Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல் ‘கேட்ச்-22’ (Catch-22) – அ. குமரேசன் போர் மீது ஒரு வசீகரம் கட்டப்படுகிற காலக்கட்டம் இது. உலகின் பல பகுதிகளிலும் போர்க் கூச்சல்கள் செவிகளைத் துளைக்கின்றன. இந்தியா–பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணிந்ததில் இருநாட்டு மக்களும் நிம்மதியடைகிறார்கள். அதற்குள் முடிந்துவிட்டதே என்று ஆதங்கப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். போரில் ஏதாவது அறிவுடைமை இருக்கிறதா என்று கேட்க வைக்கிறது, 1961ஆம் ஆண்டில் வெளியான ‘கேட்ச்–22’ என்ற நாவல். ‘கேட்ச்-22’ (Catch-22) (பிடி–22) என்றால் என்ன? தப்பிக்க முடியாத, ஒரு சிக்கலிலிருந்து தப்புவதற்கான முயற்சியே மேலும் சிக்கல்களைக் கொண்டுவரும் இக்கட்டான நிலைமையைக் குறிப்பிடுவதற்கு இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. “அவர்கள் கேட்ச்–22 நிலைமையில் மாட்டிக்கொண்டார்கள்” –இப்படி. சுவையான தகவல் என்னவென்றால், கதையை எழுதிய ஜோசப் ஹெல்லர் (1923–1999), ஏற்கெனவே மக்கள் புழங்கிக்கொண்டிருந்த சொல்லைத் தனது நாவலுக்குப் பயன்படுத்தவில்லை, மாறாக அந்த நாவலில் வரும் சொல் மக்களிடையே புழக்கத்திற்கு வந்துவிட்டது! விமானப் படையில் ‘கேட்ச்-22’ (Catch-22) என்றொரு விதி இருப்பதாக நாவல் சொல்கிறது. அதாவது, படையில் பணி புரிகிறபோது ஒரு விமானியின் மனநலம் குன்றிவிட்டால் அவர் தன்னை விடுவிக்குமாறு விண்ணப்பிக்கலாம். ஆனால், “பிடி–22” விதியின்படி மனநலம் குன்றிய ஒருவரால் அதை உணர்ந்து அப்படிக் கோர இயலாது, அவர் அப்படிக் கோருவதே அவர் மனநலத்தோடு இருப்பதால்தான், ஆகவே விண்ணப்பம் நிராகரிக்கப்படும்! “தேசவிரோத புத்தகம்”! வேடிக்கையான இந்த வேதனை நிலைமையை வைத்து, அல்லது வேதனையான இந்த வேடிக்கை நிலைமையை வைத்து நாவலைப் புனைந்திருக்கிறார் ஹெல்லர். ஆம், வைத்துச் செய்திருக்கிறார்! ஒருபுறம் அரசுகளால் போர்களில் இறக்கிவிடப்படும் படைவீரர்களோடு பொதுமக்களும் பேரிழப்புகளை எதிர்கொள்கிறார்கள். இன்னொருபுறம் ஆயுதத் தயாரிப்பு முதலாளிகளும் ஊழல் பேர்வழிகளும் ஆதாயம் அடைகிறார்கள். இந்த நிலைமையை எடுத்துக்காட்டுகிற நாவல் அப்படியே போகிற போக்கில், இதையெல்லாம் தடுத்து மக்களைக் காப்பாற்ற முடியாத கடவுள் கையாலாகாதவர் என்றும் சாடுகிறது. இதெல்லாம் போதாதா? தேசப்பற்றுக்கு எதிராகப் பேசுகிறது, அமெரிக்க அரசின் போர் நடவடிக்கைகளைப் பகடி செய்கிறது, போர் சார்ந்த தொழில்துறையை இழிவுபடுத்துகிறது, படை அதிகாரிகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது, ராணுவப் பணிக்கு வர விரும்பும் இளைய தலைமுறையினரிடையே பாதுகாப்புத் துறை பற்றிய தவறான கருத்துகளைப் பரப்புகிறது, கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தி ஒழுக்க வாழ்வைச் சீர்குலைக்கிறது என்று கிளம்பிவிட்டார்கள். பல பள்ளி நூலகங்களின் அடுக்கங்களிலிருந்து புத்தகம் அப்புறப்படுத்தப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பையும், கருத்தாளர்களின் கண்டனங்களையும் தொடர்ந்து மறுபடியும் வைக்கப்பட்டது. நாவலுக்குள்… இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் அமைக்கப்பட்ட அமெரிக்க விமானப்படைத் தளத்தில் விமானியாக இருப்பவன் யோசாரியன். தொடர்ந்து போர் விமானங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆபத்தான அந்தப் பணிகளைத் தவிர்க்கப் பல முயற்சிகளை எடுக்கிறான். தனக்கு மனநலம் குன்றிவிட்டதாகக் கூறி தன்னை விடுவிக்கக் கோருகிறான். ஆனால் அந்த ‘கேட்ச்-22’ (Catch-22) விதி அவனுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. ஆகவே, நாள்பட்ட, கடுமையான ஈரல் சீர்குலைவு எனக் கூறி ராணுவ மருத்துவமனையில் சேர்கிறான். உயரதிகாரிகள் படைவீரர்களின் உயிர் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இருப்பதையும், தங்களுடைய பதவி உயர்வு உள்ளிட்ட நோக்கங்களுடன் வீரர்களைப் பலிகொடுக்க அவர்கள் துணிவதையும் காண்கிறான். கர்னல் கேத்கார்ட் என்ற அதிகாரி, தனது பிரிவின் வீரர்களை, வேறு எந்த பிரிவையும் விடப் பல மடங்கு அதிகமான முறை தாக்குதல் விமானங்களைச் செலுத்துவதற்குக் கட்டாயப்படுத்துகிறான். அரசாங்கத்திடம் தன்னை ஒரு மகாவீரனாகக் காட்டிக்கொள்வதற்காக, வீரர்கள் வீடு திரும்ப முடியாதபடி, ஒரு சுற்றுப்பணியை முடிப்பதற்கு ஓட்டியாக வேண்டிய விமானங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்த்துகிறான். யோசாரியன் ஆகாயச் சண்டைகளையும் நண்பர்கள் உள்ளிட்ட சக வீரர்களின் மரணங்களையும் கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான்; ஒவ்வொரு பணி தரப்படும்போதும் எதிரிப்படையால் கொல்லப்படலாம் என்று அஞ்சுகிறான். அவனுடைய கோழைத்தனம் வெளிப்படுகிறது. நாவலின் போக்கில் செல்லச்செல்ல, அவன் கோழையல்ல, துணிவு மிக்கவன், கட்டுப்பாடு மிக்கவன் என்று தெரியவருகிறது. அவன் கவலைப்பட்டது எதிரிகளின் வலிமையைப் பற்றியல்ல, சொந்த நாட்டு ராணுவக் கெடுபிடிகள் பற்றித்தான். கதாபாத்திரங்களுக்கிடையில் துண்டாடப்பட்ட கதை போல, சில அத்தியாயங்களில் ஒற்றைக் கால வரிசைப்படி நகர்கிற கதை, மற்ற அத்தியாயங்களில் நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமாக மாறிமாறிப் பயணிக்கிறது. போர்க்காலத்தின் நியாயமான அச்சம் விமானிகள் எதிர்கொள்ளும் கடும் அதிர்ச்சிகளின் மூலமாக வாசகர்களுக்குக் கடத்தப்படுகிறது. தாக்குதல்களையும் மனித உயிர்கள் கொல்லப்படுவதையும் போற்றுதலுக்குரிய வீரச்செயலாக அல்லாமல், கவலைக்குரிய சோகச் சூழலாகச் சித்தரிக்கிறது என்று நூல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். பாதுகாப்பற்ற இத்தாலிய மலை கிராமத்தின் மீது அர்த்தமற்ற தாக்குதலுடன் திகில் தொடங்குகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரக்தி, போரில் மனிதர்கள் காணாமல் போவது என்று மேலேறும் நாவல், ஒரு வெகுளித்தனமான இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதோடு உச்சக்கட்டத்தை அடைகிறது. நாவல் பல்வேறு கோணங்களின் போர்க்களத் துயரங்களைக் காட்டினாலும், செத்துவிட்டான் என்று நினைத்த நெருங்கிய நண்பனான ஓர், சாகசமான முறையில் வேறுநாட்டுக்குச் சென்றதை அறிந்து மகிழும் யோசாரின், தானும் வெளியேறி ஓடுவதாக இன்பியல் காட்சியுடனேயே நிறைவடைகிறது. போர் வணிகமும் கடவுளும் படையின் உணவுப் பிரிவு அதிகாரி மிலோ. போர்ச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு வணிகப் பேரரசையே கட்டுகிற மிலோ உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், பல்வேறு தளவாடங்களையும் விமானங்களையும் கூட வாங்கி விற்கிற அளவுக்குப் பணம் குவிக்கிறான். அது மட்டுமல்ல, வீரர்களுக்குத் தேசப்பற்றுடன் எதிரிகளோடு மோதுவதற்கு ஊக்கமளித்துவிட்டு, எதிரி நாட்டுடனேயே கூட தன் வணிகத்தை விரிவுபடுத்துகிறான். ஒரு கட்டத்தில் சொந்தப் படைப்பிரிவுத் தளத்தின் மீதே குண்டு வீசுவதற்குத் தயங்காமல் ஏற்பாடு செய்கிறான். லாபம்தான் குறி என்றான பின் தேசமாவது, பற்றாவது! மிலோ மூலமாக, போர் சார்ந்த பொருள்கள் தயாரிப்பின் வணிகமய வலைப் பின்னலை அறிய முடிகிறது என்று ஒரு வாசகர் பதிவிட்டிருக்கிறார். லாபத்திற்கான பீடத்தில் பலியிடப்படுகிறவர்கள் உயிருக்கு அஞ்சாத வீரர்களும், சண்டையில் மாட்டிக்கொள்ளும் பொதுமக்களும். நடப்பதையெல்லாம் கண்டு மனம் நோகிற யோசாரினிடம் யாரோ கடவுளின் சித்தம் இது என்று சொல்கிறார்கள். கடவுளின் செயல்கள் சாமானியமாகப் புரிந்துகொள்ள முடியாதவையாகப் புதிராகத்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆவேசமடையும் யோசாரின் இவ்வாறு பேசுகிறான்: “கடவுள் புதிரான வழிகளில் செயல்படுகிறார் என்று என்னிடம் சொல்லாதீர்கள். அதில் புதிர் ஒன்றுமில்லை. கடவுள் எந்த வேலையும் செய்யவில்லை. அவர் விளையாடுகிறாராக இருக்கும் நம்மை முற்றிலும் மறந்துவிட்டாராக இருக்கும் – கிராமத்தில் ஒரு மந்தமான, குழப்பமான, அறிவில்லாத, ஆணவம் பிடித்த, முரட்டுத்தனமான பண்ணையார் போல.” தன்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறவர்களிடம் தொடர்ந்து பேசுகிறான்: “நல்ல கடவுள் தனது படைப்பின் உடலில் சளி, பல் சிதைவு போன்ற தொந்தரவுகளை ஏன் சேர்க்க வேண்டும்? வயதானவர்களுக்கு மலத்தை கட்டுப்படுத்தும் சக்தியை அவர் ஏன் பறித்தார்? அவர் ஏன் வலியை உருவாக்கினார்? ஓ, வலியின் வாயிலாகவே ஆபத்தைப் பற்றி எச்சரிக்கிறாரா? அதற்குப் பதிலாக அவர் ஏன் ஓர் அழைப்பு மணியைப் பொருத்தியிருக்க முடியாது? ஆபத்து வரும்போது அவருடைய வானக கீதங்களில் ஒன்றை ஏன் ஒலிக்கச் செய்யக்கூடாது? ஒவ்வொருவரின் நெற்றியின் நடுவில்நீலம் சிவப்பு நியான் விளக்குகள் எரிந்து எச்சரிக்கிற அமைப்பை ஏன் பயன்படுத்தியிருக்க முடியாது? ஒரு ஜூக்பாக்ஸ் தயாரிப்பாளர் கூட இதைச் செய்திருக்க முடியும் என்றால் கடவுளால் ஏன் முடியவில்லை? ஒரு வேலையை சரியாகச் செய்ய அவருக்கு இருந்த வாய்ப்பையும் சக்தியையும் கருத்தில் கொண்டு பார்க்கிறபோது, அதற்கு பதிலாக அவர் உருவாக்கிய முட்டாள்தனமான, அருவருப்பான குழப்பங்கள்தான் கண்ணில் படுகின்றன. அவருடைய முழுமையான திறமையின்மை மலைத்துப்போய் நிற்க வைக்கிறது. …” தப்பியோடிய யோசாரின் போரால் சிதைந்த இத்தாலிய நகரம் ஒன்றில் நடந்து செல்லும் காட்சியைபற்றி இவ்வாறு எழுதுகிறார் ஜோசப் ஹெல்லர்: “யோசாரியன் அங்கிருந்து விலகிச் செல்ல வேகத்தை அதிகரித்தான், கிட்டத்தட்ட ஓடினான். இரவு திகில்களால் நிறைந்திருந்தது. மேலும், கிறிஸ்து உலகெங்கும் நடந்து சென்றபோது எப்படி உணர்ந்திருப்பார் என்று அவன் நினைத்துப் பார்த்தான் – பித்தர்கள் நிறைந்த மருத்துவமனையில் ஒரு மனநல மருத்துவர் நடப்பது போல, கொள்ளையர்கள் நிறைந்த சிறைக்குள் பாதிக்கப்பட்ட ஒருவன் நடப்பது போல! ஒருவரும் எஞ்சியிராத ஊரில் ஒரு தொழுநோயாளி எதிரே வந்தால் கூட எவ்வளவு வரவேற்புக்குரியவராக இருப்பார்!” ஜோசப் ஹெல்லர் ஜோசப் ஹெல்லர் (Joseph Heller) நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளினில் கான் ஐலேண்டில் ரஷ்யாவிலிருந்து வந்த ஏழை யூதப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் எழுத்தாளர் ஜோசப் ஹெல்லர். இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க விமானப்படையில் குண்டுவீச்சு விமானியாகப் பணியாற்றியவர். போருக்குப் பிறகு ஆங்கிலம் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியராகவும், ஒரு விளம்பர நிறுவனத்தில் படியெடுப்பு எழுத்தராகவும் வேலை செய்தவர். “சம்திங் ஹேப்பண்டு”, “குட் அஸ் காட்”, “குளோசிங் டைம்” உள்ளிட்ட அவரது நாவல்களும் புகழ்பெற்றவை. அத்தனை புத்தகங்களும் அரசியல், சமூக நிலைமைகளையும் அதிகாரத்துவத்தையும் எள்ளி நகையாடுபவைதான் என்று தெரியவருகிறது. தொடக்கத்தில் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘கேட்ச்-22’ (Catch-22) பின்னர் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன் அடுத்த பாகமாகவே “குளோசிங் டைம்” நாவலை எழுதினார் என்று கூறப்படுகிறது. புத்தகம் வெளியானபோது விற்பனை மந்தமாகவே இருந்தது. இன்று, உலகில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது. திரைப்படமாகவும், வலைத்தொடராகவும் வந்து ஏராளமானோரிடம் சென்றடைந்திருக்கிறது.. https://bookday.in/books-beyond-obstacles-13-joseph-hellers-novel-catch-22-based-article-written-by-a-kumaresan/
  2. வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 50 ஆவது பிறந்த தினம் வாகரை பனிச்சங்கேணியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளுடன் இன்று கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுகளை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி, கலை, கலாசாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இரத்தான நிகழ்வு நடைபெற்றது. பலர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் பனிச்சங்கேணி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசையும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது. குறிப்பாக அவரது 50 ஆவது அகவையினை முன்னிட்டு ஆதாரவாளர்களால் 50 மண் பானைகளில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். இதன்போது அவரது கட்சியின் தற்போதைய தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான திரவியம் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினருமான பிரசாந்தன், வாகரை பிரதேச சபை தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் மற்றும் கிழக்கு தமிழர் கூடட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் படுகொலை தொடர்பாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.voiceofmedia.lk/14806
