Everything posted by கிருபன்
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
நன்றி ராசவன்னியன் ஐயா. பிடித்த பல பாடல்களைக் இசைஞானியின் இசையில் மீண்டும் கேட்கமுடிந்தது. முன்னுக்கு இருந்தவர்கள் பின்னால் இருந்தவர்கள்/நின்றவர்கள் மீது கொஞ்சம் கரிசனை காட்டியிருக்கலாம்☺️
-
யாழ் எனும் திமிர்.
கடந்த 13 ஆண்டுகளாக, முப்பது வருடங்கள் நடந்த போராட்டத்தை மறக்கவைக்கும் செயற்பாடுகள்தான் நடக்கின்றன. போராடியவர்களையும், போராட்டத்தையும் அன்றாடம் நினைக்கத்தூண்டும் வகையில் நினைவிடங்கள், தூபிகள் இல்லாமல் இருப்பதால் போராட்ட வரலாறு மறைக்கப்படும் அல்லது மாற்றப்படும் நிலைதான் உள்ளது..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி ஐயா!🎊🎂🎉
-
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......!
இதுக்கெல்லாம் இந்தக் காலத்தில் கலியாணம் தேவையில்லையே! சும்மா பழகிப் பார்க்கலாமே.. 😁
-
வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும்.
வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் வான்கரும்புலி மறவர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/bc47667c-4b8f-4917-9706-bb68cec04eec
- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
-
,எஸ்கியூஸ் மீ மூருகா
புத்தனின் முத்திரை!😜 அடிக்கடி கிறுக்குங்கள் புத்தரே😀
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🎉🎈🎊 வாழ்க வளமுடன்🎂
-
லெப். கேணல் பொன்னம்மான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
- 9554EA16-E200-472A-A45F-9B64FD439F44.jpeg
From the album: கிருபன்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி🎊🎉🎈 வாழ்க வளமுடன்🎂- தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...!
தமிழீழ தேசியத் தலைவரின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு அவர்களின் சிந்தனையிலிருந்து... தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தேசியத் தலைவரின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு அவர்களின் சிந்தனையிலிருந்து... ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் அா்த்தம் இருக்கிறது ஆனால் எம்முடைய வாழ்க்கையின் அர்த்தத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும் உமது படிப்பையும் வேலையும் ஒரு வேலைக்கூரிய கடமையாகச் செய்யாமல் அதற்கு முமு அர்த்தம் கொடுக்கக் கூடிய மாதிரியாக செய்க நான் உல்லாச விரும்பி அல்ல அது என் இயல்பு அல்ல உல்லாசத்தை விரும்பினால் உல்லாசமாக இருக்கலாம் அஃது என்னால் முடியாது அறிவும் வயதும் அனுபவமும் உயர்வும் கிடைக்கும் பொமுது நாம் பணியவேண்டும் பணிவு என்பது உலகையும் மக்களையும் புரிந்துந்துகொண்டு அவர்களுக்காக உழைத்தல் என்பதையே குறிக்கும். சிந்தனையில் எளிமையாக வாழவும் மனித சேவையும் எப்பொமுதும் முக்கியமாகக் கருத வேண்டும் மூலம் -தமிழீழ ஆவணக்காப்பகம் https://tamileelamarchive.com/ https://www.thaarakam.com/news/eb939b3f-c8cd-496b-9c84-d423d2038a46- சூரியனும் சந்திரனுமாய் தலைவரைத் தாங்கிய சிகரங்கள்.!
- உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் கேணல் சாள்ஸ்.!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னியஷ்த்ரா🎉🎊🎈 வாழ்க வளமுடன்🎂- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்ப தொடர்ந்து சைன் இன் பண்ணி வாசியுங்கோ! இல்லாத பிரச்சினைகளுக்கு மோகன் எப்படி தீர்வு தருகின்றார் என்று பார்ப்போம்! எதுக்கும் இரண்டு ஸ்கிரீன் ஷொட் கேட்பார் (1: நோமல், 2: பிராந்து)- Don’t Look up : நாம் மேலே பார்ப்பதை தவிர்க்கிறோம்
Don’t Look up : நாம் மேலே பார்ப்பதை தவிர்க்கிறோம் || ராஜசங்கீதன் சமூகதளங்கள் முழுக்க 'க்ரெட்டா'வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன. December 29, 2021 “அந்த இரண்டு மார்க்சிஸ்டுகள் உலகம் முழுவதும் சென்று உலகம் அழியப் போவதாக சொல்லிக் கொண்டிருப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது”என ஒரு வசனம் Don’t look up படத்தில் வருகிறது. நாயகனும் நாயகியும் விஞ்ஞானிகள். ஒருநாள் நாயகி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறாள். வால் நட்சத்திரம்! புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் கொண்டாடுகின்றனர். நாயகன் வால் நட்சத்திரம் இருக்கும் தூரத்தைக் கணக்கிடுகிறான். வால் நட்சத்திரத்தின் தூரம் ஒவ்வொரு கணக்கிடலிலும் குறைந்து கொண்டே இருக்கிறது. வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது! ஆறு மாதங்கள்தான் கெடு! நாம் அறிந்த வகையில் இருக்கும் உலகம் அழிந்துவிடும்! – இந்த மூன்று விஷயங்களை உலகுக்கு அறிவிக்க முயலும் இரு விஞ்ஞானிகளின் கதைதான் படம். முதலில் அமெரிக்க ஜனாதிபதியிடம் பேச முயலுகிறார்கள். நடக்கவிருக்கும் தேர்தலை வால் நட்சத்திரம் பற்றிய செய்தி பாதிக்கும் என யோசிக்கிறார். தொலைக்காட்சியில் சொல்ல முயலுகிறார்கள். ‘இந்த வால் நட்சத்திரத்தை என் முன்னாள் மனைவியின் வீட்டு மேல் விழச் செய்ய முடியுமா?’ என சொல்லி விட்டு சிரிக்கிறார். இவை அன்றி, கூப்பிட்டால் ஜனாதிபதி பம்மி ஓடி நிற்கும் ஒரு முதலாளி, வால் நட்சத்திரத்தில் பல ட்ரில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்து மினரல்கள் இருப்பதாகச் சொல்கிறார். அவற்றை எப்படி எடுப்பது என்பதைப் பற்றி ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடக்கிறது. சமூகதளங்கள் முழுக்க ‘க்ரெட்டா’வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன. இறுதியில் என்னவாகிறது என்பது மிச்சக் கதை! கதையில் வரும் வால் நட்சத்திரம், வால் நட்சத்திரம் அல்ல; நிகழ்ந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றமே என்பதை மேற்கண்ட கதையிலேயே ஒருவர் புரிந்துகொள்ள முடியும். காலநிலை மாற்றத்துக்கான எல்லாவித சாட்சிகளும் நேரடியாக நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே எப்படி insensible ஆக அரசும் ஆளும்வர்க்கமும் இருக்கின்றன என்பதையும் காலநிலை மாற்றத்தை மறுக்கும் ஆளும் வர்க்க அடிவருடிகள் சமூக ஊடகங்களைக் கொண்டு எப்படி மக்களை முட்டாள்களாக்குகின்றனர் என்பதையும் முதலாளியம் ஏன் தீர்வாக