Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. யாழில். வாள் வெட்டு தாக்குதல் ; இளைஞன் பலி! 14 JUN, 2025 | 10:15 AM யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/217421
  2. தமிழர்கள் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன - பிரித்தானிய தமிழர் பேரவை 14 June 2025 இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடமான முள்ளிவாய்க்காலுக்கும், புதைகுழிகள் தோண்டப்பட்ட செம்மணிக்கும், செல்லவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. BTF என்ற பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்த கோரிக்கையை, விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதத்தில் இலங்கை வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின், சாட்சிய சேகரிப்பு முயற்சிகளின் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த, டர்க்கின் இந்த பயணம் உதவும் என்று, பிரித்தானியத் தமிழர் பேரவை டர்க்குக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 7 தசாப்தங்களாக, தமிழர் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்கள் மற்றும் தொடர்ச்சியான தாக்கங்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன. அத்துடன், இலங்கையின் தமிழ் சமூகங்கள் அரச அடக்குமுறை மற்றும் முறையான துஷ்பிரயோகங்களின் விளைவுகளைத் தொடர்ந்து எதிர் நோக்கி வருவதாக, பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி. ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், வடக்கு கிழக்கின் பல இடங்களுக்கும் சென்று, தமிழ் பொதுமக்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்றும், பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். https://hirunews.lk/tm/407092/successive-sri-lankan-governments-are-trying-to-cover-up-the-scars-of-atrocities-against-tamils-british-tamil-council#google_vignette
  3. பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது. எனவே பாதுகாப்பற்ற சிறுமிகள் எத்தனைபேர் உள்ளனர் எனவே இவர்களை பாதுகாப்பதுடன் இவற்றை தடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஷ்பிரயோகத்தை தடுக்கும் 'சறோஜா' திட்டம் ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்டபத்தில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த குழந்தைகள் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்கள் அதனால் இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை. ஒரு பெண் குழந்தைக்கு பாலியஸ் துஸ்பிரயோகம் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை. எனவே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும். சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தாய் தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள். இவ்வாறு ஏற்படும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுக்காப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே 'சரோஜா' திட்டமானது பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த திட்டம் எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு இந்த பாலியல் துஸ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படவேண்டும். ஏன் என்றால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இதற்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள். வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmbvriynk01u6qpbsinrqo4iq
  4. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஈரான் "சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது" இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது. இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது. “தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான தாக்குதலுக்கு எதிரான தீர்மானமான பதிலடி நடவடிக்கையின் தொடக்கமாகும்,” என IRNA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இஸ்ரேல்-மீது-நூற்றுக்கணக்கான-பாலிஸ்டிக்-ஏவுகணைகளை-ஏவிய-ஈரான்/50-359193
  5. கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு Published By: VISHNU 14 JUN, 2025 | 02:06 AM (நா.தனுஜா) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு வழிகாட்டலை வழங்கியமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக மேற்குறிப்பிட்டவாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 11,981 வாக்குகளைப்பெற்று 8 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3,894 வாக்குகளைப்பெற்று 6 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 3,894 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேட்சைக்குழு 1 மற்றும் சுயேட்சைக்குழு 2 என்பன முறையே 1967, 1286, 809, 1174 வாக்குகளைப்பெற்று தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின. இந்நிலையில் அப்பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (12) நடாத்தப்பட்டது. இதன்போது 6 ஆசனங்களைக்கொண்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் 2 ஆசனங்களைக்கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய தவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக ஒரு ஆசனத்தைப்பெற்ற ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர் வாக்களித்தார். அதன்விளைவாக அப்பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது. இந்நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற ரீதியில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற வழிகாட்டலை வழங்கினார் எனும் அடிப்படையிலேயே கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217411
  6. பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சை குழு கைப்பற்றியுள்ளது. பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளராக திரேஸ குமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பட்டிப்பளை பிரதேச தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் கோபாலபிள்ளை சுரேந்திரன் (பட்டிப்பளை வட்டாரம்) முன்மொழியப்பட்டார். சுயேட்சை குழு (பந்து) சார்பில் இளையதம்பி திரேஸ குமாரன் (அரசடித்தீவு வட்டாரம்) முன்மொழியப்பட்டார். வாக்கெடுப்பில் சுயேட்சை குழுவின் இளையதம்பி திரேஸ குமாரன் 9 வாக்குகளை பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் அரசு கட்சியின் கோபாலபிள்ளை சுரேஷ்குமார் 6 வாக்குகளை பெற்றார். தேசிய மக்கள் சக்தியின் 1 உறுப்பினர் நடுநிலை வகித்தார். பிரதி தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்பில் கனகநாயகம் கபில்ராஜ் (கொக்கட்டிச்சோலை வட்டாரம்) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் திரேஸ குமாரன் தலைமையிலான சுயேட்சை குழுவும் இணைந்து பட்டிப்பளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன. சுயேட்சை குழுவை தலைமை தாங்கியுள்ள திரேஸ குமாரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் (சி. சந்திரகாந்தன்) அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் அவர்களின் சகோதரராவார். https://adaderanatamil.lk/news/cmbuyoh6901toqpbsmkybfygk
  7. மதிய இடைவேளைக்கு முதல் முடிந்தால் முழுவதுமாக மட்ச்சைப் பார்க்கலாம்! இல்லாவிட்டால் கார் பயணத்தில் பிபிஸி சவுண்ட்டில் கொமென்ரரி கேட்கவேண்டும். அதுவும் த்ரில்லாகத்தான் இருக்கும்.
