Everything posted by nunavilan
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
https://yarl.com/forum3/topic/255611-ஐநா-தீர்மானம்-சம்மந்தமாக-நாட்டின்-ஜனாதிபதி-சிறந்த-முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார்-கருணா-அம்மான்/page/3/#comment-1522508
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Never forget or forgive. 1. Haifa Massacre 1937 2. Al-Quds Massacre 1937 3. Haifa Massacre 1938 4. Balad Al-Sheikh Massacre 1939 5. Haifa Massacre 1939 6. Haifa Massacre 1947 7. Abbasiya Massacre 1947 8. Al-Khisas Massacre 1947 9. Bab Al-Amud Massacre 1947 10. Al-Quds Massacre 1947 11. Sheikh Bureik Massacre 1947 12. Deir Yassin Massacre 1948 13. Jaffa Massacre 1948 14. Tantura Massacre 1948 15. Al-Quds Massacre 1953 16. Khan Yunis Massacre 1956 17. Al-Quds Massacre 1967 18. Sabra and Shatila Massacre 1982 19. Al-Aqsa Massacre 1990 20. Ibrahimi Mosque Massacre 1994 21. Jenin Refugee Camp Massacre 2002 22. Gaza Massacre 2008-2009 23. Gaza Massacre 2012 24. Gaza Massacre 2014 25. Gaza Massacre 2018-2019 26. Gaza Massacre 2021 27. Gaza Holocaust 2023-present
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நத்தனியாகு பங்குனி வரை கமாசுக்கு காலக்கெடு கொடுத்து இருக்கிறாராம் பணயகைதிகளை விடுவதற்கு.
-
India, US & Germany Foreign Ministers Joint Panel Discussion at Munich Security Conference
India, US & Germany Foreign Ministers Joint Panel Discussion at Munich Security Conference
-
Mist of Capricorn
சிநேகிதனே & ஒரு தெய்வம் தந்த பூவே
-
உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா?
அப்போ எப்படி அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ நினைப்பவர்கள் நாட்டின் தலைவர் ஆகிறார்கள்???
-
செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு அனுமதிக்க முடியாது ; சாள்ஸ் எம்.பி கடும் எதிர்ப்பு
இதில் சுமந்திரனும் அடங்குவாரா? ஒரு சின்ன சந்தேகம் தான்.🙃
-
இந்தியாவுடன் பேசித்தான் ஆகவேண்டும் | ஆய்வாளர் நேரு குணரட்ணம்
இந்தியாவுடன் பேசித்தான் ஆகவேண்டும் | அரசியல் களம் | ஆய்வாளர் நேரு குணரட்ணம்
-
இமயமலைப் பிரகடனம்: கண்டியில் இரண்டாவது பயிலரங்கு
இமயமலைப் பிரகடனம்: கண்டியில் இரண்டாவது பயிலரங்கு ஐந்து மாவட்டங்கள் பங்கேற்பு ஊடக வெளியீடு 2024-02-17 இமயமலைப் பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய உரையாடலுக்காக மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிப்பட்டறைகளுக்கான ஐந்து பயலங்குகளின் இரண்டாவது பயிலரங்கு பெப். 16ம் திகதி கண்டியில் ஆரம்பமானது. நேற்றுடன் முடிவடைந்த இந்த இரண்டு நாட் செயலமர்வில் மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, ஆகிய ஐந்து மாவட்டங்களின் பிரதிநிதிகளும் 34 சர்வமதத் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். இப்பயிலரங்கில் சிறந்த இலங்கைக்கான சங்கத்திலிருந்து, களுபஹன பியரதன தேரர், வல்லத்தர சோபித தேரர், மற்றும் வாடுவே தம்மாவன்ச தேரர் ஆகியோரும் உலகத்தமிழர் பேரவையின் சார்பில் அமெரிக்காவைச் சேர்ந்த