Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு! புற்றுநோய் சிகிச்சையை குழப்பம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம்தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்; இந்த மருத்துவமனையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விசேடமான ஒரேஒரு புற்றுநோய் மருத்துவமனை ஆகும். வடக்கிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். தெற்கில் இருந்து கூட பல நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த காலத்தில் 11 சதவீதமான மக்கள் வெளி மாவட்டத்திலிருந்து இங்கே வருகை தந்து சிகிச்சையை பெற்று சென்றனர். இதிலிருந்து நமது மருத்துவமனை எவ்வாறு சிறப்பான சேவையை வழங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இதனை சிதைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட இலாபத்தை கருத்தில் கொள்ளாத, தன்னலமற்ற மருத்துவர்கள், நிர்வாகத்தினரால் அடக்குமுறை, பழிவாங்கல் வாங்கல் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி சிறந்த மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றனர். இதனால் இனிமேல் மக்கள் தனியார் அல்லது மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது. ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுகின்ற உரிமையை பாதுகாக்க வேண்டும். தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்- என்றார். இதன்போது, போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மருத்துவர்கள், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://newuthayan.com/article/தெல்லிப்பழை_ஆதார_மருத்துவமனைக்கு_முன்பாக_கவனவீர்ப்பு_போராட்டம்_முன்னெடுப்பு!
  2. யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு : துணை முதல்வரானார் தயாளன் 13 JUN, 2025 | 09:58 AM யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனங்களையும் பெற்றுள்ளனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவின் பெரையும் பரிந்துரைந்துரைத்தன. முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. அதன் போது, தமிழரசு கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட மதிவதனி விவேகானந்தராஜாவிற்கு வாக்களித்தனர். அதன் மூலம் 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவானார். அதேவேளை தேசிய மக்கள் சக்தியினர் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது. துணை முதல்வராக தமிழரசு கட்சியின் உறுப்பினர் இமானுவேல் தயாளன் தெரிவாகியுள்ளார். https://www.virakesari.lk/article/217328
  3. ஈரானின் நட்டான்ஸ் அணுஉலையில் வெடிப்பு சம்பவம் Published By: RAJEEBAN 13 JUN, 2025 | 08:20 AM ஈரானின் நட்டான்ஸ் அணுஉலையில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானின் தலைநகரிலிருந்து தென்பகுதியில் இந்த அணுஉலை அமைந்துள்ளது. https://www.virakesari.lk/article/217322 இஸ்ரேல் தாக்குதல்- ஈரானின் இரண்டு அணுவிஞ்ஞானிகள் பலி 13 JUN, 2025 | 08:33 AM இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் இரண்டு அணுவிஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் பெரடுன் அப்பாசி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.இந்த அமைப்பே ஈரானின் அணுஉலைகளிற்கு பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 2001 இல் இவர் ஈரான் தலைநகரில் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பினார். தெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் பல்கலைகழகத்தின் தலைவரும் கொல்லப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217323 ஈரான் இராணுவத்தின் தளபதியும் பலி 13 JUN, 2025 | 10:23 AM ஈரானின் அணுஉலைகள் பாதுகாப்பு இலக்குகளை முன்வைத்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் ஈரானின் இராணுவதளபதியும் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் மற்றும் பாதுகாப்பு இலக்குகளை குறிவைத்து மேற்கொண்ட முன்கூட்டிய தாக்குதலில் ஜெனரல் முகமட் பகேரி கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் அரசதொலைக்காட்சி இதனை உறுதி செய்துள்ளது. https://www.virakesari.lk/article/217330
  4. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - Published By: RAJEEBAN 13 JUN, 2025 | 06:52 AM ஈரான்மீது தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரான் ஆளில்லா விமானதாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என்பதால் அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேல் பெருமளவு அணுசக்தி அணுவாயுத இலக்குகளையும் இராணுவ இலக்குகளையும் தாக்குவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் முன்கூட்டிய தாக்குதலை தொடர்ந்து ஈரான் ஆளில்லா விமான தாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217320 ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி 13 JUN, 2025 | 07:59 AM ஈரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதலில் இறந்த பல மூத்த தலைவர்களில் அவரும் ஒருவர். அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அப்பாசியும் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது https://www.virakesari.lk/article/217321
