Everything posted by கிருபன்
-
‘சோபியின் உலகம்’ – யொஸ்டையின் கார்டெர் – ஒரு பார்வை
‘சோபியின் உலகம்’ – யொஸ்டையின் கார்டெர் – ஒரு பார்வை — அகரன் — தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மிகச்சிறந்த அவசியமான ஒரு நாவல். மொழிபெயர்ப்பு நூல்கள் பொதுவாகவே ஒரு பேயைக் கண்ட பயத்தைத் தருவதுண்டு. ஆனால் இந்நூல் ஒரு இனிமையான அனுபவம். தேனில் கலந்து வேப்பெண்ணை மருந்து குடிப்பதுபோல.. நாவல் வடிவில் 15 வயது தொட்டு வாழ்வின் கதவுவரையுள்ளவர்கள் வாசிக்கக்கூடிய ‘உலக தத்துவவியலின்’ மிக எளிய அறிமுகம். உலக அளவில் 50 மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் தத்துவ மாணவர்களுக்கான பாடத்திட்டம் போன்று கருதப்படுகிறது. (உனக்கெப்படித்தெரியும்? ஒரு பிரஞ்சுக்காரர் ஒருவரிடமும் உறுதிப்படுத்தினேன். அவர் இதை வாசித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது) தமிழ் உலகில் இன்று பணம் சம்பாதிக்கும் பாடத்திட்டங்கள் நோய்போல் நீடிப்பதால் அடர்ந்த அறிவுத்தேடல்கள் அழிந்துகொண்டருப்பது அருவருக்கத்தக்க மனித நீட்சி. *** ஐ.நாவுக்காக லெபனானில் பணியாற்ற செல்ல இருந்த நோர்வே நாட்டு இராணுவ ஜெனரல் தன் மகளுக்கு ஒரு தத்துவப்புத்தகம் வாங்க புத்தகக்கடைக்குப் போகிறார். அங்கு தனது 14 வயது மகள் இந்த உலகை புரிந்துகொள்ளத்தக்க ஒரு தத்துவ நூலும் கிடைக்கவில்லை. லெபனானில் இருந்து தன் மகளுக்கு சோஃபி என்ற அவளது வயதுடைய கதாபாத்திரம் மூலம் விளக்குகிறார். இறுதியில் பணிமுடிந்து வீடு வரும்போது மகள் பள்ளியில் படிக்கவே முடியாத தத்துவங்களை தந்தை மூலம் கற்றுவிட்டிருக்கிறாள். இளம் பிள்ளைகளின் மனநிலையிலே நாவல் கேள்விகளால் நகர்கிறது. நாமும் சோஃபியின் உலகில் வாழ்ந்துவிடுகிறோம். *** இந்த உலகம், பூமி, வாழ்க்கை இவை எல்லாம் எப்படி வந்தன? என்ற கேள்வி ஒலிம்பிக்கில் யார் அதிகம் தங்கப்பதக்கம் வென்றார்கள்? என்பதைவிட முக்கியமானது. புராணக்கதைகள் தத்துவங்களை விதைத்தன. நம் சமூகம் மூடநம்பிக்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டது. ஸ்கண்டிநேவிய புராணக்கதைகளுக்கும் இந்திய புராணக்கதைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த பிரபஞ்சத்தின் தூசிபோன்ற ஒருகோளில் வாழும் உயிர்த்தூசியான மனிதன் யார்? எப்படி வந்தான்? ஏன் சாகின்றான்? ஆன்மாவின் முடிவிடம் எது? கடவுளைப் படைத்தது யார்? இந்த உயிர்க்கோள் நீளுமா? இன்று உயிர்கோளின் கிருமி (மனிதன்) அதையே சம்மட்டியால் அடிக்கிறான். அழிவு யார் கையில்? மனிதப் பரிணாமம் 4.6 கோடி வயதுப் பூமியில் எத்தனை காலம்? இப்படிக் கேள்விகளால் உலகின் 2500 வருடங்கள் சிந்தித்த தத்துவ மேதைகளின் பதில்களை இந்த நூல் உங்களுக்குத்தரும். 2500 ஆண்டுகளின் முன் வாழ்ந்த சாக்கிரட்டீஸ் தத்துவத்தின் முழு வரலாற்றுக்கும் புதிரான ஆளுமை. ‘’தனக்கு தெரியாது என்று எவனுக்குத் தெரிகிறதோ அவனே விவேகமானவன்’’ என்று நிரூபித்தவர். ஆனால் ஒரு சொல்கூட எழுதவில்லை. இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஜரோப்பிய தத்துவவியலின் அடிப்படையே அவர்தான். சாக்கிரட்டீஸ், யேசு இருவரும் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அவர்கள் காலத்தில். ஆனால் இன்று? இடைக்காலம் :- மதங்களை வைத்து மனிதரை பூச்சாண்டி காட்டிய காலம். மறுமலர்ச்சிக்காலம் :- தெய்கார்த், ஸ்பினோசா, லாக், கியூம், பார்க்கிலி, என்று முன்னர் கிரேக்கத் தத்துவவாதிகளின் பாதையில் தனித்தனியே தத்துவத்தை வளர்த்தெடுத்தனர். அறிவொளிக்காலம் :- காண்ட், ஹெகல், ரூசோ கீர்க்ககாட், மார்க்ஸ், டார்வின், ஃப்ராய்ட் என்று எண்ணற்ற தத்துவப் பேரரசர்களால் பூச்சாண்டிகள் மொத்தமும் விரட்டப்பட்டு அறிவின் கண்கொண்ட பார்வை பரவியது. ஐரோப்பாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மூன்று தேசங்களும் அறிவியலில் உச்சங்கொள்ள அறிவொளிக்கால தத்துவவாதிகளே காரணம். இன்றயகாலம் :- இயந்திரவியல், சூழலியலை படுகொலை செய்து ஆபத்தான உயிரியாக மனிதன் நிற்கிறான். உயிர்க்கோளத்திற்கு ஆபத்தில்லாத வாழ்வைக் கட்டமைக்க தத்துவ பேரறிஞனுக்கான தேவையில் நிற்கிறது 17000 அணுகுண்டுகளை வைத்திருக்கிற மனிதம். அந்த ஒப்பற்ற தத்துவத்தை நீங்களும் படைக்கலாம். நீங்கள் செவ்வாய்க்கு போவதைவிட முக்கியமானது தத்துவவியல். அவசரப்படாமல் அவசியம் சோஃபியின் உலகத்தை படியுங்கள். *** சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒஸ்லோ சென்றிருந்தேன். அந்த அமைதியும், அழகும் கொண்ட நகரில் ஒரு புத்தகக்கடையை கண்டேன். அழகாக இருந்தது. அங்கு தமிழ்ப்புத்தகம் இருக்காது என்பதை தெரிந்தும் அந்த அழகை அனுபவிக்க நுழைந்தேன். புத்தகங்கள் அழகிய இருக்கைகளில் வைத்திருந்தார்கள். அரச இருக்கைபோன்ற ஒன்றில் இந்த ‘சோபியின் உலகம்’ என்ற புத்தகம் இருந்தது. உள்ளே பார்த்தேன் ஒரு படமும் இல்லை. அந்தப் புத்தகத்தை தமிழில் வாசிக்க கிடைத்ததும் அதிசயம். அண்மைக்காலத்தில் உலகின் நல்ல படைப்புக்களை தமிழில் எந்த எதிர்பார்ப்புமற்று தமிழை மட்டும் வாசிக்கக்கூடிய என்னைப்போன்றவர்களுக்காக மொழிபெயர்ப்பவர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம்?. கடந்த ஆண்டு வெளியாகிய ’குமிழி‘யின் ஆசிரியர் திரு ரவி அவர்களே எளிய நடையில் ஒரு முழுமையான தத்துவ நூல் வெளியாகி இருக்கிறது என்றார். அந்த நூல் சென்னையில் இருந்து கொரோனாவின் அனுமதியுடன் வந்து சேர்ந்தபோதுதான் அது ஒஸ்லோவில் கையில் எடுத்துப்பார்த்துவிட்டு ‘வாய்ப்பே இல்லை’ என்று வைத்துவிட்டு வந்த நூல் என்பது தெரிந்தது. சில ஆழ்மனப்படிமங்கள் எப்படியும் சாத்தியமாகிவிடுமோ என்னவோ? « நான் ஒன்றைப் பார்த்தால் நம்புவேன் என்று வழக்கமாக மக்கள் சொல்வார்கள். ஆனால், பார்ப்பதையும் நீங்கள் நம்பாதீர்கள் » -கான்ற்- பகுத்தறிவும், கல்வி அறிவும் பரவலாக நடைமுறையில் வந்துவிட்டால் மனித குலம் மாபெரும் வளர்ச்சி அடையும். -அறிவொளிக்கால அறிஞர்கள்- https://arangamnews.com/?p=4692
-
தேசியத் தலைவர் கரங்களால் கைத்துப்பாக்கி பரிசாக பெற்றவர் -லெப் கேணல் கருணா..!
