Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. சைன் இன் பண்ணாவிட்டால் ஏதும் track பண்ணப்படவில்லை என்பது உங்கள் முந்திய பதிவின் மூலம் உறுதியாகிவிட்டது. சைன் இன் பண்ணினால் நீங்கள் இறுதியாக வாசித்த பதிவுகள் தானாகவே track பண்ணப்படும். இதன்மூலம் நீங்கள் ஒரு திரியை கிளிக்கினால் வாசிக்காத கருத்துக்கு உடனடியாகப் போகலாம். அதுதான் tracking. உங்களுக்கு கடைசிப் பதிவுக்குப் போகவும் வேண்டும், ஆனால் track பண்ணவும் கூடாது என்றால் அது மிகவும் கஷ்டம்!
  2. ஒளிச்சு வராமல் சைன் இன் பண்ணிவரத்தான் இந்த ஏற்பாட்டை மோகன் செய்திருக்கின்றார்😁 சைன் இன் பண்ணினால்தானே ஒவ்வொரு உறுப்பினர்களின் activities ஐ track பண்ணலாம். இல்லாவிட்டால் ஐபி முகவரியைக்கொண்டு அல்லது பாவிக்கும் device ஐக்கொண்டு track பண்ணவேண்டும்.
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎊🎈 வாழ்க வளமுடன்🎂
  4. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது – ஆய்வாளர் பற்றிமாகரன் December 14, 2021 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது: சிறிலங்காவில் பௌத்த சிங்களப் பெரும்பான்மையினர், ‘சிறிலங்காவினர்’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும், அதே அரசியல் அடையாளத்துள்ளேயே, இலங்கையின் எல்லா மக்களும் வாழ்தல் வேண்டும் என்பது 2009இல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு மூலம் நிலைநிறுத்தப்பட்ட மகிந்த சிந்தனை. பத்தாண்டுகளின் பின்னர் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ என அவ்வழியைச் “சிறிலங்காவினர்க்கான அபிவிருத்திகள்” என்ற வார்த்தைஜாலங்கள் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கான புது வழியாக கோத்தபாய சிந்தனை காட்ட முற்பட்டிருக்கிறது. எப்பொழுதுமே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை வடக்கு கிழக்கின் அபிவிருத்தி என்பதுடன் இணைத்து, ஈழத்தமிழர்களின் தாயகம் – தேசியம் – தன்னாட்சி என்ற தொன்மையும் தொடர்ச்சியுமான உரிமைகளை மறுத்து, சிறிலங்கா என்னும் நாட்டு அடையாளத்துடன் வாழும் சிறிலங்காவின் சிறுபான்மையினமாக அவர்களின் அடையாளத்தை நிலைப்படுத்திச் சில அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்து அவற்றில் பங்கெடுக்க வரும் சர்வதேச அரசுக்களின் நிதி மற்றும் ஆயுத ஆதரவையும் பெற்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் மேல் தன் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வது சிறிலங்கா அரசின் வழமையாகத் தொடர்கிறது. இவ்வாறு தமிழர்களின் தேசியப் பிரச்சினை (Tamil’s National Question)என்ற ஒன்றே இலங்கையில் இல்லை எல்லாமே அபிவிருத்திப் பிரச்சினையெனச் சிறிலங்கா உலகுக்குக் காட்ட முற்படும் இவ்வேளையில், இலங்கையில் தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்றால் (Tamil’s National Question) இதுதான் என உலகுக்குத் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்து வந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தெளிவான அரசியல் சிந்தனைகள் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நாளான டிசம்பர் 14ம் நாளன்று உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் நன்றியுடன் அவரை நினைவு கூர்ந்து வீரவணக்கம் செய்வது தமிழர் சமுதாய வழமையாக உள்ளது. இவ்வாண்டு அவரின் 15வது ஆண்டு நினைவேந்தல் காலமான டிசம்பர் மாதத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைச் சிந்திப்பது சாலப்பொருத்தமாக அமைகிறது. “மாநிலங்களுக்கு இறையாண்மை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, அதிகாரப் பரவலாக்கம் பற்றியே அவர்கள் சிந்திக்கின்றார்கள்” (போரும் சமாதானமும் 647) என்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கருத்து இன்றைய காலகட்டத்தில் தெளிவாக உலகுக்கு மீளவும் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்தச் சிந்தனையே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியாத நிலையை உருவாக்கி வருகிறது. சுயநிர்ணய உரிமை அதிகாரப்பரவலாக்கம் என்பது எப்பொழுதும் மையப்படுத்தப்பட்டுள்ள தங்களின் அதிகாரத்தை மற்றைய மாநிலங்கள் மேல் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தியே தவிர இலங்கைத் தீவு போன்ற வரலாற்றில் இருதேசியங்களின் இறைமைகளை இறைமை இழப்பு ஏற்படாது பகிர்ந்து கொள்வதற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் “பிரதேச சுயாட்சி” என்பதே தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களுடைய தன்னாட்சி உரிமை இழப்பின்றி இறைமை பகிரப்படுவதற்கான நேர்மையான வழியாக அமையலாம். ஒரு அரசு தனது மக்கள் என்று கூறிக்கொள்பவர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளித்து நடக்கும் பொழுதே அந்த அரசுக்கு பிரதேச ஒருமைப்பாடு உள்ளதென்பதையும் தனது மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கும் போது அந்த அரசு அந்த மக்கள் மீதான பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையைத் தானே இழந்து விடுகிறது என்பதையும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கியூபெக் மாநிலத்தின் பிரிவினைப் பிரச்சினையை கனடிய உச்ச நீதிமன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பின் பின்வரும் வாசகங்களின் அடிப்படையில் பின்வருமாறு விளக்குகிறார் :- ‘தன்னாட்சி உரிமை (சுயநிர்ணய உரிமை) என்பது வளர்ந்து வரும் ஒரு கருத்துருவம். பரிணாமம் பெற்று வரும் ஒரு கோட்பாடு. சர்வதேசச் சட்டத்துறையில் புத்தாக்கம் பெற்று வரும் விதியாகவும், சர்வதேச மனிதஉரிமை நியமமாகவும் இது கொள்ளப்படுகிறது. சுயநிர்ணய உரிமைக் கோட்பாடானது, ஆரம்பத்தில் மேற்குலக வல்லரசுகளின் குடியேற்றத்திற்கு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 1970ம் ஆண்டுக்குப் பின்பு இக்கோட்பாடு புத்தாக்கம் கண்டது. பிரத்தியோகமாகக் குடியேற்ற நாட்டு மக்களின் அரசியல் சுதந்திரத்திற்கான தகைமையை நிர்ணயிப்பதற்காகப் பிரயோகிக்கப்பட்டது. இவ்வாண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் ‘அரசுகள் மத்தியில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் நிலைநாட்டுவது பற்றிய சர்வதேச சட்டவிதிகள்’ என்ற புதிய பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரகடனத்தில் “சுயநிர்ணயமும் சம உரிமை விதிகளும்” என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட ஒரு விதி பின்வருமாறு உள்ளது:- “ஐநா சாசனத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் சமஉரிமைகளும் மக்களது சுயநிர்ணயமும் என்ற விதிக்கு இணங்க, எல்லா மக்களும் வெளிப்புறத் தலையீடு எதுவுமின்றி, தமது அரசியல் தகைமையைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும், தமது பொருளாதார, சமுக,கலாசார வளர்ச்சியைப் பேணுவதற்கும் உரிமை உடையவர்களாவர். இந்தச் சாசனத்திற்கு அமைய ஒவ்வொரு அரசும் இந்த உரிமைக்கு மதிப்பளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது. “இப்போதுள்ள அரசுக்கள், கனடா உட்பட தமது பிரதேச ஒருமைப்பாட்டைப் பேண விழைவதற்கும், ஒரு ‘மக்கள்’ ஒரு சுயநிர்ணய உரிமையை முழுமையாகப்; பெற்றுக் கொள்ள முனைவதற்கும் இடையில் மத்தியில் முரண்பாடு எழுவதற்கு அவசியமில்லை. எவ்வித பாகுபாடுமின்றி முழு மக்களையும் அல்லது மக்கள் சமுகங்களையும் தனது ஆட்சி அமைப்பில் பிரதிநிதப்படுத்தி, உள்ளீட்டான ஆட்சி ஒழுங்கில் சுயநிர்ணயத்தின் விதிகளுக்கு ஒரு அரசு மதிப்பளிக்குமானால், சர்வதேச சட்டத்திற்கு அமைய தனது பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு அந்த அரசுக்கு உரிமையுண்டு. ஒரு அரசின் பிரதேச ஒருமைப்பாட்டை இந்தப் பிரகடனம் உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஒரு சிறுபான்மை மக்களை அடக்கு முறைக்கு ஆளாக்கும் பொழுது, பிரிவினைக்கு இடமளிக்கும் விதிவிலக்காக, ஒரு அரசு தனது பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையை இழக்கிறது.எனவே இந்த விளக்கத்தின் மூலம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்களின் மேலான தனது அடக்கு முறைகளால் தமிழர் தாயகப் பகுதிகளில் தானாகவே தனது பிரதேச ஒருமைப்பாட்டை இழந்து விட்டது என்பதை மிக அழகாக விளக்குகிறார். ஒருதலைபட்சமான பிரிவினையைப் பிரகடனம் செய்யும் பிரத்தியோகச் சூழ்நிலை பற்றிய கனடிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: – அரசியல் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அல்லது நிறுவிக் கொள்ளும் உரிமையான வெளியக சுயநிர்ணய உரிமை இரு வகுப்பினரான மக்களுக்கு (குடியேற்ற ஆட்சியின் கீழுள்ள மக்களுக்கு அல்லது அந்நிய ஆதிக்கத்தின் கீழுள்ள மக்களுக்கு) உரித்தாகும். ஏகாதிபத்திய வல்லரசிடமிருந்து உறவை முறித்துக் கொண்டு தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்குக் குடியேற்ற நாட்டு மக்களுக்கு உரிமையுண்டு என்பது இப்பொழுது விவாதத்திற்கு இடமற்ற உண்மையாகி விட்டது. குடியேற்றத்திற்கு வெளியான சூழ்நிலையை எடுத்துக் கொண்டால், ஒரு மக்கள் சமுகம் அந்நிய அடக்கு முறைக்கும், ஆதிக்கத்திற்கும், சுரண்டல் முறைக்கும் ஆளாகும் பொழுது வெளியக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டலாம். ஒருதலைபட்சமான பிரவினைக்கு சுயநிர்ணய உரிமையைப் பாவிக்கும் மூன்றாவது சூழ்நிலை பற்றியும் சில மதிப்புரைஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இந்த மூன்றாவது சூழ்நிலை குறித்துப் பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்ட போதும், ஒரு மக்கள் சமுகம் தனது உள்ளக சுயநிர்ணய உரிமையை அர்த்தமுள்ள முறையில் அடைவதற்குத் தடையேற்படுமானால், இறுதி வழிமுறையாகப் பிரிந்து செல்லும் உரிமையைப் பயன்படுத்த அந்த மக்களுக்கு உரிமையுண்டு.” என்கிறது. எனவே ஒரு அரசு தனது மக்களின் சமமான உரிமைகளையும் உள்ளக சுயநிர்ணய உரிமையையும் தனது அரசின் கட்டமைப்புக்கு உள்ளேயே நிறைவு செய்யாவிட்டால் அந்த மக்கள் இயல்பாகவே வெளியக சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்க உரிமையுடையவர்கள். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இவற்றைத் தெளிவுபடுத்தியது பிரிவினையைத் தூண்டவல்ல அரசின் கடமையையும் மக்களின் உர்pமையையும் இருதரப்பினருக்கும் தெளிவுபடுத்துவதற்காகவே. இதனை உறுதி செய்யக் கூடிய முறையிலேயே 2003ம் ஆண்டு மாவீரர் உரையில் தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையையும் அவர் குறிப்பிடுகிறார் :- “தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடின்றி, சுதந்திரமாகக் கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இனஅடையாளத்தைப் பாதுகாத்து, வாழ விரும்புகிறார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகிறார்கள். இதுவே எமதுமக்களின் அரசியல் அபிலாசை, உள்ளக சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது” என்பது தேசியத் தலைவரின் கருத்து. தமிழ் மக்களின் பிரதேச சுயாட்சி என்றால் என்ன என்பதை இதில் மிக அழகாக எடுத்துரைத்தார். தமிழ் மக்கள் தமது வரலாற்றுத் தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் தன்னாட்சி அதிகாரத்தை, அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையை தேசியத் தலைவர் அவ்வுரையில் வலியுறுத்தி வேண்டினார். ஆயினும் அவர் உள்ளக சுயநிர்ணய உரிமையின் எல்லை வரம்புடன் நின்று விடவில்லை. https://www.ilakku.org/balasingham-their-thoughts-are-the-need-of-the-hour/