  8. சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசிய பேரவை வசம் adminJune 13, 2025 சாவகச்சேரி நகரசபை தவிசாளராக போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் திருவுளச்சீட்டு முறையின் மூலம் தவிசாளராக தெரிவாகியுள்ளார். சாவகச்சேரி நகர சபை தவிசாளர் தெரிவு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் போது தமிழரசு மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர்கள் தலா 7வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் தெரிவானார் அதே போன்று உப தவிசாளர் தெரிவின் போதும், தமிழரசு மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளர்கள் 07 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஞா. கிஷோர் தெரிவானார். அதேவேளை சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்காதவர் என வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சபை அமர்வில் கலந்துகொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/216787/
  9. மாநகர சபை ஈபிடிபியின் ஆதரவோடு.. நல்லூர் பிரதேச சபை மான் கட்சிக்கு. ஆனால் சுமந்திரன் - விக்கியின் ஒப்பந்தம் மூலம். ஆக கொள்கை என்று ஒன்றுமில்லை. கூட்டணிக் கணக்குகள் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் ஆசைதான். அதை வைத்து மக்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்கள். எவ்வளவு சுருட்டமுடியுமோ அவ்வளவு சுருட்டுவார்கள்.. குடை பிடிக்க தொண்டர்கள் இருக்குமட்டும் அதிகாரத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு குறைவில்லை!
  10. LIVE Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship AUS 212 & 207 SA (54.5 ov, T:282) 138 & 210/2 Day 3 - Session 3: South Africa need 72 runs. CRR: 3.82 • Min. Ov. Rem: 10.1 • Last 10 ov (RR): 30/0 (3.00) Batters R B 4s 6s SR Aiden Markram* (rhb) 102 156 11 0 65.38 Temba Bavuma (rhb) 62 117 5 0 52.99 Bowlers O M R W Econ Josh Hazlewood (rfm) 12.5 0 43 0 3.35 Nathan Lyon (ob) 17 3 48 0 2.82 P'SHIP: 140 Runs, 37.1 Ov (RR: 3.76) • L'BAT: Wiaan Mulder 27 (50b) • FOW: 70/2 (17.4 Ov)
  11. மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி இல்லை. அமெரிக்கா ஜனநாயகத்தை பணத்தாலும், ஊடகப் பலத்தாலும் வளைத்து ட்றம்ப்பை ஜனாதிபதியாக்கியுள்ளது. ஆனால் அவரால் நாலு வருடத்திற்கு மேல் ஆட்சி செய்யமுடியாவிட்டாலும், உலகை நீண்ட காலம் பாதிக்கும் செயல்களைச் செய்யமுடியும். ரஷ்யாவின் புட்டின், சீனாவின் ஷிஜின்பெங், இந்தியாவில் மோடி, வடகொரியவின் கிம் ஜொங் உன் என்று உலகம் முழுவதும் தனிநபர்களிடம் அதிகாரம் குவிந்துள்ளது. கட்டாயம் உலக அழிவுப் பாதையில் கொண்டு செல்லவே இந்த தனிநபர் அதிகாரம் உதவும்
  12. 5) கேள்விக்கு எனக்கு 10 புள்ளிகள் நிச்சயம்😆
  13. LIVE Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship AUS 212 & 207 SA (34.4 ov, T:282) 138 & 128/2 Day 3 - Session 3: South Africa need 154 runs. CRR: 3.69 • Min. Ov. Rem: 29.2 • Last 10 ov (RR): 33/0 (3.30) pp
  14. ஈரானின் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. ஒரு மாற்றம் அங்கு தேவை. ஆனால் நெத்தன்யாஹு தனது அதிகாரத்தை தக்கவைக்கத்தான் காஸா மீதும், லெபனான் மீதும், இப்போது ஈரான் மீதும் போர் தொடுத்துள்ளார். குட்டுவைக்க அரபு நாடுகளால் முடியாது! ஆனால் அவரை அகற்றவேண்டும்
  15. LUNCH Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship AUS (65 ov) 212 & 207 SA 138 Day 3 - Session 1: Australia lead by 281 runs. CRR: 3.18 • Min. Ov. Rem: 65 • Last 10 ov (RR): 24/1 (2.40) இன்று நல்ல வெயில் 🌞☀️ ஸ்ரார்க் அரைச் சதம் அடித்தார். அது மாதிரி தென்னாபிரிக்கா நின்று அடிக்கும்💪
  16. ஈரானின் கதை கந்தல்தான். முக்கியமானவர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருந்துகொண்டு இஸ்ரேலின் ஒரு மயிரையும் புடுங்கமுடியாது!