தேசியத் தலைவர் கரங்களால் கைத்துப்பாக்கி பரிசாக பெற்றவர் -லெப் கேணல் கருணா..! லெப் கேணல் கருணா நாகேந்திரம் நாகசுதாகர். வீரச்சாவு. 15.04.2009 சம்பவம்..புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது. இரண்டாம் கட்ட ஈழப் போரின் இலங்கை இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கெதிராக போராடினால்த் தான் தீர்வு என புறப்பட்டவர்களுள் ஒருவனாக கருணாவும் விடுதலைப் புலிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட கருணா மேலதிக பயிற்சிகள் மற்றும் வகுப்புகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்குச் செல்கிறான். அங்கு மாவீரரான லெப்.கேணல் நரேஸ் அவர்களின் தலைமையில் பயிற்சிகளில் மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய கருணா குறிப்பாக நீச்சலில் முன்னிலை வகித்தான். இவனது நீச்சல் உள்ள ஆர்வம் மற்றும் குறிப்பிட்டளவு தூரத்தை மிகவும் வேகமாக நீந்திக் கடந்ததை அவதானித்த சிறப்புத் தளபதி சூசை அவர்கள் இவனது சொந்த இடம் மயிலிட்டி என்பதால் இவனை காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் கடல் மற்றும் தரை வேவுக்காகச் அனுப்புகிறார். அங்கு சிறப்பாகச் செயற்பட்டு அனைவரினதும் பாராட்டைப் பெற்று வேவில் தனக்கான முத்திரையைப் பதிக்கிறான். குறிப்பாக முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி விரச்சாவடைந்த தாக்குதலில் கருணாவின் வேவுப்பங்கும் அளப்பரியது. அதனைத் தொடர்ந்து கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவிற்குள் உள்வாங்கப்பட்ட கருணா அங்கு கடற்புலிகளின் தளபதி கங்கைஅமரன் அவர்களிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றான். தொடர்ச்சியாக நீரடிநீச்சல் பிரிவில் இருந்த கருணா அங்கும் பயிற்சியில் இவன்காட்டிய ஆர்வத்தாலும் ஏனைய செயற்பாட்டில் இவனுக்கிருந்த ஈடுபாட்டாலும் வெளிநாடொன்றிலிருந்து ஆழ்கடல் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு வந்த வெளிநாட்டு பயிற்சியாளர்களால் வழங்கப்பட்ட பயிற்சியிலும் பங்குபற்றி தனக்கிருந்த திறமையை வெளிக்காட்டினான். அப்பயிற்சியில் இவனது செயற்பாட்டை நன்கு அவதானித்த அப்பயிற்சிப் பொறுப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளருமாக செயற்பட்ட சங்கரண்ணா இவனைப்பற்றி தலைவர் அவர்களிடமும் தெரியப்படுத்தினார். அதற்கமைவாக நீரடி நீச்சல் சம்பந்தமாக மேலதிக பயிற்சிக்காக வெளிநாடொன்றுக்கு சென்று அங்கு பயிற்சிகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பனான். இங்கு வந்து சிறிது காலத்தில் நீரடிநீச்சல் பிரிவுக்கு பொறுப்பாளனாக தான் வெளிநாட்டில் கற்றவைகளை சகபோராளிகளுக்கு சொல்லிக்கொடுத்து பலபோராளிகளை உருவாக்கினான். அதன் பின் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கிற பணியினை மேற்கொள்வதற்கான மன்னாருக்குச் சென்று ஒரு பகுதிக்கான பொறுப்பாளனாகச் சென்று ரோலரில் வரும் பொருட்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பாதுகாத்து சிறிய படகுகள் மூலம் இலுப்பைக்கடவைக்கு அனுப்பிவைத்தான். இவைகள் எழுதுவதற்க்கு இலகுவானதாக இருந்தாலும் இவர்கள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல. இப்படியாக செய்து கொண்டிருக்கையில் மாவீரரான லெப்.கேணல் கோகுலன் அவர்கள் வேறு பணிக்காக சென்றதால் கருணா மறுபடியும் நீரடிநீச்சல் பிரிவுப் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகிறான். அத்தோடு புதிய போராளிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி ஆசிரியராகவும் செவ்வனவே செயற்பட்டான். கருணாவின் செயற்பாட்டை அவதானித்த தலைவர் அவர்கள் கருணாவிற்க்கு கைத்துப்பாக்கியை தனது கரங்களால் வழங்கி மதிப்பளித்தார். இக் காலப்பகுதியில் சில சிறப்புத் தளபதியின் பாதுகாப்புப்பிரிவிலும் நின்றான். அத்தோடு மட்டுமல்லாமல் கடற்தாக்குதலனியின் ஒத்திகைப் பயிற்சிகளில் தானும் தன்னோடு உள்ள சகபோராளிகளையும் பங்குபற்றி அப்படையணிகளுடனும் இணைந்து செயற்பட்டதோடு அப்படையணியுடன் இணைந்து விநியோக மற்றும் கடற்சமர்களிலும் ஈடுபட்டான். அதன் ஒரு கட்டமாக கிழக்குமாகாண விநியோகமும் இப்படையணிக்கு சிறப்புத் தளபதியால் வழங்கப்பட்டதோடு சிறிய சண்டைப் படகுத் தொகுதியும் வழங்கப்படுகிறது. கருணா தலைமையிலான இவ் அணி கடலில் ஒருதாக்குதல் நடாத்த தேடித்திரிந்த பொழுது தான் மன்னாா் பேசாலையில் கடற்படையின் படகுத் தொகுதி ரோந்தில் செல்வது தெரியவர அதற்கான வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரு வலிந்த தாக்குதல் அக் கடற்படையினருக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது. இவ்வெற்றிகரத் தாக்குதலில் பத்தொன்பது சிறிலங்காக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் பகலிலே இடம்பெற்றதுடன் இப் படையணியினரின் முதலாவது தாக்குதலுமாகும். இத் தாக்குதலின் வெவற்றிக்காக தலைவர் அவர்களால் கருணாவிற்க்கு ஒரு டபிள்கப் வாகனம்பரிசாக வழங்கப்பட்டது. இத் தாக்குதல் கடலில் நீண்ட அனுபவம் கொண்ட மாவீரரான லெப் கேணல் எழிற்கண்ணன் அவர்களின் பங்கும் முக்கியமானது. அதன் பின்னர் லெப் கேணல் டேவிற் படையணிப் பொறுப்பாளனாக மன்னார் கொக்குப்படையானுக்குச் சென்றான். அங்கு தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற பணியான கப்பலிலிருந்து ரோலர் மூலம் வரும் பொருட்களை பாதுகாத்து பின்னர் பாதுகாப்பாக மன்னார் சுட்டபிட்டிக்கு அனுப்புவதாகும். இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில் கொக்குப்படையானும் அதனை அண்டிய பகுதிகளும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. இருந்தாலும் எவ்வித இழப்புகளுமின்றி சாதுர்யமாக செயற்பட்டு படைக்காவலரன்களைத் தாக்கியழித்து அம்முற்றுகையிலிருந்து அணிகளுடன் வெளியேறினான். அதன் பின்னர் பழையபடி சண்டைப்படகுகளின் தொகுதிக் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு விநியோகப்பாதுகாப்பு மற்றும் வலிந்த தாக்குதலிலும் தனக்கான முத்திரையைப் பதிக்கிறான். அதனைத் தொடர்ந்து நாகர்கோவில் களமுனைக் தளபதியாக நியமிக்கப்பட்டு செவ்வனவே பணியாற்றிக்கொண்டிருந்தவேளையில் மணலாற்று கட்டளைப் பணியத்தின் கடற்கரையோரம் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டபோது இவன் தனது அணியினருடன் அங்கு சென்றான். அங்கு காவலரன்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது இராணுவத்தின் குறிசூட்டுத் தாக்குதலில் மயிரிழையில் தபபினான். தொடர்ந்தும் களமுனையில் நின்றாலும் தென் தமிழீழத்திற்கான விநியோக நடவடிக்கையிலும் பங்குபற்றத் தவறவில்லை. இப்படியாக பல்வேறு துறைகளில் பல் வேறுபட்ட இடங்களில் பெரும் இக்கட்டான இராணுவப் பிரதேசங்களில் நின்றவன். பெரும் சவாலான வேலை என்றாலும் அதைச் செய்துமுடிக்கிற ஆர்வம் தலைமையில் வைத்த பற்று எந்தப் புறச்சூழலிலும் இயக்கக் கட்டுப்பாட்டை மீறாத பண்பு மாவீரர்களை நேசித்த விதம் போராளிகளைக் கையாள்கிற விதம், கட்டளைகளுக்கேற்ப செயற்படுகிற வேகம், சக போராளிகளுடன் பழகுகிற விதம் . இப்படியானவன் திருகோணமலைக்கு விநியோக நடவடிக்குச் சென்று சேர்க்க வேண்டியவைகளைச் சேர்த்துவிட்டு வரும்போது சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலில் 15.04.2009 அன்று வீரச்சாவடைகிறான். -.சு.குணா https://www.thaarakam.com/news/241ebedd-12eb-4f74-b3c5-1261c41429ff
-
கேணல் கீதன் மாஸ்ரர் அவர்களின் 12ம் ஆண்டு நினைவில் - கீதனுடன் ஒரு உரையாடல் .!
