Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. அமெரிக்காவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : ஈரான் அதிரடி இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்த நிலையில், காமெனி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இன்று இந்தப் போரில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும். அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத மிகப்பெரிய அதிர்ச்சி தரும் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அச்சுறுத்தியதையடுத்து, ஈரான் உயரிய தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், "போர் தொடங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பின்படி, அயோத்துல்லா அலி காமெனி தனது பதிவில் "அலி கைபாருக்குத் திரும்புகிறார்" என்று கூறி உள்ளார். அதவாது யூத நகரமான கைபாரை கைப்பற்றிய இஸ்லாமிய வரலாற்றை குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது. இது ஷியா இஸ்லாத்தின் முதல் இமாம்படி 7-ம் நூற்றாண்டில் யூத நகரமான கைபாரைக் இஸ்லாமியர்கள் கைப்பற்றியதைக் குறிக்கும் விதமாக அவர் இந்த போஸ்டை செய்துள்ளது. அந்தப் பதிவில், ஒரு நபர் கையில் வாளுடன் கோட்டை போன்ற வாயிலுக்குள் நுழைவது போன்றும், வானத்தில் தீப்பிழம்புகள் தெரிவது போன்றும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், சில நிமிடங்களுக்குப் பிறகு, காமெனி இஸ்ரேலுக்கு மற்றொரு எச்சரிக்கை விடுத்தார். அதில், "பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு நாம் ஒரு வலுவான பதிலடியைக் கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாம் கருணை காட்ட மாட்டோம்" என்று குறிப்பிட்டிருந்தார். இதை உலக நாடுகளே எதிர்பார்த்து இருக்காது என்று ஈரான் கூறி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகிறது. புதன்கிழமை அதிகாலையில் முதல் இரண்டு மணி நேரத்தில் இஸ்ரேலை நோக்கி ஈரான் இரண்டு முறை ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் டெல் அவிவ் நகரில் வெடிச்சத்தம் கேட்டது. இதற்கிடையில், டிரம்ப் ஜி7 மாநாட்டிலிருந்து முன்னதாகவே புறப்பட்டு வந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 90 நிமிடங்கள் கலந்துரையாடினார். மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. R https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அமெரிக்காவுக்கு-காத்திருக்கும்-அதிர்ச்சி-ஈரான்-அதிரடி/50-359467
  2. இஸ்ரேல் - ஈரான் முறுகலால் இலங்கைக்கு கடும் பாதிப்பு; பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு! ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை அதிகரித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இராணுவ நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில் பல துறைகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்கே சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கையைப் பாதிக்கும் பலகாரணிகள் உள்ளன. முக்கியமானது எரிபொருள் விலை அதிகரிப்பு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை ஏற்கனவே பத்து முதல் பன்னிரண்டு சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தப் போர் பிராந்திய ரீதியாக பரவினால், இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியை மோசமாக பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த நிலைமை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மீது மிகவும் எதிரமறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வேலை, பாதுகாப்பு, புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன கடுமையாகப் பாதிப்படையும் - என்றார். https://newuthayan.com/article/இஸ்ரேல்_-_ஈரான்_முறுகலால்_இலங்கைக்கு_கடும்_பாதிப்பு;_பொருளாதார_ஆய்வாளர்கள்_சுட்டிக்காட்டு!#google_vignette
  3. வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்! adminJune 18, 2025 வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (18.06.25) வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தவமலர் சுரேந்திரநாதனுக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர் https://globaltamilnews.net/2025/216970/
  4. நெத்தன்யாஹு யூத இனத்தின் நவீன மீட்பராக வரலாற்றில் இடம்பிடிக்க விரும்புகின்றார். அதற்கு சிந்தித்து செயலாற்றாமல், கசினோவில் சூதாட்டத்தில் கணக்குப் போடும் புத்திசாலித்தனமான மூளையுள்ள அமெரிக்காவின் ட்ரம்பைச் சரியாகப் பாவிக்கின்றார். இஸ்ரேல், அமெரிக்கா, மேற்குநாடுகள் ஈரானின் இஸ்லாமிய ஆட்சியை அகற்றச் சொல்லுபவை வெறும் நொண்டிச் சாட்டுகள். ஈரான் பலவீனமாக இருப்பதால், இதுதான் ஆட்சியை மாற்ற சரியான தருணம் என்பதைத் தவிர மிச்சமெல்லாம் அவசரமான காரணங்கள் அல்ல. ஈரானியர்கள் இஸ்லாமிய ஆயத்துல்லாக்களின் ஆட்சியை வெறுத்தாலும் இஸ்ரேலின் நண்பர்களாக மாறமாட்டார்கள். ஜனநாயக ஆட்சி இப்போதைக்கு வருவதும் சாத்தியமற்றதே.
  5. கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க சொல்வதா? கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் 17 Jun 2025, 12:55 PM தக் லைஃப் திரைப்பட விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன், மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்ட கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத கர்நாடகா அரசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தக் லைஃப் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி பிறந்தது என பேசினார் கமல்ஹாசன். இது கன்னட மொழியை சிறுமைப்படுத்துகிறது என கூறி கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. கர்நாடகா பிலிம் சேம்பரும் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடமாட்டோம் என அறிவித்தது. இதனையடுத்து கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என காட்டமாக வலியுறுத்தி இருந்தார். இதனிடையே கர்நாடகாவில் தக் லைஃப் விவகாரத்தில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மகேஸ் ரெட்டி என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கர்நாடகா மாநில அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. உடனே பதில் மனு தாக்கல் செய்யனும் இன்றைய விசாரணையின் போது, ” கர்நாடகா மாநில அரசு எப்போது பதில் மனுத் தாக்கல் செய்யப் போகிறது? குண்டர்களையும் சட்டத்தை கையில் எடுக்கும் கும்பல்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும். கர்நாடகா அரசு உடனடியாக பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த பதில் மனுவை நாளையே கர்நாடகா அரசு தாக்கல் செய்தாக வேண்டும்” என்றனர் நீதிபதிகள். இதற்கு கர்நாடகா அரசு தரப்பில், தக் லைஃ படத்தின் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கனும் இதை நிராகரித்த நீதிபதிகள், தக் லைஃப் படத் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தை அணுகினால் உங்களுக்கு என்ன? உங்களின் இந்த போக்கை அனுமதிக்க முடியாது. சட்டத்தின் படி எந்த ஒரு நபரும் தமது திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளை எரிப்போம் என்றெல்லாம் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது. பொதுமக்கள் திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை; ஆனால் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டனர். அப்போதும் குறுக்கிட்ட கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த பிரச்சனை முடியும் வரை திரைப்படத்தை வெளியிடப் போவது இல்லை என தயாரிப்பாளர் அறிக்கையில் கூறியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், அதனால் என்ன இருக்கிறது? ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதாலேயே ஒரு படத்தை தடை செய்துவிட முடியாது. தணிக்கை குழுவின் சான்றிதழ் பெற்ற எந்த ஒரு திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்கத்தான் வேண்டும். நமது அமைப்பில் சில தவறுகள் இருக்கின்றன. ஒருவர் அறிக்கை வெளியிட்டாலே அதனை உண்மை என மக்கள் நம்புகின்றனர். கமல்ஹாசன் சொன்னதில் என்ன தவறு? என்ன முட்டாள்தனமாக சொல்லிவிட்டார்? என விவாதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல மேலும் நீதிபதி உஜ்ஜல் புயன் கூறுகையில், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது எல்லாம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல எனவும் கடும் கண்டனம் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம் பின்னர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தக் லைஃப் தொடர்பான ரிட் மனுவை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுகிறோம். கர்நாடகா அரசு பதில் மனுவை நாளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். https://minnambalam.com/thug-life-sc-slams-karnataka-hc-over-suggestion-asking-kamal-haasan-to-apologize/
  6. தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு! Vhg ஜூன் 17, 2025 முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்திய கலாநிதி சிவமோகனால், தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ்.மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது இன்றையதினம் (17.06.2025) எடுத்துக்கு கொள்ளப்படவுள்ள நிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வைத்திய கலாநிதி சிவமோகன் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று வவுனியாவில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது. சமூக செயற்பாட்டாளரும், மூன்று முன்னாள் போராளியின் சகோதரனுமான முல்லை ஈசனின் வேண்டுகோளுக்கிணங்க வழக்குகள் நீக்கப்பட வேண்டும் எனவும் தமிழரசு கட்சி நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் வழக்குகள் நீக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தரப்பினரும், வைத்தியர் சிவமோகன் தரப்பினரும் தம்முடைய பிரச்சினைகளை நேருக்கு நேர் கலந்துரையாடி அதற்கமைவாக இரு தரப்பினரும் ஒத்துழைத்து மக்கள் நலன் கருதி வைத்திய கலாநிதி சிவமோகனால் முறையிடப்பட்ட வழக்கினை மீள பெறுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Batticaloa News | Srilanka News...தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்க...
