Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. 2034 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்! 2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என ஃபிஃபா நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. தொடரின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030ஆம் ஆண்டு 3 போட்டிகள் ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. நேற்று இடம்பெற்ற ஃபிஃபா காங்கிரஸின் வாக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஃபிஃபாவில் அங்கம் வகிக்கும் 211 நாடுகளின் பிரதிநிதிகள் தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. https://www.hirunews.lk/tamil/390532/2034-உலகக்-கிண்ண-காற்பந்தாட்ட-தொடர்-சவுதி-அரேபியாவில்
  2. அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இன்று புதன்கிழமை(11) காலை 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த மவட்ட செயலர்; வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களை ஏற்று தற்துணிவின் அடிப்படையிலும் செயற்பட்ட மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களையும் பாராட்டுவதாகவும், குறிப்பாக இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் தொடர்பாக ஏற்பட்ட சாவல்களுக்கு மத்தியிலும் கடும் முயற்சிகள் எடுத்துவருவது எமது இளைஞர் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான விடயம் எனத் தெரிவித்ததுடன், அவ் உபகரணங்களின் பாவனை தொடர்பாக பிரதேச செயலக ரீதியான கண்காணிப்பு அவசியமானது எனக் குறிப்பிட்டதுடன், வேலைத்திட்டங்களில் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிபர குடிசன தொகைமதிப்பிடும் கணிப்பீட்டில் காரைநகர், வேலணை, சங்கானை மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்கள் முறையே இதுவரை பூர்த்தி செய்துள்ளதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, நலன்புரி நன்மைகள் தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், அஸ்வெசுமத் திட்டத்திற்குப் பொறுப்பான மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். (ச) https://newuthayan.com/article/அபிவிருத்தி_திட்டங்களின்_முன்னேற்ற_மீளாய்வுக்கூட்டம்
  3. தமிழ்த்தேசியக் கட்சிகள்- சிவில் சமூகம் இணைத்து அரசியல் தீர்வு குறித்துப் பேச உத்தேசம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், வெகுவிரைவில் அதற்குரிய திகதியைத் தீர்மானிப்பதற்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. அண்மையில் நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, எதிர்வரும் காலங்களிலேனும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுப் பயணிக்கவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அந்த அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியம் என்ற கருத்தும் பரவலாகக் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவை அடிப்படையாகக்கொண்டு ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமுன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளுடனான கலந்துரையாடலின் ஓரங்கமாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சிறிதரன், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு குறித்துக் கலந்துரையாடுவதற்கு இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதுகுறித்து கலந்துரையாடும் நோக்கில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு கிளிநொச்சியில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் தீர்வு விவகாரத்தைப் பொறுத்தமட்டில் நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுபட்டுச்செயற்படவேண்டிதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது 'ஏக்கிய இராச்சிய' உள்ளடக்கத்தைத் தாம் ஒன்றுபட்டு எதிர்ப்பதுடன், அதற்கு மாற்றாக தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றை முன்மொழியவேண்டிய தேவை காணப்படுவதாகவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார். அதனை ஏற்றுக்கொண்ட செல்வம் அடைக்கலநாதன், அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி பேச்சு வார்த்தைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்தார். இந்நிலையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றையும், சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு தமிழ் மக்கள் பேரவையினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற அமர்வின் போது இதற்கான திகதியைத் தீர்மானிக்கவிருப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். https://newuthayan.com/article/தமிழ்த்தேசியக்_கட்சிகள்-_சிவில்_சமூகம்_இணைத்து_அரசியல்_தீர்வு_குறித்துப்_பேச_உத்தேசம்
  4. பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று புதன்கிழமை(11) பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. "பால்நிலையை முதன்மைப்படுத்துவதற்கான பல்துறைசார்ந்த மற்றும் ஒன்றிணைந்த முன்னோக்குகள்" என்ற தொனிப்பொருளுடன் இடம்பெற்ற இந்த "வியோமம்" சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையப் பணிப்பாளரும், சந்தைப்படுத்தல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.சிவாணி தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட பால்நிலை ஆலோசகரும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானங்கள் பீடாதிபதியுமான கலாநிதி மனோஜ் பெர்ணாண்டோ, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோட்டா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள தர்மம் நிலையத்தின் பணிப்பாளரும், சட்டவாளருமான நகுலேஸ்வரன் தர்மலிங்கம் ஆகியோர் திறவு உரையாளர்களாகக் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு முன்னதாக, பால்நிலை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பால்நிலை வன்முறை குறித்த 56 உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மிக முக்கிய அம்சமாக தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களின் நடன நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆய்வு மாநாட்டுத் திறவுரைகளைத் தொடர்ந்து, ஆய்வுக் கட்டுரைகள், அனுபவப் பகிர்வுகள் மற்றும் செய்தி மடல் வெளியீடு இடம்பெற்றதுடன், வடக்கு மாகாணத்தில் பால்நிலை சமத்துவத்தை முதன்மைப்படுத்துவதற்காகத் தம்மை அர்ப்பணித்துச் சேவையாற்றியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பால்நிலை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் சமூக மட்டப் பிரதிநிதிகள், பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், அரசாங்க அலுவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/பால்நிலை_சமத்துவம்,_ஒப்புரவு_குறித்த_இரண்டாவது_சர்வதேச_ஆய்வு_மாநாடு!
  5. ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள் Getty Images தலைமுறைகள் கடந்தும் ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராக' நிலைத்து நிற்கிறார் "பலரும் அற்புதங்களை நம்புவதில்லை, ஆனால் அற்புதங்கள் நிகழ்கின்றன. ஒரு சாதாரண பேருந்து நடத்துனர் மிகப்பெரிய மனிதர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது ஓர் அற்புதம் தான்." கடந்த 2013ஆம் ஆண்டு என்டிடிவி ஊடக விருது (Greatest Global Living Indian Legends) வழங்கும் விழாவில், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் விருது வாங்கிய பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. கடந்த 1975ஆம் ஆண்டில், 'அபூர்வ ராகங்கள்' எனும் திரைப்படத்தில், சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான ஒரு நடிகர், பிறகு வில்லன், கதாநாயகன், 'சூப்பர் ஸ்டார்', என பரிணாமங்கள் எடுத்து, 2023இல் 'ஜெயிலர்' எனும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ஒரு திரைப்படத்தைக் கொடுத்து, இன்றும் 'சோலோ ஹீரோவாக' (Solo hero) நிலைத்து நிற்பதை அவர் கூறியது போலவே 'அற்புதம்' என்றே விவரிக்கலாம். இன்று அவர் தன் 74வது பிறந்த நாளை (டிச. 12) கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவை நிச்சயமாக ரஜினிகாந்திற்கு முன்-பின் என பிரிக்கலாம். பல தமிழ் சினிமா நடிகர்களிடம் அவரது ஸ்டைல் மற்றும் நடிப்பின் தாக்கம் இருப்பதை நம்மால் திரையில் பார்க்க முடிகிறது. தென்னிந்தியா மட்டுமல்லாது, வடஇந்தியாவில் கூட நன்கு அறியப்பட்ட நடிகராகவே ரஜினிகாந்த் இருக்கிறார். திரையில் அறிமுகமாகி 49 ஆண்டுகளைக் கடந்தும் அவர் முன்னணி நடிகராக, 'சூப்பர் ஸ்டாராக' நிலைத்து நிற்பது எப்படி? 'முத்து' படத்தில் செய்த வித்தியாசங்கள் நடிகர் ரஜினியின் வெற்றிக்கு, அவர் ஒரு இயக்குநரின் நடிகராக இருப்பதும், தமிழ் சினிமா ரசிகர்கள் குறித்த அவரின் புரிதலும் தான் காரணம் என்று கூறுகிறார் நடிகர் மற்றும் இயக்குநர் ரமேஷ் கண்ணா. 'முத்து', 'படையப்பா', 'கோச்சடையான்' போன்ற திரைப்படங்களில் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள இவர், பல திரைப்படங்களின் கதை விவாதங்களிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். "ரஜினி, பெரும்பாலும் கதை விவாதங்களில் கலந்துகொள்வார். முன்னர் எல்லாம் பிறமொழி திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது, அதை அப்படியே எடுத்து வைப்பார்கள். ஆனால் ரஜினி, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு ரீமேக் செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்," என்கிறார் ரமேஷ் கண்ணா. கடந்த 1995ஆம் ஆண்டில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற 'முத்து' திரைப்படம், மோகன்லால் நடிப்பில் வெளியான 'தென்மாவின் கொம்பத்' (1994) எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவல். இரு திரைப்படங்களின் திரைக்கதையிலும் அதிகளவு வித்தியாசங்களை நம்மால் காண முடியும். RameshKanna/Facebook நடிகர் ரஜினியின் வெற்றிக்கு, அவர் ஒரு இயக்குநரின் நடிகராக இருப்பது முக்கிய காரணம் என்கிறார் ரமேஷ் கண்ணா "படையப்பா திரைப்படத்தின் கதை விவாதத்தின் போது, ஒரு காட்சி பிடிக்கவில்லை என சொன்னபோது, அதை அவர் ஏற்றுக்கொண்டார். அது சில 'பஞ்ச் டயலாக்குகள்' கொண்ட மாஸான ஒரு காட்சி. அதில் மாற்றம் சொன்னபோது, எந்த 'ஈகோவும்' இல்லாமல் ஒப்புக்கொண்டார்." என்கிறார் ரமேஷ் கண்ணா. கதை, திரைக்கதை முடிவாகி, படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே கேட்டு நடிப்பதும், அதை இன்றுவரை பின்பற்றுவதும் தான் அவரது வெற்றிக்குக் காரணம் என தான் நினைப்பதாக கூறுகிறார் ரமேஷ் கண்ணா. ரஜினிகாந்தின் திரை பிம்பம் Getty Images 'கபாலி' படத்திற்கு பிறகு ரஜினியின் பாணியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது என்கிறார் எழுத்தாளர் தீபா நடிகர் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையை 'அண்ணாமலை திரைப்படத்திற்கு முன்-பின்' என இரண்டாக பிரித்துப் பார்த்தால், அவரது வெற்றிக்கான பாதை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என புரியும் என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். "அண்ணாமலை திரைப்படத்தில், ஒரு சாதாரண, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அப்பாவி மனிதன், பணக்காரர்களால் ஏமாற்றப்படுகிறான். பிறகு அந்த அப்பாவி, யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு முன்னேறி, வெற்றி அடைகிறான்." "அண்ணாமலை திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற பிறகு, ரஜினி தேர்ந்தெடுத்த கதைகள் பெரும்பாலும் 'ஒரு வெகுளியான அல்லது நல்ல மனம் கொண்ட ஒருவன், வாழ்க்கையில் துரோகத்தைச் சந்தித்த பிறகும் கூட, எப்படி பல சாதனைகளைச் செய்கிறான் அல்லது அதிலிருந்து மீண்டு வருகிறான்' என்பதை அடிப்படையாகக் கொண்டவையே" என்கிறார் ஜா.