  3. சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு ! Published By: Priyatharshan 19 Aug, 2025 | 07:18 AM உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு "மிகவும் சிறந்ததாக" இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், உக்ரைன் பாதுகாப்பு நிலைமை, ஐரோப்பிய நட்டு நாடுகளுடன் இணைந்த ஒத்துழைப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேரடி சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில், "பல நல்ல விவாதங்களையும், நல்ல பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தோம். பல வழிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பிற்கான ஏற்பாடுகளைத் ஆரம்பிக்குமாறு கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து புட்டினுடன் கலந்துரையாட விரும்புவதாக டிரம்ப் கூறினார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், ஜேர்மன் சான்சிலர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கான ஒரு "வரலாற்று படி" என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் – புட்டின் சந்திப்பு எப்போது, எங்கு நடைபெறும் என்பதற்கான விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், சர்வதேச சமூகம் இந்தச் சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222834
  4. தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடு நிறுத்திவைப்பு 19 August 2025 தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளது. த ஹிந்து செய்தித்தாள் இந்த செய்தியைப் பிரசுரித்துள்ளது. தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறும் தன்னார்வமாகத் திரும்புபவர்களுக்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது. இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு ஏதிலிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ தரப்புக்களின் தகவல்படி, நாடு திரும்பிய 54 வயதான ஒருவர், 2025 ஆகஸ்ட் 12ஆம் திகதியன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று 2025 மே 28, மற்றொரு தமிழ் ஏதிலி யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய பிறகு கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஐக்கிய நாடுகளின் உதவியில்லாமல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இலங்கை தமிழ் தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 1996 முதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் ஏதிலிகள் முகாமில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இலங்கையின் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்லுபடியாகும் கடவுச்சீட்டுக்கள் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில், தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளை இலங்கை அதிகாரிகள் கைது செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. 2002 முதல், யுஎன்எச்சீஆர் என்ற ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் 18,643 இலங்கை தமிழ் ஏதிலிகளை, தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது. இந்தநிலையில் தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதே தற்போதைய நடவடிக்கைக்கான காரணம் என்று ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. பொதுவில், இன மோதலில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பயந்து ஏதிலிகள் நாட்டை விட்டு வெளியேறியதால் குடியேற்றச் சட்டங்களை மீறுவது மன்னிக்கப்படுகிறது என்றும் அந்த உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விடயம், இராஜதந்திர வழிகளில் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். குடியேற்ற விதிகளை மீறியதற்காக இலங்கை ஏதிலிகள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும், கண்ணியத்துடன் நடத்தப்படுவார்கள் என்றும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்கும் வரை, அவர்களை திருப்பி அனுப்பும் செயல்முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். https://hirunews.lk/tm/415305/repatriation-of-sri-lankan-nationals-from-tamil-nadu-suspended
  5. உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் – ட்ரம்ப் உறுதி! உக்ரேனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திலும் உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (18) ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்தார். இருப்பினும் எந்த உதவியின் அளவு உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ட்ரம்ப் சந்தித்த சில நாட்களுக்குப் பின்னர், ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளின் குழுவை வரவேற்ற வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு அசாதாரண உச்சிமாநாட்டின் போது ட்ரம்ப் இந்த உறுதிமொழியை அளித்தார். சந்திப்பின் பின்னர், “பாதுகாப்பைப் பொறுத்தவரை, நிறைய உதவிகள் இருக்கும்,” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். ஐரோப்பிய நாடுகள் இதில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வாக்குறுதியை “ஒரு பெரிய முன்னேற்றம்” என்று ஜெலென்ஸ்கி பாராட்டினார். திங்கட்கிழமை சந்திப்புகளுக்குப் பின்னர் ஒரு செய்தியாளர் சந்திப்பில், பாதுகாப்பு உத்தரவாதத்தின் ஒரு பகுதி அமெரிக்காவிற்கும் உக்ரேனுக்கும் இடையே $90 பில்லியன் (£67 பில்லியன்) ஆயுத ஒப்பந்தத்தை உள்ளடக்கும் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார். இதில் உக்ரேனிடம் இல்லாத அமெரிக்க ஆயுதங்களும் அடங்கும், அவற்றில் விமான அமைப்புகள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளடங்கும். கியேவிற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் 10 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1443584
  6. கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு! 2025-05-15 கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவி, ஏற்கனவே பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததாக கூறி தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மாணவின் மரணம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி, இந்த சம்பவம் தொடர்பாகக் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதன்போது சிசிடிவி காட்சிகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும், விசாரணை அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் நேற்று மன்றில் தெரிவித்திருந்தனர். இச் சம்பவம் தொடர்பாக பலரது வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி நடைபெற உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, நீதவான் இந்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443624
  7. புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து! அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதுடன் இவர்களை மகிழ்விப்பதற்காக மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த இலங்கை மின்சாரசபை சட்டத்தை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது. மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கவாதியான கடுவலை மாநகர சபையின் தற்போதைய மேயர் ரஞ்சன் ஜயலால் சட்டவரைபை தீ வைத்து கொளுத்தினார். கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த சட்டத்தில் போலியான திருத்தங்களை செய்து அண்மையில் இலங்கை மின்சாரசபை சட்டவரைபு நிறைவேற்றப்பட்டது. அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று முழுமையான ஆதரவளித்துள்ளார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இவ்விடயம் தொடர்பில் ஏதும் பேசுவதில்லை. அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மின்சாரசபை சட்டத்தினால் இலங்கையின் மின்சாரம் மற்றும் வலுசக்தித்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். வலுசக்தி துறையின் சுயாதீனத்தை பிற நாடுகளுக்கு விட்டுக்கொடுத்து நாட்டின் இறையாண்மையை அரசாங்கம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பிரிவினைவாத கொள்கை கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களை மகிழ்விப்பதற்காக எதிர்வரும் ஆண்டு முதல் காலப்பகுதியில் மாகாண சபைத்தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் விடுக்கும். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டால் நாட்டில் தேவையில்லா பிரச்சினைகள் ஏற்படும். அண்மையில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்தச் சட்டத்தால் வலுசக்தி துறையின் தனியுரிமை கூறாக்கப்படும் என்றார். https://newuthayan.com/article/புலம்பெயர்_தமிழர்களை_திருப்திப்படுத்தும்_அநுர_அரசு_-_விமல்_வீரவன்ச_கருத்து!
  8. ஹர்த்தால் வெற்றியே என்கிறார் சுமந்திரன்! adminAugust 19, 2025 யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தது. அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே … வடக்கு கிழக்கு முழுவதும் மக்களை ஒன்றிணைந்து போராட்டம் நடாத்த கூடிய கட்சியாக தமிழரசு கட்சியே உள்ளது. அந்த வகையில் நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். அது வெற்றியை தந்துள்ளது. எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி , அமைச்சர் பிமல் உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள். இதுவே வெற்றி. வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்க முடியாது. தெற்கில் இராணுவ முகாம்கள் உள்ளன. அங்கு அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் முடங்கி காணப்படுவார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் மக்களோடு மக்களாக , மக்களின் இயல்வு வாழ்வில் தலையீடு செய்கின்றனர். பாடசாலைகள் , தனியார் காணிகள் , ஏன் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றுக்கு சொந்தமான காணியை கூட கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும். இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே. இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம். வடக்கு – கிழக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தமிழரசு கட்சியின் கட்டுப்பாட்டிலையே உள்ளன. அதனால் , அந்த அந்த பிரதேசங்களில் மக்களை ஒன்றிணைந்து , அந்த பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம். பருத்தித்துறை நீதிமன்றுக்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற கோரி, பருத்தித்துறை நகர சபை நகர பிதாவின் அழைப்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் அந்த போராட்டத்திற்கு தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும். வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் .சி.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில், முத்துஐயன்கட்டு இளைஞன் கொலையானதும், இளைஞன் தொடர்பாகவும் சில விமர்சனங்கள் உள்ளன அவை எமக்கும் தெரியும். ஆனால் இதனை இராணுவ மயமாக்கலுக்கு எதிரான சுட்டியாக கொண்டே நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். இங்கு நோக்கம் இராணுவ மயமாக்கலை எதிர்ப்பது. எனவே நோக்கம் சரியாக இருப்பின் ஹர்த்தலுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதற்கு யார் அழைப்பு விடுத்தார்கள். யார் செய்கிறார்கள் என ஆராயாமல் ஆதரவு வழங்க வேண்டும். இங்கே ஒற்றுமை ஒற்றுமை என கூறி திரிபவர்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நாம் நோக்கம் சரியாக இருந்தால் அதற்காக ஆதரவு கொடுப்பவர்கள். அவ்வாறு ஆதரவு கொடுத்து சென்றாலும் எங்களை துரத்துவதில் குறியாகவே உள்ளனர். அது தெரிந்தும் நோக்கம் சரியாக உள்ள போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார். P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே .. யாழில்.சுமந்திரன் தெரிவிப்பு. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள் தான் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கடந்த காலங்களில் சுமந்திரன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாக கேள்வியெழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பலருக்கு ஞாபக மறதிகள் இருக்கலாம், அல்லது தமது அரசியலுக்காக ஞாபகம் இருந்தும் மறந்து போனது போல குற்றச்சாட்டுக்களை கூறலாம் நாம் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடாத்தி இருந்தோம். வலி . வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டங்களை முன்னெடுத்தோம். காணி சுவீகரிப்பு எதிராக சட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தோம். தற்போதும் அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்சேயின் சொந்த ஊரான தங்காலை வரையில் பேரணி சென்றோம். பேரணிக்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனத்தை காலி முகத்திடலில் வைத்து பொலிஸார் கடத்தி சென்றனர். அதனை போராடி மீட்டே எமது பேரணியை முன்னெடுத்தோம். P2P என அழைக்கப்பட்ட பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை முன்னின்று பொலிகண்டி வரையில் கொண்டுவந்து சேர்ந்தது நாமே. அன்றைக்கு சுமந்திரனும் , சாணக்கியனும் இல்லை என்றால் போராட்டம் பொத்துவிலுடன் முடிக்கப்பட்டு இருக்கும் என அன்றே பலர் ஊடக சந்திப்புக்களில் கூட கூறியிருந்தார்கள். நாங்கள் தான் பொலிஸ் தடைகளை உடைத்து பொலிகண்டி வரை பேரெழுச்சியாக பேரணி சென்றடைய முன்நின்றோம். அதற்காக பொலிஸ் விசாரணைகளை கூட எதிர்கொண்டோம். இந்த ஹர்த்தால் கூட ஒரு அடையாள போராட்டமே. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் முற்றாக அகற்றப்படும் வரையில் நாம் தொடர் போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/219445/
