Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. வலிதரும் விவாகரத்து! எப்போது உணர்வாரோ ரகுமான்? கனிவும், பணிவும், கர்வமில்லா மென்மையாளருமான ஏ.ஆர்.ரகுமானை அவரது மனைவி பிரிந்து செல்வதானது சமூகத் தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் விவாகரத்து ஆச்சரியமானதல்ல என்றாலும், நமது பேரன்புக்குரிய ஒழுக்க சீலரான ரகுமான் விஷயத்தில் நடந்திருப்பது குறித்த ஒரு நுட்பமான அலசல்; குடும்பம் என்ற அமைப்பே சமீப காலமாக கேள்விக்கு உள்ளாகி வருகிறது. எங்கெங்கு பார்த்தாலும் விவாகரத்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குடும்ப நீதிமன்றங்களில் வழக்குகள் குவிகின்றன. குடும்பங்களில் நிம்மதி பறி போவது சமூக இயக்கத்தையே பாதிக்கும் என்பதால், இது குறித்த பரந்துபட்ட விவாதங்கள் தேவைப்படுகின்றன. இயற்கை விதிகளின்படி எதிரெதிர் பாலினமாகவுள்ள ஆண்,பெண் இருவருக்குமே பரஸ்பர துணை தேவைப்படுகிறது. பெண் இல்லாமல் ஆணும், ஆண் இல்லாமல் பெண்ணும் வாழ இயலாது. எனில், இந்த உறவை எப்படி கண்ணியத்துடன் ஏற்றுத் தொடர்வது என்பதே தற்போதைய சமூகத்தின் முன் உள்ள கேள்வியாகும். சினிமா பிரபலங்கள் விஷயத்தில் நாம் பல திருமண முறிவுகளை பார்த்துள்ளோம். நடிகர் ஜெமினி கணேசன் – சாவித்திரி விஷயத்தில் ஏற்பட்ட பிரிவு சாவித்திரியின் வாழ்க்கையை பெரும் துயரத்தில் தள்ளியது. நடிகர் கமலஹாசன் அடுத்தடுத்து மூன்று பெண்களோடு குடும்பம் நடத்தியதில் மூவரும் கடும் மன உளைச்சலில் அவரிடம் இருந்து விலகினர். சமீபத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் திருமண பந்தங்களும் முடிவுக்கு வந்தன. பெரும்பாலான சினிமா கலைஞர்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க மறுப்பவர்கள். சினிமா கலைஞர்கள் சுய ஒழுக்கத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டவர்களாக தங்களை கருதிக் கொள்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட இணையருக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. திரைப்படத் துறையில் இருந்தாலுமே கூட, சுய ஒழுக்கத்தோடு வாழ முடியும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர்களும் உள்ளனர். கே.பி.சுந்தராம்பாள், சின்னப்பதேவர், நடிகர் சிவகுமார்..என சென்ற தலைமுறையினரை சொல்ல முடியும் என்றால், இந்த தலைமுறையில் ஏ.ஆர்.ரகுமான் சுய ஒழுக்கத்தில் கேள்விக்கு அப்பாற்பட்டவராக இருந்துள்ளார் என அவருடன் மிக நெருக்கமாக நீண்ட காலம் பயணித்த சக இசை கலைஞர்களே சொல்கிறார்கள். எனில், இந்த விவாகரத்து ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களின் மொழியிலேயே புரிந்து கொள்வோம். ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் 30 வருடத்தை எட்டி விடுவோம் என்று நம்பினோம். ஆனால், எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தான் இருக்கிறது.உடைந்த மனங்களின் எடையில் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக் கூடும். இருந்தாலும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் சேராமல் போனாலும் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை கடக்கும் போது உங்களுடைய கனிவுக்கும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிப்பதற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் இது பற்றி சாய்ரா பானு தரப்பில் அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரியும் கடினமான முடிவை சாய்ராபானு எடுத்துள்ளார். அவர்கள் உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிபூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தபோதும், இருவருக்கும் இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவானது. மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சவாலான தருணத்தில் அவரின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். ஆக, ரகுமான் தவறான உறவை கொண்டுள்ளார் என்றோ, தன்னை வார்த்தைகளாலோ, பிசிக்கலாகவோ துன்புறுத்தினார் என்றோ அவரது மனைவி கூறவில்லை. இழப்பீடுகளோ, ஜீவனாம்சமோ கேட்கவில்லை. அதே போல ரகுமானும் தன் மனைவி மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. இந்த நிலையில் கோர்ட்டில் விவகாரத்து வழக்கு போடாமல் ஜூடீசியல் செப்பரேசன்’ (judicial seperation) என்ற ஏற்பாட்டின்படி இருவரும் தங்களை பிரித்துக் கொள்கிறார்கள்! இவர்கள் மனம் மாறி, பிறகு இணைவதற்கும் வாய்ப்பு உள்ளது. பிரிவானது இவர்களை சுயபரிசோதனைக்கு தள்ளும் போது இந்த மாற்றம் நிகழலாம். இந்த பிரிவை பொறுத்த வரையில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் ரகுமான் குடும்பத்திற்கு நேரம் தரவில்லை. அவரது பிசியான வேலை பளுவால் மனைவிக்கு கொஞ்சமும் நேரம் தர முடியவில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் குடும்ப விழாக்களுக்கு இருவரும் சேர்ந்து செல்வதோ, ஷாப்பிங் செல்வதோ என்பது இல்லாமல் போகிறது. இதனால் எல்லா உறவுகளுமே அன்னியப்பட்டு சாய்ராபானு சேர்ந்து வாழ்ந்தாலுமே தனிமையில் வாழ்வது போன்ற உணர்வையே அனுபவித்து மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார். அவருக்கு தன் மனதில் ஏற்படுகிற எண்ணங்களை, வலிகளை, சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள வழியில்லாத தகிக்கும் தனிமையே இந்த முடிவுக்கு காரணமாகும். பொதுவாக பெண்கள் உறவுகளோடு பேசிப் பழகி, கலந்து வாழ விரும்புவார்கள். உறவுகள் தரும் சந்தோஷமே அவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கும். அதிலிருந்து அவர்களை துண்டித்துவிட்டால், அவர்கள் துவண்டு போவார்கள். கணவனோடும், அவன் தொடர்பான உறவுகளோடும் கிடைக்கும் பிணைப்பும், பந்தமுமே அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நம்புவார்கள். அவருக்காகவே நான் இருக்கிறேன் எனும் போது அவரும் ஓரளவுக்கேனும் எனக்காகவும் இருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பது இயல்பே! கணவனின் அன்பும், அக்கறையும், அருகமையும் இல்லாமல் ஒரு பெண் மண உறவை தொடர்வது என்பது அவளைப் பொறுத்த வரை ஒரு நரகமேயாகும். ஏ.ஆர்.ரகுமான் சர்வதேச அளவில் பிசியான ஒரு இசை அமைப்பாளர்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு, ஒவ்வொரு பொழுதும் ஒரு பெரிய விஐபியின் சந்திப்பு, இசையறாத இசைப்பணி, இத்துடன் ஒரு சர்வதேச தரத்திலான இசைக்கல்லூரியையும் நிர்வகிக்கிறார். எத்தனை உயரம் சென்றாலும், அவர் மேலும், மேலும் பறக்க நினைக்கிறார். எத்தனை விருதுகள் கிடைத்தாலும், அவர் மேன்மேலும் சாதிக்க ஓய்வின்றி பாடுபடுகிறார். உலகப் பேரழகிகளே ரகுமான் பார்வை தங்கள் மீது படாதா? என ஏங்கிய போதும், அவர் இசைந்து கொடுத்தவர் இல்லை. இத்தனை பெருமைக்குரிய தன் அன்புக் கணவர் பார்வையும், கவனமும் தன் பக்கம் திரும்பாதா? என உடனிருந்து காத்துக் காத்துப் பார்த்து ஏமாற்றமடைந்ததன் விளைவே, அவர் மனைவி எடுத்த முடிவாகும். 29 வருட காத்திருப்பு என்பது மிக நீண்ட காத்திருப்பாகும். ரகுமான் தன்னுடைய இறுதி மூச்சு வரை இப்படித்தான் வாழ்வார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? என அவர் மனைவி வருந்துவதில் யாரும் குறை சொல்ல முடியாது. ரகுமானின் முன்னோடியான இளையராஜாவும் இப்படித்தான் தன் மனைவியை அலட்சியப்படுத்தினார். இதே அனுபவங்களை அவரது மனைவியும் அனுபவித்தார். அதன் விளைவை இளையராஜாவும் சந்திக்க நேர்ந்தது என்றாலும், அவர்களுக்கு இடையே பிரிவு என்பது ஏற்படவில்லை. பொதுத் தளத்தில் அவரவர் துறையில் வரலாற்று நாயகனாக ஒருவர் சாதிக்க துடிப்பதும், அடைந்த புகழை தக்க வைக்க தொடர்ந்து உழைப்பதும் தவறில்லை. ஆனால், யார் ஒருவர் வாழ்வதற்கும் அன்பே அடிப்படை. வாழ்க்கை துணையும், குடும்பமுமே நம்மை வாழ வைக்கும் ஆதார சக்தியாகும். ஆண்களின் உலகம் மிகப் பெரிது. ஆனால், பெண்களின் உலகம் என்பது பெரும்பாலும், கணவனும், பிள்ளைகளுமே! ரகுமான் தன் மனதிற்கு சாந்தியும், அமைதியும் வேண்டி தர்க்காக்களுக்கும், மசூதிகளுக்கும் செல்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டு, தன்னை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டார். ஆனால், அவரது மனைவியோ கணவனின் தரிசனத்திலும், அருகமையிலுமே அந்த மனநிறைவை காணத் துடித்தார். அது ஒருபோதும் கிடைக்க வாய்ப்பில்லை எனும் போது, விரக்தியின் விளிம்புக்கு சென்றுள்ளார். இவ்வளவு மென்மையான கலைஞனால் தன்னை மட்டுமே எண்ணி வாழும் தன் மனைவியின் வலிகளை உணர முடியாதது துரதிர்ஷ்டமே! வாழ்க்கை பல பரிமாணங்களைக் கொண்டது. தொழிலில் கிடைக்கும் வெற்றியும், பணமும், புகழும் மட்டுமே வாழ்க்கையல்ல. இதை ரகுமானைப் போன்றவர்கள் உணர்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படலாம். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/19921/ar-rahuman-wife-divorce/
  2. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல் November 22, 2024 அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் 27 இல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அதற்கு ஆளும் அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழு நடாத்திய ஊடக சந்திப்பில் பணிக்குழுவின் தலைவர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை( குட்டிமணி மாஸ்டர்) ஆகியோர் இணைந்து தெரிவித்தனர். இவ் ஊடகச் சந்திப்பு பாண்டிருப்பிலுள்ள சமூக செயற்பாட்டாளர் இரா.பிரகாசின் இல்லத்தில் அவரது ஏற்பாட்டில் நடைபெற்றது. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நடாத்துவது தொடர்பில். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.. அம்பாறை மாவட்ட மாவீரர்பணிக்குழுவில வந்து நாங்கள் 12 உறுப்பினர்கள் இருக்கின்றோம் .கடந்த காலங்களில் மாவீரர் நினைவேந்தல நிகழ்வுகளை நாங்க சிறப்பாக கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பல தடைகளுக்கு மத்தியில் நடாத்தி வந்தோம். அந்த வேளையில் சில அரசியல்வாதிகள் அழையாமல் வந்து இந்த நிகழ்வை நாங்கள் தான் செய்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து சைக்கிள்காரர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை வந்தடைந்து இதனை செய்வார்கள். கடந்த வருடம் ஒரு நபரை ( பிரபா) வைத்து இந்த மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தலை குழம்பினர். அதனால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. 27ஆம் தேதிநினைவேந்தல் செய்வதற்கு சிரமதானம் செய்து ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கின்றோம். எனவே இந்த அரசியல் கட்சிகள் வந்து பொய்யான அரசியல் பிரச்சாரங்கள் செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும் . உங்களுக்கு தெரியும் இந்த கார்த்திகை மாதம் என்றாலே எங்களுக்கு ஞாபகம் வரும் கார்த்திகை 27 இது எக்காலத்திலும் எத்தனை தலைமுறைகள் வந்து போனாலும் எத்தனை மாதங்கள் நாங்கள் கடந்து சென்றாலும் எங்களது நெஞ்சில் ஆறாத வடுவாக எங்களது உள்ளத்தை போட்டு குடைந்து கொண்டு வருத்திக்கொண்டு எங்களை தினம் தினம் எங்களை வேதனைப்படுத்தி கொண்டு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் விடயம் .எங்களது மாவீரர்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்கள் . எங்களது மண்ணுக்காக தமிழ் இனத்திற்காக உங்களது தமிழ் அது வாழ்வியல் மொழி வழி தேசியம் இருப்பு போன்றவற்றை பாதுகாப்பதற்காக ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள் எங்களது அண்ணனாக தம்பியாக எங்களது சகோதரிகளாக நாங்கள் இழந்திருக்கின்றோம். இந்த மண்ணுக்கு விதையாகி இருக்கின்றார்கள் .ஆகவே இந்த மாவீரர் துயில்கின்ற இடத்தில் மாவீரர் நினைவு நாளான கார்த்திகை 27 அண்மையில் வர இருக்கின்றது. இதனை அம்பாறை மாவட்டத்தில் வழி நடத்துவதற்கும் இதனை சிறப்பாக நடத்துவதற்கும் எங்களது மக்களுக்கு தலைமை தாங்குவதற்கும் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழு தலைவர் செயலாளர் அதாவது நாங்கள் இருக்கின்றோம். கடந்த ஏழு எட்டு வருடங்களாக செய்கிறோம். ஆகவே இந்த மாவீரர் தினமானது ஒவ்வொரு வீடுகளிலும் எங்களது தமிழ் உள்ளங்களிலும் அன்றைய நாள் ஒரு எழுச்சி நாளாக எங்களது உறவுகளுக்கு நாங்கள் ஒரு அனுதாபத்தையோ அஞ்சலியையோ நாங்கள் வீடுகளில் இருந்தாவது செய்ய வேண்டும் . இந்த வருடமும் நாங்கள் அந்த ஏற்பாடுகளை செய்வதற்கு நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் கார்த்திகை 27 அன்று நாங்கள் அந்த புண்ணிய பூமியில் எங்களது தமிழ் இறந்த உறவுகள் எங்களது சரீரத்தின் ஒரு பாகமாக எங்களுக்காக மண்ணில் மடிந்த மாவீரர்களை நாங்கள் நினைவு கூருவதற்கு காத்திருக்கின்றோம். மக்களாக எங்களோடு ஒன்று சேருங்கள். என்றார். https://www.supeedsam.com/210139/
  3. கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம் தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி தரும் துயரச் சம்பவம் கனடாவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மகனைக் கனேடியப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய குலத்துங்கம் மதிசூடி என்பவரே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டவராவார். தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார். அவ்வப்போது இலங்கைக்கு வந்து பலவிதமான சமூக சேவைகளை வடக்கு, கிழக்கில் வழங்கி வந்தவர். வருடமொருமுறை காரைதீவு வந்து செல்கின்றவர். அம்பாறை மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளைச் செய்தவர். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மகன் இளங்கோ காதல் முறிவு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் என்று சொல்லப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கின்றார் என்று அவரது சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார். உடனடியாகக் கனடா பொலிஸார் அவரைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன. கனேடிய ஊடகங்கள் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன. https://oruvan.com/sri-lanka/2024/11/22/brutal-incident-in-canada-son-stabs-father-to-death-with-knife
  4. ‘எங்கள் அப்பாவின் கண்ணியத்தை சிதைக்காதீர்கள்!’: ஏ.ஆர். ரஹ்மானின் மகன் காட்டம்! Kumaresan MNov 22, 2024 17:32PM பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தனது மனைவி சாயிரா பானுவை பிரிந்தார். இதையடுத்து, சோசியல் மீடியாவில் மோகினி தே என்ற கிட்டாரிஸ்ட்டுடன் ரஹ்மானுக்கு தொடர்பு இருப்பதாக வதந்தி கிளம்பியது. இந்த தகவலை சாயிரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா மறுத்திருந்தார். இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, ‘எனது தந்தை ஒரு லெஜன்ட். இசையில் மட்டுமல்ல மதிப்பு, மரியாதை, அன்பை செலுத்துவதிலும் அவர் லெஜண்ட். அவரை பற்றி தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்க்கும் போது வருத்தமளிக்கிறது. ஒருவரின் வாழ்க்கை மற்றும் மரபு பற்றி பேசும் போது நாம் அனைவரும் உண்மை மற்றும் மரியாதையின் முக்கியத்துவத்தை நினைவில் கொள்ள வேண்டும். தயவு செய்து இதுபோன்ற தவறான தகவல்களை எழுதுவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்கவும். அவருடைய கண்ணியத்தையும், அவர் நம் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தையும் பாதுகாப்போம்’ என்று கூறியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் மகள் ரஹீமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , ‘எப்போதும் நினைவு கொள்ளுங்கள். வதந்தி வெறுப்பை பரப்புபவர்களால் உருவாக்கப்படுகிறது. அறிவில்லாதவர்களால் பரப்பப்படுகிறது. முட்டாள்களால் நம்பப்படுகிறது ‘என்று தெரிவித்துள்ளார். மற்றோரு பதிவில் ரஹீமா, ‘நீங்கள்தான் எப்போதும் எங்களுக்கு ராஜா. நீங்கள்தான் எங்களுக்கு எப்போதும் தலைவர். வெறுப்பவர்கள் வெறுக்கட்டும்’ என்று கூறியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானும் அவரின் மனைவி சாயிரா பானுவும் 29 ஆண்டு கால மண வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் ஒரு மகன் உண்டு. அனைவருமே இசைத்துறையில்தான் உள்ளனர். https://minnambalam.com/cinema/lets-honour-his-dignity-ar-rahmans-son/
  5. அஞ்ஞாத வாசத்தில் அர்ஜுனன் ஆடல் கற்பிக்கும் அழகி பிருகந்நளையாக உருமறைப்புடன் வருவதுபோல வந்தால் கவலை எல்லாம் பஞ்சாகப் பறந்துவிடும்😁
  6. அரசியல் ஆய்வாளர் இல்லை! ஆனால் கருத்துக்கணிப்பு தரவுகள் தடைசெய்யப்பட்டமையால் தரவுப் பஞ்சம் வந்து மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பதை மறைத்துவிட்டது! கற்கவேண்டிய பாடங்கள்: தமிழர்களின் எண்ணவோட்டத்தை கண்டுபிடிக்க முயலக்கூடாது புலம்பெயர் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் வெவ்வேறான அரசியல் எதிர்பார்ப்புக்களுடன் இருப்பவர்கள் தேசியம் என்பது ஓர் கற்பிதம்! “வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் கோஷத்திற்கும் அநுரவின் எளிமையான தோற்றமயக்கத்திற்கும் பலர் மயங்கிவிட்டனர் யாழ்ப்பாணத்தில் பனி பைத்தியரின் கோமாளிக்கூத்தை இரசிப்பவர்கள் 10 வீதமாக வளர்ந்துவிட்டனர்! நுவரெலியாவில் தொண்டமானின் இ.தொ.காவின் வீரியம் இறங்கிவிட்டது! இன்னும் பல!
