Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் இணக்கம் Published By: Digital Desk 3 10 Oct, 2025 | 10:24 AM காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 48 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தியது. 2 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 67 ஆயிரத்து 194 பேர் உயிரிழந்துள்லனர். இதனிடையே, பணய கைதிகள் விடுதலை, இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டார். அதன் பயனாக போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன. ஒப்பந்தப்படி காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். இதையடுத்து, 72 மணிநேரத்தில் இஸ்ரேலிய பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டும். அதன்படி, உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணய கைதிகள், கொல்லப்பட்ட 28 இஸ்ரேலிய பணய கைதிகளின் சடலங்களை ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 2 ஆயிரத்து 250 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவர். இந்நிலையில், காசா முனையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் அமைச்சரவை இன்று இணக்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் இன்றுமுதல் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. தற்போதைய போர் நிறுத்தம் தற்காலிகமானதாகும். இரு தரப்பும் ஒப்பந்தப்படி அனைத்து விதிகளையும் பின்பற்றும் பட்சத்தில் தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு தரப்பு மீறினாலும் மீண்டும் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227379
  2. திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் : த.தே.ம.முன்னனி அமைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு 10 Oct, 2025 | 09:07 AM திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (09) முறைப்பாடு செய்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் திரிவைத்தகுளம் என்னும் கிராமம் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அந்த விடயங்களை நாங்கள் கடந்த யூலை மாதம் கள விஜயம் செய்து ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொண்டு வந்திருந்தோம். காணி உரிமையாளர்கள ஒலுமடுவில் இருக்கிறார்கள். அவர்கள் காணியை வெளியாக்கிய போது அவர்கள் மீது வனஇலாகா திணைக்களம் வழக்கு தாக்கல் செய்து மூன்று வருடங்கள் வழக்கு இடம்பெற்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் தான் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் குறிப்பாக மகிந்தவின் மொட்டுக் கட்சியின் அமைப்பாளராக இருக்கின்ற பிமல் தர்மராஜா குழுவினரால் டோசர் மூலம் காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயங்களை ஊடகங்கள் மூலம் நாம் வெளியில் கொண்டு வந்திருந்தோம். கடந்த மாதம் 30 ஆம் திகதி அந்த இடங்களைப் பார்வையிட வன்னியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர். அந்த இடத்திற்கு வருகை தநத காணியை ஆககிரமித்துள்ள பிமல் தர்மராஜா போன்ற குழுவினர் அங்கு வருகை தந்தவர்களை பார்த்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், என்னுடைய பெயரினையும், பிரதேச சபை உறுப்பினர் தமிழ் செல்வன் அவர்களது பெயரையும், வன்னிப் பாராளுடன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் இங்கு இருக்கிறர்களா? அவர்களை வெட்டுவதற்காக, அவர்களை கொலை செய்ய தான் வந்தோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்திற்கு முன்னால் தெரிவித்திருந்தார்கள். அச்சுறுத்துகின்ற மற்றும் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் கணொளிகளாக உள்ளன. அந்தப்பகுதி போகஸ்வேவ பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும் அந்த அச்சுறுத்தலுக்கு எதிராக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாட்டை வழங்கியுள்ளோம். அவர்கள் நேரடியாக போகஸ்வேவ பொலிஸ் நிலையம் ஊடாக இதனை அணுகுவவதற்காக இநத விசாரணையை மேற்கொள்ளுமாறு அந்த அதிகாரிக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள வாக்கு மூலம் வழங்கியுள்ளோம். எமது நிலங்கை அரச திணைக்களளுடன் இணைந்து ஆக்கிரமித்து 210 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்கள். காண உரிமையாளர்கள் போவதற்கு தடை போடும் திணைக்களங்கள் குடியேற்ற சிங்களவர்கள் துப்பரவு செய்து அபகரிக்கும் போது பேசாமல் இருக்கிறார்கள். இனிவரும் காலஙகளில் எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் திரிவைத்த குளம் தமிழர் காணிகளை மீட்க தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/227371
  3. மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது : மன்னார் மறைமாவட்ட ஆயர் 10 Oct, 2025 | 09:50 AM ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என கூறுகிறார்கள் என்பதை தெளிவு படுத்தினேன். எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு, குறித்த 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கிறார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழுவில் நேற்று வியாழக்கிழமை(09) மாலை சர்வமத குழு, பொது அமைப்புக்கள், போராட்டக்குழு ஆகியவற்றுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஜனாதிபதியை சந்தித்தேன். இதன் போது காற்றாலை தொடர்பான எமது பிரச்சனையை அவரிடம் முன் வைத்தேன். இந்த விடயம் குறித்து கதைத்த போது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றால் அவர்கள் குறித்த 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கின்றார்கள். நான் அங்கு எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. நான் மக்களின் நிலைப்பாட்டையும், மன்னாரில் ஏன் காற்றாலை வேண்டாம் என்று மக்கள் கூறுகிறார்கள் என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தினேன். எனினும் அவருடைய நிலைப்பாடு என்னவென்றால் குறித்த 14 காற்றாலை களையும் அமைத்ததன் பின்னர் மன்னாரில் கனிய மணல் அகழ்வையோ அல்லது மேலதிக காற்றாலைகளையோ ஒரு போதும் அனுமதிப்பதில்லை என்ற வாக்குறுதியை வழங்கினார். கணிய மணல் அகழ்வு மன்னாரில் முற்றாக இல்லை என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தினார். அமைச்சரவை ஊடாக அதனை எமக்கு உறுதிப்படுத்தி தருவதாகவும் குறித்த 14 காற்றாலைகளையும் மக்கள் அனுமதிக்கின்ற போது எந்த ஒரு அரசாங்கமும் இச் சிறிய பகுதியில் கணிய மணல் அகழ்வு மற்றும் மேலதிக காற்றாலை அமைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை. அதற்கும் அமைச்சரவை ஊடாக உறுதிமொழி வழங்குவேன் என கூறினார். எது எப்படியாக இருந்தாலும் நான் மன்னாரில் மக்களை சந்தித்ததன் பின்னர் இதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து வந்தேன். நாங்கள் எவ்வித ஆவணத்திலும் கையொப்பம் இடவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/227374
  4. அர்ச்சுனாவின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும் முருகானந்தன் தவம் ‘‘கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்’’ என்பார்கள். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தின் வழியாகத் தமிழ் அரசியல்வாதியாக வடக்கிலிருந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்து தனது கொள்கையில்லாத, தில்லாலங்கடி அரசியல் மூலமும் தனது சமூக ஊடகம் மூலமும் இன்று இலங்கையில் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களினால் நன்கறியப்பட்டவராக , விமர்சனங்களுக்குட்பட்டவராக உருவெடுத்துள்ளார். அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.துணிச்சலான அரசியல்வாதியாக, கோமாளித்தன அரசியல்வாதியாக, புலம்பெயர் தமிழர் பணத்தில் அரசியல் செய்யும் அரசியல்வாதியாக, உண்மையை ஒளிவு, மறைவின்றி பேசும் அரசியல்வாதியாக, பொய், புரட்டுக்கள் நிறைந்த அரசியல் வாதியாக, கொள்கை இல்லாத அரசியல்வாதியாக, தமிழ் மக்களின் வலி உணர்ந்த அரசியல்வாதியாக, தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதியாக, ஏனைய அரசியல்வாதிகள் மீது சேறடிக்கும் இழிவான அரசியல்வாதியாக என பல கோணங்களில் பார்க்கப்படுகின்றார். விமர்சிக்கப்படுகின்றார். இலங்கை அரசியலில் அர்ச்சுனா எம்.பி. போன்று மிக இலகுவாக அரசியல்வாதியாக வெற்றி பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்று அடித்துக் கூற முடியும். அந்தளவுக்கு அவர் ஒரு அதிர்ஷ்டசாலி. ஆனால் அர்ச்சுனா எம்.பியின் கொள்கை ,கோட்பாடுகள் என்ன? அவரின் அரசியல் பாதை எது?அவரின் இலக்கு இலட்சியம் எவை?அவர் நல்லவரா, கெட்டவரா? நல்ல அரசியல்வாதியா அல்லது சிறந்த நடிகரா? அவர் கூறுவதில் எது உண்மை எது பொய்?