  7. அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர் June 17, 2025 9:09 am ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். அமெரிக்க சேனலான ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது நெதன்யாகு இந்த அறிக்கையை வெளியிட்டார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நெதன்யாகு நியாயப்படுத்தினார், மேலும் கமேனியை ‘நவீன கால ஹிட்லர்’ என்று அழைத்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காமெனியைக் கொல்லும் திட்டத்தை நிராகரித்ததாக வெளியான செய்திகளை நெதன்யாகு மறுத்தார். “இது (காமெனியின் படுகொலை) மோதலை அதிகரிப்பதற்காக அல்ல, அதை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக” என்று நெதன்யாகு கூறினார். நெதன்யாகுவின் வாதம் என்னவென்றால், ஈரான் இஸ்ரேலைப் போருக்குத் தள்ளுகிறது. ஈரான் எப்போதும் போரை விரும்புகிறது. அது நம்மை அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குக் கொண்டு செல்கிறது. இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. தீய சக்திகளை எதிர்ப்பதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று நெதன்யாகு கூறினார். இஸ்ரேல்-ஈரான் மோதல் முழு அளவிலான போரை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நினைத்து உலகம் கவலை கொண்டுள்ளது. நேற்று, தொடர்ந்து நான்காவது இரவும் இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடந்தன. ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் உள்ள மாவட்டம் 3 உட்பட பல இடங்களில் இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதலை நடத்தியது. ஈரானின் அரசு தொலைக்காட்சியின் தலைமையகத்தையும் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது. பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஸ்டேட் டிவியில் நேரடி செய்தி ஒளிபரப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது. ஒரு பெரிய வெடிப்பு மற்றும் ஒரு செய்தி தொகுப்பாளர் வெளியேறுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதேபோன்ற எச்சரிக்கையை இஸ்ரேலுக்கும் விடுத்த ஈரான், டெல் அவிவ் மக்கள் விரைவில் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இலக்குகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது. https://oruvan.com/war-will-end-if-ayatollah-khamenei-is-killed-israeli-prime-minister/
  8. பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது தமிழ்பேரவை June 17, 2025 10:29 am பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளரை தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் 7/4 என்ற வாக்குகளில் வெற்றிபெற்றார். இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தி.சந்திரசேகர் அவர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போல் ஆகிய இருவரின் பெயர்கள் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் வெற்றிபெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதில் 7/3 என்ற அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தேவசிகாமணி தேவராசேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதில் பருத்தித்துறை நகரசபை செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சி யாழ்மாவட்ட தலைவர் ஆ.சுரேஸ்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். https://oruvan.com/the-election-of-the-new-chairman-of-the-point-pedro-council/
  9. பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் Published By: DIGITAL DESK 3 17 JUN, 2025 | 09:30 AM சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவை திங்கட்கிழமை (16) அலரி மாளிகையில் சந்திதுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் ஹரிணி அமர் சூரிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்திடம், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் செல்லும்போது, சர்வதேச பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை நான் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவிடம், கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையுடனான மற்றும் செயற்திறமான அணுகுமுறையை கலாநிதி கோபிநாத் பாராட்டியதுடன், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் அரசாங்கத்தின் முயற்சிகளில் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் மீளக் கட்டியெழுப்புவதிலும் நாடு எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களையும் அவர் விசேடமாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்த சட்டகம், இலங்கையை போலவே நிதி மற்றும் கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது என்றும் கலாநிதி கோபிநாத் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217673
  10. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ; அம்பாறையில் சம்பவம் 17 JUN, 2025 | 10:55 AM தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் '' தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம்'' என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக திங்கட்கிழமை (16) நடைபெற்ற போது பதற்ற நிலைமை ஏற்பட்டது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதுடன் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளரால் சந்தை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை என்ற விடயத்தினால் இப்பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு தவிசாளரது பெயரை கூறி வருகை தந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டியதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு வடகிழக்கில் எங்கும் செல்வேன். என்னை எவராலும் தடுக்க முடியாது என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிரிஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்து இருக்கின்றார். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட சிறு சலசலப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று காணாமல் ஆக்கப்பட்டோரால் நடத்தப்பட்ட போராட்டத்தில் மாத்திரமல்ல தமிழன் என்ற அடிப்படையில் வடகிழக்கு பூராகவும் எங்களது இனத்துக்காகவும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி வேண்டி தற்போதைதும் இளஞ சந்ததிகள் மற்றும் சமூகங்கள் எதிர்காலத்தில் கடத்தப்படக்கூடாது என்பதற்காகவும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றேன். இருந்தபோதிலும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு ருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு தடை ஏற்படத்தியுள்ளார். ஆனால் அவ்வாறான செயற்பாடுகளை மனிதனுடைய அடிப்படை உரிமை மீறல் ஆகும்.இவ்வாறான விடயங்களை தவிசாளர் என்பவர் செய்யக் கூடாது. அவ்வாறான அதிகாரம் தவிசாளருக்கு இல்லை என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அதாவது நானும் முன்னாள் தவிசாளர் என்று முறையில் எனக்கு தெரிந்த விடயத்தில் இவ்விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். ஏனெனில் எமது வடகிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்காக இவ்வாறான போராட்டங்கள் நடந்து வருகின்றது. அதன் அடிப்படையில் இன்று போராட்டம் நடைபெற்ற போது சிலர் மதுபோதையில் தவிசாளரின் இணைப்பாளர் என கூறிக்கொண்டும் நீங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட முடியாது. காரைதீவில் இருந்து நீங்கள் இவ்விடத்திற்கு வர முடியாது என்று கூறினார். நான் தமிழன் என்ற ரீதியில் எங்கு சென்றும் குரல் கொடுப்பேன் முடிந்தால் நான் இன்று மது போதையில் எங்களை எதிர்த்தவர்களுக்கு போலீஸில் முறைப்பாடு செய்ய முடியும். கடந்த ஆட்சி காலத்தில் ஒட்டுக் குழுக்களின் பின்னணியிலிருந்து இந்த இடத்தில் பல தடவை நான் அச்சுறுத்தப்பட்டேன். ஒரு தடவை கடத்தப்படவும் இருந்தேன். பாதுகாப்பான முறையில் அந்த சந்தர்ப்பத்தில் இந்த திருக்கோவில் மக்கள் எனது வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டார்கள். அவ்வாறான சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம் பெற்றிருக்கின்றது. இனிய பாரதி என்பவர் ஆயுத குழுக்களுடன் இயங்குகின்ற போது கூட நான் இந்த மக்களுக்கு உயிரை துச்சமாக மதித்து போராடியவர். ஆனால் இன்று என்னை மது போதையில் வந்து தாக்க முற்பட்டு காரைதீவு பகுதியில் இருந்து திருக்கோவில் பகுதிக்கு எவ்வாறு வருவீர்கள் என்றும் உங்களுக்கு இடுப்பில் பலம் இருக்கின்றதா என்று என்னிடம் கேட்கின்றார்கள். மேலும் நிச்சயமாக எனது இடுப்பில் பலம் இருக்கின்றது. முத்தமிழ் வித்தகர் பிறந்த மண்ணில் பிறந்தவன் நான் எல்லா தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழன் என்ற அடிப்படையில் நான் போராட்டங்களிலும் தமிழர்களுடைய நலன்கள் மற்றும் கடந்த கால கொரோனா காலகட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திற்கு பிரதேச செயலாளர்கள் ஊடாக பொத்துவில் பிரதேச செயலாளர் ஊடாக ஆலையடி வேம்பு பிரதேச செயலாளரின் ஊடாக கல்முனை பிரதேச செயலாளர் ஊடாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஊடாக பட்டினியில் வாழ்ந்த எமது உறவுகளுக்கு நிவாரண பணிகளை முன்னெடுத்து அந்த உதவியை எமது சகோதரர்கள் ஊடாக மேற்கொண்டு இருந்தேன் என குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழி உகந்த புத்த சிலை நிர்மாணம் தமிழர் காஷி அபகரிப்புகள் தொல்லியல் ஆக்கிரமிப்புகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கொல்லப்பட்டோருக்கான நீதி அரசியல் கைதிகள் விடுதலை பயங்கரவாத தடை சட்டத்தை நிறுத்துதல் போன்றவற்றிற்கு நியாயம் கேட்கும் மக்கள் போராட்டமாக இப்ப போராட்டம் அமைந்திருந்தது. இப் போராட்டத்தில் பொதுமக்கள் சிவில் அமைப்புகள் கழகங்கள் இளைஞர்கள் என பல தரப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/217681