  7. அஞ்சு வரியத்தில் அஞ்ஞாத வாசம் முடிய இன்னும் பெருகும்😍
  8. பாராட்டுக்கள் @நிலாமதி அக்கா! எல்லாம் குருட்டுவாக்கில வெல்வதுதானே!😂 நம்ம தங்கத்தின் பனி பைத்தியர் பாராளுமன்றம் போனதும், தேசிய மக்கள் சக்தி யாழில் முதலாவதாக வந்ததுமான அதிசயங்கள் நடக்கும்போது நாம கீழே இருப்பதுதான் சிறப்பு😜
  9. ஏ.ஆர். ரஹ்மான் குழு கிட்டாரிஸ்ட் மோகினி தே கணவரை பிரிந்தார்! Kumaresan MNov 20, 2024 15:23PM ஏ.ஆர். ரஹ்மான் விவகாரத்து அறிவித்த சில மணி நேரங்களில் அவரின் கிட்டாரிஸ்ட் மோகினி தேவும் கணவரை விவகாரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மனைவி சாயிரா பானு ஆகியோர் பிரிந்து செல்வதாக நேற்று இரவு அறிவித்தனர். 29 ஆண்டு கால இல் வாழ்க்கைக்கு பிறகு, இந்த தம்பதி இத்தகைய முடிவு எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்குழுவில் கிட்டாரிஸ்டாக உள்ள மோகினி தேவும் தன் கணவரும் கம்போசருமான மார்க் ஹார்ட்சர்ச்சை பிரிவதாக இன்ஸடாகிராமில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘ நானும் மார்க்கும் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம். இனிமேலும், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கப் போகிறோம். தொடர்ந்து, மாமோஜி, மோகினி தே குழுக்களில் இருவரும் தொடர்ந்து பணியாற்றுவோம் . எங்கள் முடிவை மதிக்கவும். நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். தந்தை இசைக்குழுவில் பணியாற்றியதால், மோகினிக்கு இயல்பாகவே இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. 10 வயதில் இருந்து கிட்டார் வாசிக்க தொடங்கினார். தற்போது 29 வயதான மோகினி தே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து உலகம் முழுக்க 40 இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்த இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது முதல் இசை ஆல்பத்தையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்த சில மணி நேரங்களில் மோகினி கணவரை பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. https://minnambalam.com/cinema/bassist-mohini-dey-announces-separation-from-husband/
  10. மட்டக்களப்பின் தேர்தல் முடிவுகளில் கற்றுக் கொண்ட பாடம் என்ன? November 20, 2024 — கலாநிதி சு.சிவரெத்தினம் — நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் என்பார்கள், பொருளாதார நெருக்கடியும், வரிசைக்(queue) காலமும் இடம்பெற்றதும் நன்மையாகத்தான் முடிந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பாரம்பரியமாக ஆட்சி செய்து வந்த உயர்வர்க்க ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்பட்டு சாதாரண உழைக்கும் வர்க்கத்திலிருந்து பல கஸ்ரங்களை அனுபவித்த ஒருவர் ஜனாதிபதியானதும். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுநிதியையும் அதிகாரத்தையும் எவ்வாறு துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார்கள் என்பதை புதிய ஜனாதிபதியும் அவருடைய அரசும் வெளிக்காட்டியதும் மக்களை முன்னைய ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தி தேசிய மக்கள் சக்தியினர் மீது விருப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த உதவியது. இதனுடைய பெறுபேற்றினை மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் வெளிக்காட்டியுள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர்ந்த மற்ற மாவட்டங்களில் எல்லாம் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி பெரு வெற்றியை ஈட்டியுள்ளது. இதுவரை எந்தவொரு கட்சியும் பெறமுடியாத சாதனையையும் நிலைநாட்டியுள்ளது. ஆனால் மட்டக்களப்பில் மட்டும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற முடியாமல் போனதும் கிழக்கின் தனித்துவக் கட்சி என்று தங்களைக் கூறிக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தோற்கடிக்கப்பட்டதும், மட்டக்களப்பில் தழிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றதுக்குமான காரணங்கள் பக்கச் சார்பின்றி மதிப்பீடு செய்யப்பட வேண்டியவையாகும். இவ்வாறானதொரு மதிப்பீடு அரசியல் நாட்டம் கொண்டவர்களுக்குப் பயனுள்ளதாக அமையாலாம். முதலில் தேசிய மக்கள் சக்தி ஏன் மட்டக்களப்பில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறமுடியாமல் போனமைக்கான காரணங்களை நோக்குவோமாக இருந்தால், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் மட்டக்களப்பு அரசியல் சூழலை சரியாகக் கணிக்கத் தவறியிருந்தனர். இது தொடர்பாக மட்டக்களப்பில் அரசியலில் அனுபவமுள்ள பலர் அதன் பொறுப்பாளர்களுக்கு எடுத்துக் கூறிய போதும் அது அவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. சமூக அக்கறை கொண்ட சிலர் இவ்வாறுதான் நடக்கும் என்பதை முன்னமே கணித்து அதனை கொழும்புவரைச் சென்று தேசிய மக்கள் சக்கதியின் தலைமைக் காரியாலையத்தில் தெரியப்படுத்திய போதும் கூட அவர்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டார்களே தவிர மட்டக்களப்புப் பிரதிநிதிகளின் கணிப்பீட்டை மதித்து சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருந்தனர். வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் முன்பு மட்டக்களப்பின் பல்வேறுபட்ட சமூகக் குழுக்களுடன் ஒரு கலந்துரையாடலைச் செய்து வெளிப்படைத் தன்மையுடன் வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும்படி முன்வைத்த கோரிக்கை கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் கட்சி உறுப்பினர்களுக்கே வேட்பாளர் நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் முடிவு எனக் கூறிக் கொண்டு ஒரு சில தனிநபர்களின் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டே வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆயினும் ஏற்கனவே வேறு கட்சியில் வேட்பாளராக நின்று தோற்றவருக்கும் வேறு கட்சியில் உள்ளூராட்சி தேர்தலில் நின்று போட்டியிட்டு உள்ளூராட்சி சபை உறுப்பினராக இருந்தவருக்கும் வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளராக இருப்பவர் பெறும் வாக்கை விட கூடுதலான வாக்குகளைப் பெறக்கூடிய நபர்களை வேட்பாளராக நியமிக்க குறிப்பிட்ட தலைமை வேட்பாளர் விரும்பியிருக்கவில்லை. அதற்கேற்றாற்போல்த்தான் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட அந்த வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள வேட்பாளர்கள் மட்டக்களப்பு மக்களின் மனங்களை வெல்லக் கூடியவர்களாகவும் இருக்கவில்லை. வேட்பாளர் நியமனத்துக்குப் பின்பு வேட்பாளர்களை நோக்கி முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பொறுப்பான விதத்தில் பதில்களை வழங்கி வாக்காளர்களைக் கவருவதற்குப் பதிலாக அந்தக் கேள்விகள் தங்களை தோற்கடிக்கப்படுவதற்காக முன்வைக்கப்படுபவையாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. அந்தக் கேள்விகள், விமர்சனங்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பதிலளிக்காமல் வேட்பாளர்களின் ஆதரவாளர்களே பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார்கள். இது மாற்றரசியல் தொடர்பாக ஆர்வம் கொண்டவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. இதனால் ஆரோக்கியமான அரசியல் உரையாடலொன்று மக்கள் மத்தியில் நடாத்தப்படவில்லை. ஜனாதிபதியின் எளிமையும், அவரது ஊழல் ஒழிப்பு, நீதி நிர்வாகத்தில் அரசியல் தலையீடற்ற தன்மை, மக்களுக்கான அரசு, அனைவரும் இலங்கையர் போன்ற அவரது நடத்தைகளுமே மட்டக்களப்பு வேட்பாளர்களின் அரசியல் முதலீடுகளாக இருந்தன. இந்த முதலீடு தேசியளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தபோதிலும் யுத்தத்தினாலும் பல்வேறு அரசியல் பிரச்சினைகளாலும் சமூகப் பொருளாதார ரீதியாக வலுவற்றிருந்த மட்டக்களப்புக்குப் போதுமானவையாக இருக்கவில்லை. குறிப்பாக ஜனாதிபதியின் அனைவரும் இலங்கையர் என்ற கோசம் கூறுவதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருந்தபோதும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இன்னும் அன்னியோன்னியமான உறவு கட்டியெழுப்பப்படவில்லை. கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட முறையும் தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்கள் விடயத்தில் நடந்துகொண்ட முறையும் இரு இனங்களுக்கும் இடையில் இன்னும் வலுவான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. இதனால் முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்திருக்கின்ற வேட்பாளர் பட்டியலை தமிழர்கள் நிராகரிக்கின்றனர். தங்களுடைய பொல்லைக் கொடுத்து தாங்கள் அடிவாங்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதற்குச் சிறந்த உதாரணம் ஜனாதிபதித் தேர்தலில் 139110 வாக்குகளைப் பெற்ற ரெலிபோன் சின்னம் பாராளுமன்றத் தேர்தலில் 22570 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்திருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி பெற்ற 55498 வாக்குகளில் அதிகூடிய விருப்புவாக்குகளாக 14856 வாக்குகள் மாத்திரமே உள்ளன. இந்தப் பிரதிநிதியே மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் குறைந்தளவான விருப்புவாக்குகளைப் பெற்ற பிரதிநிதியுமாவார். இதற்குக் காரணம் மக்களை அரசியல், சமூகப் பொருளாதார ரீதியாக திருப்திப்படுத்தக் கூடிய எந்தவொரு செயல்திட்டத்தையும் முன்மொழிந்து அதனை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறக்கூடிய அரசியல் ஆளுமையற்ற செயல்திறனுமற்ற வேட்பாளர்களாகவே அவர்கள் காணப்பட்டனர். ஊசலாடிக் கொண்டிருக்கின்ற வாக்குகளை தம்பக்கம் திருப்பி அவற்றை தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளாக மாற்றக்கூடிய வல்லமையும் வேட்பாளர்களிடம் இருக்கவில்லை. அத்தோடு வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் காணப்பட்ட சுயநலத் தன்மை காரணமாக இவர்களும் எல்லா அரசியல் கட்சிகளையும் போல கட்சியை மக்களுக்காக அன்றி தங்களுக்கானதாக பயன்படுத்துபவர்கள் என்கின்ற எண்ணமும் உருவாகியிருந்தது. ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின்பால் மக்களுக்கு இருந்த நாட்டமும் விருப்பமும் மேற்படி காரணங்களால் மெதுமெதுவாக குறைய ஆரம்பித்தது. தேசிய மக்கள் சக்திக்குத்தான் தமது வாக்கையளிப்போம் என இருந்த பலர் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் வேறு தெரிவின்றி தமிழரசுக் கட்சி என்னதான் சீர்கெட்டுப் போனாலும் இருக்கின்ற கட்சிக்குள் இது பரவாயில்லை தமிழரசுக் கட்சிக்கே அளிப்போம் என்ற முடிவுக்கு வந்தனர். இதன் காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு அளிக்கப்பட இருந்த வாக்குகள் தமிழரசுக் கட்சிக்குச் சென்று சேர்ந்தன. இதனாலேயே தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பில் பெரும்பான்மை ஆசனங்களை பெற முடியாமல் போனதாகும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தோல்வி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைப் பொறுத்தளவில் அவர்கள் கடந்த தேர்தலில் வெற்றியடைந்தது அவர்களின் கட்சிக் கொள்கையினால் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வறட்டுவாதக் கொள்கையினால் தமிழ் பிரதேசங்கள் அவற்றின் பௌதீக உட்கட்டமைப்பிலும் சமூகப் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் எதுவுமின்றி இருக்க, தமிழ் பிரதேசங்களுக்கு அருகாமையில் இருந்த முஸ்லிம் பிரதேசங்கள் சமூகப் பொருளாதாரத்திலும் பௌதீக உட்கட்டமைப்பிலும் முன்னேற்றமடைந்தவைகளாகக் காணப்பட்டன. இதற்குக் காரணம் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் யதார்த்தரீதியாக அரசியலை முன்னெடுத்தமையினாலாகும். அவ்வாறு யதார்த்த ரீதியாக அரசியலை முன்னெடுக்கக் கூடியவராக அன்றைய சூழலில் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களே காணப்பட்டார். அவரை வெற்றியடைய வைத்தால் மகிந்தராஜபக்ச சகோதரர்களுடன் அவருக்கு இருந்த தனிப்பட்ட தொடர்புகளினாலும் செல்வாக்கினாலும் மட்டக்களப்பில் மட்டக்களப்பு மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை அடையலாம் என மக்கள் எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் அவர் கிழக்குமாகாண முதலமைச்சராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் காணப்பட்டன. அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமையாக இதுவரைகாலமும் செயற்பட்டு வந்த முஸ்லிம் அரசியல் அராஜகத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆர்வமும் மட்டக்களப்புத் தமிழ் மத்தியதர வர்க்கத்தினரிடம் காணப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காணப்பட்ட யாழ் மேலாதிக்கமும் மட்டக்களப்பின் சமூகநிலைக்கேற்ற அரசியல் நடடிவடிக்கைகளை திட்டமிட்டு