Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்: அருட்தந்தை மா.சத்திவேல் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. அரசியல் களச் சூழ்நிலை அறிந்து எமக்கிடையிலான பலமான அரசியல் கூட்டு கட்டமைப்பு உருவாக்கினால் மட்டுமே நாம் எதிர்நோக்கும் அரசியல் போரினை எதிர்கொள்ள முடியும். தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் பிரேரணைகளை மையப்படுத்தி பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான ஆயத்த பேச்சுவார்த்தையினை தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் தமிழரசு கட்சி தலைவர் சிறீததரனுக்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சு வார்த்தையை வரவேற்பதோடு இக்கூட்டு செயற்பாடு நாடாளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் கொள்கை ரீதியில் பலமடைய வேண்டும். விரிவடைய வேண்டும். புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களும் தடம் மாறாது களத்திலும் புலத்திலும் அரசியல் கடப்பாட்டினை நிறைவேற்ற துணை நிற்க வேண்டும். அன்று பொங்கு தமிழாக அதனைத்தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையாக திரண்டது போன்று மீண்டும் மக்கள் அரசியலும் அதற்கான கூட்டு செயல்பாடும் கொள்கை ரீதியில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி பலமடைய அனைவரும் அரசியல் முதிர்ச்சியோடு தம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்கின்றோம். தமிழர் தாயக விடுதலை போராட்டத்தை தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் பயணத்தை சிதைத்த சக்திகளுக்கு மத்தியில் நேற்று முளைத்த சில அரசியல் காளான்களுக்கும் எம் தாயக அரசிற்கான கூட்டு தடையாக இருக்கலாம். அது எல்லாவற்றையும் பாடமாக கொண்டு அரசியல் பயணத்தில் விரைவாக பலமடைய வேண்டும் என்பதே தமிழ் தேச மக்களின் அரசியல் விருப்பம். நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்றில் 3/2 அதிகமான பெரும்பான்மை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும், மாகாண சபை தேர்தலிலும் முழு நாட்டையும் தமதாக்கிய பின்னர் யாப்பு சீர்திருத்தம் எனும் போர்வையில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும். சூடு கண்டவர்களாக நாம் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கட்சிகளாகவும் சமூக அமைப்புகளாகவும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எம் தாயக அரசியலை மையப்படுத்தி கூட்டு செயற்பாட்டு சூழலை அவசரமாக தமிழர் தாயக பிரதேசங்களில் உயிர்ப்பித்தல் அவசியம். உயிர்ப்பிக்கப்படும் கூட்டு தமிழ் மக்கள் பேரவை முன் வைத்த அரசியல் முன்மொழிவுகளோடு ஆரம்பிக்கலாம். பல்வேறு விதமான கருத்து மோதல்கள், தலைமைத்துவம் தொடர்பான சிக்கல்கள்,அமைப்பு ரீதியில் நிர்வாக சிக்கல்களும் வரலாம். கொள்கை அரசியலில் விட்டுக்கொடுப்புகள் இன்றி பலமான தேச அரசியலை கருத்தினை முதன்மைபடுத்தி சகிப்புத்தன்மையுடன் பயணத்தை தொடருவது சாலச் சிறந்தது. மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் அண்மைய ஊடக பேட்டியில் மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் ஒன்று என்று கூறியதில் இருந்து மக்கள் முன்னணியில் அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாதவர்கள் தேசிய மக்கள் சக்தி என முகம் கொண்டு வெளியில் வந்துள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளருடைய கூற்றுக்கு தேசிய மக்கள் சக்தி இதுவரைக்கும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. எனவே தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணியே. எனவே தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அதன் கோரமுகம் அவ்வாறே உள்ளது என்பதிலே மாற்று கருத்து கிடையாது. தமிழர் தேசத்தில் அரசு படைகளை பலப்படுத்தியதும், படைத்தளங்களை விரிவுபடுத்தியதும், அரச காணி மற்றும் பொதுமக்கள் காணிகளையும் கையகப்படுத்தியதும், மகாவலி அதிகாரி சபையை முன்னோக்கி நகர்த்துவதும் சிங்கள பௌத்த திணைக்களங்களை சுதந்திரமாக செயல்பட இடமளித்ததும் தெற்கின் சிங்கள பௌத்த பேரின வாத அரசியலின் தேவை கருதியே. தற்போதும் அதே அரசியல் கருத்தியல் கொண்டவர்கள் பாதைகள் திறந்து விடுகின்றனர், படைத்தளங்களை கூட்டுகின்றனர்( படைகளை குறைக்கவில்லை) மாவீரர் தினத்தை நினைவு கூற அனுமதிக்கின்றனர், கைதும் செய்கின்றனர்). இது போன்ற கவர்ச்சி செயல்கள் மேலும் தொடரலாம். இதுவும் அவர்களின் அரசியல் தேவை கருதியே அன்றி தமிழர்களின் தேவை கருதி அல்ல. இதனை தமிழ் தேச மக்களும் நன்கு உணர்வார்கள். இந்நிலையில் மாற்றம் அடையலாம். எதிர்த்தரப்பு கோஷங்களுக்கு மத்தியில் மேலும் இறுக்கமடையலாம். ஆட்சி அதிகாரமும் பெரும்பான்மையையும் அவர்களிடத்தில் இருக்கின்றது என்பதை நாம் மறக்கவில்லை. தமிழர் எதிர்கால அரசியல் நலன் கருதி கடந்த கால அரசியல் குரோதங்கள், போட்டியை அரசியல், காட்டிக் கொடுப்புக்கள், சலுகை அரசியல் என்பவருக்கு இடம் கொடுக்காது பெரும் தேசிய வாதத்தினை தேசமாக மக்களோடு சேர்ந்து எதிர் கொள்ள கொடுக்கவும் பேச்சு வார்த்தை தொய்வும் தோல்வியையும் சந்திக்காது முன்னோக்கி நகர்ந்து செல்லும் பொறுப்பும் கடப்பாடும் தமிழ் தேச உணர்வாளர்களுக்கு அவசியம். மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். அது கூட்டு அரசியலில் சுடராக வியாபிக்கட்டும்." என்று தெரிவித்துள்ளார். https://oruvan.com/sri-lanka/2024/12/04/national-peoples-power-will-intensify-the-political-war-against-tamils
  2. டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம் December 4, 2024 05:53 pm 5.7 பில்லியன் ரூபா வரி மற்றும் மேலதிக கட்டணங்களை செலுத்த தவறியதன் காரணமாக டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் நாளை முதல் நிறுத்தப்படவுள்ளது. குறித்த நிறுவனம் கலால் வரியை செலுத்தத் தவறியதன் காரணமாகவும் அது தொடர்பான 5.7 பில்லியன் ரூபா கலால் திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டியதன் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை நாளை (05) முதல் இடைநிறுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். மேலும், மதுபான உற்பத்தி செயல்முறையை 05.12.2024 முதல் இடைநிறுத்தவும், மேலும் வரி மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து கலால் மதுபான உரிமங்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் நீட்டிக்கப்படாது என்றும் கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கலால் கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது https://tamil.adaderana.lk/news.php?nid=196839
  3. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்: சாணக்கியன் எம்.பி கோரிக்கை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீது நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டில் சமத்துவம் என்பது மிகவும் முக்கியமானது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனாலும், ஜனாதிபதி அண்மையில் ஆற்றிய அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தான சில பிரச்சினைகள் பற்றி பேசியிருக்கவில்லை. வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரதான கட்சி என்ற அங்கிகாரம் இலங்கை தமிழரசு கட்சிக்கு மீண்டும் கிடைத்துள்ள நிலையில், இந்த விடயங்களை நான் கவனத்திற்குகொண்டு வருகின்றறேன். அந்த வகையில் பல அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அரசியல் நோக்கத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடிய இந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் மீது தற்போது பல்வேறு வழங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தற்போது அந்தச் சட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். இந்த விடயத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது மட்டுமின்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். உண்மை கண்டறியப்படுவதுடன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். காணி சம்பந்தமான பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு அதிகம் இருக்கின்றன. இந்த விடயத்தில் சமத்துவம் என்ற அடிப்படையில் சிங்கள மக்களுக்கு இல்லாத பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இருக்கின்றன. மேய்சல் தரையுடன் தொடர்புடைய மகாவலி அதிகார சபையுடைய பிரச்சினை வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ளன. இந்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய வேண்டும். அதேபோல் தொல்பொருள் திணைக்களத்தால் இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்கள சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக பிரச்சினையில் அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது நிர்வாக ரீதியான ஒரு பிரச்சினை. இது தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினை. இந்நிலையில், அரசாங்கம் இதற்கொரு தீர்வை வழங்க வேண்டும். ஏனெனில் ஆளும் கட்சிக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆகையினால், அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். மேலும், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். வடக்கில் உள்ள முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனாலும், இந்த விடயத்தின் இன்னும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை அகற்ற அரசாங்கம் முன்மாதிரியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியிருந்தார். https://oruvan.com/sri-lanka/2024/12/04/tamil-political-prisoners-should-be-released
