Everything posted by கிருபன்
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
எண்ண ச்சொல்லி விட்டார்கள்
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இப்போதைய தலைமுறை நாட்டை ஆள நினைப்பவர்கள். முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அடைந்திருக்கலாம்!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
கொழும்பில் சஜித்துக்கு அலை அடிக்கின்றது. ஆனால் அநுரவும் சில தேர்தல் தொகுதிகளை வென்றுள்ளார். ரணிலுக்கு வாக்களித்தவர்கள் இரண்டாவது தெரிவாக சஜித்தையே அநேகமாகப் போட்டிருப்பார்கள். ரணிலுக்குப் போட்டவர்களின் இரண்டாவது விருப்பத் தெரிவை எண்ணும்போது சஜித் வெல்ல வாய்ப்பிருக்கின்றது! ஜேவிபியின் வெற்றி கைநழுவிப் போனால் கலவரம் வெடிக்கும் நிலை உருவாகலாம் என்பதால்தான் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. Polling Division - Colombo Central BackColombo District SAJITH PREMADASA SJB 46,063 Votes 51.77% ANURA KUMARA DISSANAYAKE NPP 20,220 Votes 22.72% RANIL WICKREMESINGHE IND16 19,397 Votes 21.80% NAMAL RAJAPAKSA SLPP 1,123 Votes 1.26% DILITH JAYAWEERA SLCP 367 Votes 0.41% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 295 Votes 0.33% யாழ் மாவட்ட இறுதி முடிவுகள்.. அரியத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் சங்கூதிவிட்டார்கள் Jaffna Final 121,177 32.60% Sajith Premadasa 32.60% Order 116,688 31.39% Ariyanethiran Pakkiyaselvam 31.39% Order 84,558 22.75% Ranil Wickremesinghe 22.75% Order 27,086 7.29% Anura Kumara Dissanayake 7.29% Order 6,074 1.63% K.k. Piyadasa 1.63% Order 16,105 0.13% Other தமிழர்கள் வசிக்கும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் அரியம் நாலாவது இடத்தில்!😱😱😱😱 Polling Division - Potuvil BackDigamadulla District SAJITH PREMADASA SJB 70,942 Votes 55.26% RANIL WICKREMESINGHE IND16 30,263 Votes 23.57% ANURA KUMARA DISSANAYAKE NPP 18,053 Votes 14.06% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 4,802 Votes 3.74%
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
சனத்தொகை கூடிய கொழும்பு, களுத்துறை , கம்பஹா மாவட்டங்களில் தெளிவான வெற்றியாளர் இல்லை! அநுரவின் வாக்கு சதவீதம் மெதுவான இறங்குமுகத்திலும், சஜித்தின் வாக்கு சதவீதம் மெதுவான ஏறுமுகத்திலும் உள்ளன. எனினும் சஜித் 40% ஐ தாண்டுவது கடினம். Polling Division - Dehiwala BackColombo District ANURA KUMARA DISSANAYAKE NPP 19,338 Votes 41.73% SAJITH PREMADASA SJB 12,505 Votes 26.98% RANIL WICKREMESINGHE IND16 11,565 Votes 24.96% NAMAL RAJAPAKSA SLPP 1,163 Votes 2.51% DILITH JAYAWEERA SLCP 753 Votes 1.62% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 375 Votes 0.81% Polling Division - Kalkudah BackBatticaloa District SAJITH PREMADASA SJB 45,325 Votes 49.03% RANIL WICKREMESINGHE IND16 24,782 Votes 26.81% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 10,890 Votes 11.78% ANURA KUMARA DISSANAYAKE NPP 7,504 Votes 8.12% K.K. PIYADASA IND4 983 Votes 1.06%
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அரியம் மட்டக்களப்பில் மண் கவ்வியுள்ளார்! Polling Division - Batticaloa BackBatticaloa District SAJITH PREMADASA SJB 64,068 Votes 43.37% RANIL WICKREMESINGHE IND16 41,538 Votes 28.12% ANURA KUMARA DISSANAYAKE NPP 24,168 Votes 16.36% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 12,758 Votes 8.64%
