Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. கார் விபத்து: படுகாயமடைந்த ரிஷப் பண்ட் Dec 30, 2022 10:29AM IST ஷேர் செய்ய : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் கார் விபத்துக்குள்ளானதால், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து , உத்ரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தன் வீட்டுக்கு தனது பிஎம்டபிள்யூ காரில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருந்த போது, முஹம்மத்பூர் ஜால் அருகில் உள்ள ரூர்க்கி என்ற இடத்தில் அவர் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அங்கிருந்த சாலை தடுப்பில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இன்று (டிசம்பர் 30 ) அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ரிஷப் பண்ட் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி அசோக் குமார் “ரிஷப் பண்ட் கார் ஓட்டும் போது தூங்கி விட்டார். அதனால் தான் கார் அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி உள்ளது. தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்று கூறியுள்ளார். https://minnambalam.com/sports/car-accident-rishabh-pant-critically-injured/
  2. தினேஷ் ஷாப்டர் மரணம்; கொலையா? தற்கொலையா? ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தினேஷ் ஷாப்டர் இறுதியாக பயணித்த தனது காரில் வேறு யாரும் பயணிக்கவில்லை என்பது CCTV காட்சிகளில் தெளிவாக ஆதாரங்கள் இருந்தாலும், காரில் இருந்தவை குறித்து நீண்ட விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தினேஷ் ஷாப்டர் தனது மனைவியுடன் இங்கிலாந்து செல்வதற்கு சில மணித்தியாலங்கள் இருந்த நிலையில், பொரளை மயானத்தில் காரில் அவரது கைகள் கட்டப்பட்டு மீட்கப்பட்டிருந்ததுடன், மயானத்தின் ஊழியர் ஒருவரின் உதவியுடன் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், ஐந்து மணித்தியால சிகிச்சையின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாவை தனது வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்தும், எதிர்பார்த்தபடி பணத்தை வசூலிக்க முடியாமல் போனதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால், நாளுக்கு நாள் தினேஷ் ஷாப்டர் நட்டமடைந்து வந்துள்ளார். தினேஷ் ஷாப்டர் சுமார் 2,000 கோடி ரூபாவை இழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் வசிக்கும் கறுவாத்தோட்டம் – ப்ளவர் வீதி வீட்டை விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியாகியிருந்தமை தொடர்பிலும் தெரியவந்துள்ளது. தினேஷ் ஷாப்னரின் உயிரிழப்பு தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 70 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், சுமார் 70 CCTV காணொளிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. R https://www.tamilmirror.lk/செய்திகள்/தனஷ-ஷபடர-மரணம-கலய-தறகலய/175-309624
  3. உழல்தல் ஒரு பேரின்பம் 01 "பலசமயம் பயணத்தைவிடப் பயணத்தின் தொடக்கமே முக்கியம் என்றுகூடத் தோன்றும்" -ஜெயமோகன். இலங்கையைச் சுற்றி வருவதற்கு மிகவும் உகந்த மாதம் என்று நாம் நான்கு பேர் தேர்ந்தெடுத்த மாதம் ஏப்ரல் மாதத்தின் தொடக்கம். இந்தப்பயணம் 2021 ஏப்ரல் நாம் மேற்கொண்ட பயணத்தின் ஞாபகக் குறிப்புகள். பயணம் புறப்பட வேண்டும் என்பதனால் முதல்நாள் மனம் சொற்களால் நிறைந்து கிடந்தது. பயணத்தின் தொடக்க நாளாக ஏப்ரல் முதலாம் திகதியைத் தேர்ந்தெடுத்தோம். நான்கு பேர் நான்கு மோட்டார் பைக்கில் செல்வதற்குப் பூரண ஏற்பாடுகளுடன் தயாரானோம். என்னுடன் பயணத்தில் இணைந்த மூவரும் எனது சிறுவயதில் இருந்தே பழக்கமானவர்கள். எனது பைக் Bajaj Pulsar 150. மற்றைய மூவரின் பைக்குகளும் என்னுடையது போலவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவைதான். இந்திய பைக்குகள் தான் இங்கே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜப்பானின் பைக்குகளைக் காணமுடியும். ஆரம்பகாலங்களில் ஜப்பான் மோட்டார் சைக்கிள்களைப் பெருமைக்கு வைத்திருந்தனர். பின்னாட்களில் அதை வைத்திருந்தால் பார்ப்பவர்களுக்கு ஒரு பகட்டு உணர்வை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது பலர் வைத்துள்ளனர். அதிகாலை ஐந்து மணிக்கு நான்கு பேரும் வவுனியா நகரில் இருந்து புறப்பட்டோம். பனி விலகிய காலம் அது. ஆனால் ஒரு இளங்குளிர் படர்ந்து கொண்டே இருந்தது. முதல் கட்டமாக திருகோணமலை செல்வது என்று தீர்மானித்தோம். இலங்கை ஒரு சிறிய தீவாக இருந்தாலும் அதனை பைக்கில் சுற்றி வருவது என்பது சாதாரண விடயம் அல்ல. மனதில் ஒரு தன்னுணர்வு உண்டாக வேண்டும். மாணிக்கவாசகர் கூறுவது போல ஒருவகையான "மத்தோன்மத்தம்" பீடித்திருக்க வேண்டும். திருமலை-வவுனியா வீதியில்... வவுனியாவில் இருந்து திருகோணமலை செல்வதற்கு குறுகிய வழியாக ஹொரவப்பொத்தானை(A29) சென்று அங்கிருந்து A12 வழியாக திருகோணமலையை அடைவதுதான். ஆனால் நாம் தேர்வு செய்தது ஹெப்பட்டிகொல்லாவை வழியாகச்சென்று B211 பதவியா-புல்மோட்டை சென்று திருகோணமலை செல்வதற்குத் திட்டமிட்டோம். ஹெப்பட்டிகொல்லாவை என்றதும் எனக்கு மனதில் வருவது அங்கு அரச பேரூந்து ஒன்றின் மீது 2006 ஜீன் மாதம் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டதுதான். இப்பொழுதும் அந்த இடத்தை அடையாளம் காணும்படி நினைவு அமைத்துள்ளனர். அப்போது இலங்கை- புலிகளின் சமாதான முயற்சிகள் சீர்குலைவதற்கு மிக மிக முக்கிய காரணமாக இந்த தாக்குதல் அமைந்தது. சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள அடிப்படைவாதிகளால் தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரங்கள் இந்நாட்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது எனக்கு வயது 15 ஆக இருந்தது. எனினும் இன்றும் அத்தருணங்களை நினைத்துப் பார்க்கின்றேன். பதவியா வழியாகச் செல்லும்போது ஒரு ஆறு ஓடிக்கொண்டு இருந்தது. அந்த ஆற்றின் கரையில் பைக்குகளை நிறுத்திவிட்டு, உலர்ந்த மருதமரத் தடிகளைக்கொண்டு, மூன்று கற்களைக்கொண்டு ஜெனன் கொண்டு வந்திருந்த சில்வர் பாத்திரம் மூலம் தண்ணீரைச் சூடாக்கித் தேனீர் அருந்தினோம். வன்னிப் பெருநிலப்பரப்புக்களைச் சென்றடையும் பல ஆறுகள் இந்நிலத்தை ஒட்டிய மலைகளில் இருந்து தொடங்குபவைதான். அல்லது கிளை ஆறுகளாக வெடித்துப்பாய்பவைதான். முகங்களின் தேசம் அப்போது என்னுடைய Lens பூட்டப்பட்ட கமராவை நான் வெளியே எடுத்த போது அந்தக் கமரா Bag இல் இருந்து ஒரு புத்தகம் வெளியே வந்தது. அருகில் இருந்த வினோத், விஜிதன் இருவரும் கண்டுவிட்டனர். அவர்கள் சிரிப்பில் ஒரு ஒளி தெரிந்தது. நான் கொண்டுவந்த புத்தகம் அவ்வகையானது. 