Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்! இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது! adminJune 12, 2025 மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வீட்டு திட்ட பயணிகளுக்கு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், உங்களுக்கு சிறிய வீடு அமைக்க நாம் உதவுகின்றோம். அதைப் பெரிய வீடாக மாற்றுவது உங்களின் திறமையில்தான் தங்கியிருக்கின்றது. அதைப்போல எதிர்வரும் மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். அதேவேளை வடக்கு மாகாண பிரதம செயலாளர், எவ்வளவோ பேர் வீடுகள் தேவையுடையதாக இருக்கத்தக்கதாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். விரைவாக வீடுகளைக்கட்டி குடியமரவேண்டும் என்றார்.வீடுகளைக் கட்டுவதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டதுடன், வீடுகளைக் கட்டுவதற்குத் தேவையான மூலப்பொருட்களை காலநேரத்துடன் கொள்வனவு செய்யுமாறும் பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது இலங்கையில், வடமாகாணத்திலையே வீட்டு திட்டத்திற்காக அதிக தொகையாக 18 இலட்ச ரூபாய் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாண அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இம்முறை மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளமையால் வீட்டுத் திருத்தத்துக்காக 238 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. வடக்கில் உள்ள உங்களுக்கு தலா 18 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன எந்தவொரு வீட்டுத் திட்டத்திலும் இந்தளவு நிதி வழங்கப்படுவதில்லை. நாம் முதல் முறையாக அதிகளவு நிதியை வீட்டுத் திட்டத்துக்கு வழங்கியுள்ளோம். இதை நடைமுறைப்படுத்த உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். அதைப்போல வீடுகளை கட்டி முடித்த பின்னர் நீங்கள் அதில் வாழவேண்டும் என தெரிவித்தார் https://globaltamilnews.net/2025/216689/
  2. நேற்று BBC Radio 4 இல் ஆஸி கொமென்ரேற்றர் ஜிம் மக்ஸ்வெல் இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றார். பார்ப்போம்!
  3. இந்த மட்ச் போகின்ற போக்கைப் பார்த்தால் 3 நாளுக்குள் முடியும். யார் வெல்வார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் ட்ராவில் முடியாது! . நாலாம் நாள் ரிக்கெற் £60 க்கு வாங்கி refund க்கு அலையவேண்டுமா! நேற்று வேலையிடத்திற்கு போயிருந்தேன். திரும்பும் பக்கம் எல்லாம் இருக்கும் ரிவிக்களில் கிரிக்கெட்தான் போய்க்கொண்டிருந்தது.. ஆனால் ஒரு ஓவர் ஆறுதலாகப் பார்க்கமுடியாத வேலை!
  4. சவேந்திர சில்வா மற்றும் அமைச்சர் பிமல் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் சீற்றம் பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப்படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். எனசமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (11.06.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மணி சமூக புதைகுழியில் தோண்டத் தோண்ட கொலை செய்து புதைக்கப்பட்ட அல்லது உயிரோடு புதைத்து கொல்லப்பட்டோரின் உடல் எச்சங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் தோன்றுகின்றன. இதற்கான நீதி விசாரணை நடத்தப்படும் என நீதி அமைச்சர் குறிப்பிட்டாலும் அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப அத்துறையில் சர்வதேச நிபுணத்துவம் கொண்டவர்களால் நடத்தப்பட்டால் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ள இனப்படுகொலைளுக்கு முகம் கொடுத்து வலிகளை சுமந்து அரசியல் நீதிக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதி கிட்டும். தேசிய மக்கள் சக்தி இதற்கான கதவுகளை திறக்குமா? அல்லது நாட்டின் இறைமை எனக் கூறி நீதிக்கான தடைகளை விதிக்குமா? என்பதே எமது கேள்வி. தற்போது அகழப்படும் செம்மணி சமூக புதைக்குழி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க ஆட்சி காலத்துக்குரியது. இப்புதைகுழியை மூடி மறைக்கவும் கொலையாளிகளை பாதுகாக்கவும் அக்காலத்தில் சமாதான தேவதையாக காட்சியளித்த சந்திரிக்கா மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியாக தற்போது அனுர குமார தலைமையில் பதவியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர்களே. தற்போது அகழப்படும் சமூக புதைகுழியை விட மேலும் பல சமூக புதைகுழிகள் தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றிற்கு எல்லாம் விசாரணையை நடத்த எந்த ஒரு ஆட்சியாளர்களும் துணியவில்லை. அகழ்வு மற்றும் ஆராய்வு அறிக்கைகளை எல்லாம் பாதாள கிடங்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழர் தாயகப் பூமியில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள படை முகாம்கள் அதன் சூழவுள்ள வளவுகள் மற்றும் நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகளிலும் சமூக புதை குழிகள் இருக்கலாம். அவ் அந்நில பிரதேசங்களும் ஆய்வுக்கூட்படுத்தப்படல் வேண்டும். வன்புணர்வின் பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கிருஷாந்தி தொடர்பில் மரண தண்டனை கைதியான கோப்ரல் சோமரத்னா என்பவரால் 600 மேற்பட்டோர் செம்மணியில் கொன்று புதைக்கப்பட்டார் எனக் கூறியதன் பின்னர் அதனோடு தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டோர் விடுவிக்கப்பட்டது மட்டுமல்ல பதவி உயர்வுகளும் அரச சலுகைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில் சமூக புதைகுழியை ஆட்சியாளர் ஏற்றுக் கொண்டு அக்காலப்பகுதியில் இப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாய் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுகளையும் அரச சலுகை கைகளையும் அரசு மீளப்பெறல் வேண்டும். இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை. மனிதாபிமான வகையில் மீட்பு யத்தமே நடந்தது எனக் கூறும் முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர சில்வா போன்றவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகரா போன்றவர்கள் மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவும் செம்மணி சமூக புதைகுழி காட்சிகளை கண்ட பின்னர் தாமத நிலைப்பாட்டை மாற்றி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவர்கள் மட்டுமல்ல தமிழர்களின் வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரம் நாற்காலிகளில் அமர்ந்த பின்னர் அரச சுகங்களுக்காக இனப்படுகொலை ஆட்சியாளர்களை பாதுகாத்து அரசியல் போராட்டத்தையும், போராளிகளையும் காட்டிக் கொடுத்தவர்களும் தம் மனசாட்சிகளை தொட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மனித குலத்துக்கு எதிரான திட்டமிட்ட இன படுகொலை 2009 இறுதி யுத்தத்திற்கு முன்னரும் இலங்கை பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தியுடமைக்கு மிக ஆணித்தரமான சாட்சியாகவே செம்மணி சமூக புதைகுழி காட்சி தருகின்றது. இது மனித நேயம் கொண்ட மனசாட்சி உள்ளோரை நிச்சயமாக தட்டி எழுப்போம். இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர் தாயகத்தில் தமிழர்களை கொன்று குவித்ததும், காணாமலாக்கப்பட்டு சமூக புதைகளுக்குள் தள்ளியதும், ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை செய்து சிறைகளில் அடைத்ததும் இலட்சக்கணக்கானோரை புலம்பெயர வைத்ததும் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல தமிழரின் தாயகத்தையும் தேசியத்தையும் அதன் அரசியல் வழிதடத்தையும் அழிப்பதற்காகவே. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் பேரினவாத சக்திகள் அரசியல் முள்ளிவாய்க்காலில் எம்மை மூழ்கடிக்கவே திட்டங்கள் தீட்டத்தொடங்கியுள்ளதோடு அவர்களின் அரசியல் முட்கம்பி வேலிக்குள் நிரந்தரமாக அடைத்து வைக்கவும் துடிக்கின்றனர். போராளிகள் விதையான மண்ணில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நிலத்திலிருந்தும் எழுகின்ற குரலை தமிழர் தேச அரசியலுக்கான குரலாக ஏற்று கொள்கை அடிப்படையில் அரசியலை முன்னோக்கி நகர்த்த ஒன்று படுமாறு தமிழ் தேச அரசியல் தலைமைகளை கேட்கின்றோம். https://akkinikkunchu.com/?p=328398
