Everything posted by nunavilan
-
32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
இப்போ வாயில் வரும் வார்த்தைகளை எழுத முடியவில்லை.😂😂
-
ஐ.நா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத இஸ்ரேல்
ஐ.நா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத இஸ்ரேல் | அரசியல் களம் | அரசியல் ஆய்வாளர் அருஸ்
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
கனடிய தமிழர் பேரவை புது விளக்கங்களுடன் ஏமாற்றும் முயற்சி
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
உதயன்.(CMR) சி.எம் ஆரில் ஒலிபரப்பாளராக நீண்டகாலம் கடமையாற்றியவர். இப்போ அங்கு வேலை செய்வதில்லை.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
CTC யின் ஊடக சந்திப்பு..? கனேடியத் தமிழர் பேரவை (CTC), ஒரு ஊடக சந்திப்பை நாளை Toronto வில் நடத்தவுள்ளதாக அறிகிறேன். CTC ஒரு ஊடக சந்திப்பை நடத்த முடிவெடுத்துள்ளமை வரவேற்கப்படவேண்டியது. ஆனால், இவ் ஊடக சந்திப்புக்கு தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கே அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது. எனினும், எனக்கு அவ்வாறான அழைப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. CTC தனது செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான பொதுச்சந்திப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்ற பகிரங்கக் கோரிக்கையை முன்வைத்தவர்களில் நானும் ஒருவன். இருப்பினும், எனக்கு அவ்வாறான அழைப்பு தவிர்க்கப்பட்டமை வருத்தத்திற்குரியது. CTC யினால் ஊடகவியலாளனாக அங்கீகரிக்கப்படுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை யாரும் அறிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள். நிற்க, நண்பர் ஒருவர் என்னிடம் இப்படிக் கூறினார். சிலவேளை 'மஹிந்த ராஜபக்ச' அல்லது 'ரணில் விக்கிரமசிங்க'விடம் இருந்து நீங்கள் ஒரு ஊடகவியலாளன் என்பதற்கான பரிந்துரைக் கடிதம் (Recomendation Letter) கொடுத்தால் உங்களையும் ஏற்றுக்கொள்வார்களோ என்று..? கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது நண்பரின் கேள்வி. அனுமதிக்கபடுகின்ற ஊடக நண்பர்களுக்கு வாழ்த்துகள். அவர்கள் சுதந்திரமாக ஊடகப்பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை, கேள்வியை எழுதிக்கொடுங்கள்; பதில் தருகிறோம் பாணியில் நடைபெறுகிறதோ தெரியவில்லை..? CTC ஜனநாயகத்தைக் காக்கும் என்று காத்திருப்போம். - உதயன் S. பிள்ளை - (Official: ஞானகரன் S. பிள்ளை) Freelance Journalist / Political & Social Columnist / Speaker Former Broadcaster / Television Anchor / Producer @Canadian Tamil Congress
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
தி. மு.க தமிழ்நாடு என கூற பி.ஜே. பி தமிழகம் என கூறி பலத்த வாக்குவாதங்கள் சில காலத்துக்கு முன் நடந்தது. அதனால் தான் எனக்கு விஜய் பி. ஜே. பி சார்பானவரோ என சந்தேகம் வந்தது. பார்க்கலாம். விஜய் 3 தொடக்கம் 4 வீத வாக்குகளை பெறலாம் சிவாஜி, எம் ஜி ஆர் விஜயகாந் , ஜெயலலிதா வரிசையில் விஜய்.
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
தமிழர், திராவிடர் என் கட்சியின் பெயர் இல்லை. தமிழக என கட்சியின் பெயர் தொடங்குகிறது. இவரை பா. ஜ.க. பின்னால் இருந்து இயக்குகிறதா?
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
வடகொரியாவின் பரீட்சாத்தங்களை தினசரி செய்திகளில் குறிப்பாக உண்மையை கூறும் சிங்கள ஊடகங்களில் பார்ப்பதில்லை போல. கூதிகளே பைடனை இப்போ கையாள்கிறார்கள். ஈரானை 80 களில் அடித்தது போல் இப்போது அடிக்க முடியாது என்பதை அமெரிக்காவும் உலகமும் நன் கு அறியும். இஸ்ரேலால் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்கள் 27 ஆயிரம். இஸ்ரேலுடனான ஆயுத ஒப்பந்தம் $15 பில்லியன் இந்த வருடம் மட்டும். ஒரு வேளை பைடன் வெள்ளையாக இருப்பதால் நோபல் பரிசு கிடைக்கும் என நினக்கிறீர்களோ தெரியாது.