  4. 13ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என நான் கூறவில்லை: டில்வின் சில்வா விளக்கம் புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாறாக மாகாண சபை முறை எவ்வித கலந்துரையாடல்களுமின்றி ஒழிக்கப்படும் என நான் ஒருபோதும் கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அண்மையில் அவர் தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்ததாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்தியில், ”தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாகக் கூறிய இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இருப்பினும் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் ஊடாக நாட்டில் நடைமறைப்படுத்தப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை. மாறாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகின்றது. எனவே, பயனற்ற மாகாண சபை முறைமைக்குப் பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும், அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையைப் பெற்றக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது. இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயல்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம். நடைமுறையில் உள்ள பழைமை வாய்ந்த அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பு உருவாக்குவது முக்கிய பொறுப்பாக நாங்கள் கருதுகின்றோம். புதிய அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13ஆவது அரசமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது." என ரில்வின் சில்வா கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டில்வின் சில்வா, வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987இல் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் தவறியுள்ளது. அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளது. அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13ஆவது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் ஒழிக்கப்போவதில்லை என்றே நான் கூறினேன். மேற்படி புதிய தீர்வுகள் எதிர்காலத்தில் கலந்துரையாடலுக்கு இலக்காக்கப்படுகின்ற அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். அந்த தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மெழிவுகளை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்படும். எனது செய்தி திரிவுபடுத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார். https://oruvan.com/sri-lanka/2024/12/04/i-did-not-say-that-the-13th-amendment-will-be-abolished-tillvn-silva-clarifies
  5. வட மாகாண முதற்தர வர்த்தகக் கண்காட்சியின் அனுசரணையாளர்களாக கைகோர்க்கும் Fine Group நிறுவனம் maheshDecember 4, 2024 15ஆவது தடவையாகவும் நடைபெறவிருக்கும் யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (JITF-2025) உத்தியோகபூர்வ கருவிகள் மற்றும் இயந்திரப் பங்குதாரராக கைகோர்ப்பதில் Fine Group பெருமிதம் அடைகிறது. “வடக்கிற்கான உங்கள் நுழைவாயில்” எனும் மகுடத்தின் கீழ் 2025 ஜனவரி 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை பார்வையிட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகைதர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இக்கண்காட்சி தொடர்பில் கடந்த 5ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட Fine Group நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் யஹ்யா அய்யாஷ் கருத்துத் தெரிவிக்கையில்: “JITF-2025 கண்காட்சியின் அனுசரணையாளர்களாகக் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இதன்மூலம் வடக்கின் உள்ளூர்த் தொழில் துறையை மேம்படுத்தவும், எமது புதிய தொழிநுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வடக்கின் வாடிக்கையாளர்களிடம் கொண்டுபோய் சேர்க்கவும் எதிர்பார்க்கின்றோம். மேலும் எமது விவசாய இயந்திரங்கள், மின்சார செலவில்லா விவசாயத்திற்கு துணை நிற்கும் Solar உற்பத்திகள், பலவகைப்பட்ட Welding இயந்திரங்கள், மற்றும் பிற கருவிகளையும் காட்சிப்படுத்துவன் மூலம் தொழில் முனைவர்களையும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இதற்குப் பின்னரான காலத்திலும் Fine Group நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை வடக்கிற்குக் கொண்டுசெல்லும் ஒரு வாயிலாகவே நாம் பார்க்கின்றோம்” எனவும் குறிப்பிட்டார். https://www.thinakaran.lk/2024/12/04/business/99984/வட-மாகாண-முதற்தர-வர்த்தக/
  6. ஏழு வருடங்களாக எதுவும் செய்யாத ஓ. எம். பி. எதற்கு? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி December 3, 2024 ஏழு வருடங்கள் கடந்தும் ஓர் உண்மையைகூட கண்டறியப்படவில்லை. எனவே, செயல்திறனற்ற ஓ. எம். பி. உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 15 வருடங்களாக எமது உறவுகளைத் தேடி வருவதுடன் 20. 02. 2017 இலிருந்து தொடர் கவனவீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றோம். தொடர்ந்து வந்த அரச தலைமைகளால் காலத்துக்குக் காலம் ஏமாற்றப்பட்டு வந்ததால் சர்வதேச நீதியை வலியுறுத்தி இன்னும் போராடி வருகின்றோம் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். காணாமல் போன ஆட்கள் பற்றிய (ஓ. எம். பி.) அலுவலகத்துக்கு புதிய நியமன கோரிக்கை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஓ. எம். பி. சட்டம் வரையப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் அபிப்பிராயங்களுக்கோ அல்லது அவர்களின் வேண்டுகோள்களுக்கோ செவிசாய்க்காது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வாதிகாரத்துடன் பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியோ அவர்களின் பங்குபற்றலுடனோ அப்பொறிமுறையைச் செயல்படுத்த முனைப்புக்காட்டப்படுவதில்லை. மாறாக நாங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கும் வெளிப்படைத்தன்மையற்ற நிலையுமே காணப்படுகிறது. எந்தப் பொறிமுறையும் சம்பந்தப்பட்டவர்களின் பங்களிப்போ, விருப்போ இல்லாவிட்டால் வெற்றியளிக்காது என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள எவரும் தயாரில்லை. ஓ. எம். பி. சட்டம் உருவாக்குவதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் கருத்தறிய ஏற்படுத்தப்பட்ட கலந்தாலோசனைச் செயலணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் எவ்வித ஊதியமும் இன்றி ஊர் ஊராகச் சென்று கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்து பரிந்துரைகளை அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தோம். பரிந்துரைகள் கையளிக்கப்படும் முன்னரே அவசர அவசரமாக வரையப்பட்ட ஓ. எம். பி. சட்டமூலத்தில், எமக்கு உடன்பாடில்லாத விடயங்களைச் சுட்டிக்காட்டி சில திருத்தங்களை செய்யும்படி கேட்டிருந்தோம். ஆனால், அதற்குரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அது மாத்திரமல்ல கலந்தாலோசனைச் செயலணியால் பரிந்துரைக்கப்பட்டவையில் முக்கியமான பரிந்துரைகள் பல கருத்தில் கொள்ளப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எதையும் எடுக்காதது மட்டுமல்லாது, எமது எதிர்ப்பையும் மீறி ஓ. எம். பி. அலுவலகத்தை திறப்பதில் சம்பந்தப்பட்டவர்கள் உறுதியுடன் இருந்தார்கள். அதனால் யாழ்ப்பாணத்தில் அதிகாலை 4. 30 மணிக்கும், கிளிநொச்சியில் ஊரடங்கு அமுலில் இருந்த நேரத்திலும் அலுவலகத்தைத் திறந்தார்கள். 30/1 தீர்மானத்தின்படி, உண்மை, நீதி, இழப்பீடு, மீள நிகழாமை ஆகிய நான்கு தூண்கள் முக்கியமானவை எனக் கூறப்பட்டது. உண்மையை கண்டறிந்தபின் அவ்விடயம் நீதிப்பொறிமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஓ. எம்.பி. ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகின்ற போதும் ஓர் உண்மைகூட கண்டறியப்படவில்லை. ஆனால், அதற்குள் நீதியை ஓரங்கட்டிவிட்டு இழப்பீட்டு அலுவலகம் திறக்க வேண்டிய தேவை என்ன? உண்மையை கண்டறியாமலே பணத்தை கொடுத்து ஏழைகளின் வாயைமூடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காகவா?. பன்னாட்டு தூதுவர்களுக்கு OMP இல் எமக்குள்ள திருப்தியீனம் தொடர்பில் காரணங்களுடன் தெரிவிக்கும்போது அவர்கள் ஒரு தடவை அதனுடன் இணைந்து செயல்பட்டு பாருங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்கவும், அவர்களுக்கு OMP இன் செயல்திறன் தொடர்பில் புரியவைப்பதற்குமாக 20.07.2019 இல் உண்மையை கண்டறிவதற்காக நாம் ஒப்படைத்த ஐந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவரங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது மட்டுமல்ல அவற்றை தொலைத்துவிட்டு மீள பிரதியை கோரி நின்றமையானது இந்த அலுவலகம் எவ்வளவு பொறுப்பின்மையுடன் நடந்து கொள்கின்றது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். உண்மையிலேயே எமக்கு எமது உறவுகளின் ஆவணங்கள் உயிர்மூச்சு. ஆனால் அவர்களுக்கு அவை வெறும் காகிதம் மட்டுமே. இதுவே பாதிக்கப்பட்ட ஒரு உறவாக இருந்தால் அவருக்கு எம் வலி, தவிப்பு, அதன் பெறுமதி புரிந்திருக்கும். கடந்தகால அனுபவமும், OMP மற்றும் அரசாங்கம் எம்மை நடாத்திய விதமும் எம்மைச் சோர்வடையச் செய்துள்ளதோடு, மீளவும் மன அதிர்வுக்கு உள்ளாக்கியுள்ளன. அவை OMP ஒரு போலியான பொறிமுறை என்ற முடிவுக்கு வருவதற்கு எம்மைத் தள்ளியுள்ளன. உண்மையாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு விரும்புவார்களாயின் செயல்திறனற்ற இந்த OMP உடனடியாகக் கலைக்கப்படவேண்டும் என்பதுடன் எமது உறவுகள் சரணடைந்த, கையளிக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட முக்கியமான நான்கு காவலரண்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் விசாரிக்கப்பட்டு உண்மை அறியப்பட வேண்டும். எமது உறவுகளைக் காணாமலாக்கிய இராணுவ அதிகாரிகள் தற்போதும் உயிருடனும் பதவியிலும் உள்ளார்கள். அவர்களை உடனடியாக விசாரிப்பதன் மூலம் உண்மையை கண்டறிய வேண்டும். அதுவே காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வந்த எமக்கு நல்லெண்ண சமிக்ஞையாக இருக்கும். அதை விடுத்து எம்மால் நிராகரிக்கப்பட்ட OMP இற்கு புதியவர்களை உள்வாங்க ஆட்சேர்ப்பு செய்ய முனைவதானது எம்மை தொடர்ந்து ஏமாற்றவே சகலரும் முயற்சிக்கிறார்கள் என்ற உணர்வை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. மாற்றம் எனும் கோஷத்துடன் பதவி ஏறிய புதிய அரசு, பழைய சிங்கள அரசுகள் போலவேதான் தமிழ் மக்களின் மிக முக்கியமான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனையை அணுகவுள்ளது என்பதையே காட்டுகின்றது. சர்வதேச நீதி பொறிமுறையையே (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ICC) எமது பிரச்சனைக்கான தீர்வாகும். நாம் தொடர்ச்சியாக சர்வதேச நீதியை நோக்கியே போராடி வருகின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://eelanadu.lk/ஏழு-வருடங்களாக-எதுவும்-ச/
  7. தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் ஒரே நாளில் கைவிடப்பட்டது 04 Dec, 2024 | 10:28 AM சியோல்: தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும் அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார். 50 ஆண்டுகளில் தென்கொரியாவில் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 190 எம்.பி.க்கள் வாக்களித்தனர். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முற்பட்டதால் ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிபரின் இந்த அவசரநிலை அறிவிப்பு செல்லாது என்று நாடாளுமன்ற சபாநாயகர் வூன் வொன் சிக் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்கள் பலரும் ஆராவாரம் செய்து கொண்டாடினர். இந்த அவசரநிலை பிரகடன விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து அதிபர் யூன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. தென் கொரியாவை 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்துவந்த பார்க் சங் ஹீ 1979-ல் கொல்லப்பட்டபோது அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/200379