செயற்படுத்த முடியாத கையாலாகாத் தனமும் கடந்த முறை மட்டக்களப்பு வாக்காளரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாக்களிக்கத் தூண்டிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. மேலும், கடந்தமுறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அகில இலங்கைத் தமிழர் மகாசபை கட்சியினருடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வின் காரணமாக இரு வேட்பாளர்கள் அகில இலங்கைத் தமிழர் மகாபையின் சார்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரின் வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டதனால் அகில இலங்கைத் தமிழர் மகாசபையினரின் பிரச்சாரமும் அவர்கள் நியமித்த வேட்பாளர்களின் செல்வாக்கும் கணிசமான வாக்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குப் பெற்றுக் கொடுத்தன. இதை விட அக்கட்சியினால் முன்னிறுத்தப்பட்ட பிரபல்யமான பெண்சட்டத்தரணி, வர்த்தகப் பாட ஆசிரியர், பிரபல்யமான வைத்திய நிபுணர் என்போரும் கணிசமான வாக்குகளை கட்சிக்குப் பெற்றுக் கொடுத்தனர். இந்த வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் விருப்புவாக்கோடு சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் ஒரு விருப்பு வாக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர், சிறையில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் மேல் கொண்டிருந்த அனுதாபம் காரணமாக வாக்காளர்கள் அவருக்கான விருப்பு வாக்கையும் அளித்து அவரை வெற்றிகொள்ளவைத்தனர். இந்தமுறை பாராளுமன்றத் தேர்தலில் மேற்படி காரணங்கள் இல்லாமல் போயின. இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வேட்பாளர் பட்டியல் அவர்களுடைய கட்சி உறுப்பினர்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டிருந்தது. அவ்வுறுப்பினர்கள் சென்றமுறை போன்று மட்டக்களப்பு வாக்காளர்களுக்கு அறிமுகமானவர்களாக இருக்கவில்லை. அக்கட்சியில் அறிமுகமான வேட்பாளர்கள் என்றால் அக் கட்சியின் தலைவரும் செயலாளருமேயாகும். மேலும், கடந்த முறை சி.சந்திகாந்தன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்ட்ட பின் தனக்காக வாக்குச் சேகரித்த ஏனைய வேட்பாளர்களை புறந்தள்ளியமை, ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலில் சந்திரகாந்தன் அவர்களுக்கு இருந்த தொடர்பு பற்றி அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான அசாத் மௌலான வழங்கிய வாக்கு மூலம், அபிவிருத்தி வேலைகளில் இடம்பெறுகின்ற நிதி மோசடி தொடர்பாக கொந்துராத்துக்காரர்களின் கிசுகிசுப்புக்கள் நேர்மையான நிர்வாக அதிகாரிகளின் நிர்வாகத்தில் தேவையற்ற அரசியல் தலையீடுகள், கால்நடை வளர்ப்போரின் மேச்சல்தரைப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத கையாலாகாத் தனம் போன்றன சி.சந்திகாந்தன் மேல் கொண்டிருந்த நம்பிக்கையினை இல்லாமலாக்கின. அத்தோடு மத்தியில் இருக்கின்ற அரசோடு இணையக்கூடிய எவ்வித வாய்ப்பும் அற்றவராகவே காணப்பட்டார். இதனால் இவருக்கு வாக்களிப்பதென்பது விழலுக்கிறைத்த நீர் போன்றதாகும் என நினைத்து சி.சந்திரகாந்தன் அவர்கள் புறமொதுக்கப்பட்டார். இந்தப் புறமொதுக்கத்தின் விளைவினால் உருவான வாக்குகளையும் பெற்றுக் கொள்ளும் கட்சியாக தமிழரசுக் கட்சியே இருந்தது. எனவே பலரும் குறிப்பிடுவது போல் மட்டக்களப்பு தமிழ்த் தேசியத்தை உள்ளார்ந்து உணர்ந்து அதனைப் பாதுகாத்தது என்பது மிகவும் மெருகூட்டப்பட்ட ஒரு கதையாடலாகும். தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றதென்பது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்திலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலும் காணப்பட்ட பலவீனங்களால் நடந்த ஒன்றாகும். தமிழரசுக் கட்சி 33.8 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருக்கின்றார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லதாகும். https://arangamnews.com/?p=11456
  11. இலங்கை, இந்திய மீனவர் விவகாரம் - ஆரம்பத்திலேயே நேரடி தலையீடுகள் இல்லை - சந்திரசேகரன் இலங்கை, இந்திய மீனவர் விவகாரத்தை சுமுகமாக தீர்க்கவே சமகால அரசாங்கம் விரும்புகிறது. அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெறும் பேச்சுகளில் இணக்கப்பாட்டுக்கு வரமுடியும் என எதிர்பார்க்கிறோம். அதனால் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தின் உயர்மட்ட நேரடி தலையீடுகள் இந்த விடயத்தில் இருக்காது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இலங்கை கடல்வளத்தையும், மீன்வளத்தை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் உறுதியாக எடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்திய, இலங்கை மீனவர்கள் விவகாரத்தில் சமகால அரசாங்கத்தின் ஆரம்பகட்ட நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என 'ஒருவன்' பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, இந்திய, இலங்கை மீனவர்களின் விவகாரம் எதிர்காலத்தில் சுமுகமாக தீர்க்கப்படும். சமகால அரசாங்கம் ஆரம்பத்திலேயே நேரடியாக உயர்மட்ட கலந்துரையாடல்களை இந்த விடயத்தில் மேற்கொள்ளப் போவதில்லை. இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் தற்போது பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுகளே சரியானதாக இருக்கும். அதனை சமகால அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அந்தப் பேச்சுளின் ஊடாக எதிர்காலத்தில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும். டிசம்பர் நடுப்பகுதியில் இடம்பெறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் இந்த விடயம் தொடர்பில் அதிக முக்கியம் கொடுக்கப்படாது. பொருளாதாரம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்தே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், இந்த விடயம் தொடர்பில் சாதாரண பேச்சுகள் இடம்பெறும். எவ்வாறாயினும் எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. எமக்குச் சொந்தமான கடற்பரப்பில் அத்துமீறும் செயல்பாட்டை நாம் எதிர்க்கிறோம். இந்திய அரசாங்கத்தின் சட்டங்களையும் மீறிதான் இந்திய மீனவர்கள் எமது கடல்பரப்பில் மீன்பிடிக்கின்றனர் இந்தியாவின் சட்டம், தமிழ்நாட்டின் சட்டம் என்பன ரோலர் அல்லது இழுவை படகு மீன்பிடியை எதிர்க்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள பல மீனவச் சங்கங்களும் இழுவைப் படகு மீன்பிடியை எதிர்க்கின்றன. கட்டாயம் அதனை நிறுத்த வேண்டும். இந்தச் செயல்பாடு தொடர்ந்தால் இந்திய மீனவர்களுக்குக் கூட மீன்பிடிக்க முடியாத நிலைமை ஏற்படலாம். இந்த நிலைமையை கடந்த கால அரசாங்கங்கள் எந்தளவு தெளிவுபடுத்தினார்கள் எனத் தெரியவில்லை. இலங்கையின் மீன்வளம் மற்றும் கடல் வளத்தை முழுமையாக பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும்.” என்றார். https://oruvan.com/sri-lanka/2024/11/21/sri-lanka-indian-fishermen-issue-no-direct-interventions-at-the-beginning-chandrasekaran-jvp
  12. 2024 பாரளுமன்ற தேர்தல் முடிவுகள்; தேசிய மக்கள் கட்சியும் தமிழ் மக்களும் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் எமது பாடசலை காலங்களில், இளைஞர்கள் யுவதிகள் ஒருவரை ஒருவர் காதலிப்பதும், பின்னர் பிரிவில் முடிந்ததும், அதிகமாக தமது காதல் கடிதங்களில் எழுதும் சினிமாப்படல் என்பது, 1962ம் ஆண்டில் வெளியான “நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில்” வெளியான ஓர் பாடல். இப்பாடலை விரும்பியவர்கள் முழுதாக கேட்டால் இன்னும் பல சிந்தனைகளுடன் இன்றைய தமிழ் அரசியலில், விசேடமாக கடந்த வெள்ளிக்கிழமை 15ம் திகதி வெளியான இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடியும். தமிழ் வைத்தியம் என சொல்லப்படும், ஆயுள்வேத வைத்தியத்தின் மருந்துகள் மிகவும் கசப்பும் கைப்பும் நிறைந்தவை. இந்த அடிப்படையில், அந்த மருந்தை கொடுக்கும் வைத்தியர் இந்த மருந்துக்களை தேனுடன் சேர்த்து உண்ணுங்கள் என்பார். இந்த அடிப்படையில், இந்த பாடலில் சில வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை;……எங்கே வாழ்க்கை தொடங்கும்… அது எங்கே எவ்விதம் முடியும், இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது”. இப்பொழுது எமது தமிழ் அரசியலின் காதலிற்கும் பிரிவிற்கும் வருவோம். வடக்கு, கிழக்கு தமிழர்களது தாயகபூமி என்ற இலங்கைத் தீவின் சரித்திரத்திற்கு 1948ம் ஆண்டுவரை இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களான போர்த்துக்கீசர்கள், ஒல்லாந்தர்கள், பிரித்தானியர்கள் சாட்சியாக உள்ளார்கள். இந்த நிலையில் எமது தமிழ் அரசியல் என்பது, இன்று தலைகீழாக வருவதற்கு வழிவகுத்தவர்கள் யார் என்பதை திமிர்பிடித்த சில குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகள் மக்களிற்கு பதில் சொல்வதற்கு காலம் பிந்தியுள்ளது. காரணம், மக்கள் ஏற்கனவே தமது பாதைகளை தேடியுள்ளார்கள் என்பதை தமிழர் பிரதேசங்களின் கோட்டையாக விளங்கிய யாழ்.மாவட்டத்தின் தேர்தல் முடிவு நன்றாக விளக்கியிருக்கிறது. இதற்கு ஆய்வாளர் எனும் பெயரில் உலாவரும் ஆய்வாளர்கள், இந்த தோல்விக்கான காரணங்களை தமது விதண்டாவாத கருத்துக்களின் அடிப்படையில் ஆய்வு செய்வது, “வீழ்ந்தாலும் மீசையில் மண் படவில்லை” என்பதற்கு ஒப்பானது. முதற்கண் தமிழரின் தாயக பூமியின் தலைநகரான திருகோணமலை மற்றும் கிழக்கு பறிபோயுள்ளது என்று எண்ணுபவர்களிற்கு, “இல்லை” அது நீற்றுப் போன தணலாக இருந்தது என்பதை நிரூபித்த – திருகோணமலை, மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் வெற்றி பெற்று “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து” நில்லடா என்று பெருமையை கூறவைத்த, மதிப்பிற்குரிய வெற்றி பெற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதேவேளை, உங்கள் வெற்றி என்பது, உங்கள் பிரதேசங்கள், எதிர்காலத்தில் சிங்கள பௌத்த பிரதேசங்களாக மேலும் விரைவாக மாற்றுவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதையும், உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். ஆகையால் உங்கள் வழமையான கண்காணிப்பு உங்கள் பிரதேசங்களில் மிக மிக அவசியம். அரசியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் அடுத்து யாழ்.மாவட்டத்தில் – தேசிய மக்கள் சக்தியில் மூவரும், தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகளிலிருந்து ஒவ்வொருவருமாக ஆறு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். யாழ்.மாவட்டத்தில், தமிழரசு கட்சியின் மானத்தை காப்பாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.தோல்வியடைந்த சுமந்திரனால் தேர்தல் காலங்களில் தொடர்ந்து கூறப்பட்டு வந்த, “தமிழரசு கட்சியிலிருப்பவர்கள், யாராவது மதுபான (பார்) அனுமதி பெற்றிருந்தால், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பின்னரும் தண்டிக்கப்படுவார்கள்” என கூறியதன் அடிப்படை சூழ்ச்சியை சிறிதரனின் வெற்றியை மறுதலிக்கும் திட்டம் என்பதை தமிழரசு கட்சியில் விசேடமாக சிவஞானம் உட்பட மற்றைய உறுப்பினர்களும் தமிழ் மக்களும் இப்பொழுது நன்றாக புரிந்து கொள்வார்களென நம்புகிறோம்.இதேவேளை மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார், வைத்தியர் இராமநாதன் அச்சுதன் ஆகியோரும் யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கு சில விடயங்களை நாம் ஆராய கடமைப்பட்டுள்ளோம். முதலாவதாக யாழ்.மாவட்டத்தில் மூன்று இடங்களை பெற்று கொண்ட ஜே.வி.பி அல்லது தேசிய மக்கள் சக்தியில் வென்றவர்கள் யாவரும் தமிழர்களே. அடுத்து ஒட்டுமொத்தமாக, யாழ்.மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களை நாம் பார்க்கும் பொழுது, அங்கு தெரிவான ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள், அரசியல் முதிர்ச்சியும் தகமையும் அனுபமும் கொண்டவர்களாக காணப்படுவது, முன்பு தமிழரசில், தமிழ் காங்கிரசில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை நினைவுபடுத்துகிறது. யாழ்.மாவட்டத்தில் தேர்தலில் எல்லாமாக 396 வேட்பாளர்கள் போட்டி போட்டிருந்தாலும், யாவரும் தமிழர்களாக காணப்பட்ட பொழுதிலும், இதில் ஒரு சிலர் “தெற்கிற்கு தலையையும், வடக்கிற்கு வாலையும” காட்டி வேலை செய்து, தமிழ்த் தேசியம், நாளுக்கு நாள் மறைந்து போவதற்கு சிறு சிறுதாக வித்திட்ட காரணத்தினால், இவர்கள் நிச்சயம் தமிழர் அரசியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதில் பலர் இவர்கள் தோல்விக்கு முன்னின்று உழைத்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கு தெரிவான ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில், இருவர் தவிர்ந்த மற்றைய நால்வர்களில், வைத்தியர் அர்ச்சுணா கடந்த சில மாதங்களாக சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்துள்ள தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வந்த காரணங்களினால் மக்களிற்கு ஓரளவு தெரிவதை தவிர, மற்றைய தேசிய மக்கள் சக்தியில் தெரிவான மூவரையும், மக்கள் அறவே அறிந்திராத புதியவர்கள். ஆகையால் இவர்களை மக்கள் ஆதரித்தார்கள் என்பதற்கு மேலாக, தேசிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரித்தார்கள் என்பதே உண்மை. வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி ஆகையால் யாழ்.