-
அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்
Caribbean Cricket League போட்டி நடக்கிறது.. மறு நாள் மேட்ச் க்காக Guyana அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்..... நாளின் கடைசியில் ஒல்லியான உருவம்...காலில் ஒழுங்கான ஷூ கூட இல்லை...ஒரு நெட் பவுலர் ஓடி வந்து பால் போட தொடங்குகிறார்... பால் விர்ரென்று போகிறது.... அடுத்தடுதத்து பால் போடுகிறார் அணியின் முக்கிய பேட்ஸ்மென் திணறுகிறார்......இதை பார்த்த கயானா அணியின் கிரிக்கெட் அட்வைஸர் (நம்மூர் பிரசன்னா அகோரம் ) யார்டா நீ என்ன ஏது என கேட்க... "சார் நான் Mallல செக்யூரிட்டியா வேலை பார்க்குறேன்.... இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணும்... இல்லைன்னா இன்னைக்கு பேட்டா கிடைக்காது... எனக்கு பவுலிங் போட பிடிக்கும் அதனால் கேட்டு உள்ளே வந்தேன் " என்கிறார் உடனே கயானா அணியின் கேப்டனை அழைக்கிறார் பிரசன்னா... இவர் நாளைய மேட்ச்சில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்... மளமளவென வேலைகள் நடக்கிறது... கண்ணீர் மல்க அந்த contractல் கையெழுத்து போடுகிறார் அந்த இளம் பவுலர்... "நாளைக்கு எவ்வளவு ஸ்பீட் போடுவ? " என கேட்கிறார் பிரசன்னா "எவ்வளவு ஸ்பீட் போடணும்? " என்று பதில் வருகிறது.... பதில் தந்தவர் தான் இன்றைக்கு 27 வருடங்களுக்கு பிறகு ஆஸி மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் க்கு வெற்றி தேடி தந்த 23 வயது Shemar Joseph!! நான்காவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளார் பாரகுரா என்று கயானா நாட்டின் மிகவும் பின் தங்கிய ஒரு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த ஷெமார் அந்த கிராமத்தில் ஒரு ஆரம்ப பள்ளி மட்டுமே இருந்தது அதனால் சரியான படிப்பு கூட இல்லை... பிறகு தந்தையுடன் மரம் வெட்டும் வேலை... கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் எங்கு சென்றாலும் அதை விளையாட மோகம்.... கயானா கிளப்களில் கிடைக்கும் ஆட்டங்களில் விளையாடி வந்தார்....பிறகு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தார்....இடை இடையே first class ஆட்டங்கள் விளையாடினார்...வறுமை விட்டபாடில்லை.... இறுதியாக செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்ந்தார் ... காலம் அவரை இன்று வேறொரு தளத்தில் நிறுத்தியுள்ளது கால் விரலில் காயத்துடன் இன்று களமிறங்கியவரிடம் ஆட்டம் முடிந்தபின் வலி தெரியலையா என கேட்க.... அதெல்லாம் தெரியவில்லை அணி ஜெயிக்க வேண்டும் என பெரும் சிரிப்புடன் முழங்கினார்.... அந்த சிரிப்பை பார்த்து இன்று இன்னொரு மேற்கிந்தியத் தீவுகள் கிராமத்தில் இன்னொரு சிறுவனுக்கு புது நம்பிக்கை பிறந்து இருக்கும்!! 2018 வரை internet வசதியே இல்லாத ஊரில் குடியிருந்த ஷெமார் ஜோசப் இன்று talk of the internet கற்பனைகளில் மட்டுமே சாத்தியமாகும் ஆனாலும் மனதை வருடி புது உத்வேகம் தரும் கதைகளை Fairy Tale என சொல்வார்கள்... எப்போதாவது அது நிஜத்தில் நடக்கும்...அப்படி ஒரு Fairy Tale இன்று நடந்தேறியது
-
இமாலயப் பிரகடனம் புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பை அமைப்புக்களுக்கு கொடுக்குமா?
இமாலயப் பிரகடனம் புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பை அமைப்புக்களுக்கு கொடுக்குமா?
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
வாண வாடிக்கை: தமிழ் மரபுத் திங்களின் அடுத்த பரிமாணம் மாயமான் கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ் மரபுத் திங்கள் வாண வாடிக்கையுடன் கோலாகலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. கனடிய தமிழர் பேரவை அலுவலகம் உடைக்கப்பட்டு எரியூட்டப்பட்டதைச் சொல்கிறேன். 27ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3:15 மணிபோல் எனக்கூறப்படுகிறது. சீ.சீ.டி.வி. காமெராக்களின் பதிவுகளைப் பார்த்தேன். இருவர், மூடிக்கட்டியிருந்த நிலையிலும் நடை-உடை-பாவனையில் தமிழ் மரபு தெரிந்தது. மிகுதி காவல்துறையின் வெண்திரையில். நமக்கேன் வம்பு. ‘இமாலயம்’ சக்திவாய்ந்தது என்று தெரியும் ஆனால் இந்தளவுக்கு? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பிரகடனப்படுத்தப்பட்ட ‘பிரகடனத்தின்’ விளைவுகளில் இதுவுமொன்று. பின்னால் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் வெட்ட வெளிச்சம். கனடிய பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் வாங்கியவர்களும் இதில் இருக்கிறார்கள் எனும்போது கல்விக்கும் வன்முறைக்கும் சம்பந்தமிருப்பது புரியக்கூடியதாகவுள்ளது. இயங்கியவர்கள் அப்பாவிகள். நியாயம் தெரிந்த நல்ல மனிதர்கள் எமது சமூகத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குரல்களை எழுப்பாதவர்கள். வாக்குகளை மட்டும் அவ்வப்போது அமைதியாகத் திணித்துவிட்டு அப்பால் போபவர்கள். தமிழுக்காகவும், தமிழனுக்காகவுமென அவர்கள் எதையும் செய்பவர்கள். அவர்கள் தாகம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்பதற்கு இச்சம்பவமும் ஒரு உதாரணம். துப்பாக்கிச்சூடு, எரிப்பு, திரை கிழிப்பு, வாகனமுடைப்பு, தனிமனித தாக்குதல், கடையுடைப்பு, கூட்டம் குழப்புதல் என அனைத்து வன்முறைகளும் இங்கும் அரங்கேறியவைதான். கடந்த நாற்பது ஆண்டுகளாக நாம் இவற்றைப் பார்த்து வந்தவர்கள். தமிழுக்காகவும், தமிழனுக்காகவும் இவை மன்னிக்கப்பட்டவை. இம்மரபு தொடரும் என்பதற்கு சமூக ஊடகப் பதிவுகள் சாட்சியம் கூறுகின்றன. கனடிய தமிழர் பேரவையின் ஆரம்ப காலத்திலிருந்து அதன் பணிகளைப் பார்த்து வருபவன். அதன் படிகளில் ஏறி உச்சிக்குச் சென்ற பலர் இப்போது அதன் அத்திவாரத்தை இடித்துத் தகர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். அதன் வெற்றி மீதான பொறாமை. பேரவை மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடுண்டு. அவைபற்றி சில இயக்குனர்களுடனும், நிறைவேற்றுப்பணிப்பாளருடனும் காரசாரமாக விவாதித்தவன். நிறைவேற்றுப் பணிப்பாளர் டான்ரன் துரைராஜா மீது பலகுற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால் அவரது உழைப்பு, சுயநலமற்ற அர்ப்பணிப்பு போன்றவற்றில் விமர்சனங்கள் இருக்கமுடியாது. குடும்பத்தைவிட அதிக நேரத்தை அவர் தனது பணிக்காகச் செலவிடுபவர். பேரவையின் வெற்றிக்கு மட்டுமல்ல இங்கு மேடைகளில் பிரகாசிக்கும் பல அரசியல் நட்சத்திரங்களின் வெற்றிகளுக்கும் பின்னால் அவரது உழைப்பு இருந்தது என்பதை அவரவர்களின் மனச்சாட்சிகளே உறுத்திச் சொல்லும். இன்று கனடிய பாராளுமன்ற வளாகங்களில் உலவும் பல இளையதலைமுறைனர் இதற்குச் சாட்சி. இந்த நட்சத்திரங்களை மேடையேற்றுவதற்குப் பதிலாக அவர் மேடையேறியிருந்தால் நிலைமையே வேறு. பேரவை அலுவலகம் மீதான இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவேண்டியவர்கள் பலர். சட்டம் இந்த உடுக்கு மாஸ்டர்களை எதுவுமே செய்யப்போவதில்லை. உணர்ச்சிவசப்பட்டு உருவேறி ஆடிய சாமானியர்கள்தான் பாவம். கனடிய தமிழர் பேரவை ஈழத்தமிழருக்கும், கனடியத் தமிழருக்கும் பல சேவைகளைச் செய்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக அவற்றைப் பரப்புரை செய்வதில்லை. கனடாவின் ‘தமிழர் தெருவிழா’ உலகம் பூராவும் கனடியத் தமிழருக்கு அடையாளம் தேடித்தந்த ஒன்று. அம்மேடைகளில் ஏறி இறங்காத கனடிய அரசியல்வாதிகளே இல்லை என்றே கூறலாம். அத்தெருவிழாவைக் கையகப்படுத்துவதற்குப் பல தமிழர் அமைப்புகள் முயன்று பார்த்தன. வருடா வருடம் மானியங்களுக்கு விண்ணப்பிக்கும்போது கூடவே பேரவைக்கு எதிரான பெட்டிசன்களும் போவது வழமை. எல்லாம் தமிழின் பேரில். எங்கு போனாலும் தமிழன் தனது கலாச்சாரத்தை விட்டுக்கொடுப்பதில்லை என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான். வேண்டுமானால் கலாநிதி இலகுப்பிள்ளையைக் கேட்டுப்பாருங்கள். இவ்வருட தமிழ் மரபுத் திங்களின் முடிவு நாள் கோலாகலமான ‘வெடித்திருவிழாவாக’ நிறைவுபெற்றமை ஒரு அபாயச்சங்கின் ஒலியாகவே எனக்குப் படுகிறது. எமது அடுத்த சந்ததியை முற்றாக அந்நியப்படுத்தவே இதுபோன்ற நடவடிக்கைகள் துணைபோகும். ‘தமிழ் மரபைக்’ கொண்டாடக் கூவியழைப்பவர்களே அதை அழிக்க வழிகோலுகிறார்கள் என்பது துர்ப்பாக்கியம். தமிழுக்கும், மரபிற்கும், விடுதலைக்கும் இது எந்தவகையில் உதவிசெய்யும்? ஆற அமர்ந்து யோசித்து முடிவுகளை எடுப்பது வரவேற்கத்தக்கது. இப்போதைக்கு, ஆழ்ந்த அஞ்சலி! https://marumoli.com/வாண-வாடிக்கை-தமிழ்-மரபுத/?fbclid=IwAR2NR2ZLXGezyYCtuDp8YJyUIKEETGWkgZCWPolT98jimt12GiP2KeTk95g#google_vignette
-
அறம் வெல்லும்..?
