Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
 • Posts

  46,374
 • Joined

 • Days Won

  32

Everything posted by nunavilan

 1. ’ராஜபக்ஷ குடும்பமே நாட்டுக்கு சுமை’ பா.நிரோஸ் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையில்லை என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜபக்ஷக்களின் குடும்பமே நாட்டுக்கு சுமை என்றும் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் பசில் ராஜபக்ஷ அமைச்சராக இருந்த முன்னாள் அரசாங்கத்திலேயே 87 சதவிதமான அரச ஊழியர்கள் சேவைக்கு இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர் என்றார். உண்மையில் நாட்டுக்கு ராஜபக்ஷக்களின் குடும்பமே சுமையாக உள்ளது. நாடு வங்குரோத்து நிலைக்கு செல்வதை தடுப்பதற்கான எந்தவொரு திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை. இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு எமக்கும் இருக்கிறது எனவும் தெரிவித்தார். Tamilmirror Online || ’ராஜபக்ஷ குடும்பமே நாட்டுக்கு சுமை’
 2. மிக்கி ஆர்தரின் அதிரடி அறிவிப்பு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் குறித்த பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை அடுத்து தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற போது இருந்த இலங்கை அணியை விட தற்போது சிறந்த அணியொன்று உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மிக்கி ஆர்தரின் அதிரடி அறிவிப்பு (adaderana.lk)
 3. வெளிநாட்டில் இருந்து பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தம்மிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த மாதம் 10ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் CCTV காட்சிகளின் அடிப்படையில் , உடுவில் மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது , தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் , தாக்குதல் நடத்துமாறு தமக்கு வெளிநாட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் வாக்கு மூலத்தில் தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர். அதனை அடுத்து , யாழில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு தொடர்பிருக்கா என பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்! – Athavan News
 4. நேற்று வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தான், உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் நடந்த தேசிய அழகிப் போட்டியில் 17 வயதான , மின்ட் என்னும் பெண் வெற்றிபெற்று அழகு ராணியாக முடிசூடிக்கொண்டார். அவர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அப்படியே சென்று, குப்பை தொட்டிகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு இருக்கும் தனது அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். குறித்த புகைப்படம் வெளியாகி , ஆசிய நாட்டவர்களை மட்டும் அல்ல, பல மேற்குலக மக்களையும் உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அழகியின் அம்மா பல வருடங்களாக குப்பை தொட்டிகளை கழுவி. அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் தான் தனது மகளை வளர்த்து வந்துள்ளார். கடும் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்து ஆளாக்கியமைக்காகவே நான் அவர் காலில் விழுந்தேன் என்று மின்ட் தெரிவித்துள்ளார். பணம் , பேர் -புகழ் கிடைத்தால் பெற்றவர்களை மறந்து அலைந்து திரியும் லட்சக்கணக்காம பிள்ளைகள் மத்தியில் இப்படியும் ஒரு மனிதனேயம் உள்ள மகள் இருக்கிறாள் Siva Journalist
 5. பூஸ்டர் தடுப்பூசி ஏற்கனெவே செலுத்தப்பட்ட ஊசிகளின் வீரியம் குறைவதாலேயே செலுத்தப்படுகிறது.
 6. இச்செய்தியில் எவ்வளவு உண்மை உள்ளது என தெரியவில்லை. சீனா இந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. கூட்டமைப்பை ஒரு காலத்தில் தட்டிக்கழித்த இந்தியா இப்போ சீனாவிடன் பேச வேண்டாம் என்பது…… ஆனால் சீனாவுடன் பேசினால் இந்தியாவின் கொட்டம் சிறிதளவாவது அடங்கும். பணத்துக்கு அடிமையாகாமல் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இதய சுத்தியுடன் செயற்படுவார்களா???