அவர் தமிழ் தேசியவாதியா அல்லது தமிழ்த் தேசியத் துரோகியா ?அவர் யாருக்கு நண்பன் யாருக்குப் பகைவன்? என்பது தமிழ் மக்களுக்கும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. ஏன் இதில் தான் எந்த வகை என்பது அர்ச்சுனா எம்.பிக்கு கூட தெரியாமல்தான் உள்ளது. அதனால்தான் அவர் நித்தம் ஒரு அரசியல் செய்கின்றார். எப்போதும் பரபரப்புக்களை ஏற்படுத்துகின்றார். தனது சமூக ஊடகத்தை மட்டுமே நம்பியிருக்கின்றார்.இதற்கு தற்போது அவர் ஜெனீவா சென்று நடத்தும் ‘ரோட் ஷோ’ அரசியல் சிறந்த உதாரணம். அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய நிலையில், 2024 ஜூலை மாதம், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற முறைகேடுகளையும் ஒழுங்கீனங்களையும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் அம்பலப்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். அதன்பின்னர் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பிலும் தலையிட்டு மக்கள் மனம் வென்றார். இதன் விளைவாக, அவர் அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால், ஒரு மருத்துவராக நேர்மையானவராக இருந்த அர்ச்சுனாவால் ஒரு அரசியல்வாதியாக நேர்மையானவராக இருக்க முடியவில்லை. 2024 நவம்பரில் சுயேச்சைக் குழு 17 என்ற அரசியல் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் 2024பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு, 27,855 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். அவ்வாறு தெரிவாவதற்கு முன்னரே அர்ச்சுனா தேசிய மக்கள் சக்தியின் வடக்கிற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பாளரான பெண் ஒருவருடன் தேசிய மக்கள் சக்திக்குத் தான் ஆதரவளிக்க விரும்புவதாக பேரம் பேசினார், ஆனால், அந்த ஒருங்கிணைப்பாளர் “முதலில் நீங்கள் உங்களை மூளையை பரிசோதியுங்கள்” என கூறி நிராகரித்தார். இது தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவும் வெளியானது. இதனையடுத்து, சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகக் கூறி அழையா விருந்தாளியாக ஐக்கிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரசாரக் கூட்டத்தில் அர்ச்சுனா மேடையேறியபோது, சஜித் பிரேமதாசாவினால் மேடையிலிருந்து இறக்கப்பட்டார். இதனையடுத்து, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாகக்கூறி அதன் ஆடையையும் அணிந்து கொண்டு திரிந்தார். ஆனால், அவர்களும் ஏற்க மறுக்கவேதான் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிட முன்னரே இவ்வளவு பேரம் பேசுதல்களையும் அர்ச்சகனா செய்தபோதும் அவர் மீது நம்பிக்கை வைத்தே தமிழ் மக்கள் அவரை தேர்தலில் வெற்றி பெற வைத்தனர். தேர்தலில் வென்றவுடனேயே தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரிப்பதாகத் தானாகவே அறிவித்தார். பாராளுமன்றத்திலும் ‘‘உங்களுக்கு 159 எம்பி.க்கள் அல்ல. என்னுடன் சேர்த்து 160எம்.பிக்கள்” என்று பிரதமரிடத்திலேயே தெரிவித்தார். அரசு கொண்டு வந்த சில சட்ட மூலங்களையும் ஆதரித்தார். ஆனால், அரசு அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. தனது அரசுக்கான ஆதரவை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திப் பார்த்தார். ஆனால், அவர் நினைத்து நடக்கவில்லை . மாறாக, அவர் பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளைகளுக்கு முரணாக நடந்து கொண்டதினால் ஒரு மாதத்திற்கு அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சபாநாயகர் தடைவிதித்தார். இதனையடுத்து, தான் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக அர்ச்சுனா சபையில் அறிவித்தார். தமிழ் மக்களின் எந்த நலனையும் கருத்தில் கொண்டு அவர் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறவில்லை. தன்னை அரசு தண்டித்து விட்டது என்ற கோபத்திலேயே அரசு கேட்காமல் அவராகவே வலிந்து கொடுத்த ஆதரவை அவராகவே வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அர்ச்சுனாவின் அரசியலே பொய், வாய்க்கு வந்ததை பேசுவது, ஏனையவர்கள் மீது சேறடிப்பத, தன்னை எதிர்ப்போரைக் கீழ்த்தரமாக சபையிலும் தனது சமூக ஊடகத்திலும் விமர்சிப்பது, தன்னை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒரு வளர்ப்பாக காட்டிக் கொள்வது, தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசும் ஒரேயொரு தமிழ் மக்களின் பிரதிநிதி தானே என கூறிக்கொள்வது, தானே சிங்களம் பேசத்தெரிந்த தமிழ் பிரதிநிதி என்பதாக சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது தான். இவ்வாறாக வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறியும் பித்தலாட்டங்களைச் செய்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரையும் தனது சமூக ஊடகத்தையும் வைத்து தமிழ் மக்களை முட்டாள்களாக்கி ஏமாற்றி வரும் அர்ச்சுனா எம்.பி. இப்போது அணி சேர்ந்துள்ளது நாமல் ராஜபக்‌ஷவுடன். இதனை பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றும் போது, ‘‘நாமல் ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், நான் அவரை ஆதரிப்பேன். அதனை அவரிடம் நேரடியாகவே கூறினேன். உங்கள் தந்தை, சித்தப்பா தமிழ் மக்களுக்குச் செய்த வேலைகளைச் செய்ய வேண்டாம். என்று அவரிடம் கூறியுள்ளேன். அவரும் அதற்கு இணங்கியுள்ளார்’’ என்று கூறியதன் மூலம் நாமல் ராஜபக்‌ஷவுடன் தனக்குள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் பாராளுமன்றத்தில் பல தடவைகள் நாமலுக்கு ஆதரவாகவும் ராஜபக்‌ஷக்களுக்கு ஆதரவாகவும் அர்ச்சுனா குரல் கொடுத்து வருகின்றார். அதுமட்டுமல்ல, தற்போது கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் ராஜபக்‌ஷக்கள் சிக்கியுள்ள நிலையில், அந்த கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகக் கூறி பொய்த் தகவலைப் பரப்பியவரும் இந்த அர்ச்சுனாதான். அவ்வாறு பொய் தகவலைப் பரப்பி அந்த கொள்கலன்கள் விடயத்தைத் திசை திருப்ப அர்ச்சுனாவை ராஜபக்‌ஷக்கள் குறிப்பாக, நாமல் ராஜபக்‌ஷ பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்களும் வெளியிடப்படுகின்றன. ராஜபக்‌ஷக்களுடனான அர்ச்சுனா எம்.பியின் டீலை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றத்தில் அர்ச்சுனா எம்.பி கைதானபோது பிணை எடுத்தவர் நாமல்ராஜபக்ச. இதன்போது அர்ச்சுனா எம்.பி கருத்துக்கூறுகையில், எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுகின்றேன். ஆனால், சிங்கள மக்கள் தமக்காகச் சேவையாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால், இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரைக்காட்டிக் கொடுத்துள்ளனர். மஹிந்த தமிழ் மக்களின் தலைவர் அல்லர். ஆனால், அவர் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால், அவர்கள் மஹிந்தவைக் காட்டிக் கொடுத்துள்ளனர். நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் என கூறியபோது, நானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது. பொய் கூறியவர்களை மேலாக பாரிய பொய்களைக்கூறுபவர்கள் வந்ததும் அனைவரும் அவர்களை நம்பினர்.ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன்’’ என்றார். மீண்டும் நாட்டில் மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ராஜபக்சக்கள் தற்போது இந்த அர்ச்சுனாவை தேர்ந்தெடுத்து பிரபாகரன் புகழ் பாட வைத்து அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கின்றார்கள். அதற்காகவே 2024 ஜூலை மாதம் வரையில் விடுதலைப்புலிகளின் தலைவரைப் பற்றியோ விடுதலைப் புலிகளைப் பற்றியோ எங்கும் எப்போதும் ஒரு வார்த்தைகூடப் பேசாத,தமிழ் மக்களின் எந்த வித வெகுஜனப் போராட்டங்களிலும் பங்கேற்காத, இந்த அர்ச்சுனா இன்று ‘‘பிரபாகரன் எனது தெய்வம்’’என்பதும் ‘‘தமிழ் மக்களுக்காகவே நான் முன்நிற்கின்றேன்’’ என்றும் முழங்கி வருகின்றார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தெய்வமாக நினைக்கும் வழிபடும் ஒருவரினால் எப்படி அதே தெய்வத்தை அழித்த அந்த தெய்வத்தின் தமிழீழம் என்ற ஆலயத்தைத் தகர்த்தெறிந்த ராஜபக்‌ஷக்களை ஆதரிக்க முடியும்? அவர்கள் நல்லவர்கள், வல்லவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்? ராஜபக்சக்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நான் ஆதரிப்பேன் என எவ்வாறு அறிவிக்க முடியும்? எனவே, அர்ச்சுனா எம்.பியின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள்தான் அதிலும் குறிப்பாக சாவகச்சேரி மக்கள்தான் தெளிவடைய வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அர்ச்சுனாவின்-அரசியல்-தொடர்பில்-தமிழ்-மக்கள்-தெளிவடைய-வேண்டும்/91-366032
