Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    52124
  • Joined

  • Days Won

    38

Everything posted by nunavilan

  1. றிசாட், மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் அடி தடி | அடித்து நொருக்கப்பட்ட றிசாட்டின் வாகனத்தொடரணி
  2. என்ன நினைச்சே : விக்னேஸ் & ஜீவிதா
  3. எத்தகைய பாத்திரங்களும் புகுந்து விளையாடக் கூடிய அற்புதமான நடிகர். அவரின் இழப்பு திரையுலகுக்கு பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்.
  4. விளம்பரம் அலையாகிய கேசம் பரந்த நெற்றி வில் புருவம் வேல் விழிகள் கொவ்வைச் செவ்வாய் எண்சாண் உயரம் உடுக்கிடை அகன்ற மார்பு வயதிரு பத்தைந்து இவளது அம்மாவுக்கு மணமகன் தேவை
  5. பாடல்: ஒரு தேவதை பார்க்கும் நேரமிது படம்:வாமனன் இசை: யுவன் வரிகள்: நா. முத்துகுமார் பாடியவர்:ரூப்குமார் ரதோட்
  6. முதல்வருக்கு வாங்கிய சமோசா மாயம்.. சிஐடி விசாரணை.. கேலி செய்யும் எதிர்க்கட்சிகள்..! முதலமைச்சருக்கு வாங்கிய சமோசா காணாமல் போனதை அடுத்து, இது குறித்து விசாரணை செய்ய சிஐடிக்கு உத்தரவிட்டிருப்பதால் எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்து வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சிஐடி தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தகவல் மையத்தை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு வழங்குவதற்காக சமோசாக்கள் மற்றும் கேக்குகள் வாங்கப்பட்டன. ஆனால் அவை திடீரென காணாமல் போனதாகவும், முதல்வரின் பாதுகாப்புக்காக வந்த அதிகாரிகள் அவற்றை சாப்பிட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வருக்காக வாங்கப்பட்ட சமோசா எப்படி காணாமல் போனது என்பதை கண்டுபிடிக்க சிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, காணாமல் போன சமோசாவை தேடி காங்கிரஸ் அரசு விசாரணை மேற்கொள்கிறது என்றும், இதிலிருந்து இந்த ஆட்சியின் இலட்சணத்தை புரிந்து கொள்ளலாம் என்றும் பாஜக கேலி செய்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்த சிஐடி இயக்குனர், இது துறையின் விவகாரம், விசாரணைக்கு உத்தரவு பிறபிக்கவில்லை. இந்த சம்பவம் வேண்டுமென்றே பெரிதாக்கப்பட்டுள்ளது. முதல்வருக்கு வாங்கிய சமோசா எங்கே போனது என சாதாரணமாக பேசப்பட்டது, இந்த சம்பவம் தான் ஊதி பெரிதாக பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/investigation-ordered-over-missing-samosas-for-chief-minister-124110900018_1.html
  7. 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின பாறுக் ஷிஹான் 32 ஆயிரம் சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதி பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பணிமனைக்கு இவ்வாறு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பணிமனைக்கு அருகில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் பொதி செய்யப்பட்ட சுமார் 32 ஆயிரம் வாக்கு சீட்டுக்களுடன் இரு சந்தேக நபர்களை கடந்த வியாழக்கிழமை (7) மாலை கைது செய்திருந்தனர். மேலும் இவ்வாறு மீட்கப்பட்ட மாதிரி வாக்கு சீட்டில் ஒரு முஸ்லீம் தேசிய கட்சி ஒன்றின் சின்னத்திற்கும் இலக்கம் இரண்டிற்கும் புள்ளடி இடப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தற்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட சட்டவிரோதமான வாக்குச்சீட்டுக்கள் யாவும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.tamilmirror.lk/அம்பாறை/32-ஆயரம-மதர-வககசசடடககள-சககன/74-346774
  8. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்துள்ள வடக்கு மாகாண விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களின் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் செங்காரபிள்ளை அறிவழகன், இலங்கை சுதந்திரம் அடைந்த பின் தெற்காசியவில் வளமான நாடாக சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து 5 குடும்பங்கள் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆட்சிக்கு வருவதற்கு இனவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை தொலைந்து விட்டு தமிழர்களாக, சிங்களவர்களாக, முஸ்லிங்களாக பிரிந்து நிற்கின்றோம். இனவாதத்தை கையில் எடுக்காத ஒரு கட்சி தான் இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி சரியான முறையில் அணுகி வருகிறார்கள் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/311914
  9. தேசிய மக்கள் சக்தியில் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். வெல்ல வாய்ப்புண்டு.