 7. போலியான அரசியலமைப்பை தோற்கடித்தல் -விக்டர் ஐவன் ஜனாதிபதிகோத்தாபய ரா ஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றின் ஊடாக புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியானது அரசியலமைப்பு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்களிப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு முரணானது ம் மீறுவதுமாகும். அரசியலமைப்பு என்பது பிரஜைகளின் மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சொத்துக்கான உரிமைகளை நிர்ணயிக்கும் மிக உயர்ந்த சட்டமாகவும், அரச ஆட்சியின் கட்டமைப்பு மற்றும் செயற் பாடுகளை நிறுவும் மிகவும் புனிதமான சட்ட ஆவணமாகவும் கருதப்படலாம். மத்தியகால கால உலகத்தை நவீன உலகிற்கு மாற்றியதன் மூலம், இறைமையின் கருத் தீடின் தோற்றம் மன்னரிடம் அல்லாமல் , மக்களிடம் இருந்தது. அரச அதிகாரம் எப்போதும் மக்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்ற கோட்பாட்டின் தோற்றத்திற்கு இது உத்வேகத்தை அளித்துள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் , குடியரசின் இறைமை மக்களிடமே உள்ளது. இது பிரிக்க முடியாத சக்தி. அரசின் அதிகாரம் மட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டமும் மக்களுக்குச் சொந்தமான ஒன்றாகவே கருதப்படுகிறது. செம்மையான தாராளவாத விளக்கத்தின்படி, “அரசியலமைப்பு என்பது எவ்வாறு ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பதில் ஆட்சியாளர்களுடன் சமூகம் செய்துகொண்ட ஒப்பந்தமாக ஒப்புக் கொள்ளப்படுகிறது”. அரசியலமைப்பு உருவாக்கம் அரசியலமைப்பை உருவாக்கும் நடைமுறை கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மாறி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில படித்த உயரடுக்கினரிடமும், சட்டவாக் கமென்ற பிரதிநிதிகளிடமும் இருந்த அரசியலமைப்புச் சட்டம் இப்போது வழக்கற்றுப் போய்விட்டது என்றே சொல்லலாம். அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளும் பங்கேற்பு முறையானது 21 ஆம் நூற்றாண்டில் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியாக மாறியுள்ளது. எனவே, பங்கேற்பு அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து பல்வேறு நாடுகளில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உடன்படிக்கைகளாலும் அரசியலமைப்பு உருவாக்கத்தில் மக்கள் தீவிரமாக பங்கேற்கும் உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உரை அதிகாரம் 12 ஜூலை 1996 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையின் 25 வது பிரிவில் “பொது விவகாரங்களில் பங்கேற்கும் மக்களின் உரிமை, “அரசியலமைப்பு உருவாக்கும் செயற் பாட்டில் பங்கேற்க மக்களுக்கு உரிமை உண்டு.இந்த உரிமை சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றின் ஊடாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியானது அரசியலமைப்பு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்கேற்பு தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு முரணானது மற்றும் மீறுவதாகும். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது என்பது மக்களின் பிரச்சினை என்பதைவிட அரசாங்கத்துக்குரியது என்று அரசாங்கம் நம்புவதாகத் தெரிகிறது. அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத முயற்சியானது மறைமுகமான மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் போலியான செயலாகவே பார்க்க முடியும். இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவை இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். ஜனநாயக அர்த்தத்தில், தற்போதைய அரசியலமைப்பு மோசமானது மட்டுமல்லாமல் , தொடர்ந்து சிதைக்கப்படுவதால், சிதைந்து, அதன் சட்டபூர்வமான தன்மையையும் செயல்திறனையும் இழந்துள்ளது. குறிப்பாக, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க தேவையான அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும் திறன் அதற்கு இல்லை. எனவே எமக்கு புதிய அரசியலமைப்பு தேவை. ஆனால், அது தன்னிச்சையான முறையில் அல்ல, மக்களின் தீவிரமான பங்களிப்புடன் ஜனநாயக முறையில் உருவாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் இலங்கையில் எமக்கு ஒரு சிறப்பான வரலாறு இல்லை என்றே கூற வேண்டும். நாம் வருந்தவும் வெட்கப்படவும் வேண்டிய விரும்பத்தகாத வரலாறு இதுவாகும்.. கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியின் நடைமுறை அனுபவத்திலிருந்து பார்க்கும்போது, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி நல்ல ஜனநாயக நோக்கத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படுவது ஆட்சியாளரின் சர்வாதிகார அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கல்ல, மாறாக இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியுடன் நிலையான அபிவிருத்தியை பேணுவதற்குமாகும். தற்போதைய நெருக்கடி எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியின் தன்மையை சுருக்கமாகபின்வருமாறு கூறலாம்: முழு சமூக முறைமையும் முற்றிலும் சரிந்த நிலையில் உள்ளது. சமூக அமைப்பில் இருக்க வேண்டிய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மொத்தமாக சிதைந்து போகும் நிலையில் உள்ளது. இனக்குழுக்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான மோதல்கள் வன்முறைப் போராட்டங்களாக மாறி, சமூக ஒழுங்கின் கட்டமைப்பை சிதைத்துவிட்டன. நாட்டின் உழைக்கும் மக்கள் (கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள்), தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்கள் அன்றாட வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் வர்த்தகத்தை பராமரிக்க முடியாமல் மிகவும் கடினமான மற்றும் குழப்பமான நிலையில் உள்ளனர். அரசும் அதன் நிறு வனங்களின் முறைமைகளும் (பாராளு மன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை) அதிகபட்ச சிதைவு, சீரழிவு மற்றும் வங்குரோத்து நிலையை நோக்கி செல்லும் நிலைமை யில் உள்ளன. 1978 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஆளுங்கட்சியின் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமையும், அரசின் அலுவல்களை நடத்துவதற்குப் போதிய வருமானம் இல்லாத பிரச்சனைக்குக் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளதாகக் கூறலாம். இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடியை வெற்றிகொள்ளவதற்கு தேவையான அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை வகுக்க வேண்டியதன் அவசியத்தை, புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அவசியமான பல காரணங்களுக்கிடையில் மிக முக்கியமான காரணம் எனக் கூறலாம். இந்த வரலாற்றுப் பணியை மக்களைத் தவிரமரபு ரீதியான அரசியல்வாதிகளால் சாதிக்க முடியாது. இந்த அளவு பெரும் அழிவுக்குள் நாட்டைஅமிழ்த்துவதற்கான முக்கிய பொறுப்பு மரபுரீதியான அரசியல்வாதிகளையே சாரும். இலங்கையின் சீரழிவும் தோல்வியும் அவர்களின் தோல்வியின் இறுதி முடிவாகக் கருதலாம். நாட்டின் தோல்விக்குக் காரணமான அரசியல்வாதிகள் குழுவிடமிருந்து இலங்கையை வெற்றிகரமான நாடாக மாற்றுவதற்கான உறுதியான அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? சட்டத்துறையில் பாராளுமன்றம் வெளிப்படுத்திய தோல்வியின் அளவு மிகப்பெரியது. உதாரணமாக, பிரதேச சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம், உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டது. அது நாட்டிற்குச் செய்த தேவையற்ற செலவுகளின் அளவில் மிகப்பெரியது. சட்டத் துறையில் சட்டவாக்கத்துறையினால் வெளிப்படுத்தப்படும் தோல்வியின் அளவை இது பிரதிபலிக்கிறது. ஒரு பங்கேற்பு அரசியலமைப்பு மேற்குறிப்பிடப்பட் டதன் அடிப்படையில், ஒவ்வொரு முனையிலும், இலங்கை இப்போது மிகவும் கடுமையா ன மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால போக்கை தீர்மானிக்க எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதலாம். இரகசியமாக வரையப்பட்ட ஆவணத்தைபாரா ளுமன்றத்தில் சமர்ப்பித்து, வெறுமனே கையை உயர்த்த செய்வதன் மூலம் இவ்வளவு தீவிரமான பொறுப்பை இலகுவான காரியமாகக் கருத முடியாது. இது அபத்தமான செயலாகவே கருதப்படலாம். இதுபோன்ற விட யங்கள் ஏற்கனவே உள்ள பேரழிவை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, நாட்டின் பொது நலனுக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள போலியான அரசியலமைப்புச் சட்டத்தை தோற்கடிக்க வேண்டும். அதேநேரம், நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை எளிதாக்கும் பங்கேற்பு அரசியலமைப்பை வென்றெடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இது போன்ற விசேட தருணங்களில்தான் அரசு நிர்வாகம் தொடர்பான விட யங்களில் மக்கள் நேரடியாக ஈடுபடுகிறார்கள். ஏனைய நேரங்களில் அவை பிரதிநிதித்துவ ஜனநாயக முறைக்கு இணங்கி செயற் படுகின்றன. ஒரு புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வது, ஜனநாயக நடைமுறையில் அனைத்து சமூகங்களும் நேரடியாகத் தலையிடும் வாய்ப்பாகக் கருதலாம். அந்த பணி