  5. எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது உறுதி செய்திகள் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடற்படையும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்: நேற்று (11) மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். இந்தச் சந்திப்பு, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தமிழக மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய வருகை மற்றும் இதுதொடர்பாக அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில் மீன்பிடி அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டார். தமிழக மீனவர்களின் 60 நாள் மீன்பிடித் தடைக் காலம் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர், அவர்களின் எல்லை தாண்டிய வருகை எமது கடல் பகுதியில் நிச்சயமாக இடம்பெற வாய்ப்புள்ளது. இதனை அரசும், மீன்பிடி அமைச்சும் எவ்வாறு தடுக்கத் திட்டமிட்டுள்ளன என்பது குறித்தும், வடபகுதி மீனவர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளனர் என்பது குறித்தும் நாங்கள் ஆழமாக கலந்துரையாடினோம். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையையும், சட்டவிரோத மீன்பிடித்தலையும் தடுப்பதற்காக நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். தமிழக மற்றும் இந்திய மட்டங்களில் இதுகுறித்து பேசியுள்ளோம். பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளோம். வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் 2004 ஆம் ஆண்டு முதல் இவ்விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. நெப்சோ (NEPSO) நிறுவனமும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுப்பதற்கான திட்டம் குறித்து மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடினோம். இவ்விடயம் தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்படுகின்றன. கடற்படையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். வடபகுதி மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அரசு தனது செயல்பாடுகளில் உறுதியாக உள்ளது என்று மீன்பிடி அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். அரசாங்கம் அத்துமீறிய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம். இருப்பினும், கடற்படை மற்றும் அரசு இவ்விடயத்தில் கவனக்குறைவாக இருந்தால், எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் மீனவர்களிடையே உள்ளது என்பதை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmbtkjp4g01s8qpbs4sakqw11
  6. லோர்ட்ஸ் மைதானத்தில் முதல் இரு நாட்களிலும், கடைசி இரு நாட்களிலும் ஆடுவது சிரமம். மூன்றாம் நாள் வெயில் வேறு அதிகமாக உள்ளதால் தென்னாபிரிக்கா துடுப்பாட்டத்தை விரைவில் ஆரம்பித்தால் வெல்ல வாய்ப்பு உள்ளது. தென்னாபிரிக்கா வென்றால்தான் எனக்கு இனி புள்ளிகள் வரும்! வரத்தானே வேணும்😃 அவுஸ் வெல்லும் என்றது நாளைய காலநிலையை ஆராயாமல் சொன்னது! தென்னாபிரிக்கா வெல்லும் என்று சொல்வது கிரிக்கெட் ஜாம்பாவான்களின் கருத்தைக் கேட்டபின்!🤪
  7. நாளைக்கு வெயில் அதிகம். மூன்றாம் நாள் லோர்ட்ஸ் மைதானத்தில் நல்ல ஸ்கோர் எடுக்க வாய்ப்பிருக்கு. தென்னாபிரிக்கா வெல்லுது💪
  8. STUMPS • Starts 10:30 AM Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship AUS (40 ov) 212 & 144/8 SA 138 Day 2 - Australia lead by 218 runs. CRR: 3.60 • Last 10 ov (RR): 60/1 (6.00)
  9. Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship AUS (32.1 ov) 212 & 93/7 SA 138 Day 2 - Session 3: Australia lead by 167 runs. CRR: 2.89 • Min. Ov. Rem: 19.5 • Last 10 ov (RR): 35/3 ( இப்பத்தான் பார்க்க நேரம் கிடைத்தது! அவுஸ் கட்டாயம் வெல்லும்!
  10. LIVE Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship AUS 212 SA (54.4 ov) 135/7 Day 2 - Session 2: South Africa trail by 77 runs. CRR: 2.46 • Min. Ov. Rem: 57.2 • Last 10 ov (RR): 37/2 (3.70) Batters R B 4s 6s SR Keshav Maharaj* (rhb) 5 9 1 0 55.55 David Bedingham (rhb) 45 109 6 0 41.28 Bowlers O M R W Econ Nathan Lyon (ob) 7.4 3 12 0 1.56 Pat Cummins (rf) 17 5 28 4 1.64 P'SHIP: 9 Runs, 2.4 Ov (RR: 3.37) • L'BAT: Marco Jansen 0 (3b)• FOW: 126/7 (51.6 Ov)
  11. தக் லைஃபும் தாக்குதல்களும் jeyamohanJune 12, 2025 அன்புள்ள ஜெ, உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையனின் திரைவிமர்சனம் உங்கள் பார்வைக்கு. இணையத்தில் எழுதிக்குவிக்கப்பட்ட பலநூறு விமர்சனங்களுக்கு நேர் எதிரான விமர்சனம் இது. ஆனால் சென்ற சில நாட்களாக இத்தகைய விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. முன்பு கடல் வந்தபோதும் இப்படி ஆக்ரோசமான எதிர்விமர்சனங்களும் டிரோல்களும் வந்தன. ஆனால் இன்று ஒரு சாரார் அது அபாரமான ஒரு படம் என்று சொல்வதைக் கேட்கமுடிகிறது. கடல் சினிமாவின் மூலவடிவம் நாவலாக வெளிவந்துள்ளது என்று அறிந்தேன். வாசிக்கவேண்டும். ராஜ் Thug Life: ஒரு திரையனுபவம் நேரம் போனதே தெரியவில்லை. அபாரமான படம். உண்மையில் டிரோல் செய்கிறவர்களும் நானும் ஒரே படத்தை தான் பார்த்தோமா என்றே படம் முழுதும் தோன்றியது. கமல் தான் மகா நடிகன் என்று போகிற போக்கில் காட்டிவிடும் இடங்கள் அநேகம். சிறை விடுதலைக்குப் பின் திரிஷாவை சந்திக்கும் அந்த காட்சி கவிதை. நடிகன், கலைஞன் என்றால் அவன் தான். கமலின் பல படங்களில் நாம் கமல் என்கிற தனி மனிதனின் வாழ்வின் கூறுகளை காண முடியும். Kamal’s movie have autobiographical traces. கமல்–திரிஷா–சிம்பு