Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி, ராஜன் விஷ்வா (இந்தப் பக்கம் தலைக் கறுப்பைக் காணவில்லை!)🎉🎉🎉
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி💐
  3. பெண்களுக்கும் வாயுத்தொல்லை வருவதுண்டா!😤🤨 அப்படியென்றால் வயது போய்விட்டதாக்கும்!😲
  4. வடை வேறு. வடகறி வேறு. இடியப்பத்துடன் வடையைச் சாப்பிடமுடியாது! ஆனால் வடகறியைச் சேர்த்துச் சாப்பிடலாம்😋
  5. கிச்சன் கீர்த்தனா: சன்டே ஸ்பெஷல் - சைதாப்பேட்டை வடகறி சென்னையின் முத்திரை! வடகறி... தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களுக்கே தெரியாத உணவு வகை. வடகறியைத் தவிர்த்துவிட்டுச் சென்னையின் சிறப்பு உணவு வகைகளைப் பட்டியலிட முடியாது. வடையின் மிச்சத்திலிருந்து செய்யப்படுவதுதானே வடகறி என்று நினைக்கப்பட்டாலும், இதற்கான செய்முறையே தனி. 65 ஆண்டுகாலமாக வடகறிக்குப் புகழ்பெற்ற சென்னை, சைதாப்பேட்டை ‘மாரி ஹோட்டல்’ உரிமையாளர் ‘வடகறி’ செய்முறையைப் பகிர்ந்துகொண்டார். தரமாகச் செய்யப்படும் இந்த வடகறி, மக்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்ததோடு திரைப்படப் பாடலிலும் இடம்பிடித்த பெருமையும் கொண்டது (சவாலங்கடி கிரிகிரி சைதாப்பேட்டை வடகறி…)! இட்லி - வடகறி காம்பினேஷன் என்ற முந்தைய வழக்கம் மாறி, இப்போது தோசை - வடகறி, இடியாப்பம் - வடகறி, பூரி - வடகறி, செட் தோசை - வடகறி காம்பினேஷன் சென்னை நகரின் பல உணவகங்களில் வழக்கத்தில் வந்துவிட்டது. என்ன தேவை? ஐந்து பேருக்கு வடகறி செய்ய... கடலைப் பருப்பு - அரை கிலோ பெரிய வெங்காயம் - அரை கிலோ (நறுக்கிக்கொள்ளவும்) புதினா - ஒரு கட்டு (சுத்தம் செய்து ஆய்ந்துகொள்ளவும்) இஞ்சி - 50 கிராம் பச்சை மிளகாய் - 50 கிராம் பூண்டு - 100 கிராம் ஏலக்காய் - 5 கிராம்பு - 5 பட்டை, லவங்கம் - 25 கிராம் சோம்பு - 50 கிராம் மஞ்சள் தூள் - 10 கிராம் (மல்லி) தனியாத் தூள் - 50 கிராம் மிளகாய்ப் பொடி - 50 கிராம் உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். கனமான சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடலைப் பருப்பு விழுதை பக்கோடா போலப் பொரித்து எடுங்கள். பின்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள். ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடி செய்து, இஞ்சி - பூண்டு பேஸ்ட்டுடன் கலந்துகொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதே எண்ணெயில் இஞ்சி - பூண்டு விழுது, பட்டை - சோம்பு பொடி கலவையை வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். ஒரு கொதிவந்ததும், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும், பொரித்து வைத்துள்ள கடலைப் பருப்பு பகோடாக்களை லேசாக உதிர்த்து சேர்த்து, அரை மணி நேரம் கொதிக்கவிடுங்கள். புதினா தூவி, இறக்குங்கள். இந்த வடகறியின் சுவைக்காகவே இன்னும் இரண்டு தோசை உள்ளே பூகும்! உடலுக்கு என்ன நன்மை? கடலைப் பருப்பு புரதச் சத்து கொண்டது. இது எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும்போது கொழுப்புச் சத்து சேர்ந்தாலும், இந்த வடகறியில் சேர்க்கப்படும் பிற பொருட்கள் செரிமானத்துக்குத் துணைசெய்கின்றன. உடனடி ஜீரணத்துக்கு உதவுகின்றன. காலை வேளையில் சாப்பிடும்போது அன்றைய நாள் முழுவதற்குமே எனர்ஜியைத் தருகிறது https://minnambalam.com/k/2019/03/24/3