  5. மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்; ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு!! யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகளுடன் அங்கசேட்டையில் ஈடுபட்டார் என்று ஆசிரியர் ஒருவருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் மீதே அந்த ஆசிரியர் அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில், மாணவிகள் தமது பெற்றோருக்குத் தெரியப்படுத்திய நிலையில், பெற்றோரால் பாடசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டுள்ளது. எனினும், பாடசாலை நிர்வாகம் உடன் நடவடிக்கைகளை எடுக்காததைத் தொடர்ந்தே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/மாணவிகளுக்கு_பாலியல்_சீண்டல்;_ஆசிரியருக்கு_எதிராக_முறைப்பாடு!!#google_vignette
  6. மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம் – நாகராசா லக்சிகா. adminOctober 10, 2025 பாடசாலை முடிந்ததும் உடுப்பு மாற்றி உணவு அருந்துவதற்கே தற்கால மாணவர்களுக்கு நேரமில்லை. குறிப்பாக முன்பள்ளி தொடக்கம் தரம் ஐந்து மாணவர்கள் வரை காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை பாடசாலை, பாடசாலை முடிந்ததும் மேலதிக வகுப்புகள் என ஓடிக்கொண்டே உள்ளனர். வீட்டுக்கு வந்தும் பாடங்களுக்கான வீட்டுப் பயிற்சிகள், கற்றல் நடவடிக்கைகள் என்று ஓய்வே இல்லாத ஒரு இயந்திரத்தை போல இயங்கிக் கொண்டே உள்ளனர். ஜாடி, கபடி, எல்லே, கிட்டி புல்லு, பல்லாங்குழி, எவடம் எவடம் புலியடி, கெத்தி போன்ற பல விளையாட்டுகளே இப்போது மறைந்து போன நிலையில், ஜாடி என்றால் என்ன? கபடி என்றால் என்ன? என்று வாய்மொழி ரீதியாக ஆய்வு செய்யும் புதிய தலைமுறையினராகவே தற்போதைய சிறுவர்கள் காணப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு காலத்தில் இருந்து கொண்டு நான் பயணம் செய்து வந்த பாதையை சற்று திரும்பி பார்த்தால் மீண்டும் வராதா அந்த அழகிய நாட்கள் என உள்ளம் ஏங்குகின்றது. ஆவணி மாதம் பிறந்ததும் எப்போது முதல் மழை பெய்யும், எப்போது வீட்டிலிருந்து சேனைப் பயிற்ச்செய்கைக்காக அம்மாவும் அப்பாவும் போவார்கள் என்ற காத்திருப்பு, அவர்கள் போகும்போது பாடசாலை விடுமுறை நாட்களில் அவர்களுடன் நானும் சேனைக்காட்டிற்கு செல்வதும் ஓடி ஆடி விளையாடுவதும் என்ற அழகிய நினைவுகள். எப்போது பாடசாலை விடும் என்று காத்திருந்து பாடசாலை விட்டதும் சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுப் பிள்ளையும் என்னோடு இணைத்துக்கொண்டு பின் கரியலில் மூன்று குட்டி பிள்ளைகளையும் ஏற்றி எடுத்து போற பாதையில் உள்ள சின்னக்கடையில் பக்கெட் ஐஸ்பழம், குச்சிமிட்டாய் எல்லாம் வாங்கி சைக்கிள் கூடைக்குள் போட்டு பாதை நீட்டுக்கும் சாப்பிட்டு விளையாடிக் கொண்டு பல கதைகள் பேசிய படி காட்டுப்பாதை வழியாக சேனைக்காடு சென்ற காலம். போற பாதையில் நாவல், இளந்தை, கூழா, விழாத்தி, கிலா, சூரை போன்ற மரங்களில் பழங்களைக் கண்டால் மரத்தில் ஏறி பழம் பறித்த காலம். அது மட்டுமா போற பாதையில் உள்ள குளக்கட்டுக்களுக்கு போகாமல் போன சரித்திரமே இல்லை. குளக்கட்டில் எல்லாரும் கொஞ்ச நேரம் இருந்து அங்கு உள்ள நாரை, கொக்கு, நீர்க்காகம் போன்ற பல பறவைகளையும் அங்கு காணப்படும் ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் பார்த்து ரசித்து மீண்டும் பயணத்தை தொடர்ந்த காலம். செல்லும் வீதி ஏற்றம் இறக்கம் கூடிய வீதியாகும். அந்த ஏற்றத்தால் மூச்சுப்பிடிக்க மிதித்து சைக்கிளை கஷ்டப்பட்டு ஏற்றிய பின் அப்பாடா இறக்கம், இறக்கத்தில் சத்தமிட்டு கூச்சல் போட்டுக்கொண்டு பறவையாய் பறந்து சென்ற காலம். அந்த மரத்துல பேய் இருக்காம் இந்த பற்றை குள்ள பேய் இருக்காம் என்று பயந்து பயந்து சென்று புளியங்காய் பறித்து உண்டு பயணத்தை தொடர்ந்த காலம். இப்படியாக ஒரு மாதிரி 30 நிமிட சைக்கிள் ஓட்டத்தை 1:30 மணி நேர ஓட்டமாக நீடித்து சேனைக்காட்டை வந்து அடைந்ததும், காரல் கீரை சொதி, கானந்தி கீரை சொதி, ஆரல் கீரை சொதி, குமிட்டி கீரை கடையல், திராய்கீரை சுண்டல் என்பவற்றில் கட்டாயமாக ஒரு கீரை கறியாவது அம்மா சமைத்து வைத்திருக்க அதை சோறுடன் வைத்து அதோடு மீன் பொறியலும் வைத்து உண்ட பின்னர், சேனைக்காட்டு வெட்டையில் ஏதாவது விளையாடி களைப்பாறிய பின் குளத்துக் கரை நோக்கி அனைவரும் சென்று அங்கு மண்வெட்டியால் மண்புழுவை வெட்டி எடுத்து தூண்டிலில் குத்தி குளத்துக்கரை நீரோடை ,ஆரைப்பற்றை நீரில் மீன் பிடித்து விளையாடிய காலம். வயல் வெட்டையில் குட்டிக் குளம் கட்டி மீன் குஞ்சுகளை ஓடையில் இருந்து பிடித்து வந்து கட்டிய குளத்தினுள் இட்டு விளையாடிய காலம். காய்ந்த மாட்டு சாணிகளைத் தூக்கி ஆட்காட்டியின் முட்டைகளை தேடி திரிந்து அழைந்து திரிந்த காலம். இப்படியாக பின்னேரம் ஐந்து மணி ஆகிவிடும். எப்படியாவது காட்டுப்பாதையில் யானை வருவதற்கு முன்னர் அப்பாவின் காவலில் அவசர அவசரமாக வீடு திரும்பிய காலம். இவ்வாறாக பாடசாலை முடிந்த பின்னும், சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் விளையாடிய என் நினைவுகள் கண்களில் கண்ணீரை சிந்த வைக்கின்றது. அதுமட்டுமா வேளாண்மை விதைப்புக்கு முதல் உழவு செய்யும்போது வயளோடு வயலாக நானும் விளையாடிய நாட்கள், வயல் விதைப்பன்று குடும்பம் குடும்பமாக வந்து சமைத்து வயல் விதைப்பில் ஈடுபட்டவர்களுடன் உணவருந்தி அவர்களின் பழங்கால கதைகளை கேட்டு சிரித்த காலம். இவ்வாறாக வயல் விதைப்பு முடிந்ததும் குருவிக்காவல், ஆகா என்ன ஒரு சந்தோசம் கிழிந்த தகரத் துண்டு ஒன்றை எடுத்து வயல் வரம்பில் காணப்படும் சிறிய ஆத்தி மரத்தை வளைத்து அதில் இருக்கை கட்டி அமர்ந்து அதில் தகரத் துண்டை கட்டி தடியால் அடித்து காய் கூய் என குருவி, புறா துறத்திய காலம். இடையிடையே விளாத்தியடி பிள்ளையாரடிக்கு சென்று விளாங்காய் ஆய்ந்து சாப்பிட்ட நினைவுகள், பின்னர் வாகைத் தண்டுகளை முறித்து அதை படுக்கை போல் பரவி அதன் மேல் குளத்துக் காற்றில் எண்ணையே மறந்து நித்திரை செய்த காலம். ஆரைப் பற்றை மணலை எடுத்து வந்து பரவி ஆரைப் பற்றையில் பிள்ளையார் போன்ற கல்லை எடுத்து வந்து சாமி வைத்து விளையாடிய காலம். இவ்வாறாக ஆரைப்பற்றை நீரில் குதித்து குதூகலமாக விளையாடி பின்னர் மழை பெய்ததும் அதில் நனைந்து விளையாடிய காலம். கச்சான் அறுவடை, சோளன் அறுவடை என்றால் அது இதைவிட விஷேசம் வீடுகளில் இருந்து சின்ன மிஷின், மாட்டு வண்டி என்பவற்றில் அனைவரும் குடும்பமாக வந்து, கச்சான் என்றால் அனைவரும் வட்டமாக இருந்து பல கதைகளையும் கதைத்துக் கொண்டு கச்சான் ஆய்வார்கள், ஒரு கொத்து ஆய்ந்தால் பத்து ரூபாய் என்ன ஒரு சந்தோசம் ஒரு கொத்து கச்சான் ஆய்ந்து அப்பாவிடமே பத்து ரூபாய் வாங்கும் போது. பின் பெரிய பானை ஒன்று வைத்து கச்சான் அவிய விட கச்சான் அவிய முதலில் ஒவ்வொரு கட்டம் கட்டமாக ருசி பார்க்கும் அனுபவம் இருக்கே மறக்கவே முடியாது. பானை சூடே ஏறி இருக்காது அதுக்கு முதலே எடுத்து சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று சண்டை. இவ்வாறாக சோளன் சேனைக்குள் கிளி, குரங்கு வராமல் காவல் பார்த்துக் கொண்டே சோளன் கதிரை முறித்து அடுப்பில் சுட்டு சாப்பிட்டு மகிழ்ந்த காலம். மழை அதிகமாக பெய்து வெள்ளம் . இந்நேரம் என்னோட குட்டி நண்பர்களை கூட்டிக்கொண்டு குளம் வான் போறது பார்க்க போன நினைவு. அது என்ன ஒரு அழகிய காட்சி. இப்படியாக நான் நடந்து வந்த பாதையை கூறப்போனால் கூறிக்கொண்டே போகலாம் ஆனால் இப்போதைய சிறுவர்களிடம் கேட்டுப் பாருங்கள் நீ வந்த பாதையை திரும்பிப் பார்த்து கூறு என்றால். நான் அந்த இடத்தில் மேலதிக வகுப்பிற்குச் சென்றேன் இங்கு மேலதிக வகுப்புக்குச் சென்றேன் என்ற ஒரு கவலையான ஒரு பதிலையே கூறுவார்கள். ஆனால் எனது பாதை ஒரு சிட்டுக்குருவி எப்படி ஒரு சுதந்திரமான பாதையில் பறந்து வந்து உயர பறந்ததோ. அதேபோன்று நானும் அழகான நினைவுகள் பலவற்றை கூறக்கூடிய நீண்ட பாதையால் பறந்து வந்து பல்கலைக்கழகத்தை அடைந்துள்ளேன். இப்போது எண்ணுகின்றேன் அந்த அழகிய காலம் மீண்டும் வருமா என்று. ஆம் கட்டாயம். என்னை எப்படி சுதந்திரமாக எனது தாய் தந்தையர் வளர்த்தார்களோ அதே போன்று எனது குழந்தையையும் நான் பல அழகிய கதைகள் கூறக்கூடிய பாதையால் சுதந்திரமாகப் பறந்து வரச் செய்வேன். நாகராசா லக்சிகா கிழக்கு பல்கலைக்கழகம் https://globaltamilnews.net/2025/221345/