  5. செம்மணிப் மனிதப் புதைகுழியின் உண்மைகளை கண்டறிய அரசு ஒத்துழைக்க வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்து June 11, 2025 செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன. முன்னதாக, செம்மணிப்பகுதியில் கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறுதி தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையில் தான் செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன. ஆனாலும் அந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைற்கு முன்னதாகவே அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப்பின்னராக பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந்தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மன்னாரில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அது முன்னெடுக்கப்படவில்லை. பின்னர் கொக்குத்தொடுவாயில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழகப்பட்டபோதும் அப்பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையில் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்படக்கூடாது. விசேடமாக அங்கு இளம்பிள்ளைகள், பெண்கள் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆகவே இதற்குப் பின்னால் என்ன நடைபெற்றுள்ளது, யார் இதற்கு காரணமானவர்கள், எந்தக்கால கட்டத்தில் நடைபெற்றது என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே செம்மணி புதைகுழியின் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு பணமில்லையென்றோ வேறு காரணங்களைக் கூறியோ அப்பணிகள் இடை நிறுத்தப்படக்கூடாது. அரசாங்கம் அகழ்வுப்பணிகளுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்தி தாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பதை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் என்றார். https://www.ilakku.org/government-should-cooperate-in-uncovering-the-truth-about-the-semmani-mass-grave-sumanthiran-urges/
  6. தையிட்டி திஸ்ஸவிகாரையை புலம்பெயர் தமிழர்களே எதிர்க்கின்றனர் : சிங்கள அமைப்பு கருத்து June 11, 2025 தையிட்டி திஸ்ஸ விகாரையை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்கள் எதிர்க்கவில்லை. புலம்பெயர் தமிழர்களே எதிர்க்கின்றனர் என்று சிங்கள அமைப்பொன்று தெரிவித்துள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டின் பின்னர் அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகாக வசிக்கும் தமிழர்களும், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்களும் விகாரையை எதிர்க்கவில்லை. ஆனால், புலம்பெயர் தமிழர்களே விகாரைக்குக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றனர். தங்களின் சுயலாபத்துக்காக விகாரையை அடிப்படையாக வைத்து திட்டமிட்டுப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர் என்றனர். https://www.ilakku.org/தையிட்டி-திஸ்ஸவிகாரையை/
  7. உலகிற்கு என்னை போன்ற பல கோபக்கார இளம் பெண்கள் தேவை - டிரம்பிற்கு கிரெட்டா தன்பேர்க் பதிலடி Published By: RAJEEBAN 11 JUN, 2025 | 10:34 AM உலகிற்கு என்னை போன்ற பல கோபக்கார இளம் பெண்கள் தேவை என பிரான்சில் சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் இருந்து பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டுள்ள கிரெட்டா தன்பேர்க் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க் கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என கற்றுக்கொடுக்கும் வகுப்புகளிற்கு செல்லவேண்டும் என தெரிவித்திருந்தமைக்கு பதில் அளிக்கையிலேயே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். உலகிற்கு என்னை போன்ற பல கோபக்கார இளம் பெண்கள் தேவை என நான் நினைக்கின்றேன் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் எங்களை சர்வதேச கடல்பரப்பில் வைத்து கடத்தியது,எங்கள் விருப்பத்திற்கு மாறாக தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர் என குறிப்பிட்டுள்ள தன்பேர்க் இந்த பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பது எங்களிற்கு தெரியும்,காசாவிற்கு சென்று மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதே எங்களின் நோக்கம்,செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் காசா செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதே உலக நாடுகள் செய்யக்கூடிய ஆகக்குறைந்த விடயம் என கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார். கிரெட்டா தன்பேர்க்கினை இஸ்ரேல் பிரான்சிற்கு செல்லும் விமானத்தின் ஊடாக அவரது நாடான சுவீடனிற்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217141
  8. லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு Freelancer / 2025 ஜூன் 11 , மு.ப. 08:18 அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதியான 1 சதுர மைல் பரப்பளவில் பொருந்தும் என்றும், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் எனவும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் அறிவித்துள்ளார். (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/லொஸ்-ஏஞ்சல்ஸில்-ஊரடங்கு-உத்தரவு/50-358984
  9. தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளது - குருசாமி சுரேந்திரன் 11 June 2025 தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி தவறவிட்டுள்ளதாக ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த கட்சியின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத் தரப்பாக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்குப் பல தடவைகள் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் உதாசீனப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பல விட்டுக்கொடுப்புகள் அரவணைப்புகளின் அடிப்படையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான கொள்கை ரீதியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்தநிலையில், வன்னியில் தமிழ்த் தேசிய கட்சிகளிடம் சபைகளைக் கையளிப்பது குறித்து திங்களன்று தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானத்தின் அலுவலகத்தில் அந்த கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனுடன் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது வன்னியின் அரசியல் சூழ்நிலை பற்றிக் கலந்துரையாட முற்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறதோ அதற்கான பதில் நடவடிக்கை வன்னியில் அமையுமெனத் தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் தெரிவித்தார். வன்னியில் அதிக சபைகளை ஆளும் தரப்பு கைப்பற்றும் நிலை காணப்படுகிறது. பல சபைகளில் தனி ஒரு கட்சியாக அவர்கள் ஆசனங்களை பெற்றுள்ளார்கள். தமிழ்த் தேசியப் பரப்பினர் இணைந்து செயலாற்றாது விட்டால் இந்த சபைகளை ஆளும் தரப்பிடம் இழக்க வேண்டிய சூழ்நிலை வரும். தமிழ்த் தேசிய பரப்பினர் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வடக்கு கிழக்கில் அனைத்து சபைகளையும் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதற்குக் கால அவகாசம் உள்ளது. அதை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்தோம் , அதற்குத் தகுந்த பதில்கள் கிடைத்திருக்கவில்லை. மேலும் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றுத் தமிழ்த் தேசியப் பரப்பினர் ஒன்று கூடி ஆட்சியைக் கைப்பற்றுவதே மக்களின் எதிர்பார்ப்பாகும். அதற்காக விட்டுக்கொடுப்பு, அரவணைப்பு என்பன மிக அவசியம். தலைமைகளின் வறட்டு கௌரவம் இதற்குத் தடையாக இருக்கக் கூடாது எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/406823/the-tamil-nationalist-party-has-missed-its-last-opportunity-for-unity-across-the-tamil-national-spectrum-gurusamy-surendran
  10. கிழக்கில் தமிழரசுக்கட்சியின் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது. மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட தமிழரசுக்கிளையின் தலைவருமான இரா.சாணக்கியன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் கட்சியின் உறுதியுரையும் எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நடந்து முடிந்த தேர்தல் மட்டக்களப்பை பொறுத்தமட்டிலும் சரி வடக்கு கிழக்கை பொறுத்தமட்டிலும் சரி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாரிய வெற்றி கிடைத்திருக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இம்முறை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே 86 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அது உண்மையில் எங்களுடைய கட்சிக்கு பெரும் வெற்றியாகும். 