  6. முனிவர்ஜீக்கும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  7. சில காதல் கவிதைகள் – போகன் சங்கர் 1 கடலை ஒன்றும் செய்யமுடியவில்லை அது கரையில் தனித்துவிடப்பட்ட காதலன் போல பேசிக்கொண்டே செல்கிறது. 2 நிலவொளியின் கீழே யாராலும் தொடப்படாமல் ஒரு வைரக்கல் கிடக்கிறது நான் பார்த்ததும் ஒரு நண்டு அதன் மேல் ஏறிப் போனது மவுனம். வைரத்தை அது சுரண்டும் ஒலி மட்டும். 3 நீங்கள் அவளிடம் இதைத் தெரிவித்துவிடக் கூடாது பின்னப்படாத ஒரு ஆடையென இது அவள் வாழ்வில் கிடக்கட்டும் அவள் யாரென அறியா ஊரிலே இந்த ஆடை பின்னப்பட்டு அவள் கையில் கிடைக்கட்டும். 4 அவள் இப்போது காதலுக்கு வெகு தூரத்தில் இருக்கும் ஒரு ஊரில் இருக்கிறாள் வெகு தூரத்தில் இருக்கும் ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறாள் காற்றுக்காக சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறாள். அவளறியாமல் அவள் தலைமுடியைக் கோதும் குற்றவேலையை காற்று செய்துகொண்டிருக்கிறது அந்த அறையில் ஒரு கோப்பை தண்ணீரும் ஒரு பூனையும் அவளுடன் உள்ளன பூனை சலித்து அதன் இணையைத் தேடி வெளியே போகட்டும் நீங்கள் அதுவரை உங்கள் பாடல்களால் அவளது கோப்பைத் தண்ணீரை மதுவாக்கிக் கொண்டிருங்கள். 5 அன்று அவள் அணிந்து வந்த உடை அவளுக்குப் பொருந்தவே இல்லை அந்த குளிர் கண்ணாடியும். அவள் நகங்களை சரியாக வெட்டுவதில்லை சருமத்தைப் பேணுவதில்லை அவளது கைப்பை நகைக்கும் விதத்தில் இருந்தது அவள் தனது சரியான அளவில்லாத செருப்பு தடுக்கி இருமுறை விழுந்தாள். எனக்கு ஒரு காட்டுச் செடியை கையில் வைத்துக்கொண்டு தனித்து ஒரு சாலையில் நடப்பது போல இருந்தது. அதன் பெயரைச் சொல்லவரும் மனிதர்கள் வசிக்கிற ஊர்களிடமிருந்து விலகுகிற பாதைகளைத் தேர்ந்தெடுத்து நான் நடக்கிறேன் கவனமாக. 6 மழை ஒரு சரியான பின்புலமாய் இருந்திருக்கும் குளிரும் நதியும் கூட. உச்சி வெயில் நடந்து போய் நிழலுக்காக ஏங்கி நிற்கும் தினமாய் அது இல்லாமல் இருந்திருக்கலாம் மழை பின்னால் வந்தது அவள் சென்ற பின் புழுதி மணத்தைக் கிளப்பிக்கொண்டு ஒரு கலியாணத்துக்குத் தாமதமாக வந்து விட்ட புகைப்படக்காரனைப் போல. 7 அதிகாலையில் தனது நுரைத்தடத்தையும் அழித்துவிட்டு பெரிய கப்பலை நோக்கிச் செல்லும் சிறிய படகில் எப்போதும் நான் இருக்கிறேன். 8 ஒரு பெரிய குளத்தின் அருகே உறங்கிக் கொண்டிருக்கிறேன் குளத்தில் சில நட்சத்திரங்கள் எனக்குத் தெரியும். இரவில் ஒரு சைத்திரிகன் வருகிறான். அவனுக்கு எப்படியோ உன்னைத் தெரிந்திருக்கிறது. 9 குளிர்காலத்தின் பொன்னை எல்லாம் திரட்டி சரக்கொன்றை கோடையிடம் அளித்தது. நான் ஒரு கடிதம் எழுதினேன். எழுதவில்லை. நான் சொல்லிக்கொண்டேன். மழைக்காலத்தில் நீ வேறு விதமான கடிதங்களை எழுதுவாய் பனிப்புகையை ஒரு நாய்க்குட்டியைப் போல இழுத்துக்கொண்டு அவள் கண்களின் நிறத்தில் மினுங்கும் ஒரு சுலைமானித் தேநீரை அருந்தச் செல்லும் போது.. http://tamizhini.co.in/2019/03/18/சில-காதல்-கவிதைகள்-போகன்/