முடியாது என்பதையும் அறிவியலில் முதலாளிக்கான அறிவியல், மக்களுக்கான அறிவியல் என இரு வகை இருப்பதையும் படம் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. இத்தகையக் கதைக்குள்தான் இரு விஞ்ஞானிகளையும் பிடிக்காத ஒரு நபர் அவர்களை மார்க்சிஸ்டுகள் எனக் குறிப்பிடுகிறார். விஞ்ஞானம் பேசுபவர்கள் எப்படி மார்க்சிஸ்டுகளாக முடியும்? ஆக முடியும். விஞ்ஞானம் முதலாளிகளுக்கானதாகவும் மக்களுக்கானதாகவும் இரு வகையாக இருப்பதை புரிந்து, மக்களுக்கான விஞ்ஞானத்தை அரச எதிர்ப்பு, மக்களின் பொதுப்புத்தி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பேசுபவர்கள் மார்க்சிஸ்டுகள்தான். அறிவியலுக்குள் இருக்கும் லாபவெறி, வர்க்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் ஒற்றையாய் அறிவியலைப் புரிந்து கொண்டு கண்மூடித்தனமாக பேசுபவர்கள் அறிவியல் பூசாரி கணக்கில்தான் வருவார்கள். காலநிலை மாற்றத்துக்கான தீர்வு அரசநிலை மாற்றமும் உற்பத்தி முறை மாற்றமும்தான் என்பதை முதலாளியமே ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு விஞ்ஞானம் அவர்களைத் தள்ளியிருக்கிறது. அதனால்தான் க்ரெட்டா உள்ளிட்டோர் ‘The system has to be changed’ என மார்க்சிய மொழியில் பேசுகிறார். உலகளாவிய இடதுசாரிகள் ‘System change, not climate change’ என அரசநிலை மாற்றத்தை பிரசாரம் செய்கின்றனர். மானுடத்தை அழிவிலிருந்து காக்க இயற்கையே முன் வைக்கும் தீர்வு, மார்க்சியம்தான். அதனால்தான் உலகமெங்கும் சூழலியலாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சமூக ஊடகப் பதர்களைக் கொண்டு Cancel செய்யப்படுகிறார்கள். அரசுகள் காலநிலை மாற்றத்துக்கான தீர்வை முதலாளியத்துக்குள்ளேயே தேடுகின்றன. பாசாங்கையோ வழக்கமான அரசியல் உத்திகளையே கதைக்குதவாத வாதங்களையோ முன்னெடுக்கும் காலத்தை தாண்டிவிட்டோம் என்கிறோம். ஆனால் கேட்பாரில்லை. உண்மை என்னவோ பூமியை அழிக்க வந்த வால் நட்சத்திரம் போல் தெள்ளத்தெளிவாக வானில் தெரிகிறது. நாம்தான் மேலே பார்ப்பதைத் தவிர்க்கிறோம். படத்தைப் பார்த்துவிடுங்கள்! படம் நெற்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்👍🏾 https://www.vinavu.com/2021/12/29/dont-look-up-netflix-movie-rajasangeethan/- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இருந்தது. எனக்கு வேலை செய்தது. ஆனால் அண்மையில் மோகன் கருத்துக்கள மென்பொருளை மாற்றும் வரையில் நிலாமதி அக்காவுக்கும், உங்களுக்கும் வேலை செய்யவில்லை!😁 இப்போது எல்லாம் திருப்தியாக வேலை செய்கின்றது நிலாமதி அக்காவும், நீங்களும் சொல்லியிருப்பதால், அண்மைய கருத்துக்கள மாற்றம் சிக்கல், சில்லெடுப்புக்களைத் தீர்த்துவைத்துள்ளது. அநேகமாக இது நீங்கள் பாவிக்கும் browser specific பிரச்சினையாக இருந்திருக்கும். மோகன் இன்று ஏதோ பெரிதாக மாற்றுகின்றார். அதன் பின்னர் என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது!! புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎆- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சைன் இன் பண்ணாவிட்டால் ஒரு