2018 ஆம் ஆண்டு நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டதை விட அதிகளவான ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியாக தனித்து நின்று எங்களுடைய உறுப்பினர்களை தெரிவு செய்திருக்கின்றோம். நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி ஏதோவொரு வகையாக ஆட்சியதிகாரத்தை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்ற நல்லதொரு செய்தியை இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றோம். இதிலே தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒன்பது பிரதேச சபைகளிலே நாங்கள் தவிசாளர் ஒருவரை, மேயர் ஒருவரை, உதவி தவிசாளர் ஒருவரை, பிரதி மேயர் ஒருவரை எங்கள் கட்சியின் சார்பில் முன்மொழிய இருக்கின்றோம். நாங்கள் போட்டியிட்ட அனைத்து சபைகளிலும் தவிசாளர் பதவி எங்கள் கட்சிக்குத்தான் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் சிறுபான்மையாக இருக்கும் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரண்டு சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எங்களுடைய உறுப்பினர்கள் தான் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றார்கள். தேர்தலுக்கு முன்பாக நாங்கள் சொன்னதற்கு இணங்க மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எங்களுடைய உறுப்பினர்கள் வெற்றியடைந்திருக்கின்றார்கள். நாங்கள் சில சபைகளிலே முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. குச்சவெளி, மூதூர் போன்ற சபைகளிலே 40 வீதமான தமிழர்களும் 60 வீதமான முஸ்லிம்களும் இருக்கின்ற மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது. யாழ் மாநகர சபையிலே நாங்கள் எங்களுக்கு கிடைத்த பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் உறுப்பினருக்கு வழங்கியதாக எங்களுடைய கட்சியை சேர்ந்தவர்களல்ல கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் விமர்சித்திருக்கின்றனர். அதே நேரம் 60 வீதமான முஸ்லிம்கள் வாழும் மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது. எங்களுடைய அரசியல் குழுக் கூட்டத்திலே நாங்கள் எடுத்த தீர்மானம் தமிழ் பேசும் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நாங்கள் எங்களுடைய தவிசாளர் பதவிகளை எடுப்பதற்கான வேலைகளை பார்க்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியைத்தவிர ஆசனங்களைப் பெற்ற ஏனைய கட்சிகளாக தேசிய மக்கள் சக்தி, கிழக்குத் தமிழர் கூட்டணி அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சங்கு சின்னத்தில் போட்டியிட்ட கட்சி, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு 2 ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் உள்ளன. இதிலே இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் தவிசாளராகவும் மேயராகவும் பிரதி தவிசாளராகவும் பிரதி மேயராகவும் நாங்கள் வேட்பாளர்களை முன்னிறுத்தும்பொழுது இதிலே தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் எங்களுடைய கட்சிக்கு விரும்பினால் ஆதரவளிக்கலாம். மட்டக்களப்பு மாவட்டத்திலே நாங்கள் எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து சபைகளில் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும். நேற்றுக்கூட மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற ஈ.பி.டி.பி உறுப்பினர்களை சாணக்கியனுடைய அலுவலகத்திற்கு அழைத்திருக்கின்றார்கள் என்று பொய்யான செய்திகளை பரப்பியிருந்தனர். இப்படியான பொய்யான செய்திகளை பரப்பி எங்களுடைய மாவட்டத்தில் எங்களுடைய கட்சிக்குள்ளே பல குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இது முற்றாக பொய்யான செய்தியாகும். பல கட்சிகள் எங்களுடன் பேசியிருந்தனர். நீங்கள் இந்த சபைகளை விட்டுத்தந்தால் நாங்கள் மற்றைய சபைகளிலே உங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவோம் என்று அதிலே சில கட்சிகள் கூறியிருந்தனர். எங்களுடைய கட்சியை சேர்ந்த ஒருவர் தவிசாளராக, மேயராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றபோது எங்களுடைய கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் அந்த சந்தர்ப்பத்தை இன்னுமொரு கட்சிக்கு வழங்குவதை விரும்பமாட்டார்கள். ஏனைய கட்சிகளுடைய செயற்பாடு எவ்வாறாக அமையுமென்று நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். தேசிய மக்கள் சக்தி ஒரு பேரினவாதக் கட்சியாகும். தமிழ் மக்களுக்கு விரோதமான கட்சியாகும். இந்த மாவட்டத்திலே ஆட்சியமைப்பதற்கு விரும்புமாக இருந்தால் அவர்கள் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைப்பது என்றால் அது அவர்களுடைய முடிவாகும். அதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள். அதேபோல சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது உறுப்பினர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கோ தேசிய மக்கள் சக்திக்கோ ஆதரவாக வழங்கப்போகின்றார்கள் என்றால் மக்கள் அதற்கான தீர்ப்பை வழங்கட்டும். அவர்கள் தமிழ் மக்களுடைய பிரதானமான கட்சியும், கூடிய ஆசனங்களை பெற்ற கட்சியுமான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்காது விடுவார்களானால் அவர்களுடைய எதிர்கால அரசியலைப்பற்றி மக்கள் முடிவெடுக்கட்டும். நாங்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கின்றோம். நாங்கள் பிரதானமான கட்சி என்ற வகையிலே எங்களுடைய உறுப்பினர் ஒருவரை அந்த உள்ளுராட்சிமன்றத் தலைவராக முன்மொழிகின்றோம். நீங்கள் உங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவைத் தரலாம். இலங்கைத் தமிழரசுக் கட்சியை தோற்கடிப்பது மாத்திரம் தான் உங்களுடைய நோக்கம் என்றால் எங்களுடைய கட்சியைத் தோற்கடிப்பதற்கு மனச்சாட்சிக்கு ஒவ்வாத விடயங்களை நீங்கள் செய்வீர்களானால் அதற்கான பதிலை எதிர்வரும் காலங்களில் எங்களுடைய மக்கள் வழங்குவார்கள். பல கட்சிகள் இன்று கைகளில் இருக்கும் விரல்களின் எண்ணிக்கையை விடவும் குறைவான உறுப்பினர்களை பெற்றிருக்கின்றார்கள். அதுவும் இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களை அனைத்து சபைகளிலும் தவிசாளராக நியமிப்பதற்கு அனைத்து கட்சிகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் முன்வரவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் தமிழ் மக்களுக்க எதிரான ஒரு சக்தி பிரதேசங்களில் ஆட்சியமைப்பதற்கு உதவியாக இருக்கின்றீர்கள் என்ற செய்திதான் வெளிவரும். நாளைய தினமிருந்து சபைகளிலே வாக்கெடுப்பு ஆரம்பமாக இருக்கின்றது. போரதீவுப்பற்று, வவுனதீவு சபைகளில் நாங்கள் அறுதிப்பெரும்பான்மையுடன் வென்ற காரணத்தினால் எங்களால் அங்கு ஆட்சியமைக்கக்கூடியதாக இருந்தது. 09 ஆம் திகதி இரண்டு சபைகளிலும் தவிசாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள். இன்று (11) முதலாவதாக மாநகரசபையிலே வாக்கெடுப்பு நடைபெறவிருக்கின்றது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். அனைத்து சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைக்கக்கூடியதாக இருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல சபைகளிலும் வாக்கெடுப்பை நடத்தி முடிப்போம். எங்களுடைய உறுப்பினர்கள் அனைத்து சபைகளிலும் தலைவர்களாக தெரிவுசெய்யப்படுவார்கள். இது ஒரு பாரிய வெற்றியாகும். இந்த வெற்றியிலிருந்து எங்களுடைய அடுத்த இலக்கு மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து அனைவரும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை வைத்து எங்களுடைய மக்களுக்கு பிரதேச ரீதியாக சேவைகளை வழங்கலாம். ஆனால் மாகாண ரீதியாக பல நிர்வாகச்சிக்கல்கள் இருக்கின்றது. சுகாதாரத்துறை, கல்வித்துறை, நீர்ப்பாசனத்துறை, வீதி அபிவிருத்தி எனப் பல துறைகளிலும் மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் இருக்கும் குழப்பங்கள் காரணமாக பல நிர்வாகச் சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன. இதனால் எங்களுடைய மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமலிருக்கின்றனர். இதற்கான தீர்வை காண்பதாக இருந்தால் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும். தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு ஒரு பாரிய பொறுப்பிருக்கின்றது. நாங்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகளவான ஆசனங்களை பெற வேண்டும் என்ற நோக்குடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சேர்ந்து வேலைகளை செய்திருக்கின்றோம். மாகாணசபைத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மூவரும் நீங்கள் 86 பேரும் இணைந்து செயற்பட்டால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முதலமைச்சர் பதவியை எடுக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக்கொள்ளலாம். இதற்காள நாங்கள் ஓரணியில் நின்று உழைக்க வேண்டும். ஒரு சவாலாக இதனை எடுத்து எங்கடைய அரசியற் பயணத்தை முன்னெடுக்க வேண்டும். நாங்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு நாளும் பல தரப்புகளுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம். வெளியிலிருந்து பலவாறாக விமர்சித்துக் கொள்ளலாம். சில சபைகளிலே ஆட்சியமைப்பதற்காக நாங்கள் விரும்பாத சில வேலைகளையும் சில இடங்களுக்கும் சென்று சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. எங்களுடைய சத்தியப் பிரமாண நிகழ்வு எல்லா மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை அழைத்து செய்திருக்கின்றனர். அந்தந்த பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்படுவதற்கு உதவியாக இருந்த உதவி வேட்பாளர்களையும் கிளை உறுப்பினர்களையும் நாங்கள் அழைத்திருக்கின்றோம். கட்சியினுடைய சத்தியப் பிரமாண நிகழ்வென்றால் நாங்கள் அழைப்பிதழ் வழங்கத் தேவையில்லை. அதனை அறிந்தால் அனைவரும் வரவேண்டும். கிடைத்த வெற்றியினுடைய பங்காளிகளாக இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் நாங்கள் அனைவரும் இணைந்து ஓரணியாக நின்று இலங்கை தமிழரசுக் கட்சியை, எங்களுடைய மக்களுடைய பிரதான கட்சியை மென்மேலும் பலப்படுத்துவோம் என தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmbrheg1o01obqpbsjd7qo0c9