  8. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் இணையவனுக்கும் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய பகலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  9. புளித்த கள்ளா, புளிக்காத கள்ளா சேர்ப்பது? சாம்பாரா? சம்பலா? சாம்பாலாக இருக்காது என்பது நிச்சயம்!
  10. கிச்சன் கீர்த்தனா: வெள்ளை ஆப்பம் உடல் எடையைக் குறைக்க உதவும் ஆப்பம் இட்லி, இடியாப்பம் போல எளிதாக ஜீரணிக்கக் கூடிய நம்முடைய உணவு வகைகளில் ஆப்பத்துக்கும் முக்கிய இடமுண்டு. காலை, மாலை, இரவு என எந்த வேளைக்கும் ஏற்ற சரியான உணவு ஆப்பம். தற்போது, ஆப்பத்தில் பல வெரைட்டிகளைக் காட்டி வருகின்றன உணவகங்கள். வீட்டிலேயே ஆப்பம் செய்யலாம் என்றாலும், தோசை ஊற்றுவதைப்போல ஆப்பம் செய்வது அத்தனை எளிதல்ல. தோசையில் எண்ணெய் அதிகமாகப் பயன்படுத்துவோம். ஆனால், ஆப்பத்திலோ அதற்கு அவசியமில்லை. எப்படிச் செய்வது? முதலில் ஆப்பத்துக்கான மாவு தயாரிக்கும் முறை. தேவை: பச்சரிசி - 1 கிலோ தயிர் - 100 கிராம் உப்பு - 30 கிராம் முழு தேங்காய் - ஒன்று சமையல் எண்ணெய் - 50 மில்லி செய்முறை: பச்சரிசியைக் கழுவி சுத்தம் செய்து, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மீண்டும் தண்ணீரை இறுத்து, ஒரு தட்டில் வைத்து மின்விசிறியின் கீழ் காயவிடுங்கள். லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் அரைத்து, சல்லடையில் நன்கு சலித்துக் கொள்ளுங்கள். இனி, தேங்காயைத் துருவி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரே ஒரு முறை மட்டும் பால் எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பாலை அரைத்த மாவுடன் சேர்த்துக் கலந்து, கூடவே ஒரு கப் தயிரையும் சேர்த்து, கரண்டியால் நன்கு கலந்து, இறுதியாக உப்புச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். முதல் நாள் மாலையில் இதைத் தயாரித்து ஒரு சட்டியில் வைத்து மூடி, மறுநாள் எடுத்து உபயோகிக்க வேண்டும். அடுப்பில் ஆப்பச் சட்டியை வைத்து சூடானதும், துளி எண்ணெய்விட்டு, துணி கொண்டு சட்டி முழுவதும் எண்ணெயைப் பரப்பிவிட வேண்டும். பிறகு, முதல்நாள் தயாரித்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை ஒரு சுழற்று சுழற்றினால்... எல்லா பக்கத்திலும் மாவு உருண்டு ஓடி நிற்கும். ஒரு தட்டைக்கொண்டு சட்டியை மூடி, மிதமான தீயில் வைத்து நான்கு நிமிடங்கள் கழித்துத் திறந்தால், ஆப்பம் வெந்திருக்கும். அப்படியே எடுத்து விரும்பிய சைடிஷைத் தொட்டுச் சாப்பிடலாம். என்ன நன்மை? பெரும்பாலோர் தேங்காய்ப் பாலை மாவில் சேர்க்காமல் ஆப்பம் செய்வார்கள். தேங்காய்ப் பாலைத் தனியாகத் தயாரித்து ஆப்பத்துடன் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், மேற்படி முறையில் ஆப்பத்தைத் தயாரிக்கும்போது கூடுதல் சுவையுடன், உடலுக்கும் பலம் சேர்க்கும். தேங்காயில் 61 சதவிகிதம் நீரில் கரையாத நார்ச்சத்து உள்ளது. அதனால் தேங்காய் கலந்த உணவுகளைச் சாப்பிட்டால் விரைவாகப் பசிக்காது. இது சற்று தாமதமாகவே சர்க்கரையாக மாற்றப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களும் ஓரளவு இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாய்ப்புண், வயிற்றுப்புண், குடலில் உள்ள புண்களைக் குணப்படுத்தும் தன்மை தேங்காய்க்கு இருக்கிறது. https://minnambalam.com/k/2019/03/13/3