எலியாஸ் ஜெயராஜாவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கத்தின் சார்பில் விசாகா தர்மதாச மற்றும் அங்கத்தவர்களும் பங்கேற்று கலந்துரையால்களில் ஈடுபட்டனர். உரையாடலின்போது நாகர்கோட்டில் பிரகடனம் உருவாகிய வரலாற்றினை களுபஹன பியரதன தேரர் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். குறித்த பிரகடனம் சம்பந்தமாக காணப்படுகின்ற கட்டுக்கதைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த உரையாடல்களில் பல்வேறு ஆரோக்கியமான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்ததோடு, ஈற்றில், பிரகடனத்தின் நோக்கம் மற்றும் உள்ளடக்கத்தினை பலரும் ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். முதலாவது பயிலரங்கு குருநாகல் மாவட்டத்தில் கம்பஹா, புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக கடந்த ஒன்பதாம் பத்தாம் திகதிகளில் இடம்பெற்றிருந்தது. அடுத்ததாக பயிலரங்குகள் முறையே மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் வவுனியாவில் நடைபெறுமெனவும் இப்பயிலரங்குகளில் அயலிலுள்ள மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர். மொத்தம் ஐந்து பயிலரங்குகள் மூலம் 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை ஒருங்கிணைப்பாளர்களாக பயிற்றுவிக்கப்படவுள்ளார்கள். இதேவேளை, தேசிய உரையாடலில் மாவட்டம் தோறும் 5 சர்வமத தலைவர்களும் ஒரு சிவில் சமூக உறுப்பினருமாக மாவட்டத்திற்கு தலா 6 பேர் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://marumoli.com/இமயமலைப்-பிரகடனம்-கண்டி/#google_vignette
-
ஸ்ரீலங்காவில் 11 பௌத்த மத வழிபாட்டிடங்கள் தேசிய புனித இடங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.
Trinco Nimalan ஸ்ரீலங்காவில் 11 பௌத்த மத வழிபாட்டிடங்கள் தேசிய புனித இடங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு இடங்கள் திருக்கோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அவையாவன 01. ஸ்ரீ சந்தர்வ யுக்திக வன செனசுன - புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி 02. யான் ஓயா ராஜமஹா விகாரை - புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி 03. எனா நெகி கந்த ரஜ மகா விகாரை -புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி 04. மிகுந்து லென பிராண ரஜமகா விகாரை -புல்மோட்டை-01 50 ஏக்கர் காணி 05. சாந்தி விகாரை -புல்மோட்டை -04 50 ஏக்கர் காணி 06. நாகலென புராண ரஜ மகா விகாரை -புல்மோட்டை 03 50 ஏக்கர் காணி 07. படரகள ஆரண்ய சேனா சனய -கும்புறுபிட்டி கிழக்கு - 50 ஏக்கர் காணி 08. சப்தனாக பப்பதை வன சென -திரியாய் 50 ஏக்கர் காணி 09. பாகிய பப்பன வன சென சுன -கும்புறுபிட்டி கிழக்கு 50 ஏக்கர் காணி 10.தெபரகல பிராண வன செனசுன -கும்புறுபிட்டி கிழக்கு 50 ஏக்கர் காணி போன்ற பகுதிகளில் நிறுவப்பட்ட்டுள்ள பௌத்த விகாரைகள் பிரதேசத்திலுள்ள வயல் காணிகளை புனித பூமி என்ற போர்வையில் அபகரித்துள்ளார்கள் இதன்படி குறைந்தது 2000 க்கு மேற்பட்ட காணிகளை புனித பூமிக்கு அபகரித்துள்ளார்கள். ஒவ்வொரு 50 ஏக்கர் காணிக்கும் 30 சிங்கள புதிய குடும்பங்களை குடியேற்றுவாங்கள். இதை விட மோசமான சிங்கள மயப்படுத்தலை இதுவரை யாரும் பாத்திருக்க மாட்டோம்.