  10. மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடக செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த சில விடயங்கள் வருமாறு:- “இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது. நாட்டில் எல்லாரும் சமமாகப் பேணப்பட்டால் – நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் – எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள். தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். ஆகவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம். இதேநேரம் முதன் முதல் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தாலும் அதன் பின்பு இரண்டு தடவைகள் நேரடியாகப் போட்டியிட்டே நாடாளுமன்றம் சென்றேன். இம்முறையும் வெற்றியீட்டியே நாடாளுமன்றம் செல்வேனேயன்றி, தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் நான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டேன்.” – என்றார். https://thinakkural.lk/article/311909
  11. பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 24 பேர் பலி! பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (09) காலையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு இடம்பெற்ற போது அங்கிருந்து ரயில் ஒன்று கிளம்பியது. சிறிது தாமதமாக சென்றிருந்தால், பலி எண்ணிக்கை கூடியிருக்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு, தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும், ரயில் நிலையத்தில் வழக்கமாக இருக்கும் கூட்டத்தை விட இன்று குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=195565
  12. You Have Never Seen a Dog Dance Like This! | America's Got Talent 2024
  13. கடனை வாங்கி சாப்பிட்டவர்களுக்கே இந்த தினாவெட்டு என்றால் லீ குவான் யூ போன்றவர்களுக்கு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.
  14. இவரே வடக்கு காவிகளின் சொற் கேட்டு ஆடுபவர். இதற்குள் மற்றவர்களை பார்த்து கருத்து வேறு. அம்பி காலம் கெட்டு கிடக்குது.🙂
  15. அவ்வளவு தான். உணமையான உலகை சந்திக்க கூடிய கல்வி திட்டம் தேவை. பரீட்சை வினாத்தாள்கள் பலவற்றை படித்து பரீட்சை எழுதும் கல்வி முறை நாட்டுக்கு உதவ போவதில்லை.
  16. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே ஆடும் ராதை
  17. மானசியின் ஆடலுடன் பாடல் __ கள்வரே
  18. 7600 பேர் சேவையில் உள்ளதாக செய்திகள் சொல்கிறது. நீங்கள் சொன்ன மாதிரி தான் தந்திரமாக செய்வார்கள். ட்ரக்கால் மக்களை மோதியவரை பிடித்ததை நினைவு கூறுகிறீர்கள்.
  19. கார் திருடர்களுக்கு உதவி செய்யும் Service Ontario ?!
  20. இந்தியர்களின் அட்டகாசத்தால் வெடி கொழுத்த தடை விதிக்கப்பட்டதாக அறிந்தேன். எப்படி 2 மணி நேரம் வெடி கொழுத்த பார்த்து கொண்டிருக்கிறார்கள்? தீபாவளி என்பதால் பெரிதாக எதுவும் செய்ய விரும்பவில்லையோ தெரியவில்லை.
  21. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)ஆம் 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) -தமிழரசு கட்சி(3) 28) வன்னி - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ( 1) 29) மட்டக்களப்பு - தமிழரசு கட்சி(2) 30)திருமலை- ஐக்கிய மக்கள் சக்தி(3) 31)அம்பாறை - தேசிய மக்கள் சக்தி( 3) 32)நுவரெலியா - ஐக்கிய மக்கள் சக்தி( 4) 33)அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி (5) 34)கொழும்பு - தேசிய மக்கள் சக்தி(11) 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் - தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி - தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசு கட்சி 42) மன்னர் - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு - தமிழரசு கட்சி 44) வவுனியா - தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு - தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு - தமிழரசு கட்சி 47) திருகோணமலை - ஐக்கிய மக்கள் சக்தி 48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 5 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 1 54)தமிழரசு கட்சி - 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு - 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) - 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) - 5 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 115 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 20
  22. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கியதால் அங்கும் கட்சிக்குள் குழப்பம் உண்டு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.