Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. பாகிஸ்தான் அணி வீரர்களின் விபரங்கள்: பாகிஸ்தான் (PAK) BATTERS: Mohammad Rizwan† (c), Babar Azam, Fakhar Zaman, Saud Shakeel, Tayyab Tahir, Usman Khan ALLROUNDERS: Salman Agha, Faheem Ashraf, Kamran Ghulam, Khushdil Shah BOWLERS: Abrar Ahmed, Haris Rauf, Mohammad Hasnain, Naseem Shah, Shaheen Shah Afridi இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கின்றன. போட்டியில் பங்குபற்ற ஆர்வம் காட்டியவர்கள் பலரை இந்தப் பக்கம் காணவில்லை! விரைந்து பதில்களைத் தந்தால்தான் போட்டி நடாத்த முடியும்! எனவே உங்கள் பதில்களை விரைந்து பதியுங்கள் 😀 போட்டி முடிவு திகதி ஞாயிறு 16 பெப் 2025 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1Rce_f8BLYqqz6IXE5VMYBoNb9zklFymMYdlDoQ1u-cg/edit?usp=sharing
  2. யாழ்ப்பாணம்: பிழையான கேள்வியும் சரியான பதிலும்….! February 5, 2025 — அழகு குணசீலன் — 28 அமைப்புக்களின் கூட்டணியான என்.பி.பி.யும் அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பி.யும், அதன் தலைவர்களும், ஜனாதிபதியும் அள்ளி வீசிய தேர்தல் வாக்குறுதிகளை -கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். “இந்த வாக்குறுதிகளை உங்களால் நிறைவேற்ற முடியாது அப்படியானால் அவற்றை எப்படிச் செய்யப் போகிறீர்கள்? என்பதை விவாதிப்பதற்கு ஒரு பொருளாதார விவாதத்திற்கு வாருங்கள்” என்று எதிரணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு சரியான பதில் அளிக்கப்படவில்லை. அரசியல் செயற்பாடுகளுக்கான வீதிவரைபடம் அவர்களிடம் இருக்க வில்லை என்பதால் விவாதத்திற்கும் செல்லவில்லை. மாறாக மெயின் ரோட்டில் பயணிக்காது, பைரோட்டில் பயணித்ததாகவே அவர்களின் பதில்கள் அமைந்திருந்தன. யாழ்ப்பாணம் உட்பட இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் அநுர தனது வழமையான பாணியில் “மூடப்பட்ட கேள்விகளை” (CLOSED QUESTINS) அவரைக் காணக்கூடும் மக்களிடம் கேட்டு ( கொந்தாய்த ?, ஓணத? ) மக்களை பிரதான விடயத்தில் இருந்து திசை திருப்புவதை வழமையாகக் கொண்டுள்ளார். மூடப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இரு வகையாக மட்டுமே இருக்க முடியும். ஒன்று ஆம் அல்லது இல்லை என்பது. மற்றையது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சில விடைகளை கொடுத்து அதில் சரியானதை அல்லது கிட்டத்தட்ட சரியானதை (MULTIPLE CHOICE) தேர்வு செய்யச் சொல்வது. யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் கேள்விகள் இந்த பாணியிலானவை. காங்கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகை தேவையா? என்று கேட்ட அவர், அங்கு கேட்கவேண்டிய பிரதான பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடம் கேட்க வில்லை. இதன்மூலம் இலங்கையர்களாக தெற்கின் பிரச்சினைதான் வடக்கிலும், கிழக்கிலும் என்று ஜனாதிபதி கூற வருகின்றார். இது தென்னிலங்கை பொருளாதார பிரச்சினையை முதன்மைப்படுத்தி சிறுபான்மையினர் இனப்பிரச்சினையை மழுங்கடித்தல். ஜனரஞ்சக சினிமா அரசியலை பேசி திசைதிருப்புதல். அநுரவை காண ரிக்கட் என்றால், அந்த நடன -நடிகையை காண ஏறியதுபோல் பலர் பனைமரத்தில் ஏறிச்சாகவும் தயாராக இருந்திருப்பார்கள். இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் அவதாரம். பொருளாதார நெருக்கடியுள்ள ஒரு நாட்டில், சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளும், அடையாளங்களும் அங்கீகரிக்கப்படாத நிலையில் பொதுக்கொண்டாட்டம் யார் கேட்டார்கள். அந்தந்த சமூகம் அவர்களுக்கு உரிய கொண்டாட்டங்களை கொண்டாட முடியாதவாறு மத்தளமாக அடி வாங்குகிறார்கள். பொருளாதார சுமையினால் திண்டாடுகிறார்கள். உரிமைகள் மறுக்கப்படுகிறார்கள். ஆனால் பொதுக்கொண்டாட்டம் என்ற பெயரில் தனது ஒக்டோபர் வெற்றியை கொண்டாட போகிறது என்.பி.பி. பிற்போக்கு பாராளுமன்ற கட்சி அரசியலுக்கு ஒக்டோபர் புரட்சி முலாம் (?). ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தனது தேவைக்கு ஏற்ப கேள்விகளை கேட்டு மக்களை திசை மாற்றியுள்ளார். அவர் மக்களை கேள்வி கேட்க சொல்லி அதற்கான பதிலை வழங்கியிருக்கவேண்டியதே முறையானது. சரி, மாறாக அவர் கேள்வி கேட்டிருந்தாலும் அந்த கேள்விகள் எப்படி அமைந்திருக்க வேண்டும்? அந்த மக்களின் முக்கிய பிரச்சினைகள் சம்பந்தமாக அல்லவா அமைந்திருக்க வேண்டும். உங்களுக்கு சமஷ்டி வேண்டுமா? அல்லது 13 வது திருத்தத்தை -மாகாணசபையை முழுமையான அதிகாரங்களுடன் அமுல்படுத்தவா? வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை விரும்புகிறீர்களா? இல்லையா? வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொள்ளும் குடியேற்றங்கள், தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள், அமைக்கப்படும் விகாரைகள் உங்களுக்கு விருப்பமா? இராணுவ முகாம்கள் வேண்டுமா? அல்லது அவற்றை மூடிவிடவா? வடக்கு, கிழக்கில் தமிழ்மொழியில் நிர்வாகத்தை விரும்புகிறீர்களா? சகல தமிழ்மொழி மூல மாணவர்கள் சிங்களம் கற்கவும், சிங்கள மொழிமூல மாணவர்கள் தமிழ் கற்கவும் ஏற்பாடு செய்தால் உங்களுக்கு சிங்களம் கற்க விருப்பமா..? …………………? அப்போது மக்கள் “எப்பா” / “ஓணந ” , அல்லது “ஓவ்”/ “ஓண” என்று மனம் திறந்து பதிலளித்திருப்பார்கள். இறுதியாக….. இந்த யுத்தத்திற்கு பின்னணியில் இருந்து ஆட்சி இயந்திரத்திற்கு முட்டு கொடுத்து உங்கள் உறவுகளை கொன்றதற்கும், காணாமல் ஆக்கப்பட்டதற்கும் …, வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்ததற்கும்…. சுனாமி நிர்வாக கட்டமைப்புக்கு எதிராக நான் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தது உண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக அல்ல தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதை இப்போதாவது உணர்கிறேன் என்றும்…. ஒட்டு மொத்தமாக இனப்பிரச்சினை தீர்வுக்கான இந்திய -இலங்கை சமானதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் தடுத்ததில் விடுதலைப்புலிகளுக்கு சமமான பங்கு ஜே.வி.பி.க்கும் உண்டு என்பதற்கு பொறுப்பேற்று…. உங்களிடம் மன்னிப்புக்குக்கோரவே வல்வெட்டித்துறைக்கு வந்தேன் என்று அவர் கட்டியணைத்த அந்த தாயின் காலடியில் வீழ்ந்திருக்க வேண்டும். பிராயச்சித்தம் தேடியிருக்கவேண்டும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1983 இனக்கலவரத்திற்கு மன்னிப்பு கோரினார். அந்த முன்மாதிரியில் அல்லது புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பாணியில் ராஜீவ் கொலை, முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு கூறியது போன்று அது ஒரு “துன்பியல் நிகழ்வு ” என்றாவது கூறியிருக்கலாம். இதற்கு பெயர்தான் மக்கள் சந்திப்பு. மக்களின் கருத்தை அறிந்து அதை நடைமுறைப்படுத்துவது. அதை விடுத்து தான் தெற்கில் இருந்து கொண்டு போன ராஜபக்சாக்களுக்கு எதிரான அரசியலை விற்பனை செய்வதல்ல. அதுவும் வல்வெட்டித்துறை அரசியல் சந்தையில்….! கமலஹாசனின் தசாவதாரம் பற்றி பேசிய ஜனாதிபதி அதில் கடந்த நான்கு மாதங்களில் தானும் சில அவதாரங்களுக்கு சொந்தக்காரன் ஆகிவருவதை மறந்து விட்டார். ஆகக்குறைந்தது ஜனாதிபதி தேர்தல் மேடை, பாராளுமன்ற தேர்தல் மேடை, பாராளுமன்ற உரைகளில் அவர் போட்ட “வேடங்களையாவது” நினைத்து பார்த்திருக்க வேண்டும். அநுரகுமார திசாநாயக்க தலைசிறந்த அரசியல் பேச்சாளர். சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான ஆய்வுகள், கொள்கைகளில் அல்ல. மாறாக சின்னச்சின்ன வசனங்களை, சிரித்து, சிரித்து பேசி, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மக்களுக்கு ஏற்றுவதில், வல்லவர். பேச்சு முடியும் வரை மக்களை தன் உரையோடு கட்டிப்போடுபவர். “மூடப்பட்ட கேள்விகள்” என்று சர்வதேச ஆய்வுகள் கூறுகின்ற “ஆம்”, “இல்லை” என்று பதிலளிக்க மட்டும் வாய்ப்பளிக்கின்ற கேள்விகள் ஜனாதிபதியின் கேள்விகள். ஒரு வகையில் மக்கள் முழுமையான பதிலை அளிப்பதை தடுக்கின்ற கேள்விகள் இவை. இதன் மூலம் கேள்வி கேட்பவர் மிக இலகுவாக தனது பக்கம் -தனக்கு வேண்டிய பதிலை மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். வியாபார- விளம்பரப்பாணி வித்தை. யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், அதிகாரிகளுடனான உத்தியோகபூர்வ சந்திப்பில் ஜனாதிபதி “மாற்று நொடியே” போட்டார். அவர்தான் அநுர. அதுதான் அவரின் அரசியல் பாணி. யாழ்.