Everything posted by கிருபன்
-
கற்பனையே செய்யமுடியாத விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாக இருக்கிறது
கற்பனையே செய்யமுடியாத விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாக இருக்கிறது December 19, 2024 ஷோபாசக்தி 18.12.2024 – ஆனந்த விகடன் இதழில் வெளியாகிய எனது நேர்காணல். நேர்கண்டவர்: நா.கதிர்வேலன் இன்றைக்கும் ஷோபாசக்தி, ஈழ இலக்கியத்தின் முக்கியமான முகம். அவரைத் தவிர்த்துவிட்டு நாம் இலக்கிய வகைமைகளை யோசிக்க முடியாது. புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகள், இன ஒடுக்குமுறைகள் என இதயத்தைப் பிசையும் மொழி இவருடையது. நவீனத் தமிழுக்கும் ஒளிரும் கலை நம்பிக்கை ஷோபா. இப்போது நடிகராக தமிழ் மட்டுமல்லாது, ஹாலிவுட்டிலும் களைகட்டுகிறார். எந்த அணியிலும் சேராத, கூச்சலிடாத அவரது போக்கு அரிதினும் அரிது. சிறந்த கலைஞனுக்கான புதுப்பித்துக்கொள்ளும் மொழியும் லாகவமும் மெல்லிய குரலில் வெளிப்பட… அவரிடம் நடந்தது இந்த உரையாடல். வெகு நாளுக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள்! தமிழ்நாட்டுக்கு வருகை தருவது எப்போதும் மகிழ்ச்சி தான். தமிழில் நான் நடித்த ‘சொர்க்கவாசல்’ திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. அதுவும் போக 27 வருஷங்கள் நான் எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பும் இப்போது வெளியாகிறது. அம்மாவை வெகு நாளுக்குப் பிறகு சந்திக்கப் போகும் சந்தோஷமும் கூடி வருகிறது. வேறென்ன? கொஞ்சம் நிறைவான பயணம்தான் இது. சர்வதேச அளவில் முகம் தெரிந்த நடிகராகிவிட்டீர்கள். சிவப்புக் கம்பள வரவேற்பை ஹாலிவுட்டில் பெற்றுவிட்டீர்கள். இதெல்லாம் எதிர்பார்த்ததுதானா? சினிமா பிடிக்குமென்பதால் சின்ன வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. `சுவரில்லாத சித்திரங்கள்’ வந்த போது எனக்கு 12 வயதிருக்கும். இந்தியாவுக்கு வந்து பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணமிருந்தது. நான் எம்.ஜி.ஆர் ரசிகன் என்பது யாவரும் அறிந்ததுதான். கலைஞர் திரை எழுத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தேன். கல்யாண வீடுகளிலும் கோயில் திருவிழாவிலும் ஒலிபெருக்கிகளில் ஒலித்துக்கொண்டே இருந்த ‘மனோகரா’, ‘பராசக்தி’ வசனங்களை மறப்பதற்கில்லை. பத்து வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி விட்டேன். நாட்டில் ஏற்பட்ட சூழலில் புலம் பெயர்ந்துவிட்டேன். அப்புறம் எல்லாவற்றுக்கும் பெரிய இடைவெளி. புதிய நாடு, புதிய கலாசாரம். திடீரென 47-வது வயதில் ‘தீபன்’ படத்தில் ஒரு முதன்மைப் பாத்திரம் கிடைத்தது. அதிலிருந்து தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் போய் திரைப்படங்களில், நாடகங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சினிமாவைவிட நாடகத்தின் டிக்கெட் விலை அதிகம். நாங்கள் 30 நாள்கள் தொடர்ந்து நாடகம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறோம். பாண்டிச்சேரியின் குமரன் வளவன் அங்கே வந்து நல்ல நாடகங்களைப் போடுகிறார். புரிசை சம்பந்தன்கூட இங்கே வந்து கூத்து கட்டுகிறார். அதை பிரான்ஸ் மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள். எப்படிப் புலம்பெயர் வாழ்வை ஏற்றுக் கொண்டீர்கள்? 31 வருஷங்களாக பிரான்ஸில் இருக்கிறேன். பிரான்ஸுக்குப் போக வேண்டும் என்பது இலக்கு அல்ல. ஏதாவது வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதொன்றே என் முன் இருந்த ஒரே தீர்வு. இலங்கையில் கடுமையான யுத்தம் நடந்த காலம், அங்கேயிருந்து வெளியாக வேண்டும். இப்போது பிரான்ஸிலும் இனவாதம் கூடிவிட்டது. இவ்வளவு படித்தவர்கள் இருந்தும் அமெரிக்காவில் ட்ரம்ப்தான் மீண்டும் வந்திருக்கிறார். ஐரோப்பா முழுக்க வலதுசாரிகள் வலுக்கொண்டு இருக்கிறார்கள். பிரான்ஸிலும் அதிதீவிர வலதுசாரிகள்தான் இப்போது பெரும் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். இடதுசாரிகள் அதைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பிரான்ஸின் பெரும்பான்மையான மக்கள் வலதுசாரிகளைத் தான் ஆதரிக்கிறார்கள். `வெளிநாட்டவர்களை விரட்டுவோம்’ என்றுதான் தேர்தலில் நிற்கிறார்கள். ட்ரம்பும் அமெரிக்காவில் வெளிநாட்டவரை விரட்டுவோம், மதில் கட்டு, சுவர் எழுப்பு என ஆரம்பித்து விட்டார். இந்தச் சூழலில்தான் நாங்கள் வாழ்கிறோம். நாங்கள் படித்துவிட்டு தொழிலுக்குப் போனவர்கள் கிடையாது. இந்த நாடுகள் விரும்பிக் கூப்பிட்டுப் போனவர்களும் கிடையாது. நாங்களாக போய் மூடிய கதவுகளை முட்டித் திறந்து அகதிகளாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். வேறு வழியில்லை… அடுத்த தலைமுறையும் அவர்களின் இனவாதத்தைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் எங்கள் அளவுக்கு அவர்கள் கஷ்டப்பட வாய்ப்பில்லை. அடுத்த தலைமுறை பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு அவர்களே தங்களை பிரஞ்சுக்காரர்கள் மாதிரியே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அப்படி பிரெஞ்சுக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டுமே! அவர்களுக்கு எல்லோரும் கறுப்பர்கள்தானே! இடதுசாரிகளும் சோஷலிஸ்ட்களும் செல்வாக்காக இருந்த காலம் ஒன்றிருந்தது. சோவியத்தின் உடைவுக்குப் பிறகு இந்தக் கட்சிகள் செல்வாக்கு இழந்துவிட்டன. இங்கே தொடர்ந்து பிரச்னை இல்லாமல் நாள்களைக் கடத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஊருக்குப் போனதை எப்படி உணர்ந்தீர்கள்? யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகள் மக்களால் கைவிடப்பட்டு இருக்கின்றன. நான் பிறந்த அல்லைப்பிட்டியில் 10 சதவிகித மக்களே இருக்கிறார்கள். நாய்கள்தான் அதிகம் திரிகின்றன. ஊரைப் பார்த்ததும் பெரிய வெறுமை வந்து தாக்கியது. அந்த ஊரில் யுத்தத்திற்கு முன்னால் இன்பமான நாள்களைப் பார்த்த கடைசித் தலைமுறை நான்தான். இரவுக் காட்சியை அடுத்த ஊரில் பார்த்துவிட்டு நடந்து வந்த பின்னிரவு நேரங்கள் அதிகம். விடிய விடிய நடந்த திருவிழாவோடு பார்த்த யாழ்ப்பாணம்தான் மனதில் நிறைந்திருக்கிறது. யுத்தத்தின் வெறுமை மக்கள் முகத்திலும் ஆன்மாவிலும் உறைந்திருக்கிறது. எல்லா நம்பிக்கைகளும் விழுமியங்களும் உடைந்து சிதறிய மக்களைப் பார்த்தேன். சர்வ நிச்சயமாக இது 32 வருஷத்திற்கு முன்னால் நான் பார்த்த ஊரில்லை.” புது அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர்கள் பற்றிய உங்கள் நம்பிக்கை என்ன? இலங்கை சுதந்திரமடைந்த பிறகு ஆட்சி செய்தவர்கள் பிரபுத்துவப் பின்புலத்தில் வந்தவர்கள். அவர்களது உறவினர்களாலும் குடும்பத்தாலும் மட்டுமே இலங்கை ஆளப்பட்டு வந்தது. முற்றுமுழுதான ஊழல் ஆட்சி, முழுவதுமாக பௌத்த பிக்குகளின் கட்டளைக்கு அடிபணிந்த ஆட்சி என்றுதான் இரண்டு கட்சிகளும் இருந்தன. இரண்டு கட்சிகளுமே மாறி மாறி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார்கள். அவர்கள் ஜே.வி.பி எழுச்சியின் போது சிங்கள மக்களையும் கொன்றார்கள். இதுதான் இதுவரையிலான இலங்கை வரலாறு. அநுர அவ்வாறான பின்புலத்தைக் கொண்டவர் அல்ல. எளிய விவசாயிகளும் தொழிலாளர்களும் மீனவத் தோழர்களும் சேர்ந்து எழுப்பிய கட்சி அவருடையது. 50 வருஷத்திற்கு மேலாக இருக்கிற கட்சி. இப்போது ஆட்சிக்கு வந்திருப்பது நல்லது என்றே கருதுகிறேன். இலங்கையில் சிங்களர்கள் தவிர்த்து இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், முஸ்லிம்கள் என சிறுபான்மையினரும் வாழ்கிறார்கள். இந்த இன அடையாளங்களை அழித்து ஒழித்து எல்லா இனங்களையும் ஒரே தேசிய இனத்திற்குள் கரைக்க ஒரு முயற்சி நடக்குமோ என்ற சந்தேகமும் இந்த அரசின் மீது இருக்கிறது. எத்தனையோ பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு சிறுபான்மையினர் நசுக்கப்பட்டதுதான் வரலாறு. இனி சிறுபான்மையினரின் பிரச்னைகள், அரசியல் உரிமைகள், சமத்துவம், வேலைவாய்ப்பு, கல்வி இவற்றுக்கான நல்ல அணுகுமுறையைச் செயல்படுத்த வேண்டியது இவர்களின் கடமையாக இருக்கிறது. இவர்களை நம்பித்தான் தமிழ் மக்களும் எப்போதும் நடக்காத அளவுக்கு யாழ்ப்பாணத்திலேயே ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக மற்றவர்களை நம்பி ஒன்றும் நடக்கவில்லை. பொருளாதாரச் சரிவு தாண்டி ஒரு நல்ல ஆட்சி தர மாட்டார்களா என எல்லோருமே ஏங்குகிறார்கள். இதுவரை இவர்கள் இனவாதம் பேசவில்லை. எதையும் செய்யும் கட்டுக்கடங்காத அதிகாரம் இருக்கிறது. செய்வார்களா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். எல்லாமே நம்பிக்கைதான்! புலிகள் இல்லாமல்போவார்கள் என்பதைக் கற்பனை செய்தாவது பார்த்தீர்களா? கற்பனை செய்து பார்க்க முடியாத பல விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாகவே இருக்கிறது. இந்திரா காந்தி இலங்கைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் எனவும், இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கூப்பிட்டு ஆயுதப் பயிற்சியும் பணமும் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்க்கவில்லை. இந்திய ராணுவம் இலங்கை வருமென்றும், அதே மாதிரி இந்திய ராணுவம் திரும்பப் போய்விடும் என்றும் நம்பவே இல்லை. பிரேமதாசாவிற்கும் புலிகளுக்கும் ஒப்பந்தம் வரும் என்று நம்பவே இல்லை. விடுதலைப்புலிகள் முற்றும் முழுதாக அழிந்து போவார்கள் என யாரும், யாரும் நம்பவே இல்லை. ராஜபக்ஷேக்கள் நாட்டை விட்டு ஓடுவார்கள் என நம்பவே இல்லை. கோத்தபய இருந்த வீட்டைச் சூறையாடுவார்கள் என நம்பவே இல்லை. அநுர இப்படி பெரும்பான்மையில் வருவார் என நம்பவே இல்லை. நம்ப முடியாத பல விஷயங்கள் 40 வருடத்தில் நடந்திருக்கின்றன. விடுதலைப்புலிகள் எனும் அமைப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அரசியல் முகத்தை மாற்றியிருக்க வேண்டும். அடுத்த தலைமுறையாவது நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும். நான் ஈழத்திலிருந்து வெளிவந்து 32 வருஷங்களாகிவிட்டன. எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டியது இன்றைய தலைமுறை இளைஞர்கள்தான். இத்தனை வருட யுத்தத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம், இழப்பு, வன்மம், பிரச்னைகள் இருக்கின்றன. இதிலிருந்து மீள வேண்டும். சினிமா, நாடகம், பயணங்கள் என உருமாறி இருக்கிறீர்கள். எழுத்து குறைந்துவிட்டதா? நான் மேற்கொள்ளும் எல்லாக் கலைகளுக்கும் நடுவில் ஒரு தொடர்பு இருக்கிறது. எனக்குக் கலையே அடிப்படை. சினிமாவில் ஒரு பாத்திரத்தின் அமைப்பைத் தரும்போது ஓர் எழுத்தாளராக என்னால் அதை மெருகேற்ற முடியும். நாடகங்களிலும் அதற்கான நியாயத்தைச் செய்கிறேன். பெரிய வேறுபாடு இல்லை. அடிப்படையில் எழுத்தாளனாக இருப்பதுதான் எனக்கு முக்கியம். இத்தனை வருட வாழ்வில் பெற்ற சாரம்தான் என்ன? யுத்தத்திலும் நேரடியாகப் பங்கேற்றிருக்கிறேன். யுத்தம் எதற்கும் தீர்வல்ல. குரேஷிய பிரதமர், ‘பத்து நாள் யுத்தம் புரிவதைவிட பத்து வருஷம் பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது’ என்றார். அதுதான் சத்தியமான உண்மை. இன்றைக்கு உலகம் முழுக்க யுத்தங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவை ஒருபோதும் மக்களுக்கு நியாயத்தைத் தேடித் தராது என நிச்சயமாக நம்புகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து தொடங்கப்பட்ட ஆயுதப்போராக இருந்தாலும் ஆயுதம் என்பது அழிவைத் தரக்கூடியதே. இதுவே கற்ற பாடம். காந்தியார் சொன்னது போல ‘கொள்கையில் எதிர்த்து நிற்போம்; ஆனால் யாரையும் வெறுக்க வேண்டாம்’ என்பதுதான் இறுதியில் எனக்கும் தோன்றுகிறது. https://www.shobasakthi.com/shobasakthi/2024/12/19/கற்பனையே-செய்யமுடியாத-வி/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR2WXU10w--1b1aIiUMzeg__BcxV7r2aY8u6nQcPJ__N4YtWZS1T15wvZsY_aem_wWON2rYSeJEg68HhNKwykg
-
விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?