-
இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா
சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும்
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
- Mist of Capricorn
SUJATHA MOHAN MEDLEY | Cover by Shweta Mohan Ft. Stephen Devassy- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சந்திரிக்கா செம்மணி கொலைகளையும் நடாத்தி நீலனுடன் சேர்ந்து (சிங்கள இனவாதிகளுடனும் சேர்ந்து) தமிழ் மக்களுக்கு தீர்வு தந்திருப்பார் என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாதது.- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Avdiivka பகுதியில் இருந்து உக்ரேன் படைகள் வெளியேறுகின்றனர். https://www.bbc.com/news/world-europe-68323366- Mist of Capricorn
Thaikkudam Bridge's BEST live tribute! Rahman is emotionally awestruck! Govind Vasantha in Violin🎻- Mist of Capricorn
Ilaiyaraaja 1000 Tribute | Medley | Thaikkudam Bridge Live | City Shor - Govind Vasantha Killin it!!- அமெரிக்கா பறந்தது எதற்காக? மேற்குலகின் புதிய நகா்வுகள்
அமெரிக்கா பறந்தது எதற்காக? மேற்குலகின் புதிய நகா்வுகள் | தாயகக்களம் | கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்- லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
Arumugam Thangavelautham ' பிள்ளை மாமா' 80 ஆம் ஆண்டின் பிற்பகுதி.அப்போது யாழ்ப்பாணத்தில் அரச ஊழியனாக நான் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்கள்.அப்போது நாங்கள் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் நாற்சார வீடொன்றில் குடியிருந்தோம்.ஒரு பகுதியில் நாங்களும் அடுத்த இன்னோர் பகுதியில் இன்னோர் குடும்பமும் வாடகைக்கு இருந்தார்கள். ஒரு நாள் மாலை பணி முடிந்து நான் வீட்டுக்குப் போன போது எனது இரண்டாவது மகளைக் காணவில்லை. மூன்று வயதுக் குழந்தை அவள்.அவள் எங்கே என்று மனைவியிடம் கேட்டேன். " தங்கச்சியை பிள்ளை மாமா தூக்கிக் கொண்டு போயிருக்கிறார்" என்றாள் மூத்த மகள்.அப்போது அவளுக்கு வயது ஆறு.மகனுக்கு இரண்டு வயது.கடைசி மகளுக்கு ஒரு வயது. பிள்ளை மாமாதான் எங்களுக்கு அந்த வீட்டை ஒழுங்கு பண்ணிக் குடுத்தவர். 'தம்பி'தான்(தேசியத்தலைவர்) பிள்ளை மாமாவை 78 இல் எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தவர்.79 இல் நாங்கள் கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் வசித்து வந்தோம்.அங்கும் பிள்ளை மாமா வருவார்.இரண்டாவது மகள்மீது பிள்ளை மாமாவுக்கு அதிகம் பாசம். எப்போ வீட்டுக்கு வந்தாலும் அவளைத் தூக்கிக் கொண்டு போய் விடுவார். அவளும் அவரோடு நன்றாக ஓட்டிக் கொண்டு விட்டாள்." யார் அந்த பிள்ளை மாமா?" என்ற கேள்வி உங்கள் மனங்களில் ஏற்படலாம்.அவர் வேறு யாரும் அல்ல.உங்கள் அனைவர்க்கும் அறிமுகமான பொன்னம்மான்தான் அவர். நாங்கள் குடியிருந்த வீடு பொன்னம்மான் தாய் மாமனுக்குச் சொந்தமானது.நாங்கள் இருந்த வீட்டுக்கு பின் புறம் அவரது இன்னோரு மாமியும் வசித்து வந்தார்.அங்கு வரும் வேளை களில் பொன்னம்மான் எங்கள் வீட்டுக்கும் வருவார்.பிள்ளைகளோடு விளையாடுவார். பொன்னம்மானின் குடும்பத்தினர் அனைவருமே ஆரம்ப நாட்களில் இயக்கச் செயற்பாடுகளுக்கு பெரிதும் துணையாக இருந்தார்கள்.அந்த நாட்களில் தலைவரைச் சந்திக்க வேண்டும் என்றால் பொன்னம்மான் வீட்டுக்குச் சென்றால் சந்திக்க முடியும். பொன்னம்மானின் தாயாரும் தேசியத் தலைவரை தனது மகன்களில் ஒருவராகவே கருதிச் செயற்பட்டார். எண்பதின் நடுப்பகுதியில் இயக்கம் இரண்டாக உடைந்த வேளையில் திட்டமிட்டு தலைவர் தனிமைப்படுத்தப் பட்ட போது தலைவரோடு இணைந்து செயற்பட்டவர்களில் பொன்னம்மான் முக்கியமானவர். 