  11. தமிழீழ படைத்துறைச் செயலர் கேணல் தமிழேந்தி கேணல் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . உண்மையில் கேணல் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்( கார்த்திகைப்பூ) செடிகளும் , கொடிகளால் ஆன குடில்களும் ,வாழை, அன்னாசி,மரவள்ளி,தென்னை என பல வகை மரங்களாலும் சூழ்ந்த அழகிய இடமாகவே காணப்படும். அவரது படுக்கை அறையிலே ஒரு வேப்பமரப்பலகையினால் செய்யப்பட்ட கட்டிலும் ,பழைய துவாய் ஒன்றும், ஒரு சிறிய தலையணையும் , விரித்துப் படுக்க பழைய சாரம் ஒன்றும்,பின் பாய் ஒன்றும் இருக்கும். அவருடைய உடை வைக்கும் மர அலுமாரியில் 3 சோடி வரிச்சீருடை, சாரம்,ரீசேட்,சாதாரண சேட்டும் ,நீளக்காற்சட்டை, காலுறைகள் மட்டுமே இருக்கும். எப்போதும் எளிமையாகவே இருப்பார். வன்னியிலே இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த காலம். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை எறிகணை வலுவான யுத்தம் இடம்பெற்று வந்த காலம். அப்போது வன்னி கிழக்கு , வன்னி மேற்கு என இரண்டாக ஆளுகைப் பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தது . அக்காலப்பகுதியில் தமிழ்மொழி பற்றியும், தமிழர் வரலாறு பற்றியும் போராளிகளுக்கு கேணல் தமிழேந்தி அவர்கள் இரு பகுதிகளாகப் பிரித்து வகுப்பு எடுத்து வந்தார். அதுமட்டுமல்ல வாணிப நிலையங்களுக்கு தமிழ் பெயர் மாற்றத்தில் தொடங்கி குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டும் பணி வரை அதிமுக்கியத்துவம் செயற்பட்டார் . பின் 21ஆயிரம் தமிழ் பெயர் கொண்ட பொத்தகம் ஒன்றை பண்டிதர் பரந்தாமனின் உதவியுடன் எழுதி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 10 ஆயிரம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் மாற்றம் செய்யும் வேலையை வெற்றி கரமாக செய்து முடித்தார். இப் பெயர் மாற்றம் பணியில் மாவீரர் லெப்.கேணல் இளவாணனும் பெரும்பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய தொன்றாகும். தமிழீழ நிழலரசின் கட்டு மானங்களில் நிதி சார்ந்த கட்டுமானங்கள் அனைத்தையும் மிக நீண்ட கால நோக்குடன் செம்மையாக உருவாக்கினார். கேணல் தமிழேந்தி அவர்களின் சந்திப்பு ( கூட்டம்) என்றால் உரிய நேரத்திற்குள் மண்டபத்திற்குள் சென்று இருக்க வேண்டும். ஏனென்றால் சரியான நேரத்திற்கு சந்திப்புத் தொடங்கி விடும். இரண்டு நிமிடம் தாமதமானாலும் உள்நுழைய முடியாது. நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பொறுப்பாளர்களில் கேணல் தமிழேந்தி அவர்கள் முதன்மையானவர். கேணல் தமிழேந்தி அவர்களினால் உருவாக்கப்பட்ட பண்ணைகள் ( தோட்டம்) அனைத்தும் பிரமாண்டமானவை. அப்பண்ணைகளில் பழமரக்கன்றுகளைப் பார்க்க ஆசையாக இருக்கும். அதில் மாமரம் என்றால் மாமரத்தில் எத்தனை வகைகள் இருக்குமோ அத்தனையும் அங்கு இருக்கும். மரங்கள் பூத்துக் காய்க்கும் காலத்தில் இருந்த காலம் அப்போது நான் ஏன் பழமரங்களை தேர்ந்தெடுத்து நிறைய வைத்திருக்கின்றேன் என்றால் கள முனைகளில் நிற்கும் போராளிகள் அனைவருக்கும் தொடர்ச்சியாக பழங்களை அனுப்பவேண்டும் என்பதற்காகத்தான் என கேணல் தமிழேந்தி அவர்கள் அடிக்கடி கூறுவதை கேட்டிருக்கிறோம். அவருக்கு