நான் திங்கள் அகன்ற திரையில் பார்க்கவுள்ளேன்😀 நல்ல படங்களை திரையில் பார்த்தால்தான் மேலும் சிறந்த படங்களை எடுக்க வசூல் கிட்டும். - விடுதலை 2 : விமர்சனம்! Dec 21, 2024 10:26AM IST பிளாஷ்பேக் உத்தி பலன் தந்ததா? நடிகர் சூரியைக் கதை நாயகனாக அறிமுகப்படுத்திய படம், வெற்றிமாறனின் ‘விடுதலை’. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரைத் தேடுவதற்காகக் காவல் துறையின் சிறப்பு முகாம் இயங்கி வந்ததையும், அதில் பணியாற்றியவர்களில் ஒருவர் அந்த தலைவரைக் கைது செய்ய முனைந்ததையும் சொன்னது. அப்படம் பேசிய அரசியலை விடப் பேசாததே அதிகம். அதுவே அப்படத்தின் சிறப்பாகவும் அமைந்தது. ‘விடுதலை’ படத்தின் பெருவெற்றியே அதன் இரண்டாம் பாகம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை விதைத்தது. இரண்டாம் பாகத்தில் அந்த தலைவரின் வாழ்வனுபவங்களே பிரதானமாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்தன. இப்போது ‘விடுதலை 2’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இப்படம் அமைந்திருக்கிறதா? முதல் பாகம் தந்த திரையனுபவத்தை விட ஒருபடி மேலானதை ரசிகர்கள் பெறுகிறார்களா? தகவல்களின் அடிப்படையில்..! தமிழர் படையைச் சேர்ந்த பெருமாளைக் (விஜய் சேதுபதி) கைது செய்த விவரம், காவல் துறை சிறப்பு முகாமைச் சேர்ந்த ஒருவரால் வெளியே கசிகிறது. அதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகை அலுவலகங்களுக்குத் தகவல் சொல்லப்படுகிறது. பெருமாளைக் கைது செய்த தகவலை மூன்று, நான்கு நாட்கள் கழித்து வெளியே சொல்லலாம் என்றெண்ணிய தலைமைச் செயலாளர் சுப்பிரமணியத்திற்கு (ராஜிவ் மேனன்) அத்தகவல் பேரிடியைத் தருகிறது. அதேநேரத்தில், சிறப்பு முகாமில் பழங்குடியின கிராமத்துப் பெண்கள் என்னவானார்கள் என்பதை ஒரு பத்திரிகை நிருபர் (பாவெல் நவகீதன்) படம்பிடிக்கிறார். தான் வேலை பார்க்கும் தமிழ் செய்தி நிறுவனத்தின் செய்தியாசிரியருக்குத் தகவல் சொல்கிறார். அந்த தகவல் இதர பத்திரிகை அதிபர்கள் வழியாகச் சுப்பிரமணியத்தை வந்தடைகிறது. இன்னொருபுறம், பெருமாளை போலீசார் பாதுகாப்பாக வன எல்லைப்பகுதி காவல் துறை அலுவலகத்திற்குக் காட்டுப்பாதை வழியாகச் செல்கின்றனர். செல்லும் வழியில், ‘வன்முறையே வேண்டாம்’ என்று அகிம்சாவாதியாக இருந்த தான் எவ்வாறு இப்படியொரு பாதைக்குத் திரும்பினேன் என்பதைத் தனது வாழ்பனுபவங்களில் இருந்து சொல்லி வருகிறார் பெருமாள். முகாம் அதிகாரி ராகவேந்திரருக்கு (சேத்தன்) அது எரிச்சலூட்டினாலும், உடன் வரும் கான்ஸ்டபிள்கள் அதனைக் கேட்டவாறே வருகின்றனர். அப்போது, பெருமாள் குறித்து தாங்கள் அறிந்தவற்றுக்கும் அவரது வாழ்வனுபவங்களுக்குமான வித்தியாசங்களை உணர்கின்றனர். பெருமாளின் பேச்சில் அவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாக கருப்பன் (கென் கருணாஸ்), மகாலட்சுமி (மஞ்சு வாரியார்), கே.கே. (கிஷோர்) உள்ளிட்ட பலரைக் குறிப்பிடுகிறார். அதற்கிடையே, வேறு வழியில்லாமல் பெருமாளைக் கைது செய்த தகவல் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்படுகிறது. அது அதிகாரப்பூர்வமாக அரசால் வெளியிடப்படுகிறது. இந்தச் சூழலில், பெருமாளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காட்டுப்பாதையில் வரும் போலீசாரை சுற்றி வளைக்கின்றனர். அதன்பின் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது ‘விடுதலை 2’வின் மீதி. தகவல்களுக்கும் உண்மைக்குமான வித்தியாசம் என்ன? இந்தக் கேள்வியே இப்படம் முழுக்க வியாபித்துக் கிடக்கிறது. ஆனால், ’அதனை விலாவாரியாகச் சொல்கிறேன் பேர்வழி’ என்று தகவல்களைத் திணித்தடைத்து, இறுதியாக அவற்றில் பலவற்றை நீக்கி ஒரு சுவாரஸ்யமான திரை வடிவத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதுவே இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. அபார உழைப்பு! ஏற்கனவே உருவாக்கிய ஒரு திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று முடிவு செய்ததைத் தவறென்று சொல்ல முடியாது. இப்படத்தின் திருப்புமுனைக் காட்சிகள் பலவற்றை ‘விடுதலை’ முதல் பாகத்தின் இறுதியிலேயே காட்டியிருந்தார் வெற்றிமாறன். அதனுடன் பொருந்துகிற வகையில், பெருமாள் எனும் விஜய் சேதுபதி நடித்த பாத்திரத்தின் முன்கதையை இப்படத்தில் சொல்லியிருக்கிறார். அதனால், படம் முழுக்கவே பிளாஷ்பேக்குகள் வந்து போகின்றன. அதற்கு நடுவே, திரைக்கதை நிகழும் காலம் நமக்குச் சொல்லப்படுகிறது. பெருமாள் எனும் பாத்திரம் எந்த இயக்கத்தைச் சேர்ந்தது என்பதைக் காட்டும் அடையாளங்கள் திரையில் மறைக்கப்பட்டிருக்கின்றன. அது ஏன் என்ற கேள்வி நம்முள் உடனடியாக எழுகிறது. ஏனென்றால், இப்படத்தின் திரைக்கதையே அதைச் சார்ந்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்று திரைக்கதையில் ஆங்காங்கே சில பிசிறுகள் எட்டிப் பார்க்கின்றன. மிக முக்கியமாக, திரைக்கதையின் நடுவே ஒரு பாடல் வருகிறது. ‘மாண்டேஜ்’ ஆக வரும் அந்தப் பாடல் கால மாற்றம் பற்றிய சில கேள்விகளை எழுப்புகிறது. இறந்து போவதாகக் காட்டப்படுகிற சில பாத்திரங்கள் திரையில் வந்து போவது அதற்குக் காரணமாக இருக்கிறது. அதுவும் ஒரு பிளாஷ்பேக் தான் என்பது சட்டென நமக்குப் பிடிபடுவதில்லை. இது போன்ற குழப்பத்தைச் சில காட்சிகளும் தருகின்றன. அவற்றைச் சரிப்படுத்தியிருக்கலாம். மற்றபடி, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில சம்பவங்களைத் தன் புனைவுக்குள் அடக்கிச் சுவாரஸ்யமான அரசியல் திரைப்படமொன்றைத் தந்திருக்கிறார் வெற்றிமாறன் என்பதில் ஐயமில்லை. இந்த முயற்சியில் அவருக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி, படத்தொகுப்பாளர் ராமர், சண்டைப்பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். சில இடங்களில் விஎஃப்எக்ஸ் குறிப்பிட்ட தரத்தில் அமையவில்லை. அதற்கு படத்தின் இறுதி ஷாட் ஒரு உதாரணம். இசையைப் பொறுத்தவரை, நம்மைக் கொஞ்சம் ஆச்சர்யபடுத்தாதவாறு ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் இளையராஜா. திரையில் மௌனம் வருமிடங்கள் அவரது நுண்ணிப்பான அவதானிப்புக்குச் சான்று. ‘தினம் தினமும்’ உள்ளிட்ட பாடல்கள் சில நொடிகளே வந்து போயிருப்பது ரசிகர்களின் உற்சாகத்தைக் குறைக்கின்றன. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், கிஷோர், ரம்யா, சூரி, சேத்தன், ராஜிவ் மேனன், இளவரசு, சரவண சுப்பையா, கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல், பாவெல் நவகீதன், வின்செண்ட் அசோகன், போஸ் வெங்கட் என்று பலர் வந்து போயிருக்கின்றனர். ஆனாலும் விஜய் சேதுபதியே திரையில் நிறைந்து நிற்கிறார். அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை, இது கொண்டாட்டத்திற்குரிய விஷயம். முதல் பாகத்தில் வந்த பவானிஸ்ரீ உள்ளிட்ட சிலருக்கு இப்படத்தில் வேலையே இல்லை. அவர் ஒரு ஷாட்டில் இடம்பெற்றிருக்கிறார். ’நான் ஏன் தலை முடியை வெட்டியிருக்கேன்னு கேட்கவே இல்லையே’ என்ற மஞ்சு வாரியாரின் கேள்விக்கு, ‘உங்க முடி, நீங்க வெட்டியிருக்கீங்க’ என்று விஜய் சேதுபதி அளிக்கும் பதில் ரசிக்க வைக்கிறது. சமகால சமூகம், அரசியல் சார்ந்து அமைந்திருக்கிற சில வசனங்கள் சட்டென்று ரசிகர்களை ஈர்க்கும்விதமாக இருக்கின்றன. அதேநேரத்தில், பொதுவுடைமை இயக்க தத்துவங்களை விளக்குகிறேன் பேர்வழி என்று பேசப்படுகிற வசனங்கள் காட்சியனுபவத்தின் ஆன்மாவைச் சிதைக்கின்றன. இந்த இடத்தில் ‘மெட்ராஸ்’ படத்தின் இறுதி ஷாட் நினைவுக்கு வருகிறது. அது போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருந்தால், இப்படத்தின் நீளத்தைக் கணிசமாகச் சில நிமிடங்கள் குறைத்திருக்கலாம். முதல் அரை மணி நேரக் காட்சிகளில் ‘டப்பிங்’ நம்மை படுத்தி எடுக்கிறது. அபாரமான உழைப்பைக் கொட்டி உருவாக்கப்பட்ட இப்படத்தில் அது போன்ற சங்கடங்களை ரசிகர்கள் எதிர்கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம். ’விடுதலை 2’ படத்தின் உள்ளடக்கம் நிச்சயம் பல விவாதங்களை உருவாக்கும். இதில் நிறைந்திருக்கும் குறைகளும் பிரதானமாக அதில் இடம்பிடிக்கும். அவற்றைத் தாண்டி, ‘கேம் கல்ச்சர்’ரில் சிக்கிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரில் சிலருக்கு ‘இப்படியும் ஒரு தலைமுறை இங்கு வாழ்ந்தது’ என்பதைச் சொன்ன வகையில் ‘விடுதலை 2’ முக்கியத்துவம் பெறுகிறது. ‘சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது உட்பட இன்றைய தலைமுறை அனுபவிக்கும் எத்தனையோ இளைப்பாறல்களுக்குப் பின்னால் பலரது போராட்டங்கள் இருப்பது தெரியுமா’ என்கிற தொனியில், படத்தின் ஓரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அந்தக் கேள்வியின் பின்னே இருக்கிற அரசியல் மிகப்பெரியது. என்னைக் கேட்டால், அது போன்ற கேள்விகள் தான் இப்படத்தின் உயிர்நாடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனை எங்கோ தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். பிளாஷ்பேக் உத்தியைப் பயன்படுத்திய அளவுக்கு, கதை நிகழும் காலத்திற்கும் இதர பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தந்தால் அது நிகழ்ந்திருக்காதோ என்று தோன்றுகிறது. நிறை, குறைகளைத் தாண்டி, திரையில் ரசிகர்கள் காணாத ஒரு அனுபவத்தை ‘விடுதலை 2’ தருகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சிறப்பானதொரு கமர்ஷியல் படமாக உள்ளது. ஆனால், அது ‘விடுதலை முதல் பாகத்திற்கு’ ஈடாக அமையவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறியதாகவும் அது இல்லை. ரசிகர்கள் ஒவ்வொருவரது பார்வைக்கேற்ப, இக்கருத்தில் மாறுபாடு நிச்சயம் இருக்கும். அதனைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும். அதேநேரத்தில் தமிழ் தவிர்த்து பிற மொழிகளில் வெற்றியைச் சுவைப்பதற்கான விஷயங்களும் இப்படத்தில் நிறையவே இருக்கின்றன. அது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்..! https://minnambalam.com/cinema/vetri-maran-vijay-sethupathi-viduthalai-2-movie-review/
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
கனேடியத் தமிழர் கூட்டின் பிரதிநிதிகளை சந்தித்த சிறீதரன் December 21, 2024 0 கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடியத் தமிழர் கூட்டின் (Canadian Tamil Collective) பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். டொரொன்டோ வில் (Toronto) நேற்று வெள்ளிக்கிழகை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ஈழத்தமிழர் விவகாரங்கள் சார்ந்து இருதரப்புக்குமிடையில் ஆக்கபூர்வமான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=304156
-
புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... - சிவாஜிலிங்கம்
புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... December 21, 2024 01:24 pm புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம் பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 13ஆம் திருத்த சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா செயற்பட்டு வருகின்ற போதிலும் எமது புதிய அரசாங்கம் அதில் பெருமளவு கரிசனை காட்டவில்லை என்றும் எம்.கே. சிவலிங்கம் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜனாதிபதி இந்தியா சென்று இந்திய பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அனைத்து தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஸ்டி கோரிக்கையாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை அரசியல் அமைப்பில் இருந்தும் கூட அவை அமுல்படுத்தப்படவில்லை. தற்போது இந்தியாவை சந்தித்த ஜனாதிபதி கூட அரசியல் உரிமை தொடரில் எந்த விதமான திட்டவட்டமான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அரசியலமைப்பு என்பது பழைய மொந்தையிலேயே புதிய கள்ளு போன்று இருக்குமே தவிர எவ்வித தீர்வும் கொண்டதாக இருக்கப்போவதில்லை. முதல் தடவையாக இனவாதத்தைக் கொண்டிருக்க கூடிய ஒரு அரசு பதவி ஏற்றி இருக்கிறது. இவ்வாறு மிகப்பெரும் வெற்றி பெற்றும் கூட அவர்களது சிந்தனையில் பாரிய மாற்றம் இல்லை. ஒற்றை ஆட்சியை வைத்துக்கொண்டு தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல செயற்ப்பட்டு வருகிறார்கள். அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமையை முன் வைப்பதற்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன் வைக்க வேண்டும் பல உயிர் தியாகங்களை செய்த பின்பும் நாம் பிரிந்து செயல்பட முடியாது. எனவே, அனைவரையும் ஒன்று படுமாறு அழைப்பு விடுவதாகவும் இதன் போது குறிப்பிட்டார். இதற்கு புலம்பெயர்ந்தவர்களும் ஈழத்தில் இருக்கக்கூடிய அத்தனை தமிழ்த் தேசிய அணியினரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 2013 ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா தமிழ்நாடு கோரிக்கை முன்வைத்து அதனை உறுதியுடன் செயல்படுத்தி இருந்தார். அதே கோரிக்கையோடு தான் தற்போது விஜய்யினுடைய கட்சியும் முன்னோக்கி செல்கிறது. அதேபோல தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்களும் ஒரே கோரிக்கையுடன் பயணிப்போமாக இருந்தால் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இலங்கை தமிழரசுக்கட்சி 75 ஆண்டுகளை தாண்டியும் தற்போதும் தலைமைத்துவம் இல்லாத நிலையில் இலங்கை நீதிமன்றத்தை நாடுகின்ற நிலைமையே காணப்படுகிறது. எனவே, அவர்கள் சமஸ்டியை கைவிட்டு ஒரு கூட்டு சமஸ்டி ஊடாக அனைவரையும் உள்வாங்கி முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197636
-
ஹட்டனில் கோர விபத்து: மூவர் பலி; 27 பேர் படுகாயம்
ஹட்டனில் கோர விபத்து: மூவர் பலி; 27 பேர் படுகாயம் Freelancer / 2024 டிசெம்பர் 21 , மு.ப. 11:39 ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், சற்றுமுன்னர், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கண்டி வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.AN https://www.tamilmirror.lk/மலையகம்/ஹட்டனில்-கோர-விபத்து-மூவர்-பலி-27-பேர்-படுகாயம்/76-349036
-
இந்திய மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமானம் தேவையில்லை!
இந்திய மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமானம் தேவையில்லை! இந்தியாவிலிருந்து வந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என வடமாகாண கடலோடிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளரும், இணைப்பாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வடமராட்சியில் தனது கற்றொழில் வாடியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் இந்தியாவிற்கு சென்ற எமது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இந்தியாவில் பிரதமர் மோடியை சந்தித்த போது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விடயம் மனிதாபிமானத்துடன் அணுகப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் எமது மீனவர்கள் எல்லை தாண்டி இயந்திர கோளாறுகாரணமாக சென்றதற்கே மியன்மாரில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபா 5. இலட்சம் குற்றப்பணமும், கடூளிய சிறையும் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கையில் இறைமையுள்ள எமது கடற்பரப்பிற்குள் மீன்புடியில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்களுக்கும் இவ்வாறான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்றும், எல்லை தாண்டி வந்து இலக்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தாக கடற்படை இந்த நாட்டிற்கு தேவைதானா எனவும் கேள்வியெழுப்பினார்.[ஒ] https://newuthayan.com/article/இந்திய_மீனவர்கள்_பிரச்சினையில்_மனிதாபிமானம்_தேவையில்லை!