மாவட்டம் மட்டுமல்லாது, பொதுவாக வடக்கு, கிழக்கில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தேசிய மக்கள் கட்சியினர், கடந்த காலங்களில், தமிழ் தேசியத்திற்கு இவர்கள் எதிராக செய்யப்பட்ட விடயங்களிற்கான விளக்கங்களையும், அவற்றை நிவர்த்தி செய்யும் வழிகளில் இவர்களது செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்பது இங்கு குறிப்பிடதக்கது. உதாரணமாக; 1) 2002ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளுக்கும் அரசிற்குமான பேச்சுவார்த்தையை இவர்கள் எதிர்த்ததுடன், கண்டிவரை ஊர்வலம் சென்றார்கள் 2) 2005ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளிற்கும் அரசிற்கும் இடையில் கைச்சாத்தான சுனாமி மனிதாபிமான கட்டமைப்பை இவர்கள் எதிர்த்தார்கள். 3) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தை தொடருமாறு இவர்கள் வற்புறுத்தியது மட்டுமல்லாமல், தெற்கில் உள்ள இளைஞர்கள் இராணுவத்தில் இணைவதற்கு மறுத்த காலப்பகுதியில் ஜே.வி.பி.தெற்கின் கிராமப்பகுதி இளைஞர்கள், யுவதிகளை, விசேடமாக பதினெட்டு வயதிற்கு குறைவானவர்களை இராணுவத்தில் இணைத்ததுடன், யுத்த நிறுத்தத்திறகும் சமாதான முயற்சிகளிற்கும் இவர்கள் தடையாக நின்றார்கள் 4) 2006ம் ஆண்டு நீதிமன்றம் மூலம் வடக்கு – கிழக்கை பிரித்தார்கள். 5) முள்ளிவாய்க்காலில் எந்தவிதமான மனிதாபிமான உதவிகளையோ அல்லது அவர்கள் மீது ராஜபக்ச அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்காகவோ, எந்தவித அனுதாபமும் காட்டாது கண்மூடித்தனமாக இருந்தவர்கள் இவர்கள். 6) இன அழிப்பிற்கு காரணமான போர்க்குற்றவாளிகள் விடயத்தில் இவர்கள் அவர்களை தாம் தண்டிக்கமட்டோம் என்ற நிலைப்பாட்டை ஏற்கனவே எடுத்துள்ளனர்.தேசிய மக்கள் சக்தி நிச்சயம் சர்வதேச ரீதியாக பல சிக்கல்கள், கஸ்டங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை இவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இன்று தேசிய மக்கள் சக்திக்கு தமிழர் பிரதேசங்களில் வாக்களித்துள்ள பெரும்பான்மையானோர் தமது உறவினர்கள், நண்பர்கள், போன்று ஆயிரக்கணக்கானோரை முள்ளிவாய்க்காலில் மட்டுமல்லாது, அதற்கு முன்பும் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர் என்பதை இவர்கள் உணர்ந்து அவற்றிற்கு நீதி காண்பதற்கு முன்வர வேண்டும். விசேடமாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளிற்காக என்ன செய்வார்கள் என்பதை தேசிய மக்கள் சக்தியினர் மேடை பேச்சில் மட்டும் கூறுவதை தவிர்த்து செயலில் செய்ய வேண்டும். இன்று இவர்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள நிலையில், எந்தவித தங்கு தடையுமின்றி செய்கையில் இவர்கள் செய்ய முடியும்.இதை தவிர்த்து, தமிழர் பிரதேசத்தில் “தோழர் தோழர்” என்று இவர்கள் கூறுவது அல்ல, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு. இதேவேளை, இன்று வடக்கு, கிழக்கில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி மட்டுமல்லாது, திமிர் கொண்ட சில அரசியல்வாதிகளும், சில விடயங்களை உணர வேண்டும். அன்று 2009ம் ஆண்டில், போர் முடிந்த காலப்பகுதியில், பிறந்த குழந்தைகளிற்கு இன்று பதினைந்து, பதினாறு வயது. இதேவேளை அன்று ஐந்திலிருந்து பத்து வரை காணப்பட்ட சிறுவர்களிற்கு, இன்று இருபது, இருபத்தைந்து வயது. இந்த நிலையில் திமிர் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் அரசியல் என்ன என்பதை மறந்து, கட்சிகளின் முக்கியத்துவத்தை மறந்து, இவர்கள் யாரும் தமிழ் இளைஞர்களிற்கு ஒழுக்கமான அரசியலை கற்பித்தது கிடையாது. தமிழ் அரசியல்வாதிகள் இளைஞர்களிற்கு கற்பித்தவை யாவும் – எப்படியாக ஐக்கியத்தை உடைக்கலாம், எப்படியாக கட்சியை பிரிக்கலாம், எப்படியாக மற்றவர்களிற்கு சேறு பூசலாம் , எப்படியாக கட்சியை தமதாக்கலாம், மற்றைய தமிழர்களுடன் இணைந்தால் தமது வளர்ச்சி எப்படியாக பாதிக்கப்படும் போன்ற விடயங்களையே.இதனால் இந்த இளைய தலைமுறை, இவர்களிற்கு காலம் கொடுத்தும் இவர்கள் திருந்தாத காரணத்தினால், இளைஞர்கள் திமிர் கொண்ட தமிழ் அரசியல்வாதிகளிற்கு இன்று பாடம் கற்பித்துள்ளார்கள். இதேவேளை, தேசிய மக்கள் சக்தியும் சில விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும். 1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பும் அன்றைய அரசின் நடவடிக்கைகளுமே, தமிழ் மக்களிற்கான ஏமாற்றத்திற்கு வித்திட்டதுடன், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக, தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வை ஆயுத போராட்டம் மூலமே பெற்று கொள்ளலாம் என்ற முடிவிற்கு வர காரணமாக இருந்தது.தொடர்ச்சியான முப்பது ஆண்டு கால ஆயுத போராட்டம் மூலம், தமிழீழ விடுதலை புலிகள் வடக்கு, கிழக்கின் மூன்றில் இரண்டு பிரதேசங்களில், ஓர் நடைமுறை அரசை நிறுவினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவுடன் நடைபெறாதது ஓர் துர்ப்பாக்கியம். ஆகையால், தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் யாப்பு என்பது, வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தாது நடைமுறைப்படுத்தப்படுமானால், இன்று உங்களிற்கு வாக்களித்துள்ள வடக்கு, கிழக்கு வாழ் இளைய தலைமுறை, எதிர்காலத்தில் சர்வதேசத்தின் துணையுடன் உங்களிடமிருந்து தமது அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தக் கூடிய அரசியல் தீர்வை அவர்கள் தேடிக் கொள்வார்கள் என்பதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஜே.வி.பி.யான தேசிய மக்கள் சக்தி தமது பழைய கால அனுபவங்கள் மூலம் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வை அவர்களால் நிச்சயம் முன்வைக்க முடியும். அவை தவறும் பட்சத்தில், “யாவும் பழைய குருடி, கதவை திறவடி” என்ற கதையாகவே முடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை. இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதை கண்டுள்ள தமிழ் தலைமைகள் என்ன எண்ணம், திட்டத்தில் உள்ளார்கள் என்பதை நாம் இன்னும் சில நாட்களில் காணமுடியும். ஆனால் இவர்கள் சிதறி நின்று கூட்டணி, கூட்டமைப்பு என்று அணி சேர்வது தமிழர் அரசியலில் அறவே நடைமுறைக்கு சாத்வீகம் இல்லாத விடயம் என்தை நாம் கடந்த பதினைந்து வருடங்களில் பார்த்துள்ளோம். விசேடமாக ஐக்கியத்திற்கு அறவே முன்வராத ஓர் கறுப்பு ஆடு தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், ஐக்கியம் என்பது கேள்விக் குறியாகவே தொடரும்.ஆனால், என்று இளைஞர்கள் புதிய ஆட்சியாளர்களாலும் வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்கிறார்களோ, அன்று இன்று வாக்களித்த இளைஞர்கள் நிச்சயம் ஓர் ஒருங்கிணைந்த சர்வதேசத்தின் துணையுடன் செயற்படுவார்கள் என்பது தின்னம். அதுவே வடக்கு, கிழக்கை தாயகமாக கொண்ட தமிழர்களின் இறுதி முயற்சியாக அமையும். ராஜபச்சா- பொன்சேக்க தோல்வி இதேவேளை தெற்கின் அரசியலை நாம் பார்த்தால் சகல முன்னாள் – பின்னாள் அரசியல் கட்சிகள் யாவும் கடுமையான தோல்விகளை கண்டுள்ளனர். இதில் யுத்தத்தின் கதாநாயகர்களாக விளங்கிய கட்சியின் கதை என்பது, ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் மிகவும் மோசமான தோல்விகளை கண்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற கோத்தாபய ராஜபக்சவை தொடர்ந்து, நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் கட்சி நூற்று நாற்பத்தைந்து (145) பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.ஆனால் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் மிக சொற்ப வாக்குகளை பெற்றதுடன், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மூன்று (3) பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு ஓர் முக்கிய விடயத்தை கூறியே ஆக வேண்டும். தற்பொழுது ஈழத்தமிழர்களிடையே மட்டுமல்லாது, உலக மக்களிடையே நிலவும் முக்கிய கேள்வி என்னவெனில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதில் இரு பிரிவுகள் ஏறக்குறைய இருவருடங்களாக காணப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் என்பதை அடிப்படையாக கொண்டு, என்னால் கொழும்பில் பிரபல்யமான ஆங்கில ஊடகத்தில் – மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேக்கா, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்தின ஆகியோருக்கு பிரபாகரன் உயிருடன் இருப்பதை என்னால் நிரூபிக்க முடியுமென ஓர் சவால் விட்டிருந்தேன். ஆனால் இச் சவாலை எதிர்கொள்ள இவர்கள் யாரும் முன்வரவில்லை. இந்த கட்டுரையை தமிழ் அச்சு ஊடகங்கள் பிரசுரிக்க மறுத்திருந்தாலும், இணையத்தள ஊடகங்கள் வெளியிட்டதுடன், இக் கட்டுரையை எனது சிங்கள நண்பர்கள் சிங்களத்திலும் மொழி பெயர்த்து வெளியிட்டிருந்தார்கள். இதை இங்கு குறிப்பிடுவதன் முக்கிய காரணம் என்னவெனில், இக் கட்டுரையை தொடர்ந்து, தென் பகுதி மக்கள், ராஜபக்ஸக்களும் தளபதி சரத் பொன்சேக்காவும் தமக்கு நடந்து முடிந்த யுத்தம் பற்றி மாபெரும் பொய்களை கூறி தம்மை ஏமாற்றியுள்ளார்கள் என்பதை மனதில் கொண்டுள்ளதும் ராஜபக்சக்களினதும், சரத் பொன்சேக்காவின் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளிற்கான காரணங்களில் ஒன்றாகுமென தெற்கு வாழ் நண்பர்கள் கூறுகிறார்கள். https://thinakkural.lk/article/312449
  13. எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன்! - கோவிந்தன் கருணாகரன் November 19, 2024 05:49 pm இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது இது ஒரு வரவேற்கத்தக்கது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். செவ்வாய் (19 நவ) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த பாராளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எனக்கும் என்னுடைய குழுவினருக்கும் ஆதரவு நல்கிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். இது நமது தோல்வி அல்ல நமக்கு ஏற்பட்ட ஒரு சிறிய சறுக்களே ஆகும் இந்த சறுக்கலில் இருந்து பாடம் கற்று எழுச்சி வருவதே எங்களுடைய நோக்கமாகும். ஒரு காலத்தில் இலங்கையில் ஆட்சி செய்த தேசிய கட்சிகளே அடுத்த தேர்தலில் படு தோல்வி கண்ட வரலாறுகள் உண்டு. 1970 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1977 ஆம் ஆண்டு வரும் 8 ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்கு வந்த வரலாறுகள் இருக்கின்றது. அதேபோன்று 2020 ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்கள் 3/2 பெரும்பான்மைக்கு மேலாக ஆட்சி அமைத்த வரலாறு இருக்கின்றது. எனவே எமக்கு இது பெரும் தோல்வி அல்ல அடுத்த வெற்றிக்கான பலமான அத்திவாரத்தை இடும் ஒரு வாய்ப்பாகத்தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம். எமது இலக்கை நோக்கி லட்சிய பயணம் இலக்கை எட்டும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். மீண்டும் எம்மை ஆதரித்த எம்மை விமர்சித்த எம்மை அள்ளி நகையாடினோர் அனைவருக்கும் எங்களுடைய இதயபூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தோல்வியில் துவள்வது போன்ற வரலாறு எம் போன்ற போராளிகளுக்கு எப்போதும் இருந்தது இல்லை தோல்வியை வெற்றியாக்குவது தான் எங்களுடைய லட்சியம். வடக்கு கிழக்கிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்டது. திருவோணமலை மாவட்டத்தில் மாத்திரம் அங்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இணைந்து போட்டியிட்டோம். அந்த வகையில் கணிசமான அளவு எங்களுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வடகிழக்கு மக்கள் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேசிய அமைப்பாளர் என்கின்ற ரீதியில் அனைத்து தமிழ் மக்களுக்கும் எங்களுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் எதிர்காலத்திலே நாங்கள் தமிழ் மக்கள் இணைந்து செயல்படாவிட்டால் தமிழ் தேசியம் கெட்டுப் போகும் என்பதனை சிந்தித்து அனைவரும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் தேசியத்துடன் தமிழ் மக்களுடனும் தமிழ் தேசிய கட்சிகளுடனும் நேரடியான மோதலிலே ஈடுபட்டார்கள். அதே போன்று அவர்களது ஆட்சி வேறு விதமாக இருந்தது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் அதனுடைய ஜனாதிபதி அந்த கட்சி தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களது பிரச்சினைகளையும் கரையான் அரிப்பது போன்று உள்ளுக்குள் அறுத்துக் கொண்டு செல்கின்றது. அந்த வகையில் எங்களுடைய மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் நாங்கள் எதிர்காலத்தில் எங்களுக்குள்ளே இருக்கின்ற விருப்பு வெறுப்புகளை துறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் எங்களின் எதிர்காலம் சூனியம் ஆகும் எந்த மாற்று கருத்தும் இல்லை. எதிர்வரும் தேர்தல்களில் நான் போட்டியிடும் சந்தர்ப்பம் எக்காரணம் கொண்டும் இருக்காது. கடந்த தேர்தலில் கூட நான் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தெரிவித்திருந்தேன். ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறியதன் காரணமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளின் அழுத்தமும் அந்த கட்சிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை தாங்கி வழிநடத்தக் கூடிய ஒரு தேவையும் ஏற்பட்டதன் காரணத்தினால் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிட்டேன். இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கவும் மாட்டேன். அரசியலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு எப்போதும் தயாராக இருப்பேன். வட மாகாணத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலும் ஜனாதிபதி தேர்தலிலே அதிகளவான வாக்குகள் கிடைக்கப் பெற்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் கலந்து ஜனாதிபதி தேர்தலில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் சங்கு சின்னத்திற்கு கிடைக்கப்பெற்றது. இந்த பாராளுமன்ற தேர்தலில் 15க்கு மேற்பட்ட வாக்குகள் தான் அண்ணளவாக கிடைக்கப்பெற்று இருந்தது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது சங்கு சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் சங்கு சின்னத்துக்கு எதிராக சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என எதிராக பிரச்சாரங்களில் முன்முருமாக ஈடுபட்டிருந்தார். அவ்வாறான பல காரணங்களினால் சங்கு சின்னத்திற்கு கிடைக்க வேண்டிய ஆதரவு கணிசமான அளவு குறைந்திருக்கின்றது. மாற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமில்ல நாடு பூராகவும் ஏற்பட்டு இருக்கின்றது. நான் முன்னர் கூறியது போன்று மூன்று ஆசனங்களுடன் இருந்த தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்களை பெற்றிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட 50,000 இற்கு மேற்பட்ட வாக்குகளை அமைதியான முறையிலே மக்கள் இந்த தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி இருக்கின்றார்கள். எதுவிதமான பெரிய அளவிலான பிரச்சாரங்களோ அல்லது கூட்டங்களோ அல்லது வேறு கருத்தரங்குகளோ எதுவுமே செய்யாமல் அதிக அளவு செலவுகள் கூட செய்யாமல் தேசிய மக்கள் சக்திக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை வழங்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் மக்கள் ஒரு மாற்றத்தை வேண்டி இந்த தேர்தலிலே வாக்களித்து இருக்கின்றார்கள் அந்த மக்களுடைய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கின்றது. நான் நினைக்கின்றேன் வீண் விரயங்கள் இல்லாமல் போயிருக்கின்றது. அதை நாட்டிற்கு நல்லது அந்த வகையில் இரண்டு தமிழ் அமைச்சர்களும் மந்திரி சபையிலே உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு மந்திரி சபையாக நான் பார்க்கின்றேன். இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை போகப்போகத்தான் புரிந்து கொள்ள முடியும். அவர் கூறியதில் உண்மை இருக்கின்றதே ஏனென்றால் வடக்கிலே 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு முதல் முறையாக ஒரு தேசிய கட்சிக்கு 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருக்கிறது. மாத்திரமில்லாமல் வடக்கிலே இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் அவர்கள் முன்னிலை வைத்திருக்கின்றார்கள். அதே போன்று கிழக்கில் மூன்று மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் அவர்கள் முன்னிலை வகித்திருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி முன்னிலை வைத்திருக்கின்றது. அந்த வகையில் நான் நினைக்கின்றேன் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கின்றது என்பது அவர்களது ஒரு பெரிய வெற்றி அந்த வெற்றியை அவர்கள் வடகிழக்கு மக்களது இன பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை கொடுப்பதற்காக வெற்றியை பயன்படுத்துவார்களாகியிருந்தால் அது நன்றாக இருக்கும். நான் நினைக்கின்றேன் அவர் நிச்சயமாக நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க கூடிய ஒரு நபராகவோ அல்லது கட்சியாகவோ இருக்காது. ஏனென்றால் அவர்களும் கடந்த காலங்களிலே 71 ஆம் ஆண்டும் 89 ஆம் ஆண்டு கால கட்டங்களில் பாரிய ஆயுத கிளர்ச்சியை நடாத்தி அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்து நான் நினைக்கின்றேன் 60,000 இற்கு மேற்பட்ட அவர்களுடைய போராளிகளையும் அவர்களுடைய தலைவர் ரோகன விஜயவீரர் அவர்களையும் இழந்தவர்கள் அவர்களை ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து கொண்டிருப்பவர்கள் அதே போன்று வடகிழக்கிலும் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு தடையாக இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்ல என்னுடைய எண்ணம் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைத்து காட்சிகளும் அது கஜேந்திரகுமார் அவர்களுடைய கட்சியாக இருக்கலாம் விக்னேஸ்வரன் உடைய கட்சியாக இருக்கலாம் ஏனைய கட்சிகளாக இருந்தாலும் சரி தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழர்களது உரிமையை பெறவேண்டும் என நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலே தவிர தமிழர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பது கடினமானது என தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=196131
  14. இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை - கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி ! By Shana இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அனைத்து இன மக்களும் எம்மீது நம்பிக்கை கொண்டு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவரையும் இலங்கை பிரஜைகள் என்றே நான் கருதுவேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று ஜனாதிபதி கூறினார். மக்களால் வெறுக்கப்படும் பாராளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் பாராளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். பாராளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்றும் இந்த பாராளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்தி பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என்றும் ஜனாதிபதி கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துடன் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். இரு தரப்பு கடன் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதான கடன் வழங்குநர் நாடுகளுடன் பிரத்தியேக ஒப்பந்தம் வெகுவிரைவில் கைச்சாத்திடப்படும். நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார். https://www.battinews.com/2024/11/blog-post_536.html
  15. சம்பந்தன் குடும்பத்தினருக்கும் டக்ளஸுக்கும் பறந்த எழுத்து மூல அறிவிப்பு! Vhg நவம்பர் 21, 2024 மறைந்த இரா.சம்பந்தனின் மகளுக்கும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் உடனடியாக அரசாங்க பங்களாக்களை ஒப்படைக்குமாறு நீதித்துறை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது குறித்த அறிவிப்பானது, எழுத்து மூலம் நேற்று (20-11-2024) விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் பங்களா கடந்த 12ஆம் திகதி கையளிக்கப்படும் என அவரின் மகள் அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவித்த போதும் நேற்று (20) வரை அது கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தனின் குடும்ப உறுப்பினர்கள் அவர் இறந்த பிறகு, சம்பந்தனின் குடும்ப உறுப்பினர்கள் அந்த பங்களாவில் தொடர்ந்து தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வரையில் அவருக்கு அந்த பங்களாவை வழங்க அப்போதைய அரசாங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது. இதேவேளை, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இன்னும் அரசாங்க பங்காளவொன்றில் தங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.battinatham.com/2024/11/blog-post_515.html
  16. கங்குவா : விமர்சனம் Nov 14, 2024 15:07PM IST ஷேர் செய்ய : இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் ரிலீஸாகும் சூர்யா படம், ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் சூர்யா செய்த பான் இந்தியா புரொமோஷன்ஸ், ரிலீஸ் தேதி மாற்றத்தால் ரசிகர்களிடத்து ஏற்பட்ட அதிருப்தி, நீதிமன்ற வழக்கு முதல் தொடர்ந்த பல்வேறு தடங்கல்கள் ஆகியவைகளைக் கடந்து தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்திற்கான ஏகப்பட்ட ஹைப், அதீத நம்பிக்கையுடன் படக்குழு இருப்பது போலான ஒரு தோற்றத்தையே அனைவருக்கும் அளித்தது. குறிப்பாக, படத்தின் ஆடியோ லாஞ்சிலேயே 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் வெற்றி விழாக்கான பாஸை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்தது கொஞ்சம் அதீதமாகவே தெரிந்தது. ஆக, இவ்வளவு ஹைப்களைக் கொடுத்த ’கங்குவா’ திரைப்படம் நமது பார்வையில்! ஒன்லைன்: 2024யில் தொடங்குகிறது திரைப்படம். சூர்யா ஒரு பவுண்டி ஹண்டர். அதாவது, காவல்துறைக்கு உதவும் ஒரு ’ஷாடோ காப்’ எனச் சொல்லலாம். அவர் இறங்கும் ஒரு மிஷனில் ஒரு சிறுவனை சந்திக்கிறார். அந்த சிறுவனைப் பார்க்கும் போது அவருக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வுக்குக் காரணம் என்ன? இங்கு நடக்கும் இந்த கதைக்கும் 1070ஆம் ஆண்டில் நடந்த ஒரு கதைக்கும் என்ன சம்பந்தம்? போன்ற விஷயங்களைக் கூறுவதே ‘கங்குவா’. அனுபவப் பகிர்தல்: தமிழ் சினிமாவில் இத்தகைய மேக்கிங் உள்ள திரைப்படங்களை சமீப காலங்களில் நிறையவே பார்க்க முடிகிறது. ஆனால், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றியின் ஃப்ரேம்ஸ் நம் கண்களுக்கு நல்ல விருந்து. கதைக்களத்திற்குள் நம்மை ஓரளவு ஒட்டவைப்பதும் அதுவே. இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு 3டி படம். ஒரு 3டி திரைப்படத்திற்கான தேவை அந்தப் படத்தின் கதையில் இருக்க வேண்டும். அதை விட்டு பொருட்காட்சியில் காண்பிக்கும் 3டி படம் போல் அந்த தொழில்நுட்பத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட கண்ணுக்குள் பாம்பு வருவது, ஜெம்ஸ் மிட்டாய் பறப்பது போன்ற காட்சிகள் சலிப்பே. ஆனால், இந்த அனுபவத்தை தொழில்நுட்பக்குழு நேர்த்தியாகக் கடத்தவே முயற்சி செய்துள்ளதால் அது நமக்கு ஓரளவு நல்ல அனுபவமாகவே இருந்தது. குறிப்பாக சில காட்சிகளில் ஃப்ரேமின் ஒவ்வொரு லேயரையும் நம் கண்கள் முன்னே காண முடிந்தது நன்று. சூர்யாவின் இத்தனை கால உழைப்பை ஸ்கிரீனில் பார்க்க முடிந்தது. ஒரு பெரிய ஸ்டார் நடிகர் ஒரு படத்திற்காக இத்தகைய உழைப்பை போடுவது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம். கூடவே கொஞ்சம் ஸ்கிரிப்டடை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் முழுக்க ஏகப்பட்ட சப்தங்களும், ரத்தங்களும் இந்தப் படமெங்கும் இருந்தது. அதில் சப்தங்கள் வெறும் இரைச்சல்களாகவும், இரத்தங்கள் அனைத்தும் சினிமா இரத்தங்கள் என்றே கடந்து போகும் படி அமைந்தது. பார்ப்போருக்கு எந்த ஒரு பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை. கிளைமாக்ஸில் வரும் ஃபிளாஸ்பேக் மற்றும் நிகழ்காலத்திற்கான நான் லீனியர் கனெக்‌ஷன் காட்சிகள் அற்புதமான யுக்தி. ஆனால், அதில் நிகழும் சில அபத்தமான சண்டை காட்சிகள் அதோடு நம்மை ஒட்டவிடாமல் செய்கிறது. படத்தின் முதல் பாதியில் வரும் சில காமெடி காட்சிகள் ஒரே வார்த்தையில் ‘கிரிஞ்ச் மேக்ஸ்’ ! விரிவான விமர்சனம்: ஒரு அரசனின் அறம், அவன் சத்தியத்தின் வலிமை, போர், வன்முறை, போன்ற விஷயங்களைத் தொட்டு நகரும் இந்தத் திரைப்படத்தில் முன் ஜென்மம், சூப்பர் பவர் போன்ற ஃபேண்டசி படத்திற்கான கூறுகளும் உள்ளன. இதில், மேல் சொன்ன எதையும் பார்வையாளர்களுக்கு அழுத்தமாக கடத்தாத இந்த ’கங்குவா’, பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஒரு சராசரி கமர்சியல் திரைப்படமாகவே உள்ளது. படத்தின் பெரிய பலங்கள் சூர்யா, தொழில்நுட்பக் குழு. இந்தப் படத்திற்காக மேக்கப், உடல் தோற்றம், உடல் மொழி என அனைத்திலும் தன் உழைப்பை அர்ப்பணித்துள்ளார் சூர்யா. ஆனால், அவரது கதாபாத்திரத்தை இன்னும் தெளிவாக வடிவமைக்காததால் அது ஒரு சாதாரண கமர்சியல் ஹீரோவாக மட்டுமே சுருங்கி விடுகிறது. யார் இந்த ’கங்குவா’? அவன் ஏன் இத்தகைய சத்தியத்தை காக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகளும், காரணங்களும் வைத்திருக்கலாம். அது இல்லாததால் அந்தக் கதாபாத்திரத்தோடு நம்மால் சரியாக ஒட்டமுடியவில்லை. அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்களும் நாம் ஏற்கனவே கண்ட பல பீரியட் பட கதாபாத்திரங்களையே நியாபகப்படுத்துகிறது. அவர் ஏன் இவ்வளவு பலசாலியாக இருக்கிறார் என்றால் அவர் தான் இந்தப் படத்தின் ஹீரோ என்கிற அளவில் தான் அந்தக் கதாபாத்திரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் இந்தப் படத்தை தாங்கிப் பிடிப்பதில் சூர்யாவின் நடிப்பிற்கு முக்கிய பங்குண்டு. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை முதலில் குறிப்பிட வேண்டியது ஒளிப்பதிவாளர் வெற்றியின் காட்சியமைப்புகள். அத்தனையும் அற்புதம். குறிப்பாக, இயற்கையான ஒளிகளை வைத்து அவர் காட்சியமைத்திருந்த பீரியட் காட்சிகள் அற்புதம். படத்தொகுப்பாளர் நிசாத் யூசப் கிளைமாக்ஸ் காட்சிகளில் செய்திருக்கும் நான் லீனியர் கட்ஸ் அற்புதம். ஆனால், படத்தின் முதல் பாதியில் வரும் அந்த காமெடி கிரிஞ்ச் காட்சிகளை நிச்சயம் பாரபட்சமின்றி வெட்டியிருக்கலாம். மறைந்த கலை இயக்குநர் மிலனின் சிறப்பான செட் வடிவமைப்புகள் மிகுந்த பாராட்டுகளுக்கு உரியவை. குறிப்பாக ஒவ்வொரு குடிகளுக்கான ஊர், வீடுகள், இடங்கள் எப்படி இருக்கும், அந்த காலத்து ஆடை வடிவமைப்புகள் எப்படி இருக்கும் போன்றவற்றை சரியாக வடிவமைத்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஆங்காங்கே காட்சியை மெருகேத்தியது. ஆனால், சில இடங்களில் இரைச்சலாகவும் தோன்றியது. பாடல்களில் ’தலைவனே’ பாடல் இடம்பெறும் காட்சி நன்றாக இருந்தது, ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு பாடல் அவரின் பழைய தெலுங்கு பாடல்களை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. படத்தின் பெரிய பலவீனம், இயக்குநர் சிவாவின் எழுத்து. குறிப்பாக படத்தின் முதல்பாதியில் இடம்பெறும் தற்காலத்தில் நடக்கும் அந்த 30 நிமிட காட்சிகள் மொத்தமும் அபத்தமே. ஃபிளாஸ்பேக் காட்சிகளில் வரும் பழங்குடி கதாபாத்திரங்கள் சாதாரணமாகவே சப்தமாக பேசும் கதாபாத்திரங்களாக வடிவமைத்தது பெரிய சலிப்பை ஏற்படுத்தியது. திரைக்கதையில் எந்த வித திருப்பங்களோ, ஆழத் தன்மையோ இன்றி நகர்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. காரணம், இதுபோன்ற ஒரு மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் ஒரு பீரியட் படத்தில் நேர்த்தியான எழுத்து இருக்க வேண்டாவா…? கற்பனை மிகப் பெரியதாக இருக்கலாம். ஆனால், அந்த கற்பனை மட்டுமே சுவாரஸ்யமான கதையாகி விடாது தானே? இதுவே ’கங்குவா’ சறுக்கும் முக்கிய இடம். விமர்சிக்க வேண்டிய இடமும் கூட. ‘கங்குவா’ கதாபாத்திரத்தின் அறிமுக காட்சி, பழங்குடி பெண்கள் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி, கிளைமாக்ஸில் நடந்தேறும் ஒரு நான்லீனியர் சண்டை காட்சி ஆகிய காட்சிகள் மட்டுமே நமக்கு சுவாரஸ்யமாக இருந்தது. கதாபாத்திர வடிவமைப்பில், திரைக்கதை நேர்த்தியில் கவனம் செலுத்தாததால் இது வழக்கமான கமர்சியல் படமாக மட்டுமே நிற்கிறது. அடுத்தது, இரண்டாம் பாகத்திற்கான லீடை இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் வைத்து முடித்துள்ள யுக்தி. இது வெற்றிகரமான ஃபார்முலா என சமீக கால படங்கள் பெரும்பாதியில் பயனபடுத்துகின்றனர். ஆனால், அதற்கான தேவையைப் பொறுத்தே அது சுவாரஸ்யமாக அமையும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு ‘கங்குவா’. மேலும், வில்லன் கதாபாத்திரமான பாபி டியோலே சரியாக வடிவமைக்கப்படாததால் அவரது மகன் என கிளைமாக்ஸில் அறிமுகமாகும் அந்த ’தம்பி’ நடிகரின் கதாபாத்திரம் மட்டும் எப்படி பார்ப்போருக்கு அழுத்தம் தரும்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும் பழங்குடி அரசன் என்றால் அவனது வசனங்கள் எவ்வளவு நேர்த்தியாகவும், அழுத்தமாகவும், இடம்பெற்றிருக்க வேண்டும்? இதில் எல்லாம் சரியாக கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் இந்த ‘கங்குவா’ தமிழில் எடுக்கப்பட்ட மற்றும் ஒரு அடுத்தகட்ட முயற்சி, மற்றும் ஒரு அழுத்தமில்லா முயற்சி! https://minnambalam.com/cinema/kanguva-movie-review/
  17. கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு! இரா.சரவணன் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக வலைத்தளங்களில் வன்மத்தை கக்கும் விமர்சனங்கள் வெளிப்பட்டன. அவை கங்குவா என்ற படத்தைக் கடந்து நடிகர் சூர்யா குடும்பத்தை தாக்கும் விமர்சனமாகவும் தூக்கலாக வெளிப்பட்டது. இந்தச் சூழலுக்கு இயக்குனர் இரா.சரவணன் மிக சிறப்பாக எதிர் வினையாற்றி இருக்கிறார்; இவர் மிகச் சமீபத்தில் வெளியான நந்தன் படத்தின் இயக்குனர். இந்தப் படம் உள்ளாட்சிகளில் பட்டியலினத் தலைவர்கள் தற்காலத்தில் சந்திக்க நேரும் அவமானங்கள் குறித்து மிகுந்த சமூக அக்கறையுடன் கவனப்படுத்தி இருந்தது. இவரது முந்திய படங்களான கத்துக்குட்டி, உடன்பிறப்பே போன்றவையும் சரவணனின் சமூக அக்கறைக்கு சாட்சி சொல்லும் படங்களே; கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர். அவர்களின் பெருமுயற்சியும், உழைப்பும் சிலர் பார்வையில் சறுக்கி இருக்கக் கூடும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்குக் கொந்தளிக்கும் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, சுரண்டல்களை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கடக்கிறோம். ஆட்சியில், நிர்வாகத்தில், அரசியல் நிலைப்பாடுகளில் நாம் க்யூவில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தவறு செய்கிற போது இத்தகைய ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறோமா? சினிமாவுக்கு எதிராக இவ்வளவு சீறுகிற நாம், நம் பகுதியின் கவுன்சிலரிடம் என்றைக்காவது முறையிட்டிருப்போமா? வீட்டைச் சுற்றி தண்ணீர் நின்றாலும், கொசுக்கடி கொன்றாலும், பாதிச்சாமத்தில் கரண்ட் கட்டானாலும், சாலை நடுவே பள்ளம் உண்டாகி உருண்டாலும், நியாயமான விஷயங்களுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நெருக்கடி வந்தாலும், கண் முன்னே அநீதி நடந்தாலும் அதிகபட்சம் உள்ளுக்குள் குமுறிக் கொண்டே கடக்கிறோம். பிள்ளைகளின் கல்விச் செலவுக்குக் கொஞ்சமும் நியாயமின்றி வசூலிக்கப்படும் கட்டணத்தை கடன் வாங்கியாவது கட்டுகிறோம். உயிர்க் காக்கும் மருத்துவத்தில் நடக்கிற கொடுவினைகளைக்கூடச் சகித்துக் கொள்கிறோம். இந்த ஆவேசமும் கொந்தளிப்பும் அங்கெல்லாம் எப்படி அமைதியாகிறது? ஒரு படம் நம்மை ஏமாற்றுகிற போது பாய்கிற நாம், ஒரு நிஜம் நம்மை ஏமாற்றுகிற போது சகிக்கவும், தாங்கவும் எப்படிப் பழகிக் கொள்கிறோம்? ஒரு பெரியவர் ‘கங்குவா’ படத்திற்கு எதிராகக் கொந்தளித்ததைக் காட்டாத சமூக வலைத்தளங்கள் இல்லை. ஆனால் இன்றைக்கும் சுற்றுச் சூழலுக்காக, சமூக நீதிக்காக, ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனிதர்களை எத்தனை ஊடகங்கள் காட்டுகின்றன? ஒரு படத்தின் நல்லது கெட்டதுகளை போஸ்ட் மார்ட்டம் செய்து கிழித்துத் தொங்கவிட இவ்வளவு புரட்சியாளர்கள் இருக்கிற தமிழ்நாட்டில் நமக்காகக் கொண்டு வரப்படுகிற திட்டங்களை, செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்க, விவாதிக்க எத்தனை நாதிகள் இருக்கின்றன? “சூர்யா ஏமாத்திட்டார்…” என ஆதங்கப்பட்ட / ஆத்திரத்தில் இன்னும் சில வார்த்தைகளைக் கொட்டிய என் நண்பர் ஒருவர், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் 15 லட்சத்தைப் பறிகொடுத்தவர். எல்லோரும் இணைந்து கொடுத்த புகாரில் கையெழுத்துப் போட்டதைத் தவிர, அந்த நண்பர் காட்டிய எதிர்ப்பும், போராட்டமும் எதுவுமில்லை. நண்பரின் விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், நாமும் இப்படித்தான்…எத்தனையோ அநீதிகளை நெருக்கடிகளை மென்று செரிக்கிறோம். ஆனால், ஒரு சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுகிறோம். “படத்தில் ஏன் இவ்வளவு வன்முறைக் காட்சிகள்” என ஆவேசப்படுகிற நாம், நம் கண் முன்னே நடக்கிற கத்திக் குத்துகளைக் கண்டுகொள்ள மாட்டோம். “படத்தில் ஏன் இவ்வளவு மது போதைக் காட்சிகள்?” என ஆவேசப்படுவோம். வரிசைகட்டி மீன் கடைகள் போல் திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளைப் பார்த்துக்கொண்டே கடப்போம். படத்தில் எதுவும் தவறான காட்சிகள் வந்துவிடக் கூடாது. நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இது என்ன மனநிலை? நியாயமும் அறச் சீற்றமும் கேள்வி கேட்கும் திராணியும் கொண்ட ஒருவன், தனக்கு எதிராக நடக்கும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் கொந்தளிப்பான். ஓர் அநீதிக்கு அமைதியாகவும், இன்னோர் அநீதிக்கு புரட்சியாகவும் இருக்க மாட்டான். மூன்றே விஷயங்கள்… # சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை. # இந்தக் கோபத்தை ஆவேசத்தை தட்டிக் கேட்கும் தைரியத்தை சினிமாவுக்கு எதிராக மட்டும் காட்டாமல், நம்மை ஏமாற்றும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் காட்டுவோம். சினிமா நம் பொழுதுபோக்கு. பொழுது அதைவிட முக்கியம். 3மணி நேரம் வீணாகி விட்டதாகப் புலம்பும் நாம், நம் எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு 5 வருடங்களை கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். # சில சண்டைகளில் என்ன ஏதென்றே தெரியாமல் போவோர் வருவோரும் சேர்ந்து அடிப்பது போல், பெரும்பான்மை கருத்து என்பதாலேயே அதற்கு வலு சேர்க்கும் வேலைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். ஆய்ந்தறியுங்கள். உங்கள் மனம்தான் உயர்ந்த நீதிபதி. பி.கு: நடிகர் சூர்யாவை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது. சூர்யாவை விமர்சிக்க அல்ல… இதே போல மற்றொரு சினிமா இயக்குனரும், பத்திரிக்கையாளருமான ரதன் சந்திரசேகர் எழுதிய பதிவு கவனிக்கத்தக்கது. இழிந்த ஓர் அரசியலின் வெறியூட்டல் காரணமாக ஒரு கலைஞன் தாக்கப்படுகிறான் எனில் – அவனுக்காக ஒன்று திரளவேண்டியது நல்லவர்களின் கடமை. அதுவே ஒரு நல்லரசியல் வினையும் ஆகிறது! சில நேரங்களில் – சினிமா பார்ப்பதும் கூட ஒரு சமூகக் கடமை ! https://aramonline.in/19872/kanguva-cinema-saravanan/
  18. புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்! Veeragathy Thanabalasingham on November 18, 2024 Photo, GETTY IMAGES நாடாளுமன்ற தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரமாண்டமான வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 1977 ஜூலை பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் 168 ஆசனங்களில் 144 ஆசனங்களைக் கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த பிறகு முதற்தடவையாக அதேபோன்ற ஒரு பிரமாண்டமான பெரும்பான்மையுடன் இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி அந்த அத்தகைய ஒரு வெற்றிபை பெற்றபோது பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையே நடைமுறையில் இருந்தது. ஆனால், விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக எந்தவொரு அரசியல் கட்சியுமே இதுவரை பெற்றிராத நிலையில், தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெருப்பான்மைக்கு மேலதிகமான ஆசனங்களுடன் மக்களின் ஆணையைப் பெற்றிருக்கிறது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் 2010ஆம் ஆண்டிலும் கோட்டபாய ராஜபக்‌ஷ ஆட்சியில் 2020ஆம் ஆண்டிலும் அவர்களின் கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் குறைவான நாடாளுமன்ற ஆசனங்களைத் தேர்தல்களில் பெற்ற அவர்கள் பிறகு கட்சித் தாவல்களை ஊக்குவித்து அந்தப் பெரும்பான்மையை உறுதி செய்து கொண்டார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தி தனியாக இந்தத் தடவை தேர்தலில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி சாதித்துக் காட்டியிருக்கிறது. நாடாளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களினால் நிரப்புமாறு தேர்தல் பிரசாரங்களின் தொடக்கத்தில் மக்களிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி திசாநாயக்கவும் அமைச்சர் விஜித ஹேரத்தும் சபையில் எதிர்க்கட்சியே தேவையில்லை என்று கூறினார்கள். ஆனால், அதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பிறகு தேர்தல் பிரசாரங்களின் இறுதிக் கட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) வேறு தலைவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த கடந்த கால அரசாங்கங்கள் எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டதை சுட்டிக்காட்டி தங்களுக்கு அத்தகைய பெரும்பான்மை தேவையில்லை என்றும் ஒழுங்கான முறையில் அரசாங்கத்தை நடத்துவதற்கு உறுதியான பெரும்பான்மையைத் தந்தால் போதும் என்றும் கூறினார்கள். ஆனால், அவர்களின் வேண்டுகோளை மீறி மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு பிரமாண்டமான பெரும்பான்மையுடன் ஆணையைக் கொடுத்திருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்கள் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் என்றும் அவர்களினால் பொருளாதார விவகாரங்களை கையாளமுடியாது என்பதால் தங்களது அணிகளைச் சேர்ந்தவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், மக்கள் அதை அறவே பொருட்படுத்தாமல் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களினால் நாடாளுமன்றத்தை பெருமளவுக்கு நிரப்பியிருக்கிறார்கள். ஜனாதிபதி திசாநாயக்கவின் ஆட்சித்திறன் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கிளப்பிய சந்தேகங்களை எல்லாம் நிராகரித்த மக்கள் அவர் மீதும் அவரது கட்சி மீதும் வியக்கத்தக்க முறையில் மீண்டும் நம்பிக்கையை வெளிப்டுத்தியிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் இந்தச் சந்தர்ப்பம் தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆயுதக்கிளர்ச்சியை முன்னெடுத்த இடதுசாரி அரசியல் இயக்கம் ஒன்று நாடாளுமன்றத்தின் மூலமாக ஆட்சிக்கு வருகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவமுடைய நிகழ்வைக் குறித்து நிற்கிறது. கடந்த நூற்றாண்டில் ஒரு மூன்று தசாப்தகால இடைவெளியில் இரு ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து தோல்வி கண்ட ஜே.