Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
 • Posts

  46,363
 • Joined

 • Days Won

  32

Everything posted by nunavilan

 1. எத்தனை மொழிகளில் சாய்ராம் ஐயரால் பாட முடியும்.? குறிப்பு: ஆண், பெண் குரல்களில்.... 1=மராத்தி ,2=குஜராத்தி, 3=பெங்காளி4= ஒடியா,5=கன்னடா,6= தெலுங்கு,7=மலையாளம்,8= தமிழ் 9=பஞ்சாபி 10 ராஜஸ்தானி,10=காஸ்மீரி, 11=ஆங்கிலம் .
 2. கஞ்சா கெரோயின், அற்ககோல் போல் அதற்கு அடிமையாக்காது என கேள்விப்பட்டுள்ளேன். மருத்துவத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.
 3. விடை பெறுகிறார் வில்லியர்ஸ் தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்தார். உலக கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார் தென்னாப்பிரிக்காவின் 360 டிகிரி ஏபி டி வில்லியர்ஸ். இவர் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,765 ஓட்டங்களை குவித்துள்ளார். 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,577 ஓட்டங்களை குவித்துள்ள அவர் 78 டி20 போட்டிகளில் விளையாடி 1,672 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டித் தொடரில் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த டி வில்லியர்ஸ் 5,162 ஓட்டங்களை குவித்திருக்கிறார். மேலும் நான் விளையாட்டை முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாடினேன். இப்போது, 37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை என பதிவிட்டுள்ளார். விடை பெறுகிறார் வில்லியர்ஸ் (adaderana.lk)
 4. மத்திய அரசினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு! மத்திய அரசாங்கத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படாது உள்ளதென இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் வடமாகாண கிளையின் தலைவர் அன்ரன் றேமன்ஸ் குரூஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “2019ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்து, தற்போது மிகவும் எதிர்பாராத வகையில் பொருட்களின விலை அதி உச்சத்தை அடைந்துள்ளது. இலங்கை வரலாற்றில் இது முதல் முறையாகவும் உள்ளது. இது தனியாக கம்பி, சீமெந்து மட்டும் அல்லாது கட்டிடத்திற்கு தேவையான அனைத்து வகை கற்கள், அலுமினியம், கூரை பொருட்கள் மற்றும் சிறிய சிறிய சகல கட்டுமான பொருட்களும் விலை அதிகரித்துள்ளது. ஆனால் இதன் மேலதிக விலை ஏற்றத்திற்கான செலவை வேலை தருநர்கள் தர மறுக்கின்றார்கள். 5 மில்லியனுக்கும் 3 மாத ஒப்பந்த காலத்திற்கு மேற்பட்ட வேலைகளுக்கு விலையேற்றத்திற்கான சூத்திரம் பாவிப்பதற்கு இடம் இருந்தும் அந்த நிபந்தனை செயல்படுத்த முடியாதவாறு நிபந்தனைகள் மாற்றியமைத்து பல ஒப்பந்தங்கள் கோரப்படுகின்றது. மேலும் அந்த நிபந்தனைகள் உள்ள ஒப்பந்தத்திலும் கூட சில பொருட்களின் விலையேற்றத்ததை அச் சூத்திரம் மூலம் பெறமுடியாமல் உள்ளது. அதன்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு ஒப்பந்தகாரருக்கு முற்பணமானது 14 நாட்களிலும் இடைக் கொடுப்பனவு 35 நாட்களிலும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கொடுப்பனவு கொடுக்கப்படுவதில்லை. அந்த தாமதத்திற்கான வட்டியும் கொடுக்கப்படுவதில்லை. இதில் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டமானது” 2016ம் ஆண்டு தொடக்கம் 2020 ஆண்டு வரை செய்யப்பட்ட பல வேலைக்கு கொடுப்பனவு ஒப்பந்தகாரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இத்திட்டமானது மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் கட்டிடத் திணைக்களம், திட்ட