  9. ஒரு முகப்பட வேண்டிய சூழல் August 16, 2025 — கருணாகரன் — முல்லைத்தீவு – முத்தையன்கட்டில் இராணுவத்தினரோடு ஏற்பட்ட பிரச்சினையில் கபில்ராஜ் என்ற இளைஞர் மரணமடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடையடைப்புப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவைத் தெரிவித்துள்ளது. பொது அமைப்புகளும் தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிகிறது. இதற்கான முழுமையான ஆதரவை எல்லோரும் வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கோரியுள்ளார். சிவஞானத்தின் கோரிக்கை, வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மக்கள் வாழிடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை விலக்க வேண்டும் என்பதேயாகும். அதற்கு அவர் இந்தக் கொலைச் சம்பவத்தோடு ஒரு மக்கள் எழுச்சியைக் கோருகிறார். இதே கருத்துப்படத்தான் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தப் போராட்டம் தொடர்பாக பொது அமைப்புகளுடன் பேசிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன், “இராணுவம் அல்லது படையினர், மக்கள் வாழிடங்களில் நிலைகொண்டிருப்பதால்தான் இந்த மாதிரியான சம்பவங்களும் பிறழ்வு நடவடிக்கைகளும் உருவாகுவதற்கான சூழல் ஏற்படுகிறது. அத்துடன், அரசியல் தீர்வைப் பற்றி ஆட்சியாளர்கள் சிந்திக்காமல் இருப்பதற்கும் அதைத் தவிர்ப்பதற்கும் படைகளின் நிலை கொள்ளல் (படை ஆதிக்கம்) பிரதானமான காரணமாக உள்ளது. மக்களுடன் படைகளை நெருக்கமடைய வைப்பதன் மூலம் இராணுவப் பிரசன்னத்தை அல்லது படைகள் நிலைகொள்வதை நியாயப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கிறது. நீண்ட காலமாக மக்கள் வாழிடங்களில் படையினர் இருக்கும்போது மக்களுக்கும் படையினருக்குமிடையில் பல வழிகளிலும் உறவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். சந்தை, கடை, அலுவலங்கள், வழி, தெரு எனச் சகல இடங்களிலும் படையினர் புழங்கும்போது மக்களுக்கும் படையினருக்குமிடையில் உறவு ஏற்படும். இது படையினரின் பிரசன்னத்தை (இராணுவ மேலாதிக்கத்தை) பற்றிய தெளிவின்மையை மக்களிடத்திலே ஏற்படுத்தும்“ என்ற அடிப்படையில் இந்த விடயத்தைப் பார்க்க வேண்டும் என்ற சாரப்படக் கூறியுள்ளார். ஆக, இந்தக் கடையடைப்புப் போராட்டம், இராணுவத்தை அல்லது படைகளை விலக்குவதையே பிரதானமாகக் கொண்டுள்ளது. அது ஒரு முக்கியமான விடயமே. யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த பிறகும் அரசியற் தீர்வைப் பற்றி நேர்மையாகச் சிங்களத் தரப்புகள் பேசவில்லை. சிந்திக்கவில்லை. அதற்காக முயற்சிக்கவே இல்லை. பதிலாக படை மேலாதிக்கத்தின் மூலமாக வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களைக் கையாளலாம் என்று அரசு சிந்திக்கிறது. உண்மையும் அதுதான். படைமேலாதிக்கத்தில் ஆட்சியாளர்களுக்கு உள்ள நம்பிக்கையே அரசியற் தீர்வைப் பற்றிய அக்கறையின்மையாகும். 2009 க்கு முன்னர் இராணுவத்தினரைக் குறித்து மக்களிடம் இருந்த உணர்வு வேறு. இப்பொழுது உள்ள உணர்வு வேறு. அப்பொழுது படையினரைக் குறித்த அச்சமே அனைவரிடத்திலும் இருந்தது. படைகளுக்கும் அப்படித்தான். அவர்கள் எல்லோரையும் சந்தேகித்தனர். ஆக இரண்டு தரப்புக்குமிடையில் இடைவெளி இருந்தது. இந்த இடைவெளியை இல்லாதொழிக்கவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இதற்காக அது படையினரைப் பொது அரங்கில் இறக்கியுள்ளது. உணவுக் கடைகள், சலூன்கள், தையற்கடை போன்றவற்றைப் படையினர் நடத்துகிறார்கள். மட்டுமல்ல, மக்களுடைய காணிகளை அபகரித்து, அங்கே மரக்கறி உற்பத்தி செய்து சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். தென்னைப் பயிர்ச்செய்கை, நகர அழகு படுத்தல், சிரதானங்கள், இரத்ததானம் செய்தல் என சனங்களோடு ஐக்கியமாகும் உபாயங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் வறிய மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறோம் என்ற பேரில் சில வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. விளையாட்டுக் கழகங்கள் சிலவற்றுக்கு சில உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி எந்தெந்த வகையில் சனங்களுக்குள் ஊடுருவ முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுள்ளனர். இதையெல்லாம் படைத்தரப்பு தன்னிச்சையாகச் செய்யவில்லை. இதற்குப் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் உண்டு. அதைக் குறித்தே நாம் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். இப்போது – இந்தச் சந்தர்ப்பத்திலும் பேச வேண்டியுள்ளது. மக்களுடன் படைகள் பல வகையிலும் உறவாடும்போது ஒரு நெருக்கமான உணர்வு மக்களுக்கு ஏற்படும். அவர்கள் பிறகு படையினரை ஒரு மேலாதிக்கச் சக்தியாகப் பார்க்க மாட்டார்கள் என்று அரசாங்கம் எண்ணுகிறது. இதில் அரசாங்கம் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. ஏனென்றால் கிராமங்களில் உள்ள சாதாரண மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள், அரசியல் செயற்பாட்டில் உள்ளவர்கள், இலக்கியத் துறையில் இயங்குகின்றவர்கள், வணிகர்கள் எனப் பலரும் படைத்தரப்போடு தனிப்பட்ட ரீதியிலும் பழகும் அளவுக்கும் உறவை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கும் நிலைமை வளர்ச்சி அடைந்துள்ளது. சில இடங்களில் கொண்டாட்டங்களில் படையினர் கலந்து கொள்ளும் அளவுக்கு இது உயர்ந்துள்ளது. மட்டுமல்ல, குடிவிருந்து கூட நடக்கிறது. இதையெல்லாம் சரியென்று விமல் வீரவன்ஸ கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால், படைகளின் வேலையே வேறு. தேசிய பந்தோபஸ்தில் (தேசிய பாதுகாப்பில்) இவை பற்றி எந்த வாக்கியமும் இல்லை. அல்லது யுத்த காலத்தில் படைகள் இந்த மாதிரிப் பணியாற்றியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் பல ஆயிரம் பேர் உயிர் தப்பியிருப்பார்கள். அதில் பல ஆயிரம் படையினரும் இருந்திருப்பார்கள். யுத்தத்திற்குப் பிறகு, படையினர் செய்திருக்க வேண்டியது மீள்நிலைப்படுத்துதலை. அப்படியென்றால், அவர்கள் பழைய நிலைகளுக்குத் திரும்புவதைச் செய்திருக்க வேண்டும். கூடவே உடைந்த – அழிக்கப்பட்ட ஊர்களையும் கட்டிடங்களையும் மீள்நிலைப்படுத்தியிருக்கலாம். அதைக் கூடத் தனியாகச் செய்திருக்க்க் கூடாது. குறித்த பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகள், மக்கள் அமைப்புகள், அரசாங்கத் திணைக்களங்களின் திட்டம், தீர்மானம் போன்றவற்றை நிறைவேற்றும் ஒரு தரப்பாக இருந்து அந்தப் பணிகளைச் செய்திருக்கலாம். அப்படி நடக்கவே இல்லை. இப்பொழுது நடப்பதோ எதிர்மாறான சங்கதிகள். அரசாங்கம் செய்திருக்க வேண்டியது மீளமைப்பை. இயல்பு வாழ்க்கையில் மக்கள் முழுமையாக ஈடுபடக் கூடிய சூழலை உருவாக்கியிருக்க வேண்டும். அரசியல் தீர்வை எட்டியிருக்க வேண்டும். அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் படைகள் ஊர்களில் இருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது. ஆக அடிப்படையிலேயே தவறு நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில் – காரணங்களின் அடிப்படையில்தான் இந்தப் பிரச்சினையையும் இந்தப் போராட்டத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. தமிழரசுக் கட்சி ஹர்த்தாலை அறிவித்தவுடன் அதற்கு சில இடங்களில் மாற்று நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இணையத் தளங்களிலும் இதைக் குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏன் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே சில கறுப்பாடுகள் எதிர் நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக முத்தையன்கட்டில் கொலையான கபில்ராஜின் மரணம் தொடர்பாகப் பல விதமான கதைகள் (கருத்துகள்) உண்டு. அதை விட அது ஒரு தனிப்பட்ட விவகாரம். படையினரில் சிலருக்கும் கபில்ராஜ் மற்றும் நண்பர்களுக்கும் இடையில் நடந்த கொடுக்கல் வாங்கல், மதுப் பரிமாற்றம், முகாமைக் காலி செய்யும்போது மிஞ்சும் பொருட்களை எடுத்தல் அல்லது கையகப்படுத்தல் போன்றவற்றினால் ஏற்பட்ட விளைவு என்று சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனாலும் இதனால் நடந்திருப்பது ஒரு மரணம். இப்படியெல்லாம் படைத்தரப்போடு உறவு வைத்துக் கொள்ளும் அளவுக்குத்தான் நிலைமை உள்ளது என்பதை இந்தக் கட்டுரை வாதிட்டதை இந்தக் கொலை அல்லது மரணம் நிரூபிக்கிறது; ஒப்புக்கொள்கிறது; உண்மை என ஏற்றுக்கொள்கிறது. இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். 2009 க்கு முன்பு இந்த மாதிரி படைத்தரப்புக்கு மதுவை வாங்கிக் கொடுப்பதற்கு யாராவது முன்வருவார்களா? அல்லது, படையினர்தான் சந்தேகமில்லாமல் அதை வாங்கிப் பருகுவார்களா? அப்பொழுது படைமுகாம்களில் யாராவது திருடவோ பொருட்களை எடுக்கவோ செல்வார்களா? செல்ல முடியுமா? அதற்குப்படையினர் அனுமதிப்பார்களா? ஆகவே இதைக் குறித்தெல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சமூகத்தைப் பிளவு படுத்தும் உத்தியில் அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது. அதன் ஓரம்சமே இதுவும். இனி தமிழரசுக் கட்சியின் ஹர்த்தாலுக்கு வருவோம். ஹர்த்தால், ஊர்வலம், பாராளுமன்றத்தில் முழக்கம், தேர்தல் மேடைகளில் ஆவேசம், அரசியல் பத்திகளில் கண்டனம் போன்றவற்றினால் அரசியல் தீர்வோ, மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளோ கிடைக்கும் என்பது பொய்யென நிரூபிக்கப்பட்டாயிற்று. வடக்குக் கிழக்கை மையப்படுத்தி நடத்தப்படும் போராட்டங்களால் எந்தப் பயனுமில்லை. இதற்கு உதாரணம் அறகலய. அது கொழும்பில் நடத்தப்பட்டது. அரசாங்கத்தை முடக்கும் விதமாக நடத்தப்பட்டது. பல்வேறு தரப்புகளையும் பல தரப்புச் சக்திகளையும் ஒருங்கிணைத்து அல்லது அவற்றின் ஆதரவோடு நடத்தப்பட்டது. அதுதான் அந்தப் பெரிய வெற்றியை ஈட்டுவதற்குக் காரணமாகியது. வடக்கு கிழக்குக்கு மட்டுமான பிரச்சினைக்கு எப்படிக் கொழும்பில் ஆதரவைத்திரட்ட முடியும்? என்ற கேள்வியை யாரும் எழுப்பலாம். வடக்குக் கிழக்குப் பிரச்சினை என்பது வடக்குக் கிழக்குக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. அது முழு நாட்டுக்குமான பிரச்சினை என்பதை கடந்த கால வரலாற்று அனுபவம் சொல்கிறது. ஆகவே, அதைக்குறித்த புரிதல் உள்ள சக்திகளோடு இணைந்து எல்லோருக்கும் சொல்ல வேண்டும். நடத்தப்படும் போராட்டத்தை அரசு உணரக் கூடிய பொறிமுறை – இடம் போன்றவற்றைப் பற்றிச் சிந்திப்பது அவசியம். அதைக்குறித்து நாம் பேச வேண்டும். உரையாட வேண்டும். அதற்கு முன் சரியோ, தவறோ, தன்னுடைய பாரம்பரிய முறைமையின்படி தமிழரசுக் கட்சி இந்தப் போராட்டத்தை அறிவித்து விட்டது. அதைப் பலவீனப்படுத்தாமல் முழுமையாக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் மனோ கணேசன் போன்றவர்களும் பேசியிருக்கிறார்கள். எதிர்காலப் போராட்டங்களைப் பற்றி புதிதாகச் சிந்திப்போம். அதற்கான உரையாடல்களை விரிந்த தளத்தில் செய்வோம். ஏனென்றால், குழுக்களாகச் செயற்படும் காலம் முடிவுக்கு வருகிறது. அதனால் எந்தப் பயனுமில்லை என்பதை அனுபவங்கள் சொல்கின்றன. பல தரப்பும் இணைந்து ஒருமுகப்பட்டுச் சிந்திப்பதும் செயற்படுவதுமே இன்று வேண்டப்படுவது. அதைச் செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இங்கே இப்பொழுது நடந்து கொண்டிருப்பது கட்சிகளுக்கிடையிலான முதன்மைப்போட்டியே தவிர, மக்களுக்கான அரசியல் விளைவுகளல்ல. என்பதால்தான் ஒரு கட்சி எடுக்கும் முயற்சியை மறு தரப்புகள் விமர்சிப்பதும் நிராகரிப்பதும் நடக்கிறது. இந்தப் பண்பு – பழக்கம் மாற வேண்டும். சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு தரப்பின் அறிவிப்பை மறுதரப்பு மறுதலிக்காமல் இருக்கலாம். இப்படித்தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்திலும் தவறுகள் இழைக்கப்பட்டன. https://arangamnews.com/?p=12257
  10. வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம் August 18, 2025 8:55 am வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுவிபத்திற்குள்ளாகியது. விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர். மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிய பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் குறித்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்கள் , சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர் உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி வயது33, சுயன் வயது 30 என்று தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்று விட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பாக வவுனியா ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். https://oruvan.com/fatal-accident-in-omanthai-vavuniya-two-people-including-a-woman-killed-many-in-critical-condition/