  7. தலைமன்னாரிலிருந்து இராமர் பாலம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவை விரைவில்! 09 Oct, 2025 | 12:47 PM தலைமன்னாரிலிருந்து தீடைப் பகுதியில் உள்ள இராமர் பாலம் வரை சென்று சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்கான படகுச் சேவையினை ஆரம்பிக்க அனுமதி பெறப்பட்டதைத் தொடர்ந்து, படகுச் சேவைக்கான கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த படகு சேவையினை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில், அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (8) மாலை நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான இக்கலந்துரையாடலில் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்களுடன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் உள்ள கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையின் பராமரிப்பில் நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வட மாகாணத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டதிலிருந்து, குறித்த இடம், மன்னார் பிரதேச சபையின் கண்காணிப்பிலேயே இதுவரைக் காலமும் இருந்து வந்தது. 2015ஆம் ஆண்டு இந்த கடற்கரைப் பூங்கா பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு உட்பட்ட பகுதியாக கொண்டுவரப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் முன்பிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இராமர் பாலத்தை பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் படகுச்சேவையை பயன்படுத்துவதற்கான கோரிக்கையினை மன்னார் மக்கள் முன்வைத்ததுடன் அரச மட்ட தரப்பிலும் இக்கோரிக்கை பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச்சேவையினை மேற்கொள்வது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டு, படகுச் சேவைக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள படகு சேவைக்கான கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், படகுச் சேவைக்கான கட்டண வசூலிப்பை 50க்கு 50 என்ற அடிப்படையில் வன ஜீவராசிகள் திணைக்களமும் மன்னார் பிரதேச சபையும் செயற்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவையை நடைமுறைப்படுத்தலாம் என்றும் இதர வருமானங்களுக்கான திட்டங்களை மன்னார் பிரதேச சபையின் ஊடாக வகுத்து, அவற்றை செயற்படுத்தலாம் என்றும் அரச அதிபர் தனது உரையில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பில் பங்குபற்றிய தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் உறுப்பினர் உள்ளிட்டோர், மன்னார் பிரதேச சபை கடற்கரை பூங்காவை நீண்ட நாட்களாக பராமரித்து வரும் நிலையில், மன்னார் பிரதேச சபையின் வருமானம் மிகவும் குறைந்துள்ளதையும் இன்னும் சில காரணங்களையும் சுட்டிக்காட்டி, படகுச் சேவைக்கான நிதி வசூலிக்கும் பொறுப்பினை தமக்குத் தருமாறு கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கைக்கு பதிலளித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அதிகாரி பாத்தியா மடுகல்ல, அவ்வாறு செயற்பட முடியாது. வன ஜீவராசிகள் திணைக்களம் பல்வேறு இடங்களில் இவ்வாறான சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமக்கு உட்பட்ட பகுதியில் குறித்த கடற்கரை பூங்கா காணப்படுவதனால் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கைக்கு ஏற்ப செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். அந்தக் கருத்தினை மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஆதரித்துப் பேசினார். அத்தோடு, கூட்டத்தில் பங்குபற்றிய உறுப்பினர்களின் மேற்படி கருத்தினை பிறிதொரு நாளில் கூடிப் பேசித் தீர்மானிப்பதென மன்னார் அரசாங்க அதிபர் தெரிவித்து கலந்துரையாடலை நிறைவு செய்தார். https://www.virakesari.lk/article/227307
  8. மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்த திட்டம்! - இலங்கை தமிழ் அரசு கட்சியை சாடுகிறார் தீபன் 09 Oct, 2025 | 02:07 PM புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள தேவிபுர மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக இன்று (9) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன், மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை மாற்றிக்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எடுத்த முடிவு கைவிடப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்த இடத்துக்குச் சென்ற போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பகத்தின் தலைவர் தீபன் ஊடகங்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கையில், மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசு கட்சியினர் நிர்வாகத்தினை தெரிவு செய்து வருகின்றனர். அந்த நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை நியமிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இல்லத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்கு கொண்டுவர எண்ணுகின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் சம்மதிக்கப் போவதில்லை. இதேபோல போலியான செயற்பாடுகளை இனிமேல் முன்னெடுத்ததால் நாங்கள் வீதிக்கிறங்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/227315
  9. காசா அமைதி திட்டம் ; மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சி Published By: Digital Desk 3 09 Oct, 2025 | 10:44 AM காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை (09) மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 0.77 சதவீதத்தால் குறைந்து 65.74 அமெரிக்க டொலராக பதிவாகியது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் சந்தையில் 0.88 சதவீதத்தால் குறைந்து 62 அமெரிக்க டொலராக பதிவாகியது. பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தின் கீழ், காசா அமைதி திட்டம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நீண்டகால ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை அரசாங்கத்தை கூட்டி போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்தார். காசாவில் நடந்த போரினால் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்து காணப்பட்டன. ஏனெனில் போர் பரந்த பிராந்திய மோதலாக வளர்ந்தால் உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்தை முதலீட்டாளர்கள் எடைபோட்டனர். உக்ரேன் சமாதான ஒப்பந்தத்தில் முன்னேற்றம் தடைப்பட்டதால் ரஷ்யாவுக்கு எதிரான தடை நடவடிக்கைகள் தொடரும் என முதலீட்டாளர்கள் கருதியதால, புதன்கிழமை மசகு எண்ணெய் விலைகள் சுமார் 1 சதவீதம் அதிகரித்து. ஒரு வாரத்திற்குப் பின்னர் அதிகபட்ச நிலையை எட்டியது. கடந்த வாரம் மொத்த அமெரிக்க பெட்ரோலிய பொருட்கள் வழங்கல் — அமெரிக்க எண்ணெய் நுகர்வின் ஒரு அளவுகோல் — ஒரு நாளுக்கு 21.990 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்தன. இது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் பாரியளவில் அதிகரித்துள்ளதாக புதன்கிழமை எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/227282
  10. காசா அமைதி திட்டம் : இஸ்ரேல் - ஹமாஸ் இணக்கம் ; ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்பு Published By: Digital Desk 3 09 Oct, 2025 | 09:53 AM காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளமையை ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார். காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் எக்ஸ் தளத்தில், "அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன்," “இந்த மிகவும் தேவையான முன்னேற்றத்திற்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா, கட்டார், எகிப்து மற்றும் துருக்கியின் இராஜதந்திர முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். “சம்பந்தப்பட்ட அனைவரும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/227277#google_vignette