முகாமைத்துவ அலுவலகம் ஊடாகவும் வேலைகள் செய்து 2018 ஆண்டு தொடக்கம் கொடுப்பனவு எடுக்காத ஒப்பந்தகாரர்களும் உள்ளார்கள். அதன் பெறுமதி 16.50 கோடி ரூபா ஆகும் அதில் மேலும் வழங்கப்பட்ட வேலைகளை முடிவுறுத்துவதற்கு 62 கோடி ரூபா தேவையாக உள்ளது. அதே போன்று கிராம உட்கட்டுமான அபிவிருத்தி திட்டம் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு வேலைகள் முடிவுறுத்தப்பட்டு சரியாக இரண்டு வருடம் கடந்தும் 80 வீதமான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை. அதன் பெறுமதி 12 கோடி ரூபா ஆகும். மேலும் மத்திய அரசால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படாதுள்ளது. தற்போதைய அரசாங்கம் அந்த திட்டத்தை நிறுத்தி உள்ளமையால் பல வேலைகள் முடிவுறுத்தப் படாமலும் உள்ளது. முடிவுறுத்தப்பட்ட வேலையிலும் கொடுப்பனவு கொடுக்கப்படவில்லை. இவ்வாறு பல பிரச்சனைகள் உள்ள எமது அங்கத்தவர்கள் பலர் தொழிலை தொடர்ந்து நடாத்த முடியாமலும் வங்கிகளில் இருந்து எடுத்த கடன்களை கட்ட முடியாமலும் உள்ளார்கள். எனவே இது தொடர்பாக நாம் ஆளுநருடன் உயரதிகாரிகளுடனும் கதைப்பதற்கு நேரம் கேட்டு 2019 ஆண்டு ஜுலை மாதத்திற்கு பின்னர் தொடக்கம் இன்று வரை பல கடிதங்கள்,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் எம்மை அவர்கள் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கூட தரவில்லை. எனவே எமக்கு வேறு வழியில்லாமல் இந்த ஊடக சந்திப்பை முதல் முறையாக கூட்டி எங்களது பிரச்சினைகளை உங்கள் ஊடாக வெளிகொண்டு வருகிறோம். இதற்கு பிறகும் எமக்கான தீர்வு கிடைக்கவில்லையாயின் நாம் வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை. இதனால் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி அது சார்ந்த பல தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு! – Athavan News
 5. நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் – செல்வம்! போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதனால் நீதிமன்ற தடை உத்தரவுகளை வீடு வீடாக சென்று ஒவ்வொருவருக்கும் பொலிஸார் கொடுத்து வருகின்றனர். எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. போர் மௌனித்துவிட்டது, போரில் தனது இனம், மண்ணுக்காக மரணித்தவர்களை நினைவு கூருவதற்கான வாய்ப்புக்களை இன்று அரசாங்கம் தடுக்கின்றது. இவ்வாறு தடுப்பதன் மூலம் எதனை நீங்கள் சாதிக்கபோகின்றீர்கள்?“ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் – செல்வம்! – Athavan News
 6. ஏனைய இருவரும் காசு சேர்ப்பதால் புறக்சி எனில் கூட்டமைப்பும் காசு சேர்ப்பதால் புறக்சிதானே. 13, 12, 11 எல்லாம் இவர்களுக்கு ஒரு இலக்கம் தான்.
 7. கனடாவில் நேரத்துக்கு நேரம் காசு சேர்க்க வருவது கூட்டமைப்பு தானே. அவர்களும் புறக்கிசியா அல்லது ….?
 8. Advancing the protection and political representation of minority groups in Sri Lanka is a priority for the United States. We met with @TNAmediaoffice & @GTFonline to discuss ongoing human rights issues in Sri Lanka and ways to strengthen engagement with diaspora communities. @StateGCJ thanks @TNAmediaoffice & @GTFonline for productive discussion on political representation & reconciliation as part of a wholistic transitional justice agenda. Listening to perspectives & concerns of minority groups in Sri Lanka is essential to promoting reconciliation.