மாவட்டத்திற்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது என்றால் அதற்கான ஆதாரத்தை அவர் முன்வைக்கவில்லை. அருகில் அரசாங்க அதிபர், ஆளுநர் இருக்கிறார்கள் அந்த விபரங்களை அவர் அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் அந்த விபரங்களை தெரிவித்திருக்கவேண்டும். ஏனெனில் ஒட்டு மொத்த விபரம் அவர்களுக்குத்தான் தெரிந்திருக்கும். பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டதா? இல்லை யென்றால் எவ்வளவு திருப்பி அனுப்பப்பட்டது? என்ன காரணம் என்பதை அன்று அல்ல இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முதலாவது ஒருங்கிணைப்பு கூட்டத்தில் விபரங்களை பெற்றிருக்க வேண்டும். அதில் ஒருங்கிணைப்பு குழு தலைவராக, ஜே.வி.பி அமைப்பாளராக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் பொறுப்பில்லாமல் இல்லை. கடந்த ஆண்டின் கால்வாசிக்கு இந்த ஆட்சியே பொறுப்பு. அடுத்தடுத்த தேர்தல்கள், ஆட்சிமாற்றம் கூட இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். வடக்கு கிழக்கில் நிலவிய அசாதாரண காலநிலை கூட சில திட்டங்களுக்கு தடையாக இருந்திருக்க முடியும். விகாரை காணிப்பிரச்சினையில் அரசாங்கத்தின் -ஜனாதிபதியின் உண்மையான நம்பிக்கைக்குரிய முகவராக தன்னை காட்டமுயற்சித்த ஆளுநர் நிதி விடயத்தில் நிலைமையை என்ன நடந்தது பற்றி சொல்லவில்லை. தன்னை அரசுக்கு விசுவாசமாக காட்டுவதில் செலுத்திய கவனத்தை அதிகாரிகளுக்கு ஆதரவாக அல்லது கண்டனமாக காட்டவில்லை. தமிழ்த்தேசிய கட்சிகளின் கொள்கை அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கோரிக்கை சரியானதே. ஆளுநரின் பதில் அதில் ஒரு சமரசத்தை காண்கிறது. ஒரு வகையில் இது ஒரு பிழையான முன்மாதிரி. மக்களின் காணிகளை அடாத்தாகப்பிடித்துக்கொண்டு பின்னர், அதற்கு பதிலாக வேறுகாணி உங்களுக்கு தருகிறோம் என்ற கருத்தியல் மேலாண்மை அரசியல். இது வடக்கு மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தி திட்டம் அல்ல. விகாரைக்கு பிடிக்கப்பட்ட காணி. இது போன்ற சமரச முயற்சிகளும், முன்மாதிரிகளும் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த முன்மாதிரி மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். வீதி அபிவிருத்தி பற்றிய அதிகாரிகளின் முன்மொழிவுக்கோரிக்கைக்கு ஜனாதிபதியின் பதில் இன்னும் வேடிக்கையானது. அபிவிருத்தி திட்டம் ஒன்றுக்கான செலவு, மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சரியான மதிப்பீட்டை செய்வதற்கு முதலில் பிரதேச செயலகம், மாவட்ட மட்டத்தில் அத்திட்டத்திற்கான அங்கீகாரம் பெற்று, களநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபின்னரே சரியான நிதித்தேவையை மதிப்பீடு செய்யமுடியும். இந்த முடிவு இல்லாமல் திட்டவரைபு ஒன்றை செய்வதற்கு அதற்கான அதிகாரிகளுக்கு திணைக்களத்தலைவர்கள் கட்டளையிடுவது தவறான நிர்வாக முன்மாதிரி. இதை அதிகாரிகள் சிரமதானமாக, எழுந்தமானமாக செய்யமுடியாது. அப்படி ஒரு திட்டம் இல்லாத நிலையில் இல்லாத திட்டத்திற்கு அதுவும் ஜனாதிபதி விரும்புகின்ற சரியான மதிப்பீட்டு செலவுத் தொகையை ஏறக்குறைய என்று சொல்லாமல் சரியாக ரூபா, சதத்தில் எப்படி ஒரு அதிகாரி சொல்லமுடியும். அப்படி, இப்படி எல்லாம் இல்லை சரியான மதிப்பீடு வேண்டும் என்று திசைதிருப்பி அதிகாரிகள் மீது அதிகாரத்தை பிரயோகிக்கும் அவர், அதே கூட்டத்தில் , பொருளாதார நெருக்கடி, நிதி தட்டுப்பாடு, அபிவிருத்திக்கு நிதியில்லாமை பற்றியும் பேசுகிறார் என்பது ஒன்றுக்கொன்று முரணானது. இதன் படி பார்த்தால் சரியான செலவு மதிப்பீட்டை சொல்வியிருந்தால் காசு இல்லை என்று சொல்லியிருப்பார் என்றே கொள்ளவேண்டி உள்ளது. இது பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினைக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புக்களை தேடுங்கள் என்பது போன்றது. பட்டதாரிகள் தனியார் துறை வேலைவாய்ப்புக்களை விரும்பாததற்கு காரணம் அங்கு ஓய்வூதியம் இன்மை என்ற காரணமும் அமைச்சருக்கு தெரிகிறது. அப்படியானால் முதலில் செய்யவேண்டியது இந்த இரு அரச, தனியார் துறைகளில் நிலவும் வேறுபாடுகளை நீக்கவேண்டியது இல்லையா? அரச, தனியார் வேலைவாய்ப்பில் உள்ள கவர்ச்சி வேறுபாட்டை போக்காமல் தனியார் துறைக்கு போங்கள் என்பது உண்மையில் அரசாங்கத்தின் பொறுப்பற்ற பதில். தனியார் துறை சமூகநலன் அடிப்படையில் வேலை வழங்குவதில்லை. அளவுக்கு அதிகமாகவும் வேலை வழங்குவதில்லை. அதை கடந்த காலங்களில் அரசாங்கமே பல்வேறு திட்டங்கள் ஊடாக செயற்படுத்தி வந்துள்ளது. தேர்தல் மேடைகளில் தனியார் துறையை இழுத்து மூடுவோம் என்றவர்கள் இப்போது அங்கு தான் வேலைவாய்ப்பு இருக்கிறது போங்கள் என்று கூறுகிறார்கள். இது தவறான உயர்கல்விக்கொள்கையின் விளைவு என்பதால் இதனால் கிராமப்புற வறிய பட்டதாரிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கான மாற்று திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இவ்வாறு ஒன்றுக்கு ஒன்று முன்னுக்கு பின் முரணான கேள்விகளையும், பதில்களையும் வழங்கி “பராக்கு காட்டும்” அரசியலை செய்கிறது என்.பி.பி. இதில் இருந்து வடக்கு கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் சில விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை கவனத்தில் எடுத்து வடக்கு, கிழக்கு மற்றைய மாவட்டங்களில் மக்களும், சிவில் அமைப்புக்களும், அதிகாரிகளும் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புக்களில் அவரின் அரசியல் தேவைக்கு பதிலளிப்பதை தவிர்த்து அந்தந்ந மாவட்டங்களின் மக்களின், சமூக பொருளாதார அரசியல் தேவைகளை முதன்மை படுத்தி கேள்வி எழுப்ப வேண்டும். ஜனாதிபதியை பதிலளிக்க தூண்ட வேண்டும். 159 உறுப்பினர்களை கொண்ட ஒரு பாராளுமன்றம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்காமல் இழுத்தடிப்பது காலம் போகப்போக நிலைமையை இன்னும் மோசமாக்கும். தென்னிலங்கையில் அநுர ஆட்சி ஆதரவை இழந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அதிகாரத்திற்காக இனவாதத்திற்கு எதிராக இனவாதம் செய்யாது ஆட்சி அதிகாரத்தை அரசியல் தியாகம் செய்ய இவர்கள் ஒன்றும் கௌதம புத்தர்கள் அல்ல. வடக்கு, கிழக்கில் மக்கள் அரசியல் தீர்வு குறித்து கேள்வி எழுப்பும்போது, அரசாங்கம் தென்னிலங்கை மக்கள் சந்திப்புக்களில் வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளை தெரிவித்து சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அரசாங்கம் கேட்டறிய முடியும்.. இப்படி நடந்தால் தான் அது மக்கள் சந்திப்பு. அரசாங்கம் பன்மைத்துவ சமூகங்களிடையே ஒரு தொடர்பாளராக செயற்பட முடியும். இல்லையேல் மக்கள் சந்திப்பு என்பது ஆளும் கட்சியின் தேர்தல் வெற்றிக்கான செயற்திட்டம். குருநாகல் மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன் என்று கூறியிருக்கிறார். அந்த பிரச்சினைகள் எவை? எவ்வாறு தீர்க்கப்போகிறார்? என்பது குறித்து பேசவில்லை. இது வடக்கு கிழக்கில் தனக்கு ஆதரவு இருக்கிறது என்று தெற்கில் காட்டி அரசியல் அதிகாரம் பெறுவதற்கான முயற்சியாக இருக்கக்கூடாது. https://arangamnews.com/?p=11771