  17. என்ன தான் நடக்கிறது பாமகவில்…? -சாவித்திரி கண்ணன் மகன் அன்புமணியிடம், அப்பா ராமதாஸின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன? எதைப் பெறுவதற்கு இந்த முட்டல், மோதல்கள்..? நிஜமாகவே இவர்கள் இருவரும் கடுமையாக முரண்படுகிறார்களா..? இவர்கள் ஒன்றிணையும் வாய்ப்புகள் உண்டா? இல்லையா…? இதோ ஒரு அப்பட்டமான ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ ; சுயநலம் மேலோங்கிய ஒவ்வொரு தலைவரும் தன் இறுதி நாளில் இத்தகைய அவமானங்களில் இருந்து தப்ப முடியாது. ஏனென்றால், அவர்கள் எதை விதைத்தார்களோ.., அதைத் தான் அறுவடை செய்து வருகின்றனர். இந்த அருவருக்கதக்க – முற்றிலும் சுயநலமுள்ள இந்த இருவரின் – சண்டை இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதத்திலும் பயனற்றது. ராமதாஸ்- அன்புமணி பிரச்சினை பொது வெளியில் தொடர்ந்து விவாதிக்க வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் கொண்டதல்ல. முற்ற முழுக்க அலட்சியப்படுத்த வேண்டிய ஒன்று என நான் உறுதியாக நம்புகிறேன். எனினும், இந்த விவகாரம் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சில காத்திரமான படிப்பினைகள் தருகிறது என்பது மட்டுமல்ல, இந்த சண்டையின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகளை சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரையில் நான் சிலவற்றை கவனப்படுத்துகிறேன். டாக்டர் ராமதாஸ் தன் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாதவராகவே பொதுத் தளத்தில் தான் தந்த வாக்குறுதிகளைத் தானே மீறியவர். ”என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்”. ”நாங்கள் ஊழல் செய்தால் எங்களை முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள்” ”நான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என் தாயுடன் உறவு கொள்ளத்தக்க கொடுங் குற்றமாகும்…” இப்படி எண்ணற்ற வகையில் பேசி, தான் பேசியதை தானே மீறி, ‘நான் நம்பகமான தலைவரல்ல’ என்பதை அப்பட்டமாக நிறுவியவர் என்று நமக்கெல்லாம் தெரியும். அப்படிப்பட்டவர் தன் மகனிடம் நீதி, நேர்மை, நியாயங்களை எதிர்பார்த்து அது பொய்த்து போனதால் இன்று முரண்படுகிறாரா? தொண்டு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை மகனிடம் காண முடியவில்லையே என கலக்கம் கொண்டாரா? கிடையாது, கிடையவே கிடையாது. ”35 வயதில் என் மகனை கேபினெட் அமைச்சராக்கியது என் தவறு தான்” என 25 ஆண்டுகள் கழித்து தான் ராமதாஸ் சொல்கிறார்…! இந்த 35 வயதிற்கு முன்பாகவே வாஜ்பாய் அமைச்சரவையில் பொன்னுசாமியும், தலித் எழில்மலையும், சண்முகமும் இருந்த போது, ”அவர்களை சும்மா பெயருக்கு அமைச்சராக்கி, அவர்களை பின்னிருந்து நிர்பந்தித்து, கோடிக் கோடியாக பணம் சம்பாதிக்கிறார் அன்புமணி. உங்கள் மகனை கட்டுப்படுத்தி வையுங்கள்” என வாய்பாயே அழைத்து கடிந்து கொண்ட பிறகும், தன் மகனுக்கு வாதாடி மல்லுக்கட்டி, கேபினெட் அமைச்சர் பொறுப்பு வாங்கிய உத்தமர் தான் ராமதாஸ். ”ஐயோ இப்படி பொதுச் சொத்தை சூறையாடும் பிள்ளையை அமைச்சராக்குகிறோமே என அப்போது அவருக்கு மனம் உறுத்தவில்லையே..?’’ ”மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு, வரலாறு காணாத வசூல் வேட்டை நடத்துகிறார்” என வட நாட்டு ஊடகங்கள் எல்லாம் அன்புமணி குறித்து எழுதி, எழுதி மாய்ந்தனவே அப்போது கூட, ‘மகனை கேபினெட் அமைச்சராக்கியது தவறு’ என்று ராமதாசுக்கு குற்ற உணர்வு தோன்றவில்லையே…? தோன்றி இருந்தால், இன்று பாஜக தலைமை கண்டு அஞ்சி மண்டியிட்டு உங்கள் மகன் கூட்டணி வைக்கக் கோரி கதறி இருக்க வாய்ப்பில்லையே…! ‘தன் வாரிசுக்கு இடையூறாக கட்சியில் திறமைசாலிகள் யாரும் இருக்கக் கூடாது’ என எத்தனை பேரை வேட்டையாடி வெளியேற்றினார் ராமதாஸ். ஆனால் தற்போதோ, ”அரசியலில் வாரிசு என்பது கிடையாது” என திருவாய் மலர்கிறார். உடனே, அவரே தான் பேசியதற்கு முரணாக, ”அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா? இன்னும் ஓரிரு ஆண்டுகள் பொறுமை காத்திருந்தால் நானே அவருக்கு முடிசூட்டுவிழா நடத்தியிருப்பேன்…’’ என்கிறார். அதாவது, தன்னை அவமானப்படுத்தினாலும், நெஞ்சிலே குத்தினாலும், உயிருள்ள தன்னை உதாசினம் செய்துவிட்டு, உற்சவராக்கி ஏமாற்றினாலும், எல்லாமே அய்யா தான் என சொல்லிக் கொண்டே தன்னை அதள பாதாளத்தில் தள்ளினாலும், மகனே இந்தக் கட்சியின் அடுத்த தலைவர். 