அறம் வெல்லும்..? 'BigBOSS' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் விக்ரமன் அடிக்கடி உச்சரித்த ‘அறம் வெல்லும்’ என்ற வார்த்தைகள் மக்களிடத்தில் இப்பொழுது அதிகம் பரீட்சயமான வார்த்தைகளாகியுள்ளன. ஆனால், போட்டியின் முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. உண்மையில் 'அறம்' தோற்பதில்லை. அது தோற்கடிக்கப்படுகிறது என்று மக்களுக்கு புரியவைப்பதற்கே ஒரு ‘விடுப்பு’ நிகழ்ச்சி தேவைப்படுகிறது. இது தான் இன்றைய நிதர்சனம். புதிய ஒழுங்கு. 'அறம்' தோற்றல் என்பது புது விடயம் அல்ல. இது அரசியல், வணிகம், சட்டம், சமூகம், ஊடகம் என எல்லா மட்டங்களுக்கும் பொருந்தும். அடிப்படியில் அறத்தைத் தோற்கடிக்கும் தந்திரம் ஆதிக்க சக்திகளின் மூலோபாயம் என்றாலும், அதனை நிறைவேற்றும் கருவிகளாக மக்களே (சமூகமே) விளங்குகின்றனர். 'BigBOSS' இல் விக்ரமன் தோற்றதால் 'அறம்' தோற்றதா? அல்லது தோற்கடிக்கப்பட்டதா..? என்று விவாதிப்பதற்கான பதிவு இல்லை இது. அல்லது விக்கிரமன் அறத்தின் காவலனா? இல்லையா ? என்று பகுப்பாய்வதும் இப்பதிவின் நோக்கமல்ல. ஆனால், ‘அறம்’ மக்கள் பலத்தால் தோற்கடிக்கப்படுகிறது என்பதே சமகால பொது விதி. இந்நிலையில், ‘அறம்’ பற்றிய சொல்லாடலின் குறியீட்டு அடையாளமாக ‘விக்கிரமன்’ பெயர் புழக்கத்தில் உள்ளதால், சமூகப் பிறழ்வுகள் குறித்து மக்கள் மனங்களில் ஒரு சிந்தனைத் தூண்டலைச் செய்வதற்கான தருணமாக இது அமையலாம் என்ற ஒரு புள்ளியான நம்பிக்கையின் வெளிப்பாடே இப்பதிவு. கணிசமானவர்கள், BigBOSS என்ற கள்ளுக்கொட்டிலுக்குள் கூடியிருந்து கள்ளடிச்ச போதையில், 'ஊடக அறம்' எது? என்று வகுப்பெடுத்துக்கொண்டு இருப்பீர்கள். ஆகவே, நானும் கள்ளுக்கொட்டிலுக்கு வெளியில் நின்று கள்ளடிச்சுப்போட்டு வந்திருக்கிறன். போதை உள்ளவர்களோடு போதையில் தானே உரையாடவேண்டும். அறத்தைக் காக்கும் கடமையும், பொறுப்பும் கொண்டு செயற்படவேண்டிய வெகுஜன ஊடகங்கள் (Mass Media), மக்களை எப்பொழுதும் ஒரு போதை மயக்கத்தில் வைத்துக்கொள்ளும் வித்தையில் கைதேர்ந்தவர்களாக உள்ளன. இவ்வித்தையில் தமிழக ஊடகங்களைப் பொறுத்தமட்டில் நான் முந்தி.. நீ முந்தி.. என்று ஒரு பிரகடனப்படுத்தப்படாத ஊடகப் போர் நடை பெற்றுவருகிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால், “…அதி உச்சமான ரசனை மிக்கவர்கள் ஈழத்தமிழர்கள், எச்சங்களுக்கு எல்லாம் கைதட்டமாட்டார்கள்..” என்ற ஒரு காலத்து நிலை மாற்றம் கண்டு, இன்று எச்சங்களை மட்டுமே தலையில் தூக்கிக் கொண்டாடும் இனமாக ஈழத்தமிழினமும் மாறியிருக்கிறது. எனது கணிப்புச் சரி என்றால், அடுத்த நிகழ்ச்சிக்கு (Season க்கு) கனடாவில் இருந்தும் ஒரு போட்டியாளர் உள்வாங்கப்படலாம். நாமும் Facebook ஐக் கதறவிட்டு வாக்கு வேட்டையில் இறங்கக்கூடும். அதன் பின்னர் Pearson விமான நிலையத்தில் மாலை, பொன்னாடை, தாரை-தப்பட்டைகளோடு அப்போட்டியாளரை விழா எடுத்து வரவேற்போம். கழுதையாக இருந்தாலும், தமிழகத் தொலைக்காட்சியின் வாசம் பட்டால் குதிரையாகிவிடும் என்ற நம்மவர்களின் ‘அக்கரை’ மோகம், நம்மத்தியில் உள்ள திறமையாளர்களை தரக்குறைவாக இழிவு செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. எனினும், திறமையாளர்களுக்கு பெரிய தளங்களில் அங்கீகாரம் கிடைப்பதை இப்பதிவு குறை கூறவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மண்ணில் அங்கீகரிக்கப்பட்டாலே, நாம் நம்மவர்களின் திறமைகளை அங்கீகரிப்போம் என்ற நிலையைத்தான் குறைகூறக் கடமைப்பட்டுள்ளோம். இந்நிலையில், கேளிக்கை விநோதங்களின் மைய்யமாக, மக்களை வசியம் செய்யும் பெருச்சாளிகளாக, ஊடகங்கள் பெருவளர்ச்சி காண்பதில் மக்களே பங்காளிகளாக விளங்குகின்றனர் என்பதை மக்கள் உணர்வதில்லை. எனவே, விடுப்பு, விறுவிறுப்பு, விசித்திரம் என்று நாடுகிற மக்கள் கூட்டத்துக்கு தேவைப்படும் தீனியை அள்ளிக் கொடுக்கும் ஊட்டிகளாக, இவ்வூடகங்கள் விஸ்வரூபம் பெற்றுள்ளன. மாறாக சமூகத்துக்கு உண்மையைச் சொல்கிற, விழிப்புணர்வை ஊட்டுகிற ஊடகங்களையும் / ஊடகர்களையும் புறக்கணிக்கும் பழக்கத்தையும் இது