  11. தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணையால் வெள்ளப்பாதிப்பனை எதிர்கொள்வோருக்கு தீர்வு முன்வைக்கப்படவேண்டும் - ஆளுநரிடம் தவிசாளர் நிரோஷ் கோரிக்கை புதன், 08 அக்டோபர் 2025 07:18 AM யாழ்ப்பாணம் தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச தாபனங்களின் ஒத்துழைப்புடனோ நிறைவேற்றமாறு வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகத்திடம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்றத் தலைவர்களுக்கும் ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பிலேயே வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அக்கோரிக்கையினை முன்வைத்தார். யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான பெரும் அர்ப்பணிப்பினை வலிகாமம் கிழக்குப் பிரதேசமே மேற்கொள்கின்றது. தொண்டமானாறு மற்றும் செம்மணி நீரேரிகள் எமது ஆட்சிப் பகுதிக்கு உட்பட்டவை. நிலத்தடி நீரைப்பாதுகாப்பதற்கான உவர் நீர்த்தடுப்புத் திட்டம் இங்கு செயற்படுத்தப்படுவதனால் எமது மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளப்பாதிப்பினை எதிர்கொள்கின்றார்கள். அவ்வாறாக மக்கள் பாதிக்கப்படும் போதும் மக்களை நாம் நிலத்தடி நீர்ப்பாதுகாப்புத் திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக பாதிப்புக்களை சகித்து வாழ பல அரச கட்டமைப்பு கோருகின்றது. நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டத்துடன் இணைந்த உப திட்டங்கள் வகுக்கப்பட்டு அதன் வாயிலாக மக்களை வெள்ளப்பாதிப்பில் இருந்து நாம் பாதுகாக்கவேண்டும். அவ்வாறான திட்டங்கள் நிலைத்தகு சிந்தனையுடன் நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் எதிர்கொண்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு தீர்வு காணலாம். ஒவ்வொரு வருடமும் அச்சுவேலி வடக்கு, அச்சுவேலி தெற்கு, ஆவரங்காலின் ஒருபகுதி, வாதரவத்தை, புத்தூர் கிழக்கு என வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் பல பகுதி வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளாகின்றது. இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடர் நிலையை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான நிலையில் மாகாண சபை கூட தனது குறித்தொதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் கீழ் மேற்படி மக்களுக்கு சிறந்த திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி மக்களின் பாதிப்புக்களைக் குறைக்கலாம். அதற்கு ஏனைய உள்ளுராட்சி மன்றங்களும் தமது பகுதிக்கும் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டம் நன்மையளிக்கின்றது என்ற அடிப்படையில் நிதிகள் மாகாண மட்டத்தில் பகிரப்படும் போது விட்டுக்கொடுப்புக்களைச் செய்யமுடியும். மேலும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச கொடையாளர்களிடம் மேற்படி உவர் நீர்த் தடுப்பணை நன்னீர்த்திட்டத்தினை பேணுவதனால் பாதிக்கப்படும் மக்களுக்கான பாதிப்பை நிவர்த்தி செய்யத்தக்க திட்டத்தினை மேற்கொள்ள நிதி கோரிக்கையினை ஆளுநர் முன்வைக்க வேண்டும் என தவிசாளர் நிரோஷ் கோரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து கருத்தரைத்த ஆளுநர் நா.வேதநாயகம் அவர்கள் சர்வதேசத்திட்டங்களில் வாயிலாக பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். . https://jaffnazone.com/news/51110
  12. காசாவின் பேரழிவுகள் தொடர்பில் ஐ.நா. அறிக்கை வெளியீடு – மீட்டெடுக்க 25 ஆண்டுகள் செல்லும் October 8, 2025 12:58 pm இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் (07) இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டொலர் கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும். போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம். குப்பைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களே மறுகட்டமைப்புக்கு நீண்ட காலம் எடுக்கக் காரணம். இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன. காசாவில், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 66,158 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐ.நா முன்னதாக தெரிவித்திருந்தது. ஐ.நாவின் சுயாதீன விசாரணை கமிஷன் காசாவில் இஸ்ரேல் செய்து வருவது இனப்படுகொலை என வரையறுத்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து எகிப்தில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/un-releases-report-on-gaza-disasters-recovery-will-take-25-years/
  13. விந்தணு வங்கி ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளது; பத்து பெண்கள் கருத்தரிப்பு ! By SRI October 8, 2025 கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளது. இந்த விந்தணு வங்கி சேவை மூலம் பத்து பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் தம்பதிகள் மற்றும் தனிநபர்களிடையே மலட்டுத்தன்மையை நிவர்த்தி செய்வதில் விந்தணு வங்கி பாரிய திருப்புமுனையை எற்படுத்தியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் குமார தண்டநாராயண தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விந்தணு வங்கியில் 150க்கும் மேற்பட்ட ஆண்கள் விந்தணு தானம் செய்ய பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பத்து பெண்கள் கருத்தரித்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவைப் பெற்றுள்ளனர். மலட்டுத்தன்மையால் போராடும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை வழங்குவதே இந்த சேவையின் முதன்மை நோக்கம் ஆகும். “விந்தணு தானம் செய்ய விரும்பும் ஆண்கள், தானம் செய்வதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்,” விந்தணுவை தானம் செய்ய விரும்புபவர்கள் மற்றும் உதவி கோரும் தம்பதிகள் வைத்தியசாலையை தினமும் தொடர்பு கொள்கிறார்கள். “இந்தச் செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறோம். இதேவேளை, இலங்கையில் இளம் தம்பதிகளிடையே அதிகரித்து வரும் கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆண் மலட்டுத்தன்மை ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக மாறியுள்ளது என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதிதாக திருமணமான தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு கருவுறுதலில் சிக்கல்கள் காணப்படுகிறது. இதில் குறைந்த விந்தணு எண்ணிக்கை, விந்தணுவில் விந்தணு இல்லாதது அல்லது முட்டையை கருவுறச் செய்யும் திறனைக் கட்டுப்படுத்தும் பலவீனமான விந்தணு இயக்கம் ஆகியவை அடங்கும். https://www.battinews.com/2025/10/blog-post_814.html
  14. பொன்சேகா மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டில்லை.... மஹிந்த தரப்பினர் கேள்வி சரத் பொன்சேகாவைத் தவிர ஏனைய படைத்தளபதிகளுக்கு போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பயணத் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் பொன்சேகாவுக்கு எதிராக ஏன் போர்க்குற்றச்சாட்டுகள் இல்லை? இது பற்றி நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதிப்போரை முடிப்பதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என சரத்பொன்சேகா கூறி வருகின்றார். இது பொய்யான அறிவிப்பாகும். இவ்வாறு போர் முடிவுக்கு வரப்போகின்றது என்பது தனக்குத் தெரிந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால் போர் நடக்கும் போது பொன்சேகா ஏன் சீனா சென்றார்? ஆயுதம் கொள்வனவு செய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார். போர் முடியப்போகின்றது என்பது உறுதியாக தெரிந்திருந்தால் நாட்டிலேயே இருந்திருக்கலாம் தானே? போர் முடியும் என அவர் நினைக்கவில்லை. அவ்வாறு எண்ணி இருந்தால் அவர் நாட்டில் இருக்கவேண்டும். ஏன் சீனா சென்றார் என்பது பற்றி அவர் தெளிவுபடுத்த வேண்டும். படையினரைக் காட்டிக்கொடுத்ததாலேயே பொன்சேகாவுக்கு ஐரோப்பிய நாடுகளால் பயணத்தடை விதிக்கவில்லை. போர்க்குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என்றார். https://newuthayan.com/article/பொன்சேகா_மீது_எதற்காக_போர்க்குற்றச்சாட்டில்லை...._மஹிந்த_தரப்பினர்_கேள்வி
  15. சுதுமலை அம்மன் ஆலயத்தின் தொன்மையைப் பாதுகாக்கவும்; பிரதேச மக்கள் போராட்டம்! சுதுமலை அம்மன் ஆலயத்தின் பழைமையான கட்டடம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய ஆதாரங்கள் இல்லாமற்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீரணி நாகபூஷணி கோவிலிலிருந்து பேரணியாகச் சென்ற மக்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் பிரதேச செயலக பதவிநிலை அதிகாரி ஒருவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர் . போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்; பழைமையான கட்டடம் ஆலயப் புனரமைப்புக்காக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய ஆதாரங்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. புனர்நிர்மாணத்தை நாங்கள் தடுக்கவில்லை தேவையான விடயத்தை புனர்நிர்மாணம் செய்துவிட்டு ஆலயத்தின் பழைமையைப் பேணிப்பாதுகாக்க வேண்டும். கட்டட நிர்மாணத்துக்காக ஊர் மக்களிடம் நிதி சேகரிக்கின்றனர். ஆனால் ஊர்மக்களிடம் அபிப்பிராயம் கேட்பதில்லை. நிர்வாகத்துக்குள் உள்ளவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டும் பட்சத்தில் அவர்கள் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்படுகின்றனர். பழைய கட்டடத்தை இடிக்கக்கூடாது என நாங்கள் ஏற்கனவே பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்திருந்தோம். பிரதேச செய்லகத்தின் துணையுடனேயே இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது. எனவே இனி இடம்பெறுகின்ற நிர்மாணப் பணிகள் அரச திணைக்களம் ஒன்றின் கண்காணிப்பின் கீழேயே இடம்பெறவேண்டும் - என்றனர். https://newuthayan.com/article/சுதுமலை_அம்மன்_ஆலயத்தின்_தொன்மையைப்_பாதுகாக்கவும்;_பிரதேச_மக்கள்_போராட்டம்!