பற்றி அநேக கிண்டல்கள் ஆனால் வாழ்விலும், இலக்கியத்திலும் கானும் கவித்துவ முரண் அவர்கள் பிணைப்பு. திரிஷா மீது பெரும் காதலும் மனைவியான அபிராமி மீதும் மாறா காதல் அதிசயமல்லவே நம்மை சுற்றிய வாழ்விலும் காண்பது தானே அது? வரலாற்றிலும் உதாரணங்கள் உண்டே? மகாத்மா முதல் முத்தமிழ் அறிஞர் வரை பார்த்தது தானே அது? திரைக்கதை எல்லாம் நேர்த்தியாகவே இருந்தது. கமல் ஒரு சினிமா ரசிகனாக தனக்கு இப்படம் முதலில் பிடித்தது என்றது உண்மை. இந்த படத்தை கழுவி ஊற்றுபவர்கள் என்னமோ காலையில் Bicycle Thief பார்த்து மதியம் பதேர் பாஞ்சாலி பார்த்து இரவு ஈரானிய திரைப்படத்தில் லயிப்பது போல் பேசுகிறார்கள். எல்லா படத்திலும் நிறை குறைகள் இருக்க தான் செய்யும் இதிலும் உண்டு. அதற்காக என்னமோ குப்பையை கொடுத்து விட்டது போல் எழுதி தள்ளுகிறார்கள். ஐயோ இத்தனை கஷ்டப்பட்டார்களே, இவ்வளவு கோடி செலவாச்சே என்று உங்களை பாராட்ட சொல்லவில்லை உண்மையாகவே மணி, கமல், ரஹ்மான் மீது ஒரு பரவலான ஒவ்வாமை இணைய உலகில் இருக்கிறது. பலருக்கு இம்மூவர் மீது தனித்தனியாகவோ கூட்டாகவோ வன்மமும் குரோதமும் இருக்கிறது. நாயகனோடு படம் நன்றாகவே கனெக்ட் ஆகிறது. நாயகன் வந்த போது அதை வணிகத்தில் வீழ்த்தியது ரஜினி போட்ட குப்பை ஒன்று. காலப் போக்கில் தான் நாயகன் பாராட்டபட்டது. வரலாறு முக்கியம். இந்திய திரையிசையின் துருவ நட்சத்திரமாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் விளங்குகிறார் அல்லா ராக்கா ரஹ்மான். பாடல்களுக்கு பின்னணி இசையும் ஓர் சுகானுபவம். ரஹ்மான் திரையிசைக்கு கொடுக்கும் உழைப்பு அபாரம் அவர் ஈடுபடுத்தும் டெக்னீஷியன்கள் ஒரு army. ஆம் அது தான் சர்வதேச தரம். தனி ஆவர்த்தனம் செய்யலாம் தான் ஆனால் அது குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு ஒப்பானது. ரஹ்மானின் இசைக்கு சரியான விமர்சனம் எழுத நிச்சயம் தமிழகத்தில் ஆளே இல்லை. இந்தியாவிலும் எனலாம். கமலுக்கும் ரஹ்மானுக்கும் ஒரே பிரச்சனை தான். They are creative giants lost in a sea of mediocrity and given that they subject themselves to commercial needs they attempt to bow and scrape before intellectual pygmies. கமலின் பல பேட்டிகளும் உரையாடல்களும் சமீப காலத்தில் ஆசுவாசத்தையே தருகிறது அதற்கு முக்கிய காரணம் அவரை (ஏன், ராஜா, ரஹ்மான் கூட தான்) உருப்படியாக பேட்டி எடுக்க கூட ஒருவரில்லை. அந்த ஆடியோ லாஞ்ச் தொகுப்பாளர்கள் கமல், ரஹ்மானின் கால் தூசுக்கு சமானம், இந்த கும்பலை வைத்துக் கொண்டு தான் அவர்கள் சரக்கை சந்தைக்கு கொண்டு வர வேண்டி இருக்கிறது. படம் முடிந்து வெளியே வருகிறேன் ஒரு கும்பல் கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டிருந்தது. படத்தில் கடுமையாக தாக்கப்பட்ட கமல் மலை உச்சியிலிருந்து தொலைவில் தெரியும் பௌத்த குடியிருப்பை பார்த்துக் கொண்டு எப்படி அடைவது என்று யோசிப்பார் அப்போது ஒரு பனிச் சரிவு அவரை அங்கு கொண்டு சேர்க்கும். இதை ஒருவன் கிண்டலடிக்கிறான், “ஆமா பெரிய லாஜிக்கா காமிக்கறாங்களாம்” என்று. இதே ஆள் மூன்று வாரம் முன்பு தாம் க்ரூஸைன் சாகசங்களுக்கு விசிலடித்திருப்பார். படம் எனக்கு நிச்சயம் பிடித்தது. எல்லா நடிகர்களும் மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். வையாபுரி“நடித்த” படம் என்றால் ஹே ராமும் இதுவும் தான். அது தான் கமல் எனும் கலைஞன் மற்றவர்களின் திறனை வெளிக்கொணரும் வகை. கமலின் வாரிசாக சிலம்பரசனை நான் நினைத்த காலமுண்டு அந்த நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது. எம்.ஜி.ஆரின் வாரிசாக ரஜினியும் சிவாஜியின் வாரிசாக கமலும் வந்தனர். ரஜினி வாரிசாக விஜய் வந்தார் அடுத்து வேறு யாராவது வரக் கூடும் ஆனால் கமலின் இடம், நாளை அவர் இறந்தால், வெற்றிடம் தான். கமல் மரணம் பற்றி அதிகம் பேசியது “உத்தம வில்லன்” படத்தில், அதன் பிறகு இப்போது. ஓ ஆரம்ப காட்சிகளில் அச்சு அசல் குருதிப்புனல் கமலை காணலாம். இன்னும் ஒரு முறை கூட திரையரங்கில் பார்க்கலாம். அரவிந்தன் கண்ணையன் (முகநூலில்) அன்புள்ள ராஜ், ஒரு கமல் ரசிகராக உங்கள் ஆதங்கம் புரிகிறது. நான் சொல்லவிருப்பதை பொதுவாக திரையுலகுக்குள் உள்ள எவரும் சொல்ல மாட்டார்கள். அது உருவாக்கும் எதிர்வினைகளைச் சந்திப்பது மிகக்கடினம். நான் முழுச்சினிமாக்காரன் அல்ல, எழுத்தாளன், ஆகவே சொல்லலாம். (நாம் சொல்வதை எவரும் கவனிக்க மாட்டார்கள்.) கங்குவா, ரெட்ரோ, தக்லைஃப் என பல சினிமாக்கள் தொடர்ச்சியாக திட்டமிட்டு வீழ்த்தப்படுகின்றன. முதன்மைக் காரணம் அரசியல். அரசியல் இயக்கங்கள் இன்று இணையத்தில் ஒற்றைப்பெரும் அமைப்பாகத் திரண்டுள்ளன.ஒரு படத்துக்காக அவர்கள் திரளவில்லை, தொடர்ச்சியாக ஆண்டுமுழுக்க ஒற்றைத்தரப்பாக திரண்டு செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். அந்த பெரிய அமைப்பு ஒரு சினிமாவை அழிக்க நினைத்தால் அவர்களுக்கு அது ஒருநாள் வேலைதான். அரசியலமைப்புகளின் பிரச்சாரங்களை பொதுமக்கள் நம்புவதில்லை. ஆனால் அரசியலமைப்புகள் சினிமாக்களை வீழ்த்த செயல்படக்கூடும் என இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை. ஆகவே இவற்றை பொதுமக்களின் கருத்தாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் தக்லைப் திரையரங்கில் வெளியாகி வெறும் இருபது நிமிடங்கள் ஆவதற்கு முன்னரே மிகக்கடுமையான பலநூறு எதிர்விமர்சனங்கள், டிரோல்கள், வெளியாகிவிட்டன. அனைவருமே படத்தை அமெரிக்காவில் பார்த்தோம், துபாயில் பார்த்தோம் என்று எழுதினார்கள். முதல்காட்சி முடிவதற்குள்ளேயே படம் பற்றிய எதிர்மறை கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. காரணம் கமல்ஹாசனின் அரசியல்தான். சூரியாவுக்கும் இதே பிரச்சினைதான். இதில் பல நடைமுறை நுணுக்கங்கள் உள்ளன. ஒரு தரப்பு படத்தை வீழ்த்த முயன்றால் இன்னொரு தரப்பு தூக்க முயலலாமே என்று கேட்கலாம். அது சாத்தியமே இல்லை. எவரானாலும் ஒரு நுகர்வுப்பொருளைப் பற்றி எதிர்மறைச் சித்திரத்தை மட்டுமே உருவாக்கமுடியும். நேர்நிலைச் சித்திரத்தை உருவாக்க முடியாது. ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் மட்டுமல்ல, தடுப்பு நிலைபாடுகூட எடுக்கமுடியாது. கமல்ஹாசனுக்கும் ரசிகர்படை உண்டு, அரசியல்தரப்பும் உண்டு, அவர்கள் செயலற்றவர்கள். அவர்கள் வேண்டுமென்றால் இன்னொரு படத்தை வீழ்த்தலாம். சிறிய படங்களை இப்படி வீழ்த்தமுடியுமா என்றால் அது சாத்தியமல்ல. சிறிய படங்களுக்கு இந்தவகை தாக்குதல்கள் விளம்பரம்தான் ஆகும். பெரிய படங்களை மட்டுமே தாக்கி வீழ்த்தமுடியும். பெரிய படங்கள் ஏற்கனவே பெரிய அளவில் பிரமோ செய்திருப்பார்கள். ஆகவே அனைவரும் அதைக் கவனிப்பார்கள். அந்தக் கவனத்தை அப்படத்தைத் தாக்குபவர்கள் மிக எளிதாக தங்கள்மேல் திருப்பிக்கொள்கிறார்கள்.அதாவது படத்தை தாக்குபவர்கள் அப்படம் அளிக்கும் விளம்பரத்தைப் பயன்படுத்தியே அதை வீழ்த்துகிறார்கள். சென்ற சில ஆண்டுகளில் பிரமோவே செய்யப்படாமல் வெளிவந்த படங்கள் சத்தமில்லாமல் தப்பித்துக் கொண்டன. சரி, அப்படியென்றால் பிரமோ செய்யாமலிருக்கலாம் என்றால் மிகப்பெரிய படத்தில் அது பெரிய ‘ரிஸ்க்’. ஏனென்றால் அத்தகைய படங்களுக்கு தொடக்கவிசை மிக முக்கியம். மிக அரிதான கதைக்கருவும், மிக வேறுபட்ட திரைக்கதையும் கொண்ட ஒரு படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றால் எந்த அளவுக்கு எதிர்மறை விமர்சனம் செய்தாலும் எடுபடாது. அதனால் அந்தப்படம் மேலும் ஆதரவைத்தான் பெறும். ஆனால் நூறு இருநூறு கோடி ரூபாய் முதலீடு கொண்ட ஒரு மிகப்பெரிய வணிகப்படத்தை அப்படி எடுக்க முடியாது. அனைவருக்கும் உகந்த படமாக அமையவேண்டும் என்றால் அதற்கு ஒரு சராசரித்தன்மை அவசியம். பொதுவாக கதைக்கரு, கதைக்களம் எல்லாமே கொஞ்சம் அறிமுகமானதாகவே இருக்கவேண்டும். கதைசொல்லும் முறை, நடிப்பு போன்ற சிறிய மாற்றங்களே சாத்தியம் ஹாலிவுட்டின் எந்தப் பெரிய படத்தைப் பார்த்தாலும் இதைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய சுவாரசியமான, நடுத்தரத் தன்மை கொண்ட ஒரு படத்தை எதிர்மறையாகச் சித்தரித்து, கேலி செய்து வீழ்த்திவிட முடியும். இந்தியில் தொடர்ச்சியாக படங்கள் இப்படி வீழ்த்தப்பட்டன. அத்தனை நடிகர்களும் அடிபணிந்தனர். அண்மையில் எம்புரானுக்குப்பின் மோகன்லால் காலடியிலேயே விழுந்து விட்டார். இங்கும் அந்த வகையான உச்சகட்ட அழுத்தம்தான் உள்ளது. இங்கும் தாக்குப்பிடிப்பது கடினம் என்பதே என் எண்ணம். தக் லைப் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு கேங்ஸ்டர் படம். ஆனால் ஆணவமும் அதன் விளைவான துரோகமும் ஊடாடும் சித்திரத்தை அளிக்கிறது. நீண்ட காலக் கதை. ஆகவே பல இடைவெளிகள் கொண்ட படம். வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சிகளை தொட்டுத்தொட்டு செல்கிறது. கொஞ்சம் கவனமாகப் பார்க்கப்படவேண்டிய படம். ஆனால் அக்கவனத்தை சிதறடித்துவிட்டால் மொத்தமாகவே பார்வையாளனிடமிருந்து அகன்றுவிடக்கூடியது. ஜெ https://www.jeyamohan.in/218316/
  12. தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு! Veeragathy Thanabalasingham on June 11, 2025 Photo, REUTERS உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும் தேசிய மக்கள் சக்தியும் எதிரணி கட்சிகளும் மற்றைய கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன. முன்னைய அரசாங்கங்களைப் போன்று தேசிய மக்கள் சக்தியும் ‘குதிரை பேரத்தில்’ ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அரசாங்கத் தலைவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஒரு அரசியல் ஆய்வாளர் கடந்த வாரம் கூறியதைப் போன்று முறைமையை அரசாங்கம் மாற்றுகிறதா அல்லது அரசாங்கத்தை முறைமை மாற்றத் தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை. தென்னிலங்கையில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றி முதலாவதாக வந்த தேசிய மக்கள் சக்தி நிருவாகங்களை அமைக்க முடியாமல் இருப்பதை போன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் பெரும்பாலான சபைகளில் முதலாவதாக வந்த இலங்கை தமிழரசு கட்சியினாலும் செய்ய முடியாமல் இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள சபைகளில் தமிழ் கட்சிகள் மாத்திரம் நிருவாகங்களை அமைப்பதற்கு ஒத்துழைப்பதாக தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய பல தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முன்னென்றும் இல்லாத வகையில் பெற்ற வெற்றி தங்களின் எதிர்கால அரசியலுக்கு பெரிய ஆபத்தாக அமையப்போகிறது என்று அஞ்சிய தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசியவாதத்தின் இருப்பை உறுதிசெய்யவும் தேசியவாத உணர்வை தமிழ் மக்கள் இழந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கவும் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ்க் கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களிடம் கேட்டார்கள். தென்னிலங்கையின் எந்தவொரு தேசியக் கட்சிக்கும் தமிழர்கள் வாக்களிக்கக்கூடாது என்பதே அவர்களின் வலியுறுத்தலாக இருந்தது. அதிகாரத்துக்கு வந்த