கேணல் கீதன் மாஸ்ரர் அவர்களின் 12ம் ஆண்டு நினைவில் - கீதனுடன் ஒரு உரையாடல் .! கேணல் கீதன் மாஸ்டர் இந்த இடத்தில் இந்த போராளியைப் பற்றி கூறியே ஆகவேண்டும். எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தனது குடும்பம் வெளிநாட்டில் வசித்தாலும் தமிழீழ விடுதலையை தன் உயிர் மூச்சாக நினைத்து பீசிங் எனப்படும் முட்டு வருத்தத்தின் மத்தியிலும் தலைவனையும் சக போராளிகளையும் உயிராக நேசித்த உன்னதமான போராளி கேணல் கீதன் தன் ஏலாத உடல் நிலையிலும் தலைவரின் எண்ணங்களுக்கு 100% செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று தானும் கால நேரம் பாராமல் செயல்பட்டு தன் சக போராளிகளையும் செயற்பட வைத்த அரிய செயல்பாட்டாளன். லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவு தொடங்கி லெப் கேணல் திலீபன் கல்லூரி வரை தலைவரின் எண்ணக்கருவுக்கு ஏற்ப உருவாக்கி திறம்பட செயலாற்றிய அரிய தளபதிகளில் ஒருவர் பல திறமையான போராளிகளை இனங்கண்டு தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்ற அற்புதமான தளபதி.பூனகரிபடையணி உருவாக்கத்தின் கதாநாயகன். மன்னார் களமுனை தொடக்கம் முள்ளிவாய்க்கால்களமுனை வரைபூனகரிப்படையணியின் அற்புதமான வரலாற்று சமர்களை கேணல் ஈழப்பிரியனோடு சேர்ந்து வழிநடத்தி சாதனைகள் செய்த அற்புத தளபதிக்கு வீரவணக்கம். இவருடன் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கம் கீதனுடன் உரையாடுகின்ற வாய்ப்பின்மூலம் நாம் பல புதிய செய்திகளை அறியக்கூடியதாக இருந்தது. அவர் ஒரு விடுதலைப் போராளி. போராளிகளுக்கான கல்விப் பிரிவிலும் இயங்கிவருகிறவர். பல கள முனைகளில் நின்று களமாடிய வீரன். மாவீரர்கள் பற்றி நெஞ்சு கணக்கும் கதைகளைச் சுமந்துதிரிகிறவர். விடுதலைப் போராளிகளின்இடத்தில் கலை இலக்கியச் செயற்பாடுகள் வளர்ந்து வருகிறதாக சொல்கிறார். கலைஇலக்கியச்செயற்பாடுகள் மூலமும் தாம் சமூக விழிப்புணர்வை ஊட்டப் பாடுபடுவ தாகச் சொல்கிறார். விடுதலையின் தரிசனர்களாகபோராளிகள் திகழ்கிறார்கள், உண்மையை அவர்கள் தேடிப் பயணப்படுகிறார்கள், நல்ல மனிதர்களாக இருக்கின்றார்கள் .அத்தகைய பண்புகள் நிறைந்த போராளிகளில் ஒருவரான கீதனிடம் நாம் பல கேள்விகளைக் கேட்டோம். மாவீரர்கள் பற்றியும் அவர் கதை கதையாகச் சொன்னார் அவற்றையெல்லாம் இங்கு பதிந்து விட முடிய வில்லை எதிர்காலத்தில் அவற்றை பதிவாக்க முயல்வோம். பல வேலைப் பளுக்களுக்கு மத்தியிலும் நீண்ட நேரமாக சமூக மானுட விடுதலை குறித்து அவர் உரையாடினைார். அத்தகைய உரையாடலின் ஒரு பகுதி யையே இங்கு தருகிறோம் கேள்வி :போராளிகளுக்கான கல்விச் செயற்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்? கீதன்: எங்கட விடுதலைப் போராட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் போராளிகளுக்கு விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில்இருநதது உள்ள வரலாறு பற்றியும் விடுதலைப் போராட்டம் பற்றியும் கற்பிக்கப்படும். அதை வழி நடத்திக்கொண்டிருக்கும் தேசியத் தலைவர் அவர்களுடைய வரலாறு குறித்தும் சொல்லப்படும். சண்டைக்களங்களிலும்சமர்க்களங்களிலும், யுத்தங்களிலும் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்கள் குறித்த முழுமையான வரலாற்றைக் கற்பிப்பதுமாக இக்கல்விச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன வரலாறுதான் வழி காட்டி எனத் தலைவர் சொன்னதற்கமைய உலகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் அந்த விடுதலைப் போராட்டங்கள் நகர்ந்த விதங்கள் பற்றியும் மக்களும் போராளிகளுமாக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதுபற்றியும் அறிவதாக இது அமைந்திருகின்றது உலகில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் இராணுவ ரீதியாக அரசியல்ரீதியாக எவ்வாறு இயங்கின என்பவற்றையும் போராளிகளுக்கு கற்பிப்போம் .(வேர்கள் இணையம்) இதை விட தமிழர்களுடைய வரலாறு, சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய வரலாறு, அண்டை நாடுகளின் வரலாறு என்பன கற்பிக்கப்படும். மேலும் தமிழ் மக்கள் மீது காலம்காலமாக அடக்கு முறையைப் பிரயோகித்து வரும் வரலாறு குறித்தும் தமிழ் மக்களுடைய வாழ்வியல் உரிமைகளும்அரசியல் உரிமைகளும் எவ்வாறு பறிக்கப்பட்டன என்பது குறித்தும், பேரினவாதத்தினுடைய அடிப்படைச் சிந்தனை உளவியல் குறித்தும் கல்வி கற்பிக்கப்படுகிறது எங்களுடைய பணிகள் தொடர்பான கல்வி ஊட்டலும் நடைபெறுகிறது. சமர்க்களங்களில் போராளிகளின் செயற்பாடுகள் நிர்வாகத் துறையில் போராளிகளின் செயற்பாடுகள் என பரந்துபட்டதாக முன்னெடுக்கப்படுகிறது கேள்வி : லெப்டின் கேணல் ராஜன் கல்விப் பிரிவு பற்றியும் அது மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும் குறிப்பிடுங்கள்? கீதன்: லெப்டின் கேணல் ராஐன் அண்ணன் அவர்கள் பல சமர்க்களங்களில் நின்று சமராடியவர் . நீண்ட போரிடும் ஆற்றலும் அனுபவமும் கொண்ட ஒருவர். களத்தில் பல வெற்றிகளை ஈட்டித்தந்தவர். அவர் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையின் தளபதியாக இருந்தவர். எமது விடுதலைப் போராட்டத்தின் மூத்த தளபதி ச.பொட்டம்மான் அவர்கள் எழுதிய கட்டுரையில் சிறப்பாக அவர் பற்றி எழுதுகிறார். சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையின் நெருப்பாற்றின் நீச்சலில் பத்தாண்டுகள் என்ற நூலில் அவர் தொடர்பான கட்டுரைகளை நீங்கள் படிக்கலாம் எங்கட விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாக போராளிகளுக்கான அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி நடத்தப்பட்டது. அக்கல்லூரியின் பொறுப்பாளராக ராஜன் அண்ணனே இருந்தார் ஆளுமையும், அறிவும், பலமும், உறுதியும், திடமும் மிக்கவர்களாக வளர்ப்பதில் அவர் காட்டிய அக்கறை அவரின் வழி நடத்தல் போன்ற பல்வேறு விடயங்களைக்கருத்தில் கொண்டே அவரது பெயரில் லெப்டின் கேணல் ராஜன் கல்விப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது போராளிகளின் கல்வி சம்பந்தமான விடயங்களிலும் அறிவு மேம்பாட்டு விடயங்களிலும் அக்கறை கொண்டு செயற்படும் அமைப்புத்தான் லெப்டின் கேணல் ராஐன் கல்விப் பிரிவு போரினால் பாதிக்கப்பட்ட மாணவர் சமூகத்தை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதற்காக பலதரபட்ட செயற்பாடுகளில் ஆழமாக அது இயங்குகிறது சிறீலங்கா பேரினவாத அரசால் தயாரிக்கப்படுகின்ற பாடநூல்கள் தான் எமது மாணவர்களுக்கான பாட நூலாக இருக்கிறது என்றால் யோசித்துப் பாருங்கள் நிலைமை எவ்வாறு இருக்குமென்று. யாழ் பொது சன நூல் நிலையத்தை எரியூட்டி அழித்தவர்கள் எமது இனத்தின் வரலாற்றுச் சுவடுகளையேஅழித்துவிட முயன்றிருக்கிறார்கள் வேர்கள்.