Everything posted by nunavilan
-
நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை - இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமெரிக்க விமானப்படை வீரர் தீக்குளிக்க முயற்சி
- இன்றைய வானிலை
யாரப்பா அந்த புத்தன்? 🙂 புத்தனின் வழியை எம்மக்கள் பின்பற்ற வேண்டும்.- செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
பாரிய பின்னடைவை கூதிகளுக்கு ஏற்படுத்தி விட்டு நாடு திருப்பி உள்ளார்கள்.🙃- சரியா சொன்னீர்கள் அண்ணா
- CTC அதனது செயற்பாடுகளை சீர் செய்தால் இப்புதிய கூட்டின் தேவையிருக்காது….கனேடியத் தமிழர் கூட்டு
CTC அதனது செயற்பாடுகளை சீர் செய்தால் இப்புதிய கூட்டின் தேவையிருக்காது….கனேடியத் தமிழர் கூட்டு- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எகிப்தால் கட்டப்படும் பாரிய மதில்கள்- நடனங்கள்.
Arabic Kuthu from Spain - Anirudh Ravichander (From the movie "Beast") | Vinatha & company- இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்
நடுவரை முறையற்ற வகையில் பேசிய வனிந்துவிற்கு போட்டித் தடை இலங்கை இருபதுக்கு - 20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு இரண்டு சர்வதேச போட்டித் தடையும் கடந்த போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியின் பின்னர் ஒழுக்கமின்றிய முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் அவருக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐ.சி.சி.) இனால் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக வனிந்து ஹசரங்கவுக்கு ஒரு குற்றப் புள்ளியை வழங்கவும் சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் மார்ச் 04 – 06 ஆம் திகதிகளில் நடைபெற்றவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் வணிந்துவுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காது. ஆப்கானிஸ்தான் அணியுடனான 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டியின் போது, இலங்கை நடுவரான லிண்டன் ஹன்னிபல், போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி ஓவரில் இடுப்புக்கு மேலாக மிக உயரமாக சென்ற பந்தை ‘நோ போல்’ என அடையாளப்படுத்தாமை தொடர்பில், ஊடகவிலளாயர் சந்திப்பின்போது நடுவரை முறையற்ற விதத்தில் பேசி, நடுவரின் முடிவுகளை விமர்சித்ததற்காகவும் வனிந்து ஹசரங்கவுக்கு குறித்த போட்டித்தடையும் அபராதமும் வழங்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வனிந்து, குறித்த பந்தை அவரால் சரியாக கணிக்க முடியாவிட்டால், அவர் வேறு தொழிலுக்குச் செல்லலாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177187- இலங்கை வழங்கும் ஆதரவிற்கு நன்றி
இலங்கை வழங்கும் ஆதரவிற்கு நன்றி இந்திய சமுத்திரத்தில் கடல் பயணத்தை சுதந்திரமாக மேற்கொள்ள இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மாவை சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு வருகை தந்த நான்காவது அமெரிக்க பிரதிநிதி ரிச்சர்ட் வர்மா என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சர்வதேச பாதுகாப்பு தொடர்பான விடயங்களும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. செங்கடலில் இடம்பெறும் கடற்படை நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு பிரதி இராஜாங்க செயலாளர் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-வழஙகம-ஆதரவறக-நனற/175-333728- கடந்த ஆண்டு 1 மில்லியனுக்கும் அதிகமான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன
கடந்த ஆண்டு 1 மில்லியனுக்கும் அதிகமான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன : பாராளுமன்றக் குழு வெளிப்படுத்துகிறது நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின் துண்டிப்புகள்செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய போது இவ்விடயம் தெரியவந்துள்ளது. கடந்த வருடம் 10,69,000 மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக தலைவர் வலேபொட தெரிவித்தார். இணைப்பு துண்டிக்கப்பட்ட நுகர்வோருக்கு, மறு இணைப்பு கட்டணத்தை 50 சதவீதம் குறைத்து, நிலுவையில் உள்ள பில் தொகையை தவணையாக செலுத்த அனுமதிக்குமாறு, அந்தந்த அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது. மேலும் கடன் அடிப்படையில் புதிய இணைப்புகளை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவும், மின் கட்டணத்துடன் முழு இணைப்புக் கட்டணத்தையும் தவணை முறையில் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), இலங்கை மின்சார சபை (CEB), நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர் https://thinakkural.lk/article/293027- இலங்கையர்களை நாடு கடத்திய சீனா!
