Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. 35 வருடங்களின் பின்னர் பலாலி கிழக்கு அம்மன் ஆலயத்தில் மக்கள் சுதந்திரமாக வழிபட அனுமதி General15 June 2025 இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று முதல் பொதுமக்கள் வழிபாடு செய்ய உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இராணுவ அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் ஆலயத்திற்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாகக் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேறியதைத் தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே இன்று முதல் மக்கள் அங்கு சுதந்திரமாக செல்வதற்கு இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளனர். https://hirunews.lk/tm/407239/after-35-years-people-are-allowed-to-worship-freely-at-the-palali-east-amman-temple
  2. பரமக்குடியில் வயதான பெண் படு கொலை – இலங்கை பெண்ணும் மகனும் கைது! adminJune 16, 2025 இந்தியாவின் பரமக்குடியில் வயதான பெண்ணைக் கொன்று தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 52 வயதான அன்னலட்சுமி, பரமக்குடியில் உள்ள 92 வயதான ஞானசவுந்தரியின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். வயதான பெண்ணின் மரணம் குறித்து அன்னலட்சுமி உறவினர்களுக்குத் தகவல் அளித்திருந்தார். பரமக்குடி நகர காவற்துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வயதான பெண்ணின் வீட்டிலிருந்து சுமார் 7.5 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. பணிப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் இரவில் வயதான பெண்ணைக் கொன்று, கரூரிலிருந்து வந்த அவரது மகன் 36 வயது பிரபுவிடம் தங்க நகைகளைக் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து காவற்துறையினர் அந்தப் பெண்ணையும் அவரது மகனையும் கைது செய்து, திருடப்பட்ட நகைகளை மீட்டுள்ளனர். https://globaltamilnews.net/2025/216866/
  3. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை! வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள்! adminJune 16, 2025 வலிகாமம் வடக்கில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தவில்லை என அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் எங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுபாட்டிலையே உள்ளது. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் ஆண்டு எமது சொந்த இடங்களில் இருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டோம். நாம் வெளியேறினதும், எமது பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயம் என இலங்கை இராணுவம் அறிவித்துக் கையகப்படுத்திக்கொண்டது. அந்தப் பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நாம் பல இடங்களில் குடியேறி உள்நாட்டுக்குள்ளையே அகதிகளாக வாழ்கின்றோம். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் எமது காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காணிகளை விடுவிக்கவேண்டும் என்றும் – இடம்பெயர்ந்த மக்களைச் சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்கவேண்டும் என்றும் பல ஆண்டுகளாகக் கோரிக்கைகளை விடுத்து வருகின்ற போதிலும், அவை இன்னமும் இராணுத்தால் விடுவிக்கப்படவில்லை. இடையிடையே சில பிரதேசங்களில் மீள்குடியமர்வு அனுமதிக்கப்பட்டபோதும், இன்னமும் பெரும் நிலப்பரப்பு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு – வளம்மிக்க அந்தப் பிரதேசத்தின் பயன்கள் இராணுவத்தால் சுரண்டப்பட்டு வருகின்றது. வலிகாமம் வடக்கில் இன்னமும் 2 ஆயிரத்து 700 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தை பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்தாலும், அந்தப் பிரதேசத்தின் வளங்களைச் சுரண்டி வருமானம் ஈட்டுவதிலேயே இராணுவம் முனைப்பாக இருக்கின்றது. தற்போது வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளில் 50 சதவீதமானவற்றில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளையும், பண்ணைகளை யும் முன்னெடுக்கின்றனர். 10 சதவீதமான காணிகளில் மைதானங்கள், வர்த்தக நிலையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என்பன இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறப்படும் விவசாய அறுவடையையும், அவற்றின் ஊடான வருமானத்தையும் இராணுவமே பெற்றுக்கொண்டுவருகின்றது. அதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தையிட்டிப் பகுதியில் விடுவிக்கத் தயாராகவிருந்த பெண்கள் விடுதி ஒன்றில் தற்போது இராணுவத்தினால் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில், இராணுவத்தினர் பிரதேச செயலகங்களிடமோ அல்லது உரிய அரச நிர்வாகங்களிலோ எந்தவித அனுமதியும் பெறாது கட்டுமானங்களையும், வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றனர். அதேபோன்று காங்கேசன்துறையில் தல்செவன விடுதியைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதி, அங்குள்ள சில வீதிகள் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மறைமுகமாக இராணுவத்தின் ஆளுகை தற்போதும் தொடர்கின்றது. வலிகாமம் வடக்கைச் சொந்த இடமாகக் கொண்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தற்போதும் பல்வேறு இடங்களில் இடர்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்களின் விவசாய நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார நெருக்கடிகளுடன் தங்களின் வாழ்க்கையைக் கொண்டு நகர்த்துகின்றனர். பாடசாலைகள், பாடசாலை மைதானங்கள், ஆலயங்கள், மயானங்கள் எனப் பலவும் இன்னமும் இராணுவத்தின் வசமே இருக்கின்றது. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம் என தெரிவித்தனர். https://globaltamilnews.net/2025/216869/
  4. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் Published By: DIGITAL DESK 3 16 JUN, 2025 | 09:29 AM இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சியில் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்கு குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதன்போது பாராட்டினார். 'இலங்கையின் மீட்பு பாதை - கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தொனிப்பொருளில் இன்று திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில் அவர் கலந்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளையும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றார். இதன் போது கருத்து வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான வலுவான ஈடுபாட்டை ஆதரித்தார். இது அண்மைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவியாக உள்ளது என்றும் இந்த கூட்டாண்மை வலுவான பொருளாதார அடிப்படைகளுக்கு அடித்தளமிட உதவியதாகவும் நிலைத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு அவசியமென்றும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/217578
  5. செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு யாழ். பல்கலை மாணவர்களையும் அனுமதிக்க நடவடிக்கை 16 JUN, 2025 | 10:15 AM யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாணம் பல்கலைகழக தொல்லியல் துறை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மனித புதைகுழி காணப்படும் நிலையில் , முதல் கட்ட அகழ்வு பணிகளில் 19 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்நிலையில், இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை 45 நாட்களுக்கு மேற்கொள்ள யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றதும் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களையும் ஈடுபடுத்தும் முகமாக , அதற்கான அனுமதிகளை வழங்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரியினால் யாழ்ப்பாண பல்கலைகழகத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217580
  6. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவரும் பலி 16 JUN, 2025 | 08:43 AM ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி ஞாயிற்றுக்கிழமை ஈரானின் தாக்குதலில் கொல்லபட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அவருடன் வேறு சில அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவரும் பலி.ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி ஞாயிற்றுக்கிழமை ஈரானின் தாக்குதலில் கொல்லபட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அவருடன் வேறு சில அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/217574 ஈரானின் ஆன்மீகதலைவர் கமேனியை கொலை செய்யும் இஸ்ரேலின் திட்டம் - தடுத்தார் டிரம்ப் - சிபிஎஸ் நியுஸ் Published By: RAJEEBAN 16 JUN, 2025 | 07:58 AM ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனியை கொலை செய்யும் இஸ்ரேலின் திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்த்தார் என அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிற்கு ஈரானின் ஆன்மீகதலைவரை கொல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது,ஆனால் இது சிறந்த விடயமல்ல என டிரம்ப் இஸ்ரேலிய பிரதமருக்கு தெரிவித்தார் என அதிகாரியொருவர் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை ஆரம்பித்த பின்னரே இருவருக்கும் இடையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த விடயம் குறித்து ரொய்ட்டரும் செய்தி வெளியிட்டுள்ளது.ஈரானின் ஆன்மீக தலைவரை கொலை செய்வதற்கான நம்பதன்மை மிக்க திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாக இஸ்ரேலியர்கள் வெள்ளை மாளிகைக்கு தெரிவித்தனர் என இந்த விடயம் குறித்து நன்கறிந்த அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து தெளிவுபடுத்தப்பட்ட பின்னர் வெள்ளை மாளிகை அதிகாரிகள் டிரம்ப் இந்த திட்டத்தை எதிர்க்கின்றார் என இஸ்ரேலிய அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/217571
  7. இஸ்ரேல் – ஈரான் போர்: மூன்று முக்கியமான கேள்விகள்! 14 Jun 2025, 4:46 PM சாக் பியூசாம்ப் வியாழனன்று இரவு, இஸ்ரேல் ஈரானுடன் போரைத் தொடங்கியது. ஈரானின் மூத்த இராணுவத் தலைமையையும் அணு விஞ்ஞானிகளையும் இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு ஒரு தந்திரோபாய வெற்றியாகவே அமைந்தன, ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே ஈரானின் ஒட்டுமொத்த இராணுவமும் அதன் புரட்சிகரப் படைகளின் தலைவர்களும் கொல்லப்பட்டனர். ஈரானிய வான் பாதுகாப்புத் தளங்கள் பெரும் சேதமடைந்தன. இஸ்ரேலுக்கு மிகக் குறைந்த இழப்புகளே ஏற்பட்டன. உடனடியாக ஈரானிடமிருந்து பெரிய பதிலடி எதுவும் வரவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை பிற்பகல், ஈரான் இஸ்ரேல் முழுவதும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இது இஸ்ரேலின் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி நடந்தது. இந்த எதிர்த் தாக்குதலின் முழுமையான தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்தப் போரில் மற்ற எந்தப் போரிலும் போலவே—ஆரம்ப நாட்களில் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதன் முடிவு எப்படி இருக்கும் என்று இப்போதே உறுதியாகக் கணிப்பது கடினம். இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தத் தாக்குதல்கள் பல நாட்கள் அல்லது சில வாரங்கள் நீடிக்கும் என்று கூறுகிறார்கள். இது எதிர்காலத்தில் ஒரு முடிவில்லாத பிராந்தியப் போருக்கான அறிகுறியாகும். இந்த நிலையில், உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் அமைப்பின் ஈரான் நிபுணர் கரீம் சட்ஜாத்பூர் இவ்வாறு எழுதுகிறார்: “இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலின் முழுமையான தாக்கம் வெளிப்படப் பல ஆண்டுகள் ஆகும் என்று வரலாறு நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இது ஈரான் அணு குண்டு தயாரிப்பதைத் தடுக்கலாம் அல்லது அணு குண்டை உருவாக்குவதை உறுதி செய்யலாம். இது [ஈரானிய] ஆட்சியைச் சீர்குலைக்கலாம் அல்லது அதை வலுப்படுத்தலாம்.” இந்த மோதலின் விளைவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும் குறைந்தது மூன்று முக்கிய கேள்விகள் இருக்கின்றன. இஸ்ரேலின் நோக்கம், அவர்கள் கூறியது போல, ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அழிப்பதோடு மட்டுப்படுத்தப்பட்டதா, அல்லது இது ஆட்சி மாற்ற நடவடிக்கையா? ஈரான் எந்த அளவிற்குப் பதிலடி கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது? இது அணு குண்டு பெறுவது குறித்த ஈரானின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது? இந்தக் கேள்விகள் அனைத்தும் இப்போதைக்கு பதிலளிக்க முடியாதவை. ஆனால் நமக்குத் தெரிந்தவற்றை மதிப்பிட முயற்சிப்பது, கடந்த ஒரு நாள் நிகழ்வுகளின் தாக்கங்களைக் கண்டறியும் போது எதைத் தேட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த உதவும். இஸ்ரேலின் உண்மையான நோக்கம் என்ன? பல