Everything posted by கிருபன்
-
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம்
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம் 10 Dec, 2024 | 12:51 PM சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதியையோ, எமது உரிமை ?, எமது எதிர்காலம் ? இப்போது, எமது உறவுகள் எங்கே, என பல வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/200884
-
O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு December 10, 2024 09:24 am 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை மாத்திரமே விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரிகள் இணைய வழி முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, “பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் இன்றைய தினத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் எக்காரணம் கொண்டும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்களை ஏற்க வாய்ப்பில்லை. எனவே, இந்தப் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் எவரும் நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் ஒன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக வலியுறுத்துகிறேன். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணங்களை பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது." https://tamil.adaderana.lk/news.php?nid=197079
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
அரிசிக்கான அதிகப்பட்ச விலை நிர்ணயம் - வர்த்தமானி வௌியீடு December 10, 2024 06:18 am உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் படி, ஒரு கிலோகிராம் உள்நாட்டு கிரிசம்பாவின் மொத்த விலை 255 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=197070
-
சபாநாயகர் அசோக ரன்வலவின் ‘கலாநிதி’ தூக்கப்பட்டது!
சபாநாயகருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்ன? சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பாக வெளிவரும் பல்வேறு கருத்துகள் தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிக்கை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பான செய்திகள் உண்மையாக இருந்தால் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சபாநாயகரின் அறிக்கைக்குப் பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார். “சபாநாயகர் தகுதிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட பிறகு பரிசீலிப்போம்.அறிக்கைகள் உண்மையாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும், பொய்யாக இருந்தால் எடுக்க வேண்டிய முடிவையும் சொல்கிறேன் " என்றார். சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருவதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் தற்போதைய சபாநாயகரிடம் கலாநிதி பட்டம் இருப்பது உண்மையென்றால் அதனை நிரூபித்து காட்டுமாறு அண்மையில் சபாநாயகருக்கு சவால் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/சபாநாயகருக்கு-எதிராக-எடுக்கும்-நடவடிக்கை-என்ன/175-348522
-
நீதி கோரி தீச்சட்டி ஏந்தி போராடிய காணாமல் போனோரின் உறவினர்கள்!
நீதி கோரி தீச்சட்டி ஏந்தி போராடிய காணாமல் போனோரின் உறவினர்கள்! December 10, 2024 சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். வவுனியா கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி பழைய பேருந்து நிலையப்பகுதியில் முடிவடைந்தது. https://eelanadu.lk/நீதி-கோரி-தீச்சட்டியை-ஏந/
-
திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு
யாழில் திடீர் காய்ச்சல் - நால்வர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாள்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட இவர்கள், நோய் திடீரெனத் தீவிரத்தன்மை அடைந்து உயிரிழந்துள்ளனர். இவர்களின் சுவாசத் தொகுதி கடும் பாதிப்படைந்துள்ளமை மருத்துவ அறிக்கைகளில் தெரியவந்துள்ள நிலையில் இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதாரமருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோன்று வரணியைச் சேர்ந்த 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காய்ச்சல்இ மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அதேவேளை காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார். நாவற்குழியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சாதாரண காய்ச்சல் நிலைமையில் இருந்த இவர்களுக்கு திடீர் என நோய் தீவிரத்தன்மை அதிகரித்தை அடுத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். பருத்தித்துறை மற்றும் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு நோய்த் தன்மை சடுதியாக தீவிரமடைந்ததை அடுத்து சிகிச்சை பெற்று வந்த நால்வரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக் காய்ச்சலாக இருக்கலாம் என்றும் கருதப்படும் நிலையில்,உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக சோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/யாழில்_திடீர்_காய்ச்சல்_-_நால்வர்_உயிரிழப்பு
-
சபாநாயகர் அசோக ரன்வலவின் ‘கலாநிதி’ தூக்கப்பட்டது!
சபாநாயகர் அசோக ரன்வலவின் ‘கலாநிதி’ தூக்கப்பட்டது! adminDecember 10, 2024 சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இலங்கை பாராளுமன்ற இணையத்தளம் அவரது சுயவிவரத்தில் இருந்து.’கலாநிதி’ என்ற சொல்லை நீக்கியுள்ளது. முன்பு ‘கலாநிதி’அசோக ரன்வல என்று குறிப்பிடப்பட்டிருந்தது., இப்போது அவரது பெயர் ‘அசோக ரன்வாலா எம்.பி’ என்று தோன்றுகிறது, இது அவர் ‘கலாநிதி’ பட்டம் பெற்றதாகக் கூறப்படுவது சட்டபூர்வமானதா என்பது குறித்து மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது. சபாநாயகரின் சுயவிவரத்திலிருந்து.’ கலாநிதி ‘ என்ற தலைப்பை நீக்கும் வகையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இணையதளம் புதுப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகள் மற்றும் Google தேடல் முடிவுகள் இன்னும் தலைப்பைக் காண்பிக்கும், அதே நேரத்தில் தற்போதைய சுயவிவரத்தில் அதைச் சேர்க்க முடியாது. அவரது நற்சான்றிதழ்கள் குறித்து சமூக ஊடக ஆர்வலர்கள், தங்களின் பேஸ்புக்கில் கேள்வி எழுப்பியதை அடுத்து சர்ச்சை வெடித்தது, இது பொறுப்புக்கூறலுக்கான பொது அழைப்புகளுக்கு வழிவகுத்தது. முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் சபாநாயகரின் ‘கலாநிதி’ பட்டத்தை நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார். சபாநாயகர் பதிலளிக்கவில்லை என்றால் தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசப்பிரிய வலியுறுத்தினார். ரன்வல சபாநாயகராக நியமிக்கப்பட்ட போது, பாராளுமன்றத்தின் ஊடக அறிக்கை, அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் பட்டம் பெற்றதோடு, ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர் என விவரித்தது. அவர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் முன்பு உள்ளூர் அரசாங்கப் பதவிகளில் பணியாற்றியவராகவும் அறிமுகப்படுத்தப்பட்டார். பலமுறை விளக்கம் கேட்டும் சபாநாயகர் பதில் அளிக்கவில்லை. இதேவேளை, சபாநாயகரின் தகுதிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு சபாநாயகர் பதில் அளிப்பார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, சபாநாயகரின் அறிக்கையைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று பேச்சாளர் கூறினார். https://globaltamilnews.net/2024/209130/
-
உதயங்க வீரதுங்க கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா பயணத்தடை – ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
ராஜபக்ஸ்ஸக்களின் நெருக்கமானவர்களுக்கு அமெரிக்கா அதிச்சி வைத்தியம் கொடுத்தது! adminDecember 10, 2024 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் 7031(c)சரத்தின் கீழ், இவர்கள் இருவரின் பெயர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இரு தரப்பின் பெயர்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிரான நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் கீழ், ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, எயார்பஸ் விமானங்களை சந்தை பெறுமதியை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்யும் ஊழல் திட்டத்தை நடைமுறைப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரஷ்ய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2024/209127/
-
உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? வயதிற்கு ஏற்றார் போல் உடலின் நாற்றம் மாறுபடுமா?
உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? வயதிற்கு ஏற்றார் போல் உடலின் நாற்றம் மாறுபடுமா? 7 டிசம்பர் 2024 Getty Images 'உடல் நாற்றம்' என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல உடல் நாற்றம் (Body odour) என்று சொன்னவுடன், பலரும் அதை உடலின் சுத்தத்துடன் மட்டுமே தொடர்புப்படுத்தி பார்ப்பார்கள். அதிகமாக வியர்த்தால் உடலில் அதிக நாற்றம் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நமது தோலில் இருந்து ஆவியாகும் ஒவ்வொரு துளி வியர்வையும் நமது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஆனால், உடல் துர்நாற்றம் என்ற பிரச்னையின் காரணமாக சிலர் உடலின் இந்த அத்தியாவசிய செயலை வெறுக்கிறார்கள் அல்லது அதை குறைக்க நினைக்கிறார்கள். ஆனால் வியர்வை என்பதே எந்தவொரு நாற்றமோ அல்லது மணமோ இல்லாத ஒரு திரவம்தான். சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள், வியர்வையை 'மணமுள்ள சேர்மங்களாக' பிரிக்கும்போது உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. 