  16. உலக சந்தையில் $4,000 தாண்டிய தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 4,000 டொலரைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் ஸ்பொட் தங்கத்தின் விலை 4,011.18 டொலராக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், இலங்கையில் இன்று (08) தங்கத்தின் விலை 6,000 ரூபாய் அதிகரித்துள்ளதை சந்தைத் தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, நேற்று ரூ.290,500 ஆக இருந்த 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ரூ.296,000 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நேற்று (07) ரூ.314,000 ஆக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ரூ.320,000 ஆக அதிகரித்துள்ளது. உலகின் மிகவும் பிரபலமான கிரிப்டோ பரிமாற்றமான 1 பிட்கொயினின் பெறுமதி முதல் முறையாக $125,000 டொலரைத் தாண்டியது. தங்கத்தின் விலை தற்போது 1970 காலப்பகுதிக்கு பின்னர் தற்போது மிக வேகமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இதுவரையான காலப்பகுதி வரை தங்கத்தின் விலை சுமார் 50% அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பான முதலீட்டு கருவியாகக் கருதப்படும் தங்கத்தின் விலை, 2018 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து சுமார் 300% அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வரிப் போருடன் உலகளவில் எழுந்துள்ள பொருளாதார நிச்சயமற்ற தன்மை இந்த நிலைமையை மேலும் மேம்படுத்தியுள்ளது. அமெரிக்க திறைசேரி உண்டியலின் எதிர்கால நம்பகத்தன்மை குறித்து மட்டுமல்லாமல், உலகின் இருப்பு நாணயமாக அமெரிக்க டொலர் குறித்தும் முதலீட்டாளர்கள் இப்போது சந்தேகங்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். உக்ரைனில் நடந்த போரும் காசாவில் நடந்த போரும் இந்த புவிசார் அரசியல் வெப்பத்தை மேலும் அதிகரித்துள்ளன என்பது இரகசியமல்ல. அமெரிக்க டொலருக்கு மாற்றாகக் கருதப்படும் தங்கம் மற்றும் பிட்கோயினின் மதிப்பு உயர வழிவகுத்த மிக உடனடி காரணியாக, செலவு சட்டமூலம் நிறைவேற்றப்படாமையால் அமெரிக்க அரசாங்க செயல்பாடுகளை கட்டுப்படுத்த வழிவகுத்தது, அவ்வாறு இல்லாவிடின் அமெரிக்க அரசாங்க Shutdown என்று அழைக்கப்படுகிறது. https://www.samakalam.com/உலக-சந்தையில்-4000-தாண்டிய-தங/
  17. நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிராக ஏ-9 வீதியை மறித்து போராட்டம்! அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இன்றைய தினம் (08) அரியாலை கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்திற்கு வரவேண்டும் எனக் கோரி வீதியை மறித்தனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் போராட்ட இடத்திற்கு வந்தார். இதன்போது மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். “குறித்த பகுதியில் இனிமேல் குப்பை கொட்டுவதற்கு வாகனங்கள் வந்தால், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று ஆளுநர் செயலகத்தில் மற்றொரு மகஜரைக் கையளித்தனர். இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது: “உலகெங்கிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மக்கள் போராடி வருகின்றனர். அரியாலை மக்களாகிய நாமும் நமது ஊரைப் பாதுகாப்பதற்காக, நமது அழகிய ஊரின் நிலம், கடல், நீர்வளம், தூய காற்று போன்ற இயற்கையின் கொடைகளைக் காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நல்லூர் பிரதேச சபை, எமது ஊர் மக்களுடன் எவ்வித கலந்துரையாடலும் நடத்தாமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய குப்பைகளை எமது ஊரில் கொட்டும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது, எமது மக்களால் மட்டுமல்ல, இயற்கையையும் மனிதத்தையும் நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும். ‘இயற்கைப் பசளை உற்பத்தி’ என்ற பெயரில், வகைப்படுத்தப்படாத, மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி, எமது ஊரை குப்பை மேடாக மாற்றும் முயற்சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிட வேண்டும். எமது இயற்கை வளங்கள் இன்றைய தலைமுறைக்கு மட்டுமானவை அல்ல, எதிர்கால தலைமுறைக்கும் உரிமையானவை. எமது ஊரின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உள்ளது. எனவே, மக்களுக்கும் இயற்கைக்கும் விரோதமான இந்த குப்பை மேடு திட்டத்தைக் கண்டித்து, அதனைக் கைவிடக் கோரி, எதிர்வரும் 8ஆம் திகதி மக்கள் அணிதிரள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.” https://www.samakalam.com/நல்லூர்-பிரதேச-சபையின்-த/
  18. வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை! adminOctober 8, 2025 வடக்கு மாகாணம் முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழை இலையைப் பயன்படுத்துவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக் கலந்துரையாடலில், வடக்கு மாகாணம் முழுவதிலும் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழையிலையைப் பயன்படுத்துவது மற்றும் உணவுத்தட்டுக்களை கொதிக்க வைப்பது ஆகியவற்றை பின்பற்றலாம் என்றும் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது . https://globaltamilnews.net/2025/221270/
  19. வடமாகாணத்தில் இருந்து முதலீட்டாளர்கள் திரும்பி செல்கின்றனர்! adminOctober 8, 2025 வடமாகாணத்தில் முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இழுபறிகள் காரணமாக திரும்பிச் செல்கின்றனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்ளவேண்டும் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். பிரதேச சபைகளில் பணியாற்றுபவர்களின் எண்ணங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பல்வேறு அனுமதிகள் தாமதமடைவதாக சுட்டிக்காட்டுகின்றார்கள். மக்களுக்கான சேவைகளை துரிதமாக செய்து கொடுக்க வேண்டும். தவிசாளர்களும், செயலாளர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் ஊடாகவே அபிவிருத்தி சாத்தியமாகும். திண்மக் கழிவு அகற்றல் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சவாலாகி வருகின்றன. திண்மக் கழிகளை தரம்பிரிக்கும் நிலையங்களை ஒழுங்காக செயற்படுத்தாதன் காரணமாக மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள். எனவே அது தொடர்பில் சபைகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றை செயற்படுத்தவேண்டும். இது தொடர்பில் பொலிஸாரின் ஒத்துழைப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பெற்றுத்தரப்படும். எதிர்வரும் மழை காலத்துக்கு முன்னர் சபைகளுக்கு உட்பட்ட அனைத்து வாய்க்கால்கள், மதகுகளை துப்புரவு செய்யுங்கள். சில சபைகள் ஏற்கனவே எங்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவான நடவடிக்கையை எடுத்துள்ளன. அதை ஏனைய சபைகளும் செய்ய வேண்டும். அதேநேரம், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக அமைந்துள்ள சட்டமுரணான கட்டுமானங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்டங்களுக்கான குடிபுகு சான்றிதழைப் பெற்றுக் கொள்வதை கட்டாயமாக்குவதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆரம்பிக்கவேண்டும். அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான கடைகள் பல உரிமம் மாற்றம் செய்யப்படாமல் நீண்ட காலமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு விரைவான பொறிமுறையைத் தயாரிக்கவேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விதமான முதலீட்டாளர்களையும் ஈர்க்கவேண்டும். முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இழுபறிகள் காரணமாக திரும்பிச் செல்கின்றனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்ளவேண்டும். இதேநேரம், முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகையை வழங்குவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் சபைத் தீர்மானத்துடன் உரியவாறு அனுப்பி வைத்தால் அனுமதி வழங்க முடியும் சபைகள் தங்களின் வருமானங்களை உயர்த்தும் வகையில், மிக நீண்ட காலம் மேற்கொள்ளப்படாதுள்ள சோலை வரி மீளாய்வை துரிதமாகச் செய்து முடிக்க வேண்டும். சபைகள் தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட மயானங்களின் எல்லைகளை உரியமுறையில் அடையாளப்படுத்தி அவற்றை அழகுபடுத்தவேண்டும். வாகனப் பாதுகாப்பு தரிப்பிடங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படுவதுடன் அங்கு ரசீது வழங்குபவர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2025/221273/
  20. ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 07 Oct, 2025 | 12:25 PM 38 வருடம் நடைமுறைப்படுத்தாத 13ம் திருத்தத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தற்போது அமுல்படுத்த கோருவது ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி முடக்குவதற்காகவே என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 13ம் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைவரும் இணங்கியுள்ளதாக சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அதற்காக சி.வீ.கே.சிவஞானத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர அனைத்து தரப்புக்களும் போருக்கு பிந்தைய காலத்தில் ஒற்றையாட்சிக்குள் உள்ள 13ற்கு இணங்கியிருந்தன. ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட கூடாது. 13ஐ ஆரம்ப புள்ளியாக கொண்டு நகர்த்த முடியாது என சொல்லியே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினோம். இந்நிலையில் அந்த உண்மையை மூடி மறைக்க நாங்கள் சமஷ்டிக் கட்சி எனவும் காங்கிரஸ் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டது எனவும் தமிழ் அரசுக் கட்சி கடந்த 16 வருடங்களாக மக்கள் மத்தியில் பொய் பரப்புரை செய்தனர். 13ம் திருத்தத்தை ஏற்கவில்லை என்ற பொய்யை தமிழ் அரசுக் கட்சி தலைவர் தனது அறிவுக்கு ஏற்ற வகையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். வழங்கிய கால கட்டம் மிக முக்கியமானது. இரண்டு கிழமைக்கு முன்னராக 2015 - 2019 காலத்தில் செய்யப்பட்ட ஏக்ய ராஜ்ஜிய வரைபை திருத்தி அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபோவதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்தில் தெரிவித்தனர். ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது. அந்த வரைவை அமுல்படுத்த ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அனுர குமார திஸாநாயக்க சொல்லியிருக்கிறார். அவ்வாறான தற்போதைய சூழலில் 13 ஐ கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் சொல்கிறார் என்றால் ஏக்ய ராஜ்ஜியவை எதிர்க்காமல் ஏக்கிய ராஜ்யவை கைவிட்டதாக சொல்லி கொண்டு அதே நேரம் எக்கிய ராஜ்ய வரும் போது எதிர்க்காமல் விடுவதற்கு யோசிக்கின்றனர். எத்தனையோ வருடங்களுக்கு பிறகு தமிழ் அரசுக் கட்சி தலைவர் நிருபித்தமைக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த வேளையிலே 38வருடம் நடைமுறைப்படுத்தாத 13ம் திருத்தத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தற்போது அமுல்படுத்த கோருவது ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி முடக்குவதற்காகவே - என்றார். https://www.virakesari.lk/article/227101
