்டு, 14 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக 2வது நாளிலேயே வீழ்த்தப்பட்டிருப்பதால், 3வது நாளுடன் இந்த டெஸ்ட் போட்டி முடிவடையும் என்று பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ரிஷப் பண்ட் - நிதீஷ் குமார் ரெட்டி பிடிவாதமாக பேட்டிங் ஆடி பெரிய ஸ்கோரை எடுக்கும் பட்சத்தில், இந்திய அணியால் 2வது இன்னிங்ஸில் சவால் அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Read more at: https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-test-india-scored-128-runs-for-5-wickets-in-the-2nd-innings-at-the-end-day-2-at-078013.html
  11. மக்களிடம் மன்னிப்புக் கேட்ட ஜனாதிபதி! ‘தென்கொரியாவில் இராணுவ ஆட்சியை மீண்டும் அமுல்படுத்த மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவில், அடுத்த வருடம் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை சட்ட மூலம் குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவியது. இதை அடுத்து தேச விரோத சக்திகளை ஒழிக்க, அவசரநிலை இராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்படுகிறது என ஜனாதிபதி யூன் சுக் இயோல் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். தென்கொரியா பாராளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் இராணுவ ஆட்சி பிரகடனத்திற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இராணுவ ஆட்சியை திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இராணுவ ஆட்சியை அமல் செய்யும் பிரகடனத்தை திரும்ப பெறுவதாக, ஜனாதிபதி யூன் சுக் இயோல் அறிவித்தார். இதனால் அந்த நாட்டில் 12 மணி நேரம் நிலவிய பெரும் குழப்பம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், ”மக்களை கவலை அடைய செய்துள்ளேன். பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இராணுவ ஆட்சி அமுல்படுத்தியதிற்கு என்னை மன்னித்து விடுங்கள் என தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.itnnews.lk/ta/2024/12/07/646067/
  12. பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் ஊடக அறிக்கையிடலில் கவனம் தேவை. இவை சித்திரக் கதைகள் அல்ல, ஆனால் வாழ்க்கை! - பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக 1938 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுங்கள் - பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் "பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற வாசகம் தாங்கிய கைப்பட்டி பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அணிவிப்பு பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாள் உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (டிச. 06) பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பெண் பணியாளர்கள் செம்மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தனர். முதலாவதாக "பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” எனும் வாசகம் தங்கிய கைப்பட்டி குழுக்களில் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர உள்ளிட்ட பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றிய அங்கத்தவர்களால் கௌரவ சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க ஆகியோருக்கும் இந்த கைப்பட்டி அணிவிக்கப்பட்டது. இதன்போது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். அதனையடுத்து, "பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” எனும் வாசகம் தங்கிய கைப்பட்டி பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, சபை முதல்வர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) நலிந்த ஜயதிஸ்ஸ, பிரதி சபாநாயகர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரிஸ்வி சாலி ஆகியோருக்கும் அணிவிக்கப்பட்டது. அத்துடன், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கைப்பட்டி மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழித்தல் மற்றும் பாலின அடிப்படையிலான சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலான பொது உறுதிமொழி அடங்கிய பத்திரமும் இங்கு வழங்கப்பட்டது. அதனையடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய குறிப்பிடுகையில், வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தொடர்பான செய்திகள் சித்திரக்கதைகள் அல்ல என்றும் , வாழ்க்கை தொடர்பான விடயங்கள் என்பதால், அவை தொடர்பான ஊடக அறிக்கையிடல்களில் கவனம் தேவை எனவும் தெரிவித்தார். பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் அறியாதவர்களால் அல்ல என்றும் மிகவும் நெருக்கமானவர்களால் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் குறிப்பிடுகையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக 1938 எனும் இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவித்தார். அவ்வாறான வன்முறைகள் தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பெண்கள் மீதான கணினி ஊடாக மேற்கொள்ளும் குற்றங்கள் தொடர்பின் கடினமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு பாராளுமன்றத்தில் முன்னுதாரணமாக பணியாற்றுவது பொறுப்பானது எனவும், நாட்டில் சட்டம் இயற்றும் பொறுப்பு காணப்படும் இடமான பாராளுமன்றத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அபிமானம், கௌரவம் நாட்டின் அனைத்துப் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் அபிமானம் மற்றும் கௌரவத்தை தீர்மானிக்கும் பிரதான இடமாகும் என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். https://www.parliament.lk/ta/news/view/4279?category=6
  13. பாடல்: தலை கோதும் இளங்காற்று படம்: ஜெய் பீம் இசை: ஸோன் றொல்டன் பாடியவர்: பிரதீப்குமார் வரிகள்: ராஜுமுருகன்
  14. அமெரிக்கா எப்படி உக்ரேனுக்கோ அதே போல் தமிழ் மக்களுக்கு கிந்தியா?
  15. அந்த மெளனிக்க வேண்டிய சரியான நேரம் என்ன என சொல்ல முடியுமா? முள்ளி வாய்க்கால் நடந்திருக்காது என்பதற்கான எடுகோள்கள் என்ன? உண்மையாகவா? ரனில் , எரிக் போன்ற சுத்துமாத்துகளுடன்? இந்த இரண்டு பேரும் ஈழ தமிழர்களின் தீர்வுக்குள் இன்றி அமையாதவர்களாக அப்போ (2009)இருந்தார்களா??
  16. காணோளி பற்றிய உங்கள் கருத்தென்ன? அப்படியா? நடக்க சந்தர்ப்பம் இல்லை என் கிறேன். சவாலுக்கு தயாரா? என் பி பி தான் நினைத்ததை செய்ய போகிறது. பாராளுமன்றத்தில் எதிர்த்து பேசப்போகும் ஒரே ஒருவர் அர்ஜுனாவாக தான் இருக்கும்.
  17. பார் அனுமதியை சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் யாரும் எடுக்க கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? சிறிதரன் போன்றவர்களின் பேர்கள் எப்படியும் வராது? அடுத்து என்ன???
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.