கொம் அந்த வரலாற்றுச் சான்று நூல்களை அழித்துவிட்டு தமது வரலாறுகளை எம் மீது திணிப்பதற்கான திட்டமிட்ட நடவடிககையாக அதனைப்பார்க்கலாம் கந்தளாய் குளத்தை குளக் கோட்ட மன்னன் கட்டினான் என்பது வரலாறு. சிங்கள வரலாற்றுப் பாட நூல்களில் அதைச் சிங்கள மன்னனே கட்டினான் என ஒரு பொய்ப்புனைவை கட்டி எழுப்புகிறார்கள். வரலாறு என்பது கற்பனையான ஒன்றல்ல. அது உண்மைகளின் விரிவு. இந்த நிலையில் எங்களுடைய வரலாற்றை நாங்களே எழுதுதல் என்பதும் எமது கடமைகளுள் ஒன்றாகிறது போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்துதல் வகுப்புக்கள் நடாத்துதல் என பணிகள் விரிந்துகிடக்கிறது. உண்மையில் ஒரு நாடு நாடாக இருக்கவேணும் என்றால் ஒரு இனம் இனமாக இருக்கவேண்டும் என்றால், இரண்டு விடயங்களை முக்கியமானதாகக்ககருதுகிறேன். ஒன்று வீரம், இரண்டு அறிவு வீரத்தையும் அறிவையும் ஒருங்கிணைத்து பலம் கொண்ட சக்தியாக வளரும் பொழுதுதான் ஒரு நாடு யாருக்கும் அடிமைப்படாமல் இருக்க முடியும். இந்த இரண்டு விடயங்களைக் கட்டி வளர்த்துச் செல்வதும் எமது கல்விப் பிரிவின் பிரதான நோக்கங்களாக இருக்கின்றன அறிவாற்றலை வளர்ப்போம் அவனியில் உயர்வோம்’இதுவே கல்லூரியின் பிரதானமான கோஷமாக, தாரக மந்திரமாக இருக்கிறது கேள்வி :மகாவம்சம் போன்ற புனைவுகளை வரலாற்று ஆதாரமாக சிங்கள பேரினவாதம் கொண்டுள்ளமை குறித்து.? கீதன்: சிங்கள பேரினவாதம் என்பது அடிப்படையில் ஒரு கற்பனையான கதையில் இயங்கிக் கொண்டிருக்கிறது திட்டமிட்டு திரித்து எழுதப்பட்ட மகாவம்சத்தினுடையஅடிப்படையில் அது இயங்குகிறது. தமிழ் மக்களுடைய வாழ்வை , தேசியப் பண்புகளை திட்டமிட்டு அழிக்கவென்றே புனையப்பட்ட மிகப் பிரமாண்டமான ஒரு பொய் மூட்டையின் கட்டுத்தான் இந்த மகாவம்சம். அந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே சிறீலங்கா பேரினவாதம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மகாவம்சம் என்ன சொல்கிறதென்றால் இலங்கைத் தீவில் ‘வாழப் பிறந்தவனும் ஆளப் பிறந்தவனும் சிங்களவனே’ இலங்கைத் தீவென்பது; ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மதம், ஒரு மொழி, ஒரு அரசு, ஒரு ஆட்சி என்கிற அம்சங்களுக்குள்தான் இருக்க முடியும் என அது சொல்கிறது அதைச் சிங்கள மக்களிடையே ஆழமாகப் போதித்துக்கொண்டும் வருகிறது. அதற்கூடாக காலம் காலமாக தமிழ் மீது அநீதியான போரையும் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களிடம் பூர்விக நிலங்கள் உள்ளன. பாரம்பரியமான மொழி இருக்கிறது. தனித்துவமான கலை பண்பாடு இருக்கிறது. நீண்ட வரலாறு இருக்கிறது. தனித்து வாழக் கூடிய பொருளாதாரம் இருக்கிறது. ஒரு தேசிய இனத்துக்கு இருக்க வேண்டிய அனைத்துப் பண்புகளும் எங்களுடைய இததுககு இருககிறது . எங்களுடைய பாரம்பரியமான வாழ் நிலங்களை திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஊடாக சிங்கள அரசு நிலப்பறிப்புசெய்து வந்தது, வருகிறது. 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்தே தமிழர்களின் குடியியல் வாழ்வுக்கு பெரும் தொல்லை இழைப்பதாக அது இயங்கி வருகிறது. எங்களுடைய நிலங்களை அழிக்க வெளிக்கிட்டது. எங்களுடைய நிலங்களை பறிக்க வெளிக்கிட்டது. எங்கட மக்களை மண்ணில் இருந்து அடித்து விரட்டி அகதியாக்கியது சிங்கள பேரினவாதம். அடையாள அழிப்புக்கள் நிலப் பறிப்புக்கள், மொழி அழிப்புக்கள், பண்பாட்டு சிதைப்புக்கள், பொருளாதார சிதைப்புக்கள் போன்றவற்றுக்கூடாக தமிழர் வாழ்வை சீரழித்து தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல என்பதை நிறுவமுயன்றது. கேள்வி :இனவாத அரசின் அடக்குமுறை சட்டங்கள் தமிழ் மாணவர் சமூகத்தை எவ்வாறு சீரழிக்கத்தொடங்கியது? கீதன்: கல்வி ரீதியான அடக்குமுறைச் சட்டங்களில் மொழி முக்கியமான இடத்தை வகித்தது. 1956ம் ஆண்டுகளிலிருந்தே தமிழ் மொழி அழிப்புத் தொடர்பான செயலில் சிங்கள அரசாங்கம் திட்டமிட்டு இயங்கத்தொடங்குகிறது. தனிச்சிங்களமும் 1961 ம் ஆண்டு நீதிமன்ற மொழி சட்ட மூலத்தைக் கொண்டுவந்ததன் மூலமும் அது தனது அழிப்பு நடவடிக்கையை தொடங்கிவிட்டது . நீதிமன்றங்களில் சிங்கள மொழியில் தான் வழக்குகள் நடைபெறும் என்பதாக அந்தச் சட்ட மூலம் இருந்தது. 1970 ம் ஆண்டுகளில் தரப்படுத்தல் சட்டம் என்று சொல்லி தமிழ் மாணவர்களுடைய கல்வித் தரத்தை , தமிழ் மாணவர்களுடைய மேன் நிலை அடைகிற சூழலை புறக்கணித்து ஒரு கீழ் நிலைக்குத் தள்ளும் முயற்சிகளைத் தொடங்கிற்று. ஆரம்ப காலங்களில் தமிழ் மொழி அழிப்பு நடவடிக்கையை சட்டத்திட்டங்கள் மூலம் முயன்ற பேரினவாதம் யுத்த காலத்திலோ ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கை மூலம் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. பாடசாலை மாணவர்களை சிறைப்டிபிடித்து அவர்களை கொன்றொழித்தது. பாடசாலைகள் மீது விமானங்கள் குண்டுவீச்சு தாககுதல்களை நிகழ்த்தியது. வெள்ளைச் சீருடையுடன் போன பள்ளி சிறார்களை இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தது பாடசாலைக்கான வளங்களை பல தடைகளுக்கூடாகத் தடுத்து நிறுத்தியது. இடங்களைப் பிடிச்சு எங்கட மக்களை அகதிகளாக்கி மாணவர்களின் கல்வியைச் சிதைத்த பிறகு நேரடியான யுத்தத்துக்கூடாகவும் ஆக்கிரமிப்புக்கூடாகவும் கல்வியை மாணவர் சமூகத்தை காலம் காலமாக திட்டமிட்டு சிங்களப் பேரினவாதம் அழித்தே வருகிறது. கேள்வி :சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசு, தமிழ் மாணவர்களுடைய கல்வியை திட்டமிட்டுச் சீரழித்து வந்திருக்கும் இந்த நிலையில் தமிழ் சிறார்கள் மீது அக்கறைப்படுவதாக