'இங்கும் இவரை விடமாட்டாயா' என்று ஜெனன் நக்கலடித்தான். நான், இங்கு வருவதற்கு இவரது இந்தப் புத்தகமும் ஒரு சிறிய காரணம் என்று கூறினேன். ஒரு தேசத்தைப் புரிந்து கொள்வது எப்படி?. எழுதப்பட்ட வரலாறுகளின் வழியாக மட்டுமல்ல, இலக்கியங்களின் வழியாக மட்டுமல்ல, பயணத்தில் மூலமாகவும் புரிந்து கொள்ளலாம் என்று இந்த நூல் விளக்கியிருந்தது. அதனை அவர்களுக்கு இரண்டு நிமிடங்களுக்குள்ளாக விளக்கினேன். அந்நூலைப் படிப்பதற்கு வழங்குமாறு கூறி சில பாகங்களை வாசித்தனர். ஜெயமோகன் எழுதிய முகங்களின் தேசம் தான் அந்நூல்.ரசனை மிக்க ஒவ்வொரு பயணியும் வாசிக்க வேண்டிய நூல் இது. பின்னர் தமிழே கேட்டு அறியாத அந்த ஆற்றில் உரக்கக் கத்தினோம். மந்திகள் மருதமரக் கொப்புகளை உலுப்பக்கண்டு பைக்குகளை எடுத்துக்கொண்டு புல்மோட்டை புறப்பட்டோம். ஜெனன், வினோத், விஜிதன் வினோத், நான், விஜிதன் புல்மோட்டை ஒரு சுற்றுலாப்பயணப் பகுதி. யுத்த காலத்தில் இந்த இடம் கடும் சமர்களை எதிர்கொண்ட பகுதி. புலிகள் அமைப்பின் வடக்குக்கும் கிழக்குக்குமான ஒரு தொடுப்பாக அல்லது வழங்கல் மையமாக இந்த இடம் காணப்பட்டது. இலங்கையின் ஐந்தாவது நீளமான ஆறாகிய ஜான் ஓயாவுக்குக் குறுக்காக ஒரு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது நாம் குறித்த பாலத்தில் நின்றிருந்தோம். இலங்கையிலுள்ள 1150 பாலங்களில் இதுவும் ஒன்றாகும். குறித்த ஆறு மத்தியமாகாணத்தின் றிதிகல மலைக்குன்றுகளில் தொடங்கி 142 கிலோமீட்டர் நீளமாக ஓடி கிழக்குக் கடலில் சங்கமிக்கின்றது. இந்த ஆற்றினை மறித்து யான் ஓயா நீர்த்தேக்கம் ஒன்று வடமத்திய மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மிக வெற்றிகரமான ஒரு நீர்த்தேக்கமாக அது அமைந்துள்ளது. எல்லா இடத்திலும் நடப்பது போலவே குறித்த நீர்த்தேக்க அமைவினால் காணிகளை இழந்த மக்கள் உள்ளதாகப் போராட்டம் நடைபெற்றும் இருந்தது. யான் ஓயா பாலத்தில் ஜெனன் களிப்பில் வினோத், விஜிதன், நான் குறித்த பாலத்திற்கு அருகில் இராணுவச் சோதனைச் சாவடி ஒன்று நீண்ட காலமாகக் காணப்படுகின்றது. குறித்த இடத்தில் அனுமதியைப் பெற்றுவிட்டே நாம் புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். பாலத்தைக் கண்டதும் தாவிக் குதிக்கும் சிறு பிள்ளைகள் போல முப்பது வயதை அடைந்திருந்த நாம் துள்ளிக்குதித்துக் கொண்டு இருந்தோம். யாராவது வந்து நீங்கள் என்ன சிறுபிள்ளைகளா என்று கேட்டால் இப்போதுதான் இருபது வயது என்று கூறவேண்டும் என்று நான் மற்ற மூவரிடமும் கூறி இரும்புப் பாலத்தில் நடைபோட்டோம். பாலத்தில் நின்று பார்த்தால் நானூறு ஏக்கர் அளவுக்கு வயல் நிலங்கள் விரிந்து கிடந்தன. பயணம் ஆரம்பிக்கும் முன்பே நாம் நால்வரும் ஏகபோகமாகக் கூறியது நாங்கள் செல்லும் போது கடற்கரை வீதிகள் இருந்தால் அதன் துணைக்கொண்டு எமது பயணத்தைத் தொடர்வோம் என்றுதான். அதன்படியே காததூரத்தில் கடற்காற்று வீச புல்மோட்டையில் இருந்து புறப்பட்டு திரியாய்-குச்சவெளி-நிலாவெளி வழியாகத் திருகோணமலையை அடைந்தோம். திருகோணமலை இலங்கையில் எனக்குப் பிடித்தமான பிரதேசம். மார்கழி தவிர்த்து எக்காலத்திலும் கடும் வெய்யில் வெளுத்து வாங்கும் பிரதேசம். என்ற போதும் அதன் மீது எப்போதும் தீராக்காதல்தான். மாணிக்கவாசகர் தனது உயிருண்ணிப் பத்தில் சிவனைப் பாடும்போது "ஊனார் உடல் புகுந்தான், உயிர் கலந்தான், உளம் பிரியான்" என்று உருகுவார். இங்குள்ள திருக்கோணேச்சர நாதனைக் காணும்போதெல்லாம் எனக்குள் ஒரு மாணிக்கவாசகர் உருக்கொள்வார். இத்தலம் பாடல்பெற்ற தலம் என்ற சிறப்புக்குரியது. இத்தலம் அமைந்துள்ள இடத்தை நீங்கள் காணும்போதெல்லாம் உங்களுக்குள் ஒரு பரவசம் வரக்கூடும். "குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலையமர்ந் தாரே" என்று சம்பந்தர் பாடிய பதிகத்தை நினைத்து நினைத்து உருகி மலைசேரும் சிவனடியார்கள் எத்தனை பேர் என்று யாரறிவார். சம்பந்தர் பாடும் போது குறித்த பதிகங்களில் மலையமர்ந்தாரே என்று எவ்வளவு ரசனையுடன் பாடியுள்ளார். மலையில் அமர்வதும் அம்மலையில் இருந்து கடலைக் காண்பதுவும் எத்துணை பெரும்பேறானது. திருகோணமலையில் தான் சிறந்த கடற்கரைகளும் உள்ளன. அத்துடன் இங்குள்ள சல்லி அம்மன் கோயில் மிக மிக வியப்புக்குரிய ஒரு அமைவிடத்தில் உள்ளது. ஒருபக்கம் கடலும் மூன்று பக்கம் தரையும் உள்ள மிக ரம்மியமான ஒரு பகுதி. நாம் திருகோணமலையில் இருந்து புறப்பட்டு இலங்கையின் மிக நீளமான கிண்ணியா பாலம் வழியாக மட்டக்களப்பு நோக்கிப் பயணமானோம். கிண்ணியா பாலம் 1300 அடி நீளமானது. 2009 சிவில் யுத்தம் முடிந்த பின்பு இலங்கையில் நிர்மானிக்கப்பட்ட மிகப்பெரிய உட்கட்டுமானம் இதுதான். உள்நாட்டுப்போரில் முதலில் அரசபடைகளால் கிழக்கு மாகாணம் கைப்பற்ப்பட்டது. அதன் பின்பு இரண்டரை ஆண்டுகளை கழித்தே வடக்கும் கைப்பற்ப்பட்டது. திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் செல்வதற்கு மிகக்குறுகிய வழியாக இந்தப்பாலம் அமைந்தது. புலிகள் காலத்தில் கடல்வழியும் காட்டுவழியும் உபயோகிக்கப்பட்டது. கிண்ணியா மூதூர் தோப்பூர் சேருநுவர வெருகல் வழியாக கதிரவெளி சென்றடைந்தோம். எனக்கு இந்த வெளி என்ற சொற்பதம் மீது எப்போதும் ஒரு கிராக்கி உண்டு. காற்றுவெளி இடை கண்ணம்மா என்பதுபோல. மட்டக்களப்பில் சந்திவெளி, நாவிதன்வெளி, உப்புவெளி என்று வெளி என்ற சொல்லைக் கொண்டு ஊரமைத்திருப்பார்கள். அந்த ஊர்க்காரர் ஒருவரை வாகரைப் பகுதியில் மறித்து என்ன காரணம் என்று கேட்டேன். எடா மோனே இங்கருந்து பாருடா எந்தப்பெரிய வெளியா இருக்கு இந்த இடம் எல்லாம். இதுக்கு பின்ன எப்படி பேர் வைப்பாங்களாம் என்று நக்கலாகக் கூறிச்சென்றார். அவரது நக்கலின் உண்மையும் இருந்தது. மட்டக்களப்பில் வாகரை-வெருகல் இந்த இரண்டு இடப்பெயர்களையும் நான் எனது பன்னிரெண்டாவது வயதில் இருந்து செய்திகளில் கேட்டும் வாசித்தும் வருகிறேன். மிகத்துயரமான வரலாறு கொண்ட தமிழூர்கள் இவை. மலையத்தூர் ராமகிருஷ்ணன் எழுதிய மலையாள நாவல் ஒன்று வெருகல் என்ற பெயரில் வருவதாகவும், அதில் தமிழ் ஐயர் ஒருவரின் கதை உள்ளதாகவும் கேள்விப்பட்டுள்ளேன். வாகரை என்ற இந்த ஊர் 2004 க்கு முன்னர் வாகரைப் புலிகள் என்று பிரபலமாக அறியப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பு மிகப் பலமாக இருந்தனர். 