80 களின் பிற்பகுதியில் தங்கத்துரை குட்டிமணி ஆகியோர் களோடு தலைவர் இணைந்து செயற்பட்ட போது பொன்னம்மானும் தலைவரோடுதான் இருந்தார். 81 மார்ச் 25 ஆம் நாள் நீர்வேலியில் வைத்து மக்கள் வங்கிக்குச் சொந்தமான 82 இலட்சம் ரூபா பணம் அதனைக் கொண்டு வந்த வாகனத்தை வழி மறித்து பறித்தெடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அதனோடு தொடர்பு பட்டவர் களை காவல் புலனாய்வுப் பிரிவினர் தேடத் தொடங்கினர். முன்பே சில சம்பவங்களினால் தேடப்பட்டு வந்த தங்கத்துரை,குட்டிமணி ஆகியோர் கைது செய்யப்பட்டால் பிரச்சனையாகி விடும் என்பதற்காக அவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதென முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி ஏப்ரல் 5 ஆம் நாள் படகேறச் சென்ற சமயம் மணற்காட்டு கடற்கரையில் வைத்து தங்கத்துரை,குட்டிமணி,தேவன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக குட்டிமணி பொலிசாரினால் அடையாளம் காணப்பட்டதனால் உடனடியாக அவர்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, தொடர்புபட்டவர்கள் அனைவரையும் கைது செய்யும் நோக்குடன் மும்முரமாக தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றன.அந்த வேளையிலும் பணத்தைப் பாதுகாப்பதிலும் பொன்னம்மானின் செயற்பாடுகள் இடம் பெற்றிருந்தன.பலத்த சித்திரவதைகள் காரணமாக தங்கத்துரை கொடுத்த வாக்குமூலங் களைத் தொடர்ந்து பொன்னம்மானும் தேடப்படுகின்றவர்களில் ஒருவரானார். அந்த நாட்களில் தலைவரும் பொன்னம்மான் உட்பட முக்கியமானவர் களும் தங்கள் தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டிருந்தனர். ஒரு நாள் பொன்னம்மானின் கலட்டியில் அமைந்திருந்த வீடும் சுற்றி வளைக்கப் பட்டு வீடு முழுவதுமாக சல்லடை போட்டு தேடப்பட்டது.மறுநாட் காலையில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பொன்னம்மானின் மாமியார் " நேற்றெல்லோ குகனைத் தேடி பொலிஸ்காரங்கள் வந்திருக்கின்றாங் கள்.வீடு பூராவும் கிண்டிக் கிளறி நாசம் பண்ணியிருக்கிறாங்கள்.நல்ல காலம் குகன் அங்கை இருக்கேல்லை. (குகன் என்பது பொன்னம்மானின் இயற்பெயர்) அவன் இயக்கத்திலை இருக்கிறான் எண்டும்,வீட்டுக்கு வந்தால் தங்களட்டை கொண்டு வந்து ஒப்படைக்கும்படியும் சொல்லிட்டுப் போயிருக்கிறார்கள்" என்று கூறி வேதனைப்பட்டார். " குகனுக்கு இயக்கப் பொடியளோடை சில வேளை ஏதும் தொடர்புகள் இருந்திருக்கலாம்.எதுக்கும் குகனை கவனமாக இருக்கச் சொல்ல வேணும்" என்று மாமியாருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினேன். மாமியார் போன பின்,எங்கள் வீட்டில் தலைவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்து பொன்னம்மான் சிரித்தபடி வெளியே வந்தார்.பின் பொன்னம்மான் இடம் மாற்றப்பட்டு சில நாட்களில் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். தலைவர் அவர்களை எனது தம்பி என்றும், பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும் சொல்லித்தான் மாமியாரிடம் வீடு வாடகைக்கு எடுத்திருந்தோம் பின் நாட்களில் தலைவரின் எச்சரிக்கை நடவடிக்கையைத் தொடர்ந்து நாங்களும் வீடு மாறிக் கொண்டோம். ஏப்ரல் 29 ஆம் நாள் அதிகாலையில் நாங்கள் குடியிருந்த அந்த வீடும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம் பெற்றதைத் தொடர்ந்து நாங்களும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மாமியார் புரிந்து கொண்டிருப்பார். ஜுன் மாதம் தலைவரோடு நானும் தமிழ்நாட்டுக்கு வந்து,அதனைத் தொடர்ந்து எனது குடும்பமும் வந்து சேர்ந்த பின் நாங்கள் புதுவையில் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப் பட்டிருந்தது. 