  11. பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள் August 18, 2025 10:33 am வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வழமை போல் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து, கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தும் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது. இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை , சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது. இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர். அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர். அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் வியாபார நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பாடசாலைகள், மருந்தகங்கள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது. எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/hartal-ends-in-chaos-business-as-usual-in-mullaitivu-and-ampara/
  12. கிழக்கில் மக்களின் பேராதரவுடன் இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக பூரண ஹர்த்தால் இடம்பெறுவதாக சாணக்கியன் அறிவிப்பு வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னாம் முடிவுக்கு வரவேண்டும்…!; வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் இன்றைய தினம் வடக்கு மற்றும் கிழக்கில் பூரண ஹர்த்தால் மக்களின் பேராதரவுடன் இடம்பெறுகின்றது. இதனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடு செய்ததுடன் இதற்கான பாரிய ஆதரவினை ஆதரவினை பலர் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம்..! என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது..! எமது மக்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என சாணக்கியன் M.P மேலும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=337354
  13. தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்; ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு - செல்வம் அடைக்கலநாதன் Published By: Vishnu 18 Aug, 2025 | 01:57 AM இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத் திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.எனினும் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் 'ரெலோ' ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (17) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசுகளின் முப்படைகளாலும் அரங்கேற்றப் பட்டு வரும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, இன அழிப்பு படுகொலைகளை வெறுமனே நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. முப்படையினரின் இனவாத செயற்பாடுகள் நடைபெற வடக்கு கிழக்கிலே காணப்படும் அதிகூடிய தேவை யற்ற இராணுவ முகாம்களும் முப்படையின் பிரசன்னமுமே காரணமாகும். 2009 போர் மெளனிப்பிற்கு பிறகும் கூட தமிழினத்தை நிம்மதியாக வாழ விடக்கூடாது என்கிற நிகழ்ச்சி நிரலில் படையினர் செயற்படுவதாக நாம் கருதுகின்றோம். அன்றைய காலத்தில் எம்மினத்தின் மீது பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து வந்த எமது மக்களை பாதுகாப்பதற்காக வடக்கு கிழக்கில் இருந்து ராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தையும் முற்றாக அகற்ற பொது மக்களின் சுதந்திர வாழ்வியல் இராணுவ பிரசன்னத்தை அகற்றுவதன் ஊடாக உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையிலும் மக்களையும்,மண்ணையும் காத்திட தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் ஆயுதம் ஏந்தினோம். இன்றைய சூழ் நிலையில் மக்களை அச்சுறுத்தும் அதிக இராணுவ பிரசன்னம் அதன் அடக்குமுறை இன அழிப்பு வடிவங்காரும் எமது இனத்தின் எதிர்கால இருப்பை கேள்விக்குரியக்குகின்றது. அந்தவகையிலேயே 18/08/2025 ம் ‘திகதி நாளைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தலுவிய இராணுவ பிரகன்ணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் "ரெலோ" ஆதரவாளிக்கின்றது. இதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும். இருந்த போதிலும் இனத்தின் அடிமை விலங்கொடிக்க ராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தை எமது தாயக பூமியான வடக்கு கிழக்கில் இருந்து முற்றாக அகற்ற வேண்டும். அதன் ஊடாக தமிழினத்தை சுதந்திரமாக வாழ விட வேண்டும் என்ற உயரிய நோக்கில் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் "ரெலோ" ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222767
  14. யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் - உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை! யாழ் கந்தரோடையில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டிடத்தின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் யாழ்.கந்தரோடையில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையத்தை நேற்றையதினம் (16) சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் என்ற பெயரில் இராணுவ முகாமுக்கு அருகில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடம் தொடர்பில் எங்களுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்றைய தினம் அதைப் பார்வையிட்டிருக்கின்றோம். இந்தக் கட்டுமானத்தை நிறுத்துமாறு ஒட்டப்பட்ட பிரசுரம் அகற்றப்பட்டிருக்கின்றது. இந்தக் கட்டுமானத்தை பௌத்த பிக்கு ஒருவர் கட்டுவதாக அறிந்திருக்கின்றோம். எதிர்காலத்தில் பௌத்த சின்னங்களை அல்லது விகாரைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக அறிகின்றேன். அதனால் இதனை உடனடியாக நிறுத்துமாறு கோரியிருக்கின்றோம். அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்மந்தமாக சபை உறுப்பினர்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.” என தெரிவித்தார். இந்த விஜயத்தின் போது தவிசாளருடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர். https://newuthayan.com/article/யாழில்_அமைக்கப்படும்_பௌத்த_மத்திய_நிலையம்_-_உடனடியாக_நிறுத்துமாறு_கோரிக்கை!#google_vignette
  15. ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – வழமைப் போன்று இயங்கும் யாழ். நகர்! வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே குறித்த இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதிகோரி வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்தது. முன்னதாக கடந்த 15ஆம் திகதி இந்த கதவடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக இன்று திங்கட்கிழமை (18ஆம் திகதி) பிற்போடப்பட்டிருந்தது. இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில், அதற்கு சமமாக எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முன்னெடுக்கவுள்ள கதவடைப்பு போராட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். எனவே, இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு பொது மக்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/ஹர்த்தாலுக்கு-ஆதரவில்லை/
  16. அடுத்த வருடத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்? மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். “நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம். அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம். சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம். அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது. அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை. அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு. மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்.” என்றார். https://www.samakalam.com/அடுத்த-வருடத்தில்-மாகாண/
  17. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) தவறுகளைத் திருத்திக்கொள்ளாத தலைமுறைகளின் கதை – அ. குமரேசன் பெருந்தொழில் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கம், உழைப்புச் சுரண்டல், போர், அரசியல் கொந்தளிப்புகள் ஆகிய காரணங்களால் ஆட்டுவிக்கப்படும் ஒரு நகரத்து மக்களின் நூறாண்டு வாழ்க்கையைச் சித்தரிக்கிறது, ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட ஒரு நாவல். கல்வித்துறையினர் “இலக்கியக் குப்பை” என்று தள்ளிவைத்தனர், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் “கட்டாயம் படித்தாக வேண்டிய புத்தகங்கள்” பட்டியலிலிருந்து அந்தப் புத்தகம் நீக்கப்பட்டது. மோசமான சொல்லாடல்கள், பாலியல் சித்தரிப்புகள் என்றெல்லாம் கூறி அந்த நாவலைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆனால் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மீறி தனித்து நிற்கிறது “தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள்” (One Hundred Years of Solitude). கொலம்பியா நாட்டின் கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez 1927–2014) எழுதிய இந்தப் புத்தகம் 1967ஆம் ஆண்டில் வெளியானது. ஒரு கற்பனை நகரத்தில், ஒரு குடும்பத்தின் பல தலைமுறைகளை சந்திக்க வைக்கிற இந்நாவல் “மாய மெய்யியல்” உத்தியில் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இன்று மதிக்கப்படுகிறது. மனிதர்களின் தனிமை, வரலாற்றின் சுழற்சி ஆகிய கருப்பொருள்களை ஆராய்ந்து, மெய்யியலின் அழகிய கூறுகளை இணைக்கிற நாவல், விதியை மாற்ற முடியாது என்ற நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கிறது என்ற விமர்சனம் கூட எழுந்தது. நாவல் என்னதான் சொல்கிறது? கற்பனை நகரம் ஜோஸ் ஆர்காடியோ புயேண்டியா, அவரது இணையர் உர்சுலா இகுவாரன் இருவரும் தங்களின் சொந்த ஊரைவிட்டு வெளியேறி மகோண்டோ என்ற புதிய நகரத்தைக் கட்டமைக்கின்றனர். தனிமையான சொர்க்கம் என்று சொல்லத் தக்கதாக இருந்த அந்த நகரத்தை ஒரு தனியார் நிறுவனத்தின் சுரண்டல்கள், உள்நாட்டுப் போர்கள், அரசியல் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை ஆழமாகப் பாதிக்கின்றன. புயேண்டியா குடும்பம் இயல்பான காதல், உறவு, இன்பம், சோகம் என எதிர்கொள்வதோடு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் அனுபவிக்கிறது. குறியீடுகளால் நிறைந்துள்ள நாவலில் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். புயேண்டியா குடும்ப உறுப்பினர்கள், பலர் ஒரே விதமான பெயர்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், தங்கள் முன்னோர்களின் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள், அந்தத் தவறுகளின் விளைவுகளும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. இது வரலாற்றின் சுழற்சி முறையை வலுப்படுத்துகிறது. சுதந்திரமாக உலகெங்கும் சுற்றுகிற ஜிப்ஸி (நாடோடி) இனப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அறிவியல் ஞானம் கொண்டவரான மெல்குயாடஸ் என்ற கலகலப்பான மனிதரின் தலைமையில் அடிக்கடி அந்த நகரத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வேதியியல் புதுமைகள் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துகிறார்கள், இது ஜோஸ் ஆர்காடியோ புயேண்டியாவை கவர்ந்திழுக்கிறது. மெல்குடயாஸ் ஒரு மர்ம மனிதராகவும், ரகசியக் குறிப்புகளாக ஏதோ எழுதிவைக்கிறார். புயேண்டியா இணையரின் மகன் ஜோஸ் ஆர்காடியோ வலிமையானவன் ஆனால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறவன். மற்றொரு மகன் ஆரேலியானோ நிதானமானவன், ஆனால் புதிரானவன். இவன் பின்னர் அரசியல் கிளர்ச்சியில் பங்கேற்று தலைமைப் பொறுப்புக்கு வருகிறான். மகோண்டா நகரம் அரசியல் மோதல்களின் களமாகிறது. வியக்கத்தக்க மாற்றங்களுக்கும் உள்ளாகிறது. நகரத்திற்கு ஒரு பெரிய வாழைப்பழ நிறுவனம் வருகிறது. விவசாயிகளிடமிருந்து வாழைத்தார்களைக் கொள்முதல் செய்து எந்திரங்களின் மூலம் பதப்படுத்தி, பல்வேறு பொருள்களையும தயாரிக்கிற அந்த நிறுவனம் நவீனமயமாக்கலோடு, அப்பட்டமான உழைப்புச் சுரண்டலிலும் இறங்குகிறது. ஆட்சி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கிறது. கொந்தளிக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அந்தப் போராட்டத்தின்போது ஒரு படுகொலை நடக்கிறது. நிறுவன உரிமையாளரின் செல்வாக்கால் அந்தக் கொலை பதிவிலிருந்தே நீக்கப்படுகிறது. இந்த நிகழ்வுப் போக்குகள் நகரத்தின் குழப்பத்தையும் வீழ்ச்சியையும் குறிக்கின்றன. நகரத்தையே உருவாக்கிய புயேண்டியா குடும்பத்தின் தலைமுறைகள், புதிய அணுகுமுறைகள் இல்லாதவர்களாகப் பழைய தவறுகளைத் தொடர்கிறார்கள், அழிவைச் சந்திக்கிறார்கள். எஞ்சியிருக்கும் புயேண்டியா அந்த ஜிப்ஸி தலைவர் மெல்குயாடஸ் ரகசியமாக எழுதிவைத்திருந்த கையெழுத்துப் பிரதியை எடுத்து, புதிரான குறியீடுகளுக்குப் பொருள் கண்டுபிடிக்கிறான். அதில் தன் குடும்பத்தின் அழிவு குறித்து முன்னரே அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறான். தலைவிதி போல எழுதப்பட்டிருப்பது பற்றிய யோசனையோடு படித்துக்கொண்டிருக்கும்போதே புயல் தாக்குகிறது. ஊரை முற்றிலுமாகக் குலைத்துப் போடுகிறது. ஒவ்வொரு தலைமுறையும் மகோண்டோவை எவ்வாறு பாதிக்கிறது என்று நாவல் சித்தரிக்கிறது. நகரம் உருவாக்கப்பட்ட லட்சியத்திலிருந்து அது முடிந்து போகும் சோகம் வரையிலான காலத்தின் ஓட்டமே கதையாகிறது. கதாபாத்திரங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்களா, தலைவிதித் தத்துவத்தை நாவல் போதிக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது. ஆனால், மாற்றமே இல்லாமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் செயல்படுகிறபோது அடுத்தடுத்த தலைமுறைகள் ஒரே மாதிரியான