2004 க்கு பின்னர் புலிகள் அமைப்பின் பிளவினால் இங்கு புலிகளும் பிரிந்து சென்ற குழுவும் மோதிக்கொண்ட இடமாக இது அமைந்தது. இங்கு இரத்த ஆறுகள் 2004-2008 வரை ஓடியதாகப் பல விவரணைகள் உள்ளன. ஈழத்து யுத்தம் அல்லது வடுக்கள் சார்ந்த நாவல்களிலோ சிறுகதைகளிலோ அல்லது அபுனைவுகளிலோ இந்த இரண்டு ஊர்ப்பெயரும் இடம்பெறவில்லை என்றால் அது பூரணமான ஒன்றாக இருக்காது. நான் நினைக்கின்றேன் இந்த இரண்டு ஊர்கள் பற்றி கவிஞர் கருணாகரன் பல கவிதைகள் எழுதியுள்ளார். அவரது இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாட்கள் என்ற தொகுப்பில் அதனை வாசித்த ஞாபகங்கள் உள்ளன. அதில் படுவான்கரைக் குறிப்புகள் (Remarks of Paduvankarai) என்ற நெடுங்கவிதை அற்புதமான ஒன்று. அதில்தான் "தேன்நாட்டின் மீன்கள் பாடமறுத்தன" என்று கருணாகரன் சகோதரச்சண்டையின் இரத்தசோகத்தை விவரணமாக்கி இருப்பார். நாங்கள் மாங்கேணி- ஓட்டமாவடி வழியாக வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வாசலை வந்தடைந்து இருந்தோம். கிழக்குப் பல்கலைக்கழக முகப்பு மிகச்சிறப்பான ஒரு தோரணையில் அமைக்கப்பட்டு இருந்தது. A15 பிரதான வீதி என்பதனால் சனப்புழக்கங்களும் இளைஞர் யுவதிகளும் மிகுந்து இருந்தனர். வெய்யிலால் வந்தது கூட்டத்தில் நிற்பதற்கு மிகந்த அயர்ச்சியை அளித்தது. எனினும் தங்களைப் புகைப்படம் எடுக்கச் சொல்லி வினோத், விஜிதன் வற்புறுத்தினர். புகைப்படம் எடுத்துவிட்டு மதிய உணவை உண்பதற்காக மட்டக்களப்பு மாநகருக்குள் உட்பிரவேசித்தோம். மூன்றுபக்கமும் நிலத்தால் சூழப்பட்ட கடற்கரைக்காயலை அப்போது கண்டடைந்தோம். நான்கரை ஐந்து மணி இருக்கும். நாம் சென்றடைய வேண்டிய தூரம் இன்னமும் நூற்றி இருபது கிலோமீட்டர்கள் இருந்தது. என்றாலும் மீன்பாடும் தேன்நாட்டில் நம் நேரத்தை வீணடிக்கவே விரும்பினோம். பழைய கோட்டைச்சுவர்களையும், காயல் நிலத்தையும் சுற்றினோம். கீழைக்காற்று வீசும்போது ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவல் இடையிடையே வந்து குறுக்கிட்டது. FX நடராஜா எழுதிய மட்டக்களப்பு மான்மியம் நூலை வாசிக்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஆவலாக இருந்தேன். எனினும் குறித்த நூல் கிடைக்கப்பெறவில்லை. மட்டக்களப்பை அடைந்ததும் மட்டக்களப்பாரைக் கண்டதும் மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டதும் ஒருவகையான வரலாற்றுப்பார்வையைத் தவறவிட்டதான ஒரு உணர்வினை என்னுள் நினைத்துக்கொண்டேன். கிழக்குப் பல்கலைக்கழகம் வாயிலில் விஜிதன், வினோத் மட்டக்களப்பில் இருந்து அறுகம்குடாவுக்கு இரவு நேரத்தில் பைக் பிரயாணத்தை மேற்கொள்வது என்பது ஆபத்தானது. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று இடையில் காணப்பட்ட வாகன நெருக்கடிகளும் எதிர்வரும் வாகனங்களின் வெளிச்சங்களும். இரண்டாவது வீதிகளில் காணப்படும் யானைப்பிரச்சனை. என்றாலும் நாம் அறுகம் குடாவுக்குச் சென்றே ஆக வேண்டும் என்று இருந்தோம். அதற்குக் காரணம் விடிகாலையில் சூரியோதயத்தை அந்த இடத்தில் காணும்போது புதிய உணர்வும் உத்வேகமும் உண்டாகும் என்பதேயாகும். மட்டக்களப்பில் இருந்து அறுகம்குடா செல்வதற்கு 120 கிலோமீட்டர்கள் என்ற போதும் எமக்கு மூன்றரை மணி நேரங்கள் பிடித்து இருந்தது. மெதுவாகவே எமது பயணம் இருந்தது. இரவின் நிழல் எமது நால்வரின் பைக்கில் பட்டுத் தெறித்தது. அந்த தெறிப்பு எமக்குள் இரவு குறித்து இருந்த அச்சத்தை விலக்கி வைத்தது. மட்டக்களப்பு இரவு பதினொரு மணிக்கு அறுகம் குடாவைச் சென்றடைந்தோம். அறுகம்குடா இலங்கையில் மிகப்பிரபலமான சுற்றுலா தலம். இங்கு கடல் நீரில் நீருலாவல் (Surfing) மேற்கொள்ளக்கூடிய உலகின் சிறந்த பத்து இடங்களில் இதுவும் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதனால்தான் 2019 ஆம் ஆண்டு So Sri Lanka Pro 2019 என்று உலகளாவிய நீருலாவல் நீர்ச்சறுக்கல் போட்டி நிகழ்த்தப்பட்டது. அறுகம் குடா அதிகாலையில் நாம் எந்த இடம் சென்றடைகிறோமோ அந்த இடத்தில் இருந்து இணையத்தில் தங்கும் அறைகளை புக் செய்து தங்குவது என்றே முடிவு செய்யப்பட்டது. அப்படித் தங்குமிடங்கள் கிடைக்கவில்லை என்றால் நான்குபேர் தங்கக் கூடிய கூடாரம் ஒன்றை ஜெனன் வைத்திருந்தான். அதில் தங்கலாம் என்றும் முன்திட்டம் ஒன்றை வைத்திருந்தோம். ஆனால் இறுதிவரை எமக்கு அந்தக்கூடாரம் பயன்படாமல் போனதுதான் சோகக் கதை. எத்தனை மணிக்குத் தூங்கினாலும் காலையில் நான்கு மணிக்கு எழும்பும் வழக்கத்தை என்னுள் நான் வைத்திருக்கிறேன். அந்த வழக்கத்திற்கு ஏற்ப நான் விழித்துக்கொண்டேன். கடலுக்கு அருகில்தான் நாம் தங்கிட இடம் அமைந்திருந்தது. அந்த இடம் மரம் ஒன்றின் மேலே வீடமைத்து காணப்பட்டது. அதிலிருந்து எழும்பி நின்று கடலைப் பார்த்தேன். தன் ஆயிரம் கைகளுடன் மறையும் இருளைத் தூர எறிந்து கொண்டு இருந்தது கருநீலக்கடல். அத்தருணத்தில் நீல நிறம் மட்டுமே எழுந்து இருளை வெட்டி விளாசிக்கொண்டு இருந்தது. இந்த இருள் எப்படி இல்லாமல் போகிறது என்றால் நீலக்கடலுடன் மோதுண்டுதான் என்று அற்பமான கற்பனையை ஏற்றிக்கொண்டேன். ஒருமணி நேரம் அலைகளையே பார்த்துவிட்டு கடலைச் சேர்ந்தேன். பேரலைகள் மிகத் தள்ளியே வீசின. 2004 சுனாமியின் போது இந்த இடங்கள் சிதிலமடைந்து இருந்தன. அதனை அப்போது நினைத்துக்கொண்டேன். கடல்புரத்தில் வண்ணநிலவன் போல நின்று பிலோமி எந்தப்பக்கத்தில் இருந்து உருவான கதாபாத்திரம் என்று நினைத்துச் சிரித்துக்கொண்டேன். 