எப்போதும் களமுனைகளில் நிற்கும் போராளிகளின் நினைப்புத்தான். தமிழீழ நிதிப்பொறுப்பாளர் கேணல் தமிழேந்தி அவர்களின் சிறப்பியல்புகளில் எளினம்,உண்மை, நேர்மை, கடமை, நேரம் என்பவற்றை பார்க்கலாம். இதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே யாருக்கும் கொடுக்காத பொறுப்பு ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கேணல் தமிழேந்தி அவர்களுக்கு கொடுத்தார் என்றால் மிகையில்லை . முதன் முதலாக படைத்துறை செயலர் என்னும் பொறுப்பு கேணல் தமிழேந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே அவரது உண்மைக்கும் ,நேர்மைக்கும் கிடைத்த பரிசாகும். http://www.battinaatham.net/description.php?art=18893
  12. களம் ஒரு “கெத்தா” இருந்தால்தான் கண்டபடி விலைபேசி வாங்கும் நினைப்பு ரதியை மாதிரி எவருக்கும் வராது🤪
  13. கிச்சன் கீர்த்தனா: செட்டிநாடு சிக்கன் சூப்! உடனடி எனர்ஜிக்கு உதவும் சூப் நம் பாரம்பரிய சமையலில் முக்கியமானது ரசம். இந்த ரசத்தின் அடிப்படையில் தோன்றியதே சூப் எனலாம். நம்முடைய மிளகு ரசம் என்பது மிகவும் சத்து உள்ள சூப் என்றாலும், ஒவ்வொருவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு வகையான சூப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில் உடலில் உடனடி எனர்ஜிக்கு சிக்கன் சூப் உதவுகிறது. தேவை: சிக்கன் (எலும்புடன்) - அரை கிலோ சின்ன வெங்காயம் - 50 கிராம் சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று தக்காளி – ஒன்று இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 5 பல் பட்டை, லவங்கம் - தலா ஒன்று மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன் தனியாத் தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் கொத்தமல்லி தழை – சிறிதளவு எலுமிச்சைச் சாறு – தேவைக்கு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: சிக்கனை நன்றாகச் சுத்தம் செய்து வைக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, லவங்கம் போட்டுத் தாளித்த பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக்கொள்ளவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும், மிளகுத் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும். பின்பு கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப்பைப் பரிமாறவும். என்ன பலன்? சிக்கனில் புரதம், கொழுப்புச் சத்து அதிகம். மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள், இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற நினைப்பவர்கள், எடை குறைவாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு சிக்கன் சூப் உதவும். உடனடி எனர்ஜிக்கும் உதவும். https://minnambalam.com/k/2019/03/02/4
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழத்திருமகன்🎉🎉🎉
  15. நெடுக்ஸிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  16. இன்று தனது 11வது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடும் தமிழ் சிறி ஐயா பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்🎉🍻
  17. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  18. வலிகள்தான் மனதை அதிகம் கவர்கின்றன!
