Everything posted by கிருபன்
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
நான்கு பக்கமும் கிடைக்கவில்லை.. ஆனால் கிடைத்த ஒருபக்கம் போதும்..
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான உத்தியோகபூர்வமான தளத்தில் இருந்து.. https://antonbalasingham.com/archives/205
-
இராணுவ ‘கூலி’ கொலையாளிகள் பற்றி ஜனாதிபதி வெளிப்படுத்துகிறார்
இராணுவ ‘கூலி’ கொலையாளிகள் பற்றி ஜனாதிபதி வெளிப்படுத்துகிறார் January 22, 2025 12:11 pm பாதாள உலகக் கைக்கூலிகள் குழுவொன்று இராணுவத்தினரே என ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதியான ஜனாதிபதி தெரிவிக்கின்றார். அச்சத்தை ஏற்படுத்தும் இந்த தகவலை ஜனாதிபதி வெளிப்படுத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், மன்னாரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், கடமையிலுள்ள இராணுவச் சிப்பாய் என, இலங்கை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவருக்கு ஆதரவாக இருந்த பிரதான சந்தேகநபர் ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர் என்பதுடன் 2023 இல் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே அவர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். தேர்தல் வெற்றியை கொண்டாடும் பொதுக்கூட்டத்தில் இலங்கையை ‘குற்றவியல் நாடு’ எனக் கூறிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இராணுவத்தின் 73 தானியங்கி துப்பாக்கிகள் பாதாள உலகத்தின் கைகளில் சிக்கியுள்ளதாக தெரிவித்து நாட்டின் அவல நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். அதில் சுமார் பாதி துப்பாக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக (கைப்பற்றப்பட்டுள்ளதாக) ஜனாதிபதி தெரிவித்திருந்தார். “இந்த நாடு இருக்கும் பயங்கரமான சூழ்நிலையை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இராணுவ முகாம்களில் இருந்து ஆயுதங்கள் வெளியே வந்துள்ளன. ஒரு முகாமில் இருந்து எழுபத்து மூன்று T56 (தானியங்கி துப்பாக்கிகள்) பதாள உலகத்திற்கு வந்துள்ளன. ஏற்கனவே 38 ஐ நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் 35 ஐ நாங்கள் தேடி வருகிறோம். இது இப்படித்தான் நடந்துள்ளது. நேற்று, ஒருவர் T56 உடன் கைது செய்யப்பட்டார். அவர் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்.” ஏற்கனவே 13 பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மேலும் வலியுறுத்தினார். “எங்களிடம் ஒரு பெரிய மற்றும் மதிப்புமிக்க இராணுவம் உள்ளது. இராணுவத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் ஏராளமானோர் உள்ளனர். இவ்வளவு பேர் இருக்கின்றபோதிலும், இராணுவத்திற்குச் சொந்தமான ஆயுதங்கள் பாதாள உலகத்திற்கு வந்துள்ளன. நாட்டின் நிலைமை இதுதான். பாதாள உலக கோஷ்டியினரின் கூலிக்கு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு மீண்டும் முகாமுக்கு திரும்பும் சிலர் இராணுவத்தில் உள்ளனர். பதின்மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறான குற்றவியல் அரசு ஒன்று எம்முன்னே இருக்கிறது. யாரை நம்புவது? எங்கே நம்புவது? நாடு அத்தகைய நிலைக்குச் சென்றுள்ளது.” கடந்த 19ஆம் திகதி கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் பதவியேற்ற அனுர குமார திஸாநாயக்க, தனது ஆட்சியின் கீழ் உள்ள ‘குற்றவியல் அரசை’ சுத்தம் செய்வதாக உறுதியளித்ததுடன் பாதாள உலகத்திற்கு அரசியல் ஆதரவு கிடைப்பதாகவும் வலியுறுத்தினார். “முகாம்களில் உள்ள ஆயுதங்கள் அரசியல் ஆதரவுடன் பாதாள உலகத்திற்கு வருகின்றது எனச் சொன்னால், பாதாள உலகத்தின் கூலிக்கு, இராணுவத்தில் இலட்சக்கணக்கானோர் உள்ளனர். பெரியளவிலானோர் அல்ல, கையில் உள்ள விரல்களை விட கொஞ்சம் அதிகமானோர், கூலிக்கு வெளியே சென்று, கொலை செய்துவிட்டு முகாமுக்குத் திரும்புகிறார்கள். 13 பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டின் நிலைமை இதுதான். எனவே, இது ஒரு குற்றவியல் அரசு. இது எந்த நேரத்திலும் எதையும் நம்ப முடியாத ஒரு வகையான அரசு. அத்தகைய ஒரு அரசில்தான் நாங்கள் (உட்கார்ந்து) இருக்கிறோம். இதை ஒவ்வொன்றாக நாம் சுத்தம் செய்வோம்.” மன்னார் இரட்டைக் கொலை அண்மையில் கைது செய்யப்பட்ட பலரைப் பற்றி பொலிஸார் வழங்கிய தகவல்களுக்கு அமைய பணத்திற்காக செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வடக்கில் இடம்பெற்ற தொடர் கொலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ஜனவரி 16ஆம் திகதி இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஜனவரி 18ஆம் திகதி களனி பிரதேசத்தில் உள்ள மடு பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் வைத்திய உதவியாளராக கடமையாற்றும் 34 வயதுடைய சீதுவ, அமந்தொலுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 2022ஆம் ஆண்டு மாட்டு வண்டி சவாரி போட்டியின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவரைக் கொலை செய்தமை தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மன்னார், நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சவேரியன் அருள் மற்றும் 42 வயதுடைய செல்வகுமார் ஜூட் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இருவரும் ஆண்கள், ஆனால் ஒருவர் பெண் என பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதிவாகிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய பிரதான சந்தேகநபர் ஒருவரும் ஜனவரி 18ஆம் திகதி பேசாலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பேசாலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாத்தளை, கைகாவல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் எனவும் அவர் களனியில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் மற்றும் ஆய்வின் அடிப்படையில் 24.08.2023 அன்று அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிகண்டல் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு இரட்டை கொலையை செய்த குற்றத்தின் பிரதான சந்தேகநபரே இந்த சந்தேகநபர் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற மாட்டு வண்டிச் சவாரி போட்டியின்போது உயிலங்குளம் மற்றும் நொச்சிக்குளம் ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் உயிலங்குளத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதோடு அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக 2023 ஓகஸ்ட் மாதம் மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். https://oruvan.com/president-reveals-about-military-hired-killers/
-
அகரனின் ‘துரோகன்’ சிறுகதைத் தொகுப்பு மீதான ஓர் உசாவல்
அகரனின் ‘துரோகன்’ சிறுகதைத் தொகுப்பு மீதான ஓர் உசாவல் January 21, 2025 — எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் — மனுஷன்/மனுசி,அழகன்/ அழகி, துரோகன்/துரோகி……… துரோகி என்பது பெண்பாலா? அப்போ துரோகிக்கு ஆண்பால் துரோகனா? தலைப்பே குழப்பத்துடன் நந்தியாக துருத்திக்கொண்டிருக்கிறது. அது அகரனுக்கே உரிய அழகியல் நுட்பம். ‘அகரன்’ புகலிட இலக்கியப் பாரம்பரியத்தின் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர். ஏலவே ‘ஓய்வு பெற்ற ஒற்றன்’ என்னும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் ‘அதர் இருள்’ என்னும் குறுநாவல் ஒன்றையும் வெளியிட்டுள்ள அகரனின் மூன்றாவது நூல் இது. பதின்நான்கு சிறுகதைகளுடன் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலை ‘வம்சி’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் இடப்பெற்றுள்ள கதைகளில் பல முழுக்க முழுக்க ஈழத்து கதைகளாகவும் சில ஐரோப்பிய அகதி வாழ்வின் பக்கங்களை தரிசிக்கும் வாய்ப்புகளைத் தாங்கிய கதைகளாகவும் உள்ளன. அவையும் கூட யுத்தத்தின் நினைவுகளை தாண்டிச் செல்லமுடியாத நனவிலி மனங்களின் உரையாடல்களுடன் இணைத்துப் பின்னப்பட்டுள்ளன. பாரிஸ் பெருநகரம் அறிவாளிகளும் தொழிலாளிகளும் குவிந்து கிடக்கும் குப்பை மேடு என்பார் மூதறிஞர் மு.வரதராசனார். அத்தோடிணைந்து இந்நகரத்தின் வாழ்வென்பது உலகிலுள்ள பல்வேறுபட்ட இன, மத,கலாசார பின்னணிகளைக் கொண்ட மக்கள் கூட்டத்தை காணும்,கண்டறியும், கலந்து வாழும் வாய்ப்புகளையும் தரவல்லதாகும். அத்தகைய பாரிஸ் பெருநகரத்தில் வந்து வீழ்ந்த ஒரு இலங்கைத் தேசாந்திரி ஒருவன் எதிர்கொள்ளும் புதுப்புது அனுபவங்களைச் சித்தரிப்பதாக பூமா,அஞ்சனம்,வல்லான்வில் வேட்டைக்காரி,சிரிப்பு,8.6, போன்ற கதைகள் காணப்படுகின்றன. இவற்றில் குறிப்பிடக்கூடிய கதையாக 8.6 (போதை கூடிய பியர்) என்னும் சிறுகதை ஒரு தெருவோர மனிதனின் வாழ்வைப் பேசுகின்றது. இரந்துவாழ்வோர், பாலியல் தொழிலாளர்கள் போன்ற சமூகத்தால் புறமொதுக்கப்பட்ட விளிம்புநிலை மாந்தர்களின் உலகை தமிழிலக்கியத்தில் பேசுபொருளாக்கியத்தில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ஜி.நாகராஜனின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தன. அதேபோன்று புகலிட இலக்கியத்தில் இவ்வாறான விளிம்புநிலை மனிதர்களின் உலகினை பல்வேறு கோணங்களில் கவனங்கொள்ளச் செய்ததில் க.