5.45 அளவில் மூவரும் விழித்துக்கொண்டு கடலைச் சேர்ந்தனர். ஏராளம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இலக்கியத்துக்குப் பின்னர் நான் மிகவும் விரும்பும் துறை புகைப்படம் எடுத்தல். இயற்கை சார்ந்த இருபதாயிரம் புகைப்படங்களை இத்தருணம் வரை எடுத்து வைத்திருந்தேன். சூரியோதயத்தில் நான் கடல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் தருணங்கள் இரண்டு. ஒன்று கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கு ஆயத்தமாகும் நேரம் கடலைக் காண நேர்கையில். இரண்டு மாலை மங்கும் போது உண்டாகும் அமைதியில் தொடர்ந்து நள்ளிரவு வரை கதறும் அலைகளின் ஓசையைக் கேட்க நேர்கையில். இதையும் தாண்டி ஒரு பகற்பொழுதில் சுனாமி நேர்ந்தது என்பது ஆச்சரியமான ஒன்றென்றே எண்ணத் தோன்றுகின்றது. இயற்கையை மீறிய விடயம். எமது வட பகுதிகளில் உணவை மிகவும் காரமாக வைப்பார்கள். குறிப்பாக எனது தாயாரின் பூர்வீகமான பனங்காமம் - வன்னி பகுதியில் மிளகாய் கறிக்கு போட்டிருந்தாலும், கொத்தமிளகாய் ஆறேழு இட்டு உணவை உறைப்பாக வைப்பார்கள். எனது தந்தையாரின் இடம் யாழ்ப்பாணம் காரைநகர் என்பதால் அங்கு அநேகமாக சைவ உணவையே அதிகமாக உண்டனர். பச்சைமிளகாய் பாவனையே அதிகமாக இருந்தது. இந்த இரண்டு உணவுக்கலப்புக்கு இடையில் எனது நா பழக்கப்பட்டு இருந்தது. எனினும் இங்குள்ள உணவுப்பழக்கம் வித்தியாசமானது. கறிகளில் உறைப்புக் குறைவாகவே உள்ளது. காரத்தைக் கூட்டும் தூள்களைக் குறைவாக இடுவதே காரணமாக இருக்கக் கூடும். நாம் அறுகம்குடாவில் இருந்து புறப்பட்டு மாத்தறை மாவட்டத்தின் மிரிஸ்ஸ பகுதிக்குச் செல்வதாகத் திட்டமிட்டோம். மாத்தறை இலங்கையின் தென்கோடி மாவட்டம். வடக்கில் பருத்தித்துறை இலங்கையின் உச்ச தொலைவு/முனை என்றால் தெற்கில் தேவேந்திரமுனை உச்சதொலைவாகும். அது மாத்தறையிலுள்ளது. அங்குள்ள வெளிச்சவீட்டினைப் பார்க்க வேண்டும் என்பதே எமது திட்டம். இதுதான் இலங்கையில் மிக உயரமான வெளிச்சவீடு. அதேபோல தென்கிழக்கு ஆசியாவிலும் இது ஒன்றே உயரமானது. இது 160 அடி உயரமானது. தற்போது இது கணணிமயப்படுத்தப்ட்ட ஒரு வெளிச்ச வீடாக அமைந்துள்ளது. நாம் பொத்துவில் வழியாக லகுகல வனாந்தரப் பாதை வழியாக எமது பயணத்தைத் தொடர்ந்தோம். குமண மற்றும் யால உள்ளிட்ட ஒதுக்குக் காடுகள் தென்பகுதியில் உள்ளமையால் அம்பாந்தோட்டைக்கு நேரடியான பாதைகள் அமைக்கப்படவில்லை. ஆரம்ப காலம் தொட்டே குறித்த காடு பௌத்த சிங்கள நம்பிக்கையின் சின்னமாக உள்ளது. ஆகவே இனியும் அதனை அழிப்பார்கள் என்று நம்ப முடியாது. அந்த நம்பிக்கை என்றுமுள்ளதாக அமைய வேண்டும். லகுகல தேசிய வனம் சிறிய வனமாயினும், இங்கு யானைகள் உலாவரும் பகுதியான அதேவைளை இங்குதான் யானைகள் உறவு கொண்டு குட்டிகளை ஈணுகின்றன. காலையில் இதமான குளிருடன் வனப்பாதையில் செல்வது என்பது அனாயாசமானது. அதனை நான் உணர்ந்து கொண்டே சென்றேன். எனது சிறுவயது முதல் புத்தகங்களில் கண்ட பல பறவைகளை நேரில் கண்டது இந்த வனப்பகுதிகளில்தான். ஒரு கட்டத்தில் இருவாட்சி எனப்படும் Indian Hornbill இனைக் கண்டதும் அங்கேயே பைக்கை நிறுத்திவிட்டேன். சில நேரம் அந்த நீர்த்தாரையைப் பார்த்து இருவாட்சியையும் ரசித்துவிட்டு செல்ல மனமில்லாமல் சென்ற தருணத்தை நினைவிலாழ்த்திப் பார்க்கின்றேன். காடுகளைத் தாண்டிச் சென்ற போது ஊர்மனைகள் தென்படத் தொடங்கின. அந்த ஊர்மனைகளை அடைவதற்கான பாதைகள் வளைவாக வரவேற்றன. அதாவது மலைகளை தாழ்த்திய நிலங்கள். அதனூடே வீதியமைக்கப்பட்டுள்ளன. அப்படியே மொனராகலை சென்றடைந்தோம். மொனராகலையில் இருந்து புத்தல சென்று புத்தல வழியாக கதிர்காமம் செல்வது அடுத்த திட்டம். இந்த இடைவழி மிக ஆபத்தானது. யானைகள் வழிமறிக்கும் வலயம். புத்தலவில் இருந்து கதிர்காமம் செல்லும் B35 பாதையில் தான் யானைகளை முதன் முதலில் நேரடியாக எதிர்கொண்ட அனுபவம் எனக்குண்டு. நான்கு நண்பர்கள் வடக்கில் இருந்து நான்கு பைக்குகளில் சென்றிருந்தோம். இந்தப் பாதை மிகவும் அச்சத்தையும் அதேநேரம் ஒருவித சாகச உணர்வையும் உண்டாக்கும் தன்மை மிகுந்தது. ருகுணு தேசிய பூங்காவின் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வலயங்கள் அந்தப் பாதையில் உள்ளடங்குகின்றன. இந்த வனப்பாதை 45 கிலோமீட்டர் தூரம் நீண்டிருந்தது. வீதியின் இருமருங்கும் வனம் உதிர்ந்து ஏப்ரல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்க, மிகச்சமீபமாக மழை மேகங்கள் மலை முகட்டில் சதிராடியபடியிருந்தன. குறும்பு யானையுடன் வனப்பாதை தொடங்கும் போதும் முடியும் போதும் யானை வீதியின் ஓரமாக நின்று உணவு கேட்கும் எனவும், அவற்றை ஆத்திரமூட்டினால் அல்லது உணவு என்ற கூறி வேறு எவற்றையும் வழங்கினால் அவை துரத்தித் தாக்கும் என்றும் வனப்பாதையால் செல்லும் முன்னர் சிலர் அறிவுரை வழங்கியிருந்தனர். குறித்த வனப்பாதையின் வாயிலிலேயே யானை ஒன்று வாகனங்களில் செல்லும் மக்களிடம் வம்பு செய்துகொண்டிருந்தது. பழங்களை வழங்கிய வாகனங்களுக்கு மட்டும் வழிவிட்டது. நாம் அதன் அழிச்சாட்டியங்களைக் காண்பதற்காக இருநூறு மீட்டர் தொலைவில் பைக்குகளை நிறுத்திவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தோம். கடலின் அலையைக் காணும் போது அந்தக் கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அறியாமல் மேலும் செல்ல எத்தணிக்கும் மனத்தின் ஆர்வம் போல, யானை செய்யும் குறும்புகளை நீண்ட நேரமாக அவதானித்த நானும் இன்னொரு நண்பனும் யானைக்கு மிக அருகில் சென்றோம். யானைக்குப் புன்னகை என்று ஒன்று இருப்பதை நான் செல்ல முன்பாகவே எனது கமராவில் எடுத்துப் பார்த்திருந்தேன். அந்த ஆர்வம் தான் மிகச் சமீபமாகச் செல்ல வைத்தது. அரை நிமிடம் வரையும் அமைதியாக இருந்த யானை, தனது பின்னங்கால்களைத் துருத்தி முன்னங்கால்களால் நடையெடுத்து வைத்தது எம்மைத் தாக்குவதற்கு என்று. அதுதான் யானை மீது நாம் கொண்டிருந்த அத்தனை சித்திரங்களும் மாறிய தருணம். "நினைவில் காடுள்ள மிருகம்" என்று க.சச்சிதானந்தன் கூறிய வார்த்தைகள் தான் இன்றும் என் ஆஸ்தான வார்த்தைகள். எனது அனைத்து தனிப்பட்ட கோப்புகளிலும் இதனை எழுதி வைத்துள்ளேன். அந்த வார்த்தைகள் எத்தருணத்திலும் எதனில் ஆர்வத்தைச் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கும் தன்மையானவை. நம் நினைவிலும் காடுகள் உள்ளன. நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்று அன்றைய தினம் யானையிடம் கற்றிருந்தேன். புகைப்படங்கள் புத்தல-கதிர்காமம் வீதியில் வைத்து 2021 ஏப்ரல் 02ம் தேதி எடுக்கப்பட்டது. மேற்கூறிய தருணங்களில் வாய்த்த புகைப்படங்கள் இவை. 