பிறகு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக, தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடைப்பிடித்த அக்கறையற்ற அணுகுமுறை தமிழ் கட்சிகளின் வேண்டுகோளை தமிழர்கள் பெருமளவுக்கு கருத்தில் எடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறுவது போன்று தமிழ் மக்கள் குறிப்பாக, வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியை முற்றாக நிராகரித்து விட்டதாக ஒருபோதும் கூறமுடியாது. வடக்கில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் அதற்கு தெளிவான சான்று. தமிழ்த் தேசியவாத அரசியலின் கோட்டை என்று கருதப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசு (135 ) கட்சிக்கு அடுத்ததாக கூடுதல் ஆசனங்களை (81) தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றியது. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த 16 வருட காலப்பகுதியில் தங்களது அரசியல் உரிமைப் போராட்டத்தை வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களை முழங்குவதை விடுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்ற முறையில் விவேகமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான வழிமுறைகளில் முன்னெடுக்கத் தவறிய தமிழ்க்கட்சிகளை தமிழ் மக்கள் மீண்டும் முழுமையாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறமுடியாது. கடந்த ஆறு மாதங்களில் ஜனாதிபதி அநுர குமார குமார திசநாயக்கவும் அவரது அரசாங்கமும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் அவர்களது பிரச்சினைகளை கையாளுவதில் மனப்பூர்வமான நாட்டத்தை காட்டியிருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்ததை விடவும் கூடுதலான ஆதரவை வடக்கு, கிழக்கில் பெற்றிருக்க முடியும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தத் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடத்தை புகடடுவதற்கு தமிழ் மக்கள் விரும்பினார்கள் என்றும் அந்தப் பாடத்தை உகந்த முறையில் புரிந்துகொண்டு தமிழ்க்கட்சிகள் அவற்றின் போக்கை மாற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் பெரிய அனர்த்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களுக்குப் பின்னரான தமிழ் அரசியல் நிகழ்வுப் போக்குகளை நோக்கும் போது நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் எந்த பாடத்தையும் பெற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றிகளை அடுத்து அவர்கள் தங்களது பழைய பாதைக்குத் திரும்பிவிட்டார்கள். உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை அமைப்பதில் தமிழ் கட்சிகள் ஒத்துழைத்துச் செயற்படும் என்று எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. உள்ளூராட்சி நிருவாகங்களில் ஒத்தழைத்துச் செயற்படுவதற்கு கிடைக்கும் வாய்ப்பு நாளடைவில் தமிழ்க்கட்சிகளின் பரந்தளவிலான ஒற்றுமைக்கு வழிவகுக்க முடியும் என்று எதிர்பார்த்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக வடக்கில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள், கூட்டணிகளை அமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைப் பிரகடனங்கள் தமிழ் மக்களின் நலன்களை விடவும் தங்களது கட்சி அரசியல் நலன்களிலேயே தமிழ் அரசியல்வாதிகள் கடுமையான கரிசனை காட்டுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகின்றன. தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரேமாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதில் மாத்திரமே தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இருக்கிறது. வடக்கில் தேசிய மக்கள் சக்தி பல உள்ளூராட்சி சபைகளில் தனியாக நிருவாகத்தை அமைக்கக்கூடியதாக அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தால் சில வேளைகளில் தமிழ் கட்சிகளின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருந்திருக்கக்கூடும். ஏனென்றால், தங்களது அரசியல் இருப்புக்கு ஆபத்தாக அமையக்கூடிய எந்தவொரு நிகழ்வுப் போக்கிற்கும் எதிராக ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அந்த ஆபத்தைக் கடந்து விட்டால் தங்களது பழைய போக்கிற்கு திரும்பிவிடுவார்கள். இன்று வடக்கில் நடப்பது அதுதான். வடக்கு தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று இரு முகாம்களாக பிரிவுபடும் திசையை எடுத்திருக்கிறது. ஒன்று தமிழரசு கட்சியும் அதற்கு ஆதரவான சக்திகளும். மற்றையது தமிழ் தேசிய பேரவை என்ற புதிய அவதாரத்தை எடுத்திருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதற்கு ஆதரவான சக்திகளும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியாக இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக விளங்கிய தமிழரசு கட்சி தற்போது கூட்டணிகளை அமைப்பதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால், தங்களைத் தவிர கொள்கையில் நேர்மையானவர்கள் இலலை என்ற நம்பிக்கையில் இதுகாலவரை மற்றைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு திட்டவட்டமாக மறுத்து வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி இப்போது கூட்டணி அமைப்பதில் அக்கறை காட்டுகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான அங்கத்துவ கட்சியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விளங்குகிறது. உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னதாக சில குழுக்களை இணைத்துக் கொண்டு தமிழ் தேசிய பேரவை என்ற