பதிற்றாண்டுகளாக, இஸ்ரேல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைத் தன் இருப்புக்கான அச்சுறுத்தலாகவே கருதிவருகிறது. ஈரான் அணு ஆயுதம் பெறுவதில் உறுதியாக இருந்ததா அல்லது அச்சுறுத்தலாக உணர்ந்தால் விரைவாக ஒன்றைப் பெறுவதற்கான திறனை மட்டுமே விரும்பியதா என்பது ஒருபோதும் முழுமையாகத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அணுசக்தி திட்ட நடவடிக்கைகள் —உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யக்கூடிய மையவிலக்குகளை உருவாக்குவது போன்றவை — கடைசி நிமிடம்வரை ஒரே மாதிரியாக இருக்கும். அப்போது தாக்குதலால் அதைத் தடுப்பது சாத்தியமற்றதாகிவிடும். இஸ்ரேலியக் கண்ணோட்டத்தில், இஸ்ரேலியர்களைக் கொல்லும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாதக் குழுக்களை ஆதரிக்கும் மதகுருமார்களின் ஆட்சி அணு ஆயுதங்களை உருவாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்தக் காரணத்திற்காக, இஸ்ரேல் பல பதிற்றாண்டுகளாக ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதாக அச்சுறுத்தி வருகிறது. நேற்று இரவு, இஸ்ரேல் அந்த அச்சுறுத்தலை நிறைவேற்றியது. ஈரானிய அணுசக்தி வளர்ச்சியின் “உடனடி” அச்சுறுத்தலால் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் விவரித்துள்ளனர். அணு குண்டுகளை “சில நாட்களுக்குள்” தயாரித்திருக்க முடியும் என்று ஒரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இப்போதே தாக்குவதா அல்லது எதிர்காலத்தில் அணு ஆயுதம் தாங்கிய ஈரானை எதிர்கொள்வதா என்ற ஒரு தேர்வை எதிர்கொண்டதாக இஸ்ரேலின் நிலைப்பாடு உள்ளது. இந்தக் கூற்றுக்கள் எவ்வளவு உண்மை என்று நமக்கு இன்னும் தெரியவில்லை (ஒருவேளை ஒருபோதும் தெரியாமல் போகலாம்). ஆனால் நமக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கான நியாயப்படுத்தலுக்கும், அவர்கள் உண்மையில் தாக்கிய இலக்குகளுக்கும் இடையே சில முரண்பாடுகள் உள்ளன. தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள ஈரானின் நதான்ஸ் அணுசக்தி நிலையத்தின் காட்சி ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்கும் எந்த ஒரு முயற்சியும் இரண்டு இலக்குகளில் அதிக கவனம் செலுத்தும்: நதான்ஸிலும் ஃபோர்டோவிலும் உள்ள அணு செறிவூட்டல் வசதிகள். இஸ்ரேல் ஈரானிய அணு விஞ்ஞானிகளை இலக்காகக் கொண்டாலும், இயற்பியல் ஆராய்ச்சிப் பணிகள் சார்ந்த ஏற்பாடுகள் அழிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்ரேல் நதான்ஸைத் தாக்கியது, ஆனால் ஆரம்பகால நிபுணர் மதிப்பீடுகள் குறைந்த அளவிலான சேதத்தையே சுட்டிக்காட்டுகின்றன. ஃபோர்டோ ஆரம்ப சுற்றில் தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும், குறைந்தபட்சம் பகிரங்கமாக இல்லை. எனவே, உண்மையான இலக்கு அணுசக்தித் திட்டம் என்றால், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திறன்கள்மீதும் இராணுவத் தலைமைமீதும் இவ்வளவு தாக்குதல் நடத்தி, அணுசக்தி உள்கட்டமைப்பிற்கு ஒப்பீட்டளவில் குறைந்த சேதத்தை இஸ்ரேல் ஏற்படுத்தியது ஏன் ? இந்த கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதலாவது, போர் தொடரும்போது அணுசக்தி வசதிகளை இஸ்ரேல் மேலும் கடுமையாகத் தாக்கக்கூடும். ஈரானின் இராணுவத் தலைமையை – அதன் கிட்டத்தட்ட முழு விமானப் படையின் தலைமையையும் சேர்த்து – கொல்வதன் மூலம், இஸ்ரேல் ஈரானின் வான்பரப்பைப் பாதுகாக்கும் திறனையும் பதிலடி கொடுக்கும் திறனையும் பலவீனப்படுத்தியுள்ளது. இந்த முதல் தாக்குதல்கள், பின்னர் அணுசக்தி அமைப்புகளின் மீது அதிக கவனம் செலுத்தும் தாக்குதல்களுக்கு அடித்தளமாக அமையக்கூடும். அமெரிக்காவிற்கான இஸ்ரேலியத் தூதர் மைக்கேல் லீட்டர், வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில், “முழு நடவடிக்கையும் ஃபோர்டோவை அகற்றுவதன் மூலம் நிறைவு செய்யப்பட வேண்டும்” என்று கூறினார். இரண்டாவது விளக்கம் என்னவென்றால், இஸ்ரேலுக்கு இன்னும் பெரிய திட்டங்கள் உள்ளன. இது அணுசக்தி வசதிகளைக் கடுமையாகத் தாக்கும் என்பது உறுதி. ஆனால் ஈரானிய ஆட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்துவதற்கான முயற்சியிலும் இது ஈடுபடும். முக்கியத் தலைவர்களை அகற்றுவதன் மூலம், இஸ்ரேல் ஈரானிய அரசாங்கத்தின் திறனை பலவீனப்படுத்துகிறது. இஸ்ரேலின் இறுதி நம்பிக்கை என்னவென்றால், இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலின் பேரழிவுத் தாக்குதல்களைப் போலவே ஈரானிலும் ஒரு விளைவை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் திறனைக் கடுமையாகச் சேதப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் அதைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பு உருவாகும். வெளியுறவு உறவுகள் கவுன்சிலின் மத்திய கிழக்கு நிபுணர் ஸ்டீவன் குக், “ஃபாரீன் பாலிசி”யில் இவ்வாறு எழுதுகிறார்: “தாக்கப்பட்ட இலக்குகள், இஸ்ரேலின் நோக்கம் ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு சேதம் விளைவிப்பதைவிடவும் விரிவானது என்பதைத் தெளிவுபடுத்தின. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு சேதம் விளைவிப்பதில் இஸ்ரேலியர்கள் திருப்தி அடையவில்லை என்பது தெளிவாகிறது, ஆனால் ஆட்சி மாற்றத்தில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறது.” சுருக்கமாகச் சொன்னால், வரவிருக்கும் நாட்களில் இஸ்ரேல் அணுசக்தி வசதிகளைக் கடுமையாகத் தாக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அணுசக்தி அழிப்பு, ஆட்சி மாற்றம் என்பதாக இஸ்ரேலின் லட்சியங்கள் விரிவானதாக இருந்தால் நீண்ட, ஆபத்தான மோதல் நிகழ்வதற்கான சாத்தியக்கூறை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும். ஈரானால் பதிலடி கொடுக்க முடியுமா? பல ஆண்டுகளாக, மத்திய கிழக்கு ஆய்வாளர்களிடையே இஸ்ரேல் ஈரானைத் தாக்குவதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது பொதுவான நம்பிக்கையாக இருந்தது. ஈரான் பெரிய நாடு – ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளைவிட அதிக மக்கள் தொகை கொண்டது. அது இராணுவத்தில் பெரும் முதலீடு செய்துள்ளது. பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தையும், மத்திய கிழக்கைச் சுற்றியுள்ள பினாமி போராளிகளின் விரிவான வலையமைப்பையும் கொண்டுள்ளது, இவை அனைத்தும் இஸ்ரேலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த ஈரானின் ஏவுகணைத் தாக்குதல், அது குறைந்தபட்சம் சில பதிலடி கொடுக்கும் திறனைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால் எந்த அளவுக்கு அந்தத் திறன் உள்ளது? 2023, அக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் ஈரானின் பினாமி வலையமைப்பை முறையாக அழித்துவருகிறது. காசாவில் நடந்த கொடூரமான போர் ஹமாஸைத் தலைமறைவு இயக்கமாகச் செயல்படவைத்துள்ளது, இஸ்ரேலிய நகரங்கள்மீது பெரிய ராக்கெட் தாக்குதல்களை நடத்தக்கூடிய ஒரு மினி-அரசாக அல்லாமல் வெறும் கிளர்ச்சிக் குழுவைப் போல ஹமாஸ் சண்டையிடுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹிஸ்புல்லாவின் தலைமைமீது நடந்த தொடர்ச்சியான திடீர்த் தாக்குதல்களின் விளைவாக ஹிஸ்புல்லா தற்போதைய சண்டையிலிருந்து விலகி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் மத்திய கிழக்கைச் சுற்றியுள்ள ஈரானிய இலக்குகளை மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளது. இதில் 2024 அக்டோபரில் ஈரானின் வான் பாதுகாப்புமீதான பெரிய தாக்குதலும் அடங்கும். கடந்த ஆண்டு ஏப்ரலில் டமாஸ்கஸில் உள்ள அதன் தூதரகம்மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலை இலக்காகக் கொண்ட ஈரானிய ஏவுகணை, டிரோன் தாக்குதல் கிட்டத்தட்ட எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படையில் இரண்டு சாத்தியமான விளக்கங்கள் உள்ளன. முதலாவது, ஈரான் இப்போது ஒரு காகிதப் புலி. அதன் பினாமிகளை அழிப்பதன் மூலமும் அதன் பதிலடி கொடுக்கும் திறன்களைப் பலவீனப்படுத்துவதன் மூலமும் இஸ்ரேல் ஒப்பீட்டளவில் அதிக இழப்பின்றி ஈரானைத் தாக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்ததுபோல ஈரானியர்கள் நிச்சயமாக பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் அது ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கும். இஸ்ரேலிய இலக்குகளுக்குக் குறைந்த சேதத்தை மட்டுமே ஏற்படுத்தும். இரண்டாவது விளக்கம், ஈரான் தன் பலத்தை வெளிப்படுத்தாமல் வைத்திருந்தது என்பதாகும். ஈரான் இஸ்ரேலை வெறுத்தாலும், அது முழு அளவிலான போரை தனது நலன்களுக்கு உகந்ததாகக் கருதவில்லை. இந்தக் காரணத்திற்காக, அது தனது மிகவும் பேரழிவுகரமான ஆயுதங்களையும் – யேமனில் உள்ள ஹவுதிகள் அல்லது ஈராக் போராளிகள் போன்ற அதன் மீதமுள்ள கூட்டாளிகளின் ஆயுதங்களையும் – பதற்றத்தை அதிகரிக்காமல் இருக்க ஒதுக்கிவைத்திருந்தது. இப்போது பதற்றம் வெளிப்படையாக வந்துவிட்டதால், ஈரான் தன்னை இனி கட்டுப்படுத்திக்கொள்ளாது. மேலும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பேரழிவுகரமான எதிர்வினை வரவிருக்கும் நாட்களில் நடக்கும். அத்தகைய தாக்குதல் இஸ்ரேலிய இராணுவ இலக்குகளை மட்டுமின்றி நாட்டின் நகரங்களையும் தாக்கும். ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்த முயற்சிக்கும். அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்கப் பணியாளர்களைக் கொல்லவும் வாய்ப்புள்ளது. இந்த இரண்டு காட்சிகளில் எது மிகவும் சாத்தியம் என்று நமக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இரண்டுக்கும் இடையில் நிறைய சாத்தியமான இடைவெளிகள் உள்ளன. ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக வலுவாக பதிலடி கொடுக்கிறது. ஆனால் போருக்கு முந்தைய மதிப்பீடுகள் அஞ்சியதைப் போல அமெரிக்கா அல்லது போக்குவரத்துக் கப்பல்களுக்கு எதிராக ஆக்ரோஷமான தாக்குதல் ஏதும் இல்லை. ஆனால் மோதலின் எல்லை, ஈரான் உண்மையில் பலவீனமாக இருக்கிறதா அல்லது அப்படித் தோன்றுகிறதா என்பதைப் பொறுத்தே பெரிய அளவில் தீர்மானிக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இந்த மோதலுக்குப் பிறகு ஈரான் அணு குண்டு பற்றி எப்படிச் சிந்திக்கும்? தொழில்நுட்ப ரீதியாக, ஒற்றைத் தாக்குதலில் ஒரு நாடு அணு குண்டு தயாரிப்பதைத் நிரந்தரமாகத் தடுப்பது சாத்தியமற்றது. இலக்கு வைக்கப்பட்ட அரசாங்கம் ஒரு ஆயுதத்தைப் பெற உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால், அழிக்கப்பட்ட எதுவும் மீண்டும் கட்டியெழுப்பப்படலாம். இஸ்ரேல், வன்முறையால் மட்டும், குண்டு தயாரிக்கும் ஈரானின் விருப்பத்தை அகற்ற முடியாது. எனவே இஸ்ரேல் நதான்ஸுக்கும் ஃபோர்டோவுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினாலும், எதிர்காலத்தில் மற்றொரு தாக்குதலைத் தொடங்காமல் ஈரானியர்கள் அதை சரிசெய்வதைத் தடுக்க முடியாது. மேலும், வெற்றிகரமான இஸ்ரேலியத் தாக்குதல் அணுசக்தியைப் பெறுவதில் ஈரானின் ஆர்வத்தை வலுப்படுத்தும். அதாவது குண்டுகள் விழுவது நின்றவுடன் ஈரான் அணுசக்தி மறுசீரமைப்புக்காக பெரும் வளங்களில் முதலீடு செய்யும். இந்தத் தர்க்கத்தின்படி, இஸ்ரேலியத் தாக்குதல் இஸ்ரேலை முடிவற்ற போருக்கு இட்டுச் செல்கிறது. அதாவது ஈரான் தன் அணுசக்தித் திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பாமல் இருக்க வேண்டுமானால் இஸ்ரேல் ஈரான்மீது குறிப்பிட்ட இடைவெளியில் குண்டுகளை வீசிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த வாதத்தைச் சற்றே ஆழமாக ஆராய்ந்துபார்க்கலாம். குறைந்தது மூன்று சாத்தியமான விளைவுகளை அலசலாம். முதலாவது, இது சரியானது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு உண்மையான சேதத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் இந்தச் செயல்பாட்டில், எதிர்கால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தடுக்க ஒரு குண்டை உருவாக்க வேண்டும் என்று ஈரானை நம்ப வைக்கிறது. 