00 யானைகளைக் காப்போம் என்ற உணர்வானது இலக்கியங்கள் வழியிலும் உள்ளூர எழுதப்பட்டுள்ளது. இவை படைப்பு இலக்கியங்கள் மூலம் காத்திரமாக வெளிப்பட்டிருந்தன. யானைகள் காட்டை உருவாக்கி மிக முக்கியமான பங்களிப்பை அளிக்கும் மகத்தான உயிர் என்பதை பொதுவான அறிவு நூல்களில் கற்கலாம். அவற்றுக்கு உணர்வு அளித்து புரிய வைப்பவை இலக்கியங்களே. ஜெயமோகன் யானைகள் பற்றி எழுதிய உச்சக் கதைகளாக யானை டாக்டர், ஊமைச்செந்நாய், மத்தகம் மூன்றையும் கூறவேண்டும். இம்மூன்று கதைகளிலும் வாசகர்களை யானையின் மனநிலைகளுக்குள் இணைத்து விட்டாற்போலவும் அதை ஒரு மேலான உயிரினமாகவும் சொல்லியிருப்பார். அநேக கதைகளில் யானையைப் பற்றி எழுதியவர் யானை டாக்டர் கதையில்தான் யானை குறித்து எழுதுவதற்கான காரணத்தைக் கூறியிருப்பார். அது ஒவ்வொருவரும் தன்னிலை பற்றி அறிவதற்கான முகாந்திரம் எனலாம். யானை டாக்டரில் இடம்பெறும் யானையின் மரணம் பற்றிய ஒரு சூழலியல் ஆதங்கம்: "மற்ற எந்த மிருகத்தைவிடவும் யானைக்கு மிக அபாயகரமானது அந்தக் குப்பி உடைசல். யானையின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது. குப்பிகள் அனேகமாக மரத்தில் மோதி உடைந்து மரத்தடியிலேயே கிடக்கும். யானை அதன் மகத்தான எடையுடன் அதன்மேல் காலை வைத்தால் குப்பி நேராக அதன் பாதங்களுக்குள் முழுக்க புகுந்துவிடும். இருமுறை அது காலைத்தூக்கி வைத்தால் நன்றாக உள்ளே செல்லும். அதன் பின்னால் யானை நடக்கமுடியாது. இரண்டே நாட்களில் காயம் சீழ் வைக்கும். புழுக்கள் உள்ளே நுழையும். புழுக்கள் சதையை துளைத்து சீழை உள்ளே கொண்டுசெல்லும். முக்கியமான குருதிப்பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்டதென்றால் அதன்பின் யானை உயிருடன் எஞ்சாது. வீங்கிப் பெருத்து சீழ் வழியும் கால்களுடன் பலநாட்கள் யானை காட்டில் அலையும். ஒரு கட்டத்தில் நடமாட முடியாமலாகும்போது ஏதாவது மரத்தில் சாய்ந்து நின்றுவிடும். ஒருநாளில் முப்பது லிட்டர் தண்ணீர் குடித்து இருநூறு கிலோ உணவு உண்டு ஐம்பது கிலோமீட்டர் நடந்து வாழவேண்டிய உயிர் அப்படி ஐந்து நாட்கள் நின்றால் மெலிந்து உருக்குலைந்துவிடும். முதுகு எலும்பு மேலே துருத்தும். கன்ன எலும்புகள் புடைத்தெழும். காது அசைவது குறையும். மத்தகம் தாழ்ந்து தாழ்ந்து வரும். மெல்ல துதிக்கையை தரையில் ஊன்றி குப்புறச்சரிந்து நிற்கும். பின் மத்தகமே தரையில் ஊன்றும். அடுத்தநாள் பக்கவாட்டில் சரிந்து வயுறு பாறைபோல மறுபுறம் எழுந்து நிற்க விழுந்து கிடக்கும். வாலும் துதிக்கையும் மட்டும் சுழல கண்களை மூடித்திறந்தபடி நடுங்கிக்கொண்டிருக்கும். பிற யானைகள் அதைச்சூழ்ந்து நின்று தலையாட்டி பிளிறிக்கொண்டிருக்கும். அதன்பின் யானை சாகும். கடைசி துதிக்கை அசைவும் நின்றபின்னரும்கூட பலநாள் யானைக்கூட்டம் சுற்றி நின்று கதறிக்கொண்டிருக்கும். பின்னர் அவை அதை அப்படியே கைவிட்டு பலகிலோமீட்டர் தள்ளி முற்றிலும் புதிய இன்னொரு இடம் நோக்கிச் சென்றுவிடும். யானையின் தோலின் கனம் காரணமாக சடலம் அழுகாமல் இந்தக்காட்டில் எந்த மிருகமும் அதை சாப்பிட முடியாது. அழுகிய யானையை செந்நாய்கள் முதலில் தேடிவந்து வாயையும் குதத்தையும் மட்டும் கிழித்து உண்ணும். பின்னர் கழுகுகள் இறங்கி அமரும். கழுதைப்புலிகள் கூட்டம் கூட்டமாக வெகுதொலைவிலிருந்து தேடிவரும். மனிதனைவிட நூற்றிஎழுபது மடங்கு அதிக நியூரான்கள் கொண்ட மூளை கொண்ட காட்டின் பேரரரசன் வெறும் வெள்ளெலும்புகளாக மண்ணில் எஞ்சுவான்" விலங்குகளில் உங்களுக்குப் பிடித்தது எது என்றும், மிக மகத்தான உயிரினம் எது என்றும் யாரேனும் கேட்டால் யானை என்று தயங்காமல் கூறுங்கள். யானைகள் பூவுலகின் பொக்கிஷங்கள். இந்த வழியைத் தாண்டி நாம் முருகன் உறையும் கதிர்காமத்தை அடைந்தோம். ஒரு சைவ இடத்தைப் பௌத்தர்கள் பராமரிப்பதையும், அதுவே மெல்ல அது பௌத்த பாரம்பரிய நம்பிக்கை ஸ்தலமாக மாறுவதையும், சைவ நம்பிக்கைகள் இற்றுப் போவதையும் நாம் கண்ணெதிரே கண்டிருந்தோம். முருகன் பாதுகாப்பாக உறைகிறான் என்றெண்ணி மகிழ்வத? அந்த முருகனின் நாமம் பௌத்த நம்பிக்கையில் செல்கிறதே என்றெண்ணிக் குழைவதா? என்று நினைத்திருந்தேன். எனினும் சித்தார்த்தனும் ஒரு இந்துவே என்றெண்ணி உள்ளத்தைத் தேத்திக்கொண்டேன். கதிர்காம முருகனை நினைந்து அருகிலோடும் மாணிக்க கங்கையில் நாம் நீராடிவிட்டு ஹம்பாந்தோட்டைக்குப் புறப்பட்டோம். கதிர்காமம் அம்பாந்தோட்டை அம்பாந்தோட்டை ஹம்பாந்தோட்டை ஆரம்ப காலங்களில் அபிவிருத்த அடையாத ஒரு மாவட்டமாகவே எம்மால் அறியப்பட்டது. ஆனால் இங்கிருந்து உருவான அரசியல் குடும்பம் ஒன்று அரச தலைமைக்கு வந்ததும் தமது பிரதேசத்தை எப்படி வளர்ச்சி அடையச் செத்துள்ளது என்பதனை அங்கு சென்றபின் கண்டுகொண்டேன். நான்குவழி நெடுஞ்சாலைகள், கப்பல் துறைமுகங்கள், விமானவழிப்பாதைகள், மற்றும் அரச கட்டிடங்கள், மின்விளக்குகள், ஏனைய உட்கட்டுமானங்கள் என்று இன்னோரன்ன விடயங்களில் மற்ற மாவட்டங்களை விழுங்கி அம்மாந்தோட்டை முன்னேறியுள்ளது. நாம் அம்பாந்தோட்டையை நினைத்து வியப்படைந்தோம். பிரம்மாண்டமான நகரம் ஒன்று நம் கண்ணெதிரே உலாவக்கண்டு மூர்ச்சையுற்றோம். அம்பாந்தோட்டை பூராகவும் சுற்றிவிட்டு மாலையளவில் மாத்தறையை அடைந்தோம். ஒரு பாதையில் அமர்ந்து வெளிச்ச வீடு ஒன்றைப் பார்த்தபடி அமர்ந்தோம். திடீரென ஜெனன் தொலைபேசியை எடுத்துப் பார்த்துவிட்டு, பெருங்குரலில் கத்தினான். கூச்சலிட்டபடி அலைகடலில் இறங்கி அலைகளைத் தாவினான். என்னடா என்று கேட்க நாம் இப்போது நிற்பது தேவேந்திர முனை என்றான். எனக்கு அந்நேரத்தில் புல்லரித்துவிட்டது. ஏனென்றால் நாம் வடக்கில் ஒரு தொங்கலில் இருந்து பயணம் வருகிறோம். அங்கிருக்கும் போது நாம் பள்ளிப் பாடங்களில் அறிந்திருந்தோம் தேவேந்திரமுனைதான் இலங்கையின் அதியுச்ச முனை என்று. அப்போது கற்கும்போது ஒவ்வொருவரின் கனவாக இந்த உச்சங்களை அடைவதில் ஆசை இருந்தது. இப்போது அந்த உச்சத்துக்கு மிகச்சாதாரணமாக வந்தடைந்துள்ளோம். இந்த மனநிலை எப்படி இருக்கும் என்றால் தாவிக்குதித்து வெளிச்ச வீட்டின் கூரையில் நின்று ஓ..... இந்த மா கடல் மாதாவே என்று ஆர்ப்பரித்துக் கர்ச்சனை செய்யத் தோன்றும் அல்லவா??? அம்பாந்தோட்டை மாத்தறை அம்பாந்தோட்டை https://www.suyaanthan.com/2022/09/blog-post.html
  4. உயரவாகு கனகா பாலன் ” நிலைக்கதவுப் பிள்ளையாருக்கு இந்தக் கண்ணியை வைத்து விடு “ சாமந்தியை நீட்டுகிறாள் அம்மா “லா.சா. ரா தி.ஜா கி.ரா வை வாசித்து நாளாகிவிட்டதாம்” பரணிலிருக்கும் புத்தகத்தை கீழிறக்கச் சொல்கிறார் அப்பா மாதமொரு முறை முகப்புக் காற்றாடித் துடைத்தெடுக்க பழுதடைந்த மின்பல்புகளை ஏணியின்றி எளிதில் பொருத்த அழுக்குப்பாசியடைந்த மொட்டைமாடி நீர்த்தொட்டியினுள் வெளுப்புக் காரமிட்டு தேய்த்துக் கழுவிவிடவும் தேடப்படுகிறேன் ஆயத்த உடை அளவு பொருந்தாமை பாதணிகளின் நீட்டுப் பத்தாமை முழங்கால் இடிக்கும் முன்னிருக்கையென ஒன்றிரெண்டு இம்சைகள் எனக்கு மட்டும்தான் உதவிக்கு நேர்ந்துவிட்டதுபோல் என் உயரவாகு எத்தனை தோதாயிருக்கிறது பிறருக்கு. https://solvanam.com/2022/12/11/உயரவாகு/ கவிதையில் பயன்படுத்திய படத்தில் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பக்கத்தில் நிற்கும் உயரமான போராளி யார்?