82 இல் ரெலோ இயக்கத்தின் தலைவராக செயற்பாட்டுக் கொண்டிருந்த சிறீ சபாரத்தினத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணமாக தலைவர் அவர்கள் அந்த அமைப்பில் இருந்து பிரிவதாக முடிவெடுத்தார்.அதனைத் தொடர்ந்து மக்கள் வங்கிப் பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மீதியாக இருந்த பணம் என்பனவற்றை ரெலோவிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.அப்போது நாட்டில் இருந்த செல்வம் அடைக்கல நாதன் இடம் ரகுவப்பா,சங்கர் (சத்திய நாதன்) ஆகியோர் அவற்றை ஒப்படைத்தனர். அதன் பின்பு இயக்கத்திற்கு பெரும் நிதித் தட்டுப்பாடு நிலவியது.அந்த நாட்களில் பாண்டிச்சேரியில் வாழ்ந்த எங்கள் குடும்பத்தினரோடு சில காலம் பொன்னம்மான்,புலேந்தி அம்மான், லாலா ரஞ்சன் ஆகியோர் தங்கி இருந்தனர். அப்போது நாங்கள் தங்கியிருந்த பாண்டிச்சேரி காமராஜ் நகரில் நான் ஒரு சிறிய பலசரக்குக் கடையையும் நடத்திக் கொண்டிருந்தேன்.நான் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வெளியில் செல்லும் போது பொன்னம்மானே கடையை பொறுப்பேற்று நடத்தியிருந்தார்.அது மட்டுமன்றி எங்கள் பிள்ளைகளின் கல்வியிலும் அக்கறை எடுத்து பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார். பாண்டி பஜார் சம்பவத்தைத் தொடர்ந்து மதுரையில் தங்கியிருந்த தலைவர் அவர்கள் பொன்னம்மானை யும்,கிட்டு அவர்களையும் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.அங்கு இருந்து செயற்பட்ட வேளையில் திருநெல்வேலித் தாக்குதல் உட்பட பலவற்றில் பங்கு பற்றினார் பொன்னம்மான். 1983 அக்டோபர் மாதமளவில் தேசியத்தலைவர் அவர்கள் இந்தியாவின் பயிற்சி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ்நாடு வந்து சேர்த்திருந்தார். தலைவரோடு பொன்னம்மான் உட்பட மூத்த போராளிகளும் வந்து சேர்ந்திருந் தனர். பாலா அண்ணன்,முதலில் தமிழகப் புலனாய்வுத் துறை (Q Branch) உதவிப் பொலிஸ் மா அதிபராகப் பதவி வகித்த திரு.அலெக்சாந்தர் என்பவரோடு தொடர்பு கொண்டு அவரோடு உரையாடியதைத் தொடர்ந்து அவரின் ஆலோசனைக்கு அமைய திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில் இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இடம் வழங்கும்படி கேட்டிருந்தார்.அந்தக் கடிதம் அனுப்பப்பட்டு இரண்டு வார காலத்திற்குள் டெல்லியில் உள்ள றோ(RAW) புலனாய்வுத்துறை அலுவலகத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான திரு.எஸ்.சந்திரசேகரன் என்பவர் சென்னை வந்து பாலா அண்ணனைச் சந்தித்தார்.இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக நாட்டில் இருந்த தலைவருக்கு விபரம் அறிவிக்கப் பட்டு தலைவர் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்த்திருந்தார்.இந்திய றோ அதிகாரிகள் மற்றும் தேசியத்தலைவர், பாலா அண்ணன் ஆகியோர்களுக்கு இடையே நடைபெற்ற சுமுகமான பேச்சுவார்த்தைகளின் பின் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்வதாக திரு.சந்திர சேகரன் உறுதியளித்தார்.அதன்படி 83 நவம்பர் மாதம் வட இந்தியாவில் உள்ள டேராடூன் என்ற இடத்திற்கு முதலாலது பயிற்சிக்கான அணி புறப்பட்டுச் சென்றது. முதலாவது பயிற்சி அணியை வழி அனுப்பி வைப்பதற்காக பெங்களூர் தொடர் வண்டி நிலையத்திற்கு ரகுவப்பாவும் சென்றிருந்தார்.ஆரம்ப நாட்களில் இருந்து பொன்னம்மானும் ரகுவும் நெருங்கிப் பழகியவர்கள்.