2026 தேர்தலுக்கு பிறகு அன்புமணி பொறுப்பில் விடுகிறேன் என்கிறார், ராமதாஸ். ஆக, பாதிக்கப்பட்டவரே, பாதிப்புக்கு உள்ளாக்கியவரை விட்டால் தனக்கு நாதியில்லை என்கிறார் என்றால், ”மகனே, 2026 தேர்தல் தான் நான் கடைசியாக சந்திக்கும் தேர்தலாக இருக்கக் கூடும். ஆகவே, அது வரையிலேனும் கூட்டணி பேரத்தில் பொட்டி வாங்கும் அதிகாரத்தில் இருந்துவிட்டு போகிறேனே…” என்பது தான் அவர் மகனுக்கு விடுக்கும் வேண்டுகோள். இதைத் தான் அவரது வார்த்தைகளில் , ”இன்னும் ஓரிரு ஆண்டுகள் இக்கட்சிக்கு தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?” என்றெல்லாம் கேட்டு புலம்புகிறார். மேலும், அன்புமணிக்கு போட்டியாக சகோதர்கள் யாரும் இல்லை. ஆகவே, ”அதிகாரத்தை அவரே ஓட்டுமொத்தமாக குவித்து வைத்துக் கொள்ளாமல், குடும்பத்திற்குள் சகோதரிகளின் பிள்ளைகளுக்கு கொஞ்சமேனும் பங்கிட்டு கொடு” என்கிறார் ராமதாஸ். ஆக, இது முழுக்க, முழுக்க பொது வாழ்வில் கிடைக்கும் பொருளாதாரம், அதிகாரம் போன்ற பலாபலன்களை பங்கிட்டுக் கொள்வதில் குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை அவ்வளவே! அன்புமணியோ, இந்த புலம்பல்கள் எதற்கும் பதில் சொல்லாமல், பாஜக தலைமை சொல்லிக் கொடுத்தபடி நடை பயணம் சென்று மக்களை சந்திக்க போகிறாராம்…! இத்தனை ஆண்டுகாலம் ஏசி அறையில் இருந்து கொண்டே சொகுசு அரசியல் செய்து வந்த அன்புமணி அவர்கள், ராமதாஸ் கூறியபடி, ’உழைக்க தயார் இல்லாதவர், தற்போது தான் மக்கள் ஞாபகம் வந்து நடை பயணமாகப் பார்க்கப் போகிறாராம்…! வன்னிய மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள், உழைத்து வாழும் உத்தமர்கள். கஞ்சி குடிக்கும் நிலையிலும் கவுரவத்தை இழக்காதவர்கள், நேருக்கு நேராக பொட்டில் அறைந்தது போல தவறுகளை தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர்கள். இவையெல்லாம், நான் நீண்ட நாட்கள் இவர்களோடு பழகி உணர்ந்த உண்மைகள். வெறும் புகழ்ச்சியில்லை. அன்புமணி நடைபயணத்தில் அவரை முச்சந்தியில் நிறுத்தி, வன்னிய மக்கள், ”உன் தந்தை வைத்த குற்றச்சாட்டுகளுக்கு உன் பதில் என்ன..?” எங்களை பகடை காயாக்கி உங்கள் குடும்பம் சேர்த்த செல்வங்கள் என்னென்ன…? போன்ற தங்களது ஏமாற்றம், கோபம், இவர்களின் துரோகம்.. ஆகியவை குறித்து கேட்கப் போகும் கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்? எனப் பார்ப்போம். ‘சமூகநீதி என்ற சாக்லேட்டை காட்டி, வெறும் கையை சப்பவைத்து விட்டு, அதிகார அரசியலின் ஆதாயங்களை முழுக்க, முழுக்க அனுபவித்துக் கொண்டு, மதவாத, பாசிச சக்திகளுடன் கைக் கோர்த்து, தமிழ்நாட்டை படுகுழிக்குள் தள்ளுவது குறித்து அப்பவிற்கோ, மகனுக்கோ சிறிதளவும் குற்ற உணர்வில்லை’ என்பதை நாம் கவனத்தில் கொள்வோமாக! ஆக, இந்த அப்பா – மகன் சண்டையில் வெல்லப் போவது யார்? என்றால், அது பணமும், அதிகாரமும் தான்! தோற்றுக் கொண்டிருப்பது தமிழக மக்கள் தாம்! சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21865/ramadoss-vs-anbumani-ramadoss/
