Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வேண்டும் August 28, 2025 12:33 pm இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் HIV/STI தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆணுறை பயன்பாடு குறித்து அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. தற்போதைய பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்கு வயதுக்கு ஏற்ற, அறிவை வழங்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் கூறியுள்ளது. முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. தற்போது, அறிவியல் மற்றும் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடப்புத்தகங்கள் குறிப்பிட்ட உயிரிமருத்துவ தடுப்பு முறைகளை விவரிக்காமல், “பொறுப்பான பாலியல் நடத்தை” மூலம் HIV ஐத் தடுக்க முடியும் என மட்டுமே குறிப்பிடுகின்றன என்று ஆலோசகர் வெனரியாலஜிஸ்ட் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். ஆணுறை ஊக்குவிப்புக் குழுவின் சமீபத்திய மதிப்பாய்வின் பிரகாரம், இந்த விவரங்கள் இல்லாதது மாணவர்களுக்கு முக்கிய தடுப்பு உத்திகள் குறித்து போதுமான அளவு தகவல்களை அளிக்கவில்லை என்பதை தேசிய எய்ட்ஸ் கவுன்சிலின் IEC வலியுறுத்தியது,” என்று அவர் கூறியுள்ளார். 2024 உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் (GSHS) கண்டுபிடிப்புகள் சீர்திருத்தத்தின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 63% மாணவர்கள் மட்டுமே HIV அல்லது AIDS பற்றி கேள்விப்பட்டதாகக் கூறியுள்ளனர். 2016 இல் 77% ஆக இருந்த இந்த தரவு தற்போது சரிவை சந்தித்துள்ளது. HIV தொற்றைத் தவிர்ப்பது எப்படி என்று கற்பிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2016 இல் 67.1% ஆக இருந்தது. 2024 இல் வெறும் 44.2% ஆகக் குறைந்துள்ளது. பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட மாணவர்களில் 4.6% பேர், சரியான நேரத்தில் கல்வி கற்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள். இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய, சுகாதார மேம்பாட்டு பணியகம் யுனெஸ்கோ வழிகாட்டுதல்களுடன் இணைந்து, வாழ்க்கையைக் கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் ஒரு புதிய விரிவான பாலியல் கல்வி (CSE) தொகுப்பை உருவாக்கி வருகிறது. ஓர் உயிரியல்-உளவியல் சமூக மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த திட்டம் மாணவர்கள் நடத்தை அபாயங்களை சந்திப்பதற்கு முன்பு வயதுக்கு ஏற்ற அறிவு மற்றும் திறன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், பாடசாலை சுகாதாரத் திட்டங்கள் 264, STD கிளினிக்குகளால் நடத்தப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் 54,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடைந்ததாக மருத்துவர் தர்மகுலசிங்க குறிப்பிட்டார். பாடத்திட்ட சீர்திருத்தத்துடன் ஆசிரியர் பயிற்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். “ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஆலோசகர்கள் எச்.ஐ.வி தடுப்பு உத்திகள் குறித்த பயிற்சி பெற வேண்டும். இதனால் அவர்கள் நம்பிக்கையுடனும் நிலைத்தன்மையுடனும் பாடங்களை நடத்த முடியும்,” என அவர் மேலும் கூறினார். அதேவேளை , இந்த முன்னேற்றங்களுக்கு கல்வி அமைச்சு இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. https://oruvan.com/awareness-about-condom-use-needs-to-be-included-in-sri-lankas-school-curriculum/
  2. சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படுவது அவரது சுயநலத்தையும் பெற்றுக் கொண்ட பணப்பெட்டிக்காகான விசுவாசத்தையும் காட்டுகின்றது. நல்லாட்சி காலத்தில் ரணிலுக்கு முண்டு கொடுத்து ஆட்சியில் நிழல் ஆட்சியாளர்களாக இருந்த இவர்கள் அன்றும் ரணிலைக் கொண்டு தமது தேவைகளையே நிவர்த்தி செய்து இலட்சாதிபதியாகினர். தற்போது ரணில் கைதானவுடன் அனைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடுதலைக்காக போராடுகின்றனர். இது ஊழல்வாதிகளான தமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இருக்கின்றது. அந்தவகையில் ரணிலின் விடுவிப்பில் அவரது நோயின் தன்மையே தாக்கத்தை செலுத்தியது. எனவே மக்களின் நலன்களையும் அவர்களது சொத்துக்களையும் யார் துஷ்பிரயோகம் செய்தாலும் அவர்களுக்கு இந்த ரணிலின் கைது பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=338624
  3. செம்மணி செல்லவுள்ளார் ஜனாதிபதி? 28 Aug, 2025 | 10:51 AM யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் முதலாம் திகதி வருகை தரவுள்ள ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக சாத்தியங்கள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார். யாழில். புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, ஊடகவியலாளர் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு முதலாம் திகதி ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்படும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும். அது ஜனாதிபதி வருகை தரும் நாள் அன்றோ , அதற்கு முதலோ பின்னரோ நடைபெறலாம். அதனை எப்ப என தற்போது உறுதியாக கூற முடியாது. ஆனாலும் காணிகள் விடுவிக்கப்படும் என்பது நிச்சயம். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிடுவாரா என்பதனையும் தற்போது நிச்சயமாக கூற முடியாது. சில வேளைகளில் அவற்றை பார்வையிட சந்தர்ப்பம் உண்டு என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223557
  4. களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளராக வைத்தியர் நந்தகுமார் இன்று கடமையேற்பு 28 Aug, 2025 | 12:20 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் கனகராஜா நந்தகுமார் இடமாற்றம் பெற்று, களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளராக நேற்று புதன்கிழமை (28) கடமையேற்றுக்கொண்டார். வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு சுகாதார நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றிய அனுபவம் மிகுந்த இவர் முன்னதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என பல பதவிகளை வகித்துள்ளார். அத்துடன் இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சுகாதார நிர்வாகத்துறையில் கடமையாற்றியதோடு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிரேஷ்ட மருத்துவ நிர்வாகியாக சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223564
  5. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதி கோரி ஆலையடிவேம்பில் “நீதியின் ஓலம்” கையெழுத்துப் போராட்டம் 28 Aug, 2025 | 11:58 AM சர்வதேச நீதி கோரும் போராட்டமான 'நீதியின் ஓலம்' (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது கடந்த சனிக்கிழமை (23) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பமானது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று (27) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாச ஆரியதாச மற்றும் பிரதி தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி, பிரதேச சபை உறுப்பினர்களான கதிகரன் (சீனு), சுமந்தி எம்.எஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவிக்கையில், இது, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் செம்மணி போன்ற அவலங்களுக்கும் வீரமுனை, திராய்க்கேணி, உடும்பன்குளம், கல்முனை, காரைதீவு போன்ற பல இடங்களில் நடந்த படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கும், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறைகள்தான் பொருத்தமானது. எனவே எமது மக்களும் அதைத்தான் கோருகிறார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் மக்களின் கையெழுத்துகளுடனான கோரிக்கைகளை ஐ.நா மன்றத்திற்கு அனுப்புவதற்கானதே இந்த கையெழுத்துப் போராட்டம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223565#google_vignette