முடிவுகளை எதிர்கொள்ளத்தானே வேண்டியிருக்கும், அதை ஒருவர் கணித்து எழுதியிருப்பது வழக்கமான தலைவிதி நம்பிக்கையாகாது என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள். பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட புறச்சூழல்கள் தனி மனிதர்களின் காதல் உறவுகளைக் கூடச் சீர்குலைக்கின்றன; பல கதாபாத்திரங்களைத் தனிமைக்குக் கொண்டு செல்கின்றன; விதிப்படி நடப்பது போலக் காட்சியளித்து, நுட்பமான முறையில் மனிதச் செயல்களே எதையும் தீர்மானிக்கின்றன என்றும், மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் உணர்த்துகின்றன என்றும் விளக்கமளிக்கிறார்கள். நாவலுக்கு எழுந்த எதிர்ப்புக்குக் காரணம், உழைப்புச் சுரண்டலையும், பாரம்பரியத்தின் பெயரால் தொடரும் பழமைப் போக்குகளையும் கேள்விக்கு உட்படுத்துவதுதான் என்ற கருத்தும் பகிரப்பட்டிருக்கிறது. முன்னோடி நாவலின் படைப்பாளி கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். வாழ்க்கையின் உண்மை நடப்புகளையும், கற்பனை வளர்ச்சிகளையும் இணைக்கிற மாய மெய்யியல் படைப்பாக்க உத்தியின் முன்னோடிகளில் ஒருவராகப் புகழப்படுகிறார். அவருடைய இந்த நாவல் பன்னாட்டு அளவில் பாராட்டுகளைப் பெற்றது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பெருமிதத்திற்குரிய படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. “காலரா காலத்தில் காதல்” (Love in the Time of Cholera –1985) “ஒரு மரண முன்னறிவிப்பின் காலவரிசை” (Chronicle of a Death Foretold – 1985) உள்ளிட்ட நாவல்களும் குறிப்பிடத்தக்கவை. பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். லத்தீன் அமெரிக்காவின் வாழ்க்கையையும் சிக்கல்களையும் பிரதிபலிக்கும் நாவல்கள், சிறுகதைகளுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1982 ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவில் இந்தக் குறிப்பிட்ட நாவலுக்குக் கல்வி நிறுவனங்கள் தடைவிதித்ததை எதிர்த்து ஆங்கில ஆசிரியர் ஒருவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். பின்னர் நாவல் நூலகங்களுக்குள் வந்தது. கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எதிர்ப்புக்கு உள்ளானதன் பின்னணியில் அவரது சோசலிசக் கருத்துகளும், கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுடனான தொடர்பும் இருந்தன. அமெரிக்காவிற்குச் செல்ல முயன்றபோது அவருக்கு விசா மறுக்கப்பட்டது. ஓடிடி திரையில் இந்த புத்தகத்திற்கு பெரிய இலக்கிய விருது எதுவும் கிடைக்கவில்லை என்றாலும். 2007இல் நடந்த ஸ்பானிஷ் மாநாட்டில் இது அந்த மொழியின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல் 46 மொழிகளில் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. உலகளவில் 5 கோடிக்கும் அதிகமான படிகள் விற்பனையாகியுள்ளன. “தனிமையின் நூறாண்டுகள்” ஸ்பானிஷ் மொழியில் வலைத் தொடராகத் தயாரிக்கப்பட்டு, ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன், சென்ற ஆண்டிலிருந்து நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. கவிதையழகோடு உருவாகியுள்ளதாகப் பாராட்டப்படும் இந்தத் தொடர் மார்க்வெஸ் குடும்பத்தினரின் ஆதரவுடன் படமாக்கப்பட்டுள்ளது. https://bookday.in/books-beyond-obstacles-gabriel-garcia-marquez-one-hundred-years-of-solitude-book-based-article-written-by-a-kumaresan/
  18. பழிவாங்கும் தீ – அம்பை அஷ்ட வசுக்கள் அஷ்ட வசுக்கள் அவரவர் மனைவியுடன் மலைப்பிரதேசத்தில் மகிழ்வாக நேரம் கழித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்டனர். அந்த சமயத்தில் ரிஷி அங்கில்லை. ஆசிரமத்தின் அருகே தெய்வ பசு நந்தினி மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அஷ்ட வசுக்களில் ஒருவர் அந்த பசுவின் தெய்வீக வடிவை கண்டு மயங்கி அதை புகழ்ந்து பேச துவங்கினார். அவரது மனைவியும் கருணை வடிவாய் இருந்த அந்த சாதுவான பசுவை பார்த்து மயங்கி அந்த பசுவை தங்களுடன் எடுத்த செல்ல விரும்பினார். ஆனால் மற்ற வசுக்கள் இதை எதிர்த்தனர். மனைவி விரும்பி கேட்டதால் அந்த ஒரு வசு மற்றவர்களை இதற்கு சம்மதிக்க வைத்து, நந்தினியை அங்கிருந்து கவர்ந்து சென்றனர். வசிஷ்டர், ஆசிரமத்துக்கு திரும்பிய பிறகு நந்தினியை இவர்கள் கடத்தி சென்றது அறிந்து கோபம் கொண்டார். வசுக்களை வரவழைத்து அவர்களை சபித்தார். “ நீங்கள் உங்கள் நிலைக்கு தகுதி இல்லாத செயலை செய்தீர்கள் ! எனவே நீங்கள் மனிதனாக பிறக்கவேண்டும் “ அவரது சாபம் கேட்டவுடன் அனைத்து வசுக்களும் பயந்து, நந்தினியை திரும்ப ஒப்படைத்து சாபத்தில் இருந்து விடுவிக்க கோரினர். ஒருமுறை சபித்தால் அதை மீண்டும் பெற இயலாது. இருந்தும், நந்தினி மீண்டும் வந்ததால் கோபம் தணிந்த வசிஷ்டர் ” அந்த ஒரு வசு மட்டுமே நந்தினியை திருட எண்ணியதால் , அவன் மட்டுமே மனிதனாக பிறந்து முழு வாழ்வும் வாழ்ந்து பின் இறப்பை சந்திக்க நேரிடும். மற்ற அனைவரும் பிறந்ததுமே சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் வசுக்கள் ஆவீர்கள் ” என சாபத்தை மாற்றினார். இதன் பின், வசுக்கள் கங்கையை சென்று சந்தித்து, தங்களின் சாபத்தை பற்றிய விவரத்தைக் கூறி பூலோகத்தில், தங்களது தாயாக இருக்க வேண்டினார்கள். அவர்கள் மேல் கருணை கொண்ட கங்கையும் அதற்கு சம்மதித்தாள் . பூலோகத்திற்கு வந்து, சந்தனு ராஜாவை சந்தித்து அவரை மணந்துக் கொண்டாள். ஆனால் அதற்கு முன் , தான் செய்யும் எந்த செயலைப் பற்றியும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்ற நிபந்தனை விதித்து அதற்கு அரசன் சம்மதத்தைப் பெற்றாள். முதல் ஏழு வசுக்கள் பிறந்த பொழுதும், பிறந்தவுடனேயே அவர்களை கங்கை நதியில் வீசி அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தாள் . ஏழு குழந்தைகளை அவள் கங்கையில் வீசிய பொழுதும் எதுவும் கேட்காத சந்தனு, அவள் எட்டாவது குழந்தையை வீச முயன்றபொழுது, அவளை தடுத்து அவளது செய்கைகளுக்குக் காரணம் கேட்டார். சந்தனுவிடம் தன் உண்மை தோற்றத்தை காட்டிய கங்கை, தனது செய்கைகளுக்கு உண்டான காரணத்தையும் விளக்கி கூறினாள். பின், ” நீ எனக்கு அளித்த சத்தியத்தை மீறியதால், இனி என்னால் உன்னுடன் வாழ இயலாது. இப்பொழுது இக்குழந்தையை என்னுடன் அழைத்து செல்கிறேன். உரிய காலம் வரும் நேரத்தில் அவன் உன்னிடம் வந்து சேர்வான் ” எனக் கூறி அக்குழந்தையுடன் அங்கிருந்து சென்றாள். அதன் பின், பதினாறு வருடங்கள் கழித்து அனைத்தும் கற்ற இளம் வாலிபனாய் அரசனிடம் திரும்பி வந்தது அக்குழந்தை. தேவவிரதன் என அழைக்கப்பட்ட அந்த இளைஞன், அனைவராலும் மதிக்கப்பட்டு, பயத்துடன் பார்க்கப்பட்டான் . அவன் அனைவருக்கும் கவலைப்பட்டு அனைவரையும் பார்த்துக் கொண்டாலும், மகிழ்ச்சி என்பதே வாழ்வு முழுவதும் அறியாமல் இருந்தான். பழிவாங்கும் தீ – அம்பை சத்யவதியின் மகன் விசித்திரவீர்யனுக்கு திருமண வயது வந்ததும் அவனுக்கு உரிய மணமகளை தேடும் வேலையை துவங்கினார் பீஷ்மர். அந்த சமயத்தில் , காசி ராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா மற்றும் அம்பாலிகாவிற்கு சுயம்வரம் நடைபெற்றது. குணவதிகளும் அழகிகளுமான அவர்களை விசித்திரவீர்யனுக்கு திருமணம் செய்ய முடிவுசெய்தார் பீஷ்மர். சுயம்வரத்திற்கு சென்ற இவரை, இவரது நோக்கம் தெரியாமல் அங்கு வந்திருந்த மற்ற இளவரசர்கள் கிண்டல் செய்தனர். ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் சுயம்வரத்திற்கு வந்ததால் இந்த கேலி நிகழ்ந்தது. இதனால் கோபம் அடைந்த பீஷ்மர் அவர்கள் அனைவரையும் சண்டைக்கு அழைத்தார். மிக எளிதாக எந்தவித கஷ்டமும் இன்றி அந்த இளவரசர்கள் அனைவரையும் தோற்கடித்து, மூன்று இளவரசிகளையும் அங்கிருந்து அழைத்து சென்றார். அம்பை, ஸுபால ராஜன் சால்வனை விரும்பியதையும், சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட விரும்பியதையும் பீஷ்மர் அறியவில்லை. அஸ்தினாபுரம் திரும்பும் வழியில் , சால்வன் இவரை வழிமறித்து போருக்கு அழைத்து தோல்வியடைந்தான். அஸ்தினாபுரம் வந்தபின்பே, அம்பை , தனது மனதில் இருப்பதை பீஷ்மரிடம் கூறினார். தான் தவறு செய்ததை உணர்ந்த பீஷ்மர், தக்க பாதுகாப்புடன் அவளை சால்வன் இருக்குமிடத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, பலர் பார்க்க பீஷ்மர் என்னை தோற்கடித்தார். எனவே என்னால் உன்னை திருமணம் செய்ய இயலாது என கூறினான். இதனால் மனம் உடைந்த அம்பை, கோபத்துடன் மீண்டும் பீஷ்மரிடம் திரும்பி வந்து, நடந்ததை கூற, அவர் விசித்திரவீரியனிடம் அம்பையை திருமணம் செய்யக் கூறினார். அவனோ, மனதில் வேறொரு ஆணை நேசிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்ய இயலாது எனக் கூறி மறுத்துவிட்டான். மீண்டும் சிலகாலம் கழித்து சால்வன் மனம் மாறியிருப்பான் என எண்ணி , அம்பையை அங்கே அனுப்ப, அவன் மீண்டும் மறுத்துவிட்டான். இதனால் கடுங்கோபம் கொண்ட அம்பை, நீங்கள்தான் இந்த நிலைக்கு காரணம் எனவே நீங்களே என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பீஷ்மரிடம் சண்டையிட்டாள். ஆனால், ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டதால் பீஷ்மர் அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். தனது வலிக்கும் வாழ்வின் பிரச்சனைக்கும் பீஷ்மர் மட்டுமே காரணம் என எண்ணிய அம்பை அவரை அழிக்க சபதம் பூண்டாள். சுப்ரமணியரை நோக்கி தவம் இருந்து, என்றும் வாடாத தாமரை மாலையை வரமாகப் பெற்றாள். அந்த மாலையை அணிந்தவர் பீஷ்மரை அழிக்க இயலும் என்பதே வரமாகும். அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள். முதலில் சால்வனிடம் பேசி அவளை திருமணம் செய்துகொள்வதாய் அவர் கூற, இனி தன் வாழ்வில் இல்லறத்திற்கு இடம் இல்லையென்றும், பழி வாங்குவது மட்டுமே தன் லட்சியம் என அவள் மறுத்துவிட , பீஷ்மரை போருக்கு அழைத்தார் பரசுராமர். நீண்ட நாட்கள் இருவருக்கும் வெற்றி தோல்வி இன்றி சண்டை நீடிக்க, இறுதியில் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு அங்கிருந்து விலகினார் பரசுராமர். இதனால், மனம் உடைந்த அம்பை மீண்டும் சிவனை நோக்கி கடுமையான தவமிருக்க துவங்கினாள். இறுதியில் அவள் தவத்தை மெச்சி காட்சியளித்த சிவன், அடுத்த பிறவியில் அவள் பீஷ்மரை கொல்ல முடியும் என வரமளித்தார். இதனை கேட்டவுடன், தீ மூட்டி, அதில் இறங்கினாள் அம்பை. அடுத்த பிறவியில் துருபதனின் மகளாக பிறந்தாள் . சிறு வயதிலேயே அம்பை முன்பு வாயிலில் தொங்க விட்டு சென்ற தாமரை மாலையை எடுத்து அணிந்து கொண்டாள் . இதை அறிந்த துருபதன், பீஷ்மரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க, அவளை காட்டிற்கு அனுப்பி வைத்தார். காட்டில் போர்கலைகளை கற்றவள், அங்கிருந்த யட்சனின் உதவியுடன் ஆணாக சிகண்டியாக மாறினாள். மகாபாரத யுத்தத்தில் சிகண்டி பெண்ணாக பிறந்தவள் என அறிந்திருந்த பீஷ்மர் அவளை தாக்கவில்லை. பத்தாம் நாள், யுத்தத்தில், அர்ஜுனனுக்கு சாரதியாக கிருஷ்ணரின் இடத்தில் சிகண்டி இருக்க, அர்ஜுனன், சிகண்டி இருவருமே அவர் மேல் கணைகளை தொடுத்தனர். பிதாமகர், அர்ஜுனனின் அம்புகள் வலிமையாகவும் துன்புறுத்துவதாகவும் இருந்ததாகக் கூறினார். அவருடைய நீண்ட துன்பகரமான வாழ்வு அங்கு முடிவுக்கு வந்தது. பதிலுக்கு பதில்… துரோணரும், துருபதனும் அவர்களின் இளம் வயதில் ரிஷி பாரத்வாஜரின் குருகுலத்தில் பயின்றுவந்தனர். அப்பொழுது இருவரும் மிக நெருங்கிய தோழர்களாய் இருந்தனர். அந்த நேரத்தில், துருபதன் துரோணருக்கு ஒரு வாக்கு அளித்தார். அவர் நாட்டின் அரசராக ஆகும் பொழுது, அவரது சாம்ராஜ்யத்தின் பாதியை துரோணருக்கு அளிப்பதாக கூறினார். குருகுலம் முடிந்து இருவரும் பிரிந்தனர். துருபதன் நாளடைவில் பாஞ்சால நாட்டின் அரசன் ஆனான். துரோணர், கிருபரின் சகோதரி கிருபையை மணந்து அஸ்வத்தாமன் என்ற மகனை பெற்றார். உலகிலேயே சிறந்த வில்லாளி ஆக வேண்டும் என்ற ஆசையில் பரசுராமரிடம் மேலும் பயின்றார். வித்தையில் சிறந்தவராக இருந்தாலும், போதுமான வருமானம் இல்லாததால் மிக வறுமையில் சிக்கி தவித்தார் துரோணர். ஒருமுறை, அஸ்வத்தாமன் அவனது அம்மாவிடம், ” அம்மா என் நண்பன் பால் பருகியதாகக் கூறினான். பால் என்றால் என்ன ? ” என கேக்கும் அளவிற்கு அவர்கள் வறுமையில் இருந்தனர். இதனால் வேதனையுற்ற கிருபை துருபதனின் வாக்கை துரோணருக்கு நினைவூட்டி அவரிடம் சென்று உதவி கேக்க சொன்னாள். இளம்பிராயத்து நினைவுகளும் துருபதனுடன் கழித்த இன்பமான நினைவுகளும் மனதில் தோன்ற பாஞ்சாலத்திற்கு சென்றார் துரோணர். அங்கே அரசவையில் துருபதனை நண்பனாய் நினைத்து பேச, அதிகாரத்தில் இருப்பதால் அகந்தையில் துருபதன் துரோணரை பிச்சைகாரன் என்றும் அரசரை நேரடியாக சந்தித்து பேச அருகதை இல்லை என்றும் அவமதித்தான். இதனால் கோபம் கொண்ட துரோணர், இதற்கு பழி வாங்க உறுதி பூண்டார். சில காலம் கழித்து , துரோணர் குரு வம்சத்து ஆச்சாரியாராக ஆனார். குரு வம்ச இளவரசர்களின் குருகுல காலம் முடிந்ததும், அவர்களிடம் குரு தட்சணையாக துருபதனை பிடித்து வர சொன்னார். இளவரசர்கள் அவர்களின் முதல் போரை எண்ணி சந்தோசத்துடன் சென்றனர். முதலில் போருக்கு சென்ற கௌரவர்களை எளிதாக தோற்கடித்தான் துருபதன். அதன்பின், யுதிஷ்டிரன் இல்லாமல் சென்ற பாண்டவர்கள், துருபதனை எளிதில் வீழ்த்தினர். அர்ஜுனன் அப்பொழுதே தீர செயல்கள் செய்து தான் சிறந்த போர் வீரன் என நிரூபித்தான். எதற்காக இந்த யுத்தம் என புரியாமலே அவர்களிடம் கைதியானான் துருபதன். தன் மாணவர்களின் சாமர்த்தியத்தை கண்டும், தன் சபதம் நிறைவேறியதை கண்டும் துரோணர் மகிழ்ந்தார். பின் துருபதனை நோக்கி ” நீ என்னை பிச்சைக்காரன் என்று அழைத்தாயே நினைவிருக்கிறதா ? இன்று உனது ராஜ்ஜியம் என்னிடம். இப்பொழுது, உன் உயிரை காப்பாற்றக் கூடியது என்று எதுவும் உன்னிடம் இல்லை. இப்பொழுது மற்ற பிச்சைக்காரர்கள் போன்றுதான் நீயும். உன்னை இப்பொழுதே கொன்றுவிட்டு உன் ராஜ்யத்தை நான் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், எனக்கு உன் நட்பே மீண்டும் வேண்டும். அதனால், பாதி ராஜ்யத்தை திருப்பி அளிக்கிறேன் ” என்றார். தன் சபதம் நிறைவேறியதும் துரோணரின் கோபமும் தணிந்தது. ஆனால் அந்த சம்பவம் அப்படி நல்லபடியாக முடியவில்லை. துருபதனின் உள்ளிருந்த கோபம் வெளிப்படாமல் உள்ளுக்குள்ளே நீறு பூத்த நெருப்பாய் இருந்தது. அது பழி வாங்கத் துடிக்கும் , சண்டையிடவும் கொல்லவும் பிறந்த ஷத்ரிய வம்சத்தின் கோபம் அது. பிராமணரை கொல்லும் ஒரு மகனும், அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை மணக்கக் கூடிய மகளும் வேண்டும் என்று அப்பொழுதே மனதில் உறுதி கொண்டார். தன்னை கைது செய்து கொண்டுவந்தாலும் அர்ஜுனனின் வீரத்தை பாராட்டாமல் இருக்க இயலவில்லை அவரால். திருஷ்த்துட்யும்னன் , ஆச்சாரியார் துரோணரை கொன்றான், திரௌபதி அர்ஜுனனை மணந்து அதன் மூலம், பஞ்சபாண்டவர்களுக்கும் மனைவியானாள். https://solvanam.com/2025/01/26/பல்லாயிரம்-ஆண்டுகளுக்க-3/