  3. அ.முத்துலிங்கத்துக்கு விருது jeyamohanFebruary 6, 2025 அ.முத்துலிங்கம் அவர்களுக்கு கனடாவின் டொரெண்டோ பல்கலைக் கழகம் வழங்கும் மதிப்புமிக்க விருந்தான ARBOR AWARD வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் பண்பாட்டுக்கும் பல்கலையின் கல்விப்பணிக்கும் அளித்த பங்களிப்புக்காக அளிக்கப்படும் விருது இது. அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் https://www.jeyamohan.in/211914/
  4. காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு February 6, 2025 ‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரம் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம், “பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம். பாலஸ்தீன அரசை நிறுவாமல் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த மாட்டோம். பாலஸ்தீன அரசு குறித்த சவூதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது. பாலஸ்தீன மக்களை இடம்பெயர வைக்கும் முயற்சிகள் மூலம், பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகள் மீறப்படுமானால் அதனை சவுதி அரேபியா சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரிக்கிறது. சவூதி அரேபியாவின் இந்த நிலைப்பாடு பேச்சுவார்த்தைகளுக்கோ, சமரசங்களுக்கோ உட்பட்டது அல்ல” என்று தெரிவித்துள்ளது. பாலஸ்தீனியர்களை கட்டாய இடமாற்றம் செய்யும் முயற்சியை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “இரு நாடுகள் தீர்வின் அடிப்படையில் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய நிர்வாகத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று சீனா நம்புகிறது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காசாவை கையகப்படுத்துவது குறித்த ட்ரம்ப்பின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று துருக்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன், “பாலஸ்தீனியர்களை அவர்களது சொந்த மண்ணில் இருந்து விலக்கி வைக்கும் எந்தவொரு திட்டமும் மேலும் மோதலுக்கு வழிவகுக்கும். பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டு அவர்களின் நிலைமைகள் மாறினால், வர்த்தகத்தை துண்டித்தல், தூதரை திரும்பப் பெறுதல் என இஸ்ரேலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை துருக்கி மறுபரிசீலனை செய்யும்” என குறிப்பிட்டார். “ட்ரம்பின் காசா திட்டம் சர்வதேச குற்றத்தின் கீழ் வரும். இது சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது மற்றும் முற்றிலும் பொறுப்பற்றது. அதோடு, ட்ரம்ப் கூறி இருப்பது முட்டாள்தனமானது. கட்டாய இடப்பெயர்வுக்கு தூண்டுவது ஒரு சர்வதேச குற்றம். சர்வதேச சமூகம் 193 நாடுகளால் ஆனது. அமெரிக்காவின் விருப்பத்தை, புறக்கணிக்க வேண்டிய நேரம் இது.” என்று பாலஸ்தீன பிரதேசத்துக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி பிரான்செஸ்கா அல்பானீஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து வாஷங்டனில் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும். மேலும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம். காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். காசாவில் உள்ள வெடிக்காத ஆபத்தான அனைத்து குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பேற்போம்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/china-saudi-arabia-turkey-strongly-oppose-trumps-announcement-to-capture-gaza/
  5. கொங்கோ – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு February 6, 2025 கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை கோமா நகரின் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர். கோமாவின் முன்ஜென்ஸ் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயன்றவேளை பெண்கைதிகளை தாக்கினார்கள் என ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த சிறையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தப்பிச்சென்றனர் அவர்கள் பெண்கைதிகளின் பகுதிக்கு தீ மூட்டினார்கள் என கோமாவில் உள்ள ஐக்கியநாடுகள் அமைதிப்படையின் பிரதிதலைவர் தெரிவித்துள்ளார். பெரும்சிறை உடைப்பு நிகழ்ந்தது 4000க்கும் அதிகமானவர்கள் தப்பிச்சென்றனர்,அந்த சிறையில் 100க்கும் அதிகமான பெண்களும்தடுத்துவைக்கப்பட்டிருந்தனர், அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பின்னர் அந்த பகுதிக்கு தீமூட்டினார்கள் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்என கோமாவில் உள்ள ஐக்கியநாடுகள் அமைதிப்படையின் பிரதிதலைவர் தெரிவித்துள்ளார். ருவாண்டா ஆதரவு எம்23 கிளர்ச்சியாளர்கள் அந்த நகரினை அடைந்த பின்னர் சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும் புகைமண்டலம் எழுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. https://www.ilakku.org/more-than-100-women-raped-and-burned-alive-in-dr-congo-jailbreak-un-says/
  6. பிள்ளையான் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என பிள்ளையானின் செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலானா என்பவர் செனல் 4இற்கு தெரிவித்தார் என அந்த அதிகாரி டெய்லிமிரருக்கு சுட்டிக்காட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். மௌலானா ஏற்கெனவே இது குறித்த விபரங்களை செனல் 4இற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் தெரிவித்திருந்தார். இது குறித்து டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய புலனாய்வு பிரிவிற்காக பணியாற்றிய முன்னாள் உயரதிகாரிகள் சிலருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலானவுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த அதிகாரிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை பிள்ளையான் சிறையிலிருந்தவாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என ஆசாத்மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சிக்கும் தெரிவித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். ஆசாத்மௌலானா தெரிவித்துள்ள விடயங்கள் சி.ஐ.டி. அதிகாரி ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ள விடயங்களுடன் ஒத்துப்போவதாக கூறப்படுகின்றது. ஆசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சி.ஐ.டியினர் பல தடவை பிள்ளையானை விசாரணை செய்துள்ளதாக தெரிவித்துள்ள சி.ஐ.டியினர் இந்த சதி முயற்சியில் தொடர்புபட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கம் கொலை தொடர்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக ஜஹ்ரான் குழுவினரின் உதவியை பெறுவதற்கு பிள்ளையான் உதவினார் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/பிள்ளையான்-மீதான-குற்றச்சாட்டு-தொடர்பில்-விசாரணை/175-351491