  6. வேலணையில் தீ! adminAugust 28, 2025 மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால், வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது. இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ் மாநகர சபையின் தீயணைப்பி வாகனம் அப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடும் காற்றுக் காரணமாக பெரும் சுடர்விடு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் பலமணி நேரம் போராடிய கட்டுப்படுத்தினர். இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர்கதையாகி இருக்கின்ற நிலையில் குறித்த சட்டவிரோத செயலைச் செய்யும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது பிரதேசத்தின் அதிகாரிகள் திணறிவருகின்றனர். பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள குறித்த பகுதிக்கு பருவ காலங்களில் வெளி நாடுப் பறவைகள் அதிகளவில் வருகை தரும் அவை தமது இனப்பெருக்கங்களை செய்வதும் வழமை. இவ்வாறு தீ வைக்கப்படுவதால் பறவைகள் சரணாலயமும் கேள்விக்குறியாக்கியுள்ளது இதேநேரம் இவ்வாறு தொடர்ச்சியாக புற்றரைகள் தீவைக்கப்படுவதால் அந்த புற்களை உணவாக கொள்ளும் கால்நடைகளும் உணவின்றி குடிமனைகளுக்கு செல்லும் நிலையும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219693/
  7. யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்! adminAugust 28, 2025 ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 01ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க பயணம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மறுநாள் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். https://globaltamilnews.net/2025/219695/
  8. வட- கிழக்கில் சர்வதேச நீதி கோரிய போராட்டம்; தமிழர் தேசமாக அணிதிரள்க – யாழ்.பல்கலை ஒன்றியம்! சர்வதேச நீதி கோரிய மாபெரும் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ். ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியிலே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு தற்காலம் வரையிலும் பல்வேறுபட்ட ஆக்கிரமிப்புகளுக்கு தமிழர் தாயகமானது முகம் கொடுத்து வருவதுடன் அந்த காலப்பகுதியிலே எமது பல உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக இன்றளவும் அவர்களது உறவினர்கள் அவர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். அதில் நிறைய தாய்மார்கள் இறந்தும் கூட இருக்கின்றனர். இன்றும் நம் மக்கள் வாழ்கின்ற நிலப்பகுதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள், சிங்கள பௌத்தமயமாக்கல், தமிழர்களுடைய பூர்வீக காணிகள் விடுவிக்கப்படாமை என அதிகார ரீதியாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகின்றமையானது எங்கள் மக்களுக்கான நீதி இந்த நாட்டில் தொடர் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றமையையே குறிக்கின்றது. தமிழ் மக்கள் தங்கள் தாயக பகுதியில் அரசியல் கலாச்சார பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவதையும் எமக்கான நீதி மறுக்கப்படுவதையும் நாம் உரத்துச் சொல்வதே போராட்டங்களின் தார்மீக நோக்கமாகும். இன்றளவும் தமிழர் நிலங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளேயே இருக்கின்றன. வலிகாமம் கிழக்கு காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டு விடுவிக்கப்படாத நிலையிலேயே எங்கள் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த வேளையில் முத்தையன்கட்டு கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இராணுவத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டமை அரசினுடைய சர்வாதிகாரத்தன்மையினையே வெளிப்படுத்துகின்றது. தமிழ் மக்கள் கேட்பதற்கு யாருமற்ற எதிலிகளாக சொந்த நிலத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆட்சிக்கு வரும் முன் அரசியல் கைதிகளின் விடுதலையை பற்றி கதைத்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி அரசியல் கைதிகளை விடுவிக்கமுடியாது என்று சொல்லியிருப்பது என்பது அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையின்மையையே காட்டுகின்றது. கொக்குத்தொடுவாய் மற்றும் செம்மணி மனிதபுதைகுழிகளில் இருந்து தமிழ் சமூகத்தின் மீதான இனப்படுகொலை வெட்ட வெளிச்சத்துக்கு வருவது தெரிந்தும் எதுவித நீதியும் இதுவரை எட்டப்படவில்லை. மனித புதைகுழி பற்றி சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் தங்கள் சொந்த நிலங்களுக்காக போராடுபவர்கள் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் அதிகாரத்தின் அதி உச்ச கொடூர போக்கையே காட்டுகின்றது. இந்த வேளையில் வீதி எங்கும் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதுவித நீதியுமற்று போராடி வருகின்றனர். யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் நீதிக்கான தவிப்புக்கள் தணியப்படவில்லை. அவர்களுக்கான நீதி மாறி மாறி வரும் எந்த ஒரு அரசாங்கத்தாலும் வழங்கப்படவில்லை வழங்கப்படாது. இதனாலேயே வரும் ஆவணி 30 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தங்கள் பிள்ளைகளை தேடி சர்வதேச நீதி விசாரணை கோரி போராட முனைந்துள்ளனர். வடக்கில் கிட்டுப்பூங்காவிலிருந்து செம்மணி வரையிலும் கிழக்கில் கல்லடிப்பாலத்திலிருந்து காந்திப்பூங்காவரையிலும் சர்வதேச நீதிக்கான மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்;. யாழ். பல்கலைக்கழக மாணவர்களாக அவர்களது போராட்டத்திற்கு முற்றுமுழுதான ஆதரவினை வழங்குவதுடன் பக்கபலமாகவும் இருப்போம் என்று சொல்லிக் கொள்கின்றோம். வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தேசமாக போராட்டக் களத்திற்கு நாங்கள் அணி திரள வேண்டும் என்று கோரிக்கை வைப்பதுடன் இந்திய அரசியலில் ஆர்வம் செலுத்தும் எங்கள் தமிழ் இளந்தலைமுறையினர் எங்கள் மக்களின் பிரச்சினைகளில் பெரிதும் அக்கறையின்றி இருப்பது மனவருத்தத்திற்குரிய விடயமாகவே காணப்படுகின்றது. எனவே எங்கள் நிலத்தினுடைய அரசியலை புரிந்து கொண்டு எங்கள் மக்களுக்காக காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய உறவுகளுக்காக போராட்ட களத்திற்கு அனைவரும் ஒன்று கூடி வரவேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கேட்டுக் கொள்கின்றோம் என மேலும் தெரிவித்தனர். https://akkinikkunchu.com/?p=338540