  8. இந்தியாவின் 15 முதலீட்டார்கள் யாழ் வருகைதரவுள்ளனர் - துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவிப்பு Published By: Digital Desk 7 04 Dec, 2024 | 08:59 AM ( எம். நியூட்டன் ) யாழ்ப்பாணத்திற்கு 15 முதலீட்டாளர்கள் வருகை தர உள்ளார்கள் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்தும் வடமாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நேற்று செவ்வாய்க்கிழமை (03) காலை ஆரம்பமானது . மூன்று நாட்கள் நடைபெற உள்ள வட மாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் பல்வேறு முயற்சிகளை செய்து உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கு இந்திய துணை தூதரகம் உதவிகளை செய்து வருகிறது. உற்பத்திகளை சந்தைப்படுத்துகின்ற போது தான் உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி அடையும். அதற்கு இத்தகைய சந்தை வாய்ப்புகள், கண்காட்சிகள் உதவும். இவை மூலம் உற்பத்திகளை அதிகரிக்க செய்வதுடன் உற்பத்திகளை அடுத்த தரத்திற்கு கொண்டு செல்வதற்கு ஊக்கப்படுத்த கூடியதாக இருக்கும். இந்திய தூதரகம் பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக கல்வி, கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் தூதரக உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக அடுத்த ஆண்டு 2025 ஆண்டு முதல் வர்த்தக நிகழ்வுகள், தொழில் முயற்சிகளுக்கு உதவிகளை செய்யவுள்ளது. அந்த வகையில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15 மேற்பட்ட இந்திய முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்கள். மேலும் இந்திய துணைத் தூதரகம் ஊடாக இந்திய தொழில்நுட்ப கைத்தொழிலுக்கான கற்கை நெறிகளை பயில்வதற்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். இதனை பயன்படுத்த வேண்டும். இன்னும் பல கற்கை நெறிகளை கற்கமுடியும் ஆர்வமுடையவர்களை பங்குபற்ற ஊக்கப்படுத்த வேண்டும் என்றார் . இந்த கண்காட்சியில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், மற்றும் வடக்கு மாகாண தொழில்துறை பணிப்பாளர்கள், திணைக்கள அதிகாரிகள், சிறு தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டார்கள். யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றுவரும் இந்த சந்தை நிகழ்வில் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை கலாச்சார நிகழ்வுகள் நடைபெற உள்ளதுடன் இந்த சந்தையில் நெசவு உற்பத்திகள், கைப்பணி உற்பத்திகள், உணவு உற்பத்திகள், ஆடை உற்பத்திகள், விவசாய உற்பத்திகள் தொழில் வழிகாட்டல் வியாபார ஆலோசனை உள்ளடங்கலாக 60 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறுவதோடு அனுமதி இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/200372
  9. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்த முயற்சி - விசாரணைகள் ஆரம்பம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 04 Dec, 2024 | 11:36 AM வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட அரசியல் குழுவொன்று முயல்வது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொதுமக்;கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவர்கள் சமூக ஊடகங்களில் போலியான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் சிலவருடங்களிற்கு முன்னர் முல்லைத்தீவில் இடம்பெற்ற மாவீரர்தினநிகழ்வுகள் குறித்த வீடியோக்களை இந்த வருடம் பதிவிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். வடக்கில் 244 மாவீரர் தினநிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன ஆனால் பத்தில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் கொடிகள் இலச்சினைகள் காட்சிப்படுத்தப்பட்டன என அமைச்சர் தெரிவித்துள்ளார். குடும்பத்தவர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூரலாம் என்பதே எங்கள் நிலைப்பாடு,ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால் அதன் கொடிகளை இலச்சினையை காட்சிப்படுத்த முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/200388
  10. @ரதி யை மீண்டும் கண்டது சந்தோஷம்🥰 யூடியூப்பர்களை எல்லாம் பின்தொடர்ந்துகொண்டிருந்தால் ஏன் என்று தெரியாமலேயே ஸ்குரோல் செய்வீர்கள். இது brain rot என்று சொல்லப்படுகின்றதாம். மீண்டும் யாழுக்கு வந்து அறிவார்ந்தவர்களுடன் உரையாட ஆரம்பித்தது நல்ல சகுனம்☺️
  11. நீதி மறுக்கப்பட்ட மற்றுமொரு படுகொலை: கொல்லப்பட்டவர்கள் முல்லைத்தீவில் நினைவு கூறப்பட்டனர் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இதுவரை நீதி வழங்கப்படாத 32 தமிழர்களின் நினைவேந்தல் முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் இடம்பெற்றது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முல்லைத்தீவு ஒதியமலை கிராம அபிவிருத்தி மண்டபத்திற்கு 32 நிராயுதபாணியான தமிழர்கள் அழைக்கப்பட்டு அரசாங்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். படுகொலை நடைபெற்ற ஒதியமலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் நிகழ்வு இடம்பெற்றது. உணவுபூர்வமாக இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர். தொடர் கொலைகள் முல்லைத்தீவு-திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில் உள்ள பல தமிழ்க் கிராமங்களை இலக்கு வைத்து 1984 டிசம்பர் தொடக்கத்தில் இருந்து பதினைந்து நாட்கள் இடம்பெற்ற தொடர் படுகொலைகளில் ஒதியமலை இனப்படுகொலையும் ஒன்றாகும். கொக்கிளாய், தென்னமரவாடி, அமராவயல், கொக்குதொடுவாய், அளம்பில், நாயாறு, குமுளமுனை, மணலாறு ஆகிய தமிழ்க் கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த இனப்படுகொலைகளின் நோக்கம் சிங்களக் குடியேற்றமே எனவும் அப்போது நாடாளுமன்றத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். நாற்பது வருடங்களாகியும் தமது பூர்வீகக் கிராமங்களை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழர்களை மீளக் குடியமர்த்தவோ, படுகொலைகளுக்கோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்கோ நீதி கிடைக்கவில்லை என ஒதியமலை நினைவேந்தலில் கலந்து கொண்ட சமூகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பிரிகேடியர் ஜானக பெரேரா படுகொலையின் போது பிரதேசத்திற்கு கட்டளையிட்டார். தாக்குதலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒரு சிங்களக் குடியேற்றம் ஜானகபுர என அழைக்கப்பட்டது. 2008 ஒக்டோபர் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வடமத்திய மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அனுராதபுரத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். https://oruvan.com/sri-lanka/2024/12/03/another-massacre-denied-justice-those-killed-remembered-in-mullaitivu
  12. இன்ஸ்டாகிராம் ரீல்களில் நேரத்தை வீணடிக்கிறீர்களா? அகராதியில் உங்களுக்கென புதிய வார்த்தை வந்துள்ளது Getty Images யாஸ்மின் ரூஃபோ பிபிசி செய்தி இன்ஸ்டாகிராம் ரீல்களில் நேரத்தை வீணடிக்கிறீர்களா? உங்களை அறியாமல் பலமணிநேரங்கள் ரீல்களை பார்க்க ஸ்க்ரோல் செய்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு ப்ரெயின் ராட் (brain rot) பாதிப்பு இருக்கலாம். ப்ரெயின் ராட் என்னும் வார்த்தையை, ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ், இந்த ஆண்டின் வார்த்தை (word of the year) எனக் குறிப்பிடுகிறது. ப்ரெயின் ராட் என்பது சமூக ஊடகங்களில் பயனற்ற ஆன்லைன் உள்ளடக்கங்களை பார்க்க நேரம் செலவிடுவதால் ஏற்படும் விளைவை குறிப்பிடும் ஒரு வார்த்தை. இந்த வார்த்தையின் பயன்பாடு 2023 மற்றும் 2024 க்கு இடையில் 230% அதிகரித்துள்ளது. Demure, Romantasy, dynamic pricing உள்ளிட்ட ஐந்து வார்த்தைகளில் இறுதியாக Brain rot-ஐ இந்த ஆண்டுக்கான வார்த்தையாக ஆக்ஸ்ஃபோர்டு தேர்வு செய்தது ப்ரெயின் ராட் என்றால் என்ன? Getty Images இந்த வார்த்தையின் ஆரம்பகால பயன்பாடு ஹென்றி டேவிட் தாரோவால் 1854 இல் வால்டன் என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ப்ரெயின் ராட் என்பது ஒரு நபரின் மன அல்லது அறிவுசார் நிலை மோசமடைவதைக் குறிக்கும் வார்த்தை ஆகும். இது, பயனற்ற அல்லது முக்கியமற்ற உள்ளடக்கங்களை அதிகப்படியாக பார்ப்பதன் விளைவாக ஏற்படும் நிலை என்று கருதப்படுகிறது. ப்ரெயின் ராட் வார்த்தை இணையம் உருவாக்கப்படுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தது. இந்த வார்த்தையின் ஆரம்பகால பயன்பாடு ஹென்றி டேவிட் தாரோவால் 1854 இல் வால்டன் என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சவால் மிக்க ஆழ்ந்த சிந்தனைகளுக்கு குறைவான முக்கியத்துவம் கொடுத்து மதிப்பிழக்கச் செய்யும் சமூகத்தின் போக்கை அவர் விமர்சிக்கிறார். இதனை மன மற்றும் அறிவுசார் வீழ்ச்சியின் ஒரு பகுதியாக கருதுகிறார். "பிரிட்டன் உருளைக்கிழங்கு அழுகுவதை நிறுத்த முயற்சிக்கிறது, ஆனால் மூளை அழுகல் பிரச்னையை குணப்படுத்த யாரும் முயற்சிக்க மாட்டார்களா என்ன?" என்னும் கேள்வியை அவர் முன்வைக்கிறார். "ஏனெனில் இந்த பிரச்னை மிகவும் பரவலானது மற்றும் மோசமானது.” என்கிறார் ஹென்றி டேவிட். ஆரம்பத்தில் இந்த வார்த்தை சமூக ஊடகங்களை பயன்படுத்தும், ஜெனரல் இசட் மற்றும் ஜெனரல் ஆல்பா சமூகத்தினர் மத்தியில் பிரபலமானது. ஆனால் இப்போது சமூக ஊடகங்களில் காணப்படும் பயனற்ற உள்ளடக்கங்களை விவரிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. "ப்ரெயின் ராட் என்ற ஒரு நிலை உள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை." என்கிறார் பேராசிரியர் பிரசிபில்ஸ்கி. "இணைய உலகம் மீதான நமது வெறுப்பை பிரதிபலிக்கவே இந்த வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம். சமூக ஊடகங்கள் பற்றிய நமது கவலைகளை வெளிப்படுத்த நாம் பயன்படுத்தும் வார்த்தை இது. உண்மையில் ப்ரெயின் ராட் எனும் ஒரு பாதிப்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை” என்கிறார் அவர். ஆக்ஸ்போர்டு வார்த்தை தேர்வு எதை சுட்டிக்காட்டுகிறது? "கடந்த இருபது ஆண்டுகளாக ஆக்ஸ்போர்டு Word of the Year தேர்வைப் பார்க்கும்போது, நம் மெய்நிகர் வாழ்க்கை முக்கியத்துவம் பெறுகிறது என்பது புரிகிறது. நமது மெய்நிகர் வாழ்க்கை மீது சமூகம் எவ்வாறு அதிக அக்கறை செலுத்துகிறது என்பதும் ஆன்லைன் கலாசாரம் நம் அடையாளங்கள் மற்றும் உரையாடல் தலைப்புகளை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதும் இதன் மூலம் தெரிகிறது" என்கிறார் ஆக்ஸ்போர்டு மொழிகள் பிரிவுத் தலைவர் காஸ்பர் கிராத்வோல். "கடந்த ஆண்டு 'rizz' என்ற சொல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த சொல் ஆன்லைன் சமூகங்களுக்குள் மொழி எவ்வாறு உருவாகிறது, வடிவமைக்கப்படுகிறது மற்றும் பகிரப்படுகிறது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம்” என்றார். "ப்ரெயின் ராட் என்பது மெய்நிகர் வாழ்க்கையின் ஆபத்துக்களை பற்றியும் நமது ஓய்வு நேரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும் பேசுகிறது." பிற வார்த்தைகள் Demure (பெயரடை சொல்) : மென்மையான இயல்புடைய நபரை குறிக்கும் சொல். தோற்றத்தில் அல்லது அவரது பண்பில் அடக்கமான நபர். Dynamic pricing (பெயர்ச்சொல்): மாறிவரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப ஒரு பொருள் அல்லது சேவையின் விலையை மாற்றுதல். குறிப்பாக ஒரு பொருளுக்கு அதிக தேவை இருக்கும்போது, அதன் விலை அதிகரிக்கிறது. Lore (பெயர்ச்சொல்): ஒரு நபர் அல்லது தலைப்பு தொடர்பான உண்மைகள், பின்னணித் தகவல்கள் மற்றும் கதைகளின் தொகுப்பு. ட்ரெண்ட் ஆகும் தலைப்பைப் பற்றிய முழுமையான புரிதல் அல்லது விவாதத்திற்கு அவசியமானதாகக் கருதப்படும் பின்னணித் தகவல். Romantasy (பெயர்ச்சொல்): காதல் மற்றும் கற்பனையை இணைக்கும் புனைகதை. பொதுவாக மாய, இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் சாகசக் கதைகளை குறிக்கும் சொல். ஆனால் அவற்றின் மையக் கருவாக`காதல்’ இருக்கும். Slop (பெயர்ச்சொல்) : செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கலை, எழுத்து அல்லது பிற உள்ளடக்கம். இது கண்மூடித்தனமாக ட்ரெண்ட் செய்யப்படுகிறது. இணையத்தில் பகிரப்படுகிறது. இந்த பகிர்வுகள் தரம் குறைந்த, நம்பகத்தன்மையற்ற அல்லது துல்லியமற்றதாக வகைப்படுத்தப்படுகிறது https://www.bbc.com/tamil/articles/ce8nd55k8p3o