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அம்பாந்தோட்டை இறுதி முடிவுகள்: Hambantota Final 221,913 51.96% Anura Kumara Dissanayake 51.96% Order 131,503 30.79% Sajith Premadasa 30.79% Order 33,217 7.78% Ranil Wickremesinghe 7.78% Order 26,707 6.25% Namal Rajapaksa 6.25% Order 2,978 0.70% Dilith Jayaweera காலி இறுதி முடிவுகள்: Galle Final 366,721 51.45% Anura Kumara Dissanayake 51.45% Order 189,555 26.59% Sajith Premadasa 26.59% Order 107,336 15.06% Ranil Wickremesinghe 15.06% Order 24,382 3.42% Namal Rajapaksa 3.42% Order 8,263 1.16% Dilith Jayaweera பொலநறுவை இறுதி முடிவுகள்: Polonnaruwa Final 130,880 46.12% Anura Kumara Dissanayake 46.12% Order 100,730 35.49% Sajith Premadasa 35.49% Order 36,908 13.00% Ranil Wickremesinghe 13.00% Order 5,594 1.97% Namal Rajapaksa 1.97% Order 1,727 0.61% Dilith Jayaweera
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
All Island Results - Cumulative ANURA KUMARA DISSANAYAKE NPP 1,825,817 Votes 41.73% SAJITH PREMADASA SJB 1,387,067 Votes 31.70% RANIL WICKREMESINGHE IND16 733,157 Votes 16.76% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 174,484 Votes 3.99%
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
சிறுபான்மை தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் மாவட்டங்களில் அநுர 50% க்கு குறைவாக எடுத்திருக்கின்றார். ஆனால் சிங்கள மாவட்டங்கள் அனைத்திலும் 50% க்கு அதிகம் எடுத்துள்ளார். மூன்றாவதாக வந்த ரணிலுக்குப் போட்டவர்களின் வாக்குகளில் இரண்டாவது தெரிவாக உள்ளவரை எண்ணினாலே வெற்றியாளரைத் தீர்மானிக்கலாம். அநுரவை சஜித் மேவுவது முடியாது போலுள்ளது! All Island Results - Cumulative Anura 41.87% Votes - 1,686,167 Sajith 30.97% Votes - 1,258,248 Ranil 16.69% Votes - 672,162 Ariyanethiran 4.32% Votes - 174,197
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Postal Votes - Digamadulla District 11,120 42.66% Anura Kumara Dissanayake 42.66% Order 7,368 28.27% Sajith Premadasa 28.27% Order 6,719 25.78% Ranil Wickremesinghe 25.78% Order 318 1.22% Namal Rajapaksa
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அப்படியா! தாயகத் தமிழர்கள் எங்களைப் போன்ற புலம்பெயர் தமிழர்களின் நுகர்வோர் கலாச்சாரத்திற்கு மாறிவிட்டார்கள். அதனால் பொருளாதார ஸ்திரத்திற்காக பெருமளவில் வாக்களித்துள்ளார்கள் போலிருக்கு. மோசமான அரசியல் தலைமையால் தமிழர்களின் வாக்குகள் மூன்றாகப் பிரிந்து, கொஞ்சம் அநுரவுக்கும் போயுள்ளதாகத் தோன்றுகின்றது. சிங்களவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் நசுக்கப்பட்டுள்ளதால் பெரிய மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து அநுரகுமாரவுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் சீனாவும், IMF உம் கழுத்தைத் திருகிக்கொண்டுதான் இருப்பார்கள்!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Matale Cumulative 12,186 58.23% Anura Kumara Dissanayake 58.23% Order 4,243 20.27% Ranil Wickremesinghe 20.27% Order 3,816 18.23% Sajith Premadasa 18.23% Order 372 1.78% Namal Rajapaksa 1.78% Order 128 0.61% Dilith Jayaweera 0.61% Order 183 0.03% Other Postal Votes - Colombo District 20,864 61.02% Anura Kumara Dissanayake 61.02% Order 7,645 22.36% Ranil Wickremesinghe 22.36% Order 4,080 11.93% Sajith Premadasa 11.93% Order 561 1.64% Namal Rajapaksa 1
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தபால் மூல வாக்களிப்பில் சிங்களவர்கள் எல்லாம் பாத்துப் பாராமல் அநுர குமாரவுக்குப் போட்டிருக்கின்றார்கள்!