முடிந்ததும், பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை நேரடி ஜனநாயகக் கூறுகளை உள்ளடக்கியதாக மீள் வடிவமைப்பு செய்யப்பட்டால், ஆட்கள் புதிய முறைமையை செயற் பட அனுமதிக்கஇடமளித்து வெளியேறுவார்கள். உத்தேச புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கூறிய செயற்பாடுகள், மக்கள் தமது இறைமையை முழுமையாகப் பிரயோகிக்கக் கிடைத்த வாய்ப்பாகக் குறிப்பிடலாம். ஒரு ஜனநாயக அரசியலமைப்பு என்பது இனி ஒரு ஜனநாயக ஆட்சி முறையை மட்டும் நிறுவும் ஒரு முறையல்ல , மாறாக மக்கள் தீவிரமாக ஈடுபடும் ஒரு ஜனநாயக செயல்முறைக்குள் உருவாக்கப்பட வேண்டிய ஒருமுறைமையாகும் அரசியலமைப்பும் நெருக்கடியும் உத்தேச புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் பின்பற்றும் போலியான அணுகுமுறையைத் தோற்கடிப்பதைத் தவிர, இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க.நாட்டின் பொது நலனுக்காக, தேவையான அரசியலமைப்புக் கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவது சாத்தியமாகும் வகையில், அதை உருவாக்குவதற்கான ஒரு பங்கேற்பு திட்டத்தை வென்றெடுப்பது அவசியம். அரசியலமைப்புக்கும் நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வது அவசியம். இரசாயன உரங்களுக்கு தன்னிச்சையான தடை, வடக்கில் யுத்தத்தின் போது கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீள வழங்காமை போன்ற செயற் பாடுகளை களை இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் மேற்கொள்ள முடியாது. காரணம், ஆட்சியாளர்களின் தேர்தல் வெற்றிகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இரு நாடுகளின் அரசியல் சாசனத்திலும் ஆட்சியாளர்கள் இத்தகைய தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் போதிய கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன. இந்த ஆவணத்தின் நோக்கம், அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பின் தன்னிச்சையான சட்டத்தை எதிர்ப்பதும், அதை முறியடித்து புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு பங்கேற்பு கட்டமைப்பை வென்றெடுப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும். வெகுஜன போராட்ட நிகழ்ச்சித்திட்டம் அரசாங்கத்தின் போலியான அரசியலமைப்பு வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்கும் நாட்டுக்கான பங்கேற்பு அரசியலமைப்பை வென்றெடுப்பதற்கும் நாட்டிற்கு ஒரு பாரிய போராட்ட வேலைத்திட்டம் தேவை. அதே சமயம், இந்த இரண்டு நோக்கங்களையும் பாரியளவில் பொதுமக்களின் பங்கேற்புடன் அடையும் நோக்கத்துடன் ஒரு பொது நலன் சார்ந்த மனுவும் முன்வைக்கப்பட வேண்டும். உத்தேச புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அரசாங்கத்தின் போலித் திட்டத்திற்கு எதிரான உத்தரவைப் பெறுவதையும், பங்கேற்பு அரசியலமைப்பின் சட்டத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களைப் பெறுவதையும் பொதுநலன் வழக்கு நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், இந்த பொது நலன் வழக்கு அனைத்து இன, மத, பாலின, கலாசார மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்கள், அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோரின் அபிலாஷைகளை தனித்தனியாகவும் கூட்டாகவும் பிரதிபலிக்க வேண்டும். அனைத்து இன, மத, பாலின மற்றும் கலாச்சார குழுக்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், மீன்பிடி மற்றும் ஏனைய பொது அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த அடிப்படை பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் உறுதியாக கேட்டுக்கொள்கிறோம். பி னான்சியல் டைம்ஸ் link-financialtimes Defeating the spurious constitution Thinakkural.lk
 8. ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் உச்ச நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் (adaderana.lk)
 9. மக்கள் சேவைக்காக வரும் உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம்? மக்கள் சேவைக்காக வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஆளும் தரப்பினரும் எதிர் தரப்பினரும் கொள்ளையடித்தவர்கள் தொடர்பாக பேசுகிறார்கள். நாமும் இந்தக் கொள்ளையர்கள் எப்போது பிடிப்பட்டு சிறைக்குச் செல்வார்கள் என்பதை காண ஆவலாக இருக்கிறோம்.மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்கள் இருந்தால், அவர்களை சிறையில் அடையுங்கள். நாமும் அதனைக் காண மகிழ்ச்சியாக காத்துக் கொண்டிருக்கிறோம்.நிதியமைச்சரின் 2022 வரவு - செலவுத் திட்ட உரையானது, திருமண வீட்டில் கதைக்க வேண்டிய கதையை மரண வீட்டில் கதைத்ததைப் போன்றுதான் காணப்பட்டது.