-
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்தொழிலாளர்கள் யாழ் அழைத்து வரப்பட்டனர்
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்தொழிலாளர்கள் யாழ் அழைத்து வரப்பட்டனர் adminDecember 21, 2024 தமிழக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனலைதீவை சேர்ந்த இரண்டு கடற்தொழிலாளர்கள் உள்ளிட்ட மூன்று கடற்தொழிலாளர்களும் , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகொன்றில் சென்ற இரு கடற்தொழிலாளர்களும் , கடற்சீற்றம் காரணமாக தமிழக கடற்பரப்பினுள் தத்தளித்த நிலையில் , தமிழக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்ட்டிருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நோக்குடன் திருச்சி சிறப்பு முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அவர்கள் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு , உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். அவர்களுடன் மட்டக்களப்பை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவரையும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் அழைத்து வந்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டார். அதேவேளை அனலைதீவு கடற்தொழிலாளர்கள் இருவரையும் , அவர்களின் படகு மற்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரத்துடன் கடல் வழியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கடந்த 03ஆம் திகதி ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/209466/
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
முள்ளிவாய்க்காலில் ஒதுங்கிய படகிலிருந்த மியன்மாா் நாட்டினருக்கு விளக்கமறியல் adminDecember 21, 2024 written by admin December 21, 2024 முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை (19) 103 கரையொதுங்கிய படகிலிருந்து மீட்கப்பட்ட . மியன்மாா் அகதிகளும் அவர்களை ஏற்றிச் சென்ற படகில் இருந்த பணியாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் குறித்த மியன்மார் அகதிகளை படகுடன் மீட்ட கடற்படையினர், திருகோணமலை துறைமுகத்திற்கு நேற்று (20) கொண்டு சென்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் நீதிமன்றம் இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. குறித்த படகில் இருந்து 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் , 12 பணியாளர்கள்உட்பட 103 பயணிகள் காணப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/209491/
-
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மூன்று மடங்களால் அதிகரிக்கும்
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மூன்று மடங்களால் அதிகரிக்கும் December 21, 2024 2:35 pm பொருளாதார நெருக்கடி காரணமாக டொலரின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் விலைகள் 300 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரூபாயின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இறுதியாக 2020ஆம் ஆண்டு இலங்கைக்கு புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. அத்தருணத்தில் டொலரின் பெறுமதி குறைவாக இருந்தது. தற்போதைய பெறுமதியின் பிரகாரம் இவ்வாறு 300 வீத அதிகரிப்பு இடம்பெற வாய்ப்பிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர். ஜப்பானில் டொயோட்டா நிறுவனம் தயாரிக்கும் பஸ் ஒன்றை கடந்த 2020ஆம் ஆண்டு 70 இலட்சத்துக்கு விற்பனை செய்ய முடிந்திருந்த போதிலும் தற்போது அதனை 2 கோடிக்கே விற்பனை செய்ய முடியும் எனவும் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து, சுற்றுலா போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மாத்திரமே அமைச்சரவை அங்கீகாரத்தை தற்போது வழங்கியுள்ளது. தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாத நடுப்பகுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுமதி கிடைத்தவுடன் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர். https://oruvan.com/the-price-of-imported-vehicles-will-increase-by-three-times/
-
சமஷ்டியை கோரி கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்ட முயற்சி – சீலரத்தன தேரர்
சமஷ்டியை கோரி கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்ட முயற்சி – சீலரத்தன தேரர் December 21, 2024 10:21 am “ சமஷ்டி தீர்வைக்கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார். அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என தெரியாது…” என்று ஜனசத்த பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடக சந்திப்பொன்றின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போது இனவாதத்தை பரப்பிவருகின்றார். அவர் கொழும்பில்தான் வாழ்கின்றார். கொழும்பு மக்கள் அவருக்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் வடக்குக்கு சென்று மக்கள் ஏன் தவறாக வழிநடத்த வேண்டும்? அதுமட்;டுமல்ல இந்திய பிரதமருக்கு கடிதமொன்றையும் அவர் அனுப்பியுள்ளார். சமஷ்டி முறைமைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அக்கடிதம் ஊடாக கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். கஜேந்திரகுமாரின் தேவைக்கேற்ப 13 ஐ அமுல்படுத்தவோ, அதிகாரத்தை பகிரவோ ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக்கூடாது. கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்டினால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு அவருக்கு எங்கு செல்ல வேண்டிவருமோ தெரியவில்லை. இனவாதத்துக்கு இடமளிக்ககூடாது. இனவாதத்தை தூண்டினால் நாடு முன்னேறாது. டயஸ்போராக்களின் கோரிக்கைக்கேற்பவே கஜேந்திரகுமார் சமஷ்டி கோருகின்றார். டயஸ்போராக்களிடம் பணம் வாங்கினால் பரவாயில்லை, ஆனால் இனவாதத்தை தூண்ட இடமளிக்கமாட்டோம். வடக்கில் உள்ள விகாரைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.” என்றார் சீலரத்தன தேரர். https://oruvan.com/gajendra-kumar-is-trying-to-incite-communalism-by-demanding-unity-seelarathana-thero/
-
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய – இலங்கை இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் – யாருக்கு இதனால் சாதகம்?
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய – இலங்கை இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் – யாருக்கு இதனால் சாதகம்? December 21, 2024 12:56 pm இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் கடல் மார்கமான பாலமொன்றை அமைக்கும் திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரவலாக பேசப்படுகிறது. 2015ஆம் ஆண்டுமுதல் இந்தப் பாலம் குறித்த பேச்சுகள் இருநாட்டிலும் உள்ள போதிலும் இதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியுற்றே வருகின்றன. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுடன் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் இந்தப் பாலத்தை அமைப்பதற்கான இணக்கப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு எதிராக கருத்துகள் இலங்கையில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. என்றாலும், தொடர்ச்சியான பேச்சுகளில் ரணில் அரசு ஈடுபட்ட போதிலும் ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது இத்திட்டத்துக்கு என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியா – இலங்கைக்கு இடையிலான பாலம் பற்றிய பேச்சுகள் 2015ஆம் ஆண்டு ஆரம்பமாகிவை அல்ல. இந்தப் பேச்சுகள் ஆரம்பமாகி ஒன்றரை நூற்றாண்டு கடந்துள்ளது. 1860ஆம் ஆண்டுதான் முதல் முதலில் இந்தப் பாலத்தை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. அப்போது இலங்கையையும் இந்தியாவையும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துக்கொண்டிருந்தனர். ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்பட்ட இந்த பகுதியில் பாலத்தை அமைத்தால் இருநாடுகளையுக்கும் இணைக்க முடியும் என்ற யோசனையை முன்வைத்தனர். என்றாலும், பின்னர் அந்தப் பேச்சுகள் அப்படியே கைவிடப்பட்டது. பின்னர் 1955 ஆம் ஆண்டு ராமசாமி முதலாளியார் தலைமையில் குழுவொன்று இந்தியாவில் நியமிக்கப்பட்டது. அக்குழு சிறிதுகாலம் இத்திட்டம் தொடர்பில் ஆராய்ந்தது. என்றாலும், குறித்த பேச்சுகளும் சிறிது காலத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்டன. 2002ஆம் ஆண்டில் மீண்டும் இந்த யோசனையை ஐ.தே.க இந்தியாவிடம் முன்வைத்தது. என்றாலும், யுத்த சூழல் காரணமாக குறித்த பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டன. பின்னர் 2015ஆம் ஆண்டு இந்தப் பேச்சுகள் எழுந்தன. தொடர்ச்சியாக பாலத்தை அமைக்க இந்தியா முழு ஈடுபாட்டுடன் இருக்கிறது. ஆனால், இலங்கையின் அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பால் தொடர்ந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாதுள்ளது. முன்னாள் எம்.பிகளான லக்ஷ்மன் கிரியெல்ல, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயகார ஆகியோர் இத்திட்டத்துக்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டவர்களாக உள்ளனர். அதன் பின்னர் பௌத்த பீடங்கள் எதிர்த்தன. தற்போது கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூட இத்திட்டத்தை எதிர்கிறார். இந்தப் பாலத்தை அமைத்து இந்தியாவின் ஊடாக தாய்லாந்தின் பெங்கொக் நகர்வரை தரைவழியாக பயணிக்கும் வகையில் அதிவேக பாதையை அமைக்கும் திட்டத்தை இந்தியா முன்மொழிந்திருந்தது. இத்திட்டத்துக்காக ஆரம்பத்தில் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என இந்தியா கூறியது. பின்னர் 6.5 பில்லியன் டொலர் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் எனவும் இந்தியா முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியிருந்தது. ஆனால், இதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுவதுடன், இந்த விடயத்தில் இலங்கை அதன் முழு ஈடுபாட்டை காட்டவில்லை. பாலத்தை அமைப்பதன் ஊடாக இலங்கைக்கே பாரிய நன்மைகள் உள்ளன. இந்த உண்மையை மறைக்கும் விதத்தில் இலங்கையின் அரசியல்வாதிகள் தெரிவித்த எதிர்ப்புகள் மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கை மாறும், இந்தியாவில் உள்ள பிச்சைகாரர்கள்கூட இலங்கைக்கு வந்துவிடுவார்கள், இத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய ஆபத்து, பொருளாதார சுரண்டப்படும், பௌத்தத்திற்கு பாதிப்பு என பல்வேறு பொய்யான காரணிகளை மக்கள் மத்தியில் விதைத்ததால் இன்றுவரை இத்திட்டத்தை முன்னெடுக்க முடியாதுள்ளது. இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கப்பட்டால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம் விரைவாக உயர்ந்துவிடும் என சர்வதேச பொருளாதார ஆய்வாளர்களும் உறுதியாக கூறுகின்றனர். பாலம் அமைக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து மிகவும் குறைந்த செலவில் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். அதன் ஊடாக இலங்கையில் பொருட்களில் விலைகள் மிகவும் குறைவடையும். ஏற்றுமதிகள் அதிகரிக்கும், இலங்கை உற்பத்தியாளர் ஒருவர் தமது உற்பத்தியை தமது வாகனத்தின் ஊடாகவே இந்தியாவுக்கு இலகுவாக கொண்டுசென்று விற்பனை செய்ய முடியும். இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல இலட்சங்களில் அதிகரிக்கும். அதன் ஊடாக இலங்கையின் சுற்றுலாத்துறை புதிய பாய்ச்சலை பெறும். இந்தியா ஊடாக சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு இலகுவாக வருகை தர முடியும். விமானம் மற்றும் கப்பல்களுக்கான செலவுகளை தவிர்த்து இலகுவாக சாதாரண பிரஜை ஒருவர் இந்தியா செல்ல முடியும். குறிப்பாக ஒரு தீவில் வாழ்கின்றோம் என்ற மனநிலையில் இருந்துகூட இலங்கையர்கள் விடுபட்டு உலகத்துடன் இலகுவாக ஒன்றிணையும் வாய்ப்புகளை பெற முடியும். பௌர்த்தவர்கள் அதிகமாக செல்லும் புத்தகயா எனப்படும் மகாபோதிக்காக யாத்திரையைகூட இலகுவாக மேற்கொள்ள முடியும். இந்தியாவுக்கு இந்தப் பாலத்தின் ஊடாக இலங்கையில் வர்த்தகத்தை மாத்திரமே மேற்கொள்ள முடியும். ஆனால், இலங்கைக்கு இதன் ஊடாக அனைத்துத் துறைகளிலும் நன்மையே கிடைக்கும் என்பதை இலங்கையின் அரசியல்வாதிகள் மறைத்து தங்களது சுயலாப அரசியலை செய்கின்றனர். பாலத்தின் ஊடாக விசா இல்லாத ஒருவர் வரமுடியாது. இருநாடுகளிலும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலமாக இருக்கும். இவ்வாறு இந்தப் பாலம் மிகவும் பாதுகாப்பானதாகவும் இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை தரக்கூடியதாக இருந்தும் இதனை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் நோக்கம் வெறுமனே அவர்களது இனவாத, மதவாத மற்றும் சுயலாப அரசியலுக்காக மாத்திரமே என்பதை உணராதவர்களாக சிங்கள மக்கள் உள்ளனர். தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமும் இந்தப் பாலம் தொடர்பிலான பேச்சுகளில் ஈடுபட கூடாதென போர்க்கொடி உயர்த்துகின்றனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு தமது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள போதிலும் இப்பாலம் தொடர்பில் பேசப்பட்டதான எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. இருநாடுகளுக்கும் இடையில் கேபிள் முறை மூலம் மின்சார பரிமாற்றம் மற்றும் குழாய் மூலமாக எரிபொருள் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பாலம் அமைப்பது அல்லது நிலத் தொடர்பு குறித்து இருநாடுகளும் இடையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த பேச்சுகள் குறித்து எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை. ஆனால், இந்தப் பாலம் அமைக்கப்பட்டால் அது இலங்கையின் பொருளாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும். அந்த நோக்கத்தின் பிரகாரம்தான் கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இப்பாலத்தை அமைப்பதற்கான பேச்சுகளை மீள ஆரம்பித்திருந்தார். 