போன்ற கேளிக்கை மைய்யங்களே உருவாக்கி வைத்துள்ளன. ஆனால், சமூகத்தில் மாற்றங்களை உருவாக்க விரும்பி ஊடகக் கற்கையை பயின்றும், பயிற்சியைப் பெற்றும், அதற்குரிய மதிப்பும் மரியாதையும், வெகுமதியும் கிடைக்காமல், அரச - தனியார் நிறுவனங்களில் கிடைத்த தொழிலைச்செய்கிற வழக்கமும் பழக்கமாகிவிட்டது. ஒரு நுகர்வோனின் பலவீனமே, வியாபாரியின் பெரும்பலம். இந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே சந்தைப்படுத்தலின் மூலோபாயம் (Marketing Strategy) வகுக்கப்படுகிறது. அதனை தமிழகத்து தொலைக்காட்சிகள் செவ்வனே செய்து வருகின்றன. ஆனால், பார்வையாளர்களும், பங்காளிகளும் இங்கு மக்களே என்பதே அடிப்படை. தாம் நிர்ணயம் செய்கிற இலக்கை, தமக்கு சேதாரம் இல்லாமல், மக்கள் எனும் கருவிக்கொண்டு இயக்குபவனே இங்கு ஆட்ட நாயகன். இது தெரியாமல் தன் பணத்தை, நேரத்தை, வாழ்வை விரயம் செய்கிறவனே ரசிகன் என்ற பங்காளி. உண்மையில், இங்கே முற்றுமுழுதாகப் பாதிக்கபடுகிற (Vulnerable) தரப்பு, பங்காளியாகவுள்ள பொதுமகனே. ஆனால், அதனை அவன் உணர்வதில்லை. காரணம், ஒரு சாமானியப் பொதுமகனுக்கு பொழுதுபோக்கே முக்கியம். அவனுடைய அன்றாடத் தேவைகளின் பட்டியல் என்பது கேளிக்கை, வேடிக்கை, விடுப்பு என்ற ஆதாயங்களைத் தேடியே அலைகிறது. இதற்கு படித்தவர் /பாமரர் என்ற வேறுபாடு கிடையாது. எனவே, இவ்வாறான மனோநிலையில் மக்களை வைத்துக்கொண்டாலே போதும், வணிக மூலோபாயமும், அரசியல் மூலோபாயமும் கட்டுக்குள் வந்துவிடும். இது போன்ற பிறழ்வுகள் தமிழகம்/ இந்தியாவில் நெடுங்காலப் பழக்கம் என்றாலும், அண்மைக்காலமாக நம்மவர்கள் மத்தியில் புகுத்தப்பட்டுள்ள சினிமா/ சின்னத்திரை / விடுப்பு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளின் திணிப்பும், அவை நம் சமூகத்தின் மீது செலுத்தும் தாக்கத்தின் அளவும், ஒரு பெரும் சமூகக் கட்டுமானச் சீரழிவையே ஏற்படுத்திவருகின்றன. இன்று நம்மவர்கள் மத்தியில் ஊடகம் தொடர்பான புரிதலும், அது சார்ந்த செயல்களும் மலினப்பட்டுவருகின்றன. அதன் அடுத்த பரிணாமமாகவே சமகால சமூக ஊடகங்களின் பெருக்கமும், அவை தாங்கி வருகின்ற விடுப்புகளும் மக்களைக் கவர்ந்து வருகின்றன. அவற்றின் அடிப்படை என்பது, மக்களை வசியம் செய்யும் நோக்கமும். அதனூடாகப் பணம் ஈட்டும் வெறியும் கொண்ட செயல்களாக அமைந்துள்ளன. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு) சமூக ஒன்று கூடல்களே இவ்வூடகங்களின் அதிகபட்ச செய்தி மைய்யம் (coverage). கனடாவில் 4 லட்சம் பேர் இருப்பதாக மார்தட்டுகிற நம்மவர் நிகழ்வுகளின் பதிவுகளில் 40 பிரபல தம்பதிகளும்.. 40 வணிகர்களும்... 40 தமிழ் பெண்பிள்ளைகளும் மட்டுமே திரும்பத்திரும்ப 360 கோணத்தில் பதியப்படுகின்றனர் (படம் எடுக்கப்படுகின்றனர்). உதாரணமாக கனடாவிலும் பெருகியுள்ள சமூக ஊடகங்களில் கணிசமானவை சமூகப்பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நேரலை செய்வதிலும், ஒளிப்படம் எடுப்பதிலும், செய்தியாக்குவதிலும் மும்முரமாக இயங்கி வருகின்றன. அவர்களுக்குள் ஒரு நீயா? நானா? போட்டியும் நடைபெற்று வருகிறது. அத்தோடு கலியாணம், செத்தவீடு என்று முன்பந்தியில் அமர்ந்து நேரலை செய்யும் அளவுக்கு ஊடகங்கள் மலினப்பட்டுள்ளன. ஆனால், இவ்வாறான ஊடகப் பிறழ்வுகள் தொடர்பிலோ.. ஊடக அறம் பிழைத்ததாகவோ.. யாரும் கவலையோ.. கரிசனையோ ..கொள்ளவில்லை. எனவே, இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.. அதனை நாம் கொடுக்கிறோம் என்று குறித்த ஊடகங்களும்.. நியாயம் சொல்ல வசதியாகிவிட்டது. மறுபுறத்தில் தமிழர்களுக்கு உரிமையும், இனப்படுகொலைக்கு நீதியும் வேண்டி நின்ற அமைப்புக்கள், GTA நகரங்களை குத்தகை எடுத்து விழா நடத்துகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தமது பலத்தை குறித்த அமைப்புகள் பறைசாற்றுகின்றன. தமிழ் இருக்கைக்காக 3 மில்லையன் டொலர்களை திரட்டும் திறன்கொண்ட சமூகத்தால், போரால் பாதிக்கப்பட்ட சில ஆயிரம் பேருக்கு தீனிபோட வழிபிறக்கவில்லை. திருவிழாவும், தெருவிழாவும் செய்து ஒரு வணிகமயப்பட்ட கட்டமைப்புக்களாக