  7. கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்கள் பகிர்ந்த அனுபவம் 06 Feb, 2025 | 11:10 AM புதுடெல்லி: பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். முதல் கட்டமாக அமெரிக்காவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு 104 பேர் வந்தடைந்தனர். “கடந்த ஜனவரி 24-ம் தேதி அமெரிக்க எல்லைக்குள் நான் நுழைந்தபோது அந்த நாட்டு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் என்னை பிடித்தனர். முறையான விசா மூலம் என்னை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக சொல்லிய டிராவல் முகமை நிறுவனம் என்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டது. அமெரிக்கா செல்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று செலவு செய்துள்ளேன். நான் பிரேசிலில் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அதன் பின்னர் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு 11 நாள் காவலில் இருந்த நிலையில் நாடு திரும்பி உள்ளேன். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது எங்களின் கைகளில் கைவிலங்கு மற்றும் கால்கள் பயணம் முழுவதும் சங்கிலியால் பூட்டப்பட்டது. நாங்கள் வந்த விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பிறகே சங்கிலி அகற்றப்பட்டது” என்று 36 வயதான ஜஸ்பால் சிங் தெரிவித்துள்ளார். அவர் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தோர்வால் கிராமத்தை சேர்ந்தவர். “அமெரிக்க அதிகாரிகள் எங்களை வேறொரு முகாமுக்கு அழைத்து செல்வதாக சொல்லி பயணத்தை தொடங்கினர். ஆனால், செய்தி மூலமாக நாங்கள் நாடு கடத்தப்பட்டதை அறிந்தோம். வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதித்து குடும்பத்துக்கு உதவலாம் என்ற எங்களது கனவு இப்போது தகர்ந்தது” என்கிறார் ஜஸ்பால் சிங்கின் உறவினர் ஜஸ்பீர் சிங். பின்னணி என்ன? - அமெரிக்காவில் கடந்த மாதம் 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றார். அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐ.நா அமைப்புகளில் இருந்து வெளியேறுவது, உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது, வங்கதேசம், பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது, டிக்டாக் செயலிக்கு நிபந்தனை விதிப்பு என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார். அதன்படி, பிரேசில், மெக்சிகோ, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் குடிமக்கள் அவரவர் நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி, சி-17 என்ற ராணுவ விமானத்தில் நேற்று 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் வந்த ராணுவ விமானம் நேற்று பிற்பகல் 1.55 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் குருராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அமெரிக்க ராணுவ விமானத்தில் நாடு திரும்பிய 104 பேரில் 30 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். ஹரியானா, குஜராத்தை சேர்ந்த தலா 33 பேர், மகாராஷ்டிரா, உ.பி.யை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரை சேர்ந்த 2 பேர் அடங்குவர். முன்னதாக அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும், இந்தியர்கள் எத்தனை பேர் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பேசினார். பின்னர் ட்ரம்ப் கூறுகையில், ‘‘சட்டவிரோத குடியேற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன். அந்த விஷயத்தில் எது சரியோ அதை இந்தியா செய்யும் என்று தெரிவித்தார்’’ என்று கூறினார். இதையடுத்து இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. இதற்கிடையில், வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அப்போது அதிபர் ட்ரம்பை சந்தித்து இருநாட்டு உறவை மேம்படுத்த பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்காவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புளூர்பெர்க் கடந்த மாதம் புள்ளி விவரம் வெளியிட்டது https://www.virakesari.lk/article/205942
  8. அதிகாரிகள் தவறுகளை விட்டுள்ளனர் காணிகளை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் 06 Feb, 2025 | 12:08 PM காணி விடயத்தில் அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர். படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL)ஆளுநருக்குமிடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் வலி வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் விரைவில் நடமாடும் சேவை நடத்தி தீர்க்கக் கூடிய காணிப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் . மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பது ஜனாதிபதியினது நிலைப்பாடு எனவும் அந்த நிலைப்பாட்டையே நானும் வலியுறுத்துகின்றேன் , மாவட்டச் செயலர்களாக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விவரங்கள் தெரியும் . ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/205947
  9. குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது - அருட் தந்தை சிறில் காமினி 06 Feb, 2025 | 12:12 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் அரசியல் தலையீடு தேவையற்றது. எனவே இந்த விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது என பேராயர் இல்ல பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி வலியுறுத்தினார். நேற்று புதன்கிழமை (05) கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில், மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதோடு, அவரைப் போன்ற பல விசாரணை அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டனர். இதனால் அந்த விசாரணைகளுக்கு பாரிய தடைகளும் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் அந்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுமில்லை. எனினும் அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவு மீண்டும் அந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த சில காரணிகள், சில தெளிவற்ற காரணிகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. கால வரையறை காரணமாக சில காரணிகள் குறித்த ஆழமாக விசாரணைகளை முன்னெடுக்க முடியாமல் போனதாக அந்த அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு புதிய விடயங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அவற்றில் ஒன்று செனல் 4 செய்தி சேவையின் ஆவணக் காணொளியில் வெளிப்படுத்தப்பட்ட காரணிகளாகும். முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் காணப்படுகிறது.' எனக் குறிப்பிட்டிருந்தமையும் மீள விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய ஒரு காரணியாகும். இந்த விசாரணைகள் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மாத்திரமின்றி நாட்டில் இடம்பெற்றுள்ள கொலை சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டன. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் எந்தவகையிலும் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். செனல் 4 செய்தி சேவையில் பல்வேறு காரணிகளை வெளிப்படுத்திய அசாத் மௌலானா தொடர்பில் தற்போது பல்வேறு விடயங்கள் கூறப்படுகின்றன. அவரை நாட்டுக்கு அழைத்துவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இது அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய காரணியல்ல. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் எதற்காக யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாகும். எனவே அதற்கான விசாரணைகள் நிச்சயம் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்குரியது என்பதால், அதனை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைகளிலும் அரசியல்வாதிகளின் தலையீடு தேவையற்றது. அதேபோன்று அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விசாரணைகளைக் கைவிட்டு விட வேண்டாம் என்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/205951