மிகவும் சவால் மிக்கதொரு காலத்தில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.ஆனால், நிதியமைச்சரின் ஊடாக மக்களுக்கு ஏதேனும் நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தோம்.இந்த வரவு - செலவுத் திட்டமானது, இலங்கையின் பொருளாதாரம் குறித்து அக்கரையில்லாமல் தயாரித்தது போன்றுதான் காணப்படுகிறது.உதாரணமாக ஒரு கிராம அபிவிருத்திக்காக 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது எதிர்வரும் தேர்தலை குறிவைத்து கொண்டுவரப்பட்டதாகவே தெரிகிறது.செலவைக் குறைத்துக் கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் அவசியமா என்பதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். இது நாட்டின் அபிவிருத்தியை பெரிதும் பாதிக்கும்.30 வருடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கென விசேட நிதிகள் ஒதுக்கப்படவில்லை.வீதிகளை அபிவிருத்தி செய்யும்போதும், மக்களுக்கு பயனுள்ளதாக அவற்றை அமைக்க வேண்டும். மாறாக பிரதேச சபை உறுப்பினருக்காகவோ, கட்சித் தொண்டர்களுக்காகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்காகவோ வீதிகளை நிர்மானிக்கக்கூடாது.அத்தோடு, வேலை செய்ய முடியாத இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் பதவிலிருந்து விலக்க வேண்டும்.அவருக்கு வாகனம் கொடுத்து, டீசல் கொடுத்து, சாரதி, அலுவலம், சம்பளம் என எல்லாம் கொடுத்து அவரால் வேலை செய்ய முடியாவிட்டால் அவர் அந்தப் பதவியில் இருப்பதில் பயனில்லை.அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாலேயே நன்றாக வேலையை செய்ய முடியும். எனவே, அரசாங்கம் இதுதொடர்பாகவும் சிந்தித்து, ஒரு கொள்கை முடிவொன்றை மேற்கொள்ள வேண்டும்.மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக பேசப்படுகிறது. எனக்கு வயது 31 தான் ஆகின்றது. எனக்கு உண்மையில் ஓய்வூதியம் தற்போது தேவையில்லை.என்னைப் பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் எனும் ஒன்றே தேவையில்லை. மக்கள் சேவைக்காக வரும் உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம்?ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தற்போது எழுந்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டு குறித்த விடயம் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ளனர் என நான் அறியக்கிடைத்தேன்.மக்களை ஏமாற்றும் வகையில் கருத்துக்களைக் கூறாமல், பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமெனில் சில தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும்.இன்று நாட்டில் எரிப்பொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, எரிப்பொருள் விலை குறித்து சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தினார். இது அப்போது கடுமையாக கேலிக்குள்ளாக்கப்பட்டது.ஆனால், இதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் உண்மையில் எரிப்பொருள் கொள்வனவிற்கு அரசாங்கத்தினால் செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.இன்று சம்பளத்தை வழங்கக்கூட பணத்தை அச்சடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், அரசாங்கம் கூறியுள்ள சில விடயங்களை நடைமுறைப்படுத்த எங்கிருந்து பணம் கிடைக்கப்போகிறது என்று இதுவரை தெரியவில்லை.அன்று எம்.சி.சி.க்கு எதிர்ப்புத் தெரிவித்த தேச அபிமானிகளில் ஒருவர் கூட கொழும்பு, துறைமுக நகரத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.அரசாங்கம் இந்த வரவு - செலவுத் திட்டத்தில் சுப்பர் சார்ஜ் டெக்ஸை விதித்துள்ளது. 1960 களில் கூட இந்த வரி விதிக்கப்பட்டது.2015 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க இருக்கும்போது, இவ்வாறான வரியைத் தான் விதித்திருந்தார்.2019 ஆம் ஆண்டு வரை பொருளாதாரம் மற்றும் வரிகள் தொடர்பான கொள்கைகள் நன்றாகத் தான் நாட்டில் காணப்பட்டது. மக்களும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். இதனை மாற்றுமாறு மக்கள் அரசாங்கத்திடம் கூறவில்லை.ஆனால், இந்த அரசாங்கம் வந்தவுடன் அனைத்தையும் இல்லாது செய்து, தனக்கு நெருக்கமான தரப்பினர் பயனடையும்வகையில் தான் புதிய வரிகளை விதித்தார்கள்.தற்போது மீண்டும் சுப்பர் சார்ஜ் டெக்ஸை விதித்துள்ளார்கள். உண்மையால் இதனால் முதலீட்டாளர்களுக்கான நம்பிக்கை இல்லாமல் போகும் அபாயம் காணப்படுகிறது.வரிக்கொள்கைகள் தொடர்பாக நாம் சர்வதேச நாடுகளின் உதவியை பெற்றுக் கொள்ள வேண்டும். முடிந்தால் சர்வதேச நாணய நிதியத்தில் ஆலோசனைகளைப் பெற்று இதனை வகுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.