'உடல் நாற்றம்' என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, உணவுமுறை, ஹார்மோன் மாற்றங்கள், மரபியல், சில மருந்துகள், நீரிழிவு அல்லது கல்லீரல் நோய் போன்ற மருத்துவ நிலைமைகள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வுகளும் நிபுணர்களும் கூறுகிறார்கள். இதைவிட ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருவரின் வயதிற்கு ஏற்ப உடலின் நாற்றம் மாறும் என ஓர் ஆய்வு கூறுகிறது. Getty Images தினமும் இருமுறை குளிக்கும் நபருக்கு கூட 'உடல் துர்நாற்றம்' என்பது ஒரு பிரச்னையாக இருக்கலாம் உடலின் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? தோலில் உள்ள இரு வகைச் சுரப்பிகளால் வியர்வை உருவாகிறது. உடற்பயிற்சி செய்யும்போது உடலெங்கும் சுரக்கும் வியர்வை எக்ரின் (Eccrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இந்த வியர்வை உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. முடி நிறைந்த தோல் பகுதி, அக்குளிலும், பிறப்பு உறுப்பு பகுதிகளிலும் சுரக்கும் வியர்வை அபோக்ரின் (Apocrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இவ்வியர்வையில் புரதம் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த பல மூலக்கூறுகள் உள்ளன. பாக்டீரியாக்கள் இவற்றை துர்நாற்றம் கொண்டதாக மாற்றுகின்றன. மனித உடலில் இருந்து நூற்றுக்கணக்கான ஆவியாகும் கரிம சேர்மங்கள் (Volatile organic compounds- விஓசி) வெளியேற்றப்படுகின்றன என்றும், பொதுவாக அவற்றின் கூறுகள் ஒரு நபரின் வளர்சிதை மாற்ற நிலையை பிரதிபலிக்கின்றன என்றும் 'தி ஜர்னல் ஆப் பயோகெமிஸ்ட்ரி' எனும் அறிவியல் ஆய்வு இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. இந்த ஆய்விதழ், 1922ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது. இந்த ஆவியாகும் கரிம சேர்மங்கள் தான் உடலின் நாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. சுவாசம், வியர்வை, தோல், சிறுநீர், மலம் ஆகியவை இந்த சேர்மங்களின் முக்கிய ஆதாரங்கள். உடல் துர்நாற்றங்களுக்கு ரத்தமும் ஒரு முக்கிய காரணமாகும், ஏனெனில் வளர்சிதை மாற்றத்தில் உற்பத்தி செய்யப்படும் சில விஓசி சேர்மங்கள் ரத்தத்தில் சுரந்து, பிறகு சுவாசம் மற்றும் அல்லது வியர்வை வழியாக வெளிப்புறச் சூழலுக்கு உமிழப்படுகின்றன. அதே சமயம், இந்த ஆவியாகும் கரிம சேர்மங்களில் மணமற்றவையும் உள்ளன. மனித உடலின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெளிப்படும் இந்த சேர்மங்கள் வயது, உணவு, பாலினம், உடலியல் நிலை மற்றும் மரபணு பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகின்றன. Getty Images நமது வயதிற்கு ஏற்றார் போல, உடலின் இயற்கையான நாற்றத்திலும் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன 'வயதிற்கு ஏற்றார் போல மாறும் உடல் நாற்றம்' ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோஹன் லுண்ட்ஸ்த்ரோம், உடல் துர்நாற்றம் குறித்தும் உடல் வாசனைகள் குறித்தும் ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவரது குழு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், "நமது வயதிற்கு ஏற்றார் போல, உடலின் இயற்கையான நாற்றத்திலும் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக, இளம் வயது நபர்கள் (20–30 வயது), நடுத்தர வயது நபர்கள் (45–55), மற்றும் முதியோர்கள் (75–95) ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 41 தன்னார்வலர்களிடமிருந்து உடல் நாற்றத்தை ஆய்வு செய்வதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் இளம் மற்றும் நடுத்தர வயது நபர்களுடன் ஒப்பிடுகையில், முதியோர்களின் உடல் நாற்றம் என்பது குறைவான தீவிரம் கொண்டதாகவும், அதிக துர்நாற்றம் இல்லாததாக இருந்ததாகவும் தெரிய வந்தது. இதற்கு காரணம், முதுமை வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. இது வேறுபட்ட 'ஆவியாகும் கரிம சேர்மங்களின்' (விஓசி) உற்பத்திக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, முதியோர்களின் உடலில் அதிக அளவு 2-நோனீனல் (2-nonenal) எனும் சேர்மம் உற்பத்தியாகிறது. இதனால் முதியோர்களிடத்தில் மட்டுமே இருக்கும் ஒரு பிரத்யேக உடல் மணம் (old person smell) உருவாகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. Getty Images முதுமையின் மணத்திற்கும் (old person smell), சுகாதாரத்துக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை முதியோர்களின் இந்த பிரத்யேக உடல் மணம் சிலருக்கு விரும்பத்தகாததாக இருந்தாலும், பெரும்பாலானோர் அந்த மணத்தை தங்களது தாத்தா, பாட்டி மற்றும் வயதான பெற்றோர்கள் குறித்த அன்பான நினைவுகளுடன் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள். அதேசமயம் இந்த முதுமையின் மணத்திற்கும், சுகாதாரத்துக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை. இந்த 2-நோனீனல் சேர்மம் தண்ணீரில் கரையாது. எனவே குளிப்பதன் மூலமோ அல்லது துணிகளை துவைப்பதன் மூலமோ அதை எளிதில் அகற்ற முடியாது. உடல் துர்நாற்றத்தைக் குறைப்பது எப்படி? இயற்கையான உடல் வாசனையை நாம் வெறுக்கக் கூடாது என்கிறார் தோல் மருத்துவர் மித்ரா வசந்த் இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தோல் மருத்துவர் மித்ரா வசந்த், "ஒவ்வொருவருக்கும் என தனித்துவமான, இயற்கையான உடல் வாசனை இருக்கும். அதிக வியர்வையால் அந்த வாசனை, நாற்றமாக மாறும்போது அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு என்று பல வழிகள் உள்ளன. சுலபமான வழி என்றால் டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம்" என்கிறார். ஆனால் அதுபோன்ற டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களை நேரடியாக தோல் மீது அல்லாமல், உடுத்தும் ஆடைகள் மீது பயன்படுத்துவது சிறந்தது என்று கூறுகிறார். "அதுமட்டுமல்லாது, இருமுறை குளிப்பது, பருத்தி ஆடைகளை அணிவது, துர்நாற்றத்துடன் வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் இருக்கும் முடிகளை அகற்றுவது, போன்றவை உடல் நாற்றத்தைக் குறைக்க உதவும். மற்றபடி வியர்வை என்பது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று." "வியர்வையை தவிர்த்தால் உடல் நாற்றத்தை தவிர்க்கலாம் என்ற எண்ணம் நல்லதல்ல. உங்கள் அன்றாட வாழ்க்கையை உடல் துர்நாற்றம் பாதிக்கிறது என்றால், அதற்கு மேற்கூறிய வழிகளைப் பின்பற்றலாம். இல்லையென்றால் அடுத்த கட்ட சிகிச்சைகளும் உள்ளன" என்றும் கூறுகிறார். அளவுக்கு அதிகமான வியர்வையால், உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது என்றால், முறையாக ஒரு தோல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டுமென மருத்துவர் மித்ரா அறிவுறுத்துகிறார். "அதீத வியர்வைக்கு என பிரத்யேக மருந்துகள், சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இதையெல்லாம் தாண்டி உடல் நாற்றம் எப்போதுமே மோசமான விஷயம் அல்ல. இயற்கையான உடல் வாசனையை நாம் வெறுக்கக் கூடாது. அது மிகவும் இயல்பான ஒன்று தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்." என்று கூறுகிறார் மருத்துவர் மித்ரா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0j18jv02exo
-
டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?
டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி? 9 டிசம்பர் 2024 டியாகோ கார்சியா தீவில் தற்காலிக முகாமில் இருக்கும் கூடாரங்கள் "டியாகோ கார்சியா" - இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தின் தொலைதூரப் பவளத் தீவு. இது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவு. பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் இந்த தீவில் அமைந்துள்ளது. இங்கு ஒரு தற்காலிக முகாமில் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு காலை வேளையில் சாந்தியின் கணவர், தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பு வேலியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தார். அங்கு ரோந்துப் பணியில் அதிகாரி ஒருவர் ஈடுபட்டிருந்தார், கூடவே காவல் நாய் ஒன்றும் இருந்தது. அந்த குழந்தைகள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது அந்த காட்சியை தான். "நாய்களுக்குக் கூட நம்மை விட அதிக சுதந்திரம் உள்ளது" என்று அவர்கள் தந்தையிடம் கூறினர். "அவர்கள் சொன்னது என்னை மனதளவில் கடுமையாக பாதித்தது. நான் மனம் உடைந்துபோனேன்" என்று அவர் விவரித்தார். இது அவர்களின் குடும்பம் இக்கட்டான சூழலில் இருந்ததை பிரதிபலிக்கிறது. அவர்கள் தற்செயலாக ஒரு மர்மமான ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களுக்கு 5 வயதில் மகனும், ஒன்பது வயதுடைய ஒரு மகளும் இருந்தனர். இலங்கையில் இருந்து தப்பிக்க முயற்சி டியாகோ கார்சியா சாந்தியின் (அவரது உண்மையான பெயர் அல்ல) குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த சிறிய முகாமில் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்த போதிலும், தங்களால் முடிந்த அளவுக்கு இயல்பாக இருக்க முயன்றனர். குடும்பமாக மகிழ்ந்திருப்பதிலும், படிப்பதிலும், செடிகளை வளர்ப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ரகசிய ராணுவ தீவான டியாகோ கார்சியாவில் தனது குழந்தைகளுக்கு இயல்பான உணர்வை உருவாக்க சாந்தி தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார். சாந்தி பிற இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து 12,000 கி. மீ. தொலைவில் இருக்கும் கனடாவுக்கு செல்ல ஆசைப்பட்டு, ஒரு சட்டவிரோத முகவரிடம் தன் மொத்த சேமிப்புப் பணத்தையும் (சுமார் ரூ. 4.23 லட்சம்), தனது தங்க நகைகள் அனைத்தையும் வழங்கியதாக கூறுகிறார். கடந்த 2009இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் உடனான தொடர்புகள் காரணமாக, துன்புறுத்தல் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில், அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து தப்பிக்க நினைத்ததாகக் கூறினர். மோசமான சூழலிலும் குழந்தைகளுக்கு கல்வி சாந்தியும் அவரது குடும்பத்தினரும் 2021 இல் இலங்கையை விட்டு வெளியேறினர் அவர்கள் சென்ற மீன்பிடி படகு நடுக்கடலில் சேதமடைந்தது. அதன் விளைவாக, ராயல் கடற்படை அவர்களைக் காப்பாற்ற நேர்ந்தது. கடற்படை அவர்களை அக்டோபர் 2021இல் டியாகோ கார்சியாவுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவர்கள் வேலியிடப்பட்ட புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அந்த முகாமிற்கு அழைத்து வரப்பட்ட போது, "கனடா வந்துவிட்டோமோ என்று மகன் கேட்டது" சாந்திக்கு நினைவுக்கு வந்தது. டியாகோ கார்சியா தீவை அடைந்த முதல் ஆறு மாதங்கள், அவரது பிள்ளைகள் தீவில் முறையான கல்வியைப் பெறவில்லை. எனவே, பயிற்சி பெற்ற ஆசிரியயையான சாந்தி, அந்த முகாமில் உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடங்களைக் கற்று கொடுக்கத் தொடங்கினார். இதன்மூலம் அவரின் பிள்ளைகளும் பயனடைந்தனர். "ஆங்கில எழுத்துக்கள், பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் என அடிப்படையான பாடங்களுடன் நாங்கள் கற்பிக்கத் தொடங்கினோம்" என்று அவர் கூறுகிறார். அதன் பின்னர், சாந்தியின் கணவர் அந்த கூடாரத்தில் வீட்டுப்பாடம் செய்ய ஏதுவாக, மரத்தாலான பலகைகளை வைத்து மேசையை உருவாக்கினார். கூண்டுக்குள் அடைப்பட்ட வாழ்க்கை டியாகோ கார்சியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம் "கூண்டுக்குள்" வாழ்வது போன்றது என்று சாந்தி கூறினார் கல்வி கற்க ஒரு சிறிய பாதை உருவானப் போதிலும், மாலை நேரங்களில் குழந்தைகள் சலிப்பை உணரத் தொடங்கினர். எனவே, இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்ற சாந்தி, நடனப் பாடங்களையும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். மேலும், அவரது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல்களை வைத்து நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்தார். இந்த குடும்பம் முகாமுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அவர்கள் இறுதியாக இந்த வாரம் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் நலன்களுக்காக அரசாங்கம் இதை "விதிவிலக்கானது" என விவரித்து, அவர்களை அனுப்பியது. "அந்த முகாம் ஒரு திறந்தவெளி சிறை போன்றது. நாங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் வேலியிடப்பட்ட ஒரு கூடாரத்தில் வாழ்ந்தோம்" என்கிறார் சாந்தி. 