  5. மீண்டும் தொடர்வதற்கு நன்றி @ரஞ்சித். இந்தத் தொடரை ஆங்கிலத்தில் சங்கம் இணையத்தில் பல வருடங்களுக்கு முன்னர் படித்திருந்தேன். தமிழில் கட்டாயம் இருக்கவேண்டிய முக்கியமான ஆவணம்.
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா🎉🎂🎊 வாழ்க வளமுடன்
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்🎊🎂🎉🍾🎈
  8. எனது பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் நன்றிகள்!🙏🏽 நிழலியின் மகனுக்கும் அன்றுதான் பிறந்தநாள் (நிழலியின் மகனுக்கு எனது வயதில் இருந்து ஒன்றிரண்டு குறைவு, அடுத்தடுத்த வருடங்களில் எட்டிப்பிடித்துவிடுவார்!)
  9. குமாரசாமி ஐயா, புத்தன் அங்கிள் இருவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  10. பொறுமைதான் இதற்கு தீர்வு. பிழை காட்டினால் திரும்பவும் அந்தப் பக்கத்திற்கு refresh செய்துபோகலாம். Editor இல் இருப்பது காணாமல் போகாது என்பதால் நேரத்தை வீணாக்காமல் பதியலாம்! இதை எல்லாம் வெட்டியாடித்தான் இடைக்கிடை பதிவைப் போடுகின்றேன்! 13 வருடம் நொக்கியாவில் புது ஃபோன்களை பாவித்த பழக்கம்! மக்கர் பண்ணினால் அதை எப்படி மேவி வேலை செய்யலாம் என்று பழகிப்போய்விட்டது😜
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் ஐயா🎉🎊🎂
  12. கவி அருணாசலம் ஐயாவையும் மதிச்சு கடுதாசி போட்டிருக்காப்பல😂🤣
  13. தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதல் ஒரு பார்வை 10.06.1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்…. கரும்புலி கப்டன் சாதுரியன் நடராசா அரசரட்ணம் மட்டக்களப்பு கரும்புலி மேஜர் யாழினி சிவசுப்ரமணியம் ராகினி யாழ்ப்பாணம் கரும்புலி மேஜர் நிதன் (பர்வதன்) மாணிக்கம் அருள்ராசா மட்டக்களப்பு தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி மற்றும் கரும்புலி மேஜர் நிதன்,கரும்புலி கப்டன் சாதுரியன் தாண்டிக்குளம் – நொச்சிமோட்டை தாக்குதல்… புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர். முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி.. ஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது. திருவுடலில் வெடி சுமந்து … ஐயசிக்குறுய் படையின் கட்டளை தலைமையகம் தாண்டிக்குலத்திலேயே அமைந்திருந்தது. சண்டைகளுக்குத் தேவையான வெடிபொருட்களும்–மருத்துவ சாமான்களும் இந்தப்பகுதியிலேயே களஞ்சியப்படுத்தபப்ட்டிருந்த ஆட்லறி குண்டுகள்–மோட்டார் எறிகணைகள்–யுத்த ராங்கி குண்டுகள் என்பன ஐயசிக்குறுய் பூதத்தின் பிரதான உணவுகளாக இருந்தன. பூதத்தை பட்டனை போட்டு அதன் இயக்கத்தை மந்தப்படுத்தும் தந்திரத்தை புலிகள் கடைப்ப்பிடித்தனர். இத் தாக்குதலில் பலாயிரம் எறிகணைகளும் , பல நூறு யுத்த ராங்கி குண்டுகளும் தீயில் அழிந்தன. பல இராணுவ வாகனங்கள் அழிக்கபப்ட்டன. சில கைப்பர்ரபப்ட்டன. இதேசமயம் குறைந்த 400 படையினர் கொல்லப்பட்டு , 570 ற்கு அதிகமானோர் காயமடைந்திருந்தனர். தாக்குதல் வலையத்திற்க்குள் சிக்குப்பட்ட படையினருக்கு உதவ உலங்கு வானூர்த்திகளில் வந்திறங்க சிங்களக் கொமாண்டோக்கள் முயன்றனர். தம்பி நிதனோடு தங்கை யாழினி எங்கள் சாதுரியன் இந்த முயசியில் ஒரு ” எம் . ஐ . 24 ” உலங்கு வானூர்த்தி கடும் சேதத்திற்கு உள்ளானது. ஓமந்தைப் பகுதிகளில் இருந்து உதவிக்கென நொச்சிமோட்டைப் பகுதிக்குள் நூலைய முயன்ற படையினர் மீது தாக்குதல் நடத்தபப்ட்டது. இதில் இரண்டு ராங்குகள் அழிக்கப்பட்டன. குறைந்தது 24 மணிநேரமாக தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தன. ஐயசிக்குறுய் படைக்கு விழுந்த முதலாவது மரண அடியாக தாண்டிக்குளம் தாக்குதல் அமைந்துவிட்டது.” புலிகள் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றனர்”என்ற அரசின் பிரச்சாரத்தின் மத்தியில் , தப்பிப்பிழைத்த தாண்டிக்குளம் படையினர் சிலர் தங்களை உருமாற்றி சிவிலியன் உடையணிந்து வவுனியாவுக்குள் ஓடினர் என்று செய்திகள் வெளிவந்தன. இப்பெரும் தாக்குதலின் போது மூன்று கரும்புலிகள் உட்பட 80 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள். https://www.thaarakam.com/news/d35b61de-ee34-4ecf-bafb-b4469b44d070
  14. கலைஞனுக்கும் போராளிக்குமுரிய அடிப்படைத் தகுதியான மென்மையான மனமுடையவர் சிங்கோ மாஸ்ரர். வீரவேங்கை சிங்கோ மாஸ்ரர் கந்தையா பகத்சிங் வந்தாறுமூலை, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:-29.03.1945 வீரச்சாவு:-15.05.1986 நிகழ்வு:-மட்டக்களப்பு மட்டக்களப்பில் சிறிலங்கா அதிரடிப்படையால் கைதாகி முறக்கொட்டாஞ்சேனை முகாமில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையின் போது வீரச்சாவு சிறந்த ஓவியக் கலைஞன் - இந்தியாவில் திரைப் படங்கள் தயாரிக்கும் ஏ.வி.எம் ஸ்ரூடியோ , யாழ்ப் பாணத்தில் செல்லம்ஸ் ஸ்ரூடியோ ஆகியவற்றில் பணிபுரிந்தவர்; மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பல ஆலயங்களில் ஓவியங்கள் வரைந்தவர். மின் இணைப்பு வேலைகள் செய்பவர். இசைத்துறையில் நாட்டமுள்ளவர். யாழ்நகர் கண்ணன் இசைக்குழுவில் அங்கம் வகித்தவர். இவ்வாறெல்லாம் பல்வேறு துறைகள் மூலமாக மக்களுக்கு அறிமுகமான பகத்சிங் மட்டக்களப்பு பிராந்திய போராளிகளுக்கு விடுதலை விரும்பியாகவே அறிமுகமானார். விசேட அதிரடிப்படையினர் அடிக்கடி வந்து போகும் வந்தாறுமூலை அம்பலத்தடியில் ஆபத்தைப் பொருட்படுத்தாது இயக்கப் பணிகளுக்காக நிற்பவர் இவர்தான். சுமார் 20மைல் தூரத்திலுள்ள பயிற்சி முகாமுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லவேண்டும். வடதமிழீழத்துக்கும் தென் தமிழீழத்துக்குமான போக்குவரத்துப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் செய்யவேண்டும். இப்பணிகளில் ஈடுபடுவோருக்கான உணவு வசதிகள் செய்யவேண்டும். அவர்கள் பிரதான வீதியைக் கடப்பதற்கு 'சென்றி' நிற்கவேண்டும். அதிரடிப் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அனுப்ப வேண்டும் போன்ற இன்னோரன்ன பணிகளுக்காக அவர் அங்கே நிற்பார். சிலவேளை நித்திரை செய்வதற்கே நேரம் கிடைக்காது. வந்தாறு மூலைப்பகுதியில் போராளிகள் தங்கவேண்டி ஏற்பட்டால் மணித்தியாலத்திற்கு ஒருவர் என்ற ஒழுங்கில் 'சென்றியில்' நிற்பர். ஆனால் இவருக்கோ நேரக்கணக்குக் கிடையாது, எல்லோர் சென்றியிலும் துணைநிற்பார். போராளிகளை அடிக்கடி கேட்பார்; "எனக்கு றெயினிங் தாங்கோ " – ஆனால் அவரது வாழ்நாளில் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை . இவர் பயிற்சி எடுக்கும் காலத்தில் இவரைப் போல ஈடுசெய்து