 9. ’ராஜபக்ஷ குடும்பமே நாட்டுக்கு சுமை’ பா.நிரோஸ் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையில்லை என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜபக்ஷக்களின் குடும்பமே நாட்டுக்கு சுமை என்றும் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் பசில் ராஜபக்ஷ அமைச்சராக இருந்த முன்னாள் அரசாங்கத்திலேயே 87 சதவிதமான அரச ஊழியர்கள் சேவைக்கு இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர் என்றார். உண்மையில் நாட்டுக்கு ராஜபக்ஷக்களின் குடும்பமே சுமையாக உள்ளது. நாடு வங்குரோத்து நிலைக்கு செல்வதை தடுப்பதற்கான எந்தவொரு திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை. இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு எமக்கும் இருக்கிறது எனவும் தெரிவித்தார். Tamilmirror Online || ’ராஜபக்ஷ குடும்பமே நாட்டுக்கு சுமை’
 10. மிக்கி ஆர்தரின் அதிரடி அறிவிப்பு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் குறித்த பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை அடுத்து தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற போது இருந்த இலங்கை அணியை விட தற்போது சிறந்த அணியொன்று உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மிக்கி ஆர்தரின் அதிரடி அறிவிப்பு (adaderana.lk)
 11. வெளிநாட்டில் இருந்து பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தம்மிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த மாதம் 10ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் CCTV காட்சிகளின் அடிப்படையில் , உடுவில் மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது , தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் , தாக்குதல் நடத்துமாறு தமக்கு வெளிநாட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் வாக்கு மூலத்தில் தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர். அதனை அடுத்து , யாழில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு தொடர்பிருக்கா என பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்! – Athavan News
 12. நேற்று வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தான், உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் நடந்த தேசிய அழகிப் போட்டியில் 17 வயதான , மின்ட் என்னும் பெண் வெற்றிபெற்று அழகு ராணியாக முடிசூடிக்கொண்டார். அவர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அப்படியே சென்று, குப்பை தொட்டிகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு இருக்கும் தனது அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். குறித்த புகைப்படம் வெளியாகி , ஆசிய நாட்டவர்களை மட்டும் அல்ல, பல மேற்குலக மக்களையும் உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அழகியின் அம்மா பல வருடங்களாக குப்பை தொட்டிகளை கழுவி. அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் தான் தனது மகளை வளர்த்து வந்துள்ளார். கடும் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்து ஆளாக்கியமைக்காகவே நான் அவர் காலில் விழுந்தேன் என்று மின்ட் தெரிவித்துள்ளார். பணம் , பேர் -புகழ் கிடைத்தால் பெற்றவர்களை மறந்து அலைந்து திரியும் லட்சக்கணக்காம பிள்ளைகள் மத்தியில் இப்படியும் ஒரு மனிதனேயம் உள்ள மகள் இருக்கிறாள் Siva Journalist
 13. பூஸ்டர் தடுப்பூசி ஏற்கனெவே செலுத்தப்பட்ட ஊசிகளின் வீரியம் குறைவதாலேயே செலுத்தப்படுகிறது.
 14. இச்செய்தியில் எவ்வளவு உண்மை உள்ளது என தெரியவில்லை. சீனா இந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. கூட்டமைப்பை ஒரு காலத்தில் தட்டிக்கழித்த இந்தியா இப்போ சீனாவிடன் பேச வேண்டாம் என்பது…… ஆனால் சீனாவுடன் பேசினால் இந்தியாவின் கொட்டம் சிறிதளவாவது அடங்கும். பணத்துக்கு அடிமையாகாமல் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இதய சுத்தியுடன் செயற்படுவார்களா???