  21. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுக்கு 18 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளது! 07 Oct, 2025 | 02:01 PM இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்கு கோரப்பட்ட நிதி இரண்டு கோடி ரூபாயை அண்மித்த தொகை என்பது தெரியவந்துள்ளது. எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட பாதீடு யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் கடந்த செப்டெம்பர் மாதம் 18,ஆம் திகதி அன்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அந்த தொகை சுமார் ஒரு கோடியே என்பது இலட்சம் (18 மில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான கடந்த ஒக்டோபர் 1, 2025 அன்று யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே. சுபாகர், அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி நீதி அமைச்சினால் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள, மனித புதைகுழியின் அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன. சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் தடைபடாமல் இருக்க நிதியுதவியை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்திருந்தது. "நிதி தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பாதீட்டு கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்தவும், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வழங்கல்களை விரைவாக செயல்படுத்தவும், காணாமல் போனோர் அலுவலகம் உட்பட செம்மணிப் புதைகுழி விசாரணையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றவும் நீதி அமைச்சின் ஒரு மத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்," என ஆணைக்குழு ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. அந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்கள் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வு, கடந்த செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை உள்ளடங்கும். கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி அன்று மயானத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, தற்செயலாக பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைத்தந்த அப்போதைய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20 அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ்,கடந்த மே மாதம் 15 ஆம் திகதி அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பமாகின. https://www.virakesari.lk/article/227117
  22. இரண்டு வருடம் கடந்த போராட்டம் லக்ஸ்மன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் பொலன்னறுவை, மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப் பயிர்செய்கை செயற்பாடுகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த ஆட்சி காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். சிறிது சிறிதாக அத்துமீறிய செயற்பாடுகள் தணிக்கப்பட்டன. இருந்தாலும், இப்போதும் ஒருசிலர் அப்பிரதேசத்தில் தங்களது தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகின்றனர். அதற்கெதிரான போராட்டமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியானது, இதுவரையில் வர்த்தமானியில் வெளியிடப்படுத்தப்படாதிருப்பதே அதற்கான முக்கிய காரணம் என்பது கால்நடை பண்ணையாளர்களின் நிலைப்பாடு. இருந்தாலும் அதற்குள் வேறு சில விடயங்களும் இருக்கலாம் என்பது யதார்த்தம். யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் இல்லாத பொலன்னறுவை அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அத்துமீறிய வருகை யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் ஆரம்பித்தது. அது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் உச்சத்துக்கு வந்தது. அதன் பின்னர் ரணிலின் ஆட்சி காலத்தில் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் முடிவாகாத நிலையில், பண்ணையாளர்கள் சித்தாண்டிச் சந்தியில் போராட்டத்தினை ஆரம்பித்தனர். சந்திப்புக்கள் பல நடைபெற்றிருந்தாலும் இப்போதும் முடிவுக்கு வரமலாம். எதிர்பார்த்தளவுக்கான எந்தவிதமான முன்னேற்றத்தையும் அடைந்து விடாத போராட்டத்தினை பண்ணையாளர்கள் தொடர்ந்து வருகின்றனர் என்பதே உண்மை. எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் மூன்றாவது வருடத்துக்குள் இந்தப் போராட்டம் சென்றிருக்கிறது. பரம்பரை பரம்பரையாகப் பண்ணை வளர்ப்புக்கெனப் பயன்படுத்தி வந்த காணிகளை வர்த்தமானிப்படுத்தித் தாருங்கள் என்ற நியாயமான கோரிக்கைக்குப் பதில் கிடைக்கும்வரை தொடரும் என்பது பண்ணையாளர்களின் நிலைப்பாடு. 2009 இற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப் பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியது முதல் பல தடவைகளிலும் பலவாறும் தீர்வுக்காக முயற்சி செய்து பயனில்லாமல், பல பிரச்சினைகளை எதிர்கொண்டும் வந்திருந்த கால்நடை வளர்ப்பாளர்கள் இறுதியாக எடுத்த முயற்சியாக இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் அமைந்திருக்கிறது. மயிலத்தமடு, மாதவணை பிரதேசம் 1974இன் காலப்பகுதியிலிருந்து மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துமீறிய குடியேற்ற சம்பவங்கள் இங்கு இடம்பெற்றபோது, அவற்றினைத் தடுப்பதற்குச் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவர்களை வெளியேற்றுவதற்குக் கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஆளுநரால் 2009களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்போது முழுமையான பயனைத் தரவில்லை. அதேநேரம், 2015இல் ஆட்சி மாற்றத்தையடுத்து, 2016இல் அத்துமீறலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, நீதிமன்றக் கட்டளையின் அடிப்படையில், அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று மகாவலி அதிகார சபையினால் உறுதியளிக்கப்பட்டது. இருந்தாலும், அது முழுமையாக நடைபெற்றிருக்கவில்லை. கிழக்கு மாகாண சபை 2017 செப்டெம்பரில் கலைக்கப்பட்டதையடுத்து, அத்துமீறலாளர்களது நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பித்தன. கோட்டாபய ஜனாதிபதியானதும் இந்த அத்துமீறல்கள் பூதாகாரமானது. அதற்கு முழுமையான ஒத்துழைப்பையும் உந்துதல் உதவிகளை வழங்கியவர் முன்னாள் கிழக்கு ஆளுநர் அனுராதா ஜகம்பத் ஆவார். பெருந்தொகை கால்நடைகள் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோரால் களவாடப்படுவதும், பிடிக்கப்படுவதும், இறைச்சிக்காகக் கொல்லப்படுவதும், பொறி வெடிக் குண்டுகளால் கொல்லப்படுவதும் வாய் மற்றும் உடற் பாகங்கள் பாதிக்கப்படுவதும் சம்பவங்களாக இருந்தன. அவ்வாறு காணாமல்போன தமது கால் நடைகளைத் தேடிச் செல்லும் பண்ணையாளர்கள் தாக்கப்படுல், கைது செய்யப்படுதல் போன்ற சந்தர்ப்பங்களும் நடைபெற்று வந்தன. இதனால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரணமாகியிருக்கின்றன. இன்னல்களை அனுபவித்தபடியே தங்களது கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கின்ற பண்ணையாளர்களுக்கு ஏற்கனவே வாய் மொழி மூலமாக வழங்கப்பட்ட தீர்வுகள் எதுவும் பயனில்லாதவைகளாகவே இருந்துள்ளன. மயிலத்தமடு - மாதவணை பிரதேசத்தில் மேய்ச்சல் தரைக்கான பகுதி அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவின் ஈரணைக்குளம் கிராம சேவையாளர்பிரிவில் 6383 ஹெக்டெயரும், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் குடும்பிமலை கிராம சேவையாளர் பிரிவில் 9,969 ஹெக்டெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. இருப்பினும், அது வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படவில்லை. அது நிறைவேறாமையினாலேயே இப்பிரச்சினை நீண்டகாலப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.கல்லோயா குடியேற்றம், அல்லை- கந்தளாய் குடியேற்றம் என பல குடியேற்றங்களைக் கிழக்கில் ஏற்படுத்தி கிழக்கில் தமிழர்களுடைய இனப் பரம்பலைக் குறைத்தது மாத்திரமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தமிழர்களுடைய இனப்பரம்பல் கிழக்கின் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் குறைந்து கொண்டே வருகிறது. மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமே பெரும்பான்மையாக தமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற மாவட்டமாக இருந்து வருகிறது. அந்தவகையில், இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாடாகவே மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல்தரைப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் குடியேற்ற நடவடிக்கைகள் பார்க்கப்படவேண்டும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டது. மேய்ச்சல் தரை பிரச்சினையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாகப் பண்ணையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். சிவில் தரப்பினர் பண்ணையாளர்களுடைய பிரச்சினைகளை சர்வதேச மட்டம் வரையிலும் வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கு மேய்ச்சல் தரைப் போராட்டக்காரர்களிற்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. இருந்தாலும் மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்குட்பட்ட பிரதேசமாக இந்தப்பிரதேசம் உள்ளதனால் மகாவலியினுடைய நடவடிக்கைகளுக்குட்பட்டதாகவே இருக்க வேண்டிய நிலைமையொன்றும் உள்ளது. மகாவலி பி வலயமானது அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. பெரும்பாலான நிலப்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குரியதாக இருக்கிறது. மகாவலியினுடைய அபிவிருத்தி திட்டங்கள் பெரும்பான்மை மக்களைப் பிரதானமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவது என்றவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களை