தீபா. ஜா.தீபா குறிப்பிடுவது போன்ற கதாபாத்திர வடிவமைப்புகள் அல்லது கதைகளை, அண்ணாமலைக்கு பிறகு வந்த உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி, கோச்சடையான், லிங்கா போன்ற திரைப்படங்களில் நம்மால் காண முடியும். அதேபோல, 'தென்மாவின் கொம்பத்' திரைப்படத்தில், 'முத்து' படத்தில் வருவது போன்ற 'ஜமீன்தார்' (ரஜினிகாந்த்) கதாபாத்திரமோ, அவர் தனது உறவினரால் (ரகுவரன் ஏற்று நடித்திருந்த 'ராஜசேகர்' எனும் கதாபாத்திரம்) ஏமாற்றப்படுவது போன்றோ காட்சிகள் இருக்காது. Deepa/Instagram நடிகர் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையை 'அண்ணாமலை திரைப்படத்திற்கு முன்-பின்' என பிரிக்கலாம் என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா "மற்ற கதாநாயகர்களை விட இதுபோன்ற கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்தது ரஜினி தான். ஒரு சாமானியன் நினைத்தால் எந்த எல்லைக்கும் செல்ல முடியும், இது மக்களுக்குப் பிடித்த 'ஒன்லைன்'. அதையே தனது பாணியில் திரையில் காட்டியது, ரஜினியின் புத்திசாலித்தனம் தான்" என்கிறார் தீபா. நடிகர் ரஜினி, 'அண்ணாமலைக்கு' பிறகு, தனது திரைப்படங்களின் கதை குறித்து மிகவும் கவனமாக இருந்தார் என்று கூறும் தீபா, "அவர் தீர்மானித்த கதைகளில் சறுக்கியது என்று பார்த்தால் 'பாபா' மட்டும் தான். இயக்குநர்களும் அவருக்கு ஏற்றவாறு திரைக்கதை எழுதினர். 'கபாலி' படத்திற்கு பிறகு தான் இந்தப் பாணியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது" என்கிறார். ரஜினி படங்களில் பெண் கதாபாத்திரங்கள் Getty Images ஒருகட்டத்தில் ரஜினியின் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம், தனக்கு கவலையை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் ஜீவ சுந்தரி எழுத்தாளரும், பெண்ணிய ஆய்வாளருமான பா. ஜீவ சுந்தரி, "அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ரஜினி தான் வெளிப்படுவார். அதை வெறும் ஸ்டைல் என்று கூறி விட முடியாது. அவர் ஒரு நல்ல நடிகர். எனவே, ஸ்டைலுடன் கூடிய நடிப்பு தான் மக்களை ஈர்த்தது, ஈர்க்கிறது என்று சொல்லலாம்" என்கிறார். பா. ஜீவ சுந்தரி தமிழ் சினிமா குறித்து 'ரசிகை பார்வை' உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 'முள்ளும் மலரும்' திரைப்படத்தை உதாரணமாகக் கூறும் பா. ஜீவ சுந்தரி, "அந்தப் படம் ஒரு நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. நாவலை படித்தால், நிச்சயம் 'காளி' கதாபாத்திரத்தை வெறுப்பீர்கள். அவன் பெண்களை மதிக்க மாட்டான், எல்லோரிடமும் கோபப்படுவான், எப்போதும் 'குடி' என்று இருப்பான். ஆனால், அதே 'காளியை' திரையில் ரஜினி நடிப்பில் பார்த்தால், வெறுக்க முடியாது. அதுதான் அவரது பலம்" என்கிறார். ஆனால், ஒருகட்டத்தில் ரஜினியின் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் தனக்குக் கவலையை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் ஜீவ சுந்தரி. Jeeva Sundari / Facebook ரஜினியின் ஸ்டைலுடன் கூடிய நடிப்பு தான் மக்களை ஈர்த்தது, ஈர்க்கிறது என்று சொல்லலாம் என்கிறார், பா.ஜீவ சுந்தரி "ஆண்களின் பார்வையில் இருந்து தான் தமிழ் சினிமாவின் பெண் கதாபாத்திரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ரஜினியின் பல திரைப்படங்களில், படித்த அல்லது பணக்கார பெண்கள் திமிரானவர்களாக சித்தரிக்கப்பட்டனர். அவர் அந்தப் பெண்களை திருத்துவது போல காட்சிகள் இருக்கும்." என்று ஜீவ சுந்தரி கூறுகிறார். இதை எழுத்தாளர் ஜா.தீபாவும் சுட்டிக்காட்டுகிறார். "அது 90களுக்கு முன்புவரை படித்த பெண்கள் குறித்து சமூகத்தில் இருந்த பிம்பம், அதைத்தான் அவரது திரைப்படங்கள் பிரதிபலித்தன. அப்போது பிற நடிகர்களின் படங்களிலும் இது இருந்தது." "ஆனால், இப்போது அதே ரஜினியின் 'கபாலி', 'காலா' திரைப்படங்களில் வந்த பெண் கதாபாத்திரங்களை பார்த்தால், அவர் காலத்திற்கு ஏற்றாற்போல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது புரிகிறது. அதுவும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்" என்று கூறுகிறார் தீபா. மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபடுவது எங்கே? Madankarky/Instagram ரஜினிகாந்த் நடித்த எந்திரன் மற்றும் 2.0 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்களில் பங்காற்றியுள்ளார் மதன் கார்க்கி பிபிசி தமிழிடம் பேசிய பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் மதன் கார்க்கி, "நடிகர் ரஜினிகாந்திற்கு இருப்பது போல பலதரப்பட்ட ரசிகர்களை வேறு நடிகருக்கு பார்ப்பது சிரமம் தான். 'தலைமுறை இடைவெளி' என்று சொல்வோம், ஒரு தலைமுறைக்கு பிடித்தது மற்றொரு தலைமுறைக்கு பிடிக்காது. ஆனால், ரஜினி விஷயத்தில் மட்டும் இது நேர்மாறாக உள்ளது" என்கிறார். இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். குறிப்பாக 80கள் மற்றும் 90களில், பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாது முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கது 'ஹம்' (Hum) எனும் திரைப்படம். 1991இல் வெளியான இத்திரைப்படத்தில் கதாநாயகன் அமிதாப் பச்சன். அவரது சகோதரராக 'குமார் மல்ஹோத்ரா' எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவ்வாறு பிறமொழி திரைப்படங்களில் நடித்ததும், எந்த மாதிரியான திரைப்படங்களை, கதாபாத்திரங்களை மக்கள் விரும்புவார்கள் என்பதை புரிந்துகொள்ள அவருக்கு உதவியது என்கிறார் மதன் கார்க்கி. ரஜினிகாந்த் நடித்த எந்திரன் மற்றும் 2.0 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்களில் பங்காற்றியுள்ள மதன் கார்க்கி, 2.0 திரைப்படத்தில் எழுதிய ஒரு வசனம், 'I'm the only one, Super One. No Comparison'. அதை நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தைக் குறிக்கவே எழுதியதாக மதன் கார்க்கி கூறுகிறார். "தனது ஸ்டைல் மற்றும் நடிப்புத் திறனை மட்டும் நம்பாமல், தனது பலதரப்பட்ட ரசிகர்களை திருப்திப்படுத்த நல்ல கதை மற்றும் திரைக்கதை அவசியம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இந்த இடத்தில் தான் மற்ற 'மாஸ் ஹீரோக்களிடம்' இருந்து ரஜினிகாந்த் வேறுபடுகிறார். அதனால் தான் நிலைத்தும் நிற்கிறார்" என்கிறார் மதன் கார்க்கி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cg52d94mg4go?at_campaign=ws_whatsapp
  6. ஆறு நாட்களில் ஆயிரம் கோடி : பிரபாஸ், ஷாரூக் பட வசூலை மிஞ்சிய புஷ்பா 2 Dec 11, 2024 19:40PM IST ஷேர் செய்ய : அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் வெறும் 6 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்தாண்டு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன், ராஷ்மிகா மந்தனா , ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ 294 கோடி வசூலித்தது. இதன்மூலம் முதல்நாளில் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படம் என்ற பெருமை பெற்றது. முன்னதாக ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முதல் நாளில் 233 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. தொடர்ந்து இரண்டாம் நாளில் ரூ.449 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.621 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ. 922 கோடியும் வசூலித்தது. இந்த நிலையில் ஆறாம் நாளில் 1002 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தை தயாரித்த மைத்ரி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அதிவேகமாக 1000 கோடி ரூபாய் வசூல் அள்ளிய இந்திய திரைப்படம் என்ற பெருமையுடன் சாதனைப் படைத்துள்ளது புஷ்பா 2. முன்னதாக உலகளவில் ஆயிரம் கோடி வசூல் ஈட்டிய இந்திய திரைப்படங்களாக ஆமீர் கானின் தங்கல், பிரபாஸின் பாகுபலி 2, கல்கி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணின் ஆர்.ஆர் ஆர் , யாஷின் கே.ஜி.எஃப் 2 , ஷாருக்கானின் பதான் , ஜவான் உள்ளன. விரைவில் இந்த அனைத்து படங்களின் வசூல் சாதனையையும் புஷ்பா 2 முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://minnambalam.com/cinema/pushpa-2-hits-rs-1000-crore-mark-in-just-six-days/
  7. யாழில் 3 தேசிய மக்கள் சக்தி பா.உ. க்கள் உள்ளனர். அதில் ஒருவர் வைத்தியர். அனுர அரசு வேறு 2/3 பெரும்பான்மையுடன் உள்ளது. தேசிய மக்கள் சக்தி பா.உ.க்கள் அருச்சுனாவின் அடாவடியைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது அல்லது சும்மா இருப்பது அவர்கள் வெறும் பொம்மைகள் என்று காட்டும்.
  8. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் 116 பேர் நீக்கம்! December 11, 2024 06:43 pm முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மனித வள முகாமைத்துவ பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவுக்கு நேற்று (10) கடிதம் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் இருந்து 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவில் உயர்தர பாதுகாப்பில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரபாகரன் என்ற சித்தாந்தம் கொண்டவர்கள் இதுவரை இல்லாதொழிக்கப்படாத நிலையில், அந்த பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வழிவகுத்த முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது மிகவும் பாரதூரமான நிலை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=197149
  9. உலகம் முழுவதும் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கின December 12, 2024 01:03 am உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர். அதன் பிறகு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களும் செயல்படவில்லை. முக்கிய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் முடங்கும் நேரங்களில் அது குறித்த தகவலை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் டவுன் டிட்டெக்டர் தளத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் தளங்கள் முடங்கியது குறித்து ஏராளமான பயனர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மெட்டா நிறுவனம் இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வௌியிட்டுள்ளது. அதில், "தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக சில பயனர்களின் பயன்பாடுகளை அணுகும் திறனைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்து வருகிறோம், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்." என்று பதிவிட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=197158