  13. தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ? சியோல்: வட கொரிய கம்யூ. படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்று (டிச.,04) அவசரகால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வட கொரியா - தென் கொரியா இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகளுக்கு இடை யேயான உறவு பாதிக்கப்பட்டு பகை நாடுகளாக உள்ளன. வட கொரியா மீது தென் கொரியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டேன் என வடகொரியா அதிபர் கிம் ஜான் உங் எச்சரித்திருந்தார். https://www.dinamalar.com/news/world-tamil-news/sudden-declaration-of-martial-law-in-south-korea-what-is-the-reason-/3795824 தென் கொரியாவில் ராணுவ ஆட்சி - அதிபர் அறிவிப்பு; காரணம் என்ன? 3 டிசம்பர் 2024, 17:20 GMT Getty Images அதிபர் யூன் சாக் யோல் தென் கொரியாவில் ராணுவ ஆட்சி பிரகடனத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல் அறிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் கடந்த 50 வருடங்களில் முதல் முறையாக ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற கட்டடம் அருகே மக்கள் போராட்டம் நடத்தினர். வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவே இது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது தொலைக்காட்சி உரையில் யூன் சாக் யோல் கூறினார் ராணுவச் சட்டத்தை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அதிபர் யோல் கூறினார். எனினும், இதன் கீழ் என்ன குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ராணுவச் ஆட்சியை அறிவிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையைத் தடுக்க தென் கொரிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது ராணுவச் ஆட்சியை அமல்படுத்துவதாக அதிபர் அறிவித்துள்ள போதிலும், நாட்டில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றும், அது தவறானது என்றும் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தலைவரான ஹான் டோங்-ஹூன் கூறியதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபர் யோல் இந்தக் கட்சியின் உறுப்பினர் ஆவார். எதிர்க்கட்சித் தலைவர்கள் நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், நாடாளுமன்றத்தில் திரளுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தலைநகர் சோலில் போராட்டக்காரர்கள் கூடுவதை தடுக்க நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் போலீஸ் குவிக்கப்பட்டது. இன்னும், போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்கு விரைந்தனர். ''ராணுவ ஆட்சி இல்லை! ராணுவ சட்டம் இல்லை" என்று கோஷமிட்டனர். அவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. Getty Images அழுத்தத்தில் அதிபர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் தீர்மானங்களுக்கு எதிராக அவரது அரசு போராடி வந்தது. அரசியல் தாக்குதல்களைத் தடுக்கும் ஜனநாயக விரோத உக்தியாக ராணுவத்தின் ஆட்சியை அறிவிக்கும் நிலைக்கு அவர் இப்போது தள்ளப்பட்டுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அவரச காலத்தில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட தலைவர்கள் செயல்பட முடியாது எனக் கருதப்படும் போது, ராணுவ சட்டத்தின் கீழ் தற்காலிக ராணுவ ஆட்சி அமைக்கப்படும். தென் கொரியாவில் கடைசியாக 1979இல் ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. நீண்ட கால அதிபர் ஆட்சி கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டார். அப்போது ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது https://www.bbc.com/tamil/articles/c9831gnq2gvo
  14. இலங்கை விவகாரத்தில் முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளை இப்போது ஈடேற்றுவீர்களா? பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன குறித்து முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளைத் தற்போது நிறைவேற்றுவீர்களா என பிரிட்டனின் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரிட்டன் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் (27) நடைபெற்ற வெளிவிவகாரக்குழுக் கூட்டத்திலேயே இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்கிறார். ‘இன்றை தினம் (27) உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு முக்கியமான நாளாகும்’ என்று சுட்டிக்காட்டிய உமா குமரன், ‘கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழர்களுக்குத் தோள் கொடுக்குமாறும், மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை பரிசீலிக்குமாறும் நீங்கள் பிரிட்டன் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தீர்கள். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் சர்வதேச நீதிப்பொறிமுறை தொடர்பான பரிந்துரையைப் பரிசீலிக்குமாறு அப்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் வலியுறுத்தியிருந்தார். இப்போது நீங்கள் வெளிவிவகார செயலாளர். அவர் பிரதமர். எனவே நீங்கள் உங்களது முன்னைய கருத்துக்களின்படி செயற்படுவீர்களா? மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைப்பீர்களா?’ என டேவிட் லெமியிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமி, ‘தற்போது இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறியிருக்கிறது. அத்தோடு கடந்தகால மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட விடயத்தில் முன்னேற்றகரமான சமிக்ஞைகள் தென்படுகின்றன. அதேவேளை கடந்தகால மீறல்களுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு கொள்கைகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். மேலும் அத்தகைய மீறல்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவது மிக அவசியமாகும்’ என்று தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=301559
  15. சிங்கள மக்களுடன் பேச்சுகள் நடத்த தமிழர்களின் சமாதான கதவு திறந்தே உள்ளது: இலங்கையின் இணை பங்காளர்களாக விரும்புகிறோம் - சிறீதரன் சிங்கள மக்களுடன் பேசுவதற்ககு தமிழ் மக்கள் தங்கள் சமாதான கதவுகளை எப்போதும் திறந்தே வைத்துள்ளனர். சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களை தாமே ஆளும் சுயாட்சியுடனான புதிய அரசியலமைப்பை உருவாக்கி இலங்கை தீவின் இணை பங்களார்களாக தமிழர்களை ஏற்றுக்கொள்ள அரசியல் பேச்சுகளை சிங்கள மக்களுடன் நடத்த தயாரக உள்ளோம்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீது இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை ”ஜே.வி.பி இன்று தேசிய மக்கள் சக்தியாக மாற்றமடைந்திருந்தாலும் ஜே.வி.பியின் அரசியல் முயற்சிகள் 1971ஆம் ஆண்டு மற்றும் 1989ஆம் ஆண்டில் இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. 55 வருடங்களின் பின்னர் அவர்கள் ஜனநாயக முறையின் ஊடாக இலங்கையின் ஆட்சியை கைபற்றியுள்ளமை வரலாற்றில் ஓர் அடையாளமாகும். அதேபோன்றுததான் ஜனநாயக ரீதியாக உரிமைகள் ஆயுத முனைகொண்டு மழுங்கடிக்கப்பட்ட போதும் தடுக்கப்பட்ட போதும் தமிழர்கள் ஆயுத ரீதியான போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வன்முறை ரீதியாக தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட போது எமது இளைஞர்கள் துப்பாக்கிகளை தூக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழர்களும் 80 வருடங்களுக்கு மேலாக நீண்ட போராட்டத்தை கொண்ட ஓர் இனமாகும். எமது உரிமைகள் இன்னமும் பெறப்படாத நிலையில் ஜே.வி.பியை போன்று ஒரு வரலாற்றை கொண்ட இனமாக உள்ளோம். ஜனாதிபதியின் கொள்கை பிரடகன உரையில் நாட்டில் 80 வருடங்களாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களுக்கான தீர்வு, இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இது ஒரு துர்பாக்கியமான விடயம். சிங்கப்பூராகவும் மலேசியாவாகவும் மாறியிருக்க வேண்டிய நாடு ஏன் இத்தகைய பாரிய கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு என்றால், யுத்தம் காரணமாக வாங்கிய கடன்களாகும். அந்த கடன்கள் இன்று நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றுள்ளது. எமது கரங்களை கோர்த்து பயணிக்க விரும்புகிறோம் அதனை மறுக்கக்கூடிய வகையிலும் அல்லது இல்லை என்றது போன்றும் ஜனாதிபதியின் உரை அமைந்துள்ளது. கோட்டாய ராஜபக்சவும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தைகூட தமது சிம்மாசன உரையில் பேசியிருக்கவில்லை. அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை மீட்டிபார்க்க வேண்டும். தேர்தலில் மக்களின் ஜனநாயக தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். சிங்கள சகோதரர்கள் தமிழர்கள் மீது நடத்திய யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கண்ணீர் சிந்தியவர்கள் நாம். யுத்ததால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட இனம் நாம். காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அகதி முகாம்களில் எமது வாழ்கை முறை உள்ளது. நாம் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஓர் இனம். இந்த நிலையிலும்கூட உங்களோடு எமது கரங்களை கோர்த்து பயணிக்க விரும்புகிறோம். சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை பலமான மாற்றங்களோடு தமிழ் மக்கள் தமது மாற்றங்களை நோக்கி பயணிக்க விரும்புகின்றனர். சமஷ்டி பற்றி முதலில் பேசிய சிங்கள தலைவராக பண்டாரநாயக்க இருக்கிறார். தமிழர்களுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் கிழித்தெரியப்பட்டுள்ளன. இதில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் மிக முக்கியமானது. 