1981 ஆம் ஆண்டில் ஈராக்கின் ஒசிராக் அணுசக்திக் கட்டமைப்பின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இதுவே நடந்தது. இது சதாம் உசேனின் அணுசக்தி வளர்ச்சியை இரட்டிப்பாக்கும் முடிவுக்குக் காரணமானது (இந்தத் திட்டம் 1992 வளைகுடாப் போரால் மட்டுமே உண்மையாகத் தடைபட்டது; அதைத் தொடர்ந்து அணுசக்தி ஆய்வுகள் நடந்தன). இரண்டாவது சாத்தியக்கூறு என்னவென்றால், இஸ்ரேலின் தாக்குதல்கள் அதன் விமர்சகர்கள் நினைப்பதைவிடவும் மிகவும் அதற்குப் பயனளிப்பதாக இருக்கலாம். ஒருவேளை, ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்தும் சேதம் மிக அதிகமாக இருப்பதால், அவற்றை மீண்டும் கட்டியெழுப்புவது ஆபத்தானது என்றும் செலவு அதிகம் எனவும் ஈரானியர்கள் கருதலாம். அல்லது, ஆட்சி மாற்றத்திற்கான முயற்சி வெற்றிபெற்று, ஈரானில் புதிதாக வரும் அரசு அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்காமல், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண முடிவு செய்யலாம். மூன்றாவது சாத்தியக்கூறு: போரின்போது ஈரானின் அணுசக்தி வசதிகள் பொதுவாக எதிர்பார்க்கப்படுவதைவிட மிகக் குறைவான சேதத்தையே சந்திக்கின்றன. இஸ்ரேல் தடுப்பதற்குத் தயாராக இருக்கும் முன்பே ஈரான் ஒரு குண்டை உருவாக்க விரைந்து செயல்படுகிறது. இஸ்ரேல் இதுவரை பெற்ற வெற்றிகளைக் கருத்தில் கொண்டால் இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் நிபுணர் மதிப்பீடுகள், ஈரான் தனது ஆயுதத் திட்டத்தைப் பாதுகாப்பதில் வெளிப்படையாகத் தோன்றுவதைவிட சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன. மத்திய கிழக்கு நிறுவனத்தின் கொள்கை துணைத் தலைவர் கென் பொல்லாக், “ஃபாரீன் அஃபேர்ஸ்” இதழில் எழுதுகிறார்: “ஈரானிடம் ஏற்கனவே பல அணு ஆயுதங்களை உருவாக்கப் போதுமான அளவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது. இது கொள்கலன்களில் அடைக்கப்பட்டு மூன்று வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் நடந்துகொண்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களில் இஸ்ரேலால் அவை அனைத்தையும் கைப்பற்ற முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலிய மற்றும் பிற மேற்கத்திய உளவுத்துறைகள் புதிய, இரகசிய ஈரானிய அணுசக்தி தளங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கலாம். அவை அடையாளம் காணப்பட்டாலும் அந்தத் தளங்களை அழிப்பதிலும் சிக்கல் இருக்கலாம், ஏனெனில் ஈரான் தனது தற்போதைய வசதிகளின் அளவைவிட அவற்றை இன்னும் பலப்படுத்த வாய்ப்புள்ளது.” எவ்வளவு விரைவாக என்பது சேதத்தின் அளவைப் பொறுத்தது. ஆனால் ஐரோப்பிய கொள்கை பகுப்பாய்வு சிந்தனை மையத்தின் ஃபேபியன் ஹாஃப்மேன், “கணிசமானவை தப்பித்தால்” அது “ஒப்பீட்டளவில் விரைவாக ஆயுத-தர செறிவூட்டல் அளவை அடையலாம்” என்று கூறுகிறார். இந்த மூன்று சாத்தியக்கூறுகளில் எது நடக்க வாய்ப்புள்ளது என்று நமக்குத் தெரியவில்லை. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியக்கூறுக்கும் ஈரான் மிக விரைவில் அணு குண்டை உருவாக்கும் சாத்தியக்கூறுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. எனவே, தற்போதைய மோதல்களின் தாக்கங்களை இப்போதே உறுதியுடன் கணிப்பது சாத்தியமல்ல என்பதே தெளிவாக இருக்கிறது. நன்றி: வோக்ஸ் இணைய தளம் https://minnambalam.com/israel-iran-war-three-important-questions/
  8. துரோகிகள் Vs தியாகிகள்! June 15, 2025 — கருணாகரன் — தமிழரசுக் கட்சி ஆரம்பித்து வைத்த தியாகி – துரோகி ஆட்டத்தை, தமிழரசுக் கட்சியே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியின் ஆதரவோடு உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியதோடு ஈ.பி.டி.பியும் துரோகிப் பட்டியலில் இருந்தும் அரச ஒத்தோடிகள் என்ற பழிப்பெயரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட புனிதமளிப்பு நடைபெற்றுள்ளது. இனி, ஈ.பி.டி.பியை தமிழரசுக் கட்சியினர் துரோகிப் பட்டியலில் சேர்க்க முடியாது. அவர்களும் தமிழ்தேசிய அரசியலில் சங்கமித்துள்ளனர். இதுவரையிலும் ஈ.பி.டி.பியை துரோகி என்று சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அந்த வார்த்தைகளைச் சொன்னவர்களுடைய முகங்களிலேயே காறி உமிழ்ந்துள்ளன. அல்லது அவ்வாறு ஈ.பி.டி.பியைத் துரோகப்பட்டியலில் இன்னும் உள்ளதாகக் கருதும் தமிழரசுக் கட்சியினர், அதிலிருந்து வெளியேறி, தாங்கள் வலியுறுத்தும் புனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டும். தமது கண்டனங்களைத் தமிழரசுக் கட்சியின் தலைமையை நோக்கித் தெரிவிக்க வேண்டும். ஆனால், அப்படியெல்லாம் நடக்கக் கூடிய வாய்ப்பு சுத்தமாக இல்லை. யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழரசுக் கட்சி, ஈ.பி.டி.பியின் ஆதரவோடு அதிகார பூர்வமாகப் பதவியேற்று ஒரு முழுநாள் ஆகிவிட்டது. தம்மைச் சுத்தவாளிகள், விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியினர் என்று சொல்லிக் கொள்ளும் – காட்டிக் கொள்ளும் சிவஞானம் சிறிதரன் அணி கூட கனத்த மௌனத்தையே கொண்டுள்ளது. அந்த அணியைத் தவிர, வேறு எவரும் தமிழரசுக் கட்சிக்குள் தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்வதில்லை. நடிப்பில் உச்சத்தைத் தொடுவதுமில்லை. ஆகவே அவர்களும் ஈ.பி.டி.பியை புனிதமாக்குவதற்குச் சம்மதமாகியுள்ளனர். அல்லது அவர்களும் தமிழரின் அரசியலில் துரோகியாகியுள்ளனர். இதொன்றும் புதியதோ புதுமையானதோ இல்லை. நடிப்புச் சுதேசிகள் என்று பாரதியார் தன்னுடைய கவிதையில் பாடியதைப்போலவே இவர்கள் தங்களுடைய அரசியல் வாழ்வை முன்னெடுத்து வந்திருக்கின்றனர், வருகின்றனர். அதனுடைய வெளிப்பாட்டுக் காட்சிகளே இவையாகும். துரோகி அரசியலின் தொடக்கமும் வரலாறும்: 1950 களில் இலங்கை அரசியலில் செல்வாக்கோடு இருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த நல்லையா (மாஸ்டர்) அவர்களை வீழ்த்துவதற்காக எஸ். ஜே. வி.செல்வநாயகம் தூக்கியதுதான் இந்தத் துரோகி என்ற ஆயுதம். அதற்குப் பிறகு அமிர்தலிங்கம் அதைத் தூக்கி யாழ்ப்பாணத்தில் துரையப்பாவைத் துரோகியாக்கித் தொலைத்தார். பிறகு அமிர்தலிங்கமே துரோகியாக்கப்பட்டு புலிகளால் கொல்லப்பட்டார். இப்படியே நீண்ட துரோகிப் பட்டியல் ஈழ விடுதலை இயக்கங்களையும் விட்டு வைக்கவில்லை. இடதுசாரிகளையும் பலியெடுத்தது. சுருக்கமாகச் சொன்னால், ஈழ அரசியல் அரங்கிலும் அதற்கு வெளியிலும் பல ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பலி கொண்டது. அதேவேளை முன்னர் துரோகி என்று அடையாளப்படுத்தி, ஒதுக்கு அரசியலை (புறக்கணிப்பு அரசியல் அல்லது விலக்க அரசியல்) மேற்கொண்டவர்களே, பின்னர் தாம் ஒதுக்கிய, புறக்கணித்த தரப்பைப் புனிதத் தண்ணீர் தெளித்து, அரவணைத்த சங்கதிகளும் இந்த வரலாற்றில் உண்டு. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைத் துரோகியாக்கி, தன்னைத் தியாகியாக்கித் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ஆதிக்கத்தைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, 1970 களின் முற்பகுதியில் காங்கிரசுடன் கூட்டு வைத்தது. அதுவே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். தமிழரசுக் கட்சி, தன்னுடைய அரசியல் இயலாமையை மறைத்துக் கொள்வதற்காகக் காங்கிரசுடன் சமரசமாகிக் கூட்டுச்சேர்ந்தது. அதோடு தன்னுடைய செல்வாக்கையும் தொடர்ந்தது. இப்படித்தான் 1980 களின் நடுப்பகுதியில் சக விடுதலை இயக்கங்களைத் துரோகிகளாக்கி ஒதுக்கிய விடுதலைப் புலிகள், 2000 த்தின் முற்பகுதியில் சமரசமாகி அவற்றைச் சேர்த்துக் கொண்டனர். அதுவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகியது. இதை நாம் திரும்பத்திரும்பச் சொல்லியே தீர வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் அரசியற் பரப்பில் மூத்தோர் தொடக்கம் இளையோர் வரையில் பெருந்திரளானோர் இந்தத் துரோகி – தியாகி விளையாட்டில் தொடர்ச்சியாகவே ஈடுபட்டு வருகிறார்கள். வரலாறு எத்தனை தடவை மகத்தான உண்மைகளையும் யதார்த்த நிலைகளையும் எடுத்துச் சொன்னாலும், தன்னை நிரூபித்துக் காட்டினாலும் இவர்கள் அதிலிருந்து எதையும் படித்துக் கொள்வதேயில்லை. அதற்குத் தயாராகுவதும் இல்லை. அதனால் இந்த வரலாற்று உண்மைகளை திரும்பத்திரும்ப, திரும்பத்திரும்ப எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும். புத்திசாலிகளுக்கு ஒரு சொல். மூடர்களுக்கு ஆயிரம் வார்த்தைகள் என்பார்கள் அல்லவா! உலகில் இந்தளவுக்குத் துரோகி என்ற சொல்லோடு மிக நீண்ட காலம் – ஏறக்குறைய 75 ஆண்டுகள் – சீரழிந்த இனமோ சமூகமோ வேறு இருந்திருக்க முடியாது. அரசியலில் மட்டுமல்ல, கலை இலக்கியத்திலும் ஊடகத்துறையிலும் இந்தத் ‘துரோகி‘ முத்திரை குத்தும் போக்கு நீடித்தது. ஆக இந்த முட்டாள்தனம் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும் செழித்துப் பரந்து வளர்ந்துள்ளது. இதற்குக் காரணம்: தங்களையும் விட திறனாளர்களாகவும் ஆற்றல்களாகவும் விவேகத்தோடும் துணிவோடும் காரியமாற்றியவர்களை எதிர்கொள்ள முடியாதபோது “தியாகி” என்ற ஆயுதத்தைத் தூக்கி, எதிர்த் தரப்பினரைத் தாக்கினார்கள். அதை எந்தக் கேள்வியுமின்றி, எத்தகைய விமர்சனமும் இல்லாமல் முழுத் தமிழ்ச்சமூகமும் கொண்டாடியது. விலக்குகள் மிகச் சொற்பமே. மறுவளத்தில் தங்களுடைய தவறுகளையும் பலவீனங்களையும் இயலாமைகளையும் மறைத்துத் தற்காத்துக் கொள்வதற்குத் “தியாகி” என்ற கேடயத்தைப் பயன்படுத்தித் தம்மைத் தற்காத்துக் கொண்டனர். கூடவே ரகசியமாக அரசுடன் கூட்டு வைத்துக் கொள்வது தவறல்ல என்றும். ஆனால் பகிரங்கத் தளத்தில் அப்படிச் செய்வது மாபெரும் குற்றச் செயல் என்றும் மக்களுக்குக் காட்டப்பட்டது. துயரம் என்னவென்றால், இதையிட்டுப் புத்திஜீவிகளும் பெரிய அளவில் மறுத்துப் பேசியதில்லை. பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கூட இது குறித்துத் துணிச்சலாக எதையும் சொன்னதில்லை. பதிலாக அனைவரும் இதையே ஒப்பித்துக் கொண்டனர். என்பதால்தான் தமிழ்ச்சமூகத்தில் இந்தளவு மிக நீண்ட காலத்தை (முக்கால் நூற்றாண்டை) “துரோகி – தியாகி” விளையாட்டில் சீரழித்துக் கொள்ள வேண்டியிருந்தது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது துரோகி – தியாகி விளையாட்டில் பலியாகுவது உயிர்களும் ஜனநாயகமும் என்பதை. ஈழத் தமிழ் அரசியலில் இது நிரூபணம். ஈழத் தமிழ் அரசியலின் பின்னடைவுக்கும் தோல்விக்கும் காரணமும் இதுவே. இந்த நோய், பல ஆயிரம் ஆற்றலர்கள் பலரைப் பலியெடுத்த்தோடு, சிறந்த – பொருத்தப்பாடுடைய கருத்துகளுக்கும் இடமளிக்காமல் கொன்று வெட்டை வெளியாக்கியது. வரலாற்றுக் காரணம்: தமிழ்க் கலை, இலக்கிய வரலாறும் அரசியல் வரலாறும் துரோகி – தியாகி விளையாட்டுக்கு (நோய்க்கு) இடமளித்து வந்துள்ளது. பலருக்கும் தெரிந்த உதாரணங்கள். 1. வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றில் (திரைப்படத்திலும்தான்) எட்டப்பன் பாத்திரம். எட்டப்பன் காட்டிக் கொடுத்தபடியால்தான் வெள்ளையரிடம் கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டார் என்ற புனைவு. 2. அதை அடியொற்றி, பண்டாரவன்னியன் கதை. காக்கை வன்னியனால்தான் பண்டாரவன்னியனை வெள்ளையர்கள் இலகுவாகத் தோற்கடிக்க முடிந்தது என்ற வரலாற்றுக் கட்டமைப்பு. தமிழர்களுடைய வீரத்தை உயர்த்திக் காட்டுவதற்கு (அந்நியருடைய போர்த்திறனையும் சாணக்கியத்தையும் தந்திரோபாயத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் மறைத்துக் கொள்வதற்கு) இட்டுக் கட்டப்பட்ட புனைவுகளே இத்தகைய கட்டுக் கதைகளும் மிகுவாக்கமுமாகும். இதை நவீன அரசியல் சமூகமும் தனக்குள் ருசியாக விருப்போடு எடுத்துக் கொண்டது. இதற்காக அது இழந்ததும் பலி கொடுத்ததும் ஏராளம். இன்னும் இந்த நோய் முற்றாகத் தீரவில்லை. தமிழரசுக் கட்சி தன்னுடைய இயலாமைக் கட்டத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, ஏனைய தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும்தான். தற்போதைய நிலவரம்: கடந்த பாராளுமன்றத் தேர்தல், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்றவற்றில் ஏனைய தமிழ்க்கட்சிகளை விட கூடுதலான இடங்களைத் தமிழரசுக் கட்சி பெற்றாலும் அது பலவீனமான நிலையிலேயே உள்ளது. தமிழ்க்கட்சிகளில் பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சியைச் சிலர் அடையாளப்படுத்தினாலும் உள்ளே அது கோறை விழுந்தே உள்ளது. மட்டுமல்ல, தமிழரசுக் கட்சி எதிர் ஏனைய தமிழ்க்கட்சிகள் என்ற நிலையே காணப்படுகிறது. கூடவே தனக்குள்ளேயே அது கடுமையான உள்முரண்பாடுகளையும் பலமான இடைவெளிகளையும் கொண்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளில் தமிழரசுக் கட்சி சிக்குண்டிருப்பதை நினைவிற் கொள்ளலாம். ஆகவே தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் தலைமைச் சக்தியாக வளர்த்துக் கொள்வதற்கும் தமிழரசுக் கட்சி கடுமையாக முயற்சிக்கிறது. அது சந்திக்கும் சவால்களுக்கு ஏற்ற அளவில் அதனுடைய முயற்சிகளும் தீவிரமாக – எல்லை கடந்ததாக உள்ளன. தமிழரசுக் கட்சியின் தலைமைச் சக்தியாக சுமந்திரன் இருப்பதால், காய்கள் துரிதமாக நகர்த்தப்படுகின்றன. தியாகி – துரோகி என்ற அடையாளப்படுத்தலுக்கு சுமந்திரன் அஞ்சிப் பணிகின்றவர் அல்ல. மட்டுமல்ல, சம்மந்தன் இருந்த காலத்திலேயே தமிழரசுக் கட்சிக்கும் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் துரோகி அடையாளம் வரத் தொடங்கியிருந்தது. இதனால்தான் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் அணி வெளியேறியது. சம்மந்தனின் இறுதிக் காலம் கூட ஏறக்குறைய துரோகி என்ற அடையாளத்தோடுதான் கழிந்தது. ஒருசாரார் அவரைத் துரோகியாகக் கடுமையாகச் சாடினர். இது அவருடைய மரண நிகழ்விலும் எதிரொலித்தது. பின்னர் மாவை சேனாதிராஜாவின் மரண நிகழ்விலும் தியாகி – துரோகி விளையாட்டுகள் நீடித்தன. அப்போதும் தியாகிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கும் தமிழரசுக் கட்சியின் சிறிதரனின் அணி கள்ள மௌனமே காத்தது. சம்மந்தனை இறுதிவரையிலும் தலைவராக – தலைமைச் சக்தியாகவே ஏற்றுக் கொண்டது இந்த அணி. இது சுமந்திரனின் காலம். ஆகவே அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகத் தமிழரசுக் கட்சியைக் கொண்டு வந்துள்ளார். மறுபக்கத்தில் தம்மைத் தியாகப் பரப்பு என்று சொல்லிக் கொண்ட கஜேந்திரகுமார் அணியும் (தமிழ்த் தேசியப் பேரவையும்) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கூட்டு வைத்துள்ளது. அதில் சமத்துவக் கட்சியின் முருகேசு சந்திரகுமாரும் உள்ளார். ஆக மிஞ்சியிருப்பது, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள்தான். அவையும் ஒருநாள் புனிதப்படுத்தப்படும். இன்னும் பிள்ளையான் அணி மாத்திரந்தான் துரோகி பட்டியலில் தொடருகின்றனர். அதாவது அவர்கள் கிழக்கு என்ற காரணத்தால் இன்னமும் தீண்டத்தகாதவர்களாக வைக்கப்பட்டுள்ளார்களோ?” அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. சூழ்நிலைகளே எதையும் தீர்மானிக்கின்றன என்று சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். கண்கெட்ட பின் சூரியோதயம். இதெல்லாவற்றுக்கும் ஒரு காரணம் NPP ஆகும். NPP யின் அரசியல் விளைவு, தமிழ் அரசியற் சூழலில் தியாகி – துரோகி என்ற அடையாளத்துக்கு முடிவைக் கொண்டு வந்துள்ளது. இப்பொழுது அனைவரும் துரோகிகள். அல்லது தியாகிகள். https://arangamnews.com/?p=12089