  5. தாயக விடுதலைக்கு ஏற்பட்ட தடையை நீக்கி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய கடற்கரும்புலிகள். கடற்கரும்புலி லெப்கேணல் சிவரூபன் சிவநேசன் சிவபாக்கியநாதன். வீரச்சாவு ..08.12.1999 1995ம் ஆண்டு இராணுவத்தால் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பான முன்னேறிப்பாயச்சலும் அதனைத்தொடர்ந்து மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் அதிகமானோர் காயப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும்.இருந்த சூழலில் இச்சம்பவங்களை நேரில் பார்த்த சிவரூபன் வீணாகச் சாவதைவிட இவ் ஆக்கிரமிப்புக்கெதிராக போராடுவதென முடிவெடுத்து . விடுதலைப் புலிகளில் தன்னை இணைத் கொண்டு தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து கடற்புலிகளின் தரைத்தாக்குதலனியான மண்டைதீவுச் சமரில் மாவீரரான லெப் கேணல் சூட்டி அவர்களின் பெயரைச் சுமந்த சூட்டி படையணியில் இணைந்து முல்லைத்தீவுச் சமரில் பங்குபற்றினான் .அதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை கடலில் வீரச்சாவடைந்த லெப் கேணல் நரேஸ் அவர்களின் பெயரைச் சுமந்த படையணியான நரேஸ் படையணியில் கனரக ஆயுதப் பயிற்சி மற்றும தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிகள் முடித்து அப்படையணியில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் சர்வதேசக் கடற்பரப்பில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சம்பவமொன்றை அடுத்து தலைவர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சர்வதேசப் பொறுப்பாளர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.அதற்கமைவாக தமிழிீழத்திலிருந்து சில போராளிகள் சர்வதேசக் கடற்பரப்பிற்க்குச் சென்றனர்.அப்போராளிகளுள் ஒருவனாகச் சென்ற சிவரூபன் அங்கு மாவீரரான கடற்கரும்புலி லெப் கேணல் பெத்தா அவர்களுடன் இணைந்து விநியோகப்பணியில் ஈடுபட்டான். விநியோக பணிகளின் ஓய்வு நேரங்களில் கப்பல் சம்பந்தமாகவும் கடல் சம்பந்தமாகவும் நிறையவே கற்றான்.இவனது வளர்ச்சியில் லெப் கேணல் பெத்தாவின் பங்கும் அளப்பரியது.அங்கே ஒரு கப்பலில் தனக்கு அடுத்த நிலையில் சிவரூபனை வளர்தெடுத்தார் பெத்தா . அதன் பின்னர் தமிழீழம் திரும்பிய சிவரூபன் கடற்சண்டைபிடிக்கவேணும் என்கிற தனது ஆர்வத்தை சிறப்புத்தளபதியிடம் தெரிவித்து அவரின் அனுமதியைப் பெற்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நடந்த விநியோகப் பாதுகாப்புச்சமர் மற்றும் வலிந்த தாக்குதல்களிலும் கனரக ஆயுத இயக்குனராக தொலைத்தொடர்பாளனாக ஒரு படகின் இரண்டாம் நிலை அதிகாரியாகவும் பின்னர் ஒரு படகின் கட்டளை அதிகாரியாகவும் பங்குபற்றினான்.அதனைத்தாெடர்ந்து மன்னார் கடற்பரப்பில் 08.02.1999 அன்று விநியோகப்பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில் விநியோகப் படகுகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அவ் சிறிலங்காக் கடற்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதலில் இவனது பங்கும் அளப்பரியது. அதனைத் தொடர்ந்து இவனது திறமையான செயற்பாடுகளாலும் ஆளுமைத்திறனாலும் போராளிகளோடு பழகும் தன்மையினாலும் சுண்டிக்குளம் சண்டைப்படகுகளின் தொகுதிக் கட்டளை அதிகாரியாகவும் அம் முகாம் பொறுப்பாளராகவும் சிறப்புத் தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்படுகிறான்.அங்கு சிலகாலம் செயற்பட்டு வந்த சிவரூபன் சூசை அவர்களின் வேண்டுதலுக்கிணங்க சாளையிலிருந்து கப்பலுக்கு சென்று தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கிற பணியில் படகுக் கட்டளை அதிகாரியாக மிகவும் திறம்பட பணியாற்றுகிறான்.அக்காலப் பகுதியில் தான் இவ் விநியோக நடவடிக்கைக்கு ஏற்பட்ட தடைகளை அகற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டபோது அதற்காக அனுபவம் வாய்ந்த கடற்கரும்புலிகள் தேர்வு செய்யப்பட்டபோது அந்த நடவடிக்கையின் பொறுப்பாளனாக பல சண்டைகளில் முக்கிய பங்காற்றியவரும் நீண்ட கால கடல் அநுபவமும் கொண்ட சிவரூபன் சிறப்புத்தளபதியால் தேர்வு செய்யப்பட்டான்.தலைவர் அவர்களின் திட்டத்திற்கேற்ப இந்நடவடிக்கைக்கான ஏனைய கடற்கரும்புலிகள் தெர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு இந் நடவடிக்கையின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டு இக்கடற்கரும்புலிகள் சென்றனர்.08.12.1999 அன்று ஆழ்கடலால் கடற்படையின் தொடரணி சென்று கொண்டிருக்கும் போது அதற்க்கு பாதுகாப்பாகச் சென்ற டோறா ஒன்று இவர்களை நோக்கி நெருங்கி வரும்போது இவர்கள் அவ் டோறாமீது தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்தனர்.சிவரூபன் இறுதிவரை கள நிலவரம் தொடர்பாக தெளிவாகவும் உறுதியாகவும் கட்டளைமையத்திற்க்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தான். இவ் வெற்றிகரத் தாக்குதலில் கடற்கரும்புலி லெப் கேணல் சிவரூபன் மேஜர் இசைக்கோன் மேஜர் யாழ்வேந்தன் கப்டன் கானகன் ஆகியோர் கடலண்ணை மீது காவியமானார்கள். தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற விநியோகத்திற்க்கு ஏற்பட்ட தடையை நீக்கி விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய பெருமை இவர்களையே சாரும் எனக் கூறுவதில் மிகையாகாது. எழுத்துருவாக்கம் - .சு.குணா. https://www.thaarakam.com/news/1a126ee5-d537-4398-ab05-5bb9486573b5
  6. ரஞ்சித்துக்கும் சகாறா அக்காவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎊🎈
  7. “போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர் புதுவை இரத்தினதுரை.! தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம். விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன. யாழ்ப்பாணத்தில் பதுங்குகுழி வாழ்க்கைக்கும் அவரது கவிதைகள் பழக்கமாயின. விமானத்தின் குண்டு வீச்சுக்களும், பீரங்கிகளின் எறிகணை வீச்சுக்களும் அவரது கவிதைப் பொருளாயின. அவற்றின் படுகொலை வீச்சுக்கண்டு வெம்பி, வெடித்து கோபம் கொண்டு சாபமிட்டன. யாழ்ப்பாணத்தைவிட்டு விடுதலைப்போரியல் தலைமை இடம்பெயர்ந்த போது புதுவை அண்ணரின் கவிதைகளும் அழுதபடியே சேர்ந்துவந்தன. ஆனால் நம்பிக்கை தளராத வரிகளுடன் விடுதலைக்கனவு குலையாத பாடல்களாய். பொருட்தடை, மருந்துத்தடை, போக்குவரத்துத்தடையென எல்லாத் தடையினுள்ளும் கிடந்தழுந்திய எம்மக்களுடன் சேர்ந்திருந்தன புதுவை அண்ணரின் கவிதைகள். வன்னியினுள்ளே நடந்தேறிய விடுதலை வேள்வியில் சேர்ந்தொலித்தன அவரது பாடல்களும். இராணுவக் கொலை வலயத்தினுள் பயணிக்கும் இளம் வீரருடன் சேர்ந்து புதுவை அண்ணரின் பாடல்களும் பயணித்தன. எம்மக்களுக்கு ஆறுதல் சொல்லின…… போரிட அழைத்தன….. போரிட்டன….. வெற்றிச் செய்திகளும் சொல்லின…. விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ கட்டமைப்பு, எமது தேசத்து நிலபுலங்கள், மக்களது கலாச்சார வாழ்வியல்கள், தமிழீழப் பெண்களது புரட்சிகர போரியல், சர்வதேச அரசியலுடனான எம்மின வாழ்வு என புதுவை அண்ணரது படைப்புக்கள் பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தை தருபவை. புதுவை அண்ணரது கவிதைகள், பாடல்கள் பற்றி எம்முள்ளே பேசப்படும் வேளைகளில் “காலத்தின் குரல்கள்” என்று கூறுவேன். எமது விடுதலைப்போர் கடந்து வந்த பாதையின் வீரமும், சோகமும், கோபமும், மகிழ்ச்சியும், பெருமிதமுமென மாறி மாறிய உணர்வுகளைக் கொண்ட காலங்களைக் கடந்துள்ளோம். அந்தக்கால உணர்வுகளின் குரலாக புதுவை அண்ணரின் படைப்புக்கள் பதிவு பெற்றுள்ளன என்பது எனது கருத்து. புதுவை அண்ணருக்கு வாய்த்துள்ள அற்புதமான கவி ஆற்றலும், அனாசயமான சொல் வளமும் அவரை பெரும் கவிஞர்களது வரிசையில் சேர்த்துள்ளது. இவற்றுடன் அவர் தன்னை இணைத்துக் கொண்ட இல்டசிய வாழ்வும் அவரது படைப்புக்களில் சேர்ந்துள்ளது. இவையே அவரை “காலத்தின் குரலாகப் பேசும்” கவிஞராக ஆக்கியது எனலாம். இங்கு நூலுருப் பெறும் உலைக்களம் அவ்வகையில் எழுந்த உணர்வு வரிகளின் தொகுப்பு. அந்தந்த காலத்தய விடுதலைப் போரின் களநிலைகளைத் தழுவிய உணர்வின் குரல்கள். இந்த உலைக்களத்தின் சிறப்பு என நான் பார்ப்பது இது வெறும் புதுவை இரத்தினதுரை என்ற தனி ஒருவனின் உணர்வின் குரலாக மட்டும் அமைந்து விடாததுதான். மாறாக உலைக்களத்தை ஆழ்ந்து, விரும்பி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்திப் போகும் உணர்வுகளின் வெளிப்பாடுகளை அவற்றில் காணலாம். போராளி நிலையிலோ, பொதுமகனின் நிலையிலோ அல்லது படித்தவரின் நிலையிலோ, பாமரரின் நிலையிலோ எந்த நிலையில் நின்று பார்க்கும் போதும் அவரவரின் உணர்வின் வரிகளாக உலைக்களம் பொருந்தி வரும். ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதமென வர்ணிக்கும் விடுதலைப் போரியல் நடவடிக்கைகள் உலைக்களத்தில் பல இடங்களில் பேசப்பட்டுள்ளன. அந்நடவடிக்கைகளின் பின்னே உள்ள அர்ப்பணிப்புக்களையும், எம்மினத்தின் உணர்வுகளையும், அரசியல் அர்த்தங்களுடன் உலைக்களத்தில் பதிவாக்கியுள்ளார். எமது தலைவர் அவர்கள் உலைக்களத்தை ஒவ்வொரு வாரியாக ஏற்றி, இறக்கி, தணித்து வாசிக்கும் வேளையில் அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சிலவேளைகளில் எனக்கென தனியாகக்கூட தலைவர் அவர்கள் வாசித்து காட்டியுள்ளார். தலைவர் அவர்கள் சிறந்த வாசகர் என்பதற்கு மேலாக உலைக்களத்தின் கருத்தோட்டத்தில் மீதான ஈர்ப்பே அதனை அவரை அப்படி வாசிக்க வைத்திருக்குமென நம்புகிறேன். “போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர்” எனவும், “எம் விடுதலைப் போராட்ட வாழ்வையும், வரலாற்றையும் தமிழீழ இலக்கிய இயக்கத்திற்குள் முதன்மைப்படுத்தி தமிழ்த் தேசிய பிரக்ஞையை விழிப்புறச்செய்ய உழைத்தவர்.” எனவும் எம் தேசியத் தலைவர் அவர்களால் விதந்து பாராட்டுப்பெற்ற புதுவை அண்ணரைப் பற்றி நான் சொல்ல என்னதான் உள்ளது? இலக்கிய வித்தகரும், பெரும் கவிஞருமான அவரது நூலுக்கு கருத்து எழுதுவதற்கு வாசகன் என்ற தகுதிநிலை போதுமெனக் கூறிய புதுவை அண்ணரது வார்த்தைக்கு கட்டுண்டு எழுதியுள்ளேன். எமது விடுதலைப்போர் எதிர்கால மாணவர்களுக்கான ஆய்வுப் பொருளாகும் காலம் வரும். அவ்வேளையில் விடுதலைப் போராட்டம் கடந்துவந்த வரலாற்றுப் பாதையின் போக்குகளையும், இந்த போருடன் வாழ்ந்த மானிடரின் மன உணர்வுகளையும், சொல்லும் பெட்டகமாக உலைக்களம் திகழும் என நம்புகிறேன். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” அன்புடன் ச.பொட்டு அம்மான் பொறுப்பாளர் புலனாய்வுத் துறை, தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம் முக்கிய குறிப்பு :- 2009 ஆண்டு சர்வதேச துணையுடம் சிங்கள அரசின் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் மே மாதம் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 146,679 தமிழர்கள் வன்னி பிரதேசத்திலிருந்து வலிந்து கானாமல் ஆக்கப்பட்டார்கள் இவர்களில் புதுவை இரத்தினதுரை அவர்களும் அடங்குவார்கள் இவர்களுடன் காணாமல்போன எம் தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று சிங்கள அசரே பொறுப்பு கூற வேண்டும் https://www.thaarakam.com/news/34e23897-b6d6-4583-a16c-8aed66c799e6
  8. தளராது நின்ற தலைவர் வளர்த்த பிள்ளை லெப். கேணல் ஜோய் முடுகு…. முடுகு…. ஆ…. ஆ….. கிறுகு….. கிறுகு….! மெல்லிய உயரமான இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக்கொண்டிருந்தான். ‘ஏண்டா, கமல் இப்படி கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன். சத்தம் கேட்டுத் திரும்பிய கமல் “அண்ணை இவங்கள் தான் மறுகர கோஷ்டி” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான். இது என்ன புதுக் கோஷ்டி, வியப்பாக இருந்தது. அதில் உயரமாக மெல்லியவனாக இருந்தவனைப் பார்க்கிறேன். “அப்பன் இங்கே வா” அவனை அழைத்தேன். “எங்கிருந்து வந்தனீங்கள்” நான் கேட்டுவிட்டு அவனைப் பார்க்கிறேன். “நான் மட்டக்களப்பில் இருந்து வந்தனான்” என்கிறான் அவன். எனக்கும் ஜோய்க்கும் ஆரம்ப அறிமுகம் இப்படித்தான் நிகழ்ந்தது. எங்களுக்கு மணலாறு காடு மட்டும் புதிதல்ல. மட்டக்களப்பு தமிழும் புதியதுதான். நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி என 70 மைல்கல் அகண்டு கிடக்கும் மட்டக்களப்பு. உழவு, விதைப்பு, வெட்டு எல்லாம் ஒன்றாக நடக்கும். தேனும், தயிரும் கொட்டிக் கிடக்கும் அழகான வளமான எம் நிலம். 1988……, 1989 எம்மைச் சுற்றிவர இந்தியப் படை. நாம் உழுது உழுது விதைத்து அறுவடைக்கு ஆயத்தமான போது, அறுவடையை அழிக்க வந்த அயலவனை மிரட்டிவிட்டு அபகரிக்க வந்த வேற்றவன். 10 தமிழர்களுக்கு ஒரு இந்தியன், இந்திய முற்றுகைக்குள் புலிகளா? புலிகளின் முற்றுகைக்குள் இந்தியனா? எம் மீதான முற்றுகை கண்முன் தெரிந்தது. அவன்மேலாக எம் முற்றுகை தெரியாமல் நடந்தது. தடக்கித் தடக்கி அழிந்தான். நயினாமடு இந்தியப்படை முகாமுக்கு அருகே அவனது ஆட்டுப்பட்டி, ஒரு போராளி இரகசியமாக பட்டிக்கருகே சென்று ஆடுகளை “பா பா” என அழைக்கிறான். ஒவ்வொரு ஆடாக, பட்டியில் இருந்த 19 ஆடுகள் வெளியேறி வருகின்றன. ஆடுகளைச் சாய்த்த படி அவன் நடக்கின்றான். இந்திய இராணுவத்தினன் ஒருவன் ஆடுகள் போவதைக் கண்டுவிட்டு ஏதோ கத்தித் தொலைக்கிறான். ஆட்டை வந்து பிடிக்க அவனுக்குத் துணிவில்லை. வெளியே வர வேண்டுமானால் குறைந்தது 50 சிப்பாய்கள் துணைவேண்டும். ஆட்டைத்தேடி உலங்கு வானூர்த்தி வந்து ஆடு சாய்ப்பவனைத் தேடித்தேடி சுடுகின்றது. அடுத்தநாள் இந்திய இராணுவத்தின் வோக்கி எண்ணில் அவனது ஆடு கத்தும் சத்தம் கேட்டு அவன் கத்திக்கொண்டிருந்தான். தனது ஆட்டையே காப்பாற்ற முடியாத இந்தியப்பெரும் படை தமிழீழ நாட்டுக்கு ஆசைப்பட்டது. இப்படி அவனது முற்றுகைக்குள் நாமும், எமது முற்றுகைக்குள் அவனும் ஓடிப்பிடித்து விளையாடும் காலத்தில் தான் ஜோய் மணலாற்றிற்கு வந்தான். மணலாறு காடே குண்டு வீச்சால் அதிர்ந்து கொண்டிருந்தது. “பொங்கலுக்கு இந்தியன் வெடி கொளுத்துகிறான்” பொங்கலுக்காக நிகழ்ச்சிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஐஸ்ரின் என்னைப் பார்த்து கூறினான். “இரவு என்ன நிகழ்ச்சி” நான் கேட்கிறேன். “பாட்டு, டான்ஸ் இப்படி பல” ஐஸ்ரின் அபிநயம் பிடித்துக் காட்டினான். பொங்கல், கிறிஸ்மஸ், போராளிகளின் நினைவு நாட்கள் எனச் சில நிகழ்ச்சிகள் காட்டில் நடக்கும். இரவு, ஏதோ ஒரு புது மொழியில் பாடி தனக்கேற்றாற் போல் தன் பெரிய உடம்பை ஒய்யாரமாய் வளைத்து, நெளித்து ஐஸ்ரின் ஆடினான். அடுத்து மேளங்களான தகரங்கள் முழங்க “ஜோய் வழங்கும் பிறேக் நடனம்” அறிவிப்பு வருகின்றது. வளைந்து, நிமிர்ந்து, முறிந்து….. என்ன உடம்படா, இப்படி வளைந்து முறிகின்றது. “வடமோடி, தென்மோடி இவன் பிறந்த இடமோடி, இவன் கூத்து என்ன கூத்தோடி” நான் என்னுள் முணுமுணுத்தபடி அவன் நடனத்தை ரசித்துச் சுவைக்கிறேன். ஆர்.பி.