காட்டிக்கொள்ளும் அதன் உளவியல் குறித்து பேச முடியுமா? கீதன்: காலம் காலமாக எங்கட மாணவர் சமூகத்தை , இளம் சமூகத்தை, துடிப்புள்ள தேசத்தை அடுத்தகட்டத்திற்கு வளர்த்துச்செல்கிற எங்கட சமூகத்தை, சிறீலங்கா அரசாங்கமும் அதன் ஆக்கிரமிப்பு படைகளும் அழித்த வரலாற்றை நீங்கள் ஆழமாக அறிந்திருப்பீர்கள் இப்பேற்ப்பட்ட சிறீலங்கா பேரினவாத ஆட்சியாளர்கள் சிறுவர்களைப் பற்றி அக்கறை கொள்வதாக சர்வதேச சமூகத்திடம் கதை அளந்துகொண்டிருக்கின்றனர் இவர்கள் செய்த கொடுரங்களைச் சொல்வதென்றால் சொல்லி கொண்டே போகலாம் 1958 ம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட இன கலவரத்தின் போது பிறந்து கிடந்த குழந்தையை இரண்டாகக் கிழித்துக்கொன்றவர்கள். கொதிக்கும் தார்ப்பீப்பாவுக்குள் குழந்தையைத் தூக்கி எறிந்து கொன்ற்வர்கள். ஒரு தமிழ் குழந்தை பிறந்துவளர்ந்து வரக்கூடாது என்பதற்காக பிறப்பிலேயே அழித்தவர்கள். கருவிலேயே அழித்தவர்கள் வயிற்றுக்குள்ளேயே அழித்தவர்கள். அப்படி நிகழ்ந்த கதைகளும் இன்றும் வரலாறுகளாக உள்ளன. அப்பேர்ப்பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கம் இன்று தமிழ் சிறார்கள் மீது அக்கறை கொள்வதாக காட்டிக்கொள்கிறது நவாலிப் படுகொலையாக இருக்கலாம், புதுக் குடியிருப்பில் நடைபெற்ற மண்டுவில் படுகொலையாக இருக்கலாம், தென்தமிழீழத்தில் நடைபெற்ற படுகொலைகளாக இருக்கலாம் எல்லாம் அவர்களின் மனித விரோத செயற்பாடுகளின் உச்சங்களாக விளங்குகின்றன. பாடசாலைக்குப் போன பிள்ளைகளின் சடலங்களே வீட்டுக்குத் திரும்பி வந்த வரலாறுகள் இன்னும் அழிந்து விடவில்லை . இளம் மாணவசமுதாயத்தை அழித்துக்கொன்ற வரலாற்றின் ஈரம் இன்னும் காய்ந்துபோகவில்லை போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான தொழில்நுட்பக் கல்லூரியை புனர்வாழ்வுக் கழகம் நடத்தி வருகிறது அவர்களிடம் நீங்கள் சந்தித்துப் பேசினால், சிங்களப் பேரினவாதத்தால் அவர்களுடைய கல்வி எவ்வாறு பாதிப்புக்குள்ளாகியது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அண்மைக் காலச் சம்பவங்களைக் கூட நான் உங்களுக்கு சொல்லலாம். அண்மையில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின்அதிபரும் கோப்பாய் எழுச்சிப் பேரவைச் செயலாளருமான திருநடராஜா சிவகடாட்சம் சுட்டுக்கொல்லப்பட்டார் இராணுவப் புலனாய்வு அமைப்பும் அவர்களோடு சேர்ந்து இயங்குகிற ஒட்டு அமைப்பும் சேர்ந் இந்தப் படுகொலைகளைச் செய்திருக்கிறதுர்கள், மாணவர்களைக் கல்வியிலும் கலைபண்பாடுகளிலும் தேசிய உணர்விலும் விடுதலை உணர்விலும்கட்டி வளர்க்கும் நோக்குடன் உன்னதமாகச் செயற்பட்டுவருபவர்கள். அவர்களை ஏன் சுட்டுக்கொன்றது என்றால் மாணவர் சமூகத்தை இக்கட்டான சூழலுக்குள் தள்ளுவதற்குத்தான். எழுச்சி கொண்ட, அறிவுகொண்ட, ஆற்றல் கொண்டசமூகமாக தமிழ்ச் சமூகம் வளரக்கூடாது என்பதற்காக, வழிநடத்துகிற முதல்வரை ஆற்றலுள்ளவரை இந்தச் சமாதானகாலத்திலே, அதுவும் தமிழர் படை, தமிழர் தேசம் உயர்ந்துநிற்கிற நேரத்தில இண்டைக்கும் இதைச் சிறீலங்கா அரசாங்கம் செய்துகொண்டுதான் இருக்கு எங்களுடைய விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்ட நிலையில் சர்வதேசக் கவனத்தை ஈர்த்த நிலையில் இருக்கிறது அவுஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் தமிழீழத்திற்கு வந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப்பார்வையிட்டார். கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும், தேசகட்டுமானங்களையும் பார்வையிட்டார். அவர் அவுஸ்ரேலியப்பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது “நான் சுனாமியால்பாதிக்கப்பட்ட தமிழர் தேசப் பகுதிகளைப் பார்த்தேன் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தமிழர்களுடைய தாயகப் பகுதியையும் பாத்தேன் அவர்களுடைய தேசக் கட்டுமானங்களையும் பார்த்தேன் அத்தோடு தமிழீழத்தில் ஒரு நடைமுறை அரசு இயங்கிவாறதைப் பார்த்தேன். தமிழ் மக்களுடைய தாயகத்தை, தன்னாட்சி உரிமையை சர்வதேசம் அங்கீகரிக்கவேணும் அல்லது தமிழர் தாயகத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கவேணும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார் எங்கட உண்மை நிலையம் , எங்கட செயற்பாடுகளும், எங்கட உன்னதமான பக்கங்களும் சர்வதேசத்திற்கு புரிந்திருக்கிறது எங்களுடைய மாணவர்களையும், மக்களையும், கல்விச் சமூகத்தையும் அழிப்பதற்கும் ஆக்கிரமிப்பதற்கும் சிறீலங்கா பேரினவாத ஆட்சியாளர்கள், அவர்களுக்குச் சேவகம் செய்கின்ற கனவான்கள், அதன் பிரமுகர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுதமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வந்தனர். அவதூறுகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும் பரப்பி வந்தனர் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிக்க முயன்றனர் . உண்மைக்கு புறம்பான பொய் பரப்புரையை மேற்கொண்டு தமிழ் மக்கள் மீது ஆக்கிரமிப்புயுத்தத்தை திணிைப்பதே அதன் முழு நோக்காக இருந்து வந்தது. வெளிநாடுகளின் ஆயுத உதவியையும், பண உதவியையும்பெற்று எமது பாடசாலைகள் மீதும் எமது வாழ்விடங்கள் மீதும் குண்டுகளைப் பொழிந்தது. சர்வதேச சமூகத்திடம், எமது மக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்காகவும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும் குரல் எழுப்பினார்கள் எங்களுக்கொரு நீதியில்லையா, எங்களுக்கொரு நியாயம் இல்லையா” என அவர்கள் கேட்டார்கள்உணரமாட்டீர்களா எங்களை பார்க்க மாட்டீர்களா” என கத்திக் கத்திக் கேட்டார்கள். உலகத்திலிருக்கிற எந்த மனித நேய அமைப்புக்களும் செவிமடுக்கவி இந்த நேரத்தில், எங்களுடைய தேசத்தின் மீது யார் அவலத்தை விதைத்தானோ அவனுக்கே அந்த அவலத்தை திருப்பிக் கொடுத்தோம். எதிரியின்ர முதுகெலும்பை நாங்கள் உடைத்தோம். எங்களுடைய போரிடும் சக்திக்கூடாகவே சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்த்தது. எங்களுடைய நிலைப்பாட்டைத் திரும்பிப் பார்த்தது. பலம் கொண்ட சக்தியாக நிமிர்ந்து நின்ற பொழுதுதான் சர்வதேசம் தலையிடும் சக்தியாகமாறியது. இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி வேர்கள் .