 15. போலியான அரசியலமைப்பை தோற்கடித்தல் -விக்டர் ஐவன் ஜனாதிபதிகோத்தாபய ரா ஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றின் ஊடாக புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியானது அரசியலமைப்பு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்களிப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு முரணானது ம் மீறுவதுமாகும். அரசியலமைப்பு என்பது பிரஜைகளின் மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சொத்துக்கான உரிமைகளை நிர்ணயிக்கும் மிக உயர்ந்த சட்டமாகவும், அரச ஆட்சியின் கட்டமைப்பு மற்றும் செயற் பாடுகளை நிறுவும் மிகவும் புனிதமான சட்ட ஆவணமாகவும் கருதப்படலாம். மத்தியகால கால உலகத்தை நவீன உலகிற்கு மாற்றியதன் மூலம், இறைமையின் கருத் தீடின் தோற்றம் மன்னரிடம் அல்லாமல் , மக்களிடம் இருந்தது. அரச அதிகாரம் எப்போதும் மக்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்ற கோட்பாட்டின் தோற்றத்திற்கு இது உத்வேகத்தை அளித்துள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் , குடியரசின் இறைமை மக்களிடமே உள்ளது. இது பிரிக்க முடியாத சக்தி. அரசின் அதிகாரம் மட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டமும் மக்களுக்குச் சொந்தமான ஒன்றாகவே கருதப்படுகிறது. செம்மையான தாராளவாத விளக்கத்தின்படி, “அரசியலமைப்பு என்பது எவ்வாறு ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பதில் ஆட்சியாளர்களுடன் சமூகம் செய்துகொண்ட ஒப்பந்தமாக ஒப்புக் கொள்ளப்படுகிறது”. அரசியலமைப்பு உருவாக்கம் அரசியலமைப்பை உருவாக்கும் நடைமுறை கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மாறி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில படித்த உயரடுக்கினரிடமும், சட்டவாக் கமென்ற பிரதிநிதிகளிடமும் இருந்த அரசியலமைப்புச் சட்டம் இப்போது வழக்கற்றுப் போய்விட்டது என்றே சொல்லலாம். அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளும் பங்கேற்பு முறையானது 21 ஆம் நூற்றாண்டில் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியாக மாறியுள்ளது. எனவே, பங்கேற்பு அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து பல்வேறு நாடுகளில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உடன்படிக்கைகளாலும் அரசியலமைப்பு உருவாக்கத்தில் மக்கள் தீவிரமாக பங்கேற்கும் உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உரை அதிகாரம் 12 ஜூலை 1996 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையின் 25 வது பிரிவில் “பொது விவகாரங்களில் பங்கேற்கும் மக்களின் உரிமை, “அரசியலமைப்பு உருவாக்கும் செயற் பாட்டில் பங்கேற்க மக்களுக்கு உரிமை உண்டு.இந்த உரிமை சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றின் ஊடாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியானது அரசியலமைப்பு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்கேற்பு தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு முரணானது மற்றும் மீறுவதாகும். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது என்பது மக்களின் பிரச்சினை என்பதைவிட அரசாங்கத்துக்குரியது என்று அரசாங்கம் நம்புவதாகத் தெரிகிறது. அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத முயற்சியானது மறைமுகமான மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் போலியான செயலாகவே பார்க்க முடியும். இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவை இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். ஜனநாயக அர்த்தத்தில், தற்போதைய அரசியலமைப்பு மோசமானது மட்டுமல்லாமல் , தொடர்ந்து சிதைக்கப்படுவதால், சிதைந்து, அதன் சட்டபூர்வமான தன்மையையும் செயல்திறனையும் இழந்துள்ளது. குறிப்பாக, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க தேவையான அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும் திறன் அதற்கு இல்லை. எனவே எமக்கு புதிய அரசியலமைப்பு தேவை. ஆனால், அது தன்னிச்சையான முறையில் அல்ல, மக்களின் தீவிரமான பங்களிப்புடன் ஜனநாயக முறையில் உருவாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் இலங்கையில் எமக்கு ஒரு சிறப்பான வரலாறு இல்லை என்றே கூற வேண்டும். நாம் வருந்தவும் வெட்கப்படவும் வேண்டிய