ஜி. தோளில் வைத்தபடி ஜோய் நிமிர்ந்து நின்றால், உடம்பில் வளைவிருக்காது. தமிழீழ சிறிலங்காப் போர் மீண்டும், தொடங்கிய பின், யாழ் கோட்டையைக் கைப்பற்றும் முயற்சியில் ஜோய் காயமடைந்தான். ஒரு கால் சிறிது காலம் உணர்வு குன்றி இருந்தது. மட்டக்களப்பு மண்ணுக்கே உரிய கலை இரசனையும், இலகுவாகப் பழகும் பண்பும், சூதுவாதற்ற பேச்சுக்களும் ஜோயை விட்டுப் பிரிந்தது கிடையாது. மட்டக்களப்பை மேலிருந்து பார்த்தால் கடற்கரையை அண்டிய பகுதிகள் பெரும்வெளியாக இருக்கும். கடலுக்குச் சற்று மேலே வந்து நிற்கும் நீர் மூழ்கிக் கப்பல் போல, சுற்றிவர இருக்கும் ஏரியும் இடையிடையே தெரியும் நிலங்களும், வீடுகளும் கரந்தடிப் போராட்டத்திற்கு கடினமான பகுதிதான். “70ல் வந்த புயலோடு மரங்கள் எல்லாம் அழிந்து போயிற்று. அடுத்து வந்த இனவாதப் புயலோடு எல்லாமே போயிற்று” என்றார் ஒருவர். ஒவ்வொரு வீட்டிலும் சோகக் கதைகள் இருக்கும். சிங்கள, முஸ்லீம் காடையர்களினதும், சிறிலங்கா இராணுவத்தினதும் கொலைத் தடயங்கள் பதிந்திருக்கும். இந்தியப் படையுடனான போராட்ட காலத்தில் தமிழீழத்தின் மற்றைய பகுதிகள் போலவே, மட்டக்களப்பு, அம்பாறையிலும் அழிவுகள் தொடர்ந்தது. மிகப்பெரிய நெருக்கடிகளைச் சந்தித்த போதும் “எங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி மிகுந்த துன்பத்திற்கு நடுவில் போராடுகின்றோம்” என ஒரு வார்த்தை மட்டக்களப்பு, அம்பாறை விசேட தளபதி கருணாவிடம் இருந்து வந்ததில்லை. “எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.” என்றே எப்போதும் பதில் வரும். தலைவர் வளர்த்த பிள்ளை அவன் தளராது நின்றான். அவன் பாசறைதான் ஜோய் தவழ்ந்த வீடு. அன்று தலைவரின் பாசறையான மணலாறுதான் அவன் வளர்ந்த வீடு. இந்திய கூர்காப் படைகள் குறித்து பல வீரக்கதைகள் உண்டு. ஒரு முறை ஒரு ஆங்கிலச் சிப்பாய் ஒரு கூர்க்காவைக் குறிபார்த்து “உன்னைச் சுடுவேன்” என்றான். அதற்கு கூர்க்கா அச்சிப்பாயைப் பார்த்து “முதலில் தலையை ஆட்டு பின் சுடு” என்றானாம். சிப்பாய் தலையை ஆட்ட தலை விழுந்து விட்டதாம். ஆங்கிலேயன் ‘சுடப்போகிறேன்’ என்று சொல்லும்போதே கூர்க்கா தனது கத்தியை அவனது கழுத்தைக் குறிபார்த்து வீசி விட்டானாம். அவ்வளவு விரைவு, கத்தி கூரானது. அதனால் வெட்டபப்ட்ட தலையை ஆட்டியபோது தலை விழுந்து விட்டதாம். இப்படி வீரக்கதை பேசும் கூர்க்காப்படையொன்று 02.03.1989 அன்று கேணல் பக்சியின் தலைமையில் மணலாற்றுக்குள் நுழைந்தது. கமல், அரி, குகேந்திரன், சேவியர் இவர்களுடன் ஜோயும் அங்கு நின்றான். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தச் சண்டையில் கூர்க்காப் படை பக்சியின் உடலையும் விட்டுவிட்டு ஓடியது. ஓடும்போது தமது கத்திகளை மிக வேகமாக மண்ணில் புதைத்து, புதைத்து ஓடியது. கூர்க்காப்படை தமது கத்திகளை புதைத்துவிட்டு ஓடிய மணலாற்றில் ஜோயின் போரியல் கல்வி தொடர்ந்தது. இவன் போன்றோரின் போரியல் கல்வியே இந்தியப் படைகளுக்குப் போராட்டப் படிப்பினையாகியது. தமிழீழ – சிறிலங்காப்போர் மீண்டும் தொடங்கியபோது சிறிலங்காப்படை, முஸ்லீம் காடையர், தேச விரோதக் கும்பல் இவற்றால் மட்டக்களப்பு, அம்பாறை தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் எரிந்தன. பாலியல் வன்முறைகள் தொடர்ந்தன. மதவுகளுக்குக் கீழ், காட்டு மரங்களுக்கு கீழ் தமிழ் மக்கள் வாழ்க்கை தொடர்ந்தது. ‘தென் தமிழீழத்தில் புலிகளா? அழிந்து விட்டார்கள். என சிறிலங்கா கொக்கரித்தது. வீட்டில் ரகுநாதன் எனவும் இயக்கத்தில் ஜோய் எனவும் இப்போது விசாலகன் ஆகிவிட்ட ஜோய் மட்டக்களப்பில் மீண்டும் காலடி எடுத்து வைத்தான். மிகக் குறுகிய காலத்தில் அவன் ஆற்றல் கண்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட விசேட தளபதி , அவனை மட்டக்களப்பு அம்பாறை தளபதி ஆக்கினார். புலிகளா? எங்கே? எனக் கேட்டு கொக்கரித்த சிறிலங்காப்படை “ஐயோ எல்லா இடங்களிலும் மீண்டும் புலிகள்” என அலற அலற தாக்குதல்கள் தொடர்ந்தன. தொடர்ந்த தாக்குதல்களில் ஒன்று 25.10.1991 கொக்கட்டிச்சோலை இராணுவ முகாமில் இருந்து மண்முனைத்துறைக்கு சென்ற இராணுவத்தினர் மீது நடாத்தபப்ட்ட தாக்குதல். விசாலகன் (ஜோய்) தலைமையில் நடந்த இத்தாக்குதலில் எதிர்பார்த்தபடி தாக்குதல் வலயத்தில் சிறிலங்காப்படை வராததால் தாக்குதல் திட்டமிட்டபடி நடக்கவில்லை. 15 நிமிடத் தாக்குதலில் பல சிறிலங்காப் படையினர் கொல்லபப்டடனர் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. “விடுதலைப் புலிகள் இல்லை என்கிறீர்கள், அக்டோபர் மாதம் மட்டும் நாம் எதிரியிடம் இருந்து பறித்த ஆயுதங்கள் ஒன்றா இரண்டா” என பெருமையோடு தளபதி ஓர் செய்தியாளரை கேட்டார். டிசம்பர் 20 வெளிவந்த புரண்ட் லைன் (Frontline) சஞ்சிகையில் விசாலகனின் நேர்காணல் வந்திருக்கிறது. “எங்களுக்கு மக்கள் ஆதரவில்லை என்கிறார்கள் இவ்வளவு சிங்களப்படை முகாம்களுக்கு நடுவில், படகில், உங்களை எங்களிடம் யார் அழைத்துவந்தார்கள்? ஆதரவில்லாமல் இது நடக்குமா?” “முல்லைத்தீவில், அம்பாறையில் கைவிடப்பட்ட முகாம்களைத் தான் சிறிலங்காப்படை கைப்பற்றியது.” “மணலாற்றில் மைக்கல் முகாமுக்கு வந்த சிறிலங்காப்படை பின் வாங்கிய பின் அங்கு சென்ற நாம் கண்ணிவெடியில் சிக்கிய 100 காலணிகளைக் கண்டோம். எவ்வளவு இழப்பை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.” “மட்டக்களப்பு நகரத்துள் நாங்கள் இல்லை என்பது பொய். நாம் தேவைக்கேற்ப, சூழலுக்கு ஏற்ப எங்கும் செல்வோம்” “நீங்கள் நேரில் நின்று நிலைமையைப் பார்க்கலாம்” “நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் எனச் சொல்கிறார்கள், அக்டோபர் மாதம் மட்டும் 51 ஆயுதங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியுள்ளோம். இது நாங்கள் தோற்கடிக்கப் பட்டதையா காட்டுகின்றது?” “நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை வென்று கொண்டுதான் இருக்கின்றோம்” என மிக உறுதியோடும், பெருமையோடும் அவன் நேர்காணல் தொடர்கின்றது. 27.11.1991அன்று 3000க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் “வட்டேறவும்” என்ற பெயரில் சுற்றிவளைப்பில் இறங்கினர். இந்த இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக சிறப்புத் தளபதியின் வேண்டுகோளுக்கமைய விசாலகன் தாக்குதல் ஒன்றை திட்டமிட்டான். பன்குடாவெளி இராணுவ முகாமிலிருந்தும், முதிரையடி ஏத்தம் இராணுவ முகாமிலிருந்தும் உணவுப் பொருட்களை எடுக்க செங்கலடி நோக்கி வரும் இராணுவத்தினர்மீது தாக்குதல் நடாத்த தீர்மானித்தான். தாக்குதல் வலயப் பகுதியில் உள்ள முக்கிய வீதியில் 25 மீற்றர் நீளமுள்ள கறுத்த பாலமும், அவ்வலயத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் 15 மீற்றர் நீளமுள்ள இன்னமொரு பாலமும் இருந்தது. 29.11.91 காலை 08.40 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். மற்றையோர் தப்பி ஓடினார்கள். தாக்குதல் வலயத்தில் நின்ற விசாலகனிடம் இருந்து கட்டளைகள் பிறந்து கொண்டிருந்தன. தாக்குதலில் காயமடைந்து காட்டுக்குள் ஓடிமறைந்து கொண்ட சிறிலங்கா இராணுவ வீரன் சுட்ட ரவை ஒன்று விசாலகனின் தொண்டைக்கு கீழ் தாக்குகின்றது. படுகாயமடைந்த ஜோய் 30.11.1991 அன்று காலை 5.30 மணிக்கு வீரச்சாவைச் சந்தித்துக் கொண்டான். இந்தியப் படை வெளியேறிய சிறிது காலத்தில் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் செல்ல இருந்த தேனிசை செல்லப்பா குழுவினருக்காக திரு. காசி ஆனந்தன் அவர்கள் தான் முன்பு எழுதிய….. மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகர் அழகான மேடையம்மா – இங்கே எட்டுத் திசையும் கலையின் வாடியம்மா. என்ற பாடலுக்கு புதிதாக கடைசியில் நாலு வரிகளை எழுதினார். அதின் கதிரி இரண்டு வரிகள்…. போர்க்கலையில் வல்ல புலிக் கூட்டமும் உண்டு பகையை பொடிப் பொடியாக்கும் போராட்டமும் உண்டு. முடுகு – முன்னேறு கிறுகு – திருப்பு மறுகா – பின்பு, பிறகு (இவை இன்றும் மட்டக்களப்பு பகுதியில் வழக்கிலிருக்கும் பழந்தமிழ் சொற்களாகும்.) நினைவுப்பகிர்வு:- யோகி. விடுதலைப்புலிகள் (குரல் 27) https://www.thaarakam.com/news/159b3982-00ad-42c8-9b6c-b469e58aa66e
  9. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  10. கரும்புலி லெப்.கேணல் போர்க் மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம் ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை, வவுனியா. வீரப்பிறப்பு: 11.11.1959 வீரச்சாவு: 23.11.1990 நிகழ்வு: முல்லைத்தீவு மாங்குளத்தில் சிறிலங்கா படை முகாம்மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவு
  11. மெட்ராஸ் கஃபே!: யாருக்காக யாரால் எடுக்கப்பட்ட படம்? 26 August, 2013, சுஜூத் சர்க்கார் இயக்கிய ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள "மெட்ராஸ் கஃபே' என்ற ஹிந்தி திரைப்படத்தை சென்னையில் வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் தேசிய அமைப்புகளும் ஈழ ஆதரவு அமைப்புகளும் மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றன. கலைஞர், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் படத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 1990களில் ஈழப் போர் பின்னணியையும் ராஜீவ் காந்தி படுகொலையையும் மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. எல்.டி.டி.ஈ. என்பதற்கு பதிலாக எல்.டி.எஃப், பிரபாகரனுக்கு பதிலாக பாஸ்கரன். இப்படி ஒவ்வொரு தளபதிகளுக்கும் வெவ்வேறு பெயர் இடப்பட்டுள்ளது. மெட்ராஸ் கஃபே என்பது ஓர் உணவு விடுதி. ராஜீவ்வை கொல்ல சதியில் ஈடுபடுபவர்கள் அங்கே சந்தித்துக் கொள்கிறார்கள். இலங்கை பெரும்பான்மையாக சிங்களர் வாழும் ஒரு நாடு. அதில் சிறுபான்மையாக உள்ள தமிழர்கள் தங்களுக்கு தனி நாடு கேட்டு போராடுவதிலிருந்துதான் சிக்கல் பெரிதாகிற்று என்ற பின்னணி குரல் கதை சொல்கிறது. இந்தியாவை பாதிக்கும் ஒரு ரகசிய திட்டத்தை கண்டறிவதற்காக யாழ்ப்பாணம் செல்லும் ஒரு இந்திய அரசாங்கத்தின் உளவாளியின் கதைதான் மெட்ராஸ் கஃபே. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகவும் இந்திய அமைதிப்படையை ஈழத்து மக்களை காக்க வந்தவர்களாகவும் இந்தப் படம் சித்தரிப்பதாகச் சொல்லப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது போட்டி அமைப்புகளுக்குமான முரண்பாடுகள், ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம், ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் திட்டமிட்டு கொலை செய்வது என பயணம் செய்யும் இந்தப் படத்தின் கதை முழுக்க முழுக்க இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் ஈழப் பிரச்சினையை சித்தரிப்பதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். "அப்படி ஒரு பார்வையை ஒருவர் முன்வைக்கக்கூடாதா? அந்தப் படத்தை அதற்காக தடை செய்ய வேண்டுமா? இது கருத்து சுதந்திரத்தை பறிப்பது ஆகாதா?' என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கருத்து சுதந்திரத்திற்கும் வரலாற்றை திரிப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக் கிறது. துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற படங்கள் மீதான சர்ச்சையிலும் இதே பிரச்சினைகள்தான் எழுந்தன. நாம் கருத்துரிமை சார்ந்த விஷ யங்களையும் பொய்யான வரலாற்றுடன் ஆபத்தான நோக்கங்களுடன் எடுக்கப்படும் கலைப்படைப்புகளையும் எப்படிப் பிரித்தறிவது என்பது தான் இப்போதுள்ள முக்கியமான பிரச்சினை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய யுத்தத்தையும் அதன் பேரழிவுகளையும் மறைத்துவிட்டு அமெரிக்க ராணுவத்தினரை மனிதாபிமானிகளாகவும் இஸ்லாமிய தீவிரவாதிகள் மட்டுமே பயங்கரவாதிகள் என்றும் சித்தரிக்கும் விஸ்வரூபம் படத்திற்கு நிகரானதுதான் மெட்ராஸ் கஃபே படமும். அமெரிக்க ராணுவத்திற்கு பதில் இந்திய ராணுவம். ஆப்கானிஸ்தானிற்கு பதில் ஈழம். அல்கொய்தாவிற்கு பதில் எல்.டி.டி.ஈ. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதுபோன்ற படங்கள் இந்தியாவில் ஏன் தொடர்ச்சியாக எடுக்கப்படுகின்றன? உலகெங்கும் உள்ள மக்களுடைய விடுதலைப் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் அரசாங்கங்களின் பார்வையில் எடுக்கப்படும் இந்தப் படங்களின் நோக்கம் என்ன? போராட்டங்களை ஒடுக்குகிற, அரசாங்கத்திற்கு சாதகமான உளவியல் பார்வையை மக்களிடம் உருவாக்குவதா? அல்லது அந்த போராட்டங்களின்மீதான ஒடுக்குமுறைகளை அரசியல்ரீதியாக நியாயப்படுத்துவதா? தொடர்ந்து பயங்கரவாதம் தொடர்பாக எடுக்கப்படும் பிரம்மாண்டமான படங்கள் மிகப்பெரிய ரகசிய நிதியுதவியுடன் செயல்படும் ஒரு பிரச்சார இயக்கத்தின் பகுதியாகவே பார்க்க முடிகிறது. யாரெல்லாம் இந்தப் பிரச்சார இயக்கத்தின் பின்புலத்தில் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம். ஆனால் இந்தப் பிரச்சார படங்களின் நோக்கங்கள் வெளிப்படையானவை. ஜான் ஆப்ரஹாம் இலங்கை அதிபரை போய் சந்தித்ததாக பல செய்திகள் கூறுகின்றன. இந்த இடத்தில் ராஜபக்சேவின் பிரச்சார யுக்தியைப் பற்றி நாம் குறிப்பிட வேண்டும். ஒரு காலத்தில் பத்திரிகை, வானொலி, இணையம் என விடுதலைப்புலிகள் மிகப்பெரிய ஊடகக் கட்டமைப்பை உருவாக்கி நடத்திவந்தனர். இவற்றை முறியடிக்க ராஜ பக்சே 2000-ன் பிற்பகுதியில் பெரும் நிதிச்செலவில் ஊடகப் பிரச்சாரங்களுக்கான திட்டங்களை உருவாக்கினார். அதில் ஒன்று, இந்தியாவில் தனது அரசாங்கத்திற்கு சார்பான, ஈழப்போராட்டத்திற்கெதிரான பிரச் சார வேலைகளைச் செய்வது. இறுதிப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இலங்கை தூதரகத்தின் வழியாகவும் இடைத் தரகர்கள் வழியாகவும் ஏராளமான பணம் ஊடகத்துறைக்குள் பட்டுவாடா செய்யப்பட் டது. சில பிரபலமான ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை இங்கு வெகு தீவிரமாக நடத்தியதற்கு பின்புலத்தில் இந்தப் பணம் இருந்தது. இன்னொருபுறம் இந்திய உளவுத் துறையும் புலிகளுக்கு எதிரான இந்தப் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கம் அளித்தது. தமிழகத்தில் பணம் பெற்ற சிலர் அந்தப் பத்திரிகை நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன. ஒன்று பத்திரிகை முதலாளிகளையே விலைக்கு வாங்குவது, அல்லது வேலை செய்யும் பத்திரிகையாளரை விலைக்கு வாங்குவது என்கிற ரீதியில் இலங்கை அரசு வெகு தீவிரமாக செயல்பட்டது. இலங்கையின் மனித உரிமைகளுக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்திய அரசாங்கத்தை இலங்கைக்கெதிராக செயல்பட வலியுறுத்தும் குரல்கள் தமிழகத் தில் வலிமை பெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்த மாணவர் போராட்டங்கள் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. முள்ளிவாய்க்கால் படுகொலையின் காயங்கள் காங்கிரஸின்மீது தீராத வெறுப்பை தமிழக மக்களிடம் ஏற் படுத்தியிருக்கிறது. இலங்கையில் நடை பெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்கிற போராட்டம் தமிழகத்தில் இப்போதே தொடங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களினுடைய இந்த எதிர்ப்பு மனநிலையை மழுங்கடிக்கவும் பொதுவாக இந்திய மக்களிடம் காங்கிரஸ் அரசின் ராஜபக்சே ஆதரவு நிலைப்பாட்டை நியாயப் படுத்தவும் இதுபோன்ற படங்கள் எடுக்கப் படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதுபோன்ற படங்கள் இந்திய அரசு, இலங்கை அரசு இரண்டுக்குமே மிகவும் உவப்பு அளிக்கக்கூடியவையே. இதில் துயரமான ஒரு விஷயம் என்னவெனில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையோ அவர்கள் தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகளையோ இந்தியாவில் இருக்கும் ஏனைய மக்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளவோ அதன் குறைந்தபட்ச கருணையோகூட காட்டவில்லை என்பதுதான். விடுதலைப்புலிகள் என்றால் அவர்கள் ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் என்கிற ஒரே அடிப்படையில் மட்டுமே தமிழர்கள் அல்லாத இந்தியர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். 1987இல் இந்திய அமைதிப் படை ஈழமண்ணில் நடத்திய கோரத்தாண்டவங்களைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. முள்ளிவாய்க் காலில் லட்சக்கணக்கான மக்கள் எப்படி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இலங்கை இன்று உலகிலேயே மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தும் நாடு என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இந்திய அரசாங்கம் இலங்கையின் இனவெறி அரசாங்கத்திற்கு எத்தகைய ஆதரவை தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை. இந்த ஏனைய இந்தியாவின் குருட்டுப் பார்வையைத்தான் இந்தப் படத்தின் இயக்குநரும் ஈழப்பிரச்சினைகளின்பால் வெளிப்படுத்து கிறார். இந்திய அமைதிப் படையின் வன்முறைகளையோ, முள்ளிவாய்க்கால் படுகொலைகளோ கண்கொண்டு பார்ப்பதற்கு அவரது கலை சுதந்திரம் அவரை அனுமதிப்பதில்லை. ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தால் ஈழத் தமிழர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பதைப்பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. ராஜீவ் காந்தி கொலையில் இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களைப் பற்றி நடந்து வரும் விவாதங்களை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. இப்படித்தான் ஈழத்தமிழர்களுடைய வரலாறு இந்த உலகத்திற்குச் சொல்லப்படுகிறது. நம் முன்னால் இருக்கும் முக்கியமான கேள்வி, நம் முன் நிகழ்ந்த ஒரு கொடூரமான மானுட அழிவைப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் ஒடுக்குமுறையாளர்களுக்கு சாதகமான ஒரே ஒரு அரசியல் கோணத்தை மட்டும் கையாளும் ஒரு படத்தை நாம் கலைப்படைப்பு என்று அழைக்க வேண்டுமா அல்லது பிரச்சார படைப்பு என்று அழைக்க வேண்டுமா? சென்சார் போர்டு அனுமதி அளித்த ஒரு படத்தின்மீது தடை போடுவது தவறு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. நமது சென்சார் போர்டின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமானதாகி எவ்வளவோ காலமாகிவிட்டது. அவை உண்மையில் அரசாங்கத்தின் கருவிகளாக இருக்கின்றனவேயொழிய அவற்றிற்கென்று சுதந்திரமான செயல்பாடுகள் எதுவும் இல்லை. ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள், தணிக்கைக்குழு மற்றும் அரசாங்கத்தின் கடும் ஒடுக்குமுறைகளைச் சந்தித்திருக்கின்றன. ராஜீவ் காந்தி கொலையை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்ட ஆர்.கே.செல்வமணியின் "குற்றப்பத்திரிகை' படம் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். ஈழப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட "ஆணிவேர்', "தேன்கூடு' போன்ற படங்கள் சென்சாரைக் கடந்து வரவே முடியவில்லை. "காற்றுக் கென்ன வேலி' படத்தை இங்கே திரையிட முடியவில்லை. இவ்வாறு ஈழப் போராட்டம் மற்றும் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக, அரசாங்கத்திற்கு உவப்பில்லாத எந்தக் கருத்தையும் இங்கே ஒரு திரைப்படமாக்க முடியாது. இந்தப் படங்கள் அனுமதிக்கப்பட்டு மக்களிடம் காட்டப்பட்டிருந்தால் நாம் மெட்ராஸ் கஃபே படத்திற்காக கருத்துச் சுதந்திரத்தின் பொருட்டு போராடலாம். ஆனால் இங்கே கருத்து சுதந்திரம் என்பது ஒருவழிப் பாதையாக இருக்கிறது. அதிகார சக்திகளின் நலன்களை பாதுகாக்கும், அவர்களது நோக்கங்களை பிரச்சாரம் செய்யும் "துப்பாக்கி', "விஸ்வரூபம்', "மெட்ராஸ் கஃபே' போன்ற படங்களுக்கு சமூகக் குழுக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தால் கருத்துச் சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் நேரடியாக ஒடுக்குமுறையில் ஈடுபடும் �காற்றுக்கென்ன வேலி� போன்ற படங்களைப் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. இப்போதுகூட அரசாங்க அமைப்புகளால் தடுத்து நிறுத்தப்பட்ட "தலைவா' படம் குறித்து கருத்துச் சுதந்திரம் சார்ந்த எந்த போராட் டமும் திரைத்துறையினரிடம் இருந்துகூட எழவில்லை. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மட்டும்தான் கண்ணீர் விட்டு அழுதார். இதே படத்திற்கு ஏதேனும் ஒரு சமூகக் குழுவிடம் இருந்து அழுத்தம் வந்திருந்தால் இந்நேரம் பெரும் கூக்குரல்கள் எழுந்திருக்கும். ஒவ்வொன்றிற்கும் தடை கேட்பது என்பது பொதுவாக அரசாங்கத்தின் அதிகாரத்தை எல்லையற்று பெருகச் செய்வதற்கு இடமளிக்கும் என்பது உண்மைதான். இது காலப்போக்கில் ஒவ்வொரு அறிவு சார்ந்த, கலைசார்ந்த செயல்பாடுகளிலும் அரசு தலையிடுவதற்கான உரிமையை வலிமைப்படுத்தப் போவது நிச்சயம். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் விடுதலைப் புலி களை பயங்கரவாதிகள் என்று சொன்ன தமிழக முதல் வரிடமே இப்போது புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லும் படத்திற்கு தடை விதியுங்கள் என்று கேட்பது தான். இந்திய அரசாங்கம் புலிகளின்மீது விதித்திருக்கும் தடையை இன்றும் நீடித்திருக்கிறது. இந்த அமைப்புக்குள் நின்றுதான் நாம் புலிகளுக்கெதிரான ஒரு படத்தை தடை செய்யுமாறு கோருகிறோம். எவ்வளவு அபத்தமான முரண் பாடான ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். "மெட்ராஸ் கஃபே' போன்ற படங்களுக்கு ஒரு தெளிவான அரசியல் நோக்கம் இருக்கிறது. அரசியல், அரசியலால் எதிர்க்கப்படுவது என்பது தவிர்க்க முடியாதது. - மனுஸ்யபுத்திரன் நக்கீரன் https://www.paristamil.com/tamilnews/view-news-MjkwMDM4MzY4.htm கடந்த வார இறுதியில் நெற்ஃபிளிக்ஸில் இந்தப் படத்தைப் பார்த்தேன். படத்தில் காட்டப்பட்டமாதிரி பல முடிச்சுக்களும், சிக்கல்களுமாகவா அந்த “துன்பியல் சம்பவம்” நடந்தது?🤔
  12. இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை 15.11.2007 அன்று படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை லெப்.கேணல் ஐெரோமினி/விடுதலை தங்கராசா வினீதா. யாழ்மாவட்டம். முன்னாள் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி. மாலதிபடையணி தாக்குதல் தளபதி. 1990 களில் இணைந்த ஐெரோமினி தனது ஆரம்ப இராணுவப்பயிற்சியை மணலாற்றில் முடித்தவள் .தொடர்ந்து மேலதிக இராணுவப் பயிற்சியை கிளாலியில் உள்ள மகளிரனி பயிற்சிப் பாசறையில் முடித்த ஐெரோமினி.தொடர்ந்து தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிகளையும் முடித்து மகளிர் படையணி சிறப்புத் தளபதியோடு நின்றார். தொடர்ந்து ஆகாய கடல் வெளிச் சமரில் ஏழுபேர் கொண்ட அணிக்குத் தலைவியாகச் சென்று தரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து மறிப்புச் சமரில் ஈடுபட்ட ஐெரோமினி .ஒருகட்டத்தில் இவரது மிகத்திறைமையான செயற்பாட்டால் பதினைந்து பேர் கொண்ட அணிக்கு தலைவியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் கையில் விழுப்புண்ணடைகிறாள். விழுப்புண்மாறியதும் முகாம் திரும்பியவர் சிலகால ஓய்விற்க்குப் பின் பயிற்சிகளில் ஈடுபட்டு சிறந்த சூட்டாளராக தலைவர் அவர்களிடத்தில் பாராட்டையும் பெறுகிறாள். இந்த நேரத்தில் தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையுடன் படைத்துறைச் செயலகம் உருவாக்கப்பட்டு அக் கட்டைமைப்புக்கு போராளிகள் உள்வாங்கப்பட்டபோது ஐெரோமினியும் செல்கிறாள். அங்கே பல்வேறு பயிற்சிகளிலும் வகுப்புக்களிலும் தனது திறமையான செயற்பாட்டால் அனைவரினதும் பாராட்டைப் பெறுகிறாள் .அந்த நேரத்தில் இவ் அணிகளில் ஒரு பகுதியினர் கடற்புலிகளுக்கு கொடுக்குமாறு தலைவர் அவர்களால் பணிக்கப்பட அங்கே திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மகளிரணிப் போராளிகளுள் ஒருத்தியாக ஐெரோமினியும் சென்றார். இங்கே கடல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக கடற்படையின் கடல்நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக கடற்கரையோர ராடர் நிலையங்கள் அமைக்கப்பட்டபோது அவ் ராடர் நிலையமொன்றில் செவ்வனவே பணியாற்றியிருந்தாள். தொடர்ந்து கடற்புலிகளின் தரைத்தாக்குதலனியின் மகளீர் அணியான சுகன்யா படையணியின் ஒரு அணியைப் பொறுப்பெடுத்து பல சமர்களை செவ்வனவே அதாவது வலிந்த தாக்குதலாகிலும் சரி மறிப்புச் சமராகிலும் சரி காவலரனில் நிற்பதாகிலும் சரி ஒவ்வொரு போராளிகளையும் அவர்களுக்கேற்ற மாதிரி வளரத்தெடுத்து வழிநடாத்தியிருந்தார். தரைத்தாக்குதலில் சுகன்யா படையணியின் வெற்றிக்கு ஐெரோமினியின் பங்களிப்பு அளப்பரியது என்று கூறினால் அது மிகையாகாது அவ்வளவிற்க்கு அணிகளை மிகத் திறமையாகக் வைத்திருந்தாள்.அந்த நேரத்தில் நீண்ட நாளாக இவளது உள்ளக்கிடக்கையிலிருந்த கனவான தன்னைக் கரும்புலிகளணியில் இணைத்துக் கொண்டு அதற்கான படகுச் சாரதியப் பயிற்சிக்காக நளாயினி படையணிக்குச் செல்கிறாள். அங்கே ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு தன்னை அடுத்த கட்டத்திற்க்குள் வளர்த்துக்கொள்கிறாள். அதுமட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக ஒவ்வொரு போராளிகளையும் தனக்குத் தெரிந்த விடயங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தெடுத்தார். தொடர்ந்து சிறந்த படகோட்டியாக ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் பங்காற்றியதோடுமட்டுமல்லாமல் அக்காலப்பகுதியில் ஒரு படகின் கட்டளை அதிகாரியாகவும் தொகுதிக் கட்டளை அதிகாரியாகவும் செவ்வனவே பங்காற்றினார். அதனைத்.தொடர்ந்து சண்டைப்படகின் தொலைத் தொடர்பாளராகவும் மூன்றாம் நிலைக் கட்டளை அதிகாரியாகவும் ( மூன்றாம் நிலைக் கட்டளை அதிகாரியென்பது ஒரு சண்டைப் படகு தன்னுடன் கூட்டிச் செல்லும் கரும்புலிப்படகை வழிநடாத்துவதாகும்.இப் பணி இலகுவானதல்ல கரும்புலிப்படகை சண்டைப்படகுடன் கூட்டிச்சென்று தாக்குதல் நடாத்தாவிட்டால் அப்படகை மறுபடியும் தளத்திற்க்கு கூட்டிவந்து சேர்ப்பதாகும்.) இரண்டாம் நிலைக்கட்டளை அதிகாரியாகவும் தொடர்ந்து படகின் கட்டளை அதிகாரியாகவும் தொகுதிக் கட்டளை அதிகாரியாகவும் 1998 ஆம் ஆண்டிலிருந்து 2002ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கடற்சமர்களில் அதாவது ஆழ்கடல் விநியோகப் பாதுகாப்புச் சமர் தென் தமிழீழத்திற்கான விநியோகப் பாதுகாப்புச்சமர் மற்றும் தலைவர் அவர்களின் திட்டங்களுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதல்களில் கடற்புலிகளின் துணைத் தளபதிகளான லெப் கேணல் நிறோஐன் மற்றும் லெப் கேணல் இரும்பொறை அவர்களுக்குத் துணையாக நின்று செவ்வனவே தாக்குதல்களை வழிநடாத்தினார். அக்காலப்பகுதிகளில் முகாம் பொறுப்பாளராகவும் சிறந்த ஆளுமையுடன் பணியாற்றினார் . சிறந்த கலைநயமுள்ள போராளியான ஐெரோமினி முகாம் கலைநிகழ்வுகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பரதநாட்டியத்தையும் அரங்கேற்றுவார். தொடர்ந்து கடற்புலிகளின் மகளீர் படையணியின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றாள்.அக்காலப் பகுதிகளில் மகளீரணியினை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்றார் .அதாவது மகளீரனி தனியாகச் எதையும் ஆண்போராளிகளுக்கு நிகராகச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக நின்று போராளிகளை அதற்கேற்றவாறு பயிற்றுவிற்றாள்.