திரியின் முதலாவது கருத்துக்குத்தானே போகின்றது. சைன் இன் பண்ணினால் இறுதியாக வாசித்த கருத்துக்குப் போகின்றது. இதனால் விளங்குவது என்னவென்றால் சைன் இன் பண்ணாவிட்டால் யாழ் மென்பொருளுக்கு பாவனையாளரைத் தெரியாது. அதனால் பின்தொடரமுடியாமல் முதலாவது கருத்தைக் காட்டுகின்றது. சைன் இன் பண்ணினால் குக்கீஸ் மூலம் பாவனையாளர் களத்தில் என்ன செய்கின்றார் என்பதை கண்டறியலாம். இவை வேகமாக வாசிக்காத இறுதிப் பதிவுகளுக்கு போக வழி செய்யும். இந்தப் பொறிமுறைதான் இணையத்தில் எல்லோரும் பாவிக்கின்றார்கள்.- வியட்னாம் புரட்சிவாதிகள் மேற்கொண்ட தற்காப்பு முறைகளை தமிழீழத்தில் உருவாக்கியவர் மேஜர் அகத்தியர்
வியட்னாம் புரட்சிவாதிகள் மேற்கொண்ட தற்காப்பு முறைகளை தமிழீழத்தில் உருவாக்கியவர் மேஜர் அகத்தியர் மேஜர் அகத்தியர் செல்லத்துரை புவினேயராஜ் கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:21.06.1967 - வீரச்சாவு: 01.01.1990 நிகழ்வு:முசல்குளத்தியில் புளொட் கும்பலின் முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: கொடிகாமம் மேலதிக விபரம்: கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. புலேந்திரன் - குமரப்பா முதலான போராளிகள் இலங்கை - இந்திய கூட்டுச்சதிக்குப் பலியானதைத் தொடர்ந்து 'இனி யுத்த நிறுத்தம் இல்லை ' என தலைவர் பிரபாகரன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் ஒரு கண்ணிவெடித் தாக்குதல் இடம்பெற்றது. இலங்கை மக்களின் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவம், இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் உலா வருகையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது. இந்திய இராணுவத்தினரின் வாகனங்களைத் தவிர்த்து, இலங்கை இராணுவத்தைக் குறிவைத்து, மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என இலண்டன் பி.பி.சி.வர்ணித்தது. இந்த வர்ணனை அக்காலத்தில் பிரபலமாக இருந்தது. இத்தாக்குதலில் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரியும் சிரேட்ட பொலிஸ் அத்தியட்சருமான நிமால் டி சில்வாவுடன் ஒன்பது இராணுவத்தினரும் பலியாகினர். அவ்வளவு திறமையான இத்தாக்குதலை மேற்கொண்டவன்தான் மேஜர் அகத்தியர். மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்வி ஆறு என சிறப்பாகக் குறிப்பிடப்படும் கோட்டைக்கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த இவன், 1984 ஆம் ஆண்டு புலிகளுடன் தன்னை இணைந்துக்கொண்டான். விடுதலைப் புலிகளின் ஐந்தாவது முகாமில் பயிற்சி பெற்றுக்கொண்ட இவன், மருத்துவக் குழுவினருக்கான விசேடபயிற்சியையும் மேலதிகமாகப் பெற்றுக்கொண்டான். மீண்டும் இந்த மண்ணில் அவன் மருத்துவனாக காலடி எடுத்துவைத்தாலும், திறமை மிக்கஒரு போராட்ட வீரனாகவே இனங்காணப்பட்டான். அதனாலேதான், அபாயகரமான பகுதிகள் எனக்கருதப்படும் பகுதிகளில் நடத்த உத்தேசிக்கப்படும் தாக்குதல்கள் இவனிடம் ஒப்படைக்கப்பட்டன. மட்டக்களப்பு - வாழைச் சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள வந்தாறுமூலை அம்பலத்தடிச் சந்தி, எமது போராளிகளில் கணிசமான பேரை பலிகொண்ட இடமாகும். ஏனெனில் இப்பகுதியில் இருந்தே எமது பயிற்சி முகாம்களுக்கான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப் படுவதுண்டு. எனவே இப்பாதை மீது சிறீலங்காப் படையினருக்கு எப்போதுமே குறியிருக்கும். இப்பகுதியில் துப்பாக்கிச் சன்னத்தைக் காணாத சுவர்களே இல்லையெனலாம். ஆனால், இந்த அபாயகரமான பாதையில் சண்டையிடத்தான் இவனுக்கு விருப்பம். தன்னைப் போலவே ஏனைய போராளிகளையும் உருவாக்கினான். ஒரு கட்டுப்பாடான ஒழுக்கமான போராளியால் தான் ஒரு சிறந்த தலைமையை அளிக்கமுடியும். எனவே கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பன போராளிகளுக்கு வேண்டும் என வலியுறுத்துவான். மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியைப் பற்றி போராளிகள் குறிப்பிடும் போது “ஓடிணா வெளி, விழுந்தா வெளி” என்று குறிப்படுவார்கள். அப்படியான இயற்கை அமைப்பைக்கொண்ட அந்தப் பிரதேசத்தின் பொறுப்பாளனாக இவன் நியமிக்கப்பட்ட காலத்தில், இவன் எவ்வாறு போராளிகளைக் காப்பாற்றினான் என்பதை அறியும் போது ஒவ்வொருவர் நெஞ்சும் புல்லரிக்கும். மட்டக்களப்பில் இருந்து வளைந்து நீண்டுவரும் அந்த வாவிக்கரையில், தொம்பலும் (சேறு) கன்னாப்பற்றைகளும் ஒட்டு என்று அழைக்கப்படும் தாவரங்களும் நிறைந்திருக்கும் இப்பகுதிக்குள் இடுப்பளவு தண்ணீருக்குள்ளும் அதற்கு மேலும் இந்தப் பற்றைகளிடையே தடிகளினால் அரண் அமைத்து அவற்றையே முகாம் ஆக்கியிருந்தான். தேசத்துரோகிகள், எமது காற்றையே அசுத்தப் படுத்தும் வகையில் நிறைந்திருக்கும் இந்தியப் படையினர் இவர்களின் பார்வையில் படாது அந்த வயல்வெளிகளைக்கடந்து குளிர், நுளம்புத் தொல்லை மிகுந்த இந்த நீர்நிலை முகாம்களுக்குச் செல்வதென்றால் அதற்கு எவ்வளவு கவனம் தேவை. இந்த முகாம்களில் இருந்தே ஏனைய இடங்களுடன் தகவல் தொடர்பு எடுக்க வேண்டும். தொலைத் தொடர்புக் கருவிக்கு வேண்டும் பற்றரி கொண்டு செல்வதென்றால் கூட இலேசானதல்ல. ஆனால், இவன் அதையெல்லாம் செய்துகாட்டினான். அங்கிருந்தே தாக்குதலுக்குத் திட்டமிட்டான், போராடினான். இதற்கான மக்கள், பலத்தையும் திரட்டினான். இதனால்தான் 'புலிகளுக்கு குளிருக்கு போர்வையோ, உணவோ தேவையில்லை. ஆயுதங்களைக் கடலிற்குள் கூடப் புதைத்து வைத்தனர். இருட்டில்கூட அவற்றைத் தேடி எடுத்தனர் என பம்பாயில் வீக்லி இதழுக்கு பேட்டி அளித்தார் இந்தியப்படை எம் மீது போர் தொடுத்த காலத்தில் அதற்குப் பொறுப்பாயிருந்த இந்தியப்படை அதிகாரி. இதேபோல வந்தாறுமூலைப் பகுதிக்கு அப்பால் முகாம்களை அமைக்கும்போது இயற்கையினை போராளிகளுக்கு அரணாக்கித் தந்தான். மலைகளுக்குப் பக்கத்தில் உள்ள குகைகளே பாதுகாப்பு அரண்கள். விமானக்குண்டு வீச்சின்போதும் எறிகணைத் தாக்குதல்களின்போதும் குகைகளுக்குள்ளேயே தனது வாரிசுகளைப் பாதுகாத்தான். உணவைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 15 மைல்தூரம் நடந்துவரும்போது முன்னே செல்வது இவன்தான். ஏனையோரைவிட கூடுதலான