-
இனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை; சீமான் பேட்டி
இனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை; சீமான் பேட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் லட்டு பிரச்சினையையும், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையையும் கிளப்புகின்றனர்.நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரவை வாபஸ் பெற்றால் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுமா?. மேற்கு வங்கத்திலும், பீகாரிலும் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள், இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடியாது. இனிவரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடாது. எங்களது எண்ணத்திற்கு விருப்பமுள்ள சின்னத்தில் போட்டியிடுவோம். தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். கலைப் பண்பாட்டிற்கு மதுரையும், தொழில் வளர்ச்சிக்கு கோவையும், திரைக்கதை, கணினி, கப்பல் போக்குவரத்திற்கு சென்னையும், ஆன்மிகத்திற்கு கன்னியாகுமரியும், நிர்வாகத்திற்கு திருச்சியும் ஆகியவற்றை தலைநகராக வைக்க வேண்டும்\” இவ்வாறு அவர் பேசினார். https://akkinikkunchu.com/?p=292308
-
தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்
தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறைகள் ஏற்படின் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ”ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்" என்றும் அமைச்சர் தெரிவித்தார். [எ] https://newuthayan.com/article/தேவை_ஏற்பட்டால்_ஊரடங்குச்_சட்டம்_அமுல்படுத்தப்படும்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
பிற்பகல் இரண்டு மணியளவில் வாக்கு நிலவரம்: யாழ்ப்பாணத்தில் பலர் நித்திரை அல்லது கஜே கோஸ்டியின் வேண்டுகோளின்படி பகிஸ்கரிக்கின்றார்கள் போலிருக்கு! Kurunegala – 65% Kegalle – 65% Gampaha – 62% Galle – 61% Puttalam – 57% Nuwara Eliya – 70% Matara – 64% Rathnapura – 60% Colombo – 60% Kalutara – 60% Mannar – 60% Badulla – 56 % Trincomalee – 54% Monaragala – 65% Hambantota – 60% Vanni – 58% Jaffna – 49% Ampara – 60% Anuradhapura – 70% Mullathivu – 57% Kilinochchi – 56% Kandy – 65% https://www.newswire.lk/2024/09/21/presidential-election-2024-voter-percentage-as-of-noon/
-
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்களும் மட்டக்களப்பு மக்களும்
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்களும் மட்டக்களப்பு மக்களும் September 19, 2024 மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் எப்போதுமே தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். தமிழரின் விடுதலை போராட்டத்திற்காக பல்லாயிரம் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்தவர்கள். போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய உணர்வு இன்னும் அழிந்துபோகவில்லை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் பறைசாற்றியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அம்மான், பிள்ளையான் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த வியாழேந்திரன் போன்றோர் அரசுடன் இணைந்தாலும் அவர்களுக்கும் மக்களுக்குமான உறவு பற்றாக்குறையாகவே காணபப்டுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மூன்று தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. இதில் கல்குடா மற்றும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் சிறுவான்மையாகவும் வாழ்கின்றனர். பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 100 சதவீதம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இலங்கையில் நடைபெற்ற எட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தல்களில் எழு தேர்தல்களில மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டணி வேட்பாளர்களுக்கே அதிகபடியான வாக்குகளை வழங்கியுள்ளார்கள். 2019 ஜனாதிபதி தேர்தலின் போது நாடுமுழுவதும் கோட்டா அலை வீசிய போதும் மட்டக்களப்பு மாவட்ட மக்களில் 79 சதவீதமானவர்கள் சஜித் பிறேமதாஸவிற்கே வாக்களித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச தரப்பு தமிழ் பிரதிநிதிகளாக செயற்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரின் அரசியல் செயற்பாடுகள் காரணமாகவும் ராஜபக்ஷ குடும்பத்தின் மீதுள்ள வெறுப்பு காரணமாகவும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வகுத்த வியூகத்தின் அடிப்படையில் சஜித் பிறேமதாஸவிற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாக்களித்தனர். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளது. 1982ம் ஆண்டு முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரதான வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் ஜே.ஆர். ஜயவர்தன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் ஹெக்டர் கொப்பேகடுவ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் குமார் பொன்னம்பலம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஜே.ஆர். ஜயவர்தன 40.05 சதவீத வாக்குகளையும், குமார் பொன்னம்பலம் 39.22 வாக்குகளையும், ஹெக்டர் கொப்பேகடுவ 18.06 சதவீத வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். இதில் பட்டிருப்குத் தொகுதியில் குமார் பொன்ம்பலம் 65 சதவீதமான வாக்குகளைப் பெற்றார். 1988ம் ஆண்டு இரண்டாவது ஜனாதிபதி தேர்தல் பிரதான வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் ரணசிங்க பிறேமதாஸ, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சிறிமாவோ பண்டாரநாயக்க, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியில் ஒஸ்வின் அபேயகுணசேகர ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ரணசிங்க பிறேமதாஸ 50.99 சதவீத வாக்குகளையும், ஒஸ்வின் அபேயகுணசேகர 31.63 வாக்குகளையும், சிறிமாவோ பண்டாரநாயக்க 17.38 சதவீத வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். 1994 ஐக்கிய தேசியக் கட்சிக்கு மறக்க முடியாத ஆண்டு 17 வருடகால தொடர் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட ஆண்டு. 1994ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கைப்பற்றினார். பிரதான வேட்ப்பாளர்களாக பொதுஜன ஐக்கிய முன்னணியில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியில் ஸ்ரீமதி திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 87.30 சதவீத வாக்குகளைபெற்றார். ஸ்ரீமதி திஸாநாயக்க 8.93 வாக்குகளை மாத்திரமே பெற்றார். இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நேரடி யுத்தம், உயிரிழப்புகள், உடைமை இழப்புகள், இடம்பெயர்வு, அகதிமுகாம் என பல துன்பங்களை அனுபவித்த தமிழர்களுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமாதான தேவதையாக தேன்றியதான் காரணமாக அதிகபடியான வாக்குகள் அளிக்கப்பட்டன. 1999ம் ஆண்டு நான் ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை எதிர்த்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தனர். பிரதான வேட்பாளர்களாக பொதுஜன ஐக்கிய முன்னணியில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கஇ ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ரணில் விக்கிரமசிங்க 61.19 சதவீத வாக்குகளையும், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 34.66 சதவீத வாக்குகளையும் பெற்றனர். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற்றிருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரால் இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது. பிரதான வேட்பாளர்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 79.51 சதவீதமானோரும் மஹிந்த ராஜபக்ஷறிற்கு 18.87 சதவீதமானோர் வாக்களித்தனர். குறித்த தேர்தலில் விடுதலைப் புலிகளின் பிளவு முக்கிய செல்வாக்குச் செலுத்தியது. 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது ஜனாதிபதி தேர்தல் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமானதாக கருதப்பட்டது தமிழர்களின் ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு நடைபெற்ற தேர்தல் இத்தேர்தலில் யுத்தத்திற்கு கட்டளையிட்ட மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும், யுத்தத்தை வழிநடத்திய சரத் பொன்சேகா புதிய ஜனநாயக முன்னணியிலும் பிரதான வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். சரத் பொன்சேகாவிற்கு 68.93 சதவீதமானோரும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு 26.27 சதவீதமானோர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் அரச தரப்பில் தமிழ் பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த பிரதியமைச்சராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோரின் தலைமையிலான பிரமுகர்கள் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்பட்டனர். இவர்களின் கருத்துக்களை தமிழ் மக்கள் ஏற்கவில்லை. இவர்கள் அந்த நேரத்தில் ஜனாநாயக வழிக்குத் திரும்பியிருந்தாலும் அவர்களின் செயற்பாடுகள் அனைத்துமே ஆயுதக்குழுக்களின் அணுகுமுறையாகவே நோக்கப்பட்டது. அது மாத்திரமின்றி விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்தவர்கள் இரண்டாகப் பிரிந்து எதிரும் புதிருமாக சொற்போரில் ஈடுபட்டுவந்திருந்தனர். சகோதர சமூகத்தின் அரசியல் சக்தியாக கருதப்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர். அரசியல் தாகத்துடன் காணப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் ஆட்சிமாற்றம் தேவை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக அமோகமான வாக்குகளை சரத் பொன்சேகாவிற்கு மட்டக்களப்பு மக்கள் வழங்கினர். இருந்த போதும் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் தெரிவானார். 2015ம் ஆண்டு ஏழாவது ஜனாதிபதி தேர்தல் ஆட்சி மாற்றம் தேவை என காத்திருந்த தமிழர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமைந்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரிந்து ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பல அமைப்புக்கள் கூட்டணியாக மைத்திரிபால சிறிசேனவை புதிய ஜனநாயக முன்னணியில் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவினை எதிர்த்து களமிறக்கினர். இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்தனர். இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மைத்திரிபால சிறிசேனவிற்கு 209,422 வாக்குகள் 81.62 சதவீதமான வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு 41,631 வாக்குகள் 16.22 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதம மந்திரியாக நியமித்து நல்லாட்சி என்ற ஒரு அரசாங்கம் உருவானது இந்த ஆட்சியின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கைகொண்டனர். தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டன, தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் படிப்படியான குறைக்கப்பட்டு காணிக்கள் ஒரு பகுதி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன இவ்வாறு சில தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்த போதிலும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம்காட்டுவது மிகக் குறைவாகவே காணப்பட்டது. 2019ம் ஆண்டு எட்டாவது ஜனாதிபதி தேர்தல் பிரதான வேட்பாளர்களாக புதிய ஜனநாயக முன்னணியில் சஜித் பிரேமதாசவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் கோட்டபாய ராஜபக்ஷவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் நாட்டில் சிங்களப் பிரதேசங்களில் கோட்டா அலை வீசியது அவர் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஆனால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சஜித் பிறேமதாஸவிற்கே வாக்களித்தனர். 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிறேமதாஸவிற்கு 238,649 வாக்குகள் 78.70 வாக்குகளையும் கோட்டபாய ராஜபக்ஷவினால் 38,460 வாக்குகள் 12.68 சதவீதம் மாத்திரமே பெற முடிந்தது. இம்முறை நடைபெறவுள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிறேமதாஸ, தேசிய மக்கள் சக்தியில் அநுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்ஷ, தமிழ் பொது கட்டமைப்பு சார்பில் சுயேட்சையாக பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சுயேட்சையாக ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தமிழ் மக்கள் தமிரருக்கே வாக்களிக்க வேண்டும் என்ற கோஷம் மாவட்டத்தில் வலுப்பெற்றுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் பொது கட்டமைப்பு சார்பில் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோர் அரியநேத்திரனுக்கு ஆதரவாக தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் உட்பட்ட தமிழரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மூத்த உறுப்பினர்கள் தமது பூரண ஆதரவினை அரியநேத்திரனுக்கு வழங்க தீர்மானித்து பிரசார பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்கள் தமிழனுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற கேஷம் வலுப்பெறும் சந்தர்ப்பத்தில் சிங்கள வேட்பாளர்களின் வாக்குவீதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்படுகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்ணணி மற்றும் தொகுதி பிரதேச கிளை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிறேமதாஸவிற்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பளர்கள் உறுப்பினர்கள் மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் தமது பிரசார பணிகளை முன்னெடுத்துள்ளனர். இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், சாதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக மட்டக்களப்பின் தமிழ் பிரதேசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஆதரவாக சில குழுக்கள் மாவட்டத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க யாரும் முன்வராத நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு அமைப்ளபாளர் ராஜன் மயில்வாகனம் தற்போது அவருடன் இணைந்துள்ளார். முஸ்லிம் பிரதேசங்களைப் பொறுத்தவரை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நேரடியாக பிரசார நடடிக்கையில் ஈடுபட்டுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநருமான நஸீர் அகமட், அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் இணைந்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எது எவ்வாறாக இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பேரின்பராஜா சபேஷ் https://www.supeedsam.com/205270/
-
தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன் கைது !
தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன் கைது ! kugenSep 19, 2024 தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான கணவரின் ஒரு கை போரில் ஏற்பட்ட விபத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சந்தேக நபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் சந்தேக நபரான கணவன் இது தொடர்பில் தனது மனைவிக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று சந்தேக நபரின் மனைவி வீட்டின் அறைக்குள் இருந்து இரகசியமாக தனது கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்துள்ள நிலையில் அதனை அவதானித்த கணவன் தனது மனைவியின் கையை இரண்டாக வெட்டி எடுத்துள்ளார். காயமடைந்த 41 வயதுடைய மனைவி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.battinews.com/2024/09/blog-post_130.html
-
சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது
சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது சுவிஸில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 18ஆம் திகதி குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சம்பவ இடத்திலேயே இருவரையும் கைது செய்துள்ளனர். 40 மற்றும் 54 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இலங்கை இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://akkinikkunchu.com/?p=292153
-
ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்? September 19, 2024 தேர்தல் பரப்புரைகள் நிறைவுறுகின்றன. இன்னும் மூன்று தினங்களில் நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். தேர்தல் முடிவுகள் ஒன்றில் சாதாரணமான ஒன்றாக இருக்கலாம் அல்லது ஒரு வரலாற்று மாற்றமாக இருக்கலாம். எது நடப்பினும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பில் எந்தவோர் அதிசயமும் நடந்துவிடப் போவதில்லை. எப்போதும் போல, தமிழரின் வாழ்வு வழமைபோல் உப்புச்சப்பு இல்லாத நிலைமை என்று சொல்லக்கூடிய நிலையிலேயே தொடரப்போகின்றது. இந்த இடத்தில் எழும் கேள்வி – தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கும் வாக்களித்தால் என்ன அதிசயம் நிகழ்ந்தவிடப் போகின்றது – அதேபோல், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதால் என்ன அதிசயம் நடந்துவிடப் போகின்றது? தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் தென்னிலங்கை வேட்பாளர்களில் சிலர் வெற்றி பெற்றிருக்கின்றனர் – சிலர் தோல்வியடைந்திருக்கின்றனர். வெற்றி பெற்றவர்கள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு மாறாக, அதனை கூர்மைப்படுத்தும் வேலைகளையே செய்திருக்கின்றனர். இது எதனை உணர்த்துகின்றது, நீங்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அவர்கள் எதைச் செய்ய நினைக்கின்றார்களோ, அதனையே செய்வார்கள். அவ்வாறாயின் தமிழ் மக்கள் வழங்கும் வாக்கின் பெறுமதி என்ன? கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் இதனைத் தெளிவாக நோக்கலாம் – தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றவர்களில் மைத்திரிபால ஒருவரே அதிகாரத்துக்கு வந்தார் ஆனால், அவரும் எதனையும் தமிழ் மக்களுக்காகச் செய்யவில்லை. இந்த ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தவரையில் யார் வெற்றி பெறுவார் என்பதைக் கணிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. அநுரகுமார சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகிறாரென கணிப்புகள் கூறுகின்றன. கோட்டபாயவின் ஆதரவுத் தளம் முழுவதும் அநுரவுக்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் அநுரகுமார வெற்றிபெற்றால் தோல்வி யடையப் போகும் ஒருவருக்கு அளிக்கப்படும் தமிழ் வாக்குகளின் பெறுமதி என்ன? கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சஜித் பிரேமதாஸவுக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். ஆனால், அவர் வெற்றிபெறவில்லை. அப்போதும் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் அரசியல்வாதிகள் கோரியிருந்தனர். இப்போதும் தமிழ் அரசு கட்சியின் ஓர்அணி, சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றது. சுமந்திரன் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார். சஜித் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் கணிப்புகள் உண்டு. ஏனெனில், சஜித் வெற்றிபெற வேண்டுமாயின் அவருக்கு தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் முழுமையான வாக்குகள் கிடைக்க வேண்டும் அதற்கான வாய்ப்பு தற்போதில்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய உணர்வுள்ள மக்களுக்கு முன்னால் தமிழ் பொது வேட்பாளர் ஒரு தெரிவாக