கலாமோகனின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது. அத்தகைய கதைகளில் ஒன்றாக அகரனின் 8.6 சிறுகதையை அடையாளம் காண முடிகின்றது. ‘டே டே’ என்னும் முன்னாள் போலீஸ் வீரர் ஒருவர், அவரது குடும்பம் சிதைவுற்று வீதிக்கு வந்தவர், தெருவோரத்தில் பியரும் கையுமாக குளிரென்றோ வெயிலென்றோ அலட்டிக்கொள்ளாமல் ஏகாந்த வாழ்வு வாழ்பவர். அவருடனான ஒரு இலங்கை அகதியின் அறிமுகம், நெருக்கம், நட்பு என்று தொடரும் கதையின் முடிவில் ஒருநாள் அந்த தெருவோரச் சந்தையின் அருகே உள்ள மரத்தின்கீழ் ‘டே டே’ இறந்து கிடப்பதோடு அக்கதை முடிகின்றது. ஆம் நவீன நாகரீகங்களின் சிற்பமாக நிற்கும் பரிஸ் போன்ற நகரங்களிலும் அவற்றின் புறநகர் பகுதிகளிலும் உள்ள புகையிரத நிலையங்களிலும் மெட்ரோ பாதையோரங்களிலும் இன்னும் ‘டே டே’ போன்ற நூற்றுக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். மேலும் தாய், துரோகன், போராளியின் இறுதிவெடி, விசாரணை, பொம்மை, மாமாவின் மகன் போன்ற கதைகள் ஈழ யுத்தத்தின் வடுக்களை மையமாகக் கொண்டுள்ளன. போரின் குழந்தைகள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போரின் இடிபாடுகளுக்குள்ளே பிறந்து போரின் அவலங்களோடே வளர்ந்து தப்பிப்பிழைத்தவர்களில் அகரனும் ஒருவர். அதனால்தான் அந்த கொடிய போரின் எச்சங்களாக அவர் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் நினைவுகளே அவரது எழுத்துக்களின் சாரங்களாக இருக்கின்றன. யுத்தத்தினால் ஆயிரக்கணக்கில் மாண்டுபோன மக்களும் அவர்களில் எஞ்சிக்கிடக்கும் மனிதர்களுமே அவரது கதையுலகின் மாந்தர்களாய் உலா வருகின்றனர். இது ‘அகரன்’ என்னும் எழுத்தாளருக்கு மட்டுமல்ல இவரைப்போன்ற போரின் குழந்தைகளான பல ஈழத்து எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். இன்னும் சொன்னால் இத்தகைய கதைக் களத்தையும் கதை மாந்தர்களையுமே இன்றைய பல எழுத்தாளர்கள் தமது இலக்கிய முதலீடாகவும் கொண்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போர்சூழ் வாழ்வின் அவலங்களை சித்தரிக்கும் அதே வேளை உள்ளக வன்முறைகளை ஆதரிக்கும் பாசிஸ மனநிலையில் ஊறித்திளைத்த தேசிய பித்தர்களாகவும் காணப்படுவது பல ஈழ எழுத்தாளர்களிடையே காணப்படும் பெரும் முரண் நகையாகும். போர் என்பதே அவலங்களை உற்பத்தி செய்து தள்ளுகின்ற தொழிற்சாலைதான். வன்முறைகளையும் கொலைகளையும் கொடூரங்களையும் நிகழ்த்துவதிலேயே போரின் போதான அறம் நிலைநாட்டப்படுகின்றது. போரில் ஈடுபடும் இருதரப்பினராலும் அவைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டுதானிருக்கும். ஆனால் இந்த வன்முறைகளை எதிர்த்து ஆக்கிரமிப்பு, அட்டுழியம் என்று ஒரு புறம் பேசிக் கொண்டு மறுபுறம் புரட்சிகளின் பெயராலும் விடுதலைகளின் பெயராலும் தத்துவங்களின் பெயராலும் ஒருபக்க வன்முறைகளுக்கு நியாயம் கற்பிப்பது புறநாநூற்றுக் காலம் தொடங்கி ஈழத்தமிழ் இலக்கியம் வரை தொடர்கின்றது. இவற்றுக்கு மொழியுணர்வுகளும் இன,மத,தேச உணர்வுகளும் துணைக்கழைக்கப்படுகின்றன. தற்கொடையென்றும் தரணி புகழ் மாவீரமென்றும் கொலைகளும் மரணங்களும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் புகலிட தமிழ் இலக்கியத்துக்கென ஒரு பாரம்பரியம் உண்டு. யுத்தத்தைத் தின்போம் யுத்தத்தைத் தின்போம் என்று யுத்த எதிர்ப்புக்கு கவிதைகளிலும் கதைகளிலும் ஆர்ப்பரித்து எழுந்து நின்றதுதான் புகலிட இலக்கியம். ‘எந்தத் தாயும் தன் புதல்வனின் மரணத்தை மாவீரன் என்று கொண்டாடுவதில்லை’ என்று பாடுவான் புகலிடக்கவி ‘சக்கரவர்த்தி’. இப்படியாக யுத்த பேரிகைகளுக்குள் நசிவுண்டு கிடந்த மானிடத்தின் ஈனக் குரல்களின் பிரதிபலிப்பாய் தன்னை பிரகடனம் செய்த வரலாறு புகலிட இலக்கியத்துக்கு உண்டு. அதனாலேயே ஈழ யுத்தத்தில் ஈடுபட்ட தரப்புகளால் துரோகங்களாக பிரகடனம் செய்யப்பட்டு அடாவடித்தனங்களாலும் மிரட்டல்களாலும் கொலைகளாலும் ஒரு காலத்தில் அச்சுறுத்தப்பட்டது இந்த புகலிட இலக்கியப்போக்கு என்பது வரலாறு. அகரனின் கதைகளைப் பொறுத்தவரையில் வெற்றிவேல் வீரவேல் என்று ‘புலிகளையும் அவர்களின் வீரம் செறிந்த வாழ்வையும்’ புகழ்ந்துரைக்கும் அதேவேளை யுத்தத்தின் போதான அனைத்து வன்முறைகள் மீதும் கேள்வியெழுப்பத் துடிக்கும் அறச்சீற்றம் துளிர்விடுவதை சில கதைகளில் ஆங்காங்கே காணமுடிகின்றது. இதனுடாக புலிகளின் உள்ளக வன்முறைகள் பற்றிய பல பதிவுகளை நாசூக்காக ‘துரோகன்’ சிறுகதைகள் பேசுகின்றன. அந்த வகையில் இச்சிறுகதைத் தொகுப்பானது ஈழ வியாபார எழுத்துக்களின் போக்குகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுவிடுபட்டு புகலிட இலக்கியத்தின் கருத்துக் சுதந்திர வெளி பாரம்பரியத்துடன் தன்னை அடையாளம் காட்ட எத்தனிப்பது தெரிகின்றது. புலிகள் இயக்கம் மாத்தையா என்னும் தளபதியை துரோகி எனப் பிரகடனம் செய்து கொன்றொழித்ததோடு (1993) மட்டுமன்றி அவரின் விசுவாசிகள் என்று குற்றம் சாட்டி பலநூறு போராளிகளை சித்திரவதை செய்து கொன்றதென்பது வரலாறு. அவ்வேளையில் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைகளுக்குள்ளானவர் தளபதி ஜெயம் ஆகும். பின்னர் அவர் விடுதலையாகி படையணிகளில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார். ஒரு சுய பரிசோதனையாக நம் சமூகம் பேசியாகவேண்டிய இத்தகைய வரலாறுகளை நாசூக்காக சொல்ல முயலும் ‘அகரன்’ ‘இயக்கத்துள் நடந்த சூறாவளிக் காலத்தில் என்மனம் உடல் வதங்கிய காலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன்’ என்று தன் சொந்த இயக்கத்தினாலேயே தனக்கு இழைக்கப்பட்ட கொடிய சித்தரவதைகளை இறுதி யுத்தக் களமுனையின் சாவின் விளிம்பில் நின்ற தருணங்களின் போது தளபதி ஜெயம் என்னும் போராளி நனவிடை கொள்வதாக பதிவு செய்கின்றார். இறுதியாக தளபதி ஜெயம் தன் கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதோடு யுத்தம் முடிவடைகின்றது. குறித்த இறுதியுத்தம் முடிந்தபோது ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ என்று கூற அந்நிலத்தில் யாரும் இருக்கவில்லை.’ என்கின்ற வரிகளோடு ‘போராளியின் இறுதி வெடி’ என்னும் அக்கதை முடிகின்றது. கதைதான் முடிகின்றதே தவிர அந்த வரிகள் எழுப்பும் கேள்விகள் ஒரு யுகம் யுகமாய் தொடரும் வல்லமை வாய்ந்தனவாகவுள்ளன. பல்லாயிரம் போராளிகளுடன் எழுந்து நின்ற அந்தப்போர் ஏன் தொடரவில்லை? குறித்த அமைப்பும் குறித்த தலைமையும் அழிந்து விடுவதானால் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து விடமுடியுமா? அப்படியென்றால் யாசிர் அராபாத்தின் மரணத்தின் பின்னர் பலஸ்தீன விடுதலைப்போராட்டமும் ஒச்சலானின் கைதுக்கு பின்னர் குர்தீஸ் விடுதலைப் போராட்டமும் பல தசாப்தங்களாகத் தொடருவது எப்படி? டாக்டர் சான் யாட் சென்னின் போன்றவர்களின் பல்வேறு தோல்விகளுக்குப் பின்னரும் எப்படி மாவோ என்னும் மனிதன் மாபெரும் மக்கள் சீனத்தைப் படைக்கமுடிந்தது? ஆனால் ஏன் மே 18 ஆம் திகதிக்கு பின்னர் ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ என்று சொல்லி ஒரு கைக்குண்டை வீசக்கூட ஈழத்தில் ஒரு தேசபக்தன் இல்லாது போனான்? உண்மையான தேசபக்தர்களையெல்லாம் துரோகிகள் என்று கொன்றழித்துவிட்டு கூலிக்கு வேலைசெய்யும் முகவர்களை பண முதலைகளையும் சர்வதேச மாபியாக்களையும் மட்டுமே வளர்த்தெடுத்ததன் பலன் தான் இந்நிலையா? இத்தொகுப்பின் சிறந்ததை கதையாக ‘விசாரணை’ என்னும் கதை அமைகின்றது. துரோகம் என்னும் கதையின் தலைப்பை இக்கதைக்கு வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில் உண்மையில் துரோகம் என்பது என்ன? ‘துரோகி’ ‘துரோகி’ என்று எடுத்ததற்கெல்லாம் கொலையே தீர்வு என்று இயங்கிய புலிகள் இயக்கம் இறுதியிலே அந்தத் துரோகத்தின் அடையாளமாக, தமிழர்களின் ஒரு அவமானச் சின்னமாகச் சீரழிந்து அழிந்து போனது. அந்த துரோக வரலாற்றை சொல்லாமல் சொல்லும் பாங்கில் இந்த விசாரணை என்னும் கதை அமைந்துள்ளது. புலிகளின் புலனாய்வுத் துறைக்காக மாதாந்தம் 8000 ரூபாய் கூலிக்கு பணிபுரியும் மயூரன் என்னும் ஒரு இளைஞன் பற்றியது இக்கதை. மிக விசுவாசமாக போராளிகளோடு போராளிகளாக வாழ்ந்து புலனாய்வு துறைக்கு பணிபுரிகின்றான் மயூரன். ஒரு கட்டத்தில் அவன் ஒரு இரட்டை முகவர் என்பதை இயக்கம் அறிந்து கொள்கின்றது. இயக்கத்தின் மறைவிடங்கள் பற்றி மலர்விழி என்னும் தன் காதலியூடாக இராணுவத்தினருக்கு அவன் அனுப்பிய இரகசிய தகவல்கள் உறுதி செய்யப்படுகின்றன. அதன் காரணமாக அவன் இலங்கை இராணுவத்தினருக்கு கொடுத்த இரகசியத் தகவலால்தான் புலிகளின் முகாமொன்றின் மீது விமானத் தாக்குதல் இடம்பெற்றது என்கின்ற குற்றச்சாட்டில் புலிகளால் மரண தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றான். கண்கள் கட்டப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு பகிரங்கமாக சுட்டுக்கொல்லப் படுகின்றான். கூலிக்கு வேலை செய்பவன்தானே அதிக கூலி கொடுப்பவர்களுக்கு அதிக விசுவாசமாய் இருப்பான் என்பது இயல்புதானே? இந்தக்கதை இத்தோடு முடிந்துவிடவில்லை. அந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் இருபத்திஐந்து