13ஆவது திருத்தச்சட்டம் இலங்கையில் தமிழர்களின் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்று. அது இன்றுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாது கேள்விக்கு உட்படுத்தப்பட்ட வகையில் காணப்படுகிறது. இன்று எதையும் செய்யக் கூடிய வகையில் பலம் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 1972, 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புகள் தமிழ் மக்களின் விருப்பதுக்கு மாறாக கொண்டுவரப்பட்டது. அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவும் இல்லை. புதிய அரசியலமைப்பை கொண்டுவர சந்தர்ப்பம் இந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. சர்வஜன வாக்கெடுப்பொன்று புதிய அரசியலமைப்புக்கு நடத்தப்பட வேண்டும் என்பது சட்டமாகும். புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்காக நீதி எவ்வாறு நிலைநாட்ட போகிறது. நீண்டகாலமாக தமிழர்கள் போராடி வருகின்றனர். 4 இலட்சம் வரையான தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. எமது அடையாளங்களுடன் வாழ விரும்புகிறோம் இவற்றையெல்லாம் இழந்து நம்பிக்கையோடு எழுந்த நிற்கிற ஓர் இனம், உங்களோடு கைகோர்க்க தயார் என்று இன்றும் எமது சமாதான கதவுகளை திறந்தபடி உங்களுடன் பேசுகிறோம். உங்கள் கரங்களோடு சேர்ந்து செல்லவும் தயாராக இருக்கிறோம். நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் வாழ வேண்டுமென்ற உண்ணதமான எண்ணங்களோடுதான் பேசுகிறோம். நாம் சிங்கள மக்களின் மொழி, கலாசார, இன அடையாளங்களை மதிக்கிறோம். எமது இனம், மொழி, கலாசாரம் அடையாளங்களை பாதுகாத்து இரண்டுபட்ட இனக்குழுமாக வாழ விரும்புகிறோம். சமவுரிமை, சமாதாம் அவசியம். அதனை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால், ஓர் இனத்தின் அடையாளம், உரிமை மற்றும் அந்த இனத்தின் இருப்பு என்பது வித்தியாசமானது. அதனை சம உரிமையாக சொல்ல முடியாது. சம உரிமை அவசியம். ஆனால், அது இனத்தின் அடையாளத்தை விட்ட சம உரிமையாக இருக்க முடியாது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசம் என்பது ஒரு இனத்துக்கானத்துக்கு குறிப்பதாக அமைய முடியாது. இது பல்தேசிய இனங்கள் வாழும் ஒரு நாடு. இரண்டுபட்ட தேசத்தில் இரண்டு பட்ட இனக் குழுவாக எமது அடையாளங்களுடன் வாழ விரும்புகிறோம். சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சி வேண்டும் தமிழ் தேசிய இனத்தின் தனித்துவங்களை மதித்து செயல்படுவதன் ஊடாக எதிர்காலம் கைகூடும் என்பதுடன் சமத்துவத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும். சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்கள் என்பதையும் இணை பங்காளர்களார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கம் புதிய அரசியலை அணுக வேண்டும். எப்போது இரண்டு இனங்களும் இணைந்து இந்த தேசத்தை கட்டியெழுப்ப முடியும். சிங்கள இளைஞர்கள் மத்தியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இனவாதம் வேண்டாம் என அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் பேசுகின்றனர். அதனை வரவேற்கிறோம். தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளும் சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சியை பெற்றுக்கொள்ளும் பேச்சுகளை நடத்த எமது சமாதான கதவுகளை நாங்கள் எப்போதும் திறந்தே வைத்திருக்கிறோம்.” என்றார். https://oruvan.com/sri-lanka/2024/12/03/tamils-door-to-peace-remains-open-for-talks-with-sinhalese-people-sridharan
  16. மாகாண சபை முறை நீக்கப்படாது: மூன்று வருடங்களின் பின்னரே புதிய அரசியலமைப்பு மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாகாண சபை முறையை நீக்கப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கூறியுள்ள கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயாக இந்தக் கருத்து மாறியுள்ளதால் இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியிடம் விசேட கூற்றொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பினர். இதற்கு பதில் அளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ”இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறோம். ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம். இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் இது விடயமாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றுக்கு கோரிக்கை விடுத்திருப்பதார். ஜே.வியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுடன் அன்றி ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்தி தருகிறோம். அதன்போது இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.” என்றார். இதேவேளை, இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, மாகாண சபை முறையை நீக்குவது தொடர்பில் இந்தத் தருணம்வரை அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பை கொண்டுவர மூன்றுவருடங்கள்வரை செல்லும். அதனால் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற முறை தொடர்பில் தமது சிபாரிகளை அனைவரும் முன்வைக்கப்படும். புதிய அரசியலமைப்பு மக்களுடனான கலந்துரையாடலின் பின்னரே கொண்டுவரப்படும். இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்த போதிய கால அவகாசம் உள்ளது. மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் தருணத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தலாம். மாகாண சபை முறை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு மேலதிகமான அதிகாரங்கள் வழங்கப்படாது என்பதுடன் குறைக்கவும் படாது.” என்றார். https://oruvan.com/sri-lanka/2024/12/03/provincial-council-system-will-not-be-abolished-new-constitution-only-after-three-years
  17. தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி - நாடாளுமன்றத்தில் களேபரம் (காணொளி இணைப்பு) நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். தமக்கான நேர ஒதுக்கம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்றிருந்த போது தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு முன்பாக முறையற்ற விதத்தில் செயற்பட்டதாகவும் முறையற்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். அத்துடன் இந்த விடயம் குறித்து சபாநாயகரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார். இதேவேளை, அவரை தொடர்ந்து எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். முழுமையான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது... https://www.hirunews.lk/tamil/389760/தாக்கப்பட்டாரா-அர்ச்சுனா-எம்-பி-நாடாளுமன்றத்தில்-களேபரம்-காணொளி-இணைப்பு
  18. பௌத்தர்களை பிரிக்க பெரும் சதி முயற்சி; புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நிதி உதவி பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த சதித்திட்டங்களுக்காக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பெரும்தொகை நிதியளித்து வருகின்றனவென கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சில கட்டுக்கதைகளால் மத நம்பிக்கைகளை மட்டுப்படுத்த முடியாது . இவ்வாறான மட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு சில சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .இந்த வேலைத்திட்டத்தின் முதற்படியாக பௌத்தர்களுக்கு இடையில் பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே, சிங்கள இனத்தவர்களுக்கு இடையிலான பலம்வாய்ந்த பிணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .எனினும், கட்டுக்கதைகளை நம்பும் போது, மகாவம்சம், தீபவம்சம், சூலவம்சம் என்பன செல்லுபடியற்ற நூல்களாகி விடுகின்றன அதன்பின்னர், வரலாறு பொய்யாகிப் போவதுடன், இந்த மண்ணின் மூத்த குடிகளான சிங்களவர்களுக்கு உள்ள உரிமையும் இல்லாது போகும் பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த சதித்திட்டங்களுக்காக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பெரும்தொகை நிதியளித்து வருகின்றன.இந்தப் பிரிவினை செயற்பாடுகளுக்காகப் புத்தகங்கள் அச்சிடுதல் உள்ளிட்ட பல திட்டங்கள், பாரிய நிதிச் செலவில் முன்னெடுக்கப்படுகின்றன. கல்கிரியாகம பகுதியில் பல ஏக்கர் கணக்கில் ஹெலகம என்ற குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது இதற்காக தமிழ் புலம்பெயர் அமைப்புகள் அதிகளவில் பணத்தைச் செலவு செய்துள்ளன இதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களும் உள்ளன என்றார். https://akkinikkunchu.com/?p=301576
  19. ஒருபோதும் மீண்டும் இனவாதம் துளிர்விட அரசாங்கம் அனுமதிக்காது:பிரதமர் ஹரிணி December 3, 2024 அரசியலில் தோல்விகண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தலைத்தூக்கச் செய்யும் வகையில் செயல்படுகின்றன. ஒருபோதும் மீண்டும் இனவாதம் துளிர்விட அரசாங்கம் அனுமதிக்காது என்பதுடன், அதனை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை தொடர்ந்து பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த அமர்வில் விசேட உரையை நிகழ்த்திய போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”இனவாதத்தை முற்றாக நிராகரிப்பதாகவே பொதுத் தேர்தலில் மக்கள் தமது ஆணையை வழங்கியுள்ளனர். அரசியல் காரணிகளுக்காக மக்களை பிளவுபடுத்தி, பிரித்தாள்வதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாதென மக்கள் தெளிவாக கூறியுள்ளனர். அதனால் எமது அரசாங்கம் ஒருபோதும் இனவாதத்துக்கு இடமளிக்காது. தோல்வியடைந்த அரசியல் குழுக்கள் மீண்டும் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை கொண்டுசெல்ல இனவாதத்தை தூண்டி, இனவாதக் கருத்துகளை பரப்பி மக்களை பிளவுபடுத்த முற்படுகின்றன. ஆனால், இனவாதம் மீண்டும் தலைத்தூக்க அரசாங்கம் இடமளிக்க போவதில்லை. இத்தகைய செயல்பாட்டை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். நாட்டின் அனைத்து மக்களை ஒன்றிணைக்க அனத்து தரப்பு மக்களிடமிருந்தும் பிரதிநிதித்துவம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனால் இந்த சந்தர்ப்பத்தை நாம் ஒருபோதும் நழுவவிட மாட்டோம். இந்த மக்கள் ஆணையை நாம் முறையாக புரிந்துகொண்டு மக்களை ஆட்சி அதிகாரத்தின் பங்காளர்களாக இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி முன்னோக்கி கொண்டுசெல்ல தயாராக உள்ளோம். நாட்டின் அனைத்து பிரஜைகளும் இந்த நாடாளுமன்றத்தையும் எம்மையும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தம்மை பிரதிநிதித்துவத்தும் செய்யும் பிரதிநிதிகள் தமக்காக செயல்படுவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் அந்த வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் முழுமையாக நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இது கைவிட முடியாத பணியாகும். எதிர்க்கட்சியிலும் இனவாதத்தை புறக்கணிக்கும் எதிர்க்கும் பலர் உள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். மக்கள் எம்மிடம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதனால் வரலாற்றின் பாடங்களை உணர்ந்து சிறந்த நாட்டை உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுகிறோம். அதனைதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.” என்றார். https://www.ilakku.org/ஒருபோதும்-மீண்டும்-இனவாத/