இலங்கை முழுவதும் தற்போது சுமார் 300 தேசியப் பாடசாலைகள் காணப்படுகின்றன. நாட்டில் ஒட்டுமொத்தமாக 4 மில்லியன் மாணவர்கள் இருக்கிறார்கள்.1000 தேசியப் பாடசாலைகளை புதிதாக அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஊடாக சுமார் 2000, 3000 மாணவர்கள்வரை தேசியப் பாடசாலைகளுக்குச் செல்வார்கள்.மாகாணப் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆயிரமாக உள்ள நிலையில், அதிலிருந்து ஆயிரம் மாணவர்கள்வரை தேசியப் பாடசாலைக்குச் சென்றால், மாகாணப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் விகிதம் குறைவடையும் நிலைமைக் காணப்படுகிறது.இது மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடா எனும் கேள்வியும் எழுகிறது.எமக்கு இப்போது தேசியப் பாடசாலைகள் தேவையில்லை. மாறாக அனைத்துப் பாடசாலைகளையும் தேசியப் பாடசாலைகளின் தரத்திற்கு உயர்த்த வேண்டும்.சுகாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், நாம் பொது வைத்தியசாலைகளின் தரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்.சுகாதாரத்துறையை மேம்படுத்த சிறிய வரிவிதிப்பை செய்தால் கூட அதனை பொது மக்கள் ஒருபோதும் நிராகரிக்க மாட்டார்கள்.இதில் வரும் நிதியைக் கொண்டு, சுகாதாரத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்தோடு, சுற்றுலாத் துறையென்பது இலங்கையில் பொருளாதாரத்திற்கு முக்கியமான ஒன்றாகக் காணப்படுகிறது.ஆனால், சுற்றுலாத்துறையில் அண்மையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் ஒரு நாளைக்கு 5 மில்லியன் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தத் தொகை சரியானதா என்பதை அரசாங்கம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுப்பர் மார்க்கட்டுகளில் மதுபானங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.அப்படியொரு திட்டமிருந்தால் தயவு செய்து வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கோ பின்தங்கிய கிராமங்களுக்கோ அதனை நடைமுறைப்படுத்த வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன்.சுற்றுலாப் பயணிகளின் வருகைக் குறைவாக இருக்கும் இந்தக் காலப் பகுதியில் இவ்வாறாதொரு திட்டம் கொண்டுவரப்பட்டால், அதனை அந்தக் கிராமத்தில் வசிப்போர்தான் கொள்வனவு செய்து குடிப்பார்கள்.தற்போது இருக்கும் மதுபானசாலைகளின் எண்ணிக்கையே போதுமானதாகும். கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு செல்ல 7 மணித்தியாலங்கள் செல்கிறது. யாழ்ப்பாணத்திற்கு செல்ல 8 மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது.நான் வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் சென்று இராமேஸ்வரம் - மன்னார் படகு சேவையை மீள ஆரம்பிக்குமாறும், பலாலி விமானநிலையத்தை இயக்குமாறும், மட்டக்களப்பு உள்ளுர் விமானநிலையத்தை புனரமைத்து விமான சேவைகளை ஆரம்பிக்குமாறும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்திருந்தேன்.வடக்கு - கிழக்கிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பல்வேறு யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். அரசாங்கம் இந்த விடயங்களில் அக்கரை செலுத்தவில்லை.இந்தியாவுடன் இலங்கை நட்புறவாக இருப்பதாக கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம், இந்தியாவுடனான சுற்றுலாத்துறையை மேம்படுத்த எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.தற்போது பிரதமராக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க கடந்த காலங்களில் 2 தடவைகள் பொன்னான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.யுத்தம் முடிவடைந்தவுடன் 2010 இல் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக் கொண்ட பாராளுமன்றம் இருந்தது.18 ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தார். சர்வதேசத்தின் ஆதரவும் இருந்தது.ஆனால், அவரால் நாட்டின் தேசியப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் போனது.தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு இவர்கள் வந்துள்ளார்கள். இப்போதாவது இந்தப் பிரச்சினைகளுக்கு இவர்கள் தீர்வினை வழங்க வேண்டும்.ஆசியாவில் மூத்த அரசியல்வாதியாக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, ஏன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்காமல் இருக்கிறார்?அனைவருக்கும் சமமான உரிமையை வழங்குமாறுதான் தமிழ் மக்கள் கோருகிறார்கள். இதனை ஏன் வழங்க முடியாமல் உள்ளது?இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கத் தவறினால், 30 - 40 வருடங்கள் கிழித்து ராஜபக்ஷவினரை மக்கள் தூற்றும் நிலைமை நிச்சயமாக ஏற்படும். ராஜபக்ஷவினரால் தான் இந்த நாடு அழிவடைந்தது எனும் வரலாறு பதியப்படும். இந்த நிலைமைக்கு செல்ல வேண்டாம் என்று தான் நாம் கேட்கிறோம்.அரசாங்கம் இன்று செய்யும் இந்தச் செயற்பாடுகளினால் எமது வருங்கால சந்ததியினர்தான் பாதிக்கப்படுவார்கள். நாம் பிளவடையாத நாட்டுக்குள்தான் ஒரு தீர்வை எதிர்ப்பார்கிறோம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரிவினைவாதக் கட்சியாக சித்தரித்து தான் இதுவரை காலமும் நீங்கள் வாக்குக் கேட்டீர்கள். ஆனால், இனியும் இவற்றை மக்கள் நம்பத் தயாரில்லை.´ எனக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சேவைக்காக வரும் உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம்? (adaderana.lk)
 10. வாழ்த்துக்கள் வாதவூரான். பாராட்டுக்கள் பங்குபற்றிய அனைவருக்கும். போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல.
 11. காசன் அலியின் மனைவி இந்தியராம். அவர்(காசன் அலி) இந்திய ஏஜன்ட் என அவரை வறுத்து எடுக்கிறார்கள்.
 12. 50 வயது ஹீரோவுக்கு 18 வயது ஹீரோயின் எதற்கு கேப்டனின் சுவாரசியமான பதில்
 13. NEWS Angela Merkel Snorts as Donald Trump Says He Has 'German in My Blood' President Donald Trump has been mocked after remarking that he has German in his blood while expressing excitement over a proposed future trip to Germany. Trump made the comments during a meeting with German Chancellor Angela Merkel, prompting the veteran leader to raise her eyebrows and seemingly laugh at the president's reference to his German ancestry. Though the pair have never enjoyed a particularly warm relationship, Trump lavished the chancellor with praise during their meeting at the G7 conference being held in Biarritz, France this weekend, Deutsche Welle reported. Trump said Merkel—who is no longer the leader of her party and plans to step away from political life when her fourth term ends in 2021—is a "brilliant woman" and "understands exactly where everything is, she knows it before most people." Though Merkel has publicly ruled out remaining in politics after what will have been more than 15 years in office, Trump suggested the chancellor may surprise observers and be around "for a long time." A reporter asked Merkel whether she had invited Trump for a bilateral visit to Germany, to which the chancellor said she had done so "on previous occasions." Though the president has made brief stopovers in Germany to attend a G20 summit and on his way back from Iraq, Trump is yet to have made a full diplomatic visit to Europe's largest economic power. He has, however, visited both the U.K. and neighboring France twice. NEWSWEEK SUBSCRIPTION OFFERS > Trump added, "We'll be there...we're very honored by the invitation—and that's true—and we will be there. Maybe soon." He then declared: "I have German in my blood," eliciting raised eyebrows and a snort of laughter from the chancellor. The president has often touted his European heritage in the past, though until the 1980s claimed his grandfather came from Sweden rather than Germany. According to The Telegraph, this may have been driven by a desire to hide the family's German links following World War II and the Holocaust. He has since warmed to the idea of his European heritage, even falsely claiming that his father, Fred, was born in "a very wonderful place" in Germany. He was, in fact, born in the Bronx. The president's ancestors were from the village of Kallstadt in the west of Germany. His grandfather Friedrich—later Frederick—came to the U.S. in 1885 and made his fortune during the Yukon gold rush in Alaska. He became rich by establishing a series of hotels that also served as brothels. Though Friedrich tried to return to Germany as a rich man, he was denied residency because he failed to complete military service. He subsequently returned