உருமாறியுள்ள அமைப்புக்களின் அறப்பிறழ்வுகள் குறித்து யாருக்கும் கவலை இல்லை. காரணம், நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு கேள்வி கேட்காமல் இருப்பதற்கான மேடைகள் வழங்கப்படுவதோடு, உங்கள் கவனம் அவர்கள் மீது திரும்பாமல் வேடிக்கையும் காண்பிக்கப்படுகிறது. முன்வரிசையில் அமர்ந்து படம் எடுக்க கிடைத்த வாய்ப்புக்காக, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் விளம்பர முகவர்களாக சமூக ஊடகர்கள் தமது ஒளிப்படக்கருவிகளை காணிக்கையாக்கிவிட்டனர். ஆக, நம்மைச் சுற்றி எத்தனை அறப்பிறழ்வுகள் உண்டு?. அத்தனை அறப்பிறழ்வுகளின் பின்னால் பங்காளிகளாக யார் உண்டு.? என்ற கேள்விகளை நம் சமூகம் சிந்திக்க வேண்டும். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தைகள் போல, சுயம் இழந்த சமூகமாக நாம் மாறிவருவது குறித்து நம்மவர்கள் வாய் திறப்பதில்லை. அப்படிக் குரல் கொடுப்போருக்குப் பக்க பலமாகவும் நிற்பதில்லை. ஆக, இத்தனை அறப்பிறழ்வுகளையும் கண்டுகொள்ளாத சமூகம், கூத்தாடிகள் கூடாரத்தில் அநீதி நடப்பதாக முணுமுணுப்பது வேடிக்கையானது. எனவே, BigBoss விடயத்தில் தோற்றது விக்ரமன் என்றாலும், வென்றது விஜய் தொலைக்காட்சியே. இனிமேல், தமது நிகழ்ச்சிகளில், செயல்களில், எவ்வித அறத்தையும் பேணவேண்டிய அவசியம் இல்லை என்பதை, மக்களே சொன்னார்கள் அல்லது சொன்னதாகக் காட்டினார்கள் என்ற நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் இனி அனைத்து ஊடகங்கள் மத்தியில் வீரியம் பெறும். சமூகமும் அதனை ஏற்றுக்கொண்டு பயணிக்கும். சமூகம் வெறும் குப்பைகளைக் கொட்டும் குப்பை மேடு என்பதை ஊடகங்கள் உறுதியாகப் புரிந்துகொள்ளும். ஆனால், வணிகமும், வணிகனும் வெல்வர். எனவே, அறம் தோற்பதில்லை... தோற்கடிக்கப்படுகிறது.. கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சமூகத்தால்... (இப்பதிவை இறுதிவரை பொறுமையாகப் படித்தோருக்கு நன்றி. ஏனையோர் அடுத்த விடுப்பைத் தேடிக்கொண்டிருக்கக்கூடும்..) https://www.facebook.com/uthayan.s.pillai/posts/pfbid02yLeRyR7moGV1qWMKayCw9HSfMS93GJTWCYYKPVdiKt2axDRUzVVbD8nbrhnjUzPJl
-
சங்கியாய் மாறிய பாரதிபாஸ்கர்
- வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
நயினாதீவு என நான் கருதியது நயினச்தீவு கோவிலை. எந்த பெரிய இன்ப்படுகொலைகளை செய்தவர்களை இலகுவில் மக்கள் மறக்க மாட்டார்கள்.- வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
ஒரு சில மாதங்களுக்கு முன் தான் நானும் அங்கிருந்தேன். மக்கள் எல்லா விழாக்கள் பண்டிகைகளுக்கும் போகிறார்கள். நயினாதீவுக்கு போனால் சிங்களவர் என்று அர்த்தமா?- அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
பைடன் கோவிக்க மாட்டாரா?🙂- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
இனவாதம் இல்லாத சிங்கள பத்திரிகைகள் எவை? அதெப்படி. சுமந்திரன் சிங்களவரா? ஏன் தமிழ் மக்கள் சுமந்திரனை இழுத்து பிடிக்கிறார்களா?- வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
நிச்சயமாக பாராட்டியவர்கள் தமிழ் மக்களாக இருக்க முடியாது.- இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
· Kana Praba · ராஜா மகள் பவதாரிணி ஒளியிலே தெரிவது நீ இல்லையா....? “பல்லாக்கு வந்திருக்கு ராணி மகராணிக்கு நில்லாம சுத்தும் கண்ணு தேடுதவ சோடிக்கு” https://www.youtube.com/watch?v=wH4pDX05nck என் வானொலிக் காலத்தின் ஆரம்ப நாட்களில் பெண் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக அர்ப்பணிக்கும் போது, மானசீகமாக இளையராஜா தன் மகளைப் பல்லக்கில் சுமக்க வைத்த பாட்டு என்று எண்ணுவேன். இசைஞானி இளையராஜா தன் மனைவியைப் பிரிந்த போது நட்பு வட்டத்தில் நம் குடும்பத்தில் எழுந்த இழப்பாக நாம் பரிதவித்த அதே உணர்வை இன்றைய விடிகாலை பவதாரிணியின் இழப்பை எதிர்கொண்ட போது உள் வாங்கினேன். “பாடகக் குரல்களில் பவதாரிணியின் குரல் தனித்துவமானது" என்று இளையராஜா பொது மேடையில் சொன்ன போது, தந்தையின் நேசமோ என்று எண்ணுபவர்களுக்கு, பல்லாண்டுகளுக்கு