  19. தன்னையுண்ணும் ஒருவன் ராஜேஷ் ஜீவா நீண்ட நாட்களாக ஊர்ஊராக யாசித்தும் பசியாற எதுவும் கிடைக்காதவன் நெடிய யோசனைக்குப் பின் உண்பதற்குத் தன்னைத் தேர்ந்து கொண்டான் மலைக்குகை தைல ஓவியத்தில் தொல்குடியொருவன் கையிலேந்திய கூர்ஈட்டியை கைமாறாகப் பெற்று மார்புச் சதையை கிழித்துச் சுவைத்தவன் அடுத்ததாக தன் கெண்டைக்காலில் விளைந்திருக்கும் கொழுத்த திரட்சியினை அறுத்துத் தின்கையில் கடல்கன்னியர் சிப்பிகளை ஆசை ஆசையாகப் பிரித்துச் சாப்பிடுவதை நினைத்துக் கொண்டான் தாது வருஷத்துப் பசியாற்ற உதரத்தைத் தேர்ந்த அவனுக்கு பின்னர் தன்னை உண்பதற்கான அவசியம் நேரவில்லை. http://vallinam.com.my/version2/?p=5886
  20. வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் – காஸ்மிக் தூசி என் தோளில் அசைந்தாடியபடி பயணத்தில் உடன் செல்கிறது விக்கிரமாதித்தன் விட்டுச்சென்ற வேதாளம் விக்கிரமாதித்தன் சுமந்து பழகியது ஆனால் விக்கிரமாதித்தன்தான் வேண்டும் என்பதில்லை. வேதாளத்துக்கு தேவைப்படுவதெல்லாம் தொங்கிச்செல்ல ஒரு தோள். கூரிய நகங்களால் கூந்தலை கோதி சிக்கெடுத்துக்கொண்டே சுமந்து செல்பவரின் காலடியின் கதிக்கு ஏற்ப ஏதாவதொரு பாடலை மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டே வரும் வழிநெடுக்க. அவ்வப்போது பிசிறடிகும் குரலை மட்டும் பொருட்படுத்தவில்லை என்றால் போதும் பெரிய தொந்தரவு என ஏதுமில்லை பாடல்கள் தீர்ந்து பயணம் நீண்டு விட்டாலும் பிரச்சினையில்லை. சலிப்பில்லாமல் எதையாவது பேசிக்கொண்டே வரும் என்பதால் வழித்துணைக்கு மிகவும் ஏற்றது. வேதாளத்துடன் செல்வதற்கான விதிகள் மிகவும் எளியவை. மெதுவாகச் செல்வதை வேதாளம் விரும்பாது கால் தடுமாறும் என்பதால் ஓடுவதும் கூடாது எடை அழுத்தி தோள்பட்டை கடுக்கும்போது மட்டும் கீழிறக்கி அடுத்த தோள்பட்டைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். வேதாளத்தின் பேச்சில் தன்னிலை மறந்து தவறிப்போய் தரையில் சுருண்டு படுத்திருக்கும் சர்ப்பத்தையோ காய்ந்த இலைகளுக்குள் மறைந்திருக்கும் நரகலையோ மிதித்துவிடாமல் நடக்க வேண்டும். முருங்கைமரம் அடர்ந்த வழியில் செல்லும்போது மட்டும் இன்னும் சற்று எச்சரிக்கை தேவை. கவனம் இன்றி நாம் சொல்லும் பிழையான பதிலில் கோபமுற்று, சடாரென பாய்ந்து ஏறிக்கொள்ளும் மரத்தில். பிறகு மரமேறி, சமாதானம் கூறி கட்டுக்களை வெட்டி வீழ்த்தி தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கும் வேதாளத்தை நிதானமாய் இறக்க வேண்டும். கோபம் குறையவில்லை என்றால் ஒரு முறை மானசீகமாய் கொஞ்சி மன்னிப்பு கோரினால் போதும். உற்சாகமடைந்து உடனே வந்து ஏறிக்கொள்ளும் தோளில். வழுக்கும் கோந்து கொண்டது கம்பளிப்பூச்சிகள் அடர்ந்தது எளிதில் உடையக்கூடியது, என்பதால் முருங்கை மரத்திடமும் கவனம் அவசியம் இவ்வளவு பிரச்சினைகளை வைத்துக்கொண்டு ஒரு வேதாளத்தை ஏன் சுமக்க வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம் யாருமில்லாமல் தனியாக செல்வதற்கு பதில் வழித்துணைக்கு ஒரு வேதாளத்தையாவது அழைத்துபோகலாம்தானே? எனக் கேட்டு நட்பாய் சிரிக்கிறது வேதாளம் சரி போகிறது நம்மை விட்டால் வேறு எவர்தான் வேதாளத்தை வெளியே அழைத்துச் செல்வது? https://padhaakai.com/2019/01/09/cosmic-thoosi-poetry/