30 வயதுகளின் முற்பகுதியில் உள்ள பெண்ணான அவர், லண்டனில் இருந்த போது அளித்த பேட்டியில் இதனை கூறினார். "ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருந்தது. ஒரு கூண்டுக்குள் வாழ்வது போல் இருந்தது" என்று அவர் மேலும் கூறுகிறார். பாதுகாவலர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். ராணுவ ஜெட் விமானங்கள் அவ்வப்போது தலைக்கு மேல் கர்ஜிக்கும். இதனையடுத்து , சாந்தியும் மற்ற இலங்கை தமிழர்களும் தீவில் உள்ள பிரிட்டிஷ் படைகளை அணுகி, பாதுகாப்பான நாட்டிற்கு அனுப்புமாறு கடிதம் கொடுத்ததாக சாந்தி கூறுகிறார். இந்தப் பிராந்தியத்தில் புகலிடம் கோரி கடிதம் கொடுப்பது இதுவே முதல் முறை. இது பிரிட்டனில் 6,000 மைல்களுக்கு அப்பால் ஒரு நீண்ட சட்டப் போராட்டத்துக்கு வழிவகுத்தது. சட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் நடக்க, சாந்தியும் மற்றவர்களும் அந்த தீவில் தங்களுக்கான தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யத் தொடங்கினர். முகாமில் இருந்த தமிழர்கள் அவர்களுக்கான உணவை சமைக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே, அவர்கள் சில காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கினர். அங்கு, தென்னை மரங்கள் நிறைந்திருந்தன. அதிலிருந்து கிடைக்கும் தேங்காய் நாரை பயன்படுத்தி, சாந்தியும் மற்றவர்களும் மிளகாய், பூண்டு மற்றும் வெள்ளரி போன்ற காய்கறிகளை பயிரிட்டனர். முகாமில் விவசாயம் செய்தது எப்படி? முகாமில் மிளகாய் விதைகளும் வெள்ளரி விதைகளும் எப்படி கிடைத்தது என்பதை விவரித்த சாந்தி, "அவர்கள் சில சமயங்களில் சிவப்பு மிளகாயைக் கொடுப்பார்கள். நாங்கள் அவற்றை வெயிலில் காயவைத்து விதைகளைச் சேகரித்து பயிரிட்டோம்." என்றார். மேலும், "எங்களுக்குக் கொடுக்கப்படும் சாலட்டில் சில சமயங்களில் வெள்ளரித் துண்டுகள் இருக்கும். அவற்றில் இருந்து விதைகளை சேகரித்து சூரிய ஒளியில் வைத்தோம். அவை காய்ந்த பிறகு விதைத்துப் பயிரிட்டோம்" என்றார். அவர்கள் ஒவ்வொரு நாளும், தேங்காய் மற்றும் மிளகாயை பிசைந்து 'சம்பல்' என்னும் உணவை தயாரித்தனர். அது இலங்கையின் பிரபலமான உணவு. முகாமில் தங்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க உணவை சாப்பிட சாந்தி உள்ளிட்டோர் சிரமப்பட்டனர். மேலும், காய்கறிகளை பூண்டு மற்றும் மிளகாயுடன் வெந்நீரில் போட்டு குழம்பாக சமைக்க முயற்சித்தனர். முகாமில் இருந்தவர்களுக்கு ஆடை பற்றாக்குறையும் இருந்தது. குறிப்பாக, அங்குள்ள 16 குழந்தைகளுக்கும் போதுமான ஆடைகள் வழங்கப்படவில்லை. எனவே, சாந்தி மற்றும் பிற பெண்கள் படுக்கை விரிப்பை கிழித்து ஆடைகளை தைத்தனர். கிறிஸ்துமஸ் சமயத்தில், அவர்கள் காகித நாப்கின்களை (Tissue paper) பூக்களாக மாற்றி, ஒரு மரத்தை அலங்கரித்தனர். முகாமில் இருந்த காவலர்களுடன் தமிழர்களுக்கு அடிக்கடி பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஆனாலும், "நல்ல உள்ளம் கொண்ட அதிகாரி எங்களுக்கு பிரியாணி கொண்டு வந்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு காவலர் ஆவலாக தன் பிறந்தநாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த என் மகனின் பிறந்தநாளுக்கு கேக் கொண்டு வந்தார்" என்கிறார் சாந்தி. எலிக்கடி தொல்லை புயல் காலங்களில் கூடாரங்கள் மழை நீரால் நிரம்பி வழியும் "என்னதான் எங்களின் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொண்டாலும், நாட்கள் செல்ல செல்ல, உதவியற்று நிற்பது போன்ற உணர்வுகள் அதிகரித்தன" என்கிறார் சாந்தி. "முகாமில் வாழ்க்கை கூண்டுக்குள் இருப்பது போல இருந்தது. யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் வெடித்த பெரும் போர்கள் பற்றிய செய்திகள் முகாம் காவலர்கள் வாயிலாக எங்களுக்கு தெரிய வந்தது." சாகோஸ் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான இந்த தீவுக்கான அணுகல் பெரிதும் தடைசெய்யப்பட்டுள்ளது. 1970களின் முற்பகுதியில் இருந்து பிரிட்டன் அங்கு வசிக்கும் அனைத்து மக்களையும் வெளியேற்றியது முதல், இது அதிகாரப்பூர்வமாக குடியிருப்பு மக்கள்தொகையைக் கொண்டிருக்கவில்லை. இதன்மூலம், அங்கு ராணுவத் தளத்தை உருவாக்க முடியும் என்பதே இதன் நோக்கம். "முதல் நாள் முதல் நாங்கள் அங்கிருந்து புறப்பட்ட நாள் வரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எலிகளுடன் வாழ்ந்தோம்," என்கிறார் சாந்தி. "சில நேரங்களில் எலிகள் எங்களின் குழந்தைகளின் கால், கை விரல்களை கடிக்கும். அவை, எங்களின் உணவை உட்கொண்டன. இரவில் சில நேரங்களில் அவை எங்கள் போர்வைகள் மற்றும் தலையின் மீது ஊர்ந்து செல்லும்." என்று விவரித்தார். "ராட்சத தேங்காய் நண்டுகள் மற்றும் வெப்பமண்டல எறும்புகள் கூட முகாமுக்குள் ஊர்ந்து செல்லும். புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, தார்பாயால் போடப்பட்ட கூடாரங்களின் துளைகள் வழியாக மழை நீர் உள்ளே வரும். மேலும், இந்த கூடாரங்கள் இதற்கு முன்னர் தொற்றுநோய் சூழலின்போது கோவிட் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது." என்றார். கடந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய நாடுகளின் புலனாய்வாளர்கள் முகாமுக்குச் சென்றபோது, குழந்தைகள் அவர்களிடம் "சுற்றுலா செல்வது, சைக்கிள் ஓட்டுவது, ஐஸ்கிரீம் சாப்பிடுவது" போன்ற கனவுகள் இருப்பதாகக் கூறினார்கள். இந்த ஆண்டின் முற்பகுதியில், ஒரு மருத்துவ அதிகாரி இங்கு பெருமளவிலான தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்ததை குறிப்பிட்டு, இந்த முகாம் "முழுமையாக நெருக்கடியில்" இருப்பதாக விவரித்தார். "என் மகள் நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் என்னிடம் 'அம்மா அவர்கள் தங்களைத் தாங்களே வெட்டிக் கொண்டார்கள்' என்றாள். நானும் அப்படி செய்து கொள்ள வேண்டுமா?' என்று கேட்டாள். 'இல்லை, இல்லை. அப்படி செய்யக் கூடாது என்று நான் புரிய வைத்தேன். அவளின் கவனத்தை மாற்ற பேப்பர் எடுத்து ஓவியம் வரைய சொன்னேன்'' என்று அந்த சம்பவத்தைக் கண்ணீருடன் நினைவு கூர்ந்தார் சாந்தி. இரண்டு முறை தங்கள் மகள் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதைப் பற்றி சாந்தியும் அவரின் கணவரும் நினைவு கூர்ந்து கண்கலங்கினர். "என் மகள் இரண்டு முறை தன்னை தானே காயப்படுத்திக் கொண்டாள். அது மிகவும் மோசமான தருணம். ஏன் இப்படி செய்தாய் என்று என் மகளிடம் கேட்டதற்கு, தான் இப்படி செய்தால், அவளின் சகோதரன் பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்குச் செல்வார் என்ற நம்பிக்கையில் இதைச் செய்ததாகச் சொன்னாள்" என்று சாந்தி கூறுகிறார். `உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்’ முகாமில் இருக்கும் பிற புலம்பெயர்ந்தோரால் தங்களுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். "மூன்று வருடங்களாக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்" என்கிறார் சாந்தி. தீவில் தமிழர்கள் வாழ்ந்த காலம் முழுவதும், பிரித்தானிய அதிகாரிகள் அது அவர்களுக்கு ஏற்ற இடம் அல்ல என்பதை ஒப்புக்கொண்டதுடன், நீண்டகாலத் தீர்வுகளைத் தேடுவதாகவும் கூறினர். அங்கிருந்த மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. "அவர்கள் பிரிட்டனுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும், அங்கு ஆறு மாதங்கள் தங்குவதற்கு அவர்களுக்கு உரிமை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்தபோது எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. எங்களின் மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது" என்கிறார் சாந்தி. மகிழ்ச்சியில் அன்று இரவு முகாமில் யாரும் தூங்கவில்லை என்றும் கூறினார். "பிரிட்டனுக்கு வந்தவுடன், குளிர்ச்சியான சூழல் எங்களை உற்சாகப்படுத்தியது. இத்தனை நாள் கோமாவில் இருந்துவிட்டு, எழுந்தது போல் உணர்ந்தேன். மொபைல் ஆப்ஸ்-ஐ பதிவிறக்குவது, வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புவது, கடைகளில் பணம் செலுத்துவது எப்படி என்பதை முழுமையாக மறந்துவிட்டேன்" என்கிறார். சாந்தியின் குழந்தைகள் பள்ளியைத் தொடங்குவது, நண்பர்களை உருவாக்குவது மற்றும் இரட்டை அடுக்கு பேருந்தில் செல்வது பற்றி பேசி கொண்டிருப்பதாகக் கூறுகிறார். ஆனால், குடும்பத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. அவர்கள் எஞ்சியிருக்கும் நம்பிக்கையில் இப்போது பிரிட்டனில் புகலிடம் கோரியுள்ளனர். கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில், அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, சாகோஸ் தீவுகளை மொரீஷியஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது. இன்னும் கையொப்பமிடப்பட வேண்டிய இந்த ஒப்பந்தத்தின் கீழ், டியாகோ கார்சியா பிரிட்டன் - அமெரிக்க ராணுவத் தளமாகத் தொடர்ந்து செயல்படும், ஆனால் எதிர்காலத்தில் குடியேறுபவர்களின் வருகைக்கு மொரீஷியஸ் பொறுப்பேற்க வேண்டும். சாந்தி, டியாகோ கார்சியாவிலிருந்து ஒரு சிப்பியை கொண்டு வந்தார். அங்கிருந்ததன் நினைவாக, அதை தன் செயினில் போட்டு கழுத்தில் அணியப் போவதாகக் கூறுகிறார். சுவாமிநாதன் நடராஜன் வழங்கிய கூடுதல் தகவல்களுடன் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly4n9nng04o
-
சர்ச்சைக்குரிய குருந்தூர்மலைக்கு விஜயம் செய்த எம்.பி ரவிகரன்!