  10. வேலை வாய்ப்பு எனக் கூறி பாரிய மோசடி February 6, 2025 07:29 am அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையை பயன்படுத்தி மோசடியான விளம்பரம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி அந்த விளம்பரம் பரப்பப்பட்டுள்ள நிலையில், அது ஒரு போலியான விளம்பரம் என்று இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது. மேலும், கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இலட்சினையை பயன்படுத்தி இதேபோன்ற வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்று அரசின் இலட்சினையை பயன்படுத்தி வெளியிடப்படும் போலி விளம்பரங்களுக்கு பதிலளிப்பது பொருத்தமற்றது என இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல சுட்டிக்காட்டியுள்ளார். "போலி வலைத்தளங்கள் மூலம் பெரும்பாலும் உங்கள் தேசிய அடையாள அட்டையின் நகல்கள், கடவுச்சீட்டு நகல்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த சூழ்நிலையிலும் நீங்கள் அத்தகைய வலைத்தளங்களைப் பார்வையிட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கக்கூடாது." என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=199775
  11. “ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள்” - சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானா, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து டெய்லிமிரருக்கு பதில் அளிக்கும்போதே பிள்ளையான் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தர வதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்? தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ண உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சி.ஐ.டியின் தலைவராக பணியாற்றினார். ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள். அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும், ஐ.எஸ். மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா? நான் ஆயுதப் போராட்டத்தை விரும்பாததால் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து முதலமைச்சரானேன். 2015 முதல் 2020 வரைசிறையிலிருந்த ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பேரழிவு தாக்குதலை எவ்வாறு திட்டமிட முடியும். ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம். நான் சி.ஐ.டியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி போலியான கட்டுக்கதைகளை உருவாக்கியமைக்காக ஆசாத்மௌலானவை கைதுசெய்ய உதவுவேன் என தெரிவித்துள்ளார். (S.R) https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதியும்-சி-ஐ-டியினரும்-முட்டாள்கள்/175-351501
  12. அநுரவின் வெற்றிக்கு புலம்பெயரிகளே காரணம்! - விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் தலையீட்டாலேயே வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இயல்பாக வாக்குகள் கிடைத்திருக்கும் என நான் நம்பவில்லை. ஏனெனில் அங்குள்ள குடும்பங்களில் 90 சதவீதமானவற்றில் எவரேனும் ஒருவர் வெளிநாட்டில் இருப்பார்;. அவர்கள் அங்கு பலமாக உள்ளனர். எனவே, அங்கிருந்து வரும் தகவலுக்கமைய இங்கு தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படலாம். அந்த சக்திகளை (புலம்பெயர்) திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதை காணமுடிகின்றது. இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன. மைத்திரி – ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முகாம்கள் அகற்றப்பட்டன. அத்தியாவசியமானவை எனக் கருதி வைக்கப்பட்டிருந்த படைமுகாம்கள்தான் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக்சவை வீட்டில் இருந்து வெளியேற்ற முற்படுகின்றமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோத்தாபய ராஜபக்சவை கைதுசெய்ய முற்படுகின்றமை உட்பட பல நடவடிகைகள் இவ்வாறு புலம்பெயரிகளைத் திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுவருகின்றன. அநுரகுமார இன்று சுதந்திரமாக யாழ்ப்பாணம் செல்வதற்குகூட, போரை முடிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச வழங்கிய அரசியல் தலைமைத்துவம்தான் காரணமாகும் என்பதை மறக்கக்கூடாது – என்றார். https://newuthayan.com/article/அநுரவின்_வெற்றிக்கு_புலம்பெயரிகளே_காரணம்!
  13. பெப்ரவரி 15 முதல் உத்தரதேவி ரயில்! பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், உத்தரதேவி ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, காலை 5:30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகின்ற ரயில் மதியம் 1:15 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது. கொழும்பிலிருந்து காலை 11.50 மணியளவில் பயணிக்க ஆரம்பிக்கும் ரயில் மாலை 6:50 மணியளவில் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய சேவைகள் கடந்த 31ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்ட இரவு நேர தபால் சேவையானது காங்கேசன்துறையிலிருந்து இரவு 8 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து, அதிகாலை 4.20 மணியளவில் கொழும்பு கோட்டையைச் சென்றடையும். கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8 மணியளவில் பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் யாழ்ப்பாணத்தை அதிகாலை 3.55 மணிக்கு வந்தடையும். இதேவேளை ஏற்கனவே இடம்பெற்று வருகின்ற யாழ் தேவி ரயில்சேவையானது காலை 5:45 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து சேவையினை ஆரம்பித்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை 12:20 மணியளவிலும், காங்கேசன்துறையை 1.45 மணியளவிலும் வந்தடையும். காங்கேசன்துறையிலிருந்து இரவு 10:30 மணியளவில் சேவையை ஆரம்பிக்கும் யாழ் தேவி ரயில் சேவையானது யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை இரவு 11 மணியளவில் அடைந்து தொடர்ந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை காலை 7 மணியளவில் சென்றடையும். வழமைபோல யாழ்ராணி ரயில் சேவையானது காலை 6 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து சேவைகளை ஆரம்பித்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை காலை 6:35 மணியளவில் அடைந்து தொடர்ந்து அனுராதபுரத்தினை 10:30 இற்கு சென்றடையும் இதேவைளை அனுராதபுரத்திலிருந்து மாலை 2:30 மணிக்கு சேவைகள் ஆரம்பமாகி யாழ் ரயில் நிலையத்தினை மாலை 6:10 மணியளவில் அடைந்து காங்கேசன்துறைக்கு மாலை 6:50 மணிக்கு சென்றடையும். மேலும் விசேட சேவையாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கடுகதி ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5:30 மணிக்கு ஆரம்பித்து யாழ்ப்பாணத்தை காலை 11:50 மணியளவில் வந்தடையும். மேலும் யாழிலிருந்து மாலை 2:15 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பை இரவு 8:50 இற்கும் சென்றடையும். https://newuthayan.com/article/பெப்ரவரி_15_முதல்_உத்தரதேவி_ரயில்!