  11. சட்டவிரோத கருக்கலைப்பு – அதீத இரத்தப் பெருக்கினால் பெண் உயிழப்பு! adminJune 11, 2025 யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு , வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்தப் பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதீத இரத்த பெருக்கே உயிரிழப்புக்கு காரணம் என மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , சுன்னாக காவவற்துறையினர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/216619/
  12. டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்! June 9, 2025 — கருணாகரன் — இலங்கை அரசியலில் NPP செல்வாக்குப் பெற்றதோடு தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள அரசியல் எல்லாமே தடுமாற்றத்துக்குள்ளாகி விட்டன. குறிப்பாகத் தமிழ்த்தேசியவாத அரசியற் கட்சிகள் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளன. இவ்வளவுக்கும் NPP ஒன்றும் ஆகச் சிறந்த அரசியல் விளைவுகளை உருவாக்கிய சக்தியாக இன்னும் வளர்ச்சியடையவில்லை. எதிர்காலத்தில் அதற்கான சாத்தியங்கள் இருக்கலாம். இதைப்பற்றிப் பல தடவை குறிப்பிட்டதால், மேலும் விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறேன். அல்லது இன்னொரு கட்டுரையில் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நமது கவனம், NPP யின் எழுச்சியானது, தமிழ்த்தேசிய அரசியலை எப்படி நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது? அதனால் ஏற்பட்டுள்ள குணாம்ச மாற்றங்கள் என்ன? எவ்வளவு தூரத்துக்குப் படியிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதாகும். NPP யை ஆதரித்தால் அல்லது அதனுடன் அரசியல் ரீதியான உடன்பாடுகள் எதையாவது வைத்துக் கொண்டால், அது ஏனைய தென்னிலங்கைத் தேசியக் கட்சிகளைப் போலன்றி, அப்படியே தம்மை உள்வாங்கி விழுங்கி விடும், பிராந்திய அரசியலுக்கு (தமிழ் அரசியலுக்கு) இடமில்லாமல் செய்து விடும், ஆகவே அதனுடன் இடைச் சமரசத்துக்குப் போக முடியாது என்ற அச்சத்தினால் எப்படியாவது NPP ஐத் தமிழ்ப் பகுதிகளில் தோற்கடிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் எதையெதையெல்லாமோ செய்து கொண்டிருக்கின்றன. இதில் தமிழ்த்தேசியவாதக் கட்சிகள், அல்லாத கட்சிகள் என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லாமே உச்சப் பதட்டத்தோடுதான் உள்ளன. இதனால் தமிழ் அரசியல் பரப்பில் ஏராளம் காட்சி மாற்றங்கள். திடீர்த்திருப்பங்கள். புரிந்து கொள்ளவே முடியாத ஆச்சரியமான சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தினமும் எதிர்பார்க்காத – அதிர்ச்சிகரமான சேதிகள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஊடகப் பரப்பிலும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த வாரம் நடந்த மூன்று முக்கிய விடயங்களைப் பற்றிச் சொல்லலாம். 1. ‘அடைந்தால் மகாதேவி. இல்லையேல் மரண தேவி‘ என்ற பிடிவாதத்தோடு, ‘ஒரு நாடு இரு தேசம்‘, ‘கொள்கையே எமது உயிர்‘என்று சொல்லிக் கொண்டிருந்த கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையும் அதற்கு அப்பால் நின்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் சேர்ந்துள்ளன. இந்தக் கூட்டு வெறுமனே உள்ளுராட்சி சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கானது மட்டுமல்ல, கொள்கை சார்ந்த கூட்டு என்று இரண்டு தரப்பும் அறிவித்துள்ளன. அதற்கான ஒரு எழுத்து மூலமான உடன்படிக்கையும் செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தேர்தலுக்கு முன்பு செய்யப்படாமல், தேர்தலுக்குப் பின்னர் செய்யப்பட்ட – அதற்கான தேவைகளும் அவசியங்களும் உள்ளதால் – மேற்கொள்ளப்பட்ட கூட்டு. 2. இப்படி இணைந்தாலும் இந்தக் கூட்டினால் எதிர்பார்த்த அளவுக்கு சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. அப்படிக் கைப்பற்ற வேண்டுமாக இருந்தால், அதற்கு இன்னொரு தரப்பின் ஆதரவு வேண்டும். அதற்காக ஈ.டி.பி.யின் ஆதரவைப் பெறலாமா என்று ஆலோசிக்க முற்பட்டிருக்கிறது இந்தக் கூட்டு. இதற்கான முயற்சியாகத் தனிப்பட்ட ரீதியிலான உரையாடல்கள் சித்தார்த்தனுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் தொலைபேசி வாயிலாகச் சிறிய அளவில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தக் கூட்டின் இன்னொரு தரப்பினரான கஜேந்திரகுமார் இதைக் மறுத்திருக்கிறார். 3. தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே சிவஞானம், தாம் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புள்ள சபைகளுக்கு ஆதரவு கேட்டு ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிடம், அவருடைய பணிமனையான ஸ்ரீதர் தியேட்டருக்குச் சென்றது. இதுவும் அரசியற் தேவைகளின் பாற்பட்ட ஒரு நடவடிக்கை. அதற்கான முயற்சி. இதைத் தமிழரசுக் கட்சியிலிருந்து இதுவரையில் யாரும் எதிர்க்கவில்லை என்றாலும் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களிடையே சற்றுக் குழப்பமான நிலை உண்டு. இவற்றுக்கு அரசியல் ரீதியாகப் பெறுமானங்களும் உண்டு. விமர்சனங்களும் உண்டு. அதை அணுக வேண்டிய விதமே வேறு. அப்படி இந்த விடயம் அறிவுசார்ந்து அணுகப்பட்டிருந்தால் அதனால் பயனுண்டு. நிறைவாகவும் இருந்திருக்கும். அது தமிழ்ப்பரப்பில் நிகழவில்லை. இதுதான் துயரமானது. தமிழ்ப் பரப்பென்பது, இன்னும் மூடுண்ட இருட்பிராந்தியத்துக்குள்ளேதான் கட்டுண்டுள்ளது. இதில் குறிப்பாக இளைய தலைமுறையினரும் சிக்கியிருப்பதே மிகுந்த கவலையை அளிக்கிறது. கடந்த தலைமுறைதான் தவறுகளின் கூடாரத்துக்குள் தங்களுடைய தலைகளை வைத்திருந்தது என்றால், இளைய தலைமுறையும் அப்படியா இருக்க வேண்டும்? அதுவாவது ஒளியைக் காண வேண்டாமா? என்பதால்தான் சமூக வலைத்தளங்கள் போர்க்களமாகி, குருதி சிந்திக் கொண்டிருக்கின்றன. ஏட்டிக்குப் போட்டியாகக் கணைகள் பாய்கின்றன. கட்சிகளின் ஆதரவாளர்களிற் சிலர் தாக்குதலின் உக்கிரம் தாங்க முடியாமல் பதுங்கு குழிகளுக்குள் மறைந்து கொண்டுள்ளனர். இப்பொழுது தமிழ்த்தேசியவாத அரசியற் பரப்பில் நடந்து கொண்டிருப்பதெல்லாம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாத சங்கதிகள். அதிகம் ஏன், கடந்த மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வரையிற் கூட தமிழ்த்தேசிய முகாமின் பீரங்கிகள் ஏட்டிக்குப் போட்டியாகவே நிறுத்தப்பட்டிருந்தன. தமிழ்த்தேசியவாதத்துக்கு எதிரான தரப்பை நோக்கி மட்டுமல்ல, தமக்குள்ளேயே – தமிழ்த்தேசியவாதத்துக்குள்ளேயே – எதிரெதிர்முனையில் பீரங்கிகள் நிறுத்தப்பட்டன. தேர்தல் முடிவுகள் உருவாக்கிய சூழல், இதையெல்லாம் மாற்றி விட்டது. இப்பொழுது போர்க்களம் மூடப்பட்டு, தலைவர்களும் தளபதிகளும் சமாதானத் தூதுகளை அனுப்பி, சந்திப்புகளைச் செய்து கொள்கின்றனர். இந்தச் சந்திப்புகளில் ஆளையாள் கட்டி அணைத்து ஆரத் தழுவிக் கொள்கிறார்கள். தமிழ் அரசியலின் குழப்பமும் தேக்கமும்: —————————————- தமிழ்த்தேசியப் பேரவையில் உள்ள ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், சரவணபவன், ஐங்கரநேசன், அருந்தவபாலன் போன்றவர்கள், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கூட்டில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியோடு சேர முடியாது என்று இரண்டு மாதத்துக்கு முன் பிடிவாதமாக நின்றார்கள். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தப் பிடிவாதமெல்லாம் கரைந்து விட்டது. அதாவது இரண்டு மாதங்களில் ஒரு தலைகீழ் மாற்றம். இதற்கு அவர்களின் தரப்பிலிருந்து ஒரு நியாயத்தைச் சொல்லக் கூடும். அப்போது கொள்கைக்கான கூட்டாக யாரும் பேசவில்லை. தேர்தல் கூட்டாக மட்டுமே சிந்திக்கப்பட்டது. இப்போது கொள்கைக்கான கூட்டாக இருப்பதால், எங்களின் ஆதரவைக் கொடுத்துள்ளோம் என. அதைப்போல, சிவஞானம் டக்ளஸ் தேவானந்தாவைத் தேடிச் ஸ்ரீதர் தியேட்டருக்கு (ஈ.பி.டி.பி பணிமனைக்கு) சென்றதை சுமந்திரன் வேறுவிதமாக வியாக்கியானப்படுத்தியிருக்கிறார். ஈ.பி.டி.பியுடன் மட்டுமல்ல, அதிக பெரும்பான்மையைக் கொண்ட தரப்பாக தமிழரசுக் கட்சி இருப்பதால், ஆட்சியை அமைப்பதற்காக ஆதரவைப் பல கட்சிகளிடமும் கோரினோம். அதில் ஒன்று இது என்பதாக. அதாவது ஆதரவைக் கோருவது வேறு. அரசியற் கூட்டு என்பது வேறு என்பதாக. இருந்தாலும் சிவஞானம் ஸ்ரீதர் தியேட்டருக்குப் போனது தவறு. தமிழரசுக் கட்சி எப்படித் தன்னுடைய தகுதியை விட்டுப் படியிறங்கலாம் என்று கொந்தளிக்கின்றது புரட்சிப் படை. ஆனால், அரசியலில் நிரந்தரமான முடிவுகள் (அதாவது முடிந்த முடிவுகள்) என எவையும் இல்லை. அடிப்படையில் இருக்கும் கொள்கையோடு, அதற்குச் சேதாரங்கள் வராத வகையில், நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இயங்குவதே அரசியலாகும். இதையே சாணக்கியம் (Chanakya), இராஜதந்திரம் (Diplomacy), தந்திரோபாயம் (Strategy) என்று அரசியல் வரலாறு குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் வரலாறு முழுவதிலும் இதற்குரிய ஆளுமைகளும் அடையாளங்களும் நிறைய உண்டு. சாணக்கியர், நிக்கோலோ மாக்கியவல்லி, கன்பூசியஸ் போன்ற மேதைகள் இதைப்பற்றித் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நம்முடைய சமூகச் சூழலில், அரசியலை எவரும் எப்படியும் கையாளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. முகநூலில் அல்லது சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் எல்லாம் அரசியலைத் தீர்மானிக்கும் வல்லமையுள்ளோர் என்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளனர். இவர்களுடைய பதிவுகளைப் பார்த்து அரசியற் கட்சிகள் தடுமாறுகின்றன. தலைவர்கள் குழம்பிப்போகிறார்கள். உண்மையில் அப்படி இருக்கவே கூடாது. சமூக வலைத்தளங்களில் அபிப்பிராயங்களைப் பகிர்வோரில் பலரும் களச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் அல்ல. அரசியல் விடயங்களை, அதன் தாற்பரியங்களைப் புரிந்து கொண்டவர்களும் அல்ல. இவர்கள் தமது விருப்பு வெறுப்புகளை, அபிப்பிராயங்களைப் பகிர்வோராக இருக்கலாமே தவிர, முடிவுகளை எடுக்கும் சக்திகளாகவோ தீர்மானிக்கும் தரப்பாகவோ இருக்க முடியாது. இதை மறுத்து, சமூக வலைத்தளங்களுக்கு இன்று வலுவுண்டு. சமூக வலைத்தளப் பதிவர்களால் பல மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அல்லது மாற்றங்களுக்கு அவர்கள் தூண்டு விசையாக இருந்துள்ளனர், இருக்கின்றனர் என யாரும் சொல்லக் கூடும். அவ்வாறான பதிவுகளையும் அவற்றின் விளைவாக உருவாகிய போராட்டங்களையும் ஆழ்ந்து கவனித்தால், அவற்றின் கருத்தியல் தெளிவையும் அவற்றில் உள்ள பன்மைத்துவம், ஜனநாயக அடிப்படை, சர்வதேசத் தன்மை போன்றவற்றை இனங்காண முடியும். தமிழ்ச் சமூகத்தின் சமூக வலைத்தளப் பதிவுகள் அப்படியா உள்ளன? வெறும் உணர்ச்சிக் கோசங்களாகவே மலிந்து கிடக்கின்றன. என்பதால்தான் ஜனநாயக மறுப்புக் குரல்களாக துரோகி – தியாகி என்ற கூக்குரல்கள் ஒலிக்கின்றன. இன்னும் தமிழர்களின் அரசியலை அறிவுசார் நடவடிக்கையாக மாறாதிருப்பதற்கான முயற்சியாகவே இவை உள்ளன. இவற்றை மீறி எழ வேண்டிய பொறுப்பு அரசியற் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் உள்ளது. ஏனென்றால் அரசியல் என்பது ஒரு கற்கைமுறை. அது ஒரு பொறுப்புள்ள துறை. மக்களுடைய வாழ்க்கையோடும் அவர்களுடைய எதிர்காலத்தோடும் நேரடியாகச் சம்மந்தப்பட்டது. ஏன், மக்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதே அரசியல்தான். மக்களுடையது மட்டுமல்ல, நாட்டினுடைய நிகழ்காலத்தையும் அதுவே தீர்மானிப்பது. ஆகவே அத்தகைய துறையை, அதற்குரிய அடிப்படைகளோடு அணுக வேண்டும். அதை அறிவுபூர்வமாகக் கையாள வேண்டும். இந்தப் புரிதலோடு அரசியற் கட்சிகளும் அரசியல்தலைவர்களும் செயற்பட வேண்டும். தமிழ்ச் சமூகத்தை அரசியல் ரீதியாக அறிவூட்ட வேண்டும். ஆனால், மேற்படி அரசியலைக் குறித்த அறிவுபூர்வமான சிந்தனையோ, எண்ணமோ தமிழ்ச் சமூகத்திடம் இல்லை. இங்கே காணக்கிடைப்பதெல்லாம் வெறும் உணர்ச்சிகரமான போக்கே. இது அரசியலுக்கு எப்போதும் எதிர்விளைவுகளையே – பாதகத்தையே உண்டாக்கும். என்பதால்தான் தமிழ் மக்களின் அரசியல் தோற்றுப்போகிறது. இலகுவில் தோற்கடிக்கப்படக் கூடியதாக உள்ளது. இதைப் பற்றி குறித்த கட்சிகளின் ஆட்களுக்கே சரியான தெளிவில்லை. என்பதால்தான் துணிச்சலாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அந்தத் தடுமாற்றமே அரசியற் கூட்டுகளை உருவாக்குவதில் நெருக்கடிகளையும் இணைந்து செயற்படுவதில் குழப்பங்களையும் உண்டாக்குகிறது. கட்சிகளுக்கு முண்டு கொடுப்போரின் நிலையும் அதை அனுமதிப்போரின் நிலையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. இது அனுபவமாகட்டும். ஏனென்றால், ஈழத் தமிழ் அரசியற் தலைவர்கள் உறுப்பினர்களையோ, தொண்டர்களையோ, ஆதரவாளர்களையோ அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கவில்லை. அவர்களை மனதிற் கொண்டு ஒரு போதும் தீர்மானங்களை எடுப்பதுமில்லை; செயற்படுவதுமில்லை. எல்லாமே ஏகத் தீர்மானம்தான். ஜனநாயக விதிமுறைகளை ஏற்றுப் பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சிகளாக இருந்தாலும், தீர்மானங்களை எடுப்பதும் செயற்படுவதும் இராணுவத் தன்மையோடுதான். என்பதால்தான் அரசியற் கூட்டுகள் உருவாகும்போது கட்சிகளுக்குள்ளேயே ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படுகிறது. அதை விட வெளியே உள்ள அரசியற் சக்திகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அதிர்ச்சி. சமூக வலைத்தளங்களில் இயங்கும் புரட்சியாளர்கள் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாத நிலை ஏற்படுகிறது. முக்கியமாக கட்சிக்குள் பேச முடியாததை எல்லாம் சமூக வலைத்தளங்களில் பேசலாம் என்று கருதுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் உள்ள ஜனநாயக வெளியைப் பயன்படுத்த விளைகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு விதமான உளத் திருப்தியை அளிக்கிறது. இந்த நிலை ஏன் வந்தது என்றால், கடந்த 75 ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய அரசியல் நடைமுறைக்கு (யதார்த்தத்துக்கு) வெளியே நிற்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அதாவது இலட்சியவாத அரசியல் என்ற போர்வையில் கற்பனாவாத அரசியலே மேலோங்கியிருந்தது. யதார்த்தவாத அரசியலை, நடைமுறை அரசியலை எதிர்கொள்ள இது வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஈழத் தமிழ் அரசியலில் துரோகி – தியாகி என்ற பிரிகோடும் கறுப்பு – வெள்ளை என்ற எதிர் மனோபாவமும் நீடித்து வந்திருக்கிறது. இதை ஆரம்பித்து வைத்தவர், தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே. வி. செல்வநாயகம். மட்டக்களப்பில் அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருந்த நல்லையாவை வீழ்த்துவதற்காகச் செல்வநாயகம் ஆரம்பித்து வைத்த ‘துரோகி‘ என்ற அடையாளப்படுத்தும் – ஒதுக்கும் – அரசியலை, பின்னர் செம்மையாக வளர்த்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். ஆனால், அமிர்தலிங்கமே பின்னாளில் துரோகியாக்கப்பட்டுப் பலியானார். இந்தத் துரோகி – தியாகி அரசியல் விளையாட்டு ஐந்து ஆறு தலைமுறையைக் கடந்து இப்பொழுதும் தமிழ் அரசியற் பரப்பில் தொடருவதால்தான் இந்த அதிர்ச்சியும் பரபரப்பும். ஆனாலும் கற்பனாவாதத்தை விட நடைமுறைக்கு – யதார்தத்துக்கு எப்போதும் வலு அதிகம். என்பதால்தான் 1980 களின் நடுப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழரசுக் கட்சி) போன்றவற்றைத் தடை செய்து இல்லாதொழித்த விடுதலைப்புலிகள், 2000 த்தின் தொடக்கத்தில் அவற்றை மீளச் சேர்க்க வேண்டி வந்தது. (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) அது புலிகளின் கீழிறக்கமே. அதுவொரு அரசியல் விளைவு. அன்றைய அரசியற் சூழலின் தேவையும் நிர்ப்பந்தமுமாகும். அன்றும் அந்தக் கூட்டில் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில்) இணைந்து கொள்வதற்கும் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உணர்ச்சிகரமான பல எதிர்நிலைகள் இருந்தன. அதைப்போல அவற்றை இணைப்பதிலும் புலிகளுக்கும் பலவிதமான உணர்ச்சிகரமான விவாதங்கள் நிகழ்ந்தன. அதையெல்லாம் கடந்தே அந்தக் கூட்டு உருவாகியது. இதையெல்லாம் படிப்பினையாக, வரலாற்று உண்மைகளாக, அரசியல் நடைமுறைகளாக, அரசியல் யதார்த்தமாக ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாகத் தலைவர்கள் தமது தீர்மானங்களிலும் நடவடிக்கைகளிலும் உறுதியும் தெளிவும் கொண்டிருப்பது அவசியம். அது இல்லாதபோதுதான் குழப்பங்களும் தடுமாற்றங்களும் ஏற்படுகின்றன. இங்கே மிகப் பெரிய சிக்கலாக இருப்பது, தற்போதைய சூழலில் ஈ.பி.டி.பி ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதேயாகும். தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் இரண்டுக்கும் இப்போது ஈ.பி.டி.பி யின் ஆதரவு வேண்டும். ஆனால், அதைப் பகிரங்கமாகப் பெற முடியாது. இதுதான் பிரச்சினை. கள்ள உறவுக்குத் தயார். அதில் கிடைக்கின்ற இன்பத்தையும் சுகத்தையும் இலாபமாக அனுபவிக்கத் தயார். ஆனால், அதைப் பகிரங்கப்படுத்தத் தயாரில்லை. இந்தக் கேவலமான சிந்தனையை என்னவென்று சொல்வது? அப்படியென்றால், பேசாமல் விடுங்கள். NPP ஆட்சியமைக்கட்டும். அதாவது எதிர்த்தரப்பு ஆட்சியை அமைத்துக்கொள்ளட்டும். இங்கேதான் சிக்கல். ஆனால், ஈ.பி.டி.பியின் தரப்பில் ஒரு நியாயம் சொல்லப்படுகிறது. தாம் தற்போதைய சூழலில் தமிழ்ச்சமூகமாக – தமிழ்த்தரப்பாகவே சிந்திக்கிறோம். அந்த அடிப்படையில்தான் ஆதரவைக் கொடுப்பதா இல்லையா என்று பேச முடியும் என. அதாவது, NPP க்கு எதிரான தரப்புகளாகிய தமிழ்த் தரப்புகள் எல்லாம் ஒன்றாக நிற்பதாக ஒரு தோற்றத்தை – ஒரு நிலையை உருவாக்குவதாக. அப்படியானால் எதற்காக தமிழரசுக் கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் தமிழ்த்தேசியப் பேரவையும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அவற்றின் ஆதரவாளர்களும் பதற்றமடைய வேண்டும். இந்த நியாயத்தைப் பொதுவெளியில் சொல்லி நிமிரலாமே! https://arangamnews.com/?p=12072
  13. தையிட்டி சட்டவிரோ விகாரைக்கு அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள்; போராட்டகாரர்களுக்கு தடை விதிப்பு கலகமடக்கும் பொலிசார் குவிப்பு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் நேற்று போராட்டம் நடைபெற்றது. குறித்த போராட்டம் இன்றும் நடைபெறவுள்ளது. திஸ்ஸ விகாரையில் இன்று நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் கொண்டுவரப்படவுள்ளனர். இந்நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் பொலிஸாரின் தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளையொன்றும் பெறப்பட்டு போராட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராகவே குறித்த கட்டளை பெறப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=328238