இருக்கின்றார். இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் அரசியல் வாதிகளும் இருக்கின்றனர். அவர்களும் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் மூன்றாக பிரிகின்றது? இது தமிழ் மக்களின் ஜனநாயக பலத்தை காண்பிப்பதற்கு உகந்த ஒன்றல்ல. ஆனால், இதனை இலகுவாக சரி செய்ய முடியும் – எப்படி? வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊhடாக தமிழ் மக்களின் ஒற்றுமையை காண்பிக்க முடியும். இதன்மூலம் தென்னிலங்கை அதிகார போட்டியிலிருந்து நாங்கள் விலகி நிற்க முடியும். அதிகாரத்துக்கு வருபவருடன் தமிழ் மக்களின் தலைவர்கள் பேச முடியும். இது ஒன்றுதான் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடிய புத்திசாலித்தனமானமுடிவாகும். ஏனைய முடிவுகள் எவையுமே புத்திசாதுர்யமான முடிவுகளாக இருக்க முடியாது. அவைகளை முட்டாள்த்தனமான தீர்மானங்கள் என்று கூறுவதைத் தவிர, வேறு சொற்களை கண்டுபிடிப்பது கடினமானது. https://eelanadu.lk/எது-புத்திசாலித்தனம்-எத/
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று (20) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.05 இற்கு Emirates விமானமான EK-649 இல் துபாய் நோக்கி புறப்பட்டதாக விமான நிலைய தவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள “கோல்ட் ரூட்” முனையத்தை பயன்படுத்துவதற்கும் அவர் 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பசில் ராஜபக்ச துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகிக்கின்றன. http://www.samakalam.com/அமெரிக்கா-நோக்கி-பறந்தார/
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
சுமந்திரன், சாணக்கியனால் எனக்கு ஆபத்தில்லை; தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்களால் தனக்கு உயிர் ஆபத்து ஏற்படாது என தான் நம்புவதாக தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நான் பெரிசாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் எனக்கு தற்போது பிரமுகர் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த (MSD) இருவரை பாதுகாப்புக்கு தந்துள்ளார்கள். பொது வேட்பாளராக நான் போட்டியிடுவதால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ, சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக அவர்களால் எனக்கு ஆபத்து வரும் என நான் நம்பவில்லை. அதேவேளை என்னை வேட்பாளரின் இருந்து விலகுமாறு யாரும் என்னிடம் நேரில் கேட்கவில்லை. எனக்கு அந்த விதமான அழுத்தங்களையும் தரவில்லை. நான் போட்டியிடுவதால் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதற்காக யாரும் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ , அழுத்தம் தரவோ இல்லை என மேலும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=292099
-
யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி
யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி adminSeptember 18, 2024 சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த 15 விரிவுரையாளர்களை விமர்சித்து யாழ் பல்கலை வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/206845/
-
தியாக தீபத்தின் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: இன்று 5ம் நாள்… September 19, 2024 1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ம் திகதி இன்றைய தினம் தியாக தீபம் திலீபன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நிலை போராட்டத்தை ஆரம்பித்த 5ம் நாள் ஆகும். இந்த 5ம் நாளில், வழக்கம் போல் காலையில் சகல பத்திரிகைகளையும் படிக்கும் தியாக தீபம், போர்வைக்குள்ளே புதைந்து கிடந்தார். https://www.ilakku.org/தியாக-தீபம்-திலீபனின்-37ம்-2/
-
தேர்தல் வாக்குறுதிகளைப் பார்க்கிலும் வரலாறே முக்கியம்
தேர்தல் வாக்குறுதிகளைப் பார்க்கிலும் வரலாறே முக்கியம் எம்.எஸ்.எம்.ஐயூப் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் (கடந்த 22 ஆம் திகதி காலஞ்சென்ற டொக்டர் ஐ.எம். இல்யாசைத் தவிர) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களில் பெரும்பாலானோர் இது வரை ஒரு பிரசார கூட்டமேனும் நடத்தவில்லை எனத் தெரிய வந்துள்ளது. தெற்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சர்வஜன கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர ஆகியோரும் வடக்கில் தமிழ் பொது வேட்பாளர் பி.