  11. ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: நேரலையில் அதிர்ந்த கட்டிடம் ஈரான் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இதில், ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ஈரானின் இஸ்லாமிய குடியரசு நியூஸ் நெட்வொர்க் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது கட்டிடம் அதிர்ந்து கரும்புகை எழுந்தது, அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் ஸடூடியோவில் நேரலை நிகழ்ச்சியில் பதிவானது. முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் அரசு ஊடகத்துக்கு சொந்தமான தொலைகாட்சி, வானொலி நிலையம் அழிக்கப்படும் என கூறி இருந்தது கவனிக்கத்தக்கது. இதனிடையே, ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை தாக்கி அழிக்கும் வகையில் தெஹ்ரானில் உள்ள பொது மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது. இதையடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஈரான் அரசு செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல்: திங்கட்கிழமை அன்று நேரலையில் தொகுப்பாளர் ஒருவர் ஈரான் அரசு தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து அந்த தொகுப்பாளர் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தெஹ்ரானில் உள்ள அந்த அலுவலகம் மோசமாக சேதமடைந்தது. ஈரான் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக அந்தச் செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ‘உண்மையின் குரலை ஒடுக்கும் முயற்சி’ என இஸ்ரேலை குற்றம்சாட்டி மீண்டும் ஒளிபரப்பு தொடங்கியது. முன்னதாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பரவலாக தாக்குதலை நடத்தி இருந்தது இஸ்ரேல். மேலும், தாக்குதலுக்கு முன்னதாக தெஹ்ரானில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இந்த அறிவிப்பை பாரசீக மொழியில் ஈரான் மக்களிடம் இஸ்ரேல் தெரிவித்தது. அதே நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என இஸ்ரேல் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஈரான் தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு: திங்கட்கிழமை அன்று இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல். ஏற்கெனவே, கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் தொடரும் நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் போர் மூளும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்று பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலை சேர்ந்த 24 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இதில் காயமடைந்த சுமார் 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். ஈரானில் 224 பேர் உயிரிழப்பு: கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானை சேர்ந்த 224 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. சுமார் 1,277 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல். இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்கியுள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-அரசு-தொலைக்காட்சி-அலுவலகம்-மீது-இஸ்ரேல்-தாக்குதல்-நேரலையில்-அதிர்ந்த-கட்டிடம்/50-359405 மாணவர்கள் வெளியேற தரைவழி எல்லைகளை திறந்தது ஈரான் ஈரான் - இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாணவர்கள். ஈரானில் உள்ள பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் வெளியேற தரைவழி எல்லைகளை ஈரான் அரசு திறந்துள்ளது. இந்நிலையில் ஈரானில் படிக்கும் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு ஈரான் அரசை, இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தங்களது தரைவழி எல்லைகளை திறந்துள்ளதாகவும், அதன் வழியாக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என்றும் ஈரான் அரசு நேற்று அறிவித்துள்ளது. ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரான் மீதான வான்வழி மூடப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறும் வகையில் அனைத்து தரைவழி எல்லைகளும் திறந்திருக்கும். மாணவர்கள் பாதுகாப்பாக செல்லலாம்” என்று கூறப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/மாணவர்-கள்-வெளி-யேற-தரைவழி-எல்-லைகளை-திறந்தது-ஈரான்/175-359403
  12. வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வேலியால் பயனற்றுப்போனது காணிவிடுவிப்பு! 15 மில்லியன் ரூபா அரச நிதி வீண்; நிதிகோரி அடம்பிடிக்கும் இராணுவம் வலி. வடக்கின் பலாலி வடக்கில் கடந்த ஆண்டு விவசாய நடவடிக்கைக்காக காணிகள் விடுவிக்கப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ளநிலையில், தற்போதும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இறுக்கமான கண்காணிப்பிலே உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காணி விடுவிப்புக்காக 15 மில்லியன் ரூபா அரச நிதி செலவு செய்யப்பட்டு அந்தக் காணிகள் துப்புரவாக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பாதுகாப்பு வேலியை அகற்ற இராணுவத்தினர் 18 மில்லியன் ரூபா தேவை எனத் தெரிவித்து காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றனர். அதனால் அந்தக் காணிகள் மீண்டும் பற்றைக்காடுகளாக மாற ஆரம்பித்துள்ளன. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிவகித்தபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி ஒட்டகப்புலத்தில் நடந்த நிகழ்வில் 'உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் பலாலி வடக்கு ஜே/254, பலாலி கிழக்கு ஜே/253, பலாலி தெற்கு ஜே/252, வயாவிளான் கிழக்கு, ஜே/244.வயாவிளான் மேற்கு, ஜே/245 கிராம அலுவலர் பிரிவுகளில் 234.83 ஏக்கர் காணி விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட்டது. அவை 408 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. காணிகளை விடுவிப்பதற்காக அவை 15 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டு துப்புரவாக்கப்பட்டன. ஆயினும் காணிகள் விடுவிக்கப்பட்டுத் தற்போது 15 மாதங்கள் கடந்துள்ளபோதும். அவை இன்னமும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளன. மக்கள் அந்தக் காணிகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அங்குள்ள பாதுகாப்பு வேலி அகற்றப்பட வேண்டும். ஆயினும் அங்குள்ள பாதுகாப்பு வேலியை அகற்றிப் பின்னநகர்த்துவதற்கு 18 மில்லியன் ரூபா தேவை என்று தெரிவித்து இழுத்தடித்துவருகின்றனர். இந்தப் பாதுகாப்புவேலி அகற்றப்படா மையால் அந்தக் காணிகளைப் பயன்ப டுத்துவதில் பொதுமக்கள் பெரும் சிரமங் களை எதிர்கொண்டுள்ளனர். அந்தக் காணிகளுக்கு நீண்டதூரம் சுற்றிச் செல்லவேண்டியுள்ளதுஎன்றும், மாலை 6 மணிக்குப் பின்னர் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேநேரம் தற்காலிகக் கொட்டகைகள் அமைப்ப தற்கு மட்டுமே இராணுவத்தினர் அனும திக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித் துள்ளனர். 15 மில்லியன் ரூபா அரச நிதிச் செலவில் அந்தக் காணிகள் துப்பு ரவாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்தக் காணிகள் பற்றைக்கா டுகளாக மாறும் நிலைமை ஏற்பட் டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியபோது, இராணு வத்தின் இந்த விடயத்தில் சரியாகப் பதில் கூறாது மழுப்பியிருந்தனர். இந்தக் காணிகளை முழுமையாக விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://newuthayan.com/article/வலி.வடக்கில்_படையினரின்_பாதுகாப்பு_வேலியால்_பயனற்றுப்போனது_காணிவிடுவிப்பு!
  13. யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்? யாழ். மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். இந்நிலையிலேயே யாழ். மாவட்ட அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், யாழ். மாவட்டத்தில் நேற்று திங்கள் கிழமை எரிபொருளுக்காக ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக அறிந்தேன். இன்றையதினம் அநுராதபுரத்திலிருந்து 23 பௌசர்களில், ஒரு பௌரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் யாழ். மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. குறித்த எரிபொருட்கள் யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, நாளையும் இதே அளவான எரிபொருள் எடுத்துவரப்பட்டு யாழ். மாவட்டதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதேபோன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் சேமிப்பு நிலையத்திற்கு தொடர்ச்சியாக எரிபொருள் எடுத்து வரப்பட்டு சேமிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே யாழ். மாவட்ட மக்கள் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.samakalam.com/யாழில்-திட்டமிட்ட-எரிபொர/
  14. தெஹ்ரானை விட்டு மக்களை வெளியேறச் சொல்கிறார் டிரம்ப்! adminJune 17, 2025 ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அனைத்து குடிமக்களையும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ட்ரம்பின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே தலைநகர் தெஹ்ரானில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்ட பதிவை மேற்கோள் காட்டி இந்த செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அணு ஆயுத மேம்பாட்டைத் தடுப்பதற்கான ஒப்பந்தத்தை நாடு நிராகரித்ததாகக் கூறி, ஈரானியர்கள் தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார். “நான் கையெழுத்திடச் சொன்ன ‘ஒப்பந்தத்தில்’ ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன்! அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும்!” என டிரம்ப் அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது. https://globaltamilnews.net/2025/216903/