  20. ஹசீனா ஆட்சியில் ஆண்டுக்கு 16 பில்லியன் டொலர் திருட்டு damithDecember 3, 2024 பங்களாதேசத்தில் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சி காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 16 பில்லியன் அமெரிக்க டொலர் சட்டவிரோதமாக வெளியேறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர் தேபப்ரியா பட்டாச்சார்யா தலைமையிலான குழுவினர் பங்களாதேச பொருளாதாரத்தின் வெள்ளை அறிக்கையை பங்களாதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸூக்கு வழங்கியுள்ளனர். அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பங்களாதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் 29 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதில் குறிப்பாக 7 பெரிய திட்டங்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு திட்டத்திற்கும் 836 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இந்த 7 திட்டங்களின் ஆரம்ப செலவு 1.14 ட்ரில்லியன் டாக்கா என மதிப்பிடப்பட்டது. பின்னர் ஹசீனாவின் அரசாங்கம் இத்திட்டங்களின் செலவுகளை 1.95 ட்ரில்லியன் டாக்காவாக அதிகபடுத்தியது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (புளும்பேர்க்) https://www.thinakaran.lk/2024/12/03/world/99851/ஹசீனா-ஆட்சியில்-ஆண்டுக்க/
  21. கிளர்ச்சியாளர்கள் இலக்குகள் மீது சிரிய, ரஷ்ய விமானங்கள் தாக்குதல் damithDecember 3, 2024 சிரியாவின் அலெப்போ, இட்லிப் நகர்களை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரிய, ரஷ்ய யுத்த விமானங்கள் கடும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன. இத்தாக்குதல்களில் பல கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்று ரஷ்ய உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் சிரிய இராணுவ கட்டளை தலைமையகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இதேவளை சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத், ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டின், ஈரான் ஜனாதிபதி மசூட்பெசஸ்கியான், ஈராக் பிரதமர் முஹம்மத் அல் சூடானி உள்ளிட்ட பல தலைவர்களுடன் உரையாடியுள்ளார். ரஷ்யா, ஈரான், சீனா, ஈராக் உள்ளிட்ட நாடுகள் சிரிய ஆட்சியாளர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாசி அராக்‌ஷி சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸூக்கு நேற்று முன்தினம் நேரில் விஜயம் செய்து சிரிய ஜனாதிபதியுடன் நிலமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். பயங்கரவாத நிலைகள் மீதும் அவற்றுக்கான விநியோகப்பாதைகள் மீதும் கடும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அலெப்போ பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஞாயிறன்று நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.thinakaran.lk/2024/12/03/world/99849/கிளர்ச்சியாளர்கள்-இலக்க/#google_vignette
  22. இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை PrashahiniDecember 3, 2024 இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் அதையும் மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாசல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் இதாமன் பென் க்விர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பள்ளிவாசல்களில் இருந்து கேட்கும் ஒலி இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்தேய நாடுகளும் சில அரபு நாடுகளும்கூட ஒலிபெருக்கி சத்தம் தொடர்பில் பல சட்டங்களை இயற்றியுள்ளன” எனப் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் அரசின் இந்த உத்தரவுக்கு அந்நாட்டு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/12/03/breaking-news/99902/இஸ்ரேல்-பள்ளிவாசல்களில்/
  23. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர கொலை தொடர்பில் விசாரணை செய்யுமா ? எதிர்ப்பாளர்களின் பார்வையில், விஜேவீர ஒரு சந்தர்ப்பவாதி, அவர் என். சண்முகதாசனின் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிளவுபடுத்தி, 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரச அதிகாரத்திற்கு முயற்சித்து தனது சொந்த இராணுவத்தை உருவாக்குவதற்காக அதன் உறுப்பினர்களை இழுத்துக்கொண்டார். சுதந்திரத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட சமூக முறைமையிலிருந்து அவரது அபிமானிகள் மத்தி யில் அவர் ஒரு இலட்சியவாதி, அவர் ஏழை விவசாயிகளையும் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதன் விளிம்புநிலை இளைய பிரிவினரையும் அணிதிரட்டியவர் .” டி .பி .எஸ் . ஜெயராஜ் ஜே.வி.பி யினால் ஏற்பட்ட வன்முறையின் பாரிய தன்மை மற்றும் ஜே.வி.பி தலைவர்ரோஹண விஜேவீர மீது பொலிசார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மத்தியில் கொதித்துக்கொண்டிருந்த கோபம் ஆகியவற்றின் அடிப்படையில்அவர் கொல்லப்பட்டதாகபரவலாக நம்பப்பட்டது அது தொடர்பாக , “உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட உத்தியோகபூர்வமற்ற மரணதண்டனை” என்ற ‘இடக்கரடக்கல்’ சொற்றொடர் பிர யோகப்படுத்தப்பட்டிருந்தது. ரோகண விஜேவீர 35 வருடங்களுக்கு முன்னர் 1989 நவம்பர் 13 இல் கொல்லப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சித் தலைவர் இறக்கும் போது அவருக்கு வயது 46ஆகும் . 1971 மற்றும் 1987 முதல் 89 வரையான இரண்டு இரத்தக்களரி கிளர்ச்சிகளின் மூளையாக செயற்பட் டவராககருதப்பட்டவர் நவம்பர் 12 அன்று கண்டி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். விஜேவீரவின் கைது மற்றும் மரணத்துடன் இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சி படிப்படியாக முடிவுக்கு வந்தது. தமிழில் மக்கள் விடுதலை முன்னணி என்று அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுன வைப் பொறுத்த வரையில் நவம்பர் 13 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திகதி யாகும். 1989 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி ஜே.வி.பி.யின் ஸ்தாபக தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டார். விஜேவீர மற்றும் 1971 மற்றும் 1987-89 ஆகிய இரண்டு கிளர்ச்சிகளில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஜே.வி.பி காரர்களின் வாழ்க்கையை நினைவுகூரும் நிகழ்வை 1994 முதல் ஜே.வி.பி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ” மஹா விரு சமருவ” எனப்படும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது உரைகள் மற்றும் பாடல்களின் கலவையாகும். இந்த வருடம் ரோஹண விஜேவீர என அழைக்கப்படும் படபெந்தி டொன் ஜினதாச நந்தசிறி விஜேவீரவின் 35 ஆவது நினைவு தினமாகும் .. ஜே.வி.பி.யின் நினைவேந்தல் நிகழ்வு இந்த வருடம் நவம்பர் 15 ஆம் திகதி நடைபெற்றது. ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரி ல்வின் சில்வா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாரா ளுமன்றத் தேர்தல்களின் மூலம் கட்சி முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியதால், இது ஒரு புனிதமான நிகழ்வாக இருந்தாலும், பண்டிகை உவகை நிலவியது. இந்த நினைவேந்தலில் ரி ல்வின் சில்வா நீண்ட நேரம் உரையாற்றினார். “தியாகி” தலைவர் ரோஹண விஜேவீரவைப் பற்றிய பல பிரகாசமான குறிப்புகளுடன் ஜே.வி.பியின் பரிணாம வளர்ச்சியை அவர் சுருக்கமாகக் கண்டறிந்தார். நசுக்கப்பட்ட இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் எழுந்த கட்சி மற்றும் அதன் பின்னர் அதன் வெற்றிகரமான அரசியல் மறுமலர்ச்சி பற்றி பேசிய ரி ல்வின், “நாம் காலத்திற்கு ஏற்ப உள்ளீர்த்துக்கொண்ட ஒரு அரசியல் கட்சி… பிடிவாதமானவர்கள் , மாறாதவர்கள் , தப்பிப்பிழைக்க மாட் டார்கள் .”என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அண்மைக் காலங்களில் ரோஹண விஜேவீர மற்றும் ஏனைய ஜே.வி.பி உறுப்பினர்களின் மரணம் மற்றுமொரு தரப்பினராலும் நினைவுகூரப்பட்டது. சிங்களத்தில் பேரதுகாமி சமாஜவாதி கட்சி என்றும் தமிழில் முன்னிலை சோசலிசக் கட்சி என்றும் அழைக்கப்படும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (எவ்எஸ் பி ) ஜே.வி.பி யிலிருந்து பிரிந்த அதிருப்தியாளர்கள் குழுவாகும். ஏப்ரல் 2012ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்டது .அதன் செயலாளர் நாயகம் பிரேமகுமார் குணரத்னம் என்ற நோயல் முதலிகே மற்றும் குமார்/குமார வால் வழிநடத்தப்பட்டது. முன்னணி சோசலிசக் கட்சியும் தனது மறைந்த தலைவர் மற்றும் தோழர்களை ஆண்டுதோறும் “11 மஹா விரு சமருவ” நிகழ்வின் மூலம் நினைவு கூர்கிறது. முன்னிலை சோசலிசகட்சி நவம்பர் 11 அன்று அதன் நினைவேந்தலை நடத்தியது. அதன் செயலாளர் குமார் குணரட் ண ம் இந்த நிகழ்வில் தனது உரையில் ஒரு தெளிவான அழைப்பை விடுத்தார். 1987-1989 கிளர்ச்சியில் உயிர் இழந்த ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு அவர்களின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீர உட்பட நீதி வழங்குமாறு தனது முன்னாள் தோழர் ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்கவிடம் அழைப்பு விடுத்தார். நவம்பர் 12 அன்று “டெய்லி எவ் டி”யில் வெளியிடப்பட்ட செய்தியிலிருந்து சில தொடர்புடைய பகுதிகள் இங்கே: ”கொழும்பில் நேற்று நடைபெற்ற எவ் எஸ் பி யின் வருடாந்த நவம்பர் மாவீரர் நினைவேந்தலில் பேசிய குணரட்ணம், ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கும் ஜேவிபியின் தற்போதைய தலைவரும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 1987-1989 கிளர்ச்சிகாலப்பகுதியில் கொல்லப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்களின் மரணங்களை விசாரிக்கும் கணிசமான பொறுப்பை கட்சி கொண்டுள்ளது. “இன்று 35வதுமகாவீரர் நினைவேந்தலைக் குறிக்கிறது. 1988-1989 காலகட்டத்தில், நீதிக்காக குரல் எழுப்பிய ஒரு முழு தலைமுறையும் கொல்லப்பட்டது. தோழர்கள் ரோஹண விஜேவீர மற்றும் உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட 60,000 க்கும் மேற்பட்ட தோழர்கள் உயிரிழந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் இப்போது அதிகாரத்தை வைத்திருக்கும்தேசிய மக்கள் சக்தியின் பிரதான அரசியல் கட்சியான ஜேவிபியின் இலட்சியத்திற்காக நின்றவர்கள்,” என்று அவர் குறிப்பிட்டார். எனவே, 35வது நினைவேந்தல் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்றார். 1987-1989 கிளர்ச்சியின் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையை உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகுமெனகுறிப்பிட்டு மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக குணரட்னம் ஒப்பிட்டார். “கடுமையான தியாகத்தில் தங்கள் உயிரைக் கொடுத்த அனைவருக்மான நீதிக்காக மக்கள் இன்னும் ஏங்குகிறார்கள். ஜே.வி.பி.யை ஆட்சிக்கு கொண்டு வர தம்மை அர்ப்பணித்த ஜே.வி.