இலங்கையர்களை நாடு கடத்திய சீனா! கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இந்த 2 சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்கலனில் மறைந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். அவர்களில் ஒருவர் 26 வயதுடைய மலர்மதி ராஜேந்திரன் என்றும் மற்றவர் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி 30, 2023 அன்று குறித்த இருவரும் மலேசியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'மெர்க்ஸ் யூனிகார்ன்' கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனுக்குள் இரகசியமாக நுழைந்துள்ளனர். ஆனால் குறித்த கப்பல் மலேசியாவிற்கு வந்தபோது, கொள்கலனில் மறைந்திருந்த இரு சந்தேக நபர்களும் மலேசியா ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அதிகாரிகள் சந்தேக நபர்களை ஏற்றிக்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று இறுதியாக சீனாவிற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து சீன அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் நாட்டில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்த பின்னர், இன்று காலை 5.01 மணி அளவில், சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானம் (UL-867) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களம், வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று அவர்களை கைது செய்து கொழும்பு கிருலப்பன பகுதியில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=184411- சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒருவார காலத்தில் பிறப்பிக்கப்படும் - இந்திய மத்திய அரசாங்கம்
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தண்டனை பெற்று விடுதலை ஆன தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை முன் வைத்திருந்தனர். முன்னதாக இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு வர அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது. மத்திய அரசின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார், விமான டிக்கெட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் என என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார். (செய்தி பின்னணி) 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், இந்த நாசாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அடுத்து 2022 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நால்வரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை சொந்தநாட்டுக்கு அனுப்ப கோரி கோரிக்கைகள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=184400- புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
2009 ல் வன்னியில் உள்ள சனத்தொகையை பிழையாக சொன்னது அரசு. இப்போ வெளிநாட்டில் உள்ளவர்களை கணக்கெடுத்து எப்படி சமப்படுத்துவார்கள்?(காணாமல் போனோரை)- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
எவ்வளவு வேலைகள் மிக அவசரமாக மக்களுக்கு செய்ய வேண்டி உள்ளது. இந்த கணக்கெடுப்பை விழுந்தடித்து செய்வதின் அவசியம் என்ன?- நடனங்கள்.
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
டக்ளஸ் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.- மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றினை பயன்படுத்தி கல்விகற்க பழகவேண்டும் - இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர்
இவர் பதவி விலகி உள்ளதாக அல்லது விலக்கப்பட்டதாக கூறப்படுகிறது.- நடனங்கள்.
- பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
Madam இப்படி பொங்குகிறார். ஒரு சட்டத்தை அமுலாக்க பிக்குகளிடம் ஆசீர்வாதத்துக்கு போகிறார்கள் நாட்டு தலைவர்கள்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சிரிய தலைநகரில் இஸ்ரேல் பலத்த எறிகணை தாக்குதலை நடாத்தி உள்ளது. இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.- குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்
- U.S. vetoes Algerian resolution for 'immediate' ceasefire in Gaza
U.S. vetoes Algerian resolution for 'immediate' ceasefire in Gaza- அதிசயக்குதிரை
ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்... நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ??? குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்...! நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல... அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத பிராப்ளம்... !!??? குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே... ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்... அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்... அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...! என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்... காலம் ஓடியது..... என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.... அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்... என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்... என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்.... அவனே எனக்கு பேரனும் ஆனான்... என் மகளின் மகன் அல்லவா? அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்... என் சித்திக்கு தாய் அல்லவா? நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்... இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்... . . . நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்... - இன்றைய வானிலை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.