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அமையப் பெற்றிருந்த சந்தர்ப்பத்திலும் அவரே இந்தப் பேச்சுகளை மீள ஆரம்பிக்க தூண்டில் போட்டிருந்தார். என்றாலும், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியுற்றதால் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டன. மீண்டும் 2015ஆம் ஆண்டு அவர் பிரதமர் ஆனதும் பாலத்தை அமைக்கும் பேச்சுகளை ஆரம்பித்திருந்தார். அப்போது பாலம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தால் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்திருக்கும். அவ்வாறு நிறைவுற்றிருந்தால் இன்று இலங்கையின் பொருளாதார பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்திருக்கும். என்றாலும், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இந்தப் பேச்சுகளை தொடரவில்லை. தற்போது ரணில் விக்ரமசிங்க விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுசென்றால் அது இலங்கையின் வளர்ச்சிக்கான சிறந்த பாதையாக அமையும். ஆனால், தேசிய மக்கள் சக்தி இத்திட்டத்தை இரண்டு மனதாக பார்க்கிறது. ஜனாதிபதி அநுரகுமார கூட இத்திட்டம் தொடர்பில் எதிராக கருத்துகளை முன்வைத்திருந்தார். நாட்டு மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுள்ள அவர்கள், பொருளதாரத்தை விரைவாக வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுவருவதாக தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருந்தனர். அந்த எதிர்பார்பை அடைய சிறந்த திட்டங்களில் ஒன்றாக உள்ள இந்திய – இலங்கை இடையிலான பாலத்தை அமைக்கும் பணிக்கு பச்சை கொடி காட்டினால் 2030ஆம் ஆண்டுக்குள் இப்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுற்று இலங்கையின் பொருளாதாரத்தை அடுத்தகட்டம் நோக்கி நகர்வதற்கு வழிசமைக்கும். பாரம்பரிய அரசியலில் பயணத்தை தேசிய மக்கள் சக்தியும் தொடர போகிறதா அல்லது உண்மையான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாட்டை கொண்டுசெல்ல போகிறதா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். கட்டுரை- சுப்ரமணியம் நிஷாந்தன் https://oruvan.com/the-centuries-old-india-sri-lanka-bridge-project-who-benefits-from-it/
-
முப்பட்டைக்கண்ணாடியினூடே - ஜெயமோகன்
முப்பட்டைக் கண்ணாடியினூடாக-4 jeyamohanDecember 20, 2024 ( 6 ) இரா.முருகன் அவருடைய அந்த உலகியல் தன்மையை எழுதிச் செல்லும்போக்கில் இரண்டு பேசுபொருட்கள் கூர்மை கொள்கின்றன. ஒன்று பாலியல் இன்னொன்று சமையல் அல்லது சாப்பாடு. முருகனின் பாலியல் சித்தரிப்புகள் தமிழில் இதுவரைக்கும் முன்வைக்கப்பட்ட பாலியல் சித்தரிப்புகள் அனைத்திலிருந்தும் தீவிரமான வேறுபாடொன்றைக் கொண்டிருக்கின்றன. பாலியலின் களிப்பு, உணர்ச்சிகரம், அழகியல் மூன்றுமே அவர் புனைவுலகில் இல்லை. இதற்குமுன் பாலியலை எழுதியவர்கள் அதை பெரும்பாலும் உணர்ச்சித்தீவிரத்துடனே எழுதியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் தி.ஜானகிராமன். அல்லது களிப்பும் துய்ப்புமென அதைச் சித்தரித்திருக்கிறார்கள், முன்னோடியான உதாரணமாகச் சொல்லத்தக்கவர் தஞ்சை பிரகாஷ். பாலியலை வெறும் புற உலக அனுபவமாக மட்டுமே பார்க்கும் முருகனின் புனைவுலகம் அவருடைய இயல்பான கேலியும் அங்கதமும் கலந்துகொள்ளவே ஒருவகையான அபத்த நாடகமாகவே அதை மாற்றுகிறது. உலகியலில் அன்றாடத்தில் இருந்துகொண்டே இருக்கும் சலிப்புக்கு மாற்றாக மனிதர்கள் செய்துகொள்ளும் விந்தையான ஒரு செயல்பாடாக, ஒருவகை கோணலாக மட்டுமே முருகனின் பாலியல் சித்தரிப்புகள் உள்ளன. முன்பொருமுறை ஒரு பேட்டியில் அமெரிக்க இயக்குநர் ஃப்ரான்ஸிஸ் போர்டு கப்போலா ஒரு பாலியல் சித்தரிப்பை அதிலுள்ள பெண்ணை நீக்கிவிட்டு அல்லது ஆணை நீக்கிவிட்டு மட்டுமே சித்தரித்தால் அது வெடித்துச் சிரிக்கத்தக்க கோமாளித்தனமாக தோன்ற ஆரம்பித்துவிடும் என்று சொல்லியிருந்தார். அதோடு இணைவது அமெரிக்க திரை இயக்குநரும் எழுத்தாளருமான வூடி ஆலன் சொன்னது. ‘பாலியல் உறவென்பது நான் சிரிக்காமல் ஈடுபடும் ஒரே கேளிக்கை’. . இரா.முருகன் எழுதும் பாலியல் சித்தரிப்புகள் எதுவும் எவ்வகையிலும் பாலியல் தூண்டலை அளிப்பதில்லை. அவை அவையில் ஒருவர் ஏப்பமோ குசுவோ வெளியிடுவது போன்ற ஒரு ஒவ்வாமையையும் சிரிப்பையும் மட்டுமே உருவாக்குகின்றன. அவர் படைப்புலகம் முழுக்க நிறைந்திருக்கும் பாலியல் பெரும்பாலும் தமிழ் பொதுச்சொல்லாட்சியில் வக்கிரம் என்று சொல்லத்தக்கது. இயலபான அல்லது கவித்துவமான பாலியல் தருணம் ஒன்றையாவது இத்தனை பக்கங்களில் அவர் எழுதியிருக்கிறாரா என்று தொடர்ந்து புரட்டிப்பார்த்தேன். முருகனில் ஈடுபட்டு வாசிக்கும் நண்பர் ஒருவரிடம் அதைக்கேட்கவும் செய்தேன். அப்படியெதுவும் இல்லை என்பதே கிடைத்த பதிலாக இருந்தது. தமிழில் உணவின் சுவை இலக்கியத்தில் ஒரு முக்கியமான பேசுபொருளாக இருந்துகொண்டிருக்கிறது. லா.ச.ராமிருதத்தின் படைப்புகளில் சுவை என்பது ஒரு நுண்ணிய பகுதியாக வந்துகொண்டே இருக்கிறது. கி.ராஜநாராயணில் சுவைச் சித்தரிப்பு உண்டு. தமிழில் அதன் உச்சம் என்பது நாஞ்சில் நாடன். உணவு ஒரு களியாட்டாக, இந்தப் பொருள்வயப் பிரபஞ்சத்துடனான ஓர் உறவாக ,மனித உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் குறியீடாக, இன்னும் எவ்வளவோ வகையில் தமிழ்புனைவுலகில் வந்திருக்கிறது. முருகனின் புனைவுகளில் உணவு என்பது முற்றிலும் உலகியல் தன்மை கொண்டது. உலகியலுக்கு அப்பால் அதில் ஏற்றப்படும் எந்தக்கூறும் அற்றது. அது தின்பது மட்டுமே, சுவைப்பது மட்டுமே, நாக்கு மட்டுமே, அதற்கப்பால் ஏதுமில்லை. அந்த உலகியல் தன்மை எவ்வகையிலேனும் பிறிதொன்றாக ஆகிவிடக்கூடாதென்ற எச்சரிக்கை ஆசிரியருக்கு இருப்பது போன்றே தோன்றுவது. உணவுடன் ஒவ்வொருமுறையும் செரிமானத்தையும் மலங்கழிப்பதையும் கீழ்வாயு வெளியாவதையும் அவர் இணைத்துக்கொள்ளும் விதம் கவனிக்கத்தது. முருகன், அவருடைய முன்னோர் சமையற்காரர்கள் என்று ஒரு பேட்டியில் கூறுகிறார். பேட்டியில் ஆசிரியர் கூறும் வரிகளை பலவகையிலும் புனைவுகளை விளக்குவதற்கு பயன்படுத்துவதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்த ஒரு வரி எனக்குத் தோன்றுவதுண்டு. உணவின் மேல் தேர்ச்சியும் விலக்கமும் ஒருங்கே சமையற்காரர்களிடம் இருக்கும். விருந்துகளை சுவைத்துண்ணும் சமையற்காரர்கள் மிகக்குறைவு. பெரும்பாலும் உணவின் மீது ஒரு விலக்கம், கூடவே தொழில் ரீதியான ஈடுபாடு இரண்டும் அவர்களிடம் திகழ்கிறது. முருகனின் இந்த கதைகளில் உள்ளது சமையற்காரரின் பார்வை என்று தோன்றுகிறது. ஜடப்பிரபஞ்சத்தின் வெவ்வேறு பொருட்களை இணைத்து உருவாக்கும் ஒரு புதிய சாத்தியம் மட்டும் தான் அந்த சுவை. அதில் கேளிக்கையோ அதற்கப்பால் அனுபவ விரிவோ எதுவுமில்லை. அது பொருள் மட்டும்தான். அதில் உள்ளம் இல்லை. உள்ளம் கடந்த ஏதுமில்லை முருகன் சித்தரித்துச்செல்லும் காமமும் உணவும் எவ்வகையிலேனும் ஒன்றையொன்று அர்த்தப்படுத்திக் கொள்கின்றனவா. தமிழில் உணவுச்சுவை காமத்துடனும் காமச்சுவை உணவுடனும் இணைந்துகொள்வதென்பது பல புனைவுலகங்களில் காணக்கிடைப்பது, குறிப்பாக லா.சா.ராமிருதத்தில். தமிழில் இசையைப்பற்றிய எல்லா உரையாடல்களிலும் உணவு கலந்து கொள்வதென்பது ஒரு மரபாகவே இசை விமர்சனத்திலும் உண்டு உணவைப் பிறிதொன்றுடன் இணைத்து அதை பெரிதுபடுத்திக்கொள்வதென்பது மனிதனின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று ஒரு சுவையை இசையுடனோ இலக்கியத்துடனோ இணைத்து அதை நாக்கிலிருந்து சித்தத்திற்கு விரித்துக்கொள்ளவேண்டிய தேவை மனிதனுக்கு உண்டு. ஆனால் முருகனுடைய கதைகளில் எதிலும் பாலியல் உணவுடனோ உணவு பாலியலுடனோ இணைக்கப்படவில்லை. அவை இரண்டும் இரண்டு உலகியல் புலன்வழி அனுபவங்களாக மட்டுமே நிலைகொள்கின்றன. அவற்றுக்கு உலகியலுக்கு அப்பால் எந்த விரிவாக்கமும் நிகழ்ந்துவிடக்கூடாதென்ற ஆசிரியனின் அவரே அறியாத எச்சரிக்கை உணர்வுதான் அதற்கு காரணமா என்று யோசிக்கத்தோன்றுகிறது. ( 7 ) முருகன் உலகியலை சித்தரிக்கையில் உணவும் பாலியலும் இரண்டு வகை விடுதலைகளாக திகழ்கின்றன. அவ்விடுதலைக்கு அடியில் மாறாத பெரும் விரிவாக நின்றிருப்பது சலிப்புதான். முருகனின் கதைகளில் வரலாற்றின் மிகக்கொந்தளிப்பான காலகட்டத்திலேயே நிலக்கிழார்கள் தங்கள் ஆசைநாயகிகள் குளிப்பதைப் பார்ப்பதற்காக கிளம்பிச் செல்கிறார்கள். அரசி குளிப்பதை அமைச்சர் எட்டிப்பார்க்கிறார். சோற்றைப்பற்றியே சிந்தனைசெய்துகொண்டிருக்கிறார்கள் பெரும்பாலானவர்கள். திரும்பத் திரும்ப சலிப்பு எனும் அன்றாடச் சித்திரத்தை சலிப்பையே விளையாட்டென்றும் அங்கதமென்றும் ஆக்கிக்கொண்ட ஒரு மொழியில் இரா.முருகன் சொல்லி செல்கிறார். ஒருவகையில் அன்றாடச்சலிப்பை எழுதுவதே இலக்கியத்தின் மிகப்பெரிய அறைகூவலென்று எனக்குத் தோன்றியதுண்டு. ஏனெனில் இலக்கியம் என்பதே அன்றாடச் சலிப்புக்கு எதிரான ஒரு செயல்பாடுதான். மழைக்காலத்தில் செய்வதற்கொன்றுமில்லாமல் குகைகளில் கூடிய மனிதர்கள் சொல்லித் தொடங்கியதுதான் கதை எனும் வடிவமாக இருக்கக்கூடும். எல்லாக்கதைகளுமே சலிப்புக்கு எதிரான சமர்கள் தான். அந்நிலையில் கதைக்குள்ளேயே சலிப்பு சொல்லப்படுவதென்பது ஒரு முரண்பாடு. சலிப்பு என்பதை அதன் வண்ண வேறுபாடுகளை நுணுக்கமாக விரிப்பதனூடாக இலக்கியத்துக்குள் கொண்டு வந்தவர் என்று டால்ஸ்டாயைச் சொல்லலாம். குறிப்பாக போரும் அமைதியும் சலிப்பின் நுண்ணிய சித்திரங்களின் விரிவு கொண்டது என்று கூறலாம். சலிப்பை சலிப்பெனவே எழுதுவதென்பது ஒரு வகையில் இலக்கியத்துக்கு உகக்காத ஒன்று. சலிப்பை சுவாரசியப்படுத்துவது என்பது தான் இலக்கியத்தின் அறைகூவல். ஏனெனில் இலக்கியம் என்பது சுவாரசியத்தை உருவாக்க வேண்டிய ஒன்றுதான் முருகன் அச்சலிப்பில் ஒவ்வொருவரும் என்னென்ன செய்கிறார்கள் என்பதை நுணுக்கமாகவும் வேடிக்கையாகச் சொல்வதனூடாக சலிப்பின் சித்திரத்தை சொல்கிறார். சலித்துப்போய் அமர்ந்திருக்கும் ஒரு குரங்கு சொறிந்துகொள்கிறது, தனக்குத்தானே பேன் பார்த்துக்கொள்கிறது, இளித்துக்கொள்கிறது, கண்களைச் சிமிட்டிக்கொள்கிறது. அதனூடாக அதனூடாக அது நம்மை சிரிக்க வைக்கலாம். தன் சலிப்பையும் உணர்த்திவிடுகிறது. முருகனின் புனைவுலகத்தினூடாக பெருகிச்செல்லும் அன்றாடத்தின் சலிப்பு வரலாறெங்கும் அச்சலிப்பே நிறைந்திருக்கும் சித்திரத்தை நமக்களிக்கிறது. இந்திய நிலத்தில் பெரும் போர்களும் பூசல்களும் நிகழ்ந்த காலகட்டத்தினூடாக முருகனின் புனைவுலகம் செல்கிறது. பாண்டிச்சேரி நிலத்தை தக்கவைத்துக்கொள்ள பிரிட்டிஷாருடன் தொடர் பூசலில் இருந்த ஒரு காலகட்டத்தினூடாக செல்கிறது ராமோஜியம். மிளகு இந்தியாவின் காலனி நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிக்கலான காலகட்டத்தின் சித்தரிப்பு. ஆனால் இக்காலகட்டத்தைப்பற்றி எழுதிய நாவல்களில் கூட போர்கள் ராஜதந்திர சூழ்ச்சிகள் எழுச்சிகள் வீழ்ச்சிகளுக்கு மாற்றாக அன்றைய சலிப்பூட்டும் அன்றாடமே கேலி கலந்த மொழியியல் ஆசிரியரால் முன்வைக்கப்படுகிறது. முருகனின் தலைசிறந்த படைப்பு என்று சொல்லத்தக்க மிளகு நாவலில் கூட மிளகு ராணியின் சலிப்பூட்டும் அன்றாட நாள் தொடங்குவதனூடாகவே நாவல் விரியத்தொடங்குகிறது. முருகன் சொல்லும் இந்த அன்றாடம் ஏன் அத்தனை சலிப்புடனிருக்கிறது எனில் அன்றாடத்தின் சலிப்பை வெல்லும்பொருட்டு மானுடன் உருவாக்கிக்கொண்ட ஒவ்வொன்றையும் முன்னரே அவர் வெட்டிவிட்டிருக்கிறார் என்பதனால் தான். நேற்றைய வரலாறு குறித்த பெருமிதங்களும், அப்பெருமிதங்களின் வெளிப்பாடான தொன்மங்களும் மனிதன் தன் நிகழ்காலத்தின் சலிப்பிலிருந்து வெல்லும்பொருட்டு உருவாக்கிக்கொண்டவை. எதிர்காலம் பற்றிய கனவுகளும் லட்சியங்களும் அதற்கான நடைமுறைத்திட்டங்களும் அவ்வாறே அன்றாட சலிப்பின்மீதான மனிதனின் எதிர்வினைகள் தான். வரலாற்றுவாதங்களும் கொள்கைகளும் அனைத்தும் அதன் பொருட்டே. சலிப்பை வெல்ல மானுடன் உருவாக்கிக்கொண்ட ஒவ்வொன்றையுமே முற்றிலும் தன் புனைவுலகிலிருந்து விலக்கிக்கொண்ட பின்னால் அச்சலிப்பை மட்டுமே எழுத முடிகிறது அவ்வாறு எழுதுகையில் அது எப்படி இந்த சுவாரசியத்தை அடைகிறது எனில் இவற்றை எல்லாம் விலக்கியதனால் உருவாகும் அர்த்தமின்மை சட்டென்று ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிகழ்த்தும் மெல்லிய கோமாளித்தனத்தினால் தான். லட்சியத்தின் இன்மை உருவாக்கும் அபத்தமே முருகனின் மொத்த படைப்புலகையுமே இயல்பான அங்கதம் கொண்டதாக்குகிறது. அர்த்தமின்மைக்காக முருகன் முயல்வதில்லை. அதனூடாக ஓர் அங்கதத்தை உருவாக்க வேண்டிய தேவையும் அவருக்கில்லை. அர்த்தமென சொல்லப்பட்ட அனைத்தையுமே எழுதுவதற்கு முன்பே வெளியே நிறுத்திவிட்டு அன்றாடத்தை மட்டுமே எழுதத்தொடங்கும்போதே அவையெல்லாம் நிகழ்ந்துவிடுகிறது. இப்பொழுது இங்கிருந்து நான் கிளம்பிச்சென்று பார்வதிபுரம் சந்திப்பில் நின்றுகொண்டு அங்கு நிகழ்வன ஒவ்வொன்றையும் அவற்றுக்கு எந்த உள்தொடர்ச்சியையும் பொருளையும் அளிக்காமல் அப்படியே பதிவு செய்தேன் எனில் வாய்விட்டு சிரிக்க தக்க ஒரு பெருஞ்சித்திரமே எனக்கு அமையும். திரும்ப திரும்ப தரையில் துப்பிக்கொண்டே இருக்கிறார் ஒருவர். கையில் அரைடம்ளர் டீயுடன் வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்றிருக்கிறார் ஒருவர். எங்கோ எதையோ பார்த்துத் தலையசைக்கிறார் ஒருவர். ஒருவர் திரும்பத் திரும்ப ஒரு கைப்பையை குடைகிறார். ஒன்றுக்கும் ஒரு பொருளும் இல்லை. எல்லாமே கோமாளித்தனங்கள் பொருளிலிருந்து விடுதலை என்பது ஒருவகையில் sanity என்னும் பித்தின்மையிலிருந்து விடுதலைதான் அது insane எனும் பைத்தியப்பெருவெளியொன்றை உருவாக்குகிறது. அவ்வாறு தன்னியல்பாக விரித்து விரித்து நினைவுகளிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் தன் குடும்பச்சூழலிருந்தும் புனைந்து பெருக்கிக்கொண்ட ஒரு பரப்பென்று முருகனின் கதைகளைச் சொல்ல முடியும். அவ்வகையில் முருகனின் கதையுலகுடன் அணுக்கமான கதைசொல்லி என எவரும் தமிழில் இல்லை. ஆனால் மலையாளத்தில் இருவரைச் சொல்லலாம். ஒருவர் வி.கே.என். இன்னொருவர் என்.எஸ். மாதவன். (என்.எஸ்.மாதவனின் ‘லண்டன் பத்தேரியிலே லுத்தீனியகள்’ என்னும் நாவலை முருகன் பீரங்கிப்பாடல்கள் என்ற பேரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்) வி.கே.