  9. நெல்லியடியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் பணம் கொள்ளை ; 10 சந்தேகநபர்கள் கைது 27 Aug, 2025 | 11:10 AM வெளிநாட்டிலிருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையிட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (26) 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் நெல்லியடி பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணயதாள்கள் உள்ளிட்ட பணத்தினையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதையறிந்து, இந்த விடயம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த நபரின் வீட்டில் வேலை செய்யும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் போது, இருவரும் வெளிநாட்டு பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக கொள்ளையிட்டதாகவும், அந்த பணத்தினை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வங்கியொன்றில் வெளிநாட்டு பணங்களை இலங்கை ரூபாவிற்கு மாற்றியதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை, திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 08 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட பணத்தில் சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான பணத்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஏனைய பணத்தினை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/223472
  10. யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா 27 Aug, 2025 | 11:30 AM அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக நடந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். சிட்னி மற்றும் மெல்போர்னில் இடம்பெற்ற இரண்டு யூத விரோதத் தாக்குதல்களை ஈரான் அரசு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில், அவுஸ்திரேலியா ஈரானியத் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு வெளிநாட்டு தூதரை அவுஸ்திரேலியா நாடு கடத்துவது இதுவே முதல் முறை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தாக்குதல்களின் பின்னணி அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ASIO) திரட்டிய புலனாய்வுத்துறை தகவல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபரில் சிட்னியில் உள்ள யூத உணவு நிறுவனம் ஒன்றின் மீதும், டிசம்பரில் மெல்போர்னில் உள்ள ஒரு யூத தொழுகைக்கூடத்தின் மீதும் நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல்களுக்கு ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) பின்னணியில் இருந்தது என அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் இந்த தாக்குதல்களை "ஒரு வெளிநாட்டு நாடால் அவுஸ்திரேலிய மண்ணில் திட்டமிடப்பட்ட அசாதாரண மற்றும் ஆபத்தான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்" என்று வர்ணித்துள்ளார். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். ஈரான் - அவுஸ்திரேலிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளை அவுஸ்திரேலியா நிறுத்தி, அங்குள்ள தனது இராஜதந்திரிகளை வேறு நாட்டிற்கு இடமாற்றம் செய்துள்ளது. அத்துடன், ஈரானில் உள்ள அவுஸ்திரேலியர்கள் பாதுகாப்புடன் வெளியேற முடியுமானால் விரைவில் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க அவுஸ்திரேலியா அண்மையில் எடுத்த முடிவுக்குப் பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக அதிகரித்துள்ள வெறுப்புத் தாக்குதல்களை இது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. https://www.virakesari.lk/article/223473
  11. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான 50 வீத வரி இன்று முதல் அமுல் ! 27 Aug, 2025 | 09:57 AM அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. அமெரிக்க ஜனாதிபதியாக nடானால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், ஏனைய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்ததுடன் அந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் மசகு எண்ணெய், இராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு இன்று ( ஆகஸ்ட் 27) முதல் அமுலுக்கு வந்துள்ளது. எனவே,அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு இன்று முதல் 50 சதவீதமாக அதிகரிக்கின்றது. இது குறித்து, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆகஸ்ட் 27 ஆத் திகதி (அதாவது இன்று) அதிகாலையில் இருந்து விற்பனைக்காக அமெரிக்காவிற்குள் இறக்குமதியாகும் மற்றும் அமெரிக்காவில் உள்ள களஞ்சியசாலைகளில் இருந்து விற்பனைக்காக வெளியேறும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு பொருந்தும். அதே சமயத்தில், 27 ஆம் திகதி அதிகாலைக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்ட இந்திய பொருட்கள், நடுவழியில் கப்பலில் வந்து கொண்டிருக்கும் பொருட்கள் ஆகியவற்றுக்கு 25 சதவீத கூடுதல் வரி பொருந்தாது. இருப்பினும், செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்பு அமெரிக்காவில் பயன்படுத்த அவற்றுக்கு ஒப்புதல் பெறுவதுடன், அமெரிக்க சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரிவிதிப்பால், புடைவை, தைத்த ஆடைகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், இறால், தோல், காலணி, விலங்கு பொருட்கள், இரசாயனங்கள், மின்சார எந்திர சாதனங்கள் ஆகிய துறைகள் பாதிக்கப்படும். ஆனால் மருந்து பொருட்கள், எரிசக்தி பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும். கடந்த ஆண்டு வர்த்தக மதிப்புப்படி, அமெரிக்காவுக்கு 4 ஆயிரத்து 820 கோடி டொலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனவே, அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால், 4 ஆயிரத்து 820 கோடி டொலர் மதிப்புள்ள இந்திய பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று இந்திய மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவை தவிர, பிரேசில் மட்டுமே 50 சதவீத வரியை எதிர்கொள்கின்றது. சீனா 30 சதவீத வரியையும், மியான்மர் 40 சதவீத வரியையும் எதிர்கொள்கின்றன. இந்திய பொருட்களுக்கு வரி உயர்வு அமுலுக்கு வரும் வேளையில், சீனாவுக்கும் 200 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது கடந்த ஏப்ரல் மாதம், சீன பொருட்கள் மீதான வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தினார். ஒருகட்டத்தில் 150 சதவீத வரி அளவுக்கு உயர்த்தினார். அதேபோல் சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரியை அதே அளவுக்கு உயர்த்தியது. இருதரப்பிலும் வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை உருவானது. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம் ஏற்பட்டது. சீனாவின் அரியவகை புவி காந்தங்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும், அமெரிக்க தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை வாபஸ் பெறவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 55 சதவீதமாக சீனா குறைத்தது. சீன பொருட்கள் மீதான வரியை 32 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம், நவம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது. இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில், சீனாவுக்கு இந்த பகிரங்க எச்சரிக்கையை தற்போது டிரம்ப் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/223461