  10. இது என்ன வருத்தம்? ஹொஸ்பிட்டல் செகியுற்றியை வீடியோ எடுத்தது என்று வெருட்டுவதும் சண்டித்தனம் காட்டுவதும் கீழே வந்திருக்கு! இந்தப் பனிப்பைத்தியருக்கு நிறைய fan clubs இருக்கு @ரதி🤪 ‘சேர்’ பைத்தியம்பிடித்து அலையும் வைத்திய அதிகாரியும், மக்கள் பிரதிநிதியும்! யாழில் உலாவரும் அதிகார போதை!! By Independent Writer 3 hours ago எங்களுடைய தமிழ் வைத்தியர்களை பிடித்தாட்டிக்கொண்டிருக்கின்ற ‘சேர்’ வியாதியை நினைத்தால் ஒரு பக்கம் வெட்கமாக இருக்கிறது. மறு பக்கம் கோபம் கோபமாக வருகின்றது. ‘Call me Sir’ என்று ஒரு சிரேஷ்ட வைத்தியர் கூறியதை அவருக்கே தெரியாமல் ஒலிப்பதிவுசெய்து வெளியே கசியவிட்டு அனுதாபம் தேடி எம்பியானவர்தான் வைத்தியர் அர்ச்சுனா. ஆனால் அதே அர்ச்சுனா நேற்று யாழ் வைத்தியாலைக்குள் நுழைந்து மாவட்டப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி முன்பாக கால்மேல் கால்போட்டு அமர்ந்தபடி, ‘நீங்கள் என்னை சேர் என்றுதான் அழைக்கவேண்டும்’ என்றும், ‘நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பறவாயில்லை... என்னை சேர் என்றுதான் அழைத்தாகவேண்டும்;’ என்று அடாவடி புரிகின்ற காட்சியைப் பார்க்கின்றபோது, ‘இவர்களுக்கெல்லாம் என்னதான் நடந்துவிட்டது..’ என்று நினைக்கத்தோன்றுகின்றது. அது மாத்திரமல்ல, வைத்தியசாலை ஊழியர் ஒருவரை அவரது நெஞ்சில் கையைவைத்துத் தள்ளிவிட்டதுடன், ‘வாயை மூடுடா..’ ‘ராஸ்கல்..’ அது இது என்று கண்டிபடி அந்த ஊழியரை வைத்தியர் அரச்சுனா பலர் முன்னிலையில் பகிரங்கமாகத் திட்டுவதான CCTV காட்சி தற்பொழுது வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்திவருகின்றது. ‘உனக்குத் தெரியுமா நான் யாரென்று..’ ‘CID யிடம் பிடித்துக்கொடுப்பேன்…’ என்று அந்த ஊழியரை அவர் மிரட்டுவதையும் அந்த வீடியோவில் காண முடிகின்றது. சக மனிதர்களையும், அரச ஊழியர்களையும் மதித்துப் பேசுவதற்கு முதலில் மக்கள் பிரதிநிதிகள் கற்றுக்கொள்ளவேண்டும். தெரு ரவுடிகள் போன்றும், சினிமாக்களில் வருகின்ற தாதாக்கள் போன்றும் நடந்துகொள்ளாது, பதவிகள் உயருகின்றபோது தனது பண்புகளையும் உயர்திக்கொள்வற்கு அர்ச்சுனா என்கின்ற மக்கள் பிரதிநிதி கற்றுக்கொள்ளவேண்டும். ‘ என்னை சேர்’ என்று அழையுங்கள்..’ “உனக்குத் தெரியுமாடா நான் யார் என்று..’ “ராஸ்கல்..’ இவ்வாறு நீங்கள் அழைக்கின்ற நபர்கள்தான் உங்களுக்கு வாக்களித்து உங்களை நாடாளுமன்றம் அனுப்பிவைத்தவர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் சீ.ஐ.டி.யிடம் பிடித்துக்கொடுக்கமுனையும் அந்தத் தமிழ் இளைஞனைத்தான் நீங்கள் இன்று நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றீர்கள் என்பதை தயவுசெய்து உணர்ந்துகொள்ளுங்கள். மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் தனது தனிப்பட்ட காழ்ப்புணர்வு அழுக்குகளைக் கக்குகின்ற காரியத்தைத்தான் நீங்கள் தொடர்ந்துசெய்வீர்களாக இருந்தால், உங்களை நாடாளுமன்றம் அனுப்பிவைத்த யாழ் மக்கள் உங்களையிட்டு வெட்கப்பட்டு நிற்பார்கள் என்பது மாத்திரமல்ல, உங்களது அரசியல் எதிர்காலத்துக்கும் கூட நிச்சயம் ஆப்பு வைத்துவிடுவார்கள். உங்களைப் போல அதிகார வெறியில் ஆடிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு நமட்டுச் சிரிப்புடன் கடந்துசென்ற பண்பாளர்கள் நிறைந்துள்ள மண்ணில் நின்று நீங்கள் கூத்தாடிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம். https://ibctamil.com/article/mp-arjunas-atrocity-in-jaffna-hospital-1733949837
  11. சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்…! – சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள் சிரிய தலைநகரின் புறநகர் பகுதியில் – நீண்ட கால சர்வாதிகாரியின் பிடியிலிருந்து நாடு விடுபடுவதற்கு குறித்த நம்பிக்கைகளின் மத்தியில் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துபவையாக காணப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த சிறைச்சாலைக்கு விரைந்தவண்ணமிருந்தனர். கண்ணிற்கு தெரியாத ஆழத்தில் காணாமல்போய்விட்டதாக, அவர்கள் கருதும் தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்பதற்கான அடையாளங்கள் ஏதாவது உள்ளதா என்பதை அறிவதற்காககவே அவர்கள் அந்த சிறைச்சாலைக்கு சென்றுகொண்டிருந்தனர். மனித உரிமை மீறல்களிற்கு பெயர் போன அந்த சிறைச்சாலை தரிசு பாலை நிலங்களில் காணப்படுகின்றது. சைட்னயா சிறைச்சாலை என்பது மனிதகொலைக்கூடாரம் என பெயரிடப்பட்ட சிரிய கொன்கீரிட் கட்டிடங்களின் நிலவறையாகும். என்பிசி செவ்வாய்கிழமை அங்கு சென்றபோது சிறைச்சாலையில் மிகவும் காட்டுமிராண்டிதனமான சூழல் காணப்பட்டமைக்கான தடயங்களையும் தங்கள் நேசத்திற்குரியவர்களை தேடும் மக்களின் இயலாமையையும் கண்ணுற்றது. அசாத்தின் 50 வருட ஆட்சிக்காலத்தின் போது சைட்னயா போன்ற சிறைக்கூடங்களை ஆயுதமேந்திய படையினர் பாதுகாத்தனர், உள்ளே சென்றவர்கள் வெளியே வரவில்லை என்பதை உறுதி செய்தனர். பொதுமக்களை தடுத்துவைப்பதற்கும்,சித்திரவதை செய்வதற்கும் ஆயிரக்கணக்கான சிரிய மக்களை கொலை செய்வதற்கும் இந்த சிறைச்சாலை பயன்படுத்தப்பட்டது என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றனர்.அரசாங்கத்தை விமர்சிப்பவர்களும்,போலி குற்றச்சாட்டு சுமத்தப்;பட்டவர்களும் இந்த நிலைக்கு ஆளானார்கள் என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது பசார் அல் அசாத் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் சைட்னயா சிறையின் வாயில் நூற்றுக்கணக்கான கார்களால் நிரம்பி காணப்பட்டது. சிரியாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என பார்ப்பதற்கு வந்திருந்தனர். பட்டினி நிலையில் உள்ள கைதிகளை இரகசியபிரிவொன்று தடுத்துவைத்துள்ளது என்ற வதந்தியும் இதற்கு காரணம். அவர்கள் இரும்புதடிகள் கோடாரிகள் போன்றவற்றுடன் வந்திருந்தனர். ஒரு கட்டத்தி;ல் ஒரு புல்டோசரும் வந்தது,கடத்தப்பட்டவர்களை மீட்கும் நம்பிக்கையில் பொதுமக்கள் சிறையின் சில பகுதிகளை உடைத்தனர். அங்கு பெருமளவானவர்கள் காணப்பட்டனர், அனேகமாக ஆண்கள், சிலர் யாராவது அசாத் அரசாங்கத்தினால் தடுத்துவைக்கப்பட்டவர்களை பார்த்தீர்களா என கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர். தன்னைதானே ஏற்பாட்டாளர் என நியமித்துக்கொண்டிருந்த நபர் நிர்வாக நடவடிக்கைகளிற்கு பொறுப்பான அறையில்மீட்கப்பட்ட ஆவணமொன்றை வைத்துக்கொண்டு அதிலிருந்த பெயர்களை உரத்து தெரிவித்துக்கொண்டிருந்தார். இந்த ஆவணங்கள் தரை முழுவதும் சிதறிக்கிடப்பதை காணமுடிகின்றது.இந்த ஆதாரங்களை பாதுகாப்பது அவசியம் என சர்வதேச சட்ட வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த இடங்கள் சிரிய மக்களை பொறுத்தவரை இரகசியமானவை இல்லை.அவர்கள் நன்கு அறிந்த இடங்கள் மனித உரிமை அமைப்புகள் இவ்வாறான இடங்கள் குறித்து நன்கு பதிவு செய்துள்ளன. எனினும் செவ்வாய்கிழமை தீவிரஉணர்ச்சிகள் வெளியாகின, பதவிகவிழ்க்கப்பட்ட சர்வாதிகார ஆட்சியின் அடையாளங்களை முதல்தடவையாக பார்த்தவேளை மக்கள் கண்ணீர்விட்டு கதறினர்,அலறினர். உள்ளே வெள்ளை நிற கம்பிகளை கொண்ட சிறைக்கூடங்கள் காணப்பட்டன, அந்த சிறைக்கூடங்களிற்குள் நால்வர் மாத்திரம் இருக்க முடியும்,ஆனால் பெருமளவானவர்களை அவற்றிற்குள் தடுத்துவைத்திருந்தமைக்கான அடையாளங்களை காணமுடிந்தது. ஆதாரஙகளை தேடும் பொதுமக்களின் கையடக்க தொலைபேசிகளின் வெளிச்சம் காரணமாக அந்த சிறைக்கூடங்களிற்குள் ஆடைகள் குவியலாக காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. தனது மகன் காணாமல்போய் ஒரு தசாப்தமாகின்றது என தெரிவித்த பெண்ணொருவர் அவரை போராளி என குற்றம்சாட்டினார்கள் ஆனால் அவர் ஒரு ஆண்தாதி என்றார். ஒரு அறையில் இரண்டு தட்டையான மேற்பரப்புகளை உள்ளடக்கிய இரும்புசாதனம் காணப்பட்டது, கைதியொருவரை பொருத்தும் அளவிற்கு பெரியது. இறுக்கமாக மூடுவதற்கான பொறிமுறையும் காணப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்களை நசுக்கி கொலை செய்வதற்கு அல்லது சித்திரவதை செய்வதற்கு இதனை பயன்படுத்தினார்கள் என பொதுமக்கள் தெரிவித்தனர். மற்றொரு அறையில் ஒரு சுவரிலிருந்து மற்றைய சுவரிற்கு நீண்டிருந்த உலோக கம்பத்தை பார்க்க முடிந்தது,கைதிகளின் கரங்களை இந்த உலோக கம்பத்தில் சேர்த்து கட்டுவார்கள் கால்கள் கீழே தொங்கிக்கொண்டிருக்கும்,தாக்குவார்கள். வெளியே ஒருவர் நான்குகயிறுகளை வைத்திருந்தார்,அவற்றில் ஒன்றில்இரத்தம் காணப்பட்டது,அதனை மக்களை கொலைசெய்வதற்கு பயன்படுத்தினார்கள் என்றார் அவர். ஞாயிற்றுக்கிழமை கிளர்ச்சிக்காரர்கள் சிரிய தலைநகரை கைப்பற்றியவேளை சைடயன்யா சிறைச்சாலையிலிருந்து பலரை விடுவித்ததாக தெரிவித்தனர்.பெண்கள் சிறைக்கூடத்திலிருந்து வெளியேறுவதற்கு தயங்குவதை வீடியோக்கள்காண்பித்தன, தங்களை சித்திரவதை செய்த சர்வாதிகாரி வீழ்த்தப்பட்டான் என்பதை அவர்கள் நம்ப மறுத்தனர். அந்த சிறைச்சாலையில் இரகசியநிலவரைகள் காணப்படுகின்றன என்ற வதந்திகள் காரணமாக அதிகளவு மக்கள் அந்த சிறைச்சாலையை நோக்கி செல்ல தொடங்கினார்கள்.வைட்ஹெல்மட் என்ற அமைப்பும் மீட்பு குழுக்களும் கூட தேடுதல் நடவடிக்கைகளும் ஈடுபட்டனர். https://akkinikkunchu.com/?p=302734
  12. யாழ் . போதனா மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை adminDecember 11, 2024 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக சமூக நல அமைப்பு ,யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்த திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். இதன் போது இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா மற்றும் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் உறுதி அளித்துள்ளனர் கையளிக்கப்பட் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த 14 வருடங்களாக உரிய வசதிகளைக் கொண்ட மகப்பேற்று விடுதி இல்லாத நிலை காணப்படுகிறது. 2012ஆம் ஆண்டு மருத்துவமனையில் இருந்த பழைய மகப்பேற்றுக் கட்டடத் தொகுதியின் மேற்தளக் கொங்கிறீற் கூரையின் சிறு பகுதி உடைந்து ஒரு கட்டிலின் மீது விழுந்தது. அவ்வேளை அக்கட்டிலில் இருந்த தாய் வெளியே சென்றமையால் எந்த வித ஆபத்தும் நிகழவில்லை. இவ்விடயம் அன்றைய மருத்துவமனை நிருவாகத்தால் உடனடியாக சுகாதார அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்டடம் ஆபத்தானதென்று அரச பொறியியலாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மகப்பேற்று விடுதி இடித்து அகற்றப்பட்டது. அன்று முதல் மகப்பேற்றுக்கு வரும் கர்ப்பிணித்தாய்மார் சாதாரண மருத்துவ விடுதியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண விடுதி மகப்பேற்றுக்குரிய முறையில் மாற்றப்பட்டு மகப்பேற்று விடுதிகள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டன. தற்போது 5 அலகுகளைக் கொண்ட பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று விடுதிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் மிகவும் நெருக்கடியான சூழலில் இயங்குகின்றன. இதனால் கடந்த 12 வருடங்களாக பல்வேறு அசௌகரியங்களைக் கர்ப்பிணித் தாய்மார் எதிர்நோக்குகின்றனர். தற்போது மகப்பேற்றுக்கு வரும் தாய்மாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்குப் போதிய இடவசதி இன்மை காணப்படுகிறது. அத்துடன் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவதால், ஒரு புதிய மகப்பேற்று வளாகம் அமைப்பது அவசியமாகியுள்ளது. தற்போதைய தற்காலிக மகப்பேற்று விடுதிகளில் உள்ள பிரச்சினைகள்: 1. இடவசதியின்மை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் கட்டில்கள் இல்லாததால், பலர் தரையில் தங்க வேண்டிய நிலைமை. சில சந்தர்ப்பங்களில் நிலத்திலும் இடம் இல்லாத நிலை காணப்படுகிறது. கட்டில்களைச் சுற்றியுள்ள இடம் குறைவாக இருப்பதால், மருத்துவக் குழுவின் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுகிறது. நோயாளிகளுக்குத் தனியுரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்குத் தனியான தொட்டில் (Baby Cot) இல்லாமல் தாயுடன் கட்டிலில் உறங்க வைக்க வேண்டி உள்ளது. மகப்பேற்றுக்கு பின்னரான மனநோய்கள் தற்போது அதிகம் என்பதால் அவர்களைப் பராமரிப்பதற்கான தனிப்பகுதி இல்லாமை. முதல் பிரசவத்துக்கு வரும் தாய்மார் பலர் மருத்துவமனையின் இந்த நெருக்கடியான சூழலைப் பார்த்து இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று தவிர்க்கும் நிலைக்குச் செல்கின்றனர். இது எமது சமூகத்துக்கு நாம் செய்யும் பெரும் அநீதியாகும். 