அதிகளவில் உள்வாங்கி மேற்கொள்ளப்படும் நிலை ஏற்பட்டால் பாதிக்கப்படவுள்ளது கால்நடைப் பண்ணையாளர்களே. இந்த இடத்தில் வாழ்வாதாரத்திற்கு அடுத்தபடியாக, நில உரிமை மீறல், கால்நடைகளின் பாதுகாப்பு, பாரம்பரிய கால்நடை இனங்களின் அழிவு, நல்லிணக்கம் பாதிக்கப்படல், எதிர்கால சந்ததிகளுக்கான வாழ்வாதாரம் கேள்விக்குறியாதல், இயற்கை வள ஆக்கிரமிப்பு, பாரம்பரிய புல்லினங்களுக்குப் பாதிப்பு, இனப் பரம்பல் மாற்றம், அரசியல் பிரதிநிதித்துவப் பாதிப்பு என பல்வேறு விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். வடக்கில் மணலாறு பகுதி மகாவலி எல் வலயமாக உருவாகி வெலிஓயாவாக மாற்றம்பெற்றது. அதே ஒழுங்கில் கிழக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மகாவலி பி வலயம் அமையலாம் என்ற அச்சம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. இதனால் ஏற்படவுள்ள பாதிப்பானது அனைவரையும் உள்வாங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இயற்கையாக அமைந்துள்ள கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்ற இப்பிரதேசம், மகாவலி பிரதேசத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இந்நிலைமை கால்நடை பண்ணையாளர்களின் நோக்கத்தினை சிதைக்கும் என்ற கவலை இருந்தாலும், அரசாங்கத்தின் திட்டம் என்றவகையில், அனைவரும் வாய்மூடிய பொம்மைகளாக இருக்கவேண்டிய சூழலே உருவாகியிருக்கிறது. முன்னைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக்கான போராட்டம், தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருப்பது அரசுக்கு அபகீர்த்தியான ஒன்றேயாகும். அரசாங்கம் இதனைக் கண்டும் காணாத வகையிலிருந்து வருகின்றமையானது, இவ்விடத்தில் கவனிக்கப்படவேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களது விடயங்களில் பாராமுகமாக இருப்பது போன்ற நடத்தையைக் கைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அதே போலவே கிழக்கின் மேய்ச்சல் தரைப் பிரச்சினையையும் கையாள்வது போலவே தெரிகிறது. அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் அரசியல் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. என்றாலும் பிரதேசத்தின் அரசியல் தரப்பினர் கொடுக்கின்ற அழுத்தங்களின் போதாமை தற்போது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. அல்லது தேவையற்றதான ஒரு போராட்டம் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது. எது எவ்வாறானாலும், திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் மகாவலியின் அபிவிருத்தித் திட்டம் மேய்ச்சல் தரையை வர்த்தமானிப்படுத்தக் கோரும் பண்ணையாளர்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதகத்தை ஏற்படுத்தாதிருந்தால் சரி. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இரண்டு-வருடம்-கடந்த-போராட்டம்/91-365826
  23. இலங்கையில் இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஜ.வி இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் எச்.ஐ.வியும் ஒன்றாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாகத் தாக்கி உடலை பலவீனப்படுத்துகிறது. மேலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்னவென்றால், இருமல் அல்லது சளி போன்ற ஒரு சிறிய நோய் ஏற்பட்டால் கூட அது மரணத்திற்கு வழிவகுக்கும். எச்.ஐ.வி தொற்றுகள் ஏற்படக்கூடிய மூன்று முக்கிய வழிகளை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 1. எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் உடலுறவு கொள்வது எச்.ஐ.வி நோயாளியை முத்தமிடுவதால் நோய் பரவாது. எனினும் பாலியல் ரீதியான உடலுறவினால் பரவுகின்றது. குறிப்பாக ஆசனவழி உடலுறவுதான் எச்.ஐ.வி வருவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. இதுபோன்ற பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவக்கூடிய எச்.ஐ.வி வைரஸ், உடல் முழுவதும் சுமார் 72 மணிநேரத்திற்குள் பரவி விடும். 2. ஊசிகளின் கட்டுபாடற்ற பயன்பாடு ஊசி மூலம் போதைப்பொருள் பாவணை மூலமும் வெகுவாக பரவுவதுடன் ஒரே ஊசியை பலர் பயன்படுத்துவதற்கு இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 3.எயிட்ஸ் நோயாளியாக இருக்கும் கர்ப்பிணித்தாய்மாரிடத்தில் இருந்து அவரது பிறக்கவுள்ள குழந்தைக்கும் எச்.ஐ.வி வைரஸ் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் 411 நோயாளர்களும், 2022 இல் 607 நோயாளர்களும், 2023 இல் 697 நோயாளர்களும், 2024 இல் 824 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். அதிகளவில் ஆண்களே எயிட்ஸ் நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இது 7:1 விகிதமாகும். அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை அடையாளம் காணப்பட்ட புதிய எயிட்ஸ் நோயாளர்கள் உட்பட, நாட்டில் இதுவரை 6,740 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டில், 824 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அடையாளம் காணப்பட்டன, அவற்றில் அதிகபட்ச எண்ணிக்கை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளது. எயிட்ஸ் நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கை குறைந்த எச்.ஐ.வி பாதிப்பு உள்ள நாடாகக் கருதப்பட்டாலும், கடந்த ஆண்டு பதிவான புதிய தொற்றுகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கவலையளிப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், இலவச மற்றும் ரகசிய சோதனை மற்றும் சிகிச்சைகளை வழங்குகிறது. இலங்கை முழுவதும் உள்ள 41 பாலியல் நோய் சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது. எயிட்ஸ் தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொலைபேசி (+94 703 733 933) இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இலங்கையில்-இளைஞர்களிடைய/
  24. இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. முன்னதாக குறித்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, அமர்வில் அறிவித்துள்ளார். எனினும், பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது ஏற்றுக் கொள்வதாக, அவைத் தலைவர் தெரிவித்தார். அதன்படி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றைக் கொண்ட குழுவால் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அல்பேனியா, ஆஸ்திரியா, கோஸ்டாரிகா, பல ஐரோப்பிய நாடுகள், நியூசிலாந்து உள்ளடக்கிய பரந்த கூட்டணியால் கடந்த 01 ஆம் திகதி திருத்தப்பட்ட வடிவத்தில் குறித்த பிரேரணை மீள சமர்ப்பிக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும், இந்த அமைப்புகள் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்யவும், குறித்த பிரேரணையினூடாக இலங்கை அரசு கோரப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் முழு பங்கேற்புடன் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இந்தத் தீர்மானத்தின் மிக முக்கிய கோரிக்கையாகும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை விகிதாசாரமற்ற முறையில் பாதிக்கும் சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுப்புக்காவல்கள் நடத்தப்படுவதை எடுத்துக்காட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் உறுதிமொழிகளை ஐக்கிய இராச்சியம் பாராட்டியதுடன், வாக்குறுதிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனித புதைகுழிகளைத் தோண்டி எடுப்பது சுயாதீனமான வழக்குத் தொடுப்பு வழிமுறைகள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைக் கண்காணிப்பதை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றின் அவசியத்தைக் குறித்த பிரேரணை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் முன்னேற்றத்தையும், பொருளாதார மீட்சியையும் சீனப் பிரதிநிதி பாராட்டினார். இலங்கையின் இறையாண்மை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான ஆதரவை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், கொரியா குடியரசு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளை வரவேற்று, ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஆதரித்தன. இந்த நிலையில், எத்தியோப்பியாவும், கியூபாவும் இலங்கைக்கு எதிரான வெளிப்புற ஆணையை எதிர்த்தன. இலங்கையின் தேசிய இறையாண்மையை மதிக்க வேண்டும் என அந்த நாடுகள் கூறியுள்ளதுடன், அதில் தலையிட வேண்டாம் என வலியுறுத்தின. குறித்த தீர்மானமானது, உண்மையான உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு எதிர்மறையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால மீறல்களை நிவர்த்தி செய்வதற்கான தேசிய நிறுவனங்களுக்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை வலியுறுத்தியதோடு, தீர்மானத்தை நிராகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். https://www.samakalam.com/இலங்கை-தொடர்பான-தீர்மானத/
  25. காணி மோசடிகள் – முன் பிணை கோரவுள்ள சட்டத்தரணிகள்! adminOctober 7, 2025 யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உறுதி மோசடிகள் தொடர்பில், சட்டத்தரணிகள் சிலரைக் கைது செய்வதற்குக் கடந்த சில நாள்களாகப் காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் அந்நிலையில் மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் உள்ள சில சட்டத்தரணிகள் தற்போது தலைமறைவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான சில சட்டத்தரணிகள் நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றங்களில், தமது கைதுகளை தடுக்கும் முகமாக முன் பிணை கோரவுள்ளதாக அறிய முடிகிறது. காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , நேற்றைய தினமே அவர் பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. இதேவேளை காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரை கைது செய்வதற்கு காவற்துறையினர் நடவடிக்கை எடுத்த வேளை குறித்த சட்டத்தரணி அவரது வீட்டில் இல்லாத நிலையில், அவரது வீட்டுக்குள் காவற்துறையினர் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தியதாகவும் , தேடுதலுக்கான நீதிமன்ற அனுமதியின்றி , காவற்துறையினர் அடாத்தாக நடந்து கொண்டு தேடுதல் நடாத்தினார்கள் என குற்றம் சாட்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு தோன்றாது சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் , நீதிமன்றங்களின் முன் கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். https://globaltamilnews.net/2025/221258/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.