  9. எனது பெருமதிப்புக்குரிய ஆசானுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். கணீர் என்ற குரலுடன், முகத்தில் புன்னகையும், மகிழ்வும் ததும்பக் கற்பித்த நாத்திகரான பண்டிதர் பரந்தாமன் ஆசிரியரிடம் சைவ சமய பாடம் கற்கும் பாக்கியம் எனக்கும் இருந்தது. சைவ சமயத்தை வெறும் பக்தி மதமாகக் பார்க்காமல் மெய்யியலாகக் கற்பித்து தத்துவம் மேல் விருப்பை ஊட்டியவர். —-—- “பிறமொழிக் கலப்பை அதீத மொழிப்பற்றுக் கொண்டு எதிர்த்த பண்டிதர் வீ.பரந்தாமன்” -வீரகேசரி- 08.12.2024 கொழும்பில் இருந்து வெளிவந்திருக்கும் வீரகேசரி வாரவெளியீட்டில்(ஞாயிற்றுக் கிழமை) பதிவேற்றம் பெற்றிருக்கும் ஆளுமை……. ஈழத்துக் கலை,இலக்கியப் பரப்பில் தமிழ்மொழி வாழ, இன உணர்வு மேலெழ அரும்பாடுபட்டு தற்போது உடலால்,உளத்தால் நலிவுற்றிருக்கும் பேரன்புக்குரிய மிகப் பெரும் ஆளுமை பண்டிதர் வீ.பரந்தாமன் ஐயா அவர்களின் பார்வையோடு இணைவோம்…… அன்போடு நோக்குகிறோம்:- தாயகக் கவிதாயினி பிறேமா எழில் அவர்களை. அன்புமிகு நன்றி திரு.சி.சிறிகஜன் அவர்கள், பிரதம ஆசிரியர், வீரகேசரி, மற்றும் நிர்வாகக் குழுமத்தினர்க்கும். யாழ்.உரும்பையூர் து.திலக்(கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து எழுதும்… வாரம் ஒரு படைப்பாளி… *********************** (பார்வை - 20) தாயக மண்ணின் முதுபெரும் கலை இலக்கியப் பேராளரும் கல்விசார் ஆசிரியரும் பாலபண்டிதர், பண்டிதர், மொழி ஆய்வாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், தாயக தேசப்பற்றாளர் என இப் பேராளுமைகளைக் கொண்ட பலராலும் நன்கு அறியப்பட்டு விருப்பத்தோடு அணுகக்கூடிய பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் பற்றிய பார்வையோடு இவ்வாரம் இணைகிறோம்… பழம்பெரும் பாரம்பரியத்தையும், புராதன மொழி, சமயம், கலாச்சார மரபு, பண்பாட்டு விழுமியங்களையும் தனித்துவமாகக் கொண்டு புலவர்கள் வாழ்ந்து நிறைந்த யாழ் வடமராட்சி பிரதேசத்தின் புலோலி தெற்கு எனும் சிற்றூரில் வீரகத்திப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இணையருக்கு 1942ஆம் ஆண்டு பண்டிதர் பரந்தாமன் அவர்கள் பிறந்தார். ஈழ, உலக தமிழ் இலக்கியப் பரப்பு இவரைப் புறந்தள்ளியதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பட்டிதொட்டியெங்கும், உலகத்தின் மூலை முடுக்கெங்கும், தமிழர் வாழ்கின்ற தேசங்களெங்கும் இவரது வரிகளில் அமைந்த பாடல்கள் இவரது தனித்துவத்தை சாட்சியாக இன்று கட்டியங்கூறி நிற்கிறது. இன்றுமட்டுமல்லாது என்றென்றும் இவர் வரிகளும் ஆளுமைகளும் பேசப்படும். இவர் நவீனத்தைக் கிளறி எறிந்து மரபுரிமையோடு பின்னிப் பிணைந்தவையாக இவரது படைப்புகள் அமைவதோடு மக்களை அதற்குள் இலகுவாக உள்ளீர்த்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. சிறுபராயத்திலேயே தன் தாய்மொழிமீது தீராத காதல் கொண்டு தமிழ்ப் பொத்தகங்களை தேடி நாடி வாங்கி தானாகவே கற்று அறிந்துகொண்டு மனப்பாடம் செய்தலையும் தனது விருப்போடு ஒன்றாக்கிக்கொண்டார். பண்டிதர் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை யா/புற்றளை பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யா/கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். தமிழ் அறிஞர் கந்த முருகேசனாரிடம் குருகுல முறையில் மேலதிகமாக தமிழ்க் கல்வியைக் கற்று பாலபண்ணிதர், பண்டிதர் கல்வியை (ஆசிரிய திராவிட பா.ஜா அபிவிருத்திச் சங்கத்தில் நிறைவு செய்தார். குடும்பம் வறுமையில் வாடிய போதும் தன் தாய்மொழி மீது கொண்ட அதீத தேடலையும் விருப்பத்தையும் கைவிடவில்லை. அதன் பயனாக தனது மேற்படிப்புவரை கல்விகற்று ஆசிரியப் பணியையும் ஆரம்பித்தார். கற்பித்தல் காலத்தில் இலகு முறையில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் இவருக்கு “நல்லாசிரியர்” விருது கிடைக்கப்பெற்றதும் சிறப்பம்சமாகும். இவரது ஆசிரியப் பணி பற்றி நோக்குகையில் * 1970ஆம் ஆண்டு மாணவ ஆசிரியராக * 1973 - 1974 வரை திருகோணமலை இந்துக்கல்லுரியில் பயிற்றப்பட்ட ஆசிரியராக * பதினெரு (11) ஆண்டுகள் யா/புற்றளை மகாவித்துயாலயத்தில் * யா/உடுத்துறை மகா வித்தியாலயம் * யா/மணற்காடு தமிழ்க் கலவன் பாடசாலை * 1983 - 1996 வரை யா/பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி * 1996 - 2002 வரை மு/கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் * 2005 - 2008 வரை கிளி/தமிழ்ப் பயிற்சிக் கல்லூரி ஆகிய கல்விச் சாலைகளில் தன் கற்பித்தல் திறனை பெரிதும் வெளிக்காட்டிநின்ற பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் தமிழ்மொழி மீதும், ஈழதேசத்தின் மீதும், தலைமைத்துவம் மீதும், களச் செயற்பாட்டாளர்கள் மீதும் தீராத பற்றுக்கொண்டு தனதுவீடு முதலான தன்பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்களைச் சூட்டி மாணவர்களுக்கும், களச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்ப்பற்றை ஊட்டிக் கற்பித்தார். தமிழ் இலக்கண இலக்கியத்தை இலகுவாக இனிமையாகக் கற்பிப்பதில் வல்லவர். “தமிழைப் பழித்தால் தாய் தடுத்தாலும் விடேன்" என்று கவிஞர் பாரதிதாசன் கூற, பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் ஒருபடி மேலே சென்று, "தமிழ்மொழியைப் பழித்துரைத்தால் எம்மையீன்ற தாயெனினும் அன்னாளைக் கொல்ல வேண்டும்" என முழக்கமிட்டார். இவரின் மொழியாற்றலால் கவரப்பட்ட தேசத்தின் தலைமைத்துவம் களச் செயற்பாட்டாளர்களுக்கு தமிழ்மொழி கற்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தார். அன்றைய காலத்தில் போக்குவரத்திற்காக தன் பணி நிமிர்த்தம் தனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேணும் என்று தேசத் தலைமைக்கு ஒரு வேண்டுகையைக் கவிதை வடிவில் எழுதினார். அவ்வரிகளாவன, "கொந்துமணி தேர்வேண்டேன் கோமகனே உன்னிடத்தில் கந்துகடா களிறும் யான் வேண்டேன் முன் நீ அழைத்தால் வந்துசெல்ல வளமாக மனமகிழ்ந்தே ஒரு சிறிய உந்துருளி தந்துதவ வல்லையோ உடன்பிறப்பே" என வரிகளைக் கோர்த்தனுப்பினார் பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள். உரியவர் கரம் கிடைத்ததும் உடனே படித்து மெய்சிலிர்த்தார். உள்ளத்தில் இருந்தவற்றை எழுத்துவடிவாய் வேண்டுகை விடுத்த பண்டிதரின் உரிய வகைத் தேவை அறிந்து அவ்வேண்டுகையை சிரமேற்று அவருக்கான உந்துருளியை வழங்கியதோடு, முதன்முதலாக மோட்டார் சைக்கிள்( motor bike) என்ற வாகனத்துக்கான தூய தமிழ்ச்சொல்லான 'உந்துருளி' என்ற சொல் பண்டிதரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இவருடைய புலமைக்குச் சான்று. இவர் தமிழின எழுச்சி, மனங்கள் மாற்றங்காணும் வகையிலான எழுச்சி, மொழியினுடைய வளர்ச்சி நிலை என்ற கட்டமைப்புக்குள் நின்று இலக்கியங்களைப் படைத்தவராவார். இவருடைய தாயகப் பாடல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனதில் இன உணர்வையும் மொழிப்பற்றையும் தேசப்பற்றையும் பெரிதும் விதைத்தது எனலாம். இவர் எழுதிய பாடல்கள் பல ஒலி நாடாக்களில் பதிவாக்கம் பெற்றுநிற்கிறது அவற்றுள் சில… 01. மானம் ஒன்றே வாழ்வெனக்கூறி.. 02. போடு போடு வீர நடைபோடு... 03. கோணமலை எங்கள் ஏணைமலை... 04. நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள்... 05. தம்பிகளே அன்புத் தங்கைகளே கொஞ்சம் நில்லுங்கள்.. 06.நிலவற்ற வானத்தில் வெள்ளி சிரிக்கும்…. இப் பாடல்கள் எக் காலத்திலும் மனதிற்கு இனிமையையும் தேசத்தின் பெருமையையும் இனமான உணர்வுகளையும் பறைசாற்றி நிற்கும் சான்றுகளாகும். இதனை வரியாக்கிய அவரது கரங்களுக்கும் சிந்தனா சக்திக்கும் ஈழதேசம் சார்பாக நன்றியுணர்வைக் காணிக்கையாக்குவதோடு இவர் இலக்கியப் பெருநிலத்தில் விதையாகத் தூவிய நூல்களாவன… 01. மனிதரும் கடவுளும் - 1968 02. தமிழ் 9 இன் பயிற்சி விடைகள் - 1975,1986 03. தமிழ்மலர் 10 இன் பயிற்சி விடைகள் - 1986 04.புதியதோர் புறம் (ஒலிநாடா) - 1990 05.தமிழ் நடந்த தடங்கள்( கவிதை) - 1995 06. கெரிலாப்போர் விரகுகள் - 1996 07. பண்டைக்குமரியும் பழங்குடித் தமிழரும் - 2001 08. திருக்குறளில் செந்தமிழாட்சி - 2005 09. வேரடிவழித் தமிழ்ச் சொற்பிறப்பியல் சிற்றகரமுதலி -2004 10. தமிழ்ப்பெயர் கையேடு மக்கட்பெயர் 46000 11. அருகிவரும் பழந்தமிழ்ப் பேச்சுவழக்கு சொற்பிறப்பியல் அகராதி 'அ' மட்டும். -2008 12. தமிழர் உறவுமுறைச் சொல்வழக்கு அகராதி -2016 இவ்வாறான அரிய நூல்களை தமிழுக்கும் அதன் நுகர்வோருக்கும் அள்ளியள்ளி படையல் செய்திருக்கும் இப் பண்டிதர் காலத்திருக்கு தந்திருப்பது அளப்பரிய கனதியாகும். அதுமட்டுமன்றி பெண்ணடிமை, பண்பாட்டுச்சிதைவுகள் , குடும்பவன்முறை போன்ற விழிப்புணர்வுசார் நாடகங்களையும் எழுதி ஆரம்பநிலை களச்செயற்பாட்டாளர்களுக்கு பயிற்றுவித்து அரங்கேற்றி பெரு வரவேற்பைப்பெற்ற அரங்காற்றுகைகளாக * அறியாமையின் விடிவு * வாழவிடுங்கள் * ஒற்றைச்சிலம்பு * காடுகாத்த காவலன் * வீழ்ந்த யாழ்ப்பாணம். இவ்வாறான பல்வேறுபட்ட கலை வடிவங்களை மொழி பிறழாது தாய்மொழியின்பால் நின்று படைப்பியக்கம் செய்தது வரலாற்று முக்கியத்துவம்பெற்று நிற்கிறது. பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்களுடைய கவிதைகளை நோக்கினால் சீர்திருத்த கருத்துகள் நிறைந்த சந்தங்கள், இயைபுகள் நிறைந்த வரிகளாகவே அமையும். இவருடைய “தமிழ் நடந்த தடங்கள்” என்ற கவிதையில்… "கடவுள் என்று வணங்குவர் செதுக்கிய கல்லை கனிச்சிலை கொள்வதற்கு ஏன் மனமில்லை மடமைக்கு இதைவிட வேறென்ன எல்லை --கெட்ட ஆடவர்க்கு போடுங்கள் மாடுண்ணும் புல்லை" இவ்வாறாக வாசிக்கும்போதே எல்லையற்ற ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்ற இப் பண்டிதர் சமூகத்துள் புரையோடிப் போயுள்ள சீர்வரிசைக் கொடுமையை கனகட்சிதமாக சாடி நிற்கிறார். இவ்வாறாக பல விடயப் பரப்புளை உள்ளடக்கிய கவிதைகளை தனது படைப்புகளில் ஆழமாகவும் அழகாகவும் வடித்துள்ளார். பண்டிதர் அவர்கள் தனது பன்முக ஆளுமைகளுக்காகப் பல விருதுகளும் சான்றுகளும் பெற்று மாண்பேற்றப்பட்டார். * நல்லாசிரியர்விருது * இலக்கியதுறை கலைப்பரிதி விருது ( வடமராட்சி வடக்கு கலாசாரபேரவை) * இயல்துறை கலைவாரிதி (வடமராட்சி கல்விவலயம்) * தமிழ்மாமணி விருது(அகில இலங்கை இளங்கோ கழகம்) * பேராளுமை விருது(வெண்மேரி அறக்கட்டளை) பன்முகத்தன்மை ஆளுமைக்கான விருது. மேற்குறிப்பிட்ட விருதுகள் மதிப்பளித்து நின்றாலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் உலக இலக்கியப் பரப்பிலும் பண்டிதர் வீ.பரந்தாமன் என்றாலே தமிழின் மாமேதை என்கின்ற தனித்துவ அடையாளம் என்றும் அவரை அலங்கரித்து நிற்கிறது. இது பெறுதற்கரிய விருதாகும். சமூகப் பரப்பிற்குள், வாழ்வியல் முறைமைகளுக்குள் பார்த்தீனியச் செடியைப்போல் ஆங்காங்கே பற்றிப் படர்ந்திருக்கும் சமூகப் பிறழ்வுமிக்க செயற்பாடுகளை தன் தாய்மொழியை ஆயுதமாகக் கொண்டு சீர்செய்ய நினைத்த பண்டிதர் அவர்கள் தனது முதலாவது காகிதப் பிரசவமாக “கடவுளும் மனிதனும்” என்ற தலைப்புத்தாங்கி வெளிவந்து அவரது கொள்கையைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. தாய்மொழியையே தெய்வீகமாகக் கொண்டு இன்பத் தமிழில் மட்டுமே இறையின்பம் காண்பவர் பண்டிதர் வீ.பரந்தாமன் ஆவார். பேச்சுவழக்கிலோ எழுத்துமுறையிலோ பிறமொழிக் கலப்பை அதீத மொழிப் பற்றுடன் எதிர்ப்பவர். தமிழ், ஆளுமைமிக்க தலைமை, தாயக நிலம், தமிழர் கலை கலாச்சாரப் பண்பாடு, என தான் வரித்த கொள்கைப் பற்றோடும் உணர்வோடும் வாழ்ந்துவருபவர். இவ்வாறான ஆளுமையும் தாயக தேசத்தில் தீராத பற்றுமுடைய இவர் தமிழ் இனத்திற்குக் கிடைத்த அரும்பெரும் சொத்து எனலாம். வயது மூப்பின் காரணமாக உடல்மெலிந்து குரல் தளர்ந்து சிந்தனாசக்தி குன்றி நின்றாலும் ஓடியோடி தமிழுக்காய் உழைத்த கால் ஓய்ந்தாலும் படைத்த படைப்புகளும் ஆற்றிய சேவைகளும் தமிழுக்காய் அர்ப்பணித்த வாழ்வியல் தடங்களும் ஓயாது நிலைத்திருந்து உங்கள் கதை பேசி நிற்கும். உங்கள் படைப்புகளுக்காய் ஈழதேசம் என்றும் நன்றியுணர்வைப் பற்றி நிற்பதோடு நலம்பெற வேண்டி நிற்கிறோம். து.திலக்(கிரி), 08.12.2024,