அரியநேத்திரனும் மட்டுமே பிரசார கூட்டங்களை நடத்துவதாக தெரிகிறது. மேலும் சில வேட்பாளர்கள் தாமும் களத்தில் இருப்பதைக் காட்டுவதற்காக ஏதாவது செய்கிறார்கள். இதேவேளை இவ்வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள். ஒருபோதும் இல்லாதவாறு இம் முறை இந்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார பிரச்சினையே குறிப்பாக பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது எவ்வாறு என்பதே முன்னுரிமை பெற்றுள்ளது. தற்போதைய் பொருளாதார நெருக்கடியே அதற்கான காரணமாகும். இந்த விடயத்தில் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால் தேர்தல் விஞ்ஞாபனங்கள் என்று முன்வைக்கப்பட்டுள்ள வாக்குறுதி பட்டியல்களை எவ்வாறு நம்பவுது என்பதேயாகும். ஏனெனில் பல தசாப்தங்களாக ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை அவர்கள் பதவிக்கு வந்து நிறைவேற்றவில்லை. அல்லது அவர்கள் ஒருசில வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அவர்களது வாக்குறுதிகளின் பொதுவான நோக்கமான வளமான வாழ்க்கை என்பதற்கு எதிராகவே அவர்கள் பதவிக்கு வந்து செயற்பட்டுள்ளனர். 1970 ஆண்டுக்கு பின்னரான 45 ஆண்டு கால வரலாற்றை எடுத்துக் கொண்டால் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 1960 களில் நாட்டில் பெரும்பான்மையான ஏழைகளுக்கு வாரமொரு முறை ஒரு நபருக்கு இரண்டு கொத்து (சுமார் ஒரு கிலோ) வீதம் அரிசி மானிய விலைக்கு வழங்கப்பட்டு வந்தது. 1965 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கம் அதில் ஒரு கொத்து அரிசியை மட்டும் இலவசமாக வழங்கி மற்றைய ஒரு கொத்து மானிய அரிசியை இரத்துச் செய்தது. இது பெரும்பாலான மக்களை வெகுவாக பாதித்தது. 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினதும் அதன் தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியினதும் தலைவியான சிறிமா பண்டாரநாயக்க 'சந்திர மண்டலத்திலிருந்தேனும்' கொண்டு வந்து முன்னர் போல் இரண்டு கொத்து அரிசியை மானிய விலையில் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார். இது இலங்கையின் தெர்தல் வரவாற்றில் முக்கிய வாக்குறுதியொன்றாக இன்னமும் பேசப்படுகிறது. ஐக்கிய முன்னணி அத்தேர்தலில் வாரலாற்றில் முதன்முறையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெற்று பதவிக்கு வந்த போதிலும் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. சிறிமா பண்டாரநாயக்கவின் அந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் வiலாறு காணாத உனவுப் பஞ்சமும் ஏற்பட்டது. எனவே 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்த வாக்குறுதி மீறலை கடுமையாக விமர்சித்த ஐக்கிய தேசிய கட்சி தாம் பதவிக்கு வந்தால் வாரத்துக்கு ஒரு நபருக்கு எட்டு இறாத்தல் (அக்காலத்தில் இலங்கையில் மெற்றிக் அளவீட்டு முறை அமுலில் இருக்கவில்லை) வீதம் தானியம் மானிய விலையில் வழங்குவோம் என்று வாக்குறுதியளித்தது. ஐதேக அத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, ஐதேக பொதுத் தேர்தலை நடத்தர்து தொடரந்து 17 வருடங்களாக மோசமான கொடுங்கொள் அட்சியொன்றை நடத்தியது. எனவே வயிற்றுப் பசியைப் பார்க்கிலும் ஜனநாயக உரமைகள் முன்னிலை பெற்றது. அதன் விளைவாக 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலசுக உள்ளிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி நிறைவேற்று ஜனாதிபதி முறைறை ஒழிப்பதை தமது முதன்மை வாக்குறுதியாக முன்வைத்தது. 62 வீத வாக்குகளைப் பெற்று பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவி சந்திரிகா குமாரதுங்க அத்தேர்தலில் ஜனாதிபதியானார். ஜனாதிபதித் தேர்தலொன்றில் அந்தளவு மக்கள் ஆதரவு பெற்றவர் சந்திரிகா மட்டுமே. எனினும் அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் அதே வாக்குறுதியை வழங்கினார். ஆயினும் அதனை நிறைவேற்றவும் இல்லை அதற்கான நாடாளுமன்ற பெரும்பான்மை அவரிடம் இருக்கவும் இல்லை. அதனை அடுத்து 2005 மற்றும் 2010 ஆம் ஜனாதிபதரித் தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்ஷவும் இதே வாக்குறுதியை வழங்கினார். 2010 ஆம் ஆண்டு அதற்காக அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தும் அவர் அதனை நிறைவேற்றாது தமது அதிகாரங்களை மேலும் அதிகரித்துக்கொள்ளும் வகையில் அந்த பெரும்பான்மை பலத்தை பாவித்தார். இவ்வாறே 2015 ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக மைத்திரிபால சிறிசேனவும், வளமான நாட்டை (சௌபாக்கியயே தெக்ம) உருவாக்குவதாக 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்குறுதியளித்தனர். இவ்வாறு தொடர்ந்து பல தலைவர்கள் வாக்றுதிகளை வழங்கி இறுதியில் 2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. இந்த வரலாற்றை மறந்து தேர்தல் விஞ்ஞாபனங்களை நம்புவதா என்ற கேள்வி மக்கள் முன் உள்ளது. இன்றைய ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான கடசிகளில் ஐதேகவின் வரலாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் வரலாறும் ஒன்றாகும். ஏனெனில் 2020 ஆண்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தி ஐதேகவிலிருந்து பிரிந்து