வருடங்களுக்குப் பின்னர் இறுதியுத்தத்தில் புலிகளின் தலைமைக்குழுவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒட்டுமொத்தமாக இலங்கை இராணுவத்திடம் தங்களை ஒப்புவிக்கின்றனர். அவ்வேளையில் இயக்க இரகசியங்களை இராணுவத்தினரிடம் கையளித்தான் என்னும் குற்றச்சாட்டில் துரோகி என்று மரண தண்டனைக்கு ஈ ள்ளாக்கப்பட்ட மயூரன் இணைந்து இயங்கிய புலிகளின் புலனாய்வுத்துறை அணியினரும் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையும் காலம் வருகின்றது. அனைவரும் தங்கள் அடையாளங்களையும் இயக்க இரகசியங்களையும் இலங்கை இராணுவத்திடம் தாங்களாகவே ஒப்புவிக்கின்றனர். அவ்வேளையில் குறித்த கிராமத்துக்குரிய அரச கிராம சேவகராக மயூரனின் காதலி மலர்விழி இருக்கின்றாள். ஆக கூலிக்கு வேலைசெய்ய வந்து அதிக கூலி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இயக்க இரகசியங்களை இராணுவத்திடம் கொடுத்த மயூரன் துரோகியென்றால் அந்த மயூரனைப் போல் பலநூறுபேருக்கு மரணதண்டனை வழங்கிவிட்டு இன்று அதே இலங்கை இராணுவத்திடம் அனைத்தையும் ஒப்படைத்த புலித்தளபதிகள் யார்? எத்தனை ஆயிரமாயிரம் அப்பாவிக் குழந்தைகளின் கழுத்திலே சயனைட் குப்பிகளை கட்டி களமுனைக்கு இவர்கள் அனுப்பினார்கள்! உயிர்க்கொடை, உன்னதம், மாவீரம் என்று எத்தனை கரும்புலிகளுக்கு இவர்கள் பயிற்சியளித்து பாடையில் அனுப்பினார்கள்! ஆனால் தங்களுக்கான நேரம் வந்தபோதுதான் உயிர்களின் பெறுமதியும் வாழ்வின் மீதான ஆசையும் இவர்களுக்கு புரிந்தது. இருபது முப்பது வருடங்களாக கோடிக்கணக்கான சொத்துக்களையும் லட்ஷக்கணக்கான பொதுமக்களையும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் பலிகொடுத்துவிட்டு ஏனைய சக இயக்கப் போராளிகளையும் மிதவாத தமிழ் தலைமைகளையெல்லாம் துரோகிகள் என்று கொன்று வீசி விட்டு எஞ்சியிருந்த தேசபக்தர்களை நாட்டைவிட்டுத் துரத்தியடித்துவிட்டு இப்போது தாங்களும் கேவலமாக சரணடைந்து அழிந்து போவதில் என்ன மாவீரம் இருக்கின்றது? அனைத்துக்கும் மேலான துரோகம் இதுவல்லவா? மயூரன் துரோகியென்றால் நீங்களெல்லாம் யாரென்று கேட்காமல் கேட்பதற்காவா இந்த சிறுகதைத் தொகுப்புக்கு ‘துரோகன்’ என்று பெயரிட்டார் அகரன்? https://arangamnews.com/?p=11710
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மூன்று பேர் வேகமாக போட்டியில் குதித்திருக்கினம்😀. மற்றையவர்களும் விரைவில் பதில்களைத் தந்தால் போட்டியை நடாத்த உதவியாக இருக்கும்!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
புலிகளின் வரலாறு தெரியாத புலிக்குட்டிகளுக்கு
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்! Jan 21, 2025 ப.திருமாவேலன் கொழுப்பெடுத்த கூமுட்டை ஒன்று, தான் பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்பு ‘திராவிடம்’ பேசியதாகவும், பிரபாகரன் தான் ‘திராவிட’ மாயையை உடைத்தார் என்றும் உளறித் திரிகிறது. அதைக் கேட்ட போது ‘ஆமைக் கறி’ நாற்றத்தை விடக் கேவலமாக இருந்தது. அவர்களே ‘திராவிட’ புலிகள் என்பது இந்த குணக்கேடனுக்குத் தெரியாது. ‘தமிழர்கள்'( திராவிடர்கள்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1978 ஆம் ஆண்டு கியூபாவில் உலகம் முழுக்க இருக்கும் விடுதலைப் போராட்ட அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில் புலிகள் பங்கெடுத்தார்கள். 11TH WORLD FESTIVAL YOUTH AND STUDENTS – IN CUBA – 1978 என்று அந்த மாநாட்டுக்குப் பெயர். We “LIBERATION TIGERS OF THAMIL EALAM” என்ற அறிமுகத்துடன் நான்கு பக்க அறிக்கையை அப்போது புலிகள் அங்கு தாக்கல் செய்தார்கள். அந்த அறிக்கையில் WHO ARE THAMILS ( DRAVIDIANS) என்ற தலைப்பில் இரண்டாவது பாரா உள்ளது. அதில், ”The Thamils have ancient culture and speak Thamil language which is one of the oldest languages of India that formed the Dravidian family spoken today in Thamil Nadu of india, Thamil Ealam of Ceylon, Singapore, Malaysia, Fiji Islands, South Africa and in other countries by more than 65 million people. In Ceylon Thamils are 3 million in number” – என்று குறிப்பிட்டுள்ளார்கள். ( அந்த அறிக்கையில் TAMILS என்பதில் ‘H’ இடம்பெற்றுள்ளது) புலிச்சின்னத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்? 1976 ஆம் ஆண்டு புலிச்சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. புலிச்சின்னம் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இதழான ‘விடுதலைப்புலிகள்’ இதழில் 1991 பங்குனி மாதம் வெளியாகி உள்ளது. ”புலிச்சின்னத்தை தமிழீழத்தின் தேசியச் சின்னமாக பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கு காரணமுண்டு. புலிச் சின்னம் திராவிடர் நாகரிகத்தில் வேரூன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும் தேசிய எழுச்சியையும் சித்தரிக்கும் ஒரு குறியீடு” ( பக்கம் 3) என்று அறிவிக்கப்பட்டது. தனது போராட்டத்துக்கு அடித்தளம் தமிழார்வம் தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது. “அறிவுசார் மானிடத்தின் பொதுமூதாதை மொழி தொல் திராவிட மொழியாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற கருதுகோள்களின் படி தமிழார்வம் முகிழ்ந்துள்ளது. எமது விடுதலைப் போரும் தமிழார்வத்துக்கு இன்னுமோர் காரணமாகலாம்” ( விடுதலைப்புலிகள், 2007 பங்குனி சித்திரை) என்று அதிகாரப்பூர்வமான அமைப்பின் இதழ் எழுதியது. திராவிடத் தமிழ் இராச்சியங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் அறிஞரான அன்ரன் பாலசிங்கம் அவர்கள், ‘போரும் சமாதானமும்’ என்ற நூலை எழுதி இருக்கிறார். அதில் திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் என்றே முந்தைய இலங்கையைக் குறிப்பிடுகிறார். ”இலங்கைத் தீவானது தொன்மை வாய்ந்த இரு நாகரிகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பர்யங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்குகிறது. இத்தீவில் வதியும் தமிழ் மக்களது வரலாறானது பண்டைய யுகம் வரை வேரோடிச் செல்கிறது. சிங்கள மக்களின் மூதாதையர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்திலிருந்து தமது இளவரசன் விஜயனுடன் இத்தீவை வந்தடைந்த போது – தொன்மை வாய்ந்த திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் இங்கிருக்கக் கண்டார்கள். இலங்கைத் தீவில் சிங்களக் குடியேற்றம் நிகழ்வதற்கு முந்திய காலத்தில் நாகர், இயக்கர் என்ற திராவிடத் தமிழ் இராச்சியங்கள் நிலைபெற்றிருந்ததாக சிங்கள வரலாற்றுப் பதிவேடுகளான தீபவம்சமும் மகாவம்சமும் எடுத்தியம்புகின்றன… இத்தீவின் பூர்வீகக் குடிகளாகத் திராவிடத் தமிழர்களே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு( பக்கம் 14) என்று குறிப்பிடுகிறார் அன்ரன் பாலசிங்கம். பூர்வீகக் குடிகளான திராவிடத் தமிழர்களின் திராவிடத் தமிழ் இராச்சியங்களை சிங்களவர்களிடம் இருந்து மீட்கவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை எடுத்தார்கள். இவர்களை திராவிடத் தமிழர்கள் என்று தான் பாலசிங்கம் அழைக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முழு வரலாற்றுப் புத்தகத்திலேயே இது இருக்கிறது. சின்னத்தில் ‘கருப்பு’ ஏன்? விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியின் சின்னமாக மஞ்சள், சிவப்பு, கருப்பு ஆகிய நிறங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமது வழிவழித் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட மஞ்சளும், சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கு புரட்சிகரப் போராட்டத்தின் நிறமாக சிவப்பும், மக்களின் மன உறுதியைக் குறிக்க கருப்பும் தேர்வு செய்ததாக தலைமை அறிவித்தது. ( விடுதலைப் புலிகள் 1990 வைகாசி) சோசலிசப் பாதையே தனது அரசியல் பாதையாக பிரபாகரன் அறிவித்தார். ( 1986 இந்து இதழுக்கு அளித்த பேட்டி.) புரட்சிகரமான சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதை தமது விடுதலை இயக்கத்தின் இலட்சியமாகச் சொன்னார். வர்க்கம், சாதி என்ற சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட்டு பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக அநீதிகள் அழிக்கப்பட்டு உழைக்கும் பாட்டாளி மக்களின் சுவர்க்க பூமியாக சோசலிச தமிழீழம் திகழும்( விடுதலைப்புலிகள் 1986 நவம்பர்) என்று சொன்னார். மனுவை எதிர்த்த பிரபாகரன் ”பழமைவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் ஊறிப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாக பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது, வேதாந்தங்களையும் மத சித்தாந்தங்களையும் மனுநீதி சாஸ்திரங்களையும் அந்தக் காலங்கொண்டே பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்கு முறையானது பெண்ணினத்தின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. அவர்களது வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது” என்று உலக மகளிர் தினச் செய்தியாக பிரபாகரன் வெளியிட்டார்.