முன்பே இசையமைப்பாளர் சிற்பி வெற்றியின் உச்சாணிக் கொம்பில் இருந்த போது, பவதாரிணியின் குரலைச் சிலாகித்துப் பேட்டி கொடுத்ததை ஞாபகத்தில் எழுப்ப வேண்டும். பவதாரிணி குழந்தைப் பாடகியாகத் தன் எட்டாவது வயதில் குழந்தைப் பாடகியாகத் தன் தந்தை இளையராஜா இசையிலேயே அறிமுகமானது, இந்தியாவின் முதல் 3D திரைப்படமான “மை டியர் குட்டிச் சாத்தான்” படத்துக்காக, “தித்தித்தே தாளம்” என்ற மலையாளப் பாடலின் வழியே. “குயிலே குயிலே குயிலக்கா” https://www.youtube.com/watch?v=NOvNMnpJ-9U பாடலை சித்ராவோடு “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" படத்துக்காக குழந்தைப் பாடகியாகத் தந்தை இளையராஜா இசையில் பாடிய வகையில் நூறைத் தொடும் திரையிசைப் பாடல்களைத் தன் தந்தை இசையில் பாடியிருக்கிறார். தவிர “அம்மா பாமாலை” போன்ற தனி இசை வெளியீடுகளிலும் தன் மகளின் குரலை இசைக்க வைத்திருக்கிறார். பவதாரிணியோடு, வெங்கட்பிரபு, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி, யுவன் ஷங்கர் ராஜா இவர்களை இணைத்து, சித்ராவோடு பாடவைத்தேன் என்று பவதாரிணியின் சித்தப்பா இசையமைப்பாளர் கங்கை அமரன் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பாடல் “கோயில் மணியோசை” படத்துக்காக அமைந்த “ஓடப்பட்டி பிச்சமுத்து” https://www.youtube.com/watch?v=UHU4WOAghTw இளையராஜா, கங்கை அமரன் தவிர்ந்து, தன் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஆகியோர் இசையிலும் பாடியவர் சிற்பியின் இசையில் “ஆல்ப்ஸ் மலைக்காற்று” வழி புகழ் சேர்த்தவர். தன் அண்ணன் கார்த்திக் ராஜாவின் முதல் படத்தில் “நதியோரம்” (அலெக்சாண்டர்) பாடலில் உன்னிகிருஷ்ணனோடு ஜோடி சேர்ந்து பாடியவர், இந்த ஜோடிக் குரல்கள் அதிகம் ஹிட் கொடுத்திருக்கின்றன என்று சொல்ல வைத்தன. யுவனின் ஆரம்ப கால ஹிட் பாடல்களில் தோள் கொடுத்தவர் பவதாரணி. யுவன் முதலில் இசையமைத்த “ஆல் த பெஸ்ட்” (அரவிந்தன்), “நீ இல்லை என்றால்” (தீனா), “மெர்க்குரிப் பூவே” (புதிய கீதை” என்று அது நீளும். பெண்களை முக்கிய தொழில் நுட்பக் கலைஞர்களாக வைத்து நடிகை ரேவதி இயக்கிப் பெரும் புகழைப் பெற்ற மித்ர் மை ப்ரெண்ட் (2002) படத்தின் மூலம் இசையமைப்பாளரான பவதாரிணி கடந்த 22 ஆண்டுகளில் , “இலக்கணம்”, “அமிர்தம்” தமிழ் உள்ளிட்ட தெலுங்கு, கன்னடத்தில் பத்துப் படங்களை இசையமைத்திருக்கிறார். பாவலர் வரதராஜன் சகோதர்கள், அவர்களின் வாரிசுகளில் ஒரே பெண் வாரிசு இசையமைப்பாளராகத் தனித்துவம் படைத்தார். “மங்காத்தா” படத்தின் இசையுருவாக்கத்தில் யுவன், பிரேம்ஜி மட்டுமல்ல, கூட்டு முயற்சியில் பவதாவும் கூட உதவினார் என்று வெங்கட் பிரபு கூடக் குறிப்பிட்டிருக்கிறார். “அஞ்சலி” படத்தின் குழந்தைப் பாடல்கள், அப்படியே தென்றல் சுடும் படத்தில் ஜானகியோடு ‘தூரி தூரி” என்று தொடர்ந்த பவதாரிணியின் பாட்டுப் பயணத்தில் “பாரதி” தேசிய விருதை வாங்கிக் கொடுத்தார் “மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்காக. இதை எழுதும் போதே “வண்டியில வண்ண மயில் நீயும் போனா சக்கரமா என் மனசு சுத்துதடி” என்று காதுக்குள் ரீங்காரமிடுகிறார் பவதாரிணி. இளையராஜாவின் இசையில் பவதாரிணியின் அடுத்த பயணம் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அமைந்த போது “ஒரு சின்ன மணிக்குயிலு” (கட்டப்பஞ்சாயத்து), மஸ்தானா மஸ்தானா (ராசையா), உன்னை விட மாட்டேன் (இரட்டை ரோஜா), என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே” (ராமன் அப்துல்லா), “பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா? “, “அக்கா நீ சிரிச்சாப் போதும்” (கிழக்கும் மேற்கும்), “கண்மணிக்கு வாழ்த்துச் சொல்லும்” (அண்ணன்), “இளவேனிற்காலப் பஞ்சமி” (மனம் விரும்புதே உன்னை), “காயத்ரி கேட்கும்” (காக்கைச் சிறகினிலே), “தவிக்கிறேன்” (டைம்), “ஓ பேபி பேபி” (காதலுக்கு மரியாதை), தென்றல் வரும் வழியை” (ப்ரெண்ட்ஸ்), “மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்” (கரிசக்காட்டுப் பூவே), “ஏதோ உன்னை நினைச்சிருந்தேன்” (சொல்ல