nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
 • Content Count

  40,018
 • Joined

 • Days Won

  27

Everything posted by nunavilan

 1. Apple கணனியை ஸ்ரீலங்கன் விமான சேவையில் கொண்டு செல்லத் தடை ஆப்பிள் நிருவத்தின் 15 அங்குல மெக்புக் ப்ரோ கணனிகளை ஸ்ரீலங்கன் விமான சேவையில் கொண்டு செல்வதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி விமான பயணிகள் தமது கைப்பையிலும் வேறு பொதிகளிலும் குறித்த மடிக்கணணியை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த கணனியின் மின் கலத்தில் இருக்கும் கோளாறு காரணமாக தீப்பிடிக்கும் அவதானம் இருப்பதாலேயே இவ்வாறு தடை விதிப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது. அதேவேளை ஏற்கனவே மேலும் பல விமான சேவைகளில் குறித்த கணணியை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/189228/
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ்.
 3. John Bolton‏ I offered to resign last night and President Trump said, "Let's talk about it tomorrow." Donald J. Trump‏ I informed John Bolton last night that his services are no longer needed at the White House. I disagreed strongly with many of his suggestions, as did others in the Administration, and therefore....
 4. கோத்தாபயவின் மேன்முறையீடு நிராகரிப்பு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. டீ.ஏ ராஜபக்ஷ அருங்காட்சியக அமைப்பின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளுக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த மேன்முறையீடே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/189179/
 5. மோடிக்கும் மொட்டுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கும் சிங்கள வாக்காளர்கள் Sep 11, 2019 | 6:26by கார்வண்ணன் in செய்திகள் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியின் சின்னமாகவே தென்பகுதியில் தமது ஆதரவாளர்கள் பார்ப்பதால், அந்தச் சின்னத்தை ஏற்க முடியாதிருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஹெற்றிபொலவில் நடந்த கூட்டம் ஒன்றில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர, உரையாற்றிய போதே இதனைக் கூறியுள்ளார். “தெற்கிலுள்ள கட்சி ஆதவாளர்கள் எம்மிடம் கலந்துரையாடும் போது, ‘ மொட்டு சின்னத்தை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். அதனைப் பார்க்கும் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி தான் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் 14 வீத வாக்குகள் முஸ்லிம் மக்களின் வாக்குகளாகும். எனினும் அதில் ஒருவர் கூட, நரேந்திர மோடிக்கு ஆதரவளிக்கவில்லை. சாதாரண முஸ்லிம் மக்கள், மொட்டு சின்னத்தை மோடியின் சின்னமாகவும், அவர் இந்துவாதி என்பதாலும் இம் மக்கள் அதனை தவிர்க்கிறார்கள் என்று கூறுகின்றனர். அதிபர் தேர்தலில் எமக்கு அனைவரதும் வாக்குகளும் அவசியம். சிங்கள மக்களது வாக்குகளை மாத்திரம் பெற்று தேர்லில் வெற்றி பெற முடியாது. தமிழ் மக்களானாலும், முஸ்லிம் மக்களானாலும் அனைவரும் ஒரு அதிபருக்கே வாக்களிப்பார்கள். எனவே அவ்வாறான தலைவர் அடிப்படைவாதியாக இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்க வேண்டும். எனவே தான் பொது சின்னத்தை அறிமுகப்படுத்தி தேர்லில் போட்டியிடுவோம் என்பதை வலியுறுத்துகிறோம். ” என்று தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/09/11/news/39951
 6. இராணுவ கட்டமைப்பில் மாற்றம் – முன்னாள் புலனாய்வு பணிப்பாளருக்கு நேர்ந்த கதி Sep 11, 2019 | 6:20by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்கா இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா பொறுப்பேற்றதை அடுத்து, இராணுவக் கட்டமைப்பில் அதிரடியாக பல உள்ளக மாற்றங்களைச் செய்து வருகிறார். இதற்கமைய, 53 ஆவது டிவிசனில் இருந்த மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி, இராணுவத் தலைமையக பொது அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு இராணுவத் தலைமையக தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் துஷான் ராஜகுரு, கொழும்பு இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இராணுவத் தலைமையக பொது அதிகாரியாக இருந்த, மேஜர் ஜெனரல் ஜயந்த செனிவிரத்ன, முல்லைத்தீவு இராணுவத் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல், பிஜே கமகே 53 ஆவது டிவிசனின் தளபதியாகவும், இராணுவ காலாட்படை பயிற்சி பாடசாலை தளபதியாக பிரிகேடியர் திலக் ஹங்கிலிபொலவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரிகேடியர் சூல கொடிதுவக்கு, 53 ஆவது டிவிசனின் பிரதி கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிகேடியர் நிவுன்ஹெல்ல பணியாளர் பணிப்பாளராகவும், பிரிகெடியர் ஜயநாத் ஜயவீர இராணுவத் தலைமை அதிகாரி பணியகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சூல கொடிதுவக்கு, 53 ஆவது டிவிசனின் இரண்டாவது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை, அவர் பதவியிறக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை காட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன. http://www.puthinappalakai.net/2019/09/11/news/39959