  10. தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார் ஜூன் 15, 2025 “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் காலமானார். பண்டிதர் பரந்தாமன் வடமராட்சியை புலோலியைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி முதலிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். —-—- வீரவணக்கம் மொழிக்கான இனத்துக்கான தேசத்துக்கான வீரவணக்கம் இனத்துக்காகவும், தமிழ்மொழிக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடியவர். தமிழ்த் துறை ஆசானும், பண்டிதரும், பருத்தித்துறையைச் சேர்ந்த முன்னாள் ஹாட்லி கல்லூரி தமிழ் ஆசிரியருமான எங்கள் மதிப்பிற்குரிய ஆசான் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா இன்று காலமானார் என்ற துயரான செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்கின்றோம். அவரது பங்களிப்புகள் எங்கள் மனதில் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.வரும் ஓகஸ்ட் மாதத்தில், எங்கள் வகுப்பு தோழர்களுடன் அவரை நேரில் சந்தித்து, ஆசி பெறும் ஆசையுடன் எதிர்நோக்கியிருந்த நாங்கள், இன்று அவரை இழந்த வெறுமையில் நிலைகுலைந்து நிற்கிறோம். இன்று அவரின் தமிழ் உரைகளும், பாடசாலை நாட்களில் அவர் கற்பித்த தமிழின் நயமும், அவரது குரலோடு எங்கள் மனங்களில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அவரது அறிவும், கருணையும், நாட்டுப்பற்று நிரம்பிய வாழ்வும் எங்களுக்குத் தாங்க முடியாத இழப்பாகவே திகழ்கின்றன.அன்னாரின் ஆழ்ந்த பணிகள் எப்போதும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அவரது குடும்பத்தாருக்கும் நெருங்கிய உறவினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். -நவஜீவன் அனந்தராஜ்- https://www.battinatham.com/2025/06/blog-post_264.html
  11. இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - டெல் அவிவ் இராணுவ தலைமையகம் தகர்ப்பு June 15, 2025 1:25 pm 0 comment இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்படபல நகரங்கள் மீது ஈரான் நேற்று (14) ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் இராணுவ தலைமையகம் உட்பட பல கட்டடங்கள் தகர்க்கப்பட்டன. ‘ஈரான் 60 சதவீதம் தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ளது. இதை 90 சதவீதம் செறிவூட்டினால் ஈரான் விரைவில் 9 அணுஆயுதங்களை தயாரித்துவிடும்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில், சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கடந்த மே 31ஆம் திகதி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி 60 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு முடிவடைந்தது. இதற்கிடையே, அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதால், அந்நாட்டின் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் விமானப்படையின் 200 போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 9 அணு விஞ்ஞானிகள், 3 இராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். 320 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 150 இடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களிலும் சைரன் மூலம்மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பீதியடைந்த மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். எதிரி நாடுகளின் வான் தாக்குதலை சமாளிக்க அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்தி வந்தது. இந்த ஏவுகணைகள் நேற்று முன்தினம் இரவு முதல் வானில் சீறிப் பாய்ந்தன. ஆனால், நேற்று ஈரான் நடத்திய தாக்குதலை, இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணைகளால் முற்றிலும் தடுக்க முடியவில்லை. இதனால், டெல் அவிவ் நகரில் உள்ள இராணுவ தலைமையகம் மீது குண்டுகள் விழுந்து வெடித்தன. ஜெருசலேம் நகர், ரிசான் லெசியான் ஆகிய பகுதிகள் மீது நேற்று அதிகாலை ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமேனி கூறும்போது, ‘‘இஸ்ரேலுடன் போரிட ஈரான் ராணுவ படைகள் தயார் நிலையில் உள்ளன. மக்கள் அனைவரும் ராணுவத்துக்கு ஆதரவாக உள்ளனர்’’ என்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியபோது, ‘‘இன்னும் சில மாதங்களில் ஈரானால் அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும். இது இஸ்ரேலுக்கு ஆபத்து. அதனால்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் மீதான தாக்குதல் தொடரும்’’ என்றார். இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடாவ் ஷோசானி கூறுகையில், ‘‘ மத்திய கிழக்கில் தற்போதைய பதற்றத்துக்கு காரணம் ஈரான். அணு ஆயுதங்களை தயாரித்து இஸ்ரேலை அழிக்க ஈரான் திட்டமிடுகிறது. அதனால்தான், அணு ஆயுத தளங்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தினோம். இஸ்ரேலில் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது’’ என்றார். இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று கூறியபோது, ‘‘ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால், அதற்கான கடும் விளைவுகளை ஈரான் மக்கள் சந்திப்பார்கள். தலைநகர் டெஹ்ரான் பற்றி எரியும்’’ என்று தெரிவித்தார். இரு நாட்டின் தலைவர்களும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா, ரஷ்யா கருத்து: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியபோது, ‘‘ஈரானுக்கு பல வாய்ப்புகள் அளித்தேன். அப்போதே, என் பேச்சை கேட்டிருக்க வேண்டும். ஈரானில் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பாக, அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும்’’ என்றார். ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஐ.நா சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியானுடன் அவர் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார். இரு நாடுகள் இடையிலான பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புதின் கூறியுள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வு: இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரே நாளில் பேரலுக்கு 6 டொலர் உயர்ந்து 78 டொலரானது. இதன்மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு சென்றது. எனினும், இறுதியில் 74 டொலராக நிறைவடைந்தது. இந்த போர் தீவிரமானால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என தெரிகிறது. இதுகுறித்து எஸ் அன்ட் பி குளோபல் தலைவர் ரிச்சர்டு ஜோஸ்விக் கூறியதாவது: இஸ்ரேல் – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்பதுதான் முக்கியம். கடந்த முறை ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்தியபோது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பின்னர், போர் தீவிரமடையவில்லை என்றும், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிந்தவுடன் அவற்றின் விலை சரிந்தது. இவ்வாறு அவர் கூறினார். ஈரானிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவில்லை. ஆனாலும், நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த சூழலில், இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சரக்கு போக்குவரத்து தடைபட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, உலக அளவிலான கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தில் 20% ஈரானுக்கு வடக்கே உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. இதனால், இராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. https://www.thinakaran.lk/2025/06/15/breaking-news/135271/இஸ்ரேல்-நகரங்கள்-மீது-ஈர/#google_vignette
  12. கடற்படை வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் General15 June 2025 மன்னார் - பள்ளிமுனை பகுதியில், கடற்படையினரின் வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், குறித்த காணிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்த போதிலும், தற்போது காணி அளவீடு தொடர்பான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும், அவற்றைக் கடற்படையினர் அபகரிக்கும் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்படுவது தொடர்பில் குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பதைக் கட்சியே தீர்மானிக்கும் எனவும், மூன்றாம் தரப்பின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். https://hirunews.lk/tm/407181/the-process-of-measuring-lands-owned-by-the-navy-should-be-abandoned-selvam-adaikalanathan
  13. கலாநிதி கீதா கோபிநாத் இன்று இலங்கை செல்கின்றாா். adminJune 15, 2025 சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று (15) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை செல்கின்றாா். அவா் தனது பயணத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் 2025 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை அடைவதில் உள்ள அனுபவங்கள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகம் மற்றும் எதிா்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது https://globaltamilnews.net/2025/216841/
  14. மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை adminJune 15, 2025 தென்னாபிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது . அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், செயல் இயக்குனராகவும் உள்ள 56 வயதான ஆசிஷ் லதா ராம்கோபின் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ‘நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ என்ற காலணி விநியோக நிறுவனத்தின் இயக்குனர் மகாராஜ் என்பவாிடம் , தனக்கு தென்னாபிரிக்காவில் உள்ள பிரபல நெட்கேர் குழும மருத்துவமனைக்கு துணிகள் விநியோகிக்க, இந்தியாவில் இருந்து 3 கன்டெய்னர்களல் இறக்குமதி செய்துள்ளதாகவும், அதற்கு வரி செலுத்த 6 மில்லியன் ரேண்ட் (ரூ.3.22 கோடி) பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். . இதற்கு சான்றாக போலியான பற்றுச்சீட்டுக்களையும் காட்டியுள்ளார். ஆசிஷ் லதா மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால், அவரை நம்பி மகாராஜ் 6 மில்லியன் ரேண்ட் பணம் வழங்கியுள்ளார். ஆனால் ஆசிஷ் லதா வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்த வில்லை. அவர் கொடுத்த ஆவணங்களும் போலி எனத் தெரிந்தது. இதனால் ஆசிஷ் லதா மீது மகாராஜ் மோசடி புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த டர்பன் நீதிமன்றம் ஆசிஷ் லதாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவர் தற்போது 50,000 ரேண்ட் பிணைத் தொகை செலுத்தி பிணையில் வெளிவந்துள்ளார். மகாத்மா காந்தியின் வாரிசுகள் பலர் மனித உரிமை ஆர்வலர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களில் ஆசிஷ் லதா ராம்கோபின்னும் ஒருவர். தென்னாபிரிக்காவில் பிரபலமான இவரது தாயான எலா காந்தியின் பணிகளை பாராட்டி இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அரசுகள் அவருக்கு விருதுகள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/216844/
  15. தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது? - நிலாந்தன் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டா போட்டிகளும் உள்ளூராட்சி சபைகளை ஒரு கட்சி கைப்பற்றிய பின் கட்சிகளின் விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. நடப்பது கட்சிகளுக்கு இடையிலான போட்டிதான். அதாவது தேர்தல்மைய அரசியல் தான். இதில் தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்லது தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் எங்கே இருக்கிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒப்பீட்டளவில் அதைச் செய்யலாம். அதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், அது ஒப்பீட்டளவில் இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவு என்று தோன்றுவது. இரண்டாவதாக,அது ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசிய அரசியலில் இப்போதைக்கு ஏதோ ஒரு வகையான பண்புருமாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது. மூன்றாவதாக அது ஒப்பீட்டளவில் உள்ளவற்றில் பெரிய கூட்டாகக் காணப்படுகின்றது. பைபிளில் ஒரு வசனம் உண்டு,“பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமே இல்லை”. இப்பொழுது உருவாக்கப்பட்டுவரும் புதிய பிரதேச சபைகளுக்கும் அது பொருந்தும். தமிழ்த் தேசியப் பேரவைக்கும் அது பொருந்தும். தமிழ்த் தேசியப் பேரவைக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் டெலோ மற்றும் சந்திரகுமாரின் கட்சிகளைத்தவிர ஏனைய கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்தவைதான். அதாவது கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒன்றாக இருந்தவை. அப்பொழுது தயாரித்த யாப்பு முன்மொழிவைத்தான் இப்பொழுது இறுதித் தீர்வுக்கான முன்மொழிவாக அவர்கள் வைக்கிறார்கள். அப்பொழுது இரண்டாவது எழுக தமிழில் சிறீதரனும் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். தமிழ்மக்கள் பேரவைக்குள் காணப்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், விக்னேஸ்வரனின் கட்சி