பணியாற்றக் கூடியவர்கள் வேறு எவரும் இல்லை என்பதால் இவரைப் பயிற்சிக்கு அனுப்ப முடியவில்லை . யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மட்டக்களப்பு பகுதி ஆலயங்களில் ஓவியம் வரையும் வேலைக்காகச் சென்றார். அங்கேயே திருமணம் செய்து கொண்டார். இல்லற வாழ்வில் இரு குழந்தைகளுக்கு தந்தையுமானார். மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பஸ்தராக இருந்து கொண்டே முழுநேர உறுப்பினராக வர விருப்பம் தெரிவித்த முதல் ஆள் இவர் தான். போராளிகளுக்கு ஆபத்தென்றால் அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் இவர் மனம் அமைதியாக இருக்காது. ஒரு முறை ஈரலிக்குளம் பகுதி சிறிலங்காப்படையினரால் முற்றுகையிடப்பட்டது. அப்பகுதியெங்கும் குண்டுச்சத்தங்கள் -வேட்டோசைகள் கேட்டன. அங்கு தான் போராளிகளின் பிரதான முகாம் இருநதது. முற்றுகைக்குள்ளான போராளிகள் காட்டில் வழி தெரியாது அலைந்து திரிகின்றார்களோ எனஇவர் தவிப்புடன் அலைந்து திரிந்துார், முற்றுகை ஆரம்பித்த நேரம் தொடங்கி சிறிலங்காப்படையினர் விலகிச் சென்றதுவரை இவர் போராளிகளைத் தேடிக் கொண்டிருந்தார். எல்லோரும் பத்திரமாகத் தப்பிவிட்டனர். ஒருவருக்குக் கூட ஆபத்தில்லை என்று அறிந்தபின்னரே இவருக்கு நிம்மதி ஏற்பட்டது. இதற்கிடையில் போராளிகளுக்கான உணவுக்கும் ஏற்பாடு செய்துவிட்டார். ஒவ்வொரு போராளிகளையும் தான் நேரே கண்டு அவர்களுக்குச் சாப்பாடு கொடுத்த பின்னரே, தான் இவ்வளவு நேரமும் சாப்பிடவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். இயக்க கட்டுப்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை உடையவர் இவர். உத்தரவு பெறாமல் இயக்கத்தின் எந்தப் பொருளையும் தொடக்கூடாது என்ற கருத்துடையவர், 1985ஆம் ஆண்டுக்காலத்தில் இயக்கத்தின் வள்ளங்கள் இவரது பாதுகாப்பிலேயே இருந்தன. அவ்வருடத்தின் மழைக்காலத்தில் போராளிகள் தங்கியிருந்த பகுதியைச் சுற்றியெங்கும் வெள்ளம் காணப்பட்டது. தரை வழித்தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்களுக்கு உணவுப்பொருள்கள்தேவை. எனவே மழையில் நனைந்தபடியே ஒரு தனியார் வள்ளத்தை ஒழுங்குபடுத்தி அதில் பொருள்களை ஏற்றிக்கொண்டு போராளிகள் இருக்குமிடத்தை நோக்கிச் சென்றார். அங்கிருந்த போராளிகள் 'ஏன் அண்ணை நம்மட வள்ளத்திலேயே வந் திருக்கலாமே' என்று கேட்டதற்கு 'இயக்கத்தின்ரை வள்ளம் -நீங்கள் இருக்கறபோது நான் எதுவும் செய்யலாம் இல்லாத இடத்தில நான் அதுக்கு ஏற்றமாதிரி நடக்கவேணும். அது தான் வேறை வள்ளம் ஒழுங் குபடுத்தினனான்' என்றார். அவ்வளவு கட்டுப்பாடானவர் இவர். கலைஞனுக்கும் போராளிக்குமுரிய அடிப்படைத் தகுதியான மென்மையான மனம் இவரிடமும் காணப்பட்டது. போராளிகளுக்கு ஆபத்து - அவர்களது மரணம் - இப்படியான செய்திகளை தாங்கக்கூடியவரல்ல. ஒருமுறை மட்டக்களப்பு இருதயபுரம் பகுதி முற்றுகையிடப்பட்டது. முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் எமது போராளிகள் இருந்தனர். அப்பகுதி முற்றுகையிடப்பட்ட செய்தி கிடைத்தபோது ஒரு போராளி சொன்னான் 'நம்மட ஆக்களும் உள்ள இருக்கிறானுகள். ஆர் ஆர் மண்டையைப் போடுறானுகளோ' - இவர் பதறினார். 'தம்பி விளையாட்டுக்குக்கூட அப்பிடிச் சொல்லாதேங்கோ. அப்படி ஏதும் நடக்கக்கூடாது தம்பி' என்று சொல்லிவிட்டு போராளிகளின் நலனுக்காக வேண்டி கிருஸ்ணர் ஆலயத்தை நோக்கிச் சென்றார். காட்டிக் கொடுக்கும் முகமூடிக் கூட்டங்கள் இழைத்த துரோகங்களுக் தான் நாம் இவரை இழந்த வரலாறும் சேர்ந்திருக்கிறது. இவருக்கெனவே அந்த முற்றுகை நடத்தப்பட்டது. 'சிங்கோ மாஸ்டர் - சிங்கோ மாஸ்டர்' என்று கேட்டபடியே வந்த அதிரடிப்படையினர் இவர் தன்பெயர்பகத்சிங் என்று சொன்னதும் விட்டு விட்டனர். ஆனால் அந்தத் துரோகி இவரது மரணத் திகதியை நிர்ணயித்து விட்டான். இன்பதுன்பங்களில் பங்கெடுத்த மனைவி -முத்தமழையால் இவரை நனைக்கும் குழந்தைகள் முன்னிலையில் இவர் மோசமாகத் தாக்கப்பட்டார். அந்தக்காட்சி தான் சிங்கோ மாஸ்டர் குடும்பத்தில் நினைவில் உள்ளது. அதன் பின் அவரை அவர்கள் காணவில்லை . சிங்கோ மாஸ்டர் 1985ஆம் ஆண்டுக் காலத்தில் வந்தாறுமூலை அம்பலத்தடியில் இவரைப் போலவே இன்னொருவரும் காணப்படுவார். அவர் பெயர் கயிலாயத்தார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். அடுக்கு மொழியில் பேசுவார். ஒரு நாள் சில இளைஞர்கள் திடீரென ஓடினர், கயிலாயத்தார் என்ன என்று கேட்டார். "எஸ்.ரி.எவ். வாறான்" என்று சொன்னார்கள். அவர்கள் ஓடி மறைந்ததும் ஓடியவர்கள் யார் என்று கேட்டார் கயிலாயத்தார் 'ரெலோ' என்றனர் அங்கிருந்தவர்கள். உடனே அவர் "நாட்டில் பயங்கரவாதிகள் சரிபாதி, பயந்தோடுபவர் அதில்பாதி" என்றார். அதைக்கேட்டு சிங்கோ மாஸ்டர் சிரித்தார். அன்று மக்கள் மத்தியில் நின்று கொண்டு சிறிலங்கா படையினரைக்கண்டு ஓடியவர்கள் இன்று அதே படையினருடன் மக்களை வேட்டையாட அந்த இடத்திற்கு வருகின்றார்கள். எனினும் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது ஓடுகின்றார்கள். இன்று கயிலாயத்தார் அங்கு காணப்படுவதும் இல்லை அவரது அடுக்கு மொழியைக் கேட்டு ரசிக்க சிங்கோ மாஸ்டரும் இல்லை. -களத்தில் நன்றி வேர்கள் https://www.thaarakam.com/news/41664564-b4a2-4ca4-a856-e81883932215
  15. 2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி! AdminMay 15, 2022 http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-1024x683.jpg லெப்.கேணல் ரத்தி (கிருஸ்ணபிள்ளை சுபாஜினி) கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 30.06.1975 வீரச்சாவு: 15.05.1997 வவுனியா ஓமந்தையில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு. 2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி. எமது தலைவன் பூத்த மண்ணாம் வடமராட்சியின் ஒர் கிராமமான துன்னாலையில் பிறந்து வளர்ந்தவள் தான் ரத்தி. இவள் தனது கல்வியை வடமராட்சி வடஇந்து மகளிர் கல்லூரியில் கற்றுவந்தாள் இவள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தாள் இவற்றில் மட்டுமன்றி கலைநிகழ்ச்சிகளிலும் இவள் திறமை விளங்கியது. இவ்வாறாக இவளது கல்வி தொடர்கையில் எமது மண் அந்நியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட நினைவுகள் இவள் கண் முன் நிழலாடியது. இவளின் ஒன்றுவிட்ட அக்காவான கப்டன் லீமாவும் இவளும் ஆருயிர் சகோதரிகள் இவர்களைப் பார்ப்பவர்கள் எவரும் உடன் பிறப்புக்கள் என்று தான் கூறுவார்கள் அப்படி ஒரு பாசப்பிணைப்பில் தான் இருவரும் வளர்ந்தவர்கள் இருவரும் வீட்டில் யார் முதல் இயக்கத்துக்கு செல்வது என்று சண்டைபிடிப்பார்கள் கப்டன் லீமா கூறுவார் “சுபா நீ நில் நான் போறன் நீ வீட்டில் ஒரே பிள்ளை” என்று அதற்கு றத்தியன் பதிலோ “இல்லையக்கா நான் போறன் நீங்கள் நில்லுங்கோ அனரி பாவம் என இருவருக்கும் வாக்கு வாதம் தொடரும். 