கொம் சர்வதேச சமூகத்துக்கும்எங்களுக்குமிடையில் ஒரு உறவுநிலை வளர்ந்தது. விடுதலைப்போராட்டத்தினுடைய பிரதிநிதிகள், வெளிநாடுகளுக்கு வந்ததும் எமது பிரச்சனையை எடுத்துச் சொன்னதும் இதன் அடிப்படையில்தான். அங்கிருந்தும் பலர் வந்தார்கள் யதார்த்தத்தைப்புரிந்துக்கொண்டார்கள். இவ்வளவு மாவீரர்கள் ஏன் மடிந்தார்கள் தலைவர் பிரபாகரன் ஏன் இந்த விடுதலைப் போரை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார். போன்ற விடயங்களை அவர்கள் உணரத்தொடங்கினார்கள். சிறீலங்கா அரசாங்கத்தின் சதி முயல்வுகள் அம்பலமாகத் தொடங்கினை சிறீலங்கா அரசாங்கத்தின் பேரினவாத முகத்திரையை எமது செயற்பாடுகளும், எமது போராட்டமுமே கிழித்துக்காட்டினை இந்த நிலையில் இன்றும் சர்வதேச ரீதியாக எம் மீது பயங்கரவாதமுத்திரையைகுத்தும்நோக்கில்அவர்கள்செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பிரச்சாரத்துக்கான காரணிகளை அவர்கள் தேடுகிறார்கள் . அப்படியான காரணிகள் இல்லாத போது பொய்யான குற்றச்சாட்டுக்கை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்றுதான்இ ந்த சிறார்கள் பிரச்சனையும். தோல்வியைத தழுவும் சிங்களதேசத்தின் ஆற்றாமையின் வெளிப்பாடும்தான் இது . கேள்வி :சமர்க் களங்களை, கல்வி நிலையில் எவ்வாறு பதிவாக மேற்கொள்கிறீர்கள்? கீதன் : சண்டைக்களங்களில் நின்று செயற்படும் பொழுது கூட பலதரபட்ட வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். சண்டைக் களங்களில்பதுங்கு அகழிகளுக்குள் இருந்து நூல்களை வாசித்துக்கொண்டிருப்போம். ஒரு மகிழ்ச்சியான சூழலில் இருப்பதை போன்றே நாம் அங்கும் இருப்போம். புளியங்குளத்தில் நடந்தது எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு. ஒரு போராளி காவலுக்கு நிற்க ஏனைய போராளிகள் பதுங்கு அகழிகளுக்குள் இருந்து புத்தகங்களை வாசிப்போம். கடந்த கால வரலாறுகளை பற்றி போராட்ட வரலாறுகளை பறறி, தலைவரைப் பற்றி விடுதலையைப் பற்றி நாங்கள் படித்துக்கொண்டிருப்போம் அல்லது இதில் ஆற்றல் மிக்க போராளி ஒருவர் வகுப்பெடுத்துக்கொண்டிருப்பார். பத்திரிகைகள் படித்துக்கொண்டிருப்போம். எங்களுக்கென வரும் துண்டு பிரசுரங்களை வாசிப்போம். வானொலி கேட்போம் எமது பணிகளில் முக்கியமானது, ஒரு சமர்நடந்துகொண்டிருக்கிறது என்றால் அச்சமர் பற்றிய முழு விபரங்களையும் பதிவாக்குவது எதிரி எப்படி முன்னேறுகிறான், எத்தனை படை வீரர்களோடு எத்தனை மணிக்கு முன்னேறுகிறான், என்னென்ன படைக் கலங்களோடு முன்னேறுகிறான், எந்தளவிற்கு உச்சமான தாக்குதலை அவன் தொடுக்க முனைகிறான் என எதிரி பற்றிய முழு விபரங்களையும் நாங்கள் துல்லியமாக பதிவோம் அன்றைய நாளின் அவனது முழு நடவடிக்கைகளையும் நாம் பதிவுககுளுக்குள்ளாக்குவோம் எங்களுடைய போராளிகள் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பது பற்றி அவர்களுடைய அர்ப்பணிப்புக்கள் அவர்களுடைய தியாகங்கள் பற்றி பதிவோம். புளியங்குளத்தில் போராளிகள்ம்சொல்லிக்கொண்டிருப்பார்கள் “நாங்கள் உயிரோடு இருக்கும் வரையும் புளியங்குளத்தை நெருங்கேலாது. எதிரி பிடிக்கிறது என்று சொன்னால் எங்கட உடலைத்தாண்டித்தான் போய் பிடிக்கலாமே ஒழிய மற்றும்படி நடக்காது” புளியங்குளத்தில ஒரு போராளி கண்களில் காயப்பட்டுவிடுகிறார். கண்களில் இரத்தம் வழிகிறது. அவர் இரண்டு கண்களும் பார்வையை இழந்துபோன சமயத்திலும், அய்யோ எனக்கு கண் தெரியவில்லை என்று கதறவில்லை . தனது “ஆயுதம் எங்கே” என்று கேட்டதைத்தான் எங்களால் கேட்க்க முடிந்தது. அவரின் அழுகையை அவர் அந்த நேரத்திலும் வெளிப்படுத்தவில்லை . அவ்வளவு உறுதியும்உரமும் மிக்க போராளியாக எம்முன் நின்றார். எமது மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் அவர்கள் தங்கள் உயிரை துச்சம் என மதித்து நிற்கும் பண்புகளையும் பதிவாக்குவோம் பிறகு அந்த சமர் பற்றி போராளிகளுக்கு கற்பிப்போம். எமது பணிகள் எல்லாவற்றையும் இவ்விடத்தில் பகிர்ந்துகொள்ளமுடியாதிருக்கிறது கேள்வி :சமூக விடுதலைக்கான கல்வியும் கற்பிக்கப்படுகிறதா? கீதன்: மானிட வாழ்க்கை என்பது குடியியல் வாழ்க்கையையும்அரசியல் வாழ்க்கையையும் கொண்டது. குடியியல் வாழ்க்கை என்றால் ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டி நாளாந்தம் தன்சீவியத்தை தனது வாழ்க்கையை வாழ்ந்துகொள்வதாக சொல்லலாம். அரசியல் வாழ்க்கை என்றால் எங்கட இடத்தில நாங்கள் வாழவேண்டும். எங்கட மொழியைப் பேசவேண்டும். எங்கட- கலைபண்பாட்டை நாங்கள் பின்பற்றவேண்டும். எங்கட கலைபண்பாட்டுக்கேற்ற மாதிரி நாங்கள் வாழவேண்டும். எங்கட வரலாற்றை நாங்கள் படிக்கவேண்டும். எங்கட வரலாற்றுக்கேற்றமாதிரி எங்கட வாழ்க்கையை நடத்தவேண்டும். எங்கட பொருளாதார பலத்தில் நாங்கள் நிமிர்ந்து நிற்கவேண்டும். இதுதான் எங்கட அடிப்படை அரசியல் உரிமைகள். இப்படி ஒரு வாழ்கையை ஒரு காலத்தில நாங்கள் வாழ்ந்தோம் . எஙங்கட சமூகமும் சிறப்புற இருந்தது. யாருக்கும் அடிமைப்படாத வாழ்க்கையை வாழ்ந்தது அனால் ஒரு கால கட்டத்துள் சாதியம் , சமயம், சீதனம்பிரதேசவாதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் என எல்லாம் புகுநது எமது சமூகததை சிதைததது அதனால் ஒரு கட்டத்தில எங்கட மக்களுக்குள் ஏற்பட்ட உடைவுகளாலும் பிரிவுகளாலும் நாங்கள் பின்தங்கிபோக நேர்ந்தது. இதன் காரணமாகவும்தான் நாம் எமது அரசியல் உரிமைகளையும் இழக்க நேரிட்டது. தமிழர்கள் வீரமுள்ளவர்களாக இருந்தார்கள். தமிழர்கள்அறிவுள்ளவர்களா இருந்தார்கள் உலகத்தில் ஒரு இனம் எப்படி வாழக்கூடாதோ அப்படி வாழ்ந்தோம். உலகத்தில் ஒரு இனம் எப்படி சாகடிக்கப்படக்கூடாதோ அப்படி சாகடிக்கப்பட்டோம் அடிமைப்பட்ட மக்களாய் போனோம். மற்றவர்களால் சுரண்டப்பட்டோம். அப்போ எங்களுக்கொரு தலைவர் இருக்கவில்லை எங்களுக்கொரு படை பலமும் இருக்கவில்லை தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்களின்விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். தேசியஉணர்வை கட்டி எழுப்பினார். அவரே மக்களின் விடுதலைக்கா மக்கள் படையைக் கடடி எழுப்பினார் சமூக விடுதலையையும் அரசியல் விடுதலையையும் ஒரு சேர இணைத்தே இந்தப் போராட்டத்தை தலைவர் வழி நடத்திச்செல்கிறார் . இவை பற்றியும் போராளிகளுக்கு விரிவாக கற்பிப்போம். பேட்டி கண்டவர் : சுபாஸ் இதழ் வெளியீடு :எரிமலை இதழ் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/6aa0eeca-195b-4198-b94d-8d5c10f774e8