ஆகிய இரண்டும் இப்போதுள்ள கூட்டுக்குள் இல்லை. புதிதாக சந்திரகுமாரும் டெலோவும். அப்படித்தான் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளரை முன் நிறுத்திய தரப்புகளில் பெரும்பாலானவை இப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து புதிய கூட்டுக்குள் காணப்படுகின்றன. அதாவது கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்பு தமிழ்ப் பொது வேட்பாளருக்காக ஒன்றுதிரண்ட அதே தரப்புகள் இப்பொழுது சமத்துவக் கட்சி, சைக்கிள் கூட்டு என்பவற்றோடு இணைந்து ஒரு புதிய கூட்டாக மேலெழுந்திருக்கின்றன. பத்து மாதங்களுக்கு முன்பு கஜேந்திரக்குமார் பொது வேட்பாளரை எதிர்த்தவர். அந்த விடயத்தில் அவரும் சுமந்திரனும் ஒரே கோட்டில் நின்றார்கள். இருவேறு நிலைப்பாடுகளோடு அவர்கள் பொது வேட்பாளரை எதிர்த்தார்கள். தேர்தலுக்குப் பின் கஜேந்திரக்குமார் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளைத் தேசியப் பண்புமிக்கவை என்று சொன்னார். இப்பொழுது அதே கட்சிகளோடு கூட்டு. ஆனால் மூன்று வித்தியாசங்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு இல்லை. விக்னேஸ்வரனின் கட்சி இல்லை. சந்திரகுமாரின் கட்சி உள்ளே வந்திருக்கிறது. அப்பொழுது சிறீதரன் பொது வேட்ப்பாளரோடு துணிந்து நின்றார். எனவே இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ் மக்கள் பேரவையைப் பாதுகாக்க வேண்டும் என்ற முடிவெடுத்து கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன் பொறுமையாகவும் தீர்க்கதரிசனமாகவும் செயற்பட்டு இருந்திருந்தால் இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலின் நிலைமை எங்கேயோ போயிருக்கும். அப்படித்தான் ஆகக்குறைந்தது கடந்த ஆண்டு பொது வேட்பாளரின் விடையத்திலாவது முன்னணி தீர்க்கதரிசனமாக முடிவெடுத்து இருந்திருந்தால் இன்றைக்கு முன்னணிதான் சிலசமயம் தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைச் சக்தியாக மேல் எழுந்திருந்திருக்கும். ஆனால் கடந்த சுமார் 10ஆண்டுகளில் அவர்கள் தீர்க்கதரிசனமற்ற முடிவுகளை எடுத்தார்கள். பகைவர்களைச் சம்பாதித்தார்கள். குறிப்பாக தமிழ்மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகிய நூதனமான கட்டமைப்புகளை பலப்படுத்தத் தவறினார்கள். தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக கட்டமைப்பு ஆகியவை இந்தப் பிராந்தியத்திலேயே நூதனமான அரசியல் தோற்றப்பாடுகள். கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கலவை. அப்படி ஒரு கலவைதான் இப்பொழுது நாட்டை ஆளும் தேசிய மக்கள் சக்தியும். தமிழ்மக்கள் பேரவை படிப்படியாக பலமிழந்து போன ஒரு காலகட்டத்தில், 2019இல் தெற்கில் தேசிய மக்கள் சக்தி உருவாகியது. இன்றைக்கு அது ஆளுங்கட்சியாக எழுச்சி பெற்றுவிட்டது. அதற்கு முன் தோன்றிய தமிழ் மக்கள் பேரவையும் இப்பொழுது இல்லை. அதற்குப்பின் தோன்றிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பும் இப்பொழுது இல்லை. 10ஆண்டுகளில் தமிழ்மக்கள் இரண்டு தடவைகள் மேலெழ முயன்றார்கள் என்று பொருள். எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த ஒரு தசாப்த காலத்தில் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் புதிய கூட்டைப் பாதுகாக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்த கட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தியாக அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே நிராகரிக்கப்பட்டவரும், அதே ஆண்டின் இறுதியில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவருமாகிய சுமந்திரன் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி ஒன்றின் தீர்மானிக்கும் சக்திபோலச் செயற்படுகிறார். கட்சிக்குக் கிடைத்த வெற்றிக்கூடாக அவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளப் பார்க்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கு தழுவிய ஒரே கட்சியாக அது காணப்படுகின்றது. அதனால்தான் அது ஏனைய கட்சிகளை விடவும் பலமாக மேலெழ முடிந்தது. ஆனால் முன்னணி யாழ்ப்பாணத்துக்கு வெளியில் போதிய அளவுக்கு வேலை செய்யவில்லை என்பதுதான் உண்மை. கடந்த 15 ஆண்டுகளிலும் அவர்கள் ஒரு கட்சியாகவும் தங்களை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள்; தங்கள் கொள்கைகளை மக்கள் மயப்படுத்தி தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டவும் தவறிவிட்டார்கள். அதன் விளைவாக தமிழரசுக் கட்சியின் முதன்மையைக் கேள்விக்கு உள்ளாக்க அவர்களால் முடியவில்லை. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் வழங்கிய ஆணை என்பது மிகத்தெளிவானது. ஒன்றுபட்டால் மட்டும்தான் என்பிபியை எதிர்கொள்ளலாம் என்பதே அந்த ஆணை. வவுனியா உள்ளூராட்சி சபையில் அதுதான் நிலைமை. ஒன்றுபடவில்லையென்றால் என்பிபி அடுத்த மாகாண சபைக்குள் மேலும் பலமாக கால்களை ஊன்றப் பார்க்கும். ஆனால் கடந்த சில வாரங்களாக புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்திலும், சபைகளைக் கைப்பற்றிய பின்னரும் தமிழ்த்சிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், வாதப் பிரதிவாதங்கள், மோதல்கள், குறிப்பாக அவர்களுடைய விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கும் வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றைத் தொகுத்துப்பார்த்தால் தெரிவது என்னவென்றால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் வழங்கிய ஆணையை மேற்படி கட்சிகள் சரியாகக் கிரகித்துக் கொள்ளவில்லை என்பதுதான். இந்த ஆணை புதியது அல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஏறக்குறைய தமிழ் மக்கள் வழங்கிய ஆணை அத்தகையதுதான். தேசமாகத் திரளவில்லை என்றால் என்பிபியின் வழிகளை இலகுவாக்குவீர்கள் என்பதே. எனவே பொது எதிரிக்கு எதிராகத் தேசமாகத் திரள்வது எப்படி என்பதுதான் இங்குள்ள சவால். சுமந்திரன் அதற்குத் தயாரில்லை என்பதற்காக, சிவிகே அந்த விடயத்தில் தளம்புகிறார் என்பதற்காக, தமிழரசுக் கட்சிக்குள் உள்ள எல்லாரையுமே அவ்வாறு தேசத் திரட்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்த முடியாது; குத்தவுங்கூடாது. ஏனென்றால் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது தெளிவாக இரண்டு அணிகள் உண்டு. அதில் சிறீதரன் அணியானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் பரிவோடு காணப்படுகிறது. எழுக தமிழ்கள்,பொது வேட்பாளர் ஆகிய இரண்டு தீர்மானகரமான தருணங்களிலும் சிறீதரன் மிகத்தெளிவான நிலைப்பாட்டை எடுத்தார். சந்திரக்குமாரை புதிய கூட்டுக்குள் உள்ளீர்த்ததன்மூலம் சிறீதரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவில் சில நெருடல்கள் ஏற்படலாம். ஆனாலும் சுமந்திரனுக்கு எதிரான அணிச் சேர்க்கை என்று பார்க்கும் பொழுது சிறீதரன் அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிட்டவாகத்தான் நிற்கும். அதற்காக அரசியலை சுமந்திரனுக்கு எதிராக குவிமையப்படுத்தத் தேவையில்லை. மாறாக,தேசத்தைத் திரட்டுவது என்ற அடிப்படையில் கிராமங்களில் இருந்து தமிழ்த் தேசியப் பேரவையை எப்படிக் கட்டியெழுப்புவது என்று சிந்திக்கலாம். ஏறக்குறைய ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்த பொழுது இதே கட்சிகள்தான் எழுக தமிழ்களைச் செய்தன. மக்கள் எழுச்சிகள்தான் அரசியலில் புதிய ரத்தச் சுற்றோட்டங்களை ஏற்படுத்தும்.அவ்வாறான மக்கள் எழுச்சிகளுக்குரிய உணர்ச்சிகரமான தொடக்கப் புள்ளிகள் ஏற்கனவே உண்டு. உதாரணமாக தையிட்டி.அடுத்தது, கிழக்கில் மேய்ச்சல் தரை.மன்னாரில் கனியவள மண் அகழ்வு.இவை தவிர அண்மைக் காலமாக கிண்டப்பட்டு வரும் செம்மணிப் புதைகுழி. செம்மணிப் புதைக்குழு ஓர் உணர்ச்சிகரமான விடயம்.அது தமிழ் மக்களை வீதிக்குக் கொண்டுவரும்.அங்கே இதுவரையிலுமான 19 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அது ஒரு சுடலை.அரியாலை மக்களுக்கான சித்துப்பாத்தி மயானம்.அங்கே யாரையும் புதைப்பதில்லை.அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் ஆடைகளோடு இல்லை.பொதுவாக பூத உடல்களை நிர்வாணமாக எரிப்பதும் இல்லை;புதைப்பதும் இல்லை.அந்தப் பகுதியில் சுமார் 600க்கும் குறையாதவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கத் தேவையான தகவல்களை சம்பந்தப்பட்ட படைத்தரப்பினரே நீதிமன்றங்களில் வாக்குமூலங்களாக வழங்கியிருக்கிறார்கள். இப்பொழுது அப்புதை குழி கிண்டப்படுகிறது. அங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்களின் உறவினர்கள் அப்புதை குழிக்குள் தங்களுடைய உறவுகளின் ஏதாவது ஒரு தடையம் அல்லது மிச்சம் இருக்குமா என்ற தவிப்போடு அங்கே வந்திருக்க வேண்டும். உக்காத ஒரு சேலைத் துண்டு அல்லது ஒரு செருப்பு அல்லது பிளாஸ்டிக் காப்பு போன்ற ஏதாவது ஒரு தடயம் அங்கே கிடைக்குமா என்ற பதட்டங் கலந்த தவிப்போடு அப்பகுதிக்கு இதுவரை எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்? இந்த இடத்தில் தென்னிலங்கையில் 2012இல் மாத்தளைப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பொழுது,அப்பொழுது உயிரோடு இருந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆகிய சுனிலா அபயசேகர தெரிவித்த ஒரு கருத்தை இங்கு சுட்டிக்காட்டலாம்.மாத்தளை ஆஸ்பத்திரி வளாகத்தில் 150க்கும் குறையாத எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அதுதொடர்பாக சுனிலா,”சண்டே டைம்ஸ்” பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டியிருந்தார்.“இதுவே லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தால் அங்கே இப்படி ஒரு புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டால்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அந்த இடத்தை நோக்கிக் குவிந்திருப்பார்கள்.ஆனால் இலங்கையிலோ நிலைமை அவ்வாறில்லை. யாரும் அந்த இடத்திற்கு வரவில்லை” என்ற பொருள்பட சுனிலா கவலையோடு கருத்துத் தெரிவித்திருந்தார். மாத்தளையில் மட்டுமல்ல செம்மணியிலும் நிலைமை அதுதானா? இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் செம்மணிப் புதை குழியைப் பார்வையிட வருகிறார்.செம்மணிப் புதைகுழி போல ஏற்கனவே மன்னார் புதைக்குழி,கொக்குத்தொடுவாய் புதைக்குழி என்று பல புதைக்குழிகள் உண்டு.எனவே புதைக்குழிகள் தொடர்பான சுதந்திரமான விசாரணையைக் கேட்டு தமிழ் மக்களை வீதியில் இறக்கலாம்.கடந்த ஐந்தாம் திகதி யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் அதுதொடர்பான ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை செம்மணியில் ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டா போட்டிகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு புதைக்குழிகளின் மீது கட்சிகள் கவனத்தைத் திருப்புமா?குறிப்பாக தமிழ்த் தேசிய பேரவைக்குள் உள்ள கட்சிகளுக்கு ஏற்கனவே “எழுக தமிழ்” செய்த அனுபவம் உண்டு.மக்களை எழுச்சிபெறச் செய்வதென்றால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எதையாவது காட்டவேண்டும்.அல்லது உணர்ச்சிக் கொதிப்பான ஏதாவது ஒன்று நடக்கவேண்டும்.தமிழ்த் தேசிய அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தரப்புகள் ஒன்றாகத் திரளும்பொழுது அது மக்கள் மனதில் புதிய நம்பிக்கைகளை உருவாக்கும். கடந்த பௌர்ணமி நாளன்று தையிட்டியில் வழமையைவிடக் கூடுதலானவர்கள் திரண்டார்கள்.அது ஐக்கியத்தின் பலம். அதுபோலவே செம்மணிப் புதைகுழிக்கு நீதி கேட்டு மக்களை வீதிக்கு கொண்டு வரலாம்.தனது கட்சிக்காரருக்கு எதிராகவும் ஏனைய கட்சிகளுக்கு எதிராகவும் வழக்குப்போடும் அரசியல்வாதிகள் இந்தவிடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்குப்போடலாம். அவர்கள் அதைச் செய்வார்களோ இல்லையோ தமிழ்த் தேசிய பேரவையைப் பொறுத்தவரை அது ஒரு தேர்தல் மையக் கூட்டு அல்ல மக்கள்மைய அரசியலுக்கான ஒரு தொடக்கமே என்பதனை நிரூபிப்பதற்கான பொருத்தமான களம் அது. https://www.nillanthan.com/7457/
  16. ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (13) ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்துள்ளார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டதுடன், அவர்கள் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பை அளித்தனர். இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், நமது பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதோடு, வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை, மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எமது அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmbvzln7i01ulqpbs04jir2ic
  17. தென்னாபிரிக்கா வெல்லவேண்டும் என்று விருப்பம் இருந்தது.. ஆனால் நான் இப்போட்டியில் வெல்வேன் என்று நினைக்கவில்லை! ஆனால் வென்றுவிட்டேன்😃 கப்பு முக்கியம்😁 போட்டியை சிறப்பாக நடாத்திய @goshan_che க்கும், ஆர்வமுடன் கலந்துகொண்டவர்களுக்கும், திரியைக் கலகலப்பாக்கியவர்களுக்கும் நன்றி! என்ன ஒரு பிரீத்தி ஸிந்தா இல்லை என்பதுதான் குறை! ஆனா த்ரிஷா இருக்கா!