1990-ன் முற்பகுதியில் ஒரு நாள் காலை 8 மணியளவில் கப்டன் லீமா தனது பாசமான சகோதரிக்கும் கூறாது எல்லோருக்கும் மட்ல் எழுதிவைத்துவிட்டு தாய் மண்ணைக் காக்க பயிற்சிப்பாசறை நோக்கி செல்கின்றாள். லீமாவின் தாயார் அழுதவண்ணம் இருக்க அன்று காலை 10 மணிக்கு “அன்ரி அழாதேங்கோ நான் அக்காவை பார்த்துக்கொண்டு வாறன் என்று கூறிவிட்டு தானும் தாயகப் போரில் இணைந்து கொள்ள விரைகின்றாள். ஆம் இருவரும் மகளிர் படையணியின் ஏழாவது பயிற்சி முகாமில் தமது பயிற்சிகளை முடித்தார்கள் பின் இருவரும் வெவ்வேறு கடமைகளுக்காக இனுப்பப்படுகின்றனர். கப்டன் லீமா 1991ல் ஆனையிறவுச்சமரில் விரகாவியம் ஆகின்றாள் இச் சமரில் றத்தி மிகவும் நிதானத்துடனும் முகாமை அழிக்க வேண்டும் என்ற உறுதியுடனும் தனது குழுவையும் நகர்த்தி தானும் நகர்கின்றாள். குண்டுமாரி பொழியும் வேளைதனில் லீமாவின் உடன் பிறப்பென பாசம் வைத்த றத்தியின் உடலையும் குண்டு பதம் பார்த்து குருதி சொரியவைத்தது. அவள் மயக்கமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டாள். அங்கு மயக்கம் தெளிந்தவுடன் “என்ரை அக்கா ஒரு பிரச்சினையும் இல்லாமல் நிக்கிறாவா” என அருகில் நின்ற தோழியிடம் கேட்கின்றாள் தோழிகள் இவளின் பாச அக்காவின் இழப்பை இப்போது எப்படிக்கூறுவது என நினைத்து பின் ஒருவாறு தயங்கித் தயங்கி சகோதரியின் இழப்பை தோழி கூறுகிறாள் இவளின் குரல் மிகவும் உறுதியுடன் பின் வருமாறு ஒலிக்கின்றது. “என்ரை காயத்தை வேளைக்கு மாத்தி விடுங்கோ என்ரை அக்காவை சுட்டவனோடை நான்போய் சண்டை பிடிச்சு, சுடுவன்” என்று பின் இவளின் காயம் மாறினாலும் கை ஒன்று இயலாமல் போனது இவளது திறமையைப் பார்த்த மருத்துவப் பொறுப்பாளர் “றத்தி நீங்க மருத்துவப் பிரிவில கொஞ்ச நாளைக்கு நிதி வேலை செய்யுங்கோ” என்று கூறினார் அதற்கு அவள் “நான் மாட்டன் எனக்கு கை ஏலும் என்னை சண்டைக்கு விடுங்கோ” எனக் கேட்டு சண்டைபிடித்தாள் பின் எல்லோரின் வற்புறுத்தலினாலும் கொஞ்சக் காலம் செய்யிறன் என்று தனது கடமையைத் தொடர்கிறாள் இவளின் மனமோ மிகவும் இளகிய மனம் மற்றவர்கள் துன்புறுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மனநிலை இவளுக்கு இல்லை அத்துடன் மிகவும் நகைச்சுவையாக கதைகள் கூறி எல்லோரையும் சிரிக்க வைப்பாள் இவளுக்கு கையுடன் வாயிலும் காயம் ஏற்பட்டு அதற்கு தையல் போடப்பட்டு இருந்தது. நோயாளர் தங்களுக்கு என்ன விருப்பமான உணவு கேட்டாலும் உடன் எங்கு சென்றாவது வாங்கி வந்து கொடுப்பாள். இவளின் பணி மருத்துவப்பிரிவில் தொடர்கையில் எமது தளபதியால் புதிய போராளிகளுக்கு பயிற்சிவ ளங்க என பயிற்சி ஆசிரியராக இவள் நியமிக்கப்படுகின்றாள். புதிய போராளிகளை மிகவும் சிறந்த போராளிகளாகவும் உறுதியுடையவர்களாகவும் மிகவும் கண்டிப்புடன் வளர்த்தாள். பின் தான் சண்டைக்கு போக வேண்டும் என்று கேட்டு பல சண்டைகளில் பங்கு பற்றுகிறாள். இப்படியாக முல்லைச்சமரிலும் தனது குழுவுடன் இவளும் மிகவும் ஆவேசத்துடன் முன்னேறுகின்றாள். இறுதி மட்டும் இவள் சண்டை செய்கிறாள் இடையில் எமது விசேட தளபதி வோக்கித் தொடர்பு கொண்டு உன்ரை பக்கம் என்ன மாதிரி றத்தி என்று கேட்க “அக்கா நான் ஆமியை முன்னேற விடமாட்டன் அவன் அப்படி முன்னேறி வாற தென்டா எனரை உடலை தாண்டித்தான் வருவான் என்று மிகவும் உறுதியுடன் கூறுகிறாள். முல்லைச்சமரில் இவள் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தினாள். இவளின் திறமைகளையும் வழிநடத்தும் ஆற்றலையும் கண்ட விசேட தளபதி இவளை துணைத்தளபதியாய் நியமிக்கிறார். இவளின் திறமைகள் மென் மேலும் வளர்ச்சியடைந்த வண்ணம் இருந்தன, “ஜயசிக்குறுய்” படையெடுப்புத் துருப்புக்கள் மீதும் நெடுங்கேணிப்பகுதியில் 15.05.1997 அன்று இவளின் அணி மிகவும் உக்கிரமாக சண்டை செய்கிறது. இவள் ஓடி ஓடி சகல நிலைகளுக்கும் சென்று எல்லாவற்றையும் நேரடியாகக் கவனித்து சண்டை செய்கிறாள். மகிவும் ஆவேசத்துடனும் வேகத்துடனும் முன்னேறியவளின் உடலை எதிரியின் குண்டுகள் பதம் பார்த்தன. “என்னை ஒருவரும் தூக்க வேண்டாம் ஆமி வாறான் ஆடியுங்கோ” என்று கூறியவாறு தாயகப்பற்றுடன் குருதி சிந்த தாய் மண்ணில் தலைசாய்த்து முத்தமிடுகிறாள். நினைவுப்பகிர்வு: போராளி அ.பூரணி. நன்றி – களத்தில் இதழ் (22.04.1999). http://www.errimalai.com/?p=73615
  16. சுவி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  17. தோழர் புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  18. உக்கிரேனின் வாழ்ந்த அனுபங்களையும், அவர்களின் இயல்புகளையும் எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி பகிடி.🙏🏽
  19. தமிழ் சிறி ஐயா, திரும்பத் திரும்ப மூளையில் பதியும்படி படியுங்கள்!👇🏾 பேய்க்காட்டியது ரஷ்ய ரவுடிகள்தான்.. தனது அனுபவங்களையும், உக்கிரேன் பற்றிய தகவல்களையும் தொகுத்துத் தந்த “பகிடி”க்கு நன்றி🙏🏽 சிங்களக் காடைகளை வடக்கு கிழக்கில் குடியேற்றத் திட்டங்களில் குடியமர்த்தியது மாதிரி டொன்பாஸில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு அனுப்பிய ரஷ்யக் குற்றவாளிகளைக் குடியேற்றியிருக்கின்றார். இப்போது அவர்களின் பரம்பரையினரை வைத்து பூட்டின் உக்கிரேனை இரண்டாகப் பிளக்கின்றார்.
  20. அறியாப் பருவத்தில் சைவசமயத்தை ஆழமாகக் கடைப்பிடிக்க போட்ட அடிகளால் தானாகவே வரும் வரிகள்! இதுபோலத்தான் என்னதான் முற்போக்கு, தேசியப் பற்று என்று கதைத்தாலும் உள்ளே இருப்பது என்னவோ ஆசாரவாதமும், தற்பெருமை பிடித்த அழுக்கு மனமும்தான்..
  21. ஒரு பச்சைப் புள்ளி கொடுக்க முனைந்தபோதும் “sorry….” என்று வெருட்டுகின்றது! சேர்வருக்கு வயாகரா கொடுக்கவேண்டும்!
  22. பெற்றோருக்கு தாம் மருத்துவராக வந்திருக்கவேண்டும் என்ற கனவு இருந்திருக்கும். அதைப் பிள்ளைகள் மீது திணித்துவிடுகின்றார்கள். ஆனால் மருத்துவராவது எளிதானதல்ல. படிப்பு மாத்திரம் போதுமானதும் அல்ல. அதைவிட பிற மனிதர்கள் மீது அன்பும், கருணையும், எவரையும் சக மனிதர்களாகக் கருதும் பண்பும், பொறுமையும் இன்னும் பலவும் வேண்டும். பணத்திற்காகவும், புகழுக்காகவும் மருத்துவராக வருவதாக இருந்தால், வேறு துறைகளைத் தேர்வது நல்லது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.