2. அவசர சிகிச்சைப் பிரிவு எதிர்நோக்கும் பிரச்சினைகள்: மகப்பேற்று விடுதிகளுக்காக தனிப்பட்ட அறுவைச் சிகிச்சைக்கான அறை இல்லாததால், அவசர சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அறுவைச் சிகிச்சை அறைகள் தொலைவில் இருப்பதால், அவசர சிசேரியன் அறுவைச் சிகிச்சை தாமதமாகிறது. அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் போதுமான கட்டில்கள் இல்லாமை. புதிய மகப்பேற்று வளாகம் அமைப்பதற்கான பரிந்துரைகள்: 1. விடுதிகள் மற்றும் இடவசதி: போதிய இடவசதியுடன் கட்டில்கள் அமைத்து, அனைத்து நோயாளிகளுக்கும் கட்டில் வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான தனித் தொட்டில் (baby cot) ஒவ்வொரு கட்டிலுக்கும் இணைக்க வேண்டும். மகப்பேற்றுக்குப் பின்னான விடுதிப் பகுதியில் மகப்பேற்றுக்கு பின்னான மன நோய் உள்ள நோயாளிகளைப் பராமரிப்பதற்கான தனிப்பகுதி அமைக்க வேண்டும். ஒவ்வொரு விடுதிக்கும் தனியான உயர்சார்பு அலகு மற்றும் தனிமைப்படுத்தல் அலகு அமைக்கப்பட வேண்டும். கருப்பையகப் புற்றுநோய்ப் பிரிவுக்கு மற்றும் கருவுறாமைப் பிரிவுக்கு தனி விடுதிகள் அமைத்தல் வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவின் வசதிகள்: மகப்பேற்று விடுதிகளுக்காகத் தனிப்பட்ட அறுவைச் சிகிச்சை அறைகள். அவசரச் சூழல்களில் நுணுக்கமாகச் செயல்படக்கூடியதான மருத்துவ மையக்கட்டமைப்பு. போதுமான கட்டில் வசதிகள் கொண்ட அதி தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) 3. புதிய வளாகத்தின் பயன்கள் நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான உயர்தர சிகிச்சை வசதிகள். தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் மேம்பட்ட இடவசதி. உடனடி அவசர சிகிச்சை வசதிகளால் விரைவான உயிர் காக்கும் முயற்சி. மருத்துவ மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறந்த கற்றல் மற்றும் வேலைச் சூழல் பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சேவையளிக்கக்கூடிய திறன். யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு புதிய மகப்பேற்று வளாகம் அமைப்பது அவசர தேவையாகும். இது வட மாகாண மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை வழங்குவது மட்டுமல்லாமல், அடுத்த தலை முறைகளின் நலனை உறுதிப்படுத்தும் யாழ். போதனா மருத்துவமனை முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (Neonatal Intensive Care Unit) மகப்பேற்று விடுதிக்கு அருகில் தற்காலிக விடுதி வழங்குதலும் அனைத்து வசதிகளும் கொண்ட மகப்பேற்று விடுதித் தொகுதி அமைத்தலும் யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தின் போது (2024 நவம்பர்) ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மருத்துவமனையின் முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவினுள் வெள்ளம் சென்றமையால் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் தாய்மார் பாலூட்டுவதற்காக நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலையில் மிகுந்த அசௌகரியத்துக்கு உள்ளாகினர். குழந்தைகளுக்கு ஏற்படும் அவசர நிலையில் மருத்துவர்களால், ஏனைய சுகாதாரப் பணியாளர்களால் உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது உள்ள முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் ஆனது உடைத்து அகற்றப்பட்ட மகப்பேற்றுக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியாகும். அண்மைய வெள்ளத்தால் சுவர்களில் ஈரக் கசிவு ஏற்பட்டு மின் ஒழுக்கு ஏற்பட்டது. சிகிச்சை பெறும் சிசுக்களும் சுகாதார அபாயகரமான பணியாளர்களும் உயிர் ஆபத்தான நிலையை எதிர்நோக்கினர். இவ்வருடம் மேலும் இரு புயல்கள் வட பகுதியைத் தாக்கும் என்றும் வானிலை எதிர்வு கூறல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தற்போதுள்ள முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவை மகப்பேற்று விடுதிகள் 20, 21, 22 அமைந்துள்ள மருத்துவ விடுதியின் அதே தளத்தில் தற்காலிகமாக இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள தங்களது ஆலோசனையையும் உதவியையும் எதிர்பார்க்கின்றோம் என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/209154/
  13. நான் அகன்ற திரையில் மூன்று மணி நேரம் மினக்கெட்டுப் பார்த்தேன்! படம் முடிய இரவு பன்னிரண்டு தாண்டிவிட்டது! ஆனால் நித்திரை வரவில்லை! புஷ்பாவுக்கு (அல்லி அர்ஜுனாவுக்கு) வயசு கூடிவிட்டது. முகம் களைப்பாக இருக்கு. தொப்பையும் வைத்துள்ளது..! ராஷ்மிகாவை சும்மா பார்க்கலாம்! ஒரு பாட்டுக்கு வந்த ஶ்ரீலீலா நம்ம சமந்தாவுக்கு கிட்டவரமுடியாது😍
  14. டொக்டர் சத்தியமூர்த்தி விதிகளைப் படித்திருக்கமாட்டார் என்று தெரிந்து அருச்சுனா அவரை வெருட்ட முனைந்திருக்கின்றார். சேர் என்று அழைக்கவேண்டும் எவரும் விதிகளைப் போடுவதில்லை. ஒரு பொறுப்பான பதவியில் உள்ளவரின் அலுவலகத்திற்கு அவரின் அனுமதி இல்லாமல் ஒரு பா.உ. போகமுடியாது. இந்தப் பைத்தியரின் நோக்கம் தான் விலாசம் காட்டுவதை மற்றவர்கள் சமூக ஊடகங்களில் கதைக்கவேண்டும் என்பதுதான். அதைத்தான் நாங்களும் செய்கின்றோம்! சார் என்று கூப்பிட்டால் எனக்கு துண்டறப் பிடிக்காது நியாயம். அது ஒரு அடிமைப் புத்தி. மேலும், நான் அருச்சுனாவின் விசிறி கிடையாது. அதனால் அவரின் கூத்துகளை ரசிக்க நேரம் இல்லை.
  15. செல்வம் – கஜேந்திரகுமாா் விசேட சந்திப்பு- adminDecember 10, 2024 தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பா நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம் பலத்திற்கும் இடையில் இன்று (10) செவ்வாய்க்கிழமை இரவு கிளிநொச்சியில் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.குறித்த சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,,, விசேடமாக அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வர உத்தேசித்துள்ள இச் சூழ் நிலையில் குறித்த அரசியல் அமைப்பை உறுதியாக அறிவித்துள்ள நிலையில்,அதனை நாடாளுமன்றத்தில் எவ்வாறு எதிர் நோக்கப்போகின்றோம் என்ற விடையம் குறித்தும்,குறிப்பாக தமிழ் தேசிய மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும்,புதிய அரசியல் அமைப்புகொண்டு வரப்படுகின்ற சந்தர்ப்பத்திலே எங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடு,தொடர்பாகவும்கலந்துரையாட இந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி உள்ளோம். நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி நாங்கள் இக் கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்பதை நாங்கள் கேட்டு இருந்தோம். அந்த வகையில் எமது தீர்வு திட்டத்தில் ஒரு பிரதியையும் வழங்கி மேலதிகமாக புது வருடத்தின் பிற்பாடு,நாங்கள் மீண்டும் கூடி தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளை ஆழமாக ஆராய்வதற்கு நாங்கள் இனங்கியுள்ளோம். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனோடும் இவ் விடயம் தொடர்பாக பேசி புதிய வருடத்தோடு மேலதிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நாங்கள் யோசித்து இருக்கின்றோம். அந்த சந்திப்பு பேரவையினுடைய தீர்வு திட்டத்தை ஆழமாக ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை தமிழரசுக் கட்சி,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,சிவில் சமூக தலைவர்களையும் உள் வாங்கி மேலதிகமாக இவ்விடயத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடையங்களை நாங்கள் வருகின்ற ஒரு சில நாட்களில் சிறிதர னுடனும் யோடும் பேசி முடிவு எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.( https://globaltamilnews.net/2024/209141/
  16. இந்த விசுக்கோத்து எம்பிக்கு வாக்குப்போட்டு அனுப்பின பனிக்கூட்டத்திற்கு இன்னும் ஷோ காட்டுவார்! He clearly abused his power and violated the law/act. https://parliament.lk/files/pdf/powers-privileges-act-en.pdf
  17. மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா? MinnambalamDec 09, 2024 07:00AM ராஜன் குறை மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கலாம். எது மிக முக்கியமான வேறுபாடு என்று புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் தனி மனிதர் அரியணை ஏறி ஆட்சிக்கு வருவார். அவர் மன்னராக முடிசூட்டப்பட்டிருந்தால் அவர் தனது ஆயுட்காலம் முழுவதும் மன்னராக இருப்பார். அவர் ஒரு தனி மனிதராகத்தான் பிறப்பின் அடிப்படையிலோ, யானை மாலை போட்டதாலோ, வேறு எந்த காரணத்தாலோ அரசராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். மக்களாட்சியில் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும். ஒட்டுமொத்த கட்சியும் ஆட்சி செய்ய முடியாது என்பதால்தான் அந்தக் கட்சியினர் தேர்ந்தெடுக்கும் ஒருவர் முதல்வராகவோ, பிரதமராகவோ பதவி ஏற்று ஆட்சி செய்வார். மக்களாட்சியில் கட்சித் தலைவர் நேரடியாக ஆட்சிக்கு வர முடியாது. சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள், அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரே கட்சியை அல்லது ஒரு கூட்டணியைச் சார்ந்தவர்கள் யாரை பிரதம அமைச்சராக, முதல் அமைச்சராகத் தேர்வு செய்கிறார்களோ அவர்தான் ஆட்சிக்குத் தலைமை தாங்குவார். அந்தக் கட்சிக்காரர்களே எப்போது ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அவர் பதவி இழந்து விடுவார். மராத்திய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அப்படித்தான் பதவி இழந்தார். அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே பாஜக தூண்டுதலில் அவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டனர். அப்படி நிகழாவிட்டால்கூட ஐந்தாண்டுக் காலம்தான் ஒருவர் ஆட்சியில் தொடர முடியும். பின்னர் மீண்டும் தேர்தல். அதில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்தால்தான் தொடர முடியும். அப்படி கட்சியினருடைய, மக்களுடைய ஆதரவை தொடர்ந்து பெறுவது யாருக்குமே பெரிய சவால்தான். ஏகப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். மன்னர் போல ஆட்சிக்கு வர விரும்பும் தனி நபரே விஜய் விஜய் ஒரு பிரபல திரைப்பட நடிகர். கதாநாயகனாக அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு நடிகராக அவர் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்காக, குணசித்திர நடிப்பிற்காக புகழ் பெற்றவர் இல்லை. நன்றாக நடனம் ஆடுகிறார், சண்டை செய்கிறார், முத்தாய்ப்பான வசனங்களை ஸ்டைலாக உச்சரிக்கிறார் ஆகிய அம்சங்களே அவரை மக்கள் திரளை கவரும் கதாநாயகன் ஆக்கின. வணிக அம்சங்களை நம்பிய வாழ்க்கை. அருவாளை எடுத்து வெறித்தனமாக வெட்ட வேண்டும். வடு மாங்கா ஊறுதுங்கோ என்று ஆட வேண்டும். இவ்வாறு திரைப்பட நடிகராக அவருக்குள்ள பிம்பத்தை வைத்து ஒரு தனி நபராகத்தான் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார். அவர் ஒரு கட்சி தொடங்கியுள்ளார். ஆனால், அந்தக் கட்சியில் பல்வேறு அணிகளுக்கோ, மாவட்ட அளவிலோ வேறு யாரும் குறிப்பிடப்படத்தக்க தலைவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. கட்சிப் பணிகளை நிர்வகிக்க ஒரு மேலாளரை நியமித்துள்ளார். அவர் பெயர் புஸ்ஸி ஆனந்த். மற்றபடி அவர் கட்சியில் வேறு நிர்வாகிகளோ, அரசியல் அனுபவம் உள்ள தலைவர்களோ கிடையாது. விஜய்தான் கட்சி என்பதை அவர் கட்சியின் முதல் மாநில மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அதில் அவர் மட்டும்தான் பேசினார். ஒரு பேச்சுக்குக் கூட வேறு பேச்சாளர்கள் கிடையாது. அவரும் கட்சி நிர்வாகிகள் பெயர்களைச் சொல்லி விளித்து பேச்சைத் தொடங்குவது தேவையற்ற சடங்கு என்று ஏளனமாகச் சொல்லி விட்டார். அவர்தான் கட்சி, அவர் ஆட்சிக்கு வருவதுதான் கட்சியின் ஒரே நோக்கம். மக்களாட்சி என்றால் என்னவென்று புரியாதவர்கள் இப்படி தனி நபர் தலைமைதான் கட்சி என்று பாமரத்தனமாக நினைத்துக் கொள்வார்கள். ரசிகர் மன்றங்கள் கட்சி அமைப்புகள் ஆகுமா? மக்களாட்சி அரசியல் என்பதன் அடிப்படை வெவ்வேறு மக்கள் தொகுதிகளின் கோரிக்கைகள்தான். விவசாயிகளுக்குக் கோரிக்கைகள் இருக்கும், மீனவர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும், ஆசிரியர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும், வர்த்தகர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும். இவர்கள் கோரிக்கைகளுக்காக