  14. அர்ச்சுனா எம்.பி.யின் கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் கடும் எதிர்ப்பு! ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது இல்லத்தில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டார். அங்கு அவர் தெரிவிக்கையில்; தையிட்டியில் காணப்படும் விகாரையை இடிக்க முடியாதென கூறும் அர்ச்சுனா இராமநாதன் பெரிய விளானில் இருப்பதாக கூறும் தனது பத்து ஏக்கர் காணியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பாரா? வடக்கு, கிழக்கில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்று காணப்படுகிறார்கள். அவர்களுக்கு அர்ச்சுனாவால் காணியை கொடுக்க முடியுமா? நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மண்டைதீவில் கடற்படை சுவீகரித்துள்ள காணியை மக்களுக்கு முடிந்தால் பெற்றுக் கொடுக்கட்டும். காணி தொடர்பான முழுமையான காணி விபரங்கள் அர்ச்சுனா உட்பட்ட எந்தவித நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கிடையாது. இவர்கள் காணி தொடர்பில் எப்படி சரியான விடயங்களை கொண்டு செல்ல முடியும்? வடமராட்சி கிழக்கில் கோரியடியில் இருந்து சுண்டிக்குளம் வரை மக்களின் காணிகள் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பூங்காவில் மக்கள் இருக்க முடியாது. ஆனால் மக்கள் வசிக்கின்றார்கள். காலப்போக்கில் அவர்களை காணியை விட்டு அகற்றுவார்கள். இது தொடர்பான விடயங்களை அர்ச்சுனா முதலில் தேடி அறிந்து பேச வேண்டும் மக்களின் காணி பிரச்சனைகள் எங்கெல்லாம் காணப்படுகின்றது என்பதனை அர்ச்சுனா எங்களிடம் கேட்டால் கூட்டிச் சென்று காட்டுவோம். மக்களின் காணி என்று தெரிந்தும் அதை அபகரித்து விகாரைகளை கட்டினார்கள், முகாம்களை அமைத்தார்கள். மக்களின் காணியை அபகரித்து என்ன கட்டினாலும் அதை இடிக்கத்தான் வேண்டும். அதை தவறென கூறும் அர்ச்சுனா எம்பி முதலில் காணி தொடர்பான முழுமையான ஆவணங்களை தேடி அறிந்து கொண்டு பேச வேண்டுமெனவும் மேலும் அவர் தெரிவித்தார். https://newuthayan.com/article/அர்ச்சுனா_எம்.பி.யின்_கருத்திற்கு_வடமாகாண_காணி_உரிமைக்கான_மக்கள்_இயக்கத்தின்_தலைவர்_கடும்_எதிர்ப்பு!
  15. அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவித்தல்! இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல், வீசா தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் VFS கூரியர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாது. தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல், பிரீமியம் டெலிவரி சேவைகள் மற்றும் கட்டண முறைகள் பற்றிய விபரங்களுக்காக இந்த இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பார்வையிடலாம். https://ustraveldocs.com/lk/en/nonimmigrant-visa/ http://www.samakalam.com/அமெரிக்க-விசா-விண்ணப்பதா/
  16. ”புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு இப்போதைக்கு இல்லை” - அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளை இப்போதைக்கு ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும், தற்போதைய நிலைமையில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்கு கொண்டுவரும் பணிக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானஙகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்பு மறுசீரமைப்பு மக்கள் ஆணைக்கமைய நடக்கும். இப்போதைக்கு அந்த நடவடிகையை ஆரம்பிக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டரை மாதங்களே ஆகியுள்ளன. எமக்கு பொருளாதாரமே எங்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. பொருளாதார ஸ்தீரப்படுத்துவதற்கே முழு அரசாங்கமும் செயற்படுகின்றது. அதற்கு சிலகாலம் எடுக்கும். அதனுடன் தொடர்புடைய தினசரி பிரச்சினைகள் உள்ளன. அவற்றை முகாமைத்துவம் செய்து வருகின்றோம். பொருளாதாரம் ஸ்தீர நிலைக்கு வந்த பின்னர் நாங்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கையை ஆரம்பிப்போம். அதனை இழுத்தடிக்காது குறிப்பிட்ட காலத்திற்குள் மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொறிமுறையை தயாரித்து பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்பை தயாரிக்கவே எதிர்பார்க்கின்றோம். எல்லாவற்றிலும் சிக்கிக்கொண்டு ஒன்றையும் செய்ய முடியாத நிலைக்கு போக தயாராக இல்லை. பொருளாதார பிரச்சினைகளுக்கே நாங்கள் முன்னுரிமை வழங்கி செயற்படுவோம் என்றார். http://www.samakalam.com/புதிய-அரசியலமைப்பு-மறுச/
  17. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்! February 4, 2025 8:07 pm வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்! வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தரவை வழங்க வேண்டும் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் இன்று செவ்வாய்கிழமை சர்வதேச கவனயீர்ப்பு போராட்டமொன்றை லண்டனில் முன்னெடுத்தனர். இலங்கையில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இதனை கரிநாளாக கருத வேண்டும் என இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரித்தானியாவில் வாழும் ஈழ மற்றும் உலக தமிழர்களும் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து போராட்டமொன்றை லண்டனில் முன்னெடுத்தனர். ‘தன்னாட்சிக்கான உரிமைக்குரல்’ என்ற தொனிப்பொருளில் கீழ் இந்த போராட்டத்தை தமிழர்கள் முன்னெடுத்தனர். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பிரித்தானிய அரசு தார்மீக அடிப்படையில் காத்திரமான அரசியல் இராஜதந்திர நகர்வை வெளிப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். உலகத்தமிழினமாக அணிதிரண்டு சுதந்திர தமிழீழத்திற்காகப் போராடுவோம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் அறைகூவல் விடுத்தனர். https://oruvan.com/a-solution-must-be-provided-to-the-tamils-of-eelam-in-accordance-with-the-vaddukottai-resolution-charcoal-day-protest-in-britain/
  18. காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப் - தெரிவித்துள்ளது என்ன? Published By: Rajeeban 05 Feb, 2025 | 10:36 AM cnn காசாவில் நிலவும் பாதுகாப்பு வெற்றிடத்தை நிரப்புவதற்காக அமெரிக்க படையினரை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்க ஜனாதிபதி நிராகரிக்கதவறியுள்ளார். காசாவில் நிலவும் பாதுகாப்பு வெற்றிடத்தை நிரப்புவதற்காக அமெரிக்க படையினரை அனுப்புவாரா என்ற கேள்விக்கு காசாவை பொறுத்தவரை நான் என்ன அவசியமோ அதனை செய்வேன் படைகளை அனுப்புவது அவசியம் என்றால் நான் அதனையும் செய்வேன், நாங்கள் காசாவை கையகப்படுத்தி அதனை அபிவிருத்தி செய்யப்போகின்றோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நீண்டகால உரிமை பிரச்சினை உள்ளது எனக்கு தெரியும்,மத்திய கிழக்கின் அந்த பகுதிக்கும் மத்தியகிழக்கின் முழுவதற்கும் ஸ்திரதன்மையை கொண்டுவருவதற்கு நான் முயல்கின்றேன் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி இது மிகவும் இலகுவாக எடுக்கப்பட்ட முடிவில்லை, நான் உரையாடிய அனைவரும் காசா அமெரிக்கா சொந்தமாக்கிக்கொள்வதையும் அபிவிருத்தி செய்வதையும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைஉருவாக்குவதையும் விரும்புகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/205831
  19. லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம் Published By: Rajeeban 05 Feb, 2025 | 11:47 AM சண்டேலீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் சட்டமாஅதிபர் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. சட்டமா அதிபர் பதவி விலகவேண்டும்,லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்வதன் பின்னால் உள்ள காரணங்களை பகிரங்கப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இளம் பத்திரிகையாளர் சங்கம்நீதி கோரும் அனைவரையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவை வழங்குமாறு கோரியுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சியங்களை அழித்தமை மாற்றியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு கடந்த ஐந்து மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள்பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபால இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் உதலாகம ஆகியோரை முற்றாக வழக்கிலிருந்து விடுவிக்க சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். https://www.virakesari.lk/article/205842
  20. உலகெங்கிலும் உள்ள USAID ஊழியர்கள் திரும்ப அழைப்பு February 5, 2025 10:56 2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து USAID ஊழியர்களையும் விடுமுறையில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விசேட பணிகளில் ஈடுபடும் ஒரு சில ஊழியர்களை மட்டுமே தொடர்ந்து சேவையில் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நபர்கள் யார் என நாளை (06) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை USAID நிர்வாகம் எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://tamil.adaderana.lk/news.php?nid=199751
  21. அர்ச்சுனாவுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு யாழ். மாவட்ட எம்.பியான இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம 28ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அநுராதபுரம் பிரதேச போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் செல்லுபடியற்ற வாகன சாரதிப் பத்திரத்துடன் வாகனத்தை செலுத்தியமை ஆகிய போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அர்ச்சுனாவுக்கெதிராக இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அண்மையில், யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனாவின் காரை, அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் வைத்து, அவரது சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஆவணங்களை பொலிஸார் பரிசோதனை செய்ய முற்பட்டபோது பொலிஸார் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா எம்.பி. மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவானால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. (R) https://www.tamilmirror.lk/செய்திகள்/அர்ச்சுனாவுக்கு-எதிரான-குற்றப்பத்திரம்-தாக்கல்-செய்ய-உத்தரவு/175-351431
  22. இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி நியமனம்! இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், இராணுவத் தளபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 45 ஆவது பிரதி பதவிநிலை பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, கஜபா படைப்பிரிவில் இணைந்து பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரி ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு இராணுவத்தில் ஒரு கெடட் அதிகாரியாக இணைந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/இலங்கை_இராணுவத்தின்_புதிய_தலைமைத்_தளபதி_நியமனம்!