அவதாரத்தை எடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்குப் பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்திருக்கிறது. புதிய கூட்டணிக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. தமிழ்ப் பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை அமைப்பதே புதிய கூட்டணியின் அடிப்படை நோக்கம் என்ற போதிலும், இரு தரப்பினரும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஓரணியில் செயற்படப்போவதாக உறுதிபூண்டு உடன்படிக்கையில் கடந்தவாரம் கைச்சாத்திட்டதுடன் கொள்கைப் பிரகடனம் ஒன்றையும் செய்திருக்கிறார்கள். இந்த உடன்படிக்கைக்கு முன்னதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் உள்ளூராட்சி சபைகளில் ஒத்துழைத்துச் செயற்படும் சாத்தியம் குறித்து தமிழரசு கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். ஆனால், தாங்கள் கணிசமான ஆசனங்களை கைப்பற்றிய சில உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க ஆதரவு தரவேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு தமிழரசு கட்சி மறுத்ததை அடுத்து அவர்கள் தமிழ் தேசிய பேரவை பக்கம் சென்றிருக்கிறார்கள். அதேவேளை, தமிழரசு கட்சி உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. அவர்களால் எந்தளவுக்கு ஒத்துழைத்துச் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும். கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தலைமைத்துவ தேர்தலுக்குப் பிறகு தமிழரசு கட்சி உட்கட்சித் தகராறுக்கு உள்ளாகியிருக்கிறது. தலைவர் தேர்தலில் சிவஞானம் சிறீதரனிடம் தோல்வி கண்ட எம்.ஏ. சுமந்திரன் மத்திய செயற்குழுவின் ஆதரவுடன் கட்சியை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். நாடாளுமன்ற குழுவின் தலைவராக இருக்கின்ற போதிலும், சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் கட்சியை நிருவகிப்பவர் போன்றே பெரும்பாலும் நடந்துகொள்கிறார். தமிழரசு கட்சி சுமந்திரனின் வழிகாட்டலில் செயற்படுவதை கட்சிக்குள் உள்ள சிறீதரன் அணியினர் மாத்திரமல்ல, மற்றைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் விரும்பவில்லை. அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளத் தயங்காத அவர்கள் தமிழரசு கட்சி சிறீதரனின் தலைமையின் கீழ் வருவதை பெரிதும் விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. உட்கட்சித் தகராறுக்கு தீர்வைக் காண்பது தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை பொறுத்த விடயம். ஆனால், தமிழரசு கட்சி சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அதற்கு விமோசனம் இல்லை என்று அவரை விரும்பாதவர்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், உள்ளூராட்சி தேர்தலில் கட்சியின் பெரிய வெற்றி அவரின் எதிராளிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அந்தத் தேர்தல் பிரசாரங்களின் முன்னரங்கத்தில் சுமந்திரனே நின்றார். குறிப்பாக, யாழ்ப்பாண குடாநாடடுக்குள் தமிழரசு கட்சிக்கு தோல்வி ஏற்பட்டிருந்தால் அவரை கட்சிக்குள்ளும் தமிழர் அரசியலில் இருந்தும் ஒதுக்குவது சுலபமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. இந்தப் பின்புலத்திலேயே வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சியின் நிருவாகங்களை அமையவிடாமல் தடுப்பதற்கான வியூகங்களை நோக்க வேண்டும். உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய பேரவை ஆகிய மூன்று அணிகளே தமிழர் தரப்பில் முக்கியமானவையாக களத்தில் இருந்தன. தனித்தனியாகப் போட்டியிட்டிருந்தாலும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை செய்வதில் அவற்றுக்கிடையில் ஒற்றுமை இருந்தது. தேர்தலுக்குப் பிறகு உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதில் தோன்றியிருக்கும் சிக்கல் நிலையை தவிர்ப்பதற்காக ஏன் இந்த மூன்று அணியினராலும் ஒரு சுமுகமான ஏற்பாட்டுக்கு வரமுடியாது? கட்சி அரசியல் போட்டியையும் ஆளுமை மோதல்களையும் தவிர இதற்கு வேறு என்ன காரணத்தை இவர்களால் கூறமுடியும்? குறைந்தபட்சம் உள்ளூராட்சி நிருவாகங்களிலேயே ஒத்துழைத்துச் செயற்ட முடியாத இவர்களிடம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு ஒன்றிணைந்த அணுகுமுறையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதனிடையே, உள்ளூராட்சி தேர்தல்களுக்குப் பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த சுமந்திரன் மாகாண சபை தேர்தலில் தமிழரசு கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளியிடாமல் இருந்திருந்தால், வடக்கில் தற்போதைய புதிய அணிசேருகைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கவும் கூடும். வடக்கு அரசியலில் பல வருடங்களாக நிலவும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைமைத்துவத்துக்கான நிழல் யுத்தம் ஒன்று இந்த நிகழ்வுப் போக்குகளில் உட்கிடையாக இருக்கிறது. அதுபோக, வடக்கில் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளையும் அமைக்கப்படும் கூட்டணிகளையும் நோக்கும்போது ‘துரோகிகள்’ என்று ஒருதரப்பு அரசியல்வாதிகளை அழைக்கும் கலாசாரத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்று தெரிகிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12126