என் மலையாளத்தின் முதன்மையான அங்கத எழுத்தாளர் என அறியப்பட்டிருக்கிறார். முருகனுக்கு அவரை அணுக்கமாக ஆக்கும் கூறுகள் மூன்று. ஒன்று, வரலாற்றை பகடிக்களமாக ஆக்கிக்கொள்ளும் பார்வை. இரண்டு, பல்வேறு மொழிநடைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கதைசொல்லித் தன்மை. மூன்று, முழுமையான உலகியல்தன்மை. வி.கே.என் உலகிலும் காமமும் உணவுமே மையப்பேசுபொருட்கள். அவற்றின் மேல் எந்தவகையான ’அழகியலும்’ செயல்படுவதில்லை. எந்த மெல்லுணர்ச்சிகளுமில்லை. அவை முழுமையான அன்றாடத்தன்மையுடன், பொருள்வயத்தன்மையுடன் வெளிப்பட்டு அதன்விளைவான பகடியை சென்றடைகின்றன. வி.கே.என் போலவே இரா முருகனும் தொல்வரலாற்றையும் சமகால வரலாற்றையும் மறு ஆக்கம் செய்திருக்கிறார். இருவருமே வரலாற்றை துண்டுகளாக சிதறடித்து ஓர் அபத்தப்பரப்பை கட்டமைக்கிறார்கள். இரா.முருகனின் புனைவுலகுக்கு மிக அணுக்கமான இருபடைப்புகள் வி.கே.என் எழுதிய பிதாமகன் என்னும் பகடி நாவலும் என்.எஸ்.மாதவனின் பீரங்கிப்பாடல்களும். ( 8 ) ஒரு புனைவுக்கலைஞராக முருகனைப் பற்றி தனித்தனிப் படைப்புகள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுவதை ஒட்டி தொகுக்கப்பட்டன. அவரை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ளும் ஒரு கட்டுரை தேவை என்பதனால் இந்த அவதானிப்புகளை முன்வைக்கிறேன். இவை முடிவுகளல்ல, மேற்கொண்டு ஒட்டியும் வெட்டியும் நிகழவேண்டிய விவாதங்களுக்கான முன்வரைவுகளே. முருகனின் படைப்புலகம் ஒட்டுமொத்தமாக அளிக்கும் இலக்கியக்கொடை என்ன? முதன்மையாக அவர் உருவாக்கும் வரலாற்றின் சிதைவுச்சித்திரம்தான். வரலாறு அதற்குள் செயல்படும் எளிய அன்றாடத்தால், தற்செயல்களின் தர்க்கமின்மையால் அபத்தமாக ஆவதை அவர் சித்தரிக்கிறார். வரலாற்றில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றின் பெருஞ்சித்திரத்தால் அபத்தமாக ஆகிறது, எளிய மனிதர்களால் வரலாறும் அபத்தத்தை அடைகிறது. முருகன் நெருக்கடிநிலை பற்றி அப்பாவிக் குமாஸ்தாக்களினூடாகச் சித்தரிக்கும் இடம், அல்லது பாண்டிச்சேரியின் வரலாற்றை சில்லறை ஐயன்கள் வழியாக விவரிக்கும் பாணி அதற்குச் சிறந்த உதாரணம். ஒருங்கிணைந்த வரலாற்றின் பெருங்கதையாடலின் மாபெரும் எடை தூக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகம் நாம். பறக்கமுடியாதபடி வரலாற்றின் அடியில் சிக்கிக்கொண்டவர்கள். வரலாற்றின்மீதான மிகையுணர்வு என்பது நமக்கு ஒரு வகையான நரம்புச்சிக்கலாகவே ஆகிவிட்டிருக்கிறது. அதிலிருந்து விடுதலை என முருகன் முன்வைக்கும் இந்த வரலாற்றுச் சித்திரத்தைச் சொல்லலாம். வரலாற்றை எடையற்றதாக ஆக்கிவிடுகிறது இந்தப்புனைவுலகம். இரண்டாவதாக, முருகன் முன்வைக்கும் நுணுக்கமான பகடிகள் சுவையான வாசிப்பனுபவமாக ஆகின்றன என்பதைச் சொல்லவேண்டும். பின்நவீனத்துவப் புனைவு என்றால் ஒருவகையான புதிர்விளையாட்டு என்னும் சோர்வூட்டும் நிலையை கடந்து எல்லாப் பக்கங்களையும் சிரித்தபடி, புன்னகைத்தபடி வாசிக்கச் செய்வது இரா.முருகனின் புனைவுலகம். பகடிகளுக்குரிய தனித்தன்மை, எதிர்மறைத்தன்மை என்றும் சொல்லலாம், அவை தொடர்ச்சியற்று உதிரிவேடிக்கைகளாக நின்றுவிடுபவை என்பது. வி.கே.என்னும் இன்று தனிவேடிக்கைத்துணுக்குகளாகவே நினைவுகூரப்படுகிறார். இரா.முருகனும் அந்த விதியிலிருந்து தப்பமுடியாது. பகடியின் இன்னொரு எதிர்மறை அம்சம், எது பகடி செய்யப்படுகிறதோ அதை வாசகன் முன்னர் அறிந்திருக்கவேண்டும் என்னும் நிபந்தனை. பகடியில் பயன்படுத்தப்படும் நுணுக்கமான வரலாற்றுச்செய்திகள், நூல்குறிப்புகள், மொழிக்குறிப்புகள் வாசகனின் நினைவில் கிளரவேண்டும். கேரளவாசகர்களிடம் அரசியல் சார்ந்த வாசிப்பும் நினைவும் மிகுதி என்பதனால் வி.கே.என் மற்றும் என்.எஸ்.மாதவனின் நுண்குறிப்புகள் அத்தளத்தில் வாசகநினைவைச் சீண்டி பகடியை உருவாக்குவதில் வெற்றிபெறுகின்றன. ஆனால் வி.கே.என் உருவாக்கும் மரபுக்கலைகள், மரபான விவசாயம் சார்ந்த பகடிகள் அடுத்த தலைமுறையிடம் வேலைசெய்யவில்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இரா.முருகனின் படைப்புகளின் மிகப்பெரிய பலவீனமே அவர் எதிர்கொள்ளும் தமிழ் வாசகர்கள்தான். அவர்களில் வரலாறு, அரசியல், இதழியல் மற்றும் உயர்தொழிற்ச்சூழல் என முருகன் தொட்டுச்செல்லும் ஊடுபிரதித்தன்மையை சற்றேனும் அறிந்தவர்கள் மிகமிக அரிது. தமிழ் எழுத்தாளர்களிலேயே வரலாறு, பண்பாடு சார்ந்த வாசிப்பறிவுடையோர் மிகக்குறைவானவர்கள். பெரும்பாலானவர்கள் சொந்தவாழ்க்கை சார்ந்து மட்டுமே தகவலறிவு கொண்டவர்கள். அதற்கு அப்பால் எதையும் அறிவதற்கான ஆர்வமும் அற்றவர்கள். ஆகவேதான் பாலியல், எளிய சமகாலச் செய்திகள் சார்ந்து மட்டுமே இங்கே படைப்புகள் உருவாகின்றன. இச்சூழலில் முருகன் உருவாக்கும் பகடிகள் பெரும்பாலும் சென்றடைவதில்லை. முருகனின் பகடிகளில் பலவும் நுணுக்கமான சாதிய, வட்டார பண்பாட்டுக் குறிப்புகள் கொண்டவையும்கூட. முருகனின் இலக்கியப் பங்களிப்புகளில் இறுதியானது அவர் உருவாக்கும் கலவை நடை. அவர் கதைசொல்லியாக திகழும் நடை நினைவுகளும் குறிப்புகளுமாக பகடியுடன் தாவிச்செல்வது. ஊடே பல்வேறு மொழிநடைகளை அவர் திறம்பட நகல்செய்து கலந்துவிடுகிறார். பத்தொன்பதாம்நூற்றாண்டின் கடிதங்களின் மொழிநடை, பழைய ஆவணங்களின் நடை, பத்தொன்பதாம்நூற்றாண்டு இதழ்களிலுள்ள செய்திநடை, அக்காலநூல்களின் நடை ஆகியவை ஒரு கலைடாஸ்கோப் தன்மையுடன் அவர் புனைவுலகில் புரண்டுபுரண்டு வண்ண வேறுபாடுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. பின்நவீனத்துவ எழுத்தில் கலவைமொழி என்பது ஒரு முக்கியமான அம்சமாக உலகமெங்கும் உள்ளது. சீரான, நேர்த்தியாகச் செம்மைசெய்யப்பட்ட ஒற்றையோட்ட மொழிநடையை நவீனத்துவம் தன் அடையாளமாக முன்வைத்தது. அது ஆசிரியரின் உணர்ச்சிநிலை, சிந்தனை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்பட்டது. நவீனத்துவகால விமர்சனங்கள் அனைத்திலுமே நேர்த்தியான மொழிக்கான பாராட்டு இருப்பதைக் காணலாம். கலவை மொழி அல்லது சிதறுமொழி என்பது அதற்கு மாற்றாக பின்நவீனத்துவம் உருவாக்கிக்கொண்ட ஒன்று. நேர்த்தியான ஒற்றை மொழி வாசகன் மேல் ஆசிரியனின் செல்வாக்கை செலுத்துகிறது என்று எண்ணிய பின்நவீனத்துவர் நடை என்பது வாசகனும் ஆசிரியனும் கொள்ளும் விளையாட்டாகவோ உரையாடலாகவோ இருக்கவேண்டும் என எண்ணினர்.ஆகவே உரைநடையை அவ்வாறு பன்முகத்தன்மை கொண்டதாக ஆக்கினர். ஆனால் பின்நவீனத்துவ புனைவு வடிவங்களை எளிமையாக நகல்செய்தவர்கள் பலர் அப்புனைவுகளுக்குள், எந்த நோக்கமும் இல்லாமல் செயற்கையாக சிக்கலான சொற்றொடர்கள் அல்லது சிதைவுண்ட சொற்றொடர்கள் வழியாக கலவைமொழியையோ சிதைவுமொழியையோ உருவாக்க முயன்றிருப்பதைக் காணலாம். அவை எந்தவகையான புனைவுத்திறனும் இல்லாத மொழிக்குதறல்களே. மாறாக முருகன் உருவாக்கும் கலவை மொழி வாசகனின் நினைவுமுனைகளை வெவ்வேறு வகைகளில் தொட்டுச் சீண்டி ஓர் இனிய விளையாட்டுக்கு அழைக்கிறது. அந்த கலவைமொழியின் வசீகரம் முருகனின் இலக்கியப் பங்களிப்புகளில் முக்கியமானது. ஆனால், அந்த மொழிகளை ஏற்கனவே அறிந்து, அவற்றை முருகன் ‘எடுத்துவிளையாடும்’ விதத்தை புரிந்துகொள்பவர்களாலேயே அவை ரசிக்கப்படக்கூடும். எஞ்சியோருக்கு அவை வெறும் மொழிவிளையாட்டாகவோ, அல்லது அன்னியமானதோ புரிந்துகொள்ள முடியாததோ ஆன மொழிப்பரப்பாகவோ தோன்றக்கூடும். முருகனின் புனைவுலகம் ஒரு முப்பட்டைக் கண்ணாடி போல நாம் வாழும் ஒற்றைப்படையான யதார்த்தத்தை சிதறடித்து வண்ணப்பட்டைகளாக விரித்துக்காட்டுகிறது. அந்த புனைவாடலே முதன்மையாக அவரை தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக நிலைநிறுத்துகிறது. I https://www.jeyamohan.in/209064/
-
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர்,முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி முருத்தெனியே தம்மரத்தன தேரர் உள்ளிட்டோர் இதன்போது வருகை தந்திருந்ததுடன் அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர். போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர். https://www.hirunews.lk/tamil/391359/மல்வத்து-மற்றும்-அஸ்கிரிய-மகாநாயக்க-தேரர்களை-சந்தித்து-ஆசி-பெற்றார்-ஜனாதிபதி
-
திண்ணை
நவம்பரில் இருந்து வார இறுதிகளில் ஒரே பார்ட்டி! புது வருஷத்தில் இருந்து “ஓம் சரவணபவ” பக்தனாகப் போகின்றேன்🤪
-
உக்ரைனில் உள்ள ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதம்!
உக்ரைனில் உள்ள ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதம்! உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா இன்று காலை நடத்திய தாக்குதல் காரணமாக ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது அல்பேனியா, அர்ஜென்டினா, வட மெசிடோனியா, பலஸ்தீன், போர்த்துக்கல் மற்றும் மொன்டெனெக்ரின் ஆகிய நாடுகளின் இராஜதந்திர நிலையங்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளன உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதல்களில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் இந்தத் தாக்குதலில் மேலும் எழுவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இதன் காரணமாக கட்டடங்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், பல வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக உக்ரைன் முழுவதும் வான்வழி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.hirunews.lk/tamil/391363/உக்ரைனில்-உள்ள-ஆறு-இராஜதந்திர-நிலையங்கள்-சேதம்
-
எம்.எச்.370 விமானத்தின் மர்மம் நீங்குமா ? 10 ஆண்டுகளின் பின் மீண்டும் விமானத்தை தேடும் பணி
எம்.எச்.370 விமானத்தின் மர்மம் நீங்குமா ? 10 ஆண்டுகளின் பின் மீண்டும் விமானத்தை தேடும் பணி விமான வரலாற்றில் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றான 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பயணிகள் விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மலேஷிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேசியன் விமான சேவைக்கு சொந்தமான எம்.எச்.370 என்ற விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் பயணித்த வேளை மர்மமான முறையில் காணாமல் போனது. பயணத்தை ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்ததுடன், விமானம் வழமையான பாதையில் இருந்து விலகி சென்றமை பதிவாகி இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை வெற்றி கிட்டவில்லை. இந்த நிலையில், விமானத்தினை மீண்டும் தேடும் பணிகளுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்பினிட்டீசுடன் 7 கோடி டொலருக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக, இன்று மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். புதிய தேடுதல் நடவடிக்கைகள் இந்து சமுத்திரத்தின் தெற்கு பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்ட 15 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/391364/எம்-எச்-370-விமானத்தின்-மர்மம்-நீங்குமா-10-ஆண்டுகளின்-பின்-மீண்டும்-விமானத்தை-தேடும்-பணி
-
முன்னாள் எம்.பி திலீபன் கைது
எனது பெயரை பயன்படுத்தி மோசடி செய்த அலுவலர் - முன்னாள் எம்.பி திலீபன் December 20, 2024 04:29 pm எனது பெயரை பயன்படுத்தி எனது அலுவலகத்தில் இருந்தவர் செய்த மோசடிக்காக நான் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாக என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பணமோசடி செய்ததாகவும், கைது செய்யப்பட்டதாகவும் பல சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. நான் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த போது எனது அலுவலகத்திற்கு பலர் பல தேவைகள் கருதி வருவது வழமை. இதன்போது சில அரசாங்க அதிகாரிகளுக்கு அதனை பரிந்துரை செய்து அனுப்புவது வழமை. ஆனால் முகவர்களாக சிலர் செயற்பட்டு எனது பெயரைப் பயன்படுத்தி பணம் பெற்றுள்ளனர். அவ்வாறானதொரு சம்பவமே நடந்தது. எனது அவலுகத்தில் இச் சம்பவம் இடம்பெற்றதால் நான் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியிருந்தது. இதனால் நீதிமன்றம் சென்று எனது தரப்பு நியாயங்களை நான் முன்வைத்துள்ளேன். அந்தப் பணம் எனது வங்கி இலக்கத்திற்கு வரவுமில்லை. நானும் கை நீட்டி வாங்கவும் இல்லை. அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் இதனை வைத்து பல கட்டுக் கதைகளை கட்டுகிறார்கள். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது நான் காணி மாஃபியா வேலை செய்யவில்லை. மாறாக அரச காணிகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன். அதுவும் அடிமட்ட மக்களுக்கே அதனை வழங்கியுள்ளேன். காணி மாஃபியாக்களுக்கு எதிராக நானும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். அரச காணிகளை பிடித்து திருட்டுத்தனமாக உறுதிகளை எழுதி வைத்துள்ளார்கள். அதனை மீட்டு நான் மக்களுக்கு வழங்கினேன். அப்படியான பலர் குழுவாக எனக்கு எதிராக சதி செய்து வருகிறார்கள். நான் சொத்து சேர்ந்துள்ளதாகவும் பல கதைகளை சொல்கிறார்கள். அவை அனைத்தும் பொய். முகநூலில் வீரம் பேசுபர்களுக்கு எதிராகவும் நிகழ்நிலை சட்டத்தை மையமாக கொண்டு வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், மக்கள் என இணைந்து நாம் வன்னியில் புதிய சக்தியாக எழுச்சி பெறவுள்ள நிலையில், அதனை முடக்குவதற்காக இந்த வேலைகள் இடம்பெறுகிறது. எனது அலுவலகத்தில் இருந்த ஒருவர் செய்த மோசடிக்காக, அந்த அலுவலகத்திற்கு பொறுப்பானவர் நான் என்ற அடிப்படையில் தான் நீதிமன்றம் போக வேண்டி ஏற்பட்டது. நான் அவ்வாறு செய்திருந்தால் அல்லது சொத்து குவித்திருந்தால் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன். எனக்கு கிடைத்தது 3,000 வாக்குகள். ஆனால் எனது பெயரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்துள்ளனர். தற்போது ஒரு வழக்கு வந்துள்ளது. இனி எத்தனை வருகிறதோ தெரியாது. அதனை நீதிமன்றம் ஊடாக அணுக தயாராகவே உள்ளேன் எனத் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=197585
-
திண்ணை
மீண்டும் யாழில் கண்டதில் மகிழ்ச்சி @Nathamuni😀 எவருடைய அன்புக்கட்டளையை மீறமுடியாமல் அஞ்ஞாதவாசம் முடித்து திரும்பினீர்கள்?