  14. தமிழர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாக இருந்தால் சட்ட விரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும்! adminJune 10, 2025 தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டவிரோத விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாக இருந்தால் அந்த சட்ட விரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். தையிட்டி சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரையை அகற்றகோரி இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் நம்பிக்கை கிடையாது. எங்கள் உரிமைகளை போராடிய பெற வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதில் உணர்வு ரீதியான விடயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டவிரோதம் என்றால் சட்டவிரோதம் தான் சிங்கள மக்களுக்கு என்றால் ரத்தமும் தமிழர்களுக்கு தக்காளி சட்னி என்று இருக்க முடியாது.தையிட்டி போராட்டம் சிங்கள மக்களுக்கோ பௌத்த மக்களுக்கோ எதிரானது அல்ல. இது சட்டவிரோத கட்டிடத்திற்கு எதிரானது. யாழ்ப்பாணம் நகரின் மையத்தில் ஆரியகுளம் நாகவிகாரை இருக்கிறது. அங்கு ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். நயினாதீவு விகாரை இருக்கிறது. அங்கு பலரும் வந்து செல்கிறார்கள். அங்கே எந்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு நடக்கின்ற நிகழ்வுகளை தமிழ் மக்கள் சென்று பார்வையிடுகிறார்கள். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டவிரோத விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாக இருந்தால் அந்த சட்ட விரோத கட்டிடம் அகற்றப்பட வேண்டும். குரல் இல்லாத மக்களுக்கு அரசியல்வாதிகள் குரல் கொடுக்கின்றார்கள். ஆனால் ஜனாதிபதி போராட்டத்திற்கு பின்னால் அரசியல் இருப்பதாக கூறுகின்றார். அந்த மக்களுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மை உள்ளதா என்பதை பார்த்து அதற்கு தீர்வை வழங்க வேண்டுமே தவிர அங்கு அரசியல் இருப்பதாக கூறுவதாக இருக்ககூடாது. இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இங்கு அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையில் அதற்காகவே மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்கிறார்கள். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். இரண்டு வருடங்களாக சிங்கள மக்கள் தையிட்டிக்கு வருகிறார்கள். அவர்கள் யாருக்கும் நாங்கள் ஆபத்தை ஏற்படுத்தவில்லை. ஜனாதிபதி பங்கேற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விவகாரத்திற்கு ஜனாதிபதியினால் பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால் அது சட்டவிரோதம் என்பது ஜனாதிபதிக்கு தெரியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவற்துறையினர் எதிராக செயல்படுகிறார். மக்கள் போராடும் போது அப்பட்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வேறு வேறு வழக்குகளில் சிக்க வைத்து காணி உரிமை தொடர்பான போராட்டத்தை மௌனிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். அதனை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது – என்றார் https://globaltamilnews.net/2025/216566/
  15. வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை சிங்கள மக்கள் தவிர்க்க வேண்டும் : வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் Published By: RAJEEBAN 10 JUN, 2025 | 06:33 AM வட,கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது வட,கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக இயக்குனர் அருட்பணி சூ.யே. ஜீவரட்ணம் அ.ம.தி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யுத்தத்தின் பிற்பாடு ஏறக்குறைய 16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தேசிய ஒருமைப்பாட்டையும் இன, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தில் இவற்றையெல்லாம் விடுத்து இன்னும் அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும் தான்தோன்றித்தனமான பொறுப்பற்ற அரசியல் அதிகார வீச்சுக்களும் சிறுபான்மை இன மக்களை நோக்கி அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது. கடந்த பங்குனி மாதம் 28ம் திகதி காணி நிரணய உரிமைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டிருந்த அரசு வர்த்தமானியானது தமிழ் மக்களினுடைய காணிகளை அபகரிக்கின்ற நோக்கமாக கொண்டது என்று பல தரப்புக்களும் அச்சம் வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்தபோது இறுதியில் அதை இரத்துசெய்தமையை வரவேற்கின்ற வேளை, இன்னும் இன மத சமூக நல்லிணக்கத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் செயற்பாடான தனியார் காணிகளுக்குள் அத்துமீறிய பௌத்தவிகாரைகளின் கட்டுமானங்கள் மற்றும் புராதன தொல்பொருள் இடங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்த வித அகழ்வு மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாது என்று சொல்லப்படுகின்ற இடங்களில் பௌத்த விகாரைகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் எல்லாம் வெளிப்படையாக மத வேறுபாட்டையும் பிரிவினை மனப்பான்மையையும் அதிகார வாக்கம் வெளிப்படுத்துகிறது. இதை வடமாகாண நீதி சமாதான நல்லிணக்கத்திற்கான பணியகம் வன்மையாக கண்டிக்கிறது. அதேவேளை வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரித்துக்காணிகளை கையகப்படுத்தி, தனியார் காணிகளுக்குள் அத்துமீறி கட்டப்படுகின்ற விகாரைகளை நோக்கி பௌர்ணமி தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் வருகின்ற பௌத்த மத சகோதர சகோதரிகளுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோளையும் விடுக்கிறது. அத்துமீறி அடுத்தவர் காணிகளுக்குள் கட்டப்படுகின்ற மத தலங்களில் ஆன்மீகத்தை தேடுவது அர்த்தமற்றதும் அநியாயமானதும் என்பதை புரிந்து கொண்டு வட கிழக்கு மாகாணங்களில் சட்ட விரோத இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத்தலங்களை நோக்கிய தங்களின் ஆன்மீக பயணங்கள் வேதனையளிக்கிறது என்பதை புரிந்துகொண்டு நல்மனதோடு அவற்றை தவிர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை அங்கிகரித்து அவர்களுக்குரிய காணிகளை மீள ஒப்படைக்க முயற்சிப்பதும் உங்களுடைய கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம். அது மாத்திரம் இன்றி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக்கூடிய வளமான நிலங்கள், காணிகள் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்து அவற்றை எல்லாம் விடுவிக்க வேண்டிய தேவைப்பாடு உணரப்படுகின்ற வேளை இப்படியான காணி அபகரிப்பு செயற்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் நீதி சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்த விரும்புகின்றது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/217061
  16. காலங்கடந்த ஒற்றுமையின் பயன்? லக்ஸ்மன் நாட்டின் தென் பகுதியிலும், வடக்கு கிழக்கிலும் காலங்கடந்த ஒற்றுமை குறித்த விவாதங்கள் இப்போது பிரபலமாகப் பேசப்படுபவையாக இருக்கின்றன. இவை பயனுடையவைதானா? ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் ஈகோ போர்களைத் தாண்டி, கொழும்பு மேயர் பதவிக்காக ஒன்றிணைவது பற்றிய செய்தி வந்தபோது, இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் அதை ‘மிக மிகக் கால தாமதமானது” என்றுதான் வரவேற்றனர். நாட்டையே ஆட்சி செய்யும் வாய்ப்பிருந்த போதிலும் அதனை நழுவவிட்டு தற்போது கொழும்பு மேயர் பதவியைத் தக்கவைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இணைந்து போராடுகின்றன. இக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால், சஜித்தும் ரணிலும் ஒற்றுமையின் சக்தியை உணர்ந்து, வெறுப்பின் கோடரியை என்றென்றும் புதைக்க வேண்டும் என்று கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இது போன்றதொரு நிகழ்வு கடந்த செப்டெம்பரில் நடைபெற்றிருந்தால் வேறு வகையான நாடு இருந்திருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற அதிகாரங்கள் ஜே.வி.பி. கைகளில் இருப்பதனால், உள்ளூராட்சித் தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுக்கொள்ளவே ஜே.வி.பி. தீவிரமாக முயன்றது. மாநகர சபைகள் முதல் பிரதேச சபைகள் வரை முழுவதையும் வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதனை வைத்தே அவர்கள் பெருமையும் பேசிக் கொண்டனர். அதனடிப்படையில் தான், 339 சபாக்களையும் ஒரே நேரத்தில் கைப்பற்றுவோம். ஆதிக ஆசனங்களுடன் எதிர்க்கட்சிகளில் ஏதேனும் ஒரு சபையையேனும் வெற்றிகொண்டால், அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அரசாங்க நிதியிலிருந்து ஒரு சதம் கூட வழங்கப்படாது. “எதிர்க்கட்சிகள் அனைத்தும் முரடர்கள், நேர்மையற்றவர்கள் மற்றும் ஊழல் நிறைந்தவர்கள். ஊழல்வாதிகளுக்கு பொதுப் பணத்தைக் கொடுக்க முடியாது. ஆனால், எங்களது சபைகளுக்கு, நான் கண்ணிமைக்காமல் கொடுப்பேன்” என்று ஜனாதிபதி அறிவித்தார். அது அவரது எச்சரிக்கையாகவே இருந்தது. ஆனால், அரசியல் சொல்லாடல்கள் இருந்தபோதிலும், நம்பிக்கையான ஆரவாரம் மற்றும் தற்பெருமை இருந்தபோதிலும், இறுதித் தேர்தல் முடிவுகள், ஆறு மாதங்களுக்கு முன்பு ஜே.