ரயில் ஏறுவதற்கு முன் ரகுவைக் கட்டிப் பிடித்து " டேய் குண்டா இவங்கள் எங்கள் எல்லாரையும் அங்கையே முடிச்சுப் போடுவாங்களோ தெரியாது. நீ மணி அண்ணாவை( தலைவருக்கு மணி என்றும் ஒரு பெயர் இருந்தது) கவனமாகப் பார்த்துக்கோ" என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதிருக் கின்றார். இந்திய அரசின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற எமது போராளிகளுக்கு பொறுப்பாளராக பொன்னம்மானே செயற்பட்டுஇருக்கின்றார்.அங்கு மட்டுமன்றி தமிழகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாம்கள் அனைத்துக்கும் பொன்னம்மானையே தேசியத் தலைவர் அவர்கள் பொறுப்பாளராக நியமித்திருந் தார்.இந்தியாவில் வழங்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாமின் பொறுப்பாளராக செயற்பட்ட பொன்னம்மான் அந்தப் பயிற்சிக் காலத்திலேயே மற்றைய போராளிகளை இயக்கத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கியவர். அந்தப் பயிற்சி முகாமிற்தான் கிட்டு,விக்டர்,புலேந்திரன்,சூசை,பொட்டு, கணேஷ்,அருணா,ராதா,பரமதேவா, பதுமன், நம்மாள் உட்பட நூறு போராளிகள் பயிற்சி எடுத்தனர். முதலாவது பயிற்சி முகாமினை பொறுப்பேற்று நடத்தியதோடு தானும் பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிய பொன்னம்மானுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய பொறுப்பு காத்திருந்தது.மேட்டூர்,சிறுமலை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களை வழி நடத்தும் பொறுப்பை தேசியத் தலைவர் ஒப்படைத்திருந்தார். தலைவர் ஒப்படைத்த பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் பொன்னம்மான். கைக்குண்டுகள் தயாரிப்பதிலும் பொன்னம்மானின் பணி மிகப்பெரிய அளவில் இருந்தது.தமிழ்நாட்டில் பயிற்சி முகாம்கள் முடிவடைந்து நாட்டுக்குச் சென்ற பின்பும் அவரது தொழில்நுட்ப வேலைகளை கிட்டுவோடு இணைந்து மேற்கொண்டவர் பொன்னம்மான். இயக்கத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொன்னம்மானின் பணி பாரியது. வெடி மருந்துகளைக் கையாள்வதிலும் வல்லுனராக விளங்கியவர் அவர். பொன்னம்மான் நாட்டுக்குச் சென்ற பின் கிட்டு அவர்களோடு இணைந்து தொழில்நுட்பத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கி கைக்குண்டுகள் தயாரிப்பு போன்ற வேலைகளும் இடம் பெற்றன. 1987ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி.யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்திருந்த சிறீலங்காப் படை முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு கிட்டுவும் தோழர்களும் திட்டம் தீட்டினார்கள்.அந்தத் தாக்குதல் நடவடிக்கைக்காக பொன்னம்மானும் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த தார். அந்தப் படை முகாமுக்கு தினம் தோறும் தண்ணீர் எடுத்துக் கொண்டு பவுசர் ஒன்று செல்வதை அவதானித்த புலிகள் அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து வெடிமருந்து நிரப்பிக் கொண்டு சென்று தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. பவுசர் இரண்டு பகுதியாகப் பிரிக்கப் பட்டு கீழ் பகுதி வெடி மருந்து நிரப்பிய பகுதியாகவும்,மேல் பகுதி நீர் நிரம்பிய பகுதியாகவும் பிரிக்கப் பட்டது. பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் மேற் கொண்டிருந்தார்.அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கேடில்ஸும் வாசுவும் இணைந்தே அந்த பவுசரை தயாரித்து இருந்தார்கள். 14.02.1987 அன்று தாக்குதல் நடத்துவது என திட்டம் தீட்டப்பட்டிருந்தது.முதல் நாள் இரவிரவாக பொன்னம்மான்,வாசு, ரஞ்சன் ஆகியோர் வெடி மருந்தை நிரப்பினர்.