விரும்பத்தகாத வரலாறு இதுவாகும்.. கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியின் நடைமுறை அனுபவத்திலிருந்து பார்க்கும்போது, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி நல்ல ஜனநாயக நோக்கத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படுவது ஆட்சியாளரின் சர்வாதிகார அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கல்ல, மாறாக இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியுடன் நிலையான அபிவிருத்தியை பேணுவதற்குமாகும். தற்போதைய நெருக்கடி எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியின் தன்மையை சுருக்கமாகபின்வருமாறு கூறலாம்: முழு சமூக முறைமையும் முற்றிலும் சரிந்த நிலையில் உள்ளது. சமூக அமைப்பில் இருக்க வேண்டிய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மொத்தமாக சிதைந்து போகும் நிலையில் உள்ளது. இனக்குழுக்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான மோதல்கள் வன்முறைப் போராட்டங்களாக மாறி, சமூக ஒழுங்கின் கட்டமைப்பை சிதைத்துவிட்டன. நாட்டின் உழைக்கும் மக்கள் (கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள்), தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்கள் அன்றாட வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் வர்த்தகத்தை பராமரிக்க முடியாமல் மிகவும் கடினமான மற்றும் குழப்பமான நிலையில் உள்ளனர். அரசும் அதன் நிறு வனங்களின் முறைமைகளும் (பாராளு மன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை) அதிகபட்ச சிதைவு, சீரழிவு மற்றும் வங்குரோத்து நிலையை நோக்கி செல்லும் நிலைமை யில் உள்ளன. 1978 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஆளுங்கட்சியின் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமையும், அரசின் அலுவல்களை நடத்துவதற்குப் போதிய வருமானம் இல்லாத பிரச்சனைக்குக் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளதாகக் கூறலாம். இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடியை வெற்றிகொள்ளவதற்கு தேவையான அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை வகுக்க வேண்டியதன் அவசியத்தை, புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அவசியமான பல காரணங்களுக்கிடையில் மிக முக்கியமான காரணம் எனக் கூறலாம். இந்த வரலாற்றுப் பணியை மக்களைத் தவிரமரபு ரீதியான அரசியல்வாதிகளால் சாதிக்க முடியாது. இந்த அளவு பெரும் அழிவுக்குள் நாட்டைஅமிழ்த்துவதற்கான முக்கிய பொறுப்பு மரபுரீதியான அரசியல்வாதிகளையே சாரும். இலங்கையின் சீரழிவும் தோல்வியும் அவர்களின் தோல்வியின் இறுதி முடிவாகக் கருதலாம். நாட்டின் தோல்விக்குக் காரணமான அரசியல்வாதிகள் குழுவிடமிருந்து இலங்கையை வெற்றிகரமான நாடாக மாற்றுவதற்கான உறுதியான அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? சட்டத்துறையில் பாராளுமன்றம் வெளிப்படுத்திய தோல்வியின் அளவு மிகப்பெரியது. உதாரணமாக, பிரதேச சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம், உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டது. அது நாட்டிற்குச் செய்த தேவையற்ற செலவுகளின் அளவில் மிகப்பெரியது. சட்டத் துறையில் சட்டவாக்கத்துறையினால் வெளிப்படுத்தப்படும் தோல்வியின் அளவை இது பிரதிபலிக்கிறது. ஒரு பங்கேற்பு அரசியலமைப்பு மேற்குறிப்பிடப்பட் டதன் அடிப்படையில், ஒவ்வொரு முனையிலும், இலங்கை இப்போது மிகவும் கடுமையா ன மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால போக்கை தீர்மானிக்க எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதலாம். இரகசியமாக வரையப்பட்ட ஆவணத்தைபாரா ளுமன்றத்தில் சமர்ப்பித்து, வெறுமனே கையை உயர்த்த செய்வதன் மூலம் இவ்வளவு தீவிரமான பொறுப்பை இலகுவான காரியமாகக் கருத முடியாது. இது அபத்தமான செயலாகவே கருதப்படலாம். இதுபோன்ற விட யங்கள் ஏற்கனவே உள்ள பேரழிவை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, நாட்டின் பொது நலனுக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள போலியான அரசியலமைப்புச் சட்டத்தை தோற்கடிக்க வேண்டும். அதேநேரம், நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை எளிதாக்கும் பங்கேற்பு அரசியலமைப்பை வென்றெடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இது போன்ற விசேட