  15. 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் adminJune 16, 2025 written by admin June 16, 2025 தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியதாக இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்திற்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துடையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்கள் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை கலந்துரையாடல் நடத்தினர். குறித்த கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் குறித்த கலந்துரையாடலில் இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏது நிலைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. ஆனால் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியமையும் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகப்பொறுப்புடன் கையாண்டமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அது வரவேற்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற ஒழுங்குமுறை தொடர்பாக விசேட அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட வேண்டிய முக்கியத்துவம் கலந்துரையாடப்பட்டது. இதற்காக ஒஃபர் சிலோன் நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமும் மாகாண மட்ட கலந்துரையாடலில் பெறப்பட்ட விடயங்கள் தொடர்பான ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டு ஓர் ஆவணமாகத் தயாரிக்கப்பட்டு அரச உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துக்கள் பெறப்பட்டு உரிய முறையில் அமைச்சரவைக்கு ஊடாக கௌரவ ஜனாதிபதியின் பார்வைக்கு சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மீள் திரும்புகின்ற மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தின் சகலநிலை அதிகாரிகளையும் உள்ளடக்கி மக்களின் தேவைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன், மாகாணமட்ட உயர் அதிகாரிகளை தமிழ் நாட்டிலுள்ள முகாம்களுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக அவதானிப்புக்களை மேற்கொள்வதுடன் அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பவை தொடர்பாகவும் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. மீள்குடியேறும் மக்களுக்கான வீட்டுத்திட்டம், வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான விசேட தேவைகளை எவ்வாறு விரைவாகப் பெற்றுக் கொடுக்கலாம் என்பதையும் நிலைத்த மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்தையும் கட்டி எழுப்புதலின் அவசியம் தொடர்பாக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவைகளை தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2025/216885/
  16. வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர் adminJune 16, 2025 வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் போது, யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/216890/
  17. டாஸ்மாக்கின் விஷ மதுவில் இருந்து விடுதலை கிடைக்குமா? -சாவித்திரி கண்ணன் பனை தமிழ்நாட்டின் தேசிய மரம். நமது அடையாளம், பாரம்பரியம், பண்பாடு, வாழ்வாதாரம்…அனைத்தும் பனையே. அதிகாரத்தில் உள்ளவர்களின் பேராசைக்காக மெல்லக் கொல்லும் விஷமான டாஸ்மாக் மதுவை அருந்தி தமிழனம் மாய்ந்தழிவதா? கள் எனும் உணவு நம் உரிமை அல்லவா..? பனை ஏறுவது குற்றமா? சீமானை கைது செய்வீர்களா…? பனை மரம் மீதேறி சீமான் பனங்கள்ளை எடுத்தது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. பெரிய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுதி வருகின்றனர் சிலர்! புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும், வி.சி.கவின் ரவிக்குமாரும் இந்த விவகாரத்தில் சீமானை இன்னும் ஏன் கைது செய்யவில்லை எனக் கேட்கின்றனர். பல்லாயிரம் வருடங்கள் பனங்கள்ளை உண்டு வளர்ந்த சமூகத்திடம் அதை உண்ணாதே, இதோ நான் கொடுக்கும் மெல்லக் கொல்லும் விஷமான சீமை மதுவைக் குடி என அரசாங்கம் அழுத்தம் தருகிறது..என்றால், தமிழ் சமூகத்தை இழிச்சவாய் சமூகம் என கருதுகிறார்கள் என்று தான் அர்த்தமாகும். நாம் அதற்கு இடம் தரலாமா? நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியாவில் பல கோடிப் பேர் மது அருந்துகிறார்கள். இதை எந்தக் காலத்திலும், எந்த அரசாலும் முற்றிலும் ஒழிக்க முடிந்ததில்லை. இவை அளவுக்கு மீறி சமூகத்தை ஆக்கிரமிக்காமல் தடுப்பது தான் ஒர் மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும். ஆனால், நம்மை ஆளும் அரசுகளோ மக்கள் வேண்டாம் என எதிர்த்து போராடினலும் வலுக்கட்டாயமாக டாஸ்மாக் கடைகளை திரும்பும் திக்கெல்லாம் ஏற்படுத்தி மக்கள் பணத்தையும், ஆரோக்கியத்தையும் ஒருசேர சூறையாடுகின்றன. டாஸ்மாக்கில் அதிகார மையத்தினரின் பாக்கெட்டை நிரப்புகின்ற அந்த மதுவை IMFL என அழைக்கிறார்கள். அதாவது, Indian Made Foreign Liquor என்று பொருளாகும். உண்மையிலேயே சீமை சரக்கை குடித்தவர்கள் டாஸ்மாக் மதுவை சீண்ட மறுக்கிறார்கள். சாக்கடையில் வீசுங்கள் எனச் சீறுகிறார்கள். மிக மோசமான தரத்தில் அதிக இரசாயனக் கலவையுடன், அதிக ஆல்கஹால் கலந்து விற்கப்படும் இந்த மது, தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டில் பல லட்சம் உயிர்களை காவு வாங்கியுள்ளது. ஏராளாமான அடித்தட்டு உழைப்பாளிகளை உறிஞ்சி எடுத்து எதற்கும் லாயக்கற்றவர்களாக குப்பையில் வீசி எறிந்துள்ளது. கணக்கற்ற விதவைகளை உருவாக்கி உள்ளது. பல லட்சம் குடும்பங்களை நிராதரவற்ற நிலைக்கு தள்ளி உள்ளது. 48 சதவிகித ஆல்கஹால் கொண்ட இந்தக் கொடூர மதுவின் தரம் குறித்த, எந்த விவாதமும் இங்கு ஊடகங்களில் நடப்பதில்லை. இதை தடுப்பதற்கும் வழியில்லை என்பதாக தமிழ்ச் சமூகம் விழி பிதுங்கிக் கொண்டுள்ளது. ஆனால், இயற்கை பானமான கள் உண்ணும் உரிமைக்கு எதிராகத் தான் எத்தனை குரல்கள் வீரியத்துடன் வருகின்றன…! இந்திய அரசியல் சட்டப்படி கள் என்பது ஒரு உணவு தான். அது தடை செய்யப்பட வேண்டியதல்ல. அதில் ஆல்கஹால் இருக்கிறதா? என்றால், இருக்கிறது. ஆம், 4 சதவிகித ஆல்கஹால் இருக்கிறது. நாம் உண்ணும் உணவில் கூட ஓரளவு குறைந்த ஆல்கஹால் உள்ளது. பழைய சோற்றில் மிதமான ஆல்கஹால் உள்ளது. புளித்த மோர், புளித்த இட்லி,தோசை மாவு, திராட்சை பழரசம் ஆகியவற்றிலும் உள்ளது. இவை எதுவும் சட்டப்படி தடை செய்யப்பட்டதல்ல. அவ்வளவு ஏன்? மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ற இருமல் சிரப்பு மருந்திலும் ஆல்கஹால் உள்ளது. ஆகவே, பனங் கள்ளை பார்த்து பயமுறுத்தக் கூடாது. தென்னங் கள்ளைக் காட்டி திகில் உருவாக்கக் கூடாது. சில மேதாவிகள் பக்கம்பக்கமாக கள்ளின் தீமை பற்றி எழுதுகிறார்கள். அதைவிட பத்து மடங்கு வீரியமுள்ள அரசாங்க மது குறித்து இவர்கள் கள்ளமெளனம் சாதிக்கிறார்கள். ஆகவே தான், நாம் வலியுறுத்த விரும்புவதெல்லாம் மதுவில் இருந்து கொள்ளை லாபம் ஈட்டும் மனப்பான்மையே மனிதகுலத்திற்கு எதிரானது. இதை கட்டுப்படுத்தி அளவில் வைக்க வேண்டும். அத்துடன் மக்கள் குடிக்கும் மது அதிக தீமை இல்லாததாக இருக்க வேண்டும். மது தயாரிப்பு, விநியோகம் என்பதை மையப்படுத்தாமல் அந்தந்த மண் சார்ந்து மக்களின் பழக்க வழக்கம் சார்ந்து இருப்பதை கூர்ந்து அவதானித்து அவற்றை முறைப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். சில இடங்களில் மது தயாரிப்பு என்பது பழங்களில், தானியங்களில், மூலிகை சாறுகள், தேன் போன்றவற்றின் கலவையில் உருவாக்கப்படுகிறது. இந்த பழத்தயாரிப்பு மது என்பது எந்தெந்த பழங்கள் அந்தப் பகுதிகளில் அதிகம் கிடைக்கிறதோ அதைக் கொண்டு உருவாக்கபடுவதாகும். பீகாரில் இலுப்பை பூவைக் கொண்டு அருமையான இனிமையான மலிவான மது தயாரிக்கிறார்கள் எளிய தலித் மக்கள்! அசாம் போன்று பழங்குடிகள் வாழும் மாநிலங்களில் ரைஸ்பீர் எனப்படும் ஆரோக்கிய மதுபானத்தை தயாரிக்கிறார்கள். கோவாவில் முந்திரி பழத்தைக் கொண்டு ஃபென்னி என்ற மதுபானத்தை தயாரிக்கிறார்கள். திராட்சை, ஆப்பிள், முந்திரிப் பழம், பிளம்ஸ், செர்ரி, பெர்ரி போன்ற பழங்கள் தீமை குறைவான ஆரோக்கிய மது தயாரிப்புக்கு மூலமாகும். இது தவிர பார்லி, சோளம், அரிசி போன்ற தானியங்களைக் கொண்டும் சிறந்த மது தயாரிக்க முடியும்! இதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு நம் டாஸ்மாக்கில் கரும்பு சக்கையில் இருந்து கிடைக்கும் மோலாசஸைக் கொண்டு மெத்தனால், ஸ்பிரிட் கலந்து ஒரு செயற்கை மதுவை – கேடுதரும் மதுவை – வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள். தமிழகத்தில் முந்திரி பழங்கள் கேட்பாரற்று பல்லாயிரம் டன்கள் பயனின்றி வீணடிக்கப்படுகின்றன! இதில் இருந்து ஆரோக்கியமான மதுபானம் தயாரிக்க முடியும்! இவை விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் பலன் இல்லாமல் அழிகின்றன. நமது சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வீணாகும் முந்திரி பழத்தை பயன்படுத்தி பழச்சாறு மற்றும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், இந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். அதே போல தென்னங் கள்ளை விவசாய கூட்டுறவில் தயாரித்து விற்க அதிமுக அரசாங்கத்தில் எடுத்த முயற்சிகளையும் சாராய அதிபர்கள் தடுத்துவிட்டார்கள். ஐந்து கோடி பனைமரங்கள் இருந்த தமிழ் நாட்டில் இன்று அது சரிபாதிக்கும் கீழாகி விட்டது. காரணம், பனையை பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்திருப்பதால், பனை மரம் ஏறுவதையே குற்றச் செயலாக அறிவித்து இருப்பதால் பனை வளர்ப்போர் விரக்தி அடைந்து அதனை வெட்டி செங்கற் சூளைகளுக்கு அனுப்பி வருகின்றனர். பனை விவசாயிகளும், பனையேறிகளும் பல போராட்டங்கள் நடத்தி ஓய்ந்துவிட்டனர். நாம் இவர்களை ஆதரிக்காதது தான் காரணம். பனங்கள்ளு இறக்கும் உரிமை கேட்டு நடந்த போராட்டம் பனை தான் தமிழ்நாட்டின் தேசிய மரம். ஆம், நமது அடையாளம், நமது பாரம்பரியம். நமது வாழ்வாதாரம். பனையேறுவது நம் தொழில் உரிமை. பசிக்கின்ற ஏழைக்கு மட்டுமல்ல, பறவையினங்கள் பலவற்றுக்கும் பனையே சரணாலயம். அப்படிப்பட்ட பனையை பகை மரமாக பாவித்து, இல்லாத சட்டங்களை போட்டு இன்னல்கள் பல தந்து பனையேறிகளை வேட்டையாடி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பனை வளர்ப்பையே படு பாதளத்திற்கு தள்ளிவிட்டன, மாநிலத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள்! ஏன் இவ்வாறு செய்தார்கள். பக்கத்தில் உள்ள கேராளவில் கள்ளுக் கடைகள் உள்ளன. மற்ற பல மாநிலங்களில் புழக்கத்தில் இருக்கும் இயற்கை பானங்கள் தமிழ் நாட்டை பொறுத்த வரை சர்வாதிகாரமாக மறுக்கப்பட்டு வருகின்றது. பனங்கள் புழக்கத்தில் வந்தால் அதில் கண்டதைக் கலப்பார்கள். இதனால் விபரீதங்கள், மரணங்கள் ஏற்படும். இன்னும் அதிகமானோர் மதுவை நாடிச் சென்று சீரழிவார்கள்…அது பாதுகாப்பற்றது, ஆபத்தானது..