வி.பி. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பது அதன் அரசியலில் முக்கியமான உருநிலை மாற்றமாக அமைகிறது. ஜே.வி.பியின் அரசியலில் மாத்திரமல்ல இலங்கை அரசியல் வரலாற்றிலும் இது ஒரு மைல்கல்லாகும். சுமார் 60 வருடகால வரலாற்றில் ஜே.வி.பி. ஆயுதக்கிளர்ச்சிகளின் விளைவான பயங்கர அனுபவங்களுக்குப் பிறகு ஜனநாயக அரசியல் மூலமாக ஒரு முழுமையான அரசியல் வட்டத்தை சுற்றிவந்து நிறைவு செய்திருக்கிறது. அதனால், அதன் மகத்தான தேர்தல் வெற்றி இலங்கையின் இடதுசாரி அரசியலைப் பொறுத்தவரையிலும் கூட முக்கியமான நிகழ்வாகும். ஜனாதிபதியாக திசாநாயக்க பதவியேற்றதை அடுத்து இலங்கையின் ஆட்சியதிகாரம் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்துவந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்து அந்த வர்க்கத்துக்கு வெளியில் உள்ள சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்ட ஒருவரின் கைகளுக்கு வந்தது. தேசிய மக்கள் சக்தியின் அதிகப் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட புதிய நாடாளுமன்றம் அந்த அதிகார மாற்றத்தை முழுமை பெறச்செய்வதாக அமைகிறது. புதிய பாராளுமன்றம் இன்னொரு காரணத்துக்காகவும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக அமைகிறது. எந்தவொரு தேசிய கட்சியுமே இதுகாலவரை செய்திராத வகையில் இந்தத் தடவை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தென்னிலங்கையில் மாத்திரமன்றி நாடு பூராவும் பெருவெற்றி பெற்றிருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் கணிசமான ஆசனங்களை அது கைப்பற்றியிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றியை அடுத்து அவரின் கட்சியை நாடாளுமன்ற தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்ற ஆர்வம் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்தது. அந்த மக்கள் தங்களிடம் வாக்கு கேட்க வந்த தமிழ் அரசியல்வாதிகளிடம் நேரடியாகவே தங்களது அந்த விருப்பத்தை வெளிப்படுத்தியும் இருந்தார்கள். ஆனால், தமிழ்ப் பகுதிகளில் ஒரு தேசிய மக்கள் சக்தி அலையே வீசும் என்று எவரும் நினைக்கவில்லை. குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு நாடாளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமாக வடக்கை பிரதிநிதித்துவம் செய்துவந்த பாரம்பரிய தமிழ்க்கட்சிகளைப் பின்னுக்கு தள்ளியிருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பெருமளவில் மக்கள் மத்தியில் பிரபல்யமில்லாதவர்கள் என்றபோதிலும் கூட வியக்கத்தக்க வெற்றியை அவர்களால் சாதிக்கக்கூடியதாக இருந்தது. தமிழ் மக்கள் இந்தளவுக்கு ஆதரவை வழக்கியதற்கு முக்கியமான காரணம் தேசிய மக்கள் சக்தியின் மீதான கவர்ச்சி என்பதை விடவும் தங்களை இதுகாலவரை பிரதிநிதித்துவம் செய்துவந்த தமிழ் அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு என்பதே உண்மையாகும். உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த பதினைந்துக்கும் அதிகமான வருடங்களில் தங்களது தேவைகளையும் அரசியல் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்கு ஒருமித்த நிலைப்பாட்டுடன் ஐக்கியமாகச் செயற்படத் தவறிய தமிழ் அரசியல்வாதிகள் மீது தமிழ் மக்கள் பெரும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளின் அணுகுமுறைகள் காரணமாக தமிழ் அரசியல் சமுதாயம் சிதறுப்பட்டுக் கிடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பெருவாரியான அரசியல் கட்சிகளும் குழுக்களும் இதற்குச் சான்று. தங்கள் மத்தியில் உருப்படியான மாற்று ஒன்று இல்லாத நிலையில் ஜனாதிபதி திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்புவதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. தேர்தல் பிரசாரங்களின் இறுதி கட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தி மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தனர். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் விடயத்தில் மற்றைய சிங்கள கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று அவர்கள் தமிழ் மக்களுக்கு கூறினார்கள். தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்த ஜனாதிபதி திசாநாயக்க இனப்பிரச்சினை தீர்வு குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள். ஆனால், மக்கள் இந்த எதிர்ப்பிரசாரங்களை பொருட்படுத்தவில்லை என்பதை அவர்கள் வாக்களித்த முறை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. தேசியக் கட்சி ஒன்றைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து முன்னென்றும் இல்லாத வகையில் இந்தத் தடவை நாடாளுமன்றம் செல்லவிருக்கிறார்கள். தமிழ் மக்கள் தங்களுக்கு அளித்த ஆதரவை ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் எவ்வாறு வியாக்கியானம் செய்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், தங்களது கடந்தகால அரசியல் பாதையை சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்காமல் வெறுமனே உணர்ச்சிவசமான தேசியவாத சுலோகங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை நெடுகவும் ஏமாற்றி நாடாளுமன்றம் சென்று கொண்டிருக்கலாம் என்று நம்பியதன் விளைவை பல தமிழ்க்கட்சிகள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/11863
  19. முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு! Vhg நவம்பர் 19, 2024 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது. இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்பத் கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம் எனவும் தெரிவித்த பிரதமர் மேற்படி மாற்றங்கள் உடனடியாக அன்றி படிப்படியாக சீரான திட்டமிடலுக்கு அமைய இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.battinatham.com/2024/11/blog-post_873.html
  20. திக்கம் வடிசாலை முன்னாள் அமைச்சரால் சூறையாடல்; அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என்கிறார் சகாதேவன் திக்கம் வடிசாலை கடந்த பத்துவருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இங்கு நடைபெற்ற அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என பனைஅபிவிருத்திச்சபையின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் நகரப்பகுதியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்சபையின் கீழ் உள்ள கற்பகம் பனை உற்பத்திபொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தை பார்வையிட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. தலைவராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றேன்.கடந்தகாலங்களில் பனை வளம் சார்ந்த விடயங்களை பாதுகாப்பதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டு்ள்ளது. பனை உற்பத்திசார் தொழிலாளர்களுக்கு உயர்ந்த வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் சூழ்நிலையில் சபை இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றது. திக்கம் வடிசாலை கடந்த பத்துவருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளது.அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் ஒருவர் முறைப்பாடு ஒன்றை எனக்கு வழங்கியுள்ளார். தான் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு தனது வேலையில் இருந்து விலக்கப்பட்டதாகவும்,இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்றும். தான் உயிரைமாய்க்கும் நிலைக்கு சென்றதாக அவர் தெரிவித்திருந்தார். அவரது அதிகாரப்பிடியில் பனை அபிவிருத்திசபை மட்டுமல்ல வடக்குமாகாணமும் சிக்கிசீரழிந்துகொண்டிருந்த நிலையில் இந்த நியமனத்தின் மூலம்தமக்கு நடந்த அநியாயங்களை வெளிக்கொண்டுவர பலர் துணிந்திருக்கிறார்கள். இலங்கையின் மிகப்பெரிய மது உற்பத்தி நிறுவனத்திடம் அந்த தொழிற்சாலை கையளிக்கப்பட்டுள்ளது. பனஞ்சாராய உற்பத்தி ஒன்றும்அங்கு நடந்தது. ஆனால் இதுபற்றிய எந்த தகவலும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. நான் சபையை பொறுப்பெடுத்த பின்னரே அந்த ஒப்பந்தத்தின் பிரதி பனை அபிவிருத்திசபைக்கே கிடைத்தது. முதல்தகவல் அறிக்கையின் பிரகாரம் கிட்டத்தட்ட 100மில்லியன் ரூபாய் நேரடியான பணப்பரிமாற்றம் அந்த இடத்தை கைப்பற்றுவதற்காக நடந்திருப்பதாக அறியமுடிகின்றது. அதனைவிட 2014ஆம் ஆண்டு சபையின் அன்றைய முன்னாள் தலைவரின் அறிக்கையின்படி 69 மில்லியன் பெறுமதியான மதுசாரம் ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்டாதக கூறியிருக்கிறார். அங்கு நடைபெற்ற கொள்ளைகள் முறைகேடுகள் மிக அதிகமானவை. இப்போது ஒவ்வொன்றாக வெளிவருகின்றது. சாட்சியங்களை சேகரித்துவருகின்றோம்.இந்த விசாரணைகளில் யாரும் தப்ப முடியாது. இந்த தொழிலை மீள கட்டுவது சவாலான ஒரு விடயமாக மாறியிருக்கிறது. வடிசாலைகள் தென் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு குருநாகல் புத்தளம் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் தென்னங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றது.நெடுந்தீவுக்கும் தென்னங்கள்ளை விற்பனை செய்யும் நிலமை ஏற்ப்பட்டிருக்கிறது. பனைவளம் இருந்தும் அரசியல் வாதிகளின் ஊழல் நிறைந்த செயற்ப்பாட்டால் இந்த தொழில் அழிந்துபோயுள்ளது. நெடுந்தீவில் பிரதேசசெயலாளர் ஒருவரால் சட்டவிரோதமாக கள் உற்பத்தி நிலையம் நடாத்தப்பட்டு தென் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல முறைப்பாடுகள் கிடைக்கிறது. பனைவளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். பொதுமக்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அத்துடன் 11 மாவடங்களில் பனைவளம் உள்ளது. எனவே முழுமையான கணக்கெடுப்பொன்றை செய்ய இருக்கிறோம். அதன் பின்னரே அவற்றை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதா என்ற விடயத்தை ஆராயவுள்ளோம். பனை மீள் நடுகையின் போது நடந்த மோசடிகளால் நிதி அமைச்சுஅதனை இடைநிறுத்தியிருக்கிறது. பனை அபிவிருத்திச்சபை தமதுசட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்ப்படாத காரணத்தால் அரசாங்கம் அந்த செயற்ப்பாட்டை இடைநிறுத்தியிருந்தது. அதனை மீள செயற்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பனஞ்சாராயத்தினை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகமான வருமானத்தை பெறமுடியும். அதற்கான அனுமதியை எமது சபையே வழங்கும் தனியாக எவரும் செய்யமுடியாது. ஒருசில ஊழல்வாதிகள் மற்றும் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் லஞ்ச மோசடியில் ஈடுபட்டு புதியவர்கள் இந்த தொழிலுக்கு வரவிடாமல் தடுத்துள்ளனர்.அவ்வாறான ஒரு விடயத்திற்காக 15 மில்லியன் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான கூட்டம் விரைவில் நடக்க உள்ளது- என்றார். https://thinakkural.lk/article/312326
  21. கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ள நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ்வுத்தரவு இராணுவ தலமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/கற்கோவளம்_இராணுவ_முகாமிலிருந்து_இராணுவத்தினரை_வெளியேறுமாறு_உத்தரவு!