அக்காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாலதி படையணிக்குச் சென்று அங்கு பல்வேறு பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றி சண்டை ஆரம்பிக்கப்பட்டபோது 2ம் லெப் மாலதி படையணியின் தாக்குதல் தளபதியாக மன்னார் களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் முன்னனியில் நின்று அணிகளை வழிநடாத்தியதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே தரைச்சண்டை அனுபவமும் இருந்ததால் அவ் அனுபவங்களின் அடிப்படையில் அணிகளை அதற்கேற்றமாதிரியும் வைத்திருந்தார். இங்கேயும் முறியடிப்பு அணியொன்றை உருவாக்கி படையினரின் முன்னேற்றத்திற்கெதிரான முறியடிப்புத்தாக்குதல் நடாத்தி அதிலும் வெற்றியும் கண்டார். படை முன்னேற்றமில்லாத நாட்களில் முன்னனி நிலைகளுக்குச் சென்று ஒவ்வொரு போராளிகளுடனும் கதைத்து களநிலவரங்களை கேட்டறிந்து அதற்கேற்றவாறு செயற்பட்டார். 15.11.2007 அன்று முன்னரங்கநிலையிலிருந்த போராளிகள் தங்களது காவலரன்களுக்கிடையில் வித்தியாசமான நடமாட்டங்கள் இருப்பதாக கட்டளைமையத்திற்க்கு அறிவிக்க அணியொன்றுடன் புறப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அங்கு பதுங்கியிருந்த படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிடுகிறாள்.எத்தனையோ வெற்றிகர சமர்களில் பங்குபற்றி அவ்அனுபவங்களை சகபோராளிகளுக்குச் சொல்லி அவர்களையும் திறமையான சண்டைக்காரர்களாக்கியபெருமை ஐெரோமினியையே சாரும்.ஆண்போராளிகளுக்கு நிகராகச் எல்லாத் துறையிலும் செய்ய வேண்டும்மென்பதில் அதிகூடிய அக்கறை வைத்திருந்தார். சகபோராளிகளுக்கு மரியாதை கொடுப்பதில் ெஐரோமினிக்கு நிகர் ெஐரோமினியே. இக்கட்டான சமர்களில் தனது செயற்பாட்டல் அவ் இக்கட்டை தவிடுபொடியாக்கிய ஒரு வீரத்தளபதி.சகபோராளிகள் செய்யும் தவறை ஒரு தாயுனர்வோடு கண்டிக்கும் பண்பு இப்படியான ஒரு உன்னத போராளியை இழந்து விட்டோம். எழுத்துருவாக்கம்..சு.குணா. https://www.thaarakam.com/news/edac8fd3-0aa9-4336-9ade-080a8f2fe091
  13. கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா. கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா! எல்லாவற்றிலுமே குறிப்பிடத்தக்க திறமையுள்ள, நிறைவான போராளியாக நாம் அவளைக் கண்டோம். நெஞ்சுக்குள் உறைந்து போன அவளது உருவமும் உறுதியான நடவடிக்கைகளும் எந்த ஒரு போராளியையும் அடிக்கடி நினைவு கூரச்செய்யும். “எங்கட பாமாக்காவோ?” என்று அவளைப்பற்றிக் கூறி கண்கலங்கும் போராளிகள் அனேகம். நேற்றுவரை இந்தப் தென்னந்தோட்டங்களிலும், கடலின் உப்பு நீரிலும் கால்களை நீள நீள வைத்தபடி உலா வந்தவள். இன்று எங்கள் நினைவுக்குள் நீளமாய் உறைந்து போனாள். பருத்திதுறையிலுள்ள இன்பருட்டி கடற்கரை ஓரத்தில் சின்னக் குழந்தையாய் விளையாடி சிப்பிகளும் கிழிஞ்சல்களும் பொறுக்கி……… அவள் குழப்படிக்காரியாகத்தான் இருந்தாள். சண்முகசுந்தரம் ஐயாவுக்கும், இரத்தினேஸ்வரி அம்மாவுக்கும் நாலாவது பிள்ளையான அவள் சியாமளாவாக வலம்வந்து அந்த வீட்டை நிறைய வைத்தவள். 1971.03.28ல் அவள் பிறந்த போது அந்த வீடு நிறைந்துதான் போனது. சியாமளா சரியான துடியாட்டக்காரி அம்மாவுக்கு விளையாட்டுக் காட்டிவிட்டு, இன்பருட்டிக் கடற்கரை ஓரங்களில் கால்கள் மண்ணிற் புதைய, சின்னக் குழந்தையாய் தத்தித் தத்தி வருவாள். தொடுவானைப் பார்த்தபடி, எறிகின்ற அலைகளில் நனைந்தபடி நீண்ட நேரங்கள் நிற்பாள். அம்மா அவளைக் காணாது தேடிவரும் வேளைகளில் ஓடி ஒளித்து, அவளது குழந்தைக் காலக் குழப்படிகள் சொல்லிமாளாது. அவள் தனது பள்ளிக்கூட வாழ்க்கையிலும் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். தனது உயர்தரக் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ்ற் கல்லூரியில் கற்றபோது உயிரியல் மருத்துவத்தை தேர்ந்தெடுத்திருந்தாள். படிபபிலும் சரி, விளையாட்டிலும் சரி என்றுமே பின்தங்கியது இல்லை. விளையாட்டுப் போட்டிகளில் அவள் பெற்ற சான்றிதழ்கள் ஏராளம். இப்படி இருந்தவளது வாழ்வின் அமைதியை இந்தியப் படை நடவடிக்கைகள் குலைத்தன. அவளது அண்ணன் கடற்புலி லெப்டினன்ட் வெங்கடேஸ் வீரச்சாவைத் தழுவிக் கொண்டபோது, படிப்பை விட நாடடுப்பணி மேலாகப்பட்டது. அண்ணன் கொண்ட இலட்சியப்பணியைத் தொடர சியமளா இயக்கத்தில் இணைந்தாள். 1989 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அவள் இயக்கத்துக்கு வந்தநேரம். தமிழீழத்தில் வழுக்கி விழுகிற இடமெல்லாம் இந்திய இராணுவம். புலிகளை இரவும் பகலும் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்த நேரம். புலிகளின் முக்கியமான நடவடிக்கைகள் யாவும் காட்டிலே மேற்கொள்ளப்பட்டன. அப்போதிருந்த சூழ்நிலையில் இயக்கத்தில் போராளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதுவும் பெண் போராளிகளின் எண்ணிக்கை ஒரு சில நூறுகளுக்குள் மட்டுமே. இத்தகைய சூழ்நிலையில் சியாமளா, பாமாவாக தன் பெயரை வைத்துக் கொண்டு நான்காவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தாள். பயிற்சிகளில் அவள் காட்டிய திறமையும் உயர்ந்த திடமான உடல் அமைப்பும் அவளை 50 கலிபர் துப்பாக்கியின் உதவிச் சூட்டாளராக செயற்பட வைத்தது. தனது கனரக ஆயுதத்தை தோளிலே சுமந்தபடி இணைப்பிகளை (லிங்குகள்) தோளின் குறுக்காகப் போட்டபடி அவள் நடப்பது தனியான கம்பீரம்! காட்டுக்குள் நீண்ட தூரங்கள் நடந்து, காடு முறித்து, எமக்குத் தேவையான பொருட்களை நாம் சுமந்து வருவது வழக்கம் பெரும் சுமைகள் தோளை அழுத்த அந்த வேளையிலும் இவள் கலகலத்தபடி வருவாள். எங்களுக்குப் பாரங்குறைந்தது போற்தோன்றும். 1990ம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய படைகள் எம் நாட்டைவிட்டு வெளியேறிய போது, காட்டில் இருந்த இருநூறு பேர் கொண்ட குழு யாழ்ப்பாணம் வந்தது. இக் குழுவில் பாமாவும் ஒருத்தியாக இருந்தாள். அன்றிலிருந்து விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி சந்தித்த அனேகமான சண்டைகளில் அவளது தடயங்கள் பதிந்த வண்ணமிருந்தன. கோட்டை, பலாலி, காரைநகர், சிலாவத்துறை, பலவேகய ஒன்று, மணலாறு என்ற நீண்ட பட்டியலில் அங்குள்ள காவலரண்களில் அவளது கால்கள் அகலப்பதிந்தன. பாமா! குறிப்பிட்ட சில காலப்பகுதியினுள்ளே இவளது வளர்ச்சி அபாரமானது. இவளின் உறுதியான செயற்பாடுகளும் நினைத்தகைச் சாதிக்கும் பண்பும் இவளைப் படிப்படியாக வளரச் செய்தன. பலாலி காவலரண்களில் பாமா நின்றபோது அவளது செயற்பாடுகள் யாவும் மறக்க முடியாதவை. எந்த வேலையையும் எனக்கு தெரியாது என்று இவள் தலையாட்டியதை நாங்கள் காணவில்லை. “வீட்டிலிருந்து எல்லாம் தெரிஞ்சு கொண்டே வந்தனாங்கள். இயக்கத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டோம். எல்லாம் முயற்சியாலைதான்” என்று அடிக்கடி கூறுவாள். அவற்றை நாம் பலாலியில் நேரில் கண்டோம். அது 1990ம் ஆண்டின் மழைக்காலப் பகுதி. பலாலியின் செம்பாட்டுமண் மழை ஈரத்தில் பிசுபிசுத்தது. கால்கள் சேற்றில் புதைந்தன. சேற்றுக் குழம்புகளின் நடுவே இருந்த அந்தக் காவலரண் அடிக்கடி எதிரியின் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தது. ஓயாமல் எறிகணைகள் விழுந்ததால், நிலம் கரியாகிப் போனது. அடிக்கடி அவ்விடத்துக்கு முன்னேற படையினர் முயற்சிப்பதும் நாம் அடித்துத் துரத்துவதும் வழக்கமான ஒரு நிகழ்வாகிப் போனது. இத்தருணத்தில், முதல் நாள் நடந்த கடுமையான சண்டையில் பதின்னான்கு பேர் காயம் அடைந்தனர். எதிரியின் இலக்கான அந்த இடத்தில் தொடர்ந்தும் எமது குழுவை நிலை நிறுத்துவதற்கு நாம் ஒரு பொறுப்பான ஆளைத் தேடிக் கொண்டிருந்தபோது பாமாவின் செயற்பாடு நம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது. “நான் குறூப்பை கொண்டு போறன்.” அவள் எழுந்து சொன்னாள். இதுவரையும் பெரிய களங்களைக் கண்டவள் அல்ல அவள். ஆனால் அவளிடம் ஒரு வித்தியாசமான திறமை இருக்கத்தான் செய்தது. அவளுக்குக் கொடுக்கப்பட்ட குழுவை திறமையாகச் செயற்படுத்திய விதம் எமக்கு நிறைவைத்தந்தது. அடிக்கடி படையினருக்குத் தலையிடி கொடுப்பதும் பாமாவின் வேலையாக இருந்தது. அந்தக் காலங்களில் பலாலியின் பனை வெளிகளை ஊடறுத்தபடி எதிரியின் தேடொளி இரவைப் பகலாக்கும். மிகமிகக் கிட்டவாக தனது ஒளியைப் பாய்ச்சியபடி இருக்கும்போதெல்லாம் பாமா அதற்கு குறி வைப்பாள் அவளது ‘பிறண்’ குறி தவறியதாக நாங்கள் கேள்விப்படவேயில்லை. பயிற்சி முகாமிலும் சரி… சண்டைகளிலும் சரி அவள் நன்றாக குறிபார்த்துச் சுடும் திறமை பெற்றவளாக இருந்தாள். அப்படி ஒரு இடத்தில் தேடொளி உடைய, மறு இடத்தில் எதிரி அதைப் பொருத்த மீண்டும் உடைய வைத்து, உண்மையில் அவர்களைச் சலிப்படையவே செய்துவிட்டாள். அந்த நீண்ட பனைகளில் நிலையெடுத்தபடி இராணுவக் காவலரண்களை நோக்கி அடிக்கடி அருள் 89 ஐ அடிப்பாள். அது ஒரு விளையாட்டுப் போல…….. ஆனால் குறி தப்பாத ஒன்றாக அவளுக்கு இருக்கும். இப்படி எத்தனை நிகழ்வுகள்! பாமாவின் துடிப்பான அந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் பலாலியின் புழுதி படிந்த செம்பாட்டுமண் சொல்லும் கனத்த காற்று சொல்லும். பலாலிக்கு பிறகு பெரிய களமாக இவளுக்கு ஆனையிறவுக்களம் அமைந்தபோது, அதிலும் தன் திறமைகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. ஆ.க.வெ நடவடிக்கையில் மகளிர் படையணியின் பக்கம் மும்முரமான சண்டையில் இவள் நின்றாள். உக்கிரமான மோதல், மழை போல ரவைகள் காதை உரசுவதாக வரும் மயிரிழையில் தப்பித்த எறிகணை வீச்சுக்கள்……. பாமாவின் குழுவிலும் அனேகம்பேர் காயம்பட்டுத்தான் போனார்கள். எதிரி பின்வாங்கும் வரை பாமா மட்டும் தனித்து நின்று அடிபட்டதை நினைக்கிறோம். கடைசியாக காலிலே பலத்த காயமடைந்த ஒரு போராளியை அந்தக் கும்மிருடடு நேரத்திலே கண்டுபிடித்து பின்னுக்கு கொண்டு வந்து இவள் மூச்சுவிட்ட போது தனியொருத்தியாக நின்று தடயங்கள் எல்லாவற்றையும் பொறுக்கியபோது………. ஆனையிறவுச் சண்டையில் இவள் தலையில் காயப்பட்டாள். இவள் தப்பி வருவாள் என்பதில் எங்களுக்கு ஒரு துளியளவு நம்பிக்கையே இருந்தது. ஆனால் பாமாவின் திடமான உடல் அமைப்பும் உறுதியுமே அவளைத் தப்ப வைத்தது. மீண்டும் பழைய நிலைக்கு இயங்கவைத்தது. நிறையக் களங்கண்ட ஒரு போராளியாக, ஒரு குறுமபுக்காரியாக, எல்லோருக்குமே உதவுகின்ற இளகிய மனம் படைத்தவளாக நாம் அவளைக் கண்டோம். இப்படித்தான் ஒருநாள்…….. அது லெப். கேணல் ராஜனின் வழிநடத்தலில் நடைபெற்றுக் கொண்டிருந்த அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி. அதில் இவள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது, இவளது முகாமுக்கு ஒரு சிறுமியும் சிறுவனும் சாப்பாடு கேட்டு வந்தனர். அப்போது அங்கு உணவேதும் இருக்கவில்லை. இதை அவதானித்த இவள், எல்லோரிடமும் இருக்கும் காசு எல்லாவற்iயும் சேர்க்க ஐம்பது ரூபா வந்தது. அதை அவளிடம் கொடுக்கச் சென்றபோது, அச்சிறுமியிடம்; உங்களது பெயர் என்ன? என்று கேட்க, அப்பிள்ளை வாய்திறக்க முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு இவள்…. ஏன் என்று விசாரித்தாள். விமான குண்டு வீச்சின்போது சன்னமொன்று தாடைக்குள் தாக்கியதால் வாய்திறக்க முடியாது என்ற விபரத்தை அந்தச் சிறுமி சைகை மூலம் கூற, இவளது கண்கள் குளமாகின. அந்தக் காசைக் கொடுத்து அனுப்பிவிட்டு, “இந்தச் சின்னப் பிள்ளை என்ன பாவம் செய்தது.? இதுக்கு இவங்களிற்கு முறையான பாடம் படிப்பிக்கவேணும்” என்று சொல்லிய போது, இவளது குரல் தழுதழுத்தது. அடிக்கடி “இந்தத் கஸ்ரமெல்லாம் எங்களோட முடிஞ்சிடவேணும். எங்கட சின்னனுகள் அனுபவிக்க கூடாது. அதுகள் சந்தோசமாக தங்கட தாய், தகப்பனோட வாழனும்” என்று கூறி, அவள் கண்கள் கலங்கி தவித்ததை நினைக்கும் போது……….. அன்று படைத்துறைக் கல்லூரியில், தொலைத்தொடர்பு பற்றிய வகுப்பு, புதிய வகைகள், புதிய தொழிற்பாடுபாடுகள் நுட்பமாக ஆராய்ந்து விளக்கப்பட்டது. இறுதியாக விரிவுரையாளர் “இந்த (ci 25) வோக்கி புதிசு. இதன் தொழிற்பாட்டை நான் உங்களுக்கு சொல்லித்தரமாட்டன். நீங்கள்தான் இதை ஆராய்ந்து கண்டு பிடிக்கவேணும். குறிப்பிட்ட காலம் தருவன்;” என்று கூறி முடித்த போது பாமா அதோடு முழு மூச்சாய் அதனோடு ஒன்றி அதன் தொழிற்பாட்டை அறிவதில் நேரங்காலம் இல்லாது கண்ணாய் இருந்ததை இப்போது நினைத்தாலும்…………….. அந்த முயற்சியில் அவள் வெற்றி பெற்றாள். அதன் தொழிற்பாட்டை, முதலில் கண்டு பிடித்து விளங்கப்படுத்தினாள். அப்போது எல்லாப் போராளிகள் மத்தியிலும் இவளின் திறமை வெளிப்பட்டது. இவளின் விடாமுயற்சியை நாம் எங்களுக்குள் சொல்லிச் சொல்லி வியந்து போனோம். சதுரங்கம் விளையாடுவது இவளுக்கு பிடித்தமான ஒரு விளையாட்டு. நுட்பமாகவும் திறமையாகவும் அவன் விளையாடுவது யாவரையும் வியக்கவைக்கும். பார்ப்பவரைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும் போல நினைக்கத் தூண்டும். அவளின் இராசாவும் இராணியும் தோற்றதாக வரலாறு இல்லை. அந்தளவுக்கு எதிரே விளையாடுபவரை விழுத்துவதில் குறியாக இருப்பாள். அவளின் இன்னொரு விருப்பமான விளையாட்டு கரப்பந்தாட்டம். மாலை நேரத்தில் அவள் விளையாட வந்துவிட்டாள் என்றால், விளையாட்டுத்திடல் கலகலத்துப்போகும். தள்ளி எட்டி ஓடி ஓடி அடிப்பது அவளுக்கொரு கலையாகத்தான் இருந்தது. இவளது குறும்புகளுக்கும் குறைச்சலில்லை. நேரங்காலம் பாராமல், சுற்றி நிற்பவர்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்து விட்டு நழுவிவிடுவாள். ஒரு தடவை இவளது தோழியும் ஒரு உந்துருளியில் இரவு ஒன்பது முப்பது மணியளவில், வடமராட்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டு இருந்தனர். அவளது உந்துருளியில் வெளிச்சம் மிகவும் மங்கலானது. பாதை தெளிவாகத் தெரியவில்லை. புறாப்பொறுக்கியடியில் வந்துகொண்டிருந்தபோது ஒரு சரக்குந்துருளி மிகுதியான ஒளியைப் பாய்ச்சியபடி எதிர்ப்பக்கமிருந்து வந்துகொண்டிருந்தது. பாமா உடனடியாகத் தனது வெளிச்சத்தை அணைத்துவிட்டு கையைமேல் நோக்கிக் காட்டினால். உடனே சரக்கு உந்துருளியின் ஓட்டுனர், உலங்குவானூர்த்தி வருவதாக எண்ணி, தனது வெளிச்சத்தை அணைத்துவிட்டு, ஓரமாக வாகனத்தை நிறுத்தவும், இவள் தனது உந்துருளியை வேகமாக ஓட்டிச்சென்று விட்டாள். இப்படி நான்கு, ஐந்து வாகனங்களை நிறுத்தி, அந்த இடைவெளியைப் பயன்படுத்தி தன் வாகனத்தை ஓட்டினாள். முனியப்பர் கோயிலடியில் செல்லும்போது ஒரு வாகனம் வர அதற்கும் அவள் மேல்நோக்கி கையைக் காட்டி நிறுத்திய பின்னர்தான் பார்த்தாள், அது எமது போராளிகளின் வாகனம். ஒரு நிமிடம் அதிர்ந்து போனாலும் உடனே விறுவிறு என்று உந்துருளியை அதிவேகமாக ஒட்டியபடி வந்து சேர்ந்து. சிரிசிரிஎன்று சிரித்த பாமா, இப்போதும் கண்ணுக்குள்ளேதான் நிற்கின்றாள். இவளுக்கு எதுவும் ஏறுமாறாகச் சொல்லி கோபபட வைப்பது எங்களுக்கு பெரிய விளையாட்டுப்பார்த்தாக இருக்கும். எதற்காவது இவளுக்கு கோபம் வந்தால் கடகடவென்று பேசிவிட்டு அடுத்த நிமிடம் மறந்து போய் நின்று சிரிப்பாள். பேசுவது முழுக்க அடுக்கு மொழியில் தான். கதைக்கும் போது வேகமாக கதைப்பதால் அவளது கதை மற்றவர்களுக்கு விளங்குவது கடினம். அதனால் அவளை ‘நடுங்கல்’ என்று கேளிசெய்வோம். இப்படிக்கேலி செய்தால் ஓடித்தூரத்தி அடித்துவிடுவாள். 