  12. முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு ! இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 07.08.2025 அன்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் நால்வரை கைது செய்த ஒட்டுசுட்டான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை கடந்த 19.08.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பாக ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகிய நிலையில், இராணுவ சிப்பாய் நால்வரும் நேற்று வரை (26) விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். குறித்த வழக்கு நேற்று (26) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மூத்த சட்டத்தரணி கெங்காதரன், உயிரிழந்த பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் சமர்ப்பணங்களை முன்வைத்தார். இந்த வழக்கில் இராணுவ சிப்பாய்களுக்கான பிணைக் கோரிக்கை இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட நிலையில், கடும் நிபந்தனைகளின் பின்னர் குறித்த இராணுவ சிப்பாய்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சாட்சியங்களை அச்சறுத்தக்கூடாது என்றும் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்கள் செல்ல முடியாது என்றும் உத்தரவிட்டார். குறித்த வழக்கு 30.09.2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmetjy21z001mo29ng7gvy3ks
  13. மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்! adminAugust 27, 2025 யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து , அராலி சந்தி , மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று , இரவு மண்டைதீவில் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன. மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மூடப்பட்ட கிணற்றுக்கு முன்பாக பிரதான தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து , கிணற்றை சுற்றி தீபங்கள் ஏற்றப்பட்டு , மூடப்பட்ட கிணற்றின் மேல் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து , படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் உருவ படங்கள் அவ்விடத்தில் வைக்கப்பட்டு , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது https://globaltamilnews.net/2025/219648/
  14. ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிடின் தனியார் வைத்தியசாலைக்கு சென்று அதைச் செய்யும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார். “அவரது இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்லது. பிணை வழங்கப்பட்டதால் அறுவை சிகிச்சைக்காக அவர் விரும்பும் வைத்தியசாலைக்கு செல்லலாம். தேசிய வைத்தியசாலையில் காத்திருப்பு பட்டியல் சில நேரங்களில் சுமார் 3 ஆண்டுகள் ஆகும். எனவே, அவர் தனது சொந்த செலவில், விரும்பும் வைத்தியசாலையில் அதை விரைவாகச் செய்ய முடியும். தற்போது, அவருக்கு கரோனரி தமனிகளில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு நீரிழப்பும் உள்ளது. அந்த நிலை படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில், அவரது இருதயம் பலவீனமாக இருப்பதைக் கண்டறிய முடிந்தது. அதை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.” என்றார். https://www.samakalam.com/ரணிலுக்கு-உடனடியாக-இருதய/
  15. தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! ஆட்சேபனையின் ஒரு பகுதி ஆங்கிலத்திலும் அதன் மறு பகுதி தமிழிலும் சமர்ப்பிப்பு! adminAugust 27, 2025 வலி. வடக்கு பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் உறுப்பினரான தன்னை கடிதம் மூலம் கட்சியின் பொது செயலாளர் இடைநிறுத்தியமையை சவாலுக்கு உட்படுத்தி யாழ் . மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேச சபை உறுப்பினர், சுமந்திரன் தன்னை எந்த அடிப்படையுமற்று மத்தியக்குழுவின் தீர்மானம் எதுவுமின்றி கட்சியில் இருந்து தன்னிச்சையாக நீக்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கடந்த தவணை குறித்த வழக்கில் முன்னிலையான தமிழரசு கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் ஆகியோர் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையினை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர். குறித்த ஆட்சேபனைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தமது பதில் ஆட்சேபனையை பிரதேச சபை உறுப்பினர் தாக்கல் செய்திருந்தார். அதில் குறித்த கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனையானது ஒரு பகுதி ஆங்கிலத்திலும் அதன் மறு பகுதி தமிழிலும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது, யாழ்ப்பாணத்தில் நீதி நிர்வாக மொழி தமிழ் ஆகையால் முழுமையாக தமிழிலேயே ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட வேண்டும் என பிரதேச சபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்சேபனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. https://globaltamilnews.net/2025/219646/
  16. பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5ஆயிரம் தண்டம்! adminAugust 27, 2025 பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு நீதிமன்று 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் சந்தையில் வெற்றிலை மென்று , பொது இடத்தில் துப்பிய குற்றச்சாட்டில் , அவருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையான வியாபாரி தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை எச்சரித்த மன்று 5ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. https://globaltamilnews.net/2025/219638/
  17. சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு! சாவகச்சேரி நகர சபைக்கும், சாவகச்சேரி பிரதேச சபைக்கும் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகளை இரத்துச் செய்து, அவர்கள் போட்டியிட்ட வட்டாரங்களில் அடுத்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைச் சபையின் உறுப்பினர்களாக அறிவிக்கக் கோரி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதாடி முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்டு எதிர்த் தரப்புக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்க நீதிபதி கட்டளையிட்டார். மேற்படி இரு உள்ளூராட்சி சபைகளிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பெண் உறுப்பினர்கள் அந்தந்த சபைகளில் போட்டியிடுவதற்கான தகமையற்றவர்கள், தகுதியீனம் உடையவர்கள் என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. அந்தத் தீர்ப்பின்படி மேற்படி இரு பெண் உறுப்பினர்களும் அந்தந்தச் சபைகளின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியற்றவர்கள் எனக் காணப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட இரு வேட்புமனுக்களிலும் இருக்க வேண்டிய பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் குறைந்து அந்தப் பட்டியல்களே தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்து விட்டன எனத் தற்போது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அது தொடர்பான விளக்கங்களை செவிமடுத்த நீதிபதி அதன் அடிப்படையில் எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். சாவகச்சேரி பிரதேச சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 23 வேட்பாளர்களும் சாவகச்சேரி நகர சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 16 வேட்பாளர்களும் இந்த மனுக்களில் மனுதாரர்கள் ஆவர். இரண்டு சபைகளிலும் போட்டியிட்ட மற்றைய கட்சிகள் அனைத்தினதும் வேட்பாளர்கள் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதன்படி சாவகச்சேரி பிரதேச சபை தொடர்பான வழக்கில் 225 பேரும், சாவகச்சேரி நகர சபை தொடர்பான வழக்கில் 151 பேரும் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களின்படி இத்தகைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு முதல் தடவை நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தினத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரித்து முடிவுறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த இரு வழக்குகளும் காலம் இழுபடாமல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், பெனிஸலஸ் துஷான் ஆகியோரும் மன்றில் ஆஜராகினர். https://akkinikkunchu.com/?p=338425
  18. காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி 26 Aug, 2025 | 10:57 AM காசாவில் உள்ள சுமார் 40 மாணவர்கள் நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவுக்கு வரவழைக்கும் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. செவனிங் திட்டத்தின் கீழ் (Chevening scheme) புலமைப் பரிசில்கள் ஊடாக ஒன்பது மாணவர்களுக்கு காசாவை விட்டு வெளியேற உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவனிங் திட்டம் என்பது, சர்வதேச மாணவர்கள் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பைப் படிப்பதற்காக, பெருமளவில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் கல்வி திட்டம் ஆகும். ஏனைய தனியார் திட்டங்கள் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட புலமைப் பரிசில்கள் கிடைத்த சுமார் 30 மாணவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களுக்கும் உள்நாட்டு செயலாளர் அனுமதி அளித்துள்ளதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது. 2023-ல் ஹமாஸ்-இஸ்ரேல் போர் ஆரம்பித்த பின்னர், பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கு காசாவை விட்டு வெளியேறும் முதல் மாணவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இருப்பினும், ஒவ்வொரு மாணவரும் அப்பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும். காசாவில் இஸ்ரேல் அதன் போர் தொடர்பான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால், செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரித்தானியா கூறியதிலிருந்து இஸ்ரேலுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன. மேலும், ஒரு போர் மண்டலத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதில் கணிசமான சவால்களும் இருக்கும். விசா பயோமெட்ரிக் சோதனைகளுக்காக அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு மூன்றாவது நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். உள்நாட்டு அலுவலக வட்டாரம் ஒன்று இந்தத் திட்டத்தை "சிக்கலானதும் சவாலானது" என்று விவரித்தாலும், மாணவர்கள் பிரித்தானியாவில் தங்கள் இடங்களைப் பெற வேண்டும் என உள்நாட்டு செயலாளர் "தெள்ளத்தெளிவாக" தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் இருந்து அனுமதி பெற்ற 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மாணவர்கள் சார்பாக அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் மற்றும் பிறர் பல மாதங்களாக மேற்கொண்ட பரப்புரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சமீபத்திய முடிவின் கீழ் சுமார் 40 மாணவர்கள் சேர்க்கப்பட்டாலும், நிதி உதவி இல்லாத மற்ற மாணவர்களும் உள்ளனர். https://www.virakesari.lk/article/223370
  19. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் ! 26 Aug, 2025 | 10:30 AM வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும், இந்த ஆண்டுக்குள் அந்த சந்திப்பு நிகழலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி லீ ஜே மியுங் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவில் தேவாலயங்கள் தொடர்பான சோதனைகளைக் குறிப்பிட்டு, அங்கு ஒரு "துடைப்பு அல்லது புரட்சி" நடப்பதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால், சந்திப்பின் போது, ஜனாதிபதி லீ, டிரம்ப்பை பெரிதும் புகழ்ந்து பேசியதையடுத்து, டிரம்ப் தனது முந்தைய கருத்தை "ஒரு தவறான புரிதல்" என்று கூறி நிராகரித்தார். வட கொரிய விவகாரத்தில் லீயின் அணுகுமுறையும் தனது அணுகுமுறையும் ஒரே மாதிரியானவை என டிரம்ப் நம்புவதாகக் கூறினார். மேலும், கிம் ஜாங் உன்னின் சகோதரியைத் தவிர வேறு எவரையும் விட தனக்கு நன்றாகத் தெரியும்" என்று டிரம்ப் குறிப்பிட்டார். டிரம்ப் "அமைதியைக் காப்பவர் அல்ல, அமைதியை உருவாக்குபவர்" என்று தென்கொரிய ஜனாதிபதி லீ புகழ்ந்தார். மேலும், "நீங்கள் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பதையும், வட கொரியாவில் டிரம்ப் டவர் கட்டப்படுவதையும், அங்கு நீங்கள் கோல்ஃப் விளையாடுவதையும் நான் எதிர்பார்க்கிறேன்" என்று லீ குறிப்பிட்டார். தன்னுடைய சந்திப்புக்குப் பின்னர் ஆற்றிய உரையில், வட கொரியா ஆண்டுக்கு 10 முதல் 20 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடும் என்றும், அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டிருக்கலாம் என்றும் லீ எச்சரித்தார். அமெரிக்கப் படைகளின் இருப்பிற்காக தென் கொரியாவிடம் இருந்து அதிக நிதியுதவியை டிரம்ப் கோரினார். மேலும், அமெரிக்காவின் இராணுவத் தளம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையை அமெரிக்கா எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். தென் கொரியாவின் இடதுசாரி தலைவர்களுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தும் ஒரு கருத்தாகக் கருதப்படுகிறது. தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியான லீ ஜே மியுங் வட கொரியாவுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறார். அவர், வட கொரியாவுடனான இராணுவ எல்லையில் ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பப்படும் கிம் எதிர்ப்பு செய்திகளை நிறுத்துவது போன்ற சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இந்த சந்திப்பு, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்க ஒரு முக்கியமான தளமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223377
  20. அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு 26 Aug, 2025 | 10:27 AM வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்றது. அதன்போது, மகளிர் விவகார அமைச்சு, சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டன. நிதி ஆணைக்குழு, அடுத்த ஆண்டுக்குரிய திட்டங்களை இந்த ஆண்டிறுதிக்குள்ளேயே அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளமை சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், விரைவாக திட்டங்களை அடையாளம் காணவேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் விளைவுகள் என்ன என்பதையும் அதை முன்னிறுத்தியே திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆகியோரும், சமூகசேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் லு.தனுஜா, தொழிற்றுறை திணைக்களத்தின் பணிப்பாளர் செ.வனஜா, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் அகல்யா சேகராஜா, கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பா.அபிராமி கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/223376