( விடுதலைப்புலிகள் 1991 பங்குனி) ”பெண்ணடிமை வாதம் என்பது மூடநம்பிக்கைகளின் பிறப்பிடம். கருத்துலகம். பழமைவாதக் கருத்துகள் பெண்மையின் தன்மை பற்றிய பொய்மையை புனைந்து விட்டுள்ளது. தலைவிதி என்றும், கர்மவினை என்றும் தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும் பழைமை என்றும் பண்பாட்டுக் கோலமென்று காலங்காலமாக மறைமுக இருளுக்குள் முடங்கிக் கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்” ( விடுதலைப்புலிகள் 1992 பங்குனி) என்றும் பிரபாகரன் எழுதி இருக்கிறார். பிரபாகரன் தனது இறுதி மாவீரர் உரையில், ” சுதந்திரமும் சமத்துவமும் கூடிக் குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டு கொண்டான். சாதி,சமய, பேதங்கள் ஒழிந்த – அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற – சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய ஓர் உன்னத வாழ்வை கற்பிதம் செய்தான்” ( விடுதலைப்புலிகள் ஐப்பசி,கார்த்திகை) என்றே தனது கனவுகளை அறிவித்தார். மதச்சார்புக் கொள்கை ”தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மதச்சார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கம் மதச்சார்பற்றது. தமிழ் இன ஒருமைப்பாட்டையும் தேசிய சுதந்திரத்தையும் லட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம் மதச்சார்புடைய கொள்கையைக் கடைப்பிடிப்பது தவறானதாகும். இந்தக் குறுகிய மதவாதப் போக்கு தமிழ் இனஒற்றுமைக்கும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும். வழிபடுவதும் வழிபடாமல் விடுவதும் அவரவர்க்கே உரித்தான தனிமனித சுதந்திரமாகும். வழிபாட்டு உரிமையானது, மனிதனின் சிந்தனைச் சுதந்திரம் சார்ந்தது. இதை எமது இயக்கம் தடுக்காது” ( விடுதலைப்புலிகள் 1992 ஆடி,ஆவணி) என்று தமது இயக்கத்தின் கொள்கைத் திட்டமாக அறிவித்திருந்தார் பிரபாகரன். பிரபாகரன் கண்டித்த பார்ப்பனீயம் 1983 திம்பு பேச்சுவார்த்தையின் போது இந்திய அரசு சொல்வதை பிரபாகரன் ஏற்க வேண்டும் என்று ரா உளவுப் பிரிவு அதிகாரியான சுந்தரம் கடுமையாக நிர்பந்தம் செய்தார். அதனை பிரபாகரன் கடுமையாக எதிர்த்தார். இந்த சுந்தரம், ஒரு பார்ப்பனர். இது தொடர்பாக கொளத்தூர் மணியிடம் பேசிய பிரபாகரன், ”திராவிட இயக்கத்தின் பிராமண எதிர்ப்பை நமது முகாம்களில் சில புலிகள் கிண்டல் செய்வது உண்டு. திராவிட இயக்கத்தினர் பிராமணர்களை ஏன் இப்படி தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு இருந்தது. இந்த சுந்தரம் போன்றவர்களைப் பார்க்கும் போதுதான் எனக்குப் புரிகிறது. திராவிட இயக்கத்தவர்களின் பிராமண எதிர்ப்பில் நியாயம் புரிகிறது” ( பக்கம் 578, வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட வரலாறு, செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை) என்று சொல்லி இருக்கிறார். ‘ஆரிய’ ஜெயவர்த்தனாவும் ‘திராவிட’ பிரபாகரனும் ஈழத்தமிழர்களை 1980 களின் தொடக்கத்தில் படுகொலை செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தன்னை ஆரியராகவே சொல்லிக் கொண்டார். தமிழர்களை திராவிடர்களாக அடையாளப்படுத்தினார். 1983 ஆம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த அமிர்தபஜார் இதழில் நிருபர் அதிபர் ஜெயவர்த்தனாவை பேட்டி காணச் சென்றார். அவரிடம் ஜெயவர்த்தனா சொன்னார். ”நீங்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியில் இருந்து வந்திருக்கிறீர்கள். எனவே சிங்களவர்களுக்குள்ள ஆரிய இனத் தொடர்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்கே உள்ள சிறுபான்மையினர் (தமிழர்கள்) திராவிட இனத் தொடர்பு உள்ளவர்கள். சிங்களவர்களின் ஆரிய இனத்தைச் சார்ந்த வங்காளியான உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்” என்றார் ஜெயவர்த்தனா. இதை குறிப்பிட்டு ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அன்றைய இந்தியத் தூதர் எஸ்.பார்த்தசாரதி, ”சிங்கள வரலாற்றாசிரியர்கள் தமிழர் சிங்களவர் போராட்டத்தை ஆரிய – திராவிட போராட்டமாகவே கூறுகிறார்கள்” என்று எழுதினார். ( 31.8.1983 இந்து) இதற்கு பதிலளித்து ‘விடுதலை’ எழுதி தலையங்கம், ‘இது ஒரு ஆரிய திராவிடப் போர்’ என்று தலைப்பிட்டது.( விடுதலை 14.9.1983) இதே கருத்தை மையமாக வைத்து புலிகளின் அதிகாரப்பூர்வமான ‘புலிகளின் குரல்’ வானொலியில் ‘இலங்கை மண்’ என்ற தொடரை கலை இலக்கியவாதியும் பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி தயாரித்து ஒலிபரப்பினார். இதற்கு எதிர்ப்பு வந்தபோது, இந்த நாடகத்தை இரண்டாவது முறையும் ஒலிபரப்பச் சொன்னார் பிரபாகரன். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பிரபாகரன் எழுதுகிறார்: “மனிதகுல வரலாற்றில் மனிதர் அனைவரும் ஒன்று சேர்த்து, ஒத்திசைவாக ஒரு போதும் இருந்ததில்லை. மனிதன் குடும்பமாக, குழுவாக, இனக் குழுவாக வாழ்ந்த நாளிலிருந்து அவனுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கின. அவை முற்றி, மோதல்களாக வெடித்தன. அனைத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசை அவனிடம் பிறந்தது. மனிதனே மனிதனுக்கு விரோதியாக மாறும் விந்தை நிகழ்ந்தது. தான் சாராத பிறரை எதிரியாகக் கண்டான். அவர்களைத் தீண்டத்தகாதோராக விலக்கிவைக்க முயற்சித்தான். மனிதகுல விரோதியாக, கொடியோராக, கொடுமைக்காரராக, மனிதரே அல்லாத ‘அரக்கராக’ முத்திரை குத்திப் பொய்யான கதைகள் கட்டினான். காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களது வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் ஈவிரக்கமின்றிச் சாடினான். அவர்களை அடியோடு அழிப்பதே தர்மம் என்று போதனை வேறு செய்தான். கடவுட் கோட்பாட்டைத் துணைக்கு அழைத்துத் தன்னைத் தெய்வ அவதாரமாகக் காட்டிக் கொண்டான். பொய்யான விளக்கங்களை வியாக்கியானங்களைக் கொடுத்தான். தான் வாழ்ந்தாற் போதும் என்ற சுயநலத்துடன் தனது எதிரிகள் மீது ஈவிரக்கமின்றிப் போர் தொடுத்தான். இப்படியாக ஒருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியிற் புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பொய்களையும், புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு, வெற்றி பெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து, கோழைத்தனமாக, வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் அதில் சொல்லப்படவில்லை. உண்மை வரலாறு இறந்தவர்களின் புதைகுழிகளின் இருளுக்குள் அப்படியே அடங்கிப் போனது. இதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரியில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது” என்றார் பிரபாகரன். இவை எதுவும் இன்றைய கூமுட்டைகளுக்குத் தெரியாது. திராவிடம் வளர்த்ததே ஈழம் தான்! தந்தை பெரியார் அரசியலுக்கு வருவதற்கு முன்னால், அவருக்கு இருபது வயது இருக்கும் போதே ஈழத்தில் ‘திராவிடக் குரல்’ எழுந்துவிட்டது. 1899 ஆம் ஆண்டு சபாபதி நாவலர் தனது மொழியியல் நூலுக்கு ‘ திராவிடப் பிரகாசிகை’ என்று பெயர் சூட்டினார். 1903 ஆம் ஆண்டு இலங்கைச் சரித்திர சூசனம் என்ற நூலை ஆ.முத்துத்தம்பி பிள்ளை எழுதினார். இலங்கையை திராவிட நாட்டார் (அதாவது தமிழ்நாட்டவர்) சிங்களத் தீவு என்று அழைத்ததாகத் தான் அந்தப் புத்தகத்தை தொடங்குகிறார். திராவிட மொழித் தொடர்புகள் குறித்து வி.கனகசபை ( 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்) விரிவாக எழுதி இருக்கிறார். இலங்கையின் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் கல்வெட்டில் பெருமகன், வேலு,மருமகன், ஆசிரியன், வணிகன், திராவிடன் ஆகிய சொற்கள் இருப்பதாக இலங்கை நான்காவது உலகத் தமிழ்மாநாட்டு மலர் (1970) கூறுகிறது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி வளர்ச்சிக் கழகத்தின் நான்காம் தமிழ் விழாவில் (1951) பேசிய தனிநாயகம் அடிகள், ‘இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என்று மொழிவதெல்லாம் திராவிடப் பண்பு, திராவிடநாகரிகம், திராவிட கலைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே’ என்று பேசினார். (உலகத்தமிழாய்வில் தனிநாயகம்) இந்த நோக்கத்துக்காகத் தான் அனைத்துலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடக்கினார். இதுவே உலகத் தமிழ் மாநாடு நடத்தத் தொடங்கியது. 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ்மாநாட்டில் பச்சைப் படுகொலைகளை அரங்கேற்றியது சிங்களம். அதைப் பார்த்து கொந்தளித்தே புலிகள் உள்ளிட்ட போராளிகள் ஆயுதம் தூக்கத் தொடங்கினார்கள். குருமூர்த்தியால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இதனை அறிய மாட்டார்கள். நன்றி: முரசொலி கட்டுரையாளர் குறிப்பு: ப.திருமாவேலன் மூத்த பத்திரிகையாளர், கலைஞர் தொலைக்காட்சி’யின் ஆசிரியர். ‘ https://minnambalam.com/featured-article/dravidian-tigers-velupillai-prabakaran-and-dravidam/