அமைப்புகள் தோன்றும். ஒரு வெகுஜன கட்சி என்பது ஒரு சில பொது முழக்கங்களுக்குள் இவர்கள் கோரிக்கைகளை ஒன்று திரட்ட வேண்டும். அப்போதுதான் கட்சி வெற்றி பெறும். அது தவிர அந்தந்த தொகுதிகளுக்கான தனி கட்சிகளும், அமைப்புகளும் இருக்கும். அவர்கள் ஆதரவையும் பெற வேண்டும். பல விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகளின் தொகுப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் கோரிக்கைகளுக்காக கட்சிகள் உள்ளன. வன்னியர் சங்கம் என்ற பெயரில் இயங்கிய அமைப்புதான் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. இது வன்னியர்கள் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறவில்லை, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் உருவானது. கலைஞர் அவர்களையும் உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20% உள் ஒதுக்கீட்டை உருவாக்கினார். இப்போது அதற்குள்ளும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இப்படியாக மக்கள் தொகுதிகள் கோரிக்கை அடிப்படையில்தான் கட்சிகளாகவோ, கட்சி அணிகளாகவோ மாறும். அவைதான் மக்களாட்சி அரசியல் வேர்கள். கட்சிகளின் சமூகத்தளம். ரசிகர் மன்றங்களுக்கு என்று அரசியல் கோரிக்கைகள் எதுவும் இருக்க முடியாது. படம் வெளியிடுவதற்கு முன்னால் தனி ரசிகர் மன்ற காட்சிகளை அனுமதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை இருக்கலாம். ஆனால், இது முக்கியமான அரசியல் கோரிக்கை என்று யாரும் கூற மாட்டார்கள். அதற்காக வாக்களிக்கவும் மாட்டார்கள். மற்றபடி ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மக்கள் தொகுதிகளின் அங்கமாகத்தான் இருப்பார்கள். ஒருவர் வர்த்தகராக இருப்பார். போக்குவரத்து ஊழியராக இருப்பார். ஆட்டோ ஓட்டுநராக இருப்பார். அவர்களுடைய அரசியல் கோரிக்கைகள் தனித்தனியானவை. ரசிகர் மன்றம் என்பது கேளிக்கைக்கான, மன உற்சாகத்திற்கான ஓர் அமைப்பு. உதாரணமாக “ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றம்” என்ற அமைப்பை நான் ஓர் ஊரில் பார்த்திருக்கிறேன். அதன் உறுப்பினர்களாக பல்வேறு பணிகளில், தொழில்களில் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்கள் வழிபாட்டு நேரத்தில் அங்கே கூடுவார்கள். சிவப்பு ஆடை அணிந்திருப்பார்கள். அவர்களை உடனே ஓர் அரசியல் தொகுதியாக மாற்ற முடியாது. அவரவர் தொழில்கள் சார்ந்தோ, சமூக பின்னணி சார்ந்தோதான் அவர்கள் அரசியலில் அணி திரள்வார்கள். திரை பிம்பத் தலைமைக்கு சமூக அடித்தளம் உண்டா? திரைப்பட நடிகர்கள் எந்த ஊருக்குப் போனாலும் பெரும் கூட்டம் கூடும். அவர்களைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு செல்வார்கள். அப்படிச் செல்வதால் அந்த நடிகர்கள் கூறுபவர்களுக்கு உடனே வாக்களித்துவிட மாட்டார்கள். உதாரணமாக அறுபதுகளின் பிற்பகுதி, எழுபதுகளில் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்தவர்கள், பங்கேற்றவர்கள் பலரிடம் கேட்டபோது அவர்கள் ஓர் ஊரில் எம்.ஜி.ஆரை பார்க்க எவ்வளவு கூட்டம் வருமோ, அதே அளவு சிவாஜியை பார்க்கவும் வரும் என்று கூறினார்கள். ஆனால், வாக்குகள் எம்.ஜி.ஆர் கட்சியான தி.மு.க-விற்கு அல்லது அ.இ.அ.தி.மு.க-விற்குத்தான் விழும். சிவாஜி ஆதரிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கு விழாது. திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணையான போட்டியைத் தந்த சிவாஜியால், அரசியலில் அப்படித் தர முடியவில்லை. காரணம் என்ன? எம்.ஜி.ஆருக்கான சமூக அடித்தளத்தை தி.மு.க உருவாக்கித் தந்தது. அந்தக் கட்சியினர் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் கோரிக்கைகளையும் அறிந்து, அனைத்திற்கும் தீர்வாக முற்போக்கான, மக்கள்நல சோஷலிஸ கொள்கைகளைக் கொண்ட ஆட்சியை அமைக்க உறுதியளித்தார்கள். ‘காங்கிரஸ் தனவந்தர்களின், மேட்டுக்குடியினர் கட்சி, நாங்கள் சாமானியர்கள் கட்சி’ என்பதை தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். அதற்கு ஏற்றாற்போல எம்.ஜி.ஆர் ஏழைகளை, எளியோரைக் காப்பவராக சினிமாவில் நடித்தார். அதனால் அந்த கட்சியினரின் அணி திரட்டலும், அவர் திரை பிம்பமும் இணைந்து போனது. அவர் தி.மு.க-விலிருந்து பிரிந்தபோதும் பல தலைவர்களை அவரால் தன்னுடன் கூட்டிச் செல்ல முடிந்தது. அவரை கடுமையாக எதிர்த்த நாவலர் நெடுஞ்செழியனே அவர் கட்சியில் இணைந்தார். தத்துவ மேதை, பகுத்தறிவுப் பகலவன் பெரியார் ஐம்பதாண்டுக் காலம் அவர் கால்படாத கிராமமே இல்லையென்ற அளவு தமிழ்நாட்டில் பயணம் செய்து மக்களிடையே தன்னுணர்வை மலரச் செய்தார். அரசியல் தத்துவ மேதை அண்ணா திராவிடவிய சிந்தனையை அரசியல் கோட்பாடாக பயிற்றுவித்தார். கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பல படைப்பாளுமை மிக்க இளைஞர்கள் ஓயாமல் உழைத்து கட்சியின் சமூக அடித்தளத்தை வடிவமைத்தார்கள். எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தில் தன்னை பிணைத்துக் கொண்டு அதன் நிழலில் தனக்கென ஒரு சமூக தளத்தை உருவாக்கிக் கொண்டார். எம்.ஜி.ஆர் போல வேறு எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர் தி.மு.க என்ற பெருமரத்தின் நிழலில் வளர்ந்தார் என்பதுதான். கட்சியைத் தேடும் பிம்பத் தலைமை விஜய் விஜய்க்கு தன்னிடம் சமூக அடித்தளம் கொண்ட கட்சி இல்லை என்பது புரிகிறது. ஆனால் அவர் என்ன நினைக்கிறார் என்றால் சமூக அடித்தளம் கொண்ட கட்சிகளை ஆட்சியில் பங்கு தருவதாகச் சொல்லி இணைத்துக் கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறார். ஒரு சொலவடை சொல்வார்கள்: “நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டுவருகிறேன்; இருவரும் ஊதி, ஊதி தின்னலாம்” என்று ஒருவர் சாதுரியமாக சொன்னதாக. விஜய் அப்படித்தான் அரசியல் கட்சிகளைக் குறிவைக்கிறார். முதலில் அ.இ.அ.தி.மு.க; அரை நூற்றாண்டு கடந்த கட்சி. கிட்டத்தட்ட முப்பதாண்டுக் காலம் ஆட்சியில் இருந்த கட்சி என்பதால் மிக வலுவான சமூக அடித்தளம் அதனிடம் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஒரு கருத்தொருமிப்பு கொண்ட தலைமை உருவாக பாஜக விடவில்லை. அ.இ.அ.தி.மு.க-வை பிளந்து, பலவீனப்படுத்தி அதன் சமூகத்தளத்தில் தான் கால் பதித்துவிடலாம் என்று நினைத்தது பாஜக. ஆனால், பாதிக்கிணறுதான் தாண்ட முடிந்தது. அ.இ.அ.தி.மு.க-வை உடைத்து விட்டது. பலவீனப்படுத்திவிட்டது. ஆனால், அதனால் அந்த இடத்தில் காலூன்ற இயலவில்லை. திராவிடவிய அரசியல் தடுக்கிறது. அதற்குச் சான்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள். எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெருவாரியான நிர்வாகிகளை தன்னிடம் தக்கவைத்துக்கொள்வதில் வெற்றி பெற்று விட்டார். ஆனால், அவரிடம் மக்களை வசீகரிக்கும் அளவு பேச்சாற்றலோ, ஆளுமைத் திறமோ இருப்பதாகத் தெரியவில்லை. சசிகலா முடக்கப்பட்டுவிட்டார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஒரு சில பகுதிகளில்தான் செல்வாக்குடன் உள்ளனர். இவர்கள் யாருமே பாஜக-வை எதிர்த்து திராவிடவிய அரசியல் செய்வதில் தி.மு.க-வை முந்திச் செல்ல முடியாத அளவு ஒன்றிய அரசின் அழுத்தங்கள் உள்ளன. இந்த நிலையில் தன்னுடைய கவர்ச்சிகரமான முகத்தை ஏற்றுக்கொண்டு இவர்கள் எல்லாம் அல்லது ஒரு சிலராவது, தங்கள் கட்சிகளின் சமூக அடித்தளத்தைக் கொண்டுவந்தால், வெறும் பிம்பமாக இருக்கும் தனக்கு ஓர் அரசியல் உடல் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார் விஜய். எப்படியாவது தி.மு.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பது பாஜக-வின் அகில இந்திய செயல்திட்டத்திற்கு அவசியம் என்பதால் பாஜக இத்தகைய இணைவிற்கு ஒத்துழைக்கலாம் என்று நினைக்கிறார். அதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நின்று, கிராமம் கிராமமாக சென்று பேசி, எந்த ஊடகத்திலும் வராத எண்ணற்ற போராட்டங்களை களத்தில் நடத்தி, அகில இந்திய அளவில் முக்கியமான தலித் அரசியல் தலைவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள திருமாவளவனை விஜய் குறிவைப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாக உள்ளது. இதுதான் “நீ நெல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்” என்ற சூதிற்கு மிக மோசமான உதாரணமாக இருக்கிறது. விஜய் அவருடைய கட்சி மாநாட்டில் பேசியதானாலும், விகடன்-ஆதவ் அர்ஜுன் உருவாக்கிய அரக்கு மாளிகை மேடையில் பேசியதானாலும், அவருக்கென்று எந்த சொந்த அரசியல் கொள்கையும், கோட்பாடும், குறிக்கோளும் இல்லை என்பதையே தெளிவுபடுத்தியது. ஏன் அரசியல் புரிதலே அறவே இல்லை என்பதை வரி, வரியாகச் சுட்டி விளக்கலாம். விஜய் பிரபல நட்சத்திரம் என்பதால் மக்கள் பேராதரவில் மிதப்பதாக நினைக்கிறார். அதனால் ஆட்சிக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறார். ஊடகங்களுக்கு அரசியலை சுவாரஸ்யமாக்க இது நல்ல கதையாடல் என்பதால் அவருக்கு நிறைய வெளிச்சம் போடுவார்கள். ஆனால், அவர் கற்பனை செய்யும் அந்த மக்கள் ஆதரவைத் திரட்டி உதவ அவருக்கு சமூக அடித்தளம் கொண்ட கட்சி வேண்டும். அதற்கு யார் தங்கள் கட்சி சமூக அடித்தளத்தை கொடுத்து உதவினாலும் அவர்களை கூட்டணி அரசில் சேர்த்துக் கொள்வார். பாண்டவர்கள் தங்குவதற்காக மிக அழகான ஓர் அரக்கு மாளிகையை கெளரவர்கள் உருவாக்கினார்கள். அதில் அவர்கள் தங்கி உறங்கும்போது அதை கொளுத்தி விடலாம் என்று திட்டம். இன்று பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் பெயரைக் கொண்டவரே அரக்கு மாளிகை கட்டுகிறார். திருமாவளவன் அதற்குச் செல்லவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். இன்றைய தேதியில் வங்கியில் பணம் இல்லாமல் ஒருவர் பத்து கோடிக்கு ரூபாய்க்கு பதினான்கு மாதம் கழித்த ஒரு தேதியிட்டு காசோலை வழங்கலாம். அதை நம்பி, உற்பத்திக்கான மூலப் பொருட்களை நாம் கொடுத்தால், அவர் வெற்றிகரமாக பண்டத்தை உற்பத்தி செய்து லாபம் ஈட்டினால்தான் அந்தக் காசோலைக்கு மதிப்பு. அதற்கு அடிப்படையில் அவருக்கு தொழில் தெரிந்திருக்க வேண்டும். அனுபவமற்றவர்களின் வாய்ச்சவடாலை நம்பினால் பேரிழப்புதான் மிஞ்சும். விஜய்யின் அரசியல் ஈடுபாடு எத்தகையது என்று தெரிந்துகொள்ள சமீபத்திய நிகழ்வு ஒன்றே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். புதிய கட்சி துவங்குகிறார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை மாநாட்டுக்குத் திரட்டிக் காட்டுகிறார். சில மாதங்கள் கழித்து வரலாறு காணாத புயல் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர் உடனே அவர் கட்சி அணியினருக்கு ஒரு குரல் கொடுத்து, தானே தலைமையேற்றுச் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டாமா? விஜய் கட்சியினர் மக்களுக்கு பணி செய்வார்கள் என்று நிறுவ வேண்டாமா? விஜய் அவ்வாறு செய்வதை போட்டோ ஆப்பர்சூயினிட்டி, சடங்கு, சம்பிரதாயம் என்று நினைக்கிறார். களத்துக்குச் செல்லாமல், மக்களை தன்னிடத்திற்குக் கூட்டி வந்து நிவாரணப் பொருட்களை வழங்குகிறார். இதுதான் அபத்தமான சடங்காக அனைவராலும் எள்ளி நகையாடப்படுகிறது. அவரை மையப்படுத்தி சிந்திக்கிறாரே தவிர, கட்சி அணியினரைக் குறித்து அவர் சிந்திப்பதேயில்லை. அவருக்கு அரசியல் தெரிந்தால்தானே, அவர்களை அரசியல் மயப்படுத்த முடியும்? மக்களுக்கு பேரிடரில் உதவி செய்வது சம்பிரதாயமா? அதுதானே ஐயா, அரசியல்? ஆனால், விஜய் ஆட்சி அமைப்பதுதான் அரசியல் என்று கூச்சமின்றி முழங்குகிறார். தன்னுடைய தனிநபர் திரை பிம்பத்தை வைத்து வாக்குகளை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் அமரலாம் என்று நினைப்பதுதான் மன்னராட்சியின் சாராம்சம். அதற்குப் பதில் கட்சியில் ஒரு பொறுப்பினை ஏற்று, கட்சி அணியினருடன் பணி செய்து, உட்கட்சி பூசலுடன் மல்லுகட்டி, மக்களிடையே சென்று பேசி, உதவி செய்து, தினசரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி, பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அரசியல் செய்பவர் யாரானாலும் அவர்களே மக்களாட்சியின் மாண்பை அறிந்தவர்கள். ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு “கொள்கை வாரிசு தலைவர்கள்” உள்ளபடியே அனுதாபத்திற்கு உரியவர்கள். வசதியான பின்புலம் கொண்ட அவர்கள், தெரிந்த தொழிலை செய்துகொண்டு, அமைதியாக உல்லாசமாக வாழாமல், ஏன் அரசியலில் ஈடுபட்டு, நடையாய் நடந்து, நாவரளப் பேசி பாடுபடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றும். அவர்கள் அப்படி பாடுபட்டு ஆட்சிக்கு வருவது சுயநலம் என்றால், திரை பிம்பங்கள் திடீர் தலைவராகி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் தியாக தீபங்களா என்ன? எனக்கு ஓரளவு கட்சி அமைப்பு என்றால் என்ன, கட்சி அணிகளைச் சந்திப்பது என்றால் என்ன என்று களப்பணி மூலம் தெரியும். அதனால்தான் உண்மையில் சமூக அடித்தளம் கொண்ட கட்சி அரசியல் செய்பவர்கள் யார் மீதும் எனக்குப் பரிவு உண்டு. அவர்களை வாரிசு தலைவர்கள் என்று விமர்சிப்பவர்கள், வெறும் திரை பிம்பத்தைத் தூக்கிக்கொண்டு நானும் அரசியல்வாதி என்று வருபவர்களை ரசிக்கும் விநோதம்தான் ஊடகங்கள் உருவாக்கும் மெய்நிகர் உலகம். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. https://minnambalam.com/political-news/actor-vijay-who-dreams-of-monarchy-does-he-understand-democracy-special-article-in-tamil-by-rajan-kurai/