  18. WTC Final : ரபாடா நிகிடி பந்துவீச்சில் தடுமாறும் ஆஸ்திரேலியா… வெற்றி பெறுமா தென்னாப்பிரிக்கா? 13 Jun 2025, 9:41 AM உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் யுத்தம் நடத்தி வரும் நிலையில் இறுதிப்போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 212 ரன்கள் குவித்தது. ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 138 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார். 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆட்டத்தின் 11வது ஓவரை வீசிய ரபாடா தனது ஒரே ஓவரில் கவாஜா மற்றும் கேமரூன் கிரீனை வெளியேற்றினார். மறுபக்கம் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்து அச்சுறுத்திய ஸ்மித் மற்றும் வெப்ஸ்டரை லுங்கி நெகிடி ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் அரை சதம் நோக்கி நகர்ந்த அலெக்ஸ் கேரியை (43) ரபடாவும், கேப்டன் கம்மின்ஸை (6) நிகிடியும் வெளியேற்றினர். இருவரின் அபாரமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. எனினும் களத்தில் ஸ்டார்க் மற்றும் லியன் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. https://minnambalam.com/will-south-africa-chase-aus-and-take-crown/
  19. முள்ளியவளையில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள்: தன்னிலை விளக்கமளித்த பெண் June 13, 2025 11:44 am தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது. அதன் பின்னர் தாம் இந்த பதாதையை அமைத்தமைக்கான காரணத்தை பெண் ஒருவர் இன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்திருந்தார். அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமை சிங்களம் கற்பிக்கும் நிலையம் ஒன்றினை நடாத்தி வருகிறேன். பொசன் போயா நிகழ்வினை எவ்வாறு கொண்டாடுவது என மாணவர்களுக்கு விளக்கமளிக்கவே பொசன் போயா நிகழ்வை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தேன். பௌத்த மதம் எவ்வாறு இலங்கைக்கு பரப்பப்பட்டது என்பதையே காட்சிப்படுத்தியிருந்தேன். அதனை சிலர் வந்து உடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நான் இது சம்பந்தமாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளேன். நான் மதத்தை பரப்புவதற்கோ அல்லது பௌத்தமதம் இங்கே வரவேண்டும் என்பதற்காக செய்யவில்லை இங்கே கற்கும் பிள்ளைகளுக்கு செயல்முறை வடிவிலே செய்து விளக்கமளிக்கவே இதை செய்தேன். வெளியே தெரியும் வகையிலே காட்சிப்படுத்தினாலே மாணவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.” என்றார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முள்ளியவளையில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் அமைக்கப்பட்தனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு குறித்த பதாதைகள் இனம் தெரியாதவர்களால் கிழித்தெறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/banners-in-the-shape-of-a-buddhist-temple-in-mulliyawalli-woman-explains-her-position/
  20. ”இதனால்தான் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” – விமான விபத்து குறித்து அமித்ஷா! June 13, 2025 ”விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் சுமார் 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. இதனால் விபத்தின்போது வெப்பம் அதிகரித்ததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், இறந்தவர்களை அடையாளம் காண உதவும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அமித்ஷா, காயமடைந்தவர்கள் குணமாகத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அதே நேரம் ”30 நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது.” என விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் தெரிவித்துள்ளார். ”ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சுமார் 30 விநாடிகளில் நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு பெரிய சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில், விமானம் விபத்துக்குள்ளானது” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் விமான