  13. WTC FINAL : ரபாடா சாதனையால் பும்ராவை விமர்சிக்கும் ரசிகர்கள்! 12 Jun 2025, 9:39 AM லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூன் 11) தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா. இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்து இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆலன் டொனால்டை பின் தள்ளி அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா பவுலர்களில் ஆலன் டொனால்ட் மற்றும் நிட்டினியை தொடர்ந்து மூன்றாவது வீரராக இடம்பிடித்துள்ளார். அதே போன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 50 விக்கெட்டுகள் அல்லது அதற்கும் மேல் எடுத்த பந்துவீச்சாளர்களில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் உடையவராக மாறியிருக்கிறார் காகிசோ ரபாடா. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி பவுலர் பும்ரா 64 விக்கெட்டுகளை 39.9 என்ற பவுலிங் ஸ்ட்ரைக் ரேட்டில் வீழ்த்தியது தான் இதுவரை சாதனையாக இருந்தது. அதனை 38 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் முறியடித்துள்ளார் ரபாடா. இதெற்கெல்லாம் மேலாக தற்போது நடைபெற்று வரும் பைனலில் ரபாடா 5 விக்கெட் வீழ்த்திய நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பும்ரா அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாததை குறிப்பிட்டு அவரை விமர்சித்து வருகின்றனர். https://minnambalam.com/bhumrah-gets-outrage-after-rabada-fifer-in-wtc-25/
  14. முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் June 12, 2025 10:49 am முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்னர் இரவோடு இரவாக பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த தேரரின் இலங்கை வருகையும், பௌத்த மதத்தினை ஸ்தாபித்தலும் என தலைப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், நேற்று புதன் கிழமை (11.06.2025) இரவு இனம் தெரியாதோரால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதை கிழித்தெறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/a-buddhist-temple-shaped-structure-suddenly-created-in-the-mulliyawalai-area/
  15. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையை கைவிட மாட்டோம்; டொனால்ட் ட்ரம்ப் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லிங்க் சேவையை வெள்ளை மாளிகை கைவிடாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் நல்ல சேவை வழங்குவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் பேசிய அவர், எலான் மஸ்கிடம் வாங்கிய டெஸ்லா காரை, வெள்ளை மாளிகையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றவுள்ளதாகவும் கூறினார். தங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருந்தது, அவருக்கு நல்வாழ்த்துக்கள் மட்டுமே கூற விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=328494
  16. ஹரி ஆனந்தசங்கரியை குறிவைத்து இனவெறி விமர்சனங்கள்: கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டனம் June 11, 2025 கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இனவெறி விமர்சனத் தாக்குதல்களை, கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன. அத்துடன், இதுபோன்ற தாக்குதல்கள், தமிழ் கனேடிய சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்த அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. கனேடிய தமிழ் கூட்டு, கனேடிய தமிழர்களின் தேசிய சபை மற்றும் தமிழ் உரிமைகள் குழு என்பனவே அமைச்சர் மீதான இனவெறி விமர்சனங்களை கண்டித்துள்ளன. இந்த விமர்சனங்கள், அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் தமிழ் கனேடியர்கள் மீது தவறான மற்றும் நியாயமற்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. கனேடிய தமிழ் சமூகம் தொடர்பான எந்தவொரு தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளிலும் முரண்படாத திரையிடலை செயல்படுத்துமாறு, ஹரி ஆனந்தசங்கரி, அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதை அடுத்தே இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், இந்த முடிவு, மிகுந்த எச்சரிக்கையுடன், எந்தவொரு மோதலும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே எடுக்கப்பட்டது என்று கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். https://www.ilakku.org/ஹரி-ஆனந்தசங்கரியை-குறிவை/
  17. படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் ஞாபகார்த்த நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஞாபகார்த்த நிகழ்வு நேற்று (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் இடம்பெற்றது. 1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cmbswlflj01qzqpbsxxezh4a0
  18. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மனுத் தாக்கல் வடக்கு சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நாளை கூடவிருக்கும் நிலையில், இன்று இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்களும் இன்று நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. வழக்குத் தாக்கல் செய்தவர் சார்பில் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ முன்னிலையாகி வழக்கின் விபரத்தை எடுத்துரைப்பார். சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வான இரண்டு உறுப்பினர்கள் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உற...அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மன...சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்க...