  21. ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர் 26 August 2025 தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகம், திறன்கள், தொழில்துறைகள்) ஜகத் வீரசிங்கவிடம், எமது செய்தி சேவை வினவிய போது, ”மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பெரும்பாலும் சாத்தியமில்லை” என்று தெரிவித்தார். அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், அந்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். இருப்பினும், சூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தால், அது தொடர்பாகத் தேவையான வசதிகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார். https://hirunews.lk/tm/416623/ranil-wickremesinghe-cannot-be-produced-before-the-fort-magistrates-court-commissioner-of-prisons
  22. கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்க தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன, கூடுதலாக, எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாக பதிலளிக்க கலகத் தடுப்புப் படைகள் மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/கலகம்-தடுக்கும்-படைகள்-குவிப்பு/175-363499
  23. நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியல் தொடர்பாக நான்கு விளக்கக் காணொலிகளை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் வெவ்வேறு கோணங்களில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. சமூகவியல் விளக்கத்தை களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்புத் துறைத்தலைவர் மனோஜ் ஜிந்தாச வழங்கியுள்ளார். மத மற்றும் நல்லிணக்கக் கண்ணோட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஓமரே புண்யசிறிதேரர் வழங்கியுள்ளார். சட்ட விளக்கத்தை மூத்த சட்டக்கல்வியலாளர் பேராசிரியர் பிரதிபா மகாநாமஹேவா வழங்கியுள்ளார். அதேநேரம் ஊடக மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தை ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன வழங்கியுள்ளார். https://newuthayan.com/article/நான்கு_காணொலிகளில்_ரணில்_கைதுக்கு_விளக்கம்
  24. 108 தம்பதியினருக்கு இலவச திருமணம்! adminAugust 25, 2025 யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 தம்பதியினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது . தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடாத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்தோம். அன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு 108 தம்பதியினரையும் வாழ்த்தி , அன்று மதியம் ஆலயத்தில் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார். https://globaltamilnews.net/2025/219610/
  25. கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப் August 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — 1900 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட நோபல் பவுண்டேசன் அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து நோபல் சமாதானப் பரிசை வழங்கி வருகிறது. 124 வருட வரலாற்றில் அந்த பரிசு இதுவரையில் 97 பேருக்கும் 20 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களில் அமெரிக்க ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குவர். தியோடர் ரூஸ்வெல்ற் ( 1901 — 1909), வூட்ரோ வில்சன் (1913 — 1921) மற்றும் பராக் ஒபாமா (2009 — 2017) ஆகியோரே பதவியில் இருந்த வேளையில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகளாவர். ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தமைக்காகவும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் தீவிரமான அக்கறை காட்டியதற்காகவும் 1906 ஆம் ஆண்டில் ரூஸ்வெல்ற்றுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னோடியாக அமைந்த நாடுகள் கழகத்தை (League of Nation) அமைத்தமைக்காக 1919 ஆம் ஆண்டில் வூட்ரோ வில்சனுக்கும் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச இராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக ஒபாமாவுக்கு அவர் பதவிக்கு வந்த 2009 ஆம் ஆண்டிலேயே அந்த பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் முன்னாள் துணை ஜனாதிபதி ஒருவருக்கும் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த ஜிம்மி கார்ட்டருக்கு சர்வதேச நெருக்கடிகளுக்கு சமாதானத் தீர்வுகளைக் காண்பதற்கும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கும் அயராத முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக 2002 ஆம் ஆண்டில் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. பில் கிளின்டனின் இரு பதவிக்காலங்களிலும் (1993 — 2001) துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோருக்கு காலநிலை மாற்றம் குறித்து செய்த ஆய்வுகளுக்காகவும் அவை தொடர்பிலான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பியமைக்காகவும் 2007 ஆம் ஆண்டில் அந்த பரிசு கிடைத்தது. அது தவிர, ஹென்றி கீசிங்கர் உட்பட நான்கு அமெரிக்க இராஜாங்க அமைச்சர்களும் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றனர். ஆனால், அவர்களில் எவருமே தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போன்று நோபல் சமாதானப் பரிசைப் பெறுவதற்காக தாங்களாகவே ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டதாக நாம் இதுவரையில் அறியவில்லை. உலகின் பல்வேறு பாகங்களிலும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக சமாதானப் பரிசைப் பெறுவதற்கான தகுதி தனக்கு இருக்கிறது என்று அவரே கூறிவருகிறார். கடந்த ஜனவரியில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக வந்த பிறகு ஐந்து மாதங்களில் ஐந்து சர்வதேச போர்களை தடுத்து நிறுத்தியதாக கடந்த வாரம் கூறிய ட்ரம்ப் உக்ரெயினில் தொடரும் போருக்கு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மீது குற்றம் சுமத்தினார். உலக நாடுகள் மீது அடாவடித்தனமாக வரிகளை விதித்து வருவதால் சர்வதேச அரங்கில் சர்ச்சைக்குரிய ஒரு பிரபல்யத்தை பெற்றிருக்கும் ட்ரம்ப் கடந்த மாதம் நோர்வேயின் நிதியமைச்சர் ஜெனஸ் ஸ்ரொல்ரன்பேர்க்குடன் வரிவிதிப்புகள் குறித்து தொலைபேசியில் பேசியபோது நோபல் சமாதானப் பரிசை பெறுவதற்கு தான் விரும்புவதாக கூறியதாக நோர்வே பத்திரிகைகள் கடந்த வாரம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அமெரிக்க நிதியமைச்சர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி உட்பட வெள்ளை மாளிகையின் பல்வேறு அதிகாரிகளும் தன்னுடன் பேசியதாக ஸரொல்ரன்பேர்க் ஊடகங்களுக்கு கூறினார். இந்திய — பாகிஸ்தான், இஸ்ரேல் — ஈரான், தாய்லாந்து — கம்போடியா, ருவாண்டா — கொங்கோ ஜனநாயக குடியரசு, சேர்பியா — கொசோவா, எகிப்து — எதியோப்பியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஆறு மோதல்களை ஜனாதிபதி ட்ரம்ப் முடிவுக்கு கொண்டுவந்ததாக வெள்ளைமாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிற் சில தினங்களுக்கு முன்னர் கூறினார். மாதத்துக்கு ஒரு சமாதான உடன்படிக்கையும் போர்நிறுத்தமும் செய்யப்படுவதற்கான வெற்றிகரமான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு நோபல் சமாதானப் பரிசை வழங்குவதற்கு காலம் தாமதித்துவிட்டது என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் மூண்டமோதலுக்கு முடிவைக்கட்டியதாக ட்ரம்ப் உரிமை கோருகின்ற போதிலும், இந்தியா அதை நிராகரிக்கின்றது. தெற்காசியாவின் இரு அணுவாயுத நாடுகளும் தனது கோரிக்கையை அடுத்தே மோதலை நிறுத்தியதாக அவர் இதுவரையில் பல தடவைகள் கூறியிருக்கிறார். தனது தலையீடு இல்லாதிருந்திருந்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அணுவாயுதப் போராக மாறியிருக்கும் என்று கடந்த வியாழக்கிழமை கூட ட்ரம்ப் கூறினார். இரு நாடுகளினதும் இராணுவ உயர் மட்டங்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பாடல்களை தொடர்ந்தே நான்கு நாள் மோதல்கள் நிறுத்தப்பட்டதாக இந்தியா திரும்பத் திரும்பக் கூறுகின்ற போதிலும், பாகிஸ்தான் ட்ரம்பின் கூற்றை இதுவரையில் மறுதலிக்கவில்லை. பதிலாக, “மோதல்களின்போது தீர்க்கமான இராஜந்திர தலையீட்டைச் செய்து முக்கியமான தலைமைத்துவத்தை வழங்கியதற்காக” நோபல் சமாதானப் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதியின் பெயரை பிரேரிக்கப் போவதாக ஜூன் மாதம் பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. இராணுவத் தளபதி அசீம் முனீருக்கும் ட்ரம்புக்கும் இடையில் நடந்த சந்திப்புக்கு பின்னரே அந்த அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு நோபல் சமாதானப் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை பிரேரித்து நோபல் கமிட்டிக்கு தான் அனுப்பிய கடிதத்தை அவரிடம் கையளித்தார். எல்லைத் தகராறு காரணமாக தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் ஜூலையில் மூண்ட ஐந்து நாள் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்த போர்நிறுத்தத்துக்கு காரணகர்த்தாவாக இருந்த அமெரிக்க ஜனாதிபதியை சமாதானப் பரிசுக்கு நியமித்திருப்பதாக கம்போடிய பிரதமர் ஹுன் மனெற் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவித்தார். முன்னாள் சோவியத் குடியரசுகளான ஆர்மேனியாவுக்கும் அசெர்பைஜானுக்கும் இடையில் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நீடித்துவந்த மோதல்ளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஆகஸ்ட் 8 வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஏற்பாடு செய்த “சமாதான உச்சிமகாநாட்டில்” இரு நாடுகளின் தலைவர்களும் நோபல் சமாதானப் பரிசுக்காக அவரின் பெயரை கூட்டாக நியமிப்பதாக உறுதியளித்தனர். தனது நாட்டுக்கும் அசெர்பைஜானுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த ட்ரம்பை தவிர வேறு எந்த தலைவரினாலும் முடிந்திருக்காது என்று கூறிய ஆர்மேனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான், நோபல் சமாதானப் பரிசுக்காக பிரேரிப்பதற்கு கடிதவரைவு ஏதாவது கைவசம் இருந்தால் உடனடியாகவே அதில் கையெழுத்திடுவதாக ட்ரம்பிடம் நகைச்சுவையாக கூறியதாக ஊடகங்கள் கூறின. ருவாண்டாவுக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நீடித்த மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்க ஜனாதிபதி வகித்த பாத்திரத்துக்காக அவரின் பெயரை சமாதானப் பரிசுக்கு நியமனம் செய்யும் யோசனைக்கு அந்த இரு நாடுகளின் தலைவர்களும் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். இதுவரையில் ஐந்து நாடுகளின் தலைவர்கள் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். சமாதானப் பரிசுக்காக செய்யப்பட்ட உண்மையான உத்தியோகபூர்வ நியமனங்கள் அந்தரங்கமாகவே வைக்கப்பட்டிருக்கும் என்பதால் நோர்வே நோபல் கமிட்டியின் காலக்கெடுவுக்கு (2025 ஜனவரி 31) முன்னதாக ட்ரம்பின் பெயர் நியமிக்கப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த வருடத்துக்கான பரிசுகள் குறித்து ஆராய்வதற்காக நோபல் கமிட்டி பெப்ரவரி 28 ஆம் திகதி நடத்திய முதலாவது கூட்டத்தின் போது அதன் உறுப்பினர்கள் மேலதிக பெயர்களை பட்டியலில் சேர்த்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. காலக்கெடுவுக்கு முன்னதாகவே ட்ரம்பின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக சில அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. நோபல் சமாதானப் பரிசை பெறுபவர்களின் (ஒருவர் அல்லது அதற்கும் அதிகமானவர்கள்) பெயர்கள் அக்டோபர் 10 ஆம் திகதி அறிவிக்கப்படும். அந்த பரிசை வழங்கும் நிகழ்வு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறும். அமெரிக்க ஜனாதிபதியை சமாதானப் பரிசுக்கு நியமனம் செய்திருக்கும் நாடுகளின் குறிப்பாக ருவாண்டா, இஸ்ரேல், கபோன், அசெர்பைஜான் மற்றும் கம்போடியா ஆகியவற்றின் தலைவர்கள் எதேச்சாதிகார ஆட்சியாளர்களாக, இராணுவ ஆட்சியாளர்களாக அல்லது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுடைய ஆதரவு நோபல் கமிட்டியின் தெரிவில் எதிர்மறையான தாக்கத்தைச் செலுத்தும் எனலாம். மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இடம்பெறுகின்ற போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் ( International Criminal Court ) பிடியாணை பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமரை வெள்ளைமாளிகை வரவேற்று விருந்தோம்புகிறது. காசாவில் தொடருகின்ற பாலஸ்தீன இனப்படுகொலைக்காக இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் (Internatiinal Court of Justice ) வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது. பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்துவதற்கு இஸ்ரேலை நிர்ப்பந்திப்பதற்கான சகல வல்லமையும் இருக்கின்ற போதிலும், எதையும் செய்யாமல் நெதான்யாகுவை ட்ரம்ப் மேலும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக அணுவாயுத எச்சரிக்கையை செய்வதற்கு ட்ரம்ப் அனுமதிப்பதை நோபல் கமிட்டி கவனத்தில் எடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அவதானிகள் கூறியிருக்கிறார்கள். இந்தியாவின் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேஷாத்ரி ஷாரி நேற்றைய தினம் ‘த பிறின்ற்’ இணையத் தளத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார் ; “சிந்து நதியில் இந்தியா அணையொன்றை கட்டுவதற்கு துணிச்சல் கொள்ளுமானால், அணுவாயுத தாக்குதலை நடத்தப்போவதாக பாகிஸ்தான் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் எச்சரிக்கை செய்திருக்கிறார். ட்ரம்ப் நிருவாகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் முன்னிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானது.” பாகிஸ்தான் ஒரு அணுவாயுத நாடு. நாம் அழிந்துகொண்டு போகின்றோம் என்று நினைப்போமேயானால், புதுடில்லியிடமிருந்து எமது இருப்புக்கு அச்சுறுத்தல் வருமானால் உலகின் அரைவாசியை எம்முடன் கொண்டு போவோம்” என்று முனீர் கூறியிருக்கிறார். “இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு வெளிநாட்டு இராணுவ தளபதியொருவர் அணுவாயுத அச்சுறுத்தலை விடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அத்தகைய பொறுப்பற்றதும் ஆபத்தானதுமான அச்சுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டபோது ட்ரம்ப் நிருவாகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. நோபல் சமாதானப் பரிசை வழங்கும் நோர்வேயின் நோபல் கமிட்டி இதை கவனத்தில் எடுக்க வேண்டும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் உரிமை கோருவதை முனீரின் அச்சுறுத்தலும் பொய்யாக்கியிருக்கிறது.” முதலாவது பதவிக் காலத்தில் இருந்து ட்ரம்ப் தன்னை சமாதானத்துக்கான ஒரு மனிதராக வர்ணித்து வந்திருக்கிறார். ஜிம்மி கார்ட்டருக்கு பிறகு எந்தவொரு அமெரிக்கப் படைவீரரையும் வெளிநாட்டு மோதலுக்கு அனுப்பிவைக்காத முதல் ஜனாதிபதி தானே என்றும் அவர் பெருமை பேசுகிறார். அமெரிக்க ஜனாதிபதியாக தான் இருந்திருந்தால் இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் ஒருபோதும் இடம் பெற்றிருக்காது என்றும் அவர் கூறினார். ஆனால், கடந்த ஜனவரியில் மீண்டும் பதவிக்கு வந்தவுடன் டென்மார்க்கிற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய தீவான கிறீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக இராணுவ பலத்தைப் பயன்படுத்தும் சாத்தியத்தை நிராகராகரிக்க முடியாது என்று ட்ரம்ப் கூறினார். அத்துடன் பனாமா கால்வாயை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப் போவதாக கூறிய அவர் அயல்நாடான கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்கும் யோசனை குறித்தும் பேசினார். எல்லாவற்றுக்கும் மேலாக, இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் பாலஸ்தீனர்களை காசாவில் இருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அந்த பள்ளத்தாக்கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் உல்லாசக் கடற்கரையாக்கப் போவதாகவும் அவர் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சுமுகமான உறவுகளை வளர்த்துக்கொள்வதன் மூலமாக உக்ரெயின் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்ற தவறான நம்பிக்கையில் ட்ரம்ப் உக்ரெயின் ஜனாதிபதி வொலாடிமிர் செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து மிரட்டினார். அதேவேளை, ஐம்பது நாட்களில் போர் நிறுத்தத்துக்கு புட்டின் இணங்கவில்லையானால், ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீத வரியை விதிக்கப்போவதாக அவர் அச்சுறுத்தினார். ஆனால், இறுதியில் தற்போது புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர ட்ரம்புக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை. உக்ரெயினில் பிராந்தியங்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கான ரஷ்யாவின் விருப்பத்துக்கு அவர் இணங்கிவிடுவார் என்று ஐரோப்பிய நாடுகள் அஞ்சுகின்றன. புவிசார் அரசியல் நிலைவரம் பற்றிய சரியான தெளிவு இல்லாதவராக, உக்ரெயின் போருக்கு தனது நிபந்தனைகளின் அடிப்படையில் முடிவைக் காண்பதில் நாட்டம் கொண்டிருக்கும் ட்ரம்ப், செலன்ஸ்கியை தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றமுறையில் கையாளலாம் என்று நம்புகிறார். இது இவ்வாறிருக்க, உலகளாவிய ரீதியில் ட்ரம்ப் தொடுத்திருக்கும் வரிப்போர் சர்வதேச வர்த்தக உறவுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பின்தங்கிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் வேறு வழியின்றி அவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற முறையில் செயற்பட நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இலங்கையும் அத்தகைய ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வரிவிதிப்பை அவர் அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான புவிசார் அரசியல் அதிகாரமாக பயன்படுத்துகிறார். இலங்கை மீதான வரி தொடர்பாக அமெரிக்கா எடுத்த தீர்மானம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துடன் மாத்திரமல்ல, முழுமையான இருதரப்பு உறவுகளுடனும் சம்பந்தப்பட்டது என்று அண்மையில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாக்கவுக்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். பொருளாதார வல்லமை கொண்ட இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளையும் வரிவிதிப்பைக் காட்டி பயமுறுத்த அவர் முயற்சிக்கின்றார். தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் எட்டு மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி கடைப்பிடித்த அணுகுமுறைகள் சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. ஈரானுடன் அணுத்திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையிலேயே அந்த நாட்டின் அணு மையங்கள் மீது குண்டுவீச்சுக்களை நடந்துவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டார். ஒபாமாவுக்கு பதினாறு வருடங்களுக்கு முன்னர் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டபோது “எதற்காக அவர் அந்த பரிசைப் பெற்றார் என்று எனக்கு தெரியவில்லை” என்று ட்ரம்ப் கேலி செய்தார். எதைச் சாதித்துவிட்டதற்காக ட்ரம்ப் தனக்கு சமாதானப் பரிசைப் பெறுவதற்கான தகுதி இருப்பதாக நம்புகிறார் என்று முழு உலகமுமே இப்போது கேட்கிறது. தனது மத்தியஸ்த முயற்சிகளின் மூலமாக முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக ட்ரம்ப் பெருமையாக உரிமை கோரும் எந்தவொரு மோதலுமே மீண்டும் வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. முழு உலகினதும் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் காசா அவலத்துக்கு முடிவுகட்ட இஸ்ரேலை வழிக்கு கொண்டுவருவதற்கு உருப்படியாக ட்ரம்ப் எதையாவது செய்தால், அவரின் நோபல் சமாதான பரிசு ஆசையில் ஒரளவு அர்த்தம் இருக்க முடியும். பட்டினி கிடக்கும் பாலஸ்தீனர்கள் உணவைப் பெறுவதற்கு நிவாரண நிலையங்களுக்கு வருகின்றபோது குழந்தைகள், பெண்கள், வயோதிபர் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் இஸ்ரேலியப் படைகளினால் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலிய சியோனிச அரசின் காவலனாக நிற்கும் ட்ரம்ப் சமாதான பரிசுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லாதவர். இப்போது மாத்திரமல்ல , ஏற்கெனவேயும் பல தடவைகள் அவர் அந்த பரிசக்கு தனக்கு கிடைக்கவில்லை என்று முறையிட்டிருந்தார். ஆனால், அது தனக்கு கிடைக்காது என்பதும் ட்ரம்புக்கு தெரியும். தான் எதைச் செய்தாலும் தனக்கு சமாதானப் பரிசை தரமாட்டார்கள் என்று தனது சமூக ஊடகத்தில் அவரே ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறார். வெள்ளைமாளிகையில் இஸ்ரேலிய பிரதமருடன் பெப்ரவரியில் நடத்திய சந்திப்பு ஒன்றின்போது “சமாதானப் பரிசைப் பெறுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறது. ஆனால், அவர்கள் எனக்கு ஒருபோதும் தரமாட்டார்கள்” என்று கூறினார். நோபல் பரிசுகளை தெரிவு செய்யும் ஐவர் கொண்ட கமிட்டியை நோர்வே பாராளுமன்றமே தெரிவு செய்கிறது. தனக்கு அந்த கமிட்டி பரிசைத் தராவிட்டால் ட்ரம்ப் நோர்வே மீது கடுமையான வரிகளை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. https://arangamnews.com/?p=12269

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.