எனச் சொல்கிறார்கள். இதைத் தடுப்பதற்கு அரசாங்கமே பாலை கொள்முதல் செய்து ஆவீனை நடத்துவதை போலக் கள்ளை கொள்முதல் செய்து முறையாக பதப்படுத்தி குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும்படி செய்யலாம். அல்லது விவசாயக் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவர்களுக்கு எப்படி செயல்படுவது என வழிகாட்டி கண்காணிக்கலாம். இது ஒன்றும் செய்ய முடியாததல்ல. நல்ல நோக்கமும், மக்கள் நலனில் அக்கறையும் இருந்தால், சாத்தியமே. இதற்கு கட்டுபடியாகக் கூடிய எளிய வரிவிதிப்பு முறையை கையாளலாம். இதனால், அதிகாரத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் இது வரை சாராய அதிபர்களிடம் பார்த்து வந்த பெரிய கையூட்டு பணம் இதில் தடைபடும் என்பதால், பல சாக்கு போக்குகளைச் சொல்லி அமல்படுத்த மறுப்பார்கள். மக்கள் வீறு கொண்டு பொங்கி எழுந்து உணவு என்பது எங்கள் உரிமை. அதை தடுக்கும் அதிகாரம் ஆள்வோருக்கு இல்லை என்பதை உணர்த்த வேண்டும். மூத்த விவசாயி நல்லுசாமி இதைத் தான் பல்லாண்டுகளாக வலியுறுத்தி வந்தார். சீமான் எடுத்த முன்னெடுப்பை மக்கள் நலன் கருதி தமிழ் நிலத்தில் வாழும் அனைவருமே கட்சிகளைக் கடந்து ஒன்றிணைந்து இதை சாத்தியப்படுத்த வேண்டும். பனை, தென்னை விவசாயிகள் வாழ்வில் இது பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். 2026 தேர்தலின் மைய விவாத பொருளாக இதை செயல்படுத்த வேண்டும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21902/palm-trees-panangkallu-seeman/
  18. ஜனாதிபதி மற்றும் IMF இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் இடையே சந்திப்பு June 16, 2025 3:21 pm ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இன்று (16) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இலங்கை நிதி நெருக்கடியிலிருந்து மீள, வழிகாட்டிய சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். அமெரிக்கா அண்மையில் விதித்த வரிகளைப் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25% அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், அவ்வாறு வரி அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் கூறினார். உலகளாவிய நெருக்கடிகள் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், இந்த சவால்களை செயற்திறன் மிக்க வகையில் முகாமைத்துவம் செய்வதற்கும் அவற்றின் தாக்கத்தை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் வர்த்தக உறவு, குறிப்பாக இலங்கையின் 23% ஏற்றுமதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு அனுமதி வழங்கும் GSP+ வர்த்தகச் சலுகை பற்றியும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டன. முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் தெரிவித்தார். தற்போதைய ஆட்சி மக்களை மையமாகக் கொண்டது என்றும், மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார். இலங்கையில் தனக்குக் கிடைத்த அமோக வரவேற்புக்கு திருமதி கோபிநாத் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் இரண்டிலும் அரசாங்கத்திற்குக் கிடைத்த வலுவான மக்கள் ஆதரவு, அத்தியாவசிய மறுசீரமைப்புகளைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு பலமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். கடுமையான நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அடைந்த பொருளாதார வளர்ச்சியையும், மிக அதிக பணவீக்க விகிதத்திலிருந்து பணவீக்க விகிதம் குறைந்ததையும் குறிப்பிட்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் பாராட்டினார். அதேபோன்று, அரச நிர்வாக மறுசீரமைப்புகளில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய அவர், இந்த முயற்சிகளை நிலைநிறுத்தி விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் மீட்சி செயல்பாட்டில், சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாக இருக்கும் என்று திருமதி கோபிநாத் உறுதியளித்தார். தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://oruvan.com/meeting-between-the-president-and-dr-gita-gopinath-deputy-managing-director-of-the-international-monetary-fund/
  19. கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். இன்றைய வாக்கெடுப்பில் மொத்தமாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்றது. அதற்கமைய, நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதாக சபையில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு அமைய பிரதி மேயராக ஹேமந்த குமார தேர்ந்தெடுக்கப்பட்டார். https://adaderanatamil.lk/news/cmbyp0hs701wrqpbsfjoncu90
  20. போட்டியின் ஆரம்ப நாட்களிலும் இறுதி நாட்களிலும் வெவ்வேறு நண்பர்கள் குழாமுடன் விடுமுறையில் வேறு நாடுகளில் நிற்பேன் என்பதால் போட்டி தயார்படுத்துவதும் நடாத்துவதும் கடினம்! அத்தோடு மகளிர் அணியின் போட்டிகளை பார்த்ததுமில்லை!
  21. I அஞ்சலி I I பண்டிதர் பரந்தாமன் I இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய தொண்ணூறுகளில் தன்னுடைய நாற்பதுகளிலிருந்த பண்டிதர் ஆசிரியர் வேலையைவிட்டு விலகி முழுநேர உறுப்பினராக சீருடையணிந்து புலிகளில் இணைந்தார். சங்க காலக் கவிதைகளில் ஒரு அதிபதியான பரந்தாமனின் பொற்காலமும் சங்ககாலத்திலேயே இருந்தது. விடுதலைப் புலிகளின் பொற்காலமான தொண்ணூறுகளில் புராதன சங்ககாலம் “தமிழீழத்தில்” Re Enact பண்ணப்படுவதாக ஒரு குழந்தையின் முகச்சாயலைக் கொண்டிருந்த பண்டிதர் உண்மையிலேயே நம்பினார். சங்ககாலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த பண்டிதர் சங்ககால மொழியையும் பதங்களையும் கொண்டு பிரச்சாரமில்லாத சில நல்ல கவிதைகளையும் எழுதியுள்ளார். பண்டிதர் பரந்தாமனுடைய மகனும் வேறொரு பிரிவில் எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளில் போய்ச் சேர்ந்தான். மகன் புலிகளில் இணைவதை பண்டிதர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்திருந்தார். அதுமட்டுமின்றி தன் மகன் இணைந்ததை மிகப்பெருமையாகச் சொல்லியும் திரிந்தார். புலிகள் யாழை விட்டு வன்னிக்குச் சென்றபோது பண்டிதரும் வன்னிக்குப் போனார். ஈழப்போர் முடிந்தபின் புனர்வாழ்வுபெற்று தன் ஊருக்கு திரும்பி தன் எஞ்சிய நாட்களை நேற்று இறக்கும்வரை வாழ்ந்துவந்தார். அந்தணன் - அவர் மகன் ஊருக்கு திரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு மாயையிலிருந்தாலும் நியாயமானதாக நம்பியவரும் கவிஞர் முருகையனைப் போன்ற Hypocrite அல்லாதவருமான நேர்மையான மனிதனும் கவிஞரும் சொல்லப்பட்ட தமிழாசிரியருமானவர் பண்டிதர் பரந்தாமன். பகுத்தறிவுத் தந்தை என வர்ணிக்கப்படும் தென்புலோலியூர் கந்த முருகேசனார் இவருடைய குரு. ஹாட்லிக்கல்லூரியில் நான் படித்த காலப்பகுதியில் இவர் ஆசிரியராக இருந்தாலும் இவரிடத்தில் தமிழ் படித்திருக்ககூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. பண்டிதரின் நல்ல கவிதையொன்று I நல்லையல்லை நெடுவெண்ணிலவே I இல்லும் இழந்தனம் ஊரும் இழந்தனம் ஏல்லாம் இழந்தே ஏதிலியர் ஆனோம் வேற்றூர் தன்னில் வெய்யிலுக்கொதுங்கல் போற்றெருவோரம் புளியோ வேம்போ ஆலோ அரசோ அருநிழல் தேடி ஓலை மறைப்பில் உழலும் வாழ்க்கை ஒழியுநாள் வருமோ? முன்னாள் எம்மூர் உழுது வித்திய பழனச் செந்நெல் அலைகடற் படுத்த விளைமீன் குழம்பொடு ஆர உண்டே மூரல் முறுவலர் சேர இருந்து திங்கள் சொரிந்த பாலொழிப் பரப்பில் மாலைத் தென்றல் முல்லை நறுமணம் முகந்து வீச மேனி சிலிர்ப்ப இன்பில் மிதந்த எழில் வாழ்வு கழிந்தது மாதோ இன்னாள் ஏர்க்களம் யாவும் போர்க்களம் ஆன வாரியிடையே வலைஞர் செல்லார் குயிலும் கோழியும் கூவல் மறந்தன கிள்ளை மழலையும் கேளா நல் ஆன் கன்று துள்ளா கறவை சுரவா எல்லாம் அழுக்காறுடையான் உள்ளம் போல் புல்லென்றாகிப் போன யாமோ கடுவெயில் அருவழி நெடுந்தொலை ஏகி கான விறகு கட்டி விற்கும் அல்லல் வாழ்க்கையே ஆனோம் இங்ஙன் சிறுவர் மகிழார் இளையோர் நயவார் பாடுநர் நோக்கார் பகையறக் களத்தில் ஆடுநர் வேண்டார் நீடொழி பரப்பி மெல்ல வானில் வருகுவை நல்லை அல்லை நெடுவெண்ணிலவே ❤️ இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி முதலிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். - நட்சத்திரன் செவ்விந்தியன் https://www.facebook.com/share/p/15mXpGm7oi/?