மறந்த கதை), “ஆலாபனை செய்யும்” (பொன் மேகலை), “காற்றில் வரும் கீதமே” (ஒரு நாள் ஒரு கனவு), “கண்ணனுக்கு என்ன வேண்டும்” (செந்தூரம்) உள்ளிட்ட புகழ் பூத்த பாடல்கள் அடங்கும். “இது சங்கீதத் திருநாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ” பாடல் ஒரு தசாப்தம் பல லட்சம் தமிழர் வீட்டுப் பிறந்த நாள் பாட்டுக் குரலாகவே ஆகிப் போனார். “ஒளியிலே தெரிவது தேவதையா” அழகியின் அடையாளக் குரலாக இன்று வரை பவதா தெரிகிறார். ஆத்மாத்தமாக பவதாரிணியின் குரல்களில் “உன் காதலன்” (நானும் ஒரு இந்தியன்/தேசியப் பறவை) https://www.youtube.com/watch?v=OBT2WFCpalQ மற்றும் “ஆலமரம் மேல வரும்” (செந்தூரம்) https://www.youtube.com/watch?v=ZHSPM7EiQpg ஆகிய பாடல்களைத் தேடி ரசிப்பேன். “அலை மீது விளையாடும் இளம் தென்றலே” https://www.youtube.com/watch?v=zxwJMG1OKz8 ஒரு சின்னப் பாட்டுக்குள் பேரலையாய் நம்மை ஆக்கிரமிப்பார் பவதாரிணி. “கானக்குயிலே கண்ணுறக்கம் போனதடி” https://www.youtube.com/watch?v=fYzDNepWXLI இந்தப் பாடலை இப்போது நினைத்துப் பார்த்தால் மனதை ஏதோ செய்கிறது. “பவதா!” என்று ராஜா தன் மகளை அழைக்கும் பாங்கை நினைத்துப் பார்ப்பேன். “புத்திர சோகம் பெருஞ்சோகம்" என்பார் என் அப்பா. வெளி உலகம் தெரியாது இசையே உலகமாகக் கொண்ட இளையராஜாவின் பிறந்த நாட்களில் அவருக்குப் பக்கத்தில் சின்னக் குழந்தை போல கேக் ஊட்டி மகிழும் அந்தச் செல்வ மகளின் பூரித்த கண்கள் தான் மனதில் நிறைந்திருக்கிறது. எம் பெருமான் சிவனை நினைக்கும் போது எழும் “ஆதிசிவன் தோளிருக்கும் நாகமணி நாகமணி” https://www.youtube.com/watch?v=cqGblneQY2w பாடலை இந்த நேரத்தில் மனசாரக் கேட்டு, எங்கள் பவதாரிணி இறைவனின் பாதத்தில் இளைப்பாறி ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். கானா பிரபா 26.01.2024- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
மாலையில் யாரோ வீணா மீராகிருஸ்ணா- தம்மைத்தாமே தரம் தாழ்த்திய தமிழரசுக்கட்சி
தம்மைத்தாமே தரம் தாழ்த்திய தமிழரசுக்கட்சி | உலக நகர்வுகள் | ஆய்வாளர் வேல் தர்மா- Mist of Capricorn
உயிரே என்னோடு கலந்து விடு கரிஸ் சிவராமகிருஸ்னன்- அதிசயக்குதிரை
- ‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
Vaiko பழனி கோவிலில் வழிபாடு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி, 1947-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது என்று கூறி, பழனியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி அவர்கள், “இந்து அல்லாதவர்களை கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது. ‘இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற பதாகையை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்” என உத்திரவிட்டுள்ளார். மேலும் “மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும். அந்தப் பதிவேட்டில், இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்தரவாத உறுதிமொழி எழுதிக் கொடுத்த பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கலாம்” என்று உத்தரவிட்ட நீதிபதி, “இந்து அறநிலையத்துறை ஆணையர் கோயிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்” எனவும் உத்தரவு பிறப்பித்தார். இத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவர்கள் விரும்பிய வழிப்பாட்டுத் தலங்களில் வழிபடுவது அவரது நம்பிக்கைக்கு உரியது. நாகூர் தர்காவிலும், வேளாங்கண்ணி மாதா கோவிலிலும் இந்துக்களும் பிற மதத்தினரும் வழிபட்டு வருகின்றனர். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். வைகோ பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க, தாயகம்’ சென்னை - 8 31.01.2024- ‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு குஜராத்தை பிடிக்க சில நூலிழை தான் உள்ளது, நல்லா வருவீங்கள். - வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
Important Information
By using this site, you agree to our Terms of Use.