வி.பியை நோக்கி வீசிய 6.8 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட அலை 2.3 மில்லியனாகக் குறைந்து. மிகக் குறுகிய காலத்திற்குள் ஜே.வி.பியின் ஆதரவில் ஏற்பட்ட இந்த வியத்தகு சரிவு, அதன் தலைவர்களுக்கு அவர்களின் ஆதரவு வேகமாகக் குறையத் தொடங்கியிருப்பதை எச்சரித்திருக்க வேண்டும். ஆனால், வேறு யார் வெற்றி பெற்றாலும், இந்த நாட்டை ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாங்கள்தான் என்று பொதுமக்களுக்கு அவர்கள் சித்திரித்த மாயையை அது உடைத்திருக்கிறது. 51 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டாலும், அதிக எண்ணிக்கையிலான இடங்களை தனித்து வெல்லும் கட்சியே உள்ளூராட்சி சபைகளை வெல்லும் என்ற கதையை ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா கூறியிருந்தார். அதே நேரத்தில், மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆணையைத் திருட வேண்டாம் என்று எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எச்சரிக்கையும் விடுத்திருந்தார். ஆனால், நடைபெற்றதோ வேறாகத் தான் இருந்தது. நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாட்டிலுள்ள 339 உள்ளூராட்சி சபைகளில் ஜே.வி.பி. 115 நேரடி வெற்றிகளைப் பெற்றது, இது ஒரு கணக்கிடல் பிழையே. இது ஒருபுறமிருக்க, கொழும்பு மாநகர சபையில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது பெரும் பரபரப்பாக எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்ற விடயமாக இருக்கிறது. கொழும்பு மாநகர சபையின் 117 ஆசனங்களில், ஜே.வி.பிக்கு 48, ஐ.ம.சக்கு 29, ஐ.தே.கவுக்கு 19, என்ற கணக்கிலேயே காணப்படுகிறது. இதில் எந்தத் தரப்புக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் என்பது இறுதி நாள் வரையில் தெரியாத ஒன்றே. இதே போன்றே, ஏனைய பல சபைகளிலும் தீர்மானங்களின்றி பேச்சுக்களும் பேரம் பேசல்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. தெற்கில் இவ்வாறு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்புக்காக நடைபெற்று வருகின்றன குழப்பங்களுக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்ப் பிரதேசங்கள் அனைத்தையும் கைப்பற்றுவோம் தனித்து ஆட்சியமைப்போம் என்கிற கோதாவிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் செயற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தனித்து செயற்படுவதாக முடிவை அறிவிக்கும் போதும் அவர்கள் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைப்பினையே காரணமாக சொல்லியிருந்தார்கள். ஆனாலரல் இப்போது நடைபெறுபவையெல்லாம் மிகவும் கேவலமானவைகளாக இருப்பது தமிழ்த் தேசிய அரசியலைக் கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளாக இருப்பது கவலைக்குரியவைகளாகப் பார்க்கப்படுகின்றன. அதற்கு காரணம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் கடந்த வாரத்தில் ஈ.பி.டி.பியின். செயலாளர் நாயகத்தை யாழ்ப்பாணம் சிறிதர் தியேட்டரில் சந்தித்ததுதான். அதற்கு பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கொடுக்கும் விளக்கம் இன்னமும் வினோதமானதாக இருக்கிறது. தங்களது கட்சியின் உள்ளூராட்சித் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததாக அவர் கூறியிருக்கிறார். உள்ளூராட்சித் தேர்தல் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து, ஆட்சியமைப்பு குறித்து நடைபெற்று வருகின்ற கலந்துரையாடல்கள் வார்த்தை ஜாலங்களால் மறைக்கப்படுவதையே காட்டுகின்றன. இது காலங்காலமாக இலங்கை தமிழரசுக் கட்சியால் தமிழர் அரசியலில் செய்யப்படுவதைப் போன்றே தொடர்கின்றன என்பதுதான் உண்மை. தேர்தல் முடிந்ததையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி என்பன தொடர்ச்சியாக சொல்லி வருவதைப் போலவே தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இருந்தாலும், உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைப்பு விடயத்தில் விட்டுக் கொடுப்புகளுடன் நகரலாம் என்றும் கூறினர். ஆனால், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடானது, அதிக ஆசனம் பெற்ற கட்சி, மேயர், தவிசாளர், உப தவிசாளர் பதவிகள் குறித்ததாகவே இருந்து வந்திருக்கிறன. இதில் ஒரு பகுதிதான் டக்ளஸ் தேவானந்தாவை சிறிதர் தியேட்டரில் சீ.வி.கே.சிவஞானம் சந்தித்ததாகும். மரத்தால் விழுந்தாலும் மீசையில் மண்ணொட்டாத வகையில் அனுசரிப்பது மிகவும் சிரமமானதே. தமிழ்த் தேசிய அரசியலில் விரோதிகள், துரோகிகன் நிலைப்பாடுகள் இருந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது இணைந்திருந்த கட்சிகளைப் புலிகளின் முடிவுக்குப் பின்னர் வெளியேற்றும் சூழ்ச்சியைக் கையாண்ட இலங்கைத் தமிழரசுக்கட்சி கூட்டமைப்பு உருவாக்கத்திலிருந்து இருந்த கட்சியான ரெலோவை வெளியேற்ற முடியாமல் போகவே தாமாக வெளியேறி இறுதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லையென்றாக்கியிருந்தது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அவர்கள் இயங்குவதற்கும் தடை ஏற்படுத்தினர். அதற்கு அவர்கள் சொல்லி வருகின்ற காரணங்கள் பல இருக்கின்றன. ஆனால், அதில் தனிப்பட்ட கோபதாபங்கள், வெறுப்புகள், ஈகோக்களும் இருப்பது வெளிப்படையே. இவ்வாறான நிலையில்தான், வாசனைத் திரவியம் போன்று ஈ.பி.டிபியை பயன்படுத்திக் கொள்வதற்காக சிறிதர் தியேட்டருக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சென்றிருக்கிறார். இது மற்றொரு வகையில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மிரட்டலும் கூட என்பது சிலருக்கு புரியாதிருப்பது வினோதமே. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியன முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு நாங்கள் மசியமாட்டோம். நீங்கள் ஆட்சியமைக்க ஒத்துழைக்காவிட்டால் இவ்வாறும் எங்களிடம் வழிகள் இருக்கின்றன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி மிரட்டல் விடுத்திருக்கும் நிலையில் தமிழர் பிரதேசங்களிலுள்ள சபைகளின் நிலைமை எவ்வாறிருக்கும் என்பது சற்று சிந்திக்க வேண்டியதே. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குலையாமலிருந்திருந்தால், வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு பெருகியிருக்காது என்பதுபோல், தெற்கில் ஐக்கிய மக்கள் சக்தி – ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருந்தால் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கே வந்திருக்காது. இது யார் செய்த பிழை. பெரும்பான்மையில்லாத ஜனாதிபதி அதிகாரம் தெற்கிலும், மக்களின் வெறுப்பினாலேயே ஒதுக்கப்படுகின்ற அரசியல் வடக்கு கிழக்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தெற்கில் நடைபெற்று வருகின்ற குழப்பம் ஒரு ஒற்றுமைக்குக் காலாக அமைந்திருந்தாலும் வடக்கு கிழக்கில் மேலும் மேலும் விரிசலுக்கே வழிவகுத்து வருகிறது என்பதுதான் முக்கியமானது. இதற்கு யார் காரணம் என்பதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளாமலிருப்பதுதான் இதில் வினோதம். ஒற்றுமையின் சக்தியை உணர்ந்துகொள்ளாதவர்கள் இருக்கின்றார்களானால் அவர்களுக்கு அதனைப் புரிய வைப்பது மக்களாகவே இருக்கவேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/காலங்கடந்த-ஒற்றுமையின்-பயன்/91-358887
  17. யாழ். மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் பெயர்களை பரிந்துரைத்த தமிழரசு! யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்குத் விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைத்துள்ளது. மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். யாழ். நல்லூரில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/யாழ்-மாநகர-சபைக்கான-மேயர-2/
  18. ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்! adminJune 10, 2025 கடந்த ஆண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சில சிறைச்சாலைத் கண்காணிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைகள் குறித்து CID சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட அனுராதபுரத்தைச் சேர்ந்த திலகரத்ன என்ற சந்தேக நபரைக் கைது செய்ய பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/216582/
  19. தையிட்டி சட்டவிரோத விகாரை முன் போராட்டம் – கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27 பேருக்கு தடை! adminJune 10, 2025 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் கட்டளை பெறப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10.06.25) நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் நேற்றைய தினம் (09.06.25) திங்கட்கிழமை போராட்டம் ஆரம்பமான போராட்டம் இன்றைய தினம் மாலை வரையில் நடைபெறவுள்ளது. போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் காவற்துறையினரின் தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். https://globaltamilnews.net/2025/216568/