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சீமான் வீடு முற்றுகை… பெரியாரிஸ்டுகள் கைது! Jan 22, 2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை போலீசார் இன்று (ஜனவரி 22) தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தது. பெரியார் குறித்த தனது பேச்சுக்கு சீமான் ஆதாரங்களை காட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதுகுறித்து பேசிய சீமான், “பெரியார் புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குங்கள். என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆதாரங்களை காட்டுகிறேன்” என்று தெரிவித்தார். இந்தநிலையில், சீமான் வீட்டை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிடப் போவதாக கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் அறிவித்தனர். இதனையடுத்து நேற்று இரவு முதல் சென்னையின் பல பகுதிகளிலும் சீமானுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவதற்காக, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி, நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் குவிந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சீமானுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். அதேவேளையில், சீமான் வீட்டின் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர். அவர்கள் வீட்டின் முன்பாக நாற்காலி போட்டு அமர்ந்திருந்தனர். மேலும், அங்கு வந்திருந்த நிர்வாகிகளுக்காக சீமான் வீட்டில் சிக்கன் பிரியாணி தயார் செய்யப்பட்டது. இந்தநிலையில், சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். சீமான் வீட்டை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. https://minnambalam.com/political-news/police-arrest-those-who-are-all-protest-infront-of-seeman-house/
-
சுயநிர்ணய உரிமையும்-வைக்கல் பட்டடை மனிதர்களும்
சுயநிர்ணய உரிமையும்-வைக்கல் பட்டடை மனிதர்களும் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் அமெரிக்கா ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முறை கூறியுள்ளதை எமது வார்த்தையில் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் – “எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியாது” இக்கூற்று, இன்றைய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)/தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அவர்களது அங்கத்தவர்கள், விசேடமாக தமிழ் அங்கத்தவர்களிற்கு மிக அருமையாக பொருந்தும் கூற்று. காரணம், உண்மை, நடைமுறைச் சாத்தியங்கள், சரித்திரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட சில ஆய்வையும் ஆலோசனையையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன். இலங்கையின் தற்போதைய ஜே.வி.பி/தே.ம.ச அரசாங்கம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றது மட்டுமல்லாமல், தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கில் விசேடமாக தமிழர்களது கலாசார பட்டினமான, யாழ்.மாவட்டத்தில் மூன்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளார்கள் என்பதை இங்கு யாரும் மறுக்கவில்லை. யாழ்.மாவட்டத்தில் ஜே.வி.பி/தே.ம.ச இம்முறை பெற்ற வெற்றியை உலகம் புதிதாக பார்த்தாலும், முன்பும் தெற்கின் தேசிய கட்சிகள், யாழ்.மாவட்டத்தில் வெற்றி பெற்றது மாத்திரமல்ல, தெற்கின் தேசிய கட்சிகளுக்கு ஆதரவான தமிழ் கட்சியென கூறப்படும் கட்சியும், இங்கு வெற்றி பெற்றுள்ளன. சுருக்கமாக கூறுவதானால் அறிவுபூர்வமாக நாம் இவற்றை ஆராய்வோமானால் இந்த வெற்றிகளுக்கு வெற்றிகளிற்கு பல விளக்கங்கள் கொடுக்க முடியும். ஆனால் வெற்றிகளை பெற்றதற்காக ஜே.வி.பி/தே.ம.ச. அரசாங்கமோ அவரது அங்கத்தவர்கள், விசேடமாக தமிழ் அங்கத்தவர்கள், தாம் எண்ணியவாறு கருத்துக்களை முன் வைப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். உதாரணத்திற்கு, வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் பற்றி கதைக்கும் பொழுது, சர்வாதிகார போக்கில், தமது மனதில் உதித்தவற்றை கூறி, இவர்களிற்கு வாக்களித்த தமிழ் மக்களின் வெறுப்பை தேட முயற்சிப்பது, இவை ஜே.வி.பி/தே.ம.சக்தியின் கொள்கையா என எண்ணத் தோன்றுகிறது. தமிழ் மக்கள் குறிப்பிடும் வடக்கு, கிழக்கின் சிங்கள குடியேற்றங்கள் என்பன அவ்வப்பொழுதில் பதவியிலுள்ள சிங்கள பௌத்த அரசுகளின் – தயவு, ஆதவு, ஆயுத பலத்துடன், முற்றுமுழுதாக, வடக்கு – கிழக்கில் பூவியியல் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுபவற்றையே.இவை 1948ம் ஆண்டில் கல்லோயாவில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, வடக்கு, கிழக்கின் பல பிராந்தியங்களிற்கு வியாபித்துள்ளது. அது மட்டுமல்ல, வடக்கு, கிழக்கில் மூலை முடுக்குகளில் உள்ள பழம்பெரும் சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு, பௌத்த ஆலயங்கள், சிறிலங்காவின் ஆயுத படைகள், பௌத்த குருமார்களுடைய உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றன. சரித்திரம் தெரியாத ஜே.வி.பி/தே.ம.ச இதற்காக சரித்திரம் அறவே தெரியாத ஜே.வி.பி/தே.ம.சக்தியின் தமிழ் அங்கத்தவர்கள், தமது அரசாங்கத்திற்கு தமது விசுவாசத்தை காட்டுவதற்காக, சரித்திரத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை கதைப்பது என்பது இது ஓர் சர்வாதிகார அரசாங்கமாக மாறுமா என்ற எண்ணம் மக்களிடையே உருவாக்கப்படுகிறது. தற்போதைய அரசும், அவர்களது அங்கத்தவர்களும், நீதியின் அடிப்படையில் தமிழ் மக்கள் வேறு இடங்களில் வாழ்வது பற்றி அறிந்து – புரிந்து கொள்ள வேண்டுமானால், இவர்கள் இலங்கைத் தீவின் சரித்திரம் மட்டுமல்லாது, 1948ம் ஆண்டிற்கு முன்பிருந்து இலங்கைத் தீவின் இன ரீதியான சனத்தொகையை மனதில் கொள்ள வேண்டும். அத்துடன் வடக்கு, கிழக்கு, மலையகம் தவிர்ந்த பிரதேசங்களில் எந்தனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தெரிவாகியுள்ளார்கள் என்பதையும் அறிய வேண்டும். யுத்தம் முடிவடைந்த நாளிலிருந்து ராஜபக்சக்கள் கூறிவந்துள்ள கருத்துக்களையே இன்றைய ஆட்சியாளர்களும் கூறி வருகிறார்கள்.ஒன்று, இலங்கையில் தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் என்ற பேதமின்றி, யாவரும் “இலங்கையை சார்ந்தவர்களாம்” என கூறுகிறார்கள். இலங்கைத் தீவிற்கு முன்பு இருந்த பெயர்கள் யாவற்றிற்கும், தமிழிற்கும் நிறைய தொடர்புகள் இருந்துள்ளன. ஆனால், சிறிலங்கா எனும் பொழுது, “லங்காவின்” அர்த்தம் தெரியாத தமிழர்களே இதை ஏற்றுக்கொள்வார்கள். சரித்திரத்தை புரட்டி பாருங்கள்! இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த பொழுது, தமிழ் தலைவர்களின் சுதந்திரத்திற்கான பங்களிப்பையும், நாம் “இலங்கையர்கள்” என்று வாழ்வதற்கு தமிழ் தலைவர்கள் அன்று கொடுத்த ஒத்தாசையை சிங்கள பௌத்தர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் பௌத்த – சிங்கள தலைவர்கள், முழு இலங்கைத் தீவையும் முற்றுமுழுதாக சிங்கள – பௌத்த தீவாக மாற்ற திட்டங்கள் வகுத்த காரணத்தினாலேயே, தமிழ்த் தலைவர்கள் தமக்குள் எந்த ஆலோசனை – ஒற்றுமையின்றி ஐம்பதிற்கு ஐம்பது, சமஸ்டி, சுயாட்சி, மாநில சுயாட்சி, மாவட்டம் என மாறிமாறி பேரம் பேசி, இறுதியில் தனி நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து, ஜனநாயக தேர்தலில் வெற்றியும் கண்டார்கள். இரண்டாவதாக, சிறிலங்காவில் எந்த இடமானாலும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ உரியதல்ல யாவரும் தாம் விரும்பிய இடங்களில் வாழ உரிமை உடையவர்கள்” என ராஜபக்சக்கள் கூறினார்கள். ஜே.வி.பி./தே.ம.ச அரசாங்கமும் அவர்களது அங்கத்தவர்களும் கூறிவருகிறார்கள். அப்படியானால், தமிழர் முன்பு வாழ்ந்த தெற்கு பகுதிகளான – கதிர்காமம், அம்பாறை, மலைநாடு, மட்டக்களப்பு, திருகோணமலை, நீர்கொழும்பு, புத்தளம், உடப்பு போன்ற பல பகுதிகளிலிருந்து தமிழர்கள், இனக் கலவரம் என்ற போர்வையில், அன்றைய சிங்கள – பௌத்த அரசுகளின் உதவியுடன் விரட்டி கலைக்கப்பட்ட தமிழர்களை, இன்றைய அரசாங்கம் மீள் குடியேற்றம் செய்ய முன் வருமா? கதிர்காமத்தின் ஸ்தாபகர்கள் வழிபாட்டு தலமான கதிர்காமத்தின் ஆதி குடிமக்கள், ஆதி ஸ்தாபகர்கள் யார் என்பது ஜே.வி.பி/தே.ம.