 7. எனது வெற்றிக்கு உங்களின் ஆதரவு தேவை சேர்(sir)
 8. ரணில் - சஜித் பேச்சுவார்த்தை தோல்வி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கமின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை நேற்றிரவு (11) 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான நிலையில் இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் நபரை தெரிவு செய்வதற்வதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாகும். இந்த பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட இருந்த நிலையில், நேற்று வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=118884
 9. பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் உத்தரவு பிரதி அமைச்சர் பாலித்த தேவரப்பெரும உட்பட ஐவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டுள்ளார். மத்துகம பிரதேச தோட்டம் ஒன்றில் கண்காணியாக பணியாற்றிய 70 வயதான ஒருவர் கடந்த 21 ஆம் திகதி தொடம்கொடை தெபுவ நோர்வூட் தோட்ட குடியிருப்பில் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த வயோதிபரின் சடலத்தை அந்த தோட்ட மயானத்தில் தகனம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெபுவன பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றது. சடலத்தை புதைக்க முடியாத இக்கட்டான நிலையில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை தெளிவுபடுத்தினர். அதனையடுத்து உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்ட பிரதியமைச்சர் குறித்த இடத்திற்கு வந்து உயிரிழந்த சடலத்தை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவரே இறுதிக் கிரியைகளையும் நடத்திச் வைத்தார். இதையடுத்து பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி அமைச்சர் பாலித்த தேவாரப்பெரும உட்பட்ட ஐவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற பிரதான நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டுள்ளார். http://www.dailyceylon.com/189134/
 10. குற்றச் செயல்களைத் தடுக்க பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி- நீதி அமைச்சர் அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்குவது தடை செய்யப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். நாம் மனிதர்களாக முன்னேறிச் செல்வது அவசியம். அந்த வகையில் எமது பிள்ளைகள் மிலேச்சத்தனமானவர்களாக வளர்ந்து விடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டக் கல்வியை பாடசாலைக் கல்வியில் உட்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் ஆரம்பித்து க. பொ. த. உயர் தரத்தில் இதனை ஒரு பகுதியாக நாம் உட்படுத்தவுள்ளோம். மக்கள் நாட்டிலுள்ள சட்டங்களை அறியாமல் உள்ளனர். அதனால்தான் தவறிழைக்கின்றனர். அதனால் சிறைச்சாலைகளே நிரம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரி கஹவத்தை ஆரம்ப பாடசாலையில் இரண்டு மாடிக்கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.dailyceylon.com/189130/
 11. ஜனாதிபதித் தேர்தலில் 159,92,096 பேர் வாக்களிக்கத் தகுதி- தே.ஆ. இம்முறை ஜனாதிபதித் தேர்தலின்போது 2018 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் கருத்திற்கொள்ளப்படும் எனவும் இதன்படி, 159,92,096 (1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96) வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் நடத்த முடியும் எனத் தெரிவித்த அவர், பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 17 பேர் தேர்தலில் போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று (9) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். http://www.dailyceylon.com/189080/
 12. பொதுஜன பெரமுன- சுதந்திரக் கட்சி இடையே விரிசல் அதிகரிப்பு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும், இருதரப்புக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் தேர்தலில் பொதுச் சின்னத்தில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால் ஆதரவளிக்க முடியும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது. எனினும், அந்த நிபந்தனையை ஏற்க முடியாது என பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்காக, தேர்தல் ஆணைக்குழுவிடம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி விருப்பம் வெளியிட்டுள்ளது. இருதரப்பு பேச்சுக்கள் இழுபறிக்குள்ளாகியிருக்கும் நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாவிட்டாலும் தனித்தே போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என பொதுஜன பெரமுன தலைவர்கள் பலரும் கூறத் தொடங்கியுள்ளனர். தனித்துப் போட்டியிட்டால் , சுதந்திரக் கட்சிக்கே பாதிப்பு என்றும் அவர்கள். எச்சரித்து வருகின்றனர். அதேவேளை, தமது ஆதரவின்றி எந்தக் கட்சியினாலும் 47 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற முடியாது என்று சுதந்திரக் கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. http://www.puthinappalakai.net/2019/09/10/news/39943