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ் ஐயாவுக்கும், புலவர் ஐயாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
இத்தனை வருஷமாக பெளத்திரமாக வைச்சிருக்கிறியள் எண்டால் இப்பத்தான் பாவனைக்கு இறங்குப்பெட்டிக்குள்ளால எடுத்திருக்கிறியளாக்கும்😁 எனக்கு முறுக்கு, பருத்துறை வடை, பயித்தம்பணியாரம் எல்லாம் எவ்வளவு சாப்பிட்டாலும் “கெலி” அடங்காது! முறுக்கு சுட உரல் இல்லை என்பதால் கடையில்தான் வாங்குவது. அது வெறும் மாவாக இருக்கும். ஆனால் சில வீடுகளில் நல்ல தரமாக சுட்டு விற்கிறவர்கள். சின்ன ஓர்டர் என்றால் செய்ய பின்னடிப்பார்கள். அதனால் இடைக்கிடை அவர்களிடம் வாங்குவதுண்டு.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
படங்கள் அந்த மாதிரி இருக்கு😀 முறுக்கு மொறுக்குமொறுக்கு என்று இருக்கு!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
-
ஓட்டுக்குழு கருணா சதிவலையில் சிக்குண்ட லெப். கேணல் நீலன் என்றும் அழியாத சுவடு
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஐபோன் மூலம் மூன்று படங்களை ஒன்றாக்கி இணைத்துள்ளேன்😀 முதலாவது படத்தில் + இருக்கின்றது. அதை கிளிக்கினால் இரண்டாவது படத்த்தில் இருக்கிற மாதிரி மெனு வரும். Gallery Image ஐ கிளிக் பண்ணவேண்டும். அதன் பின்னர் மூன்றாவது படத்தில் உள்ள பக்கம் வரும். விம்பகத்தில் படங்களை இணைக்கலாம்.. அல்லது உங்கள் பெயரில் ஒரு அல்பம் தயாரித்து இணைக்கலாம். விம்பகத்தை அல்லது உங்கள் பிரத்தியேக அல்பத்தை கிளிக்கினால் ஒரு பெரிய + வரும். அதைக் கிளிக் பண்ணி தேவையான படங்களை விம்பகத்தில் (அல்லது உங்கள் அல்பத்தில்) தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.- 4E6EBF3D-14E4-438B-A1F6-23B9D2C7A9A7.jpeg
From the album: கிருபன்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம். ஒழுங்காக படத்தை தரவேற்றினால் முத்தத்தை காத்தில பறக்கவிடுங்கள்😍- நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
சிங்கலெ என்று பெயர் மாறுகின்றதோ இல்லையோ, சிங்களவர்கள் முழுத்தீவையும் சிங்கள மயமாக்கும் திட்டத்தை வேகமாக முன்நகர்த்துவார்கள். சிங்கள மக்கள் காலைச்சாப்பாடாக பாணையும், சம்பலையும் உண்ண வழியில்லாத போதும், அவர்களை எஞ்சி இருக்கும் தமிழர்களையும், முஸ்லிம்களையும் காட்டி பயம்காட்டி தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்வார்கள் ராஜபக்ஷக்கள். சிங்களவர்களின் பொருளாதாரம் மிகவும் மோசமாக மாற சீனாவும், மேற்கும், மேற்கின் கூட்டான இந்தியாவும் விடாது. மாறி மாறி உதவி வழங்கி தங்கள் பக்கம் இழுக்கப் பார்ப்பார்கள். தமிழர்கள், முஸ்லிம்கள் தமது நிலப்பரப்பு சுருங்கினாலும் பார்வையாளர்களாக இருப்பார்கள்..- பட்டக்காடு நாவலை முன்வைத்து
பட்டக்காடு நாவலை முன்வைத்து சிறந்த தத்துவவாதியான Nassim Nicholas Taleb தனது ‘The Bed of Procrustes’ நூலில் “What we call fiction is, when you look deep, much less fictional than nonfiction; but it is usually less imaginative” என்ற கருத்தைப்பதிவிடுகிறார். இது ‘பட்டக்காடு’ எனும் படைப்பின் மீதான் விமர்சனங்களுக்கான எதிர்வினையாக கொள்ள முடியும். நாவல் என்பதை இவ்வாறுதான் வரைய வேண்டும் என்று ஓர் குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிவிட முடியாது. ஆனால் நாவலானது எவ்வாறான குணாம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை குறிப்பிட முடியும்.ஓர் வாசகனின் ஒற்றைப்படையான கருத்தியலை மாத்திரம் கொண்டு ஓர் நாவலை இலக்கியத்தரமற்றதாக கண்ணை மூடிக்கொண்டு கடந்து சென்றுவிடவும் முடியாதல்லவா. அமல்ராஜ் பிரான்சிஸின் ‘பட்டக்காடு’ zero degree பதிப்பகத்தால் வெளியிட்டிருக்கின்ற 2020இன் முக்கியமானதோர் நாவல். இதை நான் குறிப்பிடக்காரணம் இல்லாமலில்லை. இன்றைய சூழலில் ஓர் படைப்பு எந்த பதிப்பகத்தில் வெளியாகிறது என்பது கூட சில சமயங்களில் அதை அடுத்த கட்ட மார்கட்டிங் லெவலிற்கு கொண்டு சென்று விடும். ஒரு வகையில் இலகுவில் அது வாசகர்களை அடைந்துவிடும் என்பது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயம். ஒரு படைப்பை எந்தப்புள்ளி நாவலாக மாற்றுகிறது என்பது மிகவும் முக்கியமானதொன்று. எல்லா படைப்பாளிகளாலும் ஓர் நாவலை இலகுவில் கட்டமைத்துவிட முடியாது.நாவல் கோட்பாட்டை விரும்பியோ விரும்பாமலோ தன்னுள் பொதித்திருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. (இரண்டாவது நிபந்தனையை பிறகு கூறுகிறேன்) அந்த வகையில் பட்டக்காடு நாவல் அந்நிபந்தனையைப் பூர்த்தி செய்திராமல் இல்லை. காதல்,கடல்,நாடு, நட்பு என்ற பல கருத்தாடல்களின் இடைவெட்டுத்தான் இந்நாவல். இதில் எழுத்தாளர் கூறவந்த விடயங்கள், அதை அவர் கூறிமுடித்த மொடியூலேசன் மற்றும் அதை பிரஸ்தாபிக்க அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனத்தையும் பற்றியெல்லாம் பேசேவண்டியுருக்கிறது. முதலில் கடல். ஒரு நாவலுக்குள் ஓர் தலைப்பு சார்ந்து நாம் நிறையவே தகவல்களை உட்புகுத்த முடியும் ஆனால் ஓர் சிறிய கோட்டிற்கு அப்பால் அது வாசகனை திகட்ட வைத்துவிடும். அது நாவலுக்கான வாசகனின் பிரேமத்தை குறைத்துவிடும் வல்லமை கொண்ட அதேவேளை தனியாள் வேறுபாடும் கொண்டது.ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’, வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’, ஜோ டி க்ரூஸின் ‘ஆழி சூழ் உலகு’,மொண்டகோமெரியின் ‘தி சோல் ஒப் என் ஒக்டோபஸ்’ என்று நாம் அறிந்த படைப்புகளுக்கும் அது பொருந்திப்போகிறது. ஆனால் எப்போது பொதுத்தன்மையிலிருந்து விலகி வேறுபட்ட உரையாடல் தளத்திற்கு நாவல்கள் வாசகனை கூட்டிச்செல்வதானது அது பற்றிய உரையாடலுக்கான காரணமாய் அமைந்து விடுகிறது.