பி உறுப்பினர்களின் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இது 1988-89 காலகட்டத்தில் முழுமையான விசாரணையை நடத்துவதற்கும், மனித குலத்திற்கு எதிரான இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பான அனைவரையும் பொறுப்பேற்கச் செய்வதற்கும் முந்தைய நிர்வாகங்களை விட என் பி பி அரசாங்கத்திற்கு அதிக தார்மீகப் பொறுப்பையும் அதிகாரத்தையும் வழங்குகிறது.முன்னிலை சோசலிஸ்ட் கட்சி என்ற வகையில் ஜனாதிபதி திஸாநாயக்க இந்தப் பொறுப்பை ஏற்பார் என நாங்கள் நம்புகிறோம்,” என்ரூ அவர் கூறியிருந்தார். இந்த முயற்சிக்காக தேவையான எந்தவொரு ஆதரவையும் வழங்க எவ் எஸ் பி தயாராக இருப்பதாகவும் குணரட்ண ம் குறிப்பிட்டார். ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த குழுவான குணரட்ண த்தின் கட்சியும் இந்த வார தொடக்கத்தில் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு விடுத்த அறிக்கையில் இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியது. 1988-89 காலப்பகுதியில் அரச அனுமதி பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும், ரோஹண விஜேவீர உட்பட உயிரிழந்த ஜேவிபி மாவீரர்களின் உயிர்களுக்கு நீதி வழங்குமாறும் ஜனாதிபதியிடம் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தில் உயிர்நீத்த ரோஹண விஜேவீர மற்றும் ஏனையோருக்குஎவ் எஸ் பி அஞ்சலி செலுத்தியது, அந்தக் காலப்பகுதியில் “அரச பயங்கரவாதத்தின்” ஊடாக நடத்தப்பட்ட கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போதல்கள் மற்றும் சட்டவிரோத கொலைகளை முன்னிலைப்படுத்தியதுடன் இந்த அட்டூழியங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எவ் எஸ் பி .கோடிட்டுக் காட்டியது. ஜே.வி.பி.யின் தலைவர் தற்போது ஜனாதிபதியாக பதவியில் இருப்பதால், ரோஹண விஜேவீர மற்றும் பிறரின் மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்தி, முன்னுரிமை அளிக்கும் வகையில் விரிவான விசாரணைக்கு முன்னிலை சோசலிசகட்சி வலியுறுத்தியுள்ளது. பொதுவாக ஜே.வி.பி காரர்களின் மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் மற்றும் குறிப்பாக ரோஹண விஜேவீர உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களின் மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மு.ச.க தலைவர் குமார் குணரட்ணம் கூறியிருப்பது, ஜே.வி.பி.யின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களின் இதயங்களிலும் பதிலுக்கான தாக்கத்தை கொடுக்கும். இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சிநசுக்கப்பட்டபோது தப்பிய அநு ரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் ரி ல்வின் சில்வா போன்ற மூத்தவர்களுக்கு இது நிச்சயமாக எதிரொலிக்கும். மேலும், அரச முகவர்களால் மனித குலத்திற்கு எதிரான அந்த கொடூரமான குற்றங்களை நேரில் பார்த்தவர்கள், அந்த காலத்தில் ஜே.வி.பி.யும் பல அட்டூழியங்களுக்கு காரணமாக இருந்த போதிலும், உண்மை வெளிவர வேண்டும் என்று விரும்புகிகிறார்கள். ஜே.வி.பி இப்போது ஆட்சியில் உள்ளது, எனவே கடந்த கால சம்பவங்களை ஆராய்வதற்கான சரியான பொறிமுறையை அமைக்க முடியும் என்ற குமார் குணரட்ண த்தின் கருத்து தர்க்கரீதியானது. மேலும் தனிப்பட்ட கோணத்திலும் அதனைபார்க்க முடியும் , ஏனெனில் அந்த இருண்ட நாட்களில் “காணாமல் போனதாக” அறிவிக்கப்பட்ட பல இளைஞர்களில் பிரேம் குமாரின் மூத்த சகோதரர் ரஞ்சிதன் குணரட்ண மும் இருக்கிறார். ரி ல்வின் சில்வா உண்மை வெளிவருவதற்கு ஜே.வி.பியின் கண்ணோட்டத்தில் இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. 16 நவம்பர் 2024 இன் “தி இந்து” நாளிதழில் வெளியான ஜேவிபிபொதுச்செயலாளர் ரி ல் வின் சில்வாவுடனான நேர்காணலில், பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீநிவாசன் பின்வருமாறு எழுதினார்: “இருப்பினும், . சில்வா கட்சியின் வரலாற்றை சூழலுடன் மீண்டும் கூற வேண்டும் என்று வாதிட்டார். “எ ம்மை தோற்கடித்தவர்களால், வெற்றி பெற்றவர்களால் எழுதப்பட்டதே எ மது வரலாறு என்பதால் தவறான கருத்து உள்ளது. எங்கள் பாதை விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கப்படவில்லை, அது எங்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்டது. ஜே.வி.பி எதிர்கொள்ளும் மிருகத்தனமான வன்முறை குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி, அவர் மேலும் கூறியதாவது: “இது [எங்கள்] நடவடிக்கை அல்ல, மாறாக எங்கள் முடிவில் இருந்து வந்த எதிர்வினை. [அரசின்] அடக்குமுறை ஆயுதம் ஏந்தியிருந்தால், [எங்கள்] பதிலும் அவ்வாறே இருந்தது. அவரது (ரி ல்வின்) பார்வையில், இலங்கையின் தற்போதைய அரசியல் தருணம், “சிலரை காரணமின்றி ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் என்று சித்தரிக்காமல்” கட்சி மட்டுமல்ல, நாட்டின் கதையையும் மீண்டும் எழுதுவதற்கான இடத்தைத் திறந்துள்ளது. “ஆனால் நாங்கள் இந்த கதையை வார்த்தைகளால் அல்ல, ஆனால் எங்கள் செயலால் சொல்ல விரும்புகிறோம். தற்போதைய சூழல் அதற்கான வாய்ப்பை அளிக்கிறது. உண்மை எ ம்மை விடுவிக்கும் ஜே.வி.பி.யின் கண்ணோட்டத்தில் வரலாறு முன்வைக்கப்படுவது குறித்து ரி ல்வின் சில்வா உண்மையிலேயே தீவிரமானவராக இருந்தால் மற்றும் ஜே.வி.பி.யின் உண்மைக் கதையில் கட்சியின் பொதுச் செயலாளருக்கு உண்மையான ஆர்வம் இருந்தால், விஜேவீர மற்றும் ஏனைய ஜே.வி.பி.காரர்களின் கொலைகள் தொடர்பில் தீவிர விசாரணை மிகவும் அவசியமாகும். ஜே.வி.பி.யை வெள்ளையடிக்கவோ, அரசின் பிரதிமையை கெடுக்கவோ முயலாமல் உண்மையை வெளிக்கொணரும் வகையில் விசாரணை சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும். அது உண்மையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் இறுதியில் உண்மை மட்டுமே “எ ம் அனைவரையும் விடுவிக்கும்” இந்தப் பின்னணியில்தான், ஜே.வி.பி.யின் ஸ்தாபக தலைவர் விஜேவீர இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கொல்லப்பட்டதை முந்தைய எழுத்துக்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் உதவியுடன் இந்தப் பத்தி கவனம் செலுத்துகிறது. ரோகண விஜேவீர 35 வருடங்களுக்கு முன்னர் 1989 நவம்பர் 13 இல் கொல்லப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சித் தலைவர் இறக்கும் போது அவருக்கு வயது 46. 1971 மற்றும் 1987 முதல் 89 வரையான இரண்டு இரத்தக்களரி கிளர்ச்சிகளின் மூளையாக இருந்தவர் நவம்பர் 12 அன்று கண்டி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். விஜேவீரவின் பிடி மற்றும் மரணத்துடன் இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சி படிப்படியாக வெளியேறி முடிவுக்கு வந்தது. சுமார் மூன்று வருடங்களாக நீடித்த ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் ஜே.வி.பி மற்றும் பொலிஸ், துணை இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய எதிர் கிளர்ச்சிப் படைகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இத்தனை குழப்பங்களும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், ஜே.வி.பி.யின் அதியுயர் புரட்சித் தலைவர், நிமல் கீர்த்திசிறி அத்தநாயக்க என்ற தோட்டக்காரராகக்தன்னை காட்டிக் கொண்டு கண்டி உலப்பனையில் தனது குடும்பம் மற்றும் இரண்டு வேலையாட்களுடன் வசதியாக வாழ்ந்து வந்தார். “உத்தியோக பூர்வ மாக அனுமதிக்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற மரணதண்டனை” ஜே.வி.பி யினால் ஏற்பட்ட வன்முறையின் பாரிய தன்மை மற்றும் ஜே.வி.பி தலைவர்ரோஹண விஜேவீர மீது பொலிசார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மத்தியில் கொதித்துக்கொண்டிருந்த கோபம் ஆகியவற்றின் அடிப்படையில்அவர் கொல்லப்பட்டதாகபரவலாக நம்பப்பட்டது அது தொடர்பாக , “உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட உத்தியோகபூர்வமற்ற மரணதண்டனை” என்ற ‘இடக்கரடக்கல்’ சொற்றொடர் பிர யோ கப்படுத்தப்பட்டிருந்தது. உத்தியோகபூர்வ பதிவானது , விஜேவீர மற்றும் மற்றொரு சிரேஷ்ட ஜே.வி.பி தலைவர் எச்.பி. ஹேரத் ஆகிய இருவரும் சில ஆவணங்களைத் தேடி ஜே.வி.பியின் இரகசிய அலுவலகமாகப் பயன்படுத்தப்பட் ட கொழும்பின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர் . ஹேரத் சில ஆவணங்களை எடுப்பது போல் பாசாங்கு செய்து விஜேவீரவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது பாதுகாப்புப் படையினர் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவை தகனம் செய்யப்பட்டன. ஜே.வி.பி.யின் வன்முறை மற்றும் எதிர் வன்முறைச் சூழலில் இலங்கை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது விஜேவீரவின் மரணச் செய்தியில் பெரிதும் நிம்மதியடைந்தது. அப்போது நிலவிய சூழ்நிலையில், உத்தியோகபூர்வ பதிவுடன் அமைதியாக செல்வதற்கு நாடு மிகவும் தயாராக இருந்தது. தனிப்பட்ட ரீதியில் வெகு சிலரேஅதனை நம்பினர். இவ்வாறான சூழ்நிலைகளில் வழமை போல் வதந்திகள் அதிக காலம் வேலை செய்தன மற்றும் ரோஹண விஜேவீரவின்இறுதிக்கட்டம் பற்றிய பல கதைகள் பரவ ஆரம்பித்தன. விஜேவீர கொழும்பு கோல்ப் மைதான வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தியாகும் . ஜே.வி.பி.யால் குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்,சிரேஷ்ட ராணுவ அதிகாரிகள் பார்த்துக்கொண்டிருக்க துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், இருவரது உடல்களும் மயானத்தில் இரவில் எரிக்கப்பட்டன. இந்த கொடூரமான தகனத்தின் போது விஜேவீர முழுமையாக இறக்கவில்லை என்ற கதை இந்த பதிப்பில் ஒரு பயங்கரமான திருப்பமாக இருந்தது. சரத் முனசிங்கவின் பதிவு ரோஹண விஜேவீரவின் இறுதிக் கட்டம் குறித்து உத்தியோகபூர்வமாக நேரில் கண்ட சாட்சியங்கள் எதுவும் இல்லை. ரோஹண விஜேவீரவின் வாழ்வில் பொது வெளியில் அவர் இறப்பதற்கு முந்தைய சில மணிநேரங்கள் தொடர்பான உண்மையான பதிவு ஒன்று உள்ளது. மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தனது சுயசரிதை நூலான “ஒரு சிப்பாயின் கதை”யில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய பகுதிகள் கீழே மீண்டும் உருவாக்கப்படுகின்றன: “நேரம் 11.30 மணி. நாங்கள் (லயனல் பலகல்ல மற்றும் சரத் முனசிங்க) ‘நடவடிக்கை க்கான கூட்டு த் தலைமையகத்தின் ’ வளாகத்தை அடைந்தோம். ரோஹண விஜேவீர அமர்ந்திருந்த மாநாட்டு மேசைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எனக்கு மேசைக்கு குறுக்காக விஜேவீரவுக்கு எதிரே ஒரு நாற்காலி வழங்கப்பட்டது. நான் அவருடன் உரையாடத் தொடங்கினேன். நான் ரோஹண விஜேவீரவிடம் நீண்ட நேரம் பேசினேன். “நான் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டபோதெல்லாம் அவர் சிங்களத்தில் பதிலளித்தார். உண்மையில், எனக்கு ரஷ்ய மொழி தெரியுமா என்று கேட்டார். நான் இல்லையென பதிலளித்தேன். ரோஹண விஜேவீர தனது இரண்டாவது மொழி ரஷ்ய மொழி என்று என்னிடம் கூறினார். ஆரம்பத்தில் பண்டாரவளையிலும் பின்னர் கண்டி உலப்பனையிலும் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி என்னிடம் கூறினார். ஜே.வி.பி.