சக்தியினருக்கு தெரியுமா? இன்றைய கதிர்காமத்தில் தமிழரின் பங்கு என்ன என்பதை இவர்களால் கூற முடியுமா? கீரிமலையை அண்டிய பகுதிகளில், சிங்களக் குடியேற்றங்கள் மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பாரிய புத்த கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் உள்ள “ஈஸ்வரங்கள்” யாவும் நாளுக்கு நாள் அவற்றின் முக்கியத்துவங்களை இழந்து வருகின்றன. இவை யாவும் இலங்கைத் தீவில் தமிழர்களின் சரித்திரத்தின் உறுதியான சாட்சிகள் என்பதை தற்போதைய அரசு புரிந்து செயற்பட வேண்டும். இலங்கைத் தீவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய ஐந்து பாடல் பெற்ற தலங்களான “ஈஸ்வரங்கள்” உள்ளன. திருகோணமலையில் “திருக்கோணேஸ்வரம்”, சிலாபத்தில் “முன்னேஸ்வரம்”, மன்னார்-பாலாவியில் “திருக்கேதீஸ்வரம்” ஆகியவையும் – நான்காவதாக காலியிலிருந்த “தொண்டேஸ்வரம்”, போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டு, அதே இடத்தில் இன்று பௌத்த விதிமுறைகளுக்கு அமைய, ஓர் விஷ்ணு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது “ஈஸ்வரம்”, காங்கேசன்துறையில் உள்ள கீரிமலையில் “நகுலேஸ்வரம்” உள்ளது. இவை யாவும் பௌத்த – சிங்களம் இலங்கைத் தீவில் உருவாகுவதற்கு முன்பு அங்கு காணப்பட்டவை. நாம் 60, 70களில் திருகோணமலை பட்டினத்திற்கு சென்ற வேளையில், திருகோணமலை பட்டினத்தில் சிங்களவர் யாரும் வாழவில்லை. திருக்கோணேஸ்வரத்தை அண்டிய பிரேட்ரிக் கோட்டையினுள் சில சிங்களவர்கள் வேலை செய்வதைக் கண்டோம். ஆனால், நாம் 2004ம் ஆண்டு அங்கு சென்ற சமயம் திருகோணமலை பட்டினம் மட்டுமல்ல, அதன் விவசாயக் கிராமங்களான தம்பலகாமம், சுடுநீர் கிணறுகள் உள்ள கன்னியா போன்ற இடங்களில் சிங்களவர்கள் குடியேறியுள்ளது மட்டுமல்லாது, இந்துக் கோயில் அழிக்கப்பட்டு அங்கு புத்த கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் நிம்மதியாக – நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம், உடப்பு, வவுனியா போன்ற பகுதிகளில் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று அங்கு வாழும் தமிழர்களின் எண்ணிக்கை என்ன? மன்னார், பாலாவி, திருக்கேதீஸ்வர பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் – சிங்கள இராணுவத்தின் தொல்லையாலும், உயர் பாதுகாப்பு பிரதேசம் என்ற காரணங்களினாலும் வெளியேற்றப்பட்டனர். சுயநிர்ணய உரிமை இலங்கைத் தீவில், வடக்கு – கிழக்கை தமிழர் தாயகமாக கொண்ட மக்களின் அரசியல், சமூக, கலை கலாசார வாழ்க்கை என்பது எழுபது தசாப்தங்களிற்கு மேல் இரத்தக்களரி கொண்ட இருண்ட காலமாகும். பிரித்தானியர் இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கொடுக்கும் பொழுது செய்த தவறினால், இன்று எமது சந்ததியினர் காலம் காலமாக, சிங்கள – பௌத்தர்களிடம் எமது அரசியல் உரிமைக்கு கையேந்தி நிற்பதுடன், எமக்கு இன்றுவரை கிடைத்தவை யாவும், இன அழிப்பும், பொருளாதார வீழ்ச்சியும், எமது பிரதேசங்களை நாளுக்கு நாள் பறி கொடுத்து வருவதும் மாத்திரமே. கம்யூனிசம், சோசலீசம் பேசிய சிங்கள – பௌத்தர்களினால், 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, குடியரசு அரசியல் யாப்பு, தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தி எமது அரசியல் உரிமைக்கு போராடத் தூண்டியது. இதை அடுத்து கொண்டுவரப்பட்ட 1978ம் ஆண்டு யாப்பு, இராணுவ அடக்கு முறை, பயங்கரவாத சட்டம், ஆறாம் திருத்த சட்டம் யாவும், வடக்கு – கிழக்கு வாழ் இளைஞர்களுக்கு பாரிய ஆயுத போராட்டம் மூலமே எமது அரசியல் இலட்சியத்தை அடைய முடியுமென்ற வைராக்கியத்தை கொடுத்துள்ளது. சிங்கள – பௌத்த அரசிற்கு எதிராக ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்களில் பல, சிங்கள அரசுடன் இணைந்து, வடக்கு கிழக்கில் சகல கட்டமைப்புகளுடன் உருவாகி வந்த நடைமுறை அரசை அழிப்பதற்கு துணை போனார்கள். இவர்கள் வெற்றிகரமாக நடந்த ஆயுத போராட்டத்தையும் நடைமுறை அரசையும், சிங்கள – பௌத்த இராணுவத்துடன் தோழிற்கு தோழ் துணை நின்று அழித்தார்கள் என்பது சரித்திரம். நடைமுறை அரசு இன்று போர் முடிந்து பதினைந்து வருடங்களாகியும், தமிழர்களின் நடைமுறை அரசிற்கு எதிராக அரசுடன் இணைந்து போராடிய தமிழ் குழுக்கள், தமிழ் மக்களிற்கும், அவர்களது தாயக பூமிக்கும் எவற்றை வெற்றியாக வென்று கொடுத்தார்கள்? உண்மையை ஒழிப்புமறைப்பின்றி கூறுவதானால், ஆயுத போராட்டத்தில் பங்கு கொண்டு, இறுதியில் சிங்கள – பௌத்த அரசுடன் இணைந்த அத்தனை தமிழ் குழுக்களும், சில புலிகளின் முக்கியஸ்தர்களும் உட்பட, தமிழ் மக்களின் ஆயுத வெற்றிகளை நிர்மூலமாக்க பாவிக்கப்பட்டார்கள். அதாவது இவர்கள் யாவரும் “எமக்கு மூக்கு போனாலும் பறவாயில்லை, இராணுவத்திற்கு அல்ல, எதிரியான புலிகளிற்கு, சகுனம் பிழைத்தால் போதும்” என்ற அடிப்படையிலேயே இயங்கினார்கள். இவர்கள் யாரும் ஒரு பொழுதும், சிங்கள – பௌத்த அரசிடம், நீங்கள் எங்களை தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு பாவிக்கிறீர்கள், அவர்களை அழித்த பின்னர், எமது தமிழீழ மக்களிற்கு என்ன அரசியல் தீர்வு தருவீர்களென்ற கேள்வியையோ, ஒப்பந்தமோ, பேச்சுவார்த்தையையோ எந்த சிங்கள – பௌத்த அரசுடனும் அறவே நடத்தியவர்கள் அல்ல. இது இவர்களது தமிழின பற்றையும் நிலபற்றையும் இலக்கையும் தெளிவாக காட்டுகிறது.வேறு விதமாக கூறுவதானால், இவர்கள் யாவரும், ‘வைக்கல் பட்டடை மனிதர்களானார்கள்’ என்பதே உண்மை. இன்று என்ன நடக்கிறது என பார்ப்போமானால், அரசியல்வாதிகள் எனும் தேர்தல்வாதிகள், “கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரத்திற்கு” தயாராகிறார்கள். தமிழர் கூட்டமைப்பை எந்த முன் – பின் யோசனை- ஆலோசனையின்றி குழப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதே கூட்டமைப்பிலிருந்த, தமிழரசு கட்சி சிறிதரன், ரெலோ அடைக்கலநாதனுடன் மீண்டும் இணைவது பற்றி மந்திர ஆலோசனை நடத்த போகிறார்களாம்! உண்மையை கூறுகிறேன், தமிழரசு கட்சி பல பிரிவுகளாக இன்று உள்ள நிலையில் இவர்களால் என்ன செய்ய முடியும்? மீண்டும் கூட்டமைப்பா? இவற்றை தமிழர் கூட்டமைப்பை குட்டிச்சுவராக்க பிள்ளையார் சுழி போட்ட பொழுதே முடிவெடுத்திருக்க வேண்டும். அடுத்த வேடிக்கை என்னவெனில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் புலவர், பேச்சாளர், மீண்டும் ஒற்றுமையாவதற்கு வாக்குறுதிகள் கேட்கிறார். இதைத்தான் சொல்வது, ‘விழுந்தாலும் மீசையில் மண் படவில்லையென’. கடந்த பாராளுமன்ற தேர்தலில் குறைந்தது பத்து பாராளுமன்ற ஆசனத்தை எதிர்பார்த்தவர்கள், இன்று அருந்தப்பில் ஒரு ஆசனம் பெற்றவர், மீண்டும் கூட்டமைப்பாம். இவ் முன்னெடுப்பால் தமிழரசு கட்சியிலிருந்து வெளியேற்றப்படாமல் தப்பியுள்ள கிளிநொச்சி அதிபரும், கோட்டை விடப்போகிறார். வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் பேரம் பேசும் அரசியல் என்பது, ஆயுத போராட்டத்தின் வெற்றிக் காலத்தில் மட்டுமே காணப்பட்டது. இது தவிர்ந்த காலங்களில், எந்த சிங்கள- பௌத்த அரசும், தமிழ் மக்களை ஒரு இனமாக, மனிதர்களாக பார்க்கவில்லை என்பதே உண்மை. இன்று ஜே.வி.பி/தே.ம.சக்தி பதவிக்கு வந்து இவ்வளவு காலத்தில், தமிழர் அரசியல் உரிமை பற்றி ஏதை கதைத்தார்கள், ஆலோசித்தார்கள், உரையாடினார்கள். யாவும் பிரசார மேடைகளில் தான். உதாரணத்திற்கு, தமிழரசு கட்சியின் ஓர் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதிநிதி ஒருவர் கூறியதை, அறிந்து சிரித்தோம். காரணம் – தமிழ் அரசில் கைதிகள், காணிகள் யாவும் தமது முன்னெடுப்பினால் விடுவிக்கப்பட்டவையாம். அருமையான தேர்தல் பிரசாரம். இதனால் தான், இப்பெயர்வழி தோற்கடிக்கப்பட்டாரோ தெரியவில்லை. இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற போர்வையில் சந்திக்கும் பல சர்வதேச பிரதிநிதிகளை நாங்களும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம். ஆகையால், தமிழ் அரசில் கைதிகளின் விடுதலைக்கும், காணிகள் விடுவிக்கப்படுவதற்கும் – ஐ.நா.விசேட பிரதிநிதிகளின் வேண்டுகோள்கள், ஐ.நா.மனித உரிமை சபை தீர்மானங்கள், இந்தியா உட்பட, முக்கிய நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளின் அழுத்தங்களும், சர்வதேச மனித உரிமை மனிதாபிமான அமைப்புகளின் அழுத்தங்களுமே முக்கிய காரணி என்பதே உண்மை. அன்று இந்தியாவின் துணை, பாதுகாப்பு ஆகியவற்றுடன், வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக கடமையாற்றிய வரதராஜ பெருமாள் கூறுகிறார், “ஈழத் தமிழர் விடயத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் தற்பொழுது இந்தியாவிற்கு இல்லையாம்”. இந்தியாவிற்கு மிக நெருக்கமாக இருந்த வரதராஜ பெருமாள், தமிழீழ பிரகடணம் செய்ததை மறந்துவிட்டாரோ தெரியவில்லை. வடக்கு – கிழக்கு வாழ் மக்களின் அரசியல் உரிமைக்கு உறுதி கொடுத்த இந்தியா, தமிழர்களிற்கு ஓர் நிரந்தர அரசியல் தீர்வை பெற்று கொடுக்கும் வரை, பின்னிற்க முடியாது என்ற கருத்தே பெரும்பான்மையான தமிழ் மக்களின் அபிப்பிராயம்.இன்று தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வில் உறுதி ஆரோக்கியமற்ற நிலையில், எமது தமிழ் இளைஞர்கள், 1972ம் ஆண்டின் நிலைக்கு தள்ளப்பட்டால், எந்த ஆச்சரியமும் இல்லை. அனுபவ ரீதியாக நாம் கண்ட உண்மை என்னவெனில், உலகில் பல அரச குடும்பத்தினர், ஜனாதிபதிகள், பிரதமர் போன்றோர் – விஞ்ஞானி ஐசாக் நியூட்டனின், “இசைவாக்க சட்டத்திற்கு” ஆளாகியுள்ளனர். இசைவாக்க சட்டம் என்ன கூறுகிறதெனில், “ஒவ்வொரு தாக்கத்திற்கும் எப்பொழுது சமனான அல்லது எதிர்மாறான தாக்கம் உண்டு” என்பதுடன், புவியின் ஈர்ப்பு சக்தி காரணமாக, “மேலே போகும் ஒவ்வொரு பொருளும், கீழே வந்தாகவே வேண்டும்” என்பதே. ஆகையால் முன்னைய சகல சிறிலங்கா ஜனாதிபதிகளையும், அவர்களது அரசாங்கங்களது அகங்காரம் கொண்ட ஆட்சிக் காலத்தை பார்த்தோம். இப்பொழுது அவர்களிடம் ஆட்சியில்லாத வேளையில் எவ்வளவு பரிசுத்தமானவராக நடிக்கிறார்கள் என்பதை பார்க்கிறோம். இதேபோல் ஜே.வி.பி/தே.ம.ச ஆட்சிக் காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்கத்தான் போகிறோம். https://thinakkural.lk/article/314775
-
டொலருக்குப் பதில் புதிய நாணயம்? - ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!