  21. கரும்பாக இனிக்கும் கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
  22. தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...! வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது! வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது. கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது! உயிரணைந்து போனாலும் சரணடையாத புலிகள் கட்டளைக்குப் பணிய மறுக்கின்றனர். சரணடையாவிட்டால் கப்பலைத் தாக்கப் போவதாக மீண்டும் ஒரு கட்டளை! புலிகளின் முகங்களில் கேலிப்புன்னகை! கப்பல் வெடித்துச் சிதறுகிறது! விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியையும் தோழர்களையும் உயிருடன் பிடித்துவிடலாம் என்ற பாரதத்தின் நப்பாசை கப்பலுடன் சேர்ந்து சிதறிப்போகிறது! கிட்டுவும் அவருடன் வந்த 12தோழர்களும் நிலையாமை என்ற பூலோக வாழ்வுக்கு விடை கொடுத்துவிட்டு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நின்று நிலைக்கும் பேரின்ப நிலையை எட்டுகின்றனர். ஆம்! கிட்டுவும் தோழர்களும் வங்கக்கடலில் சங்கமமாகி ஒரு மாபெரும் தியாக காவியம் வீர வரிகளால் எழுதி விட்டனர்! வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - இது வள்ளுவன் குறள். ஆகாய நீர், காற்று, பூமி, நெருப்பு எல்லாமே இந்தியாவை பார்த்து அகத்தை நகைக்கவில்லை! எல்லா மூலைக்கும் கேட்கும் விதமாக எள்ளி நகையாடின. எப்படியிருப்பினும் - நாம் மூத்த தளபதி கிட்டுவை இழந்தோம்! கிட்டு - எதிரிகளைக் கலங்க வைக்கும் ஒரு ஒப்பற்ற வீரத் தளபதி! கிட்டுவின் அணி வருகிறது என செய்தி கிடைத்தாலே சிங்களப் படை அஞ்சிப் பின்வாங்கும் அளவுக்கு அவனிடம் ஒரு ஆளுமை கொப்பளித்தது! களத்தில் கிட்டு இறங்கவிட்டால் சக போராளிகளிடம் பலம் பன்மடங்கு பெருகிவிடும். கிட்டு ஒரு அரசியல் வாதி! விடுதலையுணர்வை மக்களுக்கு விதைப்பது, போராட்டப் பணிகளில் மக்களை ஈடுபடுத்துவது, தெளிவான அரசியல் பார்வையை தோழர்களுக்கு ஊட்டுவது, எந்நேரமும் மக்களோடு மக்களாக உறவாடுவது - இவையெல்லாம் அவன் அரசியல் ஆளுமை! கிட்டு ஒரு ராஜதந்திரி! இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த போது இந்தியாவிலேயே தலைமறைவாக இருந்து கொண்டே எமது போராட்டத் நியாயங்களை வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு விளக்கினான். ஆங்கில வெளியீடுகள் மூலம் பரப்புரை மேற்கொண்டான். இலண்டனில் இருந்து கொண்டு பன்னாட்டு போராட்ட அமைப்புகளுடனும் தொடர்புகளை மேற்கொண்டான். கிட்டு ஒரு ஊடகவியலாளன்! பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி எனப் பல்வேறு ஊடகங்களை