  18. நம்பிக்கை வைப்பதற்கான ஒரு நேரம்; காப்பாற்றுவதற்கு ஒரு உறுதிமொழி! December 9, 2024 — கலாநிதி ஜெகான்பெரேரா — செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலையும் நவம்பர் பாராளுமன்ற தேர்தலையும் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அண்மைய அரசியல் நிலைமாறுதல் “பாகுபாடு காட்டுகின்ற போக்கின் விளைவாக தோன்றிய ஆழமான பிரச்சினைகளை” கையாளுவதற்கு ஒரு திருப்புமுனை வாய்ப்பை தருகிறது. பத்தாவது பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க இலங்கையில் இனவாதத்தையும் மதத் தீவிரவாதத்தையும் தடுப்பதில் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அழுத்திக் கூறினார். இனவாத அரசியலும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு தனது அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிய அவர் அச்சமும் சந்தேகமும் இல்லாத ஜனநாயக அரசொன்றை நிறுவப்போவதாக சூளுரைத்தார். சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி சட்டத்திற்கு மேலானவர் என்று எந்தவொரு தனிநபருமோ அல்லது அரசியல்வாதியுமோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் குறிப்பிட்டார். சர்ச்சைக்குரிய குற்றச்செயல்களை விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதுடன் சட்டமுறைமை மீதான நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பப்போவதாக அவர் தனதுரையில் உறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பகிரங்க முகம் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்க எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டார். அரசாங்கத்தின் முதன்மையான தொடர்பாடல்காரராக அவர் விளங்குகிறார். மக்கள் மத்தியிலான தனது ஆரம்ப வாழ்வையோ அல்லது கொள்கைகளையோ அவர் மறந்து விடவில்லை. அவரது உடைநடையில் அதை தெளிவாகக் காணமுடியும். இனவாதமும் இனவெறுப்பும் நாட்டில் மீண்டும் வேர்விடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் சூளுரை அவர் வளர்ந்துவந்த பண்புமுறைமைக்கு இன்னொரு சான்றாகும். சிங்கள பௌத்த இராச்சியங்களின் மையப் பிராந்தியமாக ஒரு காலத்தில் விளங்கிய வடமத்திய மாகாணத்தின் விவசாய வலயங்களில் ஜனாதிபதியின் தோற்றுவாயும் வறுமையுடனான அவரது தனிப்பட்ட போராட்டமும் இலங்கையின் முன்னைய அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக நலன்புரி திட்டங்களின் உதவியுடன் அந்த போராட்டத்தை வெற்றிகொண்ட விதமும் இலங்கையின் வெற்றிக் கதையின் முழுநிறைவான ஒரு எடுத்துக்காட்டாக அவரை விளங்க வைத்திருக்கிறது. பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் இன்னொரு தலைவர், ” வெறுப்பை வெறுப்பினால் ஒழிக்கமுடியாது. அன்பினாலேயே ஒழிக்கமுடியும்” என்று பௌத்த போதனையை மேற்கோள் காட்டினார். அந்த வார்த்தைகளை கொழும்பில் உள்ள தற்போதைய ஜப்பானிய தூதுவர் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அண்மையில் நிகழ்த்திய வரவேற்புரையில் நினைவுபடுத்தினார். இரண்டாவது உலக மகாயுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பிறகு இழப்பீட்டைச் செலுத்தவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதில் இருந்து ஜப்பானைப் பாதுகாக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவும் இதே வார்த்தைகளைப் பேசினார். இந்த வார்த்தைகள் உலகில் எந்தளவுக்கு நடைமுறையில் பின்பற்றப்படுகிறது என்பதே முக்கியமான கேள்வி. ஜனாதிபதி ஜெயவர்தன உலகிற்கு தான் பேசிய அந்த வார்த்தைகளை தனது சொந்த நாட்டில் நடைமுறையில் கடைப்பிடிக்கத் தவறியது துரதிர்ஷ்ட வசமானதாகும். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. )வும் விடுதலை புலிகளும் முன்னெடுத்த கிளர்ச்சிகளில் எளிதில் கையாளமுடியாத எதிரிகளுக்கு முகங்கொடுத்தபோது ஜெயவர்தன மூர்க்கத்தனமான அரச வன்முறையை கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டார். இறந்தவர்களை நினைவுகூருதல் : =========== ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தான் பேசுகின்ற பண்புகளின் பிரகாரம் இதுவரையில் வாழ்ந்தும் நடந்தும் வருகின்றார் என்று தோன்றுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்று இரு மாதங்களே கடந்திருக்கும் நிலையில், நிச்சயமாக எதையும் கூறுவது தற்போதைய தருணத்தில் பொருத்தமில்லாததாக இருக்கக்கூடும். ஆனால், அவரது சொல்லிலும் செயலிலும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் காண்பிக்கின்ற அக்கறையிலும் நேர்மையின் அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன. சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னைய அரசாங்கம் இணங்கிக்கொண்ட நடைமுறைச் சாத்தியமான பொருளாதாரக் கொள்கைகளை தேசிய மக்கள் சக்தியின் மையக்கட்சியான ஜே.வி.பி. ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அதை வழிநடத்திய முறையில் இதை காணக்கூடியதாக இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் விளைவாக மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்ற போதிலும், தற்போதைய தருணத்தில் நடைமுறைச் சாத்தியமான மாற்றுவழி எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்கள் தாங்கள் அதிகாரத்துக்கு வந்திருந்தாலும் கூட வேறு விதமாகச் செயற்படுவதற்கான வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் சிலவேளை தங்களுக்கு தேவையானதை அவர்கள் எடுத்திருக்கக்கூடும். அதனால் தான் அவர்களை மக்கள் நிராகரித்தார்கள். போரில் உயிர்துறந்தவர்களின் உறவினர்கள் மாவீரர்கள் தினம் என்று அறியப்பட்ட தினத்தில் நினைவேந்தலைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் அரசாங்கத்தின் அணுகுமுறை ஜனாதிபதியும் அவரது நிருவாகமும் தங்களது பண்புகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை காண்பிக்கும் இன்னொரு சந்தர்ப்பமாகும். மாண்டுபோன தங்கள் பிள்ளைகளுக்கு நினைவேந்தல் செய்ய விரும்புகிறவர்கள் ஒரு சுமூகமான, அமைதியான முறையில் நினைவு கூருவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இது உண்மையில் இழப்பீட்டுக்கான அலுவலகச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அந்த சட்டத்தின் 27 வது பிரிவு தனிநபர்களும் குழுக்களும் நினைவேந்தலைச் செய்ய அனுமதிக்கிறது. கொழும்பில் உள்ளவர்களுக்கு மாத்திரமல்ல கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு நல்வாழ்வு வேண்டும் என்பதற்காக சமூகத்தை மாற்றுவதற்கு போராடிய தங்கள் தியாகிகளை ஜே.வி.பி. யினர் நீண்டகாலமாக நினைவுகூர்ந்து வருகிறார்கள். தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் உயர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. போரில் உயிரிழந்த தங்களது இரு மகன்களை நினைவு கூருவதற்கு யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கும் ( முன்பு மயானமாக இருந்த) இடத்துக்குச் சென்ற ரி. செல்லத்துரை என்பவரும் அவரது மனைவியும் இப்போது இராணுவ முகாம் ஒன்றில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இராணுவ முகாமுக்கு எதிரே இருக்கும் தனியாருக்கு சொந்தமான சிறிய துண்டு நிலத்தில் அடையாளபூர்வமான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “எமது மகன்களை நினைவு கூருவதற்கு நாம் விரும்புகிறோம். அதற்காக அவர்களுக்கு விருப்பமான உணவுடன் பிரார்த்தனை செய்வதற்காக வந்தோம் ” என்று அந்த தம்பதியர் கூறினார்கள். உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம், ஆனால் அவர்கள் சார்ந்திருந்த இயக்கத்தை நினைவுகூர முடியாது என்பதே இந்த சந்தர்ப்பத்தில் அரசாஙகத்தின் நிலைப்பாடாக இருக்கிறது. யாழ்ப்பாணம் இணுவிலில் 29 வயது இளைஞன் ஒருவன் இந்த வாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக இன்னொரு செய்தி கூறியது. மாவீரர்தின நிகழ்வுகளின்போது சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்து கொண்டமை தொடர்பாகவே அந்த இளைஞன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜே.வி.பி.யின் முன்னைய தலைவர்களின் படங்களை மறைக்காமல் விடுவதைப் போன்று எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர்களின் படங்களையும் பொலிசார் மறைக்காமல் இருக்கக்கூடும். விடுதலை புலிகளை நினைவுகூருவதற்கு அனுமதித்ததாக அரசாங்கத்தை எதிரணி அரசியல்வாதிகள் கடுமையாக கண்டனம் செய்கிறார்கள். இனத்துவ தேசியவாத சக்திக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்படக்கூடிய சாத்தியங்களை குறைத்து மதிப்பிட முடியாது. வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்பட்டது ஒன்றும் புதியது அல்ல. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை வகித்த முன்னைய அரசாங்கங்களினால் இதே போன்ற அனுமதி வழங்கப்பட்டது. இனவாதமற்ற இலங்கை ஒன்றை உருவாக்குவதற்கான அந்த அணுகுமுறை பாராட்டப்பட வேண்டியதேயாகும். முன்னாள் ஜனாதிபதி இலங்கைச் சமுதாயப் போட்டித் தேசியவாதங்களினால் கிரமமாக திணறடிக்கப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், அந்த சமுதாயத்தின் பல்லின — பன்முகத்தன்மையை நீண்டகாலமாக பிரதிநிதித்துவம் செய்து வந்திருக்கிறார். இந்த சிந்தனைக்கு நெருக்கமானதாகவே பாரம்பரியமாக ஜே.வி.