விபத்திலிருந்து உயிர் பிழைத்த ஒரே நபரான 40 வயதான விஸ்வாஸ் குமார். ”நான் எழுந்தபோது, என்னைச் சுற்றி உடல்கள் சிதறிக் கிடந்தன. எனக்குப் பயமாக இருந்தது. நான் வெளியேறியபோது, என்னைச் சுற்றி விமானத்தின் பாகங்கள் கிடந்தன.” எனத் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் அஜய்யும் தன்னுடன் பயணித்ததாக தெரிவித்துள்ள விஸ்வாஸ் அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். லண்டனில் வசிக்கும் இந்தியரான விஸ்வாஸ் விடுமுறைக்கு அகமதாபாத் வந்து திரும்பும்போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/இதனால்தான்-யாரையும்-காப/
  21. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் திரு. த சுதாகரன் தற்காலிகமாக இடைநிறுத்தம்..! Vhg ஜூன் 12, 2025 கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் படகு சின்னத்தில் கோட்டைக்கல்லாறு (09 ஆம் வட்டாரத்தில்) வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த திரு த. சுதாகரன் கட்சியின் கொள்கை விதிகளுக்கு முரணாகவும், கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் இன்று (12) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தவிசாளர், மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது செயல்பட்டதன் காரணமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களின் கையொப்பத்துடன் மேற்படி உறுப்பினரை தற்காலிகமாக இடை நிறுத்தி, அவர் பக்க ஏதுவான காரணங்களை சமர்ப்பிக்க கோரியதான கடிதமானது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. https://www.battinatham.com/2025/06/blog-post_74.html
  22. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மேம்படுத்த இந்தியா மீண்டும் உதவி General13 June 2025 நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பயணிகள் கப்பல் சேவையை, மேம்படுத்துவதற்காக, இந்திய அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நிதி உதவியை நீடித்துள்ளது. இது பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. உயர்ஸ்தானிகராலய தகவல்படி, இந்திய செயல்திறன் இடைவெளி நிதியளிப்பு பொறிமுறையின் கீழ், இலங்கைக்கு ஆண்டுதோறும் 300 மில்லியன் இந்திய ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது, கடந்த ஆண்டைப் போலவே, முக்கிய செயற்பாட்டு செலவுகளை ஈடுகட்டுவதன் மூலம், கப்பல் சேவையின் மலிவு மற்றும் செயற்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதை, இந்த நிதியளிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, 15,000 க்கும் மேற்பட்ட பயணிகளை, குறித்த கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://hirunews.lk/tm/407015/india-again-helps-improve-nagapattinam-kankesanthurai-ferry-service
  23. ‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’ முருகானந்தம் தவம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி.) ஆதரவு கேட்டு அக்கட்சியின் அலுவலகப் படி ஏறியமை தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பி.டி.பி.) தமிழினத் துரோகிகள், ஓட்டுக்குழு, ஆயுதக்குழு, இராணுவ துணைக்குழு, தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் படுகொலை செய்யப்படவும் காணாமல்போகவும் காரணமானவர்கள், காட்டிக்கொடுப்பவர்கள் என்றெல்லாம் இதே தமிழரசுக் கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டுத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்ட ஈ.பி.டி.