  22. கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா? 15 Jun 2025, 9:17 PM – ரவிக்குமார் ( Section 4 (1) (e) of Tamil Nadu Prohibition Act, 1937 இன் படி யாராவது கள் இறக்கினால் அவருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். ) கள்ளுக்கடையைத் திறக்கவேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள். ‘மற்ற மதுவகைகளை அரசாங்கம் அனுமதிக்கிறது. சாராயம் விற்கிறார்கள். அயல்நாட்டு மதுவகைகளைத் தயாரித்து விற்கிறார்கள். அவையெல்லாம் செயற்கையாக இரசாயனப் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. கள் என்பது இயற்கையாக வடிகிற ஒரு பொருள். அது ஒரு இயற்கை உணவு. அது உடம்புக்கு நல்லது. சாதாரண ஏழைகள் சாப்பிடக் கூடியதாக இருக்கிறது. அதனால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அப்படி இருக்கும்போது சாராயத்தையும், பிராந்தி விஸ்கி போன்றவற்றையும் விற்க அனுமதிக்கிற அரசாங்கம் அதன் மூலம் பெருமுதலாளிகளுக்கு லாபம் சேர்ப்பதற்குத் துணைபுரிகின்ற இந்த அரசாங்கம் ஏன் கள்ளை மட்டும் விற்கக் கூடாது என்று தடைபோடுகிறது?’ என்று கேட்கிறார்கள். அவர்களுடைய இந்த கோரிக்கையை அரசியல் கட்சிகள் சிலவும் ஆதரிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கஞ்சா வளர்க்கும் போராட்டத்தை நடத்துவார்களா? கள்ளுக் கடை திறப்பதை ஆதரித்துப் பேசுகிறவர்கள் இது இயற்கையாகக் கிடைக்கிற ஒரு பொருள் என்று வாதிடுகிறார்கள். ‘‘கஞ்சாவும் கூட இயற்கையாகக் கிடைக்கும் ஒரு மூலிகைதான்‘‘ என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக கஞ்சா வளர்க்கும் போராட்டத்தையும் நடத்துவார்களா? கள் நல்லது என எந்த மருத்துவர் சொன்னார்? கள் குடித்தால் உடம்புக்கு நல்லது என எந்த மருத்துவரும் சொன்னது இல்லை. மருத்துவ ரீதியாகப் பார்த்தால் கள் என்பது சிலர் சொல்வது மாதிரி உடலுக்குக் கேடு விளைவிக்காதது அல்ல. ஏனென்றால் அதில் ஐந்து சதவீதம் முதல் பத்து சதவீதம்வரை ஆல்கஹால் இருக்கிறது. நான்கு சதவீதத்துக்குமேல் ஆல்கஹால் இருக்கும் ஒரு பொருளைத் தொடர்ந்து உட்கொண்டால் அது மிகவும் மோசமாக உடலைப் பாதிக்கும். குறிப்பாக மூளையைப் பெரிதும் பாதிக்கும். கள் அருந்துவதால் என்சைம்கள் பாதிக்கப்படுகின்றன.அதனால் நினைவாற்றல் குறைகிறது . இந்த விஷயங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையாகும். கள் அருந்துவதால் ஏற்படும் கேடுகள் கள் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கேரளப் பல்கலைக் கழகத்தின் பயோ கெமிஸ்ட்ரி துறையைச் சேர்ந்த இந்திரா, விஜயம்மாள், ஜே.ஜே.லால் மற்றும் ஸ்ரீரஞ்சித்குமார் ஆகிய நான்கு ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். கள் குடிப்பதால் வளர் பருவத்தில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான கேடுகள் ஏற்படும் என்றும் அவர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். சினையாக இருந்த எலிகளைப் பிடித்து அவற்றுக்குத் தினமும் குறிப்பிட்ட அளவு கள்ளைப் புகட்டி அவை குட்டி போட்டதற்குப் பிறகு ஆராய்ந்து பார்த்ததில் அந்தக் குட்டிகளுக்குக் கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதே விதமான பாதிப்புகள் மனிதர்களுக்கும் ஏற்படும் என்பதை அந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இயற்கையான ‘ஒரிஜினல்‘ கள்ளைக் குடித்தாலே பிரச்சனை என்னும்போது ‘ கலப்பட கள்‘ குடித்தால் என்ன ஆகும் என்பதற்கு கேரளாவில் அவ்வப்போது கலப்படம் கள் குடித்ததால் ஏற்படும் மரணங்களே சாட்சி. கள்ளில் கலப்படம் ஒரு கள்ளுக்கடையை லாபகரமாக நடத்த வேண்டுமென்றால் அதற்குப் போதுமான கள் உற்பத்தி செய்யப்படவேண்டும். அப்படி உற்பத்தி செய்வதற்கு அந்த அளவுக்குத் தென்னை மரங்கள் இருக்கவேண்டும். தென்னை மரம் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து அவற்றைக் கள் இறக்குவதற்கு விடமாட்டார்கள். காய்ப்பு பொய்த்துவிடும் என்பதால் ஒரு வருடம் விட்டு ஒரு வருடம்தான் கள் இறக்க விடுவார்கள். அப்படிச் செய்யும்போது கள் இறக்கப் போதுமான மரங்கள் கிடைக்காமல் போய்விடும். இதைச் சமாளிப்பதற்கு மட்டுமின்றி அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் கள்ளுக் கடைக்காரர்கள் கண்டுபிடித்துள்ள உபாயம்தான் கலப்படக் கள் என்பதாகும். கலப்படக் கள் தயாரிப்பதற்கு என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்தால் நாம் கனவில்கூட கள்ளுக்கடையைப் பற்றி நினைக்கமாட்டோம். கள்ளில் உயிருக்கு ஆபத்தான கலப்பட பொருட்கள் ஸ்பிரிட், க்ளோரல் ஹைட்ரேட், வெள்ளை நிற சாந்து இவைதவிர டையாஸ்பாம் என்னும் மாத்திரையும்கூட கள்ளில் கலக்கப்படுகிறது. இப்படிக் கலப்படம் செய்து தயாரிக்கப்படுகிற ‘கள்ளில்’ இருக்கும் போதை நாற்பது சதவீத ஆல்கஹாலின் போதைக்குச் சமம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி ‘ செயற்கைக் கள்‘ தயாரிப்பதற்கு மட்டுமின்றி இயற்கையாக இறக்குகிற கள்ளிலும்கூட க்ளோரல் ஹைட்ரேட்டைக் கலந்து அதில் தண்ணீர் ஊற்றி கூடுதல் கள்ளை உற்பத்தி செய்வது அநேகமாக எல்லா கள்ளுக் கடைகளிலும் உள்ள நடைமுறையாகும்.‘ இருநூறு லிட்டர் கள்ளில் எழுபது லிட்டர் ஸ்பிரிட்டைக் கலந்து அதில் க்ளோரல் ஹைட்ரேட், டயாஸ்பாம் மாத்திரை போன்றவற்றைச் சேர்த்து தண்ணீர்விட்டுக் கலக்கினால் பத்தாயிரம் லிட்டர் கலப்படக் கள் கிடைக்கும். க்ளோரல் ஹைட்ரேட் என்னும் இந்த வேதிப் பொருள் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகும். இதைக் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் மயக்கம், இருதய பாதிப்பு, வாந்தி எனப் பல்வேறு உடல்நலக் கேடுகள் வருவதோடு கல்லீரல் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி இதைத் தொடர்ந்து பாவித்துவந்தால் அந்த நபர் நிரந்தரமாக இதற்கு ‘அடிக்ட்‘ ஆகிவிடுவாரென்றும் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஆக, கள் இயற்கை உணவு என்பதும் அதைக் குடித்தால் உடம்புக்கு நல்லது என்பதும் அப்பட்டமான பொய்யே தவிர வேறொன்றுமில்லை. கள் குடிப்பதற்கு ஆதரவான பேச்சு யாவும் அடிப்படையில் மதுவுக்கு ஆதரவான பேச்சே தவிர வேறில்லை. கள்ளுக் கடைகளால் லாபம் ஈட்டி முதலாளிகள் ஆனவர்கள் வேண்டுமானால் சுயநலத்துக்காக அதை ஆதரிக்கலாம். கள்ளுக் கடைகளால் சுயமரியாதையையும் வாழ்க்கையையும் இழந்தவர்கள் அதை ஆதரிக்க முடியாது. மது ஆதரவு பிரசாரத்துக்கு தடை மது அருந்துவதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய சட்டப்படி அனுமதி இல்லை. மது அருந்துவதை ஆதரித்து விளம்பரம் செய்வது 1995 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கள் இறக்கினால் 3 மாதங்கள் சிறை கள் இறக்குவதென்பது தமிழ்நாட்டில் சட்டப்படி குற்றமாகும். Section 4 (1) (e) of Tamil Nadu Prohibition Act, 1937 இன் படி ஒருவர் கள் இறக்கினால் 3 மாதங்கள் வரை அவருக்கு சிறை தண்டனை விதிக்கலாம் . சனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கத் தயங்கும் தமிழ்நாடு அரசு இதுபோன்ற போராட்டங்களை எப்படி அனுமதிக்கிறது ? என்பது வியப்பளிக்கிறது. Ref: https://indiankanoon.org/doc/77545447/ கட்டுரையாளர் குறிப்பு: முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். https://minnambalam.com/oes-the-law-permit-protests-supporting-toddy/#google_vignette