டொலருக்குப் பதில் புதிய நாணயம்? - ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! அமெரிக்க டொலருக்குப் பதிலாக புதிய நாணயத்தைக் கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலரின் முக்கியத்துவத்தைக் குறைப்பது குறித்து எந்த நாடாவது பரிசீலிக்குமானால், அந்த நாட்டு நிறுவனங்கள் இங்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதிலும் குறிப்பாக, டொலருக்குப் பதில் புதிய நாணயத்தைக் கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100வீத வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, புதிய நாணயத்தை உருவாக்க மாட்டோம் என்றும், டொலருக்குப் பதிலாக வேறு நாணயத்துக்கு ஆதரவும் அளிக்க மாட்டோம் என பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/394409/டொலருக்குப்-பதில்-புதிய-நாணயம்-ட்ரம்ப்-விடுத்த-எச்சரிக்கை
-
IMF உடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டம்!
IMF உடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டம்! சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். பொதுமக்களுக்குக் கூடுதல் நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். புதிய நிர்வாகத்தின் கீழ் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல வரிச் சலுகைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளதை விட மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமைகளின் கடினமான விடயங்களை ஓரளவுக்குக் குறைக்கத் தயாராக உள்ளது என்று அமைச்சர் கூறினார். வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய வரி எல்லையை 150,000 ரூபாயாக உயர்த்துவது, குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய பால் பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) விலக்கு, பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு மாணவர்களுக்கான 6,000 ரூபாய் கொடுப்பனவு ஆகியவையும் இதில் அடங்கும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். https://www.hirunews.lk/tamil/394394/imf-உடனான-ஒப்பந்தத்தை-மறுபரிசீலனை-செய்ய-அரசாங்கம்-திட்டம்
-
துருக்கி விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் - 76 பேர் உயிரிழப்பு!
துருக்கி விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் - 76 பேர் உயிரிழப்பு! துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த விருந்தகத்தின் 12ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 12ஆவது மாடியில் இருந்து யன்னல் ஊடாக தப்பிப்பதற்கு முயற்சித்த இருவரும் உயிரிழந்தனர். தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், 12 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த விருந்தகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. https://www.hirunews.lk/tamil/394391/துருக்கி-விருந்தகம்-ஒன்றில்-ஏற்பட்ட-தீப்பரவல்-76-பேர்-உயிரிழப்பு
-
எனது கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கட்டளை - செல்வம் அடைக்கலநாதன்
எனது கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கட்டளை January 22, 2025 11:17 am கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுர மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் நீதிமன்றத்தால் வழக்கு ஒன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கட்ட நிலையில் நேற்று (21) நீதிமன்றத்திற்கு சென்று வந்த பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் முள்ளிவாய்காலில் நடந்த அனர்த்தங்களையும், இராணுவம் செயத கொடூரமான செயற்பாடுகளையும் பொது வெளியில் பேசியதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு சதி செய்தேன் என்ற அடிப்படையில் எம்மை கைது செய்தார்கள். வவுனியாவிலும், அனுராதபுரத்திலும் வழக்குகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 16 ஆம் திகதி வழக்கு நடைபெற்ற போது நான் அதற்கு சமூகமளிக்கவில்லை. அதனால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று அந்த பிடியாணையை நிவர்த்தி செய்வதற்காக நான் எனது வழக்கறிஞர் உடன் நீதிமன்றம் சென்றிருந்தேன். அங்கு சென்று ஆயராகிய போது 25,000 ரூபாய் ஆட்பிணையும், எனது கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது. என்னோடு மரியசீலன் என்பவர் தொடர்ச்சியாக இந்த வழக்கில் சமூகமளித்துக் கொண்டிருக்கிறார். அவர் 8 வருடம் சிறையில் இருந்தவர். கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும். வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=199117
-
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி...
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி... January 22, 2025 05:53 am நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். செயற்திறனுடனும் திறமையாகவும் பொருளாதார செயல்முறையை கையாள்கையில் பொதுப் போக்குவரத்தை நிறுவுவதன் முக்கியத்துவம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த அரசாங்கம் எவ்வாறு தலையிட வேண்டும் என்பது குறித்தும் அதற்கு வசதிகள் அளிப்பதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. கடந்த அரசாங்கங்களில் பன்முகப்படுத்தப்பட்ட நிதிக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பணம் பயனுள்ள திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை எனவும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை தேசிய திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. நெல் கொள்வனவு செய்வதற்காக அரிசி உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கடன்களை ஒரு வருடத்திற்குள் வசூலிப்பது குறித்தும் அந்த வர்த்தகர்களிடம் உள்ள அரிசி கையிருப்புகளை ஒழுங்குபடுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேல் தளத்தில் உள்ள பொருளாதாரத்தை கீழ் மட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து பிரதேசங்களுக்கும் பிரிந்து செல்லக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார். தற்பொழுது அமுலில் இருக்கும் நிவாரணம் வழங்கும் முறையில் குறைபாடுகள் உள்ளதாகவும் அவற்றை அடையாளங் கண்டு நிவாரணங்கள் தேவையான சமூகத்தை சரியாக அடையாளம் கண்டு, அந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயத்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபோன்சு, பிரதி திறைசேரி செயலாளர் ஏ.கே. செனவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். https://tamil.adaderana.lk/news.php?nid=199097
-
முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா மைத்திரி மகிந்த வசிக்கும் வீடுகளின் பெறுமதி என்ன ? அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா மைத்திரி மகிந்த வசிக்கும் வீடுகளின் பெறுமதி என்ன ? அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி BatticaloaJanuary 22, 2025 முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வவாசல்ஸதலங்களினால்அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி பேட்டியொன்றில் கருத்துதெரிவித்துள்ள ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் வழங்கிய வீட்டிலேயே வசிக்கின்றார் அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபாய் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேபோன்று முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவும் 0.9மில்லியன் ரூபாய் இல்லத்தில் வசிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்து சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்த கருத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் வீட்டின் வாடகை பெறுமதி மாதம் 4.6 மில்லியன் என குறிப்பிட்டுள்ளார். எனினும் சில தலைவர்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை மீள ஒப்படைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு நன்றியை தெரிவித்துள்ளார். இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சமீபத்தில் மீள கையளித்தார் என ஜனாதிபதிதெரிவித்துள்ளார். முன்னாள் பெண்மணி ஹேமா பிரேமதாசவும் தனக்கு வழங்கப்பட்ட வீட்டை சில காலத்திற்கு முன்னர் திருப்பிஒப்படைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளிற்கு உத்தியோகபூர்வவாசல்ஸ்தலத்தை வழங்குவதை அரசாங்கம் விலக்கிக்கொள்ளுமா என்ற கேள்விக்குபதிலளித்துள்ள ஜனாதிபதி அரசியல் பிரமுகர்களிற்கான தேவையற்ற செலவீனங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். https://eelanadu.lk/முன்னாள்-ஜனாதிபதிகள்-சந்/
-
சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ; எஸ்.சிறிதரன்
சிறீதரனுக்கு இடையூறு; வருந்துகின்றாம் அரசு! நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட இடையூறு தொடர்பில் வருந்துகின்றோம். இந்தச் சம்பவம் அரசாங்க வழிகாட்டலுடன் இடம்பெற்ற ஒன்றதல்ல என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று சிறீதரன் எம்.பி. சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பிய பின்னர், அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரத்னாயக்க இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் விமான நிலையத்தில் இடம்பெற்றதால், விமான நிலையத் தலைவரிடம் அது தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயுமாறு பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். சிறீதரன் எம்.பிக்கு ஏற்பட்ட இடையூறு தொடர்பில் வருந்துகின்றேன். இது விடயத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சிறப்புரிமையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்றார். https://newuthayan.com/article/சிறீதரனுக்கு_இடையூறு;_வருந்துகின்றாம்_அரசு!
-
வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கம் அதிக கவனம்; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!
வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கம் அதிக கவனம்; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு! வடமாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளில் அரசாங்கம் அதிக கவனத்துடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதியின் அலுவலகத்தில் நேற்றுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதே, வடமாகாணத்தை மையப்படுத்திய தமது அரசின் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர உலக வங்கியின் பிரதானிகளிடம் தெளிவுபடுத்தியுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது: வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், தண்ணீர் வசதிகளை வழங்கவும், வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு கலாசார அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் விமான நிலையம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்கான புதிய திட்டங்கள் செயற்படுத்தப்படும். குறிப்பாக துறைமுக அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் இடம்பெறவுள்ளன. வடமாகாணத்தில் முதலீட்டு வலயங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்த முயற்சிகளுக்கும் பொதுப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்துக்கும் தேவையான உதவிகளை வழங்குமாறு உலக வங்கியிடம் கோரிக்கை விடுக்கிறோம். இலங்கையின் விவசாயத்துறையில் 28 வீதம் தொழிற்படை ஈடுபட்டிருந்தாலும் இலங்கைப் பொருளாதாரத்துக்கு விவசாயத்துறையில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6 வீதம் பங்களிப்புக் கிடைப்பது போதுமானதாக இல்லை. எனவே, விவசாய விரிவாக்கத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் திட்டமிட்டுள்ளோம் - என்றார். ஜனாதிபதியின் கருத்துக்களை கேட்டறிந்த உலக வங்கியின் பிரதிநிதிகள், அரசாங்கத்தின் திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்குத் தயார் என்று தெரிவித்தனர். அத்துடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம், தூய இலங்கைத் திட்டம், கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற திட்டங்களுக்கு தாம் நிதியுதவியை வழங்குவோம் என்றும் உலக வங்கியின் பிரதானிகள் வாக்குறுதி வழங்கியுள்ளனர். https://newuthayan.com/article/வடக்கின்_அபிவிருத்தியில்_அரசாங்கம்_அதிக_கவனம்;_ஜனாதிபதி_அநுர_தெரிவிப்பு!
-
அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!
அர்ச்சுனா எம்.பி.யை கைதுசெய்ய உத்தரவு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைதுசெய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் நேற்றையதினம் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச்செய்து தனது வாகனத்தைச் செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது, போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அர்ச்சுனாவின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர். ஆனால், ஆவணங்களை வழங்க மறுத்து, பொலிஸ் அதிகாரிகளுடன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, போக்குவரத்து சட்டங்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவைக் கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://newuthayan.com/article/அர்ச்சுனா_எம்.பி.யை_கைதுசெய்ய_உத்தரவு!
-
வடக்கு மாகாணத்தில் 2024இல் மட்டும் 34 படுகொலைகள்
வடக்கு மாகாணத்தில் 2024இல் மட்டும் 34 படுகொலைகள் வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் 34 படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கமைவாக அவர் இந்தத் தகவலை வழங்கியுள்ளார். இதன்படி, வடமாகாணத்தில் கடந்த வருடம் 34 படுகொலைகள் பதிவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த வருடம் வடக்கு மாகாணத்தில் 255 கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. 501 திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. 70 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்றும் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால மேலும் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் டிசெம்பர் 13ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகிய தரவுகளின் அடிப்படையிலேயே இந்தத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/வடக்கு_மாகாணத்தில்_2024இல்_மட்டும்_34_படுகொலைகள்
-
சாவகச்சேரியில் கிணற்றிலிருந்து குழந்தை சடலமாக மீட்பு!
கிணற்றில் வீசி சிசு கொலை; தாய் உட்பட மூவர் கைது! சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி தென்கிழக்கு மூர்த்தியாவத்தை கந்தசாமி கோவில் பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றிலிருந்து பச்சிளம் சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை குறித்த தோட்டத்தில் வேலை செய்வதற்காக வந்தவர்கள் தோட்டக் கிணற்றில் சிசுவின் சடலத்தை அவதானித்தனர். இது தொடர்பில் கிராம அலுவலர் மூலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு விடயத்தைக் கொண்டுசென்றனர். நீதிபதியின் கள ஆய்வுகளைத் தொடர்ந்து, சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டலின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சிசுவைப் பிரசவித்தவர் என சந்தேகிக்கப்படும் 43 வயதான பெண்ணையும், அந்தப் பெண்ணின் தாயாரையும், அவரின் சகோதரியையும் (சிசுவைப் பிரசவித்தவரின் சகோதரி) கைது செய்தனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்ககப்பட்டுள்ளன. https://newuthayan.com/article/கிணற்றில்_வீசி_சிசு_கொலை;_தாய்_உட்பட_மூவர்_கைது!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 100 போட்டி முடிவு திகதி ஞாயிறு 16 பெப் 2025 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1Rce_f8BLYqqz6IXE5VMYBoNb9zklFymMYdlDoQ1u-cg/edit?usp=sharing ஒருவர் கூகிள் ஷீற்றில் பதில்களை தட்டச்சும் செய்யும் வேளை இன்னொருவரும் தட்டச்சு செய்தால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, கூகிள் ஷீற்றை பிரதிசெய்து உங்கள் கணக்கில் பதில்களைத் தெரிவு செய்து பின்னர் யாழில் பதியுங்கள். குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? NZ ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) #A2 - ? (2 புள்ளிகள்) 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SA ?? ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) #B2 - ? (2 புள்ளிகள்) 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 அதிகபட்ச புள்ளிகள் 100 குழு நிலைப் போட்டிகளில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். அணிகள்: ஆப்கானிஸ்தான் (AFG) அவுஸ்திரேலியா (AUS) பங்களாதேஷ் (BAN) இங்கிலாந்து (ENG) இந்தியா (IND) நியூஸிலாந்து (NZ) பாகிஸ்தான் (PAK) தென்னாபிரிக்கா (SA) போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி ஞாயிறு 16 பெப் 2025 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி 2025 க்கான திரி திறக்கப்பட்டுள்ளது.😎
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 வணக்கம், சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 19 பெப் 2025 அன்று குழு நிலைகளில் ஆரம்பித்து 09 மார்ச் 2025 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. குழு நிலைப் போட்டிகள்: குழு நிலைப் போட்டிகளில் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்குத் தெரிவான 8 அணிகளும் குழு A, குழு B என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: இந்தியா (IND) பாகிஸ்தான் (PAK) நியூஸிலாந்து (NZ) பங்களாதேஷ் (BAN) குழு B: அவுஸ்திரேலியா (AUS) தென்னாபிரிக்கா (SA) இங்கிலாந்து (ENG) ஆப்கானிஸ்தான் (AFG) குழு நிலையில் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 19 பெப் முதல் 02 மார்ச் வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறவுள்ளன. நொக்கவுட் போட்டிகள் அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதித் போட்டிகளில் குழு A இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு B இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) முதலாவது அரையிறுதிப் போட்டி 04 மார்ச் அன்று துபாயிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 05 மார்ச் அன்று லாஹூரிலும் நடைபெறவுள்ளன. முக்கிய குறிப்புக்கள்: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் ** பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் எனவே அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்பவர்கள் சரியான முறையில் தெரிவைக் கொடுக்கவேண்டும்! இறுதிப் போட்டி: அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 09 மார்ச் அன்று லாஹூரில் மோதவுள்ளன. குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் மோதும் அணிகளின் வீரர்களின் விபரங்கள் குழு A: இந்தியா (IND) BATTERS: Rohit Sharma (c), Shubman Gill (vc), Shreyas Iyer, Yashasvi Jaiswal, Virat Kohli, Rishabh Pant, KL Rahul† ALLROUNDERS: Hardik Pandya, Washington Sundar, Ravindra Jadeja, Axar Patel BOWLERS: Arshdeep Singh, Jasprit Bumrah, Mohammed Shami, Kuldeep Yadav பாகிஸ்தான் (PAK) BATTERS: ALLROUNDERS: BOWLERS: நியூஸிலாந்து (NZ) BATTERS: Tom Latham†, Kane Williamson, Will Young, Devon Conway ALLROUNDERS: Mitchell Santner(c), Michael Bracewell, Mark Chapman, Daryl Mitchell, Nathan Smith, Glenn Phillips, Rachin Ravindra, BOWLERS: Lockie Ferguson, Matt Henry, Ben Sears, Will O’Rourke பங்களாதேஷ் (BAN) BATTERS: Najmul Hossain Shanto (c), Jaker Ali, Tanzid Hasan, Towhid Hridoy, Parvez Hossain Emon†, Mushfiqur Rahim † ALLROUNDERS: Mehidy Hasan Miraz, Mahmudullah, Soumya Sarkar, Nasum Ahmed, Rishad Hossain, Tanzim Hasan Sakib BOWLERS: Taskin Ahmed, Mustafizur Rahman, Nahid Rana குழு B: அவுஸ்திரேலியா (AUS) BATTERS: Travis Head, Josh Inglis, Alex Carey †, Marnus Labuschagne, Matthew Short, Steven Smith ALLROUNDERS: Mitchell Marsh, Glenn Maxwell, Marcus Stoinis, Aaron Hardie BOWLERS: Pat Cummins (c), Nathan Ellis, Josh Hazlewood, Mitchell Starc, Adam Zampa தென்னாபிரிக்கா (SA) BATTERS: Temba Bavuma (c), Heinrich Klaasen, David Miller, Ryan Rickelton, Tristan Stubbs, Tony de Zorzi, Rassie van der Dussen ALLROUNDERS: Aiden Markram, Marco Jansen, Wiaan Mulder BOWLERS: Keshav Maharaj, Anrich Nortje, Kagiso Rabada, Tabraiz Shamsi, Lungi Ngidi இங்கிலாந்து (ENG) BATTERS: Jos Buttler (c), Harry Brook, Ben Duckett, Phil Salt, Joe Root, Jamie Smith † ALLROUNDERS: Liam Livingstone, Jacob Bethell, Brydon Carse, Jamie Overton BOWLERS: Jofra Archer, Adil Rashid, Mark Wood, Gus Atkinson, Saqib Mahmood ஆப்கானிஸ்தான் (AFG) BATTERS: Hashmatullah Shahidi(c), Rahmanullah Gurbaz, Ibrahim Zadran, Ikram Alikhil †, Sediqullah Atal ALLROUNDERS: Rahmat Shah (vc), Rashid Khan, Azmatullah Omarzai, Gulbadin Naib, Mohammad Nabi BOWLERS: Fareed Ahmad, Fazalhaq Farooqi, Noor Ahmad, Fareed Ahmad, AM Ghazanfar * பாகிஸ்தான் அணி வீரர்களின் விபரங்கள் வெளியானதும் பகிரப்படும் கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
2009 இல் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், கலைஞர், சீமான் உட்பட, எதுவுமே செய்யமுடியாமல் கையாலாகாதவர்களாகத்தான் இருந்தார்கள். ஏனெனில் புலிகளை முழுவதுமாக அழித்தொழிக்க இந்திய மத்திய அரசு இணைத்தலைமை நாடுகளுடன் சேர்ந்து எடுத்த முடிவை மாற்ற ஒருவராலும் முடிந்திருக்கவில்லை. ஆனால் சீமானைப் போல ஒருவரும் தங்களை விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி என இலச்சினையையும், கொடியையும் உல்டா பண்ணி அரசியல் செய்யவில்லை.