1992.03.01 இல் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி தன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அத்திவாரமிட்டது. அன்று கடற்புலிகள் மகளிர் அணி தோற்றம் பெற்ற நாள். எங்கள் தலைவரின் கனவுகளுக்கு அபார நம்பிக்கை ஊட்டும்படியாக கடற்புலிகளின் வளர்ச்சியில் பாமா வகித்த பங்கு அளப்பரியது. 1992ம் ஆண்டின் பிற்பகுதியில் பாமா கடற்புலிகளின் அணியில் தன்னை இணைத்துக் கொண்டாள். அன்றிலிருந்து கடற்புலிகள் மகளிர் படையணியை வளர்ப்பதில் அவள் தீவிர அக்கறை செலுத்தினாள். சகபோராளிகளுக்கு அணிநடை பழக்குவதிலிருந்து முக்கியமான வகுப்புக்களை எடுப்பது வரை, எல்லாவற்றிலும் பங்கேற்றாள். தலைமையேற்று நடத்தினாள். கிளாலில் மக்கள் பாதுகாப்புக்காக எம்மால் நடத்தப்படும் பாதுகாப்புப் பணியில், இவளுடன் ஒரு குழு பங்களித்துக் கொண்டிருந்தது. கிளாலிக் கடலில் கொட்டும் பனியிலும், மழையிலும் ஊசியாகக் குத்தும் உப்புக் காற்றின் மத்தியிலும் அவள் விடிய விடிய காத்திருந்த காலங்களை நினைக்கின்றோம். தூரத்தே புள்ளியாய் விசைப்படகுகள் தெரியும். கடற்பரப்பில் மக்களின் படகுகள் ஆடிச் செல்லும். நெஞ்சு நீரற்று வரண்டு போய் கண்கள் பீதியாய் வழிய துயரப்படும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிய கடற் சண்டைகளில் பாமா பங்கேற்றதை நினைக்கிறோம். ‘நீ வீட்டில் மிகுந்த பிடிவாதக்காரியாய் இருந்தாயாமே? நினைத்ததைச் செய்து முடித்து நினைத்ததை வாங்கித் தரும்படி அந்தப் பிடிவாதம்தான் கடலிலும் உன்னைச் சாதிக்க வைத்ததோ…. “வோட்டர் ஜெட்டை ஏன் நீங்கள் எடுக்கவில்லை?” என்று பாமாவின் மாமா கேட்ட பொழுது “மாமா அதைக் கொண்டு வந்து விட்டுதான் உங்களுடன் கதைப்பேன்”. என்று கூறினாளாம். இதைக் கண்கலங்கியவாறு மாமா கூறினார். நினைத்ததைச் சாதித்து முடிக்கும் அந்த இயல்பு பாமாவுடன் கூடப்பிறந்தது. என்பதை நாம் பல நிகழ்வுகளில் கண்டோம். இத்தகைய நினைத்ததைச் சாதிக்கும் பண்புதான் சாவின் இறுதிக் கணங்களிலும் அவளை இறுகப் பற்றியிருந்து. பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டது. இத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி முக்கிய பங்கேற்றது. இந்தச் சமரில் கடற்புலிகளின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் நாகதேவன்துறையில் கடற்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு, ஒரு படகுப் பொறுப்பாளராக பாமா அனுப்பப்பட்டாள். சண்டைக்குத் தனது படகைத் தயார் படுத்திக் கொண்டிருந்த பாமா கரையில் நின்ற போராளிகளிடம் ஆளை ஆள் தெரியாத இருளில், நம்பிக்கை தொனிக்க, “இந்தச் சண்டையிலே நாங்கள் வோட்டர் ஜெட் ஒண்டைக் கொண்டு வருவோம்” என்று சொல்லிவிட்டுப் போனாள். சொன்னபடி நாகதேவன் படைத்தளத்தை தகர்த்துவிட்டு ஒரு நீருந்து விசைப்படகோடு முகமெல்லாம் சிரிப்பாக வெற்றிப் பூரிப்போடு கரைக்கு வந்தாள். அதிகாலை திரும்பவும் அவளை வருமாறு தொலைத்தொடர்பு கருவி கூப்பிட்டது. எல்லா ஆயுதங்களுடனும் அவளது படகு ஒரு குருவியைப் போல புறப்பட்டுப் புள்ளியாய்ப் போனது. ஏதோ ஒன்று அவளிடம் வித்தியாசமாகத் தென்பட்டது. வழமைக்கு மாறாக ஏதையோ கூற நினைப்பது போல அவளது கையசைப்பு அந்த இருளில் மங்கலாகத் தெரிந்தது. காற்றைக் கிழித்தபடி ஓயாத ரவைகள். காதை உரசுவதான அவற்றின் சத்தங்கள். அவைகளின் மத்தியில் அவளது படகு தூரத்தே மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கடலலைகள் ஆர்த்தெழுந்து படகை மறைத்தன. நிலவை விழுங்கிய வானத்தில் ஒளிப்பொட்டாய் விளங்கிய நட்சத்திரங்கள். வானம் அமைதியாகத்தான் இருந்தது. கனதியான குண்டுச் சத்தங்கள் கண்ணிமைக்கும் இடைவெளியில் அதற்கும் இடைவிடாத நேர இடைவெளிகளில் ஓசைகள் கேட்டு கொண்டே இருந்தன. “பாமா… பாமா வோக்கி கூப்பிட்டது. விரைவாக தொடர் எடுக்க முயன்று தோற்றுப் போய் …… ஒரு ரவை அவளது காலை ஆழமாக பிய்த்துச் சென்றது. பீறிட்ட இரத்தக்குளியலில் பாமா வீழ்ந்த போது……….. மீண்டும் மங்கலான குரலில் அவள் கட்டளை பிறப்பித்துக் கொண்டுதான் இருந்தாள். மெல்ல மெல்ல குரல் மங்கி, துடிப்படங்கி……. “காலிலைதான் காயம் என்று……. பிரச்சனை இல்லை என்ற எங்கள் எல்லலோரினதும் நம்பிக்கைகளை பொய்யாக்கிக் கொண்டு மெல்ல மௌனித்துப் போனாள். அந்தப் பிடிவாதக்காரி. உப்புக் கரிக்கும் கடல் நீரேரியில் கலந்து போனாள். கிளாலிக் கடல் உதிரத்தில் தோய்ந்தபடி மீண்டும் மீண்டும் பொங்கியெழுந்தது. ஆயிரம் ஆயிரம் மாவீரர்களோடு எங்கள் பாமா, விடுதலையின் பெருநெருப்பை சுவாசித்தபடி….. வெற்றியின் வேராய் உறங்கட்டும் அமைதியாய்… நினைவுப்பகிர்வு:- சுதாமதி. களத்தில் இதழ் (16.09.1994). https://www.thaarakam.com/news/d18d52aa-6e58-4ed4-86b4-a5c622483296
  14. பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள் . பூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி இராணுவ கூட்டுப்படைத் தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி சிங்கள இராணுவத்தை பேரதிர்ச்சிக்குட்படுத்தினார்கள். இக் கரும்புலித்தாக்குதல் சிங்கள் இராணுவக் கட்டமைப்பில் திடீரென சீர்குலைவை ஏற்படுத்தி அவர்களை நிலைகுலைய செய்து , தடுமாற்றத்துக் குள்ளாக்கியது. பூநகரிச் சமரில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உறுதுணையாய் அமைந்தவர்கள் கரும்புலிகளே…..! வெளியீடு : – உயிராயுதம் நூல் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/8e8888ba-faf2-4187-b3ad-5d96d5f2881a
  15. ஒரு உண்மை வீரனின் கதை - லெப்.கேணல் நவநீதன் ஒரு உண்மை வீரனின் கதை நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில் தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடர வேண்டும்; சண்டையொன்றில் முடிக்க வேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே அவனது வாழ்வு உருண்டோடியது; சண்டைக்களங்களிலேயே அவன் தூங்கி விழித்தான் பழம்பாசியில் ஒரு சண்டை. பால்ராஜ் அவர்கள் வன்னிக்குத் தளபதியாக இருந்த போது அவரது பாதுகாப்பு அணிக்குப் பொறுப்பாக இருந்தவன் நவநீதன் தான். தவிர்க்க முடியாத ஒரு பயணம்; தளபதி போகவேண்டியிருந்தது. அரசியலுக்குப் பொறுப்பாக இருந்த லெப்ரினன்ட் கேணல் சந்திரனும் கூட. போயே ஆகவேண்டும்; நோக்கம் முக்கியமானது. அது இந்தியப்படைக் காலம்; இடறுப்படும் இடங்களிலெல்லாம் அவர்கள் நகர்ந்துகொண்டிருந்த ஒரு சூழ்நிலை. மிக நெருக்கடியான ஒரு நேரம் இடமும் அப்படித்தான்; மைய இலக்கு வைத்து இந்தியர்கள் படை நடாத்திக்கொண்டிருந்த மணலாற்றின் வேலியோடு குறைந்தளவு வீரர்களையே கொண்டு நகர்ந்து கொண்டிருந்த எமது அணிக்கு, திசையறி கருவி வழிகாட்டிக்கொண்டு இருந்தது. தண்ணிமுறிப்பு வீதியைக் கடந்து பழம்பாசிக் காட்டுக்குள் இறங்கிய போது வழமை போல முதலாவது ஆளாகச் சென்று கொண்டிருந்த நவநீதன், திடீரென நடை தயங்கி, ‘அலேட் பொசிசனில்’ வைத்திருந்த ‘எம் -16’, உயர்த்தி, மூக்கைச் சுழித்துக் கொண்டு திரும்பினான். அநேகமான தடவைகளில் இந்தியர்களின் அரவம் காட்டி, எம்மை அரட்டி விடுகின்ற அந்த ‘மணம்’ – சற்றுக் கூடுதலாகவே சுவாசத்தோடு கலந்தது. காட்டுப் பாதை இடைக்கிடை நாம் பயன்படுத்துகின்ற தடம் தான் – அவதானித்திருக்கக்கூடிய எதிரி. இரை தேடி வந்திருந்தான். “இந்தியப்படையின் விசேட அதிரடிக் கொமாண்டோக்கள்” – தடயங்களை வைத்து புலிகள் ஊகித்துக் கொண்டனர். எங்கள் பாதையின் ஏதோ ஓர் இடத்தில் நிச்சயமாக எதிரி நிலை எடுத்திருப்பான் நம்பிக்கை உறுதியாக இருந்தது. கைவிட முடியாத பயணம்; தேவை பெரியது. இது ஒரு புறம் போகஇ ‘அடிக்கப் போகின்றவனுக்குத் திருப்பி அடித்தே ஆக வேண்டும்’ என்ற ஆவேசமும் எழுந்தது. நவநீதனே முனைப்பாக நின்றான். தளபதி ஒழுங்கமைத்தார்; அணி இரண்டாக்கப்பட்டது. பிரதான குழுவிலிருந்து குறிப்பிட்ட ஒரு தூரத்தில் துணைக்குழு நகரும். ஒரு பதுங்கித் தாக்குதலானது பலவகைப்பட்டதாக அமையும். வலது புறமிருந்து வரலாம் இடது புறமிருந்தும் வரலாம். நேரெதிரிலிருந்து வரலாம். சில சமயம், வலது அல்லது அடது புறத்தோடு எதிர்ப்பக்கத்திலிருந்தும் “L” வடிவத்தில் வரலாம். இவற்றில் எது நடந்தாலும் எதிர்கொள்ளக் கூடியவாறு திட்மிடப்பட்டது பிரதான குழு தாக்குதலைச் சந்திக்க, துணைக்கழு காட்டுக்குள் இறங்கி, வளைத்து, எதிரியை நாரிப்பக்கத்தால் தாக்க வேண்டும். நவநீதன் தான் கொமாண்டர். அணி அசையத் துவங்கியது வழமை போல நவநீதன் முன்னுக்கு. அது அவனுக்கே உரிய துணிவு கத்திக்கொண்டு பறந்த ஒரு காட்டுக் குருவியைத் தவிர நிசப்தம் தன் முழு ஆதிக்கத்தையும் செலுத்தியிருந்தது; ‘மயான அமைதி’யை விடப் பயங்கரமானது ‘வன அமைதி’ எதிர்பார்க்கும் சண்டை; எதிர்ப்படப்போகும் நேரத்தை எதிர்கொள்ளத் துணிந்த மனது. அதிகரிக்கும் இதயத்துடிப்போடு கலந்த ஆக்ரோசம். சுடத் தயாரான துப்பாக்கிகளின் குழல்வாய்கள் நிமிர்த்தி – பாயத்தயாரான புலிகளின் பதுங்கல் நகர்வு. சருகு நெரிபடும் சத்தத்தோடு மட்டும், அடிமேல் அடிவைத்து அணி சகர்ந்து கொண்டு… திடீரென, இயல்பு மாறிப்போயிருந்த காடு; இயற்கை குலைந்து போயிருந்தது வனம். சூரியனை நோக்கி வளர வேண்டிய மரக்கிளைகள் சில, வளைந்து, பூமியை நோக்கி இருந்தன. இருக்கக்கூடாத இடங்களில், சருகுகள் கூடுதலாய். சருகுகளின் மறைப்பினூடாக மின்னுகிற எல்.எம்.ஜி.குழல்; இலை குழைகளின் உருமறைப்பிற்குள் வெட்டிவெட்டி முழிக்கும் கண்கள்; மெல்ல அசையும் ‘ஹெல்மட்’டுகள். கண்டுகொண்ட நவநீதன் நிதானிக்க, பார்த்துவிட்ட தளபதி சைகை செய்ய, தாசனின் துணைக்குழு காட்டுக்குள் இறங்க – மூர்க்கத்தனமான சண்டையைத் தொடங்கி வைத்தான் நவநீதன். எட்டித்தொடும் தூரத்திற்குள் இயந்திரத் துப்பாக்கிகளின் குமுறல்; எம்.16 சுடுகுழல் சிவக்க, எதிரிகளின் உச்சந் தலையைக் குறிவைத்தான் அந்த வீரன். இந்தியக் கொமாண்டோக்களின் முன்வரிசை அணியை, பதுங்கிய இடத்திலேயே அவன் பதுங்க வைத்தது, பிரமிப்பூட்டுகிற வேகம். முதலாவது ஆளைச் சுட்டதிலிருந்து, சண்டையை நடாத்தி துரத்தித் துரத்தி அடித்து, ஆயுதங்களை எடுத்து முடித்துவைத்து – எல்லாமே அவன் தான். ‘அதிரடியை முறியடித்து அதிரடித்தல்’ – படையியல் விஞ்ஞானத்தில் இதற்கு ‘Counter Ambush’ என்று பெயர். எங்கள் போராட்ட வரலாற்றில் இது ஒரு முக்கிய சம்பவம்; தளபதி பால்ராஜின் நெறிப்படுத்தலில் செய்வித்து முடித்தலன் நவநீதன். ஆனால், தினேசுக்கு இதயத்துக்கப் பக்கத்தில் வெடிகொழுவிக் கொண்டது. பீறிட்டுப் பாய்ந்த இரத்தத்திற்கு சாரத்தைக் கிழித்துக் கட்டுப்போட்டு, தடிமுறித்து ‘ஸ்ரெச்சர்’ கட்டித்தூக்க முற்பட்ட போதும், வேதனையின் முனகலோடு தினேஸ் மறுத்துவிட்டான். ஆசையோடு தளபதியின் கன்னங்களைத் தடவினான்; கூடவந்த தோழர்களின் நிலைமைகளை விசாரித்தான், பெற்றெடுத்த ஆயுதங்களைத் தொட்டுப் பார்த்துப் பூரித்தான், எங்கள் ‘டடி’ முகாமில் – மற்றத் தோழர்களுக்குப் பக்கத்தில் தான் தன்னையும் புதைக்குமாறு வேண்டியவன். முனகி, முனகி மெல்ல அடங்கி எல்லோரையும் பார்த்து விழிகளை மூடிய போது, வெற்றியின் ஆயுதங்களைக்காட்டி அதற்கு வித்தாகிப் போனவனை வழியனுப்பி வைத்துவிட்டு, நவநீதன் இறுகிப் போய் நின்றான். வரலாற்றில் பொறிக்கப்பட்ட மாங்குளம் முகாம் தகர்ப்பு – தமிழீழத்தின் நெஞ்சத்தின் மீது குந்தியிருந்த பக்கத்து நாட்டுப் படைகளைக் குடியெழுப்ப நிகழ்த்தப்பட்ட தாக்குதல். இரண்டாவது தடவையாகவும் – நிச்சயமாக இறுதியானது என முடிவு செய்யப்பட்ட சமர். முதல் நாள் நள்ளிரவுக்குச் சற்று முன்னர் ஆரம்பித்த சண்டை, மறுநாள் விடிந்து மதியமாகியும் நடந்து கொண்டிருந்தது. தென்முனை முற்றாகவே எதிரிக்குச் சாதகமான பிரதேசம். அது வயல்வெளி; அங்கு அவனது கைதான் ஓங்கியது. கூடுதலாக