பட்டக்காட்டை பொறுத்தவரையில் ;ஓர் தொடராக பத்திரிகையில் வாராந்தம் வெளியான கதையொன்றை எப்படி நாவலாக மாற்றுவது என்பதை சரியாகத்தான் பெரும்பாலான இடங்களில் செய்து முடித்திருக்கிறார்.கடலும் அது சார் பட்டக்காடு மக்களின் உணவுமுறையைக்கூட சலிக்காமல்தான் சில பகுதிகளில் தந்திருக்கிறார் என்று சொல்ல முடியும். இதுவரை நாவலை வாசித்தவர்களுக்கு தெரியும்; அங்கதச்சுவையை தனியே வைத்துவிட்டு வெறுமனே நாவலை பார்த்துவிட முடியாது என்பது. அது எழுத்தாளரின் இயல்புத்தன்மையின் வெளிப்பாடாகத்தான் இருக்கவேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அந்தோனியுடனான மதனின் உரையாடல்களை செதுக்குவதில் உள்ள நிலையும் அந்த தொகையில் அடங்கிப்போய்விடும். இப்போதும் நாங்கள் நண்பர்களுடனான எதிர்வினைகளை இவ்வாறே கட்டமைத்துக்கொள்வதால் இளையவரை அது கவரும் உத்தியாக நாவலுக்கு அது பலம் சேர்த்து விடுகிறது. அந்தோனிதான் பரம்பொருளாக இருந்து மதனுக்கு பல இடங்களிலும் புத்தியுரைப்பது hamlet & horatio ஐ ஞாபகப்படுத்திச்சென்றது. கயல் என்ற பாத்திரத்தை ஆரம்பத்தில் அமல்ராஜ் அவர்கள் வடிவமைத்தருக்கும் விதம் மெச்சத்தக்கதாயினும் கதையின் கிளைமெக்ஸ் சற்று மிகைப்படுத்தலான மனோநிலையை வழங்கவல்லது. ஆணின் காதலின் போதான மூளைக்குடைச்சல்களையும் கிறுக்குத்தனங்களையும் அவர் வரைந்த விதம் சிறப்பு. கயலை ஓர் போராளியாக காட்டவேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பத்திலிருந்தே அந்த பாத்திரத்தை bold ஆனதோர் வகையறாவில் படைத்தாரா இல்லை அது எதேர்ச்சையாக நகர்ந்ததா என்ற கேள்வி எனக்குள் உண்டு. உதாரணமாக, //கயல் தொடர்பில் என்னை எப்பொழுதுமே ஆச்சரியப்படுத்தும் ஒரு விடயம் என்றால் அது அவளுடைய தைரியம்தான். புற உலக அச்சுறுத்தல்களால் அவளுடைய ஓட்டத்தை ஒருபோதுமே தடுக்கமுடியாது. தன் சுயநிலைப்பாடு சார்ந்து இறுதிவரை தைரியமாகப் போராடும் ஒரு பெருங்குணம் படைத்த பெண் அவள். எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் மனத்தைரியம் எல்லாப் பெண்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை. கயலுக்கு அது பெருங்கொடையாக அருளப்பட்டிருக்கிறது.// நிவேதாவுக்கும் இது பொருந்தும்.எழுத்தாளரை சிறந்த கதைசொல்லியாக இது உருமாற்றியிருக்கிறது. எழுத்தாளர் அமல்ராஜ் பிரான்சிஸ் நாவலின் அடிப்படையிலேயே போர் இழையோடியிருந்தாலும் நேரடியாக எதிர்கொண்ட துன்பவியலை அடிநாதமாக இல்லாமல், போரானது வன்னிக்கு வெளியே நெஞ்சின் உரத்தையும் நேச உறவுகளையும் எவ்வாறு தாக்கியது என்றுதான் பேசி முடித்திருப்பார். இயக்கங்கள் சார்புநிலை விடயங்களில் கருதுக்களை பதிவு செய்திருப்பினும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபாடுடற்ற மனோநிலையை அந்தோனியும் ஜோசப் மாஸ்டரும் கூட வெளிப்படுத்தித்தான் இருப்பார்கள். போர் சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பற்றி எவ்வளவோ பேசியாயிற்று என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இரண்டாவது நிபந்தனைதான் வாசகர் பார்வையில் நாவல் எப்படியானது என்பது. அந்தவகையில் பல பாசிடிவ் கருத்துகளை காணமுடிகிறது.மேலும் உண்மைக்கும் நாவலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகளை காணக்கூடியதாக இருக்கிறது. நாவலில் பிரஞ்சை, எதிர்வினை, வியாகூலம் போன்ற சொற்களின் repetition குறைக்கப்பபட்டிருந்தால் இன்னும் சில தாள்களை மிச்சப்படுத்தக்கூடியதாய் இருந்திருக்கும். ‘பட்டக்காடு’ வாசித்து உரையாடப்படவேண்டிய நாவல். – ஷாதிர் https://vanemmagazine.com/பட்டக்காடு-நாவலை-முன்வ/- பழையவை இனியவை
- பாவத்தின் சம்பளம்
ஆறுதலாக வாசிக்கவேண்டும் என்று சில பாகங்களுக்குப் பின்னர் இப்போதுதான் இங்கே வந்திருக்கின்றேன். ☺️ தமிழ்வாணனின் துப்பறியும் மர்மநாவல்களுக்குப் பின்னர் தமிழில் திகிலாகப் போகும் கதையை இப்போதுதான் வாசிக்கின்றேன். எழுத்துநடை அபாரம் அக்னி!!👏👏👏- ஐம்பதில் ஆசை
மிகவும் பயனுள்ள பதிவு👏👏👏 எனது நண்பர்கள் சிலரும் அரை மரதன், முழு மரதன் ஓடுகின்றவர்கள். ஆறடிக்கும் அதிக உயரமான ஆஸ்திரிய நண்பர் தனது 40 களில் 110 கிலோ எடையாக இருந்தபோது வைத்தியரின் ஆலோசனையின்படி ஓட ஆரம்பித்து சில வருடங்களில் வருடத்திற்கு 3 மரதன்கள் ஓடுவார். மழையில், குளிரில், பனியில் எல்லாம் ஓடிக்கொண்டேயிருப்பார்! கொரோனாவுக்கு முன்னர் சந்தித்தபோது 74 கிலோவுக்கு வந்திருந்தார்! பல வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாடியபோது மொக்குத்தனமாக விழுந்து எனது வலது முழங்கால் சிரட்டையில் பிரச்சினை (stretched ligaments) இருப்பதால் ஓடுவதில் பிரச்சினை இருக்கு. நடப்பதில் பிரச்சினைகள் இல்லையென்பதால் சத்திரசிகிச்சை செய்ய விருப்பம் இல்லை. ஆகவே வேகநடைதான் எனது முக்கிய உடற்பயிற்சி😀 ஓட விருப்பம் உள்ளவர்கள் இங்கிலாந்து பொது உடல்நல துறையால் வெளியிடப்பட்ட Couch to 5k App ஐ பாவிக்கலாம். https://www.nhs.uk/live-well/exercise/couch-to-5k-week-by-week/- வெளியேறுங்கள் அண்ணா! – தலைவருக்கு எழுதிய கடைசிக் கடிதம்! – பிரிகேடியர் துர்க்கா
- யுத்தகளத்தில் தீரமுடன் போராடிய பிரிகேடியர் ஆதவன்.!
- சண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்! – பிரிகேடியர் விதுசா..
- சமர்க்களங்களின் துணை நாயகன் பிரிகேடியர் தீபன்!
- ஆனந்தபுர மண்ணில் ஆட்லறி நிலைகளை உருவாக்கிய பிரிகேடியர் மணிவண்ணன்!
- கேணல் நாகேஸ்
- கேணல் வீரத்தேவன்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமே ஆன்ரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂- என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி - காணொளி
என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி - காணொளி 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்கப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி பிரிகேடியர் தீபன், பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும். https://www.thaarakam.com/news/3915f4a1-882f-47b5-a024-c1f0be81721dImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.