  19. விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த நெடியவனை சந்திக்கவே, ஜனாதிபதி ஜேர்மனிக்குப் பயணம்! புரளியை கிளப்புகின்றார் கம்மன்பில தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த நெடியவனை சந்திக்கவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜேர்மனிக்குச் சென்றுள்ளார் என்று சமூகவ லைத்தளங்களில் கருத்துகள் வெளியாவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே உறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஜேர்மனியில் சான்சலர்தான் அரசாங்கத்தின் பிரதானி. எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஜேர்மனியப்பயணத்தின் போது சான்சலர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திப்பதற்குரிய ஏற்பாடுகள் இல்லை எனக் கூறப்படுகின்றது. அப்படியானால் இந்தப் பயணத்தில் வேறு நோக்கம் இருக்கக்கூடும். எமது நாட்டில் ஜனாதிபதிதான் அரசதலைவர். எனவே, அவர் வெளிநாடு சென்றால் அந்த நாட்டிலுள்ள அரச தலைவரை சந்திக்கவேண்டும். ஐரோப்பாவிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை சந்திப்பதற்கான தனிப்பட்ட விஜயமா இது என்ற கேள்வியும் எழுகின்றது. புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான நெடியவன் ஜேர்மனிக்குச் செல்லவுள்ளார். அவர் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியைச் சந்தித்தால் அது பெரும் பிரச்சினையாகக் கூடும் என்பதால், நெடியவனைச் சந்திக்கவே ஜனாதிபதி ஜேர்மனிக்குச் சென்றுள்ளார் என சில அரசியல்வாதிகளும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். அரசியல் களத்தில் உலா வரும் கதைகளே இவை. இவற்றின் உண்மைத்தன்மை என்னவென்பதை ஜனாதிபதியால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் - என்றார். https://newuthayan.com/article/விடுதலைப்_புலிகள்_அமைப்பை_சேர்ந்த_நெடியவனை_சந்திக்கவே,_ஜனாதிபதி_ஜேர்மனிக்குப்_பயணம்!#google_vignette
  20. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்து மருத்துவர்கள் நாளை போராட்டம்! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்தும், புற்றுநோய்ப் பிரிவை வினைத்திறனாக இயங்குவதற்கு வழிவகைகளை ஏற்படுத்துமாறு கோரியும் நாளை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித் துள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் உள்ளதாவது:- தெல்லிப்பழை மண்ணின் புகழ்பூத்த தெல்லிப்பழை மருத்துவமனை போர் மற்றும் இடம்பெயர்வுகளைக் கண்டபோதிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அடுத்ததாக வடக்கு மாகாண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவமனையாகக் காணப்படுகின்றது. அத்துடன், விசேட பிரிவுகளாக மனநல மருத்துவப் பிரிவு மற்றும் புற்றுநோய்ப் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு அளப்பெரும் மருத்துவப் பணியை ஆற்றிவருகின்றது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வினைத்திறனற்ற மருத்துவமனை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக மருத்துவமனையில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் இடம்பெறுகின்றன. அத்துடன் மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக மாகாண மற்றும் மத்திய சுகாதார உயர் மட்டங்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனால் இன்றுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அத்துடன், மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவு இயங்குவதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டுவருகின்றன. எனவே, இந்த நிர்வாகப் பிறழ்வுகளுக்கு எதிராகக்காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மருத்துவமனையின் வினைத் திறனான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட் வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்வரும் நாளை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட வுள்ளோம் - என்றுள்ளது. https://newuthayan.com/article/தெல்லிப்பழை_ஆதார_மருத்துவமனையில்__நிர்வாக_முறைகேட்டைக்_கண்டித்து_மருத்துவர்கள்_நாளை_போராட்டம்!#google_vignette
  21. சீஐடிக்கு அழைக்கப்படும் அர்ச்சுனா? Share This : சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததும் அவரிடம் விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் ஆயுதங்களே சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 323 கொள்கலன்களில் என்ன இருந்தது என்று எதிர்க்கட்சியினர் ஒன்றாக இருந்து கூறினால் மக்கள் ஏற்றுக்கொள்வர். ஆனால் ஒருவர் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்த என்றும் இன்னுமொருவர் அவற்றில் போதைப் பொருள் இருந்தன என்றும் கூறுவதுடன் இன்னுமொருவர் அதில் வெடிகுண்டு இருந்தது என்றும் கூற ஆரம்பித்துள்ளனர். ஆனால் இது தொடர்பில் மேலதிக சுங்க பணிப்பாளர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான குழுவின் அறிக்கையும் நிதி அமைச்சினால் கையளிக்கும். கடந்த காலங்களில் சரியான அறிக்கைகளை சமர்ப்பித்து பொருட்களை கொண்டுவந்தவர்களுக்கு இது கொள்கலன் விடுவிப்பு தொடர்பான நடைமுறைகளை அறிவர். இதேவேளை இந்த விடயத்தில் கம்மன்பிலவின் கருத்தை ஒத்த பொய்யான கருத்தே அர்ச்சுனாவின் கருத்தும். இவர்கள் எதனை கூறினாலும் சுங்கத்தினால் கூறப்பட்டுள்ளவற்றை ஏற்றுக்கொள்கின்றோம். மற்றையவர்கள் கூறும் கருத்துக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததும் அவர்கள் கூறுவது தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றார். https://www.samakalam.com/சீஐடிக்கு-அழைக்கப்படும்/
  22. பிரகீத் எக்னெலிகொட வழக்கு – பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது adminJune 11, 2025 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முக்கிய சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபா் இன்று இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாா். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஜனவரி 24 அன்று கடத்தப்பட்டார் இது சம்பந்தமான வழக்கு தொடர்பாக, சட்டமா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன உட்பட பத்து பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது அவர்களுக்கெதிரான விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையிலேயே இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் எக்னெலிகொட வழக்கின் முக்கிய சாட்சியான சுரேஸ் குமாா் என்பவரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் குமாரரத்ன பலமுறை மிரட்டியதாகவும் , பிரிகேடியாின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பலமுறை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகார சபையின் விசாரணை அதிகாரி முறையிட்டுள்ளாா் அத்துடன் 2025 ஜூன் 6ஆம் திகதியன்று, முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரால் அதே தொலைபேசி எண்ணிலிருந்து சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளாா். இந்தநிலையில் சாட்சிகளை அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் ஆராயப்பட்டு, சரிபார்க்கப்பட்டுள்ளதை விசாரணைப் பிரிவின் அதிகாரி நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தினார். இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், நடந்து வரும் விசாரணைக்காக எதிர்வரும் 13 ஆம் திகதியன்று, நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் அவரை முன்னிலைப்படுத்துமாறும் திருகோணமலை நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது https://globaltamilnews.net/2025/216668/
  23. இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை! adminJune 12, 2025 இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை (11.06.25) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன், OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு – அந் நிறுவனத்தால் இதற்கான உதவித்தொகை தலா 90 ஆயிரம் ரூபாய் வீதம் வேலணை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் மீளத் திரும்பிய ஆறு பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/216677/
  24. சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் தெரிவு! adminJune 12, 2025 சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வியட்நாம் நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 தொடக்கம் 19 வரை நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு பிரிவு 3ல் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் யாழ் இந்து மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 500 மாணவர்களிடையே இவ்நான்கு மாணவர்களும் தெரிவாகியுள்ளனர். https://globaltamilnews.net/2025/216681/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.