-
பாலின ஈர்ப்புகளில் என்னென்ன வகைகள் உள்ளன? பொம்மைகள் மீதும் காதல் வருமா?
பாலின ஈர்ப்புகளில் என்னென்ன வகைகள் உள்ளன? பொம்மைகள் மீதும் காதல் வருமா? 20 டிசம்பர் 2024, 10:59 GMT @akihikokondosk அகிஹிகோ கோண்டோ தன்னை ஒரு ஃபிக்டோசெக்ஷூவல் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிஹிகோ கோண்டோ, கடந்த 2018ஆம் ஆண்டில், தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தார் எதிர்ப்பையும் மீறி காதலி 'ஹட்சுனே மிக்குவை' கரம்பிடித்தபோது, அந்தத் திருமணம் உலகம் முழுவதும் பேசுபொருளானது. சமீபத்தில், அவர் தனது மனைவியுடன் ஆறாவது திருமண நாளைக் கொண்டாடியதும் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தது. ஜப்பானை சேர்ந்த ஒருவர் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்வதிலோ அல்லது தனது திருமண நாளைக் கொண்டாடுவதிலோ என்ன இருக்கிறது, இது ஏன் செய்திகளில் இடம்பிடித்தது என்று நீங்கள் நினைக்கலாம். அதற்குக் காரணம், அவரது மனைவி ஹட்சுனே மிக்கு, ஒரு அனிமே கதாபாத்திரம். இன்னும் சொல்லப்போனால் அவர் திருமணம் செய்தது, மிக்குவின் முழு உருவ பொம்மையைக்கூட அல்ல, ஒரு முப்பரிமாண ஹோலோகிராம் பிம்பம் மட்டுமே. மென்பொருளின் உதவியோடு அந்த பிம்பம் அவருடன் பேசியது. அதாவது அமேசானின் அலெக்ஸா (Alexa) அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri) போல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஹட்சுனே மிக்குவுடன் உரையாடி, அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தார் அகிஹிகோ கோண்டோ. ஜப்பானை சேர்ந்த 'கேட்பாக்ஸ் (Gatebox)' என்ற நிறுவனம்தான் இந்த ஹோலோகிராமை தயாரித்திருந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அந்நிறுவனம் 'ஹட்சுனே மிக்கு'வுக்கான மென்பொருளை கைவிட்டது. முன்னர் போல, மிக்குவுடன் பேச முடியவில்லை என்றாலும்கூட அந்தக் கதாபாத்திரத்தின் பொம்மைகளுடன் கோண்டோ வாழ்ந்து வருகிறார். கோண்டோ தன்னை ஒரு 'ஃபிக்டோசெக்ஷூவல்'(Fictosexual) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதாவது கற்பனை கதாபாத்திரங்கள் (Fictional characters) மீது ஈர்ப்பு கொள்பவர்கள். தன்னுடைய இந்த வாழ்க்கை முறை காரணமாகப் பலரும் தன்னை வெறுத்ததாகவும், குடும்பத்தினர்கூட இதுவொரு 'உளவியல் கோளாறு' என நினைத்ததாகவும் ஊடக நேர்காணல்களில் கோண்டோ தெரிவித்திருந்தார். அதேநேரம் இத்தகைய பாலின ஈர்ப்பு, நிச்சயமாக ஒரு 'உளவியல் கோளாறு' அல்ல. 'உளவியல் சார்ந்தது அல்ல' @akihikokondosk மிக்குவுடன் பேச முடியவில்லை என்றாலும்கூட அந்த கதாபாத்திரத்தின் பொம்மைகளுடன் கோண்டோ வாழ்ந்து வருகிறார் அமெரிக்க மனநல சங்கத்தின் (American Psychiatric Association- ஏபிஏ) உளவியல் கோளாறுகளை வகைப்படுத்துவதற்கான கையேட்டில் 'ஃபிக்டோசெக்ஷூவல்' மனநோயாக வகைப்படுத்தப்படவில்லை. ஏபிஏ என்பது அமெரிக்காவில் உளவியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அறிவியல் மற்றும் தொழில்முறை அமைப்பாகும். 132 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பில், 157,000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள் மற்றும் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தன்பாலின ஈர்ப்பு (Lesbian, Gay), இருபாலின ஈர்ப்பு (Bisexual), பாலின ஈர்ப்பு இல்லாமை (Asexual) எனப் பல்வேறு வகையான பாலின ஈர்ப்புகள் உள்ளன. அவற்றையும் அமெரிக்க மனநல சங்கம் எந்தவித உளவியல் பிரச்னையாகவும் அடையாளப்படுத்தவில்லை. அவை மனிதர்களின் இயல்பான குணங்கள்தான் என ஏபிஏ கூறுகிறது. பாலின ஈர்ப்பு என்றால் என்ன? Getty Images பாலின ஈர்ப்பு (Sexual orientation) என்பது ஒருவரின் உணர்ச்சி, காதல் அல்லது பாலியல் நோக்கிலான ஈர்ப்புகளின் நீடித்த வடிவத்தைக் குறிப்பதாக அமெரிக்க மனநல சங்கம் கூறுகிறது. எளிமையாகச் சொன்னால், குயர் சென்னை கிரானிக்கிள்ஸ் கையேட்டின்படி, ஒரு நபர், எந்த நபர்கள் அல்லது பாலினங்களுடன் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக அல்லது காதல் சார்ந்து ஈர்க்கப்படுகிறார் என்பதே பாலின ஈர்ப்பு. பாலின ஈர்ப்பும் பாலின அடையாளமும் (Gender identity) ஒன்றல்ல. பிறப்பின்போது வழங்கப்படுகிற பாலினத்தைச் சார்ந்த வழமைகள், நடத்தைகள், பாலின பங்களிப்பு ஆகியவற்றை வைத்து சமூகம் ஒரு நபரைப் பார்க்கும் விதமே பாலினம் (Gender) எனப்படும். ஆனால், ஒரு நபர் தனது பாலினத்தை எவ்வாறு வரையறுக்கிறார் என்பதே பாலின அடையாளம். இந்த பாலின அடையாளம் என்பது பிறப்பின்போது வழங்கப்படுகின்ற பாலினம் சார்ந்த வழமைகள் மற்றும் சமூகம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பைப் பொறுத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பல்வேறு வகையான பாலின ஈர்ப்புகள் Getty Images பொதுவாக ஒருவரின் பாலின ஈர்ப்புக்கு அடிப்படையாக இருக்கும் முக்கியக் கூறுகள் வளரிளம் பருவத்தின் தொடக்கத்தில் வெளிப்படுகின்றன என்றும் உணர்ச்சி, காதல் மற்றும் பாலியல் ஈர்ப்பின் இந்த வடிவங்கள் எந்தவொரு பாலியல் முன் அனுபவமும் இல்லாமல்கூட எழலாம் என்றும் ஏபிஏ கூறுகிறது. அதேபோல, ஒருவரின் பாலின ஈர்ப்பை மாற்றுவதற்கு, அறிவியல் ரீதியாகப் பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதும் இல்லை எனக் கூறும் அமெரிக்க மனநல சங்கம், அத்தகைய சிகிச்சைகளை ஊக்குவிப்பது தன்பாலின மற்றும் இருபாலின ஈர்ப்பாளர்களுக்கு சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறுகிறது. அமெரிக்காவை சேர்ந்த கிளாட் (Glaad) எனும் அரசு சாரா ஊடக கண்காணிப்பு அமைப்பு பலதரப்பட்ட பாலின ஈர்ப்புகளை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டுமென விளக்குகிறது. ஊடகங்கள், பொழுதுபோக்குத்துறை மற்றும் சமூகத்தில் பால் புதுமையினருக்கான (LGBTQ+) முறையான பிரநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த கிளாட் அமைப்பு செயல்படுகிறது. பாலின ஈர்ப்பு வகைகள் Getty Images கிளாட் அமைப்பின் விளக்கப்படி, எதிர்பாலீர்ப்பு (Hetrosexuality) ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் வரும் பாலீர்ப்பு பொதுவாக எதிர்பாலீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. பாலின ஈர்ப்பு என்பதைத் தாண்டி காதல் அல்லது உணர்வு சார்ந்த ஈர்ப்பும் இதில் அடங்கும். தன்பாலின ஈர்ப்பு (Lesbian, Gay) தங்களுடைய பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது பாலின ஈர்ப்பு கொள்வது தன்பாலின ஈர்ப்பு அல்லது ஒருபாலீர்ப்பு எனப்படும். இதிலும் பாலின ஈர்ப்பு என்பதைத் தாண்டி காதல் அல்லது உணர்வு சார்ந்த ஈர்ப்பும் உண்டு. இருபாலின ஈர்ப்பு (Bisexual) தன்னுடைய பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது பாலின ரீதியாகவோ, காதல் அல்லது உணர்வு ரீதியாகவோ ஈர்ப்பு கொள்பவர்கள் இதில் அடங்குவார்கள். ஆனால் இந்த இருபாலினத்தவர்கள் மீதான ஈர்ப்பு என்பது ஒரே நேரத்தில், ஒரே விதத்தில் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. எதிர்பாலீர்ப்பு, தன்பாலின ஈர்ப்பு, மற்றும் இருபாலின ஈர்ப்பு, இவை அனைத்துமே மனித பாலுணர்வின் இயல்பான அம்சங்கள் என்றும், இவை பல்வேறு கலாசாரங்கள் மற்றும் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஏபிஏ கூறுகிறது. Getty Images அமெரிக்க இசைக் கலைஞரும் நடிகையுமான மைலே ரே சைரஸ், தனது பாலின ஈர்ப்பு குறித்து வெளிப்படையாகப் பேசிய பிரபலங்களில் ஒருவர் அனைத்துப் பாலின ஈர்ப்பு (Pan sexual) பாலின அடையாளத்திற்கு அப்பாற்பட்டு அல்லது அனைத்து பாலினங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் வரக்கூடிய ஈர்ப்பு 'அனைத்துப் பாலின ஈர்ப்பு' எனப்படும். அதேநேரம் அனைத்து பாலினங்களின் மீதும் ஒரே மாதிரியான அல்லது ஒரே அளவிலான ஈர்ப்பு இருக்கும் என்று கூற முடியாது. அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகையுமான மைலே ரே சைரஸ், அமெரிக்க பாடகி மற்றும் நடிகை ஜானெல்லே மோனே ராபின்சன், பிரிட்டன் நடிகை காரா ஜோஸ்லின் டெலிவிங்னே, உள்படப் பல பிரபலங்கள் தங்களை 'அனைத்துப் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள்' என பொதுவெளியில் அறிவித்துள்ளனர். பாலீர்ப்பு இல்லாமை (Asexual) யார் மீதும் பாலின ஈர்ப்பு இல்லாத நபர்களைக் குறிக்க 'பாலீர்ப்பு இல்லாமை' என்ற சொல் பயன்படுகிறது. அதேநேரம், எவரின் மீதும் காதல் அல்லது உணர்வு ரீதியான ஈர்ப்பு கொள்ளாத நபர்களைக் குறிக்க ஏரோமான்டிக் (Aromantic) என்ற சொல் பயன்படுகிறது. இதில் 'பாலீர்ப்பு இல்லாத' நபர்கள், ஏரோமான்டிக் நபர்களாக இருக்கலாம் அல்லது அவர்களுக்கு பாலீர்ப்பு அல்லாத காதல் ஈர்ப்பு மட்டும் இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல ஏரோமான்டிக் நபர்கள் பாலியல் ஈர்ப்பு கொண்டவர்களாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாலீர்ப்பு கொள்ளாதோரையும் அல்லது பிறப்பில் குறிக்கப்படும் பாலினத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களையும் குறிக்க 'குயர்' என்ற வார்த்தை பயன்படுகிறது. கடந்த காலங்களில், சமூகத்தின் பாலின மற்றும் பாலீர்ப்பு எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துவராதவர்களுக்கான அவச்சொல்லாக இது இருந்தது. ஆனால், இப்போது பால் புதுமை சமூகத்தினர் (LGBTIQA+) தங்களை வரையறுத்துக் கொள்வதற்காக இதைப் பயன்படுத்துகின்றனர். Getty Images ஆன்ரோசெக்ஷுவல் மற்றும் கைனேசெக்ஷுவல் ஆன்ரோசெக்ஷுவல் (Androsexual) என்பது ஆண்மை (Masculinity) என விவரிக்கப்படும் சில விஷயங்களுக்காக, ஒருவர் மீது காதல், அழகியல் அல்லது பாலினரீதியிலான ஈர்ப்பு கொள்பவர்களைக் குறிக்கப் பயன்படுகிறது. அதேபோல பெண்மை என விவரிக்கப்படும் சில விஷயங்களுக்காக, ஒருவர் மீது ஈர்ப்பு கொள்பவர்களை கைனேசெக்ஷுவல் (Gynesexual) என்று குறிப்பிடுவார்கள். மேலே குறிப்பிட்டவை தவிர்த்து, சில பாலின ஈர்ப்புகள் இன்னும் பரவலாக அறியப்படவில்லை என்றாலும், இணையத்தில் அவை குறித்து விவாதங்கள் எழுவதைக் காணலாம். அதில் குறிப்பிடத்தக்க சில, ஃபிக்டோசெக்ஷூவல் (Fictosexual) புத்தகங்கள், அனிமேக்கள், வீடியோ கேம்கள் அல்லது திரைப்படங்களின் கற்பனை கதாபாத்திரங்கள் மீது காதல் அல்லது பாலின ஈர்ப்பு கொண்டிருப்பவர்களை இவ்வாறு விவரிக்கிறார்கள். சேபியோசெக்ஷுவல் (Sapiosexual) உடல் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல், புத்திசாலித்தனம் அல்லது மதிநுட்பத்திற்காக ஒருவர் மீது ஈர்ப்பு கொள்ளும் நபர்களை விவரிக்க இந்தச் சொல் பயன்படுகிறது. லித்தோசெக்ஸுவல் (Lithosexual) லித்தோசெக்ஸுவல் என்பது, ஒரு நபர், மற்றவரிடம் காதல் அல்லது பாலின ஈர்ப்பைக் கொண்டிருப்பார், ஆனால் அதே ஈர்ப்பையோ அல்லது காதலையோ தான் விரும்பும் நபரிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டார். இந்த வகையான ஈர்ப்பைக் கொண்டிருப்பவர்கள், தான் விரும்பும் நபருடன் உடல் ரீதியிலான அல்லது உணர்வு ரீதியிலான இணைப்பு ஏற்படுத்துவது குறித்துக் கவலைகொள்ளமாட்டார்கள். பலதரப்பட்ட பாலின ஈர்ப்புகள் குறித்த சமூகப் பார்வை Getty Images "இதுபோன்ற பலதரப்பட்ட பாலின ஈர்ப்புகளை ஏற்றுக்கொள்வதிலும், அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் சமூகத்தில் உள்ளன. ஆனால், எந்த வகையான பாலின ஈர்ப்பாக இருந்தாலும், அதில் ஒருவரின் 'சம்மதம்' (Consent) என்பது மிகவும் முக்கியம்" என்கிறார் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அமைப்பைச் சேர்ந்த மௌலி. இந்த அமைப்பு, ஒரு சுயாதீன பதிப்பகமாகவும் இலக்கியக் குழுவாகவும் செயல்பட்டு வருவதாகக் கூறும் மௌலி, "பால் புதுமை (LGBTIQA+) எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மீது சமூகத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்" என்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் வேல்ஸில் பாலின ஈர்ப்பு சார்ந்து ஒரு கணக்கெடுப்புநடத்தப்பட்டது. அதில் 13 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களை தன்பாலின ஈர்ப்பு அல்லது இருபாலின ஈர்ப்பு கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அதில், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், 1.5 சதவீதத்திற்கும் அதிகமானோர் (7,48,000 பேர்) தன்பாலின ஈர்ப்பு கொண்டதாகவும், 6,24,000 பேர் (1.3%) இருபால் ஈர்ப்பு கொண்டவர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் அந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது. மேலும், சுமார் 1,65,000 பேர், தாங்கள் பிற பாலின ஈர்ப்புகளைக் கொண்டவர்கள், அதாவது தன்பால் ஈர்ப்பு, இருபால் ஈர்ப்பு, அனைத்துப் பால் ஈர்ப்பு தவிர்த்த பாலின ஈர்ப்புகளைக் கொண்டவர்கள் எனத் தெரிவித்தனர். சுமார் 2,62,000 பேர் (0.5%) பிறப்பில் பதிவு செய்யப்பட்ட பாலினத்தில் இருந்து தங்களுடைய பாலின அடையாளம் வேறுபட்டுள்ளதாகக் கூறினர். "எதிர்பால் ஈர்ப்பு தவிர்த்து பிற பாலின ஈர்ப்புகளை இந்தச் சமூகம் அந்நியமாகப் பார்க்கிறது. இதில் இருவரின் சம்மதம் என்பது உறுதி செய்யப்படும்போது, அவர்களை கண்ணியத்தோடும், விருப்பப்படியும் வாழ அனுமதிக்க வேண்டும்" என்கிறார் மௌலி. "ஆனால் அந்த அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய சூழல்தான் இன்றும் நம் சமூகத்தில் நிலவுகிறது" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp839g3v7eqo
-
விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?
விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது? RS Infotainment இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும், இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடுதலை 2 படம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? படத்தின் கதைகளம் விடுதலை முதல் பாகத்தில், மலைப் பகுதியில் மக்கள் வாழுமிடத்தில் சுரங்கம் அமைத்து வளங்களைச் சுரண்ட நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக புரட்சி வெடித்து மக்கள் படை ஒன்று உருவாகிறது. அதை தலைமை வகிக்கும் பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) என்ற கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகர்கிறது. புரட்சி செய்யும் மக்கள் படைக்கு எதிராக அரசாங்கம் சிறப்பு போலீஸ் படையை அப்பகுதிக்கு அனுப்புகிறது. அதன் ஜீப் ஓட்டுநராக குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் குமரேசன் (சூரி) கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது போல், இரண்டாம் பாகம் முழுக்க பெருமாள் வாத்தியாரின் பின்கதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது. ``பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன? அவரை உருவாக்கியது யார்? ஆயுதப் போராட்டத்தை அவர் கையில் எடுத்ததற்கான காரணம் என்ன?" என்பதுதான் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை" என்கிறது இந்து தமிழ் திசை விமர்சனம். RS Infotainment விடுதலை 2 முதல் பாகத்தில் புரட்சியாளர் `பெருமாள் வாத்தியார்' (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் மலையில் இருந்து குமரேசன்(சூரி) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை வேறு இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். வழி நெடுக பெருமாள் வாத்தியார் தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார். இந்த நிலையில் "அவரின் பின்கதை குமரேசனை எப்படி பாதிக்கிறது எனும் போக்கில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 வலுவான கதைகளத்தைக் கொண்டிருப்பதாக `இந்தியா டுடே' தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. ``சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இந்தத் திரைப்படம் கம்யூனிசத்திற்கான ஒரு கையேடு" என்றும், "கூற விரும்பும் கம்யூனிச கருத்தை எளிமையாக்கி, இன்றைய பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்” இந்தியா டுடே பாராட்டியுள்ளது. `இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம்' RS Infotainment "முதல் பாகத்தில், மலைக் கிராம மக்களின் வாழ்வியலையும் காவல்துறையின் அத்துமீறல்களையும் சமரசமற்று பதிவு செய்திருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் களப்போராட்ட வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பங்களின் வாழ்வியல் வலிகளை உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்" என்று இந்து தமிழ் திசை விமர்சனம் கூறுகிறது. விடுதலை 2 திரைப்படம், "தலைமறைவு, கைது, கண்ணீர், கொடூரமான மரணங்கள் என இயக்கவாதிகளின் வாழ்வாதாரப் போராட்டத்தை டிஜிட்டல் யுகத்தில் ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறும் இந்து தமிழ், "வெற்றிமாறன் இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார்" என்றும் விவரிக்கிறது. மேலும் விடுதலை 2 மூலம் சரியான கேள்விகளைக் கேட்டு, `யார் சரி எது சரி' என்று வெற்றிமாறன் மக்களைச் சிந்திக்க வைப்பதாக இந்தியா டுடே கூறுகிறது. `பெருமாள் வாத்தியாரின் பின்கதை ஏற்படுத்திய தொய்வு' RS Infotainment "இயக்குநர் வெற்றி மாறன் முதல் பாகத்தில் தனது பாணியில் வன்முறைக் காட்சிகளை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி சில விமர்சனங்களைச் சந்தித்தார். இரண்டாம் பாதியும் அதேபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது" என தினமணி விமர்சித்துள்ளது. "இரண்டாம் பாகத்தில் இருக்கும் வன்முறைக் காட்சிகளில் எந்தவிதமான உணர்ச்சிகளும் கைகூடவில்லை. குண்டு வெடிக்கிறது, பெண்ணை ஆடையில்லாமல் சித்தரவதை செய்கின்றனர், பண்ணை அடிமைத்தனத்தைக் கொடூரமாகக் காட்டுவது என எதிலும் நமக்கு உணர்ச்சிகள் கடத்தப்படவில்லை. இது திணிக்கப்பட்ட காட்சிகளாகவே எஞ்சுகின்றன" என்றும் தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. இந்து தமிழ் விமர்சனத்திலும், படத்தில் வரும் வன்முறைக் காட்சிகளில் அதிகமான ரத்தம் தெறிப்பதாகக் கூறுகிறது. இந்தியா டுடே தன் விமர்சனத்தில், ``பெருமாளின் பிளாஷ்பேக்கை விவரிக்கும்போது படம் தொய்வடைகிறது" எனக் கூறியுள்ளது. "விடுதலை 2 அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த கதையாக இருக்காது" என்றும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது. `போலித்தனம் இல்லாத காதல் காட்சிகள்' RS Infotainment படத்தின் ஆரம்பத்தில் கென் கருணாஸ் வரும் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதாகக் கூறும் இந்தியா டுடே, விடுதலை 2 படத்தின் முக்கிய பலம் இயக்குநர் வெற்றிமாறன் எழுதிய ஆழமான வசனங்கள்தான் என்கிறது. படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசியுள்ள இந்து தமிழ், "இங்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற அரசியல் தோன்றுவதற்கான அவசியத்தையும், அதன் ஆரம்பத்தையும் ரத்தம் தெறிக்கப் பேசியுள்ள இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சுப்ரமண்ய சிவா, இளவரசு, சேத்தன், இயக்குநர் தமிழ், பாவெல், பாலாஜி சக்திவேல் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருப்பதாக" பாராட்டியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி அற்புதமான நடிப்புடன் படத்தைத் தாங்குவதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியா டுடே, சூரி, குமரேசனாக இரண்டாம் பாகத்தில் படத்துக்கு பலம் சேர்ப்பதாக எழுதியுள்ளது. இந்து தமிழ் விமர்சனம் படத்தில் வரும் காதல் காட்சிகளில் வெற்றிமாறன் வாகை சூடியிருப்பதாகப் புகழ்ந்துள்ளது. "அழுக்கும், ரத்தமும் படிந்த இயக்கவாதிகளின் போலித்தனம் இல்லாத காதலை விஜய் சேதுபதியும்-மஞ்சு வாரியாரும் பரிமாறிக் கொள்ளும் விதம் சிறப்பு" என்றும் குறிப்பிடுகிறது. திரைப்பட ட்ரெய்லரின்போது மஞ்சு வாரியாரின் ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் "வெற்றிமாறன், திரைப்படத்தில் அதற்கு அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இனி தலைமுடியை வெட்டிக்கொள்ளும் கலாசாரம் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது. ஒளிப்பதிவு சிக்கல்கள் RS Infotainment விடுதலை 2 படத்தில் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்கு சரியான முடிவை அளித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. ``இது பாராட்டுக்குரிய முயற்சி. சில தொடர்ச்சியான ஓவர்லேப் வசனங்களின் சிக்கல்கள் இருந்த போதிலும், உரையாடல் சார்ந்த கதைக்களத்துடன், பல முற்போக்கான சித்தாந்தங்கள் மற்றும் கருத்துகளைக் காட்சிப்படுத்தியன் மூலம் கதை வலுப்பெறுகிறது" என இந்தியா டுடே கூறியுள்ளது. இளையராஜாவின் பின்னணி இசையைப் பாராட்டியுள்ள பற்றி இந்து தமிழ், ``பின்னணி இசையில் இளையராஜா மிரட்டுகிறார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியரின் காதல் காட்சிகளில் கிட்டாரில் மிருதுவாகவும், விஜய் சேதுபதியின் வன்முறைக் காட்சிகளில் ட்ராம்போனில் பதற்றத்துடனும் நம் செவிகளுக்குள் அவரது இசை புகுந்து கொள்கிறது" என்று பாராட்டியுள்ளது. படத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டிய இந்து தமிழ் விமர்சனம், ``ஒரு வசனம் முடிந்து மற்றொரு வசனம் வருவதற்குள் ஓவர்லேப் டயலாக்குகள் வந்துவிடுவதால், நிறைய வசனங்களை முழுமையாகக் கேட்க முடியவில்லை" என்று விமர்சித்துள்ளது. படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அது தேவையின்றி பொருத்தப்பட்ட இடைச்செருகல் போன்ற உணர்வை மட்டுமே கொடுப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ``காட்சிகளாகவே நிறைய முரண்பாடுகள் இருப்பதாக சூரியின் பார்வையில் விரியும் விடுதலையின் கதை, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதையாகவே மாறியுள்ளதாக" தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. ``சூரிக்கு அதிக காட்சிகள் இல்லை. மஞ்சு வாரியரின் வருகை, பெருமாளான விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதில் பெரிய அழுத்தங்கள் இல்லை. கொலைக்கு கொலை என்றே கதை கூறப்பட்டு இருப்பதாகவும்" விமர்சித்துள்ளது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3907kerl3go?at_campaign=ws_whatsapp
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு!
ரோகித் இல்லாத நேரம் கம்பிர் செய்த காரியம்: அஸ்வின் முடிவுக்கு இதுதான் காரணம்! Minnambalam Login1Dec 19, 2024 15:49PM ஆஸ்திரேலியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் பார்டர்- கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் திடீரென ஒரு அறிவிப்பை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியிட்டார். முன்னதாக 2008 ஆம் ஆண்டு கும்ப்ளேவும் 2014 ஆம் ஆண்டு தோனியும் இது போன்று டெஸ்ட் தொடரில் பாதியில் ஓய்வு அறிவித்துள்ளனர். அதே போல, அஸ்வினும் திடீரென்று இப்படி ஒரு முடிவெடுக்க என்ன காரணம் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. திடீர் ஓய்வு அறிவிப்பின் பின்னணி என்னவென்று பார்ப்போம். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக, இந்திய மண்ணில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. முக்கியமாக ஸ்பின்னுக்கு சாதகமான மும்பை, புனே மைதானங்களில் கூட இந்தியா தோற்றது. இந்த தொடரில் 9 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார். ரவீந்தர ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் தலா 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இத்தனைக்கும் வாஷிங்டன் சுந்தர் 2 போட்டிகளில்தான் விளையாடியிருந்தார். இதனால், அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் 11 வீரர்களில் இடம் கொடுத்தால் மட்டுமே நான் வருவேன் என்று அணி நிர்வாகத்திடம் கூறியிருந்தார். நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். ஆனால், பெர்த்தில் நடந்த முதல் போட்டியிலேயே பெஞ்சில் வைக்கப்பட்டார். இந்த போட்டிக்கு பும்ரா கேப்டனாக இருந்தார். இந்த சமயத்தில் தனக்கு குழந்தை பிறந்திருந்ததால், கேப்டன் ரோகித் சர்மா தாயகம் வந்திருந்தார். இந்த போட்டியில் கோச் கம்பிர் செய்த காரியத்தால் விளையாடும் அணியில் அஸ்வின் இடம் பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்திருந்தார். அப்போதே அஸ்வின் ஓய்வு குறித்த முடிவை எடுத்து விட்டார். பின்னர், ரோகித் மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற போது, அஸ்வினை சமாதானம் செய்து அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தார். பிரிஸ்பேனில் நடந்த அடுத்த டெஸ்டில் மீண்டும் அஸ்வின் கரையில் வைக்கப்பட, ஜடேஜா உள்ளே வந்தார். இதையடுத்து, டெஸ்ட் அணியில் இருந்து நிரந்தரமாக விடை பெற அஸ்வின் முடிவு செய்தார். தொடர்ந்து, அவரின் 14 வருட தேசிய அணிக்கான கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கடந்த 2017- 2019 ஆம் ஆண்டு முதல் அஸ்வினுக்கு மூட்டு வலி உள்ளது. பல சிகிச்சைகள் எடுத்தும் பலன் இல்லை. பின்னர், பெங்களூருவில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஓய்வு குறித்து அறிவிக்க இதுவும் ஒரு காரணமென்று கூறப்படுகிறது. ஏனென்றால், இனிமேல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்ற காரணத்தினால் திடீர் ஓய்வு முடிவுக்கு அவர் வந்து விட்டார். https://minnambalam.com/sports/did-coach-gautam-gambhirs-decision-hasten-ravichandran-ashwins-retirement/
-
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
ஒரு பெண் சுயநினைவில்லாமல் இருக்கும்போது அவரை தமது உடற்பசிக்கு இரையாக்கிய இந்த கேடுகெட்ட கயவர்களுக்குக் கொடுத்த தண்டனை போதாது. டொமினிக் ஒரு சதமும் வாங்காமல் தனது மனைவியை மற்றவர்கள் புணர்வதை வீடியோ எடுப்பதை மாத்திரம் நிபந்தனையாகச் சொல்லியிருக்கின்றான். இந்த விகாரமான விடயம் அந்த 50 பேருக்கும் ஏன் உறுத்தலை ஏற்படுத்தவில்லை? பெண்ணை வெறும் போகப்பொருளாக மட்டும் பார்க்கும் ஆணின் மனம்தான் காரணம் என்று நினைக்கின்றேன். அவர்களில் ஒருவர்கூட பொலிஸிடம் முறையிடவில்லை. டொமினிக் பாவாடைக்குள் படம்பிடித்ததை சுப்பர்மார்க்கெற் செக்கியுரிட்டி முறைப்பாடு செய்திருக்காவிட்டால் டொமினிக் இப்பவும் தனது மனைவியை மயக்கமருந்தைக் கொடுத்து மற்றவர்கள் அவரைப் புணர்வதை வீடியோ எடுத்துக்கொண்டிருப்பான்!