  23. யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்! மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமானது 60 குருதிக் கொடையாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் சீ.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியினரால் குருதி சேகரிப்பு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் , விசேட அதிரடிப் படையினர், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு 60 பேர் குருதிக்கொடை வழங்கினார்கள். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள், சரயன்கள், உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கி பொறுப்பு மருத்துவ அதிகாரி திருமதி தாரணி, பொது சுகாதார பரிசோதகர் ரவீனதாஸ், தாதியர்கள் சுகாதார ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கம் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/யாழ்._சிறைச்சாலையில்_வெற்றிகரமாக_நடைபெற்ற_மாபெரும்_இரத்ததான_முகாம்!
  24. இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின் இடம் February 4, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் நாம் அறியவில்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறைந்த பிறகு அவரது உடலை பேணிப்பாதுகாத்து மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கடந்தவாரம் விடுத்திருக்கிறார். மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவின் மரபை எதிர்காலச் சந்ததிகள் கௌரவிப்பதற்காக அவரது உடலைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்றும் அத்தகைய ஒரு மதிப்புமிகு அங்கீகாரத்துக்கு அவர் உரித்துடையவர் என்றும் செய்தியாளர்கள் மகாநாட்டில் அஜித் ராஜபக்ச கூறினார். “முன்னாள் சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமின் புரட்சிகர தலைவர் ஹோ சி மின் ஆகியோர் அவர்களின் நாடுகளின் வரலாற்று நாயகர்கள் என்பதால் உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த நாடுகள் அவற்றின் தலைவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்திருக்கின்றன. அதேபோன்ற மரியாதையை இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கவேண்டும். ஒரு மகத்தான தலைவர் என்ற வகையில் அவரின் முதன்மை நிலையை மலினப்படுத்தும் முயற்சிகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபடுகின்றது. முன்னாள் ஜனாதிபதி தேசத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக அவருக்குரிய பாதுகாப்பையும் மதிப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார். வெளியான செய்திகளின்படி முன்னாள் பிரதி சபாநாயகர் லெனினையும் ஹோ சி மினையும் மாத்திரமே உதாரணமாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், வேறு சில நாடுகளின் தலைவர்களின் உடல்களும் அவர்களின் மரணத்துக்கு பிறகு நினைவாலயங்களில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1924 ஆம் ஆண்டு மரணமடைந்த லெனினின் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நினைவாலயத்தில் 1930 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யர்கள் மகத்தான தேசபக்தப் போர் என்று வர்ணித்த இரண்டாவது உலகப்போரின்போது மாஸ்கோவை ஜேர்மன் படைகள் கைப்பற்றக்கூடும் என்று தோன்றியபோது 1941 ஆம் ஆண்டில் லெனினின் உடல் நினைவாலயத்தில் இருந்து அகற்றப்பட்டு பாதுகாப்புக்காக சைபீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. போரின் முடிவுக்கு பிறகு அவரது உடல் மீண்டும் மாஸ்கோவுக்கு கொண்டு வரப்பட்டது. சோவியத் யூனியனின் இரண்டாவது தலைவர் ஜோசப் ஸ்டாலின் 1953 ஆம் ஆண்டில் மரணமடைந்த பிறகு பதப்படுத்தப்பட்ட அவரது உடலும் மாஸ்கோ நினைவாலயத்தில் லெனினின் உடலுக்கு அருகாக வைக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு பிறகு பதவிக்கு வந்த நிகிட்டா குருஷேவ் ஸடாலினின் கொள்கைகளை நிராகரித்து முன்னெடுத்த இயக்கத்தின்போது 1961 ஆம் ஆண்டில் அவரின் உடல் நினைவாலயத்தில் இருந்து அகற்றப்பட்டு செஞ்சதுக்கத்தில் கிரெம்ளினுக்கு அருகாக இருந்த மயானத்தில் புதைக்கப்பட்டது. 1976 செப்டெம்பரில் மரணமடைந்த சீனத்தலைவர் மாவோ சேதுங்கின் உடல் பெய்ஜிங்கின் தியனென்மென் சதுக்கத்தின் மத்தியில் அமைந்திருக்கும் நினைவு மண்டபத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தனது உடலை தகனம் செய்யவேண்டும் என்று மாவோ விரும்பிய போதிலும், அவரது விருப்பம் அலட்சியம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோவியத் யூனியனில் ஸ்டாலினின் சடலத்தை நினைவாலயத்தில் இருந்து அகற்றி புதைத்ததன் மூலமாக அவரையும் கொள்கைகளையும் குருஷேவ் ஆட்சி நிராகரித்ததைப் போன்று தனக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக மாவோ தனது உடலை தகனம் செய்யவேண்டும் என்று கேட்டிருக்கக்கூடும். ஆனால், இன்றைய சீனாவில் மாவோவின் கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை என்றாலும், அவரது உடல் தொடர்ந்தும் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 1969 ஆம் ஆண்டில் மரணமடைந்த வியட்நாமின் புரட்சிகர தலைவர் ஹோ சி மின்னின் உடல் 1975 ஆம் ஆண்டு முதல் தலைநகர் ஹனோயில் உள்ள நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்றே 1994 ஆம் ஆண்டில் காலமான வடகொரியாவின் தாபகத் தலைவர் கிம் இல் சுங்கின் உடலும் அவருக்கு பிறகு அதிகாரத்துக்கு வந்த அவரது மகன் கிம் ஜொங் இல்லின் உடலும் தலைநகர் யொங்யாங்கில் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தலைவர்களின் கொள்கைகள் மற்றும் ஆட்சிமுறை பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்ற போதிலும், அவர்கள் சகலருமே கம்யூனிஸ்டுகள். பெரும் தியாகங்களுக்கு மத்தியில் தங்களது நாடுகளில் வெற்றிகரமான கம்யூனிஸ்ட் புரட்சிகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர்கள். அவர்களை உதாரணம் காட்டி இலங்கையில் மகிந்த ராஜபக்சவுக்கும் அத்தகைய கௌரவம் அளிக்கப்படவேண்டும் என்பது முன்னாள் பிரதி சபாநாயகரின் பெருவிருப்பமாக இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மீதான விசுவாச மிகுதியில் அந்த தலைவர்களின் ‘விக்கிரக’ வரிசையில் தனது தலைவரையும் வைத்துப்பார்க்க அவர் விரும்புகிறார் போலும். முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சிறப்புச் சலுகைகளையும் வசதிகளையும் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மகிந்த