to the U.S. and settled in New York. Reporters pressed the president on a possible timeline, suggesting he could visit Germany before his scheduled trip to Poland at the end of this week. Trump, however, said it may be too difficult to arrange a visit at such short notice. But hints that Trump may soon visit Germany were met with opposition on Twitter, with the hashtag #TrumpNotWelcome trending just hours after his comments were broadcast, Deutsche Welle reported. The president is not popular in Germany, and a 2018 Pew Research Center survey found that only around one in every 10 Germans had confidence in him between 2016 and 2018. German Chancellor Angela Merkel and President Donald Trump speak during a bilateral meeting at the G7 summit in Biarritz, France on August 26.NICHOLAS KAMM/AFP/GETTY IMAGES/GETTY https://www.newsweek.com/angela-merkel-snorts-donald-trump-german-blood-visit-g7-ancestry-family-1456256
 14. என்னுடைய விருப்பம் கஜேந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோரையும் உள்ளடக்க வேண்டும் என்பது தான். ஏன் எனில் அவர்களும் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களே. இல்லையேல் சந்தர்ப்பவசமானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ( you got to be kiss *** Indians or Americans)
 15. ஏனைய பதார்த்தங்கள் சீனி(sugar), கவ்வீன்(caffeine), இன்னும் பல இரசாயன பொருட்களை உடலில் சேர்க்கிறது. இவை உடற்பயிற்சியின் பலாபலன் களை அழிக்கிறது. உடற்பயிற்சியின் போது வேளியேறும் சோடியம் போன்ற தாதுப்பொருட்கள் அடுத்தடுத்த உணவுகள் எடுக்கும் போது உடல் எடுத்து சமப்படுத்தும்.
 16. உணவு, வேலை, உடற்பயிற்சி, நித்திரை என உடற்பயிற்சியும் வாழ்க்கையில் இன்றியமையாதது .
 17. Tamil National Alliance to hold talks with US State Department 11 November 2021 TNA members in conversation with a EU delegation last September Members of the Tamil National Alliance (TNA) are scheduled to fly to the United States of America (USA) this week to engage in talks with the State Department regarding the proposed new constitution. It is expected that the TNA delegation would advocate for more expansive provisions for autonomy than the present constitution allows. Provincial elections have not taken place since 2017 supposedly because of the changes being considered in the electoral system. The 13th Amendment of the Sri Lankan constitution, underwritten by neighbouring India, was supposed to provide autonomy for the Tamil provinces. However, Colombo has repeatedly eroded the provisions for self-rule through a variety of means, most recently through the passing of the 20th Amendment which strengthens the hand of the executive branch of the government. President Gotabaya Rajapaksa, an accused war-criminal, recently announced that his administration is planning to introduce a new constitution by next year. As the island reels from an acute economic crisis, talk of a new constitution drew widespread opprobrium. One writer wrote, “The fixation to fiddle with the constitution amidst a raging economic crisis can only be explained in the egoistic fantasies that have already done so much damage to the country. That seems to be the new normal of Sri Lanka as of now.” https://www.tamilguardian.com/content/tamil-national-alliance-hold-talks-us-state-department
 18. தமிழ் இனமா? மொழியா? தமிழ் - மொழி தமிழர் - இனம் தமிழ் மொழியை பேசுபவர்கள் தமிழர்களாக இருக்க தேவை இல்லை. டிஸ்கி: 864,000 பேர் இங்கிலாந்து, வேல்சில் ஆங்கிலம் மிக சிறிய அளவில் அல்லது முற்றாக ஆங்கிலம் பேசாதவர்கள். https://en.wikipedia.org/wiki/Languages_of_the_United_Kingdom#:~:text=The de facto official language,speaking little or no English.) யூதர்களை கொன்றவர்கள் நாங்கள் தான் என சொன்னாரா??
 19. ஓ ரசிக்கும் சீமானே பாடல் பராசக்தியில் இருந்து .. குமாரி கமலாவின் நடனம் (1970)
 20. ஓம். கடைசி நேரம் விக்கட்டை இழந்தால் கஸ்டம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.