  23. வீழும் விழுமியங்கள்: இஸ்ரேலைக் கண்டிக்க இந்தியா தயங்குவது ஏன்? 16 Jun 2025, 9:33 AM ராஜன் குறை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் உலகப் போர் மூளக்கூடிய சூழல் உருவாகி வருவதைச் சுட்டிக் காட்டியதுடன், இஸ்ரேல் நாட்டின் மனிதாபிமானமற்ற போக்கையும், அத்துமீறும் ராணுவ தாக்குதல்களையும் கண்டித்துள்ளார். எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் தலைவராக அவர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியமானது, வரவேற்கத்தக்கது. காரணம், ஈரான் நாட்டின் அணு ஆற்றல் உற்பத்தி கேந்திரங்களின் மீது இஸ்ரேல் இரு தின ங்களுக்கு முன்பு தாக்குதல் நட த்தியுள்ளது. தொடர்ந்து அவற்றை முற்றிலும் தாக்கி அழிக்கும் திட்டமும் வைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேலின் மீது டிரோன் தாக்குதல்கள் நட த்த த் துவங்கியுள்ளது. இஸ்ரேலின் வான்வழிப் பாதுகாப்புக் கவசங்களைக் கடந்து அந்த டிரோன்கள் இஸ்ரேலில் சேதங்களை விளைவித்துள்ளன. பதிலுக்கு ஈரான் தலைநகர் டெஹ்ரான் பற்றியெறியும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்ந்தால் சீனா ஈரானுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்தால், இது உலகப் போராக மாறும் சூழ்நிலை மிகத் தூலமாக நிலவுகிறது. இஸ்ரேலின் பிரதமர் நெதான்யாஹு பாரதப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். பிரதமர் மோடி போர்ச் சூழல் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலைக் கண்டித்துக் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. உலக நாடுகளில் பெரும்பாலானவை, 142 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஆனால் இந்தியா வாக்களிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுவதுடன், இந்திய வெளி உறவுக் கொள்கை அறம் சார்ந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் இந்தியா கடைபிடித்துவந்த வெளியுறக் கொள்கைக்கு மாறானதாக, முரணானதாக இன்றைய வெளியுறவுக் கொள்கை அமைந்துள்ளது. இந்த பிரச்சினையை சற்றே ஆழமாக புரிந்து கொண்டால்தான் பாஜக அரசாங்கம் செய்யும் தவறு என்ன என்பதையும் பரிசீலிக்க முடியும். இஸ்ரேலின் உருவாக்கம் இஸ்ரேல் என்பது இயற்கையாக வரலாற்றின் போக்கில் உருவான தேசமல்ல. அது புராண கதைகளின் அடிப்படையில் யூதர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட நிலம் (promised land) என்ற மத நம்பிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்களும் பாலஸ்தீனம் “திரும்பி வர”, குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். அந்த நிலத்தில் வசித்த வந்த பாலஸ்தீனியர்கள் திடீரென அந்நியப்படுத்தப் பட்டார்கள். அவர்களுக்கென்று தனி நாடும் அமைத்துத் தரப்படவில்லை. அவர்கள் இஸ்ரேலின் முழுமையான குடிமக்களாகவும் அங்கீகரிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளில் வசித்துவந்த யூதர்களின் மூதாதையர்கள் பாலஸ்தீனத்தலிருந்துதான் சென்றார்கள் என்று நிறுவுவது சாத்தியமில்லை. கடவுள் யூதர்களுக்கு பாலஸ்தீன நிலத்தை வாக்களித்ததையும் நிரூபிக்க முடியாது. என்றாலும் அது மத நம்பிக்கை அல்லவா என்று கேட்கலாம். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால் கடவுள் வாக்களித்தாரே தவிர கையளிக்கவில்லை என்பதுதான். யூதர்கள் கடவுள் சொற்படி கேட்டு நடக்காததால் கோபமடைந்த கடவுள் அவர்களை சொந்த நாடற்றவர்களாக வாழும்படி சபித்துவிட்டார் என்பதுதான் யூதர்களின் உண்மையான மத நம்பிக்கை. அதனால் தீவிர மத நம்பிக்கையாளர்களான யூதர்கள், Orthodox Jews, இஸ்ரேல் நாட்டு உருவாக்கத்தையோ, அங்கே அனைத்து யூதர்களுக்கும் குடியேறும் உரிமை இருக்கிறது என்பதையோ ஏற்பதில்லை. எனவே இஸ்ரேலின் உருவாக்கம் உண்மையான யூத மத நம்பிக்கைக்கும் எதிரானது எனலாம். ஹாலுகாஸ்ட் (Holocaust) இந்த நிலையில் எப்படி இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க நேர்ந்தது, முடிந்தது என்றால் அதற்குக் காரணம் ஹிட்லர் நட த்திய ஹாலுகாஸ்ட் என்று குறிப்பிடப்படும் யூத இனப்படுகொலை (1933-1945). ஜெர்மானிய தேசம் ஆரியர்களுக்கு சொந்தமானது, அதில் யூதர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்று கூறிய ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்தான். பின்னர் காஸ் சேம்பர்களில் அவர்களை கொத்துக் கொத்தாக கொன்றழித்தான். இந்த கொடூர நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்த உலகம் யூதர்களுக்கு தனி நாடு இருப்பது நல்லது என நினைத்ததால்தான் இஸ்ரேலின் உருவாக்கம் சாத்தியமானது. அடுத்து மற்றொரு கேள்வி எழ வேண்டும். ஹாலூகாஸ்ட் எப்படி சாத்தியமானது? ஹிடலர் ஏன் தன்னை ஆரிய இனம் என்று அழைத்துக்கொண்டான்? யூத மதத்தின் வளர்ந்த நிலைதான் கிறிஸ்துவம் எனலாம். ஆனால் யூத மதம் தன்னை கிறிஸ்துவத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொள்வதில் தீவிர முனைப்புக் காட்டியது. கார்ல் மார்க்ஸ் 1843-ஆம் ஆண்டு எழுதிய “யூதர்கள் பிரச்சினை குறித்து” (On Jewish Question) என்ற சிறிய கட்டுரையைப் படித்தால் எப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகி வந்த புதிய குடியாட்சி அரசாங்கங்களில் யூதர்களின் தனித்துவம் குறித்த கேள்விகள் எழுந்தன என்பதைக் காணலாம். யூதர்கள் மத ரீதியாக, சமூக ரீதியாக விலகியிருந்த து மட்டுமல்லாமல், பெருமளவு பண த்தை வட்டிக்குத் தருபவர்களாக, வர்த்தக நிதியாதாரமாக இருந்தார்கள். யூதர்களின் சுயநலமும், பணப்பற்றும் அவர்களின் தனித்த அடையாளங்கள் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். கார்ல் மார்க்ஸும் ஒரு யூதர்தான் என்பதுடன், ராபை எனப்படும் யூத மதகுருவின் பெயரனும் ஆவார். அந்த கட்டுரையின் இறுதியில் யூதர்களின் சமூக விடுதலை என்பது சமூகமே யூத மத த்திலிருந்து விடுதலை அடைவதுதான் என்று கூறுகிறார் (the social emancipation of the Jew is the emancipation of the society from Judaism). பத்தொன்பதாம் நூற்றாண்டின் மானுடவாத சிந்தனை அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் மதச்சார்பற்ற அரசியலே இன்னமும் காலூன்றவில்லை என்பதைக் காண வேண்டும். யூத, கிறிஸ்துவ மதங்களின் மீது ஐரோப்பிய சிந்தனையாளர்களுக்கு இருந்த அதிருப்தியின் பின்னணியில்தான், ஐரோப்பியர்கள் சமஸ்கிருத மொழியை பயின்றபோது உருவாக்கிய ஆரிய இனக் கோட்பாடு பலரையும் கவர்ந்தது. சமஸ்கிருத மொழிக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் இருந்த ஒற்றுமைகளை ஆராய்ந்தபோது சமஸ்கிருதம் பேசிய ஆரியர்களின் மத்திய ஆசியாவிலிருந்து வந்த மூதாதையர்களின் ஒரு பிரிவினர்தான் ஐரோப்பாவிற்கும் சென்றனர் என்ற கருதுகோள் உருவானது. அதனடிப்படையில்தான் ஜெர்மானியர்கள் தூய ஆரிய இனத்தவர் என்ற ஹிடலரின் இனவாதாக் கோட்பாடு உருவானது. அது யூத இனப் படுகொலைக்கு வழி வகுத்தது. அது ஏற்படுத்திய அதிர்ச்சியில் யூதர்களுக்கென்று பாலஸ்தீனத்தில் ஒரு நாடு உருவாவதற்கு ஆதரவு பெருகியது. சையனிசமும் இந்திய எதிர்ப்பும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கான நிலத்தை கையளிக்கும் சையனிச (Zionist) வேலைத்திட்ட த்தை காந்தி கடுமையாக எதிர்த்தார். “இங்கிலாந்து எப்படி இங்கிலீஸ்காரர்களுக்கு சொந்தமோ, ஃபிரான்ஸ் எப்படி ஃபிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமோ அப்படி பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. அதில் யூதர்களை குடியேற்றி இஸ்ரேலை உருவாக்குவது தவறு” என்று காந்தி திட்டவட்டமாகக் கூறினார். அதிலிருந்தே பாலஸ்தீனியர்களின் உரிமைகளை இந்தியா ஆதரித்து வந்தது. உள்ளபடி சொல்லப்போனால் 1948 முதல் 1992 வரை இந்தியா இஸ்ரேல் என்ற நாட்டுடன் அரசுமுறை உறவு வைத்துக்கொள்ளவில்லை. இந்தியாவின் உருவாக்கத்தில் மத ரீதியான தேசியத்திற்கு இடமளிக்க க் கூடாது என்பதே காங்கிரசின் நிலைபாடாக இருந்தது. முஸ்லீம் லீக்கும், ஜின்னாவும் மத அடிப்படையில் பாகிஸ்தான் நாட்டைக் கோரினாலும், இந்தியா மத அடிப்படையிலான தேசியத்தை ஏற்கவில்லை. மக்களின் மதநல்லிணக்க அடிப்படையில் காந்தியும், அரசின் மதச்சார்பின்மை என்ற அடிப்படையில் நேருவும் மத அடையாள தேசியத்தினை முழுமையாக எதிர்த்து நின்றனர். அதனால் மத அடையாளத்தின் பேரில், புராணக் கற்பனையின் பேரில் உருவான இஸ்ரேலை அவர்களும், அவர்கள் வழி வந்த காங்கிரசும் முழுமையாக ஏற்கவில்லை எனலாம். குறிப்பாக அங்கே பன்னெடுங்காலமாக வசித்த வந்த பாலஸ்தீனியர்களின் உரிமைக் கோரிக்கைகளை