சென்றது. அந்தப் பிளவும் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் காரணமாக ஏற்படவில்லை. அது கட்சித் தலைமை பதவிக்காக ரனிலுக்கும் சஜித்துக்கும்; இடையே ஏற்பட்ட பலப் போரின் விளைவாகும். எனவே ஐதேகவின் கடந்த காலத்துக்கான பொறுப்பிலிருந்து தற்போதைய ஐதேகவுக்கோ ஐசமவுக்கோ தப்பிவிட முடியாது. அக்கட்சி இனப் பிரச்சினையைப் பற்றி இன்று எதைக் கூறினாலும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கக் கூடிய நிலையில் இருந்த அப் பிரச்சினையை பாரிய யுத்தமாக மாற்ற ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான ஐதேக அரசாங்கத்தின் கொடிய அடக்குமுறையே காரணமாகியது. சஜித்தின் தந்தையான ரணசிங்க பிரேமதாசவும் ரணில் விக்ரமசிங்கவும் அவ்வரசாங்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தனர். அவ்வரசாங்கம் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால். 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்திருக்கலாம். 1983 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி புலிகள் 13 இராணுவத்தினரை கொன்ற போது அவர்களில் உடல்களை அவரவரது கிராமங்களுக்கு அனுப்பாது அவற்றை கொழும்புக்கு கொண்டு வந்தமை பிரச்சினையை ஊதிப்பெருக்கி பெரும்பான்மை மக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிட்டதற்குச் சமமாகும். அதன் விளைவை நாடு பின்னர் அனுபவித்தது. இந்தப் போரின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எங்கும் அறிக்கையிடப்படவில்லை. சில அறிக்கைகளின் படி இவ்வெண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகும். அதேபோல் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்த மக்கள் விடுதலை முன்னணியை எவ்வித ஆதாரமுமின்றி கருப்பு ஜூலை கலவரத்தோடு தொடர்புபடுத்தி தடை செய்து அதனை மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளியதும் ஐதேகவேயாகும். பின்னர் அக்கிளர்ச்சியை அடக்குவதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000க்கும் அதிகமாகும் என கூறப்படுகிறது. 1989 ஆம் ஆண்டு ரனசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றன் பின்னர் நாட்டில் பல பகுதிகளில் வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடந்த காட்சி அக்காலத்தில் பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்தது. பட்டலந்த, எலியகந்த போன்ற சித்திர வதை முகாம்களை பற்றி எத்தனையோ கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சியின் போது சுதந்திர வர்த்தக வலயங்கள், பாரிய நீர் தேக்கங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அதிகரித்து வந்த கடன் சுமைக்கு அது எவ்வகையிலும் பரிகாரம் ஆகவில்லை. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் ஐதேக ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐதேக ஆட்சி அமைத்தது. சஜித்தும் அரசாங்கங்களில் அமைச்சராக இருந்தார். இன்று போலவே வாக்குறுதிகளை வழங்கி அவ்வாறு பதவிக்கு வந்தாலும் அபிவிருத்தி என்று எதுவுமே நடைபெறவில்லை. அக்காலத்திலும் அதிகரித்து வந்த கடன்களே 2022 ஆம் ஆண்டு நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியது. பொதுஜன முன்னணியின் வரலாற்றைப் பற்றி இந்hநட்டு சிறுபான்மை மக்களுக்கு புதிதாக எதையும் கூறத் தேவையில்லை. மக்கள் விடுதலை முன்னணி சந்திரிக்காவின் காலத்தில் 14 மாதங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்று முன்மாதிரியாக நடந்து காட்டியுள்ளது. வன்முறை அரசியலை கைவிட்டு சுமார் 35 ஆண்டுகளாக ஜனநாயக அரசியலிலும் முன்மாதிரியாக இருந்து காட்டியுள்ளது. தமது பழைய பிழையான நிலைப்பாடுகளையும் படிப்படியாக கைவிட்டு வந்துள்ளது. ஆயினும் அக்கட்சி பூரண அதிகாரத்துடன் இது வரை ஆட்சியில் இருந்ததில்லை. அவ்வாறான நிலையில் நிலைமை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-வாக்குறுதிகளைப்-பார்க்கிலும்-வரலாறே-முக்கியம்/91-343898
-
பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் கொழும்பில்
பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் கொழும்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர். இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்க இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பி.ப. 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பி.பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பி.ப 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று பி.ப. 2 மணிக்கு கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளது. மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொட பகுதியில் இன்று பி.ப.3 மணிக்கு இடம்பெறவுள்ளது. http://www.samakalam.com/பிரதான-வேட்பாளர்களின்-இற/