பி. இருந்து வந்திருக்கிறது. இதன் காரணத்தினாலேயே இன்றைய நேர்மறையான மாற்றத்துக்கான பெருமை பெருமளவுக்கு ஜனாதிபதி திசாநாயக்கவை சேருகிறது. முஸ்லிம் புறக்கணிப்பு: ============== ஆட்சிமுறையில் இனவாதமற்ற போக்கு கடைப்பிடிக்கப்படும் என்று அளித்த உறுதிமொழிக்கு இணங்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் முதலாவது அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரைச் சேர்த்துக்கொள்ளாமல் விட்ட தவறை சீர்செய்வதற்கு இடையறாது முயற்சியை மேற்கொண்டு வருகிறது. முதற்தடவையாக அரசாங்கத்தின் அதியுயர் மட்டத்தில் தீர்மானங்களை எடுக்கும் செயன்முறைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதை முஸ்லிம் சமுதாயம் காண்கிறது. முஸ்லிம் ஒருவரை பிரதி சபாநாயகராகவும் இன்னொரு முஸ்லிமை பிரதியமைச்சராகவும் நியமித்ததன் மூலம் நிலைவரத்தை சீர்செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்திருக்கின்ற போதிலும் கூட, புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வேதனை உணர்வு முஸ்லிம் சமுதாயத்தை விசேடமாக அரசாங்கத்துக்கு வாக்களித்த கணிசமான எண்ணிக்கையான முஸ்லிம்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆனால், கடந்த காலத்தில் பல முஸ்லிம் அமைச்சர்களைக் கொண்டிருந்த அரசாங்கங்கள் அதிகாரத்தில் இருந்த வேளைகளில் கூட, முஸ்லிம் சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதிகளை தடுக்க முடியவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு தேசியவாத குழுக்களின் பிரதான இலக்காக முஸ்லிம் சமுதாயம் இருந்து வந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரமான கலவரங்களில் அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு நிர்மூலம் செய்யப்பட்டதுடன் சிலர் கொல்லப்பட்ட அதேவேளை அந்த அட்டூழியங்களைச் செய்தவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவையில் பல முஸ்லிம்கள் இருந்தும் அந்த அக்கிரமங்களை தடுக்க முடியவில்லை. கடன்பொறி ஒன்றில் நாடு சிக்கிக் கொள்ளவதற்கு வெகு முன்னதாக, ஊழல் தலைவிரித்தாடும் நாடாக இலங்கை மாறுவதற்கு முன்னதாகவும் கூட, நாட்டின் ஐக்கிய உணர்வைச் சிதைத்த இனப்பிளவு ஒன்று இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற கையோடு இந்திய வம்சாவளி தமிழர்களின் (மலையக தமிழர்கள்) குடியுரிமையும் அதன் வழியாக வாக்குரிமையும் பறிக்கப்பட்டு அவர்கள் அரசியல் சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்கள். அதை தொடர்ந்து தனிச்சிங்களக் கொள்கையின் மூலமாக சகல தமிழ்பேசும் மக்களினதும் சமத்துவமான மொழியுரிமைகள் மறுக்கப்பட்டன. அதுவே இலங்கையின் குடிமக்களில் பெருமளவானவர்கள் நாட்டை விட்டு வெளியேற வழிவகுத்தது. அந்த நேரத்தில் மிகவும் படித்த சமூகத்தவர்களாக விளங்கிய பறங்கியர் சமூகம் வெளிநாடுகளுக்கு சென்றது. இன்று நாட்டின் நாலாபுறங்களிலும் உள்ள மக்களும் மத்திய பகுதியில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்துக்காக, ஐக்கியத்துக்காக, ஒரு புதிய தொடக்கத்துக்காக வாக்களித்திருக்கிறார்கள். இது தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கும் ஒப்பற்ற ஒரு வாய்ப்பாகும். வாக்குறுதிகள் காப்பாற்றப்பட வேண்டும். https://arangamnews.com/?p=11518
  19. யாழ் -மட்டக்களப்பு சிறையில் மனைவிக்கு நடந்த கொடுமை கணவனின் பரபரப்பு புகார்! Vhg டிசம்பர் 09, 2024 யாழ்ப்பாண சிறையில் தனது மனைவி உதயகலாவுக்கு கொடுமைகள் நடப்பதாக தயாபராஜ் என்பவர் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தயாபராஜ் உதயகலா தம்பதியினர் யுத்தம் முடிந்த பின்னர் பல்வேறு நிதிக்குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருந்தனர். பின்னர் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் தப்பிச் சென்றனர். அங்கு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்த பின்னர், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சமயத்தில், மீண்டும் சட்டவிரோத இலங்கைக்குள் நுழைந்திருந்தனர். பின்னர் சர்வமக்கள் கட்சியென்ற பெயரில் உதயகலா ஒரு அமைப்பை ஆரம்பித்திருந்தார். மேலும் தனது மனைவி மீது தகாத துஸ்பிரயோக முறைகளை சிறையில் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள்ளே சிறைச்சாலை ஆட்கள் இருக்கும் போதே சிறைச்சாலை அதிகாரிகளால் ஆடைகளைக் கழட்ட வைத்து மானபங்கம் செய்துள்ளனர் இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.battinatham.com/2024/12/blog-post_74.html உதயகலா தொடர்பான பழைய செய்தி.. தயாபரராஜா, உதயகலா தம்பதியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை கப்பம் பெறுதல், பாரிய பண மோசடி; வட மாகாண மக்களிடம் பாரிய பண மோசடியில் ஈடுபட்டதன் பின்னர் இந்தியாவின் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள தயாபரராஜா. உதயகலா தம்பதியினரை கைதுசெய்வதற்கு இன்டர்போலின் உதவியை நாட தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். உதயகலா என்னும் மேற்படி பெண் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்துவதுடன் தொடர்புடைய முக்கிய புள்ளியென்பதும் அவரினால் ஏமாற்றப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. மோதல்களைத் தொடர்ந்து மன்னாரில் தலைமறைவாகியிருந்த மேற்படி தம்பதியினர் எவ்வித ஆவணங்களுமின்றி தமிழ்நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்றவேளை தனுஷ்கோடியில் வைத்து தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த செய்திகள் தம்பதியினரின் படங்களுடன் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் உதயகலாவிடம் தாம் இழந்த பணத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை மேற்கொண்டு ள்ளனர். இத்தம்பதி மீது பண மோசடி, கப்பம் தொடர்பாக வடக்கு. கிழக்கு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதுடன். சிலவற்றில் இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இவர்கள் குழந்தைகளுடன் படகு மூலம் தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தம்பதிக்கு எதிராக வட மாகாணத்திலுள்ள நீதிமன்றங்களில் மட்டும் 11 வழக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சாவகச்சேரி நீதிமன்றம் மேற்படி தம்பதியினரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யுமாறு நீதி அமைச்சைக் கோரியுள்ளது. சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்ததை அறிந்து கொண்ட இவர்கள் 2011 ஆம் ஆண்டு குறித்த இளைஞனின் குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொண்டு 10 இலட்சம் ரூபாவினை பெற்றுத் தந்தால் மகனை விடுவித்து தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அக்குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொழுப்புக்கு வந்தபோது ரயில் நிலையத்திலிருந்து அவர்களை அடையாளம் தெரியாத இடமொன்றுக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்ததுடன் இம்மூவரையும் விடுவிப்பதாயின் 30 இலட்சம் ரூபா தரப்பட வேண்டுமெனவும் அச்சுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் 28 இலட்சம் ரூபாவினை செலுத்தியே தம்மை விடுவித்துக் கொண்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைவாகவே சாவகச்சேரி நீதிமன்றம் இன்டர்போலின் உதவியை நாடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நீதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது. எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர் ஒருவரின் முன்னாள் மனைவியான உதயகலா எனும் குறித்த நபர் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவரிடமிருந்து தாங்கள் இழந்த பணத்தை மீளப் பெற்றுத்தர உதவவேண்டுமெனக் கோரியும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சியூலெர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உதயகலா தங்களை கொழும்பிலுள்ள வி. எப். எஸ். க்ளோபல் யு. கே. வீஸா விண்ணப்பப்படிவங்கள் வழங்கும் நிலையத்திற்கு நேரில் அழைத்துச் சென்று பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வழங்கி தங்களை ஊக்குவித்ததாகவும் தெரிவித்தனர். உதயகலா மூன்று மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் பிரிட்டனில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல மில்லியன் ரூபாய்களை அபகரித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நேர்மையான பயணி என்பதனை நிரூபிப்பதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் மேலதிகமாக 2 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அறவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பிரித்தானியா செல்வதற்குத் தயாரான நிலையிலிருந்த நபர்களை நீர்கொழும்பிலுள்ள ஒரு விடுதியில் தங்க வைத்த பின்னர் தலா 2 ஆயிரம் டொலர்கள் வீதம் அறவிட்டுள்ளார். விமான நிலையத்திற்கு வருமாறும் தான் முன்கூட்டியே அங்கு வந்து தேவையான வேலைகளை முன்னெடுப்பதாகவும் கூறிச் சென்றார். விடுதியில் தங்கியிருந்தவர்கள் விமானம் நிலையம் சென்று தேடியபோது உதயகலாவை அங்கு காணாது அப்போது தான் தாங்கள் ஏமாந்ததனை அவர்கள் உணர்ந்தனர். எங்கு தேடியும் உதயகலா பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. உதயகலா தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒரு இலங்கை அதிகாரி கூறுகையில், தமிழ்நாட்டு பொலிஸார் இவரை கைதுசெய்திருக்காவிட்டாலும் இவர்களது கைது பற்றிய செய்தியினை இலங்கை இராணுவம் பிரபல்யப் படுத்தி இருக்காவிட்டிருந்தால் இவர் இலகுவாக மேற்குலக நாடொன்றிற்கு தப்பிச் சென்றிருப்பது உறுதியென்றார். மே 05 ஆம் திகதி தனுஷ்கோடியில் சட்டவிரோதமாக வந்திறங்கிய 05 சிறுவர்கள் உள்ளிட்ட 10 தமிழர்களுடனேயே உதயகலா இருந்துள்ளார். சட்டவிரோத ஆட் கடத்தல் தொடர்பில் விரிவான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும். உதயகலாவின் இரண்டாவது கணவரான கதிரவேல் தயாபரராஜாவையும் எம்மால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. இவர் 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக காணாமற்போனோர் பெயர்ப் பட்டியலில் இடம்பிடித்தவர் ஆவார். http://archives.thinakaran.lk/2014/05/16/?fn=n1405166
  20. மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியத்தில் மாற்றம் ! ShanaDecember 10, 2024 மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியத்திற்காக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாய் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட விரைவு சிறிய மீன்பிடி படகுகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மீனவர்களுக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மானியத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் காலத்திற்கும் டீசல் மானியம் லீட்டருக்கு 25 ரூபா வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியால் மீனவர்கள் சந்தித்து வரும் சிரமங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த ஒக்டோபர் 1ம் திகதி முதல் டீசல், மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. இதன்போது, டீசல் மானியம் லீட்டருக்கு 25 ரூபாவும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 லீட்டர் என்ற அடிப்படையில் ஒரு மாதத்தில் 25 நாட்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மானியம் நடைமுறையில் இருந்த போது இனங்காணப்பட்ட குறைபாடுகளுக்கு அமைவாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட புதிய மானிய முறைமைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு... 04. பொருளாதார நெருக்கடியால் மீன்பிடித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைத்து மீன்பிடித் துறையை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் - 2024 பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைத்து மீன்பிடித் துறையை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் நோக்கில் 2024.10.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 06 மாதகாலத்திற்கு எரிபொருளாக டீசலைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் படகு உரிமையாளர்களுக்கு ஒரு லீற்றருக்கு 25-ரூபாவாகவும், மற்றும் எரிபொருளாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்துகின்ற கடற்றொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 15 லீற்றர் மண்ணெண்ணெய் வீதம் மாதமொன்றுக்கு உயர்ந்தபட்சம் 25 நாட்களுக்கு மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25-ரூபாவாகவும் 'மீன்பிடித்துறையை இயல்புநிலைக்குக் கொண்டு வரும் கொடுப்பனவாகப்' பெற்றுக் கொடுப்பதற்கு 2024.08.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, எரிபொருளாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்துகின்ற சிறிய படகுகளுக்குரிய இச்சலுகையை வழங்குவதற்கு மிகவும் வசதிப்படுத்தும் நோக்கில் மீன்பிடி மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இயங்குநிலையிலுள்ள சிறிய மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு மாதாந்தம் 9,375-ரூபா கொடுப்பனவு 'மீன்பிடித் துறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான கொடுப்பனவாக' 2024.11.01 ஆம் திகதி தொடக்கம் 05 மாத காலத்திற்கு வழங்குவதற்கும், டீசல் மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற சலுகைகளை முற்கூட்டியவாறே வழங்குவதற்கும் மீன்பிடி, நீரியல்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.battinews.com/2024/12/blog-post_898.html