சர்ச்சைக்குரிய குருந்தூர்மலைக்கு விஜயம் செய்த எம்.பி ரவிகரன்! December 9, 2024 07:01 pm முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் மீள்குடியேற்றப்படவேண்டுமெனவும், அதற்க்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமெனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (08) வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது தண்ணிமுறிப்பு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் சிலருடன் கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 1984ஆம் ஆண்டு ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இராணுவகெடுபிடிகள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் குறித்த ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தமது இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து 40வருடங்களாகியுள்ளபோதிலும் இதுவரை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந் நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் குருந்தூர் மலை வழிபாடுகளைத் தொடர்ந்து, தொல்லியல் திணைக்களத்தின் இடையூறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குருந்தூர்க்குளத்தின் அபிவிருத்தி வேலைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் அவதானம் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=197064
-
அரச கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் - ஜனாதிபதி
அரச கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் - ஜனாதிபதி December 9, 2024 08:15 pm எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற "2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில்" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் "தூய்மையான எதிர்காலத்திற்காக இளைஞர்களை ஒன்றிணைப்போம்" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு போதுமான சட்டங்களும் நிறுவனங்களும் இருந்த போதும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தமது மனசாட்சியிடம் கேட்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஊழல் மற்றும் இலஞ்சம் என்பன சமூக அவலமாக மாறியுள்ளது. 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். வருடா வருடம் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அடுத்த வருடம் அதனை குறைக்க முடியாவிட்டால் சர்வதேச தின கொண்டாட்டங்களை நடாத்துவதில் எவ்வித பயனும் இல்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். 2021ஆம் ஆண்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 69 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதுடன் 40 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. 2022 இல் 89 வழக்குகளை தாக்கல் செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 45 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது. இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணத்தை ஆணைக்குழு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒரு வருடத்தில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.மேலும் அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யாமல் ஆரோக்கியமான நாடொன்றை உருவாக்க முடியாது எனவும் தெரிவித்தார். சட்டத்தை அமுல்படுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எனவே இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலம் பிரஜைகளின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் சர்வதேச அபிவிருத்தித் திட்டத்தின்(UNDP)ஜுரே (JURE) திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1,000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமனம் வழங்கப்பட்டது. https://tamil.adaderana.lk/news.php?nid=197066
-
நாம் தமிழர் கட்சியின் பிரபல பெண் தலைவர் கட்சி மாறுகிறாரா?
நாம் தமிழர் கட்சியின் பிரபல பெண் தலைவர் கட்சி மாறுகிறாரா? கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அவ்வப்போது கட்சியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், பிரபல பெண் தலைவர் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேற போவதாகவும், அவர் திராவிட கட்சி ஒன்றில் இணைய இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து பல மாவட்ட நிர்வாகிகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர் என்பதும், சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் வெளியேறி, சீமான் குறித்து பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவர் சீமான் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. திராவிட கட்சிகளில் ஒன்றில் அவர் சேர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தனக்குரிய மரியாதை, தான் கேட்கும் தொகுதி ஆகியவற்றை வழங்கினால், கட்சியில் சேர சம்மதம் என்று கூறியிருப்பதாகவும், அதற்கு அந்த திராவிட கட்சியும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, அந்த பெண் தலைவர் விரைவில் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி, குறிப்பிட்ட திராவிட கட்சியில் இணைவார் என்று கூறப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், பாஜகவின் சீனியர் தலைவர் ஒருவரும் அதே திராவிட கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=302452
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
கற்கோவளம் இராணுவ முகாமில் இருந்து; படையினர் வெளியேற வேண்டும் யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள. இராணுவ முகாமிம் இருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு, இராணுவத் தலைமையகத்தால் உத்தரவிடப்பட்ட போதிலும், இன்னமும் இராணுவத்தினர் வெளியேறவில்லை. ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் 18ஆம் திகதி பொறுப்பேற்றிருந்தது. அமைச்சரவை பொறுப்பேற்று சில மணிநேரங்களில், பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து 14 நாள்களுக்குள் படையினர் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு இராணுவத் தலைமையகத்தால் பிறப்பிக்கப்பட்டது. எனினும், 14 நாள்களுக்கு மேலாகியும், இந்த முகாம் இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்தும் அந்தத் தனியார் காணியும், இராணுவ முகாமும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. எனவே, வாக்குறுதி வழங்கி மக்களை ஏமாற்றாது, அங்கிருந்து படையினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். குறித்த இராணுவ முகாமை அகற்றுமாறும், இராணுவத்தை வெளியேறுமாறும் மக்களும், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் கடந்த காலங்களில் பல கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். குறித்த காணியை ஆக்கிரமிக்கும் வகையில் நில அளவீடு செய்வதற்குப் பல தடவைகள் முயற்சிகள் செய்யப்பட்டிருந்த போதிலும் மக்களின் எதிர்ப்பால் அந்தப் பணிகள் தடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=302347
-
ஒரே வாரத்தில் 40 தமிழக மீனவர்கள் கைது; இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் - அன்புமணி
ஒரே வாரத்தில் 40 தமிழக மீனவர்கள் கைது; இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் - அன்புமணி 09 Dec, 2024 | 11:52 AM சென்னை: “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கூட கடுமையான போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், மேலும் 8 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது என்றால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிக்கும் போது அவர்களை சிங்களக் கடற்படை அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது. அதை எந்த வகையிலும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2-ஆம் தேதி 18 மீனவர்களும், 4-ஆம் தேதி 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட கடுமையான போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், மேலும் 8 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது என்றால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். 2024-ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மீனவர்கள் 569 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற இலங்கை அரசு மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் 96 மீனவர்களுக்கு 6 மாதங்கள் முதல் இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டும், அபராதம் விதிக்கப்பட்டும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினாவுக்கு அளித்த பதிலிலும் மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. ஆனாலும், அவர்களை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உள்ளிட்ட அங்குள்ள சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும் உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் மேலாக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அன்புமணி தெரிவித்தார் https://www.virakesari.lk/article/200786
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு; ரஷ்யாவில் தஞ்சமடைந்தார் சிரியா ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புதினின் வசிப்பிடமான க்ரெம்ளின் மாளிகை வட்டாரத் தகவலை சுட்டிக்காட்டி இத்தகவலை ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ், டாஸ், ரியா நோவோஸ்டி பத்திரிகைகள் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன. பைடன் வரவேற்பு: இதற்கிடையில் சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி ஆசாத்தின் வீழ்ச்சி நீதியின் வெற்றி. இது பல ஆண்டுகளாக துண்பப்பட்டுவரும் சிரிய மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு வரலாற்று வாய்ப்பு. இந்த வாய்ப்பு அவர்கள் தங்கள் தேசத்தை வளமான எதிர்காலத்துக்காக கட்டமைக்க உதவும். அவர்கள் தங்கள் நாட்டை பெருமைமிகு அடையாளமாக மாற்ற உதவும்” என்று அதிபர் பைடன் வரவேற்றுள்ளார். சிரிய பிரச்சினையின் பின்னணி: மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் ராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ் அல் ஆசாத் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். 29 ஆண்டுகள் சிரியா அதிபராக இருந்த அவர் 2000-ம் ஆண்டில் காலமானார். அவரது மகன் பஷார் அல் ஆசாத் கடந்த 2000 ஜூலை 17-ம் தேதி ஜனாதிபதினார். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஜனாதிபதி ஆசாத்துக்கு ஈரான், ரஷ்யா ஆதரவு அளித்தன. கிளர்ச்சி படைகளுக்கு துருக்கி, அமெரிக்கா ஆதரவு அளித்தன. கடந்த 2014-ல் சன்னி பிரிவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு சிரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றியது. ஜனாதிபதி ஆசாத் படைகள் கிளர்ச்சி படைகள் இடையிலான போர் பல ஆண்டுகள் நீடித்தது. இதில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். பின்னர், ரஷ்யா, ஈரானின் ஆதரவால் ஜனாதிபதி ஆசாத்தின் கை ஓங்கி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டன. இந்த சூழலில் ரஷ்யா – உக்ரைன் போரை தொடர்ந்து, சிரியா ஜனாதிபதி ஆசாத்தின் ராணுவத்துக்கு ரஷ்யா, ஈரானின் ஆதரவு படிப்படியாக குறைந்தது. கடந்த 1-ம் தேதி சிரியாவின் அலெப்போ நகரை கைப்பற்றியது. அடுத்தடுத்து பல்வேறு நகரங்களை கைப்பற்றிய எச்டிஎஸ் படை வீரர்கள், நேற்று சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினர். சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்த போது, மனைவி, பிள்ளைகள் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், தற்போது ஆசாத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://thinakkural.lk/article/313382
-
மக்களின் குறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்!