ராஜபக்சவின் தற்போதைய கொழும்பு வாசஸ்தலம் மற்றும் பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் மூண்டிருக்கும் சர்ச்சையே அஜித் ராஜபக்சவின் வேண்டுகோளுக்கான உடனடிக்காரணம் என்று தெரிகிறது. மகிந்த ராஜபக்சவுக்கு விசுவாசமான அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரே காரணத்துக்காகவே அவரையும் அவரது ஆட்சியையும் புகழ்ந்து பேசக்கூடியதாக இருக்கிறது. அந்தப் போர் எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறை கிடையாது. மகிந்தவும் கூட தனது கட்சியின் அரசியல் மீட்சிக்கு போர்வெற்றி மீண்டும் கைகொடுக்கும் என்று நம்புகிறார். அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்சவும் கூட ஜனாதிபதி தேர்தலில் போருக்கு அரசியல் தலைமைத்துவம் வழக்கிய தந்தையாரின் சாதனையையே மக்கள் மத்தியில் கூறி வாக்குக் கேட்டார். போர்வெற்றியை பயன்படுத்தி பெரும்பான்மையினவாத அணிதிரட்டலைச் செய்து தங்களது அதிகாரத்தை பல வருடங்களாக வலுப்படுத்திய ராஜபக்சாக்கள் மீண்டும் அதே தந்திரோபாயத்தின் மூலமாக அரசியலில் மீட்சிபெறலாம் என்று இன்னமும் கூட நம்புகிறார்கள் போன்று தெரிகிறது. இனவாதத்தை தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. போர்வெற்றி காரணமாக குறிப்பாக மகிந்த ராஜபக்சவும் பொதுவில் அவரது குடும்பத்தவர்களும் சிங்கள மக்கள் மத்தியில் அமோக ஆதரவைக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே. ஆனால், போர் வெற்றியை பயன்படுத்தி சிங்கள மக்களின் கவனத்தை திசைதிருப்பி முன்னென்றும் இல்லாத வகையிலான ஊழல் ஆட்சியை நடத்திய அவர்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலவற்றையும் உருவகப்படுத்துபவர்களாக ராஜபக்சாக்கள் விளங்குகிறார்கள். இலங்கை அரசியல் கடந்த காலத்திலும் சில உயர்வர்க்க குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால், மகிந்த ராஜபக்ச அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது குடும்பம் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் அருவருக்கத்தக்க முறையில் மட்டுமீறிய ஆதிக்கத்தைச் செலுத்தியதை போன்று அந்த குடும்பங்கள் செய்ததில்லை. ராஜபக்சாக்களுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தது போன்று அந்த குடும்பங்களுக்கு எதிராக ஒருபோதும் கிளர்ச்சிகள் மூண்டதில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரச நிருவாகத்தில் எதேச்சாதிகாரம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் மாத்திரமே அந்த எதேச்சாதிகாரம் உச்சநிலைக்குப் போனது. மட்டுமீறிய அதிகாரங்களை தங்களிடம் குவித்து வைத்திருப்பது ஏதோ தங்களது பிறப்புரிமை என்ற நினைப்பில் அவர்கள் நடந்து கொண்டார்கள். தங்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ராஜபக்சாக்கள் உள்நாட்டு, வெளிநாட்டுச் சதி என்று கூறுவது வழக்கம். நாட்டு மக்கள் தங்களுக்கு கடைமைப்பட்டவர்கள் என்ற விசித்திரமான உணர்வை அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள். விடுதலை புலிகளை தோற்கடித்து போரை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக சிங்கள மக்கள் என்றென்றைக்கும் தங்களை ஆதரிப்பார்கள் என்ற எண்ணமும் ராஜபக்சாக்களிடம் இருந்தது. தங்களது தவறுகளை சிங்கள மக்கள் பொருட்படு்த்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றும் இல்லாத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ச சகோதரர்களும் அவர்களின் கீழ் பணியாற்றிய உயரதிகாரிகளுமே பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். முன்னாள் பிரதி சபாநாயகரைப் போன்ற அரசியல்வாதிகள் மீண்டும் அரசியலில் தலையெடுக்க வேண்டுமானால், மக்கள் மத்தியில் ராஜபக்சாக்களின் செல்வாக்கு அதிகரிக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம். மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையிலும் கூட தனது மூத்த மகனின் எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை தனது காலத்தில் உறுதி செய்யவேண்டிய அவசரம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினை அதுவல்ல. மகிந்த ராஜபக்ச உரிமை கோருகின்ற போர் வெற்றியை அடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான ஒரு அரிய வாய்ப்பை வரலாறு அவருக்கு கொடுத்தது. போர் முடிவுக்கு வந்த உடனடியாக அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பெரும்பான்மையின மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவருக்கு சகல வாய்ப்புக்களும் இருந்தன. குறைந்த பட்சம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தையாவது சாத்தியமான அளவுக்கு நடைமுறைப்படுத்த மகிந்த ராஜபக்ச முன்வந்திருந்தால் எதிர்ப்பு கிளம்பியிருக்காது. ஆனால், அவர் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக மேலும் பகைமையை வளர்க்கக்கூடிய அணுகுமுறையையே கடைப்பிடித்தார். பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்ப்பதற்கு புதிய எதிரிகளை அவர் கண்டுபிடித்தார். எதிர்காலச் சந்ததிகளுக்கு இனப்பிரச்சினையை விட்டுச் செல்லாமல் இருப்பதற்கு தனக்கு இருந்த வாய்ப்புக்களை மகிந்த ராஜபக்ச தீர்க்கதரிசனத்துடன் உகந்த முறையில் பயன்படுத்தியிருந்தால் உண்மையிலேயே அந்த சந்ததிகளின் கௌரவத்துக்கு உரியவராக அவரைக் கொண்டாட முடியும். போர்வெற்றிக்காக மாத்திரம் அவரை எதிர்காலச் சந்ததிகள் கௌரவிக்க வேண்டும் என்று கூறுவது அடிப்படையில் இனவாதத்தை மேலும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கோரிக்கையேயாகும். அரசியலில் இருந்து தற்போதைக்கு விலகப் போவதில்லை என்றும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறிக்கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச தனது மரணத்துக்கு பிறகு உடலை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று அஜித் ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை எவ்வாறு நோக்குகிறாரோ தெரியவில்லை. மகிந்தவின் விசுவாசிகள் போர் வெற்றிக்காக அவர் வரலாற்றில் நினைவு கூரப்படவேண்டியவர் என்று கொண்டாடலாம். மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் தேசியவாத சக்திகளின் நம்பிக்கைக்குரியவராக அவர் விளங்கக்கூடும். ஆனால் அவர் தவறான ஆட்சிமுறையின் ஒரு சின்னமாகவே நினைவு கூரப்படுவார் என்பதே உண்மை. https://arangamnews.com/?p=11766

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.