  18. Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship AUS 212 & 207 SA (T:282) 138 & 282/5 South Africa won by 5 wickets
  19. AUS 212 & 207 SA (80.5 ov, T:282) 138 & 276/4 Day 4 - Session 1: South Africa need 6 runs. CRR: 3.40 • Min. Ov. Rem: 65.1 • Last 10 ov (RR): 34/0 (3.40) எய்டன் மார்க்கம் அவுட்!😩
  20. பவுமா உடனேயே போய்விட்டார்! Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship AUS 212 & 207 SA (62.2 ov, T:282) 138 & 225/3 Day 4 - Session 1: South Africa need 57 runs. CRR: 3.60 • Min. Ov. Rem: 83.4 • Last 10 ov (RR): 23/1 (2.30) Batters R B 4s 6s SR Tristan Stubbs* (rhb) 2 11 0 0 18.18 Aiden Markram (rhb) 111 173 12 0 64.16 Bowlers O M R W Econ Pat Cummins (rf) 13.2 0 44 1 3.30 Josh Hazlewood (rfm) 16 1 47 0 2.93 P'SHIP: 8 Runs, 3.2 Ov (RR: 2.4) • L'BAT: Temba Bavuma 66 (134b) • FOW: 217/3 (58.6 Ov)
  21. நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்! 14 Jun 2025, 1:18 PM நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி இன்று (ஜூன் 14) வயது மூப்பு காரணமாக காலமானார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி. நாட்டுப்புறப் பாடகியான இவர் சிறிது காலம் வானொலியில் பணியாற்றினார். இவரது திறமையை அறிந்த நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் கொல்லங்குடி கருப்பாயியை ஆண் பாவம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்தார். தொடர்ந்து, ஆண்களை நம்பாதே, கோபாலா கோபாலா, கபடி கபடி, ஏட்டிக்கு போட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக சசிக்குமார் நடித்த காரி படத்தில் நடித்திருந்தார். 1993-ஆம் ஆண்டு இவரது கலை சேவையை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தார். இந்தநிலையில், வயது மூப்பு காரணமாக கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://minnambalam.com/folk-singer-kollangudi-karuppayi-passed-away/
  22. இருளில் தேடும் தமிழ்ப்பூனை June 13, 2025 — கருணாகரன் — சில நாட்களுக்கு முன், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் வெற்றியீட்டிய தமிழசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றில் உரையாற்றிய சுமந்திரன், புதிதாக உருவாகியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைக் கடுந்தொனியில் எச்சரித்தார். இதற்குக் காரணம், சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சிக்கு இவை ஆதரவளிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கட்சிகள் பரஸ்பரம் ஆதரவளித்துக் கொள்வதென்ற பகிரங்க அறிவிப்பை தமிழ்த்தேசியப் பேரவை மீறி விட்டது என்பதாக இருந்தது. அப்பொழுது அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் வெளிப்படுத்திய உடல்மொழியும் எதிரணியைச் சவாலுக்கு அழைத்த விதமும் சிரிப்பையும் துக்கத்தையும் ஒன்றாகக் கொண்டு வந்தது. இரண்டுக்கும் காரணம், நட்புச் சக்திகள் யார், எதிர்ச் சக்திகள் யார் என்று தெரிந்து கொள்ளாமல் இந்த மாதிரி வீறாப்புப் பேசுவதால் எதிர்விளைவுகளே ஏற்படும் என்பது. கடந்த காலத்திலும் இதுவே நடந்தது. நட்புச் சக்திகளை எதிர்தரப்பாகக் கருதி வசைபாடுவதும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் துரோகியாக்கி விலக்குவதும் ஒரு நோயாகும். இது உச்சமடைந்தே சக போராளி இயக்கங்களை நோக்கி விடுதலைப்புலிகள் துப்பாக்கி ஏந்தியது. இறுதியில் சிங்களப் பேரினவாதத் தரப்புக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டு, அழிவைச் சந்தித்ததே மிச்சமாகும். இதிலிருந்தெல்லாம் யாரும் படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வளவுக்கும் சுமந்திரன் சற்று யதார்த்தமாகப் பிரச்சினைகளை அணுகக் கூடியவர்கள். துணிச்சலாகச் சில விடயங்களையேனும் பேசக் கூடியவர்கள். கொஞ்சமாவது ஜனநாயகத் தன்மையைப் புரிந்து கொண்டவர். தமிழரசுக் கட்சியில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கக் கூடிய ஓர் ஆளுமை. அவரே இப்படிப் பேசுகிறார் என்றால்… துக்கப்படாமல் என்ன செய்ய முடியும்? இதையிட்டு ஏன் சிரிப்பு வந்தது என்றால், இந்த மாதிரிப் பேச்சுகளும் எச்சரிக்கைகளும் சவால்களும் சிலருக்கு உளக் கிளர்ச்சியை அளிக்கலாம். ஆனால், மக்களுக்கு எத்தகைய நன்மைகளையும் தரப்போவதில்லை. ஆகவே இதனால் பயனில்லை. மட்டுமல்ல, இதெல்லாம் வானத்தை நோக்கித் தீர்க்கப்படும் வெற்று வேட்டுகளுக்கு நிகரானவை. இப்படி எத்தனை வெற்று வேட்டுகளைப் பார்த்து விட்டோம் என்பதால் உண்டான சிரிப்பு. அரசியல் பேச்சுகள், அரசியல் தீர்மானங்கள், அரசியல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு நன்மையைத் தருவதாக அமைய வேண்டும். அப்படியிருந்தால்தான் அந்த அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு முன்னேற்றம் கிட்டும். அந்த அரசியலும் முன்னகர்வதோடு அதுமுன்னேற்றகரமானதாகவும் அமையும். அதற்கே பெறுமானமும் வரலாற்று மதிப்பும் ஏற்படும். இதற்கு நிதானமும் கூர்மையான நுண்மதியும் விரிந்த மனப்பாங்கும் அவசியம். முக்கியமாக ஜனநாயகப் பண்பு வேண்டும். அப்படியாயின், அந்த அரசியலை முன்னெடுப்போர் வெளிப்படுத்தும் வார்த்தைகளும் எடுக்கப்படும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் ஜனநாயகப் பண்புடனிருக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் கையாளப்பட வேண்டும். இல்லையெனில் அனைத்தும் சிதைந்து விடும். ஈழப்போராட்டமும் ஈழத்தமிழரின் அரசியலும் சிதைந்து பின்னடைந்து, தோல்வி கண்டதற்குப் பிரதான காரணம், ஜனநாயக அடித்தளம் சிதைந்ததும் சிதைக்கப்பட்டதுமாகும். ஜனநாயகத்தைச் சிதைத்துக் கொண்டு எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஈடேற்றத்தையும் எவராலும் எந்தச் சக்தியாலும் செய்ய முடியாது. என்பதால்தான் உலகம் ஜனநாயகத்தை முதன்மையாக வலியுறுத்துகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் அடிச்சட்டமே ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதன் மூலம் பெற்ற வெற்றிதான். ஆகவே ஜனநாயகச் சட்டத்திலிருந்துதான் நீங்கள் அனைத்தையும் கட்டியெழுப்ப முடியும். எதையும் வலப்படுத்த இயலும். ஜனநாயகச் சட்டத்தைப் பலவீனப்படுத்தும்போதும் அதைப் புறக்கணிக்கும்போதும் நீங்களே சிதைக்கப்படுகிறீர்கள். சூழலும் சிதைக்கப்படுகிறது. இதைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல், மிக உணர்ச்சி வசப்பட்டுச் சுமந்திரன் அந்த உரையை ஆற்றியிருந்தார். அந்த உரை, தற்போதைய நிலையில் கட்சியின் உறுப்பினர்களை மகிழ்வித்திருக்கலாம். ஆனால், அதற்கு வரலாற்றில் எந்தப் பெறுமானமும் இல்லை. வரலாற்றில் மட்டுமல்ல, சமகாலச் சூழலிலும்தான். ஏனென்றால், அது அவருடைய அலைவரிசையில் சேர்ந்தியங்க வேண்டிய இன்னொரு தமிழ்த்தேசியவாதத் தரப்பான தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைச் சாடியது; எதிர்நிலைக்குத் தள்ளியது. தேர்தல் அரசியலில் போட்டித் தரப்பை எதிரணியாகக் கருதிப் பேசுவதொன்றும் புதிதல்ல. ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. தேர்தல் அரசியலில் போட்டி எந்தளவுக்கு முதன்மை பெற்றிருக்குமோ அந்தளவுக்கு சுழிப்புகளும் தந்திரங்களும் இருக்கும். அதேபோல சமரசங்களுக்கும் விட்டுக் கொடுப்புகளுக்கும் ஏற்றுக் கொள்ளல்களுக்கும் இடமுண்டு. இதையெல்லாம் மனதிற் கொண்டே எதிரணியின் மீதான விமர்சனங்களையோ கருத்துகளையோ முன்வைக்க வேண்டும். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சுமந்திரன் உட்பட தமிழ்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் ஒருமுகப்பட்டு அறிவிப்புச் செய்தது, வடக்குக் கிழக்கில் NPP க்கான ஆதரவை வழங்கக் கூடாது. தமிழ்த்தரப்புகளே சபைகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதாகும். இதில் விசேடமாகச் சுமந்திரன் இன்னொன்றையும் சொன்னார், ‘கூட்டாக இந்தத் தேர்தலை எதிர்கொள்வதை விட தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொள்வோம். தேர்தலுக்குப்பின்னர் வெற்றியைப் பொறுத்து கூட்டாக ஆட்சியை அமைத்துக் கொள்வோம் என. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரன் கூறிய கருத்துகளை பலரும் ஏற்றுக் கொண்டனர். ஆகவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சபைகளில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அனைத்துத் தரப்பும் விட்டுக் கொடுப்பு – ஏற்றுக் கொள்ளல் – புரிந்துணர்வு போன்றவற்றின் அடிப்படையில் பேசியிருக்க வேண்டும். முதற்சுற்றுடன் முற்றுப் புள்ளியை வைத்துக் கொள்ளாமல், தொடர்ந்து நிதானமாகப் பேசியிருந்தால் இந்த மாதிரியெல்லாம் வார்த்தைகள் வெளிப்பட்டிருக்காது. நெஞ்சை நிமிர்த்தியிருக்க வேண்டியதில்லை. நமக்குச் சிரிப்பையும் துக்கத்தையும் வரவழைத்திருக்க வேண்டியிருந்திருக்காது. வேண்டிய அரசியற் சூழலையும் கெடுத்திருக்கத் தேவையில்லை. உண்மையில் இங்கே என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது? கோமாளித்தனமும் முட்டாள் வேலைகளும்தானே! ஏனென்றால், போரினால் தோற்கடிக்கப்பட்டு, நிர்க்கதியாக நிற்கும் தமிழ்ச் சமூகத்தை அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு போன்றவற்றில் அனைத்துத் தரப்புமாக இணைந்து வளர்த்தெடுக்க வேண்டிய சூழலில், ஆளாளுக்கு பகை கொண்டு எதிர்முனைப்படுவது முட்டாள்தனமன்றி வேறென்ன? இதற்கு நிதானமாகப் பல பரிமாணங்களில் செயற்பட வேண்டும். அதில் ஒன்றே உள்ளுராட்சி மன்றங்களுமாகும். உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவதென்பது, தமிழீழத்தைக் கைப்பற்றுவதோ அதற்கு நிகரான ஆட்சியை நிகழ்த்துவதோ அல்ல. பதிலாக இந்தச் சபைகளின் மூலம் மக்களுக்கான சேவைகளை செழிப்பான முறையில் வழங்கச் செய்வதே. இது ஒரு மிகச் சிறிய எல்லைக்குட்பட்ட பணியே. வேண்டுமானால், சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் தமது கட்சியை வளர்த்துக் கொள்வற்குச் சில வாய்ப்புகள் கிடைக்கலாம். அதற்கு அப்பால் அரசியல் நன்மைகள் இல்லை. ஆனால், இங்கே நடப்பதோ தமிழீழத்துக்கான இறுதிப்போரைப் போலவே உள்ளது. இதெல்லாம் தமிழ்த் தேசியவாதத் தரப்புகளுக்கிடையிலான மோதல்களும் முரண்பாடுகளும். அதாவது யார் 22 மாற்றுத் தங்கம். யார் 24 மாற்று. யார் 18 மாற்று என்ற அடையாளப்படுத்தலின் விளைவு. இதற்கே இந்தப் போர். இதற்கு முன்பு, தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கும் அதற்கப்பாலான தரப்புகளுக்குமிடையிலேயே முரண்பாடுகளும் மோதல்களும் இருந்தன. தமிழ்த்தேசியவாதத் தரப்பு அரசாங்கத்தையும் (ஆட்சியாளர்களையும்) சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பையும் வெளிப்படையாக எதிர்த்தது. மறுதரப்பு தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாலும் அதை அரசோடும் சிங்களப் பௌத்தத் தரப்போடும் கலந்து பேசியே பெற முடியும் என்று நம்பியது. ஆகவே இரண்டினது வழிமுறையும் வேறு வேறாக இருந்ததால் அவற்றின் நடைமுறையும் வேறாகவே இருந்தது. இதனால் இரண்டு வகையான அரசியல் முறைமைகளை மக்களிடையே கொண்டிருந்தன. இதில் ஒன்றை ஒன்று எதிர்கொள்வதில் தீராத நெருக்கடியும் போட்டியும் நிலவியது. விளைவாக துரோகி – தியாகி என்று பொதுவெளியை அசுத்தப்படுத்திக் கொண்டிருந்தன இந்தத் தரப்புகள். உண்மையில் இந்த அசிங்கப்படுத்தலை தமிழ்த்தேசியவாதத் தரப்புகளே செய்தன. அதற்கு மறுதலையான தரப்பு அதைச் செய்யவில்லை. அதற்கான தேவையும் அந்தத் தரப்புக்கு இருக்கவில்லை என்பதை நாம் அழுத்தமாகக் கவனிக்க வேண்டும். தமிழ்த்தேசியவாதத் தரப்பினுடைய அரசியல் தடுமாற்றங்களும் அரசியல் குறைபாடுகளும் வரட்சியுமே அது தன்னைத் தியாகியாக – சுத்தமான பேர்வழியாக முன்னிறுத்திக் கொள்ள முனைந்ததற்குக் காரணமாகும். தன்னுடைய பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்கும் எதிர்த்தரப்பிற்கு வளர்ந்து வரும் செல்வாக்கை மறுதலிப்பதற்குமே எதிர்த்தரப்பைத் துரோகியாகச் சித்தரித்தது. இது எதிர்கொள்ள முடியாத நிலையின் (Unable to face) வெளிப்பாடாகும். ஆனால், மக்கள் இரண்டு தரப்பையும் ஆதரித்தே வந்துள்ளனர். இதுதான் ஆச்சரியமளிக்கும் செய்தியாகும். அதிலும் தமிழ்த்தேசியவாதத் தரப்புகளுக்கே ஊடக ஆதரவு தாராளமாக இருந்தது. ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமல்ல, சிவில் அமைப்புகள், புலம்பெயர் சமூகத்தின் பெருந்திரள், மத நிறுவனங்கள் மற்றும் மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர், தமிழ்ப்பரப்பில் இயங்கும் அரசியல் நோக்கர்களும் பத்தியாளர்களும் எனப் பல தரப்புகளின் பேராதரவு தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கே இருந்தது. அதற்கு மறுதலையான தரப்புக்கு இவை எதுவுமே இல்லை. ஆனாலும் அவையும் தமிழ்ச்சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. செல்வாக்குச் செலுத்தின. அதாவது, ஆதரவுப் பரப்புரை கிடைக்காது விட்டாலும் பரவாயில்லை. மிகக் கடுமையான எதிர்ப்பரப்புரைகளின் மத்தியிலேயே அவை மக்களின் ஆதரவைப் பெற்றன. இது கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கியமான ஓரம்சமாகும். அதாவது மக்கள் ஜனநாயக அடிப்படையில் அனைத்துச் சிந்தனைக்கும் – மாற்று வழிமுறைகளுக்கும் ஆதரவளித்தனர். சமூகம் என்பது அவ்வாறுதானிருக்கும். அது எப்போதும் ஒற்றைப் படையாக இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. அப்படி ஒற்றைப்படையாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினால் அது ஜனநாயக அடிப்படையை மறுப்பதாகும். அது எதேச்சாதிகாரமாகும். ஆனால். அத்தகைய எதேச்சாதிகாரத்தையே தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் தொடர விரும்புகின்றன. இதற்கு அவை சொல்லும் நியாயமே – நியாயப்படுத்தலே – ‘ஏகபிரதிநிதிகள்‘, ‘ஏக பிரதிநிதித்துவம்‘ என்பது. இத்தகைய சிந்தனையும் அணுகுமுறையும் தவறு. சுமந்திரனின் அன்றைய பேச்சும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் கஜேந்திரன்களின் வெளிப்பாடுகளும் இதையே வெவ்வேறு விதமாகக் காட்டுகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இல்லை. சிவில் சமூகத்தினரும் இல்லை. மதத் தலைவர்களும் இல்லை. மக்கள் அமைப்புகளும் இல்லை. ஊடகங்களும் இல்லை. பதிலாக கொம்பு சீவி விடுவதற்கே ஆட்கள் அதிகம். அல்லது கனத்த மௌனம்கொள்ளுதல். இதொன்றும் தமிழ் வரலாற்றுக்குப் புதியதல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய் தொடங்கி விட்டது. அப்பொழுது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டி மகிழ்ந்தன. அதற்குப் பிறகு இயக்கங்கள் துப்பாக்கியினால் விளையாடின. துரோக- – தியாகி அடையாளப்படுத்தல் தொடர்ந்தது. இந்த விளையாட்டுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் தம்மையே பலிகொடுக்க வேண்டியிருந்தது. 2009 க்குப் பிறகு இது மெல்ல உள்ளடங்கிக் கிடந்தது. ஆனாலும் அடுத்த ஆண்டுகளில் மெல்ல மெல்லப் புத்துயிர் பெற்று இப்பொழுது உச்சமடைந்துள்ளது. ஆனால், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நாவடக்கம், கையடக்கம் (மனம்போன போக்கில் எதையும் எழுதக்கூடாது) வேண்டும். இதை ஊடகத்துறையினரும் புரிந்து கொள்வது அவசியம். இப்போது ‘துரோகி’ என்ற புனிதச் சொல்லுக்கான அர்த்தம் என்ன என்று அதை உச்சரிப்போர் சொல்ல வேண்டும். ஏனென்றால் எல்லோரும் துரோகிகளாகவே மாறி மாறிச் சித்திரிக்கப்படுகிறது. இவ்வளவுக்கும் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளுக்கு வலுவான எதிர்ச் சக்தியாக NPP உள்ளபோதும் இந்தக் கூத்துகள் நடப்பதுதான் சிரிப்புக்கிடமானது. https://arangamnews.com/?p=12082
  23. கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு குரங்கு மாதிரி தாவித்திரிபவன் நான் அல்ல சாணக்கியன் புரிந்துகொள்ள வேண்டும் மு.எம்.பி கோ.கருணாகரம் காட்டம் By kugen (கனகராசா சரவணன்) எனது கட்சியில் இருந்து என்னை இடைநிறுத்துவதற்கு சவால் விடுவதற்கு நா.உ.சாணக்கியன் யாhர் ? கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு குரங்கு மாதிரி; தாவித்திரிபவன் நான் அல்ல என்பதை சாணக்கியன் புரிந்துகொண்டு ஏனையவர்களை தூற்றுவதை நிறுத்தி உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என முன்னாள் நா.உ. கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் நா. உறுப்பினரும் ரொலே கட்சியின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார். மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது இதன் பேது நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் என்பற்றி உண்மைக்கு பறம்பாக பல அவதூறுகளை வெளிப்படுத்தினார் மண்முனை தென் ஏருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவில் 20 உறப்பினர் கொண்ட அந்த சபையில் தவிசாளர் தெரிவு ஒரு இக்கட்டான நிலையில் நடைபெற இருந்தது. அந்த வகையில் எமது கட்சி உறுப்பினர் திறந்த வாக்கெடுப்பை கோரியது ஆனால் தமிழரசு கட்சி இரகசிய வாக்கெடுப்பை கோரியதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் தமிழரசு கட்சியுடன் இணைந்து இரகசிய வாக்கெடுப்பை கோரியதையடுத்து அங்கு இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது. எனவே இந்;த இரகசிய வாக்கெடுப்பில் யார் யாருக்கு வாக்களித்தார் என யாராலும் ஊகிக்க முடியாது இருந்தபோதும் எமது கட்சி உறுப்பனர் தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்தார் என்பது எப்படி தெரியும் அதனை சாணக்கியன் எப்படி உறுதிப்படுத்தினார் எப்படி என் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இந்த இரகசிய வாக்கெடுப்பில் ரிஎம்வி கட்சியின் உறுப்பினர் ஒருவரை உள் வாங்கியது போல தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் ஏன் தமிழரசு கட்சிக்கு வாக்களித்திருக்கு முடியாது மாவட்டதில் சகல பிரதேசசபையில் தமிழரசு கட்சிக்கு எதிராக ஜனநாயக கூட்டமைப்பு வாக்களிக்கவில்லை மண்முணை ஆரையம்பதி சபை தவிசாளருக்கு ஆதரவாக எமது கட்சி உறுப்பினர் இருந்தார.; அவ்வாறே வியாழக்கிழமை காலையில் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவின் போதுகூட எமது கட்சி உறுப்பினர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறசெய்தார.; செங்கல பிரதேச சபைக்கு தவிசாளரை ஏனைய நா.உறுப்பினர்கள் தெரிவு செய்திருந்த போது அங்கு சாணக்கியன் வேறு ஒருவரை தெரிவு செய்ததாக அங்கு குழப்பம் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது இந்த நிலையில் இவரால் முன்மொழிந்த உறுப்பினர் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவுக்கு சமூகமளிக்காமல் சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவே மண்முணை தென்ஏருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சிக்கு எமது கட்சி உறுப்பினர் வாக்களித்திருக்கு முடியாது என எப்படி இவர்களுக்கு தெரியும். உண்மையில் சாணக்கியன் என்னை தேடிவந்து பேசினார், தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் வினேர் அவ்வாறு மட்டக்களப்பு மாநகரசபை தெரிவு செய்யப்பட்ட முதல்வர் பிரதி முதல்வர் வந்து சந்தித்தனர் ஏன் இறுதி நேரத்தில் நேற்று எம்.சுமந்திரன் என்னுடன் தொலைபேசியல் தொடர்பு கொண்டார் இதன் போது அவர்கள் எல்லோருக்கும் உங்களுக்கு எதிராக வாக்களிகமாட்டோம் என கூறவில்லை ஆனால் இறுதிவரை சில கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் அவர்கள் எந்த கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கவில்லை எந்தவொரு சபையிலும் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வரவில்லை ஆனால் இன்று முஸ்லீம் காங்கிரஸ், சி.வி விக்கினேஸ்வரனுடன், மற்றும் சஜத் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதுடன் டக்கிளஸ் தேவானந்தாவை தேடிச் சென்று ஆதரவு கேட்டுள்ளனர். இருந்த போதும் ஜனநாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 106 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இந்த நிலையில் எங்களுடன் உடன்பாட்டிற்கு வருவதற்கு அவர்கள் தயாராக இல்லை ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க கூடிய இடங்களில் வாக்களித்து வருகின்றோம். கடைசிவரை சில கோரிக்கைகள் நிறைவேற்றலாம் என இருந்தோமே தவிர இவர்களுக்கு எதிரா நாங்கள் செயற்படவேண்டும் என்று இருக்கவில்லை எனவே மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாள் தெரிவில் திறந்த வாக்களிப்புக்கு கோரியிருந்தால் அந்த உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும் எனவே அதைவிடுத்து தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களை வைப்பதை சாணக்கியன் முதலில் தவிர்க்க வேண்டும் இன்று பிரதேச சபைகளை அமைப்பற்கு கூட பணரீதியான மற்றும் வேறு நலன் சார்ந்த பல டீல்கள் நடைபெறுகின்றது இன்று மாலை பட்டிப்பளை பிரதேச சபைக்கான தெரிவிற்கு நேற்று இரவு 1 மணிவரை ஒரு சில உறுப்பினர்களை சந்தித்து டீல் பேசியுள்ளனர் வாழைச்சேனையில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சிக்கு எமது உறு;பினர் வாக்களித்தார் ஆனால் நா.உ. சாணக்கியன் தென்எருவில்பற்று பிரதேச சபையில் நடந்த சம்பவத்தின் பின்னர் நாங்கள் பயந்து தமிழரசு கட்சிக்கு வாக்களித்தாக பேசியுள்ளமை விசித்திரமானது எனவே இறால் தன்னுடைய தலையில் கழிவை வைத்துகொண்டு நாறுது என கூறுவதைப் போன்று தங்களுக்குள் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு கட்சியை நீதிமன்றம் கொண்டு சென்று மக்களை புதினம் பார்க்க வைக்கும் நீங்கள் என்னை எனது கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கு சவால் விடுவதற்கு சாணக்கியன் யார்? என்ன அருகதை இருக்கின்றது கடசிக்கு மாறாக நான் நடந்தால் எனது கட்சி என்னு நடவடிக்கை எடுக்கும் நீயாhர் அதை கேட்பதற்கு உனக்கு அந்த அதிகாரத்தை யார் தந்தது? 43 வருடமாக ஒரே கட்சியில் ஒரே கொள்கையுடன் தமிழ் தேசியத்துக்காக ஆயுத போராட்டமாக இருந்தாலும் சரி அகிம்சை போராட்டமாக இருந்தாலும் சரி அரசியல் ரீதியாகவும் ஒரே கட்சியில் நான் பயணத்துக் கொண்டிருக்கின்றேன் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் தேசிம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன? போராட்டம் என்றால் என்ன? இந்த போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட இழப்பு என்ன? தமிழ் மக்களின் தேவை என்ன? என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் வெறுமனவே கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு ஏனையவர்களை தூற்றுவதை விமர்சிப்பதை விடுத்து உங்கள் கட்சியில் இருந்து கட்சிக்கு எதிராக செயற்படுகின்ற நீங்கள் உட்படவர்களுக்கு உங்கள் கட்சியால் நடவடிக்கையை முதலில் எடுங்கள் ஏனைய கட்சியில் என்ன நடக்கின்றது என்பதை எட்டி பார்க்க வேண்டாம் என்றார். https://www.battinews.com/2025/06/blog-post_894.html
  24. ஈரான் தொடர்ந்தும் தாக்குகின்றது – இருவர் பலி மேலும் பலஇஸ்ரேலியர்களிற்கு காயம் 14 JUN, 2025 | 09:35 AM இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 20 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது. டெலிகிராவ் இதனை தெரிவித்துள்ளது. சைரன் எச்சரிக்கைக்கு பின்னர் துணைமருத்துவ குழுவினர் ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அனுப்பப்பட்டனர்,பத்துபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தலைநகரிலிருந்து ரிசோன் லெசியோன் என்ற பகுதியில் வீடுகளை ஏவுகணைகள் தாக்கின என மகென் டேவிட் அலெம் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217419

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.