மக்களின் குறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்! December 9, 2024 09:23 am முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள அனர்த்தத்தின் போது இந்தக் கிராமத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்ததால், குறித்த சிராட்டிகுளம் கிராமம் தனிமைப்பட்டிருந்தது. இதனால் குறித்த கிராம மக்கள் பெருத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தனர். இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கிராமத்திற்கு நேரடியாகச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளார். இதன்போது சிராட்டிகுளம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிச்சீரமைப்பு, நெல் உலரவிடும் தளம் அமைத்தல், யானைவேலி அமைத்தல், சிராட்டிகுளம் மாதிரிக் கிராமத்தில் தாழ்நிலப் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமையால் மக்கள் எநிர்நோக்கும் பிரச்சினைகள், பொதுப் போக்குவரத்துப் பிரச்சினை, வனவளத் திணைக்களத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் இதன்போது மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அந்தவகையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர், குறித்த பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைக்கடிதங்களை தனித்தனியே தன்னிடம் கையளிக்குமாறு தெரிவித்ததுடன், உரிய தரப்பினருடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் குறித்த மக்கள் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்களான யோகானந்தராசா, உதயகுமார் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=197033
-
ஹாட்லி அதிபர் கலைச்செல்வனுக்கு பழைய மாணவர் பணி எழில் விழா!
ஹாட்லி அதிபர் கலைச்செல்வனுக்கு பழைய மாணவர் பணி எழில் விழா! December 9, 2024 பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் தம்பையா கலைச்செல்வனின் பணி எழில் விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09 மணிக்கு பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஓய்வுநிலை அதிபர் த. கலைச்செல்வனிடம் கற்ற மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியற்றுறை சிரேஷ்ட பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் நடைபெறவுள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய த. கலைச்செல்வன் 2021 ஆம் ஆண்டு முதல் அதிபராகப் பொறுப்பேற்று, கல்லூரியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒருவராக மிளிர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். . இவர், ஆசிரியராக, பகுதித் தலைவராக, அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் கல்லூரி மாணவர்களிடையே நற்பண்புகளை வளர்ப்பதிலும், கல்லூரியின் நற்பெயரைக் கட்டிக்காப்திலும் அரும் பங்காற்றியவர். குறிப்பாக கல்லூரி கல்வி, விளையாட்டு மற்றும் இணைப்பாட விதானச் செயல்பாடுகளில் தொடர்ந்தும் முன்னிலை வகித்தமைக்கு இவரது பங்கு குறிப்பிடத்தக்கதாகும். https://eelanadu.lk/ஹாட்லி-அதிபர்-கலைச்செல்வ/
-
கஜேந்திரகுமார் பயணித்த வாகனத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!
கஜேந்திரகுமார் பயணித்த வாகனத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு! அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப்வண்டி மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது கொழும்பு - புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் வைத்து நேற்று(08.12.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியான 60 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். https://newuthayan.com/article/கஜேந்திரகுமார்_பயணித்த_வாகனத்தில்_மோதி_பெண்_ஒருவர்_உயிரிழப்பு!
-
ஐக்கிய மக்கள் சக்தியில் தேசியப் பட்டியல் பிரச்சனை தொடர்கிறது!
ஐக்கிய மக்கள் சக்தியில் தேசியப் பட்டியல் பிரச்சனை தொடர்கிறது! adminDecember 9, 2024 ஐக்கிய மக்கள் சக்தி என நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதி வழங்கியபடி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லையெனின், அந்தக் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியாக சுதந்திர மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் செயற்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த ஐந்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளில் ஒன்றிற்கு அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் இதுவரையில் யாருக்கும் வழங்கப்படவில்லை. கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், அக்கட்சியின் தோற்கடிக்கப்பட்ட உறுப்பினர்களை தேசியப்பட்டியலில் இருந்து நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த தாமதத்திற்கான காரணமாகும். ஐக்கிய மக்கள் கூட்டணியில் தேசியப் பட்டியலில், சுதந்திர மக்கள் காங்கிரஸின் டலஸ் அழகப்பெரும, தமிழ் முற்போக்கு கூட்டணியின் சாகரன் விஜயேந்திரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிஷாம் காரியப்பர் ஆகிய வேட்பாளர்கள் மூன்றிலிருந்து ஐந்தாம் இடம் வரையில் உள்ளனர். அந்த பட்டியலில் முதல் இரண்டு வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் ஆவர். இதற்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் அந்த சந்தர்ப்பத்தில் வாக்குறுதியளித்த படி ஏனைய கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லை. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/209105/
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
சிரியா: அதிபர் அசாத் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தது எப்படி? - விரிவான விளக்கம் Getty Images டேவிட் கிரிட்டன் பிபிசி செய்தி சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளது. அதிபர் அசாத் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிபர் அசாத்திற்கு ஆதரவளித்த ரஷ்யா அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளது. இதற்கிடையே சிரியாவில் இப்போது என்ன நடக்கிறது? உள்நாட்டுப் போர் முதல் தற்போது வரை அங்கு என்ன நடந்தது? முழு விவரங்களையும் இங்கு தெரிந்துகொள்வோம். சிரியாவில் என்ன நடந்தது? பஷார் அல் அசாத் குடும்பம் சிரியாவை இரும்புக்கரம் கொண்டு 53 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இப்போது அது முடிவுக்கு வந்துவிட்டது. அதிபர் பஷார் அல்-அசாத் 2000ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன்னதாக அவரின் தந்தை ஏறக்குறைய 30 ஆண்டுகள் சிரியாவை ஆட்சி செய்தார். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நாட்டின் அமைதியான, ஜனநாயக சார்பு எழுச்சியைக் குலைத்தார். அது பேரழிவு தரும் உள்நாட்டுப் போராக மாறியது. இதில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் கடந்த புதன் கிழமை, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் எனப்படும் இஸ்லாமியவாத அரசாங்க எதிர்ப்புக் குழு வடமேற்கில் ஒரு பெரிய தாக்குதலை வெற்றிகரமாக வழிநடத்தியது. கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றினர். பின்னர் சிரிய ராணுவம் வீழ்ச்சி அடைந்ததால், தலைநகர் டமாஸ்கஸுக்கு கிளர்ச்சிப் படை முன்னேறியது. பல சிரியர்கள் தாங்கள் ஒரு புதிய சுதந்திர உணர்வை உணர்வதாகக் கூறுகிறார்கள். சிலர் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். சிரியா யார் கட்டுப்பாட்டில் இருந்தது? AFP கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவைக் கைப்பற்றினர் ரஷ்யா, இரான் மற்றும் இரானிய ஆதரவு ஆயுதக்குழுவின் உதவியுடன் அதிபர் அசாத் தலைமையிலான அரசு நாட்டின் பெரும்பாலான நகரங்களின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுத்த பிறகு, சிரியாவில் நீண்டகாலமாக நடந்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உணரப்பட்டது. உள்நாட்டுப் போரின் மையமாக இருந்த பகுதிகள் பெரும்பாலும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், அமெரிக்கா மற்றும் சிரிய ஜனநாயகப் படையின் ஆதரவு பெற்ற குர்திஷ் இனக்குழு தலைமையிலான கூட்டணியால் கட்டுப்படுத்தப்பட்ட வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் உள்பட நாட்டின் பல பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அலெப்போ, இட்லிப் ஆகியவையே, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதிகளாக இருந்தன. இவை, துருக்கி எல்லையில் அமைந்துள்ளன. அங்கு வசித்து வந்த 40 லட்சம் மக்களில் பலரும் இடம்பெயர்ந்தனர். இந்தப் பகுதிகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) ஆயுதக்குழுவின் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தன. ஆனால் பிற கிளர்ச்சிப் பிரிவுகளும் ஜிஹாதி குழுக்களும் அங்கு செயல்பட்டன. சிரிய தேசிய ராணுவம் (SNA) என அறியப்படும் துருக்கிய ஆதரவு கிளர்ச்சிப் பிரிவுகளும், அங்குள்ள சில பகுதிகளை துருக்கிய படைகளின் ஆதரவுடன் கட்டுப்படுத்தியது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் யார் ? ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்: யார் இவர்கள்? பின்னணி என்ன? கடந்த 2011இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக 'ஜபத் அல்-நுஸ்ரா' (Jabhat al-Nusra) என்ற வேறொரு பெயரில் 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' அமைக்கப்பட்டது. இஸ்லாமிய அரசு (IS) எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ரா குழுவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார். சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குழுவாக இது கருதப்பட்டது. ஆனால் அதன் புரட்சிகர கொள்கையைவிட, 'ஜிஹாதி சித்தாந்தம்' அக்குழுவின் உந்து சக்தியாகக் கருதப்படுகிறது. மேலும் அந்த நேரத்தில், "சுதந்திர சிரியா" எனும் பெயரில் இயங்கும் முக்கிய கிளர்ச்சிக் கூட்டணியுடன் இந்தக் குழு முரண்படுவதாகவும் அறியப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பை பகிரங்கமாகப் பிரித்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார். Getty Images ஓராண்டு கழித்து, இதேபோன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' என்ற பெயரை இந்தக் குழு பெற்றது. இருப்பினும், ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல நாடுகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பை அல்-கொய்தாவின் துணை அமைப்பாகக் கருதி, அல்-நுஸ்ரா முன்னணி என்று அடிக்கடி குறிப்பிடுகின்றன. இதன் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானியை, பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்தது. அதோடு அவரைப் பிடிக்க வழிவகுக்கும் தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. அல்-கொய்தா, ஐஎஸ் அமைப்பு உள்பட அதன் எதிராளிகளை நசுக்குவதன் மூலம் இட்லிப் மற்றும் அலெப்போ மாகாணங்களில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தனது அதிகாரத்தைப் பலப்படுத்தியது. இது இஸ்லாமிய சட்டத்தின்படி பிரதேசத்தை நிர்வகிப்பதற்கு `சிரிய இரட்சிப்பு அரசாங்கத்தை' அமைத்தது. ஜவ்லானி வெள்ளிக்கிழமை சிஎன்என் நேர்காணலில், "புரட்சியின் இலக்கு அசாத் ஆட்சியை அகற்றுவதே" என்றும், "அரசு நிறுவனங்கள் மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சில்" அடிப்படையிலான ஓர் அரசாங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார். கிளர்ச்சியாளர்கள் ஏன் தாக்குதல் நடத்தினர்? சிரியா: தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்தது எப்படி? பல ஆண்டுகளாக, சிரிய அரசாங்கப் படைகள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றதால், இட்லிப் போர்க்களமாகவே இருந்தது. ஆனால் 2020இல், இட்லிப் நகரத்தை மீட்பதற்கான அரசின் உந்துதலை நிறுத்துவதற்காக துருக்கியும் ரஷ்யாவும் மத்தியஸ்தம் செய்து போர்நிறுத்தம் கொண்டு வந்தன. ஆங்காங்கே சண்டைகள் நடந்தாலும் போர்நிறுத்தம் பெரும்பாலும் நீடித்தது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்கள் நவம்பர் 27ஆம் தேதியன்று "ஆக்கிரமிப்பைத் தடுக்க" ஒரு தாக்குதலைத் தொடங்கியதாகக் கூறினர். அரசாங்கமும், அதன் நட்பு நாடான இரான் ஆதரவு ஆயுதப் படைகளும் வடமேற்கில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினர். ஆனால், பல வருடகால யுத்தம், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஊழலால் அரசாங்கம் பலவீனமடைந்து, அதன் ஆதரவாளர்கள் மற்ற மோதல்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இரான் ஆதரவு பெற்ற லெபனான் குழுவான ஹெஸ்பொலா, போரின் ஆரம்ப ஆண்டுகளில் கிளர்ச்சியாளர்களை பின்னுக்குத் தள்ளுவதில் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், சமீபத்தில் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலால் ஹெஸ்பொலா பாதிக்கப்பட்டது. இஸ்ரேலிய தாக்குதல்கள் சிரியாவில் இரானிய ராணுவ தளபதிகளை அகற்றியது மட்டுமின்றி அங்குள்ள அரசாங்க சார்பு ஆயுதக்குழுவினரின் விநியோக வழிகளைச் சிதைத்தது. யுக்ரேனில் நடந்த போரால் ரஷ்யாவும் திசைதிருப்பப்பட்டது. அவர்கள் இல்லாமல், அசாத்தின் படைகள் பலவீனமடைந்தன. கிளர்ச்சிக் குழுக்கள் அதிபர் அசாத்தை வீழ்த்தியது எப்படி? Reuters அலெப்போ நகரை நோக்கி முன்னேறிய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆயுதக்குழுவினர் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் பெரும்பகுதியை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் நவம்பர் 30 அன்று கைப்பற்றினர். தங்களது முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கிய மூன்று நாட்களில் இது நடந்தது. அரசாங்கம் தனது துருப்புகள் மற்றும் பாதுகாப்புப் படைகளை விரைவாகத் திரும்பப் பெற்ற பின்னர் அவர்கள் அங்கு சிறியளவிலான எதிர்ப்பை மட்டுமே எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர். அசாத் தனது ஆதரவாளர்களின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை "நசுக்க" சபதம் செய்தார். ரஷ்ய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின. இரான் ஆதரவு ஆயுதக்குழுவினர் அலெப்போ-டமாஸ்கஸ் நெடுஞ்சாலையில் தெற்கே உள்ள அடுத்த நகரமான ஹமாவை சுற்றி ராணுவத்தின் தற்காப்புக் கோடுகளை வலுப்படுத்த படைகளை அனுப்பியது. இருப்பினும், ஹமா வியாழக்கிழமை அன்று கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. Getty Images சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸை கைப்பற்றுவதே தங்களது அடுத்த இலக்கு என்று கிளர்ச்சியாளர்கள் உடனடியாக அறிவித்தனர். மேலும் ஒருநாள் மோதலுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு அதைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர். அதேநேரத்தில், சிரியாவின் தென்மேற்கில், ஜோர்டான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் மற்ற கிளர்ச்சிப் பிரிவுகள், 24 மணிநேரத்திற்குள் டெரா, சுவைடா நகரங்களைக் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை அவர்கள் அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸுக்குள் நுழைந்து, நாட்டின் மிகவும் மோசமான ராணுவ சிறை என்று கூறப்படும் சைட்னாயாவில் இருந்த கைதிகளை விடுவித்ததாக அறிவித்தனர். இரண்டு மணிநேரத்திற்குள், அவர்கள்: "கொடுங்கோல் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத் தப்பி ஓடிவிட்டார்" என்று அறிவித்தனர். Getty Images "அவர் ஆட்சியின் கீழ் 50 வருட அடக்குமுறை, 13 வருட குற்றங்கள், கொடுங்கோன்மை மற்றும் கட்டாய இடப்பெயர்வுக்குப் பிறகு, இருண்ட காலத்தின் முடிவையும் சிரியாவின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் நாங்கள் இன்று அறிவிக்கிறோம்," என்று அவர்கள் கூறினர். கிளர்ச்சியாளர்கள் வருவதற்கு சற்று முன்னர் அதிபர் தலைநகரில் இருந்து விமானம் மூலம் எங்கோ ரகசிய இடத்திற்குச் சென்றதாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அசாத்தின் பிரதமர் முகமது அல்-ஜலாலி, "சிரிய மக்களால் தேர்வு செய்யப்பட்ட "எந்தவொரு தலைமையுடனும் ஒத்துழைக்கத் தயார்" என்று ஒரு வீடியோவில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சிரியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கும் சிரிய குடிமக்கள், அதிபர் அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததைக் கொண்டாடி வருகின்றனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உமையாத் சதுக்கம் அப்பகுதி மக்களின் கொண்டாட்டத்திற்கான மையமாக இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cyv343mrzm0o?at_campaign=ws_whatsapp
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
சிரியா இன்னொரு லிபியாவாக மாறவே வாய்ப்புக்கள் உள்ளன. ஏனெனில் சிரியாவில் பல தரப்புக்கள் பங்குபிரித்து வைத்துள்ளன. குர்திஸ் படைகள் மீது இஸ்லாமியப் படைகள் தாக்குதலைத் தொடுத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஐ.நா. அல்லது அரபுநாடுகளின் அமைதிப்படை போய் உள்நாட்டு யுத்தம் வராமல் பார்க்கவேண்டும். ஆசாத் நாட்டைவிட்டு ஓடியதில் மிக்க சந்தோஷம். அப்படியே ரஷ்யாவின் கடற்படை, விமானப்படைத் தளங்களும் நீக்கப்பட்டால் இரட்டிப்பு சந்தோஷம் கிட்டும்.
-
கஜனின் அழைப்பு ? - நிலாந்தன்
கஜனின் அழைப்பு ? - நிலாந்தன் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்குத் தான் தயாராக இருப்பதாக கஜேந்திரக்குமார் அறிவித்துள்ளார். அந்த அழைப்பின் அடிப்படையில் அண்மையில், யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில் இரண்டு கஜன்களும் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள். முதலாவதாக இந்த நகர்வை வரவேற்க வேண்டும். ஏனென்றால் இது ஏதோ ஒரு அடிப்படையில் தமிழ் ஐக்கியத்துக்கான முயற்சிதான். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளின் பின்னணியில் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது. என்பிபி அரசாங்கம் ஒரு யாப்பை மாற்றக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு யாப்பை அவர்கள் உருவாக்க முயற்சிக்கக்கூடும். அந்தத் தீர்வானது ஏற்கனவே 2015இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில் ஒரு புதிய யாப்பை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் முன்வைக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வை அடிப்படையாகக் கொண்டதாக அமையலாம் என்ற சந்தேகங்களின் பின்னணியில், கஜேந்திரக்குமாரின் மேற்படி அறிவிப்பு வந்திருக்கின்றது. அந்த யாப்புருவாக்க முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியும் உட்பட ஏனைய கட்சிகளும் பங்களிப்பைச் செய்தன. அது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வு என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறியது. அனுர அரசாங்கம் அந்த தீர்வு முயற்சியைத் தொடரலாம் என்ற சந்தேகம் இப்பொழுது உண்டு. எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம் அவ்வாறு யாப்புருவாக்க முயற்சியை முன்னெடுக்கும் பொழுது தமிழ்த் தரப்பானது தன் எதிர்ப்பை வலிமையாக ஒற்றுமையாகக் காட்டவேண்டிய ஒரு தேவை எழுந்திருக்கிறது. அந்த தேவையின் அடிப்படையில்தான் கஜனின் மேற்படி நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய முயற்சிகளில் பெருமளவுக்கு ஒத்துழைக்காத ஒரு கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான். எனினும் முன்னணியும் ஈடுபாடு காட்டிய ஐக்கிய முயற்சிகளின்போது உருவாக்கப்படும் ஆவணங்களில், விட்டுக்கொடுப்பற்ற தமிழ் நிலைப்பாடுகளை எடுப்பதற்கும், அந்த ஆவணங்களின் கொள்கைரீதியான தெளிவான சரியான நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் முன்னணிதான் அதிகம் பங்களிப்பை செய்வதுண்டு. தமிழ்மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவு விடயத்திலும் முன்னணியின் உழைப்பு அதிகம் உண்டு. சிவில் சமூகமும் அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு பேரவையாகும். அதன் இணைத் தலைவர்களில் ஒருவராக அப்பொழுது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் இருந்தார். எனவே பேரவையின் முன்மொழிவுக்கு கனதி அதிகமுண்டு. அந்த முன்மொழிவை உருவாக்கும் பொழுது பேரவையில் அங்கம் வகித்த கட்சிகள் பின்னர் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொண்டன. பேரவையும் செயலிழந்தது. பேரவையின் முடிவுக்கு முன்னணியும் ஒரு முக்கிய காரணம். எனினும் இப்பொழுது அந்த முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் ஒரு ஐக்கியத் தளத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னணி முன்வந்திருக்கிறது. கஜன் அழைப்பு விடுத்திருப்பது பிரதானமாக இரண்டு தரப்புகளுக்கு. ஒன்று ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணி. மற்றது தமிழரசுக் கட்சி. இதில் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் குறிப்பிட்ட சில கட்சிகள் ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவைக்குள் அங்கம் வகித்தன. தீர்வு முன்மொழிவை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் பங்களிப்பை நல்கின. அதேசமயம் அக்கட்சிகள் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருந்தன. கூட்டமைப்பு ரணில் மைத்திரி அரசாங்கத்தோடு சேர்ந்து உருவாக்கிய எக்கிய ராஜ்ய என்ற வரைவுக்கும் அவை பங்களிப்பை வழங்கின. அந்தத் தீர்வு முயற்சியில் தமிழ்த் தரப்பில் சுமந்திரன் தீர்மானிக்கும் சக்தியாகச் செயற்பட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது அவர் அந்த தீர்வு முயற்சியை ஆதரித்துப் பேசியும் இருக்கிறார். அந்த யாப்புருவாக்க முயற்சியில் ஜேவிபியும் பங்காளியாக இருந்ததை அவர் ஒரு சாதகமான அம்சமாகச் சுட்டிக்காட்டியும் இருக்கிறார். எனவே இப்பொழுது கேள்வி என்னவென்றால், அனுர அரசாங்கமானது எக்கிய ராஜ்யவை மீண்டும் தூசுதட்டி எடுத்தால் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன? சுமந்திரனின் நிலைப்பாடு என்ன? ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, இந்தியாவின் கைக்கூலிகள், இந்தியா சொல்வதைக் கேட்டு நடப்பவர்கள் என்று திரும்பத் திரும்ப குற்றஞ்சாட்டி வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அக்கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகித்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொது வேட்பாளரை இந்தியாவின் சூழ்ச்சி என்று வர்ணித்தது. அதில் ஈடுபட்ட சிவில் சமூகத்தவர்களையும் முதுகெலும்பில்லாதவர்கள் ,இந்தியாவுக்கு ஊழியம் செய்பவர்கள் என்று வசைபாடியது. ஆனால் பொது வேட்பாளர் பெற்ற வாக்குகள் தேசியவாத வாக்குகளை என்று பின்னர் கஜேந்திரகுமார் ஒரு விளக்கமும் கொடுத்தார். இப்பொழுது மேற்படி கட்சிகளை பேரவையின் முன்மொழிவின் கீழ் ஒன்றிணையுமாறு அவர் கேட்டிருக்கிறார். ஆயின் அக்கட்சிகள் இப்பொழுது இந்தியாவின் பிடிக்குள் இல்லை என்று அவர் நம்புகிறாரா? ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் கஜேந்திரகுமாரின் அழைப்புக்கு உத்தியோகபூர்வமாக பதில் எதையும் கூறியிருக்கவில்லை கடந்த 15 ஆண்டுகளில் ஐக்கிய முயற்சிகளுக்கு பெரும்பாலும் ஆதரவை வழங்காத ஒரு கட்சி இவ்வாறு அழைப்பு விடுத்திருப்பது சாதகமான ஒரு மாற்றம்தான். கடந்த 15ஆண்டுகளிலும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை பெரும்பாலும் சிவில் சமூகங்கள்தான் முன்னெடுத்திருக்கின்றன. மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயரின் முன்முயற்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பில் இருந்து தொடங்கி, தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் பொதுக் கட்டமைப்பு வரையிலுமான பெரும்பாலான ஐக்கிய முயற்சிகளின் அனுசரணையாளர்களாக சிவில் சமூகங்களே செயற்பட்டிருக்கின்றன. தமிழ்மக்கள் பேரவை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி,பல்கலைக்கழக மாணவர்கள் தலையிட்டு உருவாக்கிய 13 அம்ச ஆவணம், 2021இல் ஐநாவுக்கு எழுதிய கூட்டுக் கடிதம், அதன்பின் இந்தியச் சிறப்பு முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழ் கைதிகளை விடுவிக்குமாறு கேட்டு தமிழக முதல்வருக்கு எழுதப்பட்ட கூட்டுக் கடிதம், கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தியமை ஆகிய பெரும்பாலான ஐக்கிய முயற்சிகள் அனைத்தின் பின்னணியிலும் சிவில் சமூகங்கள்தான் அனுசரணை புரிந்தன. அவ்வாறு மக்கள் அமைப்புகளின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்தைத்தான் இப்பொழுது கஜேந்திரகுமார் ஒன்றிணைவுக்கான அடிப்படையாக எடுத்திருக்கிறார். இந்த முயற்சிகளின் நோக்கம் அனுர அரசு கொண்டுவரக்கூடிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை தமிழ்த் தரப்பு ஐக்கியமாக எதிர்கொள்வதே. அது நல்ல விடயம். அதைப் பாராட்ட வேண்டும்.ஆனால் அந்த ஆவணத்தை உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை இப்பொழுது இல்லை. அது செயல்படாத ஐந்தாண்டு கால இடைவெளிக்கு பின் தமிழ் மக்கள் பொதுச் சபை என்ற கட்டமைப்பு உருவாகியது. தமிழ்மக்கள் பொதுச்சபையின் முன்னெடுப்பினால் தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இப்பொழுது அது செயல்படுவதில்லை. கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் மத்தியில் தோன்றிய மக்கள் அமைப்புகள் ஒரு கட்டத்துக்குப் பின் தொடர்ச்சியாக செயல்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமைப் பேரவை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சி இயக்கம், தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஆகிய அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பின் தேங்கியிருக்கும் ஒரு நிலைமையை காண்கிறோம். ஏன் ? ஏனென்றால்,சிவில் சமூகங்களுக்கு அடிப்படையான வரையறைகள் உண்டு. சிவில் சமூகங்கள் கட்சிகளைப்போல செயல்பட முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பிலிருந்து சிவில் சமூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அது. முழு நேர அரசியற் செயற்பாட்டாளர்களைக் கொண்ட, அர்ப்பணிப்புமிக்க ஒரு அரசியல் இயக்கம்தான் இப்பொழுது தமிழ்மக்களுக்கு தேவை. அந்த அரசியல் இயக்கத்தால் வழி நடத்தப்படும் ஒரு தேர்தல் அரசியலே தமிழ் மக்களை சரியான வழியில் செலுத்தும். சிவில் சமூகங்கள் பேராசிரியர் ஜெயதேவ உயங்கோட கூறுவதுபோல அரசியல் சமூகத்தின் மீது “தார்மீகத் தலையீட்டைச்”செய்யலாம். ஆனால் தேர்தல் நடவடிக்கைகளில் கட்சிகளைப்போல ஈடுபடுவது என்றால் அதற்கு அரசியல் இயக்கங்கள்தான் பொருத்தமானவை. சிவில் சமூகங்கள் எப்பொழுதும் தளர்வான கட்டமைப்பைக் கொண்டவை. சிவில் சமூகங்களில் பல்வேறு வகையினர் இருப்பார்கள். அரசு சார்பற்ற நிறுவனங்களின் நிதியில் இயங்குபவை, தூதரகங்களோடு உறவை வைத்திருப்பவை, கட்சிகளோடு நேரடியாகச் சம்பந்தப்பட விரும்பாதவை, கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தமது யாப்பில் எழுதி வைத்திருப்பவை… போன்ற பல வகைப்பட்ட சிவில் சமூகங்கள் உண்டு. இவ்வாறான சிவில் சமூகங்களின் கூட்டுக் கட்டமைப்பாக உருவாக்கப்பட்ட தமிழ்மக்கள் பொதுச் சபையானது ஒரு தேர்தல்மைய அமைப்பு அல்ல என்பதனை அந்த அமைப்பின் பிரதான நிகழ்வுகளின் போதும், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுதும் மிகத் தெளிவாகத் திரும்பத் திரும்ப கூறப்பட்டது. தமிழ்மக்கள் பொதுச்சபையின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் எல்லாவற்றிலும் அதைக் காணலாம். இந்த வரையறைதான் ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலை கையாள முடியாது என்று தமிழ்மக்கள் பொதுச்சபை அறிவிக்க முக்கிய காரணங்களில் ஒன்று. சிவில் சமூகங்களின் கூட்டிணைவு ஒரு தளர்வான அமைப்பாகவே இருக்கும். அது கட்சிபோல செயல்பட முடியாது. கட்சிபோல செயல்படுவதென்றால், அல்லது தேர்தலில் நேரடியாக ஈடுபடுவது என்றால், அதற்குப் பலமான அரசியல் இயக்கம் தேவை. சிவில் சமூகங்களுக்கு ஊடாக தம்மை பலப்படுத்திக் கொண்டு கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தமிழ்மக்கள் மத்தியில் உண்டு. அப்படிப்பட்டவர்கள் சிவில் சமூகங்களில் இருந்து விலகி கட்சிகளில் இணைந்துதான் தேர்தல் கேட்டார்கள் .சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளாக தேர்தல் கேட்கவில்லை. எனவே இந்த இடத்தில் தெளிவான பிரிகோடு இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை ஏற்கனவே திரும்பத்திரும்பத் தெரிவித்திருந்தது. இப்படிப்பட்டதோர் கட்சி மற்றும் சிவில் சமூகப் பின்னணிக்குள்,தேர்தல் முடிந்த கையோடு,கட்சிகளை ஒரு மேசையில் அமர்த்த சிவில் சமூகங்கள் எவையும் முயற்சிக்காத ஒரு வெற்றிடத்தில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதாவது ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய முயற்சிகளுக்கு எதிராக காணப்பட்ட கட்சி,ஒரு புதிய ஐக்கிய முயற்சிக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது. தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அந்த அழைப்பு வந்திருக்கலாம். அவர்களுக்கு நெருக்கமான சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் ஆலோசனையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். எதுவாயினும் முன்னணியின் ஐக்கியத்துக்கு எதிரான முன்னைய நிலைப்பாடுகளை தூக்கிப்பிடிக்க இது நேரமல்ல. கஜேந்திரகுமாரின் அழைப்பு காலத்தின் தேவை. கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் கட்சிகளின் மீது செல்வாக்கை பிரயோகிக்கக்கூடிய மக்கள் அமைப்புகள் இல்லாத ஒரு வெற்றிடத்தில், ஒரு கட்சியே முன்வந்து அந்த அழைப்பை விடுப்பது தவிர்க்கமுடியாதது. இறந்த காலத்தில் இருந்து அக்கட்சி பாடங்கற்றிருப்பதை வரவேற்கலாம். ஒரு ரஷ்ய பழமொழி உண்டு “கடவுளுக்கு உள்ள பிரதான பிரச்சனை என்னவென்றால்,மனிதர்களை வைத்துத்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருப்பது” என்று. தமிழ் அரசியலுக்கும் அது பொருந்தும். இருக்கிற கட்சிகளை வைத்துச் சாத்தியமான ஐக்கியத்தைத்தான் கட்டியெழுப்பலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தோடு இருக்கும் என்பிபி அரசாங்கம் ஒரு தீர்வை நோக்கி முயற்சித்தால், அதை எதிர்கொள்ள அப்படியொரு சாத்தியமான ஒருங்கிணைவு அவசியம். https://www.nillanthan.com/7011/