  19. அங்கீகரித்தலின் அரசியல் sudumanal பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரித்தல் என்பதே ஓர் வரலாற்றுக் கேலிதான் என்றபோதும், அதை பேசவேண்டியிருக்கிறதுதான் வரலாற்று அவலம். இஸ்ரேல் என்ற நாடு போலன்றி பலஸ்தீனம் என்ற நாடு 1948 வரை வரைபடத்தில் இருந்த ஓர் நாடு. அதை அங்கீகரிக்கிறோம் என சொல்ல வருமளவுக்கு அரசியலை தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்கள் யார். பலஸ்தீனத்தை காலனியாக்கி வைத்திருந்த பிரித்தானியர்கள்தான். 1947 இல் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அதிகார நிழலில், சியோனிஸ்டுகளின் தொடர் முயற்சியில், இஸ்ரேல் என்ற நாடு முளைத்தெழும்பியது. உலகத்திலேயே இன்றுவரை தனக்கான நிரந்தர எல்லையை வகுத்துக் கொள்ளாத ஒரேயொரு நாடு இஸ்ரேல்தான். அதை ஓர் அரசாக அங்கீகரித்த உலகம், ஏற்கனவே அரசாக இருந்த பலஸ்தீனத்தை அரசற்றவர்களாக ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. அந்தளவுக்கு இஸ்ரேலிய சியோனிச ஆட்சியும் அமெரிக்காவிலுள்ள சியோனிச லொபியும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக, அதேநேரம் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்ளையை தமக்கேற்ப தகவமைக்குமளவுக்கு செயற்பட்டு வந்தன. இந்த சியோனிச அரசு பலஸ்தீன இனவொதுக்கலையும் மண் ஆக்கிரமிப்பையும் குடியேற்றத்தையும் இனவழிப்பையும் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாகப் பேணி இன்று இனப்படுகொலை என்ற அளவுக்கு உயர்த்தி வெறியாட்டம் ஆடுகிறது. வரலாறு இவ்வாறாக நகர்ந்துவர ஐரோப்பியர்களும் அமெரிக்காவும் அவர்தம் பச்சை எடுபிடிகளும் ஒக்ரோபர் 7 கமாஸின் தாக்குதலை பூதாகாரமாக்கி படம் காட்டினர். இஸ்ரேல் என்ற நாடு தோன்றி 1948 இல் இஸ்ரேல் நடத்திய பயங்கரவாதம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கெதிராக அவர்கள் ஒருபோதுமே பேசியது கிடையாது. அந்த சியோனிசப் பயங்கரவாத செயற்பாட்டின்போது ஏழு இலட்சம் பலஸ்தீன மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கப்பட்டார்கள். 15’000 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களை 530 கிராமங்களிலிருந்து விரட்டியடித்து, அரக்கிப் பெற்ற நிலத்தில் இஸ்ரேல் அகலக் கால்வைத்தது. 78 வீதமான பலஸ்தீன நிலப்பரப்பை கைப்பற்றி அமைந்ததுதான் இன்றைய இஸ்ரேல் என்ற நாடு. மேற்குலகுக்கு இது பயங்கரவாதமாகத் தெரியவில்லை. அவர்களது காலனிய வரலாற்றுக்கு இது புதியதுமல்ல. விரட்டப்பட்ட பலஸ்தீனர்களுக்கு தம் பிரதேசத்தின் மீதான உரிமை குறித்து பேசாத மேற்குலகினர் ஹமாஸின் ஒக்ரோபர் தாக்குதலின்போது “இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாக்கும் உரிமை இருக்கிறது” என ஒருதலைப்பட்சமாக தத்துவம் பேசினர். இவர்கள் யார். இவர்கள்தான் இதுவரை பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரிக்காமல் இருப்பவர்கள். இப்போ ஐரோப்பியத் தெருக்களில் காஸா படுகொலைக்கு எதிராகவும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக நடக்கும் பிரமாண்டமானதும் உயிர்ப்பானதுமான ஆர்ப்பாட்டங்கள் தமது அரசியல் இருப்பை ஆட்டிவிடும் என்ற அச்சத்தில் “பலஸ்தீனத்தை அஙகீகரிக்கப் போகிறோம்” என பிரான்சும் ஜேர்மனியும் பிரித்தானியாவும் கடைசியாக அவுஸ்திரேலியாவும் கனடாவும் சொல்லவந்திருப்பது முக்கிய செய்தியாக இடம்பிடித்திருக்கிறது. 15 நவம்பர் 1988 அன்றைய பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத் அவர்கள் பலஸ்தீனத்தை இறைமையுள்ள ஓர் அரசாக பிரகடனப்படுத்தினார். அதன் தலைநகரம் கிழக்கு ஜெரூசலம் எனவும் அறிவித்தார். அதை அல்ஜீரிய நாடு முதலில் அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் 82 நாடுகள் அங்கீகரித்தன. அதாவது 1988 நவம்பரிலிருந்து டிசம்பருக்குள் 83 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. இதற்குள் இந்தியா, சீனா, ரசியா, துருக்கி, பாகிஸ்தான், உக்ரைன் போன்ற நாடுகளும் அடக்கம். தொடர்ந்து 2000 வது ஆண்டிற்குள் மேலும் 20 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. இதற்குள் தென்னாபிரிக்கா, பிலிப்பைன், றுவண்டா, கென்யா, எத்தியோப்பியா என்பனவும் அடக்கம். 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 2000 இன் பின் 2012 வரையில் மேலும் 30 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன. அவை பெரும்பாலும் தென்னமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகள் ஆகும். பிரேசில் ,வெனிசுவேலா, பெரு, ஆர்ஜன்ரீனா, சிலி போன்ற நாடுகளும் தாய்லாந்து, லெபனான், சிரியா, ஐஸ்லாந்து போன்ற நாடுகளும் இதற்குள் அடங்குகின்றன. இத்தாலி இதுவரை கள்ள மௌனம் காக்கிற போதும்கூட, 2013 இல் ஐநாவில் அங்கம் வகிக்காத வத்திக்கான் பலஸ்தீனத்தை அங்கீகரித்தது. 2013 இலிருந்து இன்றுவரை மேலும் 10 நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. இவ்வாறாக உலகின் 193 நாடுகளில் 143 நாடுகளும் வத்திக்கனும் பலஸ்தீன அரசை அங்கீகரித்திருந்த நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி உள்ளது. 2014 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் பலஸ்தீன அரசை அங்கீகரித்திருந்தது. 2012 இல் ஐநா இல் 138 நாடுகள் பலஸ்தீனம் ஓர் உறுப்பு நாடாக வர வாக்களித்திருந்தபோதும், இன்றுவரை தொடர்ச்சியாக ‘வீட்டோ’ அதிகாரத்தை வைத்து அதை அமெரிக்கா இல்லாமலாக்கியபடிதான் வந்திருக்கிறது. 2012 இலிருந்து இன்றுவரை பலஸ்தீனம் ‘பார்வையாளர்’ நாடாகவே ஐநா இல் குந்தியிருக்கிறது. இதுவரை அங்கீகரிக்காத மிகுதி 50 நாடுகளில் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மட்டுமல்ல, பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மன் உட்பட்ட பல ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்குகின்றன. அப்படியிருக்க, பலஸ்தீன அரசை பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி நாடுகள் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் ஐநா வில் அங்கீகரிக்கப் போவதாக முன்னோட்டமிட்டதை முக்கியத்துவப்படுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஐநா பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விட்டால் பலஸ்தீனம் ஓர் அரசாக மிகப் பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்படும் என்பது உறுதி. அது பாதுகாப்புச் சபைக்குப் போகும்போது அது அமெரிக்காவினால் வீட்டோ கொண்டு அடித்து வீழ்த்தப்படும் என்பதும் தெரிந்த ஒன்றுதான். இது மக்ரோனுக்கும் தெரியும், இப்போ இந்தா அங்கீகரிக்கிறோம் என குரல்விடும் மேற்குலக நாடுகளுக்கும் தெரியும். இங்குதான் அரசியல் இருப்பை காப்பாற்ற வெகுண்டெழும் மக்களை சமாதானப்படுத்த செய்யும் நாடகமா இது என சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. எது எப்படியோ இராஜதந்திர ரீதியில் இவர்களின் அறிவிப்பை சாதகப்படுத்திக் கொள்ளலாம், சந்தேகத்தோடு!. இந்தச் சந்தேகத்தை தீர்க்கவேண்டியது அவர்கள்தான். அவர்களது செயற்திறன்தான். அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை இதுவிடயத்தில் பயன்படுத்தாமலிருக்க செய்துகாட்டும் முயற்சிகள்தான் அந்த செயற்திறன் ஆகும். 1988 இல் தொடங்கிய பலஸ்தீன அரசுப் பிரகடனத்தை இன்றுவரை 143 நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வரையான அவர்களின் மௌனத்துக்கு காரணம்தான் என்ன. அதற்கான சுயவிளக்கம்தான் என்ன. சுயவிமர்சனம்தான் என்ன என்பதை அவர்கள் பேசட்டும். கேட்போம். இஸ்ரேல் என்ற அரசை ஏற்கனவே அங்கிகரித்ததால், “இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்கிற உரிமை இருக்கிறது” என சொன்ன இவர்கள், இப்போதாவது பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரிக்கிறோம் என வரும்போது “பலஸ்தீனத்துக்கு தன்னை பாதுகாக்கிற உரிமை இருக்கிறது” என இதுவரை அறிவிக்க முடியாமல் இருப்பது ஏன்?. இங்குதான் அவர்கள் ஹமாஸிடம் வருகிறார்கள். “ஹமாஸ் ஆயுதத்தை கீழே வைத்துவிட வேண்டும். அவர்கள் அரசியலுக்குள் வரக்கூடாது” என்பன போன்ற நிபந்தனைகளை உருவாக்குகிறார்கள். இதற்குள் தெரிவது அவர்களின் சூழ்ச்சிதான். ஹமாஸ் அரசியல் அதிகாரம் பெறுவது பெறாதது என்பதெல்லாம் பலஸ்தீன மக்களின் தெரிவுக்கானவை. இவர்களது தெரிவுக்கானதல்ல. அதை உச்சரிக்க இவர்கள் யார். அது இஸ்ரேலின் குரல். அதை இவர்களும் ஒலிக்கிறார்கள். காஸாவிலும் மேற்குக் கரையிலும் முதலில் ஆயுதத்தை கீழே வைக்க வேண்டியது -தாக்கும் நிலையிலுள்ள- இஸ்ரேலிய பாதுகாப்புப் படையும் சியோனிச குடியேற்றவாதிகளும்தான். பாதுகாப்பு நிலைக்குள் தள்ளப்பட்ட ஹமாஸ் அல்ல. ஹமாஸ் அமெரிக்காவும் பிரித்தானியாவும் உருவாக்கிய அல்கைடா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு போன்றதல்ல. சர்வதேச ரீதியில் பயங்கரவாதச் செயல் புரிந்த அமைப்புமல்ல. ஹமாசுடன் உடன்படுவதா இல்லையா என்ற விடயம் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன்னால் எழும் கேள்வி அவர்களின் இருப்பை சாத்தியப்படுத்துவது எது என்பதே. அவர்கள்தான் இன்று நடைமுறையில் பலஸ்தீன அரசின் காஸா பகுதியை பிரதிநிதிப்படுத்தக் கூடிய, பாதுகாக்கும் உரிமையை செயற்படுத்தக்கூடிய சிறிய சக்தியாக இருக்கின்றனர். அவர்களிடம் வான்படை இல்லை. கடற்படை இல்லை. ஏன் இராணுவமும் இல்லை. வெறும் கெரில்லாக் குழு வடிவில் சுருங்கிப் போயிருப்பவர்கள் அவர்கள். அவர்களை வளர்ப்பது இஸ்ரேலிய அரச பயங்கரவாதம்தான். அப்படியிருக்க ஹமாஸை ஆயுத நீக்கம் செய்ய அல்லது அரசியல் நீக்கம் செய்யக் கோருவதானது, மக்கள் பக்கம் முகம் காட்டும்போது பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது போலவும், இஸ்ரேல் பக்கம் முகம் காட்டும்போது ஹமாஸை அங்கீகரிக்கவில்லை என்பதுபோலவும் நடத்தும் இரட்டை வேடம் ஆகும். ஹமாஸை அஙகீகரிக்கவில்லை என்பதன் மூலம் பலஸ்தீன அரசு உருவாவதை இல்லாமல் செய்து, அதற்கான பழியை ஹமாஸிடம் போடுவது சுலபமானது. இன்னொரு பக்கம் தமது மக்களை அவர்களது வீதிநிரம்பும் போராட்டங்களை காயடிக்கும் வேலையை இதன் மூலம் செய்யலாம் என அவர்கள் நம்புகிறார்கள். மேற்குலகம் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என நெத்தன்யாகுவின் வார்த்தைகளில் உச்சரிக்கிறார்கள். காஸா மக்கள் அல்லது முழு பலஸ்தீன மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என நமக்குத் தெரியாது. அது அவரவர் தெரிவாக, தவிர்க்க முடியாதவையாக அல்லது நியமங்களை வைத்து அளப்பவையாக அல்லது பிரச்சார உத்தி கொண்டவையாக இருக்கும். அரச பயங்கரவாதம் சட்டங்களால், ஆட்சியதிகார நிறுவனங்களால் இயல்பாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அரச பயங்கரவாதத்தையோ எதிர்ப் பயங்கரவாதத்தையோ இயல்பாக்கம் செய்வது ஆபத்தானது. அதேநேரம் அவை நிகழ்த்தப்படுதலின் மீதான ஆதரவு, எதிர்ப்பு அல்லது இரண்டுக்கும் இடையிலான மூன்றாவது நிலைப்பாடு என்பது அவரவர் சார்ந்த கண்ணோட்டத்தில் வேறுபடவே செய்கிறது. யூத இன புத்திஜீவியான நோர்மன் பின்கல்ஸ்ரைன் அவர்கள் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என அழைப்பதை ஏற்கவில்லை. அது குறித்து அவர் கூறுவது இதுதான். “2006 இல் காஸாவிலும் மேற்குக் கரையிலும் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் அமைப்பினர் பெரும்பான்மை வெற்றியை ஈட்டி அதிகாரத்துக்கு வந்தனர். இவ்வாறு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இனை நிராகரித்து இஸ்ரேல் ‘முற்றுகையை’ செயற்படுத்தியது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. காஸாவுக்குள் வரும் உணவுப் பொருட்களின் அளவையும் நீரின் அளவையும் மருந்தின் அளவையும் மற்றும் எல்லா அத்தியாவசிய பொருட்களையும் இஸ்ரேல்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. (இன்றும் அதேதான் நீடிக்கிறது) காஸாவுக்குள் எவருமே உள்நுழைய முடியாது. அதேபோல் காஸாவிலிருந்து எவருமே வெளியே செல்ல முடியாது. இந்த 19 (2006-2025) வருடத்திலும் இளையோர்கள் இந்த 5×25 சதுர மைல் பரப்பளவுக்கு வெளியே தம் வாழ்வில் எதையும் கண்டதில்லை. முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் காஸாவை ஒரு “திறந்தவெளிச் சிறைச்சாலை” என வர்ணித்தார். இஸ்ரேலின் முன்னணி சமூகவியலாளர் Baruch Kimmerling ஹிப்ரூ மொழியில் (2003) எழுதிய “ஆரியல் ஷரோனின் பலஸ்தீனத்துக்கு எதிரான போர்” என்ற தனது நூலில் காஸாவை இதுவரை தோன்றியிராத மிகப் பெரும் “கொன்சன்றேசன் முகாம்” (கொ.