  21. அநீதிகளுக்கு எதிரான எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்; ஆதவ் அர்ஜுனா அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியிருந்தார். இது கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாவர். அதில் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளதாவது, “ஆயிரம் கைகள் மறைத்தாலும்…! ‘அதிகாரத்தை அடைவோம்’ என்று திருமாவளவன் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் நிர்வாகிகள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன். தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன். தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தொண்டர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள். கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும்… ஆதவ(ன்) மறைவதில்லை!” இவ்வாறு ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/313458
  22. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு அனுர அரசிடம் ருத்ரகுமாரன் வலியுறுத்து விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவும், சிறிலங்கா அரசியலமைப்பின் 6 வது திருத்தத்தை ரத்து செய்யவும் மற்றும் ஈழத் தமிழர்கள் கருத்துச் சுதந்திரத்துடன் அரசியல் களத்தில் ஈடுபடும் சூழ்நிலையை உருவாக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. ருத்ரகுமாரன் கோரிக்கை விடுத்திருக்கிறார். மாவீரர் நாள் செய்தியில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ருத்ரகுமாரன் மேலும் தெரிவித்ததாவது, நீங்கள் [ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி.)] ஆயுதப் போராட்டத்தை ஒன்றல்ல, இரண்டு தடவைகள் முன்னெடுத்தது. இருந்தும் உங்கள் மீதான தடை நீக்கப்பட்டு சுதந்திரமாக அரசியலில் ஈடுபட அனுமதி அளிக்கப்படவில்லையா? உங்களுக்கு ஒரு நியாயமும், தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு இன்னொரு நியாயமும் இருக்கும் போது இதை நாம் எப்படி இனப் பாகுபாடாக பார்க்காமல் இருக்க முடியும்? உங்கள் ஆட்சியிலும் அணுகு முறையிலும் தமிழ் மக்களுக்கு போராட வேண்டிய அவசியம் இருக்காது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் கூறுவதில் உண்மை இருப்பதாக நீங்கள் நம்பினால், 6வது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு சுதந்திரமான அரசியல் நடவடிக்கைக்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு நீங்கள் ஏன் அஞ்ச வேண்டும்? தமிழர் தாயகத்தில் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்த ஏற்பாடு செய்யுங்கள்—தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மற்றைய தெரிவுகளில் ஒரு சுதந்திரமான தமிழீழ நாடு என்ற விருப்பத்தையும் உள்ளடக்குங்கள். தேவைப்பட்டால், நீங்கள் ஒற்றையாட்சியையும் ஒரு தெரிவாக சேர்க்கலாம். தமிழ் மக்கள் ஒற்றையாட்சித் தெரிவை ஏற்றுக்கொண்டால், தமிழ் மக்கள் உங்கள் மீது உண்மையாக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மேலும், ருத்ரகுமாரன் கூறியதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை வகித்த போது, சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாமல் இருப்பதற்கு புலிகளே காரணம் என புலிகள் மீது பழி சுமத்தியது. தற்போது 15 வருடங்கள் கடந்தும், [தமிழ்] தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோது சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேசசக்திகளால் பிரயோகிக்கப்பட்ட கடுமையான அரசியல் அழுத்தங்கள் தற்போது குறைபாடடைந்து தமிழ்த் தேசியப் பிரச்சினையை முற்றாகப் புறக்கணிக்கும் அளவிற்கு மங்கிப் போய்விட்டது. சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையால் சிங்கள அரசியல் இறுகியிருப்பதால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் வெளி இல்லாமல் போய்விட்டது என்பதே உண்மை. அத்துடன் தீர்வு காணும் அரசியல் கலாசாரம் சிங்கள அரசியலில் இல்லை. இதற்கான அரசியல் விருப்பமும் சிங்கள அரசியலில் இல்லை. மகாவம்ச சிந்தனையிலிருந்து இத்தகைய கலாச்சாரம் மற்றும் மனப்போக்கு (தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு எதிரானது) வளர்ந்துள்ளது என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். எமது மாவீர தியாகிகளை தமிழ் ஈழத் தனிநாடு கோரி போராட வற்புறுத்திய சிறிலங்காவின் அதே அரச அமைப்புதான் இன்றுவரை தொடர்கிறது. வெவ்வேறு ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம் மாறி வந்தாலும் சிங்கள பௌத்த ஆதிக்க அரச கட்டமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக, எந்தச் சீர்திருத்தத்தையும் அனுமதிக்க முடியாத அளவுக்கு சிறிலங்கா அரச கட்டமைப்பு மிகவும் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் நிலையும் இதுதான். நீதித்துறையின் நிலையும் இதுதான். பல தேசிய சமூகங்களைக் கொண்ட எந்தவொரு நாட்டிலும், எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு தேசம் தன் விருப்பத்தை ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் மற்ற தேசங்கள் மீது திணிக்க முடிந்தால், அது ஜனநாயகம் அல்ல; மாறாக அது இனநாயகம். இலங்கைத் தீவில் தற்போது நிலவுவது ஜனநாயகம் அல்ல, இனநாயகமே 2009ஆம் ஆண்டு முதல் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் புதிய அரசியலமைப்பின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று கூறப்படும். இந்த விஷயத்தில் உரத்த ஆரவாரங்களும் இருக்கும். எமது தமிழ்த் தலைவர்கள் பலர் இந்த புதிய அரசியலமைப்பு வாக்குறுதியின் பின்னால் ஓடி மக்களுக்கு பொய்யான நம்பிக்கையை வழங்குவார்கள். தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காரணம், தமிழ் தேசத்தின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் அரசியலமைப்பில் இடம் பெறவில்லை என்பதல்ல, மாறாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் வெளி -அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டிருந்தாலும்- இல்லாததுதான். கடுமையான சிங்கள-பௌத்த அரச கட்டமைப்பு காரணமாக. அரசியலமைப்பின் 13வது திருத்தம் கடந்த 30 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டு. தமிழரின் தேசிய அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பலவீனம் காரணமாக தேசிய மக்கள் சக்தி (NPP) யாழ்ப்பாணத்தில் ஆசனங்களைப் பெற்றது. இந்தச் சூழலில், NPPயின் “ஊழல் ஒழிப்பு” என்பது தமிழ் மக்களை கவர்ந்த சுருதியாக இருந்தது. ருத்ரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியின் முடிவுரையில், மாவீரர்களின் நினைவுகள் இருக்கும் வரை, தமிழ்த் தேசத்தை எவராலும் கபளீகரம் செய்ய முடியாது எனக் கூறினார். https://thinakkural.lk/article/313442
  23. ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களால் 100க்கும் அதிகமானவர் படுகொலை - சர்வதேச ஊடகங்கள் 10 Dec, 2024 | 12:16 PM ஹெய்ட்டில் ஆயுத குழுக்கள் வார இறுதியில் 110 பேரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெய்;ட்டியின் தலைநகரில் வறியமக்கள் வசிக்கும் பகுதியில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. உள்ளுர் கும்பலொன்றி;ன்தலைவரின் தனி;ப்பட்ட பழிவாங்கும் செயல் இதுவென தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. வார்வ் ஜெரெமி குழுவின் தலைவர் மொனெல் மிக்கானோ பெலிக்ஸ் தனது பிள்ளை உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த படுகொலைக்கு உத்தரவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பில்லிசூன்யம் செய்பவரிடம் பெலிக்ஸ் தனது உடல்நிலை குறித்து தெரிவித்தவேளை அவர் அந்த பகுதியை சேர்ந்த முதியவர்கள் பில்லிசூன்யம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தனது பிள்ளை இறந்ததை தொடர்ந்து உள்ளுர் வன்முறை கும்பலின் தலைவர் படுகொலைக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்போது 60வயதுக்கும் மேற்பட்ட 60 பேர் வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் சனிக்கிழமை 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சொலெயில் என்ற வறிய மக்கள் அதிகம் வாழும் நகரத்திலேயே இந்த வன்முறை இடம்பெற்றுள்ளது https://www.virakesari.lk/article/200879
  24. பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள ஆண்டான்குளம் மற்றும் தண்ணிமுறிப்பு கால்நடைவளர்பாளர்கள் ! 10 Dec, 2024 | 11:15 AM முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் கீழுள்ள ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு ஆகிய பகுதிகளில் கால்நடைவளர்ப்பில் ஈடுபடும் கால்நடை வளர்ப்பாளர்கள் மேச்சல் தரவை இன்மையால் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந் நிலையில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் பகுதிகளுக்கு நேற்று திங்கட்கிழமை (09) நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அந்தவகையில், குறித்த ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்புப் பகுதிகளில் 5000 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றபோதும், அந்த கால்நடைகளுக்குரிய மேச்சல் தரவையின்மையால் வருடந்தோறும் 50 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பதாக கால் நடைவளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், பல கால் நடைவளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை விற்பனை செய்கின்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேச்சல் தரவை தொடர்பான கோரிக்கைகளை உரிய தரப்புக்களிடம் பலதடவை முன்வைத்தும், இதுவரையில் அதுதொடர்பில் உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அத்தோடு இந்த ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு பகுதிகளிலுள்ள கால்நடைகளிலிருந்து நாளொன்றிற்கு 3000லீற்றர் க்கும் அதிகமான பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மேச்சல் தரவை கிடைக்கப்பெறின் இதனைவிட அதிகளவிலான பாலுற்பத்தியைப் பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் விவசாயிகள் நடாறுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தெரிவித்தனர். இந் நிலையில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் அனைவருக்குமே இந்த மேச்சல்தரவை இல்லாத பிரச்சினை இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இவ்வாறு, மேச்சல் தரவையில்லாத பிரச்சினையால் அதிகளவில் கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படுவதுடன், கால்நடைவளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை விற்பனைசெய்கின்ற இக்கட்டான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு பாலுற்பத்தியும் மந்தநிலையிலிருப்பதாக கால்நடைவளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந் நிலையில், கால் நடைவளர்ப்பாளர்களின் இந்த பாதிப்பு நிலையுணர்ந்து அவர்களின் அத்தியாவசியத் தேவையாகவுள்ள மேச்சல் தரவை வழங்கப்படவேண்டும். மேச்சல் தரவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். https://www.virakesari.lk/article/200855

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.