  20. எதிர்காலத்தில் அபாயகரமான நிலை உருவாகும் : கருணா கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாத அபாயகரமான நிலை காணப்படும். எனவே, கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான கருணா அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் ஆகியோர் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட கிழக்கு தமிழ் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போதே இதை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கியதன் நோக்கம் வெறும் பதவி பட்டங்களுக்காக அல்ல. எங்களது கிழக்கு மாகாண மக்கள் உரிமையுடனும் தற்துணிவுடன் காத்திரமான தியாகத்துடன் வாழவேண்டும் என்பதற்காக. கிழக்கு மாகாணம் மூவினங்களும் செறிந்து வாழும் இடம். எனவே தமிழ் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் நிச்சயமாக ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாது. ஆகவே தான் கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுள்ளோம். இப்போது அரசாங்கமும் அழைப்பு விடுத்துள்ளது. எனவே யார் முன்வருகின்றார்களோ, எங்களுக்கு சாதகமான பேச்சுவார்த்தை நடாத்தி நாங்கள் அந்த ஆட்சியை அமைப்பதற்கு உதவி செய்வோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். வட மாகாணத்தை எடுத்துக்கொண்டால் இன்று ஆட்சி அமைப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்த கஜேந்தரகுமாரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது. அவ்வாறே டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் சந்தித்துள்ளார். அதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. அதில் வேடிக்கையான விடயம் ஒட்டுக்குழு, தலைவரை சந்தித்ததாக கூறப்பட்டதேயாகும். அவரும் மக்களுக்காக போராட்டத்துக்காக ஆயுதம் தூக்கி வந்த தலைவர்தான். அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து சேவையாற்றி வந்தவர். ஆகவே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சிவஞானம் துணிந்து சென்று டக்ளஸுடன் பேசி ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை வரவேற்கின்றோம். இது போன்று எதிர்காலத்தில் நாங்கள் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். அதை தான் கிழக்கு மாகாணத்தில் எதிர்பார்க்கின்றோம். வேடிக்கை என்னவென்றால் யுத்தம் நடந்த காலத்தில் யுத்தத்தை விமர்சித்தவர்கள் அல்லது யுத்தத்தில் இருந்து தப்பி ஓடியவர்கள் தற்போது தேசியவாதிகளாக மாற்றமடைந்துள்ள அவர்கள்தான் தேசியத்தை பற்றி அதிகமாக பேசுகின்றனர். உண்மையில் களத்தில் இருந்த போராளிகள் இன்று துரோகிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். எனவே களத்தில் நின்ற எத்தனையோ போராளிகள் கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் வெற்றி அடைந்துள்ளனர் என்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்றார். R https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எதரகலததல-அபயகரமன-நல-உரவகம-கரண/73-358894
  21. புதன் கிழமை போட்டி ஆரம்பிக்குது!😄 போதை மருந்து பாவித்து ஒரு மட்ச்க்கு தடை செய்யப்பட்ட ரபடா விளையாடுகின்றார்!
  22. ”யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும்”- எம்.ஏ.சுமந்திரன் யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் (8) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறுவதில்லை. சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே எமது கட்சி உருவாக்கப்பட்டது. அதற்காகவே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகின்றோம். 1956ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் மக்கள் பிரதானமாக நம்புவது இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டும்தான். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் மக்களது ஆணைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என வெளிப்படையாக சொன்னேன். மக்கள் தவறாக முடிவெடுப்பதில்லை. என்பிபி வாக்களித்த விவகாரத்தில் கூட அது மக்களுடைய தீர்ப்பு. அரசாங்கம் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களது தீர்ப்பினை மதிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் கோரி வருகின்றோம். ஒரு குறிப்பிட்ட சபையில், தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் மக்களின் ஆணையை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த சபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டியது உங்களுடைய ஜனநாயகக் கடமை. இதனை நாங்கள் 2018ஆம் ஆண்டிலேயே சொல்லி இருக்கிறோம். சந்திப்புகள் தொடர்பாக சில உணர்வுபூர்வமான விடயங்கள் இருக்கின்றன. நாங்கள் அதனை மதிக்கின்றோம். அதனைப் புறம்தள்ளவில்லை. கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவரது வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவர் இடையில் தும்புக்கட்டை கதை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் எமது கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாம் சந்திப்புக்கான இடத்தை மாற்றியிருந்தோம். எனவே சந்திப்புக்கான இடம் குறித்த விவகாரத்தில் மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தாக்கம் ஏற்பட்டிருந்தால் அத்தனையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தைப் பார்க்கின்றபோது நாங்கள் யாருடனும் கூட்டாட்சி அமைக்கவில்லை. மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தை கோருகின்ற அரசியற் கட்சி. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கிய பிறகு அதற்கு குறுக்கே எவரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம். யாழில் உள்ள 17 சபைகளில் ஒன்றிரண்டு சபைகளில் எமக்கு பெரும்பான்மை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் சொன்ன கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்லிவிட்டு, அதனை மறுதலிப்பதற்காக கபடத்தனமாக பலர் செயற்படும் காரணத்தால், 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம். மக்களின் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தியை விட கூடுதலாக எடுக்கும் வகையில் மக்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஏனையவர்களால் தேசிய மக்கள் சக்தியை மேவி வர முடியவில்லை. தமிழ் மக்களை, தமிழ்த் தேசியத்தை நிமிர வைத்திருக்கிற ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. அவ்வகையிலான மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கான உரித்துடையவர்கள். அதற்கு குறுக்கே எவரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம் எனத் தெரிவித்தார். https://www.samakalam.com/யாழில்-17-சபைகளிலும்-இலங்க/
  23. சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு! adminJune 9, 2025 இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை காவற்துறை சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம காவற்துறை அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வௌியிடும் போது, இவர்களை 5 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகக்கூடிய அபாயத்தில் இருக்கும் சுமார் 7,880 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். https://globaltamilnews.net/2025/216546/
  24. அனுராதபுர சிறை அதிகாரி கைது! adminJune 9, 2025 அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8.06.25) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தது தொடர்பான விசாரணை தொடர்பாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 4 மில்லியன் ரூபாவை மோசடி செய்து தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பிரதிவாதியை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கைதி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட அத்தியட்சகர் வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்ற பிரதிவாதி, மே 12 ஆம் திகதி வந்த வெசாக் பெளர்ணமி நாளில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறைச்சாலை அத்தியட்சகரின் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரான அனுராதபுரம் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர், இன்று (9) அனுராதபுரம் பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். https://globaltamilnews.net/2025/216541/
  25. மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள் adminJune 8, 2025 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் போது, பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரர், யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/216534/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.