மு) என வர்ணித்தார். அரைவாசிப் பேர் இந்த கொ.மு க்குள் பிறந்து குழந்தைகளாகி சிறுவர்களாகி இளையோர்களாகி வளர்ந்தவர்களாகினர். அவர்களது அனுபவங்கள் இந்த கொ.மு எல்லைக்குள்தான் இருந்தது. இந்த கொ.மு இல் பிறந்த அதே மனிதன் ஒக்ரோபர்-7 இல் அந்த அடிமை நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றதை, அதற்காக அவர்கள் என்னவிதமான தந்திரோபாயத்தை வழிமுறையை உபயோகித்தார்கள் என்பதை யார்தான் விமர்சிக்க முடியும்?. அப்படியொரு கொ.மு இனுள் நானும் பிறந்து 20 வருட வாழ்வை அங்கு வாழ்ந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என எனக்குத் தெரியாது” என்றார். இந்த யதார்த்தத்தை மறுத்து மேற்குலகின் ஜனநாயக மதிப்பீடுகளும் அரசியல் சார்புகளும் நலன்களும் ஹமாஸை ‘பயங்கரவாதிகள்’ என வரையறை செய்கின்றன. சரி கனவான்களே. அப்படியேதான் இருக்கட்டும். ஓர் அரசாக அங்கீகரிக்கப் போவதாக நீங்கள் சொல்லும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் காஸா படுகொலைக்கு எதிராகவும்தானே உங்களது நாட்டு மக்கள் உணர்வுபூர்வமாக போராடுகிறார்கள். உங்கள் குரலுக்கு எதிராக அல்லவே. அவர்களை ஏன் கைதுசெய்ய வேண்டும். அடித்து நொருக்க வேண்டும். சட்டங்களை இயற்றி சிறை வாழ்வுக்குத் தள்ள வேண்டும். அவர்கள் அமைதியாகத்தானே போராடுகிறார்கள். நேட்டோ என்ற மிகப் பெரும் வன்முறை இயந்திரத்தை இயக்கி எத்தனை போர்களை செய்தீர்கள். மில்லியன் மக்களை கொன்றீர்கள். அரசுகளை வீழ்த்தினீர்கள். தலைவர்களை கொலை செய்தீர்கள். மில்லியன் குழந்தைகளை கொலை செய்தீர்கள். எல்லாமும் நெத்தன்யாகுவுக்கும் தெரியும். 2022 ஒக்ரோபரிலிருந்து இன்றுவரை கள்ள மௌனம் சாதித்துவிட்டு, இப்போ காஸா குழந்தைகளை கொல்வதை முன்னிறுத்திப் பேசும் உங்கள் அறத்தின் போலிமையை நெத்தன்யாகுவும் அறிவார். அதனால்தான் உங்கள் குரல் மீது அவர் உமிழ்ந்துவிட்டு நகர்ந்து போகிறார். பலஸ்தீனம், இஸ்ரேல் என்ற “இரு அரசு” (two state) தீர்வு என்பது ஒரு வகைப்பட்ட அரசியல் தீர்வு. அது சரியா, தவறா, சாத்தியமா என விவாதங்கள் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. சரியென்றே எடுத்துக் கொள்வோமே. அதை உறுதியாக்க அந்த மண்ணில் மக்கள் உயிரோடு இருக்க வேண்டும். தேக ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். சந்ததிகள் தப்பிப் பிழைக்க வேண்டும். அவர்கள் கடந்த 22 மாதங்களாக பசிக்கு எதிராக போராடுகிறார்கள். எலும்புக் கூடுகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அதற்கான உங்களது தீர்வு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதை செயற்படுத்த இஸ்ரேலின் மீது நீங்கள் செயற்படுத்தும் அழுத்தம் என்ன என்பதும் தெரியவில்லை. இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை ஏதும் இல்லை. ஆயுத ஏற்றுமதித் தடை ஏதுமில்லை. ஒப்பந்த இடைநிறுத்தங்கள் ஏதுமில்லை. உக்ரைன் பிரச்சினையில் இரசியா மீது 27’000 பொருளாதாரத் தடைகளை விதித்த அந்த அளவுகோல் இங்கு ஏன் வளைந்து நெளிந்து கொண்டது? ஐநாவின் அங்கீகாரத்தோடுதானா நீங்கள் நாடுகளின் இறைமையை மதிக்காமல் உட்புகுந்து போர் நடத்தி மக்களை கொன்றீர்கள். இஸ்ரேல் சர்வதேச மக்களின் குரலையும் கேளாமல், ஐநா வினது தீர்மானங்களையும் குரலையும் கேளாமல், ஓர் இனப்படுகொலையை கண்முன்னே நடத்திக் கொண்டிருக்கிறது. இன்று அதே அதிகாரத்தை எடுத்து இஸ்ரேலை புறந்தள்ளி, காஸாவுக்குள் புகுந்து உணவு தண்ணீர் மருத்துவம் என உடனடித் தேவைகளை நிறைவேற்றவும், அந்த மக்களுக்கு இஸ்ரேலிய கொலைப்படையிடமிருந்து பாதுகாப்புக் கொடுக்கவும் முடியாமலிருப்பதற்கான விளக்கம்தான் என்ன. சும்மா விமானத்திலிருந்து உணவுப் பொதியை ஓரிரு முறை வீசி படம் காட்டியதற்கு அப்பால் எதுவரை சென்றிருக்கிறீர்கள். உலக மக்களின் கண் முன்னால் இஸ்ரேல் நடத்தும் ஓர் பட்டினிப் படுகொலையை விடவும், இனப்படுகொலையை விடவும், 20’000 குழந்தைகளின் மரணத்தை விடவும் இஸ்ரேலின் ‘இறைமை’ உங்களுக்கு முக்கியமானதாகப் போய்விட்டது. உங்கடை ஜனநாயகம் மனித உரிமை அறம் எல்லாமும் புல்லரிக்க வைக்கிறது. போங்கள்! - Ravindran Pa https://sudumanal.com/2025/08/15/அங்கீகரித்தலின்-அரசியல்/#more-7337
  20. சுமந்திரனின் கர்த்தால்? - நிலாந்தன் சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். அவரைச் சுற்றியிருக்கும் யாருமே அவருக்கு கடந்த 15ஆம் திகதி மடுப் பெருநாள் என்பதைச் சொல்லவில்லையா? இது நல்லூர் திருவிழாக் காலம் என்பதைச் சொல்லவில்லையா? இந்த இரண்டு திருவிழாக்களுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் அவர்களை ஏற்றி இறக்க பேருந்துகள் ஓடும். குறிப்பாக மடுத் திருவிழாவுக்கு இந்துக்களும் போவார்கள். அது மத பேதமின்றி இன பேதமின்றி யாத்திரிகர்கள் வந்துகூடும் ஓராலயம். பெருநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்னரே யாத்திரிகர்கள் வரத்தொடங்கி விடுவார்கள். எனவே தொடர்ச்சியாக சில நாட்களுக்கு வடக்கிலிருந்து பேருந்துகள் ஓடும். இந்த விடயங்களை ஏன் சுமந்திரன் கவனத்தில் எடுக்கவில்லை? அவரைச் சுற்றியிருக்கும் யாருமே இதை அவருக்குச் செல்லவில்லையா? அல்லது தனது மக்களின் பண்பாட்டு பெருவிழாக்களைக் குறித்துச் சிந்திக்க முடியாத அளவுக்கு அவர் தன்னுடைய மக்களின் பண்பாட்டு இதயத்திலிருந்து புறத்தியாக நிற்கின்றாரா ? இது போன்ற பண்பாட்டு விடயங்களைச் சுட்டிக்காட்டுவதற்கு அவருக்கு அருகில் யாரும் இல்லையா? அல்லது அவர் யாரிடம் கேட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்? அல்லது அவர் முடிவெடுக்கும்பொழுது யாரிடமும் எதையும் கேட்பதில்லையா? அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி அல்ல. அவருடைய வார்த்தைகளில் சொன்னால் மக்களின் ஆணை அவருக்கு இல்லை. கட்சிக்குள்ளும் அவர் பதில் செயலாளர்தான். பதில்தான். ஆனால் அவர்தான் கட்சியின் முகமாக,கட்சியின் எல்லாமமாகத் தோன்றுகிறார். அண்மையில் அவர் வெளி நாடுகளுக்குப் போயிருந்தார். அங்கே அவர் ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாக அவருடைய அரசியல் எதிரிகள் கூறுகிறார்கள். வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு அவர் அவ்வாறு மேற்கத்திய ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அது தனிப்பட்ட பயணம் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆனால் அவர் ராஜதந்திரிகளைச் சந்தித்ததாகப் புலம்பெயர்ந்த தமிழர் தரப்புகள் கூறுகின்றன. அவை கூறுவது உண்மையாக இருந்தால்,அவர் கட்சியின் அனுமதியோடுதான் அச்சந்திப்புகளில் ஈடுபட்டாரா? அங்கே என்ன கதைக்கவேண்டும் என்பதனை கட்சி ஏற்கனவே கூடி முடிவெடுத்திருந்ததா? அவ்வாறான சந்திப்புகளில் என்ன கதைக்கப்பட்டது என்பதனை அவர் கட்சிக்குத் தெரிவித்தவரா? அதை அவர் மக்களுக்குக் கூறத் தேவையில்லையா? நடப்பு நிலைமைகளைப் பார்த்தால், அவர் யாரோடும் எதையும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. கடந்த 20 மாதங்களாக, அதாவது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது கட்சி ஆட்களாலேயே நிராகரிக்கப்பட்ட பின், அவருடைய நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால், ஏறக்குறைய மந்திரித்துவிட்ட சேவலைப் போல அவர் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். அடிக்கடி காணொளிகளில் வருகிறார். கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்துவது;கட்சியின் முகமாகத் தொடர்ந்தும் தோன்றுவது; கட்சியின் தீர்மானங்களைத் தானே எடுப்பது; மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது; எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக கட்சி தொடர்பான ராஜதந்திர நகர்வுகளை தானே முன்னெடுப்பது….இதைத்தான் கடந்த 20 மாதங்களாக அவர் செய்து வருகிறார். கட்சிக்குள் யாரும் அதை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. அவர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த விடயம் சரியானது. அதை மனோ கணேசனும் முஸ்லீம் தலைவர்களும் ஆதரித்துள்ளார்கள். . படையின் முகாம்கள் மக்கள் குடியிருப்புகள் மத்தியில் இருப்பதினால்தான் கடந்த வாரம் முல்லைதீவில் இடம்பெற்றது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக சுமந்திரன் கூறுகிறார். தமிழர் தாயகத்தில் படையினரை நீக்கக் கோரி தமிழ் மக்கள் போராட வேண்டும். அதில் சந்தேகம் இல்லை. அந்த இடத்தில் சுமந்திரன் சரி. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கடந்த 16ஆண்டுகளாக படைமய நீக்கம் முழுமையாக நிகழவில்லை. இலங்கையின் மொத்தப் படைக் கட்டமைப்பில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதி தமிழ் பகுதிகளில்தான் நிலை கொண்டிருக்கிறது என்று உத்தியோகப்பற்றற்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே படைமய நீக்கம் அவசியம். அதை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட வேண்டியதும் அவசியம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் பிரச்சினை எங்கே வருகிறது என்றால், அதற்காக கடையடைப்பு ஒரு பொருத்தமான போராட்டமா என்பதுதான். சுமந்திரனை எதிர்க்கும் பலரும் கடையடைப்பையும் எதிர்க்கிறார்கள். அது தவறு. அரசியலில் சில சமயம் பிழையான ஆட்கள் சரியான செயல்களைச் செய்வதுண்டு. கடையடைப்பு என்ற போராட்ட வடிவம் குறித்து கேள்விகளை எழுப்பலாம். வேறு போராட்ட வடிவங்களைக் குறித்துச் சிந்திக்கலாம். அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்திலும் அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் குறிப்பாக, ஐநாவின் கவனத்தை ஈர்க்கும்விதத்திலும் அதைவிடக் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்கள் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கும் “கோ குரூப்” நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கத்தக்க போராட்ட வடிவங்களைச் சிந்திக்கலாம். அரசாங்கத்துக்கு நோகத்தக்க விதத்தில் போராடுவது என்று சொன்னால் சம்பவம் நடந்த மாவட்டத்தில் ஒரு மக்கள் பேரெழுச்சியை ஒழுங்குபடுத்தலாம். அதை ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தலாம். இது முதலாவது. இரண்டாவதாக,அரசு அலுவலகங்களை முடக்கக்கூடிய விதத்தில் அரசு அலுவலகங்களைச் சுற்றி வளைக்கலாம். மூன்றாவதாக,ஐநாவில் முடிவெடுக்கும் நாடுகளின் தூதரகங்களின் முன்னாள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்யலாம். அந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் படைப்புத்திறன் மிக்கவைகளாக இருக்கவேண்டும். மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வந்த பொழுது நிகழ்த்தப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தைப் போல. எனவே இதுபோன்ற பல வழிகளிலும் அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்தில் போராடலாம். கடையடைப்பு அழைப்பவருக்கு இலகுவான ஒரு போராட்டம். மாறாக,கடைகளை மூடும் வியாபாரிகளுக்கும் பொதுப் போக்குவரத்தை நிறுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் அன்றாடம் காய்சிகளுக்கும் அன்றாடம் வேலை செய்பவர்களுக்கும் அதனால் இழப்பு ஏற்படும். அந்த இழப்பைக்கூட நாட்டுக்காக ஒருநாள் செய்யும் தியாகம் என்று நியாயப்படுத்த முடியும். ஆனால் கடையடைப்போ அல்லது பொது முடக்கமோ எதுவாக இருந்தாலும் அது அரசாங்கத்துக்கு நோக வேண்டும். அரசாங்கத்துக்கு நோகக் கூடிய விதத்தில் அழுத்தமாகப் போராட வேண்டும். அப்படிப்பார்த்தால் கடையடைப்பு அரசு அலுவலகங்களுக்கு நோகாது. ஏனென்றால் கடையை அடைத்தாலும் பொதுப் போக்குவரத்தை முடக்கினாலும் அரச அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும். ஏன் பாடசாலைகளே இயங்கும். ஆசிரியர்கள் வருவார்கள்; அதிபர்கள் வருவார்கள்; மாணவர்கள் மட்டும் வர மாட்டார்கள். நாளை, இரண்டாம் தவணை விடுமுறை முடிந்து பாடசாலைகள் மீண்டும் தொடங்குகின்றன. எனவே கடையடைப்பைவிட அழுத்தமான, கூர்மையான படைப்புத்திறன்மிக்க அறவழிப் போராட்டங்களை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதற்குக் கூடிக்கதைக்க வேண்டும். அதைவிட முக்கியமாக தமது சொந்த மக்களை நேசிக்க வேண்டும். தனது மக்களை விசுவாசிக்கும் எந்த ஒரு செயற்பாட்டாளருக்கும் போராட்டத்தின் வழி தானாகத் திறக்கும். அதிலும் குறிப்பாக உலகில் வெற்றி பெற்ற பெரும்பாலான எல்லா அறவழிப் போராட்டங்களும் சட்ட மறுப்புப் போராட்டங்கள்தான். சட்டத்தரணிகள் தங்களுடைய சட்டரீதியிலான சௌகரிய வலையத்துக்கள் நின்றுகொண்டு போராட முடியாது.