இழப்பைச் சந்தித்ததால், எங்கள் தாக்குதலணி காலையிலேயே பின்னால் எடுக்கப்பட்டு விட்டது. தென்முனை வழியான தாக்குதல் நிறுத்தப்பட்டு விட்டது. வடமுனையில் தனது முழுச் சக்தியையும் பிரயோகித்து எதிரி தடுத்து நின்றும், அவனது அரண்களையும், மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய புலிகளின் அணி, பிரதான முகாமிற்கு அருகில், ‘ஹெலி’ இறங்கு தளத்தில் – கடும் எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எதிரிஇ தனது பலமான அரணொன்றிலிருந்து மூர்க்கத்தனமாக மோதினான்; தனது முழுப் பலத்தையும் திரட்டிச் சண்டையிட்டான். ஏனெனில் ‘ஹெலி’ இறங்கு தளம் யாருடைய கைக்குப் போகின்றதோ அந்தப்பக்கம் தான் வெல்லும். அவனிடம் போய்விட்டால் உதவி எடுத்து புத்துயிர் பெற்று விடுவான்; எங்களிடம் வீழ்ந்து விட்டால் தனித்து விடப்பட்டு குற்றுயிர் ஆகிடுவான். எனவே எதிரி இறுதி முயற்சியாக மோதினான். உயிர் பிரிகின்ற நேரத்தில் ஒரு அசுர பலம் வருமாமேஇ அந்தப் பலம் கொண்டு தாக்கினான். சண்டை உக்கிரமடைய அடைய, எங்கள் தாக்குதலணி பலவீனப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் கைவிட முடியாது; ஹெலித்தளத்தை விட்டுச் சற்றுப் பின்னால் வந்தால் கூட, நாங்கள் தோல்வியடைந்ததற்குச் சமம். எதிரி நிலத்தோடு மட்டுமே மோதினான்; நாங்களோ வானத்தோடும் மோத வேண்டியிருந்தது. நேரம் நீள நீள எங்கள் கை சோர்ந்து கொண்டு போனது. அவனா? நாங்களா? என்ற நிலை. சண்டையை நடத்திக் கொண்டிருந்த தளபதி, நிலைமையின் இக்கட்டைப் பிரதான கட்டளையகத்துக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தான். கைவிடமுடியாது; ஏற்கெனவே இந்த முகாமை அழிப்பதற்காக நாங்கள் செலுத்திவிட்ட விலை பெறுமதியானது; திரும்பவும் ஒரு தடவை அற்புதமான உயிர்களைக் கொடுக்க முடியாது. துவங்கியதோடு அடித்துடைத்து முடித்து விட வேண்டும்; இனி விட இயலாது. கடைசி வழிமுறை ஒன்றைக் கையாள கட்டளைப்பீடம் முடிவு செய்தது. கைவசம் வைத்திருந்த, தேர்ச்சி பெற்ற வீரர்களைக் கொண்ட மேலதிக தாக்குதலணி ஒன்றை – நுட்பமான ஒரு தந்திரோபாயத்தோடு பிரயோகித்து ஒரு இறுதி எத்தனிப்பைச் செய்வதே அது. அவனா? நாங்களா? என்ற எதிர்பார்ப்புக்கு விடை தரப்போகும் அடி; அந்த வரலாற்றுத் தாக்குதலின் வெற்றியை நிர்ணயிக்கப் போகிற அதிரடி. இதன் முக்கியத்துவம் முக்கியமானது. ஹெலித்தளத்தில் சண்டையிடும் எதிரியை கிழக்குத் திசை வழியாக மேலால் மேவி வளைத்து, அவனை வலது பக்கத்தால் நெருங்கி, அறைந்து நொருக்க வேண்டும். வான் ஆதிக்கத்தைத் தனது கையில் வைத்திருப்பவனின் கண்களுக்கு மண் தூவி – நில ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போரிடுகின்றவனின் பார்வையில் பட்டுவிடாமல் – அவனை அண்மிப்பது என்பது, அந்த உச்சி வெயில் பகலில் ஒரு இமாலயக் காரியம். எதிரியை எதிர்கொள்ளும் நேரம் வiர் தன்னைச் சேதப்பட்டு விடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்த அணிக்கு உண்டு; தோல்வியைத் தழுவும் நிலையிலிருந்து அந்தத் தாக்குதலை மீட்க வேண்டிய பொறுப்பும் அதற்குத்தான் உண்டு. எனவேஇ அந்தச் சிக்கலான சூழ்நிலையிலும் சரியான முறையில் நகர்த்திச் சென்று சரியான நேரத்தில் – சரியான இடத்தில் – தாக்குதலைத் தொடுத்து, அந்த அணியை வழிநடாத்தக்கூடிய திறமை அதன் கொமாண்டருக்கு இருக்க வேண்டும். அணியின் தளபதியாக நகரத் துவங்கியவன் நவநீதன். தாக்கிக் கொண்டிருந்த எமதணி தளர்ந்துகொண்டிருந்த வேளை, அனுப்பி வைத்த தளபதி காத்திருந்த நேரம், என்ன முடிவோ என நாங்கள் ஏங்கி நின்ற பொழுது – மூர்க்கங்கொன்ட புலிகளாய் பாய்ந்தனர் வீரர்கள். ஆக்ரோசமான தாக்குதல் தடைகளை உடைத்து, தானை சிதைந்து, பகைவன் சின்னாபின்னமாகிப் போக – புதிய தெம்புடனும், புதிய வேகத்துடனும் பிரதான முகாமைக் குறிவைத்தனர் புலிகள். எங்கள் கதாநாயகனுக்கு வெடி; இடுப்பு எலும்பை நொருக்கிச் சென்று விட்டது சன்னம். காலுக்கு மணல் மூடை கட்டித் தொங்க விட்டு, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் படுத்தருந்து, “இந்தச் சுமையின் வேதனையை விட, மாங்குளத்தை வென்றதே மனதுக்கு மகிழ்வு” என்றவன் 7 மாதங்களுக்குப் பிறகு எழுந்து நடக்கத் துவங்கிய போது, இடதுகாலில் ஒரு அங்குலம் கட்டையாகிப் போயிருந்தது. முல்லைத்தீவில் ஒரு படையெடுப்பு – நவநீதன் அப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தளபதி; லெப்ரினன்ட் கேணல் நரேசுக்குத் துணைவனாய் நின்று, நிர்வாக வேலைகளை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்தான். தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்காக தளபதி தீபனும், நரேசும் எமது படையணிகளை எடுத்து வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றிருந்த வேளை, ‘சத்பல’ என்று பெயர் சூட்டிக்கொண்டு முல்லைத்தீவிலிருந்து படையெடுத்தான் எதிரி; ஆயிரக்கணக்கான துருப்புக்கள், யுத்த வானூர்திகள் பலம் சேர்க்க பெருமெடுப்பில் முன்னேறத் துவங்கினர். ஆனால் காவலரணில் இருந்ததோ சண்டைக்குத் தேர்ச்சி பெறாத போராளிகள். சண்டை செய்யக்கூடியவர்கள் என்று எவருமே இல்லை. இருந்தவர்களைத் தான் பொறுக்கி எடுத்து அனுப்பியாகி விட்டதே. இருப்பவர்கள் சண்டைக்கு அனுபவப்படாதவர்கள் புதியவர்கள். அவர்களை வைத்துக் கொண்டு எதிரி முகாமின் வாசலிலேயே களத்தைத் திறந்தான் நவநீதன். ஒரு முழுநாள் – ‘நவநீதன் சண்டையைச் செய்வித்தான்’ என்பதைவிட, ‘நவநீதன் தான் சண்டை செய்தான்’ என்றுதான் சொல்ல வேண்டும். திரண்டு நகர்ந்த அந்நியச் சேனையை திறமையுடனும் – துணிவுடனும் தடுத்துத் தாமதப்படுத்தினான் அந்தப் போர்வீரன். மறுநாள் எமது படைப்பிரிவுகள் வந்து சேருகின்ற போது, தந்திரமாகச் சண்டையிட்டு, திரண்டு நதர்ந்த பகைவர்களை அவன் தடுமாற வைத்திருந்தான். அந்த முதல் நாள் சண்டையில் தங்களில் 6 பேர் கொல்லப்பட்டதாக சிறீலங்கா வானொலி அறிவித்தது. “இனியாவது என்ர பொடியனை வீட்ட விடுவியளே?” என்று கேட்காத, கேட்க நினையாத – “எப்ப தம்பி எங்களுக்கு சுதந்திரம் எடுத்துத் தரப்போறியள்?” என்று மட்டும் மனதார ஆதங்கப்படுகின்ற – ஒரு தமிழன்னையின் மடியில், அந்தப் பூ முகையவிழ்த்தது. அது – 1969 ஆம் ஆண்டு, கார்த்திகை 12 ஆம் நாள். திருலோகநாதன் என்று திருநாமம் சூட்டினார்கள். “குவா……குவா……!” சத்தத்தோடுஇ அந்தக் குழந்தை – தவழ்ந்து, உருண்டு, மண்ணளைந்து, தத்தித் தடுமாறி எழுந்து நடக்கத் துவங்கிய அந்த ஓலைக்குடிசையில், அவனுக்கு முன்னமே ஏழ்மை பிறந்து விட்டது. நிரந்தரத் தொழில் இல்லை. நிலபுலங்கள் எதுவும் இல்லை. இரண்டு நேரம் சாப்பிடக்கூட வழியில்லை; வறுமை கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தவன், 7ஆம் வகுப்போடு – குடும்பத்தின் ஏழ்மைச் சிலுவைக்குத் தோள் கொடுக்க, வீட்டில் நின்று கொண்டான். இருந்தாற்போல் ஒருநாள் – திடீரென அப்பா தில்லையம்பலத்தார் மீளாத் துயில் கொண்டுவிட்ட போது, துன்பமும் ஏழ்மையும் சேர்ந்து அழுத்திய பெருஞ்சுமைக்குள் அந்தக் குடும்பம் சிக்குண்டது; வதங்கியது இத்தகைய – துயர்படிந்த ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து, அவன் போராட்டததுக்கு வந்த போது, அவனுக்கு 16 வயது. தளபதி பசீலனின் அரவணைப்பில் அந்தச் சின்னப் போராளி வளரத் துவங்கினான். அவனுக்குப் போர் ஆசானாகி நின்ற, அவனது போராட்ட வாழ்வின் ஆரம்பத்தை வழிப்படுத்தி விட்ட குருஇ அவர்தான். துப்பாக்கிகள் தந்து, சிறந்த வீரர்களுக்கு நிகரானவனாகச் சுடப்பழக்கி, பயிற்சிகள் வழங்கி – அந்தச் சின்ன வயதிலேயே, நவநீதனுக்குள் மாபெரும் வீரத் தன்மைக்கு வித்திட்ட பெருமை, பசீலனையே சாரும். தளபதி பசீலின் மெய்ப்பாதுகாவலனாக, ‘எம் 16’ உடன் கூடத்திரிந்த நாட்கள், அவனுக்குள் ஆரம்பித்த நினைவுகள்; அந்தக் காலத்தில் அவர் சொல்லித் தந்த சண்டை முறைகள்; மறத்தலற்ற மனப்பாடங்கள். நவநீதன் பகைவரைச் சந்தித்த முதற்களம் என்று குறிப்பிடக்கூடியது, முந்திரிகைக்குளம் தாக்குதல். மணலாற்றில் சிங்களக் குடியேற்றதுக்கு விழுந்த பலமான முதல் அடி அது. அந்தப் பெரு வெற்றியைப் பெற்றத் தந்தவன் பசீலன். அப்போது – ‘கென்ற்’, ‘டொலர்’ பண்ணைகளில் மட்டுமே தொற்றியிருந்த அந்த விசக்கிருமிகள் பல்கிப் பெருகி மணலாற்றில் படரத் துவங்கிய பிரதான அசைவுப் பாதையை, பதவியாவிலிருந்து மேற்குக் கரை நோக்கி காட்டினூடு அமைத்துக் கொண்டிருந்த இராணவ அணியே தாக்கப்பட்டது. வியூகம் அமைத்து நின்று, தளபதி பசீலன் தாக்குதலை நடாத்திய போது – அவரது நிழலாக நின்று பொறி கக்கினான் நவநீதன். கொல்லப்பட்ட 20 வரையான படையினரில் சிலரது உடல்களில், அந்தச் சின்ன வீரனது துப்பாக்கி தான் கோலம் போட்டதாம்…… சண்டை முடிந்தபோது புலிகள் இயக்கத்தின் ஆயுத இருப்பில் 12, ‘ரி 56’ கள் கூடியிருந்தன் சிங்களக் குடியேற்றத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன்இ திட்டத்தின் அந்த பிரதான அசைவுப் பாதை, நிரந்தரமாகவே கைவிடப்பட்டது. இந்தியப் போர் ஆரம்பித்த போது – இந்தியப் படையின் ‘புகழ்பெற்ற யாழ்ப்பாணச் சமரில்’, கோப்பாய்ச் சண்டை எமது முல்லைத்தீவு மாவட்டப் படையணியால் எதிர்கொள்ளப்பட்டது. தளபதி பசீலனின் அந்த அணியில் நவநீதனும் களத்தில் நின்றான். இந்தியர்களின் இரண்டு ‘B.M.P ராங்க்’குகள் நொருக்கப்பட்டதுடன், அங்குலமும் அசையாமல் தடுத்துநிறுத்தப்பட்ட அந்த நாட்கணக்கான சண்டையில் சொல்லிக் காட்டக்கூடியளவு திறமையுடன் நவநீதன் போரிட்டான். கோப்பாயில் சண்டையை முடித்துக் கொண்டு திரும்பிய படையணி, முல்லைத்தீவில் போர் அரங்கைத் திரைநீக்கம் செய்த போது – துயரம்! கொடுந்துயரம்; முல்லைத்தீவில் ஒரு சண்டைக் களத்தில், மாபெரும் வீரன் பசீலன் வீழ்ந்து போனான்; முல்லை மண் துடித்தது. அதன் மடியில் பிறந்த குழந்தை அவன்; அந்த மண்ணின் வரலாற்றில் பொறிக்கப்பட்ட தளபதி அவன். நவநீதன் கலங்கினான்; கதறினான்; அவனால் தாங்க முடியவில்லை. அடிபட்ட நாகமாய் அலையத் துவங்கினர் புலிகள். பதிலடி கொடுக்கப் பகலிரவாய்த் திரிந்தவர்களிடம் வசமாகச் சிக்கியது ஒரு இந்திய அணி – பசீலனை எம்மிடமிருந்து பிரித்தது இதே அணிதான் என்பது முக்கியமானது – தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால், தளபதி பால்ராஜின் தலைமையில் எம் இரண்டு அணிகள். ஒன்றுக்குக் கொமாண்டர் போர்க்; அடுத்ததுக்கு நவநீதன். மூர்கத்தனமான சண்டை. நவநீதனின் நெஞ்சுக்குள் பசீலண்ணனின் நினைவுகள் கனன்றன. பகைவர்களை நெருப்பெனச் சுட்டெரித்தான் அந்த வீரன். இந்தியரின் முதலாவது குழு தாக்கியழிக்கப்பட்ட பின்னர், மீட்கவந்த அடுத்த குழு தாக்கப்பட்டது. 25 பேரளவில் கொல்லப்பட்ட சண்டையில், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இரண்டு பிறண் எல்.எம்.ஜிகள். இந்தியர்கள் ‘ஒப்பரேசன் செக் மேற்’றை நடாத்திக் கொண்டிருந்தார்கள். பெரும் போர்களைக் கண்ட உலகின் 4வது பெரிய தரைப்படையின் 30,000 துருப்புக்கள் எங்கள் விடுதலைப் போராட்டத்தின் மையக் கருவைக் கிள்ளியெறிய நகர்த்தப்பட்ட வரலாற்றுச் சமர், பிரசித்திபெற்ற மணலாற்றுப் படையெடுப்பு. குமுழமுனை மலைமுகாம் என்ற இந்தியத் தளம் தான் ‘செக்மேற்’றின் மையம்; கட்டளைப்பீடம்; உயர் தளபதிகள் தங்கியிருந்து ‘பிரபாகரனைக் கொல்லும்’ போரை நெறிப்படுத்திய தலைமையகம். இந்த முகாமில் ஒரு தாக்குதலைச் செய்வதன் மூலம், ‘செக்மேற்’றுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்கவும், இந்தியரின் கவனத்தைத் திசைதிருப்பவும் திட்டமிடப்பட்டது. ஒரு புலர்வுப் பொழுதில், அந்த முகாமின் தலைவாசலைத் தாக்கினர் புலிகள். மேஜர் கிண்ணிக்குத் துணைக் கொமாண்டராய்ச் சென்று வெற்றியைப் பெற்று வந்தவன் நவநீதன். எதிர்பாராத மையத்தில் விழுந்த அதிரடி – புலிகள் கொடுத்த நெற்றியடி. இந்தியத் தளபதிகள் குழம்பிப் போயினர். செய்வதறியாது திகைத்தனர். படை நகர்த்தும் பீடத்தைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு ‘செக்மேற்’ நிறுத்தப்பட்டது. தங்கள் இலக்கு மீது இந்தியர்கள் கொடுத்த நெருக்கடி தளர்ந்தது. இந்த வெற்றியில் நவநீதனுக்குப் பெரும் பங்குண்டு. நவநீதனைப் பற்றிச் சொல்வதானால் – சண்டையில் தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடர வேண்டும்; சண்டையொன்றில் முடிக்க வேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். போர் தான் அவனுடைய ‘தனிச் சிறப்புக் கலை’ போரில் தான் அவன் ‘துறைசார் வல்லுனன்’. எங்கள் இயக்கத்தில் தலைசிறந்த சண்டை வீரர்கள் என்று தேர்ந்தெடுத்தால்இ நவநீதன் தவறமாட்டான். எதிரிகளை எதிர்கொள்ளும் வேளைகளில் எல்லோரையும் மேவி முன்னால் நின்று – அவனுடைய துப்பாக்கி தீ உமிழும். கணப்பொழுதுக்குள் எதிரியின் மூச்சுப்படும் தூரத்துக்கு நெருங்கி, அவன் சுழன்றடித்துச் சுட்டு வீழ்த்தும் லாவகம் – மெய் சிலிர்க்க வைக்கும்.(verkal.net) அவனொரு ‘Quick Gunner’ – ‘மின்னல் வேகத் துப்பாக்கி வீரன்;.’ போர்களங்களில், எதிரி காணும் முன் எதிரியைக்கண்டு துப்பாக்கியை புயலின் வேகத்தில் இயக்குவான். அந்த வேகத்திலும், குறி பிசகாமல், நிதானமாகக்குறி வைக்கும் வல்லமை, அவனது தனி ஆற்றல். அவனது சண்டைகள் பார்ப்பவர்களை வியக்கவைக்கும்; சண்டை தெரிந்தவர்களைக் கூட ஆச்சரியப்படுத்தும். சமர்க்களங்களின் நடுவில் சிக்கலான சூழ்நிலைகள் பிறக்கும் போது, மதிநுட்பம் வாய்ந்த விதமாக முடிவெடுத்து – எச்சரிக்கையாகவும்,, அவதானமாகவும் செயற்பட்டு – இடையூறுகளை வெற்றிகரமாகச் சமாளித்து விடும் திறமை மிக்கவன் அந்தத் தளபதி. போர் வீரர்கள் இரண்டு வகையானவர்களாகக் காணப்படுவார்கள். ஒருவகை – குழுச்சண்டை வீரர்கள.; அடுத்தவகை தனிச் சண்டை வீரர்கள். குழுச்சண்டையானது படையாட்கள் எல்லோருக்கும் பொதுவானது. யுத்தப் பயிற்சி பெற்ற எல்லோருமே செய்யக்கூடியது. ஆனால் தனிச்சண்டை அப்படியானதல்ல் அதற்குத் தனித்தன்மையான நிபுணத்துவம் தேவை. குறிப்பிட்ட சிலர் தான் அதில் வல்லவர்களாக இருப்பார்கள். நவநீதன் ஒரு தனிச் சண்டைக்காரன். நூற்றுக்கணக்கான வீரர்களைக் கொண்ட ஒரு சேனையை தனித்து நின்று எதிர்கொள்ளக்கூடிய மனத்துணிவும், புத்திக் கூர்மையும் செயற்திறனும் அவனிடம் உண்டு. போரன்றி வேறேதும் நினையாத புலிவீரன் அவன். பயிற்சியைப் பற்றியும், வேவைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும், சண்டையைப் பற்றியுமே அவன் பேசிக்கொண்டிருப்பான். தூக்கத்தில் வருகின்ற கனவுகள் கூட அவனுக்குக் கள நிகழ்வுகளாகத்தான் இருந்திருக்கும். எல்லாப் போராளிகளுமே அவனோடு சண்டைக்களத்துக்குப் போக விருப்பப்படுவார்கள். அவர்களுக்கொல்லாம் அவன் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இயக்கத்தின் உயர் தளபதிகளினதும் அதீத நம்பிக்கைக்குப் பாத்திரமான போராளியாக அவன் திகழ்ந்தான். தனது செயல்களாலே அவன் வளர்த்துக் கொண்ட நம்பிக்கை அது. ஆம், செயலால் மட்டும். சமர் அரங்கொன்றின் பின் முனையிலிருந்து நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கும் கட்டளைத் தளபதி. சண்டை சிக்கல்படுகின்ற சில சூழ்நிலைகளில், “இந்த நேரத்தில் எப்படிச் செய்ய வேண்டும்” என நினைக்கின்றாரோ, சண்டையின் முன் முனையில் வழிநடாத்தும் நவநீதன் அப்படியே செய்து முடிப்பான். அந்தளவுக்கு போர் பற்றிய அறிவை – ஞானத்தை – அவன் பெற்றிருந்தான். கட்டையாகிப்போன காலைப் பற்றி அவன் கருத்திலெடுப்பதேயில்லை. சண்டைகளில் அவன் முன்னுக்கு ஓடித்திரிந்து தாக்கும் போதும், தாக்குதலுக்காக நாங்கள் நீண்ட தூரத்திற்குச் செல்ல வேண்டுமானாலும் – மனஞ்சோராமல் உற்சாகத்தோடு நடக்கும் போதும், அவன் தனது மனவுறுதியைக் காட்டுவான்; அது வியப்பைத் தரும். நவநீதன் அன்பானவன். மிக அமைதியானவன். மென்மையான சுபாவத்தைக் கொண்டவன். “நவநீதன் பேசிப்போட்டான்” என்று, யாருமே சொல்லாத அளவுக்குப் பண்பானவன். அவன் அதிகம் கதைக்கமாட்டான் – இடைக்கிடை பகிடி சொல்லுவான்; மற்றவர்களது மனங்களை நோக வைக்காமல், எப்போதாவது யாரையும் கிண்டல் செய்வான் அவ்வளவோடு சரி. நிர்வாக வேலைகளைச் செய்யும் போது வளைந்துகொடுத்து எல்லோரையும் சமாளித்து, விடயங்களை ஒப்பேற்றி விடுகின்ற திறமையைக் கொண்டவன். எல்லா வகையான மனப்போக்கு உடையவர்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக நடந்து கொள்ளும் பக்குவம் மிக்கவன். எப்போதும் ஒரு அப்பாவித் தனம் அவனது விழிகளில் மிதக்கும். எப்போதும், ஒரு குழந்தைத் தனம் அவனது முகத்தில் குடியிருக்கும். எங்கள் நெஞ்சுக்குள் பொந்து அமைத்து வாழ்ந்த மாடப்புறா அவன். பகைவர்களுக்கு முன்னால் யுத்தசன்னத்தனாகி நெருப்பென நிற்கும் அந்த வீரன், எங்களுக்குள் – பனிநீராய்ப் படர்ந்து குளிர்மையாக வருடுகின்ற நண்பன். எவ்வளவு ஆற்றல்கள் அவனுக்குள் குவிந்து கிடந்தன! எத்துணை திறமைகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக அவன் உலா வந்தான்! ஆனாலும் அவன் வெளியில் மிளிராத போர் வீரன்; தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்ள விரும்பாத விடுதலைப் புலி. இலைமறைகாயாக இருந்து, பிரளயங்களைப் படைத்துக் கொண்டிருந்த பிரபாகரனின் பிள்ளை. இறுதிக்காலத்தில் சண்டைகளுக்குப் பின்னாலேயே அவன் வைத்திருக்கப்பட்டான். ஏற்கெனவே ஏராளமான சண்டைகளுக்குள் நின்றவன்; மாங்குளத்தில் வெடி வாங்கி காலைச் சின்னதாக்கிக் கொண்டவன். சண்டைகளில், அவன் பயன்படுத்துவதை விட, அவன் பட்டறிந்து பெற்றிருக்கும் அனுபவம் மிகுந்த பயன்பாட்டைத் தரும். எனவே தான், இயக்கத்திற்காகவும் அவனுக்காகவும் சமர்களில் பின்முனையிலேயே அவன் வைத்திருக்கப்படுவான். ஆனாலும், பின்னுக்கே நின்று ஒழுங்குகளைச் செய்து கொண்டிருப்பவன், சண்டை வெடித்த அடுத்த நிமிடங்களில் முன்னுக்கே தான் போய்விடுவான். புலோப்பளைச் சண்டையைப் பாருங்கள். அதில் அவன் பங்கு முக்கியமானது; குறிப்பிடத்தக்கது. பூநகரிக்குப் படையெடுக்க நாங்கள் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த போதுதான், எதிரியானவன் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்தான். ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து ஆரவாரமான ஏற்பாடுகளுடன் ‘யாழ்தேவி’ புறப்பட்டவுடனேயே நவநீதனது குழுதான் அங்க அனுப்பப்பட்டது. பகைவர் சேனைக்கு வாசலிலேயே வரவேற்புக்கொடுக்க அல்ல் அவர்களின் அசைவுகளை அவதானித்துத் தகவல் சொல்ல மட்டும். ஒரு படையெடுப்பை முறியடிக்க முனையும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் போர் வியூகமாகும். எமது படைவீரர்களை சரியானதோர் வியூகமைத்து நிறுத்தி வைக்கும் போதுதான், எதிரிப்படையை அதற்குள் தப்பும் வழியற்றுச் சிக்கவைத்துத் தாக்கி அழிக்க முடியும். அவ்வளவு நேர்த்தியாக வியூகம் அமைக்க வேண்டுமானால், எதிரியின் நகர்வு பற்றி மிகத் துல்லியமாக தகவல்கள் தேவை. படையினரின் தொகை என்ன? ஆயுத – படைக்கல வகைகள் என்னென்ன? படையூர்திகள் மற்றும் வசதிகள் எப்படி? என்ன ஒழுங்குமுறையைக் கையாண்டு எதிரி படை நகர்த்துகின்றான்? என்ற தரவுகள் எந்தப் பிசகுமின்றிக் கிடைக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் தான் – நாம் சிறந்ததொரு வியூகத்தை அமைத்து, நம்பிக்கையோடு காத்திருக்க முடியம். புலோப்பளையில் இந்தப் பணியைச் செய்து முடித்தவன் நவநீதன். நாங்கள் காவியம் படைத்த அந்தப் பெருஞ்சமரில், வெற்றி வாகை சூடக்கூடியவாறு, நுட்ப தந்திரோபாயமான போர் வியூகத்தை அமைக்க சரியான தகவல்களைத் தந்தது மட்டுமல்ல – இரவிரவாக நடந்து திரிந்து சண்டைக்கேற்ற ‘நிலை இடம்’ தேடுவதில் நவநீதன் தளபதிகளுக்கு உதவினான். எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்பும், மீண்டும் முன்னுக்கே சென்று இறுதிவரை எதிரியின் நகர்வுகளைப் பற்றிய தகவல்களைத் தந்து கொண்டிருந்தவனுக்கு, சண்டை தொடங்கியவுடன் பின்னுக்கு வந்துவிடுமாறுதான் சொல்லப்பட்டது. ஆனால், உரிய இடத்திற்குள் எதிரியின் படையணி வர, எமது முதலணியோடு களத்திலிறங்கிச் சமரை ஆரம்பித்தது அவன் தான். அடுத்தது தான் பூநகரிச் சமர் – புலிகள் இயக்கத்தின் போரிடும் சக்தியைப் பற்றி சர்வதேச செய்தி அலைவரிசைகளையெல்லாம் வியந்துரைக்க வைத்தது செருக்களம். அவலப்பட்ட மக்களுக்குப் பாதை திறக்கக் கேட்ட போது – அரசியல் பேரம் பேசி அகங்காரம் செய்தோர்க்கு உச்சந்தலையடி கொடுத்த போர் அரங்கு. அந்தக் கூட்டுத்தளத்தின், ‘வில்லடி’ கட்டளை முகாமைத் தாக்கும் பெரும் படையணிக்குள், உப குழுவொன்றுக்கு நவநீதன் தளபதி. ஒதுக்கப்பட்ட ஒரு காவலரண் தொகுதியைத் தாக்கி அழித்த பின் முகாமின் மையத்தைத் தாக்கும் பிரதான படைப்பிரிவுக்குத் துணைக்குழுவாக இறங்கவேண்டுமென்பது தான், அவனுக்குக் கொடுக்கப்பட்ட பணி. ‘வில்லடி’ முகாம் தான், கூட்டுத்தளத்தின் கட்டளை முகாம். அது மிகப் பலமானது. 91ஆம் ஆண்டு ஆளையிறவுத் தளத்தை நாம் வெற்றி கொள்ள முற்பட்ட போது அது இருந்ததைப்போல, ஏறக்குறைய அதேயளவு பலத்துடன் தான் இது இருந்தது. நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் சண்டை ஆரம்பித்தது. விடிந்த போது நவநீதனுக்கான காவலரண் தொகுதி தாக்கியழிக்கப்பட்டு விட்டது. ஆனால் கட்டளை முகாமில், ‘ராங்க்’குகளையும், பெருந்தொகை ஆயுதங்களையும் இழந்த எதிரி, சிறு பகுதியொன்றில் எஞ்சியிருந்தான். அர்த்தசாம இருளில் சிதறியோடிப்போன சிப்பாய்களும், விடிந்த பின் கட்டளை முகாமை நோக்கி ஓடிவர, திடீரென எதிரி அசுர பலம் பெற்றான். எதிரி, ‘அடுக்குமுறைப் பாதுகாப்பு முறையில்’, (Depth Defence System) ஒன்றன் பின் ஒன்றாக அமைத்திருந்த காவலரண்களைத் தகர்த்தெறிந்து கொண்டு, ‘கனரக மோட்டார் பீரங்கி’ உள்ள தளத்தை நோக்கி முன்னேறிய எமதணி அதனைக்கைப்பற்றும் போது, அணி பெருமளவில் சேதப்பட்டு விட்டது; பொழுதும் விடிந்து விட்டது. அந்த நேரத்திலேயே – துணைக் குழுக்களை அழைத்து பீரங்கிகளை அப்புறப்படுத்த முன்னர் – எதிரி புதுப்பலம் கொண்டு கடுமையாகத் தாக்கத் துவங்கினான். பீரங்கித் தளம் வெளியான தரையமைப்பைக் கொண்டது. முற்றாக அவனுக்குச் சாதகமான களம். அத்தோடு, திட்டமிட்ட ரீதியில் அமைக்கப்பட்ட சக்தி மிக்க அரண்களிலிருந்து எதிரி தாக்கி முன்னேறினான்; விடிந்துவேறுவிட்டது. வானூர்திகள் பார்த்துப் பார்த்துக் குண்டடித்தன. இரவுச் சண்டையிலேயே மிகுந்தளவில் பலவீனப்பட்டுப் போன எமதணி இயலுமானவரை போரிட்டது; ஆனால் ஏறக்குறைய அது முற்றாகவே சேதப்பட்டு விட்ட நிலையில், பீரங்கிகளை மீட்க முடியாமலேயே பின்வாங்க நேரிட்டது. கைப்பற்றப்பட்ட பீரங்கித் தளமும், பீரங்கிகளும் கைவிடப்பட்டு விட்டன. இப்போது பீரங்கித் தனம் நடுவில். அதன் பின்னால் எதிரிப்படை; முன்னால் புலிகள் படை. பீரங்கிகள் அநாதரவாகக் கிடந்தன – அவனுக்குப் பக்கத்தில், எங்களுக்கு எட்டத்தில். திரும்பவும் தாக்கி அவற்றைக் கைப்பற்றியே ஆக வேண்டும். ஆனால் பகலில்…….? அது முற்று முழுதாகவே பகைவனுக்குச் சாதகமான சூழ்நிலை. பெரும் இழப்பைக் கொடுத்து, மிகுந்த சிரமத்துடனேயே நாம் மோத வேண்டியிருக்கும். அப்படியானால் இரவு….? இல்லை; இருளும் வரை காத்திருக்க முடியாது. எதிரி மீண்டும் சுதாகரித்து, முழுப்பலத்தையும் திரட்டி முன்னேறி, பீரங்கிகளைத் திரும்ப கைப்பற்றிடக் கூடும். அதனால், அவனுக்கு அவகாசம் கொடுக்காமல் உடனடியாகத் தாக்கதலை நடாத்த வேண்டும். இது ஒரு சிக்கல் நிறைந்த களநிலைமை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நவநீதன் அழைக்கப்பட்டான்; அவன்தான் அதற்கு உரித்தானவன். தேர்ந்தெடுத்த வீரர்களைக் கொண்டு உடனடியாக ஒரு தாக்குதலணி தயார் செய்யப்பட்டது. அந்த அணியின் கொமாண்டராகி சண்டையைத் துவக்கினான் தளபதி. முரட்டுத்தனமான முன்னேற்றம். அது அவனுக்குப் பழக்கப்பட்ட வேகம். ‘பீரங்கிகள்’ – என்ற ஒரே உறுதியுடன் பாய்ந்தனர் வேங்கைகள். நிலைமையைப் புரிந்து கொண்ட எதிரி பலம் கொண்ட மட்டும் மோதினான்; தாக்குதலை முறியடிக்க தன் சக்திக்கு மீறிச் சண்டையிட்டான். இருந்தபோதும் – பீரங்கிகளை அடையும் வரை நவநீதன் சண்டையை நடாத்திச் சென்றான். எதிரியின் வெறித்தனமான தாக்குதலுக்கு மத்தியிலும் தளத்தைக் கைப்பற்றினர் புலிகள். பீரங்கிகள் இரண்டு. முதலாவதைக் கழற்றி எடுத்துப் பின்னுக்கு அனுப்பிவிட்ட போது – உற்சாகம் பொங்கியது. நெருப்பு மழைக்குள்ளும் இரண்டாவதைக் கழற்றிக் கொண்டிருந்த போது தான்……. அந்தத் துயரம் நடந்தது! எங்கள் கதாநாயகனுக்குப் பக்கத்தில்…… மிக அருகில்…… எதிரி ஏவிய மோட்டார் குண்டொன்று விழுந்து வெடித்தது… அவனை…… ஓ! அதை எப்படிச் சொல்ல……? எங்கள் கண்களுக்கு முன்னாலேயே எங்கள் நெஞ்சினிய நண்பன்…… கை…… கால்…… இடுப்பு…… நெஞ்சு…… முகம்…… எல்லாமே பிய்ந்து போய்…… தசைகள் தொங்கி…… இறைச்சியாய்…… ஓ! அதை எப்படி விபரிக்க…… இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்து கொண்டும் எங்கள் நவநீதன் கத்தினான்…… “மோட்டரை எடுங்கோடா……மோட்டரை விடாதேங்கோடா……” உயிரின் கடைத்துளி சிந்தும் போதும், சத்தமில்லாமல் அவனது வாய் அசைந்து கொண்டேயிருந்தது…… அது “மோட்டரை விடாதேங்கோடா……” என்ற கட்டளையாகத்தான் இருந்திருக்கும் அவன் சொல்லிவிட்டுப் போயி விட்டான். நாங்கள் விடவில்லை. கொண்டுதான் வந்தோம்! விடுதலைப்புலிகள் இதழ் (சித்திரை – 1994). https://www.thaarakam.com/news/0f92c17e-162b-44cf-8d03-fef8bcafd5be
  16. பிரான்சில் உணர்வடைந்த கேணல் பரிதி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! AdminNovember 8, 2021 பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 9 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று (08.11.2021) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பந்தன் கல்லறையில் பகல் 11.00 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு அரசின் கொரோனா சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கேணல் பரிதி அவர்களின் கல்லறைமீது தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்புச்செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன் அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச் சுடரினை கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைக்க கல்லறைக்கான மலர் மாலையினை கேணல் பரிதியில் துணைவியார் அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் வணக்கம் செய்தனர். தொடர்ந்து நினைவுரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு பாலசுந்தரம் அவர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்களும் ஆற்றியிருந்ததுடன் லாக்கூர்நோவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றுசெல் அவர்கள் கேணல் பரிதி அவர்களின் நினைவாக உணர்வோடு பிரெஞ்சுமொழியில் தகவல்களைப் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் கல்லறைவணக்க நிகழ்வு நிறைவடைந்தது. (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப் பிரிவு) http://www.errimalai.com/?p=68874

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.