யின் செயற்பாடுகள் குறித்து பேசுவதற்கு அவர் தயங்கினார்”. “நள்ளிரவுக்குப் பிறகு, பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ரஞ்சன் விஜேரத்ன உள்ளே சென்று மாநாட்டு மேசையின் தலைமைநாற்காலியில் அமர்ந்தார். ஜெனரல் விஜேரத்ன சில கேள்விகளைக் கேட்டார், ஆனால் ரோஹண விஜேவீர பதிலளிக்கவில்லை. “நாங்கள் எங்கள் உரையாடலைத் தொடர்ந்தோம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பல கோப்பை சாதாரண தேநீர் பருகினோம் . வன்முறையில் ஈடுபடாமல் இருக்குமாறு அவரது உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு ரோஹண விஜேவீரவிடம் கோரிக்கை விடுத்தேன். வற்புறுத்தலுக்குப் பிறகு ஒப்புக்கொண்டார். எனவே அவரது வார்த்தைகளையும் அவரது படத்தையும் க மராவில் பதிவு செய்ய முடிந்தது. “நேரம் 1989 நவம்பர் 13 அதிகாலை 3.45 மணி. விசாரணையை முடித்துக்கொண்டு ரோஹண விஜேவீரவை கீழே அழைத்துச் செல்லுமாறு எனக்குத் தெரிவிக்கப்பட்டது. கீழே ஒன்றாக நாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகநடந்து சென்றோம் . விஜேவீர என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘கடைசித் தருணத்திலும் உங்களைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இனி வாழாமல் இருக்கலாம். தயவு செய்து எனது செய்தியை என் மனைவிக்கு தெரிவிக்கவும்என்று கூறினார் ரோஹண விஜேவீரவின் செய்தியில் ஐந்து முக்கிய விடயங்கள் அடங்கியிருந்தன. அவை அனைத்தும் அவரது குடும்பத்தைப் பற்றிய தனிப்பட்ட விட யங்கள். “சில நிமிடங்களுக்குப் பிறகு, விஜேவீர கண்கல் கட்டப்பட்டு பச்சை பஜேரோவின் பின் இருக்கையில் ஏற உதயளிக்கப்பட்டது . விஜேவீரவின் இருபுறமும் இருவர் அமர்ந்திருந்தனர். காரின் பின்பகுதியில் மற்றவர்கள் இருந்தனர். பஜெரோ புறப்பட்டது. நடவடிக்கை கூட்டுதலைமையக கட்டிடத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நின்றிருந்த கேணல் லயனல் பலகல்லவுடன் நான் சேர்ந்தேன். நல்ல தூக்கத்தை நினைத்துக்கொண்டு வீட்டுக்குப் போனோம். “காலையில் விஜேவீரவின் புகைப்படத்தை அச்சிடுவதில் நான் மும்முரமாக இருந்தேன். தாடி இல்லாமல் விஜேவீரவை யாரும் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள். எனவே நான் உதவியை நாட வேண்டியிருந்தது மற்றும் விஜேவீரவின் புகைப்படத்தில் தாடியை சேர்க்க வேண்டியிருந்தது. அது மிகவும் சிறப்பாக செய்யப்பட்டது. பிற்பகலில் கூட்டு நடவடிக்கைக் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “விஜேவீர மற்றும் எச்.பி. ஹேரத் [மற்றொரு ஜே.வி.பி தலைவர்] கொழும்பிற்கு வெளியே உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு ஜே.வி.பி. அவர்களின் பொக்கிஷத்தின் ஒரு பகுதியை மறைத்து வைத்திருந்தது. தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்த போது, ஹேரத் துப்பாக்கியை எடுத்து விஜேவீரவை சுட்டுக் கொன்றார்.என்று அமைச்சர் மேலும் விவரங்களைத் தெரிவித்தார். விஜேவீரவின் கொலையைத் தொடர்ந்து, ஜே.வி.பியின் வன்முறைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனையபகுதியில் அமைதி நிலவியது. ஜெனரல் முனசிங்கவின் பதிவு , விஜேவீரவின் வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களை ஓரளவு விவரிக்கிறது, ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய விவரங்களை வெளியிடுவதில் அமைச்சர் விஜேரத்னவின் செய்தியாளர் மாநாட்டைச் சார்ந்திருக்கிறது. முனசிங்க அந்தப் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாத காரணத்தினால், விஜேவீர எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது பற்றிய தகவல்களும் குறைவாகவே உள்ளன. உலப்பன வில் ரோகண கைதானார் ரோஹண விஜேவீர பிடிபடுவதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் பற்றிய சுருக்கமான ஆனால் துல்லியமான விளக்கத்தை ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சி.ஏ. சந்திரபெரும வின் “இலங்கை :பயங்கரமானஆண்டுகள் – 1987-1989ஜே. வி . பி கிளர்ச்சி ” என்ற புத்தகத்தில்உள்ள தொடர்புடைய பகுதிகள் வருமாறு : “பியதாச ரணசிங்க மற்றும் எச் பி ஹேரத் ஆகியோர் கலஹாவில் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு ஜே.வி.பி தலைவர்களும் ரோஹண விஜேவீரவை அடிக்கடி சந்தித்தனர். சிறிது நேர விசாரணையின் பின்னர் விஜேவீரவின் இருப்பிடத்தை ஹேரத் தெரிவித்திருந்தார். சில மணித்தியாலங்களின் பின்னர், கண்டி உலப்பன வில், விஜேவீர, அத்தநாயக்க என்ற பெயரில் தோட்டஉரிமையாளராக மாறுவேடமிட்டு, அவர் வசித்த தோட்ட பங்களாவில் கைது செய்யப்பட்டார். “பிற்பகல் 2 மணியளவில் தரப்பினர் சென்றபோது போது, விஜேவீர சவரம் செய்துகொண்டிருந்தார் . இராணுவக் குழு ஒரு வாசலில் ஏறி வீட்டைச் சுற்றி வளைத்தது. விஜேவீர, “நான் அத்தநாயக்க, இங்கு வர உங்களுக்கு உரிமையில்லை. நான் அமைதியை விரும்பும் மனிதன்.” என்றுகூறினார் “விஜேவீரவின் நம்பிக்கையானகூற்றினால் கேர்ணல் .ஜானக பெரேரா குழம்பிப்போய், அவர்கள் தவறான இடத்திற்கு வந்துவிட்டதாக நினைத்தார். அப்போதும் அவர் தனது கைத்துப்பாக்கியை மெல்ல மெல்ல அத்தநாயக்கவின் தலையில் வைத்துவிட்டு, “ஓயா விஜேவீர?” என்று கேட்டார். “அத்தநாயக்க”, கேர்ணல் சுட்டு விடுவார் என்று பயந்து, தான் விஜேவீர என்று ஒப்புக்கொண்டார், மேலும் “நான் உங்களுடன் வருவேன், ஆனால் என் குடும்பத்திற்கு தீங்கு செய்யவேண்டாம்”என்றுகூறினார் ர் . வீட்டில் விஜேவீரவின் மனைவியைத் தவிர இரண்டு பெண் வேலைக்காரர்கள் இருந்தார்கள், விஜேவீர வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது எல்லாப் பெண்களும் புலம்பத் தொடங்கினர். பின்னர் ரோஹண விஜேவீர கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஜே.வி.பி தலைமையிலான-என்.பி.பி அரசாங்கம் விஜேவீரவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடுவார் மற்றும் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றிய நம்பகமான தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2004 ஆம் ஆண்டு ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீரவின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு,ரெஜி சிறிவர்தனவினால்”இரங்கல் செய்தியாளர்களின்இளவரசர்” என்று வர்ணிக்கப்பட்டபிரபல ஊடகவியலாளர் அஜித் சமரநாயக்க எழுதிய அவரது ஞாயிற்று க்கிழமை கட்டுரையின் ஒரு பகுதியுடன் நிறைவு செய்கிறேன் . அஜித் சமரநாயக்க வின் கட்டுரை “ரோஹண விஜேவீர 46 வயதில் கொல்லப்பட்டபோது, நாட்டின் வாழ்வில் அவரது வகிபாகம் பற்றி இலங்கையில் எந்த வொரு அரசியல் தலைவரும் இவ்வளவுக்கு கூர்மையான மற்றும் முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கவில்லை. நடைமுறை நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகஇலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான உயரடுக்குதாங்கள் முதலாளித்துவவாதியாக , தாராளவாதியாக அல்லது மார்க்சியவாதியாகஇருந்தாலும்நடைமுறை நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்காக கருத்தொருமைப்பாட்டை கொண்டிருந்த நிலையில் அவரது சொந்தக் கண்ணோட்டத்தில் விஜேவீர கவனமாக திட்டம் தீட்டி குழப்ப முயன்றார். “வலது மற்றும் மரபுவழி இடது இரண்டிற்கும் அவர் பிசாசாக அவதாரம் எடுத்தார், ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் ஒரு கடவுள். விஜேவீரவே இந்த பாத்திரத்தில் மிகவும் மகிழ்ந்தார். தாடியுடன், அவரது அனல்கக்கும் பேச்சுக்களுடன், அவர் காலத்தின் அரசியல் பரப்பின் ஒரு பகுதியாக இருந்தார், இலங்கையின் வளம்குன்றிய அரசியல் அரங்கில் தீங்கான காரணத்திற்காக வாதாடுபவர் முதல் ஜனாதிபதி வேட்பாளர் வரையிலான அனைத்து பாத்திரங்களையும் வகித்தார். “அவரது எதிர்ப்பாளர்களின் பார்வையில், விஜேவீர ஒரு சந்தர்ப்பவாதி, அவர் என். சண்முகதாசனின் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிளவுபடுத்தி, 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரச அதிகாரத்திற்கு முயற்சித்து தனது சொந்த இராணுவத்தை உருவாக்குவதற்காக அதன் உறுப்பினர்களை இழுத்துக்கொண்டார். சுதந்திரத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட சமூக முறைமையிலிருந்து அவரது அபிமானிகள் மத்தி யில் அவர் ஒரு இலட்சியவாதி, அவர் ஏழை விவசாயிகளையும் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதன் விளிம்புநிலை இளைய பிரிவினரையும் அணிதிரட்டியவர் .” எந்தக் கருத்து யதார்த்தத்துக்கு அதிகளவுக்கு ஏறத்தாழ பொருந்தும் ? ”சிலசமயம் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையிலும் சந்தர்ப்பவாதத்தின் ஒரு அம்சம் இருக்கலாம் மற்றும் அரசியல் என்பது சந்தர்ப்பவாதம் மற்றும் இலட்சியவாதத்தின் கலவையாகும். பாராளுமன்ற தேர்தல் மார்க்கத்தினூடாக மட்டுமே இலக்கை அடைவதற்கான திருக்குருதிக்கலத்தை [இயேசுநாதர் இறுதிஉணவு வட்டில் ]கொண்டுசெல்வதென சுதந்திரத்துக்கு பின்னரான காலகட்டத்தில் இடது சாரிகளுக்கும் வலதுசாரிகளுக்குமிடையிலான கருத்தொருமைப்பா ட்டு அரணினால் பாதுகாக்கப்பட்ட இலங்கை அரசின்மீது மூன்று தசாப் தத்திற்குள் இருதடவை தாக்குதல் நடத்தியதன் அ டிப்படையில் அவரது காலகட்டத்தில் ரோஹண விஜேவீர அதிகளவுக்கு துணிச்சலான அரசியல் வாதி என கூறப்பட்டது பினான்சியல் டைம்ஸ் https://thinakkural.lk/article/313010
  24. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, எதிர்வரும் காலங்களிலாவது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனை இலக்காகக் கொண்டு அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருதரப்பினரும் இதன்போது ஆராய்ந்துள்ளனர். அதேபோன்று தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை கஜேந்திரகுமார் சிறீதரனிடம் கையளித்தார். அத்தோடு ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் பற்றி இதன்போது சிறீதரன் எடுத்துரைத்தார். அது மாத்திரமன்றி, தமிழர்களுக்கான தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகவேண்டும் என்ற கொள்கை ரீதியான நிலைப்பாடு தொடர்பில் இருதரப்பினரும் தமது இணக்கத்தை வெளிப்படுத்தினர். https://thinakkural.lk/article/313035
  25. ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. நான் அமெரிக்காவின் அதிபராக பெருமையுடன் பதவியேற்கும் நாளான 2025 ஜனவரி 25, க்கு முன்பாக காசாவில் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மத்திய கிழக்கும், மனிதகுலத்துக்கு எதிராக இத்தகையை அட்டூழியங்களை செய்து கொண்டிருப்பவர்களும் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க வரலாற்றிலேயே யாரும் செய்யாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். உடனடியாக பிணைக் கைதிகளை விடுவியுங்கள். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், அவர்கள் தங்கியிருக்கும் காசாவில் தீவிர தாக்குதலை நடத்திவருகிறது. இதில், இதுவரை 43,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்று தெரியப்படுத்தப்படவில்லை. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஹமாஸுக்கு-ட்ரம்ப்-கடும்-எச்சரிக்கை/50-348159

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.