சட்ட மறுப்பாகப் போராட சுமந்திரன் தயாரா? ஆனால் சுமந்திரனின் போராட்டத்தை விமர்சிப்பவர்கள் அவ்வாறு பார்க்கவில்லை. “அவர் மக்களுக்காகப் போராடவில்லை. அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காகப் போராடவில்லை. அல்லது படைமய நீக்கத்துக்காகப் போராடவில்லை. மாறாக கட்சிக்குள் தன் முதன்மையைப் பலப்படுத்தவும் தமிழ்த்தேசிய அரசியலில் தன்னுடைய இன்றியமையாமையை நிருபிப்பதற்கும் அவர் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்துகிறார்” என்றுதான் அவர்கள் விமர்சிக்கின்றார்கள். அவ்வாறு விமர்சிக்கத்தக்க விதத்தில்தான் அவருடைய நடவடிக்கைகளும் காணப்படுகின்றன.கடந்த வாரம் ஐநாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிவில் சமூகங்களோடு இணைந்து அந்தக் கடிதத்தைத் தயாரித்தது.அந்தக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போடவில்லை. அந்த முடிவைப் பெரும்பாலும் சுமந்திரனே எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது. அவர் சொன்னதைச் சிவஞானம் திரும்பிச் சொல்கிறார் என்றுதான் எல்லாரும் நம்புகிறார்கள். எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கு சுமந்திரன் தயாராக இருக்கவில்லை. அந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணைந்து முடிவெடுத்திருந்திருந்தால் இன்றைக்கு கடையடைப்பை அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு போராட்டத்தை எல்லாருமாகச் சேர்ந்து தரமாகச் செய்திருக்கலாம். அதற்குத் தமிழரசுக் கட்சியின் ஈகோ இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு சுமந்திரன் ஒவ்வொரு நாளும் காணொளியில் வந்து விளக்கம் கொடுக்கிறார்.அவர் தரும் விளக்கங்களில் முக்கியமானது, நாங்களே பெரிய கட்சி நாங்களே முதன்மைக் கட்சி எனவே நீங்கள் கடிதத்தை எழுதிவிட்டு எங்களை அதில் கையெழுத்துப் போடுமாறு கேட்க முடியாது என்ற பொருள்பட அமைந்துள்ள விளக்கந்தான். அதில் ஒரு பகுதி உண்மை. அவர்கள்தான் பெரிய கட்சி; அவர்கள்தான் முதன்மைக் கட்சி. அதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், கடந்த 16 ஆண்டுகளாக அவர்களே முதன்மைக் கட்சியாகவும் முடிவெடுக்கும் கட்சியாகவும் இருந்து தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? கடந்த 16 ஆண்டுகாலத் தமிழரசியலில் ஏற்பட்ட தேக்கங்கள்,தோல்விகள், பின்னடைவுகள் போன்ற எல்லாவற்றிற்கும் அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமல்ல அனைத்துலக அளவில் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்களின் விவகாரம் மேலும் நீர்த்துப்போகக்கூடிய ஆபத்து தெரிகிறது. அதற்கும் தமிழரசுக் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். 2015இலிருந்து ஐநாவின் நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தை நோக்கி தமிழரசியலைச் செலுத்தியது முக்கியமாக சுமந்திரனும் சம்மந்திருந்தான்.அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று பின்னர் சுமந்திரன் சொன்னார். அது அவர்களுடைய தனிப்பட்ட தோல்வி அல்ல. இனத்தின் தோல்வி.இப்பொழுதும் ஐநாவை கையாளும் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் அணுகுமுறை வெளிப்படையாயானதாக, ஐக்கியமானதாக இல்லை.இதில் வரக்கூடிய தோல்விக்கு யார் பொறுப்புக் கூறுவது? கட்சி வேறுபாடுகளைத் தூக்கி ஓரத்தில் வைத்து விட்டு இனமாகத் திரள வேண்டிய விடயங்களில் அதாவது ஐநாவைக் கையாள்வது,படை நீக்கத்துக்காகப் போராடுவது போன்ற விடயங்களில் இனமாகத் திரள முடியாததற்கு யார் பொறுப்பு ?சுமந்திரன் பொறுப்பில்லையா? https://www.nillanthan.com/7654/#google_vignette
  21. வாடகை வீடு தேடும் மகிந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வரும் பின்னணியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறித்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் ஓய்வு காலத்தைஉத்தியோகபூர்வ இல்லத்திற்கு கழிக்க உரிமை இல்லை. இந்நிலையில், அவர் தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது. மெதமுலானையில் உள்ள தனது வீட்டிற்கு அவர் செல்ல விரும்பினாலும், கொழும்புக்கு கணிசமான தூரம் பயணிப்பதில் உள்ள சிரமத்தையும், அவரது மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமத்தையும் கருத்தில் கொண்டு அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர் தங்குவதற்கு பொருத்தமான வீடுகள் குறித்து பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவை இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=337253
  22. கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் – பயணிகள் பெரும் அவதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும், செக்-இன் கவுண்டர்கள் மற்றும் குடியேற்ற மையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தங்கள் விமானங்களை தவறவிட்டதாக பல பயணிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் அதிக கொள்ளளவுக்கு அதிகமாக இயங்கியதாகவும், ஒரே நேரத்தில் பல விமானங்கள் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இதனால் புறப்படும் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். குழப்பமான சூழ்நிலை குறித்து பலர் விரக்தியை வெளிப்படுத்தினர். எதிர்காலத்தில் இதுபோன்ற இடையூறுகளைத் தவிர்க்க பணியாளர்கள் மற்றும் திட்டமிடல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி பலர் சமூக ஊடகங்களில் வலியுறுத்தினர். https://akkinikkunchu.com/?p=337247
  23. இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பது தமிழ், முஸ்லிம் இன விரிசல்களை ஏற்படுத்தும் - அருட்தந்தை மா.சத்திவேல் இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப் படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொடூர இனப்படுகொலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கும் அதன் இனப்படுகொலையை ஆதரிக்கும் நேச நாடுகளுக்கு எதிராகவும் நேற்றுமுன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு பொரல்லை மலையன சுற்றுவட்டாரத்தில் ஆரம்பித்து கெம்பல் மைதானத்தில் நடந்த எதிர்ப்பு போராட்டம் எதிர்ப்பு கோசத்தோடு முடிவுக்கு வந்தது. இப்போராட்டம் இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து தொடர் இன அழிப்பிற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை முகம் சுழிக்க வைத்ததோடு ஆர்ப்பாட்டத்தில் இருந்து வெளியேறும் மனநிலையை உருவாக்கியமை வேதனைகுரியதே. இலங்கையின் இனப்படுகொலைக்கு முழு மூச்சாக ஆதரவு தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களின் விடுதலை அமைப்பை பாசிச வாத அமைப்பு என்றும், தேசிய தலைவரை பாசிச வாதி எனவும் மேடை கட்டி பேசியவர்கள் கூட்ட முன் வரிசையை அலங்கரித்தோடு மேடை ஏறி வீர வசனம் பேசியமை மட்டுமல்ல நிகழ்வு ஆரம்பம் இலங்கை தேசியக்கொடி திரையில் அசைந்தாட தேசிய கீதத்தோடு ஆரம்பமானது. இலங்கையில் இன அழிப்பு,இன சுத்திகரிப்பு, இனப்படுகொலை என்பன தேசிய கொடியோடும் தேசிய கீதத்தோடும் நடத்தப்பட்டதோடு அதன் வெற்றியின் அடையாளமாகவே சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதம் அதனை தம் அடையாளமாக கொண்டுள்ளது. பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு முழுமூச்சாக ஆதரவு தெரிவித்து படைக்கு தேவையானவர்களை கிராம புறத்தில் இருந்து திரட்டி கொடுத்து முள்ளிவாய்க்கால் இனபடுகொலையை பாதையில் பால் சோறு சமைத்து தேசிய வெற்றியாக கொண்டாட வைத்து மகிழ்ந்தவர்கள் பாலஸ்தீன மக்கள் முகம் கொடுக்கும் இனப்படுகொலைக்கு எதிரானவர்களாக இருப்பதாக காண்பிப்பது முஸ்லிம்களை தமது அரசியலுக்குள் இழுப்பதற்காகவே அன்றி வேறில்லை. போராட்ட ஒழுங்கமைப்பினர் போராட்ட பேரணியில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையினை தமது பதாதைகளிலோ கோசங்களிலோ வெளிவராத வகையில் திட்டமிட்டிருந்தனர். இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளாத மனநிலை மட்டுமல்ல சிங்கள பௌத்தத்தையும் அதன் காவலர்களையும் இனப்படுகொலையாளர்களையும் பகைத்துக் கொள்ள விரும்பாத அரசியல் என்பதே உண்மை. அது மட்டும் அல்ல தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தையும் அரசியல் அபிலாசைகளையும் மறுக்கும் செயலாகவுமே நாம் கருதுகின்றோம். சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு 1948 ல் கிடைத்த சுதந்திரம் இனப்படுகொலைக்கும், இன சுத்திகரிப்பிற்கும், இன அழிப்பிற்குமான சுதந்திரம் என்பது எமது அனுபவம். இன்று பாலஸ்தீனர்கள் சந்திக்கும் இனப்படுகொலைக்கு முன்னர் இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது என்பதை முஸ்லிம் உறவுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலை வழி நடத்தி இனப்படுகொலை புரியும் வல்லரசுகளை அன்று தமது அரசியலுக்காக இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதிகளை வழி நடத்தி பெரும் இனப்படுகொலையோடு ஆயுத யுத்தத்தை மௌனிக்கச் செய்து தமிழர்களை அரசியல் ரீதியில் அங்கவீனமாக்கினர். தொடர்ந்து தமிழர்களின் அரசியலை அழிக்க பெரு முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களை பொறுத்தவரையில் பாலஸ்தீனர்களின் சுதந்திர தேசம் தமிழர்களின் போராட்டத்திற்கான அங்கீகாரமாகும். அதேபோன்று தமிழர்களின் சுதந்திர தாயகம் பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகத்திற்கான வெற்றியாகும். இத்தகைய அரசியலை மக்கள் மயப்படுத்தி போராட்டங்களை முன்னெடுத்தல் தமிழ்- முஸ்லிம் உறவை பலப்படுத்தும். மக்கள் விடுதலை போராட்டத்தில் மக்கள் அரசியலாகி மக்களைபெரும் சக்திகளாக கொண்டுவர வேண்டும். அதனை விடுத்து இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என்பதையும் மிக கவலையோடு கூறுகின்றோம். தற்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு தமிழ் முஸ்லீம் மக்கள் தமக்கு முழுமையான ஆதரவளித்துள்ளனர் என கூறுவது தமிழ் முஸ்லிம் இன உறவுகளை பிரிக்கும் இன அழிப்பை தொடரும் கூற்றாகவே கொள்ளல் வேண்டும். புதிய அரசியல் உறவை பலப்படுத்தி இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவது காலத்தின் அரசியல் தேவையுமாகும் என வலியுறுத்துகின்றோம். https://akkinikkunchu.com/?p=337232
  24. ட்ரம்பை சந்திக்கவுள்ள ஷெலன்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஷெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பானது வொஷிங்டன் டிசியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் ஜனாதிபதியும் தமது டெலிகிராம் கணக்கில் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இடம்போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை டொனால் ட்ரம்பின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இலங்கை நேரப்படி இன்று இடம்பெற்றிருந்த நிலையில், அது எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது. இன்றைய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்பட்டிருக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி ஒரு சமாதான ஒப்பந்தம்தான் என்றும் அவர் கூறியுள்ளார். எல்லாம் சரியாக நடந்தால், ஜனாதிபதி புட்டினுடன் ஒரு சந்திப்பை நாங்கள் திட்டமிடுவோம். அதன்மூலம் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=337156
  25. ஹர்த்தாலுக்கான அழைப்பின் மூலம் கேலிக்கூத்தாடும் இலங்கை தமிழரசு கட்சி! ஹர்த்தாலுக்கு ஆதரவை திரட்டுமாறு தமிழரசுக் கட்சியின் உயர்மட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் குடைச்சலை கொடுத்து வருவதாக அறியமுடிகிறது. அதாவது ஹர்த்தாலுக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் இவ்வாறு ஆதரவை திரட்டுமாறு உயர்மட்டமானது கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில் பதில் தலைவரானத சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல கௌரவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் அன்புடையீர். எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதிய கடையடைப்பு (ஹர்த்தால்) தொடர்பானது எமது கட்சியினால் மேற்சொன்ன நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே. இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளுராட்சி தவிசாளர்களும் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சகலரது ஆதரவை கோருவது அவசியமாகும். அத்தோடு அனைத்து வணிகர் சங்கங்களையும் சந்தித்து ஆதரவை கோருவதோடு உறுப்பினர்கள் நேரடியாக சந்தைக்கும் கடைக்கும் சென்று இதை செய்வது நல்லது. கட்சியின் நிர்மானத்தை வலுவாக நிறைவேற்ற உங்கள் முழுமையான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடையடைப்புகளை மேற்கொள்ளும்போது வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் அழைத்து கலந்துரையாடியே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழரசுக் கட்சியானது தன்னிச்சையாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துவிட்டு, தங்களது அழைப்பானது நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இவ்வாறு ஊடக சந்திப்புகளையும், நேரடி சந்திப்புகளையும் நடாத்துமாறு உறுப்பினர்களை கட்டாயப்படுத்துவது கேலிக்கூத்தாக மாறியுள்ளது. https://akkinikkunchu.com/?p=337186

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.