பியிடமே ஆதரவு கேட்டு தமிழரசு கட்சி மண்டியிட்டுள்ளமை தமிழ் தேசியப் பரப்பில் மட்டுமன்றி, தமிழரசுக் கட்சிக்குள்ளும் கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தொகுதிவாரி, விகிதாசார முறைமையினால் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட நெருக்கடிகளினாலேயே தமது தமிழ்த் தேசிய முகமூடிகளைக் கழற்றி வைத்துவிட்டு, தமிழினத் துரோகிகள், ஒட்டுக்குழு, இராணுவத் துணைக்குழு என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட, ஒதுக்கிவைக்கப்பட்ட தரப்புக்களின் காலடி தேடித் சென்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி சிரம் தாழ்த்தி தரம் தாழ்ந்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் மீது வசை பாடப்படுகின்றது.தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான பற்றுறுதியும் கொள்கைப் பிடிப்பும், இலட்சியமும் கொண்ட ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க வரட்டுக் கௌரவமும் மேதாவித் தலைக்கனமும் ஆணவமும் தமிழரசிலுள்ள சில மூக்கு வீங்கியவர்களின் தமிழ்த் தேசிய மறுப்பும் இடம்கொடுக்காமையினால்தான் தங்களினாலேயே துரோகிகள் என பட்டம் சூட்டப்பட்டவர்களிடம் பதவி மோகத்தினால் பகை மறைந்து அடிபணிந்துள்ளது தமிழ்த் தேசியத்தின் தாய் கட்சியான தமிழரசுக் கட்சி. இது பதவிகளுக்கா தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் எந்தளவு கீழ்த்தரமான நிலைக்கும் தரம் இறங்குவார்கள், எந்தளவு கீழ்த்தரமான வேலைகளையும் செய்வார்கள் என்பதற்கான உதாரணமாகவும் மாறிப்போயுள்ளது. உள்ளுராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைக்க ஏனைய தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரவளிக்கத் தயாராக இருந்த போதும் அவர்களுக்கு எந்தவொரு விட்டுக் கொடுப்பையும் செய்ய மறுத்து அவர்களை நிராகரித்து விட்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவர், டக்ளஸ் தேவானந்தாவை அவரது யாழ். நகரிலுள்ள ஸ்ரீதர் திரையரங்கு அலுவலகம் சென்று ஆதரவு கோரியுள்ளார். இந்த சந்திப்பு விடயம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அதுமட்டுமன்றி, இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் ஒருவர் தன்னைச் சந்திப்பதற்குப் பல தடவைகள் முயற்சி செய்ததாகவும் அதன் பின்னரே சிவஞானம் சந்தித்து ஆதரவு கோரியதாகவும் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக கூறியுள்ளதன் மூலம், டக்ளஸ் தேவானந்தா தனது கொள்கையில் இன்று வரை உறுதியாகவுள்ள நிலையில் தமிழரசுதான் பதவிகளுக்காகக் கொள்கையை விட்டுக் கொடுத்துள்ளதுடன், கட்சியையும் ஆதரவாளர்களையும் தமிழ் மக்களையும் காட்டிக்கொடுத்துள்ளது. ஈ.பி.டிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது, கட்சியின் அடிமட்ட தொண்டனால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மையில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் மற்றும் கருணா ஆகியோர் எங்களுடன் சேர்ந்து தமிழரசுக் கட்சி பயணிக்க வேண்டும் என்றனர். எனவே, தற்போதைய சூழ்நிலையில் சி.வி.கே.சிவஞானம் அவர்களுடனும் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. டக்ளஸ் தேவானந்தாவுடன் கூட்டணி சேர முடிவெடுத்த இவர்களுக்கு பிள்ளையான் - கருணாவுடன் கூட்டணி சேர்வது இலகுவானது என்று தமிழரசுக் கட்சியினர் புலம்புமளவுக்குத் தமிழரசின் தலைமை அரசியல் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழரசின் தலைவர்கள் இதுவரை கட்டிக் காத்துவந்த கட்சியின் கொள்கை, தமிழ்த் தேசியம் மீதான பற்றுறுதி, கட்சி மீதான விசுவாசம், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பவற்றை இன்று சதிகள், கழுத்தறுப்புகள், குழிபறிப்புக்கள் மூலம் தலைமைப் பதவிக்கு வந்தவர்கள் ஒட்டுமொத்தமாகக் கைவிட்டு, காட்டிக்கொடுத்து தமிழ் மக்களினால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் கைகோர்த்து தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களையும் புறந்தள்ளிச் செயற்படத் தொடங்கியுள்ளமை விரைவில் ‘இலங்கை தமிழரசுக் கட்சி’ என ஆல விருட்சத்தை அடியோடு சாய்த்து விடவுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் ஒரு கட்சியாக ஒரு தடவை அப்போதைய தமிழரசுக் கட்சியினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தலைவராகவிருந்த இரா.