ஆதரித்தனர். அதனால் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் (PLO) துவங்கப்பட்டபோது அதனை அரபு நாடுகள் தவிர்த்து முதலில் அங்கீகரித்த நாடு இந்தியாவாகத்தான் இருந்தது. பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் நெடுநாள் தலைவர் யாசர் அராஃபத் (1929 – 2004) இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருந்தார். குறிப்பாக பிரதமர் இந்திரா காந்தியை (1917-1984) அவர் தன் மூத்த சகோதரி என்றே கூறினார். தலைநகர் டில்லியில் PLO அலுவலகம் 1974-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. பாலஸ்தீனிய மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். முஸ்லீம் நாடான பாகிஸ்தான் இஸ்ரேலின் ஆதரவு சக்தியான அமெரிக்காவிற்கு நெருக்கமாக இருந்ததும், இந்தியா அணி சேராத நாடாக விளங்கினாலும் ரஷ்யாவின் சோஷலிச கொள்கைகளுக்கும், மக்கள் விடுதலை இயக்கங்களுக்கும் ஆதரவாக விளங்கியதும் குறிப்பிடத் தக்கது. இவ்வாறான கொள்கை சார்ந்த நிலைபாடு இந்தியாவிற்கு நம்பகத்தன்மையை, மரியாதையைப் பெற்றுத் தந்தது. இஸ்ரேலுடனான பாஜக அரசாங்கத்தின் நெருக்கம் சோவியத் ரஷ்யா 1991-ஆம் ஆண்டு உடைந்த சிதறிய பிறகு, இரு துருவ உலகம் முடிவுக்கு வந்து, உலகில் அமெரிக்காவே ஒற்றைத் துருவமாக விளங்குவதாக க் கருதப்பட்டது. சுதந்திரவாத முதலீட்டிய பொருளாதாரம், சுதந்திர சந்தை பொருளாதரம், உலகமயமான வர்த்தகம் என புதிய உலகளாவிய உலக பொருளாதார அமைப்பு உருவானது. இந்தியாவில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு பதவியேற்ற நரசிம்ம ராவ் அரசு இந்திய வர்த்தக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, உலகமயமாதலை தொடங்கி வைத்தது. அத்தகைய சூழலில்தான் இஸ்ரேலையும் இந்தியா 1992-ஆம் அங்கீகரித்து அரசுமுறை உறவுகளைத் துவங்கியது. வெகுகாலமாகவே இந்திய வலதுசாரி, பார்ப்பனீய மனோபாவக்காரர்களுக்கு இஸ்ரேலின் மீது கவர்ச்சியும், சார்பும் உண்டு. இது அரேபிய முஸ்லீம்களுக்கு எதிரான மன நிலையுடன் இணைந்தது எனலாம். அறுபதுகளில் அரபு-இஸ்ரேல் போர்களில் இஸ்ரேலின் வெற்றியை இவர்கள் கொண்டாடினர். இந்த பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ், பாஜக-வின் இஸ்ரேல் ஆதரவு மன நிலையை புரிந்துகொள்ள வேண்டும். சையனிச சிந்தனைக்கும், இந்துத்துவ சிந்தனைக்கும் உள்ள ஒப்புமைகளையும் புறக்கணிக்க முடியாது. தந்தை நிலம், தாய் நிலம் என்ற சிந்தனைக்குப் பதிலாக “புனித நிலம்” என்ற மத அடையாளவாத தேசியத்தை முன்னிறுத்தபவைதான் இரண்டுமே என்பதை மனதில் கொள்ளவேண்டும். இதெற்கெல்லாம் மேலாக இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம் அதானி குழுமத்தின் நிர்வாகத்தில்தான் இருக்கிறது. பிரதமர் மோடி 2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு சென்ற போது, அந்த நாட்டிற்குச் சென்ற முதல் இந்திய பிரதமராக இருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா பல முதலீடுகளைச் செய்தது. அதானி போர்ட்ஸ் நிறுவனம் ஹைஃபா துறைமுக நிர்வாகத்தை எடுத்துக்கொண்டது. இதன் மூலம் அரசுமுறை உறவுகள் கடந்து, இஸ்ரேலுடன் வலுவான பொருளாதார உறவும் இந்தியாவிற்கு ஏற்பட பாஜக அரசும், அதானி நிறுவனமும் வழிசெய்துள்ளன எனலாம். இரானின் தாக்குதல்களுக்கு ஹைஃபா துறைமுகம் ஆட்பட்டுள்ள நிலையில் அதானி பங்குகளின் மதிப்பும் சரிந்துள்ளது. சரி செய்துவிடலாம் என்றுதான் கூறுகிறார்கள். காஸா இனப்படுகொலையும், ஈரான் மீதான தாக்குதலும் காஸாவில் இயங்கும் தீவிரவாத ஹமாஸ் இயக்கம்தான் இஸ்ரேலின் மீது தாக்குதல் நட த்தியது. இஸ்ரேல் பிரதமர் நெதான்யாஹுவின் லிகுட் கட்சியும், ஹமாசும் 1993-ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்ரேல்-பாலஸ்தீனிய ஆஸ்லோ உடன்படிக்கையை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹாமாஸை காரணமாக க் கொண்டு காஸாவில் பொதுமக்களை, குழந்தைகளை இஸ்ரேல் இரக்கமின்றி கொன்று குவித்து வருவது உலகெங்கும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் பெரும் மக்கள் திரள் ஊர்வலங்கள் நடக்கின்றன. சூழலியல் நடவடிக்கையாளர் கிரேடா துன்பர்க் தலைமையில் உணவு பொருட்களுடன் காஸா நோக்கி படகில் சென்ற குழு இஸ்ரேல் அரசால் கைது செய்யப்பட்டது. அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தனக்கு ஆதரவாக இருக்கும் துணிவில் இஸ்ரேல் ஈரான் மீதும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இரானின் அணு ஆயுத தயாரிப்புக் கேந்திரங்களைத்தான் தாக்கியதாக க் கூறினாலும் இது நிச்சயம் அத்துமீறல் என்பதில் ஐயமிருக்க முடியாது. ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கினால் உலகப் போர் மூளும் சாத்தியம் அதிகரித்து விடும். ஏற்கனவே உக்ரைன்-ரஷ்யப் போர் பதட்டமான நிலையில்தான் உள்ளது என்னும்போது மேலும் மற்றொரு பதட்டமான யுத்த முனை உருவாவது ஆபத்தானது. அமெரிக்க அதிபர் டிரம்ப்போ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மனம்போன போக்கில் பேசுபவராக இருக்கிறார். அனைத்து நாடுகளையும் மிரட்டி பணியவைக்க முயல்கிறார். உலக அரசியல் நிகழ்வுகளை பின் தொடர்பவர்களுக்கு உறக்கம் வருவதில்லை. உலகின் எந்த பகுதியில் வெடிக்கும் யுத்தமும் உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கத்தான் செய்யும். தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. அதனை மனதில் கொள்ளும்போது முதல்வர் ஸ்டாலின் இஸ்ரேலைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கை முக்கியமானது. இந்திய அரசும் துணிந்து அறம் சார்ந்த நிலைபாட்டினை எடுக்க வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/why-india-hesitates-to-condemn-israel/
  24. ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி! June 16, 2025 10:39 am வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது. அந்தவகையில் சங்கு கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட சு.காண்டீபனுக்கு ஆதரவாக 11வாக்குகளும், தேசியமக்கள்சக்தி சார்பாக போட்டியிட்ட சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனடிப்படையில் சங்கு கூட்டணியைச் சேர்ந்த சு.காண்டீபன் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து பிரதி முதல்வருக்கான தெரிவு இடம்பெற்றது. பிரதி முதல்வராக ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், சுயேட்சைகுழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் அவர்களுக்கு 10வாக்குகளும் ஆதரவாக அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டார். https://oruvan.com/the-sanku-alliance-captured-the-municipal-council-by-a-margin-of-one-vote/
  25. முக்கிய வழக்குகளை கையில் எடுத்த அநுர – சிக்கவுள்ள இரு ராஜபக்சர்கள்..! நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; நாட்டில் உள்ள பல விசாரணைகள் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்திற்கு ஏராளமான வழக்குகள் தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்த விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.அதுதான் கடைசி படி. அதன் பிறகு நீதிமன்றத்திற்கு தண்டனை வழங்க அதிகாரம் உள்ளது. அரச நிறுவனங்களின் முக்கியமான பங்கு, வழக்குகளை விசாரித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதாகும். இப்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, மேர்வின் சில்வாவின் விசாரணை முடிவுக்கு வருகிறது. குற்றப்பத்திரிகை மிக விரைவில் ஒப்படைக்கப்படும். இந்நிலையில் கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக நமாலுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது. யோசிதாவிடமும் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள். அதன் பிறகு, நீதிமன்றத்திற்குச் செல்வதே பணி. என கூறியுள்ளார். https://akkinikkunchu.com/?p=329020

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.