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அநுரகுமார அரசின் தடுமாற்றம் – அகிலன்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அநுரகுமார அரசின் தடுமாற்றம் – அகிலன் December 8, 2024 தேசிய மக்கள் சக்தியின் தலைவா் அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னா் பயங்கரவாதத் தடைச் சட்டம் மூன்று தடவைகள் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. அனைத்துத் தரப்பி னராலும் வெறுக்கப்படும் அந்த சட்டம் நீக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்திருந்தாலும் கூட, இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் இருப்பவா்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களுக்குள் அதிகரித்துள்ளது. எதிா்க்கட்சியாக இருந்து எதிா்ப்பு அரசிய லைச் செய்யும் போது சொல்பவை அனைத்தையும் அதிகாரத்துக்கு வந்தால் செய்ய முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடா்ந்தாலும், அதனை நாம் துஷ்பிரயோகம் செய்யப் போவதில்லை என்று தேசிய மக்கள் சக்தி பின்னா் தெரிவித்தது. இதனைக் கைவிட்டுவிடுவதற்கு அவா்கள் தயாராகவில்லை என்பதை இது உணா்த்தியது. இவ்விடயத்தில் அரசின் மீதான விமா்சனங் கள் அதிகரித்திருப்பதால், இந்த சட்டத்திற்கு பதிலாக மற்றொரு சட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருக்கின்றார். அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் இதனை அவா் தெரி வித்திருப்பது, இதுதான் அமைச்சரவையின் முடிவு என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஆனால், புதிய சட்டமூலம் எப்போது கொண்டுவரப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை. மறுபுறத்தில் புதிய சட்டமூலம் கொண்டு வரப்படும் வரை தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடரும் என்பதைத்தான் அமைச்சரவைப் பேச்சாளா் மறைமுகமாகச் சொல்லியிருக்கின்றாா். இதேபோன்ற ஒரு கருத்தைத்தான் சில வருடங்களுக்கு முன்னா் “நல்லாட்சி” எனப்படும் மைத்ரி – ரணில் அரசாங் கமும் சொன்னது. 2018 பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டமூலத்தை அவா்கள் தயாரித்தாா்கள். ஆனால், அது நிறைவேற் றப்படவில்லை. அநுர செப்ரெம்பா் 21 தோ்தலில் ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்த பின்னா் மூன்று வெவ்வேறான சந்தா்ப்பங்களில் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அவா் பயன் படுத்தியிருக்கின்றாா். அக்ரோபா் மாதம் அறுகம்பை பகுதியில் இஸ்ரேலிய உல்லாசப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல் ஒன்று வெளியானதையடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான முதலாவது கைது இடம்பெற்றது. இச்சம்பவம் தொடா்பில் அதனைத் தொடா்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனா். மாவீரா் தினத்தையொட்டி நவம்பா் 27 இல் முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவுகள் செய்ததால் குறைந்தது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் தொடர்பான சின்னங்கள் பயன்படுத்தியதுதான் இவா்கள் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு. முகநுாலில் விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் போற்றும் வகையில் பதிவை மேற்கொண்டவா் கைதான அதேவேளையில், அதனை “லைக்” பண்ணிய சிலரும் விசார ணைக்குள்ளாக்கப்பட்டனா். இந்தக் கைதுகளும், விசாரணைகளும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்தான் முன்னெடுக்கப்பட்டன. இதனைவிட இதேகாலப் பகுதியில், புலம் பெயா்ந்த தமிழா் ஒருவா் லண்டனிலிருந்து நாடு திரும்பிய போது கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டாா். புலம் பெயா்ந்த தமிழா் 2008 இல் லண்டனுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி யில் வசித்துவந்த தனது தந்தையின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வந்த போது, “பயங்கரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தாா்” என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டாா். பின்னா் பிணையில் அவா் விடுதலையாகியுள்ளாா். ஆனால், வழங்கு முடிவடையும் வரை அவா் நாட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. அவா் மீது பயணத்தைடை உள்ளது. இந்த மூன்று சம்பவங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை எதிா்கொண்டிருப்பவா்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைதானவா்களின் பத்து போ் வெலிக்கடை உட்பட பல சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றாா்கள். இவா்கள் அனை வரும் 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடு பவா்கள். இந்தக் கைதிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முகநுாலில் பதிவுகளை மேற் கொண்டமைக்காக கைதாகி விசாரணைகளை எதிா்கொண்டிருப்பவா்கள் முதலாவது தரப்பினா். விசாரணை முடிவடையாமல் தடுப்புக் காவலில் இருப்பவா்கள் இரண்டாவது தரப்பினா். தண்டனை வழங்கப்பட்டவா்கள் மூன்றாவது தரப்பினா். இவா்கள் அனைவருமே அரசியல் கைதிகள்தான்! அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவாா்கள் என்று நீதி அமைச்சா் பாராளு மன்றத்தில் கூறியிருக்கின்றாா். ஆனால், நீண்ட காலமாக சிறையில் இருப்பவா்களும், போதிய சாட்சியங்கள் இல்லாமல் விசாரணைக் கைதிகளாக இருப்பவா்களையும் விடுதலை செய்வது தொடா்பில் ஆராயப்படுவதாகவும் நீதி அமைச்சா் கூறியிருக்கின்றாா். இந்த விவகாரத்தை கொழும்பிலுள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் கவனத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் கொண்டு வந்திருக்கின்றாா். ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுடன் இது குறித்து தான் பேசுவதாக ஐ.நா. பிரதிநிதி உறுதியளித்திருக்கின்றாா். ஆக, இவ்விடயத்தில் அரசின் மீதான சா்வதேச அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சி ஜே.வி.பி.தான். ஜே.வி.பி. இரண்டு ஆயுதப் புரட்சிகளை நடத்தியது. அதன் தலைவா் றோஹண விஜயவீர உட்பட ஆயிரக் கணக்கானவா்கள் கொடூரமாக அரச படைகளால் கொல்லப்பட்டனா். ஜே.வி.பி.யின் தலைவா்களும் கடந்த காலங்களில் பயங்கரவாதிகளாகவே முத்திரை குத்தப்பட்டிருந்தாா்கள். அவா்கள் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம்தான் பாய்ந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரத்தை ஜே.வி.பி.யினரும் அனுபவித்துள்ளாா்கள். 1990 களில் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக வழிக்கு வருவதாக ஜே.வி.பி. பிரகடனம் செய்யதைதையடுத்து அதன் மீதான தடைகளும் தளா்த்தப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது ஒரு கொடூரமான சட்டம் என்பதில் சந்தேகமில்லை. இது யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறதோ அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இது ஒடுக்குமுறைக்கான மிக மோசமான கருவிக ளில் ஒன்றாகவே மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன. சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங் களின் நெறிமுறைகளுக்கு எதிரானது என உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த சட்டமூலம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று கடந்த அரசாங்கங்களை வலியுறுத் தியிருந்தன. கைதாகும் ஒருவரை நீண்ட காலத்துக்கு விசாரணை இல்லாமல் தடுத்து வைத்திருப்பதற்கு இன்றுள்ள ஒரே சட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டம்தான். தமக்கு உருவாகக்கூடிய எதிா்ப்புக் களை எதிா்கொள்வதற்கு இது போன்ற சட்டமூலம் ஒன்று அவசியம் என்பது பொதுவாகவே ஆட்சியா ளா்களின் கருத்தாக உள்ளது. அதனால், இந்த சட்டமூலத்தை நீக்குவதாக உறுதிமொழிகளைக் கூறினாலும் கூட, இதிலுள்ள சில அதிகாரங்களை உள்ளடக்கியதாக மற்றொரு சட்டமூலத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் அநுர அரசு கவனமாகவே இருக்கும் என்றுதான் தெரிகின்றது. https://www.ilakku.org/பயங்கரவாதத்-தடைச்-சட்டத/
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர 08 Dec, 2024 | 03:29 PM ஆர்.ராம் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு அந்த அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலிருந்து ஆரம்பமாகுமா இல்லை முழுமையாக ஆரம்பத்திலிருந்தான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா என்றும், மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்தப்படுகின்றபோது அச்செயற்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புக்கள் வலுவடையும் சவாலான நிலைமைகள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாளவுள்ளீர்கள் என்றும் வினவியவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், 2015-2019 அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் இருந்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். அதனை நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டுள்ளோம். இருப்பினும், அந்த இடைக்கால அறிக்கையை விடவும் முற்போக்கான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாம் அதுபற்றி கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம். எவ்வாறாக இருந்தாலும் 22திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்ற விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எமது அமைப்பின் கொள்கைகளை மையப்படுத்திய விடயத்தினை முன்வைப்போம். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதவில்லை. எமது முன்மொழிவுகள் தீர்வினை அடைவதற்கான ஒரு பயணப்பாதையாகும். சிலதரப்பினர் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து அந்த வழியால் தீர்வினை அடையலாம் என்ற குறிப்பிடுகின்றார்கள். நாட்டில் அனைத்துப் பிரஜைகளும் சம அந்தஸ்துடன் சாந்தியும் சமாதானமுமாக வாழ வேண்டும். வளங்கள் சமமாக பகிரப்பட வேண்டும் என்பது தான் இலக்காக உள்ளது. அதனை அனைவரினதும் பங்களிப்புடன் அடைந்து கொள்வது தான் நோக்கமாக உள்ளது. இதேநேரம், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றபோது 13ஆவது திருத்தச்சட்டம் மட்டுமல்ல முதலாவது திருத்தத்திலிருந்து 22ஆவது திருத்தம் வரையில் அகற்றப்பட்டு அவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டதொரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளது. அதேநேரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் மாகாண சபை முறைமை நீக்கப்படாது. நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்றது. பல தசாப்தங்களாக இனங்களுக்கு இடையிலான பிரச்சினை நீடித்துக்கொண்டு தான் உள்ளது. அதற்கான தீர்வு வழங்கப்படும் வரையில் மக்களிடத்திலிருந்து வெளிவருகின்ற கோசங்கள் ஓயப்போவதில்லை. எனவே எமது நோக்கம், அனைவரினது இணக்கத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தீர்வானது மக்களின் அங்கீகாரத்துக்காக விடப்படும். அதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவோம். அதேநேரம், தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் இனவாதம், மதவாதத்தை பேசவில்லை. அவ்வாறு பேசுவதற்கு இடமளிக்கவும் இல்லை. வழக்கமாக ஆளும் தரப்பு தான் அவ்விதமான மனோநிலையில் செயற்படும். ஆனால் இம்முறை அவ்விதமான நிலைமை காணப்படவில்லை. ஆகவே இந்த மாற்றமானது, புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு சவால்களை அளிக்காது என்றே கருதுகின்றேன். நிச்சயமாக மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமை மாற்றமொன்று ஏற்படும் என்றார். https://www.virakesari.lk/article/200735