தருணங்களில்தான் அரசு நிர்வாகம் தொடர்பான விட யங்களில் மக்கள் நேரடியாக ஈடுபடுகிறார்கள். ஏனைய நேரங்களில் அவை பிரதிநிதித்துவ ஜனநாயக முறைக்கு இணங்கி செயற் படுகின்றன. ஒரு புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வது, ஜனநாயக நடைமுறையில் அனைத்து சமூகங்களும் நேரடியாகத் தலையிடும் வாய்ப்பாகக் கருதலாம். அந்த பணி முடிந்ததும், பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை நேரடி ஜனநாயகக் கூறுகளை உள்ளடக்கியதாக மீள் வடிவமைப்பு செய்யப்பட்டால், ஆட்கள் புதிய முறைமையை செயற் பட அனுமதிக்கஇடமளித்து வெளியேறுவார்கள். உத்தேச புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கூறிய செயற்பாடுகள், மக்கள் தமது இறைமையை முழுமையாகப் பிரயோகிக்கக் கிடைத்த வாய்ப்பாகக் குறிப்பிடலாம். ஒரு ஜனநாயக அரசியலமைப்பு என்பது இனி ஒரு ஜனநாயக ஆட்சி முறையை மட்டும் நிறுவும் ஒரு முறையல்ல , மாறாக மக்கள் தீவிரமாக ஈடுபடும் ஒரு ஜனநாயக செயல்முறைக்குள் உருவாக்கப்பட வேண்டிய ஒருமுறைமையாகும் அரசியலமைப்பும் நெருக்கடியும் உத்தேச புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் பின்பற்றும் போலியான அணுகுமுறையைத் தோற்கடிப்பதைத் தவிர, இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க.நாட்டின் பொது நலனுக்காக, தேவையான அரசியலமைப்புக் கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவது சாத்தியமாகும் வகையில், அதை உருவாக்குவதற்கான ஒரு பங்கேற்பு திட்டத்தை வென்றெடுப்பது அவசியம். அரசியலமைப்புக்கும் நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வது அவசியம். இரசாயன உரங்களுக்கு தன்னிச்சையான தடை, வடக்கில் யுத்தத்தின் போது கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீள வழங்காமை போன்ற செயற் பாடுகளை களை இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் மேற்கொள்ள முடியாது. காரணம், ஆட்சியாளர்களின் தேர்தல் வெற்றிகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இரு நாடுகளின் அரசியல் சாசனத்திலும் ஆட்சியாளர்கள் இத்தகைய தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் போதிய கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன. இந்த ஆவணத்தின் நோக்கம், அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பின் தன்னிச்சையான சட்டத்தை எதிர்ப்பதும், அதை முறியடித்து புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு பங்கேற்பு கட்டமைப்பை வென்றெடுப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும். வெகுஜன போராட்ட நிகழ்ச்சித்திட்டம் அரசாங்கத்தின் போலியான அரசியலமைப்பு வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்கும் நாட்டுக்கான பங்கேற்பு அரசியலமைப்பை வென்றெடுப்பதற்கும் நாட்டிற்கு ஒரு பாரிய போராட்ட வேலைத்திட்டம் தேவை. அதே சமயம், இந்த இரண்டு நோக்கங்களையும் பாரியளவில் பொதுமக்களின் பங்கேற்புடன் அடையும் நோக்கத்துடன் ஒரு பொது நலன் சார்ந்த மனுவும் முன்வைக்கப்பட வேண்டும். உத்தேச புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அரசாங்கத்தின் போலித் திட்டத்திற்கு எதிரான உத்தரவைப் பெறுவதையும், பங்கேற்பு அரசியலமைப்பின் சட்டத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களைப் பெறுவதையும் பொதுநலன் வழக்கு நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், இந்த பொது நலன் வழக்கு அனைத்து இன, மத, பாலின, கலாசார மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்கள், அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோரின் அபிலாஷைகளை தனித்தனியாகவும் கூட்டாகவும் பிரதிபலிக்க வேண்டும். அனைத்து இன, மத, பாலின மற்றும் கலாச்சார குழுக்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், மீன்பிடி மற்றும் ஏனைய பொது அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த அடிப்படை பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் உறுதியாக கேட்டுக்கொள்கிறோம். பி னான்சியல் டைம்ஸ் link-financialtimes Defeating the spurious constitution Thinakkural.lk
 16. ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் உச்ச நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் (adaderana.lk)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.