பாரம் சுமப்பதும் இவன்தான். ஆம்.... போராட்டத்தினுள் உள்வாங்கப்படும் போராளிகளுக்கு இவன் புத்தகமாகத் திகழ்ந்தான். எமது தேசத்தை குடியேற்றத்தின் மூலம் அபகரிக்க முயலும் பேரினவாதிகளுக்கு, இவன் கனவிலும் பயமூட்டிக் கொண்டிருந்தான் மேஜர் அகத்தியர் இவனது தாக்குதல்கள் அவர்களைச் சொந்தப் பிரதேசங்களுக்கு ஓடவைத்தன. இந்திய இராணுவத்தினரின் காலத்தில் இவற்றைச் செய்வதென்பது சுலபமாக இருக்கவில்லை. ஒருமுறை நீண்ட தொலைவில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களின் இலக்குமீது தாக்குதல் தொடுத்துவிட்டு வந்துகொண்டிருந்தனர் இவனும் இவனது வாரிசுகளும், அனைவருக்கும் நல்ல பசி. சோர்ந்து வாடினார்கள். போராட என்று வெளிக்கிட்டால் எதையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறி, அவர்களை ஒருவாறு சமாளித்துகூட்டிக் கொண்டு வந்தான். இதே நேரம் சிங்களப்படை கொடுத்த தகவலின்பேரில் இந்தியப்படை இவர்களைத் தொடர்ந்துகொண்டிருந்தது. இவர்கள் அவர்களைக் காணவில்லை . அந்தளவுக்கு பசி, இவர்கள் கண்ணை மறைத்திருந்தது. முகாமுக்குச் சென்று அனைவரும் வாயில் உணவை வைத்ததுதான் தாமதம், இந்தியப்படையின் துப்பாக்கி வேட்டுக்கள் எல்லாவற்றையும் மறக்கவைத்தன. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியேறி இந்தியப்படையை எதிர்க்க இன்னொரு பாதையில் காத்திருந் தனர். ஏனெனில் இது எமது நாடு. நாம் ஓடமுடியாது. ஓட வேண்டியவர்கள் எல்லை தெரியாது எம்மண்ணை மிதித்தார்களே. ஆனால் இந்தியர்கள் வரவேயில்லை. ஏனோ தெரியாது. அப்படியே போய்விட்டனர். அக்காலங்கள் மிக வேதனை நிறைந்தவை. பல இடங்களில் பாதுகாப்புக்காக இந்தி மொழி பேசியே பாதையைக் கடக்கவேண்டிய தேவையை ஏற்படுத்தின. இந்தியை விரட்ட பல கட்டங்களில் இந்தி மாதிரிமொழியில் பேசினான் அகத்தியர். பின்னர் மட்டக்களப்பு பிராந்தியத்தை விட்டு, வன்னிக் காடுகளுக்கு நெருக்கமானான் இவன். அங்கும் பல தாக்குதல்களில் கலந்துகொண்டான். இறுதியில் முசல்குத்தியில், தேசவிரோதிகளின் மீதான தாக்குதல்களில் கப்டன் முரளி, இரண்டாவது லெப். அலெக்ஸ் ஆகியோருடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான். இத்தாக்குதலில் பல தேசத்துரோகிகள் உயிரிழந்தனர். வியட்னாமிலும், சிங்கராஜா காடுகளிலும் புரட்சிவாதிகள் மேற்கொண்ட தற்காப்பு முறைகளை தமிழீழத்தில் உருவாக்கிய இவன், என்றும் மறக்கப்பட முடியாதவன். அதைவிட ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் தமிழீழ மக்கள் இவனை நினைவுகூரத் தவறமாட்டார்கள். ஏனெனில் இவன் வீரச்சாவெய்திய தினம் ஜனவரி 1. -களத்தில் https://www.thaarakam.com/news/72096c59-5510-41de-b876-5b9cb3ee0f43- லெப். கேணல் ஈழப்பிரியன்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதுதானே ஈழப்பிரியன் ஐயா! தினமும் குப்பைகொட்டும் எங்களுக்கும் தெருவால் எட்டிப் பார்த்துவிட்டு போகின்றவருக்கும் ஒரே சலுகை கொடுக்கலாமா? ஆங்🤪- லெப். கேணல் லக்ஸ்மன்! அவனொரு அசகாயசூரன்!
- 9554EA16-E200-472A-A45F-9B64FD439F44.jpeg
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.