  22. ஐ.தே.க.விற்கு அடுத்த 6 வருடத்திற்கு ரணிலே தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வரும் நிலையிலும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தக்க வைப்பதற்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் மூன்று தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை இவர் தன்னகத்தே கொண்டுள்ளமை முக்கிய விடயமாகும். ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளில் படுதோல்வி அடைந்தது. 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் வெற்றி பெற முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்கூட்டியே அறிவித்தார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க பொதுத் தேர்தலில் போட்டியிடாமலேயே தேசியப் பட்டியலில் நுழைந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார போட்டியிடவில்லை என்பது மட்டுமன்றி கட்சியின் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் பங்குபற்றாமல் தேர்தல் தொடங்கியவுடன் வெளிநாடு செல்ல நடவடிக்கை எடுத்தார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன கம்பஹாவில் போட்டியிட்ட போதிலும், கடந்த முறை போன்று கடும் தோல்வியை சந்தித்தார். மாத்தறையை பிரதிநிதித்துவப்படுத்திய ஐ.தே.க தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க இந்த ஆண்டு கொழும்பில் இருந்து தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் அவரும் கடுமையான தோல்வியை சந்திக்க நேரிட்டது. இது தவிர, முன்னாள் ஜனாதிபதியுடன் ஒரே அமைச்சரவையில் அமர்ந்திருந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை இந்தத் தேர்தலில் வீட்டுக்குச் செல்வதற்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வளவு கடுமையான தோல்வியைச் சந்தித்து ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைந்த நிலையிலும் கட்சியின் தலைமைப் பதவியை இன்னும் 6 வருடங்களுக்கு வைத்திருக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=299743
  23. புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இல்லை! adminNovember 19, 2024 முந்தைய விதிகளின் நடைமுறையிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சர்கள் என்ற கருத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது, ஆனால் அதற்கு பதிலாக 26-28 துணை அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவர் என அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என டெய்லி மிரருக்கு தெரிவித்தார். தேர்தலுக்கு முன்னதாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். சில அமைச்சரவை பதவிகளுக்கு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களா அல்லது அனைவருக்கும் நியமிக்கப்படுவார்களா என கேட்டபோது, அமைச்சின் செயலாளர்களும் மாற்றப்படுவார்கள், மீண்டும் நியமிக்கப்படுவார்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படுவார்கள், ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், நிதிச் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவைத் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இன்று தானும் தனது அலுவலகத்தில் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக கலாநிதி ஜயதிஸ்ஸ தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/208368/
  24. டக்‌ஷ அநுர சகோதரய அரசியல் யாப்பை மாற்றித் தரப்போகும் அரசியல் தீர்வு தமிழர்களுக்கென பிரத்தியேகமான உரிமைகளைத் தரப்போவதில்லை. அவருடைய முதன்மை நோக்கம் பொருளாதாரத்தில் அடிவாங்கியிருக்கும் அடித்தட்டு, கீழ் மத்தியதர மக்கள் தங்கள் வாழ்வில் ஒளிவீசும் என்ற நம்பிக்கையைத் தக்கவைப்பதுதான்! யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மூன்று எம்பிமாரும் அங்கஜன், டக்ளஸ் வாக்கார்கள் திசைகாட்டிப் பக்கம் சரிந்தமையால்தான் தெரிவுசெய்ய்பட்டார்கள், தமிழ்த் தேசியம் அப்படியே இருக்கு என்று வாட்ஸப்பில் கணக்கு விடுகின்றார்கள்!🤣 வாட்ஸப் தேசிய வீரர்களின் பதிவு… 2020- தேர்தல் அங்கஜன்(SLFP)- 49,373 டக்ளஸ்(EPDP)- 45,797 மொத்தம்=95,170 2024- தேர்தல் அங்கஜன் கட்சி- 12,427 டக்ளஸ் கட்சி- 17,730 மொத்தம்=30,157 அரச ஒத்தோடிகள்(அங்கஜன்+டக்ளஸ்) - 95,170-30,157 மொத்தம் =65,013 2024-JVP 80,830 -65013 =15,817 15817-853(JVP-2020) = 14,964 இந்த 14,964 வாக்குகளும் ஏலவே இருந்த பிற உதிரி சிங்கள முகவர்களான UNP, SJB,சந்திரகுமார் ஆகியோரிடம் இருந்தே புடுங்கியுள்ளது. ஆகமொத்தத்தில் கடந்தமுறை அளிக்கப்பட்ட தமிழ்த்தேசியம் சார்ந்த வாக்குகளை JVP யின் சுனாமி அலையால் தொட்டுகூட பார்க்கமுடியவில்லை. மேலோட்டமாக ஆய்வுக்குட்படுத்தினால் கடந்த முறையை விட சிங்கள கட்சிகள் கிட்டதட்ட 5000 வாக்குகள் இம்முறை குறைவாகவே பெற்றுள்ளன. (2020)132,329- 127,354(2024)= 4,975 இத்தேர்தலில் யாழ்-கிளி தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற நல்ல விடயமாக மக்களால் பார்க்கப்படுவது யாதெனில் சுமந்திரன்,டக்ளஸ்,சித்தார்த்தன், அங்கஜன் போன்ற தமிழின விரோதசக்திகள் அகற்றப்பட்டமை. ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் 2015-58,043 2020-27,834 2024-15,039 தமிழ்க்கட்சிகள் தங்களது அர்ப்பணிப்பான சேவைமூலம் சிங்கள கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளை அடுத்த தேர்தலில் தடுக்க வேண்டும். இம்முறை அநுர தரப்பு 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தமை நல்லவிடயம் இல்லாவிட்டால் தங்களிடம் பெரும்பான்மையில்லை அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதென உருட்டிருப்பாங்க.. என்னை பொறுத்தவரையில் இப்பொழுதும் வடகிழக்கு தவிர்ந்த மற்றைய பிரதேச மக்களுக்கு மாத்திரமே நல்லாட்சியை வழங்குவார்கள். (கடல்நீர் உப்பானதென்று தெரிந்துகொள்ள அதனை முழுவதுமாகக் குடித்துப்பார்க்க வேண்டியதில்லை-சேகுவேரா)
  25. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாடு தோல்வியடைந்ததா?- சர்வேந்திரா November 18, 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 – சில அவதானங்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. 159 ஆசனங்களைப் பெற்று, 2/3 பெரும்பான்மைக்குத் தேவையான 150 ஆசனங்களுக்கும் அதிகமான ஆசனங்களை NPP பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் முன்னர் எனது நண்பர் ஒருவரைச் சந்தித்த NPP முக்கியஸ்தர் ஒருவர் ‘ நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம். அதன் பின் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 160 ஆசனங்கள் கைப்பற்றுவோம்’ என உறுதியாகக் கூறியுள்ளார். இத் தகவலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே நண்பர் என்னிடம் சொன்னார். இப்போது 159 ஆசனங்கள் கிடைத்திருக் கின்றன. 160 யைக் குறிவைத்து அடித்து 159 இனை விழுத்தியிருக்கிறார்கள். வைத்த குறியில் சில விழாமலும் போயிருக்கலாம். எதிர்பாராமலும் சில விழுந்திருக்கலாம்.மட்டக்களப்புத் தேர்தல் மாவட்டம் தவிர்ந்த ஏனைய இடங்களில் முன்னணிக்கட்சியாகவும் NPP வந்திருக்கிறது. இவர்களின் வெற்றி தற்செயலானது அல்ல; திட்டமிட்டுச் செயலாற்றுகிறார்கள் என்பது நன்கு தெரிகிறது. தமிழர் தாயகத்தில் இத் தேர்தல் முடிவு கள் குறித்து சில அவதானங்களை இங்கு பதிவு செய்கிறேன். ஒப்பீட்டுக்காக 2020 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகளை எடுத்துள்ளேன். கட்சிகளின் பெயர்களுக்காகப் பல இடங்க ளில் சின்னங்களையும் பயன்படுத்தியுள்ளேன். 2024 தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப் பாட்டைக் ( ஈழத் தமிழர் ஒரு தேசம்/தேசிய இனம்) கொண்ட கட்சிகள் வடக்கு கிழக்கில் 10 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றன.(வீடு 8, சைக் கிள் 1, சங்கு 1). 2020 ஆண்டுத் தேர்தலில் இது 13 ஆக இருந்தது( வீடு 10, சைக்கிள் 2, விக்கி – 1). 2020 இல் 7 ஆக இருந்த யாழ் தேர்தல் மாவட்ட ஆசனங்கள் இம்முறை 6 ஆகக் குறைக்கப்பட்டிருந் தன. 7 ஆசனங்கள் இருந்திருந்தால் சங்கு ஒரு ஆசனம் பெற்றிருக்கும். இக் குறைப்பைக் கவனத்திற் கொண்டால், வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2 ஆசனங்கள் தேர்தல் பெறுபேறு அடிப்படையில் இழக்கப்பட்டடிருக்கின்றன. யாழ் தேர்தல் மாவட்டத்தில் இம் முறை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி கள் 2 ஆசனங்களைப் பெற்றுள்ளன.( ஊசியைச் சேர்க்கவில்லை. சேர்த்தால் 3). சங்குக்கு கிடைத் திருக்கக் கூடிய ஒரு ஆசனம் 16 வாக்குகளால் NPP யிடம் பறி் போயுள்ளது. 2020 இல் இது 5 ஆக இருந்தது. ஆசனங்கள் சார்ந்து இது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதொரு பின்னடைவு. இதேவேளை யாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் அடிப்படையில் வாக்குகளின் வீழ்ச்சி ஆசனங்களின் வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது போது அதிகமில்லை. 2020 யை விட 2024 இல் ஏறத்தாழ 19,000 வாக்குகள் குறைவடைந்திருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய நிலைப் பாட்டுக்கு ஆதரவாக 149,197 வாக்குகளும் 2020 ஆண்டில் 168. 270 வாக்குகளும் கிடைத்திருப்பதாக ஒரு தரவு கூறுகிறது. டக்ளஸ், அங்கயன் தரப்புக்கு இத் தடவை ஏறத்தாழ 30,000 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 2020 ஆம் ஆண்டு இது ஏறத்தாழ 96,000 ஆக இருந்தன. இவ்வாறு குறை வடைந்த 66,000 வாக்குகள் இத் தடவை NPP க்கு கிடைத்த 80,830 வாக்குகளுக்குள் விழுந்திருக்க வேண்டும் என ஒரு கணிப்புத் தெரிவிக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஊசிக்கு விழுந்த வாக்குகள் குறித்த கவலை பலருக்கு உண்டு. வாக்களித்த மக்களின் மனநிலையை இவ் விடயத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற கருத்தும் உண்டு. பலரும் பேசத் தயங்கிய ஒரு விடயத்தைத் துணிந்து முதலில் பேசியவர் என்ற எண்ணம் குறிப்பிட்டளவு மக்களின் மனதில் பதிந்து விட்டது போலும். சிறை சென்றவர் என்ற அனுதாபமும் இருந்திருக்கக் கூடும்.எனது நண்பர் ஒருவர் தேர்தலுக்கு முன்னர் சொன்னார். ‘ நான் பல தேர்தல் வீடியோக்கள் பாக்கிறனான். ஓருத்தருக்கும் இல்லாத அளவுக்கு சனம் ஆளுக்கு கிட்டப் போகுது. விருப்பத்தோடை கதைக்குது. சனத்தைக் கவருர ஏதோ ஒண்டு ஆளிட்டை இருக்குது’. ஊசிக்கு 1 ஆசனம் வரக்கூடும் என்றும் சொன்னார். அது நடந்திருக்கிறது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் இம்முறை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன. 2020 இல் இது 3 ஆக இருந்தது. இங்கும் இதுவொரு பின்னடைவுதான். வாக்குகள் சார்ந்து இத் தடவை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ஏறத்தாழ 60,000 வாக்குகள் வன்னித் தேர்தல் தொகுதியில் கிடைத் துள்ளன. 2020 இல் இது ஏறத்தாழ 89,000 ஆக இருந்தது. வாக்குகளில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி உண்டு. வடக்கில், இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாத கட்சி NPP முதன்மை இடத்துக்கு வந்தமை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு குறியீட்டு வடிவில் பெரிய பின்னடைவுதான். தமிழ்த் தேசிய நிலைப்பாடுதோல்வியடைந்து விட்டது என்ற பரப்புரைக்கும் இது காரணமாகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உடைவு வந்திருக்காவிடின் இது நிகழ்ந்திருக்காது. இவ் இரண்டு மாவட்டங்களிலும் வீட்டுக்கும் சங்குக்கும் கிடைத்த வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் தமிழத் தேசிய நிலைப்பாடே முதல் இடத்தில் வருகிறது. ஓவ்வொரு மாவட்டத்திலும் 1 போனஸ் ஆசனமும் மேலதிகமாகக் கிடைத் திருக்கும். இவ் உடைவுக்கு எவரெவர் காரணமாக இருந்தார்களோ, அவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். வடக்கில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் வாக்குகள் 2004 ஆண்டுடன் ஒப்பு நோக்கும் போது ஒவ்வொரு தடவையும் குறைவடைந்து வருகின்றது. கட்சிளுக்குள் ஏற்பட்ட பிளவுகளும், முரண்பாடுகளும், மக்கள் மயப்பட்ட செயற்திட்டக் குறைபாடு, பொது வாழ்வில் தூய்மை குறித்துக் கிளம்பும் சந்தேகம் போன்றவை இதற்குக் காரணமாக அமைகின்றன. வடக்கில் ஏற்பட்ட சரிவை கிழக்கு மாகாணம் ஒரளவு தாங்கிப் பிடித்துள்ளது. இத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக 5 ஆசனங்கள் இங்கு கிடைத்துள்ளன. 2020 இல் இது 3 ஆக இருந்தது. மட்டக்களப்பில் 1 ஆசனம் அதிகமாகக் கிடைத்துள்ளது. கடந்த தடவை தவறிப் போன அம்பாறை மாவட்டப் ( நான் திகாமடுல்ல எனக் குறிப்பிடவில்லை) பிரதிதிநிதித்துவம் இத் தடவை கிடைத்துள்ளது. திருமலையில் கடந்த தடவை போல 1 ஆசனம் கிடைத்துள்ளது. கடந்த தடவை அம்மாறை மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கமல் போனமைக்கு கருணா அங்கு போட்டியிட்டமையால் தமிழ் வாக்குகள் பிரிந்து போனதே காரணமாகப் பார்க்கப்பட்டது. இத் தடவை தமிழ் ஆர்வலர்கள் கருணாவுடன் முன்கூட்டியே கதைத்து இம்முறை அங்கு கருணா போட்டியிடுவதைத் தவிர்க்க வைத்துள்ளார்கள் என்ற தகவலையும் அறிய முடிந்தது.சங்கு தனியாகக் போட்டியிட்டாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வாக்குகள் சார்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு NPP யினைத் தோற்கடித்துள்ளது. இம் மாவட்டத்தில் இத் தடவை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ஏறத்தாழ 114,000 வாக்குகள் கிடைத்துள்ளன. 2020 இல் இவ் வாக்கு எண்ணிக்கை ஏறத்தாழ 93,000 ஆக இருந்தது. இத் தடவை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய ஆதரவு வாக்குகள் அதிகரித்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் இத் தடவை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ஏறத்தாழ 42,000 வாக்குகள் கிடைத்துள்ளன. 2020 இல் இது ஏறத்தாழ 25,000 ஆக இருந்தது. இங்கும் வாக்கு அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. திருமலையில் இத் தடவை தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ஏறத்தாழ 36,000 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 2020 இல் இத் தொகை ஏறத்தாழ 45,000 ஆக இருந்தது. வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஓட்டுமொத்தமாக நோக்கும்போது கிழக்கை விட வடக்கில் தமிழ்த் தேசிய நிலைப்பாடு கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது தெரிகிறது. தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கிழக்கில் அதிகம். அம்பாறையில் போட்டியிடுவது தொடர்பாக கருணாவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இங்கு நான் தமிழ்ப் பிரதிநிதித்துவம் எனக் குறிப்பிடுவது தமிழர் பிரதிநிதியாக வருதலை அல்ல. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் பிரதிநிதிகளாக வருதலையே குறிப்பிடுகிறேன். வடக்கில் NPP முன்னணியில் வந்தமையினை ‘ வடக்கில் தமிழ் மக்கள் இனவாதத்தைப் புறந் தள்ளிருக்கிறர்கள்’ என NPP இன் டில்வின் சில்வா கூறியிருப்பதாக ஊடகச் செய்தி ஒன்றில் கண்டேன். இக் கூற்றில் இரண்டு பிரச்சினைகள் உண்டு. தமிழ் மக்கள் மத்தியிலான வாக்கு எண் ணிக்கையில் தமிழ்த் தேசிய நிலைப்பாடுதான் இப்போதும் முன்னிலையில் நிற்கிறது. நாங்கள் தேசம்/ தேசிய இனம் என நாம் எம்மை அடையாளப்படுத்துவது அனைத்துல கச் சட்டங்களின் பாற்பட்டதும், லெலின் முதல் பெனடிக்ட் அன்டேர்சன் வரையிலான தலைவர் களாலும், அறிஞர்களலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எமதுஉரிமையுன் பாற்பட்டதேயன்றி, அது இனவாதமல்ல. மேலே குறிப்பிட்ட விடயங்களைத் தொகுத் துப் பார்க்கும் போது தமிழத் தேசிய நிலைப்பாடு தோல்வியடைந்துருக்கிறது என்ற கூற்று பொருத்தமற்றது என்பது நன்கு தெரிகிறது. இந் நிலைப்பாடு நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது என்று கூறலாம். மேலும், NPP க்கு வாக்களித்தவர்களிடம் தனியாக ஒரு கருத்துக் கணிப்புவைத்து ஈழத் தமிழர் வரு தேசம்/ தேசிய இனம் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டால் பெரும் பாலானோர் ஓம் என்றுதான் பதிலளிப்பர். நடாளு மன்றத் தேர்தலில் பலர் கொள்கையை மட்டும் பார்த்து வாக்களிப்பது இல்லை என்பது ஒரு அரசியற் பிரச்சினை. தற்போதுள்ள நிலையை வந்த பின் காப்போன் நிலை எனப் புரிந்து, இதற்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பது உரையாடப்பட வேண்டும். பொருளாதாரத்தில் Joseph Shumpeter முன்வைத்த creative destruction என்ற கோட்பாடு ஒன்று உண்டு. இதனைப் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’என்பதற்கு நிகராகப் பார்க்கலாம். இங்கு பழையன, புதியன என்பவை ஆட்களைக் குறிப்பவை அல்ல. புத்தாக்கத்தையும், புதிய பண்பாட்டையும் குறிப்பன. எமது ஈழத் தமிழ் தேச நிர்மாணத்துக்கும் இக் கோட்பாட்டுச் சிந்தனை உதவும். https://www.ilakku.org/நாடாளுமன்றத்-தேர்தலில்-3/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.