அதிகாலை வெடிமருந்து நிரப்பப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது.நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது.பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான்,கேடில்ஸ், வாசு ஆகியோரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அனைத்து நடவடிக்கைகளினதும் ஒருங்கிணைப்பாளராக கிட்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்.மாலை 5 மணியளவில் தாக்குதலுக்குச் செல்லும் எல்லாக் குழுக்களையும் கிட்டு சரி பார்த்துக் கொண்டு இருந்தார். சரியாக 5.30 மணியளவில் மிகப்பெரிய சப்தம்.பூமியே ஒரு முறை அதிர்ந்தது. கிட்டு பொன்னம்மானை வாக்கியில் கூப்பிட்டார்.கேடில்ஸைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார்.யாரிடம் இருந்தும் தொடர்பு கிடைக்கவில்லை. ஜொனியை அழைத்து அந்த இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது அந்தப் பகுதி எங்கும் தூசி மயம்.அந்த இடத்தில் பெரிய குழி.அதற்கருகில் கேடில்ஸின் கார் நொருங்கிப் போய்க் கிடந்தது. அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ்,வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்திற்கு வந்ததாக கூட இருந்தவர்கள் கூறினார்கள்.பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது சிறிது ஒழுகியதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து நால்வரும் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார்கள்.அந்த துவாரத்தை அடைக்கும் முயற்சியின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.அங்கு வாசுவின் பிஸ்டலும் அடையாள அட்டையும், கேடில்ஸின் காற்சட்டையின் ஒரு பகுதியுமே கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடிய விதமாக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.ஈழக் காற்றோடு காற்றாய் பொன்னம்மான் மறைந்து விட்டார். " தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா?" என்ற பொன்னம்மான் அடிக்கடி பாடும் அந்த வரிகள் இப்போதும் எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.- மூடிய அறைக்குள் நடந்தது என்ன? அறிவு மட்டம் தொடர்பாக சுய பரிசோதனை செய்ய வேண்டும் - சாணக்கியன் சீற்றம்
மூடிய அறைக்குள் நடந்தது என்ன? அறிவு மட்டம் தொடர்பாக சுய பரிசோதனை செய்ய வேண்டும் - சாணக்கியன் சீற்றம்- வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்
நீங்கள் வெளிப்படியாக சொல்லாத வரை நான் உங்களை மதவாதியாக கருதவே இல்லை. நீங்கள் எப்படியாகவும் இருங்கள். நியாயம் எனும் போது தான் அடியேன் எனது கருத்து எதிரொலிக்கிறது.- இலங்கை இராணுவத்தில் ஏற்படும் திடீர் மாற்றம்
வேலை நிறுத்தத்தின் போதும் இராணுவத்தை பயன்படுத்துகிறார்கள். மற்றது செஙகடலில் பயன்படுத்துவது தான் சகிக்க முடியவில்லை. (கடல்படையை)- உள்நாட்டுபொறிமுறைகள் ஊடாக நல்லிணகத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி - அலிசப்ரி
இது புத்தர் சிலைகளை நிறுவுவதையும் (தமிழர் பிரதேசத்தில்) உள்ளடக்கும்.- வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்
ஒரு மதவாதியாக பிச்சை எடுப்பது பற்றி மேலே விளாவாரியாக சொல்லி உள்ளீர்கள். வெட்கம் என்பது பற்றி பேசவே தேவை இல்லை.- வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்
மதவாதிகளை கிழித்து தொங்க போடுவேன். யாருக்கும் வெட் கமில்லை. இந்த உலகுக்கும் வெட் கமில்லை. - Mist of Capricorn
Important Information
By using this site, you agree to our Terms of Use.