ஆரம்பித்து தானே நெறிப்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஊடகப் பலம் சேர்த்தவன் கிட்டு. கிட்டு ஒரு புகைப்படக் கலைஞன்! கிட்டுவின் கழுத்தில் என்றுமே இணைபிரியாமல் இருப்பவை இரண்டு. ஒன்று - சயனைட் குப்பி! மற்றது புகைப்படக் கருவி! எந்த நெருக்கடியான சண்டையிலும் அவன் ஒரு கையில் துப்பாகியுடனும் மறுகையில் கமெராவுடனும் நிற்பான். எந்த ஒரு சம்பவத்தையும் அவன் ஆவணப்படுத்த தவறுவதில்லை. கிட்டு ஒரு ஓவியன்! அவனின் ஓவியங்களில் கற்பனைகளும் கனவுகளும் சிறகடிக்கும்! ஆத்மார்த்த உணர்வுகள் கொப்புளிக்கும் விடுதலையுணர்வு வீறுகொண்டெழும்" அவனின் ஓவியங்கள் வெறும் படைப்புக்களல்ல! மனிதரை செயல் நோக்கி உந்தித்தள்ளும் விசைகள்! கிட்டு ஒரு கவிஞன்! அவனின் கவிதைகளில் மண் மணக்கும்! வல்லை வெளிப் பூவசரசும், உடல் தழுவும் உப்புக்காற்றும் மெல்ல நடை பயிலும். கள்ளிறக்கும் கந்தனும், மீன்பிடிக்கும் மரியானும் சமத்துவம் தேடி அவன் கவிதைகளில் சங்கமிப்பார்கள். காதல் உணர்வு கடல் கடந்தும் சிறகடிக்கும்! இப்படி இப்படியாக - கிட்டு ஒரு பன்முக ஆளுமையின் அவதாரம்! ஒரு விடுதலைப் போராட்டத் தளபதியின் தலைசிறந்த முன்னுதாரணம்! இந்தி அரசே! அந்த அற்புதத்தை வங்கக்கடலில் வைத்து அழித்தாய்! இப்போது கேட்கிறோம்! அவனை உன்னால் எமது நெஞ்சிலிருந்து அழிக்க முடியமா? எம், இதய நரம்புகளில் இன்றும் விடுதலை உணர்வை மீட்டிக்கொண்டிருக்கும் அவனின் நினைவுகளை அழிக்க முடியுமா? முடியாது! உன் இலட்சக்கணக்கான படையினராலும் முடியாது! உன் பலம் வாய்ந்த புலனாய்வு அமைப்புக்களாலும் முடியாது! ஏனெனில் - கிட்டு எங்கள் மண்ணில் ஒவ்வொரு துகள்களிலும் உயிர் வாழ்கிறான்! செண்பகப்பெருமாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த சிறப்பு தளபதியும்,தேசியத் தலைவரின் உற்ற தோழமையுமான தளபதி கேணல் கிட்டு உட்பட ஏனைய பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்...! தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 26 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ||தாய்மண்ணின் நினைவுகளுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்…… கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) லெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்) மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை) கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்) கடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்) கடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை) கடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்) கடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்) தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” http://www.battinaatham.net/description.php?art=18367

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.