சம்பந்தனை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட சில ஆசனங்களைக் கோரியபோது, ‘தமிழரசுக் கட்சி அஹிம்சாவளிக்கட்சி. அதில் ஆயுதம் தூக்கியவர்கள் போட்டியிடமுடியாது. தேவையானால் தமிழரசு தலைமையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடம் ஆசனம் கேட்டுப்பாருங்கள்’ என கூறி முன்னாள் போராளிகளின் கோரிக்கையை நிராகரித்து அவர்களைத் திருப்பி அனுப்பியிருந்தார். இவ்வாறாக பாராளுமன்றத் தேர்தல் போட்டியிட வேட்பாளர் பட்டியலில் சில இடங்களைக் கேட்ட தமிழ் மக்களின் உரிமைக்காகப் போரிட்ட, அளப்பரிய தியாகங்களைச் செய்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளையே ‘ஆயுதம் தூக்கியவர்கள்’ என்ற காரணம் காட்டி, தமிழரசின் தலைமை நிராகரித்த நிலையில்தான் தமிழின போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த, இராணுவத்துடன் இணைந்து ஆயுதக் குழுவாக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈ,.பி.டி.பியுடன் ஆதரவுடன் ஆட்சியமைக்க அவர்களின் காலடிக்கே சென்றுள்ளது தற்போதைய தமிழரசின் தலைமை. தலைமைப் பதவிக்கு தகுதியில்லாத தற்குறிகள் தலைவர்களானால் ஒரு கட்சியின் நிலைமை ‘விபசாரம்’ செய்வதற்கு ஒப்பானதாகிவிடும் என்பதற்கு ‘இலங்கை தமிழரசுக் கட்சி’ தான் தற்போது சிறந்த உதாரணம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விபசாரம்-செய்ய-ஒப்பானதான-தமிழரசுக்-கட்சி/91-359119
  24. நல்லூர் சபையில் மானின் ஆட்சி! யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசசபையில் இன்று தமிழ் மக்கள் கூட்டணி (மான்) ஆட்சியமைக்கும் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது. நல்லூர் பிரதேசசபையின் அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபுவின் தலைமையில் நல்லூர் பிரதேசசபையின் சபா மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் பிரதேசபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், தமிழரசுக் கட்சியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து ஆட்சி மைப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. முதலிரு ஆண்டுகளில் தமிழ் மக்கள் கூட்டணியும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழரசுக் கட்சியும் ஆட்சியமைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே, நல்லூர் பிர தேசசபையில் தமிழ் மக்கள் கூட்டணி இன்று ஆட்சியமைக்கும் என்று உறுதியாகத் தெரியவருகின்றது. நல்லூர் பிரதேச சபையின் கடந்த ஆட்சிக்காலத்தில் தவிசாளராகச் செயற்பட்ட ப.மயூரன் இம்முறையும் தமிழ் மக்கள் கூட்டணிகள் விரைவில் விடுவிக்கப்படும். மாவட்டச் செயலர் ஊடாகப் பிரதேச செயலாளரிடம் அந்தக் காணிகள் பாரப்படுத்தப்படும் - என்றார். https://newuthayan.com/article/நல்லூர்_சபையில்_மானின்_ஆட்சி!
  25. சாவகச்சேரி நகரசபையில் வீடா... சைக்கிளா...இன்று கடும்போட்டி சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார்? என்பது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவைக்கும்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் அமர்வு உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. இதில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழரசுக் கட்சிக்கும். தமிழ் மக்கள் பேரவைக்கும் இடையில் பலப்பரீட்சை நடைபெறவுள்ளது. இருதரப்பினரும், தமக்கு ஆதரவைக் கோரி நேற்று இரவிரவாக பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். https://newuthayan.com/article/சாவகச்சேரி_நகரசபையில்_வீடா..._சைக்கிளா...இன்று_கடும்போட்டி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.