 13. காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு காணாமல் போனோரின் குடும்பத்திற்கு நவம்பர் மாதம் முதல் 6000 ரூபா கொடுப்பனவு ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கில் போன்று தெற்கிலும் காணாமல் போனோரின் குடும்பத்திற்கும், பொலிஸ் மற்றும் முப்படைகளின் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கும் கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/189113/
 14. ரணில், சஜித், கரு இன்று முக்கிய சந்திப்பு அதிபர் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு, இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. ஐதேகவின் இந்த மூன்று தலைவர்களும் அதிபர் வேட்பாளர் தொடர்பாக முடிவெடுப்பார்கள் என்று பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெறவிருந்த போதும், சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு அமைய பிற்போடப்பட்டது. இன்றைய பேச்சுக்களில் தான் பங்கேற்பேன் என்றும், தனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றும் யாழ்ப்பாணத்தில் நேற்று சஜித் பிரேமதாச கூறியிருந்தார். அத்துடன் தான் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவது நிச்சயம் என்றும், அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/09/10/news/39948
 15. ஜனாதிபதித் தேர்தலுக்கு 17 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிலையாவது தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட 14 அரசியல் கட்சிகள் எழுத்து மூலமாகவும் மேலும் இரண்டு அரசியல் காட்சிகள் வாய்மொழி மூலமாகவும் தமக்கு அறிவித்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக ஒருவர் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பவர்கள் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/189062/
 16. கோத்தாவின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிக் கொட்டிய முரளிதரன் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட மாநாட்டில், சிறிலங்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து, கோத்தா தரப்புக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியல்வாதி அல்லாத துறை சார் வல்லுனர்களையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கோத்தாபய ராஜபக்ச தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். அதனை அடிப்படையாக கொண்டே வியத்மக என்ற துறைசார் வல்லுனர்களின் அமைப்பை உருவாக்கி பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தார். இந்த அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 2500 துறைசார் வல்லுனர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று ஷங்ரி லா விடுதியில் நடத்தப்பட்டது. கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் வெற்றியை அடிப்படையாக வைத்தே இந்த மாநாடு கூட்டப்பட்டது. இதில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உரையாற்றிய போது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரே நாட்டை ஆள வேண்டும் என்றும், வர்த்தகரோ விளையாட்டு வீரரோ ஏனைய துறைசார் வல்லுனர்களாலோ அதனை சாதிக்க முடியாது என்று கூறியிருந்தார். இது கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் நிலைப்பாட்டுக்கும், எதிர்பார்ப்புக்கும் எதிரான கருத்தாக பார்க்கப்படுகிறது. http://www.puthinappalakai.net/2019/09/09/news/39934
 17. கட்டெறும்பு கடித்த இடத்தில் வெட்டிரும்பு விழுந்த கதை!!
 18. அட சம்பிக்க பரவாயில்லை போல கிடக்கு. முத்தையா முரளிதரன் திருவாய் மலர்ந்தருளியுள்ளதை கேட்டால்....... " 2009 ல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டநாளே எனது வாழ்வில் முக்கியமான நாள் " (இலட்சம் மக்களைக் கதற்க் கதறக் கொன்று ஆயிரம் புலிகளை அழித்த நாளில் அவர் பெற்ற சந்தோசம் பற்றி முத்தையா முரளீதரன் )
 19. சீனாவில் பெரும் டிராஃபிக் நடுவே 12 வழிச்சாலையை கடக்க முயன்ற முதியவர் - பிறகு நடந்தது என்ன? சிசிடிவி காட்சிகள்
 20. ஒரு கட்டடம் அடிக்கல் 1 Vs அடிக்கல் 2 டக்ளஸ் தேவானந்தா பசில் ராஜபக்சே கோஷ்டி Vs சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கே கோஷ்டி
 21. போர்க்குற்ற ஆதாரங்கள்
 22. Capital FM 94.0 & 103.1 #கேபியிடம் கப்பல்கள் மற்றும் #வங்கிக் கணக்குகள் இருந்தமையினாலேயே தடுத்துவைக்கப்படவில்லை. #உரிய ஆவணங்கள் இன்றி #கோட்டாபய ராஜபக்ஸவுக்கு திருட்டு #பாஸ்போர்ட் செய்ய ஒத்துழைப்பு வழங்கியதுரணில் விக்ரமசிங்கவே #வடக்கிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளை ஹம்பாந்தோட்டையில் உள்ள மக்களும் எதிர்நோக்குகின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப்பெற்று வியாபாரத்தில் ஈடுபட்டனர். ஊழலற்ற அரசியல்வாதியொருக்கே ஊழல்மிக்க அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்க முடியும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கு அதிகாரம்,(FULL VIDEO) හිටපු කොටි නායක කේ.පි ගාව නැව් හා බැ0කු ගිණුම් තිබුණ හින්දයි ඔහුව නිදහස් කරේ ඒක ජාතියක මත තියෙන සැකෙන් ජාතික ආරක්ශාව හදන්න බැහැ මුස්ලිම් දේශපාලකයන් ඔවුන්ගේ ජනතාව පෙන්නලා බිස්නස් කර්න්නේ මේ කිසිම ආණ්ඩුවක් සි0හල ආණ්ඩුවක් නොවේ ජනපති අපේක්ශක හා ජනතා විමුක්ති පෙරමුණේ නායක අනුරකුමාර දිසානායක සහභාගිවෙන අදිකාරම්