-
அநுர – மோடி கூட்டறிக்கையில் ’13’ஏன் இல்லை; ‘ இந்து பத்திரிகை ‘கேள்வி
13ஆவது திருத்தத்தை இலங்கை – இந்திய கூட்டறிக்கையில் ஏன் உள்ளடக்க வேண்டும்? அரசாங்கம் கேள்வி December 20, 2024 12:18 pm இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை ஜனாதிபதியின் இந்திய பயணம் தொடர்பிலான கூட்டறிக்கையில் ஏன் உள்ளடக்க வேண்டும்?. அதற்கான தேவைகள் எதுவும் எழவில்லை. அது எமது அரசியலமைப்பில் உள்ள ஒரு பகுதியாகும். அதன் பிரகாரம் அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தபோது, 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இந்தப் பயணத்தில் கலந்துரையாடப்பட்டதா, கடந்தகாலத்தில் ஜனாதிபதிகள் மேற்கொண்ட பயணம் தொடர்பான கூட்டறிக்கைகளில் 13ஆவது திருத்தம் தொடர்பில் தகவல் குறிப்பிடப்பட்டிருக்கும் இம்முறை ஏன் குறிப்பிடவில்லை. நீங்கள் அதனை குறிப்பிட வேண்டாம் என இந்தியாவிடம் கோரியதாக தெரிவிக்கிடுகிறேதே என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ”நாம் எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம்தான் செயல்படுகிறோம். எமது அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்ளது. இது தொடர்பில் புதிதாக பேசுவதற்கும் கூட்டு அறிக்கையில் உள்ளடக்குவதற்கும் அவசியமில்லை. அடுத்தாண்டு ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும். அதற்குத் தேவையான பின்புலத்தை உருவாக்கி வருகிறோம். பழைய வேட்புமனுக்கள் நீக்கப்பட்டு புதிய வேட்புமனு கோரும் சட்ட ரீதியான திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர் மாகாண சபை தேர்தல் நடைபெறும். எல்லை நிர்ணயம் தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் பின்னர் தேர்தல் நடைபெறும். எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் கூட்டறிக்கையில் உள்ளடக்க வேண்டிய அவசியமில்லை.” என்றார். https://oruvan.com/why-should-the-13th-amendment-be-included-in-the-sri-lanka-india-joint-declaration-the-governments-response/
-
அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய உத்தரவு
அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய உத்தரவு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் டிசரிஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அஜான் கார்திய புஜ்சிஹேவா ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகி இருக்காமையின் காரணமாகவே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறபித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜுன் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மத்திய வழங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன மகேந்திரனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்திருந்தார். ஆளுநராக நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதன் பின்னர் இதுதொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், விசாரணைகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் பிரகாரம் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பிணைமுறியை கொள்வனவு பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மோசடியுடன் தொடர்புடைய பலர் கைதுசெய்யப்பட்டனர். என்றாலும், உரிய விசாரணைகள் மற்றும் வழக்கு தாக்கல்கள் இடம்பெறாதமையால் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. தற்போதைய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வழங்கியுள்ள உத்தரவின் பிரகாரம் விசாரணைகள் மீள ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. https://akkinikkunchu.com/?p=303954
-
தமிழ் தலைமைகளின் ஒற்றுமையின் தேவையும் கொள்கைசார் அடிப்படையற்ற ஒற்றுமை முயற்சிகளும்
தமிழ் தலைமைகளின் ஒற்றுமையின் தேவையும் கொள்கைசார் அடிப்படையற்ற ஒற்றுமை முயற்சிகளும் கலாநிதி.க.சர்வேஸ்வரன் தமிழ்த் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும்; ஒன்றுபட்டு வந்தால் வாக்களிப்போம் என மக்கள் கூறுகின்றனர்.ஒற்றுமை ஏன் தேவை என்றால், வேகமாக தமிழர் தாயகத்திலேயே அவர்களது அடையாளங்களும் இருப்பும் பறிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. 1. இப்போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 2. நிரந்தர தீர்வு நோக்கி ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவ்விடயங்களை ஒன்றுபட்ட கொள்கையின் அடிப்படையில் ஓர் அணியாக செயல்படுவதன் மூலமே சாத்தியமாகும்.பலவாறாக பிரிந்து நின்று தீர்வு தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாடுகளை தமிழ் கட்சிகள் வெளிப்படுத்துவதானது 1.சிங்கள ஆட்சியாளர் காலம் கடத்த உதவுகிறது. 2. சர்வதேச சக்திகள் ஒன்றுபட்டு இலங்கை ஆட்சியாளர் மீது தீர்வு தொடர்பில் அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புகளை சீரழிக்கிறது.இதனாலேயே இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தூதர்கள் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையை வலியுறுத்துகின்றனர். யாரும் சொல்லாமலே தமிழ் தலைமைகளுக்கு இப்புரிதல் இருந்திருக்க வேண்டும். ஏற்கனவே இருந்த பலமான ஒன்றுபட்ட அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானது என்ன அடிப்படையில்? அது படிப்படியாக உடைந்ததற்கான காரணங்கள் எவை? ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஐந்து கட்சிக் கூட்டணியின் ஒற்றுமைக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை? இவற்றுக்கு மனம் திறந்த விமர்சனம், சுய விமர்சனம் ஊடாக பதில் தேடாமல் உறுதியான ஒற்றுமை சாத்தியமில்லை என்பதை தமிழ் கட்சி தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். இன மோதல் தீர்வு நோக்கிய கொள்கைகள், செயல்பாடுகள் வலுவாக முன்னெடுப்பதற்கு ஒற்றுமை அவசியம். எனவே தீர்வு நோக்கிய கொள்கைகளை வகுப்பதற்கான அடிப்படை புரிதல் எதுவாக இருக்க வேண்டும்? 1. வடக்கு – கிழக்கு நிரந்தர இணைப்பு தொடர்பில் இக்கட்சிகளின் ஒன்றுபட்ட நிலைப்பாடும் அதனை அடைவதற்கான வேலைத் திட்டங்களும். 2. வேகமாக பறிக்கப்படும் தமிழர் பிரதேசத்தில் சிங்கள- பௌத்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி தமிழரின் இருப்பையும் தமிழர் தாயகத்தின் இருப்பையும் உறுதி செய்தல் விடயத்தில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டுக்கு வரல்.அதனை செயல்படுத்தல் 3. நிரந்தர தீர்வுக்கான தமிழ்த் தலைமை அனைவரும் ஏற்றுக்கொண்ட தீர்வுத்திட்டமும் அதனை அடைய உரிய சர்வதேச ஆதரவை திரட்டலும் செயல்படுத்துதலும் என்பதில் ஒன்றுபட்ட கருத்துக்கு வரல். கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒற்றுமை என்பதே வலுவானதாகவும் செயற்திறன் மிக்கதாகவும் அர்த்தமுள்ள ஒற்றுமையாகவும் அமையும். இவ்வகையில் அமைந்த ஒற்றுமை என்பது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி போன்ற ஓர் பொதுவான கட்சியாகவோ அல்லது ஏற்றுக்கொண்ட கொள்கைகளை ஓர் அணியாக சேர்ந்து செயல்படுத்தும் வகையிலானதாகவோ இருக்கலாம். குறுகிய கட்சி நலன் மற்றும் கட்சிகளில் சிலரின் பதவி நலன் போன்றவற்றிலிருந்து மக்கள் நலனை முன்நிலைப்படுத்தி செயல்பட்டால் மட்டுமே இத்தகைய கொள்கை அடிப்படையிலான வலுவான ஒற்றுமையை கட்டி எழுப்ப முடியும். மாறாக குறுகிய நலன்கள் அடிப்படையிலான இரகசிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த, கொள்கைகளை திரித்து அல்லது மறுத்து பேசுபவர்களால் வலுவான ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. மேற்கண்ட புரிதலின் அடிப்படையில் தற்போதைய இரண்டு ஒற்றுமை முயற்சிகள் பற்றியும் அவற்றின் சாத்தியம், அசாத்தியம் பற்றியும் உண்மையான வலுவான ஒற்றுமைக்கான வழிமுறை பற்றியும் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஒன்று, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னெடுத்துவரும் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கிய சமஷ்டித் தீர்வு திட்ட அடிப்படையிலான ஒற்றுமை முயற்சி. இது அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மூன்றாண்டுகளில் முன்வைக்க இருப்பதாக கூறும் புதிய அரசியல் யாப்பில் இத்தீர்வு திட்டத்தை உள்ளடக்குவதற்கான கொள்கை ரீதியான உடன்பாட்டை ஏனைய கட்சிகளிடம் பெறல் என்பதாகவே தெரிகிறது. இவ்வகையில் அவர் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுடனும் டெலோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கல நாதனையும் சந்தித்துள்ளார். எனினும் இவர்களுடைய பதில் தொடர்பில் எந்த தெளிவான விடயங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. இங்கு கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்கள்; 1, மூன்றாண்டுகள் கழித்து வரும் என எதிர்பார்க்கப்படும் புதிய யாப்பில் இன மோதல் தீர்வுக்கு ஒன்றுபட்டு செயல்படல் அல்லது ஒரே குரலில் செயல்படல் என்ற விடயத்தை மட்டுமே இது நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய யாப்பு வருமா? வராதா? என்பதை கணிக்க இந்த ஆட்சியின் இன்றைய அவகாசம் போதாது. ஏனெனில் ஊழல் ஒழிப்பு, பொருளாதாரத்தை உயர்த்தல் போன்ற வேலை திட்டங்களே முன்னுரிமை பெறுகின்றன. இதற்குள் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்புகள், வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு, வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருதல், ஏற்றுமதியை அதிகரித்தல், உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்தல் என நீண்ட பட்டியல் கொண்ட பொருளாதாரம் சார்ந்த வேலை திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றின் சாத்தியப்பாட்டை பொறுத்தே இவ் ஆட்சியின் ஸ்திரத்தன்மையும் தீர்மானிக்கப்படும். ஆனால் நிறைவேற்றப்பட்ட இடைக்கால நிதி அறிக்கையில் பௌத்தத்திற்கு 700 மில்லியன்களும் தொல்லியல் துறைக்கு பெருமளவு நிதியும் ஒதுக்கப்பட்டமை இவர்களது பௌத்த- சிங்கள ஆக்கிரமிப்பு செயல்திட்டம் வடக்கு – கிழக்கில் தடையின்றி தொடரும் என்பதற்கான சமிக்கையாகவே பார்க்க முடியும். எனவே புதிய யாப்பின் வருகை அதனூடான நிரந்தர தீர்வு என்ற கேள்விக்குறியான நீண்ட கால திட்டத்தை அடைவதற்கு முன்னரே வடக்கு – கிழக்கு சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பின் கீழ் பெருமளவுக்கு கொண்டுவரப்படும் ஆபத்தும் தாயக கோட்பாடு என்ற கோரிக்கையை வலுவிழக்கச் செய்து தீர்வு கோரிக்கைகளை அர்த்தமிழக்க செய்யும் அபாயமும் உடனடியாக கணக்கில் எடுக்கப்பட வேண்டும். இவ்வகையில் மாகாண சபைக்கான அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தலை விரைந்து உத்தரவாதப்படுத்துவது அவசியம் ஆகிறது. மாகாண சபை அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அதுவே தீர்வாகிவிடும். சமஸ்டி பற்றிய கோரிக்கை வலுவிழந்து விடும் என்ற வாதம் இரண்டு அடிப்படைகளில் தவறானது. 1.மேற்கூறியது போல் சமஷ்டிக்கான அரசியல் சூழலை ஏற்படுத்து முன்னரே எமது மக்களினதும் மண்ணினதும் இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும். 2.இன்று 13வது திருத்தத்தில் என்னென்ன குறைபாடுகள், பலவீனங்கள் உண்டோ, நடைமுறைப்படுத்தப்படும் போதும் அவை இருக்கும். மேலும் அவற்றை நடைமுறையில் எடுத்துக்காட்டி சமஷ்டியின் அவசியத்தை சமூகத்திற்கு புரிய வைத்து ஆதரவை திரட்டுவதற்கும் ஏதுவாகும். எனவே கஜேந்திரகுமாரின் ஒற்றுமை முயற்சியில் நிரப்பப்பட வேண்டிய இடைவெளிகள் பலமாக உண்டு. இதற்கான கரிசனையின்றி உறுதியான ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதன் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைமை குழு அண்மையில் தமிழரசு கட்சியுடன் இணைந்து செயல்படுவது பற்றி தமிழரசு கட்சியுடன் பேசுவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் ஏனைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவு எடுக்குமா? அல்லது தனியாகவே பேசி முடிவெடுக்குமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானபோது ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் பிரகாரம் விடுதலைப்புலிகளே தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர். கூட்டமைப்பு அப்பேச்சுவார்த்தைகளுக்கு பின்பலமாக செயற்படும் என்ற விடயம் தவிர, கூட்டமைப்பு ஓர் யாப்பின் அடிப்படையில் ஜனநாயக ரீதியாக செயல்படுவதற்கான அம்சங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதே சட்டப்படி பதிவு செய்யப்பட்ட பெயர் அல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணியே சட்டப்படியான பெயராகவும் உதயசூரியனே சின்னமாகவும் இருந்தது. இறுதி யுத்தத்தில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் உட்கட்சி பிரச்சனையால் கூட்டணியின் பெயர், சின்னம் ஆகியன நீதிமன்றத்தின் ஊடாக ஆனந்த சங்கரியின் வசமாகியது. இவ்விடயத்தில் தமிழரசு கட்சி போதிய அக்கறை காட்டாமையே ஆனந்த சங்கரி சார்பில் தீர்ப்பு வர காரணம் ஆகியது என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆனந்த சங்கரி கொண்டு சென்றது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பதிவு செய்யப்பட்டல் நீதிமன்றத்தின் ஊடாக பங்காளிக் கட்சிகள் ஏதேனும் கொண்டு சென்று விடும் என்ற சிறுபிள்ளைத்தனமான வாதத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய தமிழரசு கட்சி நிராகரித்தது. புலிகள் இருந்தபோது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அவர்களது மறைவுக்குப் பின் வலுவற்றதாகிறது. மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பதிலாக தமிழரசு கட்சிக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு கூட்டமைப்பின் சட்டப்படியான கட்சிப் பெயர், சின்னம் பயன்படுத்தப்பட்டது. இங்கு தீர்வு தொடர்பான கொள்கை நிலைப்பாடுகள் பற்றியோ கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக வலுவாக செயல்படுவதற்கான கட்டமைப்புகள், சட்டதிட்டங்கள் எதுவுமே இன்றி வெறும் தேர்தல் கூட்டணியாகவே செயல்பட்டது. பேச்சுவார்த்தைகளில் அனைத்து தலைவர்களும் இணைந்து பங்குபற்றினாலும் அதற்கு முன்னராக என்ன பேசுவது என்பது பற்றியோ அல்லது பேச்சுவார்த்தை வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், உபாயங்கள் பற்றியோ அங்கத்துவ கட்சித் தலைவர்களை அழைத்து பேசும் பழக்கம் கடைசி வரை கூட்டமைப்பில் இருந்ததில்லை. தனியாக செயல்படும் தமிழரசு கட்சிக்குள்ளேயே அத்தகைய நடைமுறை இல்லை. மேலும் தமிழரசு கட்சி பல வழக்குகளில் சிக்குண்டு, பல குழுக்களாக – குழுவாக செயற்பட்டு வரும் நிலையிலேயே உள்ளது. எனவே பழைய கூட்டமைப்பை மீள உருவாக்குவேன் என ஸ்ரீதரன் கூறுவது அர்த்தமற்றது. ஏனெனில் கட்சிக்குள் அவர் முடிவெடுக்கும் எந்த பதவியிலும் இல்லை. கட்சி முடிவை தீர்மானிப்பதில் சுமந்திரனின் ஆதிக்கமே இன்றும் நிலவுகிறது .மேலும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் கருத்தானது, தமிழரசு அதிக எண்ணிக்கையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பதால் மற்றவர்கள் விரும்பினால் தம்முடன் இணையலாம். அதனை கட்சியின் மத்திய குழுவே முடிவெடுக்கும் என்பதாகும். ஆக உள்ளார ஜனநாயகப் பண்புகள், நடைமுறைகள் அற்ற சுமந்திரனின் தனியார் கம்பெனி போல் செயல்பட்டு வரும் தமிழரசு கட்சியுடன் செயல்படுதல் என்பதில் ஏராளமான தடைகள் உள்ளன. ஆனால்,மக்கள் நலன் சார்ந்து தீர்வு தொடர்பான பொது நிலைப்பாட்டுக்கு வருதல் என்பது பற்றி பேசலாம்.அவற்றின் அடிப்படையில் தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு செயல்படலாம். சிங்கள கட்சிகள் குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தியின் அதிகார பகிர்வில்லை, ஆனால் இன- மத சமத்துவத்தை உறுதிப்படுத்துவோம் என்கிற அபாயகரமான வெற்றுக் கோஷத்தின் பின் தமிழ் மக்கள் சென்று தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளாமல் பாதுகாக்க தேர்தல் கூட்டுகள் பற்றி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக ஏனைய கட்சியுடன் பேசுவது பற்றியும் சிந்திக்கலாம். மக்கள் நலன் சார்ந்து தீர்வு தொடர்பான கொள்கையில் ஒன்றுபட்டு செயல்பட்டாலே மக்கள் ஒன்றுபட்டு தமிழ் தலைமையின் பின் அணி திரள்வார்கள். அதை விடுத்து குறுகிய தேர்தல் வெற்றி நலன் அடிப்படையில் மட்டுமோ அல்லது தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்க தவறி, இருப்பதை இழந்து பறப்பதற்கு பின்னால் ஓடும் வகையான ஒற்றுமை குரலோ நிலைக்கவும் மாட்டாது, மக்களுக்கு பயனுள்ளதாக அமையவும் மாட்டாது. உண்மையான ஒற்றுமையை அல்லது ஒன்றுபட்ட செயற்பாட்டை உறுதிப்படுத்த தமிழ் தேசியப் பரப்பில் செயற்படும் அனைத்துக் கட்சிகளும் தீர்வு தொடர்பான கொள்கை முடிவுகளையும் அவற்றை செயல்படுத்தும் வழி வகைகளையும் உருவாக்கும் வெளிப்படையான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே. இதனை எந்த கட்சி முன்னெடுத்தாலும் வரவேற்கப்பட வேண்டியது. https://thinakkural.lk/article/313943